22-02-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'படிக்காதவன்' படத்தின் வெற்றிக்குக் காரணமான 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்; உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி' பாடல் காட்சிதான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக முறை ஒளிபரப்பப்பட்ட பாடலாக இருக்கும்.
இருந்தும் ரஜினி இப்போதும் அதே பாடலை மறுபடியும் ஹம்மிங் கொடுத்துக் கொண்டேயிருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். என்றைக்கு அந்தப் பாடலின் அர்த்தம் புரிந்தவராகக் காட்சியளிக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.
எதற்கெடுத்தாலும் 'தமிழ்', 'தமிழ்' என்று தமிழை கொத்துபுரோட்டா போடும் சில அரசியல் வியாபாரிகளின் கூச்சல், தமிழ்த் திரையுலகில் மறுபடியும் சப்தமில்லாமல் தலையெடுத்துவிட்டது. இந்த முறையும் இவர்கள் வாய்க்கு ஊறுகாய் ரஜினிதான். கூடவே துணைக்கு அஜீத்தையும் இழுத்து வைத்திருக்கிறார்கள்.
ஒருவருக்குப் பாராட்டு விழா என்றால் பேச்சாளர்களைத் தவிர்த்து மற்றவர்களை முறைப்படி அழைக்கலாம். "கண்டிப்பாக வரணும்" என்று சொல்வதோடு முடித்துவிடுவது நாகரிகம்.. "வரலைன்னா சொத்துல பங்கு கிடையாது.. உன்கூட 'கா.." என்று நட்பு ரீதியாகவும், உறவு முறையிலும் அன்போடு மிரட்டுவதும் ஒரு வகையில் நடப்பதுதான்.
ஆனால், "வரவில்லையெனில் நீ தொழிலே பண்ண முடியாது.. ஊர்லயே இருக்க முடியாது" என்று சொல்லி அழைப்பது அந்த விழாவையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். இதைத்தான் கலைஞரின் பாராட்டு விழாவில் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்தினர்.
வராவிட்டால் திரையுலகில் நீடிக்கத் தடை.. பணி புரிய முடியாது என்றெல்லாம் மிரட்டி அழைக்கப்பட்டிருப்பதால், வந்தவர்கள் எல்லாம் மனதார வாழ்த்தினார்கள் என்றா கருத முடியும்..? இதுவே கேவலமில்லையா..? ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து "என்னை நாலு வார்த்தை 'நச்சு'ன்னு வாழ்த்திட்டுப் போடா பேமானி.." என்று மிரட்டி அவர் பயத்தில் எட்டு வார்த்தையில் கவிதை பாடிவிட்டுப் போனால் அதைக் கேட்டும் ஒருவர் நெக்குருகி போய் நிற்கிறாரென்றால் அவர் நிச்சயம் 'நட்டு கழன்ற கேஸாகத்தான்' இருக்க முடியும்.
இப்படியொரு தோற்றத்தை வலுக்கட்டாயமாக முதல்வருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் திரையுலகத்தினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்.
"ரஜினி, கமல் இருவரும் வராவிட்டால் கூட்டம் வராது.. குத்துப் பாட்டு நடனங்கள், கேளிக்கைகள், கிண்டல்கள், குத்தல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் இல்லையெனில் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஸ்பான்ஸர் கிடைக்காது.. சின்ன ஸ்பான்ஸர் கிடைத்தால் பணம் பெயராது.. பணம் வரவே இல்லையெனில் இவருக்கு பாராட்டு விழா நடத்துவதால் எங்க டிவிக்கு என்ன பிரயோசஜனம்..?" என்று கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி போட்டுக் கொடுத்த திட்டப்படிதான் அத்தனையும் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக கமலஹாசன் முதல்வரை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்தார். கமலஹாசன் வரப் போவதை முன்கூட்டியே பெப்ஸியின் தலைவருக்கு பாஸ் செய்த டிவிக்காரர்கள் "கமல்ஹாசனையும் கலைநிகழ்ச்சியில் ஏதாவது ஒண்ணு செய்ய வைச்சிருங்க.. கமல், சி.எம்.கிட்ட பேசும்போது நீங்களும்கூட இருந்து பேசி முடிச்சிட்டீங்கன்னா கமல் தட்ட மாட்டார்" என்று ஒரு புது திரைக்கதை எழுதி சொல்லியனுப்பினார்களாம்.
தான் மட்டுமே பேச வந்து பெப்ஸியின் தலைவரே இந்த வீட்டில் வரவேற்கிறாரே என்கிற புதுமையில் சபையில் புகுந்த கமலுக்கு அவரே எதிர்பார்க்காத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் குகநாதன், "ஐயா நீங்களே இவர்கிட்ட சொல்லிருங்க.. ஏதாவது ஒரு படத்தோட வசனத்தை மட்டும் ஒரு பத்து நிமிஷம் பேசுற மாதிரி இருந்தால் போதும்.." என்று கலைஞரிடம் போட்டுக் கொடுக்க.. 'தேவர் மகன்' புரியாமல் பார்த்தபடியிருக்க.. "நான் சொல்லிக்கிறேன்.. தம்பி நடிப்பாரு.." என்று கலைஞரும் 'தானா வந்து மாட்டுறாங்க பாருங்க..' என்ற நினைப்பில் சொல்லிவிட அன்றைக்கே பத்திரிகைகளில் செய்தி வந்து பரபரப்பூட்டியது கலைஞரின் வசனத்தை கமல் மேடையில் பேசி நடிக்கப் போகிறார் என்று..
தான் பேச வந்த விஷயத்தைவிட தன்னை சிக்க வைத்த காரண, காரியத்தால் சங்கடமாகிப் போன கமல், பிற்பாடு கலைஞர் டிவியில் இருந்து வந்த தொடர் நெருக்கடி கண்டு கடுப்பாகித்தான் போயிருக்கிறார். கடைசிநாள் வரையிலும் தன்னுடைய நிகழ்ச்சிக்கான நேரம் எவ்வளவு என்பதைச் சொல்லாமலேயே டபாய்த்துவிட்டு முதல் நாள்தான், "ஸ்டெடி பண்ண நேரமில்லை. பிராக்டீஸும் முடியலை.. சொதப்பலா நான் எதையுமே செய்ய மாட்டேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.. விட்ருங்க.." என்று ஒரே போடாகப் போட்டுத் தப்பித்துக் கொண்டாராம்.
இந்த அதிர்ச்சியை சமாளிக்கத்தான் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்ஸை போட்டு முதல்வரை அழுக வைத்து சமாளித்துவிட்டார்கள். ஆனாலும் அஜீத் கொடுத்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் இதே அஜீத்துக்கு பத்திரிகை வைத்து அழைப்புவிடுக்கப் போனவர்கள் கொடுத்ததும் ஒருவிதத்தில் அதிர்ச்சிதான்.
"நானும் வாழ்த்துறேன்.. பொதுவா நான் இந்த மாதிரி பங்ஷன்ல கலந்துக்குறதே இல்லையே.. என்னுடைய பங்களிப்பா எவ்வளவு வேணுமா சொல்லுங்க.. அதைக் கொடுத்துடறேன்.." என்றுதான் அஜீத் சொல்லியிருக்கிறார். ஆனால் அழைக்கப் போனவர்கள் அப்போது வைத்த நக்கலும், கிண்டலும், மிரட்டலும்தான் அஜீத்தை அப்படி பேச வைத்துவிட்டது என்கிறார்கள்.
அந்தப் பேச்சுக்கு ரஜினி மட்டுமல்ல அரங்கில் இருந்த முக்கால்வாசி பேரும் கைதட்டி ஓய்ந்துதான் போயிருக்கிறார்கள். இப்போது நெட்டில் ஓடும் கிளிப்பிங்ஸ்களை கேட்டுப் பாருங்கள். தெளிவாகவே தெரிகிறது. மறுநாளில் இருந்து பல இளம் நடிகர்கள், நடிகைள், இயக்குநர்கள், பிரபலங்கள் என்று பலருமே அஜீத்திற்கு போன் செய்தும், மெஸேஜ் அடித்தும் பாராட்டித் தள்ளிவிட.. தனது எதிர்ப்புக் குரல் திரையுலகிலும் மையமாக சுழன்றுவருவதை அஜீத்தும் புரிந்து கொண்டிருந்தார்.
அதேவேளை கலைஞர் டிவி நிர்வாகிகளையும், விழா அமைப்பாளர்களையும் அழைத்து "கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." என்று கலைஞர் காய்ச்சி எடுத்த பிறகுதான் இந்த பிரச்சினை வேறு முலாம் பூசி வெடிக்கத் துவங்கியுள்ளது.
சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி, நடிகர் சங்க நிகழ்ச்சிகள், நெய்வேலி ஊர்வலம், இராமேஸ்வரம் ஊர்வலம், ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் என்று அத்தனைக்கும் அஜீத்தை அழைப்பதற்காக ஒரு தனிப்படையையே போட வேண்டிய நிலைமை என்று இருந்ததால் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அஜீத் மீது காட்டமாகவே இருந்தார். அதனை நக்கீரன் பத்திரிகையில் அப்படியே பேட்டியாக அளித்திருந்தார்.
அஜீத்திற்கு எதிராகப் பேட்டியளிக்க கட்சி நடிகர், நடிகையர் தவிர மற்ற பொதுவானவர்கள் யாரும் முன் வராததால் சம்பந்தப்பட்ட டிவி வட்டாரத்தில் இருந்து கை காட்டிய பின்பே ஜாக்குவார் தங்கம் லைம்லைட்டிற்கு வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். அவருடைய பேட்டியையே யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட.. விஷயத்தை பெரிதாக்கியே தீருவது என்ற நோக்கத்தில் உருவானதுதான் அவருடைய வீடு தாக்கப்பட்டது என்கிற சினிமா திரைக்கதையில் உருவான புகார் நடவடிக்கை.
அஜீத்தின் தூண்டுதல் என்று சொல்லி புகாரை பதிய வைத்து அதையை நடிகர் சங்கத்திலும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ஜாக்குவார் தங்கம். அதே நடிகர் சங்கத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்குவார், "ரஜினி ஒரு ஜோக்கர். அவர் சொன்னதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க.." என்று சொன்னது மிகப் பெரிய அதிர்ச்சி.
இதற்கு இந்த நிமிடம்வரையிலும் நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. ஆனால் கூட்டப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் அஜீத் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் எனவும், ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அறிவித்து முடித்திருக்கிறார்கள். ஜாக்கிவாரின் ரஜினி பற்றிய கமெண்ட்டுக்கும், அஜீத் பற்றிய பேச்சுக்கும் எந்தவித ரியாக்ஷனும் அந்த அறிக்கையில் இல்லவே இல்லை.
நடிகர் சங்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ரஜினி வந்தால்தான் சிங்கப்பூரில் கல்லா கட்ட முடியும் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். வந்தார். இப்போது வங்கியில் கல்லா நிரம்பி வழிகிறது. சென்சிடிவ்வான காவிரி பிரச்சினையில் தலையைக் கொடுக்க வேண்டாம் என்று மறுத்தும் வராமல் போனால் கர்நாடகாவிற்கு ஆதரவாளன் என்று பட்டம் சூட்டிவிடுவார்கள் என்று பயந்துபோய் வந்து பேசியதில் இரண்டு பக்கமும் குட்டு வாங்கிக் கொண்டு போனார். விதி வலியதாச்சே.. சங்கத்தின் மூலம் நடத்திய ஈழப் போராட்டத்திற்கு வந்தே தீர வேண்டும் என்றார்கள். வந்தார். பேசினார். தன் கடமையை சங்கத்திற்காக முடித்துவைத்துவிட்டுப் போனார்.
நடிகைகள் பற்றி ஆபாசமாக எழுதிய 'தினமலர்' பத்திரிகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இரு தரப்பினரையுமே பேலன்ஸ் செய்வதைப் போல் பேசிவிட்டுச் சென்றார். அதையே கிண்டல் செய்தவர்கள் பின்பு வந்து பேசியவர்கள் பேசிய பேச்சுக்களால் விளைந்த விளைவுகளைப் பார்த்த "ரஜினி பேசியது சரிதான்.." என்றார்கள் கடைசியில்.
'ஜக்குபாய்' திரைப்படம் இந்த 25-வது நாளான இன்றைக்கு சென்னையில் மட்டும் வெற்றிகரமாக 3 தியேட்டர்களிலாவது ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் ரஜினிதான். ஏதோ தன்னால் முடிந்த அளவுக்காவது படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுவோம் என்ற எண்ணத்தில் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி கிக் ஏத்தினார். ஆனாலும் படம் பெயிலியர் ஆனது வேறு கதை.
'ஜக்குபாய்' படத்தின் பிரிவியூவுக்கும் அழைத்தார்கள். கூட்டத்தோடு கூட்டமான பிரிவியூக்களுக்கு வராதவர் இந்த அழைப்பை மட்டும் ஏற்று வந்தார். நடிகர் சங்கத் தலைவருக்கு திருப்தியளிக்கும்வகையில் அவருக்கு இன்றுவரையிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்திருக்கிறார் ரஜினி. அப்படியிருந்தும் அந்தக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகப் பேச யாருமில்லை.. இதுதான் ரஜினியின் ராசி..!
ஏதோ இந்த சினிமா அமைப்புகளினால்தான் திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடுகின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். கலைஞர் டிவிக்கு காசு பெயர்வதற்கு நாங்கள் ஏன் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஒருவகையில் இவர்கள் சொல்வதும், கேட்பதும் நியாயம்தான்.
உண்மையான பாராட்டுவிழா என்றால் எதற்கு ஆடல், பாடல், கேளிக்கைகள்..? பேச்சு மட்டும் போதாதா..? பேசியே தீருவது என்றால் ஒருவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை மேடைகளில்தான் பேசுவார்கள். அவர்களுக்கே எரிச்சலாக இருக்காதா..? கோபம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு, எரிச்சல் இருந்தாலும் இல்லாமல் காட்டிக் கொண்டு பேசிவிடு என்று சொன்னால் அந்தப் பேச்சில் என்ன உண்மையான அன்பா வெளிப்பட்டிருக்கும்..?
முதல்வர் இந்த பாராட்டு பற்றிய விஷயத்தில் உலகத்திலேயே மிக, மிக வித்தியாசமான மனிதர். இப்படியொரு விளம்பர வெறி பிடித்த மனிதரை வேறு எந்த லோகத்திலும்கூட நாம் பார்க்க முடியாது. அவருக்குத்தான் புரியாது என்றாலும் இந்த சினிமாக்காரர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு கூஜா தூக்குகிறார்கள்..? தூக்கினால் தூக்கட்டும். தூக்க மாட்டோம் என்பவர்களை விட்டுவிட வேண்டியதுதானே..? ஊரைவிட்டே ஒதுக்குவோம் என்று சொல்லும், இவர்களுக்கும் கிராமங்களில் மரத்தடி பஞ்சாயத்து செய்யும் நாட்டாமைகளுக்கும் என்ன வித்தியாசம்..?
ரஜினியும், அஜீத்தும் முதல்வரை சந்தித்த அன்று மாலை நடந்த 'பாடகசாலை' படத்தின் கேஸட் வெளியிட்டு விழாவில் பேசிய பெப்ஸியின் தலைவர் குகநாதன், “நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்...” என்று ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார். வருத்தப்பட வேண்டிய விஷயம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைப் போல பெப்ஸி தலைவருக்குள் இருந்த 'உடன்பிறப்பு' பாசம் வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கலைஞரின் பாராட்டு விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பல கலைஞர்களை மிரட்டிப் பணியவைத்த இவர்கள், நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை ஏன் வரவில்லை என்று கண்டித்தார்களா என்று தெரியவில்லை. கிராமத்து நாயகன் ராமராஜனுக்கு வராததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.எஸ்.சந்திரனுக்கு தந்தி அடித்தாவது அழைத்தார்களா என்பதும் தெரியவில்லை. 'திரையுலக அஷ்டாவதனி' விஜய டி.ராஜேந்தரை அழைக்க வண்டி போனதா என்றும் தெரியவில்லை. அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு என்ன காரணம் சொல்லி லீவ் லெட்டர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.. இது எல்லாவற்றையும்விட, குகநாதன் செயலாளராக இருக்கும் 'தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்க'த்தின் தலைவர் இயக்குநர் விசு ஏன் வரவில்லை என்று அவரது சட்டையைப் பிடித்துக் கேட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் ஏன்.. எதற்கு.. என்று கேட்க முடியவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பொதுவானவனாக யாருமே இருக்க முடியாது என்பதுதான். ஒன்று நீ எனக்கு நண்பனா இரு. அல்லது அவனுக்கு நண்பனாக இரு. இரண்டுமே இல்லாவிடில் நீ எனது எதிரிதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் இரு தரப்பு அரசியல்வியாதிகளும். அந்த வியாதி இப்போது சினிமாவுலகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது.
அந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களே தமிழ் இன உணர்வு இல்லாதவர்கள் என்கிற ரீதியில் பேச்சு எழுவது பிரச்சினை இப்போது எந்தத் திசையில் போகிறது என்பதை உணர்த்துகிறது. ஜாக்குவார் தங்கம் தான் சார்ந்திருக்கும் நாடார் இனத்தினரின் பெயரை போஸ்டரில் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இனப் பிரச்சினையில் உட்புகுந்து இப்போது ஜாதிப் பிரச்சினையாகவும் உருமாறி வருகிறது. இந்த லட்சணத்தில் இதற்கு திருமாவளவனின் ஆதரவும் ஜாக்குவார் தங்கத்துக்காம். இப்படி எதையாவது செய்து வருங்கால முதல்வர் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார் திருமா. திருமாவின் ஆதரவு ஜாக்குவாருக்கு என்றவுடன் ரஜினிக்கும், அஜீத்துக்கும் ஆதரவு ஈரோட்டு நாயக்கரின் பேரன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடமிருந்து கிடைத்திருக்கிறது. சபாஷ்.. மெல்ல மெல்ல அரசியலும் உட்புகுகிறது. எங்கே போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.
இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் சூப்பர்ஸ்டாரின் இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இன்றைக்கு சினிமாக்காரர்களே முன் வைப்பது கேவலமானது. அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய சூத்திரமாக இருக்கிறது. வெட்கக்கேடானது.
கலையில் மொழி இல்லை என்று இவர்களுடைய முன்னோர்கள் சொல்லியதால்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், பிரேம்நஸீர், மது என்று தென்னிந்திய ஹீரோக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் அவரவர் தாய் மொழியில் சங்கங்களை ஆரம்பித்தாலும், இந்த மொழித் திரைப்படங்கள் அடுத்த மொழியிலும், அடுத்த மொழித் திரைப்படங்கள் இந்த மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுத்தான் வந்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராஜ்குமார், நாகேஷ்வரராவ், பிரேம்நசீர் என்று அக்கால ஹீரோக்கள் அனைவருமே தங்களுக்குப் பொருத்தமான அடுத்த மாநிலக் கதைகளை தனதாக்கி அதில் வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள்.
இன்றைக்கு 'தமிழ்..' 'தமிழ்' என்று பேசத் துவங்கியிருக்கும் பெப்ஸியின் தலைவர் குகநாதனே தெலுங்கிலும் எத்தனையோ திரைப்படங்களுக்கு பணியாற்றியிருக்கிறார். தமிழைவிட தெலுங்கில்தான் குகநாதன் கதை விஷயத்தில் ரொம்பவே பிரபலம்.. தெலுங்குலகில் ‘ரிப்பேர் திலகம்' என்பார்களாம் அவரை. முடிச்சவிழ்க்க முடியாத ‘திரைக்கதை முடிச்சுக்களை அவிழ்ப்பதில் கில்லாடி குகன்' என்று பாராட்டப்பட்டவர் அவர். ஆனாலும் இன்றைக்கு தான் தெலுங்கிலும் மற்ற மொழிப் படங்களிலும் பணியாற்றியதையும், சம்பாதித்தையும் மறந்துவிட்டு தமிழைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஆரம்பக் காலத்தில் ஏவி.எம்.மின். ஆஸ்தான கதாசிரியராக இருந்த குகநாதன்தான் எம்.ஜி.ஆர் நடித்த ‘குமரிக்கோட்டம்', ‘புதிய பூமி' படங்களுக்கு கதாசிரியர். எஸ்.பி.முத்துராமன் முதல்முதலாக இயக்கிய ‘கனமுத்துப்பாப்பா'வின் கதாசிரியரும், தயாரிப்பாளரும் இவர்தான். சிவாஜியின் ‘ராஜபார்ட் ரங்கதுரை' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அஜீத் நடித்த “மைனர் மாப்பிள்ளை” படத்தை இயக்கி தயாரித்ததும் குகநாதன்தான். ஆனால் இதுதான் தமிழில் குகநாதன் தயாரித்த கடைசி படம்.
ஒருவேளை அந்தப் படத்தின் தயாரிப்புப் பணியில் தனிப்பட்ட முறையில் அஜீத்திற்கும், குகநாதனுக்கும் இடையில் ஏதாவது மோதல் இருந்திருக்குமோ என்கிற ரீதியில் பத்திரிகையாளர்கள் இப்போது தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.
குகநாதனின் சர்ச்சைக்கிடமான அந்தப் பேச்சு சற்று ஓவரானது என்பதை திரையுலகப் பிரபலங்களே ஒத்துக் கொள்கிறார்கள். இப்போதைய சமாதானத்துக்காக அறிக்கையில் கையெழுத்திட்டதாக ராதாரவி சொல்கிறாராம். ஆனாலும் குகநாதனின் அந்த மேடைப் பேச்சு நடிகர்களை இப்போது உசுப்பிவிட்டிருக்கிறது.
பல கண்டன போன்கால்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறகு நடிகர், நடிகைககளை விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பெப்ஸி அமைப்பின் பெயரில் குகநாதன் மிரட்டியதாகவும், கட்டாயப்படுத்தியதாகவும் இப்போது நடிகர் சங்கத்தின் மூலம் முறைப்படியான புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாம். குகநாதனின் பேச்சு எல்லை மீறியது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை சரிவர பத்திரிகைகளில் வெளிவராமல் போயிருக்கிறது.. ஏன் என்று தெரியவில்லை.
அஜீத் இப்போதுவரையிலும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வருகிறார். ஆனாலும் "நமக்குள்ளதான.. ஒரு பேப்பர்ல எழுதி அறிக்கைவிட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க.. அடுத்த நாளே எல்லாரும் மறந்திருவாங்க.." என்ற ரீதியில் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்துதான் வருகின்றன.
இடையில் அவர் தெம்பாக இருப்பதற்கு இன்னுமொரு அரசியல் காரணமும் உண்டு. தயாநிதி அழகிரிக்கு அடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினாலும், மதுரையின் பட்டத்து இளவரசரால் அந்தத் தடையை நொடியில் தூக்கிவிட முடியும் என்கிறார்கள் சிலர்.
இதற்கு, நயன்தாராவுக்கு முன்பு ஒருமுறை பெப்ஸி அமைப்பு தடை போட்டிருந்தபோது "ஆதவன் படத்தின் ஹீரோயின் நயன்தாராதான்" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு சப்தமில்லாமல் பெப்ஸியின் அந்த தடை உத்தரவை குப்பைக் கூடைக்குப் போகச் செய்ததை உதாரணம் காட்டுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
தமிழ்.. தமிழ்.. என்று திரையுலகில் இன்றைக்குச் சொல்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் ஐந்து மொழியிலும் தங்களது படங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஓட வைத்துக் கொண்டிருந்தவர்கள்தான். அன்றைக்கு அவர்கள் சம்பாதிக்க அத்தனை மொழிகளும் வேண்டும்.. அத்தனை மொழிக் கலைஞர்களும் வேண்டும் என்று ஆளாய்ப் பறந்தவர்கள் இன்றைக்கு சூடு குறைந்து, சுதியிறங்கி மைக் மட்டுமே மிச்சம் என்ற நிலைமைக்கு வந்த பின்பு தமிழ் மட்டுமே நம் மொழி என்று பேசுவது நயவஞ்சகத்தனம்.
தாங்கள் கலைஞரை சந்தித்த பிறகும் தங்களுக்கு எதிராகக் கண்டன அறிக்கையும், தடைகள் வருவதையும், தமிழின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றபோதும் சங்க அமைப்பின் பெயரில் தங்களை நோக்கி கல்லெறியும் சம்பவங்களைப் பார்க்கின்ற இந்த நேரத்திலாவது ரஜினியும் அஜீத்தும் இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.
ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் அதோ கதிதான் என்பதை முதலில் கலைஞரும், பின்பு ஜெயலலிதாவும் இப்போது மீண்டும் கலைஞரும் அவ்வப்போது பலருக்கும் உணர்த்தி வந்தாலும் அனுபவப்பட்டவர்களே புரியாததுபோல் இருப்பதும், நடிப்பதும் ஏன் என்றுதான் தெரியவில்லை.
இந்த வெட்கக்கேட்டை செய்த, செய்யும் இருவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தக் கலைத்துறையின் துரதிருஷ்டம்.
புகைப்படங்கள் உதவி : www.indiaglitz.com
|
Tweet |
236 comments:
காரசாரமாத் தான் போயிக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க .
ஹைய்யா நாந்தான் முதல்லயா ..
நச் நச் நச்
அடிச்சி ஆடுங்க
சூப்பர் அண்ணே... அருமை... உங்க கருத்ததான் எதிர் பார்த்தேன்... அடிச்சு விளையாடுறீங்க...
nethi adi.
Sorry for ajith...If he knows that the present CM is resonsible for all the happenings , he would not speak that speach in the stage...
//"கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." //
இதுதான் இக்கட்டுரையில் நான் இரசித்த ஒன்று.
இதற்கு ஏதாவது காமெண்டு இருக்கிறதா கட்டுரையில்?
அண்ணே முதல் முறையா உங்க கட்டுரையை அப்படியே ஏத்துக்கிறேன்...
அண்ணெ ! எல்லாம் உள்குத்து. இவனுங்களை பத்தி நமக்கு தெரியாதா? ஆனால் அஜீத்தின் தைரியத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
//ஆனால், "வரவில்லையெனில் நீ தொழிலே பண்ண முடியாது.. ஊர்லயே இருக்க முடியாது" என்று சொல்லி அழைப்பது அந்த விழாவையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். இதைத்தான் கலைஞரின் பாராட்டு விழாவில் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்தினர்...//
திரைப்படம் எடுப்பது ஒரு கூட்டுமுயற்சி. இரசனியை மட்டுமே, அல்லது அசித்தை மட்டுமே வைத்து எடுக்க முடியாது. நூற்றுக்குமேலான தொழிலாளர்கள் அஃதில் ஈடுபட்டு நடக்கும் தொழில்.
திரைப்படச்சங்கம் என்பது அத்தொழிலாளர்களில் நல்வாழ்க்கைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு.
அது ஒரு தொழிற்சங்கம். .
தொழிற்சங்கம் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும்போது ஒவ்வொரு உறுப்பினரும் கலந்த்துதான் தீரவேண்டும். ஏதாவது காரணத்தினால் இயலாதெனின், அதை முறையாகத் தலைவரிடம் சொல்லி விடுப்புக்கேட்டுவிடலாம்.
காரணமே இல்லாமல் வராமலிருப்பது தவறு. எனக்கு கருன்நானிதியைப்பிடிக்கவில்லை, இச்சஙகத்தினரின் செயல் பிடிக்கவில்லை என்றால் சங்கத்திலிருந்து விலகிக்கொள்ளலாம்.
பாராட்டு விழாவுக்கு வந்தவர்களெல்லாம் கருநானிதி தங்களுக்குப் பிடிக்குமென வரவைல்லை. பின் ஏன் வந்தார்கள்? பொதுநலம் கருதி. தொழிலாளர்களின்.
தொழிற்சங்கம் மிரட்டத்தான் செய்யும். எல்லாத்தொழிற்சங்கங்களும் இப்படித்தான்.
மிரட்டல் பிடிக்ககவில்லயெனறால் விலகிக்கொள். ஏன் உள்ளேயிருந்துகொண்டே குழி தோண்டுகிறாய்! இதுதான் கேள்வி.
//"கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." //
இந்த கொமெடி பிஎசுக்கு இப்ப தான் புரியுதா? மக்கல் யாரும் அதுக்காக ஓட்டு பொடலை. அது கொடுகுர இலவசதுக்காக தான் போடுராஙக. மனசில இருந்தால் தான் மதிப்பு வரும் இல்லாடி இந்த மாதிரி தான் வரும்.
இதோட அசிஙகமாக வார்தை வருது. வென்டாம்.
அருமையான கட்டுரைண்ணே... மிகச்சில வார்த்தைகளை பதப்படுத்தியிருந்தால் வெகுஜன ஊடகத்தில் வெளிவர வேண்டிய முத்துக்களாகியிருக்கும்.
உங்க அருமை உலகத்துக்கு எப்ப புரியப்போகுதோ?
ஓட்டு போட்டாச்சு.
அஜீத்தின் தைரியத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஏன் வந்தாய். கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார்களென்றால்.
உயிருக்குப்ப்யமா?
வந்தபின் மேடையேறி, என்னைக்கட்ட்டாயப்படுத்தி இங்கு கொண்டுவந்தார்கள் என்பது மேடை நாகரீகமா?
யாருக்கு விழா நடாத்துகிறர்களே, அவரை முன் வைத்து கேவலப்படுத்தவேண்டுமென்பது உன் நோக்கமா?
அப்படியென்றால் ஏன் வந்தாய்? இவ்வளவு வீரமாக மேடையில் பேசும்னீ, ஏன் முதலிலே
‘என்னை எந்தக்கொம்பனாலும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்ல உனக்கு ஏன் வீரம் வரவில்லை?
வந்தபின் ஒட்டுமொத்தமாக - சங்கத்தையும், பாரட்டுபெறவேண்டியவரையும் ஏன் கேவலப்படுத்தினாய்?
இவைகளே சரியான் கேள்விகள்.
பதில்கள் உளவா?
அசித்து வீரர் என பின்னூட்டம் போட்டவர்களின் பதிலை எதிர்னோக்குகிறேன்.
உ.த நண்பரே,
எல்லாத்தையும் தெளிவா புட்டு புட்டு வச்சுருக்கீங்க! குழலி சொல்றபடி, உங்க கருத்துகள் அனைத்தையும் அப்டியே ஏத்துக்கிடறேன் (ஆனா, முதல் முறையாவெல்லாம் இல்ல :-))
சூப்பர் ஸ்டார் நெஜமாவே பாவம் தான், அவரு ஜாதக ராசி அப்டி! நடிகர் சங்கம் இப்டி முதுகெலும்பு இல்லாத ஒரு கேவலமான அமைப்பா இருக்க வேண்டாம் :-(
எ.அ.பாலா
விரிவான அலசல்!!
உ.த அண்ணே வழக்கம் போலவே நச்சுன்னு விரிவா அலசியிருக்கீங்க.
பின் விளைவுகள் தெரிந்தும் கருத்தை தைரியமா சொன்ன அஜீத்தும் , அத்தனை பேருக்கு முன் கைத்தட்டிய ரஜினியும் உண்மையிலேயே ஹீரோக்கள்தான்.
//"கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." //
வாரத்துக்கு ஒன்னு கேட்டு வாங்குனா இப்படிதான் அசிங்கப் படவேண்டியது இருக்கும்.
//நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை ஏன் வரவில்லை என்று கண்டித்தார்களா என்று தெரியவில்லை. கிராமத்து நாயகன் ராமராஜனுக்கு வராததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.எஸ்.சந்திரனுக்கு தந்தி அடித்தாவது அழைத்தார்களா என்பதும் தெரியவில்லை. 'திரையுலக அஷ்டாவதனி' விஜய டி.ராஜேந்தரை அழைக்க வண்டி போனதா என்றும் தெரியவில்லை. அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு என்ன காரணம் சொல்லி லீவ் லெட்டர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.. இது எல்லாவற்றையும்விட, குகநாதன் செயலாளராக இருக்கும் 'தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்க'த்தின் தலைவர் இயக்குநர் விசு ஏன் வரவில்லை என்று அவரது சட்டையைப் பிடித்துக் கேட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் ஏன்.. எதற்கு.. என்று கேட்க முடியவில்லை//
கட்சியில் உள்ள மற்றும் கட்சி ஆதரவு உள்ள நடிகர்களை ஒன்னும் பன்ன முடியாது. போயஸ் தோட்டத்துல இவன்களால போய் மிரட்ட முடியுமா.?
தொழிற்ச்சங்கம் இவங்ககிட்ட மிரட்ட வேண்டிஅதுதானே! ஏண் தைரியம் இல்லயா?
அஜீத் வீரரோ இல்லயோ அவர் முதுகொழும்பு உள்ள மனிதன். மற்றவர்களைப் போல காலை நக்காதவர்.
Test comment..
Follow up comment..
முழு பிண்ணனித் தகவல்களோடு பதிவு போட்டுட்டீங்க...
நன்றி..வீட்டுக்கு ஆட்டோ வரப் போகுது..பாத்து சூதானமா இருங்க..
//Jo Amalan Rayen Fernando said...
அசித்து வீரர் என பின்னூட்டம் போட்டவர்களின் பதிலை எதிர்னோக்குகிறேன்.//
ஏன் வந்தேங்கறதுக்கு அஜித்தே, அந்த மேடையிலேயே பதில் சொல்லிட்டாருங்கன்னா... அவரு பேச்சை படிச்சு/கேட்டுப் பாருங்க!
பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க. உங்க கருத்தை அப்படியே மேய்ஞ்சுக்கறேன்.
(அதுக்காக உங்களை மாடுன்னெல்லாம் சொல்லமாட்டேன்.)
அண்ணே,, ஒரு ஜூவி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் படிச்ச எஃபெக்ட்டு.
சென்ஷியை ரிப்பிட்டுகிறேன்.
அண்ணே,
இதே வி.சி.குகநாதன் தானே ‘மாங்குடி மைனர்’ என்ற படத்தை இயக்கினார் ?
ரஜினி ,விஜயகுமார் நடித்த அந்த படம் .அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி ..ஒரு பாடல் வரும் “அண்ணா நீங்க நெனச்ச படி நடந்திருக்கு ..புரட்சி தலைவர் கையில் நாடிருக்கு..”
Jo Amalan Rayen Fernando said...
அசித்து வீரர் என பின்னூட்டம் போட்டவர்களின் பதிலை எதிர்னோக்குகிறேன்.
பதில் : அன்று MGR ஏன் விழா மேடையில் இருந்து பாதியில் போனாரோ.. அதே காரணம்தான்.. விளைவும் அதை ஒத்தே இருக்கலாம்.. Wait N See..
:)
Anputan
Singai Nathan
Arumaiyana Vivatham..
"விட்டான் ராமன், செத்தான் ராவணன்" பாணில உங்களுக்கு எழுத வராதா?
//ஏன் வந்தேங்கறதுக்கு அஜித்தே, அந்த மேடையிலேயே பதில் சொல்லிட்டாருங்கன்னா... அவரு பேச்சை படிச்சு/கேட்டுப் பாருங்க!//
ஏன் கண்டிப்பாக வலுக்கட்டாய இழுத்த அழைப்பை ஏற்றார்? ஏன் மறுக்க வீரம் வரவைல்லை?
அழைப்பை ஏற்றபின் இப்படி பேசுவது படித்தவன் செய்யும் செயலா?
//அன்று MGR ஏன் விழா மேடையில் இருந்து பாதியில் போனாரோ.. அதே காரணம்தான்.. விளைவும் அதை ஒத்தே இருக்கலாம்.. Wait N see//
நண்பரே...எம்.ஜி.ஆரையும் அசித்து, இரசனி இவர்களோடு ஒப்பிடுவது எம்.ஜி.ஆரை இழிவு படுத்தும் செயலென கோவி.கண்ணன் பதிவில் போட்டிருக்கிறேன். படித்தால் நலம்.
என் கேள்வி: கருனானிதியைப்பிடிக்கவில்லை என்றாய் ஏன் வருகிறாய் மேடைக்கு? மேடையிலே எவரேனும் உன்னை கேவலப்படுத்திப்பேசினார்களா? அவமானப்படுத்தினார்களா? இல்லையே!
dont get tension more, tasmac rates are high now a days!( ithellaam payengara ulkuththu vivagaramne....)
ரெம்ப நாளைக்கு அப்புறம் ‘யூத் தமிழனோட’ சிக்னேச்சர் பதிவு. ஏதோ புலனாய்வு பத்திரிக்கையை படிச்சா மாதிரி கீது. அதே மாதிரி கமெண்டும் களை கட்டுது. யாருப்பா அங்க... இங்க ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோனு ஒருத்தர் ரெம்ப நேரமா பேசிகிட்டு இருக்காரு. ஒரு சோடா ஒடைங்க...
நண்பரே!! நானும் MGR உடன் ஒத்து பேசவில்லை.. MGR செய்த செயலுடன் ஒத்தே கூறியுள்ளேன்... எங்க சொன்னா வலிக்குமோ அங்கதான் சொல்லணும் ... புரியம்னு நினனக்கிறேன்...
யாரங்கே!நீளமான இடுகைன்னா தூக்கம் வருதுன்னு முன்னாடியெல்லாம் அழுதுகிட்டே பின்னூட்டம் போட்ட அண்ணாத்தைகள்:)
இடுகைன்னா இப்படி இருக்கணுமுங்கண்ணா!
அரசியலும்,திரைப்படத்துறையும் ஒன்றோடு ஒன்று பின்னி பெடல் எடுக்கக்கூடாதுன்னு நினைச்சாலும் தமிழக மாறுதல்கள் இப்படியாவது அமையுமா அல்லது வெயில் கால மேகம் மாதிரி கால ஓட்டத்தில் மறையுமா என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வெயில் கால மேகம் என்றால் இரண்டு திராவிட கட்சிகளின் வரட்சியில் இன்னும் வருங்காலம் தமிழகம் வான் நோக்கி காத்திருக்கட்டும்.
ரைட்டுன்ணே..!
கடைய விட்டு வெளியே போனா இ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் புழு வெச்சுகிட்டு தூண்டிலோட மீன் புடிக்க நின்னுகிட்டு இருக்காரு.
(கண்ணூ!முன்னாடி வை.கோ என்ற தூண்டிலுக்கே விழாத விலாங்கு மீன் ரஜனி.)
//கட்சியில் உள்ள மற்றும் கட்சி ஆதரவு உள்ள நடிகர்களை ஒன்னும் பன்ன முடியாது. போயஸ் தோட்டத்துல இவன்களால போய் மிரட்ட முடியுமா.?
தொழிற்ச்சங்கம் இவங்ககிட்ட மிரட்ட வேண்டிஅதுதானே! ஏண் தைரியம் இல்லயா?
அஜீத் வீரரோ இல்லயோ அவர் முதுகொழும்பு உள்ள மனிதன். மற்றவர்களைப் போல காலை நக்காதவர்.
//
முடியும். நடிகர் சங்கம் கட்சிவாரியாக ஒரு சங்கத்திற்குப்பதிலாக, பல சங்கங்களாக இருப்பின்.
இரயில்வே, பாங்கு, போன்ற தொழிறசங்கங்கள், அப்படித்தான் இருக்கின்றன. தமிழநாட்டில் ஒவ்வொரு பெரிய தொழிற்சாலைகளில், அதிமுகவுக்கு ஒன்று, திமுகவுக்கு ஒன்று, காங்கிரசுக்கு ஒன்று, கம்யூணிஸ்டுக்கு ஒன்று. ஜெயலலிதாவுக்கெல்லாம் அங்கு பயப்படமாட்டார்கள்.
திரைப்படச்சங்கம் அப்படியிரூந்தால், ஜெயலலிதாவுக்கு எதிராக செயலும் கருனானிதிக்கு எதிராகவுன் நடக்கும்.
அப்படி ஏன் இல்லையென்பதற்கு பல காரணங்கள. அது உங்களுக்கு போயஸ் காரடனை நெருங்க முடியுமா என்பதை கேட்க வைக்கிறது.
தொழிலாளருக்கு எதிராக கைவைத்தால் யாரும் தப்ப முடியாது.
தலைமைச்செயலகம் விஷயம் தெரியுமுல்ல..?
//முதுகொழும்பு உள்ள மனிதன்.//
முதுகெலும்புள்ளவந்தான் மிரட்டி வலுக்கட்டாயமகக்கூப்பிட வந்தான் இல்லையா?
கோழை என்று தாராளமாகச்சொல்லலாம்.
யாரும் எதிர்பார்க்காத வேளையில், தந்திரமாக முதுகில் குத்துவான் கோழை.
கூட்டத்திற்கு வந்து நாலு சொற்கள் மரியாதைக்குப்பேசுவான் என்று எதிர்பார்க்கும்போது, மைக்கைப்பிடித்து பேசிவிட்டான். கோழைத்தனம்.
இதை எப்படி தைரியம் என்கிறார்கள் என்று புரியவில்லை. பின்னர் கருனானிதி வீட்டில் சென்று சந்திப்பு.
கருனானிதியை எதிர்க்கவேண்டுமென்றால், ஒரு அரசியல் கட்சி நடத்து. மக்களை ஒருங்கினை. மக்களிடம் பேரெடுத்து ஆட்சிக்கு வந்து கருனானிதியை காலி ப்ண்ணு. அதுதான் வீரம்.
திரும்பவும் சொல்லுறன் தல தலைதான் இது தாளாது
ஐயா பெர்னாண்டோ அவர்களே!
அஜீத் எப்போ கருனாநிதிய எதிர்ப்பதாகக் கூறினார். சங்க நிர்வாகிகளைப் பற்றி தான் கூறினார். அவர் கூறியது சிலரால் திரிக்கப்பட்டு கருனாநிதியை எதிர்க்கிறார் என கோத்து விடப்பட்டது இப்போது நீங்கள் எழுதியிருப்பதைப் போல். இது போல திசை திருப்புவதற்க்கென்றே சிலர் அலைகிறார்கள். அதை தொடர்ந்தே
கருனாநிதியை சந்திதார்.
தமிழன் என்று கூறிக் கொள்வோர் மூடிக் கொண்டு தானே இருந்தான். இந்த ரவுடிகளை கேள்வி கேட்க முடியாமல்.
இந்த சங்க நிர்வாகிகளுகு மானம் ரோஷம் இல்ல்லையென்றால், அதே போல சங்க உறுப்பினர்களிடம் எதிர்ப்பார்த்தால் முடியுமா சார்.
அஜித் பேச்சு நெட்டில் ஓடும் கிளிப்புக்கு லிங்க் கொடுத்தால் தன்யனாவேன் ஐயா.
cinemakaranukku oru izavu endraal eththanai pathivu atharkku eththanai pinnoottam.aduththa manila karanellam thamizan cinema paiththiyangal endru kindal seivathu sariyaakathaan irukkirathu.
Superb article
நான் எழுதிய ஒரு முக்கியமான பின்னூட்டம் பதிவாகவில்லை.
நண்பர் ஷாகுல்
எங்களூரில் ஒருபழமொழி சொல்வார்கள்;
‘சாடை தெரியாதவன் சர்வ முட்டாள்’
கருனானிதியை எதிர்ப்பதற்கு செயலலிதா மாதிரி அறிக்கை விடத்தேவையில்லை; அல்லது தீப்பொறி ஆறுமுகம் மாதிரி பொதுமேடையிலேறி, அங்கலடசணம் செய்யத்தேவையில்லை.
‘என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விட்டார்கள்’
என்று சொன்னால்,
‘இவனுக்கெல்லாம் ஒரு பாராட்டு விழா. இதுக்கெல்லாம் வரணும்’ என்றுதான் பொருள்.
இதே பாராட்டுவிழா அவர் விருப்பப்படும் ஒருவருக்கு நடந்திருந்தால், பிரச்னையேயில்லை.
நான் போட்ட ஒரு பின்னூட்டம் இங்கு வரவில்லையென்றேன். அது வருமாறு:
இப்பதிவுகள் இருவகை
- ஒன்று அசித்து சொன்னது தவறு;
-மற்றொன்று சரி
இவற்றுக்கு அடிப்படை கருனானிதியே ஒழிய, அசித்து அல்ல. அசித்து ஒரு கருவி அவ்வளவுதான்.
இருவகைப்பதிவாளர்களுக்கும் மனச்சாய்வுகளே காரணிகள்.
அஜீத்தின் தைரியத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
நல்லாச் சொல்லியிருக்கீங்க தல, திருமாவுக்கு எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை.
அரசியல் சாக்கடைக்குள் போகாதவனை எல்லாம் "கருணா"நிதிக்கு அன்னக்காவடி எடுக்க வற்புத்துவதற்கும் பாலியல் வல்லுறவுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா என்ன
உண்மைத்தமிழன் அட்டகாசமான பதிவு! கலக்கல்
//இப்படியொரு விளம்பர வெறி பிடித்த மனிதரை வேறு எந்த லோகத்திலும்கூட நாம் பார்க்க முடியாது.
//
நமக்கும் இருக்கப்போய்த்தானே பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கின்றோம். நம்ம ரேஞ்சுக்கு நம்ப. அவர் ரேஞ்சுக்கு அவர் :)
"விழாக்களுக்கு கட்டாயம் வரவேண்டும் என நாங்கள் மிரட்டவில்லை" என அறிக்கை விட்டு மன்னிப்பும் கேட்கவேண்டுமென பெப்ஸி மிரட்டுகிறது..
என்ன ஒரு எதிர்மறைக் கூற்று...
நாசமாப் போனவங்கள்... அரசியல்ல சினிமாவைக் கலக்கி குழம்பி நிக்குதுகள்.. பனாதைப் பயல்கள்..
அருமையான பதிவுங்க. ரொம்ப நன்றி!
ungala itha pathi ezhutha sollanum nu nenachen anna.. neengale pakkava ezhuthiteenga.... :) :)
aana nadigarnga ellam romba paavam... yaruko ethuko nadukura vizhukkellam poi sambandham illama paaratta vendi irukku.... :( :(
நல்ல பிரிச்சு போட்டு இருக்கிறீங்க
( எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ,
அஜித்து தமிழர அல்லது எந்த ஸ்டேட் காரர்-
சும்மா ஜெனரல் நாலேட்ஜ வளத்துக்கத்தான்)
//தமிழ்.. தமிழ்.. என்று திரையுலகில் இன்றைக்குச் சொல்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் ஐந்து மொழியிலும் தங்களது படங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஓட வைத்துக் கொண்டிருந்தவர்கள்தான்
//
intha point super...
’விளம்பர வெறி’ என்பது பொருத்தமில்லாச் சொல்.
கருனானிதிக்கு விளம்பரம் தேவையில்லை. தமிழக மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அவரை அறிவர். அப்படியிருக்க புதிதாக அவர் விளம்பரத்தை தேட அவசியமா?
புகழ்ச்சி வெறியர் என்ற சொல் பொருந்தும். எனினும், வெறியர் என்ற சொல்லெல்லாம் அவர் எதிராளிகளுக்கே உதவும்.
புகழ்ச்சிக்கு மயங்காதவர் யார்? எல்லாரும் மயங்குவார்கள். உ.த ஏன் இப்படிப்பட்ட பதிவுப்பொருளகளத் தேடிப்போகிறார். ஒவ்வொரு எழுத்திலும் தெரிப்பது narcissism. தன்னை ‘அண்ணே அசத்திட்டீங்க’ எனப்புகழ்ச்சிச் சொற்களுக்குத்தானே? ஒரு சாதாரண உ.தவே இப்படியிருந்தால் க.வும். செயும் ஏன் இருக்கக்கூடாது?
கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்றவர்களெல்லாம் ஒரே மாதிரிதான்.
முதலமைச்சராக இருப்பதால், அந்தப்பாணியில் அவர் புகழ் தேடுகிறார்.
என்னைக்கேட்டால் இப்படித்தான் சொல்வேன்:
ஒரு பொதுவாழ்க்கையில் இருப்பவன் புகழைத்தேடுவதில் ஒன்றும் தவறுமல்ல; வியப்புமல்ல. அதேவேளையில், ஒரு முதலமைச்சர் தனக்கு நடக்கும் பாராட்டுவிழாவை low key ஆகப் பண்ணி, மிஞ்சும் பணத்தை நாட்டின் ஆக்கப்பணிக்கு செலவிடலாம்.
@Sure
அஜீத்தின் தந்தை பாலக்காடு, தாயர் கொல்கத்தா. பிறந்தது ஹைதராபாத் வளர்ந்தது, வாழ்வது சென்னை.
அஜித்தின் கருத்தினை ஆதரிக்கிறேன்,
தங்கள் இடுகை நல்ல விரிவான அலசலாக இருந்தது
வாழ்த்துகள் உனா.தானா அவர்களே:))
பிச்சு உதறிட்டீங்க அண்ணா...
வரலாறு காணாத விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வின் விளிம்பில் தத்தளிக்கும் தள்ளாட்டத்தைத் தடுக்க முயற்சி எடுக்க முயலாத இந்த அரசியல் வியாதிகள் மானாடுவதையும் மயில் ஆடுவதையும் பார்த்துக் கொண்டு சினிமாக்காரர்கள் மட்டுமே தமிழக மக்கள் என்பது போல அவர்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதும், அவர்களுக்கு வீடு கட்ட இடம் வழங்குவதும், அவர்கள் இவர்களுக்கு பாராட்டு விழா எடுப்பதும், இந்தக் கேவலங்கள் மட்டுமே இவரது வேலை என்றால் இந்த நாடு நாசமாகப் போவதைத்தவிர வேறு போக்கில்லை.
jigopi
//வந்தபின் மேடையேறி, என்னைக்கட்ட்டாயப்படுத்தி இங்கு கொண்டுவந்தார்கள் என்பது மேடை நாகரீகமா?//
மேடை போட்டவர்கள் நாகரீகம் உலகறியும்
.//யாருக்கு விழா நடாத்துகிறர்களே, அவரை முன் வைத்து கேவலப்படுத்தவேண்டுமென்பது உன் நோக்கமா?//
யாருக்கு விழாவோ அவரே தான் நடத்தியும் கொள்கிறார்
//அப்படியென்றால் ஏன் வந்தாய்? இவ்வளவு வீரமாக மேடையில் பேசும்னீ, ஏன் முதலிலே
‘என்னை எந்தக்கொம்பனாலும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்ல உனக்கு ஏன் வீரம் வரவில்லை?//
இத்தனை பேசும் நீங்கள் முதல்வரை எதிர்க்க வேண்டாம் ! குஞ்சு குளுவான் நடிகர்களின் முதல் நாள் காட்சிக்கு போய் இந்தத் .......... கு இத்தன ஆர்ப்பாட்டமான்னு சத்தம் போட்டு சொல்லிப் பாருங்க . உங்க வீரம் வெள்ளாவிலவெளுத்துரும்
//வந்தபின் ஒட்டுமொத்தமாக - சங்கத்தையும், பாரட்டுபெறவேண்டியவரையும் ஏன் கேவலப்படுத்தினாய்?//
பெரிய சங்கம் ...... பொடலங்கா சங்கம்
//இவைகளே சரியான் கேள்விகள்.//
அத அடுத்தவன் சொல்லணும்
//கருனானிதிக்கு விளம்பரம் தேவையில்லை. தமிழக மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அவரை அறிவர். அப்படியிருக்க புதிதாக அவர் விளம்பரத்தை தேட அவசியமா?//
ஹா ஹா ஹா ! அவுரு யாரு ! எனக்கு எதுல சிரிக்கரதுன்னு தெரியல
//ஒரு பொதுவாழ்க்கையில் இருப்பவன் புகழைத்தேடுவதில் ஒன்றும் தவறுமல்ல; வியப்புமல்ல. அதேவேளையில், ஒரு முதலமைச்சர் தனக்கு நடக்கும் பாராட்டுவிழாவை low key ஆகப் பண்ணி, மிஞ்சும் பணத்தை நாட்டின் ஆக்கப்பணிக்கு செலவிடலாம்.//
யோவ் மொதல்ல எங்க வரிப் பணத்த எங்களுக்கு செலவு பண்ணச் சொல்லுமைய்யா ! அப்பறம் நீங்க ஒதவி பண்ண வரலாம்
//நான் எழுதிய ஒரு முக்கியமான பின்னூட்டம் பதிவாகவில்லை.//
ஹா ஹா ஹா !
நன்றி திரு. ஷாகுல்
எங்கப்பா ஜோ அமலன் ரே பெர்னாண்டோ ?!
ஆஹா!
இத பார்க்காம போயிட்டேனே!
நான் ஊட்டுக்கு போறேன் ! எதுனா வேணும்னா கூப்பிடுங்க தல ! காலைல வரைக்கும் இந்த கடை உங்க பொறுப்பு
ஸ்டார்ஜன்.. பிரச்சினை அங்க முடிஞ்சாலும் நம்ம கருத்து சொல்றது இன்னும் முடியலையே.. அதுதான்.. முதல் வருகைக்கு நன்றி..!
யாசவி.. புதுசா நீங்க..? முதல் வருகைக்கு நன்றி..!
எறும்பு தம்பி.. புதுசா அப்பா ஆயிருக்கீங்களே வீட்ல வேலையெல்லாம் இல்லியா..? எனக்காக காத்திருந்ததுக்கு நன்றி..!
முத்துக்குட்டி நன்றி..
கார்த்தி இப்போது நடப்பதற்கும் முதல்வரே பொறுப்பு என்பதை அஜீத் உணர்ந்து கொள்வார்ன்னு நினைக்கிறேன்..!
குழலியண்ணே.. இத்தனை வருஷத்துல இப்பத்தான் முதல் முறையா நீங்களும் நானும் ஒரு விஷயத்துல ஒத்துப் போறோமா..? முருகா இதுவென்ன சோதனை..?
தண்டோரா அண்ணே.. இந்த உள்குத்தையெல்லாம் எப்படி ரெண்டு பேரும் சகிச்சுக்கிட்டிருக்காங்கன்னு தெரியலை..!
[[[இரும்புக்குதிரை said...
//"கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." //
இந்த கொமெடி பிஎசுக்கு இப்பதான் புரியுதா? மக்கல் யாரும் அதுக்காக ஓட்டு பொடலை. அது கொடுகுர இலவசதுக்காகதான் போடுராஙக. மனசில இருந்தால்தான் மதிப்பு வரும் இல்லாடி இந்த மாதிரிதான் வரும். இதோட அசிஙகமாக வார்தை வருது. வென்டாம்.]]]
வேண்டாம் இரும்புக்குதிரை.. இதுக்கு மேல வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். விட்ருங்க..! காலம் பதில் சொல்லும்..!
[[[சென்ஷி said...
அருமையான கட்டுரைண்ணே... மிகச் சில வார்த்தைகளை பதப்படுத்தியிருந்தால் வெகுஜன ஊடகத்தில் வெளிவர வேண்டிய முத்துக்களாகியிருக்கும். உங்க அருமை உலகத்துக்கு எப்ப புரியப் போகுதோ?]]]
அறிவுரைக்கு மிக்க நன்றி தம்பி.. அடுத்து வரும் பதிவுகளில் என் எழுத்தினை சீர்ப்படுத்த முயற்சி செய்கிறேன்..!
டிவிஆர் ஸார்..
அந்த தைரியத்துல மூக்குடைப்பட்டுதான் "இப்ப எங்க பவர் என்னன்னு நீ பார்த்துக்க"ன்னு சொல்லியடிக்கிறாங்க..!
எ.அ.பாலா அவர்களே..
நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்திருக்கிறீர்கள். நன்றி.. நன்றி..!
சூப்பர் ஸ்டாரின் இயல்பான குணத்தால்தான் அமைதியாக இருக்கிறார். இந்த அளவுக்கு அமைதியாக இருப்பவருக்குத்தான் அப்படியொரு மாஸ் சக்தியை முருகன் கொடுத்திருக்கான். எப்படி..? ஒண்ணுமே புரியலை போங்க..!
சைவகொத்துப்புரோட்டாவுக்கு நன்றி..
அக்பர் நன்றி..!
[[[ஷாகுல் said...
//"கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே.." //
வாரத்துக்கு ஒன்னு கேட்டு வாங்குனா இப்படிதான் அசிங்கப்படவேண்டியது இருக்கும்.]]]
ஹா.. ஹா.. செமத்தியாக சிரித்தேன் ஷாகுல்..!
//நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை ஏன் வரவில்லை என்று கண்டித்தார்களா என்று தெரியவில்லை. கிராமத்து நாயகன் ராமராஜனுக்கு வராததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.எஸ்.சந்திரனுக்கு தந்தி அடித்தாவது அழைத்தார்களா என்பதும் தெரியவில்லை. 'திரையுலக அஷ்டாவதனி' விஜய டி.ராஜேந்தரை அழைக்க வண்டி போனதா என்றும் தெரியவில்லை. அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு என்ன காரணம் சொல்லி லீவ் லெட்டர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.. இது எல்லாவற்றையும்விட, குகநாதன் செயலாளராக இருக்கும் 'தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்க'த்தின் தலைவர் இயக்குநர் விசு ஏன் வரவில்லை என்று அவரது சட்டையைப் பிடித்துக் கேட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் ஏன்.. எதற்கு.. என்று கேட்க முடியவில்லை//
கட்சியில் உள்ள மற்றும் கட்சி ஆதரவு உள்ள நடிகர்களை ஒன்னும் பன்ன முடியாது. போயஸ் தோட்டத்துல இவன்களால போய் மிரட்ட முடியுமா.? தொழிற்ச்சங்கம் இவங்ககிட்ட மிரட்ட வேண்டிஅதுதானே! ஏண் தைரியம் இல்லயா?]]]
செய்ய முடியுமா..? அப்புறம் அடுத்த தபா அவங்க ஆட்சிக்கு வந்தப்புறம் இவுங்க அவுக பக்கத்துல நெருங்க முடியாதே.. அதுதான் காரணம்..!
[[[அறிவன்#11802717200764379909 said...
முழு பிண்ணனித் தகவல்களோடு பதிவு போட்டுட்டீங்க... நன்றி.. வீட்டுக்கு ஆட்டோ வரப் போகுது.. பாத்து சூதானமா இருங்க..]]]
இதெல்லாம் பார்த்தா தமிழ்நாட்டுல பொழைக்க முடியுங்களாண்ணே..!!!
[[[பிள்ளையாண்டான் said...
//Jo Amalan Rayen Fernando said...
அசித்து வீரர் என பின்னூட்டம் போட்டவர்களின் பதிலை எதிர்னோக்குகிறேன்.//
ஏன் வந்தேங்கறதுக்கு அஜித்தே, அந்த மேடையிலேயே பதில் சொல்லிட்டாருங்கன்னா... அவரு பேச்சை படிச்சு/கேட்டுப் பாருங்க!]]]
கரெக்ட்டுதான் பிள்ளையாண்டான்..
ஜோ அமலன் ரேயன் பெர்ணான்டோவுக்கு நான் தனியாகப் பதில் சொல்லிக் கொள்கிறேன்..
[[[செந்தழல் ரவி said...
பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க. உங்க கருத்தை அப்படியே மேய்ஞ்சுக்கறேன்.
(அதுக்காக உங்களை மாடுன்னெல்லாம் சொல்லமாட்டேன்.)]]]
அடப்பாவி.. சுத்தி வளைச்சு மாடுன்னு திட்டிப்புட்டு சொல்லமாட்டேன்னு வேற சொல்ற..?
நாடுவிட்டு நாடு போனாலும் ஊர்க்குசும்பு உங்களை விட்டுப் போகாதுடோய்..!
[[[♠ ராஜு ♠ said...
அண்ணே,, ஒரு ஜூவி, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் படிச்ச எஃபெக்ட்டு.
சென்ஷியை ரிப்பிட்டுகிறேன்.]]]
நன்றி ராஜு..!
[[[ஜோ/Joe said...
அண்ணே, இதே வி.சி.குகநாதன்தானே ‘மாங்குடி மைனர்’ என்ற படத்தை இயக்கினார் ?
ரஜினி, விஜயகுமார் நடித்த அந்த படம். அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி. ஒரு பாடல் வரும் “அண்ணா நீங்க நெனச்சபடி நடந்திருக்கு.. புரட்சி தலைவர் கையில் நாடிருக்கு..”
ஜோ.. வெரி ஸாரி.. நான் சொல்லணும்னு நினைச்சிருந்தேன். கடைசி நேர அவசரத்துல படத்தோட பேர் சட்டுன்னு மறந்து போயிருச்சு..
எம்.ஜி.ஆர். உசிரோட இருக்கிறவரைக்கும் அவருடைய தொண்டரடிப் பொடியாழ்வார்களில் ஒருவர்தான் குகநாதன்.
இப்போது காலத்திற்கேற்றாற்போல் நாமும் மாறிக் கொள்வோமே என்று மாறிவிட்டார் போலிருக்கிறது..!
[[[Priyan said...
Jo Amalan Rayen Fernando said...
அசித்து வீரர் என பின்னூட்டம் போட்டவர்களின் பதிலை எதிர்னோக்குகிறேன்.
பதில் : அன்று MGR ஏன் விழா மேடையில் இருந்து பாதியில் போனாரோ.. அதே காரணம்தான்.. விளைவும் அதை ஒத்தே இருக்கலாம்.. Wait N See..]]]
பிரியன்..
இவர்களுக்கு ஆட்சி அதிகாரம் உச்சத்தில் இருப்பதால் நடக்காமல் பறக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் இப்படியொரு நினைப்பு..!!!
கலைஞர் நிச்சயமாக கலையுலகில் எம்.ஜி.ஆருடன் சமமானவராக ஒருபோதும் இருக்க முடியாது..
ஐ.. சிங்கைநாதன்..
உடம்பு எப்படி இருக்கு..? உடம்பை நல்லா பார்த்துக்குங்க.. முருகன் இருக்கான்.. பார்த்துவான்..
நீங்களும் முயற்சியையும், தன்னம்பி்க்கையையும் விட்டுராதீங்க..!
நன்றி சென் 22
மாநக்கல் சிபி.. ரெண்டு வரில முடிக்கிறதுக்கு இதென்ன கவிதைப் போட்டியா..? மகாபாரதம்யா.. மகாபாரதம்..!
Kannadaasan famous poet once the room mate of this MK has mentioned about this old man's attitude as;
"I should be the bridgroom in a marriage funcion; I should be the dead body in a funeral functions'; so this attitude is nothing new. Only we have to remember.
but this Tamil kosham is really afun
In TN majority school going kids study in English medium; no difference between the various letters like la;zha Tamil tamil.
MRRadha was a telugu man his son Radha ravi is akmark tamilman ha ha all who raises the flag and bfragging about tamil tamilan are declaring,'Mera naam Joker" in this incident
கலக்கல் பதிவு! நன்றி..
வெள்ளிநிலா ஷர்புதின் டாஸ்மாக் விலையேற்றத்திலேயும் உள்குத்து விவகாரம் இருக்கும்..! யார் கண்டது..?
[[[பிரசன்னா இராசன் said...
ரெம்ப நாளைக்கு அப்புறம் ‘யூத் தமிழனோட’ சிக்னேச்சர் பதிவு. ஏதோ புலனாய்வு பத்திரிக்கையை படிச்சா மாதிரி கீது. அதே மாதிரி கமெண்டும் களை கட்டுது. யாருப்பா அங்க... இங்க ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோனு ஒருத்தர் ரெம்ப நேரமா பேசிகிட்டு இருக்காரு. ஒரு சோடா ஒடைங்க...]]]
அவருக்கோ சோடால்லாம் பத்தாதுன்னு நினைக்கிறேன். பன்னீராலத்தான் குளிப்பாட்டணும்..!!!
[[[Priyan said...
நண்பரே!! நானும் MGR உடன் ஒத்து பேசவில்லை.. MGR செய்த செயலுடன் ஒத்தே கூறியுள்ளேன்... எங்க சொன்னா வலிக்குமோ அங்கதான் சொல்லணும் ... புரியம்னு நினனக்கிறேன்...]]]
அவருக்குப் புரியுதோ இல்லையோ எனக்குப் புரியுது பிரியன்..
சொல்ல வேண்டிய இடத்துலதான் சொல்லியிருக்காரு அஜீத்.. இனி அடுத்து பாராட்டுன்னு சொல்லி யாராச்சும் கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறீங்க..?
நடுநிலையான கருத்துக்கள்
நன்றி
[[[ராஜ நடராஜன் said...
யாரங்கே! நீளமான இடுகைன்னா தூக்கம் வருதுன்னு முன்னாடியெல்லாம் அழுதுகிட்டே பின்னூட்டம் போட்ட அண்ணாத்தைகள்:)
இடுகைன்னா இப்படி இருக்கணுமுங்கண்ணா!
அரசியலும், திரைப்படத்துறையும் ஒன்றோடு ஒன்று பின்னி பெடல் எடுக்கக்கூடாதுன்னு நினைச்சாலும் தமிழக மாறுதல்கள் இப்படியாவது அமையுமா அல்லது வெயில் கால மேகம் மாதிரி கால ஓட்டத்தில் மறையுமா என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வெயில் கால மேகம் என்றால் இரண்டு திராவிட கட்சிகளின் வரட்சியில் இன்னும் வருங்காலம் தமிழகம் வான் நோக்கி காத்திருக்கட்டும்.]]]
இவருடைய ஆட்சியின்போது மாநிலம் வளர்ச்சியடையவில்லை என்று யாருமே சொல்ல முடியாது. ஆனால் இது போன்ற வெட்கக்கேடான தனி மனித துதிபாடுதல் அதிகமாகி ராஜா காலத்திற்கு தமிழகத்தை கொண்டு போவதுதான் எரிச்சலைத் தருகிறது..!
நன்றி ஷங்கர்..
ராஜநடராஜன்.. இளங்கோவனின் ஆதரவு திருமாவளவனுக்கு எதிர்ப்பாகத்தான்.. ரஜினிக்காக அல்ல.. உண்மை இதுதான்..!
சங்கர்.. உங்க தல தலதான்.. நானும் ஒத்துக்கிறேன்..!
[[[ஷாகுல் said...
ஐயா பெர்னாண்டோ அவர்களே!
அஜீத் எப்போ கருனாநிதிய எதிர்ப்பதாகக் கூறினார். சங்க நிர்வாகிகளைப் பற்றிதான் கூறினார். அவர் கூறியது சிலரால் திரிக்கப்பட்டு கருனாநிதியை எதிர்க்கிறார் என கோத்து விடப்பட்டது இப்போது நீங்கள் எழுதியிருப்பதைப் போல். இது போல திசை திருப்புவதற்க்கென்றே சிலர் அலைகிறார்கள். அதை தொடர்ந்தே
கருனாநிதியை சந்திதார்.
தமிழன் என்று கூறிக் கொள்வோர் மூடிக் கொண்டுதானே இருந்தான். இந்த ரவுடிகளை கேள்வி கேட்க முடியாமல். இந்த சங்க நிர்வாகிகளுகு மானம் ரோஷம் இல்ல்லையென்றால், அதே போல சங்க உறுப்பினர்களிடம் எதிர்ப்பார்த்தால் முடியுமா சார்.]]]
ஷாகுல்.. உங்களுடைய காட்டம் கண்டு எனக்கும் அதிர்ச்சிதான்..
கலைஞரை வாழ்த்துவதற்கு அஜீத்திற்கு மனமில்லை என்று சொல்வதைப் போல் கதையைத் திரித்ததால்தான் அஜீத் கலைஞரை சந்தித்தார்.. அதன் பின்பும் தனி மனிதத் தாக்குதல்கள் தொடர்வதன் பின்னணியைப் பார்த்தால்தான் தாத்தா மேல் சந்தேகம் வருகிறது..!
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறாரோ என்று..!!!
வஜ்ரா.. ஸாரி வெரி ஸாரி.. லின்க்கை சேவ் செய்து வைக்க மறந்துவிட்டேன். தேடித் தருகிறேன்..
பராரி.. நீங்க சொன்னா சரிதான்.. நாங்க சினிமா பைத்தியங்கள்தான்..
செந்தில்வேலன்.. வருகைக்கு நன்றி..
பட்டர்பிளை சூர்யாண்ணே.. நன்றிங்கண்ணே..!
கானா தம்பி.. திருமா எப்படியாச்சும் பிரபலம் ஆகணும்னு துடிக்கிறாரு போல.. அதான் தலையைக் கொடுக்குறாரு..
நன்றி கிரியாரே..!
[[[எம்.எம்.அப்துல்லா said...
//இப்படியொரு விளம்பர வெறி பிடித்த மனிதரை வேறு எந்த லோகத்திலும்கூட நாம் பார்க்க முடியாது.//
நமக்கும் இருக்கப் போய்த்தானே பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கின்றோம். நம்ம ரேஞ்சுக்கு நம்ப. அவர் ரேஞ்சுக்கு அவர் :)]]]
அப்துல்லாஜி வன்மையாகக் கண்டிக்கிறேன்..!
பத்திரிகைகளில் எழுதுவதைப் போல நமது எழுத்துக்களை பதிவு செய்வதுதான் இங்கே நடக்கிறது.. புகழுக்காக இல்லை.. அப்படிப் பார்த்தால் பத்திரிகைகளின் முக்கிய நோக்கம் புகழுக்காக மட்டும் என்று சொல்கிறாயா..?
என்னாச்சு உனக்கு.. நல்லாத்தான இருந்த..?
[[[மதுவதனன் மௌ. / cowboymathu said...
"விழாக்களுக்கு கட்டாயம் வரவேண்டும் என நாங்கள் மிரட்டவில்லை" என அறிக்கை விட்டு மன்னிப்பும் கேட்கவேண்டுமென பெப்ஸி மிரட்டுகிறது..
என்ன ஒரு எதிர்மறைக் கூற்று...
நாசமாப் போனவங்கள்... அரசியல்ல சினிமாவைக் கலக்கி குழம்பி நிக்குதுகள்.. பனாதைப் பயல்கள்..]]]
மதுவதனன்.. இதுதான் தமிழ்நாட்டு அரசியல்..
இதையெல்லாம் சமாளிச்சாத்தான் இங்க பொழைப்பை ஓட்ட முடியும்..!
நன்றி பாசகி அவர்களே..
கனகு.. இன்றைக்குத்தான் நேரம் கிடைத்தது. அதனால்தான் எழுத முடிந்தது.. உங்களுடைய ஆர்வத்திற்கு நன்றிகள்..!
ஷ்யர்.. அஜீத்து தமிழ்நாட்டில் வாழும் ஒரு தமிழர்தான்..!
100 கமெண்டா..??
அதிபிரதாபன்..
இப்போதும் தமிழ், தமிழ்ன்னு சொல்றவங்க தங்களோட படங்களை எடுக்கும்போதே தெலுங்குக்கும் ஏத்த மாதிரி ஆர்ட்டிஸ்ட்டுகளை போட்டுத்தான் எடுக்குறாங்க.. கேட்டா காசு வரும்லன்றாங்க..
இதெல்லாம் ச்சும்மா மேடைக்காகத்தான்..!
ஷாகுல்.. அஜீத் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி..
நிகழ்காலத்தில் ஸார்.. வருகைக்கு மிக்க நன்றி..!
மிஸஸ் மேனகாசத்யா நன்றி..!
[[[gopi g said...
வரலாறு காணாத விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வின் விளிம்பில் தத்தளிக்கும் தள்ளாட்டத்தைத் தடுக்க முயற்சி எடுக்க முயலாத இந்த அரசியல் வியாதிகள் மானாடுவதையும் மயில் ஆடுவதையும் பார்த்துக் கொண்டு சினிமாக்காரர்கள் மட்டுமே தமிழக மக்கள் என்பது போல அவர்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதும், அவர்களுக்கு வீடு கட்ட இடம் வழங்குவதும், அவர்கள் இவர்களுக்கு பாராட்டு விழா எடுப்பதும், இந்தக் கேவலங்கள் மட்டுமே இவரது வேலை என்றால் இந்த நாடு நாசமாகப் போவதைத் தவிர வேறு போக்கில்லை.]]]
சந்தடிச்சாக்கில் சினிமா தொழிலாளர்களை வைந்துவிடாதீர்கள் கோபி.. அவர்களும் ஆட்டோ ரிக்ஷாக்காரர்கள் மாதிரியும், சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் மாதிரியும் ஒரு தொழிலாளர்கள்.
சங்கங்களின் தலைமைகள்தான் ஆடுகின்றன..!
[[[ராஜன் said...
//வந்தபின் மேடையேறி, என்னைக்கட்ட்டாயப்படுத்தி இங்கு கொண்டுவந்தார்கள் என்பது மேடை நாகரீகமா?//
மேடை போட்டவர்கள் நாகரீகம் உலகறியும்.
//யாருக்கு விழா நடாத்துகிறர்களே, அவரை முன் வைத்து கேவலப்படுத்தவேண்டுமென்பது உன் நோக்கமா?//
யாருக்கு விழாவோ அவரேதான் நடத்தியும் கொள்கிறார்.
//அப்படியென்றால் ஏன் வந்தாய்? இவ்வளவு வீரமாக மேடையில் பேசும்னீ, ஏன் முதலிலே ‘என்னை எந்தக் கொம்பனாலும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்ல உனக்கு ஏன் வீரம் வரவில்லை?//
இத்தனை பேசும் நீங்கள் முதல்வரை எதிர்க்க வேண்டாம் ! குஞ்சு குளுவான் நடிகர்களின் முதல் நாள் காட்சிக்கு போய் இந்தத் .......... கு இத்தன ஆர்ப்பாட்டமான்னு சத்தம் போட்டு சொல்லிப் பாருங்க . உங்க வீரம் வெள்ளாவில வெளுத்துரும்.
//வந்த பின் ஒட்டுமொத்தமாக - சங்கத்தையும், பாரட்டு பெற வேண்டியவரையும் ஏன் கேவலப்படுத்தினாய்?//
பெரிய சங்கம் ...... பொடலங்கா சங்கம்.
//இவைகளே சரியான் கேள்விகள்.//
அத அடுத்தவன் சொல்லணும]]]
ராஜன் மிகச் சரியான பதில்கள்..! நன்றி..!
[[[ராஜன் said...
//கருனானிதிக்கு விளம்பரம் தேவையில்லை. தமிழக மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அவரை அறிவர். அப்படியிருக்க புதிதாக அவர் விளம்பரத்தை தேட அவசியமா?//
ஹா ஹா ஹா ! அவுரு யாரு ! எனக்கு எதுல சிரிக்கரதுன்னு தெரியல.]]]
எனக்கும்தான் ராஜன்..!
[[[ராஜன் said...
//ஒரு பொதுவாழ்க்கையில் இருப்பவன் புகழைத்தேடுவதில் ஒன்றும் தவறுமல்ல; வியப்புமல்ல. அதேவேளையில், ஒரு முதலமைச்சர் தனக்கு நடக்கும் பாராட்டுவிழாவை low key ஆகப் பண்ணி, மிஞ்சும் பணத்தை நாட்டின் ஆக்கப்பணிக்கு செலவிடலாம்.//
யோவ் மொதல்ல எங்க வரிப் பணத்த எங்களுக்கு செலவு பண்ணச் சொல்லுமைய்யா ! அப்பறம் நீங்க ஒதவி பண்ண வரலாம்.]]]
அதெப்படி நம்ம வரிப்பணத்துல மஞ்சள் குளிக்கணும்னுதான் ஆட்சிக்கு வந்திருக்காங்க.. எப்படி நல்லது செய்வாங்க..?
ராஜன்.. அமலன் ஸாரும் வீட்டுக்குப் போயிட்டாருன்னு நினைக்கிறேன்.. நாளைக்கு வாங்க பேசுவோம்..!
வாலு.. அதான் பார்த்தாச்சுல்ல.. படிச்சாச்சுல்ல.. எங்க உங்கட கருத்து..?
ராஜன் உங்களுடைய ஒரு பின்னூட்டம் தவிர்க்க இயலாத காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளது..!
ஹாலிவுட் பாலா..
உங்க பின்னூட்டத்தை நிக்கிட்டேன். அப்படியொரு கிண்டல் வேண்டாமே..?
[[[Prabha said...
Kannadaasan famous poet once the roommate of this MK has mentioned about this old man's attitude as;
"I should be the bridgroom in a marriage funcion; I should be the dead body in a funeral functions'; so this attitude is nothing new. Only we have to remember.]]]
சரியாச் சொன்னீங்க பிரபா.. இது உண்மைதான். அவருடைய பல ஆண்டு கால நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கின்றன..!
[[[but this Tamil kosham is really a fun. In TN majority school going kids study in English medium; no difference between the various letters like la;zha Tamil tamil.]]]
இதுவும் உண்மைதான்.. அதெல்லாம் ச்சும்மா வெளி கோஷம்தான்.. இந்தியா போன்ற மாநிலங்களில் ஒரு மொழியை மட்டுமே பள்ளிகளில் வளர்ப்பதென்பது இளைய சமுதாயத்தினரை இருட்டுக்குள் தள்ளுவது போலாகும்..
[[[M.R.Radha was a telugu man his son Radharavi is akmark tamilman ha ha all who raises the flag and bfragging about tamil tamilan are declaring,'Mera naam Joker" in this incident.]]]
இதெல்லாம் அனைவருக்கும் நன்கு தெரியும்.. அப்படியிருந்தாலும் தமிழ்.. தமிழ்ன்றாங்களே.. என்னன்னு சொல்றது இந்தக் கூத்தை..?
நல்லதந்தியாரே.. வருக.. வருக.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. நன்றி..!
சபரிநாதன் மிக்க நன்றி..
பட்டர்பிளையண்ணே.. இவ்ளோ பிஸியா..?
[[[Jo Amalan Rayen Fernando said...
//ஆனால், "வரவில்லையெனில் நீ தொழிலே பண்ண முடியாது.. ஊர்லயே இருக்க முடியாது" என்று சொல்லி அழைப்பது அந்த விழாவையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். இதைத்தான் கலைஞரின் பாராட்டு விழாவில் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்தினர்...//
திரைப்படம் எடுப்பது ஒரு கூட்டு முயற்சி. இரசனியை மட்டுமே, அல்லது அசித்தை மட்டுமே வைத்து எடுக்க முடியாது. நூற்றுக்கு மேலான தொழிலாளர்கள் அஃதில் ஈடுபட்டு நடக்கும் தொழில். திரைப்படச் சங்கம் என்பது அத்தொழிலாளர்களில் நல்வாழ்க்கைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு.
அது ஒரு தொழிற் சங்கம். தொழிற் சங்கம் ஒரு நிகழ்ச்சியை நடாத்தும்போது ஒவ்வொரு உறுப்பினரும் கலந்த்துதான் தீரவேண்டும். ஏதாவது காரணத்தினால் இயலாதெனின், அதை முறையாகத் தலைவரிடம் சொல்லி விடுப்புக் கேட்டுவிடலாம்.
காரணமே இல்லாமல் வராமலிருப்பது தவறு. எனக்கு கருன்நானிதியைப் பிடிக்கவில்லை, இச்சஙகத்தினரின் செயல் பிடிக்கவில்லை என்றால் சங்கத்திலிருந்து விலகிக்கொள்ளலாம்.
பாராட்டு விழாவுக்கு வந்தவர்களெல்லாம் கருநானிதி தங்களுக்குப் பிடிக்குமென வரவைல்லை. பின் ஏன் வந்தார்கள்? பொதுநலம் கருதி. தொழிலாளர்களின்.
தொழிற்சங்கம் மிரட்டத்தான் செய்யும். எல்லாத் தொழிற்சங்கங்களும் இப்படித்தான்.
மிரட்டல் பிடிக்ககவில்லயெனறால் விலகிக்கொள். ஏன் உள்ளேயிருந்துகொண்டே குழி தோண்டுகிறாய்! இதுதான் கேள்வி.]]]
எதற்காக சங்கம் துவக்கப்பட்டதோ அந்த வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும். இல்லையெனில் அதுவும் சொஸைட்டிஸ் ஆஃப் ஆக்ட்டின்படி சட்டப்படி தவறுதான்..!
அந்த விழா மேடையிலேயே ஜெயலலிதாவையும், சசிகலாவையும் கிண்டல் செய்தும், விஜயகாந்தை கேலி செய்தும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா..?
அவரைப் பாராட்டுவதுதான் நோக்கம் என்றால் அதற்காக சக மூத்தக் கலைஞர்களை ஏன் கிண்டல் செய்ய வேண்டும்..? அடிப்படையே தவறாக அல்லவா இருக்கிறது..!
[[[Jo Amalan Rayen Fernando said...
ஏன் வந்தாய். கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார்களென்றால்.
உயிருக்குப் ப்யமா?]]]
ஆமாம்.. உண்மையில் பயத்துடன்தான் அவர் வந்திருக்கிறார்.
[[[வந்த பின் மேடையேறி, என்னைக் கட்ட்டாயப்படுத்தி இங்கு கொண்டுவந்தார்கள் என்பது மேடை நாகரீகமா?]]]
ஆமாம்.. அப்படிச் சொன்னால்தான் அடுத்த முறை இப்படி அழைக்க மாட்டார்கள். எப்படிச் சொன்னால் அது நடக்குமோ அதனை அப்படித்தான் சொல்ல வேண்டும்..!
[[[யாருக்கு விழா நடாத்துகிறர்களே, அவரை முன் வைத்து கேவலப்படுத்த வேண்டுமென்பது உன் நோக்கமா?]]]
அழைத்தவிதமும், நிகழ்ச்சியின் நோக்கமுமே கேவலமாக இருக்கின்றபோது மேற்கொண்டு வேறு என்ன பேசி அவரை கேவலமாக்குவது..?
[[[அப்படியென்றால் ஏன் வந்தாய்? இவ்வளவு வீரமாக மேடையில் பேசும்னீ, ஏன் முதலிலே
‘என்னை எந்தக் கொம்பனாலும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்ல உனக்கு ஏன் வீரம் வரவில்லை?]]]
வெளிப்படையா சொல்லிரணும்னு நினைச்சுத்தான் வந்தாரு.. சொல்லிட்டாரு.
[[[வந்த பின் ஒட்டுமொத்தமாக - சங்கத்தையும், பாரட்டு பெற வேண்டியவரையும் ஏன் கேவலப்படுத்தினாய்? இவைகளே சரியான் கேள்விகள்.]]]
நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமே பாராட்டு அல்ல.. கலைஞர் டிவிக்கு வருவாய் அதிகரிக்கத்தான்..!
உள் நோக்கமே தவறாக இருப்பதால் உங்களுடைய எந்த லாஜிக்கும் இங்கே எடுபடா நண்பரே..!
பதில்கள் உளவா?]]]
[[[Jo Amalan Rayen Fernando said...
//ஏன் வந்தேங்கறதுக்கு அஜித்தே, அந்த மேடையிலேயே பதில் சொல்லிட்டாருங்கன்னா... அவரு பேச்சை படிச்சு/கேட்டுப் பாருங்க!//
ஏன் கண்டிப்பாக வலுக்கட்டாய இழுத்த அழைப்பை ஏற்றார்? ஏன் மறுக்க வீரம் வரவைல்லை?
அழைப்பை ஏற்ற பின் இப்படி பேசுவது படித்தவன் செய்யும் செயலா?]]]
பேசணும்னு நினைச்சுத்தாங்க வந்திருக்காரு.. அப்புறமென்ன..?
[[[Jo Amalan Rayen Fernando said...
//அன்று MGR ஏன் விழா மேடையில் இருந்து பாதியில் போனாரோ.. அதே காரணம்தான்.. விளைவும் அதை ஒத்தே இருக்கலாம்.. Wait N see//
நண்பரே... எம்.ஜி.ஆரையும் அசித்து, இரசனி இவர்களோடு ஒப்பிடுவது எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தும் செயலென கோவி.கண்ணன் பதிவில் போட்டிருக்கிறேன். படித்தால் நலம்.]]]
ஆட்களை ஒப்பிடவில்லை. செயல்களைத்தான் ஒப்பிட்டிருக்கிறார்..! தகவறில்லை..!
[[[என் கேள்வி : கருனானிதியைப் பிடிக்கவில்லை என்றாய் ஏன் வருகிறாய் மேடைக்கு? மேடையிலே எவரேனும் உன்னை கேவலப்படுத்திப் பேசினார்களா? அவமானப்படுத்தினார்களா? இல்லையே!]]]
அவமானப்படுத்தி அழைத்ததால்தான் அதை வெளிப்படுத்த நினைத்து மேடைக்கு வந்தார். பேசினார்.. அவ்வளவுதான்..!
[[[Jo Amalan Rayen Fernando said...
//கட்சியில் உள்ள மற்றும் கட்சி ஆதரவு உள்ள நடிகர்களை ஒன்னும் பன்ன முடியாது. போயஸ் தோட்டத்துல இவன்களால போய் மிரட்ட முடியுமா.?
தொழிற்ச்சங்கம் இவங்ககிட்ட மிரட்ட வேண்டிஅதுதானே! ஏண் தைரியம் இல்லயா?
அஜீத் வீரரோ இல்லயோ அவர் முதுகொழும்பு உள்ள மனிதன். மற்றவர்களைப் போல காலை நக்காதவர்.//
முடியும். நடிகர் சங்கம் கட்சிவாரியாக ஒரு சங்கத்திற்குப் பதிலாக, பல சங்கங்களாக இருப்பின்.
இரயில்வே, பாங்கு, போன்ற தொழிறசங்கங்கள், அப்படித்தான் இருக்கின்றன. தமிழநாட்டில் ஒவ்வொரு பெரிய தொழிற்சாலைகளில், அதிமுகவுக்கு ஒன்று, திமுகவுக்கு ஒன்று, காங்கிரசுக்கு ஒன்று, கம்யூணிஸ்டுக்கு ஒன்று. ஜெயலலிதாவுக்கெல்லாம் அங்கு பயப்படமாட்டார்கள்.
திரைப்படச் சங்கம் அப்படியிரூந்தால், ஜெயலலிதாவுக்கு எதிராக செயலும் கருனானிதிக்கு எதிராகவுன் நடக்கும்.
அப்படி ஏன் இல்லையென்பதற்கு பல காரணங்கள. அது உங்களுக்கு போயஸ் காரடனை நெருங்க முடியுமா என்பதை கேட்க வைக்கிறது. தொழிலாளருக்கு எதிராக கை வைத்தால் யாரும் தப்ப முடியாது. தலைமைச் செயலகம் விஷயம் தெரியுமுல்ல..?]]]
என்ன நைனா இப்படி அடுக்கிக்கி்ட்டே போறீங்க..
மாநில அரசு நினைத்தால் ஒரே நாளில் சினிமா பீல்டை கவிழ்த்துவிடலாம். நஷ்டப்படுத்திவிடலாம். அதே போல் உயர்த்தியும் விடலாம். அந்த பயத்தில்தான் அரசுகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சிலர் தாவிச் செல்கிறார்கள்.
அதனால் வந்த குழப்படிதான் இது..!!
[[[Jo Amalan Rayen Fernando said...
//முதுகொழும்பு உள்ள மனிதன்.//
முதுகெலும்புள்ளவந்தான் மிரட்டி வலுக்கட்டாயமகக் கூப்பிட வந்தான் இல்லையா? கோழை என்று தாராளமாகச் சொல்லலாம்.]]]
ஏங்க.. எத்தனை தடவைங்க சொல்றது.. அதான் தைரியமா அத்தனை பேர் இருக்கும்போதே சொல்லிட்டாரே.. இதுக்கு மேலேயும் அவர் தைரியத்துக்கு என்ன உதாரணம் வேண்டும்..?
[[[யாரும் எதிர்பார்க்காத வேளையில், தந்திரமாக முதுகில் குத்துவான் கோழை.]]]
அதைத்தான் இப்போதும் அரசும், போலீஸும், சில புரூட்டஸ்களும் கலையுலகில் புகுந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
[[[கூட்டத்திற்கு வந்து நாலு சொற்கள் மரியாதைக்குப் பேசுவான் என்று எதிர்பார்க்கும்போது, மைக்கைப் பிடித்து பேசிவிட்டான். கோழைத்தனம். இதை எப்படி தைரியம் என்கிறார்கள் என்று புரியவில்லை.]]]
பேசினா வாயாலே.. பின்னூட்டம் போட்டா கையால..!
[[[பின்னர் கருனானிதி வீட்டில் சென்று சந்திப்பு.]]]
விளக்கம் சொல்லலைன்னா போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வான்னு கூப்பிடுவாங்க.. பரவாயில்லையா..?
[[[கருனானிதியை எதிர்க்க வேண்டுமென்றால், ஒரு அரசியல் கட்சி நடத்து. மக்களை ஒருங்கினை. மக்களிடம் பேரெடுத்து ஆட்சிக்கு வந்து கருனானிதியை காலி ப்ண்ணு. அதுதான் வீரம்.]]]
காசுக்கு எங்க போறது..? நீங்க தர்றீங்களா..?
[[[Jo Amalan Rayen Fernando said...
நண்பர் ஷாகுல் எங்களூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்; ‘சாடை தெரியாதவன் சர்வ முட்டாள்’
கருனானிதியை எதிர்ப்பதற்கு செயலலிதா மாதிரி அறிக்கை விடத் தேவையில்லை; அல்லது தீப்பொறி ஆறுமுகம் மாதிரி பொது மேடையிலேறி, அங்கலடசணம் செய்யத் தேவையில்லை.
‘என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விட்டார்கள்’ என்று சொன்னால், ‘இவனுக்கெல்லாம் ஒரு பாராட்டு விழா. இதுக்கெல்லாம் வரணும்’ என்றுதான் பொருள்.]]]
அவர் எங்கங்க அப்படிச் சொன்னாரு.. நல்லவிதமா அழைத்தாலே வருவோம்.. ஏன் மிரட்டுறீங்க.. நான் இந்த விழாவுக்கு விருப்பப்பட்டுத்தான் வந்தேன்னு சொன்னாரு.. மொதல்ல அவர் சொன்னது என்னன்னு படிச்சுத் தெரிஞ்சுட்டு வந்து பேசுங்க சாமி..!
[[[இதே பாராட்டு விழா அவர் விருப்பப்படும் ஒருவருக்கு நடந்திருந்தால், பிரச்னையேயில்லை.]]
ஆமாம்.. அப்போது அழைப்பு முறைப்படி நாகரிகமாக வந்திருக்குமே..!
[[[நான் போட்ட ஒரு பின்னூட்டம் இங்கு வரவில்லையென்றேன். அது வருமாறு:
இப்பதிவுகள் இருவகை
- ஒன்று அசித்து சொன்னது தவறு;
-மற்றொன்று சரி
இவற்றுக்கு அடிப்படை கருனானிதியே ஒழிய, அசித்து அல்ல. அசித்து ஒரு கருவி அவ்வளவுதான். இரு வகைப் பதிவாளர்களுக்கும் மனச்சாய்வுகளே காரணிகள்.]]]
உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி..!
[[[Jo Amalan Rayen Fernando said...
’விளம்பர வெறி’ என்பது பொருத்தமில்லாச் சொல்.
கருனானிதிக்கு விளம்பரம் தேவையில்லை. தமிழக மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அவரை அறிவர். அப்படியிருக்க புதிதாக அவர் விளம்பரத்தை தேட அவசியமா?]]]
இதைத்தான் நாங்களும் கேக்குறோம்..!
[[[புகழ்ச்சி வெறியர் என்ற சொல் பொருந்தும். எனினும், வெறியர் என்ற சொல்லெல்லாம் அவர் எதிராளிகளுக்கே உதவும்.]]]
ரெண்டும் ஒண்ணுதான்..
[[[புகழ்ச்சிக்கு மயங்காதவர் யார்? எல்லாரும் மயங்குவார்கள். உ.த ஏன் இப்படிப்பட்ட பதிவுப் பொருளகளத் தேடிப் போகிறார். ஒவ்வொரு எழுத்திலும் தெரிப்பது narcissism. தன்னை ‘அண்ணே அசத்திட்டீங்க’ எனப் புகழ்ச்சிச் சொற்களுக்குத்தானே? ஒரு சாதாரண உ.தவே இப்படியிருந்தால் க.வும். செயும் ஏன் இருக்கக்கூடாது?]]]
கருணாநிதியை எனக்கு 40 வருஷமா தெரியும்.. எழுத்தால.. பேட்டியால.. வாழ்க்கை வரலாற்றின் மூலமாக..
என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்..? எதுக்கு இப்படியொரு முட்டாள்தனமான கருத்து..? என்னோட பதிவுகள் முழுவதையும் படித்தால்கூட நான் யாருன்னு முழுசா தெரியாது.. இந்த லட்சணத்துல கிளி ஜோஸியர் மாதிரி ஆருடம் வேற.. தேவைதானா இது..?
[[[கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்றவர்களெல்லாம் ஒரே மாதிரிதான்.
முதலமைச்சராக இருப்பதால், அந்தப் பாணியில் அவர் புகழ் தேடுகிறார்.
என்னைக் கேட்டால் இப்படித்தான் சொல்வேன்: ஒரு பொது வாழ்க்கையில் இருப்பவன் புகழைத் தேடுவதில் ஒன்றும் தவறுமல்ல; வியப்புமல்ல. அதேவேளையில், ஒரு முதலமைச்சர் தனக்கு நடக்கும் பாராட்டுவிழாவை low key ஆகப் பண்ணி, மிஞ்சும் பணத்தை நாட்டின் ஆக்கப் பணிக்கு செலவிடலாம்.]]]
அடப் போங்கப்பா.. விடிய விடிய இராமாயணக் கதை கேட்டு விடிஞ்சப்புறம் ராமன் சீதைக்கு சித்தப்பான்னு சொன்ன மாதிரியிருக்கு..!
நடிகர், நடிகைகளை வைச்சு கலைஞர் டிவிக்கு காசு சம்பாதிக்கத்தான் இத்தனை உள்ளடி வேலையும்ன்றது உங்களுக்குப் புரியவே இல்லையா..?
தங்களுக்கு எதுவும் புரியாதெனில் தயவு செய்து பின்னூட்டம் இடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்..!
எனக்கு புரிந்த வரை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் சினிமா காரர்களை ஒரு அலங்கார பொருளாகத்தான் அருகில் வைத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் துதி பாடவும் ஒப்பனைக்கும் மட்டுமே. ஆனால் சினிமா காரர்கள் அரசியல் வாதிகளோடு நெருக்கத்தில் இருப்பது அவர்களின் சுய நலத்துக்கே அன்றி வேறெதுவும் இல்லை. உங்கள் கட்டுரை நிறைவாக உள்ளது.
அடடா... இப்படி பெரிய பதிவுகளைப் படிக்கும் போது ஒரு திருப்திதான்... ரொம்ப நாளா மிஸ் செய்தேன் தலைவரே! :)
வழக்கம் போல.. அக்குவேறு ஆணிவேறாக எழுதியிருக்கீங்கண்ணே...
ரஜினியோ.. அஜித்தோ.. எதாவது சொல்லலன்னாலும் நொள்ளை.. சொன்னாலும் நொள்ளை...
மத்தவங்க இவங்களை வச்சி மலிவான விளம்பரம் தேடிக்கறாங்க.. அவ்வளவே..
உ.த.நண்பரே,
வருகையெல்லாம் தந்து கொண்டு தான் இருக்கிறேன். அதாவது, உங்கள் இடுகைகளை வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
கமெண்ட் தான் போடுவதில்லை :-)
அன்புடன்
பாலா
//இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் சூப்பர்ஸ்டாரின் இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இன்றைக்கு சினிமாக்காரர்களே முன் வைப்பது கேவலமானது. அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய சூத்திரமாக இருக்கிறது. வெட்கக்கேடானது.//
சாட்டையடி, நீங்கள் என்ன சொன்னாலும் இந்த ஜென்மங்களுக்கு எருமை மாட்டில மழை பெய்த மாதிரித்தான் இருக்கும் , இந்த 'முத்தமிழை வித்தவன்' செத்தாலும் பாராட்டும் கூட்டம் இருக்கும்வரை ஒன்னும் பண்ணமுடியாது, ஒரே வழி ரஜினியின் சிங்கப்பாதைதான், பூப்பாதயிலேயே இவளவு முட்கள் என்றால் சிங்கப்பாதையில் எவளவு இருக்கும்? அதுதான் ரஜினியின் அரசியல் ஒதுங்கலுக்கான காரணம் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவிற்கு ஒரு ரஜினி என்னும் நல்ல மனிதனின் ரசிகனாக நன்றியும், இனவெறி பிடித்த கேவலமான தமிழ் சமூகத்தின் சார்பாக மன்னிப்புக்களும்.
//தங்களுக்கு எதுவும் புரியாதெனில் தயவு செய்து பின்னூட்டம் இடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்..!//
எல்லாப்பதில்களும் OK. ஆனால், மேலே எழுதியது மட்டும் சரியல்ல.
புரிதல் என்றால் என்ன உண்மைத்தமிழரே!
ஒருவனுக்கு ஒன்று அவனுக்குப்பிடித்த வகையில் புரிகிறது. மற்றவனுக்கும் அவனுக்குப்பிடித்த வகையில் புரியும்.
One man's meat is another man's poison.
One man's terrorist is another man's freedom fighter.
எனவே ”உங்களுக்குப்புரியவில்லை. எனக்குத்தான் புரிகிறது” என்பது சிறுபிள்ளைத்தனம். குறிப்பாக அசித்து விடயம் ஒரு பொதுப்பிரச்ச்னை. அதை பலரும் பல விதமாகத்தான் பார்ப்பார்கள்.
'நான் பார்க்கும்படியே மற்றவரும் பார்க்கவேண்டும்' என்றால் எப்படி உண்மைத்தமிழன்?
'எனக்குப்புரிந்தபடி உங்களுக்குப்புரியவைல்லையென்றால் பின்னூட்டம் போடாதே' என்பதை எண்ணித்தான் எழுதுகிறீர்களா? மாறுகருத்துகளை எதிர்னோக்க முடியாமல் பின்னூட்டம் போடாதே என்றால் ஏன் பதிவுலகத்தில் வந்து பதிவுகள் போட்டு தமிழ்மணத்தில் இணைத்து என்னைப்படியுங்கள் எனச் சொல்ல்வேண்டும்?
உணமைத்தமிழன் மகா பெரியவராக இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் பய்ந்துவிடவேண்டும? எல்லாரும் பதிவுலகத்தில் ஒன்று இங்கெ ஆண்டான் அடிமையில்லை
அசித்து பேசியது மேடை அநாகரிகம் என்பது என் கருத்து.
ஒருவனை உங்கள் வீட்டிற்கு கூப்பிடுகிறீர்கள். வருகிறான். வந்தவுடன் உங்களைக்கத்தியெடுத்துக் குத்துகிறான். கேட்டால் உன் வீட்டுக்கு வரப்பிடிக்கவில்லை என்கிறான். இதை அவன் முதலிலேயே செய்து வராமலிருந்து விடவேண்டியதுதானே?
இதுதான் என் வாதம். இதுதான் என் புரிதல். மற்றவர்கள் புரிதல் வேறாக இருக்கலாம். எனக்கு அநாகரீகம். உங்களுக்கு நாகரீகம். பலகருத்துகள் இருக்கவேண்டும். இதுவே வாழ்க்கை.
மாறுபட்ட கருத்தையுடைய நான் மடையனுமல்ல். நீங்கள் அறிவாளிகளுமல்ல.
அதைப்போல்வே, நீங்களும் மடையனுமல்ல. நான் அறிவாளியுமல்ல.
உண்மைத்தமிழன் பதிலகளுக்கு என்னால் வரிக்கு வரி பதில் தரமுடியும்.
பின்னூட்டம் போடாதே என்பதற்குப்பதிலாக, எனக்குப்பிடித்த அல்ல என் புரிதலுக்கு ஒத்துவரும் கருத்துகளே போடவேண்டும் என முதலிலேயே சொல்லியிருந்தால், that is honesty.
அருமையான பதிவு .... முதல்ல இந்த விழாவுக்கு தலைமை ஹிந்தி நடிகர் என்பது ஏன் எல்லோரும் ஏன் மறந்திட்டாங்க...
பட்டைய கிளப்பிட்ட தமிழா !
முதல்வருக்கு அடுத்த பாராட்டு விழா
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்திருமாவளவன்
2010 - க்கான விருது அறிவிப்பு !
முதல்வருக்கு "அம்பேத்கர் சுடர் " விருது !
உணமைத்தமிழனுக்கு முருகன் பிடிக்கும். மற்றவர்கள் (இந்துக்களில் கூட) வேறு தெய்வங்கள் இஷட தெய்வ்ங்களாக இருப்பார்கள். அதற்காக, உ.த அவர்களை விரட்டுவாரா?
பதிவுலகமும் அப்படித்தான். பிறகருத்துகள் அனுமதிக்கப்படவேண்டும்.
நான் ராஜனின் நையாண்டிப்பதில்களுக்கும், உ.தவின் பதிலகளுக்கும் மறுபதில்கள் போடவில்லையென்றால், என் கருத்துக்கள் இங்கே இருக்கின்றன. உங்கள் கருத்துகளும் இங்கே இருக்கின்றன.
நடுனிலையாக மூன்றாமொருவருக்காக அவை இருக்கின்றன.
இத்னைக்கும் இந்த வி.சி.குகநாதன் ஒரு ஈழத்தமிழன். கருநாநிதி ஈழப்போராட்டத்தைக் காட்டிக்கொடுத்ததைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லை!
நச்
hmm...exactly reflects the current situation..
இனிமே இஷ்டத்துக்கு பாராட்டு விழா நடத்துவானுங்க ? தல சுளுக்கு எடுத்துட்டாருள்ள.
பதிவ படிச்ச நேரத்த விட, பின்னூட்டங்கள படிச்ச நேரம் தான் கூடுதல் அண்ணாச்சி.
இப்போதெல்லாம் இது ஓயுற மாதிரி தெரியல, எதுன்னா கேக்குறீக... அசீத் பிர(ஸ்)ச்சினையும் பின்னூட்டமும் தே!
@ Jo Amalan Rayen Fernando
//நண்பரே...எம்.ஜி.ஆரையும் அசித்து, இரசனி இவர்களோடு ஒப்பிடுவது எம்.ஜி.ஆரை இழிவு படுத்தும் செயலென கோவி.கண்ணன் பதிவில் போட்டிருக்கிறேன். படித்தால் நலம்.//
//ஒருவனுக்கு ஒன்று அவனுக்குப்பிடித்த வகையில் புரிகிறது. மற்றவனுக்கும் அவனுக்குப்பிடித்த வகையில் புரியும்//
கண்ணா இது உங்க பதில்தான், பொருந்திச்சா ? , உமக்கு எம். ஜி. ஆர் உசத்தியின்னா எங்களுக்கு ரஜினி உசத்தி. நீங்க குண்டு சட்டியில குதிரை ஓட்டினா நாங்க பொறுப்பாக முடியாது. ரஜினி எந்த விதத்திலும் எம் .ஜி .ஆருக்கு குறைந்தவரில்லை. இதை கொஞ்சம் பாரு கண்ணா.
http://eppoodi.blogspot.com/2009/12/blog-post_10.html
உண்மைத்தமிழன் அண்ணே நேரமிருந்தா நீங்களும் கொஞ்சம் பாருங்க.
அண்ணே,
சின்னப்பையனா இருக்கும் போது ஊர்ல கபடி பார்த்திருக்கேன்...மூச்சு விடாம,
"நாந்தான் ங்கொப்பன் நல்ல முத்து பேரன்
வெள்ளிப் பெரம்படுத்து வெளையாட வார்றேன்டா வார்றேன்டா வர்றேன்டா"
அப்படின்னு பாடிக்கிட்டே எதிர் டீம்ல பூந்து கலக்குவாங்க....அது மாதிரி பெரம்பே இல்லாம சும்மா பூந்து வெளையாடி இருக்கீங்க...
க்ளாஸ்!
//
Jo Amalan Rayen Fernando said...
ஏன் வந்தாய். கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார்களென்றால்.
உயிருக்குப்ப்யமா?
வந்தபின் மேடையேறி, என்னைக்கட்ட்டாயப்படுத்தி இங்கு கொண்டுவந்தார்கள் என்பது மேடை நாகரீகமா?
//
என்ன ஒரு கேள்வி?!!! ஆஹா, ஆஹா, ஆஹா!
முதலில் ஒருவனை வற்புறுத்தி என்னை வாழ்த்திப் பாடு என்பது மனித நாகரீகமா??
அப்படி வாழ்த்துக் கேட்பவனும் சுய அறிவுள்ள மனிதன் தானா??
ஆமாம், பயம் தான்...பேய் அரசாளும் நாட்டில் தொழில் நடத்த மட்டுமல்ல, உயிருக்கும் பயம் தான்!
//
யாருக்கு விழா நடாத்துகிறர்களே, அவரை முன் வைத்து கேவலப்படுத்தவேண்டுமென்பது உன் நோக்கமா?
அப்படியென்றால் ஏன் வந்தாய்? இவ்வளவு வீரமாக மேடையில் பேசும்னீ, ஏன் முதலிலே
‘என்னை எந்தக்கொம்பனாலும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்ல உனக்கு ஏன் வீரம் வரவில்லை?
வந்தபின் ஒட்டுமொத்தமாக - சங்கத்தையும், பாரட்டுபெறவேண்டியவரையும் ஏன் கேவலப்படுத்தினாய்?
இவைகளே சரியான் கேள்விகள்.
பதில்கள் உளவா?
//
சொன்னதில் என்னக் தப்பு? ஒரு புழுவை குத்தினாலும் அது உயிருக்குப் போராடும்...எத்தனை நாள் தான் சும்மா இருக்கும்??
ஏதோ வருடம் ஒரு விழாவாக இருந்து, மாதம் ஒன்றாக மாறி, இப்பொழுது வாரம் ஒரு புகழ்பாடும் விழாவாக இருக்கிறது...எதற்கு இந்த ஈனப் பிழைப்பு??
மிரட்டுபவனை எத்தனை நாள் தான் புகழ்ந்து பாடமுடியும்??
ஊரில் நடக்கும் நன்றி அறிவிப்பு விழாக்கள், அது சினிமா சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் இப்படித் தான் எல்லாரையும் கட்டாயப்படுத்தி டான்ஸ் ஆடச் சொல்லி நடக்கிறதா??
மிரட்டுகிறார்கள் என்று வெளியே சொல்வது கேவலம் என்றால், மிரட்டுவது என்ன??
//
ஒருவனை உங்கள் வீட்டிற்கு கூப்பிடுகிறீர்கள். வருகிறான். வந்தவுடன் உங்களைக்கத்தியெடுத்துக் குத்துகிறான். கேட்டால் உன் வீட்டுக்கு வரப்பிடிக்கவில்லை என்கிறான். இதை அவன் முதலிலேயே செய்து வராமலிருந்து விடவேண்டியதுதானே?
//
நீங்கள் ஒருவனை கத்தியை காண்பித்து மிரட்டி, என் வீட்டுக்கு வா, குத்தாட்டம் போட்டு என்னை மகிழ்வு செய்...என்று மிரட்டி அழைத்து அவனை வரச்செய்தால் அவன் குத்த தான் செய்வான்...
அப்புறம் அய்யோ என்னை குத்திப்புட்டான் என்று புலம்புவதில் என்ன அர்த்தம்?? ஏதோ அஜீத்தாக இருப்பதால் வெறுமனே பேசுவதுடன் நிறுத்தி விட்டார்...உண்மையில் மற்ற பொதுமக்களாக இருந்திருந்தால் செருப்பை காண்பிருத்திருப்பார்கள்....
நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் கருணாநிதிக்கு புகழ் வெறி தலைக்கேறி விட்டது போல தெரிகிறது...இனி விட்டால் தன் புகழ்பாட ஒரு துறை அமைத்து ஒவ்வொரு நாளும் தன்னை புகழ்ந்து பாட ஏற்பாடு செய்ய வேண்டியது தான் மிச்சம்...
மற்ற அல்லைக்கைகள் அதை பயன்படுத்தி அவரை அசிங்கப்படுத்தி வருகிறார்கள்....
"என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலியே" என்று கேட்கும் அளவுக்கு வடிவேலு (கேரக்டர்)க்கு கூட சுய பிரக்ஞை இருக்கிறது...ஆனால் கருணாநிதிக்கு???
நான் இப்போ கொஞ்ச காலமா U.S ல இருக்கேன். உங்க பதிவுகள படிக்கிற போது, நம்ம ஊருல உட்காந்து டீ கடைல நண்பர்களோட பேசுற மாறி சுகமா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்னாடி சுஜாதா இறுதி ஊர்வலம் போன நிகழ்ச்சி பற்றி விவரிச்சு இருந்ததை என்னால் இன்றும் மறக்க முடிய வில்லை.நிறைய எழுதுங்கள் ,ஆவலாய் இருக்கிறோம்.
இங்கே இவர்கள் நடத்துவது politics அல்ல. Poli-tricks. ஒன்று மதில் மேல் பூனை போல் எந்த பக்கமும் சாயாதவர்களை தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார்கள். அல்லது திரையுலமே திரண்டு வந்து பாராட்டியது போன்ற தோற்றத்தை உருவக்கப் பார்க்கிறார்கள். எது எப்படியோ நமக்கென்ன என்று இருக்க வேண்டியதுதான்.
அட்டகாசம் அருமை .....
நான் படித்த மிக நல்ல பதிவுகளில் ஒன்று ....
"தல போல வருமா ... "
[[[VISA said...
எனக்கு புரிந்தவரை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் சினிமாகாரர்களை ஒரு அலங்கார பொருளாகத்தான் அருகில் வைத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் துதி பாடவும் ஒப்பனைக்கும் மட்டுமே. ஆனால் சினிமாகாரர்கள் அரசியல்வாதிகளோடு நெருக்கத்தில் இருப்பது அவர்களின் சுயநலத்துக்கே அன்றி வேறெதுவும் இல்லை. உங்கள் கட்டுரை நிறைவாக உள்ளது.]]]
நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மைதான்..
சினிமாக்காரர்களுக்கு எப்போதுமே ஆட்சியாளர்களின் தயவு தேவை. அதனால் அவர்களை அண்டிப் பிழைப்பதையே பெரிய வேலையாக வைத்துக் கொண்டு கலைஞன் என்கிற பெயருக்கு இருக்கிற மரியாதையையே கெடுத்துவிட்டார்கள்..!
[[[pappu said...
அடடா... இப்படி பெரிய பதிவுகளைப் படிக்கும்போது ஒரு திருப்திதான்... ரொம்ப நாளா மிஸ் செய்தேன் தலைவரே!:)]]]
நானும் உங்களை மிஸ் பண்ணிட்டேன் பாப்பு..!
[[[அன்புடன்-மணிகண்டன் said...
வழக்கம் போல.. அக்குவேறு ஆணிவேறாக எழுதியிருக்கீங்கண்ணே.
ரஜினியோ.. அஜித்தோ.. எதாவது சொல்லலன்னாலும் நொள்ளை.. சொன்னாலும் நொள்ளை... மத்தவங்க இவங்களை வச்சி மலிவான விளம்பரம் தேடிக்கறாங்க.. அவ்வளவே..]]]
அதேதான்.. பூனைக்கு யார் மணி கட்டுறதுன்னுதான் இருந்துச்சு நிலைமை. இப்போ அஜீத் கட்டிட்டாரு.. நிச்சயமா பாராட்டணும்..!
[[[enRenRum-anbudan.BALA said...
உ.த.நண்பரே,
வருகையெல்லாம் தந்து கொண்டுதான் இருக்கிறேன். அதாவது, உங்கள் இடுகைகளை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கமெண்ட்தான் போடுவதில்லை :-)
அன்புடன்
பாலா]]]
ஓ.. சும்மா வந்து படிச்சிட்டு கமெண்ட்டு மட்டும் போடாமல் போகும், நீங்கள் அடுத்தப் பிறவியில் கழகத்தின் உடன்பிறப்பாக இருக்கும்படி சபிக்கிறேன்..!
[[[எப்பூடி ... said...
//இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் சூப்பர் ஸ்டாரின் இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இன்றைக்கு சினிமாக்காரர்களே முன் வைப்பது கேவலமானது. அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய சூத்திரமாக இருக்கிறது. வெட்கக்கேடானது.//
சாட்டையடி, நீங்கள் என்ன சொன்னாலும் இந்த ஜென்மங்களுக்கு எருமை மாட்டில மழை பெய்த மாதிரித்தான் இருக்கும், இந்த 'முத்தமிழை வித்தவன்' செத்தாலும் பாராட்டும் கூட்டம் இருக்கும்வரை ஒன்னும் பண்ணமுடியாது, ஒரே வழி ரஜினியின் சிங்கப் பாதைதான், பூப்பாதயிலேயே இவளவு முட்கள் என்றால் சிங்கப் பாதையில் எவளவு இருக்கும்? அதுதான் ரஜினியின் அரசியல் ஒதுங்கலுக்கான காரணம் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவிற்கு ஒரு ரஜினி என்னும் நல்ல மனிதனின் ரசிகனாக நன்றியும், இனவெறி பிடித்த கேவலமான தமிழ் சமூகத்தின் சார்பாக மன்னிப்புக்களும்.]]]
நன்றி எப்பூடி..!
பெயர் வித்தியாசமா இருக்கே.. எப்பூடி புடிச்சீங்க..?
அண்ணே...
class article.
அன்பு நித்யன்
[[[Jo Amalan Rayen Fernando said...
//தங்களுக்கு எதுவும் புரியாதெனில் தயவு செய்து பின்னூட்டம் இடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்..!//
எல்லா பதில்களும் OK. ஆனால், மேலே எழுதியது மட்டும் சரியல்ல.
புரிதல் என்றால் என்ன உண்மைத்தமிழரே! ஒருவனுக்கு ஒன்று அவனுக்குப் பிடித்த வகையில் புரிகிறது. மற்றவனுக்கும் அவனுக்குப் பிடித்த வகையில் புரியும். One man's meat is another man's poison.
One man's terrorist is another man's freedom fighter.
எனவே ”உங்களுக்குப் புரியவில்லை. எனக்குத்தான் புரிகிறது” என்பது சிறுபிள்ளைத்தனம். குறிப்பாக அசித்து விடயம் ஒரு பொதுப் பிரச்ச்னை. அதை பலரும் பல விதமாகத்தான் பார்ப்பார்கள்.
'நான் பார்க்கும்படியே மற்றவரும் பார்க்கவேண்டும்' என்றால் எப்படி உண்மைத்தமிழன்?
'எனக்குப் புரிந்தபடி உங்களுக்குப் புரியவைல்லையென்றால் பின்னூட்டம் போடாதே' என்பதை எண்ணித்தான் எழுதுகிறீர்களா? மாறு கருத்துகளை எதிர் னோக்க முடியாமல் பின்னூட்டம் போடாதே என்றால் ஏன் பதிவுலகத்தில் வந்து பதிவுகள் போட்டு தமிழ்மணத்தில் இணைத்து என்னைப் படியுங்கள் எனச் சொல்ல்வேண்டும்?
உணமைத்தமிழன் மகா பெரியவராக இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் பய்ந்துவிடவேண்டும? எல்லாரும் பதிவுலகத்தில் ஒன்று இங்கெ ஆண்டான் அடிமையில்லை
அசித்து பேசியது மேடை அநாகரிகம் என்பது என் கருத்து. ஒருவனை உங்கள் வீட்டிற்கு கூப்பிடுகிறீர்கள். வருகிறான். வந்தவுடன் உங்களைக் கத்தியெடுத்துக் குத்துகிறான். கேட்டால் உன் வீட்டுக்கு வரப் பிடிக்கவில்லை என்கிறான். இதை அவன் முதலிலேயே செய்து வராமலிருந்து விடவேண்டியதுதானே?
இதுதான் என் வாதம். இதுதான் என் புரிதல். மற்றவர்கள் புரிதல் வேறாக இருக்கலாம். எனக்கு அநாகரீகம். உங்களுக்கு நாகரீகம். பல கருத்துகள் இருக்கவேண்டும். இதுவே வாழ்க்கை.
மாறுபட்ட கருத்தையுடைய நான் மடையனுமல்ல். நீங்கள் அறிவாளிகளுமல்ல. அதைப் போல்வே, நீங்களும் மடையனுமல்ல. நான் அறிவாளியுமல்ல.
உண்மைத்தமிழன் பதிலகளுக்கு என்னால் வரிக்கு வரி பதில் தரமுடியும். பின்னூட்டம் போடாதே என்பதற்குப் பதிலாக, எனக்குப் பிடித்த அல்ல என் புரிதலுக்கு ஒத்துவரும் கருத்துகளே போடவேண்டும் என முதலிலேயே சொல்லியிருந்தால், that is honesty.]]]
மன்னிக்கணும்.. மன்னிக்கணும்..
தொடர்ச்சியாக இது தொடர்பான பல கேள்விகளுக்கும், பி்ன்னூட்டங்களுக்கும் பதில் சொல்லியபடியே வந்ததால் ஏற்பட்ட ஒரு அயர்ச்சியில் வெளி வந்திருக்கும் வார்த்தைகள் அது.
அதனை எங்கேயும், எப்போதும் யாருமே பயன்படுத்தக்கூடாது என்று நினைப்பவன். தவறி இங்கே உங்கள் மீது பிரயோகமாகிவிட்டது. வருந்துகிறேன் ஸார்..
ஆனாலும் இந்தப் பிரச்சினையை நீங்கள் அணுகும் முறையில் எனக்கு இப்போதும் சம்மதமில்லை..
வீட்டுக்கு வா என்று கத்தியைக் காட்டி மிரட்டி டார்ச்சர் செய்தால், சமயம் கிடைக்கும்போது அதே கத்தியைப் பிடுங்கி அவனைக் குத்திவிட்டு தப்பிக்கத்தான் பார்ப்பான்.. அதில் ஒன்றும் தவறில்லையே..!!!
நீங்கள் எப்போதும்போல் வழக்கம்போல எனது தளத்திற்குள் வரலாம்..
[[[Kapilan said...
அருமையான பதிவு .... முதல்ல இந்த விழாவுக்கு தலைமை ஹிந்தி நடிகர் என்பது ஏன் எல்லோரும் ஏன் மறந்திட்டாங்க...]]]
ச்சூ.. இப்படியெல்லாம் பட்டவர்த்தனமா வெளிப்படையா பேசக்கூடாது.. அப்புறம் நீங்க தமிழர் இல்லைன்னு நாங்க சொல்லுவோம்..
எங்களுக்கு அமிதாப்பச்சன் தமிழன்தான். ஏன்னா அவர் எங்களை வாழ்த்திப் பேசியிருக்காரு..! அவ்ளோதான் மேட்டரு..!
[[[♠புதுவை சிவா♠ said...
பட்டைய கிளப்பிட்ட தமிழா !
முதல்வருக்கு அடுத்த பாராட்டு விழா
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்திருமாவளவன் 2010-க்கான விருது அறிவிப்பு !
முதல்வருக்கு "அம்பேத்கர் சுடர்" விருது!]]]
ஒரேயொரு சந்தோஷம்.. அம்பேத்கார் விழாவில் குத்தாட்டம் இருக்காது..!
ஜால்ராக்களின் சப்தம் மட்டும் சற்று ஓங்கி கேட்கும்.. கேட்டு்ட்டுப் போகுது..!
[[[Jo Amalan Rayen Fernando said...
உணமைத்தமிழனுக்கு முருகன் பிடிக்கும். மற்றவர்கள் (இந்துக்களில் கூட) வேறு தெய்வங்கள் இஷட தெய்வ்ங்களாக இருப்பார்கள். அதற்காக, உ.த அவர்களை விரட்டுவாரா? பதிவுலகமும் அப்படித்தான். பிற கருத்துகள் அனுமதிக்கப்படவேண்டும்.
நான் ராஜனின் நையாண்டிப் பதில்களுக்கும், உ.தவின் பதிலகளுக்கும் மறு பதில்கள் போடவில்லையென்றால், என் கருத்துக்கள் இங்கே இருக்கின்றன. உங்கள் கருத்துகளும் இங்கே இருக்கின்றன. நடுனிலையாக மூன்றாமொருவருக்காக அவை இருக்கின்றன.]]]
ஓகே ஸார்.. கோபப்படாதீங்க. அதான் மன்னிச்சுக்குங்கன்னு சொல்லிட்டனே..! விட்ருங்க..
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கே பின்னூட்டங்கள் இடலாம்..!
[[[ரகுநந்தன் said...
இத்னைக்கும் இந்த வி.சி.குகநாதன் ஒரு ஈழத் தமிழன். கருநாநிதி ஈழப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை!]]]
உண்மைதான்.. என்ன செய்ய..? பாரதிராஜா நடத்திய போராட்டத்தில் வந்து முழங்கிவிட்டுப் போனார். அவ்வளவுதான். அதற்குப் பிறகு ஆட்சியாளர்களின் பின்னால் அணிவகுத்துவிட்டார்..!
என்ன கொடுமை இது..?
தியாவின் பேனாவுக்கு நன்றிகள்..
சென்னுக்கு நன்றிகள்..
அண்ணாமலையானுக்கு அரோகராவுடன் கூடிய நன்றிகள்..!
அஹோரி.. அடுத்த பாராட்டு விழா கூடிய சீக்கிரமே நடக்கப் போகுதாம்.. சின்னத்திரை யூனியன் நடத்தப் போறதா கேள்வி..!
[[[எட்வின் said...
பதிவ படிச்ச நேரத்த விட, பின்னூட்டங்கள படிச்ச நேரம்தான் கூடுதல் அண்ணாச்சி.
இப்போதெல்லாம் இது ஓயுற மாதிரி தெரியல, எதுன்னா கேக்குறீக. அசீத் பிர(ஸ்)ச்சினையும் பின்னூட்டமும் தே!]]]
அதுக்கென்ன செய்யறது எட்வின்.. நண்பர்கள் படையெடுத்து வரும்போது வேணாம்னு சொல்ல முடியுமா..? நல்ல விஷயந்தானே..!
[[[எப்பூடி ... said...
Jo Amalan Rayen Fernando
//நண்பரே...எம்.ஜி.ஆரையும் அசித்து, இரசனி இவர்களோடு ஒப்பிடுவது எம்.ஜி.ஆரை இழிவு படுத்தும் செயலென கோவி.கண்ணன் பதிவில் போட்டிருக்கிறேன். படித்தால் நலம்.//
//ஒருவனுக்கு ஒன்று அவனுக்குப் பிடித்த வகையில் புரிகிறது. மற்றவனுக்கும் அவனுக்குப் பிடித்த வகையில் புரியும்//
கண்ணா இது உங்க பதில்தான், பொருந்திச்சா? உமக்கு எம்.ஜி.ஆர் உசத்தியின்னா எங்களுக்கு ரஜினி உசத்தி. நீங்க குண்டு சட்டியில குதிரை ஓட்டினா நாங்க பொறுப்பாக முடியாது. ரஜினி எந்த விதத்திலும் எம்.ஜி.ஆருக்கு குறைந்தவரில்லை. இதை கொஞ்சம் பாரு கண்ணா.
http://eppoodi.blogspot.com/2009/12/blog-post_10.html
உண்மைத்தமிழன் அண்ணே நேரமிருந்தா நீங்களும் கொஞ்சம் பாருங்க.]]]
எப்பூடி வந்து படிக்கிறேன்..
ஆனாலும் வராமலேயே ஒரு கருத்தைச் சொல்லிவிடுகிறேன்.. எம்.ஜி.ஆர். வேறு.. ரஜினி வேறு.. இருவரும் ஒன்றுபோல் தெரியவே முடியாது..!
ரசிகர்களின் ஆதரவு நிலையில் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி வருகிறார். இதை மட்டும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..!
[[[அது சரி said...
அண்ணே, சின்னப் பையனா இருக்கும் போது ஊர்ல கபடி பார்த்திருக்கேன். மூச்சு விடாம,
"நாந்தான் ங்கொப்பன் நல்ல முத்து பேரன் வெள்ளிப் பெரம்படுத்து வெளையாட வார்றேன்டா வார்றேன்டா வர்றேன்டா"
அப்படின்னு பாடிக்கிட்டே எதிர் டீம்ல பூந்து கலக்குவாங்க....அது மாதிரி பெரம்பே இல்லாம சும்மா பூந்து வெளையாடி இருக்கீங்க...
க்ளாஸ்!]]]
நன்றிங்கோ அது சரி..! நல்ல உவமைதான் போங்க..!
[[[அது சரி said...
//Jo Amalan Rayen Fernando said...
ஏன் வந்தாய். கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார்களென்றால். உயிருக்குப் ப்யமா? வந்த பின் மேடையேறி, என்னைக் கட்ட்டாயப்படுத்தி இங்கு கொண்டு வந்தார்கள் என்பது மேடை நாகரீகமா? //
என்ன ஒரு கேள்வி?!!! ஆஹா, ஆஹா, ஆஹா! முதலில் ஒருவனை வற்புறுத்தி என்னை வாழ்த்திப் பாடு என்பது மனித நாகரீகமா?? அப்படி வாழ்த்துக் கேட்பவனும் சுய அறிவுள்ள மனிதன்தானா?? ஆமாம், பயம்தான். பேய் அரசாளும் நாட்டில் தொழில் நடத்த மட்டுமல்ல, உயிருக்கும் பயம்தான்!//
யாருக்கு விழா நடாத்துகிறர்களே, அவரை முன் வைத்து கேவலப்படுத்த வேண்டுமென்பது உன் நோக்கமா?
அப்படியென்றால் ஏன் வந்தாய்? இவ்வளவு வீரமாக மேடையில் பேசும்னீ, ஏன் முதலிலே ‘என்னை எந்தக் கொம்பனாலும் மிரட்டி பணியவைக்க முடியாது’ என்று சொல்லி வரமாட்டேன் என்று சொல்ல உனக்கு ஏன் வீரம் வரவில்லை? வந்த பின் ஒட்டு மொத்தமாக - சங்கத்தையும், பாரட்டு பெற வேண்டியவரையும் ஏன் கேவலப்படுத்தினாய்?
இவைகளே சரியான் கேள்விகள்.
பதில்கள் உளவா?//
சொன்னதில் என்னக் தப்பு? ஒரு புழுவை குத்தினாலும் அது உயிருக்குப் போராடும்...எத்தனை நாள்தான் சும்மா இருக்கும்??
ஏதோ வருடம் ஒரு விழாவாக இருந்து, மாதம் ஒன்றாக மாறி, இப்பொழுது வாரம் ஒரு புகழ் பாடும் விழாவாக இருக்கிறது. எதற்கு இந்த ஈனப் பிழைப்பு?? மிரட்டுபவனை எத்தனை நாள்தான் புகழ்ந்து பாட முடியும்?? ஊரில் நடக்கும் நன்றி அறிவிப்பு விழாக்கள், அது சினிமா சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் இப்படித்தான் எல்லாரையும் கட்டாயப்படுத்தி டான்ஸ் ஆடச் சொல்லி நடக்கிறதா??
மிரட்டுகிறார்கள் என்று வெளியே சொல்வது கேவலம் என்றால், மிரட்டுவது என்ன??]]]
அது சரி.. எனக்குப் பதிலா பொங்கியிருக்கீங்க..!
உங்க பொங்கல் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு..
உதவிக்கு மிக்க நன்றிகள்..!
[[[அது சரி said...
நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் கருணாநிதிக்கு புகழ் வெறி தலைக்கேறி விட்டது போல தெரிகிறது. இனி விட்டால் தன் புகழ்பாட ஒரு துறை அமைத்து ஒவ்வொரு நாளும் தன்னை புகழ்ந்து பாட ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் மிச்சம். மற்ற அல்லைக்கைகள் அதை பயன்படுத்தி அவரை அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.
"என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலியே" என்று கேட்கும் அளவுக்கு வடிவேலு(கேரக்டர்)க்குகூட சுய பிரக்ஞை இருக்கிறது. ஆனால் கருணாநிதிக்கு???]]]
ம்.. என்னத்தை சொல்ல..!!!
இவருக்கு வடிவேலுவே பெட்டர்..!
[[[இவன் சிவன் said...
நான் இப்போ கொஞ்ச காலமா U.S.ல இருக்கேன். உங்க பதிவுகள படிக்கிறபோது, நம்ம ஊருல உட்காந்து டீ கடைல நண்பர்களோட பேசுற மாறி சுகமா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்னாடி சுஜாதா இறுதி ஊர்வலம் போன நிகழ்ச்சி பற்றி விவரிச்சு இருந்ததை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. நிறைய எழுதுங்கள், ஆவலாய் இருக்கிறோம்.
நன்றி இவன் சிவன்..
உங்களைப் போன்ற நண்பர்களால்தான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் ஏதாவது எழுதியே தீர வேண்டும்போல் தோன்றுகிறது..!
நன்றி.. நன்றி.. நன்றி..!
[[[ananth said...
இங்கே இவர்கள் நடத்துவது politics அல்ல. Poli-tricks. ஒன்று மதில் மேல் பூனை போல் எந்த பக்கமும் சாயாதவர்களை தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார்கள். அல்லது திரையுலமே திரண்டு வந்து பாராட்டியது போன்ற தோற்றத்தை உருவக்கப் பார்க்கிறார்கள். எது எப்படியோ நமக்கென்ன என்று இருக்க வேண்டியதுதான்.]]]
திரையுலகமே தன் பக்கம் என்றால் தமிழ்நாடே அவர்தான் என்ற எண்ணத்தை பாமர மக்கள் மத்தியில் புகுத்தி தன்னை ஒரு சக்கரவர்த்திபோல் அடையாளம் காட்டிக் கொள்ள நினைக்கிறார். அவ்வளவுதான்..
எல்லாம் மனம் படுத்தும்பாடு..!
[[[Thala said...
அட்டகாசம் அருமை. நான் படித்த மிக நல்ல பதிவுகளில் ஒன்று.
"தல போல வருமா."]]]
நன்றி தல..!
இனி வரவே வராது..!
[[[நித்யகுமாரன் said...
அண்ணே... class article.
அன்பு நித்யன்]]]
நன்றி தம்பி..!
எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..!?
//கண்ணா இது உங்க பதில்தான், பொருந்திச்சா? உமக்கு எம்.ஜி.ஆர் உசத்தியின்னா எங்களுக்கு ரஜினி உசத்தி. நீங்க குண்டு சட்டியில குதிரை ஓட்டினா நாங்க பொறுப்பாக முடியாது. ரஜினி எந்த விதத்திலும் எம்.ஜி.ஆருக்கு குறைந்தவரில்லை. இதை கொஞ்சம் பாரு கண்ணா.//
முருகா!
நான் எந்த நடிகனின் இரசிகனில்லை. நடிப்பை இரசிப்பதோடு சரி.
எம்.ஜி.ஆர். ஒரு எடுத்துகாட்டு.
நீங்கள் யாரின் இரசிகன் என்பதை முதலிலேலே சொல்லியிருக்கலாமே?
இரசனி-அசித்து இரசிகர் என்றால் என்ன எழுதுவார் என்பது தெரிந்தால் அந்த இரசிகர் கூட்டம் மட்டுமே இங்கு வரலாம். என்னைப்போன்றவர்கள் இங்கு வராமலிருக்க் உதவுமே!
தமிழர்கள் சினிமா நாயகர்களால் கெட்டார்கள் என நினைப்போரில் நானும் ஒருவன்
நல்லா எழுதிருக்கீங்க சார். குற்றம் நடந்தது என்ன? நிகழ்ச்சி பாக்கற எஃபெக்டு குடுத்துச்சு இந்த போஸ்ட்.
இதுல இவ்ளோ மேட்டர் இருக்குன்னு இப்போ தான் புரியுது.
எனது லேட்டஸ்ட் நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் வெளியிட்டது உங்களது இப்பதிவை பார்த்துத்தான், பார்க்க: http://dondu.blogspot.com/2010/02/23022010.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சொன்னதில் என்னக் தப்பு? ஒரு புழுவை குத்தினாலும் அது உயிருக்குப் போராடும்...எத்தனை நாள்தான் சும்மா இருக்கும்??
ஏதோ வருடம் ஒரு விழாவாக இருந்து, மாதம் ஒன்றாக மாறி, இப்பொழுது வாரம் ஒரு புகழ் பாடும் விழாவாக இருக்கிறது. எதற்கு இந்த ஈனப் பிழைப்பு?? மிரட்டுபவனை எத்தனை நாள்தான் புகழ்ந்து பாட முடியும்?? ஊரில் நடக்கும் நன்றி அறிவிப்பு விழாக்கள், அது சினிமா சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் இப்படித்தான் எல்லாரையும் கட்டாயப்படுத்தி டான்ஸ் ஆடச் சொல்லி நடக்கிறதா??
மிரட்டுகிறார்கள் என்று வெளியே சொல்வது கேவலம் என்றால், மிரட்டுவது என்ன??]]]//
முருகா
இதில் எனக்கும் உடன்பாடு உண்டு. யாருக்குத்தான் மிரட்டல் பிடிக்கும்? குழந்தையைக்கூட மிரட்டி பணியவைக்க முடியாது.
2. பாராட்டு விழா நாளைக்கொன்று. கூடி நின்று கூவிப்பிதற்றல். காக்காய் பிடித்தல், பலனுக்காக பல்லிளித்தல். இவையெல்லாம் நல்ல மனிதருக்குப் பிடிக்கா.
ஆனால், இவை என் கருத்தில் அலசப்படவில்லை.
என் கருத்தில் பேசப்பட்டது:
இடம், காலம் - இவற்றைக் கணித்து நிதானமாக பொது மேடையில் பேசுபவன் படித்தவன். அப்படிப்பேசுவது மேடை நாகரிகமாகும்.
மாறாக, மேடையேறி, ‘என்னை இங்கே வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விட்டார்கள் என்பது மேடை நாகரிமல்ல.
பிடிக்காதவர்கள் வாழ்க்கையில் அனேகம். அவர்களுள் ஓரிருவரிடம் நாம் பழகவேண்டிய கட்டாயம் வரத்தான செயயும். சமூகப்பண்பாடு (etiquette) கருதி நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்ததான் வேண்டும்.
என் மேலதிகாரியை எனக்குப்பிடிக்க வில்லயென்றால், அதைக்காட்ட எனக்கு பலவழிகள் உள. மாறாக, பொதுமக்கள் குழுமியிருக்கும் மேடையில் ஏறி நான் அவரைத் திட்ட முடியாது.
கருனாதியை நிகழ்ச்சிக்குப்பின் அவர் வீட்டில் போய் சந்திக்க முடிந்த அசித்தால்,ஏன் நிகழ்ச்சிக்கு முன், எனக்கு வர விருப்பமில்லை. கட்டாயபபடுத்தி மிரட்டுகிறார்கள்’ என்று ஏன் சொல்லவில்லை. குறைந்தது இரசினியிடம் சொல்லியிருக்கலாமே? இரசனிக்கே மேடையில்தானே தெரிந்தது!
எனவே, அசித்தின நடத்தையை ‘தைரியம்’ என்றெல்லாம் பாராட்ட முடியாது.
அஃது ஒரு குழந்தைப்பேச்சு. In spite of education and experience, he lacks elementary knowledge of social etiquette. கோட்டு சூட்டு போட்டால் போதாது. Social graces and manners should accompany your high profile dress.
ஒரு மதன் கார்ட்டூனில், ரங்குடு என்ற சின்னப்பயைன், வீட்டில் விருந்தாளியுடன் அவன் அப்பா பேசிக்கொண்டிருக்கும்போது,
‘அப்பா..வீட்டில் பாலில்லையாம். காப்பி போடமுடியாதாம். அம்மா சொல்லச்சொன்னாள்”
என்பான்.
இதை நாம் இசிக்கிறோம். ஏனென்றால், அது குழந்தை.
பெரியவர் ஒருவர் அதைச்சொன்னால்?
வெள்ளிக்கிழமை பாராட்டு விழா ஒரு முன்னோட்டமாம்..அதாவது உடை மாற்றுவது முதற்கொண்டு சகலமும்..உங்கள் கலைஞர் தொலைகாட்சியில்...
/ எப்பூடி ... said...
'முத்தமிழை வித்தவன்' /
சத்தமா சொல்லாதிங்க. இந்த பட்டத்துக்கும் ஒரு பாராட்டு விழா எடுத்து எல்லோரையும் அவுத்து போட்டு ஆட சொல்ல போறாங்க.
/சத்தமா சொல்லாதிங்க. இந்த பட்டத்துக்கும் ஒரு பாராட்டு விழா எடுத்து எல்லோரையும் அவுத்து போட்டு ஆட சொல்ல போறாங்க./
தலைவரோட காலர் டோன் தெரியுமா !
நீ மார்லின் மன்றோ குலோநிங்கா ! இல்ல ஜெனிபர் லோபஸின் ஸ்கேனிங்கா ? ஒன்டே மட்டும் கேர்ல் பிரண்டாக வரியா !
//என் மேலதிகாரியை எனக்குப்பிடிக்க வில்லயென்றால், அதைக்காட்ட எனக்கு பலவழிகள் உள. மாறாக, பொதுமக்கள் குழுமியிருக்கும் மேடையில் ஏறி நான் அவரைத் திட்ட முடியாது.//
அசித்து சம்பளம் கொடுக்கற ப்ரொடியூசர் ஊட்டு காது குத்துக்கு போயி இப்பிடி பண்ணினா நீங்க சொல்றது வாஸ்தவம் .
அரசியல் வாதிகளுக்கு என்ன ........... கு பொது ஜனம் மரியாதை குடுக்கணும்
//என் மேலதிகாரியை எனக்குப்பிடிக்க வில்லயென்றால், அதைக்காட்ட எனக்கு பலவழிகள் உள//
பட்டியல் இட்டால் மேலதிகாரிகளுக்கு கடுக்கா கொடுக்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்!
நீங்கள் கடுக்கா கொடுத்த அனுபவத்தை எழுதினால் கூட போதும், பயன்படுத்தி கொள்வோம்!
அவர் வீட்டுக்கு போயி சரக்கடிச்சு நடு ஹாலில் வாந்தி எடுத்து எதிர்ப்பை பதிவு செய்யலாம்
அவர் வீடு நாயை வாக்கிங் கூட்டிட்டு வரும்பொழுது அதற்கு வெடி வைத்து பயமுறுத்தி உங்கள் கண்டனத்தை தெரிவிக்கலாம்
//அவர் வீட்டுக்கு போயி சரக்கடிச்சு நடு ஹாலில் வாந்தி எடுத்து எதிர்ப்பை பதிவு செய்யலாம் //
சரக்கு யார் செலவு!?
//அவர் வீடு நாயை வாக்கிங் கூட்டிட்டு வரும்பொழுது அதற்கு வெடி வைத்து பயமுறுத்தி உங்கள் கண்டனத்தை தெரிவிக்கலாம்//
யாரை நாய்னு சொல்றிங்க! அதை முதலில் தெளிவா சொல்லுங்க!
//சரக்கு யார் செலவு!?
//
வழக்கம் போல தான் ! கழகத்துல சரக்குக்கா பஞ்சம்
//யாரை நாய்னு சொல்றிங்க! அதை முதலில் தெளிவா சொல்லுங்க! //
நாய் என்பார்
பேய் என்பார்
நாணி நிற்பார்
நாசமத்துப் போவார்
பட்டாங்கில் உள்ளபடி
//நாய் என்பார்
பேய் என்பார்
நாணி நிற்பார்
நாசமத்துப் போவார்
பட்டாங்கில் உள்ளபடி//
ஹாஹாஹா!
உங்களை கேணிகுள்ள தான் தூக்கி போடனும்!
ரெண்டு பேருக்கும் ஆணி இல்லன்னு நெனக்கிறேன்...
//ரெண்டு பேருக்கும் ஆணி இல்லன்னு நெனக்கிறேன்... .//
நான் இன்னைக்கி லீவே போட்டுட்டேன் !
தமிலிஷில் அரை சதம் கண்டதற்கு உ.த. அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
//வால்பையன் said...
//அவர் வீட்டுக்கு போயி சரக்கடிச்சு நடு ஹாலில் வாந்தி எடுத்து எதிர்ப்பை பதிவு செய்யலாம் //
சரக்கு யார் செலவு!?//
விழாவுக்கு யார் செலவு செய்ததோ அவங்க தான்...
கும்மி ஓவராதான் இருக்கு
//வால்பையன் said...
அவர் வீட்டுக்கு போயி சரக்கடிச்சு நடு ஹாலில் வாந்தி எடுத்து எதிர்ப்பை பதிவு செய்யலாம் //
//ஜெய்லானி said...
கும்மி ஓவராதான் இருக்கு//
மக்களே இது ரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
உ.த.நண்பரே,
வருகையெல்லாம் தந்து கொண்டு தான் இருக்கிறேன். அதாவது, உங்கள் இடுகைகளை வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
கமெண்ட் தான் போடுவதில்லை :-)
அன்புடன்
நல்லதந்தி
//மக்களே இது ரெண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//
ஹா ஹா ஹா !
அடிங்கடா
அடிங்கடா
வளச்சு வளச்சு அடிங்கடா
ஆட்சி மாறியதும் உங்கள் வலைபதிவு அண்ணா நூலகத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எல்லாம் சரி உ.த அண்ணே.. ஆனா நீங்க ரொம்ப ஓவரா சொல்லுறது மாதிரி இருக்குறது இங்க தான்.
////[[[என் கேள்வி : கருனானிதியைப் பிடிக்கவில்லை என்றாய் ஏன் வருகிறாய் மேடைக்கு? மேடையிலே எவரேனும் உன்னை கேவலப்படுத்திப் பேசினார்களா? அவமானப்படுத்தினார்களா? இல்லையே!]]]
அவமானப்படுத்தி அழைத்ததால்தான் அதை வெளிப்படுத்த நினைத்து மேடைக்கு வந்தார். பேசினார்.. அவ்வளவுதான்..!//
அதை வெளிப்படுத்தத் தான் மேடைக்கு வந்தார் என்றால் "கலைஞர் 60 வருடங்களுக்கு மேல் தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். சூரியனை வாழ்த்த வயது தேவையில்லை. ஒவ்வொரு பொங்கலின்போதும் சூரியனுக்கு பொங்கல் வைத்து படைக்கிறோம். அது போல்தான் இந்த விழா." என்று ஏன் ஜால்ரா அடிக்க வேண்டும் ..அல்லது ஆஜீத் உண்மையைத்தான் பேசினார் என்றால் ,இதுவும் உண்மை தானா ?
>>அது போல்தான் இந்த விழா." என்று ஏன் ஜால்ரா அடிக்க வேண்டும் ..அல்லது ஆஜீத் உண்மையைத்தான் பேசினார் என்றால் ,இதுவும் உண்மை தானா ?
idhu vancha pugalchi aani ... if u donot know ... ur leader MK knows it well .. he always uses it ...
ஒரு கேள்வி
பிளான் பண்ணி பேச வில்லை என்று சொல்லும் அஜித் .... அந்த விழாவுக்கு வெட்டி சட்டையுடன் அரசியில் வாதி போல் வந்து ஏன் ?
கோட் சூட் வழக்கமாக போடும் அஜித் .. வேட்டை சட்டையில் வந்து ஏன் ?
:) .. எதுனா உள் குத்து இருக்குமோ ?
[[[Jo Amalan Rayen Fernando said...
தமிழர்கள் சினிமா நாயகர்களால் கெட்டார்கள் என நினைப்போரில் நானும் ஒருவன்.]]]
உங்களுடைய நினைப்பில் நான் மண்ணையள்ளிப் போட விரும்பவில்லை.. அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள்..!
[[[கைப்புள்ள said...
நல்லா எழுதிருக்கீங்க சார். குற்றம் நடந்தது என்ன? நிகழ்ச்சி பாக்கற எஃபெக்டு குடுத்துச்சு இந்த போஸ்ட். இதுல இவ்ளோ மேட்டர் இருக்குன்னு இப்போதான் புரியுது.]]]
ரொம்ப நாள் கழிச்சு ஆஜர் கொடுத்திருக்கும் கைப்புள்ளைக்கு ஒரு ரோஜாக்கொத்து பரிசு..!
[[[dondu(#11168674346665545885) said...
எனது லேட்டஸ்ட் நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் வெளியிட்டது உங்களது இப்பதிவை பார்த்துத்தான், பார்க்க: http://dondu.blogspot.com/2010/02/23022010.html
அன்புடன்,
டோண்டு ராகவன்]]]
நன்றிகள் ராகவன் ஸாருக்கு..!
[[[Jo Amalan Rayen Fernando said...
என் கருத்தில் பேசப்பட்டது: இடம், காலம் - இவற்றைக் கணித்து நிதானமாக பொது மேடையில் பேசுபவன் படித்தவன். அப்படிப் பேசுவது மேடை நாகரிகமாகும்.
மாறாக, மேடையேறி, ‘என்னை இங்கே வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விட்டார்கள் என்பது மேடை நாகரிமல்ல. பிடிக்காதவர்கள் வாழ்க்கையில் அனேகம். அவர்களுள் ஓரிருவரிடம் நாம் பழகவேண்டிய கட்டாயம் வரத்தான செயயும். சமூகப் பண்பாடு (etiquette) கருதி நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்ததான் வேண்டும்.
என் மேலதிகாரியை எனக்குப் பிடிக்கவில்லயென்றால், அதைக் காட்ட எனக்கு பலவழிகள் உள. மாறாக, பொதுமக்கள் குழுமியிருக்கும் மேடையில் ஏறி நான் அவரைத் திட்ட முடியாது.
கருனாதியை நிகழ்ச்சிக்குப் பின் அவர் வீட்டில் போய் சந்திக்க முடிந்த அசித்தால்,ஏன் நிகழ்ச்சிக்கு முன், எனக்கு வர விருப்பமில்லை. கட்டாயபபடுத்தி மிரட்டுகிறார்கள்’ என்று ஏன் சொல்லவில்லை. குறைந்தது இரசினியிடம் சொல்லியிருக்கலாமே? இரசனிக்கே மேடையில்தானே தெரிந்தது!
எனவே, அசித்தின நடத்தையை ‘தைரியம்’ என்றெல்லாம் பாராட்ட முடியாது. அஃது ஒரு குழந்தைப் பேச்சு. In spite of education and experience, he lacks elementary knowledge of social etiquette. கோட்டு சூட்டு போட்டால் போதாது. Social graces and manners should accompany your high profile dress.
ஒரு மதன் கார்ட்டூனில், ரங்குடு என்ற சின்னப் பயைன், வீட்டில் விருந்தாளியுடன் அவன் அப்பா பேசிக் கொண்டிருக்கும்போது,
‘அப்பா.. வீட்டில் பாலில்லையாம். காப்பி போட முடியாதாம். அம்மா சொல்லச் சொன்னாள்”
என்பான். இதை நாம் இசிக்கிறோம். ஏனென்றால், அது குழந்தை.
பெரியவர் ஒருவர் அதைச் சொன்னால்?]]]
ஐயா.. இவ்வளவு பின்னூட்டங்களையும் நன்கு புரிந்து படித்தீர்கள் அல்லவா..? இன்னுமா புரியவில்லை.
அஜீத் பேசியது இந்த விழா சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல.. காவிரி பிரச்சினையில் தொடங்கி பல்வேறு பிரச்சினைகளுக்கும் சேர்த்துத்தான்..!
அதனால்தான் அவர் மேடையில் அதைக் குறிப்பிட்டது இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டு தங்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பார்களே என்பதற்காகத்தான்..!
உங்களுக்கு இது தப்பா இருந்தா அது தப்பாவே இருந்து தொலையட்டும்.. விட்ருங்க..!
[[[தண்டோரா ...... said...
வெள்ளிக்கிழமை பாராட்டு விழா ஒரு முன்னோட்டமாம். அதாவது உடை மாற்றுவது முதற்கொண்டு சகலமும். உங்கள் கலைஞர் தொலைகாட்சியில்.]]]
அப்போ மூணு நாள் கல்லா கட்டுது அந்த டிவி..!
ஓஹோ.. பேஷ்.. பேஷ்.. ரொம்ப நன்னாயிருக்கு..!
Post a Comment