16-02-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்த துரதிருஷ்டம் உங்களுக்கு வந்திருக்க வேண்டாம்தான்..! ஆனால் எனக்கும் வேறு வழியில்லை..!!
அதிர்ஷ்டத்தை என் வாழ்க்கையில் நான் இதுவரையிலும் பார்த்திருக்காத காரணத்தினாலும், இனிமேலும் பார்ப்பேன் என்று நினைக்கக்கூட முடியாத நிலையில் நான் இருப்பதினாலும் இது எனக்குப் புதியதல்ல.
உதிர்ந்த இலைகளெல்லாம் காற்றின் ஊடலையும் தூசிகளை உள்வாங்கிக் கொண்டு குறைந்தபட்சத்தை வெளிக்காட்டி நல்லதொரு தொண்டுள்ளம் செய்வதை நாம் உணர்ந்ததில்லை. உதிராமல் இருந்துவிடலாமே என்று அதுவும் நினைப்பதில்லை.. காலமாற்றம் நமக்கு மட்டுமல்ல.. இயற்கையின் அத்தனைக்கும் உண்டு. சிறகுகள் உதிர்ந்து சருகுகளாகி அப்போதும் அவைகள் யாரோ ஒரு இயற்கையின் படைப்புகளுக்குப் பயன்படுகின்றன என்பதுதான் அவற்றின் சிறப்பு.
வந்தோம்.. சென்றோம்.. என்றில்லை.. அத்தனையிலும் ஒரு காரண, காரியம் இருக்கிறது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தாலே வாழ்க்கையின்போக்கில் நாமும் போய்விடலாம்.
அப்படித்தான் யயாதியின் வம்சத்தில் ஒருவனாக வேட்கை கொண்டலையும் அவன் வழித்தோன்றலில் எளியவனாக எதையோ தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். அது எது என்பதுதான் இன்றுவரையில் தெளிவாகப் புலப்படாததால் கண்ணில் படுபவற்றையெல்லாம் அற்புதம், அழகு என்றெல்லாம் மிகை உணர்ச்சியின் விளம்பில் நின்று வினாவெழுப்ப மனமில்லாமல் மனம் நிற்கிறது.
இடைத்தங்கலில் இளைப்பாறி, களைப்பாறிய உள்ளம் உற்சாகமாகி மீண்டும் குதிரையோட்டத்துக்கு தயாரானதுபோல் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டு வந்திருக்கிறேன். வருவது வரட்டும்.. போகிற போக்கில் என் தோல் உரிவதையும் காலச்சுழற்சியின் ஒரு அங்கமாக நினைத்து அதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்தான்.
அந்த சந்தோஷத்துடனேயே மீண்டும் பதிவெழுத வருகிறேன்.. வந்திருக்கிறேன்.. இடையில் எழுதாமல் போனவைகள் எத்தனை.. எத்தனையோ.. அத்தனையும் திரும்பவும் எழுத எண்ணினாலும் கொட்டிப் போட்ட வார்த்தைகளை அத்தனையையும் அள்ளிவீசினாலும் தகுந்த இடம், சமயம் பார்த்து பிரயோகிக்கவில்லையெனில் அவை அத்தனையும் வீண்தான் என்று வில்லாதி வில்லன் அர்ஜூனனுக்கு யயாதியின் வாரிசு தர்மன் அருளிய உரை எனக்கு நியாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.
கடந்ததை மறந்து, நடந்ததை விட்டெண்ணி இனி வருவதை எதிர்கொள்வோம் என்று மறுபடியும் கடிகார முள் போன்று தரையிறங்கியிருக்கிறேன்.
ஓடுவதும், குதிப்பதும், சிரிப்பதும், சந்தோஷப்படுவதும், அழுவதும், துக்கப்படுவதுமாக அனைத்துமே இனி இங்கேயே இருக்கட்டுமே என்றெண்ணி எழுத முயல்கிறேன்.
வருகையை எதிர்பார்த்து பயத்துடன் காத்திருக்கும் நண்பர்களுக்கும், ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பர்களுக்கும், சொல்லொண்ணா நட்பை மறைத்துவைத்துக் கொண்டு முகமன் மட்டுமே காட்டி வரும் நட்பாளர்களுக்கும் எனது இனிய நட்பு கலந்த அன்பு வணக்கம்.

|
Tweet |
81 comments:
ம்,, கிளப்புங்கள் ., தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேன்டாமா?
முதலில் தேவையற்ற விட்ஜெட்டுகளை களையவும். உங்களது வலைப்பூ இல்லம் மட்டும் திறக்கிறது. குறிப்பிட்ட பதிவுகள் பக்கங்களை சொடுக்கினால், வேறு தளத்துக்கு திசை திருப்பப்படுகிறோம்.
பலருக்கு இதே பிரச்சினை வந்தது. என்ன சனியன் பிடித்த விட்ஜெட்டை கடைசியாக இணைத்தீர்கள்?
நான் பின்னூட்டம் இடுவது கூட இல்லத்திலிருந்து பின்னூட்டம் இடும் பிளாக்கர் பக்கம் வந்துதான் செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
welcome back
டோண்டு சொல்லியதற்கு ஒரு ரிப்பீட். எனக்கும் அப்படித்தான் ஆகிறது. அதனால் என்ன, படிக்காவிட்டால் ஜாலியா எஸ் ஆக வேண்டியதுதானே என்று மற்றவர்கள் கேட்பது புரிகிறது :)
[[[வெள்ளிநிலா ஷர்புதீன் said...
ம்,, கிளப்புங்கள் ., தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேன்டாமா?]]]
என்னைத்தான் கிழிச்சுத் தொங்கவிடப் போறாங்க..!
[[[dondu(#11168674346665545885) said...
முதலில் தேவையற்ற விட்ஜெட்டுகளை களையவும். உங்களது வலைப்பூ இல்லம் மட்டும் திறக்கிறது. குறிப்பிட்ட பதிவுகள் பக்கங்களை சொடுக்கினால், வேறு தளத்துக்கு திசை திருப்பப்படுகிறோம்.
பலருக்கு இதே பிரச்சினை வந்தது. என்ன சனியன் பிடித்த விட்ஜெட்டை கடைசியாக இணைத்தீர்கள்?
நான் பின்னூட்டம் இடுவது கூட இல்லத்திலிருந்து பின்னூட்டம் இடும் பிளாக்கர் பக்கம் வந்துதான் செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்]]]
நீக்கிவிட்டேன் ஸார்.. அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி..!
[[[T.V.ராதாகிருஷ்ணன் said...
welcome back]]]
அதான் வந்தாச்சே ஸார்..!
[[[ஜ்யோவ்ராம் சுந்தர் said...
டோண்டு சொல்லியதற்கு ஒரு ரிப்பீட். எனக்கும் அப்படித்தான் ஆகிறது. அதனால் என்ன, படிக்காவிட்டால் ஜாலியா எஸ் ஆக வேண்டியதுதானே என்று மற்றவர்கள் கேட்பது புரிகிறது :)]]]
அப்படீல்லாம் நான் நினைக்கலீங்கண்ணே..!
பார்த்து படிச்சிட்டு கருத்தைச் சொல்லுங்கண்ணே..!
நண்பர்கள் ஜீவ்ஸ் மற்றும் யுவர்பிரெண்ட்சென்னை இருவரும் என் மீது தனி அக்கறை எடுத்து இந்த wizom.net என்னும் சனியனை ஒழிக்க முயற்சி செய்தார்கள்..
ஜீவ்ஸ் முந்திக் கொண்டு செய்து கொடுத்துவிட்டார். அவருக்கு எனது நன்றிகள்..
யுவர்பிரெண்ட்சென்னை நண்பர் முயற்சிகள் செய்கின்ற வேளையில் தளம் சரியாகிவிட்டது. அவருக்கும் எனது நன்றிகள் கோடி..!
வாங்க....வாங்க
vaanga vaanga anna... meendum meendu vandhadhil mikka magizhchi :) :)
Welcome back uncle
கலக்குங்க தல.
welcome :)
வாங்கண்ணே வாங்க :)
வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்...
அண்ணே ரொம்ப பசிக்குது...வந்தக்கையோட சர்க்கரைபொங்கல், இட்லி, வடை, காரசட்டினி, தக்காளி சட்டினி பதிவு ஒண்ணுப்போடுங்க...
எப்படி திரும்ப எடுத்தீங்க? என்னோட பழைய வலைப்பூ போனது போனதுதான்...
welcome backkkkkkkkkkkkk
போன தடவை உள்ளே நுழைந்த பொழுது என்னை வேற பக்கத்துக்கு திருப்பி விட்டார்கள். எகொசஇ?
வர்றதுன்னு வந்தாச்சு! அப்புறம் எதுக்கு இத்தனை சலிப்பு? எதுக்கு இத்தனை வாறல்?
சலிச்சுக்கரதுல பாருங்க, முருகனைத் துணைக்குக் கூப்பிட்டு வம்புக்கிழுக்க மறந்துட்டீங்களே முருகா!
உங்கள கண்டுபிடிச்சிட்டாங்களா!மகிழ்ச்சி.
\\முருகனைத் துணைக்குக் கூப்பிட்டு வம்புக்கிழுக்க மறந்துட்டீங்களே முருகா\\
முருகா.. முருகா
வாழ்த்துகள்..
Welcome அண்ணே!!! :)
dear saravanan,
welcome back. hope you had adequate break to take your energy level to newer heights. waiting for your inimitable writings
jigopi
வாங்கோண்ணா.. வாங்கோ!
:).. welcome back..
என்ன இனி எழுதப்போகிறீர்கள் என்பதிலே எல்லா அடங்கும்.
நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.
ஆடின காலும், பதிவெழுதின கையும் சும்மாவே இருக்காது...
அடிக்கடி எழுதுங்க, எவ்வளவோ தாங்கிட்டோம், இதயும் தாங்க மாட்டோமா??? :) :) :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இந்த இடுகையை எழுதியது உண்மை தமிழனான்னு ஐயமா இருக்கு. இடுகையின் நீளம் குறைச்சலா இருக்கே கவனிச்சிங்களா? மேலும் முருகனை வேற அவர் கூப்பிடலை, யயாதி யயாதி அப்படிங்கறார்.
இரண்டு மாதம் இடுகை எழுதாம இருந்தபோது ஏதாவது இலக்கிய பத்திரிக்கைகளில் சேர்ந்துட்டாரா? இந்த இடுகை அவர் பாணியில் இல்லையே அதாவது ஒன்னும் புரியலையே... (அப்ப இதுவரைக்கும் எழுதியது எல்லாம் புரிஞ்சுதான்னு கேக்காதிங்க)
அப்பனே முருகா என்ன சோதனை இது.
யயாதியின் வம்சத்தில் ஒருவனாக வேட்கை கொண்டலையும்
அவன்
வழித்தோன்றலில் எளியவனாக எதையோ தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.
அது எது என்பதுதான் இன்றுவரையில் தெளிவாகப் புலப்படாததால் கண்ணில் படுபவற்றையெல்லாம் அற்புதம், அழகு என்றெல்லாம் மிகை உணர்ச்சியின் விளம்பில் நின்று வினாவெழுப்ப மனமில்லாமல்
மனம் நிற்கிறது.
அண்ணே கவிதை கலக்கல்..:))
எங்களுக்கு கொஞ்சம் கூகிள்ல இடம் விட்டு சும்மா எழுதி தள்ளுங்க..
-----
ஹலோ சார் கொஞ்சம் நில்லுங்க கண்ணாஸ்பத்திரிக்கு எப்படி போணும்.:)
வாங்க வாங்க
நன்றி ஈரோடு ஜாபர்..!
நன்றி கனகு.. ஞாபகம் இருக்குல்ல..!
நன்றி ஷாகுல்ஜி..!
நன்றிங்கோ தராசு..!
வாம்மா மின்னலு..!
அசோக் தம்பி.. நன்னி..!
நாஞ்சில் பிரதாப் ஸாரே.. கடை தொறந்த அன்னிக்கே அல்லாத்தையும் கேட்டீங்கன்னா எப்படி..?
பழைய வலைப்பூ கேட்டு கண்ணீர் மல்க கடுதாசி போட்டேன் பிளாக்கர் கம்பெனிக்கு.. அதான் போய்த் தொலைன்னு சொல்லித் திருப்பிக் கொடுத்துட்டான்.. நீங்களும் இதையே பாலோ பண்ணிப் பாருங்க..!
நன்றி கல்ப் தமிழன்..!
பாப்பு.. அந்த சனியனை ஒழிச்சுக் கட்டிட்டேன்.. இப்ப சரியா இருக்கும் பாருங்க..!
கிருஷ்ணமூர்த்தி ஸார்..
வரவைச்சதுக்குப் பின்னால ஒரு மகாபாரதக் கதையே இருக்கு..! அதுனாலதான் சலிப்பு..! ஆனாலும் முருகனை ஏன் கூப்பிடலைன்றதுக்கும் ஒரு காரணம் இருக்கு..
எல்லாம் அந்த நாசகாரப் பயலாளதான்..!அப்புறம் எப்படி கூப்பிடுறதுக்கு மனசு வரும்..?
ராஜநடராஜன்.. யாரும் கண்டுபிடிக்கலை.. நானேதான் திரும்பி வந்திருக்கேன்..!
நிகழ்காலத்தில் ஸார்.. படுத்தி எடுக்குறதுக்குன்னே அவதாரம் எடுத்திருக்கான்.. அவனைக் கூப்பிட்டு நானே என் சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கணுமா..?
அன்புடன் மணி.. நன்றிங்கோ..!
கோபி ஸார்..
உங்களுடன் தொலைபேசியில் பேசிய பின்பு சட்டென்று ஒரு மாற்றம் பார்த்தீங்களா..?
சென்ஷி தம்பி.. வந்துட்டேன் ராசா..
கலகலப்பான ப்ரியாம்மா.. வரவேற்புக்கு நன்றி..!
பெர்னாண்டோ ஸார்.. உங்க ஆசீர்வாதத்திற்கு மிக்க நன்றிகள்..!
[[[sriram said...
ஆடின காலும், பதிவெழுதின கையும் சும்மாவே இருக்காது... அடிக்கடி எழுதுங்க, எவ்வளவோ தாங்கிட்டோம், இதயும்தாங்க மாட்டோமா??? :) :) :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்]]]
ஆமாம்.. பின்ன.. நான் எம்புட்டு கை வலிக்க எவ்ளோ எழுதியிருப்பேன்.. தாங்க வேண்டாமா..? என்னைத் தாங்க வேண்டாமா..?
[[[குறும்பன் said...
இந்த இடுகையை எழுதியது உண்மைதமிழனான்னு ஐயமா இருக்கு. இடுகையின் நீளம் குறைச்சலா இருக்கே கவனிச்சிங்களா? மேலும் முருகனை வேற அவர் கூப்பிடலை, யயாதி யயாதி அப்படிங்கறார். இரண்டு மாதம் இடுகை எழுதாம இருந்தபோது ஏதாவது இலக்கிய பத்திரிக்கைகளில் சேர்ந்துட்டாரா? இந்த இடுகை அவர் பாணியில் இல்லையே அதாவது ஒன்னும் புரியலையே... (அப்ப இதுவரைக்கும் எழுதியது எல்லாம் புரிஞ்சுதான்னு கேக்காதிங்க) அப்பனே முருகா என்ன சோதனை இது.
சோதனையைக் கொடுக்கிறதே அந்த கோவணான்டிதானே..!?
இதுவரைக்கும் நான் எழுதினதெல்லாம் எனக்கே புரிஞ்சதில்ல.. உங்களுக்கு எப்படி புரி..?!!!
படம் சூப்பர்! :)))))
Welcome Back.....
எப்படி மீண்டு(ம்) வந்தீர்கள் என்பதை ஒரு பெரிய தொடர்கதையாக எழுதவும். :) அப்பன் முருகனைத் திட்டினால் எப்படி சரியாகும்? நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் ;)
welome Brother...
வாங்க.. வாங்க...
எல்லா சோதனைகளும் விரைவில் விலக ஆண்டவனை வேண்டுகிறேன்.
சீக்கிரம் எங்களுக்கு இட்லி-வடை-சாம்பார்-பொங்கல்-பூரில்லாம் சீக்கிரம் போடுங்க......
ஆஹா.. அண்ணன் வலைப்பூவை யாராச்சும் ஹேக் பண்ணிட்டாங்களா? இவ்ளோ சின்ன பதிவா இருக்கே..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
வாங்க... வாங்க... கூடிய சீக்கிரம் விட்ட(த்)தை பிடிச்சிடலாம்... :))
மீண்டும் வாங்க உண்மைத் தமிழன்:).
/*ஞாபகம் இருக்குல்ல..!*/
marakka mudiyuma???? ungala Cable anna puthaga veliyeetu vizha photo la paathen... naan than vara mudiyala..
vandhurundha meet panni irukalam... paapom na... next week ashok nagar varuven nu nenaikeren.. phone panren... :)
என்னமோ சந்தோசமா இருக்கேன்னு சொன்னிங்க....
சரி சரி சட்டுப்புட்னு இட்லி வடை பொங்கல் தோசை
ரவா கேசரி பூரி மசாலா பரோட்டா காபி போடுங்க
தலைவரே..........
vaarungkal ursaaka patuththukirom. vaalthhthukkal.
வாங்க வாங்க... ஏதோ மாற்றம் தெரியுதே!
வருக வருக ..., வாழ்க வளமுடன் .
வழி மேல் விழி வைத்து. கழிவிரக்கம் என்பது கழிக்க வேண்டியது?
இடுகை இத்துணூண்டா இருக்கு?!!?!?!
உண்மையிலேயே உண்மைத்தமிழன் எழுதுனதுதானா??
இடுகை இத்துணூண்டா இருக்கு?!!?!?!
உண்மையிலேயே உண்மைத்தமிழன் எழுதுனதுதானா??
இடுகை இத்துணூண்டா இருக்கு?!!?!?!
உண்மையிலேயே உண்மைத்தமிழன் எழுதுனதுதானா??
welcome back unmaithamilan sir!!
Welcome back brother..
\\இந்த துரதிருஷ்டம் உங்களுக்கு வந்திருக்க வேண்டாம்தான்..! ஆனால் எனக்கும் வேறு வழியில்லை..!!//
எங்களுக்கும் வேற வழி இல்லைனே, ஏன் என்றால் உங்களை நாங்க பாலோ பண்ணுறோம் :(
\\கடந்ததை மறந்து, நடந்ததை விட்டெண்ணி இனி வருவதை எதிர்கொள்வோம் என்று மறுபடியும் கடிகார முள் போன்று தரையிறங்கியிருக்கிறேன்.
ஓடுவதும், குதிப்பதும், சிரிப்பதும், சந்தோஷப்படுவதும், அழுவதும், துக்கப்படுவதுமாக அனைத்துமே இனி இங்கேயே இருக்கட்டுமே என்றெண்ணி எழுத முயல்கிறேன்.//
சந்தோசமா வரவேற்கிறோம் எழுதுங்க அண்ணே
வாங்க... புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்னீங்க. எங்க காணுமேன்னு நினச்சேன். வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.
வாங்கண்னே...நாங்க ரெடி...
அது யாருங்க யயாதி? மகாபாரதத்திலே வராரே அவரா? நீங்க எப்படி அவரு வழிலே? எனக்கு புரியலே.
anne welcome back, சிங்கம் களம் எறங்கிடுச்சி..........
இனிமே ஒரு பய என்னைய ஒன்னும் பண்ண முடியாது, இவ்வளவுநாள் இந்த வலையுலகில் லாடு லபக்குன்னு பேசுனவங்க எல்லோருக்கும் நான் அறைகூவல் விடுகிறேன் இப்ப வாங்கடா என் தலைவன் வந்திருக்கிறான் இப்ப அடி இப்ப அடி, டேய் வாட வாட மோதிப் பாத்துடுவோம் நீயா நானான்னு.
தலிவா நீ கிங்கு
தினமும் வந்து பார்த்து போவது வழக்கம். அத்தி பூத்து விட்டது...தொடர்ந்து பூக்கட்டும்..வாழ்த்துக்கள்..
நன்றி அகராதி..
நன்றி ரவிச்சந்திரன்..
ராதா ஸார்.. எல்லாவற்றிற்கும் நானேதான் காரணம்..!
மிஸஸ் மேனகாசத்யா.. தங்களின் முதல் வருகைக்கு நன்றி..!
கண்ணா.. வரவேற்புக்கு நன்றி..!
தம்பி சஞ்சய்.. பதிவு நானேதான் எழுதினேன்.. மொதல்லேயே பயமுறுத்தக் கூடாது பாரு.. அதுனாலதான் சின்னதா..
ஜெரி.. கந்தவேல் முருகனுக்கும் ஒரு அரோகராவைச் சேர்த்துப் போட்டுக்குங்க..
துபாய்ராஜா.. விட்டதை எப்படி பிடிக்கிறது..? இப்படியே கனா கண்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்..!
நன்றி வானம்பாடிகள்..!
கனகு.. உங்களைச் சந்திக்க மிகவும் ஆவலோடு இருக்கிறேன். பார்க்கலாம்..!
ஜெட்லி.. போட்டிருவோம்.. நல்ல நாள் பார்க்க வேணாமா..?
மதுரை சரவணனுக்கு ஒரு நன்றி..
சரவணக்குமாரன் ஒரு மாற்றமும் இல்லை.. டைப்பிங் ஸ்பீடு கொஞ்சம் குறைஞ்சு போச்சு. அவ்ளோதான்..!
ஸ்டார்ஜன் வாழ்த்துக்கு நன்றி..
ஜோதிஜி ஸார்.. வேற வழி.. எங்கயாச்சும் கீழே இறக்கி வைச்சாகணும்ல..! இல்லாட்டி தூங்க முடியாதே..!
அப்துல்லாஜி.. நானேதான் எழுதினேன்..!(எதுக்கு இப்படி மூணு கமெண்ட்டு)
அருண், மணிகண்டன் நீலன் இருவருக்கும் எனது நன்றிகள்..!
ரோமியோ.. எனக்கு உங்களைவிட்டா வேற வழியில்லை. அதான் வந்துட்டேன்..!
அரங்கப்பெருமாள் ஸார்.. வந்தேன்.. வந்துட்டேன்.. நன்றி..!
புலவன் புலிகேசி வந்துட்டோம்..
டாக்டர் கந்தசாமி ஸார்.. உங்களுக்குத் தெரியாததா..? அவரேதான் இவரு..! நான் அவரோட கொள்ளுப் பேரனுக்கு பேரன்..!
பித்தன்..
எங்க வந்தாலும் அடி வாங்கணும்ன்றதுதான் என் தலையெழுத்தா..?
சும்மா இருக்குறவங்களையும் விடமாட்டீங்க போலிருக்கே..!
welcome back,:)
வலைப்பூ திரும்பக் கிடைத்தபின்னும் இடைவெளி விட்டது ஏனெனத் தெரியாவிட்டாலும் வாழ்த்துகிறேன் நானும்:)! வருக!
வாங்க அண்ணே, வாங்க.
'அகராதி'கமெண்ட்டுக்கு மேல 3 கமெண்ட்டு போட்டவங்க உங்க எதிரிகளா?? ::))
நல்லா இருங்கண்ணே..:))
வாங்க ! மீண்டும் முன்னைவிட அதிக முனைப்புடன் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.!
வாழ்த்துக்கள் அண்ணே
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
High Definition Youtube Video Download free Click here
MOVIE TICKETS BOOKING ONLINE :) CLIck HeRe
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
என்ன கொடுமை சரவணா இது..:)
தங்கள் பதிவுக்கு நன்றிகள்..
East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.
Have a look at here too..
Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos
See who owns affiliatetraction.com or any other website:
http://whois.domaintasks.com/affiliatetraction.com
See who owns mothhelah.com or any other website.
Post a Comment