18-02-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நமது வலையுலகின் மிகத் தீவிரமான வாசகரான பென்ஸ் அலாய் என்னும் ஈழத்துப் பெரியவர் ஆஸ்திரேலியாவில் குடியிருந்தபடியே வலைத்தளம் எழுதி வருகிறார். சமீபகாலமாக தினமும் எனக்கு பல நல்ல விஷயங்களை மெயிலில் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படி இன்று அவர் அனுப்பிய மெயிலில் இருந்த இந்தக் கதையை நிச்சயம் பதிவர்களாகிய உங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று எனக்குள் தோன்றியது.. அதுதான் இந்தப் பதிவு..!
நன்றிகள் பென்ஸ் ஐயாவுக்கு..!
"யாழ் நகரில் அரசாங்க விஷேட அடையாள அட்டை விநியோகித்த தமிழ் அலுவலர்களின் அசட்டை தமிழ் மகனது சுயநலம் அம்பலமாகுது.
இங்கே யாழ்குடா நாட்டை ஜெனரல் கொப்பாக்கடுவையின் இலங்கை இராணுவம் கைப்பற்றியதும் 10 வயதிற்கு மேற்பட்டோருக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனை ஓர் Special Projectஆக அரசாங்க அடையாள அட்டை திணைக்களம் யாழ் அரசாங்க அதிபர் ஊடாக நடாத்தியது.
Special Project Manager திருலிங்கநாதன் அய்யாவினது தலைமையில் 35 ஆண், பெண் கிளார்க் நபர்கள் வெவ்வேறு உதவி அரசாங்க அலுவலகங்களது தொடர்பில் கிராம சேவகர்கள் மூலம் சிறுவர் சிறுமிகள் பெரியோர்களுக்கென வழங்கினார்கள்.
திரு.லிங்கநாதன் அய்யா ஓரு அறிவுக் கடல். மூன்று பாஷைகளும் சரளமாக பேசுவார். அகவை எழுபதை தண்டிய பின்னர் ''பாலபண்டிதர்'' படித்தார். தமிழ் பண்டிதர்களுடன் தர்க்கம் புரிவதற்காக. இவரை பின்னர் விரிவாக பார்ப்போம்.
இராணுவம் வீடுகளில் தேடுதல் நடாத்தும்போதோ- தெருவில் மக்களை சோதிக்கும் போதோ இந்த விசேட அடையாள அட்டை இல்லாது போனால் கைது செய்யப்படும் அவலமும் நடக்கும்.
அய்ந்து லட்சம் மக்களுக்கு 35 நபர்களது சேவை அதிதுரிதமாக இருக்காத போதிலும், எமது மக்களது பரிதாப நிலையை உணர்ந்து தமிழ் அரசாங்க அலுவலர் சற்று இளகிய மனதுடனும் சேவை மனப்பானமையுடனும் இயங்குவார்கள் என்று எமது சமுதாயம் ஏங்கியது.
சரி.. கதைக்குச் செல்வோம்.
சர்வன் பெரித்த குரலான். பருத்த உடம்பான். சாதுர்ய பேச்சாளன். கவர்ச்சியான உடை நடை பாவனை. இடம் கண்டால் தயங்காது ஏமாற்றும் பேர்வளி. ரோட்டுக்கு தார் போடும் ஓவர்ஸீயர். கள்ளம் என்றாலும் உழைப்பிற்கு குறைவில்லை. புலி இயக்க பொறுப்பாளருக்கே இத்துப்போன கயித்தை குடுத்தவன் எண்டால் பாருங்கோவன். Air Condition Curtain வித்த கதை சுவாரஸ்யமானது. ஞாபகப்படுத்துங்கோ பிளீஸ். சர்வன் தேவையானோரை சினேகிதராக்கி காரியம் பார்ப்பதில் கில்லாடி.
ஆசீர், அரசாங்க அடையாள அட்டை இலாகாவின் யாழ் மாவட்ட கிளாக்கர். அனுபவசாலி. ஆசீர் நேர்மையானவர். லஞ்சத்தை வெறுக்கும் அபூர்வ பேர்வழி. ''லஞ்சம் பறிக்க துணிவில்லாத மடையன்'', எனவும் ஆசீரை பலர் திட்டித் தூற்றுவர். எமது தண்ணி பாட்னர். தண்ணி வாங்குவது ஆசீர். அவருக்கு கொம்பனி நாம்.
ஆசீர் நம்ம கிளிக்கில ஓரு பொருத்தமில்லாதவர் எண்டுதான் சொல்லோணும். யதார்த்தவாதி. அதனால் வெகுசன விரோதி. மானஸ்தன். நாணயம் காப்பவர். புதுவிதமான முன்கோபி. அலுவலகத்தில் பெரும் பிழை ஏற்பட்டால் கோபிக்காது அன்பாக நயமாக பேசி பிழையை மேலிடத்திற்க்குத் தெரிவிக்காது ரெண்டாம் பேருக்கு பிரஸ்த்தாபிக்காது நிவர்த்தி செய்வார். அற்ப பிழையை கண்டாலோ மனுசன் பிச்சி பிடுங்கி மானத்தை வாங்கி பிரட்டி எடுத்திடுவார். ''மாசம் முடிய கை நீட்டி சம்பளம் வாங்கிறாயே, கொஞ்சமாவது கதையை குறைச்சு செய்யிற வேலையில கவனம் செலுத்தண்டி''. என்பார்.
பெண்கள்தான் கதைப்பது அதிகம். ஓரு நடுத்தர வயதுப் பெண் சதா நாளும் பிந்தியே வருவார். அதுகும் அவசர அவசரமாக அவர் சைக்கிளில் றோட்டைத் தாண்டும்போது பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். அண்மையில் குழந்தை பெற்றெடுத்தவர். அன்றொரு நாள் எமது அலுவலகம் முன்னால் றோட்டை கடக்கும் போது ஓரு பஸ் உடன் மோதப் பார்த்தார். பஸ் டிறைவர் படு தூஷணை வார்த்தைகளால் பெரும் சத்தமாக ஏசி விட்டுப் போனார்.
ஆசீர் அண்ணா கேட்டாரே அந்த ஷாக்கில பயந்து வந்த மனுசியை, ''ஏண்டி கடைசி நேரம் மட்டும் புருஷனை கட்டிப் பிடிச்சிட்டு வந்தா அந்த பிள்லையை அநாதராவாத்தான் விட்டுட்டு போகப் போறாயேடி''. விம்மி மிம்மி அழுதவளை கூப்பிட்டு, ''பிந்தி வாறதுக்கு உனக்கு உரிமை இருக்கு. ஸ்பெஷல் பெமிர்ஷனுக்கு மனு ஓன்று போடு. மினிஸ்றிக்கு எழுதி எடுக்கலாம்'' என்று ஆறுதல் சொல்லி சொன்ன மாதிரி அலுவலும் நடந்தது.
சர்வனது குடும்பம் பிள்ளைகளது கல்வியின் நிமித்தம் கிராமத்தில் இருந்து யாழ் நகர் குடியிருக்க வந்த காலம். சர்வனது மனைவியிடம் அடையாள அட்டை கிடையாது. கிராமப்புறத்தில் அடையாள அட்டை அதிகம் தேவையில்லாது போனாலும் நகர்புறத்தில் அட்டை இல்லாது ஆமிக்காறனிடம் தப்பலேது.
''அ.அ. க்கு மனு போட்டு ஆறு மாதமாகுது இன்னமும் ஓண்டையும் காணோம்'', என்றார் அம்மையார். ஆசீரது தலை சுற்றி ஓரு நோட். அவ்வளவே. சலனம் எதுவுமே கிடையாது. சர்வன் வெகு இரகசியமாக மனைவியிடம் சொன்னது எல்லோருக்கும் இரைச்சலாக கேட்டது, ''அந்தாளுக்கு ஓருக்கா சொன்னா போதுமப்பா, அவர் அப்பிடித்தான் ''.
அடுத்த நாள் யாழ் அரசாங்க அதிபருக்கு கடிதம் பறந்தது. உதவி அரசாங்க அதிபரிடம் விளக்கம் கேட்டிருந்தார் ''அதிபர்''. உதவி அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட கிளார்க்கர் அய்யாவினது இருப்பிடத்தை அணுக 300-க்கும் மேற்பட்ட தேங்கிய விண்ணப்பங்களுடன் கிளார்க்கர் அய்யா மாட்டிக் கொண்டாரே.. சதாசிவ சர்மா, தமிழ் அய்யர்.
மறுநாள் காலை அடையாள அட்டை அலுவலகத்திற்கு அசடு வழிய வந்து ஆசீர் அய்யாவை அணுகினார் சதாசிவ சர்மா, அசட்டு கிளாக்கர்.
''அய்யர் அய்யா, தமிழன் தமிழன் எண்டு தம்பட்டம் அடித்து கதை அளப்பீரே.. இதுதானா ஓய் உம்மட யோக்கியதை. காய்கறி வாங்க சந்தைக்கும் போக முடியமா.. பிள்ளைகளை நேரத்துக்கு பள்ளிக்கூடம் கொண்டு போக ஏலாம.. வீட்டை சோதிக்க வாற ஆமிகாறங்களுக்கு காட்டுறதுக்கு அடையாள அட்டை இல்லாம.. அவதிப்படுறாவாமே ஓரு மனுசி.. அவ உங்கட பெண்டாட்டியா அய்யரே..? அப்பிடியெண்டா மட்டும் மணியை கிலிக்கிக் கொண்டு இங்கை ஓடி வந்திருப்பீர்.. என்ன..?"
ஓரு முழக்கம். அய்யர் அசந்தே போனார் !
''தமிழன், நாம் தமிழர்'' என்று வசனம் வாய் கிழிய கத்துவோர் அநேகமாக ''வாய்'' அளவில் மட்டுமே என்பது எமது தமிழ் சமுதாயத்தின் பரவலான கருத்து.
தமிழ் சமுதாயத்திற்கென தியாகம் செய்த நல்ல உள்ளங்களும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். அருமையாக.."
|
Tweet |
6 comments:
தமிழ் நாட்டில் வாய் கிழிய பேசுபவர் அதிகமானாலும் பேசாமல் உதவிக் கொண்டிருப்போர் பலர்
[[[புலவன் புலிகேசி said...
தமிழ்நாட்டில் வாய் கிழிய பேசுபவர் அதிகமானாலும் பேசாமல் உதவிக் கொண்டிருப்போர் பலர்.]]]
உதவி செய்பவர்களின் எண்ணிக்கை எங்கேயுமே எப்போதுமே குறைவுதான்..!
ஈழத்தில் அப்போதைய சூழலிலும் இப்படியும் சிலர் மனிதர்களாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள்..! இதுதான் கொடுமை..!
என்ன மேட்டர் என்பதை தமிழிலும் ட்ரான்ஸ்லேட் செய்து எழுதினால் நன்றாக இருக்கும் உண்மை அண்ணே.
அடப்பாவி..
கொஞ்சம் முனைப்புடன் படித்தாலே புரிந்துவிடும் போலத்தான் உள்ளது..!
இதைப் போயி..!
சரி.. சரி.. விடு.. உன் லெவல் இன்னிக்குக் கூடிப் போச்சு.. அதான் மேட்டரு..!
See who owns bossladyyucca.com or any other website:
http://whois.domaintasks.com/bossladyyucca.com
See who owns sakhr.com or any other website.
Post a Comment