04-03-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடந்த இரண்டாம் தேதி இரவு எட்டரை மணிமுதல் கோடம்பாக்கத்தில் யாருக்கும் உறக்கமில்லை. எப்படி இப்படி நடந்தது என்று இரவு முழுவதும் போன் போட்டு அழுதவர்கள், இப்போதுவரையிலும் அதையேதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
திரையுலகம் மட்டும்தான் என்று நினைத்தேன். வலையுலகத்தில் நான் எதிர்பார்த்தது போலவே இதைத் தவிர முக்கியம் வேறில்லை என்பதைப் போல் ஒரே சமயத்தில் ஒரே சம்பவத்தை வைத்து பதினைந்து பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் நின்றது என்றால் அது நிச்சயம் இந்தப் பிரச்சினைக்காகத்தான்.
எப்போதடா சமயம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருந்தவர்கள் பக்தியின் மீது, கடவுள் மீதும், அந்த நம்பிக்கை மீதும், சாமியார்கள் மீதும், அவர்களது பிரதான பக்தர்களின் மீதும், கடைநிலை பக்தர்கள் மீதும் பாய்ந்து குதறியெடுத்துவிட்டதை நினைத்து இனிமேல் இந்தப் பிரச்சினையில் எழுதுவதற்கு எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.
ஆனாலும் இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் பின்னாளில் நாட்டுப் பிரச்சினைகள் எதையும் பொதுவில் வைத்து வாதாடும்போது உனக்கென்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழ வாய்ப்பு உண்டு என்கிற காரணத்தினால் விருப்பமே இல்லாமல் இந்தப் பதிவு.
காமம் மனிதர்களைக் கொல்லத்தான் செய்கிறது. எவ்வளவு செல்வாக்கு படைத்த மனிதர்களும் இதை வெல்ல முடியாமல் கடைசியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். இதைத்தான் கடவுளர் வரலாறுகளும், தேசங்களின் வரலாறுகளும், ஒரு சமான்யனின் வரலாறுகளும் வருடக்கணக்காக சொல்லி வருகின்றன. ஆனாலும் சாதாரண மக்களுக்கு தங்களிடம் அதன் மீதிருக்கும் ஒரு மரியாதை கலந்த பயத்தையும், விருப்பம் கலந்த வெறுப்பையும் நீக்க முடியவில்லை.
நித்தியானந்தம் என்கிற தனி நபரும், ரஞ்சிதா என்கிற பெண்மணியும் கலந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு இது என்கிற பட்சத்தில் இது இருந்திருந்தால், தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் லட்சணக்கணக்கான அந்தரங்க வீடியோக்களில் ஒன்றாக இதுவும் போய்விட்டிருக்கும்.
மாறாக தன்னையொரு அவதாரப் புருஷனாகவும், மக்களுக்கே அறிவுரை சொல்லும் மகானாகவும், ரட்சிக்க வந்த புனிதராகவும் காட்டிக் கொண்டதால்தான் நித்தியானந்தம் இன்றைக்கு தலைகாட்ட முடியாமல் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருக்கிறது.
அவரால் முடிந்தது.. போய்விட்டார். ஆனால் அவரைத் தொழுதவர்கள் அன்றைய இரவு முதல் பட்டபாட்டை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க மாட்டார். கவுதம புத்தர் தோரணையில் நித்தியானந்தம் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பலரது வீடுகளின் வரவேற்பறையில் பார்த்திருக்கிறேன். இப்போது போனால் நிச்சயமாக அது குப்பைக் கூடைக்குள்தான் இருக்கும்.
திரையுலகில் கோவைசரளாவும், நடிகர் விவேக்கும் இவரது பிரதான சீடர்கள். தயாரிப்பாளர் 'சத்யஜோதி' தியாகராஜன் இவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். பல பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி குருவாக இருந்தவர் தனக்குத்தானே குழியைத் தேடிக் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் அவரது வயதுதான். இளம் வயதில் பெயரும், புகழும், பணமும், அளவற்ற செல்வாக்கும் கிடைத்தால் எது நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.
ஏதோ நம்மைத்தான் இந்தப் பிரச்சினை தாக்கியிருக்கிறது என்றில்லை. தமிழ்நாடு முழுக்கவே நிலைமை இதுதான். டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு. அடுத்தவர்களின் அந்தரங்கம் உலகத்தில் அத்தனை பேருக்குமே எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பாருங்கள்..?
நித்தியானந்தம் ஒரு சாமியார் என்கிற ரீதியிலேயே கவனிக்கப்பட்டுவிட்டாலும் அவருக்குள் இருந்த இயற்கையான, இயல்பான மனித குணம் இல்லாமல் போயிருக்காது. ஆனால் அதற்காக அவர் அதனைப் பயன்படுத்தியவிதமான அந்த காவி உடையை அணிந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பதும் ஒரு புறும் இருக்கட்டும்.. இந்தச் செயல் எதற்காக, எப்படி வெளிப்பட்டது என்பதையும் ஒருபுறம் பாருங்கள்..
பல்வேறு மீடியாக்களுக்கும் குறிப்பாக குமுதம் பத்திரிகைக்கும் இந்தச் செய்தி டிவிடியுடன் ஒரு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களைப் படிக்கின்றபோது இந்தச் செயலில் பங்கு கொண்ட மூன்றாமவரும் நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அதனை வாசிக்க வாய்ப்புக் கிடைத்த பத்திரிகையாளர்கள்.
நீண்ட வருடங்களாக தனக்கும், நித்தியானந்தத்திற்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்பை உடைத்தெறிந்துவிட்டு புதிய நட்பை உருவாக்கிக் கொண்ட ரஞ்சிதாவின் மேல் கோபம் கொண்டுதான் அந்த பெண் அவர்கள் இருவருக்குமே தெரியாமல் இதனை ரிக்கார்டு செய்து மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் என்பது பலரது அனுமானம். அந்தப் பெண்ணை கிட்டத்தட்ட ஸ்மெல் செய்துவிட்ட பத்திரிகையாளர்கள் விரைவில் அந்தப் பெண்ணின் பெயர் போட்டு கவர்ஸ்டோரி எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.
போடலாமா வேண்டாமா என்றெல்லாம் பலரும் தங்களது அலுவலகத்தில் யோசித்துக் கொண்டிருக்க பல்வேறு டிவிக்களின் செய்தி ஆசிரியர்களும் இரவு 9 மணியோடு கடைசி புல்லட்டின்னை முடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்பதை யூகித்து இரவு நேரத்திலேயே சப்தமில்லாமல் வெளியிட்டுள்ளார்கள் சேனல்காரர்கள்.
அதுவும் துணை முதல்வர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு கலைஞர் டிவியில் முடிகின்றவரையில் காத்திருந்து அதன் பின்புதான் ஸ்கிரால் நியூஸே ஓடத் துவங்கியது. அப்போதிலிருந்தே சேனல்காரர்கள் நினைத்ததுபோல தமிழ்நாடே பரபரக்கத் துவங்கியது.
ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே நித்தியானந்தத்தை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்கப்பட்டு அவர் அதனை மறுத்து அது தன்னுடையதல்ல என்று சொன்ன பின்புதான் ஒளிபரப்பியுள்ளார்கள். இதனால்தான் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தம் தரப்பினர் ஒளிபரப்புக்கு தடைகோரியபோது ஸ்டே ஆர்டரை கொடுக்க நீதிபதியும் மறுத்துவிட்டாராம்.
நான் அந்த வீடியோவை பார்த்தபோது ஒரு 32 வயது வாலிபனும், அவன் மீது தாளாத காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்குமான உணர்ச்சிக் குவியலைத்தான் பார்க்க முடிந்தது. எனது பக்கத்துவீட்டுப் பெண்கள் "புருஷனுக்குக்கூட எந்த பொம்பளையும் இவ்வளவு மரியாதையா கால் பிடிச்சுவிட மாட்டாங்க.." என்று கிண்டல் அடித்தார்கள். அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்..
நடந்ததெல்லாம் ஒரு நிகழ்வு என்று சொல்லிவிட்டுப் போக இங்கே யாருக்கும் மனமில்லை. காரணம் அவர் ஒரு சாமியார்.. சாமியார் பெண்ணுடன் சம்போகிக்கலாமா என்கிறார்கள். அதனால் நித்தியின் உடலை இரண்டாகப் பிளந்ததுபோல் அத்தனை பேரின் கோபச் சொல்லாடல்கள் அவரைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் இதற்கெல்லாம் தகுதிகள் யாருக்கு உண்டு..? அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய அந்தத் தொலைக்காட்சி சேனலுக்கு முதலில் இருக்கிறதா..? இந்தக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபிரேமுக்குக் கீழேதான் தீராத விளையாட்டு பிள்ளை என்கிற நடிகைகளின் திவ்ய தரிசனத்தை முழுமையாகக் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் விளம்பரம் ஓடியது.
அதே தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்ற காட்சிகள் எதுவும் நித்தியும், ரஞ்சிதாவும் இருந்த காட்சிகளுக்குக் குறைந்ததல்ல.. வெறுமனே கட்டில் அறை காட்சிகள் மட்டும்தான் ஆபாசமா..?
பத்தாண்டுகளுக்கு முன்பாக 'மெட்ரோ பிரியா' என்றொரு தொகுப்பாளினி பற்றிய ஒரு விளம்பரம் அதே தொலைக்காட்சியில் ஓடியது.. பாலங்கள், சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள் அனைத்தையும் கடந்து ஓடி வருகிறார்கள் இரண்டு பெரியவர்கள். அரக்கப் பறக்க ஓடி வரும் அவர்கள் ப்ரியாவின் எதிரில் வந்தமர்ந்தவுடன் அதில் ஒருவரின் வாயில் இருந்து உமிழ்நீர் அப்படியே கொட்டிக் கொண்டேயிருக்கும். கேட்டால் இது அந்த ப்ரியா என்றொரு பெண்ணிற்காக தமிழ்நாடே காத்துக் கொண்டிருப்பதை உணர்த்துவது போன்ற கான்செப்டாம்..
அடுத்து திடீரென்று ஒரு ஜட்டி கம்பெனி லம்பமாக ஒரு தொகையைக் கொடுத்து அனைத்து நிகழ்ச்சிகளின் இடையிலேயும் தங்களது உலகப் புகழ் பெற்ற ஜட்டியைக் காட்டச் சொன்னது.. காட்டினார்கள்.. எப்படி..? ஒரு ஆண் கட்டிலில் படுத்திருப்பார்.. கான்செப்ட்டின் டயலாக்குகள் முடிந்தவுடன் சடாரென்று தனது ஜிப்பைத் திறந்து பேண்ட்டை முட்டி வரையிலும் கீழிறக்கி ஜட்டியைக் காண்பிப்பார். அப்படியே ஜட்டி மீது லோகோ வந்து நிற்க.. விளம்பரம் முடியும்.. இப்படிப்பட்ட அற்புதமான காட்சிகளையும் அள்ளித் தெளித்ததுதான் இந்த சேனல்.
இவர்கள் என்றில்லை.. இப்போது அனைத்து மீடியாக்களுமே சிற்றின்பத்தை மையமாக வைத்துதான் தங்களை வளர்த்துக் வருகின்றன. இந்த சிற்றின்பத்தில் அடுத்தக் கட்டமான 'பெரிய' இன்பத்தையும் இவர்கள் நட்ட நடு இரவில் சில வருடங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்..
'சூர்யா' டிவியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஷகிலா நடித்த மலையாளப் படங்களையும் காண்பித்தார்கள். தமிழக சட்டப்பேரவைவரையிலும் இந்த விஷயம் பேசப்பட்டு தாத்தா வழக்கம்போல பேரன்கள் பக்கமே பேச.. இனி போடுவதற்கு படங்கள் கிடைக்காததால் அது அப்படியே நின்று போனது. ஆனாலும் வசந்த் தொலைக்காட்சியில் இப்போது இந்த அரிய சேவையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எதைவிடக் குறைந்துபோய்விட்டது நித்தியின் இந்த உறவு..?
இந்த வெளியீட்டீன் மூலம் நித்தியானந்தத்தை குதறியெடுக்கும் பலரும் உடன் காட்சியளிக்கும் அந்தப் பெண் ரஞ்சிதாவை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை?
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ்.. திரைப்படங்களில் முன்புபோல் நடிக்க வாய்ப்பில்லை.. சின்னத்திரையிலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரிடமே மோதல் ஏற்பட்டு அங்கிருந்தும் விலக வேண்டிய நிர்ப்பந்தம்.
இப்படி எல்லா இடத்திலும் பிரச்சினைகள் என்று வந்த பிறகு ஒரு மன அமைதி வேண்டி அவர் சென்றடைந்த இடம் அது. அங்கே ஏற்கெனவே அமைதி வேண்டி வந்திருந்த மனிதர்களில் ஒருவரோடு ஒருவராக இருந்திருக்க வேண்டியவர், நித்தியுடன் ஒட்டிக் கொண்டதுதான் இப்போது இந்தளவுக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது.
இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் அது ஏதோ ஒருவித செட்டில்மெண்ட்டுக்காக நடத்தப்பட்டவிதமாக இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ரஞ்சிதா நித்தியை முழுமையாக நம்பியிருக்கிறார். ஆனால் இப்போது அவரது நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. இனி அவர் எப்படி வெளியுலகில் தயக்கமில்லாமல் நடமாட முடியும்..? எத்தனை கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியும்..? கேள்விகள் அனைத்தும் தார்மீக ரீதியாக வருமா..? 'அந்தக்' காட்சிகளை மையமாக வைத்துதானே கேள்விகள் பறந்து வரும். அதற்கு ஒரு பெண்ணால் எப்படி பதில் சொல்ல முடியும்..?
ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. கண் மூடித்தனமான பக்தியும், காதலையும்தான் அந்தப் பெண் அந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார். ஒரு கணவருக்கும், மனைவிக்குமான உறவு போல இருந்த அவற்றை இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.
நித்தியின் உடன் இருந்தவர்களின் பொறாமையும், பயமும் அந்தப் பெண்ணையும் இப்போது பலி வாங்கிவிட்டது. இது பல மாதங்கள் நீடித்திருக்கும் நட்புதான் என்று உறுதியாகச் சொல்கிறது ஆசிரம வட்டாரம்.
உரிமையாக நித்தியின் படுக்கையறைக்குள் நுழையும் அளவுக்கு செல்வாக்கையும், தகுதியையும் உடைய ஒரு பெண் திடீரென்று வந்துசேர்ந்த ரஞ்சிதாவால், நித்தியை சந்திக்க முடியாத அளவுக்குப் போய் அந்தக் கோபத்தில்தான் வீடியோ கேமிராவை நித்திக்கும், ரஞ்சிதாவிற்குமே தெரியாத அளவுக்கு மறைத்து வைத்து படம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
நித்தி இன்றைய செய்தியின்படி ஹரித்துவாருக்கு சென்றிருக்கிறார். உண்மையாக அவர் நாளை அலகாபாத்தில் நடக்கும் ஒரு கும்பமேளாவில் பல சாமியார்களுக்குத் தலைமை தாங்கி பூஜை நடத்த வேண்டுமாம். இருக்கின்ற குழப்பத்தில் அங்கே அவர் சென்றால், அவருக்கே பூஜை நடத்திவிடுவார்கள் என்பது உறுதி.
வீடியோவை வெளியிட்டவர்கள் சாமியாரின் சல்லாபம் என்றே குறிப்பிடுவதும் மிக நகைச்சுவையான ஒன்று.. இவர்களது சேனல்களில் நிமிடத்துக்கொருமுறை காட்டப்படுகின்ற சினிமா பாடல் காட்சிகளில் இருப்பது மட்டும் என்ன என்பதை இவர்கள் விளக்கிச் சொன்னால் தேவலை.
அதோடு அந்த வீடியோவின் காட்சிகளுக்கேற்ப 'சிருங்கார ரசம்' சொட்டும் சினிமாப் பாடல்களைச் சேர்த்து வெளியிட்டிருக்கும் அற்பபுத்திக்காரர்களை எதை வைத்து அடிப்பது..? யார் இவர்களைக் கண்டிப்பது..? எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை. நிச்சயமாக அது ஸ்பாட் ரிக்கார்டிங் அல்ல. எடிட்டிங் டேபிளில் இணைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகிறது.
மற்றபடி சேனல்காரர்கள் என்ன நினைத்தார்களோ அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருக்கும் நித்தியின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவருடைய புகைப்பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. அவருடைய புகைப்படங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இருக்கும் தலைமை அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.
இவ்வளவுக்குப் பின்பும் "இது ஒரு கிராபிக்ஸ் வேலை.. நாங்கள் இதனை சட்டரீதியாக அணுகுவோம். நித்தி சாமி ஒரு தவறும் செய்யாதவர்.." என்று இன்னொரு சாமி பேட்டியளித்திருக்கிறார். உடன் போலீஸார் இருந்ததால் தப்பித்திருக்கிறார்.
நேற்று மட்டும் முகத்தை மார்பிங் செய்துவெளியிட்ட சேனல் இன்றைக்கு அப்படியே வெளியிட்டது. அதோடு அவர்கள் ரஞ்சிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'உதயா' தொலைக்காட்சியில் ரஞ்சிதா நடித்த ஒரு நெருக்கமான காதல் காட்சியையும், அவரைக் கற்பழிக்க முனையும் காட்சியையும் போட்டுக் காண்பித்து இவர்தான் ரஞ்சிதா என்கிறார்கள். இதுவா ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் முறை..? இதற்கு நித்தி, காவி உடை அணிந்து காதலியுடன் ஒன்றாக இருந்ததில் ஒன்றும் தவறில்லையே..?
எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் நித்தியானந்தத்தை கண்டிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு விரல் அவரைக் குற்றம் சுமத்தினால் மற்ற நான்கு விரல்களும் நம்மைத்தான் காட்டுகின்றன. அவர்கள் நடத்தியது சல்லாபம் என்றால் அடுத்தவர்களின் சல்லாபத்தை உச்சுக் கொட்டி பார்த்த நம்முடைய செயலை என்னவென்று சொல்வது..?
முதல் முறையாக அந்தக் காட்சிகளைப் பார்த்தபோது ரஞ்சிதாவாக இருக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் 'நக்கீரன்' இணையத் தளத்தில் முழுமையாகப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த முறைகள் பாஸ்ட் பார்வேர்டும், ரிவர்ஸுமாக மாற்றி மாற்றிப் பார்த்ததில் பாதி நித்தியானந்தமாக நானே மாறிவிட்டேன். பின்பு எனக்கு எங்கே இருக்கிறது கண்டிக்கின்ற தகுதி..?
இல்லை. எங்களுக்கு இருக்கிறது என்றால், உங்களது வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒருவிதத்தில் ஒரு நோக்கில் நீங்களும் இந்தக் காமத்தை எதிர்கொண்டிருப்பீர்கள். அல்லது தெரிந்தும், தெரியாததுபோல் இருந்திருப்பீர்கள். யாரோ ஒரு நித்தியானந்தமோ அல்லது ரஞ்சிதாவோ உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அப்போது மெளனமாக இருந்த நீங்கள், இப்போது இவர்கள் என்றவுடன் வெளிப்படையாகக் கொட்டுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
வலையுலகில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் பற்றி பதிவர்கள் எழுதிய விமர்சனத்தில் அத்தனை பேரும் அட்சரப் பிசகாமல் சொன்ன ஒரு வாக்கியம் "ரீமாசென்னின் உடல் மொழி அசத்தல்" என்பது. ஆனால் படத்தைப் பார்த்தபோதுதான் அந்த உடல்மொழியை எப்படி பதிவர்கள் கண்டுகொண்டுள்ளார்கள் என்பது புரிந்தது. அடிப்படையே காமம்.. அத்தனை காமக்கண்ணோட்டத்தோடு ரீமாசென்னை அணு, அணுவாக ரசித்துத் துடித்த அந்த ரசனைதான், இன்றைக்கு இரு உடல்கள் இசைவோடு இணைந்திருப்பதை குற்றமாக பார்க்கிறது. விந்தையாக இல்லை..?
நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான். தன்னை பின்பற்று என்று அவர் சொல்லியிருக்கும்பட்சத்தில் அதை தீர ஆராயாமல், யோசிக்காமல் பின்பற்றியிருக்கும் தொண்டர்களைத்தான் நாம் கண்டிக்க வேண்டும்.
ரஞ்சிதாவை இப்போது நினைத்துப் பார்த்து வருத்தமடையும் என் மனம் அந்த வீடியோவில் பார்க்கின்றபோது அவருடன் சேர்ந்து களியாட்டம் ஆடியதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பின்பு நான் எப்படி "இதுவொரு சாமியாரின் சல்லாபம்" என்று கண்டிக்க முடியும்..?
இணையத்தில் இன்றைய தேதிவரையில் இது போன்று நித்தியானந்தங்களும், ரஞ்சிதாக்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவ்வப்போது நாம் பார்த்து ரசிப்பதுண்டு.. 'காஞ்சிபுரம் தேவநாதன்' வீடியோக்களை தேடித் தேடிப் பார்த்த அனைவரும் அவன் மீது வழக்குப் போடவா பார்த்தார்கள்? இல்லையே.. என்ன நடந்தது என்பதற்காகத்தான் என்று மனசில் சல்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும் அதில் இருந்த காமத்தின் ஈர்ப்பை யாராலேயும் மறுக்கமுடியாது.
நித்தியானந்தம் துறவற வாழ்க்கைக்குத் தகுதியானவர் இல்லை என்று சொல்வதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை. அது மாதிரியான கணக்கிலடங்காத வீடியோக்களை திரையரங்கத்தின் இருட்டு மூலையிலும் கணிணியின் உதவியாலும் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் என் மனது "நீயே ஒரு நித்தியானந்தம்தான். அவருக்கு வாய்ப்புக் கிடைத்து செய்திருக்கிறார். நீயும் அவர் நிலையில் இருந்தால் அதைத்தான் செய்வாய்.. இனி முடிவெடுக்க வேண்டியது நித்திதான். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீயல்ல.." என்று கூப்பாடு போடுகிறது.
அவருடைய செயல் ஒரு கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பிறண்டதுதான். இந்தக் கட்டுப்பாட்டை மீறியை செயலை செய்யாதவன் எவனும் உலகத்தில் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. நான் ஒரு காலத்தில் கை நீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்த்த இடத்தில் அந்த நிர்வாகத்தின் தயாரிப்பையும், அதன் பொருட்களையுமே பார்க்காதீர்கள்.. வாங்காதீர்கள்.. கண்டுகொள்ளாதீர்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். இது எவ்வளவு பெரிய தவறு..? ஆனால் தனியொரு மனிதனாக நான் செய்தது சரி.. இப்படிப்பட்ட குழப்பம்தான் நமக்குள் இப்போதும் இருந்துவருகிறது.
பல கட்சிக்காரர்களின் அனுதாபிகளும் வலையுலகில் இருப்பார்கள். அவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கட்சியிலும் இப்படிப்பட்ட ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் கட்சிதான் முக்கியம் என்று நினைத்து கொள்கைகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நித்தி கட்சிக்காரர் இல்லையே.. கட்சியில் இருந்துகொண்டு கொள்ளையடிப்பவனைப் பற்றிக் கவலைப்படாத சிலர்தான், காவி உடையை மட்டும் தனி கவனம் கொண்டு பறந்து வருகிறார்கள். ஏனெனில் அவர்களும் கட்சிக்காரர்களே..
வலையுலகத்தில் நித்தியானந்தத்திற்கு அடுத்து அதிகமாக சாடப்பட்டுள்ளவர் சாருநிவேதிதா. அவர் செய்த தவறு அவரும் நித்தியை அதீதமாக நம்பியதுதான். மனிதர்களை கடவுளாக்கினால் என்ன நடக்கும் என்பதை இப்போது அவரும் உணர்ந்திருக்கிறார் போலும். ஆனால் அதனை வெளிப்படுத்த நினைத்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்தபோது வேதனையாக இருந்தது.
தான் தமிழ் மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளன். என்னை வறுமையால் வாட வைத்து வேடிக்கை பார்க்கிறது இச்சமூகம் என்றெல்லாம் பொங்கியெழும் சாரு இப்போதைய கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளைப் பார்க்கின்றபோது நிச்சயமாக இவர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமான எழுத்தாளராகவோ, குருவாகவோ, வழிகாட்டியாகவோ இருக்க சிறிதும் தகுதியில்லாதவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இப்படியொரு எழுத்தினை தமிழில் பதிவு செய்யப்படுவதற்கு எந்தவிதத்திலும் தமிழ் மொழி உதவாமலேயே இருந்து தொலைந்திருக்கலாம் என்கிற ஆதங்கம்தான் எனக்குள் தோன்றுகிறது.
இன்றைய வாரமே சாமியார்கள் வாரமோ என்று சொல்லக் கூடிய அளவுக்கு புலனாய்வு பத்திரிகைகள் அத்தனையிலும் சாமியார்களின் நடவடிக்கைகள் பற்றியச் செய்திகள்தான் பிரதானம். டெல்லியில் ஒரு சாமியார் விபச்சார விடுதியே நடத்தியிருக்கிறார். திருச்சி அருகே ஒரு சாமியார் கடவுளின் வரம் கிடைத்த வாழைப்பழத்தை பெண் பக்தர்களுக்கு வாயாலேயே டிரான்ஸ்பர் செய்கிறாராம்.. எங்கேயிருந்துதான் இப்படியெல்லாம் கிளம்புகிறார்கள் என்று தெரியவில்லை.
கல்கி ஆசிரமத்தில் உருண்டை வடிவத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்ற புகார் நீண்ட வருடங்களாகவே இருந்துவருகிறது. திவாரியின் அக்கப்போர் லீலைகளை அம்பலப்படுத்தியே அதே டிவி சேனல், நேற்றைய முன்தினம் கல்கி ஆசிரமத்திற்குள் நடக்கும் ஓஷோ ஸ்டைல் விஷயங்களை வெளிப்படையாக்க.. அங்கேயும் பிரச்சினைகள்.. கலவரங்கள்..
இந்து மதம் வேரோன்றியிருக்கும் இந்திய நாட்டில் சாமியார்களுக்கும், கடவுள்களுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் பெரிது, பெரிதாக வளர்ந்து கொண்டேயிருப்பதும்தான் இதற்குக் காரணம்.
மூன்று வேளையும் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற கட்டாயமும், அப்படி சாப்பிட்டதையும் வெளியில் அனுப்பித்தான் தீர வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் உள்ள மனித உடலைத் தாங்கிய எவரும் இங்கே கடவுளர் இல்லை என்பதை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள். மொழி இந்த சாமியார்களது நாவில் அரசியல்வியாதிகளைவிடவும் அபாரமாக விளையாடுவதுதான் சாமான்யர்களை கவர்ந்திழுக்கக் காரணம்.
ஆறுதல் தேடி கோவிலுக்கு ஓடி வரும் மனிதர்கள் பாரத்தை அங்கே இறக்கி வைத்துவிட்டு அமைதியாக பெருமூச்சுடன் வீடு நோக்கிச் செல்லலாம், இதுவும் கடந்து போகும் என்ற நினைப்பில்.. என்னைப் போலவே..
ஆனால் ஒரு சிலர்தான் இப்படியொரு குறுக்குச் சந்தில் நிற்கும் ஒருவரிடம் உபதேசம் கேட்டு வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளலாம்.. மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து அங்கே போய் சிக்கிக் கொள்கிறார்கள். மீள்வது சுலபம்தான் என்றாலும் இங்காவது தனக்கு நல்லதொரு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கிறதே என்பதால்தான் அவர்கள் மீள்வதில்லை.
குடும்பங்களில் சோகங்களும், சோதனைகளும் ஏற்படத்தான் செய்யும். அத்தனைக்கும் நாம் வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தால் வந்த நோய் வாசலைத் தாண்டிப் போகாது. வீட்டுக்குள்தான் இருக்கும். இருப்பதை விரட்டுவதற்கும் அவரவர்க்கு போதிய சக்தியைக் கொடுக்கத்தான் செய்திருக்கிறான் ஆண்டவன். நமக்குள்ளேயே நம்மிடையையே, நம்மின் அருகிலேயே தீர்வுக்கு வழி இருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவருடைய தப்பினால் இவர்கள் மேற்கொண்ட கடவுள் பக்தி என்பது பொய்யாகிவிடாது. எவன் ஒருவன் அனுபவத்தால் இறைவனை உணர்ந்தானோ, அவனே உண்மையான பக்தன். வெறும் வார்த்தைகளாலும், கோஷங்களாலும், பஜனைகளாலும், பாடல்களாலும் இறைவனை நீங்கள் அணுகவே முடியாது. இது நன்கு படித்த மனிதர்களுக்கே புரியாமல் போகிறது.
பக்தி என்பது கடவுளிடம் பக்தன் காட்டுகின்ற தீவிரத்திற்கு மட்டுமல்ல.. கட்சியின் உண்மையான தொண்டனாக இருப்பவன் காட்டுவதும் பக்திதான். உழைக்கின்ற இடத்தில் முழுமையான அர்ப்பணிப்பு நோக்கத்துடன் உழைப்பவன் வெளிப்படுத்துவதும் பக்திதான். குருவின் பேச்சைத் தட்டாமல் செய்து முடிக்கும் சிஷ்யனிடம் உள்ளதும் பக்திதான். இந்த பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது எனது கருத்து.
நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?
|
Tweet |
177 comments:
மீ தெ ஃபர்ஸ்ட்டேய்
//நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை.//
I felt the same when i saw the clips..So sad :-(
Present sir..
இப்போ சீரியஸ் கமெண்ட்
இந்த மேட்டரில் இது வரை வந்த மிகச் சிறந்த பதிவு.
ரஞ்சிதா நெலமதான் ரொம்ப பாவம். அவரை மொத்தமாக மாஸ்க் செய்து வெளியிட்டிருக்கலாம்.
காவி தரித்து நித்தி செய்தது கேவலம், ஆனால் கைநீட்டி குத்தம் சொல்ல யாருக்கும் (பலருக்கும்) அருகதையில்லை.
முழு வீடியோ இன்னும் பாக்கி இருக்காம், நக்கீரன் ஆன்லைன் சப்ஸ்க்ரைப் பண்ணா பாக்கலாமாம், நக்கீரனிலோ வேறு இணைய தளத்திலோ நாமெல்லாம் மறுபடி பாக்கத்தான் போறோம் (வெக்கமே இல்லாம)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
/ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?/
?????
//நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்//
இலட்க்கனக்கான மக்கள் தெய்வமாக நம்பும் ஒருவரிடம் படுக்கிறோமே என்ற குற்ற உணர்வு துளியும் இல்லை.
முற்றும் துறந்த துறவி என்று மக்கள் நம்பும் ஒருவரிடம் நாம் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோமே என்ற உறுத்துதல் கொஞ்சம் கூட ரஞ்சிதாவிடம் இல்லை.
இவளுக்கு நீங்க வக்காலத்து.
இராஜசேகர் கேடிதான் அதே அளவுக்கு கேடியுடன் துணை போன ரஞ்சிதாவை என்ன சொல்வது
சிறந்த பதிவு..........
//
ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. //
இப்டியான ..க்கலாம்கள்... நிறைய உண்டு..
ஒரு வேளை அந்தப் பெண் அவமானம் தாங்க முடியாது தற்கொலை செய்து கொள்வாளானால்... இத்தகைய உயர்ந்த காரியத்தைச் செய்தவர்கள் கொலைக்குற்றவாளிகள்... அவ்வாறெதுவும் நடக்காவிடிலும்.. இப்படி ஒரு மட்டகரமான செயலைச் செய்ததை விட.. அந்த நித்தியானந்தா செய்தது ஒன்றும் மட்டமாகத் தெரியவில்லை...
// இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.//
அப்படி எதுவும் இருந்தால் அல்லவா போவதற்கு...!!!
நல்லதொரு உருப்படியான பதிவு
காவி கட்டினால் உடற்சேர்கை இருக்கக் கூடாதோ ? இந்த விதியை ஏற்படுத்துவது யார் என்று புரியவில்லை.
நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா தனியறையில் மனித இயல்போடு காமசுகம் அனுபவத்திருக்கின்றார். இது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம். தனிப்பட்ட பிரச்சனை. இதில் அத்து மீறி நுழைந்து அதை படம் பிடித்து பார்ப்பதுக்குரிய அதிகாரத்தை யார் தந்தது?
நித்தியானந்தாவுக்கு அவரைப் பின்பற்றும் மக்கள் உடலுறவு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார்களா? அல்லது காவிகட்டினால் உடலுறவு கொள்ளக் கூடாது என்று நித்தியானந்த சொன்னாரா?
நித்தியானந்தா நடந்துகெண்டது இயற்கையானது. ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம் மகா கேவலமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உடலுறவில் ஈடுபட்டால் கள்ளச்சாமியா? இயற்கையான உடலுறவுதான் நல்லது கெட்டதை தீர்மானிக்கும் மையப்புள்ளியா?
காவியை கழட்டி எறிந்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
கடவுள்களுக்கும் ரெண்டு மூணு பொண்டாட்டி கருணாநிதிக்கும் அப்படித்தான். ஊரில முக்கா பங்கு பேருக்கும் வைப்பாட்டி கள்ள உறவு இருக்கு. காவிகட்டினவன் மட்டும் ஈரத்துணிய போட்டு எதுக்கு இறுக்கணும்? அவனும் அனுபவிக்கட்டுமே ! நாம யோக்கியமாவா இருக்கிறோம் நித்தியானந்தாவ கேள்வி கேட்க?
very good analysis...I like the way you approached this issue in each victim's point of view...
-B
//காவியை கழட்டி எறிந்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்//
அப்படி செய்திருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது செய்திருக்க வேண்டியதுதானே யார் வேண்டாங்கிறா..
அத விட்டு சாமியார் சன்யாசி துறவி என்று வெத்து சீன் தேவையா..
//உடலுறவில் ஈடுபட்டால் கள்ளச்சாமியா?//
அப்ப முற்றும் துறந்தவன் எதற்கு பெட்டி பேச்சு..
ஆம் உடலுறவு கொண்டதில் என்ன தவறு என்று இராஜசேகரன் கேட்பானா..?
The best and fair article i have read sir. hats off to you.
மனிதநேயனின் பதில் அருமை. இதை ஏன் தனி மனித உரிமையாக பார்க்க கூடாது?
அல்லது காவிகட்டினால் உடலுறவு கொள்ளக் கூடாது என்று நித்தியானந்த சொன்னாரா? இதில் பாவம் ரஞ்சிதா நிலைமைதான்.
எல்லாமே மாயை...
மிக அருமையான அலசல் அண்ணே. வித்யாசமான பார்வை. எல்லோரும் சாமியார் செய்தது தப்பு எனச் சொல்லும் போது, அந்த பெண்ணின் நிலையில் இருந்து பார்த்தது.. ஹாட்ஸ் ஆஃப் டூ யூ
அய்யா... அப்போ டைகர் வுட்ஸை மேல்நாட்டில போட்டு கிழிச்சாங்களே அது என்னங்க? வெளிப்படையா செக்ஸ் இருக்கிற அங்கேயே ஒழுக்கத்துக்கு மரியாதை கொடுக்கறாங்க.. கடைசில டைகர்வுட்சு மன்னிப்ப கேட்டாரு அவரோட தவறை ஒப்புக்கொண்டாரு.
அதே போல நித்தியானந்தம் ஒப்புக்குவாரா? ஊரை ஏய்சு கோடிக்கணக்ககில சுருட்டிவருக்கு இப்படி வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கு.
very very fair article. I see sanity in the blog world, atlast!
ரஞ்சிதாவின் நிலை பற்றி நீங்க எழுதியது சரிதான். ஆனால் அவரது பேட்டி ஒன்றை மிக அண்மையில் படித்திருந்தேன்.. அதில் அவர் கணவருடன் சந்தொசமாக வாழ்வதாகவும் விவாகரத்து என்பதெல்லாம் பொய் செய்தி என்றும். தெக்கத்தி பொண்ணு சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் அந்த சீரியல் எங்கேயோ வெகு தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடப்பதாகவும் அதுவும் மாதக்கணக்கில் நடப்பதால் அடிக்கடி அவ்வளவு நீண்ட தூரம் பிரயாணம் செய்து வரமுடியாது என்றும் டெல்லியில் இருந்து வந்துதான் இங்கு சின்னத்திரையில் தலைகாட்டுவதாகவும் கூறி இருந்தார்.
//பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை//
100% உண்மையை உண்மைத்தமிழன் சொல்லியிருக்கீங்க.
மேலே மனித நேயன் கூறிய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்
இரு தினங்கள் முன்பு வரை தெய்வமாக கருதியவரை இன்று தேவையற்றவராக கருதுவதும்; தீர்விற்காக அவரிடம் அண்டியவர்கள் இன்று தீயவர் என்று கருதுவதும் வேடிக்கை.
நல்லது எது! கெட்டது எது! என வேறுபிரிக்க தெரிந்த இந்த பொது ஜனங்கள் ஏன் மனிதனை கடவுளாக பாவித்தார்கள் என்பது தான் கேள்விக்குரிய விஷயம்.
இது சரி இது தவறு என தீர்மானிக்கும் நாம் ஏன் இவரைப் போன்றோரிடமிருந்தும், பிறரிடமிருந்தும் வாழும் வழிக்கான நெறிமுறையை கற்றுக்கொள்ள வேண்டும்; ஏன் பின்னர் கூப்பாடு போட வேண்டும்?
நாமே நமது வழியை தீர்மானித்து கொள்ளலாமே
" பெண்ணின் நிலையில் இருந்து பார்த்தது "
நீங்கள் ஊடக சம்பந்தபட்டவர் என்பதால் , நடிகைக்கு support செய்யலாமா ? வெட்கிதலைகுனிய வேண்டிய நேரமிது, இதையெல்லாம் ஆராயகூடாது , அப்படி என்ன வறுமை அந்த நாய்க்கு , டிவியில் நடித்தால் மாதம் ஒரு லட்சம் வரை ஊதியம் தருவதாக கேள்வி , , சாமியாரிடம் செல்ல்வேண்டிய அவசியம் என்ன , உங்களை எல்லாம் படித்ததற்கு என்னையே நான் காறி துப்பிகொள்கிறேன் , பொதிகையில் போட்டு இருந்தாலும் நடிகையை பார்த்து அனுதாப பாடுவீர்களா ? சன் டிவி தான் பிரச்சனையா , ரஞ்சிதா செய்தது நித்தியை விட மோசம் இல்லை என்று தவறுக்கு தவறு ஒப்பிடலாமா , அவர் நித்தியை தவிர யாரிடம் காதல் செய்திருந்தாலும் தவறில்லை , அவர் ஆயிரம் கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு உரியவர் , அந்த இடத்தில் நடிகை தேடிப்போனது ஆன்மீகமா இல்லை காதலா ? இது கள்ள காதலுக்கு சமம் , நீங்களும் நானும் சபல பட்டவர்களாக இருந்தால் , நாம் அதை ஆதரிக்கலாமா ? , வெட்கி வேடிக்கைதான் பார்க்கலாம் , கேள்விகேற்பவர்களை தன் முதுகை பார்க்க சொல்ல நமுக்கு என்ன அருகதி இருக்கு , ஒரு போலி ஆன்மீகவாதிக்கு உடன் படுவது , அவன் செய்ததைவிட மோசம் , நான் கலாச்சாரம் , பண்பு என்று வாதிடவரவில்லை , நமது நாட்டில் செக்ஸ் உடன் ஒழுக்கத்தை சேர்த்தே பார்கீறோம், இதனால் தான் இந்த பிரச்சினை , பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் நாம் நமக்குஉரியவருடன் வாழ்வது தான் ஒழுக்கமானது, செக்ஸ் மட்டும் இல்லை எல்லா பழக்க வழக்கங்களும் இதை ஒற்றியே இருக்கவேண்டியது அவசியம் , அடுத்தவர் நம்பிக்கையை கொன்றுவிட்டு தன் சுயநலனுக்காக தவறு செய்த ரஞ்சிதா அனுதாப படவேண்டியவரா ? , சன் செய்தது தவறுதான், அதற்கு தனி பதிவு போட்டு கேள்வி கேளுங்கள் , அதற்காக நடிகை செய்தது அதை விட பரவாயில்லை என்று சொல்லாதிர்கள்
வருத்ததுடன் ......
நல்ல பதிவு....
இரஞ்சிதாவைத் தாங்கிப் பிடிப்பதைத் தவிர மற்றதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.கடைசியில் நடிகை சாமியாரால் கதறக் கதற கற்பழிப்பு.நடிகை கதறல்.அப்படிங்கிற நியூஸா மாறிடும் போலிருக்கே!
//ஆனாலும் இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் பின்னாளில் நாட்டுப் பிரச்சினைகள் எதையும் பொதுவில் வைத்து வாதாடும்போது உனக்கென்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழ வாய்ப்பு உண்டு //
என்ன ஒரு கடமை உணர்வு
வித்தியாசமான பார்வை.அவர்கள் இருவரும் நடந்து கொண்டதில் தப்பில்லை என்றாலும் காவி வேசத்தில் செஞ்சதுதான் தப்பு...........................
//இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது.//
ஸப்பா ..முடியல.
அருமையாக சொல்லியிருக்கேங்க
அந்த காட்சி விற்பனைக்காகத்தான் எடுக்கப்பட்டதா என்றுகூட எண்ணத்தோன்றுகிறது காரணம் அதை வைத்து சம்பாரிக்கிறார்கள்
சின்ன உதாரணம் நக்கீரன் தளத்தில் கூட அந்த படத்திற்கு டிக்கெட் விற்று காட்டுகிறார்கள்
சி.வேல் கருத்து எனக்கு ஏற்ப்புடையதாக இருக்கின்றது. ரஞ்சிதா காதலால் செய்தார்களோ இல்லை பணத்திற்க்காக செய்தார்களோ தெரியவில்லை ஆனால் அவருக்கு திருமணம் முடிந்து குடும்பம் இருக்கிறது. அவர் கணவருக்கு துரோகம் செய்திருக்கிறார். ஆனால் நித்தியோ கோடிக்கணக்கான மக்களின் பணத்தையும், மக்களின் நம்பிக்கைகும் துரோகம் இழைத்திருக்கிறார். இவர் ஓபனாக ரஞ்சிதாவையோ அல்லது இதற்கு முன்பு அவருக்கு பணிவிடை செய்த பெண்மனியையோ (இன்னும் எத்தனை பேர் அவருக்கு பணிவிடை செய்தார்களோ)திருமணம் செய்திருந்தால் அவர் சம்பந்தப்பட்ட படுக்கை அறை காட்சியை வெளியிட்டால் அது மாபெரும் தவறு என்று சொல்லலாம். இது கூடா காதல் வேறு. சாதாரண மனிதன் ஆகிய எனக்கு என் சொந்த செலவில் நெட் வசதி செய்து எனக்கு விருப்பமான காட்சிகளை பார்க்கின்றேன். ஆனால் நித்தி செய்த லீலைகள் யாருடைய பணத்தில் அறியாமையில் கொட்டி கொடுத்த பக்தர்கள் பணத்தில் அல்லவா? அவர்கள் ஆத்திரப்படுவதில் தவறேதும் இல்லை. பக்தர்களும் குற்றவாளிகளே. யாரை எங்கே வக்கனும் என்று யாருக்கும் தெரியாமல் அறியாமையில் இருக்கிறார்கள். அந்த அறியாமையை போக்காமல், நாம் நம் வேலையை பார்த்து கொண்டு போவது தான் நம் குற்றம்.
//இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது.//
உண்மைத்தமிழன் இதெல்லாம் நம்புற மாதிரியா உள்ளது .. என்னங்க நீங்க?
இதைப்போல வீடியோ வெளியே வந்ததால் தான் இவரை போன்றவர்களின் உண்மை முகம் தெரிய வருகிறது, அதாவது நான் துறவி முற்றும் துறந்தவன் என்று கூறி ஊரை ஏமாற்றிக்கொண்டு இருந்தது. நீங்க கூறியது போல இவர் செய்ததில் எந்த வித தவறும் இல்லை, ஆனால் இவர் அதற்க்கு பயன்படுத்திய முறைகள் (காவி துறவி) தான் தவறு. இவர் துறவி இல்லை என்றால் இந்த பரபரப்பு வந்து இருக்காது. ஏமாந்தவர்கள் மீது எனக்கு எந்த வித பரிதாபமும் வரலை..ஏன் என்றால் நாளை மறுபடியும் ஏமாற தயாராகி விடுவார்கள், கொஞ்சமும் வருத்தமில்லாமல் வெட்கமில்லாமல்.
ரஞ்சிதா போல் பலர் உள்ளார்கள், நித்தியானந்தம் போல் இருப்பவர்கள் ஏராளம் இவரைப்போல உள்ள சாமியார்களை மட்டும் கூறவில்லை நம்மைப்போல சாதாரணமானவர்களையும் சேர்த்து தான். இவர்கள் வீடியோ வெளியே வந்து விட்டது.. மற்றவர்களது வீடியோ வரலை.. அவ்வளோ தான் வித்யாசம். ரஞ்சிதா செய்தது எனக்கு தவறாக தோன்றவில்லை காரணம் அவர் பொதுமக்கள் யாரையும் ஏமாற்றவில்லை மற்றபடி அவரது குடும்பம் அவரது தனிப்பட்ட விஷயம், ரஞ்சிதாவை திட்டுபவர்கள் ஒழுக்கம் எப்படி என்பது திட்டுபவர்கள் மனசாட்சிக்கு தெரியும், ஆனால் நித்தியானந்தம் அவ்வாறு அல்ல பொதுமக்களை தவறான தகவல்கள் கூறி ஏமாற்றி இருக்கிறார், இவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும், மக்கள் ஏன் ஏமாந்தார்கள்? என்பது அடுத்த விஷயம்.
உங்களது சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மற்றபடி ஓகே.
ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?
well said
Dear true tamilan,
Who do you have in mind when you say 'we donot have the qualification to criticise nityanandar and ranjitha"?Do you have in mind the hypocritical cutlets and naxal terrorists like Vinavu and co and his supporters like the bearded loony doctor from chennai?
//'சூர்யா' டிவியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஷகிலா நடித்த மலையாளப் படங்களையும் காண்பித்தார்கள். //
சூர்யா டிவியில மட்டுமா காட்டினாங்க.ஏசியா நெட், ஏசியாநெட் ப்ளஸ், மா டிவி, இதுலயும் தான் காட்டினாங்க.........இப்போ ஜீ தெலுங்கில் காட்டுறாங்களாம்.....வரலாறு முக்கியம்ணே..... எப்ப பாரு ஒன்னையே குறை சொல்லக்கூடாது..
Superb Sir
http://stalinfelix.blogspot.com/
நல்லா எழுதியிருக்கீங்க அண்ணே! அப்படியே லிங்கும் கொடுத்திருக்கலாம்..
பக்தி என்பது கடவுளிடம் பக்தன் காட்டுகின்ற தீவிரத்திற்கு மட்டுமல்ல.. கட்சியின் உண்மையான தொண்டனாக இருப்பவன் காட்டுவதும் பக்திதான். உழைக்கின்ற இடத்தில் முழுமையான அர்ப்பணிப்பு நோக்கத்துடன் உழைப்பவன் வெளிப்படுத்துவதும் பக்திதான். குருவின் பேச்சைத் தட்டாமல் செய்து முடிக்கும் சிஷ்யனிடம் உள்ளதும் பக்திதான். இந்த பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது எனது கருத்து
Head Shot...!!
The perfect analysis and writing keep it up.
நன்றிகள் sriram, starjaan..
[[[Darvin said...
//நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை.//
I felt the same when i saw the clips..So sad :-(]]]
டார்வின் நன்றி..!
[[[sriram said...
இப்போ சீரியஸ் கமெண்ட்
இந்த மேட்டரில் இதுவரை வந்த மிகச் சிறந்த பதிவு. ரஞ்சிதா நெலமதான் ரொம்ப பாவம். அவரை மொத்தமாக மாஸ்க் செய்து வெளியிட்டிருக்கலாம். காவி தரித்து நித்தி செய்தது கேவலம், ஆனால் கைநீட்டி குத்தம் சொல்ல யாருக்கும் (பலருக்கும்) அருகதையில்லை.
முழு வீடியோ இன்னும் பாக்கி இருக்காம், நக்கீரன் ஆன்லைன் சப்ஸ்க்ரைப் பண்ணா பாக்கலாமாம், நக்கீரனிலோ வேறு இணைய தளத்திலோ நாமெல்லாம் மறுபடி பாக்கத்தான் போறோம் (வெக்கமே இல்லாம)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]
பாஸ்டன்ஜி..
வேற வழியில்லை.. முடிவெடுக்கும் நிலையில் இருப்பவர்கள் அத்தனை பேருமே ஆண்களாக இருந்து தொலைத்திருப்பதால் இது ஒரு ஆணிய பார்வையிலேயே நடத்தப்பட்டு வருகிறது..!
உண்மையாகவே சமூகத்திற்கான பங்களிப்பு, முகமூடி கிழிப்பு என்றால் அதை எதற்கு பணம் கட்டி பார் என்று சொல்வது..? காசு சம்பாதிக்க வேற வழியா இல்லை..!
[[[gulf-tamilan said...
/ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?/
?????]]]
எதுக்கு இந்த கொஸ்டீன் கல்ப்பு..?
[[[அரவிந்தன் said...
//நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்//
இலட்க்கனக்கான மக்கள் தெய்வமாக நம்பும் ஒருவரிடம் படுக்கிறோமே என்ற குற்ற உணர்வு துளியும் இல்லை.]]]
எதற்கு இந்தக் குற்ற உணர்வு அவருக்கு வேண்டும்..? காதலுக்குக் கண்ணில்லைன்னு தியேட்டர் வசனத்தைக் கேட்டவுடனேயே மட்டும் ஜோரா கை தட்டுனீங்க..!
[[[முற்றும் துறந்த துறவி என்று மக்கள் நம்பும் ஒருவரிடம் நாம் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோமே என்ற உறுத்துதல் கொஞ்சம்கூட ரஞ்சிதாவிடம் இல்லை.]]]
அவருக்கு இருக்க வேண்டியதில்லை. அவர் காதலியாகவோ, சிஷ்யையாகவோ தன்னை இருத்தி வைத்திருக்கிறார்..!
[[[இவளுக்கு நீங்க வக்காலத்து.]]]
இது நாகரிகமில்லை.. இவர் செய்தது தவறு எனில் இது போன்ற கணக்கற்ற காட்சிகளை கற்பனை செய்து பார்த்திருக்கும் மனதுடைய நீங்கள்..!
[[[இராஜசேகர் கேடிதான். அதே அளவுக்கு கேடியுடன் துணை போன ரஞ்சிதாவை என்ன சொல்வது.]]]
ஒண்ணும் சொல்ல முடியாது.. சொல்வதற்கான தகுதி இங்கே யாருக்கும் கிடையாது..!
[[[செந்தழல் ரவி said...
சிறந்த பதிவு.]]]
நன்றி தம்பீ..!
[[[கலகலப்ரியா said...
//ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. //
இப்டியான.. க்கலாம்கள்... நிறைய உண்டு.. ஒரு வேளை அந்தப் பெண் அவமானம் தாங்க முடியாது தற்கொலை செய்து கொள்வாளானால்... இத்தகைய உயர்ந்த காரியத்தைச் செய்தவர்கள் கொலைக் குற்றவாளிகள்... அவ்வாறெதுவும் நடக்காவிடிலும்.. இப்படி ஒரு மட்டகரமான செயலைச் செய்ததைவிட.. அந்த நித்தியானந்தா செய்தது ஒன்றும் மட்டமாகத் தெரியவில்லை...]]]
கலகலப்பான ப்ரியா.. ஒரே போடா போட்டுட்டம்மா..! குட்..!
[[[//இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.//
அப்படி எதுவும் இருந்தால் அல்லவா போவதற்கு...!!!]]]
இதுவும் கரெக்ட்டுதான்.. அத்தனை பேரும் இதை வைத்து பணம் சம்பாதிக்கும் வழியையும் பார்க்கிறார்கள்.. இதற்குப் பெயர் பத்திரிகைத் தொழிலாம்..!!!
[[[மனிதநேயன் said...
நல்லதொரு உருப்படியான பதிவு
காவி கட்டினால் உடற்சேர்கை இருக்கக்கூடாதோ? இந்த விதியை ஏற்படுத்துவது யார் என்று புரியவில்லை. நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா தனியறையில் மனித இயல்போடு காமசுகம் அனுபவத்திருக்கின்றார். இது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம். தனிப்பட்ட பிரச்சனை. இதில் அத்து மீறி நுழைந்து அதை படம் பிடித்து பார்ப்பதுக்குரிய அதிகாரத்தை யார் தந்தது? நித்தியானந்தாவுக்கு அவரைப் பின்பற்றும் மக்கள் உடலுறவு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார்களா? அல்லது காவிகட்டினால் உடலுறவு கொள்ளக் கூடாது என்று நித்தியானந்த சொன்னாரா? நித்தியானந்தா நடந்துகெண்டது இயற்கையானது. ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம் மகா கேவலமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடலுறவில் ஈடுபட்டால் கள்ளச்சாமியா? இயற்கையான உடலுறவுதான் நல்லது கெட்டதை தீர்மானிக்கும் மையப் புள்ளியா? காவியை கழட்டி எறிந்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள். கடவுள்களுக்கும் ரெண்டு மூணு பொண்டாட்டி கருணாநிதிக்கும் அப்படித்தான். ஊரில முக்கா பங்கு பேருக்கும் வைப்பாட்டி கள்ள உறவு இருக்கு. காவிகட்டினவன் மட்டும் ஈரத்துணிய போட்டு எதுக்கு இறுக்கணும்? அவனும் அனுபவிக்கட்டுமே! நாம யோக்கியமாவா இருக்கிறோம் நித்தியானந்தாவ கேள்வி கேட்க?]]]
உருப்படியான, தெளிவான பின்னூட்டம்..!
நன்றி மனிதநேயன் ஸார்..!
[[[Baskar said...
very good analysis. I like the way you approached this issue in each victim's point of view...
-B]]]
நன்றி பாஸ்கர்..!
[[[அரவிந்தன் said...
//காவியை கழட்டி எறிந்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்//
அப்படி செய்திருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது செய்திருக்க வேண்டியதுதானே யார் வேண்டாங்கிறா.. அத விட்டு சாமியார் சன்யாசி துறவி என்று வெத்து சீன் தேவையா..?]]]
தேவையில்லைதான்..!
//உடலுறவில் ஈடுபட்டால் கள்ளச்சாமியா?//
அப்ப முற்றும் துறந்தவன் எதற்கு பெட்டி பேச்சு.. ஆம் உடலுறவு கொண்டதில் என்ன தவறு என்று இராஜசேகரன் கேட்பானா..?]]]
கேட்டால் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறார் என்றுதான் அர்த்தம்..!
[[[வானம்பாடிகள் said...
The best and fair article i have read sir. hats off to you.]]]
நன்றிகள் வானம்பாடிகள் ஸார்..! உங்களுடைய முதல் வருகை இது என்று நினைக்கிறேன்..!
anna,
good post...i felt sorry for ranjitha..by the way, please comment on charu s latest act.
[[[Thiru said...
மனிதநேயனின் பதில் அருமை. இதை ஏன் தனி மனித உரிமையாக பார்க்ககூடாது? அல்லது காவி கட்டினால் உடலுறவு கொள்ளக் கூடாது என்று நித்தியானந்த சொன்னாரா? இதில் பாவம் ரஞ்சிதா நிலைமைதான்.]]]
உண்மைதான் திரு. அவர் வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றிய மனவளக் கல்வியைத்தான் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்..
செக்ஸ் பற்றி இல்லையே.. பின்பு ஏன் இவர்களுக்கு இவ்வளவு கோபம்..?
Dear Mr Unmai,
One of the best pieces that got written about this episode yet!
Of course you had tried a bit to white wash some of the murky things. Neverthe less your honesty, arguement and the perspective are all well structured!
Well done!
Thanks
Dear Mr Unmai,
One of the best pieces that got written about this episode yet!
Of course you had tried a bit to white wash some of the murky things. Neverthe less your honesty, arguement and the perspective are all well structured!
Well done!
Thanks
[[[இராகவன் நைஜிரியா said...
எல்லாமே மாயை... மிக அருமையான அலசல் அண்ணே. வித்யாசமான பார்வை. எல்லோரும் சாமியார் செய்தது தப்பு எனச் சொல்லும் போது, அந்த பெண்ணின் நிலையில் இருந்து பார்த்தது.. ஹாட்ஸ் ஆஃப் டூ யூ]]]
வேற வழியில்லண்ணே.. எதையுமே சரி.. தப்புன்ற பார்வையில பார்க்கிறதைவிட எதுனால சரி.. எதுனால தப்புன்னு பார்த்தா அவங்கவங்க பாயிண்ட் ஆஃப் வியூ புரியும்..!
[[[kuruvi said...
அய்யா... அப்போ டைகர் வுட்ஸை மேல்நாட்டில போட்டு கிழிச்சாங்களே அது என்னங்க? வெளிப்படையா செக்ஸ் இருக்கிற அங்கேயே ஒழுக்கத்துக்கு மரியாதை கொடுக்கறாங்க.. கடைசில டைகர்வுட்சு மன்னிப்ப கேட்டாரு அவரோட தவறை ஒப்புக் கொண்டாரு.
அதே போல நித்தியானந்தம் ஒப்புக்குவாரா? ஊரை ஏய்சு கோடிக்கணக்ககில சுருட்டிவருக்கு இப்படி வக்காலத்து வாங்குவது வேதனையாக இருக்கு.]]]
அவருக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவரைக் குற்றம்சாட்டும் முன் நம்மையும் கொஞ்சம் சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது என்றுதான் சொன்னேன்..!
[[[Ravi said...
very very fair article. I see sanity in the blog world, atlast!]]]
கருத்துக்கு நன்றி ரவி..!
//நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?
//
I felt the same yesterday when sun TV started publicizing the second episode..hope they will drag it to more to earn more money and TRP rating.
Good article/blog i read recent days.
[[[kuruvi said...
ரஞ்சிதாவின் நிலை பற்றி நீங்க எழுதியது சரிதான். ஆனால் அவரது பேட்டி ஒன்றை மிக அண்மையில் படித்திருந்தேன்.. அதில் அவர் கணவருடன் சந்தொசமாக வாழ்வதாகவும் விவாகரத்து என்பதெல்லாம் பொய் செய்தி என்றும். தெக்கத்தி பொண்ணு சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் அந்த சீரியல் எங்கேயோ வெகுதொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடப்பதாகவும் அதுவும் மாதக்கணக்கில் நடப்பதால் அடிக்கடி அவ்வளவு நீண்ட தூரம் பிரயாணம் செய்து வரமுடியாது என்றும் டெல்லியில் இருந்து வந்துதான் இங்கு சின்னத்திரையில் தலைகாட்டுவதாகவும் கூறி இருந்தார்.]]]
அதன் பின்புதான் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள்..! கடைசியில் இங்கே வந்து முடிந்திருக்கிறது..!
[[[எட்வின் said...
//பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை//
100% உண்மையை உண்மைத்தமிழன் சொல்லியிருக்கீங்க. மேலே மனித நேயன் கூறிய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். இரு தினங்கள் முன்புவரை தெய்வமாக கருதியவரை இன்று தேவையற்றவராக கருதுவதும்; தீர்விற்காக அவரிடம் அண்டியவர்கள் இன்று தீயவர் என்று கருதுவதும் வேடிக்கை. நல்லது எது! கெட்டது எது! என வேறு பிரிக்க தெரிந்த இந்த பொதுஜனங்கள் ஏன் மனிதனை கடவுளாக பாவித்தார்கள் என்பதுதான் கேள்விக்குரிய விஷயம்.
இது சரி இது தவறு என தீர்மானிக்கும் நாம் ஏன் இவரைப் போன்றோரிடமிருந்தும், பிறரிடமிருந்தும் வாழும் வழிக்கான நெறிமுறையை கற்றுக்கொள்ள வேண்டும்; ஏன் பின்னர் கூப்பாடு போட வேண்டும்? நாமே நமது வழியை தீர்மானித்து கொள்ளலாமே.]]]
மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் அவ்வளவு..!
அதில் இருந்து மீள்வதற்கு அவர்கள் ஒரு வழி தேடுகிறார்கள்.
அதற்காகத்தான் இப்படிப்பட்டவர்களிடம் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.. பேச்சு.. பேச்சு.. பேச்சு.. இந்த ஆறுதலான பேச்சுதான் அவர்களை அங்கேயே இருக்க வைக்கிறது..!
குடும்பத்தில் ஒருவருக்கொரு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசித் தீர்த்தாலே போதுமே.. நமக்கு எதற்கு இன்னொருவரின் ஆறுதல்..?
//ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே நித்தியானந்தத்தை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்கப்பட்டு அவர் அதனை மறுத்து அது தன்னுடையதல்ல என்று சொன்ன பின்புதான் ஒளிபரப்பியுள்ளார்கள். இதனால்தான் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தம் தரப்பினர் ஒளிபரப்புக்கு தடைகோரியபோது ஸ்டே ஆர்டரை கொடுக்க நீதிபதியும் மறுத்துவிட்டாராம்.//
என்ன சொல்ல வர்றீங்க அண்ணே? நீளமான ஒரு இடுகையைப் போட்டால், ஸ்கிப் பண்ணி படிக்கும்போது, இதையெல்லாம் கண்டுக்கமாட்டங்கன்னு நெனைச்சிட்டீங்களா?
ரஞ்சிதா என்னும் நடிகையை விற்று நல்லா விளம்பரம் தேடிய ஊடகங்கள் இன்று வேறு விதமாக அவரை பயன்படுத்தி விளம்பரம் தேடுகிறார்கள. அது நடிகையாக இல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஊடகங்களால் இவ்வாறு கேள்வி பகிரங்கப்படுத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே,
ஆனாலும் காவியுடையுடன் தான் முற்றும் துறந்தவன் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த நித்தியானந்தா தண்டிக்க படவேண்டியவர்தான், இதில் குற்றமாக நான் காண்பது மக்களை ஏமாற்றியதுதானே ஒழிய பாலியல் தேவையை நிறைவேற்றியதையல்ல
[[[சி.வேல் said...
"பெண்ணின் நிலையில் இருந்து பார்த்தது"
நீங்கள் ஊடக சம்பந்தபட்டவர் என்பதால், நடிகைக்கு support செய்யலாமா?]]
அதனாலேயே அவர் செய்ததை நியாயப்படுத்தவில்லை. பொதுப்படையாக யோசித்துப் பார்த்ததில் எனக்கு தெரிந்தது இதுதான்.
[[[வெட்கி தலைகுனிய வேண்டிய நேரமிது, இதையெல்லாம் ஆராயகூடாது]]]
ஏன் இப்போது மட்டும் தலைக்குனிவு.. இதையெல்லாம் எத்தையோ சினிமா காட்சிகளில் குடும்பத்துடன் பார்த்தபோது நமக்கு வெட்கம் வரவில்லையே..?
[[[அப்படி என்ன வறுமை அந்த நாய்க்கு]]]
இதென்ன மரியாதை..? இதற்குப் பின்பு நீங்கள் என்ன எழுதியிருந்தாலும் அது குப்பைதான்.. முதலில் சக மனிதர்களை மதிக்க வேண்டும் வேலு..!
பின்புதான் மற்ற கருத்து பரிமாற்றங்களெல்லாம்..!
[[[Sangkavi said...
நல்ல பதிவு....]]]
நன்றி சங்கவி..!
[[[நல்லதந்தி said...
இரஞ்சிதாவைத் தாங்கிப் பிடிப்பதைத் தவிர, மற்றதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. கடைசியில் நடிகை சாமியாரால் கதறக் கதற கற்பழிப்பு. நடிகை கதறல். அப்படிங்கிற நியூஸா மாறிடும் போலிருக்கே!]]]
தந்தியாரே.. செளக்கியம்தானா..? வருகைக்கு நன்றி..!
ரஞ்சிதாவைத் தாங்கிப் பிடித்தது அவர் மயக்கத்தில் இருக்கிறார் என்பதால்தான்..!
[[[அத்திரி said...
//ஆனாலும் இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் பின்னாளில் நாட்டுப் பிரச்சினைகள் எதையும் பொதுவில் வைத்து வாதாடும்போது உனக்கென்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழ வாய்ப்பு உண்டு //
என்ன ஒரு கடமை உணர்வு]]]
ஆச்சரிய வாக்கியமெனில் கடைசியில் ஆச்சரியக் குறியிட வேண்டும் என்பதை பள்ளியில் சொல்லித் தரவில்லையா..?
[[[அத்திரி said...
வித்தியாசமான பார்வை. அவர்கள் இருவரும் நடந்து கொண்டதில் தப்பில்லை என்றாலும் காவி வேசத்தில் செஞ்சதுதான் தப்பு.]]]
அட.. ஆச்சரியமான பின்னூட்டம். என் எழுத்தையும் படித்து ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்றால்..????????
உண்மையண்ணே,
எல்லா சாமியார்களுக்கும் ரஞ்சிதா போலத்தான் சேவை செய்வாங்க, அதைப்போய் காதல்ன்னு எழுதாதீங்க. அப்படியே அது காதல்னாலும் நித்திக்கு இது மாதிரி எத்தனை இருக்கும். நீங்க ரொம்ப நல்லவருன்றதுனால இப்படி யோசிக்கிறீங்களாக்கும்.
சினிமாவில் நித்தி சீடர்கள் பட்டியல் வெளியிட்டதற்கு நன்றி. ஆனால் ரொம்பக் குறைவா இருக்குதே. மத்த சாமியார்களுக்கும் ஆரெல்லாம் பக்தர்கள் என்று வெளியிட்டால் உபயோகமாக இருக்கும்.
அண்ணே ஆயிரத்தில் ஒருவன்ல வினவு விமரிசனத்துல அந்த உடல் மொழியை எழுதலேண்ணே, எங்களையும் எல்லாப் பதிவர் லிஸ்ட்ல சேத்துட்டீங்களே.
நீங்க எழுத விட்ட முக்கியமான விசயம் நித்யாவுக்கு இத்தனை கோடி பணமும், சொத்தும் எப்படி வந்தது? ஊரைக் கொள்ளையடிக்கும் உத்தமர்களின் காணிக்கையை வைத்து இப்படி ஒரு சாம்ராஜ்ஜியம் அமைத்திருக்கும் ஒரு கேடியின் செக்ஸ் ஊழல் மட்டும்தான் மக்களுக்கு தெரிகிறது.
என்னதான் பெரியார் கடவுள் இல்லைன்னு சொன்னாலும் நித்தி போன்ற சாமியார்கள்தான் நாத்திகத்திற்கு நல்ல பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையண்ண்ணும் சீக்கிரம் எங்க பக்கம் வருவாருன்னு ஒரு நம்பிக்கை. நன்றி
[[[ஜோ/Joe said...
//இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது.//
ஸப்பா.. முடியல.]]]
வெயில் ரொம்ப ஜாஸ்தியா ஜோ..!
[[[smart said...
அருமையாக சொல்லியிருக்கேங்க
அந்த காட்சி விற்பனைக்காகத்தான் எடுக்கப்பட்டதா என்றுகூட எண்ணத் தோன்றுகிறது காரணம் அதை வைத்து சம்பாரிக்கிறார்கள்
சின்ன உதாரணம் நக்கீரன் தளத்தில்கூட அந்த படத்திற்கு டிக்கெட் விற்று காட்டுகிறார்கள்.]]]
என்ன பொழைப்பு இது..? இதுவா பத்திரிகை தர்மம்..?
[[[cena said...
சி.வேல் கருத்து எனக்கு ஏற்ப்புடையதாக இருக்கின்றது. ரஞ்சிதா காதலால் செய்தார்களோ இல்லை பணத்திற்க்காக செய்தார்களோ தெரியவில்லை ஆனால் அவருக்கு திருமணம் முடிந்து குடும்பம் இருக்கிறது. அவர் கணவருக்கு துரோகம் செய்திருக்கிறார். ஆனால் நித்தியோ கோடிக்கணக்கான மக்களின் பணத்தையும், மக்களின் நம்பிக்கைகும் துரோகம் இழைத்திருக்கிறார். இவர் ஓபனாக ரஞ்சிதாவையோ அல்லது இதற்கு முன்பு அவருக்கு பணிவிடை செய்த பெண்மனியையோ (இன்னும் எத்தனை பேர் அவருக்கு பணிவிடை செய்தார்களோ)திருமணம் செய்திருந்தால் அவர் சம்பந்தப்பட்ட படுக்கை அறை காட்சியை வெளியிட்டால் அது மாபெரும் தவறு என்று சொல்லலாம். இது கூடா காதல் வேறு. சாதாரண மனிதன் ஆகிய எனக்கு என் சொந்த செலவில் நெட் வசதி செய்து எனக்கு விருப்பமான காட்சிகளை பார்க்கின்றேன். ஆனால் நித்தி செய்த லீலைகள் யாருடைய பணத்தில் அறியாமையில் கொட்டி கொடுத்த பக்தர்கள் பணத்தில் அல்லவா? அவர்கள் ஆத்திரப்படுவதில் தவறேதும் இல்லை. பக்தர்களும் குற்றவாளிகளே. யாரை எங்கே வக்கனும் என்று யாருக்கும் தெரியாமல் அறியாமையில் இருக்கிறார்கள். அந்த அறியாமையை போக்காமல், நாம் நம் வேலையை பார்த்து கொண்டு போவதுதான் நம் குற்றம்.]]]
நானும் தினம்தோறும் இது போன்ற குற்றங்களை கண்டு கொள்ளாமல்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
அப்போதெல்லாம் நமக்கு இது போன்ற ஆத்திரங்களும், கோபங்களும் வருவதில்லையே சேனா..? ஏன்..?
//ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?//
I felt the same but after seeing the video fully (so i'm even not deserved for this)
[[[கிரி said...
//இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது.//
உண்மைத்தமிழன் இதெல்லாம் நம்புற மாதிரியா உள்ளது .. என்னங்க நீங்க?
இதைப் போல வீடியோ வெளியே வந்ததால்தான் இவரை போன்றவர்களின் உண்மை முகம் தெரிய வருகிறது, அதாவது நான் துறவி முற்றும் துறந்தவன் என்று கூறி ஊரை ஏமாற்றிக்கொண்டு இருந்தது. நீங்க கூறியது போல இவர் செய்ததில் எந்த வித தவறும் இல்லை. ஆனால் இவர் அதற்க்கு பயன்படுத்திய முறைகள் (காவி துறவி)தான் தவறு. இவர் துறவி இல்லை என்றால் இந்த பரபரப்பு வந்து இருக்காது. ஏமாந்தவர்கள் மீது எனக்கு எந்த வித பரிதாபமும் வரலை. ஏன் என்றால் நாளை மறுபடியும் ஏமாற தயாராகி விடுவார்கள், கொஞ்சமும் வருத்தமில்லாமல் வெட்கமில்லாமல்.
ரஞ்சிதா போல் பலர் உள்ளார்கள், நித்தியானந்தம் போல் இருப்பவர்கள் ஏராளம் இவரைப் போல உள்ள சாமியார்களை மட்டும் கூறவில்லை நம்மைப் போல சாதாரணமானவர்களையும் சேர்த்துதான். இவர்கள் வீடியோ வெளியே வந்து விட்டது.. மற்றவர்களது வீடியோ வரலை.. அவ்வளோதான் வித்யாசம். ரஞ்சிதா செய்தது எனக்கு தவறாக தோன்றவில்லை. காரணம் அவர் பொதுமக்கள் யாரையும் ஏமாற்றவில்லை. மற்றபடி அவரது குடும்பம் அவரது தனிப்பட்ட விஷயம், ரஞ்சிதாவை திட்டுபவர்கள் ஒழுக்கம் எப்படி என்பது திட்டுபவர்கள் மனசாட்சிக்கு தெரியும், ஆனால் நித்தியானந்தம் அவ்வாறு அல்ல பொதுமக்களை தவறான தகவல்கள் கூறி ஏமாற்றி இருக்கிறார், இவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும், மக்கள் ஏன் ஏமாந்தார்கள்? என்பது அடுத்த விஷயம். உங்களது சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மற்றபடி ஓகே.]]]
உங்களது பின்னூட்டத்தில் பலவற்றில் எனக்கும் உடன்பாடுதான்.
நித்தி மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்பது உண்மைதான் என்றாலும் அதை அவரிடம் மட்டும் நாம் ஏன் பார்க்க வேண்டும்..? கேட்க வேண்டும்..? மீடியாக்களிடமும் அதே கேள்வியைக் கேட்கலாமே..?
இப்போது இந்த வீடியோவையே காசு கொடுத்து பார்க்க வைக்கின்ற பத்திரிகைகளை என்னவென்று சொல்வீர்கள்..?
[[[காவேரி கணேஷ் said...
ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?
well said]]]
கேட்டுச் சொல்லுங்க "காவேரி"!!
[[[chinnappenn2000 said...
Dear true tamilan, Who do you have in mind when you say 'we do not have the qualification to criticise nityanandar and ranjitha"? Do you have in mind the hypocritical cutlets and naxal terrorists like Vinavu and co and his supporters like the bearded loony doctor from chennai?]]]
மீண்டும் எனது பதிவைப் படித்துப் பாருங்கள். புரியும்..!
மற்றவர்களைப் போலவே எழுத வேண்டுமெனில் பின்பு நான் எதற்கு தனித்தளம் நடத்தவேண்டும்..???
[[[அத்திரி said...
//'சூர்யா' டிவியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஷகிலா நடித்த மலையாளப் படங்களையும் காண்பித்தார்கள். //
சூர்யா டிவியில மட்டுமா காட்டினாங்க. ஏசியா நெட், ஏசியாநெட் ப்ளஸ், மா டிவி, இதுலயும்தான் காட்டினாங்க. இப்போ ஜீ தெலுங்கில் காட்டுறாங்களாம். வரலாறு முக்கியம்ணே. எப்ப பாரு ஒன்னையே குறை சொல்லக்கூடாது.]]]
நான் அனைத்து மீடியாக்களையும்தான் சேர்த்து குற்றம் சொல்லியிருக்கிறேன்..!
சூர்யா டிவியைத் தனியே குறிப்பிட்டதற்குக் காரணம் சன் டிவியில்தானே இதனை ஒளிபரப்பினார்கள். அதனால்தான்..!
[[[காலப் பறவை said...
Superb Sir
http://stalinfelix.blogspot.com/]]]
நன்றி காலப்பறவை ஸார்..!
[[[தண்டோரா ...... said...
நல்லா எழுதியிருக்கீங்க அண்ணே! அப்படியே லிங்கும் கொடுத்திருக்கலாம்..]]]
எந்த லிங்குண்ணே..?
[[[ஜெகதீஸ்வரன்.இரா said...
பக்தி என்பது கடவுளிடம் பக்தன் காட்டுகின்ற தீவிரத்திற்கு மட்டுமல்ல.. கட்சியின் உண்மையான தொண்டனாக இருப்பவன் காட்டுவதும் பக்திதான். உழைக்கின்ற இடத்தில் முழுமையான அர்ப்பணிப்பு நோக்கத்துடன் உழைப்பவன் வெளிப்படுத்துவதும் பக்திதான். குருவின் பேச்சைத் தட்டாமல் செய்து முடிக்கும் சிஷ்யனிடம் உள்ளதும் பக்திதான். இந்த பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது எனது கருத்து]]
Head Shot...!! The perfect analysis and writing keep it up.]]]
நன்றி ஜெகதீஷ்வரன் ஸார்..!
[[[karthi said...
anna, good post. i felt sorry for ranjitha. by the way, please comment on charus latest act.]]]
நன்றி கார்த்தி..!
சாரு பற்றி இதுலேயே எழுதியிருக்கிறேனே..!!
33 வயது ஒரு இளைஞன் ஒரு பெண்ணோடு உறவு கொண்டது எந்தவிதத்தில் தவறு என்று எனக்குப் புரியவில்லை.
ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து ஒத்துக்கொண்டு உறவு கொண்டதை படம் பிடிப்பதற்கும் தொடர்ந்து இரண்டு நாட்களாக நமது வீட்டின் வரவேறபரையில் அதை கொண்டு வந்து சேர்ப்பதற்கும் இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது.
சன் டி.வி. மீது வழக்கு தொடுக்க பொறுப்புள்ள பார்வையாளர்களுக்கும் தொடர்புடையவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்கள் அதைச் செய்ய வேண்டும்.
நித்தியானந்தாவும், இரஞ்சீதாவும் விருப்பப்பட்டால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடரலாம்.
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதுபற்றி விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, பிறரின் அந்தரங்க உறவுகளை படம்பிடித்த காட்ட அரசு தொடர்ந்து அனுமதிப்பது சரியல்ல...
[[[NO said...
Dear Mr Unmai, One of the best pieces that got written about this episode yet!
Of course you had tried a bit to white wash some of the murky things. Nevertheless your honesty, arguement and the perspective are all well structured!
Well done!
Thanks]]]
நன்றி நோ அவர்களே..!
[[[Sivakumar said...
//நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?//
I felt the same yesterday when sun TV started publicizing the second episode. hope they will drag it to more to earn more money and TRP rating. Good article/blog i read recent days.]]]
புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் சிவா..
[[[கும்மி said...
//ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே நித்தியானந்தத்தை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்கப்பட்டு அவர் அதனை மறுத்து அது தன்னுடையதல்ல என்று சொன்ன பின்புதான் ஒளிபரப்பியுள்ளார்கள். இதனால்தான் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தம் தரப்பினர் ஒளிபரப்புக்கு தடைகோரியபோது ஸ்டே ஆர்டரை கொடுக்க நீதிபதியும் மறுத்துவிட்டாராம்.//
என்ன சொல்ல வர்றீங்க அண்ணே? நீளமான ஒரு இடுகையைப் போட்டால், ஸ்கிப் பண்ணி படிக்கும்போது, இதையெல்லாம் கண்டுக்கமாட்டங்கன்னு நெனைச்சிட்டீங்களா?]]]
இதுல என்ன தவறு இருக்கு..? நடந்ததாக எனது காதுக்கு வந்த செய்திகளைத்தான் பதிவு செய்திருக்கிறேன்..!
உங்களிடம் முன்கூட்டியே கேட்டபோது நான் அல்ல என்று சொல்லிவிட்டு இப்போது வந்து தடை கோரினால் என்ன அர்த்தம்..? எந்த உரிமையில் தடை கோருகிறீர்கள் என்று நீதிமன்றத்தில் வாதாடப்பட்டிருக்கிறது.
நித்தி தரப்பினரால் பதில் சொல்ல முடியவில்லை. ஸ்டேயும் கிடைக்கவில்லை..!
இதனாலேயே அவர்கள் இதனை வெளியிட்டதை சரி என்று சொல்ல மாட்டேன். தவறு என்றுதான் இப்போதும் சொல்கிறேன்..!
[[[யோ வொய்ஸ் (யோகா) said...
ரஞ்சிதா என்னும் நடிகையை விற்று நல்லா விளம்பரம் தேடிய ஊடகங்கள் இன்று வேறு விதமாக அவரை பயன்படுத்தி விளம்பரம் தேடுகிறார்கள. அது நடிகையாக இல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஊடகங்களால் இவ்வாறு கேள்வி பகிரங்கப்படுத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும் காவியுடையுடன் தான் முற்றும் துறந்தவன் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த நித்தியானந்தா தண்டிக்கபட வேண்டியவர்தான், இதில் குற்றமாக நான் காண்பது மக்களை ஏமாற்றியதுதானே ஒழிய பாலியல் தேவையை நிறைவேற்றியதையல்ல.]]]
நன்றாகச் சொன்னீர்கள் யோகா.. நன்றி.. நன்றி..!
[[[வினவு said...
உண்மையண்ணே, எல்லா சாமியார்களுக்கும் ரஞ்சிதா போலத்தான் சேவை செய்வாங்க, அதைப் போய் காதல்ன்னு எழுதாதீங்க. அப்படியே அது காதல்னாலும் நித்திக்கு இது மாதிரி எத்தனை இருக்கும். நீங்க ரொம்ப நல்லவருன்றதுனால இப்படி யோசிக்கிறீங்களாக்கும்?
ஏன் காதலுக்கு உங்க அகராதில வேறென்ன அர்த்தம்..?
[[[சினிமாவில் நித்தி சீடர்கள் பட்டியல் வெளியிட்டதற்கு நன்றி. ஆனால் ரொம்பக் குறைவா இருக்குதே. மத்த சாமியார்களுக்கும் ஆரெல்லாம் பக்தர்கள் என்று வெளியிட்டால் உபயோகமாக இருக்கும்.]]]
குறைவுதான்.. தேடிப் பார்த்தேன். கேட்டுப் பார்த்தேன். அதிகமாகக் கிடைக்கவில்லை..! மற்ற சாமியார்களின் பக்தர்கள் லிஸ்ட் என்பது தேவையில்லாதது.. இது பிரச்சினையானதால்தான் வெளியில் வந்துள்ளது..!
[[[அண்ணே ஆயிரத்தில் ஒருவன்ல வினவு விமரிசனத்துல அந்த உடல் மொழியை எழுதலேண்ணே, எங்களையும் எல்லாப் பதிவர் லிஸ்ட்ல சேத்துட்டீங்களே.]]]
ஐயையோ.. வினவு அண்ணன்.. எவ்வளவு வருத்தப்படுறாரு.. விடுங்கண்ணே.. என் பதிவையெல்லாம் ஜஸ்ட் 200 இல்லாட்டி 300 பேர்தான் படிப்பாங்க..!
[[[நீங்க எழுத விட்ட முக்கியமான விசயம் நித்யாவுக்கு இத்தனை கோடி பணமும், சொத்தும் எப்படி வந்தது? ஊரைக் கொள்ளையடிக்கும் உத்தமர்களின் காணிக்கையை வைத்து இப்படி ஒரு சாம்ராஜ்ஜியம் அமைத்திருக்கும் ஒரு கேடியின் செக்ஸ் ஊழல் மட்டும்தான் மக்களுக்கு தெரிகிறது.]]]
எல்லாம் காணிக்கைதான்.. வேறெப்படி வந்திருக்கும்..? காணிக்கைகள் ஊழல் கணக்கில் எப்படி வரும்..? அதுக்குத்தான் அரசே அறக்கட்டளை காப்பு சட்டத்தை நிறைவேற்றி அத்தனை பேருக்கும் உதவி வருகிறதே..
இதில் பல நல்ல உதவிகளும் சில நல்ல அறக்கட்டளைகளால் மக்களுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பணச் சேகரிப்பு என்பது இவர்களைப் பொறுத்தவரையிலும், சட்டத்தைப் பொறுத்தவரையிலும் மீறாததுதான்..! அதனை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் நித்தி என்பதை பார்க்கும்போதுதான் அவர் குற்றவாளியாகவே எனக்கும் தெரிகிறார்.
தண்டிக்கப்படவும், கண்டிக்கப்படவும் வேண்டியவர்தான் நித்தி.. இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை..!
[[[என்னதான் பெரியார் கடவுள் இல்லைன்னு சொன்னாலும் நித்தி போன்ற சாமியார்கள்தான் நாத்திகத்திற்கு நல்ல பிரச்சாரம் செய்கிறார்கள்.]]]
நிச்சயம் நடக்காது.. நித்தியைத் தேடிப் போனவர்களெல்லாம் அப்பாவி, பாமர மக்கள் அல்ல. நன்கு படித்த ஓரளவுக்கு வசதியுள்ளவர்கள்தான். தேடிப் போனதெல்லாம் அவருடைய புத்தகங்களைப் படித்து, பேச்சைக் கேட்டுத்தான்..!
பக்திக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இது ஒரு வகையான ஈர்ப்பு. சாயம் வெளுத்தது எனில் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் ஆண்டவனிடமே திரும்புவார்கள்..
[[[உண்மையண்ண்ணும் சீக்கிரம் எங்க பக்கம் வருவாருன்னு ஒரு நம்பிக்கை. நன்றி]]]
நிச்சயம் வர மாட்டேன். என் அப்பன் முருகப் பெருமான் என்னை முழுவதும் ஆட் கொண்டிருக்கிறான். அதனால்தான் எந்த ஒரு மானுடனும் தெய்வப் பிறவி என்கிற நோக்கில்கூட என் மனதில் நுழைய முடியவில்லை..!
வேல் வேல் வெற்றி வேல்..!
கந்தனுக்கு அரோகரா..!
முருகனுக்கு அரோகரா..!
வினவு அண்ணனுக்கு அரோகரா..!
\\நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான். //
இதனாலதாணே பிரச்சனையே. கேமரால பதிவு பண்ணின எத்தனையோ படங்கள் இருக்கும். அது எல்லாம் சாதாரண மக்கள் என்பதால் ஒன்றும் செய்வது இல்லை. அதையே காவி உடையுடுத்தி செய்தால் தன பிரச்சனையே.
[[[பித்தன் said...
//ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?//
I felt the same but after seeing the video fully (so i'm even not deserved for this)]]]
கருத்துரைக்கு நன்றிகள் பித்தன் ஸார்..!
குற்றவுணர்ச்சி எனக்குள் ஏற்பட்டது. அதனால்தான் எழுதினேன்..!
[[[seeprabagaran said...
33 வயது ஒரு இளைஞன் ஒரு பெண்ணோடு உறவு கொண்டது எந்தவிதத்தில் தவறு என்று எனக்குப் புரியவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து ஒத்துக்கொண்டு உறவு கொண்டதை படம் பிடிப்பதற்கும் தொடர்ந்து இரண்டு நாட்களாக நமது வீட்டின் வரவேறபரையில் அதை கொண்டு வந்து சேர்ப்பதற்கும் இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது.
சன் டி.வி. மீது வழக்கு தொடுக்க பொறுப்புள்ள பார்வையாளர்களுக்கும் தொடர்புடையவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்கள் அதைச் செய்ய வேண்டும். நித்தியானந்தாவும், இரஞ்சீதாவும் விருப்பப்பட்டால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடரலாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதுபற்றி விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, பிறரின் அந்தரங்க உறவுகளை படம் பிடித்த காட்ட அரசு தொடர்ந்து அனுமதிப்பது சரியல்ல.]]]
உண்மைதான் பிரபாகரன்.. ஆனால் யார் கேள்வி கேட்பது..?
அந்தத் தைரியம் யாருக்கு இருக்கிறது..?
அரசியல் அமைப்புச் சட்டத்தைவிட அரசியல்வியாதிகளின் சட்டம் இங்கே சக்தி வாய்ந்ததாக இருக்கிறதே..!
அதனால்தான் அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சட்டம் வளைந்து கொடுக்கிறது..!
நியாயமான, நேர்மையான பின்னூட்டம் ஸார்..
நன்றிகள்..!
[[[ROMEO said...
\\நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான். //
இதனாலதாணே பிரச்சனையே. கேமரால பதிவு பண்ணின எத்தனையோ படங்கள் இருக்கும். அது எல்லாம் சாதாரண மக்கள் என்பதால் ஒன்றும் செய்வது இல்லை. அதையே காவி உடையுடுத்தி செய்தால்தன பிரச்சனையே.]]]
நன்றி ரோமியோ..!
நீங்க எப்ப சாமியாராகப் போறீங்க..?
இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.
மனிதநேயன் பின்னூட்டம் அருமை & சிறப்பு
//நித்தியானந்தம் தவிர நாமெல்லாரும் யோக்கியமானவர்கள்தானா..//
புலனடக்கம் பற்றிச் சொல்லித்தாரேன்னு சொல்லி காசு வாங்கலையே[ அல்லது வாங்க முடியலயே].பாலின உணர்ச்சி இல்லாம மனிதன் இருந்திருந்தால் இனப்பெருக்கம் நடவாது.அதை எந்தளவு,எங்கே வெளிக்காட்டனும்ன்னு தெரியனும்[அல்லது தெரியும்].
//இதைத் தவிர முக்கியம் வேறில்லை //
பரபரப்புச் செய்திகள்தானே முக்கியம்.
//அடுத்தவர்களின் அந்தரங்கம் உலகத்தில் அத்தனை பேருக்குமே எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பாருங்கள்..?//
அடக்கி வைக்கப்பட்ட்ருக்கிறது.வாய்ப்புக் கிடைக்கும் போது பேசி வடிகால் தேடுகிறது.
//ஆனால் இதற்கெல்லாம் தகுதிகள் யாருக்கு உண்டு..?//
மாட்டாதவரைக்கும் எல்லாரும் நல்லவய்ங்கதான்.
//எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் நித்தியானந்தத்தை கண்டிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
//
யாருக்கும் என்றால்... பொது ஜனங்களுக்குமா? அப்படிச் சொல்ல முடியாது என நினைக்கிறேன்.
//நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான்.//
அதானே மேட்டரே...
//சொல்வதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை.//
உங்க நேர்மை தெரிகிறது.
//...இறைவனை நீங்கள் அணுகவே முடியாது.//
மாசற்றக் கொள்கை மனதினிற் கொண்டால் ஈசனைக் காட்டும் உடம்பு
- திருமூலர்
இதயம் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.அவர்கள் தேவனைக் காண்பார்கள்.
- பைபிள்
நித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப் படுத்துவார்களா?
<<<
திரையுலகில் கோவைசரளாவும், நடிகர் விவேக்கும் இவரது பிரதான சீடர்கள். தயாரிப்பாளர் 'சத்யஜோதி' தியாகராஜன் இவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். பல பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி குருவாக இருந்தவர் தனக்குத்தானே குழியைத் தேடிக் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் அவரது வயதுதான். இளம் வயதில் பெயரும், புகழும், பணமும், அளவற்ற செல்வாக்கும் கிடைத்தால் எது நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.
>>>
மிக நல்ல பதிவு.
புகழ் கிடைத்ததினால் அவர் படும் துன்பம்தான் இவையெல்லாம்.
பாவம் அவர். செக்ஸ் அவ்வளவு பெரிய குற்றமா என்ன? மிடியாவுக்கு எதாவது ஒரு பரபரப்பான எதாவது ஒன்று தேவைபடுகிறது... பெரிய பூகம்பமும் மக்கள் சாவும் பெரிய இழப்புகள், ஆனால் மீடியாவிற்கு ஒரு பரபரப்பு செய்திதானே...
அதுக்காக சாரு நிவேதிதா காசு வாங்கிக் கொண்டு புகழ்ந்ததை இல்லை என்று சொல்ல இயலுமா உ.த?
டிசம்பரிலேயே பிராடுன்னு கண்டுகிட்டாராம் ,இப்ப சொல்றாரு, அப்புறம் ஏன் மார்ச் வரை கடவுளை கண்டதா கட்டுரை எழுதினார் ?
இணையத்தில் எழுதி ஏமாளிகளிடம் சம்பாதிப்பது போதாதா ? இனி எவன் நம்புவான் ? பணம் ஐசிஐசிஐ அக்கண்டில் கட்டுவான் ? என்ற பயத்தில்தான் இந்த பல்டி
உண்மைத்தமிழன், ஒரே ஒரு கேள்விதான்.
நித்தியானந்தா பிரபலமான சாமியார். கோடிக்கணக்கான பணமும், மக்களும் அவருக்காக காத்திருக்கிறார்கள். அவரின் உண்மையான சொரூபம் தெரிந்த ஒரு பெண் உண்மையை மறைப்பது தவறு. அதுவும் ரஞ்சிதா போன்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் உண்மையை மறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ரஞ்சிதாவின் இந்த முக்கியமான தவறு எங்கேயும் சுட்டிக்காட்டப்படவில்லை. அது ஏன்?
[[[Jaya said...
இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவிதான். கிட்டதட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.]]]
உண்மைதான்.. ஆனால் யார் கேட்பது..? ஆட்சியும், அதிகாரமும் அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது..?
[[[D.R.Ashok said...
மனிதநேயன் பின்னூட்டம் அருமை & சிறப்பு]]]
நிதர்சனமான உண்மை அசோக்ஜி..!
இரண்டு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டு இருந்த கேள்வி அந்த பெண்ணை ஏன் இப்படி அசிங்கப்படுத்த வேண்டும். முகத்தினை காட்டாமலே இருந்து இருக்கலாமே. ஒருவரும் பணம் சம்பாதிக்க கூடாது, இந்து மதத்தினை ஏதாவது ஒரு வகையில் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒளிப்ரப்ப பட்டதே அந்த வீடியோ, அனைத்து வீட்டிலும் வயதுக்கு வந்த குழந்தைகள் இருப்பார்களே என்ற ஒரு குற்ற உணர்வும் இல்லை அந்த சேனலுக்கு...புவனேஸ்வரி கூட இருந்த அரசியல்வாதிகளையும் ஒளிபரப்பலாமே வாரம் ஒருவருவராக நிஜம் நிகழ்ச்சியில் இப்பதான் இந்த மாதிரி வீடியோ பார்த்து பழகிடுச்சே...
[[[அரங்கப்பெருமாள் said...
//நித்தியானந்தம் தவிர நாமெல்லாரும் யோக்கியமானவர்கள்தானா..//
புலனடக்கம் பற்றிச் சொல்லித் தாரேன்னு சொல்லி காசு வாங்கலையே[ அல்லது வாங்க முடியலயே]பாலின உணர்ச்சி இல்லாம மனிதன் இருந்திருந்தால் இனப்பெருக்கம் நடவாது. அதை எந்தளவு, எங்கே வெளிக்காட்டனும்ன்னு தெரியனும்[அல்லது தெரியும்].]]]
இதுவும் ஒரு முக்கியமான விஷயம்தான். ஆனால் நம்ம மக்களைப் பொறுத்தவரையில் சாமியார்ன்னா அவர் செக்ஸில் ஈடுபடக்கூடாதுங்கிறதுதான் அடையாளம்..!
[[[//இதைத் தவிர முக்கியம் வேறில்லை //
பரபரப்புச் செய்திகள்தானே முக்கியம்.]]]
அவர்கள் சார்ந்த செய்திகள் இதுபோல் கிடைத்தால் அதையும் இதேபோல் வெளியிடுவார்களா..?
[[[//அடுத்தவர்களின் அந்தரங்கம் உலகத்தில் அத்தனை பேருக்குமே எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பாருங்கள்..?//
அடக்கி வைக்கப்பட்ட்ருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் போது பேசி வடிகால் தேடுகிறது.]]]
உண்மைதான் ஸார்..!
[[[//ஆனால் இதற்கெல்லாம் தகுதிகள் யாருக்கு உண்டு..?//
மாட்டாதவரைக்கும் எல்லாரும் நல்லவய்ங்கதான்.]]]
எனக்கில்லை என்பதை நான் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்..!
[[[//எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் நித்தியானந்தத்தை கண்டிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.//
யாருக்கும் என்றால்... பொது ஜனங்களுக்குமா? அப்படிச் சொல்ல முடியாது என நினைக்கிறேன்.]]]
சொல்லலாம். நித்தியைப் போலவே நம் கண் முன்னால் நடப்பவைகளைப் பற்றி முதலில் நாம் கேள்விகளை எழுப்பிவிட்டு பின்பே அவரிடம் கேட்க வேண்டும்..!
//இறைவனை நீங்கள் அணுகவே முடியாது.//
மாசற்றக் கொள்கை மனதினிற் கொண்டால் ஈசனைக் காட்டும் உடம்பு
- திருமூலர்
இதயம் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைக் காண்பார்கள்.
- பைபிள்]]]
இதைப் படித்தவர்களுக்கு சட்டென்று புரியும்.. புரியவே இல்லை என்பவர்களை நாம் என்ன செய்வது..?
தங்களுடைய வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ஸார்..!
[[[எழிழன் said...
நித்தியானந்தத்தை சன் மாட்டிவிட்டதற்குப் பதிலாக போட்டி தொலைக்காட்சிகள் கலைஞர் வீட்டிற்குள் ஊடுருவி லீலைகளை அம்பலப்படுத்துவார்களா?]]]
முடியுமா..? அவங்க பொழைப்பை அவங்களே கெடுத்துக்குவாங்களா என்ன..?
[[[Mãstän ::.. said...
திரையுலகில் கோவைசரளாவும், நடிகர் விவேக்கும் இவரது பிரதான சீடர்கள். தயாரிப்பாளர் 'சத்யஜோதி' தியாகராஜன் இவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். பல பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி குருவாக இருந்தவர் தனக்குத்தானே குழியைத் தேடிக் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் அவரது வயதுதான். இளம் வயதில் பெயரும், புகழும், பணமும், அளவற்ற செல்வாக்கும் கிடைத்தால் எது நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.>>>
மிக நல்ல பதிவு. புகழ் கிடைத்ததினால் அவர் படும் துன்பம்தான் இவையெல்லாம்.
பாவம் அவர். செக்ஸ் அவ்வளவு பெரிய குற்றமா என்ன? மிடியாவுக்கு எதாவது ஒரு பரபரப்பான எதாவது ஒன்று தேவைபடுகிறது. பெரிய பூகம்பமும் மக்கள் சாவும் பெரிய இழப்புகள், ஆனால் மீடியாவிற்கு ஒரு பரபரப்பு செய்திதானே.]]]
இவர்கள் பணம் சம்பாதிக்க இது போன்றவைகளை நடு வீட்டிற்குக் கொண்டுவர வேண்டுமா..?
உங்களது நடுநிலமையான பார்வையை வரவேற்கிறேன்,,,, அத்தோடு காவி உடை தரித்தும் அற்ப ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது வருந்த தக்கது.... இது ஒரு வகையான ஏமாற்று வேலை.... இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய சட்டம் ... ( இது வொன்றும் புதிதில்லையே என்று விட்டு விடக்கூடாது...) . இந்திய காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்குமோ தெரியாது ஆனால் இவரை நம்பிய பக்தர்களின் நடவடிக்கை பலமாக இருக்குமென நம்புகிறேன்.... அப்படி எடுக்கவில்லை என்றால் உங்களுக்கு வெட்கமில்லையா என்று கேட்டாலும் பிழை இல்லை. .
[[[மதி.இண்டியா said...
அதுக்காக சாரு நிவேதிதா காசு வாங்கிக் கொண்டு புகழ்ந்ததை இல்லை என்று சொல்ல இயலுமா உ.த?]]]
காசு வாங்கியதற்கு என்ன ஆதாரம் மதி.இண்டியா..? உறுதிப்படுத்தாமல் நாம் உறுதியாக அதனைச் சொல்லக் கூடாது..!
[[[டிசம்பரிலேயே பிராடுன்னு கண்டுகிட்டாராம், இப்ப சொல்றாரு, அப்புறம் ஏன் மார்ச்வரை கடவுளை கண்டதா கட்டுரை எழுதினார்?]]]
அவரைத்தான் கேக்கணும்..!
[[[இணையத்தில் எழுதி ஏமாளிகளிடம் சம்பாதிப்பது போதாதா? இனி எவன் நம்புவான்? பணம் ஐசிஐசிஐ அக்கண்டில் கட்டுவான்? என்ற பயத்தில்தான் இந்த பல்டி]]]
-))))))))))))
[[[J. Ramki said...
உண்மைத்தமிழன், ஒரே ஒரு கேள்விதான்.
நித்தியானந்தா பிரபலமான சாமியார். கோடிக்கணக்கான பணமும், மக்களும் அவருக்காக காத்திருக்கிறார்கள். அவரின் உண்மையான சொரூபம் தெரிந்த ஒரு பெண் உண்மையை மறைப்பது தவறு. அதுவும் ரஞ்சிதா போன்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் உண்மையை மறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ரஞ்சிதாவின் இந்த முக்கியமான தவறு எங்கேயும் சுட்டிக் காட்டப்படவில்லை. அது ஏன்?]]]
ராம்கியண்ணே.. தங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றி..!
எது தவறு..? எது சொரூபம் என்கிறீர்கள்..?
ரஞ்சிதாவை பொறுத்தவரையில் நித்தி அவரது காதலர்.. குரு.. தன்னை அவரிடம் ஒப்படைப்பதும், பணிவிடை செய்வதும்தான் தனது பணி என்று அவர் காதல் போதையில் இருந்திருக்கிறார் என்பது எனது அனுமானிப்பு..!
சாமியார்களுக்கு செக்ஸ் உணர்வு இருக்காதாண்ணே..! ரஞ்சிதாவைப் பொறுத்தமட்டில் இதில் தவறில்லை என்றே நினைத்திருக்கிறார்..! அவருடைய அந்த நினைப்பே தவறு என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்..?
அவருடைய பார்வையில் அது சரி.. நம் பார்வையில் தவறாகத் தெரிகிறது..!
வால்பையா..
உனது பின்னூட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தூக்கிவிட்டேன்.
மன்னித்துவிடு..!
Good Escape truetamilan
, i realy except much more,
[[[அமுதா கிருஷ்ணா said...
இரண்டு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டு இருந்த கேள்வி அந்த பெண்ணை ஏன் இப்படி அசிங்கப்படுத்த வேண்டும். முகத்தினை காட்டாமலே இருந்து இருக்கலாமே. ஒருவரும் பணம் சம்பாதிக்க கூடாது, இந்து மதத்தினை ஏதாவது ஒரு வகையில் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒளிப்ரப்பபட்டதே அந்த வீடியோ, அனைத்து வீட்டிலும் வயதுக்கு வந்த குழந்தைகள் இருப்பார்களே என்ற ஒரு குற்ற உணர்வும் இல்லை அந்த சேனலுக்கு. புவனேஸ்வரி கூட இருந்த அரசியல்வாதிகளையும் ஒளிபரப்பலாமே வாரம் ஒருவருவராக நிஜம் நிகழ்ச்சியில் இப்பதான் இந்த மாதிரி வீடியோ பார்த்து பழகிடுச்சே...]]]
உங்களுடைய கோபத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்..! நியாயமான கேள்விகள்தான் உங்களுடையது..
ஆட்சி, அதிகாரத்தின் உச்சியில் இருப்பதாலும் தட்டிக் கேட்க ஆள் இல்லாததினாலும்தான் இப்படியெல்லாம் நடக்கிறது..!
தமிழ்நாட்டின் தலைவிதி.. வேறென்ன சொல்றது..?
[[[prapa said...
உங்களது நடுநிலமையான பார்வையை வரவேற்கிறேன். அத்தோடு காவி உடை தரித்தும் அற்ப ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது வருந்ததக்கது. இது ஒரு வகையான ஏமாற்று வேலை. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய சட்டம். (இதுவொன்றும் புதிதில்லையே என்று விட்டுவிடக்கூடாது) இந்திய காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்குமோ தெரியாது ஆனால் இவரை நம்பிய பக்தர்களின் நடவடிக்கை பலமாக இருக்குமென நம்புகிறேன். அப்படி எடுக்கவில்லை என்றால் உங்களுக்கு வெட்கமில்லையா என்று கேட்டாலும் பிழை இல்லை.]]]
நியாயமான கேள்விதான் பிரபா..
இதுவொரு ஏமாற்று வேலைதான். சந்தேகமில்லை. ஆனால் இதே அளவுக்குத்தான் நமது அரசியல்வியாதிகளும் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்ணாகரத்தில் இன்றைய நிலைமை ஓட்டுக்கு 3000 ரூபாயாம்.. அரசும், ஆட்சியாளர்களும், கட்சிகளுமே இந்த லட்சணத்தில் இருக்கும்போது சட்டத்தை யார் காப்பாற்றுவது..?
மக்கள்தான் திருந்த வேண்டும்.. இவர்கள் போலிகளை தேடி ஓடாமல் இருந்தாலே போதும்..!
[[[சி.வேல் said...
Good Escape truetamilan i realy except much more,]]]
புரியலை வேல்..! எங்கே எஸ்கேப்பானேன்..!?
வாலு.. கடைசிப் பின்னூட்டத்தையும் தூக்கிட்டேன்.. எனக்குப் பிடிக்கலை..
மன்னிச்சிரு..!
அண்ணே!
எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு!
நான் இதுகெல்லாமா கோவிச்சுக்கப்போறேன்!
இணையத்தில் ஆண்டாண்டு காலமாக நடக்கும் இதே போல் பிரச்சனைகளுக்கு இதே மாதிரி தான் கேள்வி தோன்றியது!
அங்கே இலங்கை தமிழன் கஷ்டப்படுறான்னு தேம்பி தேம்பி அழுதா மாதிரி எழுதுவானுங்க, சரிடா கூட்டியாந்து நாம சோறு போடலாம்னு சொன்னா, ஹிஹிஹி அதெப்படி முடியும்பானுங்க!
நம்மாள் வருத்தபட மட்டுமே முடியுது! செயலாற்ற முடியவில்லை!
இப்பவும் சொல்றேன், எனக்கு நித்தி மேல கோவமேயில்ல, ஆனா சாரு தூக்கிய சொம்புக்கு நசுங்கிய சொம்பாலயே நாலு சாத்து சாத்தனும்!
மெயில் ஹேக்கிங் பிரச்சனையில் எனக்கு என்ன வந்தது, போனது எவன் பணமோ தானே என்று நம்பிய வாசகனின் பல்லை பல்லை பிடித்து பார்த்த போது நம் மக்களுக்கு அறிவு வந்துருக்கனும்! இப்போ நான் சொன்னா உங்களுக்கு எங்கடா அறிவு போச்சு ஆட்டு மந்தைகளான்னு சொல்லியாவது அறிவு வருதா பாப்போம்!
[[[வால்பையன் said...
அண்ணே! எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு! நான் இதுகெல்லாமா கோவிச்சுக்கப் போறேன்!]]]
எதற்குத் தேவையில்லாமல் அந்தப் பெண்ணின் பெயரைப் பயன்படுத்த வேண்டும்..?
[[[இணையத்தில் ஆண்டாண்டு காலமாக நடக்கும் இதேபோல் பிரச்சனைகளுக்கு இதே மாதிரிதான் கேள்வி தோன்றியது! அங்கே இலங்கை தமிழன் கஷ்டப்படுறான்னு தேம்பி தேம்பி அழுதா மாதிரி எழுதுவானுங்க, சரிடா கூட்டியாந்து நாம சோறு போடலாம்னு சொன்னா, ஹிஹிஹி அதெப்படி முடியும்பானுங்க! நம்மாள் வருத்தபட மட்டுமே முடியுது! செயலாற்ற முடியவில்லை!
இப்பவும் சொல்றேன், எனக்கு நித்தி மேல கோவமேயில்ல, ஆனா சாரு தூக்கிய சொம்புக்கு நசுங்கிய சொம்பாலயே நாலு சாத்து சாத்தனும்!
மெயில் ஹேக்கிங் பிரச்சனையில் எனக்கு என்ன வந்தது, போனது எவன் பணமோதானே என்று நம்பிய வாசகனின் பல்லை பல்லை பிடித்து பார்த்தபோது நம் மக்களுக்கு அறிவு வந்துருக்கனும்! இப்போ நான் சொன்னா உங்களுக்கு எங்கடா அறிவு போச்சு ஆட்டு மந்தைகளான்னு சொல்லியாவது அறிவு வருதா பாப்போம்!]]]
நியாயமான கேள்விதான்..!
சாரு என்றைக்கும் திருந்தமாட்டார்.. அவர் இப்போது கடைசியாக நித்தி பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகூட கேவலமானது..!
சரி.. போய்த் தொலையறாருன்னு விட வேண்டியதுதான்..! வேறென்ன செய்ய..?
உங்கள் பதிவு அருமை, எழுத்து திறமை அருமை, ஆனால் ஒரு கருத்தை நீங்கள் எழுத மறந்து விட்டீர்கள்.
சாமியார், சந்நியாசி என்பவன் ருசியான உணவையும் துற க்க வேண்டும். ஸ்ருங்கேரி, காஞ்சி மடங்களில் சன்யாசிக்கு சாப்பாடு வெறும் அரிசி (உப்பு, ஒறப்பு என்னை கலக்காத உணவு இருந்தது, ) இப்போது எப்படி பட்ட உணவு என்று தெரிய வில்லை.
உணவு ருசியை துற ந்து இருந்தால் நித்தி க்கும் காம உணர்வு ஆசைகள் வந்து இருக்காது.
நீங்கள் சொல்வது போல இங்கு நானும் குற்றமாணவனே. இணையம் வந்த பொழுது நானும் காம சார்ந்த சாட் பண்ணி இருக்கிறேன், இன்றும் யு துபில் வீடியோ பார்க்கும் ஆசாமிதான்.
வீடியோ பார்த்து என் மனைவியும் அவள் சித்தியும் சொன்ன கமெண்ட் வெள்ளை சுடிதார் நல்ல டிசைனில் தைத்து இருக்கிறார்கள், அடுத்த முறை இந்த மாடல் நெக் தான் வைக்க வேண்டும் என்று.
//காஞ்சி மடங்களில் சன்யாசிக்கு சாப்பாடு வெறும் அரிசி //
ஆனா காஞ்சிமட தலைவர் போழ்றது மட்டும் வாழைஇலையில்!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[வானம்பாடிகள் said...
The best and fair article i have read sir. hats off to you.]]]
நன்றிகள் வானம்பாடிகள் ஸார்..! உங்களுடைய முதல் வருகை இது என்று நினைக்கிறேன்..!
//
இல்லைங்க. மீண்டும் வந்தேன்லயே வந்துட்டேன். தவறாம படிப்பேன். சில இடுகைக்கு பின்னூட்டம் போட்டிருக்கமாட்டேன்.
[[[ராம்ஜி_யாஹூ said...
உங்கள் பதிவு அருமை, எழுத்து திறமை அருமை, ஆனால் ஒரு கருத்தை நீங்கள் எழுத மறந்து விட்டீர்கள். சாமியார், சந்நியாசி என்பவன் ருசியான உணவையும் துற க்க வேண்டும். ஸ்ருங்கேரி, காஞ்சி மடங்களில் சன்யாசிக்கு சாப்பாடு வெறும் அரிசி (உப்பு, ஒறப்பு என்னை கலக்காத உணவு இருந்தது) இப்போது எப்படிபட்ட உணவு என்று தெரியவில்லை. உணவு ருசியை துறந்து இருந்தால் நித்திக்கும் காம உணர்வு ஆசைகள் வந்து இருக்காது.]]]
ராம்ஜி.. முதலில் நித்தி ஒரு சாமியாராகும் தகுதியே இல்லாதவர்.. வெறும் பரபரப்பிற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டவர்தான் அவர். வாழ்க்கையில் அனுபவமில்லாதவர்.. வெறும் படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது.. இதை இப்போதாவது அவர் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்..!
[[[வீடியோ பார்த்து என் மனைவியும் அவள் சித்தியும் சொன்ன கமெண்ட் வெள்ளை சுடிதார் நல்ல டிசைனில் தைத்து இருக்கிறார்கள், அடுத்த முறை இந்த மாடல் நெக் தான் வைக்க வேண்டும் என்று.]]]
ம்ஹும்.. நம்ம தமிழ்நாட்டை மாத்த முடியாது..!
[[[வால்பையன் said...
//காஞ்சி மடங்களில் சன்யாசிக்கு சாப்பாடு வெறும் அரிசி //
ஆனா காஞ்சிமட தலைவர் போழ்றது மட்டும் வாழை இலையில்!]]]
அதை எடுக்கிறதுக்கும் ஒரு ஆளாம்..! கொடுமை..!
[[[வானம்பாடிகள் said...
//உண்மைத்தமிழன்(15270788164745573644) said...
[வானம்பாடிகள் said...
The best and fair article i have read sir. hats off to you.]
நன்றிகள் வானம்பாடிகள் ஸார்..! உங்களுடைய முதல் வருகை இது என்று நினைக்கிறேன்..!//
இல்லைங்க. மீண்டும் வந்தேன்லயே வந்துட்டேன். தவறாம படிப்பேன். சில இடுகைக்கு பின்னூட்டம் போட்டிருக்கமாட்டேன்.]]]
அடிக்கடி வந்து போய்ட்டிருந்தீங்கன்னா என் ஞாபகத்துல இருந்திருக்கும்..!
மன்னிக்கணும்.. நான்தான் மறந்திட்டேன்னு நினைக்கிறேன்..
இனிமே அடிக்கடி வாங்க ஸார்.. மறக்காம ஞாபகத்துல வைச்சுக்குறேன்..!
அன்புள்ள உண்மைத்தமிழன்,
ஏறக்குறைய உங்கள் கட்டுரை அபாரமாகவே இருந்தது. நித்யானந்தர் பிரம்மச்சாரியாக வேடமணிந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டது குற்றம் என்பது சரி. ஆனால் நடிகை ரஞ்சிதா மேல் ஈவிரக்கம் கொள்ள வேண்டும் என்பது போல் எழுதி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஊரறிந்த துறவியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போது தான் தவறு செய்கிறோம் என்று எப்படி தெரியாமல் போகும். மற்றபடி, உலக உத்தமர்களில் ஒருவரான சன் டிவி இப்போது செய்யும் செய்திப் புரட்சி வரும் நாட்களில் பேரம் முடிந்த உடன் நின்று போகும். இது இதயம் பனித்த போதும் பார்த்தோம். மதுரை தினகரன் எரிந்த போதும் பார்த்தோம். ஊருக்கு மட்டும் தானே உபதேசம். எழுத்தாளர் சாரு தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள தமிழை உபயோகப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான். தமிழக மக்களின் தலையெழுத்து அரசியல் வியாதிகள், ஆன்மீக வியாதிகள், ஊடக வியாதிகள், எழுத்து வியாபாரிகள் இவ்ற்றுடன் காலம் தள்ளுவதுதான். மற்றபடி உங்கள் கட்டுரை பாலையில் கண்ட சோலையாக மிளிர்ந்தது.
JIGOPI
அண்ணாச்சி,
ஏற்கனவே நிறைய பேர் நான் சொல்ல வந்ததை சொல்லிட்டாங்க. எனக்கு ஒரு விஷயம் புரியலை. அது என்னாங்க யாராவது ஒரு குற்றச்சாட்டை சொன்ன உடனே அவங்களை பாத்து நீ ரொம்ப யோக்கியமான்னு ஒரு கேள்வி? இப்படி கேள்வி கேட்டு கேட்டு நாட்ல யாரும் குற்றம் சுமத்தவே முன்வருவதில்லை.
அன்புள்ள உண்மைத் தமிழன்,
அன்று ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஆட்டம் இன்னும் நிக்கவில்லை. நம் வீட்டு பெட்டியில் நாள் முழுவதும் இதை பார்த்த பெண்கள், குழந்தைகளின் நிலையை கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை அவர்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு.
இருவர் சம்பந்த பட்ட ஒரு நிகழ்வில் ஊர் மக்களையும், நம்மையும் சேர்த்து கொண்டார்கள். இப்படியே போய் அரசியல் பெருந் தலைகளின் ஆட்டத்தை நேரலையாக காட்டினால் நன்றாக இருக்கும்.
நன்றி
i remember, years back before nithya started the kumutham- kathvu kattu , dinamalar wrote about this nithya's weakness towards women.but it was written like a kisu kisu..
The same nitya was alleged of his kumutham articles beacause of ghost writing of Valampuri john...
can anyone remember confirm this
நீங்கள் கண்மூடிதனமாக ரஞ்ஞியை ஆதரிக்கிறீர்கள். இப்படி செய்வது மேலும் இவர்களை போன்றவர்களை வளர்க்கவே செய்யும்.
வானம்பாடியை மறந்த மாதிரி என்னையும் மறந்துவிட வேண்டாம் !!
மற்றபடி இந்த பதிவு பற்றி .........ம்...ம்...ம்...நான் வெளிஊர் எனக்கு எதுவும் தெரியாது..
பதிவை முழுமையாக வாசித்தேன். பின்னூட்டங்களை வாசிக்கவில்லை.
நீங்கள் சொன்னது போல, உள்ளபடியே ரஞ்தாவை நினைத்து பரிதாபப்படுகிறேன்.
யோக்கியத்தின் வரைவிலக்கணம் என்னங்கண்ணா?லொல்லோ,ஜொள்ளோ,புல்லோ நாம் நாமாகவே இருப்பதால் நிச்சயம் நாம் யோக்கியர்கள் என்று மார் தட்டிக்கொள்ளலாம்!
பல குழப்பங்களுக்கும் மத்தியில் இந்தியாவின் ஆத்மாவே மதசார்பின்மையும்,ஆன்மீகத்தில்தான் என்பது பொது உணர்வு.இன்னும் நிறையபேர் அப்படித்தான் வாழ்கிறார்கள்.துறவி என்பவன் தனி மனித ஆசாபாசங்களை துறந்தவன் என்பதனாலே மட்டுமே அனைத்து மதங்களிலும் ஒருவனுக்கு மதிப்பு. அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு ஒருவன் துறவற வேடம் கொண்டு பொழிப்புரை செய்ததும் ஆசாபாசங்களை துறக்காமல் போலியாக வாழ்ந்து காசு பார்த்ததும் பல ஆன்மீக நம்பிக்கையாளர்களின் முகத்தில் கரி பூசியதும் மிகவும் தவறு.முந்தா நாள் வரை இந்த மனிதனின் பெயர் கூட எனக்கு தெரியாது.அப்படியும் இது நாம் சமூகம் சார்ந்த,மனம் சார்ந்த,உணர்வு சார்ந்த பொது விவாதமாகிப் போனதால் கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது.
வெல்ல முடியாதது,கட்டுப்படுத்த நினைக்கலாம் என்று சுயபரிசோதனை செய்து பரிட்சித்துப் பார்த்த காந்திஜியின் வயதுக்கே எண்ணத்தால் காமம் கடினம் என்றால் ராஜசேகரன் போன்ற இளம் வயது ஹார்மோன்களுக்கு இயலாதது என்பது ஊடகக் காட்சியாகிப் போனது.அதுவும் உங்கள் கூற்றுப்படி இன்னொரு பெண்ணின் பொறாமை கலந்த கோபம் காரணமாக என்னும் போது இங்கே சன்னியாசம் சார்ந்த விசயமெல்லாம் அடிபட்டுப் போகிறது.
for the first time, a different approach to this issue. Wonderful analysis.
ஹலோ, நமக்கு தெரிஞ்சி ரஞ்சிதா... தெரியாம எத்தன பேரோ? நேத்து வேற ஒருத்தி, இன்னிக்கி ரஞ்சிதா, நாளைக்கு?இந்த பதிவினால் உங்க மேல இருந்த மரியாதை போயிடுச்சி.
செல்வன்... உங்கள் கட்டுரை முழுவதும் மாறுபட்ட கோணத்தில் இருந்தது.
ஆன்மீகத்தொழிலாக இருந்தாலும் 32 வயதில் இந்த அளவிற்கு வளர்ந்தது பெரிய விஷயம்தான். தான் அடைந்த சிகரத்தின் உயரத்திலிருந்து வீழ்வது பரிதாபமான விஷயம்தான்.
ரஞ்சிதா...? வீடியோ வெளிவர அவர்தான் காரணம் என்பது லேட்டஸ்ட் காசிப்...
//ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. //
இப்டியான ..க்கலாம்கள்... நிறைய உண்டு..
ஒரு வேளை அந்தப் பெண் அவமானம் தாங்க முடியாது தற்கொலை செய்து கொள்வாளானால்... இத்தகைய உயர்ந்த காரியத்தைச் செய்தவர்கள் கொலைக்குற்றவாளிகள்... அவ்வாறெதுவும் நடக்காவிடிலும்.. இப்படி ஒரு மட்டகரமான செயலைச் செய்ததை விட.. அந்த நித்தியானந்தா செய்தது ஒன்றும் மட்டமாகத் தெரியவில்லை...
// இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.//
அப்படி எதுவும் இருந்தால் அல்லவா போவதற்கு...!!!
:(
நல்ல பதிவு.
நக்கீரன் , subcribe பண்ணா புல் வீடியோ வ தரானாம், இந்த பொழப்புக்கு கோவாலு தூ ..
[[[gopi g said...
அன்புள்ள உண்மைத்தமிழன்,
ஏறக்குறைய உங்கள் கட்டுரை அபாரமாகவே இருந்தது. நித்யானந்தர் பிரம்மச்சாரியாக வேடமணிந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டது குற்றம் என்பது சரி. ஆனால் நடிகை ரஞ்சிதா மேல் ஈவிரக்கம் கொள்ள வேண்டும் என்பது போல் எழுதி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஊரறிந்த துறவியுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போது தான் தவறு செய்கிறோம் என்று எப்படி தெரியாமல் போகும்?]]]
மறுபடியும் மறுபடியும் நான் சொல்கிறேன். அவருக்கு அவர் துறவி என்பதையெல்லாம்விட காதலர் என்பதுதான் பெரியதாக இருந்திருக்கிறது என்பது எனது அனுமானம்..!
[[[மற்றபடி, உலக உத்தமர்களில் ஒருவரான சன் டிவி இப்போது செய்யும் செய்திப் புரட்சி வரும் நாட்களில் பேரம் முடிந்த உடன் நின்று போகும். இது இதயம் பனித்த போதும் பார்த்தோம். மதுரை தினகரன் எரிந்தபோதும் பார்த்தோம்.]]]
மிகச் சரியானதுதான்..!
[[[எழுத்தாளர் சாரு தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ள தமிழை உபயோகப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான். தமிழக மக்களின் தலையெழுத்து அரசியல் வியாதிகள், ஆன்மீக வியாதிகள், ஊடக வியாதிகள், எழுத்து வியாபாரிகள் இவ்ற்றுடன் காலம் தள்ளுவதுதான். மற்றபடி உங்கள் கட்டுரை பாலையில் கண்ட சோலையாக மிளிர்ந்தது.
JIGOPI]]]
கருத்துரைக்கு மிக்க நன்றி கோபி..!
[[[சந்தோஷ் = Santhosh said...
அண்ணாச்சி, ஏற்கனவே நிறைய பேர் நான் சொல்ல வந்ததை சொல்லிட்டாங்க. எனக்கு ஒரு விஷயம் புரியலை. அது என்னாங்க யாராவது ஒரு குற்றச்சாட்டை சொன்ன உடனே அவங்களை பாத்து நீ ரொம்ப யோக்கியமான்னு ஒரு கேள்வி?]]]
எல்லாக் குற்றச்சாட்டுக்களுக்கும் அல்ல.. திருட்டு, கொள்ளை, லஞ்சம், ஊழல் என்ற குற்றச்சாட்டுக்களை அரசியல்வியாதிகள் மீது வைக்கிறார்களே பதிவர்கள்.. அப்போது யார் மீதாவது இது போன்ற கருத்துப் பேதங்கள் எழுகிறதா..? இல்லையே..!
[[[இப்படி கேள்வி கேட்டு கேட்டு நாட்ல யாரும் குற்றம் சுமத்தவே முன்வருவதில்லை.]]]
பாலியல் நடவடிக்கைகள் அத்தனை பேருக்குள்ளும் இருக்கின்றன.. அது ஒரு ஒழுங்குமயமாக்கப்பட்ட செயல் வடிவம்.. அத்தனை மனிதர்களுக்கு உள்ளேயும் இருக்கிறது..!
காமத்தோடு பார்ப்பதும், அதே காமத்தோடு இயங்குவதும் ஒன்றுதான்..!
[[[இளங்கோ said...
அன்புள்ள உண்மைத்தமிழன்,
அன்று ஒன்பது மணிக்கு ஆரம்பித்த ஆட்டம் இன்னும் நிக்கவில்லை. நம் வீட்டு பெட்டியில் நாள் முழுவதும் இதை பார்த்த பெண்கள், குழந்தைகளின் நிலையை கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை அவர்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு.
இருவர் சம்பந்தபட்ட ஒரு நிகழ்வில் ஊர் மக்களையும், நம்மையும் சேர்த்து கொண்டார்கள். இப்படியே போய் அரசியல் பெருந்தலைகளின் ஆட்டத்தை நேரலையாக காட்டினால் நன்றாக இருக்கும்.
நன்றி]]]
முதலில் இவர்கள் வீட்டில் நடப்பதையும் இதேபோல் படம் பிடித்துக் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும். அப்போதும் டி.ஆர்.பி. ரேட்டிங் பிய்த்துக் கொண்டுதான் போகும்..!
[[[karthi said...
i remember, years back before nithya started the kumutham - kathvu kattu dinamalar wrote about this nithya's weakness towards women. but it was written like a kisu kisu.. The same nitya was alleged of his kumutham articles beacause of ghost writing of Valampuri john. can anyone remember confirm this.]]]
எனக்கு நினைவில்லை நண்பரே..! ஆனாலும் ஒரு தகவலைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள்..!
[[[தமிழ் மைந்தன் said...
நீங்கள் கண்மூடிதனமாக ரஞ்ஞியை ஆதரிக்கிறீர்கள். இப்படி செய்வது மேலும் இவர்களை போன்றவர்களை வளர்க்கவே செய்யும்.]]]
உங்களுடைய அனுமானம் தவறு.. நான் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அந்த நிகழ்வு சட்டப்படி தவறில்லை என்பதால் எனக்கும் தவறாகப் படவில்லை..!
[[[அப்துல் சலாம் said...
வானம்பாடியை மறந்த மாதிரி என்னையும் மறந்துவிட வேண்டாம் !!
மற்றபடி இந்த பதிவு பற்றி ம்...ம்...ம்... நான் வெளிஊர் எனக்கு எதுவும் தெரியாது..]]]
இதுபோல் மாதத்திற்கு ஒரு முறை வந்து ஆஜராகிவிட்டால் நான் ஏன் உங்களை மறக்கிறேன் சலாம்ஜி..!?
[[[Chellamuthu Kuppusamy said...
பதிவை முழுமையாக வாசித்தேன். பின்னூட்டங்களை வாசிக்கவில்லை.
நீங்கள் சொன்னது போல, உள்ளபடியே ரஞ்தாவை நினைத்து பரிதாபப்படுகிறேன்.]]]
தயவு செய்து பின்னூட்டங்களையும் ஒரு முறை படிக்கவும்..!
[[[ராஜ நடராஜன் said...
யோக்கியத்தின் வரைவிலக்கணம் என்னங்கண்ணா? லொல்லோ, ஜொள்ளோ, புல்லோ நாம் நாமாகவே இருப்பதால் நிச்சயம் நாம் யோக்கியர்கள் என்று மார் தட்டிக்கொள்ளலாம்!]]]
நாமாக இருப்பது என்றால் எப்படி நடராஜன் ஸார்..?
[[[பல குழப்பங்களுக்கும் மத்தியில் இந்தியாவின் ஆத்மாவே மதசார்பின்மையும், ஆன்மீகத்தில்தான் என்பது பொது உணர்வு. இன்னும் நிறையபேர் அப்படித்தான் வாழ்கிறார்கள். துறவி என்பவன் தனி மனித ஆசாபாசங்களை துறந்தவன் என்பதனாலே மட்டுமே அனைத்து மதங்களிலும் ஒருவனுக்கு மதிப்பு. அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டு ஒருவன் துறவற வேடம் கொண்டு பொழிப்புரை செய்ததும் ஆசாபாசங்களை துறக்காமல் போலியாக வாழ்ந்து காசு பார்த்ததும் பல ஆன்மீக நம்பிக்கையாளர்களின் முகத்தில் கரி பூசியதும் மிகவும் தவறு. முந்தா நாள்வரை இந்த மனிதனின் பெயர்கூட எனக்கு தெரியாது. அப்படியும் இது நாம் சமூகம் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்வு சார்ந்த பொது விவாதமாகிப் போனதால் கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது.
வெல்ல முடியாதது, கட்டுப்படுத்த நினைக்கலாம் என்று சுயபரிசோதனை செய்து பரிட்சித்துப் பார்த்த காந்திஜியின் வயதுக்கே எண்ணத்தால் காமம் கடினம் என்றால் ராஜசேகரன் போன்ற இளம் வயது ஹார்மோன்களுக்கு இயலாதது என்பது ஊடகக் காட்சியாகிப் போனது. அதுவும் உங்கள் கூற்றுப்படி இன்னொரு பெண்ணின் பொறாமை கலந்த கோபம் காரணமாக என்னும்போது இங்கே சன்னியாசம் சார்ந்த விசயமெல்லாம் அடிபட்டுப் போகிறது.]]]
உண்மைதான்.. காமம் தொழிலைவிட வயதை வென்றுவிட்டது..!
[[[sowri said...
for the first time, a different approach to this issue. Wonderful analysis.]]]
வருகைக்கு நன்றி செளரி..!
[[[makku plasthri said...
ஹலோ, நமக்கு தெரிஞ்சி ரஞ்சிதா... தெரியாம எத்தன பேரோ? நேத்து வேற ஒருத்தி, இன்னிக்கி ரஞ்சிதா, நாளைக்கு? இந்த பதிவினால் உங்க மேல இருந்த மரியாதை போயிடுச்சி.]]]
மை காட்.. மூணு வருஷமா இருந்த மரியாதையை ரஞ்சிதா கவுத்துட்டாங்களே..!?
வெளிப்படையான கருத்துக்கு நன்றி..!
[[[யவனா said...
செல்வன் உங்கள் கட்டுரை முழுவதும் மாறுபட்ட கோணத்தில் இருந்தது.]]]
என் பெயர் உண்மைத்தமிழன் என்கிற சரவணன்..!
[[[ஆன்மீகத் தொழிலாக இருந்தாலும் 32 வயதில் இந்த அளவிற்கு வளர்ந்தது பெரிய விஷயம்தான். தான் அடைந்த சிகரத்தின் உயரத்திலிருந்து வீழ்வது பரிதாபமான விஷயம்தான்.]]]
முன் அனுபவமில்லை. அதுதான் சீக்கிரமாக கீழே விழுந்துவிட்டார்..!
[[[ரஞ்சிதா...? வீடியோ வெளிவர அவர்தான் காரணம் என்பது லேட்டஸ்ட் காசிப்...]]]
நானும் கேள்விப்பட்டேன். எப்படியிருந்தாலும் எனது பதிவின் கோணத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்..!
[[[அஹோரி said...
நல்ல பதிவு. நக்கீரன், subcribe பண்ணா புல் வீடியோவ தரானாம், இந்த பொழப்புக்கு கோவாலு தூ ..]]]
அவங்கவங்களுக்கு அவங்கவங்க தொழில்தான் முக்கியம்..!
நாடா முக்கியம்..?
பொதுமக்கள் செய்யவேண்டியது என்ன?
1. சன்குழும டிவிக்களை புறக்கணிக்கவேண்டும். அவர்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்க பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் முன்வரவேண்டும்.
2. நூலகங்கள் மற்றும் பொதுமக்கள் முழுநீல படங்களை வெளியிடும் நக்கீரன் மற்றும் சன்குழும பத்திரிக்கைகளை புறக்கணிக்கவேண்டும். சந்தாக்களை கேன்சல் செய்யவேண்டும்.
புறக்கணிப்பும் அவர்களுக்கு எதிரான குரலுமே நாம் நமது இளைய சமுதாய ஒழுக்கத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவி.
நக்கீரன், சன் குழுமம், சன்யாசம், ஊடக விபச்சாரம் & ஃபத்வா
மிக அருமையான கட்டுரை உண்மை தமிழன் சார்.
முதலில் துணிச்சலாக மனதிற்கு பட்டவைகளை எழுதிய உண்மை தமிழலன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் (இது தான் வாழ்வியலின் வுண்மையும் கூட நாசியில் சுவாசம் உள்ள மனிதன் எவனும் உத்தமன் இல்லை -- மரங்கள் செடிகள் விலங்குகள் ஒவோண்டிற்கும் சில பண்புகள் இருப்பது போல மனிதன் என்றால் தவருகிரவனே எந்த தவறும் செய்யவில்லை எண்டால் அது ஜடம் அல்லது கற்பாறை. கடவுள் கூட செய்த தவறு நம்மை எல்லாம் மனிதானாய் படைத்ததே அதிலும் மிஹபெரிய தவறு புத்தியை கொடுத்ததே இது மட்டும் இல்லாதிருந்தால் எந்த கவலையும் இன்றி எந்த ஒரு அடக்கி அழும் எண்ணமும் இன்றி பறவைகளை போல் சுதந்திரமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்திருப்போம்)மன்னிப்போம் நாமும் முடிந்தவரை மத்த வர்களையும் சக மனிதனாய் எண்ணி வாழ விடுவோம்....... அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் (பணமும் புகழும்) நஞ்சு........துறவிஇன் கையில் பணமும் புகழும் இருப்பது அவனது துறவறத்தை கெடுத்து விடும்.
!இந்தப் பாலியல் சித்திரத்தை நித்தியானந்தாசாமியில் மட்டும் சுமத்தி ஆணியவாதிகள் என்று முடிச்சுபோட்டு சன்னதப்பெண்ணியங்களிடம் நல்லபெயர் எடுக்கமுயலும் உங்கள் சூட்சுமம் வாழ்க. இப்போ பிரச்சனை சண் தொலைக்காட்சிக்கு சாமி கப்பம் கொடுக்க மறுத்ததாலோ அல்லது டீல் பேசிப் பாத்தப்போ நம்மளுக்குப் படியமட்டேங்குது சாமிக்குப்படிஞ்சிற்ராளப்பா என்னும்வருத்தமோ தான் சண் டிவியின் இத்துணை ஆர்பாட்டம். என்று வைத்துகொள்ளலாம். இல்லையெனில் மதுரையில் மாமா அழகிரி ஆடாத ஆட்டமா?எத்தனை பெண்களை டீல் பேசி
சங்...ங்காரம் செய்தார் அவர் என சண்தொலைகாட்சியால் சொல்லத்தான் முடியுமா? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம் தான்..
அதுசரி எங்கப்பா? புனிதத்தன்மை,கற்பு, கௌரவம் என்றுகுமுறுகிற ஒட்டு மொத்ததிரையுலகமே மௌனமாயிருக்கிறதப் பார்த்தா ஆளுக்காள் சாமிக்கிட்ட இரகசியமா போய்வந்திருப்பாங்களோ என்று எண்ண ரொம்பஆதங்கமா இருக்கு அண்ணாச்சி கடைசியா ஒண்ணு.//நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்//என்று வேறு நீங்கள் ஆதங்கப்படுவது ஏன்?? நீங்களே அவளுக்கொரு வாழ்வைகொடுங்களேன் கண்ணா
RAMONA
[[[அதிரை எக்ஸ்பிரஸ் said...
பொதுமக்கள் செய்யவேண்டியது என்ன?
1. சன் குழும டிவிக்களை புறக்கணிக்கவேண்டும். அவர்களுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுக்க பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் முன்வரவேண்டும்.
2. நூலகங்கள் மற்றும் பொதுமக்கள் முழுநீல படங்களை வெளியிடும் நக்கீரன் மற்றும் சன்குழும பத்திரிக்கைகளை புறக்கணிக்கவேண்டும். சந்தாக்களை கேன்சல் செய்யவேண்டும்.
புறக்கணிப்பும் அவர்களுக்கு எதிரான குரலுமே நாம் நமது இளைய சமுதாய ஒழுக்கத்திற்கு செய்யும் மிகப் பெரிய உதவி.
நக்கீரன், சன் குழுமம், சன்யாசம், ஊடக விபச்சாரம் & ஃபத்வா]]]
யார் வழக்குத் தொடுப்பது..? அவ்வளவு தைரியமானவர்கள் இருந்திருந்தால் இந்நேரம் கோர்ட்டில் வழக்குப் பதிவாகியிருக்கும்..!
[[[பாலகுமார் said...
மிக அருமையான கட்டுரை உண்மை தமிழன் சார்.]]]
மிக்க நன்றி பாலகுமார் ஸார்..!
[[[PrinceR5 said...
முதலில் துணிச்சலாக மனதிற்கு பட்டவைகளை எழுதிய உண்மைதமிழலன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் (இதுதான் வாழ்வியலின் வுண்மையும் கூட நாசியில் சுவாசம் உள்ள மனிதன் எவனும் உத்தமன் இல்லை. மரங்கள் செடிகள் விலங்குகள் ஒவோண்டிற்கும் சில பண்புகள் இருப்பது போல மனிதன் என்றால் தவருகிரவனே எந்த தவறும் செய்யவில்லை எண்டால் அது ஜடம் அல்லது கற்பாறை. கடவுள்கூட செய்த தவறு நம்மை எல்லாம் மனிதானாய் படைத்ததே அதிலும் மிஹ பெரிய தவறு புத்தியை கொடுத்ததே இது மட்டும் இல்லாதிருந்தால் எந்த கவலையும் இன்றி எந்த ஒரு அடக்கி அழும் எண்ணமும் இன்றி பறவைகளை போல் சுதந்திரமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்திருப்போம்) மன்னிப்போம் நாமும் முடிந்தவரை மத்த வர்களையும் சக மனிதனாய் எண்ணி வாழ விடுவோம். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் (பணமும் புகழும்) நஞ்சு. துறவிஇன் கையில் பணமும் புகழும் இருப்பது அவனது துறவறத்தை கெடுத்து விடும்.]]]
உண்மைதான்.. முற்றும் துறந்தவனுக்கு எதற்குப் பணமும், சொத்துக்களும்..!
இந்தப் போலிகளை மக்கள்தான் அடையாளம் கண்டுகொண்டு பக்கத்தில் போகாமல் இருந்தாலே போதும்..!
[[[வாக்குமூலம்! said...
இந்தப் பாலியல் சித்திரத்தை நித்தியானந்தாசாமியில் மட்டும் சுமத்தி ஆணியவாதிகள் என்று முடிச்சு போட்டு சன்னதப் பெண்ணியங்களிடம் நல்ல பெயர் எடுக்க முயலும் உங்கள் சூட்சுமம் வாழ்க. இப்போ பிரச்சனை சண் தொலைக்காட்சிக்கு சாமி கப்பம் கொடுக்க மறுத்ததாலோ அல்லது டீல் பேசிப் பாத்தப்போ நம்மளுக்குப் படிய மட்டேங்குது சாமிக் குப்படிஞ்சிற்ராளப்பா என்னும் வருத்தமோதான் சண் டிவியின் இத்துணை ஆர்பாட்டம் என்று வைத்துகொள்ளலாம். இல்லையெனில் மதுரையில் மாமா அழகிரி ஆடாத ஆட்டமா? எத்தனை பெண்களை டீல் பேசி சங்ங்காரம் செய்தார் அவர் என சண் தொலைகாட்சியால் சொல்லத்தான் முடியுமா? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியம்தான். அது சரி எங்கப்பா? புனிதத் தன்மை,கற்பு, கௌரவம் என்று குமுறுகிற ஒட்டு மொத்த திரையுலகமே மௌனமாயிருக்கிறதப் பார்த்தா ஆளுக்காள் சாமிக்கிட்ட இரகசியமா போய்வந்திருப்பாங்களோ என்று எண்ண ரொம்ப ஆதங்கமா இருக்கு அண்ணாச்சி கடைசியா ஒண்ணு.
//நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்//
என்று வேறு நீங்கள் ஆதங்கப்படுவது ஏன்?? நீங்களே அவளுக்கொரு வாழ்வை கொடுங்களேன் கண்ணா
RAMONA]]]
அண்ணே.. யாருங்கண்ணே நீங்க..? ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கீங்க.. இப்படி விமர்சனம் எழுதறவங்கள்லாம் அதுல நேரடியா தலையிடணும்னு பார்த்தீங்கன்னா.. என்னை விட்ருங்கங்க சாமி.. நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லீங்க..!
"உங்களுடைய அனுமானம் தவறு.. நான் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அந்த நிகழ்வு சட்டப்படி தவறில்லை என்பதால் எனக்கும் தவறாகப் படவில்லை "
திருமணமான ஒரு பெண் இப்படி இருப்பது நம் நாட்டில் சட்டப்படி குற்றம் இல்லையா , உங்கள் கலைமகள் ( மரியாதை )
ரஞ்சிதா சாயம் வெளுத்து கொண்டுஇருக்கிறது , அவர்களுடைய பத்திரிகையிலேயே ( குமுதம் ரிபோர்ட்டர் ), இது சாமியாரின் சதி என்றும சொல்லலாம் தானே , அப்பவும் கலைமகள் ரஞ்சிதா மேல் பரிதாப படலம், அவரும் சாமியார் என்னை எமர்ற்றிவிட்டார் என்று பேட்டி கொடுக்கலாம் ,நீங்களும் அப்பவே சொன்னேன் என்று ஆதங்கபடலாம், எத்தனையோ லாம் , இந்ததடவை நான் மரியாதையாக எழுதி உள்ளேன் பதில் கருது உண்டா
தமிழில் பிழை உள்ளது என்று தவிக்கவும் செய்யலாம்
உண்மை தமிழனை இன்றுதான் பார்க்கிறேன் - இரு பொருள்கள் .
1 . வலையில் சமிபகாலத்தில் நுழைந்தவன் .இன்றுதான் உங்கள் வலைப்பூ எனக்கு தெரியவந்தது.
2 . பெரும்பாலான பதிவர்கள், இந்த செய்தியை தங்களின் நீலப்பட ரசனைக்கு கிடைத்த தீனியாக விரித்தபோது, நீங்கள் மட்டும்
அச்செய்தியின், நீள, அகல , ஆழங்களை குறிப்பிட்டு ஒரு உண்மையான தமிழனாக பதிவு இட்டுள்ளிர்கள் .
அந்த போலித்தனமான சமுக நச்சு நிச்சயம் , வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டிய ஒன்று
நியாயத்தின் /சட்டத்தின் மாட்சிமையை அரசாங்கமும் செயல் படுத்தாமல், மக்களும் உணராமல் இருக்கும் வரை
இந்த அராஜகம் ''முள் கொண்டு முள்''போல் அநாகரிகமாக ( என்ன நினைத்து / எதிர்பார்த்து அக்காட்சி தொலைகாட்சியில் ஓளி பரப்பபட்டதோ) தொடரத்தான் செய்யும்.
அடுத்து சாரு என்கிற எழுத்தாளனின் ( பெயர் எழுதவே அருவருப்பாக இருக்கிறது ) வலையில் எழுதியது அநாகரிக உச்சகட்ட அசிங்கத்தை ,,
பார்க்கும் பொழுது ,நீங்கள் குறிப்பட்டது போல் அந்த எழுத்தாளனுக்கு தமிழ் மொழி உதவாமலேயே இருந்து தொலைந்திருக்கலாம்.
இதெல்லாம் படிக்கும் பொழுதும் / பார்க்கும்பொழுதும் தொழில்நுட்பத்தின் மீது ஒரு எரிச்சல் வருகிறது. ஒரு சீரழிவை காட்டி , ஆயிரம் சீரழிவிற்கு இளைஞர்களின் மனதை தூண்டுவது எந்த விதத்தில் நியாயம் ? தனி மனித ஒழுக்கம் ஒவ்வொருவருக்குள்ளும் வேருன்றாதவரை நமக்கு எதிலும் நம்பிக்கையின்மை தான் தொடரும்.
வந்த வேகத்தில் வலையை விட்டு ஓடிவிடலமா என்று நினைத்தேன் ... உங்கள் பதிவு இருக்க வைத்திருக்கிறது .. நன்றியும் , வாழ்த்தும்.
மொத்தமா படிச்சிட்டேன்.
பதிவு அருமைண்ணே.
காவிய கட்டிக்கிட்டு ராஜசேகர் செஞ்சதுதான் தப்பு. யாரோ ஒரு முகம்தெரியாதவன் இத செஞ்சிருந்தா ராத்திரி அந்தரங்கத்தில உடம்பு மதமதப்ப தீர்த்துக்க திரை முன்னாடி உக்கார்ந்து பாக்குற clippings-ல ஒன்னா இந்த வீடியோ சேர்ந்திருக்கும்.
இதுல கொடுமை என்னன்னா சமூகத்தில அக்கறை இருக்குறதா காட்டிக்கிற நெற்றிகண்ண தொறந்தாலும் தப்பு தப்புதான்னு சொல்லுற பத்திரிகை இன்னமும் அத net-ல telecast பண்ணுறதுதான்.
[[[சி.வேல் said...
"உங்களுடைய அனுமானம் தவறு.. நான் கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. அந்த நிகழ்வு சட்டப்படி தவறில்லை என்பதால் எனக்கும் தவறாகப் படவில்லை "
திருமணமான ஒரு பெண் இப்படி இருப்பது நம் நாட்டில் சட்டப்படி குற்றம் இல்லையா, உங்கள் கலைமகள்(மரியாதை) ரஞ்சிதா சாயம் வெளுத்து கொண்டு இருக்கிறது. அவர்களுடைய பத்திரிகையிலேயே (குமுதம் ரிபோர்ட்டர்), இது சாமியாரின் சதி என்றும சொல்லலாம்தானே , அப்பவும் கலைமகள் ரஞ்சிதா மேல் பரிதாப படலம், அவரும் சாமியார் என்னை எமர்ற்றிவிட்டார் என்று பேட்டி கொடுக்கலாம் ,நீங்களும் அப்பவே சொன்னேன் என்று ஆதங்கபடலாம், எத்தனையோ லாம், இந்த தடவை நான் மரியாதையாக எழுதி உள்ளேன் பதில் கருது உண்டா]]]
வேல் நண்பரே..
காமம் பற்றிய புரிதலில் உங்களுக்கும் எனக்குமான இடைவெளி இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்துக் கொண்டு நாம் இந்த விஷயத்தில் உரையாடவோ, கருத்துப் பரிமாற்றமோ செய்ய முடியாது. அது வீணான வேலை..!
வி்ட்டுவிடுங்கள்.. இல்லையெனில் மீண்டும் ஒரு முறை எனது பதிவு முழுவதையும் படியுங்கள்.. புரிந்தாலும் புரியலாம்..!
[[[பத்மநாபன் said...
உண்மை தமிழனை இன்றுதான் பார்க்கிறேன் - இரு பொருள்கள் .
1. வலையில் சமிபகாலத்தில் நுழைந்தவன் .இன்றுதான் உங்கள் வலைப்பூ எனக்கு தெரியவந்தது.
2. பெரும்பாலான பதிவர்கள், இந்த செய்தியை தங்களின் நீலப்பட ரசனைக்கு கிடைத்த தீனியாக விரித்தபோது, நீங்கள் மட்டும்
அச்செய்தியின், நீள, அகல , ஆழங்களை குறிப்பிட்டு ஒரு உண்மையான தமிழனாக பதிவு இட்டுள்ளிர்கள். அந்த போலித்தனமான சமுக நச்சு நிச்சயம் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிய வேண்டிய ஒன்று
நியாயத்தின் /சட்டத்தின் மாட்சிமையை அரசாங்கமும் செயல்படுத்தாமல், மக்களும் உணராமல் இருக்கும்வரை
இந்த அராஜகம் ''முள் கொண்டு முள்''போல் அநாகரிகமாக ( என்ன நினைத்து / எதிர்பார்த்து அக்காட்சி தொலைகாட்சியில் ஓளி பரப்பபட்டதோ) தொடரத்தான் செய்யும். அடுத்து சாரு என்கிற எழுத்தாளனின் ( பெயர் எழுதவே அருவருப்பாக இருக்கிறது ) வலையில் எழுதியது அநாகரிக உச்சகட்ட அசிங்கத்தை பார்க்கும் பொழுது, நீங்கள் குறிப்பட்டதுபோல் அந்த எழுத்தாளனுக்கு தமிழ் மொழி உதவாமலேயே இருந்து தொலைந்திருக்கலாம்.
இதெல்லாம் படிக்கும் பொழுதும் / பார்க்கும்பொழுதும் தொழில் நுட்பத்தின் மீது ஒரு எரிச்சல் வருகிறது. ஒரு சீரழிவை காட்டி , ஆயிரம் சீரழிவிற்கு இளைஞர்களின் மனதை தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்? தனி மனித ஒழுக்கம் ஒவ்வொருவருக்குள்ளும் வேருன்றாதவரை நமக்கு எதிலும் நம்பிக்கையின்மைதான் தொடரும்.
வந்த வேகத்தில் வலையை விட்டு ஓடிவிடலமா என்று நினைத்தேன். உங்கள் பதிவு இருக்க வைத்திருக்கிறது. நன்றியும், வாழ்த்தும்.]]]
ஆஹா.. எல்லாம் அப்பன் முருகன் செயல்..
வாருங்கள் நண்பரே.. ஏன் வந்தவுடன் வெளியேற வேண்டும் என்கிற எண்ணம்..?
ஒவ்வொரு பதிவுகளாகப் புரட்டிப் பாருங்கள்.. உங்களை ஆழ்கடலில் மூழ்கடிக்கக் கூடிய அளவுக்கு பல்வேறு அறிவுச் சுரங்கங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன..
மெதுவாக, பொறுமையாக படியுங்கள்.. படிக்க படிக்க இந்த இடம் உங்களுக்கு நிரந்தரமாகப் பிடித்துவிடும்..!
வலையுலகத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களை அன்போடு வருக, வருகவென வரவேற்கிறேன்..!
[[[♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
மொத்தமா படிச்சிட்டேன். பதிவு அருமைண்ணே.]]]
நன்றி நன்றி நன்றி..!
[[[S said...
காவிய கட்டிக்கிட்டு ராஜசேகர் செஞ்சதுதான் தப்பு. யாரோ ஒரு முகம் தெரியாதவன் இத செஞ்சிருந்தா ராத்திரி அந்தரங்கத்தில உடம்பு மதமதப்ப தீர்த்துக்க திரை முன்னாடி உக்கார்ந்து பாக்குற clippings-ல ஒன்னா இந்த வீடியோ சேர்ந்திருக்கும். இதுல கொடுமை என்னன்னா சமூகத்தில அக்கறை இருக்குறதா காட்டிக்கிற நெற்றிகண்ண தொறந்தாலும் தப்பு தப்புதான்னு சொல்லுற பத்திரிகை இன்னமும் அத net-ல telecast பண்ணுறதுதான்.]]]
இதுதான் கொடுமை.. இவங்கதான் பத்திரிகைகளாம்.. பத்திரிகையாளர்களாம்.. கேவலமா இருக்கு..!!!
'ஜென்டில்மேன்' படத்தில் பார்த்த ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு பக்கம் அப்பளம் விற்பவராகவும் மற்றொரு பக்கம் கொள்ளைக்காரனாகவும் வாழும் அர்ஜூன் குற்ற உணர்வில் சிக்கி தவிக்கும் தருணத்தில் நம்பியாரிடம் வினீத்தின் புகைப்படத்தை காட்டி, "அவன்போய் சேர்ந்துட்டான். நான் மட்டும் இங்கே ரெட்டை வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டுருக்கேன்" என்பார். பதிலுக்கு நம்பியார் "இந்த லோகத்துல எல்லா மனுஷாளும் இரட்டை வாழ்க்கை தான் வாழுறா. ஒன்னு நிச்சயம் அதுல கேவலமானதா தான் இருக்கும். உன்னை பொறுத்தவரைக்கும் உன் ரெட்டை வாழ்க்கைல அர்த்தம் இருக்கு!" என்பார்.
நித்தியானந்தா விஷயத்தில் அவரது ரெட்டை வாழ்க்கை அர்த்தமற்று போய்விட்டது. வேறு என்னத்தை சொல்ல?
ரஞ்சிதாவை பொறுத்தவரைக்கும் இந்தளவு நித்தியானந்தா மீது காதல் கொண்டிருப்பவர் பேசாது அவரை ரகசிய திருமணமாவது செய்திருந்திருக்கலாம். அப்படி ஒருவேளை அவர் செய்திருப்பாரேயானால் இந்த தலைகுனிவிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிட்டியிருக்கும். (யார் கண்டது! உண்மையாகவும் இருக்கலாம்!!).
[[[Simple_Sundar said...
'ஜென்டில்மேன்' படத்தில் பார்த்த ஒரு வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு பக்கம் அப்பளம் விற்பவராகவும் மற்றொரு பக்கம் கொள்ளைக்காரனாகவும் வாழும் அர்ஜூன் குற்ற உணர்வில் சிக்கி தவிக்கும் தருணத்தில் நம்பியாரிடம் வினீத்தின் புகைப்படத்தை காட்டி, "அவன்போய் சேர்ந்துட்டான். நான் மட்டும் இங்கே ரெட்டை வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டுருக்கேன்" என்பார். பதிலுக்கு நம்பியார் "இந்த லோகத்துல எல்லா மனுஷாளும் இரட்டை வாழ்க்கை தான் வாழுறா. ஒன்னு நிச்சயம் அதுல கேவலமானதா தான் இருக்கும். உன்னை பொறுத்தவரைக்கும் உன் ரெட்டை வாழ்க்கைல அர்த்தம் இருக்கு!" என்பார்.
நித்தியானந்தா விஷயத்தில் அவரது ரெட்டை வாழ்க்கை அர்த்தமற்று போய்விட்டது. வேறு என்னத்தை சொல்ல? ரஞ்சிதாவை பொறுத்தவரைக்கும் இந்தளவு நித்தியானந்தா மீது காதல் கொண்டிருப்பவர் பேசாது அவரை ரகசிய திருமணமாவது செய்திருந்திருக்கலாம். அப்படி ஒருவேளை அவர் செய்திருப்பாரேயானால் இந்த தலைகுனிவிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிட்டியிருக்கும். (யார் கண்டது! உண்மையாகவும் இருக்கலாம்!!)]]]
இப்போதும் மோசமில்லை. காவியிலிருந்து நித்தி தன்னை விடுவித்துக் கொண்டு செல்வதுதான் அவருக்கும், ஆன்மிக உலகத்திற்கும் நல்லது..!
வருகைக்கு நன்றி சிம்பிள் சுந்தர்..! பெயரே வித்தியாசமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..!
உடனடி ஆதங்கத்தில் நானும் நிதியையும், ரஞ்சிதாவையும் ஏன் சாருவையும் கூட ஒரு பிடி பிடித்தேன். ஆனால் உங்கள் பதிவை படித்தபின் கொஞ்சம் நிதானித்திருக்கலம் என்று தோன்றியது. வர்த்தக ரீதியிலான போட்டி பூசல்களுக்கிடையில் அந்த பெண்ணை குறித்து யாருக்கும் சிந்திக்க நேரம் இருந்திருக்காது.
நல்ல பதிவு நண்பரே
[[[ஜீவன்சிவம் said...
உடனடி ஆதங்கத்தில் நானும் நிதியையும், ரஞ்சிதாவையும் ஏன் சாருவையும் கூட ஒரு பிடி பிடித்தேன். ஆனால் உங்கள் பதிவை படித்தபின் கொஞ்சம் நிதானித்திருக்கலம் என்று தோன்றியது. வர்த்தக ரீதியிலான போட்டி பூசல்களுக்கிடையில் அந்த பெண்ணை குறித்து யாருக்கும் சிந்திக்க நேரம் இருந்திருக்காது.
நல்ல பதிவு நண்பரே]]]
சிந்தித்து திருத்திக் கொண்டதற்கு நன்றி நண்பரே..!
உங்களை மாதிரியானவர்களெல்லாம் இது பற்றி வெளியில் சொல்வதே அபூர்வம்..
அண்ணே! உங்களின் இந்த கட்டுரையின் பல கருத்துக்களுடன் ஒத்து போகிறேன். மீடியாவின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. இது தொடர்பான ஒரு சிறிய இடுகை என் தளத்தில். நேரம் கிட்டும்போது படிக்கவும்.
(நா)மீறிப்போன மீடியாவின் மிடுக்கு...!
End podunga thala
[[[ரோஸ்விக் said...
அண்ணே! உங்களின் இந்த கட்டுரையின் பல கருத்துக்களுடன் ஒத்து போகிறேன். மீடியாவின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. இது தொடர்பான ஒரு சிறிய இடுகை என் தளத்தில். நேரம் கிட்டும்போது படிக்கவும்.
(நா)மீறிப் போன மீடியாவின் மிடுக்கு...! ]]]
நன்றி ரோஸ்விக்..!
[[[சி.வேல் said...
End podunga thala]]]
ஏன்..??????????????????????
மதம் சிதைந்து போனால் அது எப்போதும் ஓழுக்கமாகமாறிவிடுகிறது. ஓழுக்கம் என்பது இறந்து போன மதம். மதம் என்பது உயிரோட்டமுள்ள ஓழுக்கம். அவை சந்திப்பதேயில்லை, அவை சந்திக்க இயலாது. ஏனெனில் வாழ்வும் மரணமும் சந்திப்பதேயில்லை, இருளும் ஓளியும் சந்திப்பதேயில்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவை ஓன்று போலவே தோற்றமளிக்கின்றன.
ஓஷோ.
காமத்தைப் பொறுத்தவரை ஓழுக்கத்தின் எதிர்காலம்
{இருபது ஆண்டுகளுக்கு முன் ஓஷோ}
காமத்தைப் பொறுத்தவரை எந்த ஓழுக்கத்திற்கும் எதிர்காலம் இல்லை.உண்மையில் ஓழுக்கத்தையும் காமத்தையும் இணைத்த காரணத்தால் ஓழுக்கத்தின் கடந்த காலம் முழுவதும் விஷமாகிவிட்டது. ஓழுக்கம் அளவுக்கு அதிகமாக காமத்தை சார்ந்ததாகிவிட்டது. அதனால் அது காமத்தைத்தவிர முக்கியமான மற்ற தனது பரிமாணங்களை எல்லாம் இழந்துவிட்டது. ஓழுக்க சிந்தனைக்கு காமம் பெரிய பொருட்டாக இருக்ககூடாது.... See More
உண்மை, நேர்மை, சுயப்பொறுப்புணர்வு, முழுமை, இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.
விழிப்புணர்வு, தியானம், தன்ணுணர்வு, அன்பு இவைகளைத்தான் ஓழுக்கம் பொருட்படுத்தவேண்டும்.
ஆனால் கடந்த காலத்தில் காமமும் ஓழுக்கமும் கிட்டதட்ட ஓரே பொருள் தருவதாக மாறிவிட்டன. காமம் அதிக சக்தியுள்ளதாகவும், அடக்கமுடியாததாகவும் மாறிவிட்டது. எனவே யாரையாவது ஓழுக்கமற்றவன் என நீ கூறினால் அவனுடைய காம வாழ்க்கையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்றே நீ குறிப்பிடுகிறாய்.
நீ மிக ஓழுக்கமானவன் என யாரைப் பற்றியாவது கூறினால், அவன் வாழும் சமூகத்தில் காமத்தைக் குறித்துப் போடப்பட்டுள்ள சட்டதிட்டங்களின்படி நடந்துகொள்கிறான் என்பதையே நீ குறிப்பிடுகிறாய்.
ஓழுக்கம் ஓற்றைப் பரிமாணம் கொண்டதாகிவிட்டது. அது நல்லதல்ல, அந்த ஓழுக்கத்திற்கு எதிர்காலம் இல்லை, அது இறந்து கொண்டிருக்கிறது. உண்மையில் அது இறந்துவிட்டது. நீ ஓரு பிணத்தை சுமந்துகொண்டிருக்கிறாய்.
ஓஷோ: தந்திரா ஆன்மிகமும் பாலுணர்வும்
பிரம்மச்சாரியாக இருக்க வேண்டுமென்றால் பெண்களை/ஆண்களைப் பார்க்க கூடாது, பேசக்கூடாது, காமத்தில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் நமக்கு தந்திரா முரண்பாடுடையதாகத் தோன்றும் . ஆனால் காமத்தை விட்டு விலகி ஓடினால் ஒரு பொய்யான பிரம்மச்சரியம் பிறக்கும். நீ எவ்வளவு விலகி ஓடுகிறாயோ, அவ்வளவு அதைப் பற்றி சிந்திப்பாய். ஏனெனில் அது அடிப்படைத் தேவை
தந்திரா சொல்கிறது தப்பியோட முயற்சிக்காதே- தப்பியோட முடியாது. பதிலாக இயற்க்கையைப் பயன் படுத்திக் கடந்து செல் ; கடந்து செல்வதற்க்காக அதை ஏற்றுக்கொள். சண்டையிடாதே,உன் காதலன் அல்லது காதலியோடு நிகழும் இந்த பரிமாற்றம் முடிவை நோக்கி செல்லாமல் ஆரம்ப நிலையிலேயே நீட்டிக்கப்பட்டால் கிளர்ச்சியே சக்தியாகிவிடும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்”
சொல்ல மறந்து விட்டேன்.
Sorry for the late..
அருமையான பதிவிற்கு வாழ்த்துகள் சரவணன்.
மிக அருமையான பதிவு நண்பா
எந்த ஆபாச வீடியோவை 9மணிக்கு வெளிட்டு தமிழக இளசுகள் மனதை கெடுத்து தனது சந்தை நிலையை சன் நியூஸ் உயர்த்தி கொண்டது . அவ்வளவுதான்
முன் ஒரு காலத்தில் த்ரிஷா (த்ரிஷா போல உருவ அமைப்பு உள்ள ) குளியல் வீடியோவிற்கும் இந்த வீடியோவிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை
நேர்மையுடன்
முத்துக்குமார்
உ.த. நண்பரே,
பல போக்கத்த இடுகைகளுக்கிடையில் ஒரு நிதானமான இடுகை! ஆனாலும், (என்னால்) ஏற்றுக் கொள்ளமுடியாத கருத்துகள் சில உள்ளன, பெரும்பாலும் ஒத்துப் போனாலும்!
ஆனால், சுட்டிக் காட்டி விவாதம் பண்ண விருப்பமில்லை, சோர்வு தான் காரணம்...
மற்றபடி, தம்பி ஜே.ராம்கியின் சமூக அக்கறை சார்ந்த கேள்வி என்னை திக்குமுக்காட வைத்து விட்டது :-)
அன்புடன்
பாலா
[[[நீ எவ்வளவு விலகி ஓடுகிறாயோ, அவ்வளவு அதைப் பற்றி சிந்திப்பாய். ஏனெனில் அது அடிப்படைத் தேவை.]]]
நூற்றுக்கு நூறு உண்மைதான் சூர்யாண்ணே..!
[[[butterfly Surya said...
சொல்ல மறந்து விட்டேன்.
Sorry for the late..
அருமையான பதிவிற்கு வாழ்த்துகள் சரவணன்.]]]
லேட்டுன்னாலும் தேவையான பரிவாரங்களோட வந்து பரிமாறிட்டீங்க..!
மிக்க நன்றிங்கண்ணா..!
[[[muthukumar said...
மிக அருமையான பதிவு நண்பா.
எந்த ஆபாச வீடியோவை 9 மணிக்கு வெளிட்டு தமிழக இளசுகள் மனதை கெடுத்து தனது சந்தை நிலையை சன் நியூஸ் உயர்த்தி கொண்டது . அவ்வளவுதான். முன் ஒரு காலத்தில் த்ரிஷா (த்ரிஷா போல உருவ அமைப்பு உள்ள) குளியல் வீடியோவிற்கும் இந்த வீடியோவிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.
நேர்மையுடன்
முத்துக்குமார்]]]
உண்மைதான் முத்து..!
இரண்டுமே ஒன்றுதான்..
அவரவர்க்கு பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் பெரிய விஷயமாக இருக்கிறது..! மற்றதெல்லாம் அப்புறந்தான்..!
மீடியா துறையே இவர்களின் கையில் சிக்கிக் கொண்டதுதான் நமது துரதிருஷ்டம்.
[[[enRenRum-anbudan.BALA said...
உ.த. நண்பரே, பல போக்கத்த இடுகைகளுக்கிடையில் ஒரு நிதானமான இடுகை! ஆனாலும், (என்னால்) ஏற்றுக் கொள்ளமுடியாத கருத்துகள் சில உள்ளன, பெரும்பாலும் ஒத்துப் போனாலும்!
ஆனால், சுட்டிக் காட்டி விவாதம் பண்ண விருப்பமில்லை, சோர்வுதான் காரணம்...]]]
ஒரு யூத்து இப்படிப் பேசலாமாண்ணே..!
[[[மற்றபடி, தம்பி ஜே.ராம்கியின் சமூக அக்கறை சார்ந்த கேள்வி என்னை திக்குமுக்காட வைத்து விட்டது :-)]]]
என்னை வைச்சு கலகத்தை ஆரம்பிக்குறீங்க..!
நடத்துங்க.. நடத்துங்க..
நல்லாதான் இருக்கு.
http://vanakkamnanbaa.blogspot.com
[[[தமிழ் மைந்தன் said...
நல்லாதான் இருக்கு.
http://vanakkamnanbaa.blogspot.com]]]
நன்றி தமிழ் மைந்தன்..!
Post a Comment