19-09-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தத் திரைப்படத்தினை நேற்றே பார்த்துவிட்டாலும் உடனடியாக பதிவு போட முடியாமல் கோபப்பட வைத்த சூழல் உருவாகியிருந்ததால் பதிவிட முடியவில்லை. அதனால் என்ன குடியா முழுகிப் போச்சு..? அப்படிங்குறீங்களா..? சரி.. சரி.. விடுங்க..
நேற்று மாலை உதயம் திரையரங்கிற்குச் சென்றபோது பேண்டு, வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தார்கள். காது கிழிந்துவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் பல கமல் ரசிகர்கள் குத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க.. வாய் வலிக்க, கை வலிக்க இசையமைப்பாளர்கள் இசைத்துக் கொண்டிருந்தார்கள். அத்தனையும் கமல் படத்தின் பாடல்கள்தான்.
வண்டியை நிறுத்துவதற்குள்ளாக என்னிடம் வந்த ஒரு ஆள் கை நிறைய டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு "எத்தனை ஸார் வேணும்..? 60 ரூபா டிக்கெட் நூத்தி அறுபது ரூபா ஸார்.." என்றார். திக்கென்றானது எனக்கு..
அவனை விலக்கிவிட்டு கவுண்டருக்கு போனால் அதற்குள்ளாக ஹவுஸ்புல் போர்டு. நான் போனதே ஐந்தே கால் மணிக்குத்தான். கூட்டம் இருக்கும் என்று நினைத்துத்தான் சீக்கிரமாக போனேன். அதுக்குள்ள டிக்கெட்டை கொடுத்து முடிச்சுட்டாங்க.. நிமிடத்தில் என்னைச் சுற்றிலும் ஒரு ரவுடிகள் கூட்டம். அத்தனை பேர் கையிலும் கத்தை, கத்தையாக டிக்கெட்டுகள்.
அறுபது ரூபாய் டிக்கெட்டுகள் 160 ரூபாய்.. 55 ரூபாய் டிக்கெட்டுகள் 150 ரூபாய். கோபமான கோபம் பொங்கியது. தலைக்கு மேல் ஹவுஸ்புல் போர்டை மாட்டிக் கொண்டு ஹாயாக உட்கார்ந்திருந்த கவுண்ட்டர் ஆளிடம் டிக்கெட் உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு டிக்கெட் கேட்டேன். "இல்லை.." என்றார். "வெளில விக்குறாங்களே..?" என்றேன். "வாங்கிக்குங்க..?" என்றார். "அப்புறம் எதுக்கு நீங்க உள்ள உக்காந்திருக்கீங்க..?" என்றேன்.. கொஞ்சம் முறைத்துப் பார்த்தார்.
"கத்தை கத்தையா டிக்கெட்டை வைச்சு கண்ணு முன்னாடி அநியாய விலைக்கு வித்துக்கிட்டிருக்கான்.. ஹாயா உள்ள உக்காந்துக்கிட்டு இல்லைன்னா என்னங்க அர்த்தம்..?" என்றேன். "எனக்குத் தெரியாது ஸார்.." என்றார். "ஏன் உங்களுக்கு கண்ணில்லையா..? எந்திரிச்சு நின்னு பாருங்க தெரியும்.." என்றேன். "எதா இருந்தாலும் உள்ள மேனேஜர் இருக்காரு. அவரைப் போய் பாருங்க.." என்று சொல்லிவிட்டு அடுத்த கவுண்ட்டருக்கு போய் அமர்ந்து கொண்டார்.
தியேட்டரின் உள்ளே போய் "மேனேஜரை பார்க்கணும்.." என்றேன். "அவர் இப்பத்தான் வெளில போனார். ஏழு மணிக்குத்தான் வருவாரு.." என்றார்கள். "வெளில பிளாக்ல இவ்ளோ டிக்கெட் விக்குறாங்களே.. கேட்கவே மாட்டீங்களா?" என்றேன்.. அலுவலக ஊழியர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். கையில் கம்புடன் செக்யூரிட்டி தோற்றத்தில் இருக்கும் ஒருவர் "எதா இருந்தாலும் மேனேஜர்கிட்ட கேளுங்க ஸார்.. எங்களுக்குத் தெரியாது.. நாங்களா டிக்கெட் கொடுத்தோம். கொடுத்தவனை கேளுங்க.." என்று லேசாக சன்னமான குரலில் முணுமுணுத்தார்.
பிளாக்கில் விற்கும் ரவுடி கும்பலுக்கு நடுவே தியேட்டர் யூனிபார்ம் அணிந்த ஒருவரும் நின்று கொண்டு பணம் வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன். இன்னும் கொஞ்சம் கோபம் பொங்கியது. நேராக அவரிடம் சென்று.. "எனக்கு தியேட்டர் விலைக்கு டிக்கெட் வேணும்.." என்றேன்.. ஒட்டு மொத்தக் கூட்டமும் என்னமோ பைத்தியக்காரனை பார்ப்பதைப் போல் என்னை பார்த்தது.
அந்த ஊழியர் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே ஓடினார். ரவுடிகளும் ஏதோ சினிமா வில்லனுக மாதிரி முறைத்துப் பார்த்தபடியே போக.. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன்.
அப்போது தொடர்ச்சியான ஹாரன் சப்தத்தோடு போலீஸ் பைக்கில் ஒரு போலீஸ்காரர் வந்தார். கூட்டத்திற்கு நடுவே வந்து நிற்க.. ரவுடிகளின் லஞ்சப் பணம் கொஞ்சம் அவர் கைக்கு மாறியது. அதற்குப் பின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகையுடன் கிளம்பிய அவரது பைக்கின் முன்னால் போய் நின்று "ஏன் ஸார்..? இப்படி உங்க கண்ணு முன்னாடியே பிளாக்ல விக்குறானுகளே.. இதையெல்லாம் கேக்காம நீங்க பாட்டுக்கு கிளம்புறீங்க..?" என்றேன்.
"நீங்க யாரு..?" என்றார் அவர். "நான் பப்ளிக் ஸார்.. எனக்கு டிக்கெட் இல்லைன்றான்.." என்றேன். "கவுண்ட்டர்ல கொடுத்தா வாங்கிக்குங்க.. இல்ல பிளாக்ல வாங்க முடியும்னா வாங்குங்க.. இல்லேன்னா கிளம்புங்க.." என்று சொல்லிவிட்டு நொடியில் பைக்கை உசுப்பிவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
நான் அவருடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபடியே இருந்த ரவுடிகள் கூட்டம் தூரத்தில் இருந்தே என்னை கவனித்தபடியே இருந்தார்கள். எனக்கு என்ன வேகம் வந்ததோ தெரியவில்லை. சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து கத்திக் குவித்துவிட்டேன். "எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா..? காசு இருக்குதுன்னு நிறைய பேரு அள்ளி வீசுறதாலதான் அவன் கொள்ளையடிக்கிறான். ஏண்டா நாய்களா கொடுக்குறீங்க?" என்று கத்தினேன்.(இந்த வாரம் முழுக்கவே ரொம்ப டென்ஷனா இருக்கு) கூட்டம் வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய.. உதவிக்கு வரவில்லை..
கொஞ்சம் ரிலாக்ஸாக படிக்கட்டுகளில் அமர்ந்திருக்க.. இப்போது போலீஸ் ஜீப்பில் நான்கைந்து போலீஸார் வந்தார்கள். அவர்கள் வந்ததும் ரவுடிகள் கும்பல் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளாளுக்கு ஏதோ கொஞ்சம் பணத்தை சேர்த்து ஜீப்பில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் வேஷத்தில் இருந்த ஒருவரின் கையில் திணித்தார்கள். அவர் ஸ்டைலாக அதை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையைக் கட்டினார்.
அதே ஜீப்பில் இன்னொரு பெண் எஸ்.ஐ.யும் வந்து இறங்கினார். ஆம்பளை போலீஸ்தான இப்படி.. இவங்ககிட்ட சொல்லலாம்னு அந்தம்மாகிட்ட போய் சொன்னேன்.. "இப்ப உங்களுக்கு என்ன வேணும்? டிக்கெட்தான.. வாங்கித் தரேன்.. அத்தோட விட்ருங்க.." என்றார். "அதெப்படிங்க. எத்தனை பேர்கிட்ட எவ்ளோ காசு கொள்ளையடிக்கிறாங்க தெரியுமா..?" என்றேன்.
"அதுக்கு நான் என்ன பண்றது..? நானா காசு கொடுக்கச் சொல்றேன்.. கொடுக்கறவனும் உங்களை மாதிரி பப்ளிக்தான.. அவனைப் போய் கேளுங்க.." என்றார். "நீங்கதான ஆக்ஷன் எடுக்கணும்..? நீங்களே கண்டுக்காம இருந்தா எப்படி?" என்றேன். "என்னால ஒண்ணும் பண்ண முடியாது.. தியேட்டர்காரனே கத்தை, கத்தையா கொடுக்கும்போது நாங்க என்னங்க பண்ண முடியும்..? வேண்ணா ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளையிண்ட் கொடுங்க.. பார்க்கலாம்.." என்றார்.
"எதுக்குங்க ஸ்டேஷனுக்கு வரணும்..? இப்ப உங்க கண்ணு முன்னாடி.. அதோ அங்க விக்குறாங்க.. பாருங்க.. என்ன சொல்றீங்க..?" என்றேன். "எனக்குத் தெரியாது.." என்று சொன்னவர் விறுவிறுவென்று தியேட்டரைவிட்டு வெளியேறிவிட்டார்.
அப்போது ஒருவர் என் அருகில் வந்து "ஸார் ஒரு 55 ரூபா டிக்கெட் இருக்கு வேணுங்களா?" என்றார். நான் அவரை முறைத்துப் பார்க்க.. "கூட காசு வேணாம் ஸார்.. என் பிரெண்ட்டுக்காக வாங்கினது. அவன் வரலேன்னுட்டான்.. யாரையாவது கூட்டிட்டுப் போலாம்னு பார்க்குறேன்.. அதான் நீங்க வந்தீங்கன்னா..?" என்று இழுத்தார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல்.. சிறிது மெளனமாக இருந்தேன். அவரும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். ஒரு நிமிட யோசனைக்குப் பின் வந்த வேலையை பார்ப்போம் என்று நினைத்து பணத்தைக் கொடுத்து டிக்கெட்டை வாங்கிக் கொண்டேன். ரவுடிகள் கும்பலும், போலீஸ் கும்பலும், காசை அள்ளி வீசிய கும்பலும் என்னையவே முறைத்துப் பார்ப்பதை பார்த்தது ஏதோ செய்யக்கூடாத தப்பை செய்துவிட்டவன் போல் தெரிந்தது.
காசு இருக்கிறவன் செய்ற தவறு.. காசில்லாதவனை எப்படியெல்லாம் பாதிக்கும்னு தியேட்டருக்கு போனா ஈஸியா கண்டுபிடிச்சிரலாம். இப்பக்கூட பாருங்க.. நேத்து நான் 160 ரூபாய் கொடுத்திருந்தால்.. அது எனது நான்கு நாட்கள் சாப்பாட்டுக்குரிய பணத்தினை ஒரே நேரத்தில், ஒரே நாளில் செலவு செய்தவனாக இருப்பேன்.
இந்தப் பணத்தை நான் சம்பாதிக்க வேண்டும் எனில் நான் என்ன செய்வேன்..? நான் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைக்கு நியாயமான சம்பளம் எவ்வளவோ அதைவிட சற்றுக் கூடுதலாக நியாயத்திற்குப் புறம்பாக வசூலித்தால்தான் இது போன்று எனக்கு வருகின்ற கூடுதல் அநியாய செலவுகளைச் சமாளிக்க முடியும்.. ஆக.. ஒருவரின் தவறு.. அப்படியே தொடர்கதையாய் போய்க் கொண்டேதான் இருக்கும். இதுதான் இந்த நாட்டில் மேலே இருந்து கீழேவரைக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது.
காவல்துறையினருக்கு அலுங்காமல், குலுங்காமல் மாமூல் கிடைத்துவிடுகிறதாம். தினம்தோறும் உதயம் தியேட்டரில் இருந்து கிடைக்கும் மாமூல் வசூலே ஒரு ஷோவுக்கு 5000 ரூபாய் என்கிறார்கள். நாலு ஷோ என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.. 20000 ரூபாய்.. ஒரு நாளைக்கு 20000 என்றால் ஒரு மாதத்திற்கு..? ஸ்டேஷனில் மொத்தம் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் அதனை வாரந்தோறும் அவரவர் பதவிக்கேற்றவாறு பிரித்துக் கொள்வார்களாம்.. ம்.. கொள்ளையடிச்சா போலீஸ்கிட்டதான் போய் சொல்லணுமாம்.. இவங்க இப்படி கொள்ளையடிக்கிறதை யார்கிட்ட போய் சொல்றது..?
இந்த இறுக்கமான சினிமா பார்க்கும் மூடே இல்லாத சூழலில் படம் பார்க்க உட்கார்ந்தால், எனக்குள் என்ன ஏறியிருக்கும்.. என்ன இறங்கியிருக்கும்..?
அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது.
இதைவிட பெரியதொரு திருப்பம் இடைவேளையில் நிகழ்ந்தது.
எனக்கு டிக்கெட் கொடுத்த அந்தப் புண்ணியவான், என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரிடம் வழக்கம்போல சிவிக்சென்ஸ் பற்றி வகுப்பெடுக்க.. அவரோ அப்படி, இப்படி என்று நெளிந்தவர் இடைவேளையில் நான் வாங்கிக் கொடுத்த பாப்கார்னுக்கு மயங்கி உண்மையைச் சொல்லிவிட்டார்.
நான் பலரிடமும் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஒரு போலீஸ்காரர் இவரைப் பிடித்து இவரிடம் இரண்டு டிக்கெட்டுகளை கொடுத்து நண்பனுக்காக வாங்கியது என்று சொல்லி ஒரு டிக்கெட்டை என்னிடம் விற்று, என்னைத் தியேட்டருக்குள் அழைத்துச் செல்லும்படி சொன்னாராம். அவரிடமும் டிக்கெட் விலையை மட்டுமே வாங்கிக் கொண்டதால் தானும் அதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு "ஸாரி ஸார். நான் தலைவரோட தீவிர ரசிகன். இன்னிக்கு படம் பார்த்தே ஆகணும்ன்ற வெறியோட வந்தேன். அதான் தவிர்க்க முடியலை.. மன்னிச்சுக்குங்க.." என்றார்.
எனக்கு இருந்த மூடும் போச்சு.. இப்படியொரு மூடோட இடைவேளைக்குப் பின்னாடி படத்தை பார்த்தா எனக்குள் என்ன ஏறியிருக்கும்..? என்ன இறங்கியிருக்கும்..?
அடப் போங்கப்பா.. ஒரே அக்கிரமமா இருக்கு..!!!
|
Tweet |
134 comments:
அவ்ளோ தைரியமான ஆளா நீங்க
அண்ணே,
படிச்சிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு. பேருலயே உண்மை இருக்கிறதாலயும், தமிழன்னு இருக்கிறதாலயும்தான் இவ்வளோ கஷ்டம் வருகிறதோ?
முருகன் அருளால் எல்லாம் சரியாகும்...
பிரபாகர்.
உங்க உணர்வுகள் புரியுது தலைவரே. இந்த பதிவுக்கும் உங்களை ஏதோ அதிசயமாய், பாவமாய் பார்க்கிற மாதிரி சில கமெண்டு வரும் பாருங்களேன்.
உதயம் தியேட்டரில் ந்டக்கும் இது போன்ற பல அக்கிரமங்களை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அந்த தியேட்டரை இது போன்ற காரணங்களுக்காகவே புறக்கணித்துக் கொண்டிருக்கிறேன்.
சரி விடுங்க. அடுத்த வாரம் இன்னொரு முறை ஐநாக்ஸ் அல்லது சத்யம்க்கு போலாம் வர்றீங்களா?
http://blog.nandhaonline.com
:-))))))
////அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது.///
சிரிப்புதான் வருது
//அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது//
கமல் தனக்குத் தானே ஆப்பு வச்சுக்குவார், கவலை வேண்டாம்!
தியேட்டர் காரங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க தலையில அவங்களே மண்ணைப் போட்டுக்கிற மாதிரித்தான்! இப்படி அநியாயம் பண்றதுனால தானே திருட்டு வீசிடி வியாபாரம் களை கட்டுது:-))
சொல்றதுக்காகப் பாவம், நீங்க ரொம்பஏறி இறங்காதீங்க:-))
ஹ ஹ ஹ ...மனிதன் பார்க்க மனிதன் நோகும் காலம் வரும் என்றான் பாரதி...ஹ ஹ ஹ...சரி சரி விசையதிற்கு வருகிறேன்.
//எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா//
இப்படி கத்தியதால் சுற்றத்தால்,சொந்தத்தால் மனநலத்தை... ஏன் சுற்றி வளைக்க வேண்டும், பைத்தியாமா இல்லையா என்று சோதிக்கபட்ட அனுபவும் எனக்கு உண்டு.
அந்த கோபத்தில்தான் நான் விரும்பும் இந்தியாவை விட்டு வெளியே வந்தது.
இந்த முறை சென்னை வந்த போது கூட, இரவு சாப்பிட போன கடையில் தட்டில் வாழை இழைக்கு பதில் பிளாஸ்டிக் காகிதம் வைத்தாதல் சண்டை போட்டு தெரு கூட, சாப்பிடாமல் பணத்தை கடைகாரர் முகத்தில் வீசி விட்டு வந்தேன்.
மீண்டும் நான் இந்தியா வரும் போது நாம் கண்டிப்பாய் சந்திப்போம்.
இத வச்சி ஒரு படம் எடுக்கலாம் போல...
காதுலே பூ
இதே உதயம், இரண்டு மாதங்களுக்கு முன், நாடோடிகள் பார்க்கா டிக்கட் வாங்கச் சென்றிருந்தேன். இரவுக்காட்சி 9:45க்கு டிக்கட்கள் 8:30க்குதான் தரத் தொடங்குவார்கள் என்ற வாட்ச்மேனின் வார்த்தையை நம்பி வீட்டுக்குச் சென்று சரியாக 8:30க்கு திரும்பினால் ஹவுஸ்புல். என்ன ஒரு நிமிடத்துக்குள்ளாகவா ஹவுஸ்புல் என்று வாட்ச்மேனிடம் கேட்டால் 8:15க்கு தருவாங்க.. அதானே சொன்னேன் என்று புளுகுகிறான். அதே வாயோடு, “சரி கவலைப்படாதீங்க 60 டிக்கட் 100க்கு ஏற்பாடு பண்றேன்” என்றான். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.
யாருமே வாங்காம போனா வாங்கின டிக்கட்டை வச்சுகிட்டு நாக்கை வழிச்சுக்கிட்டீங்கன்னாதான் நீங்கள்லாம் திருந்துவீங்க.. முன்வச்ச காலை பின்வைக்கமாட்டேன்னு எப்படியாச்சும் டிக்கட் வாங்கற முட்டாள்களாலதான் ஆடறீங்க.. திருட்டு விசிடிக்கும் தியேட்டர் காத்து ஓட்டறதுக்கும் வேற யாரும் காரணம் இல்லை - நீங்கதான்.. என்று தூயதமிழில் வாய்க்கு வந்தபடி அவனைத் திட்டிவிட்டு வந்தேன்.
தியேட்டர் நிர்வாகம் இவர்களை பெருமளவு வளர்க்கிறது. எப்போது டிக்கட் தரப்படும் என்ற போர்டு கூட இல்லாததற்கு வேறென்ன காரணம் இருக்கமுடியும்?
ungalukku periya salute boss...
intha maathiri gumbal elam oru naal koondoda maattum ...kavalaye padathinga neenga..periyya velaya senjuttu vanthurukinga..
hats off
Can anyone come forward and do that? Develop atleast one generation without the knowledge of cinema?
Then Most of the crime will automatically come down,
We are inviting all the illicit activities upto our drawing room through TV Channels and cinema. So thing which we do not want our children to know, automatically gets updated in their mind.
Marmayogi
/////தியேட்டர் காரங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க தலையில அவங்களே மண்ணைப் போட்டுக்கிற மாதிரித்தான்! இப்படி அநியாயம் பண்றதுனால தானே திருட்டு வீசிடி வியாபாரம் களை கட்டுது:-))சொல்றதுக்காகப் பாவம், நீங்க ரொம்பஏறி இறங்காதீங்க:-//////
நிதர்சனமான உண்மை!
மொத்த இந்தியாவிலும் எல்லாத் துறைகளிலும், இடங்களிலும், இதுதான் நடக்கிறது.
களை எடுக்கும் வேலையை நாம் செய்ய முடியாது. ciinema x திருட்டி VCD இருப்பதைப் போல, ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை உள்ளது. அதை விவரித்து பதிவில் எழுத முடியாது. அந்த எதிர்வினைகளே அவற்றைத் தட்டிச் சரி பண்ணும்.
நீங்கள் ஒரு தனிமனிதராய் என்ன செய்ய முடியும்?
அந்த ரெளடிகளில் ஒருவன், கத்தியை எடுத்து ஒரு சொருகு செருகிவிட்டுப்போனால், நாம் என்ன செய்ய முடியும்? நமக்கு யார் வைத்தியம் பார்ப்பார்கள்? என்ற பய உணர்வில்தான்,
அங்கே தியேட்டரில் இருந்த பலரும் உங்களைப் போல அவர்களைத் தட்டிக் கேட்கவில்லை!
தியேட்டருக்குப்போய் பார்த்ததைப்போல, பெரிய மருத்துவ மனைக்குப் போய்ப் பாருங்கள், அங்கே நடக்கும் தில்லுமுல்லுகள் உங்கள் கண்ணில் படும். அது முன்னதைவிட, கோரமாக இருக்கும்!
எல்லாம் ஒரு நாளில் சரியாகும். எப்படி என்று கேட்காதீர்கள். சரியாகும். பொறுத்திருந்து பாருங்கள்!
//ஒருவரின் தவறு.. அப்படியே தொடர்கதையாய் போய்க் கொண்டேதான் இருக்கும். இதுதான் இந்த நாட்டில் மேலே இருந்து கீழேவரைக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது.//
கடவுள் மேல தான் பாரத்த போடணும் உண்மை தமிழரே!!
1. சினிமா வியாபாரம் : பகுதி-6
================
2. கையில காசு... வாயில தோச....!
வாழ்க ஜனநாயகம்.., வாழ்க ஜனநாயகம்...!
இந்த கொடுமை எல்லா இடத்திலும் எப்பவும் இருக்கிறது... இதற்கு உணர்ச்சி வசப்பட்டு நம்ப நிம்மதியை கெடுதக்க கூடாது என்பது என்னோடோ கருத்து. வேற என்ன சார் சொல்லறது..
உண்மை நிலை இப்படி இருப்பதால் தான், நாம் இன்னும் கிழே போய்க்கொண்டிருக்கிறோம்!
கண்டிப்பாக எல்லாம் சரியாகும் நாள் விரைவில் வர இறைவனை பிரார்த்திப்போம்!
நீங்க எதுக்கும் இரத்த அழுத்த சோதனை செய்துக் கொள்ளுங்கள்..வேடிக்கையாக சொல்லவில்லை..உண்மையாக சொல்கிறேன்
சபாஷ்! உணா தானா அண்ணே - கண் முன்னால நடக்குற அநியாயத்த தட்டிக் கேட்டதுக்காக.
அளவுக்கு மீறி உணர்ச்சிப் படாதீங்க அண்ணே. அப்புறம், ஏடாகூடமா ஏதாவது நடந்துடப் போகுது.
sorry for english!
ungal thunicchal paaraattaththakkathu.
piracchanai manitha urimai meeral allathu adiththattu makkalin vaazhvaatharap piracchanaiyaaga irunthaal, ungalukku oru salute vacchiruppen.
கத்துங்க எசமான்..கத்துங்க. கதறுங்க எசமான் கதறுங்க. இந்த தியேட்டர்காரங்களே இப்படித்தான்!.
இதை படித்த பிறகு உங்க மேலே உள்ள மதிப்பு உயர்ந்தது உண்மை.
ரொம்ப பெரிய ஆளு பாஸ் நீங்க..
ஏன் இப்படி பப்ளிக்க தொந்தரவு பண்ணுறீங்க..
பிளாக்குல டிக்கெட் விக்குறவுங்க குடும்பம் எப்படி பிழைக்குறது?
அவுங்க குடும்பத்துல மென்பொருள் பொறியியலாரா யாரும் வேலை பாக்கல.. அவுங்களும் சென்னையில பொழப்ப ஓட்டனுமே..
அவுங்க நாலு பணம் பாக்குறதே ரஜினி, கமல்,விஜய் படத்துக்குத்தான்.. இவுங்கெல்லாம் வருசம் 1 படம் நடிக்குறதே பெரிய விசயம்.. வருசம் 4 படத்துக்கு 40 நாள் அவுங்க சம்பாதிக்குறது உங்களுக்கு பொறுக்கலயா?
அவுங்க 10 நாள் வயுத்த கழுவுறது முக்கியமா? நீங்க முத நாளே தலைவர் படத்த பாக்குரது முக்கியமா?
10 நாள் கழிச்சுப் பாத்தா என்ன கொறஞ்சுடப் போகுது? படம் பாத்தாச்சுன்னு பெருமையா பேசிக்க முடியாதுனு கவலைப்படுறீங்களா பாஸ்..
( சும்மா ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான் இந்த பின்னூட்டம்.. தப்பா நினச்சுக்காதிங்க பாஸ் )
//நேத்து நான் 160 ரூபாய் கொடுத்திருந்தால்.. அது எனது நான்கு நாட்கள் சாப்பாட்டுக்குரிய பணத்தினை ஒரே நேரத்தில், ஒரே நாளில் செலவு செய்தவனாக இருப்பேன்.//
அப்படி எங்க பாஸ் சாப்பிடுறீங்க? கொஞ்சம் முகவரி கொடுங்களேன்..
படத்த பத்தி ஒன்னுமே சொல்லிலியே தல!!!
Anne manasu varuthama irukku
பாத்தீங்களா.....இதனாலத் தான் அப்துல் கலாம் சொல்றாரு இந்தியா 2020 ல வல்லரசு ஆகுன்னு!.........இப்போவாவது நம்புங்க!.....
இதில் யாதொரும் உண்மையிருப்பதாகத் தெரிய்வில்லை. கற்பனையாக. இப்படி காவலர்களையும் ரவுடிகளையும் கேட்க ஆசைப்பட்டிருப்பார். அதை உண்மையில் செய்ய முடியாது. எனவே எழுதுகிறார்.
ஒரு போலிஸ்காரில் வந்திறங்கும் ஆய்வாளரிடம் போய் இப்படி பேசமுடியாது.
தான் படம் பார்க்க ...என்ற தன்னலமே தொனிக்கிறது.
dear unmai
manadai ennavo seigirathu
i was not at all aware of such things
i have not visited any theatre
so far
let us boycott such theatres
balasubramanyan vellore
சுதந்திர போராட்ட தியாகி அளவிற்கு போராடி இருக்கிறீர்கள். நாட்டோட உண்மையான பிரச்சனைய எழுதி இருக்கிறீர்கள். ஏனென்றால் நாம் தமிழர்கள். சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர் போய்விடும் அல்லவா.
Raja
Chennai
ரொம்ப சூப்பர் ,
கலக்கிட்டீங்க சார்,
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் !
ம்ம்ம்... ஒரு அன்னியன் உருவாகிறார்
////எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா//
நல்ல அனுபவம். ஒன்றா இரண்டா .. இப்படி?
உங்கள் தெனாவட்டுக்கு என் மரியாதை.
nijavulaga Indhiyan thatha Unmai thamizhan vaazgha!
Please check your BP, Sugar etc.. Its not good for your health.
Dr Bruno,
Please advice him!
நல்ல பதிவு. உங்க சுயபுராணத்துல "பிறந்து வளர்ந்ததில் சொல்லிக்கொள்ளும்படியான சாதனைகள் இதுவரை இல்லை. உயிருடன் இருப்பதைத்தவிர"... ன்னு போட்ருக்கீங்க, இனிமே அத மாத்திருங்க, 'இது ரொம்ப பெரிய சாதனைங்கோ'..
Really your great. Guys forward this news as much as we can. We will make a public to know what is happening
[[[அத்திரி said...
அவ்ளோ தைரியமான ஆளா நீங்க]]]
கொஞ்சம் தைரியமான ஆள்தான்..! எலே.. நோஞ்சா நேர்ல பார்த்தா தெரியும்வே..
[[[பிரபாகர் said...
அண்ணே,
படிச்சிட்டு ரொம்ப கஷ்டமா இருக்கு. பேருலயே உண்மை இருக்கிறதாலயும், தமிழன்னு இருக்கிறதாலயும்தான் இவ்வளோ கஷ்டம் வருகிறதோ?
முருகன் அருளால் எல்லாம் சரியாகும்...
பிரபாகர்.]]]
பிரபாகர்..
இந்த அளவுக்கெல்லாம் என்னை புகழ வேண்டாம்.. உண்மைத்தமிழன்ற பேரு கொஞ்சம் வெளிப்படையா பேசுவேன்றதால வைச்சேன். அவ்ளோதான்..!
மத்தபடி நான் ரொம்பக் கெட்டவன்..!
[[[Nandhakumar said...
உங்க உணர்வுகள் புரியுது தலைவரே. இந்த பதிவுக்கும் உங்களை ஏதோ அதிசயமாய், பாவமாய் பார்க்கிற மாதிரி சில கமெண்டு வரும் பாருங்களேன்.
உதயம் தியேட்டரில் ந்டக்கும் இது போன்ற பல அக்கிரமங்களை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அந்த தியேட்டரை இது போன்ற காரணங்களுக்காகவே புறக்கணித்துக் கொண்டிருக்கிறேன்.]]]
புறக்கணிக்க முடியாமல் தவிக்கிறேன் நான். வீடு பக்கத்தில் இருப்பதால் வேறு அரங்குகளை தேடி ஓட முடியவில்லை.
[[[சரி விடுங்க. அடுத்த வாரம் இன்னொரு முறை ஐநாக்ஸ் அல்லது சத்யம்க்கு போலாம் வர்றீங்களா?]]]
துட்டுக்கு எங்க போறது கண்ணா..? நமக்கு விதிச்சது இதுதான்னு அடங்க வேண்டியதுதான்..
[[[கிரி said...
:-))))))]]]
-)))))))))))))))))))))))))))))))))))))
[[[ரமேஷ் said...
//அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது.//
சிரிப்புதான் வருது]]]
கடுப்புல நினைச்சது அது..! மத்தபடி குண்டு வைக்கிற அளவுக்கெல்லாம் நான் கெட்டவன் இல்ல ரமேஷ்..!
[[[கிருஷ்ணமூர்த்தி said...
//அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது//
கமல் தனக்குத்தானே ஆப்பு வச்சுக்குவார், கவலை வேண்டாம்!
தியேட்டர்காரங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க தலையில அவங்களே மண்ணைப் போட்டுக்கிற மாதிரித்தான்! இப்படி அநியாயம் பண்றதுனாலதானே திருட்டு வீசிடி வியாபாரம் களை கட்டுது:-)) சொல்றதுக்காகப் பாவம், நீங்க ரொம்ப ஏறி இறங்காதீங்க:-))]]]
அறிவுரைக்கு நன்றிகள் ஸார்..!
பணம் மிகத் தேவையாக இருப்பதால்தான் எனக்குக் கோபம் வருகிறது..!
பணத்தை அலட்சியமாகத் தூக்கியெறிந்துவிட்டுச் செல்பவர்களை என்னவென்று சொல்வது..?
அவங்க விதி அது.. என் விதி இது..!
[[[சிங்கக்குட்டி said...
ஹ ஹ ஹ ...மனிதன் பார்க்க மனிதன் நோகும் காலம் வரும் என்றான் பாரதி...ஹ ஹ ஹ...சரி சரி விசையதிற்கு வருகிறேன்.
//எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா//
இப்படி கத்தியதால் சுற்றத்தால், சொந்தத்தால் மனநலத்தை ஏன் சுற்றி வளைக்க வேண்டும், பைத்தியாமா இல்லையா என்று சோதிக்கபட்ட அனுபவும் எனக்கு உண்டு.
அந்த கோபத்தில்தான் நான் விரும்பும் இந்தியாவை விட்டு வெளியே வந்தது.
இந்த முறை சென்னை வந்த போதுகூட, இரவு சாப்பிட போன கடையில் தட்டில் வாழை இழைக்கு பதில் பிளாஸ்டிக் காகிதம் வைத்தாதல் சண்டை போட்டு தெரு கூட, சாப்பிடாமல் பணத்தை கடைகாரர் முகத்தில் வீசி விட்டு வந்தேன்.
மீண்டும் நான் இந்தியா வரும் போது நாம் கண்டிப்பாய் சந்திப்போம்.]]]
அவசியம் சந்திக்க வேண்டும் சிங்கம்..! காத்திருக்கிறேன்..!
[[[ஜெட்லி said...
இத வச்சி ஒரு படம் எடுக்கலாம் போல...]]]
ஓ.. எடுக்கலாமே.. கதை ரைட்ஸ் எனக்குத்தான்..!
[[[கொடூரன் said...
காதுலே பூ]]]
எதுக்கு? யார் காதுலே..?
[[[பினாத்தல் சுரேஷ் said...
இதே உதயம், இரண்டு மாதங்களுக்கு முன், நாடோடிகள் பார்க்கா டிக்கட் வாங்கச் சென்றிருந்தேன். இரவுக்காட்சி 9:45க்கு டிக்கட்கள் 8:30க்குதான் தரத் தொடங்குவார்கள் என்ற வாட்ச்மேனின் வார்த்தையை நம்பி வீட்டுக்குச் சென்று சரியாக 8:30க்கு திரும்பினால் ஹவுஸ்புல். என்ன ஒரு நிமிடத்துக்குள்ளாகவா ஹவுஸ்புல் என்று வாட்ச்மேனிடம் கேட்டால் 8:15க்கு தருவாங்க.. அதானே சொன்னேன் என்று புளுகுகிறான். அதே வாயோடு, “சரி கவலைப்படாதீங்க 60 டிக்கட் 100க்கு ஏற்பாடு பண்றேன்” என்றான். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. யாருமே வாங்காம போனா வாங்கின டிக்கட்டை வச்சுகிட்டு நாக்கை வழிச்சுக்கிட்டீங்கன்னாதான் நீங்கள்லாம் திருந்துவீங்க.. முன்வச்ச காலை பின்வைக்க மாட்டேன்னு எப்படியாச்சும் டிக்கட் வாங்கற முட்டாள்களாலதான் ஆடறீங்க.. திருட்டு விசிடிக்கும் தியேட்டர் காத்து ஓட்டறதுக்கும் வேற யாரும் காரணம் இல்லை - நீங்கதான்.. என்று தூயதமிழில் வாய்க்கு வந்தபடி அவனைத் திட்டிவிட்டு வந்தேன்.
தியேட்டர் நிர்வாகம் இவர்களை பெருமளவு வளர்க்கிறது. எப்போது டிக்கட் தரப்படும் என்ற போர்டு கூட இல்லாததற்கு வேறென்ன காரணம் இருக்கமுடியும்?]]]
பெனாத்தலு..
போர்டு இருக்கு.. ஆனா அந்த டயத்துக்குக் கொடுக்க மாட்டாங்க. அதான் மேட்டரு..
இப்படி குறுக்கு வழில சம்பாதிக்கிற காசு உடம்புல எப்பவும் ஒட்டாது..! பட்ட பின்பு புத்தி தானா வரும் பாருங்க..!
[[[Kiruthiga said...
ungalukku periya salute boss...
intha maathiri gumbal elam oru naal koondoda maattum. kavalaye padathinga neenga. periyya velaya senjuttu vanthurukinga.. hats off]]]
தேங்க்ஸ் கிருத்திகா..!
[[[MarmaYogi said...
Can anyone come forward and do that? Develop atleast one generation without the knowledge of cinema? Then Most of the crime will automatically come down, We are inviting all the illicit activities upto our drawing room through TV Channels and cinema. So thing which we do not want our children to know, automatically gets updated in their mind.
Marmayogi]]]
ஆட்டு மந்தைகளைப் போல அறிவை அடகு வைத்துவிட்டு செயல்படும் கூட்டத்திற்கு நடுவில் நாம் கத்தி என்ன புண்ணியம் யோகி ஸார்..!
[[[SP.VR. SUBBIAH said...
//தியேட்டர் காரங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க தலையில அவங்களே மண்ணைப் போட்டுக்கிற மாதிரித்தான்! இப்படி அநியாயம் பண்றதுனால தானே திருட்டு வீசிடி வியாபாரம் களை கட்டுது:-))சொல்றதுக்காகப் பாவம், நீங்க ரொம்பஏறி இறங்காதீங்க:-//
நிதர்சனமான உண்மை! மொத்த இந்தியாவிலும் எல்லாத் துறைகளிலும், இடங்களிலும், இதுதான் நடக்கிறது. களை எடுக்கும் வேலையை நாம் செய்ய முடியாது. ciinema x திருட்டி VCD இருப்பதைப் போல, ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்வினை உள்ளது. அதை விவரித்து பதிவில் எழுத முடியாது. அந்த எதிர்வினைகளே அவற்றைத் தட்டிச் சரி பண்ணும். நீங்கள் ஒரு தனிமனிதராய் என்ன செய்ய முடியும்? அந்த ரெளடிகளில் ஒருவன், கத்தியை எடுத்து ஒரு சொருகு செருகிவிட்டுப்போனால், நாம் என்ன செய்ய முடியும்? நமக்கு யார் வைத்தியம் பார்ப்பார்கள்? என்ற பய உணர்வில்தான், அங்கே தியேட்டரில் இருந்த பலரும் உங்களைப் போல அவர்களைத் தட்டிக் கேட்கவில்லை!
தியேட்டருக்குப்போய் பார்த்ததைப்போல, பெரிய மருத்துவமனைக்குப் போய்ப் பாருங்கள், அங்கே நடக்கும் தில்லுமுல்லுகள் உங்கள் கண்ணில்படும். அது முன்னதைவிட, கோரமாக இருக்கும்!
எல்லாம் ஒரு நாளில் சரியாகும். எப்படி என்று கேட்காதீர்கள். சரியாகும். பொறுத்திருந்து பாருங்கள்!]]]
கத்திக்கெல்லாம் பயந்தா முடியுமா வாத்தியாரே..?
எல்லாம் ஒரு நாள்ல முடியும்ன்ற நம்பிக்கை எல்லாருக்குமே இருக்கு. அது என்னைக்குன்னுதான் தெரியலை..?! முருகா..!
[[[ரசனைக்காரி said...
//ஒருவரின் தவறு.. அப்படியே தொடர்கதையாய் போய்க் கொண்டேதான் இருக்கும். இதுதான் இந்த நாட்டில் மேலே இருந்து கீழேவரைக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது.//
கடவுள் மேலதான் பாரத்த போடணும் உண்மை தமிழரே!!]]]
வேற வழி..! முருகனைத்தான் குத்தம் சொல்லணும்..!
[[[ஹாலிவுட் பாலா said...
1. சினிமா வியாபாரம் : பகுதி-6
================
2. கையில காசு... வாயில தோச....!
வாழ்க ஜனநாயகம்.., வாழ்க ஜனநாயகம்...!]]]
ஹாலிவுட்ல இருக்கிறதால ஜாலியா இருக்கீகளோ..!
[[[பாலகுமார் said...
இந்த கொடுமை எல்லா இடத்திலும் எப்பவும் இருக்கிறது... இதற்கு உணர்ச்சி வசப்பட்டு நம்ப நிம்மதியை கெடுதக்க கூடாது என்பது என்னோடோ கருத்து. வேற என்ன சார் சொல்லறது..]]]
கண்டுக்காம எப்படி ஸார் போறது..? அந்தப் பணத்தை சம்பாதிக்க எவ்ளோ கஷ்டப்படுறோம்னு நமக்குத்தானே தெரியும்..!
[[[snkm said...
உண்மை நிலை இப்படி இருப்பதால்தான், நாம் இன்னும் கிழே போய்க்கொண்டிருக்கிறோம்!
கண்டிப்பாக எல்லாம் சரியாகும் நாள் விரைவில் வர இறைவனை பிரார்த்திப்போம்!]]]
ஊர் கூட தேர் இழுத்தா தேர் நகரும் ஸார்..!
ஒருத்தனுக்கு பத்து பேர் சேர்ந்து சவுண்ட் கொடுத்தா அடங்குவாங்க.. நம்மாளுக வரணுமே..? எல்லாருமே எனக்கென்னன்னு இருந்தா எப்படி?
[[[T.V.Radhakrishnan said...
நீங்க எதுக்கும் இரத்த அழுத்த சோதனை செய்து கொள்ளுங்கள். வேடிக்கையாக சொல்லவில்லை. உண்மையாக சொல்கிறேன்]]]
அறிவுரைக்கு நன்றிகள் ஐயா..!
[[[ஒரு காசு said...
சபாஷ்! உணா தானா அண்ணே - கண் முன்னால நடக்குற அநியாயத்த தட்டிக் கேட்டதுக்காக.
அளவுக்கு மீறி உணர்ச்சிப்படாதீங்க அண்ணே. அப்புறம், ஏடாகூடமா ஏதாவது நடந்துடப் போகுது.]]]
காசு பிரதர்..
எச்சரிக்கையுடன் கூடிய பாராட்டா..?
[[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...
sorry for english! ungal thunicchal paaraattaththakkathu. piracchanai manitha urimai meeral allathu adiththattu makkalin vaazhvaatharap piracchanaiyaaga irunthaal, ungalukku oru salute vacchiruppen.]]]
அத்திவெட்டி ஸார்..!
ஒரு நாலு பேராவது இதுக்கு கை கொடுக்கணும் ஸார்.. பிரச்சினை தானா தீரும்..!
[[[நல்லதந்தி said...
கத்துங்க எசமான். கத்துங்க. கதறுங்க எசமான் கதறுங்க. இந்த தியேட்டர்காரங்களே இப்படித்தான்!.]]]
தந்தியாரே.. கத்திக் கத்தி தொண்டை புண்ணாகிப் போனதுதான் மிச்சம். டைப் பண்ணி.. பணணி கை வலிச்சதுதான் மிச்சம்..!
வேறென்ன வேணும்கிறீர்..?
[[[ஜோ/Joe said...
இதை படித்த பிறகு உங்க மேலே உள்ள மதிப்பு உயர்ந்தது உண்மை.]]]
இல்ல ஜோ..
நான் அடிப்படைல ரொம்பக் கெட்டவன். சிற்சில விஷயங்களில் இப்படித்தான்..
ஒருவேளை எனக்கு பணத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் சூழல் இருந்தால் இதைக் கேட்டிருப்பேனோ என்பது சந்தேகம்தான்..
நன்றி ஜோ..!
[[[தீப்பெட்டி said...
ரொம்ப பெரிய ஆளு பாஸ் நீங்க..
ஏன் இப்படி பப்ளிக்க தொந்தரவு பண்ணுறீங்க.. பிளாக்குல டிக்கெட் விக்குறவுங்க குடும்பம் எப்படி பிழைக்குறது? அவுங்க குடும்பத்துல மென்பொருள் பொறியியலாரா யாரும் வேலை பாக்கல.. அவுங்களும் சென்னையில பொழப்ப ஓட்டனுமே.. அவுங்க நாலு பணம் பாக்குறதே ரஜினி, கமல்,விஜய் படத்துக்குத்தான்.. இவுங்கெல்லாம் வருசம் 1 படம் நடிக்குறதே பெரிய விசயம்.. வருசம் 4 படத்துக்கு 40 நாள் அவுங்க சம்பாதிக்குறது உங்களுக்கு பொறுக்கலயா?
அவுங்க 10 நாள் வயுத்த கழுவுறது முக்கியமா? நீங்க முத நாளே தலைவர் படத்த பாக்குரது முக்கியமா? 10 நாள் கழிச்சுப் பாத்தா என்ன கொறஞ்சுடப் போகுது? படம் பாத்தாச்சுன்னு பெருமையா பேசிக்க முடியாதுனு கவலைப்படுறீங்களா பாஸ்..]]]
போச்சுடா.. இப்படி ஒரு பக்கம் இருக்கா? யோசிக்க மறந்துட்டனே..? நன்றி தீப்பெட்டி அண்ணே..!
[[[(சும்மா ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான் இந்த பின்னூட்டம்.. தப்பா நினச்சுக்காதிங்க பாஸ்)]]]
இது மாதிரியே அத்தனை கிரிமினல்களும் நினைத்தால் என்ன செய்வீங்க.. விட்டுட்டுப் போயிருவீங்களா..?
//நேத்து நான் 160 ரூபாய் கொடுத்திருந்தால்.. அது எனது நான்கு நாட்கள் சாப்பாட்டுக்குரிய பணத்தினை ஒரே நேரத்தில், ஒரே நாளில் செலவு செய்தவனாக இருப்பேன்.//
அப்படி எங்க பாஸ் சாப்பிடுறீங்க? கொஞ்சம் முகவரி கொடுங்களேன்..]]]
என் வீட்டுக்குப் பக்கத்துல.. காலைல 12 ரூபாய்.. மதியம் 15 ரூபாய்.. இரவு 12 ரூபாய்.. கையேந்தி பவன்..
[[[அகல் விளக்கு said...
படத்த பத்தி ஒன்னுமே சொல்லிலியே தல!!!]]]
சொல்லிட்டேன் தல.. பதிவு போட்டாச்சு.. பாருங்க..!
[[[குழலி / Kuzhali said...
Anne manasu varuthama irukku]]]
எனக்கு வருத்தமா இருக்கு..!
[[[நேசன்..., said...
பாத்தீங்களா. இதனாலதான் அப்துல் கலாம் சொல்றாரு இந்தியா 2020 ல வல்லரசு ஆகுன்னு! இப்போவாவது நம்புங்க!.....]]]
நம்புகிறேன் நேசன்.. வேற வழி.?
[[சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
இதில் யாதொரும் உண்மையிருப்பதாகத் தெரிய்வில்லை. கற்பனையாக. இப்படி காவலர்களையும் ரவுடிகளையும் கேட்க ஆசைப்பட்டிருப்பார். அதை உண்மையில் செய்ய முடியாது. எனவே எழுதுகிறார். ஒரு போலிஸ்காரில் வந்திறங்கும் ஆய்வாளரிடம் போய் இப்படி பேசமுடியாது. தான் படம் பார்க்க என்ற தன்னலமே தொனிக்கிறது.]]]
உங்களுடைய கருத்துக்கு நன்றிகள்..!
[[[balutanjore said...
dear unmai manadai ennavo seigirathu
i was not at all aware of such things
i have not visited any theatre so far]]]
உண்மையாகவா.. கொடுத்து வைச்சிருக்கணும் ஸார்.. இதுக்கு..
எங்களுக்கு இதுதான் தொழில்ன்றதால தியேட்டருக்கு போகத்தான் வேண்டியிருக்கு..
[[[let us boycott such theatres
balasubramanyan vellore]]]
முடியற காரியமா ஸார்..? அப்புறம் பொழப்ப பார்க்கணுமே..?
[[[jtraja said...
சுதந்திர போராட்ட தியாகி அளவிற்கு போராடி இருக்கிறீர்கள். நாட்டோட உண்மையான பிரச்சனைய எழுதி இருக்கிறீர்கள். ஏனென்றால் நாம் தமிழர்கள். சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர் போய்விடும் அல்லவா.
Raja
Chennai]]]
அதே துறையில் இருப்பதால்தான் சினிமா தேவையாக இருக்கிறது ராஜா..!
[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ரொம்ப சூப்பர் ,
கலக்கிட்டீங்க சார்,
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான்!]]]
என்ன தைரியம் போங்க.. சட்டுன்னு வந்த கோபம்தான்..!
[[[JACK and JILLU said...
ம்ம்ம்... ஒரு அன்னியன் உருவாகிறார்]]]
எனக்கு மட்டும் அந்த அளவுக்கு சக்தி இருந்தா..?
[[[தருமி said...
////எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா//
நல்ல அனுபவம். ஒன்றா இரண்டா. இப்படி?
உங்கள் தெனாவட்டுக்கு என் மரியாதை.]]]
ஹி.. ஹி.. ஹி..
என்ன இருந்தாலும் மதுரை தண்ணிய ஒரு பத்து வருஷம் குடிச்ச அனுபவம் இருக்கே ஸார்..!
[[[நாமக்கல் சிபி said...
nijavulaga Indhiyan thatha Unmai thamizhan vaazgha!]]]
ஹி.. ஹி.. ஹி..!
[[[நாமக்கல் சிபி said...
Please check your BP, Sugar etc.. Its not good for your health.]]]
ஓகே.. அட்வைஸுக்கு நன்றி முருகா..!
[[[நாமக்கல் சிபி said...
Dr Bruno,
Please advice him!]]]
ஏன்..? அவர் என்ன வேலை வெட்டியில்லாம சும்மா இருக்காருன்னு நினைச்சியா முருகா..!
[[[செ.சரவணக்குமார் said...
நல்ல பதிவு. உங்க சுயபுராணத்துல "பிறந்து வளர்ந்ததில் சொல்லிக்கொள்ளும்படியான சாதனைகள் இதுவரை இல்லை. உயிருடன் இருப்பதைத்தவிர"... ன்னு போட்ருக்கீங்க, இனிமே அத மாத்திருங்க, 'இது ரொம்ப பெரிய சாதனைங்கோ'..]]]
இதெல்லாம் ஒரு விஷயமா ஸார்..!
[[[sridhar said...
Really your great. Guys forward this news as much as we can. We will make a public to know what is happening]]]
நாலு பேராவது தட்டிக் கேட்க முன் வந்தால் சந்தோஷப்படுவேன்..!
கேசோடு கேசா இதையும் பதிவு பண்ணி நடத்தியிருக்கலாம்.
தனியாவா ஸ்டேசனுக்கு போறோம் இதுக்குன்னு
கி கி கி
காமெடி ஒருபுறம் இருக்க இதுதான் நம்ம குமுகாயம்..நாம் நமக்கு வேணுங்கறவங்கள பாராட்டுவோம்..வேணாகறவங்கள விமர்சிப்போம்..
சரவணா! செம தெனாவட்டு பார்ட்டிபா நீனு! எனக்கு கூட இப்படி ஒரு அனுபவம் அதே தியேட்டரில் 1988ன்னு நினைக்கிறேன். அதே கமல் படம் நாயகன்.
உண்மைத் தமிழன்,
ஊழல் செய்யும் திரையரங்க நிர்வாகத்தையும் காவல்துறையையும் மாத்திரம் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எப்படியாவது முதல் நாளே படம் பார்த்துவிட வேண்டும் என்கிற நம்முடைய மனப்பான்மையையும் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். (அதே போல் உடனே விமர்சனம் எழுதத் துடிக்கும் இணைய வியாதியையும்).
அப்புறம்... இப்படி தனியாளாக மாட்டிக் கொள்ளாதீர்கள். பிளாக் டிக்கெட் விற்பவர்களால் உங்களுக்கு பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டிருக்கக்கூடும். யாரும் அப்போது உதவிக்கு வந்திருக்க மாட்டார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
அச்சச்சோ.......
இதையே ஒரு படம் எடுக்கலாம்போல இருக்கேப்பா!!!!
ரவுடிகள் & நாயகன் சண்டைக்கு நல்ல ஸ்கோப் இருக்கே!
படிக்கட்டுலே சோகமா உக்காந்த ஸீனுக்கு ஒரு பாட்டு. நியூஸியில் மலைகள் மேல் அலைவதாக எடுக்கலாம்.
/
நேத்து நான் 160 ரூபாய் கொடுத்திருந்தால்.. அது எனது நான்கு நாட்கள் சாப்பாட்டுக்குரிய பணத்தினை ஒரே நேரத்தில், ஒரே நாளில் செலவு செய்தவனாக இருப்பேன்.
/
160 ரூபாய்க்கு நாலு நாள் சாப்பாடா சென்னைலயா?. சென்னைக்கு ட்ரான்பர் வாங்கீட்டு வந்திட வேண்டியதுதான்
:))))
[[ஆக.. ஒருவரின் தவறு.. அப்படியே தொடர்கதையாய் போய்க் கொண்டேதான் இருக்கும். இதுதான் இந்த நாட்டில் மேலே இருந்து கீழேவரைக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது.]]
சினிமா ரிக்கற் விவகாரம் தங்களது சென்னையில் பிரத்தி.யேகம் தான் - - - ஆனால் ஊழல் சகல நாடு நகரங்களிலும் உண்டு சார்.
[[இப்படி அநியாயம் பண்றதுனால தானே திருட்டு வீசிடி வியாபாரம் களை கட்டுது:]]
இதுவும் ஞாயம் தானே
தீப்பெட்டி said...
அவுங்க நாலு பணம் பாக்குறதே ரஜினி, கமல்,விஜய் படத்துக்குத்தான்.. இவுங்கெல்லாம் வருசம் 1 படம் நடிக்குறதே பெரிய விசயம்.. வருசம் 4 படத்துக்கு 40 நாள் அவுங்க சம்பாதிக்குறது உங்களுக்கு பொறுக்கலயா?
இப்படியானோர் இருப்பதாலேயே அப்படியானோர் நாட்டை குட்டைகளாக்கின்றனர்.
சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
இதில் யாதொரும் உண்மையிருப்பதாகத் தெரிய்வில்லை. கற்பனையாக. இப்படி காவலர்களையும் ரவுடிகளையும் கேட்க ஆசைப்பட்டிருப்பார். அதை உண்மையில் செய்ய முடியாது. எனவே எழுதுகிறார்.
ஒரு போலிஸ்காரில் வந்திறங்கும் ஆய்வாளரிடம் போய் இப்படி பேசமுடியாது.
தான் படம் பார்க்க ...என்ற தன்னலமே தொனிக்கிறது.
தற்செயலாக கடவுளைக் கண்டாலும், சுரண்டித்தான் பார்ப்பாராக்கும்
அண்ணே சொன்னா கொவிச்சிக்கக் கூடாது, உங்க கொவத்தப் பார்க்கும் போது, நான் பல நாள் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது. இதுபோல் எனக்கும் நிறைய நடந்திருக்கிறது, ஆனால் நான் அப்போல்லாம் படம் பார்க்காம வீட்டுக்கு வந்துவிடுவேன் அதுக்கப்புறம் அந்த படத்த நான் டிவியில போடும் வரை பார்க்க மாட்டேன்.
உங்க அலைவரிசையும் என் அலைவரிசையும் ஒத்து போகுது அநியாயத்தப் பார்த்தா அப்படியே வெகுண்டெழுந்து எல்லோரையும் அடிச்சு நொறுக்கணும் போல இருக்கும் ஆனால் என்ன செய்ய நானும் சரா சரி தமிழ் குடி மகன்தான் எனக்கும் குடும்பம் குட்டி என்று இருக்கு அதனால் என்ன நானே அடக்கிக் கொள்வேன் அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறிவிடுவேன். நானெல்லாம் ரொம்ப கொழைண்ணே.
அந்த இடத்தில் நான் இருந்தால் கூட உங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருக்க மாட்டேன் ஏன்னா நானும் சராசரி தமிழன்.
போங்க அண்ணே போய் ஒரு கொட்டர அடிச்சிட்டு குப்புற படுங்க.
நான் ஒரு தீவிர கமல் ரசிகன்.இப்போது வெளிநாட்டில் வசிக்கிறேன்.எதார்த்தமாக உன்னைப்போல் ஒருவன் -விமர்சனம் என்று சர்ச் பண்ணியபோது தங்களின் பேஜ் சிக்கியது.விமர்சனம் படித்தேன். விமர்சனத்திலிருந்து கிளிக்கி இந்த பேஜுக்கு வந்தேன்.
பல பின்னூட்டங்களையும் படித்தேன்.
மிகவும் நெருடலான விஷயம்.
நீங்கள் இந்தியாவிலே ஒரு பாதி வாழ்க்கையை வாழ்ந்து விட்டும் இத்தகைய சமயங்களில் ஏற்படும் கோப உணர்வுகளை இழக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
நான் எனது 18வயதிலேயே இந்த வகை பொது நியாய கோவங்களுக்கான இடம் இந்தியா இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.இந்தியாவில் இருந்தவரை கமல் படம் முதல் ஷோ பார்த்துவிடுவேன்.அதுவும் முதலில் நேராக பிளாக் டிக்கெட் யார் விற்கிறார்கள் என்று சில செகண்டுகளில் identify செய்து நேராக அவர்களிடம் சென்று வாங்கிவிடுவேன்.
நீங்கள் அந்நியன் பாணியில்
என்னைப் போல் ஒருவனை
தண்டிக்க வேண்டுமென்றால் உதயம் தியேட்டருக்கு மட்டும் குண்டு வைத்தால் நடக்காது.இந்தியா மொத்தத்துக்கும் பெரிதாக(அதாவது அணுகுண்டு) வைத்து தரைமட்டமாக்கிவிட்டு புதிய இந்தியாவை படைத்தால்தான் அது சாத்தியம்.
(உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருத்தம்.நியாய உணர்வுகளுடன் வாழ இந்தியா சரியான இடமாகப் படவில்லை.)
வாழ்க இந்தியா.வாழ்க ஜனநாயகம்.
//எனக்கு மட்டும் அந்த அளவுக்கு சக்தி இருந்தா..?//
Antha Anniyanaiyum Ambi aakki iruppeenga!
நண்பர் சரவணன்,
ஏன் வீணாக டென்ஸன் ஆகிறீக ? விலை நிர்னையம் பற்றிய பொருளாதார அடிப்படை புரியாததால் ஏற்பட்ட கோபம் இது. நியாயமாக பார்த்தால், அரசு டிக்கட் விலையை நிர்னியகக்க கூடாது. சந்தையே டிக்கட்டின் விலையை முடிவு செய்ய ஏதுவாக, ஃப்ரீயா விட்டிருந்தால், தியாடர்காரர்களே, 150 அல்லது 500 ருபாய்க்கு இஸ்டம் போல டிக்கட் விலையை நிர்னியத்து லாபம் பார்க்க அனுமதிக்க வேண்டும். சில ஹிட் படங்களுக்கு, முதல் சில நாட்கள் மிக அதிக விலை உருவாகும். நாட்கள் செல்ல செல்ல விலை குறையும். இரவு காட்சிகளை விட பகல் காட்சிகளுக்கும், வார இறுதி நாட்களைவிட
பிற நாட்களுக்கும் கட்டணம் குறையலாம். ஏல முறையில் கூட டிக்கட்களை ஆன்லைன் அல்லது நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் முறையில் போலிஸும், ரவுடிகளும் இந்த லாபத்தில் பெரும் பங்கு பெற்று,
நேர்மையில்லாத சீரழவு, நோய் போல பரவி உள்ளது.
சினமா தொழில் பற்றி நிறைய தெரிந்தவரான உங்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளில் தியாட்டர்களின் நிலை பற்றி தெரிந்திருக்கும். முதலீட்டிற்று வட்டி கூட தேறாத அளவு மிக மிக குறைந்த லாபம் அல்லது தொடர் நஸ்டம். அதனால் பல நூறு தியாட்டர்கள் மூடப்பட்டன. புதிதாக (மால்கள் தவிர) வேறு எந்த பகுதியுலும் எந்த மடையனும் தியட்டர் கட்டுவது அறவே இல்லை. கரூர், திண்டுகள் போன்ற ஊர்களை பாருங்க.
உதயம் தியட்டர் கூட லாபம் இல்லாததால் கைமாறிவிட்டதாக ஒரு தகவல். அதன்
ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு கூடியுள்ளதால் இன்னும் ஓட்டறாக.
பிற பொருட்கள் எல்லாம் விலைவாசிக்கு ஏற்ப உயரும் போது, டிக்கடிற்கும் 150 ரூ கொடுக்கலாம். எனக்கு தெரிஞ்சு குவாட்டர் 15 ரூ விற்றது. இன்று 60. (இதிலும் செய்ற்கையான அரசு விலைதான்) தங்கத்தின் விலையோடு ஒப்பிட்டு பாருங்க.
ஒரு வாரம் கழித்து டிக்கட் விலை குறையும் போது பார்த்தால் குடி முழுகிவிடாது.
சரியா ? அப்படி "தாரளமயமாக்கினால்" தான் சினிமா தொழில் தொடரும்...
''போங்க அண்ணே போய் ஒரு கொட்டர அடிச்சிட்டு குப்புற படுங்க. ''
வெத்து போத்தல் தூக்கினதுக்கே படாத பாடு பட்டாரு - - - குவாட்டர் அடிச்சாருன்னா அம்போ தான்.
படத்தினை பற்றி விமர்சனம் எழுதி அதற்கு மற்றவர்கள் பெற்ற பின்னூட்டங்களை விட அதிக பின்னூட்டங்களை பெற்று விட்டாரே.ஏன்னா "நான் ஒரு பின்னூட்டம் எழுதினா நூறு பின்னூட்டம் எழுதின மாதிரி ஹஹ்ஹஹ்ஹா
உன்னோட கதைய பார்த்தேன். ரொம்ப காமடியா இருந்துச்சு. உனக்கு தெரியாதா இந்த சினிமாகாரங்கள பத்தி. தேட்டர மட்டும் குறை சொல்லாதே. இப்படி வித்தாதான் கமல்ஹாசன்கிட்ட குடுத்த காச தேத்தமுடியும். மோகன்லால்க்கு குடுத்த சம்பளத்த தவிர எந்த செலவும் இல்லாம படத்த எடுத்துட்டு, ஏரியாவுக்கு ரெண்டு கோடி பிசிநஸ் பண்ணினா இப்படித்தான் பணம் சம்பாரிக்கனும். பாவம் வெளிய நின்ன போலீசையும், பிளாக்கில டிக்கெட் விக்கிரவனையும், தேட்டர்காரனையும் மட்டும் குறை சொல்லாதே. நியாயம் கேட்க ஆழ்வார்பேட்டை போ. நீ மட்டும் இல்லே! உன்னோட இப்படி படம் பார்த்த பல இழிச்சவாயனுக! மற்றும் சாய் மீரா எல்லோருக்கும் எனது அனுதாபங்கள்.
[[[முத்து தமிழினி said...
கேசோடு கேசா இதையும் பதிவு பண்ணி நடத்தியிருக்கலாம்.
தனியாவா ஸ்டேசனுக்கு போறோம் இதுக்குன்னு
கி கி கி
காமெடி ஒருபுறம் இருக்க இதுதான் நம்ம குமுகாயம்.. நாம் நமக்கு வேணுங்கறவங்கள பாராட்டுவோம்.. வேணாகறவங்கள விமர்சிப்போம்..]]]
என்ன வேண்ணாலும் பாராட்டுங்க.. எப்படி வேண்ணாலும் விமர்சிங்க.. ஆனா மாசத்துக்கு ஒரு வாட்டியாவது ஆஜர் ஆயிருங்க..!
[[[அபி அப்பா said...
சரவணா! செம தெனாவட்டு பார்ட்டிபா நீனு! எனக்கு கூட இப்படி ஒரு அனுபவம் அதே தியேட்டரில் 1988ன்னு நினைக்கிறேன். அதே கமல் படம் நாயகன்.]]]
அண்ணே நீங்களுமா..?
அப்போ நீங்க இள ரத்தம்ல.. அதான் கொதிச்சிருப்பீங்க..!
நானும் இப்போ இள ரத்தம்தான் அண்ணே.. அதான் கோபம் வருது..
[[[சுரேஷ் கண்ணன் said...
உண்மைத் தமிழன், ஊழல் செய்யும் திரையரங்க நிர்வாகத்தையும் காவல்துறையையும் மாத்திரம் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. எப்படியாவது முதல் நாளே படம் பார்த்துவிட வேண்டும் என்கிற நம்முடைய மனப்பான்மையையும் சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். (அதே போல் உடனே விமர்சனம் எழுதத் துடிக்கும் இணைய வியாதியையும்).]]]
சுரேஷ் ஸார்.. உண்மைதான்.. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிவு போட வேண்டிதான் நான் முதல் நாளே படத்தைப் பார்க்கத் துடிக்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் விட முடியவி்லலை. போதைப் பழக்கம்போல் இந்த பிளாக் சனியன் என்னை விட மறுக்கிறது. எப்படி அறுத்துக் கொள்வது என்று தெரியவில்லை..
[[[அப்புறம்... இப்படி தனியாளாக மாட்டிக் கொள்ளாதீர்கள். பிளாக் டிக்கெட் விற்பவர்களால் உங்களுக்கு பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டிருக்கக்கூடும். யாரும் அப்போது உதவிக்கு வந்திருக்க மாட்டார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.]]]
இனிமேல் ஜாக்கிரதையாகத்தான் அங்கே போக வேண்டும் என்று நினைக்கிறேன்..!
[[[துளசி கோபால் said...
அச்சச்சோ....... இதையே ஒரு படம் எடுக்கலாம்போல இருக்கேப்பா!!!!
ரவுடிகள் & நாயகன் சண்டைக்கு நல்ல ஸ்கோப் இருக்கே! படிக்கட்டுலே சோகமா உக்காந்த ஸீனுக்கு ஒரு பாட்டு. நியூஸியில் மலைகள் மேல் அலைவதாக எடுக்கலாம்.]]]
ஆஹா.. டீச்சர் நீங்க வர வர எங்க லைன்ல குறுக்க, குறுக்க வர்றீங்க..? இப்படி எங்களுக்கு முன்னாடி நீங்க சீன் சொன்னீங்கன்னா எப்படி?
[[[மங்களூர் சிவா said...
/நேத்து நான் 160 ரூபாய் கொடுத்திருந்தால்.. அது எனது நான்கு நாட்கள் சாப்பாட்டுக்குரிய பணத்தினை ஒரே நேரத்தில், ஒரே நாளில் செலவு செய்தவனாக இருப்பேன்./
160 ரூபாய்க்கு நாலு நாள் சாப்பாடா சென்னைலயா?. சென்னைக்கு ட்ரான்பர் வாங்கீட்டு வந்திட வேண்டியதுதான்:))))]]]
வரலாம் சிவா.. ஆனா கையேந்தி பவன்தான்.. ஓகேவா..?
[[[benza said...
[[ஆக.. ஒருவரின் தவறு.. அப்படியே தொடர்கதையாய் போய்க் கொண்டேதான் இருக்கும். இதுதான் இந்த நாட்டில் மேலே இருந்து கீழேவரைக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது.]]
சினிமா ரிக்கற் விவகாரம் தங்களது சென்னையில் பிரத்தியேகம்தான் - - - ஆனால் ஊழல் சகல நாடு நகரங்களிலும் உண்டு சார்.]]]
இல்லைன்னு சொல்லலை.. அதுக்காக நடக்கிறதை நடக்கலைன்னு சொல்ல முடியுமா ஸார்..?
[[இப்படி அநியாயம் பண்றதுனாலதானே திருட்டு வீசிடி வியாபாரம் களை கட்டுது:]]
இதுவும் ஞாயம்தானே]]
ரொம்ப ஞாயம்தான் ஸார்..
[[[தீப்பெட்டி said...
அவுங்க நாலு பணம் பாக்குறதே ரஜினி, கமல்,விஜய் படத்துக்குத்தான்.. இவுங்கெல்லாம் வருசம் 1 படம் நடிக்குறதே பெரிய விசயம்.. வருசம் 4 படத்துக்கு 40 நாள் அவுங்க சம்பாதிக்குறது உங்களுக்கு பொறுக்கலயா?
இப்படியானோர் இருப்பதாலேயே அப்படியானோர் நாட்டை குட்டைகளாக்கின்றனர்.]]]
அப்படியும் ஒரு பாயிண்ட் இருக்குன்றதை சொல்லியிருக்காரு ஸார்..!
[[[சிந்திக்க விரும்பும் சிலருக்காக! said...
இதில் யாதொரும் உண்மையிருப்பதாகத் தெரிய்வில்லை. கற்பனையாக. இப்படி காவலர்களையும் ரவுடிகளையும் கேட்க ஆசைப்பட்டிருப்பார். அதை உண்மையில் செய்ய முடியாது. எனவே எழுதுகிறார்.
ஒரு போலிஸ்காரில் வந்திறங்கும் ஆய்வாளரிடம் போய் இப்படி பேசமுடியாது. தான் படம் பார்க்க என்ற தன்னலமே தொனிக்கிறது.
தற்செயலாக கடவுளைக் கண்டாலும், சுரண்டித்தான் பார்ப்பாராக்கும்]]]
விடுங்க.. யாரோ பெரியவர்.. பேசிட்டுப் போறார்..
[[[பித்தன் said...
அண்ணே சொன்னா கொவிச்சிக்கக் கூடாது, உங்க கொவத்தப் பார்க்கும் போது, நான் பல நாள் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது. இதுபோல் எனக்கும் நிறைய நடந்திருக்கிறது, ஆனால் நான் அப்போல்லாம் படம் பார்க்காம வீட்டுக்கு வந்துவிடுவேன் அதுக்கப்புறம் அந்த படத்த நான் டிவியில போடும் வரை பார்க்க மாட்டேன். உங்க அலைவரிசையும் என் அலைவரிசையும் ஒத்து போகுது அநியாயத்தப் பார்த்தா அப்படியே வெகுண்டெழுந்து எல்லோரையும் அடிச்சு நொறுக்கணும் போல இருக்கும் ஆனால் என்ன செய்ய நானும் சராசரி தமிழ்குடிமகன்தான் எனக்கும் குடும்பம் குட்டி என்று இருக்கு அதனால் என்ன நானே அடக்கிக் கொள்வேன் அந்த இடத்தில் இருந்து உடனே வெளியேறிவிடுவேன். நானெல்லாம் ரொம்ப கொழைண்ணே.]]]
நானும்தான்.. ஒருவேளை எனக்கும் குடும்பம், குழந்தை என்று இருந்தால் இதுபோல் கத்தியிருப்பேனா என்பது சந்தேகம்தான்..
[[[அந்த இடத்தில் நான் இருந்தால்கூட உங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருக்க மாட்டேன் ஏன்னா நானும் சராசரி தமிழன்.
போங்க அண்ணே போய் ஒரு கொட்டர அடிச்சிட்டு குப்புற படுங்க.]]]
குப்புறப் படுத்து பழக்கமிருக்கு. ஆனா குவார்ட்டர் அடிச்சுப் பழக்கமில்லையே தம்பீ..
[[[minorwall said...
நான் ஒரு தீவிர கமல் ரசிகன். இப்போது வெளிநாட்டில் வசிக்கிறேன். எதார்த்தமாக உன்னைப்போல் ஒருவன் விமர்சனம் என்று சர்ச் பண்ணியபோது தங்களின் பேஜ் சிக்கியது. விமர்சனம் படித்தேன். விமர்சனத்திலிருந்து கிளிக்கி இந்த பேஜுக்கு வந்தேன்.
பல பின்னூட்டங்களையும் படித்தேன்.
மிகவும் நெருடலான விஷயம்.
நீங்கள் இந்தியாவிலே ஒரு பாதி வாழ்க்கையை வாழ்ந்து விட்டும் இத்தகைய சமயங்களில் ஏற்படும் கோப உணர்வுகளை இழக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
நான் எனது 18 வயதிலேயே இந்த வகை பொது நியாய கோவங்களுக்கான இடம் இந்தியா இல்லை என்பதை புரிந்து கொண்டேன். இந்தியாவில் இருந்தவரை கமல் படம் முதல் ஷோ பார்த்துவிடுவேன். அதுவும் முதலில் நேராக பிளாக் டிக்கெட் யார் விற்கிறார்கள் என்று சில செகண்டுகளில் identify செய்து நேராக அவர்களிடம் சென்று வாங்கிவிடுவேன். நீங்கள் அந்நியன் பாணியில் என்னைப் போல் ஒருவனை
தண்டிக்க வேண்டுமென்றால் உதயம் தியேட்டருக்கு மட்டும் குண்டு வைத்தால் நடக்காது. இந்தியா மொத்தத்துக்கும் பெரிதாக(அதாவது அணுகுண்டு) வைத்து தரைமட்டமாக்கிவிட்டு புதிய இந்தியாவை படைத்தால்தான் அது சாத்தியம். (உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருத்தம். நியாய உணர்வுகளுடன் வாழ இந்தியா சரியான இடமாகப் படவில்லை.)
வாழ்க இந்தியா.வாழ்க ஜனநாயகம்.]]]
நீங்கள் சொல்வது உண்மைதான்.. இந்தியா முழுக்கவே ஊழலும் முறைகேடுகளும் சகஜமாகிவிட்டன..!
மக்களும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை என்றோ ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.
மக்கள் மாறினால் ஒழிய.. இந்த முறைகேடுகள் ஒழியாது..!
நீங்கள் கொடுத்துவைத்தவர். தப்பிவிட்டீர்கள். நாங்கள்தான் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம்..!
[[[நாமக்கல் சிபி said...
//எனக்கு மட்டும் அந்த அளவுக்கு சக்தி இருந்தா..?//
Antha Anniyanaiyum Ambi aakki iruppeenga!]]]
யெஸ்.. யெஸ்.. யெஸ்..
[[[K.R.அதியமான் said...
நண்பர் சரவணன், ஏன் வீணாக டென்ஸன் ஆகிறீக? விலை நிர்னையம் பற்றிய பொருளாதார அடிப்படை புரியாததால் ஏற்பட்ட கோபம் இது. நியாயமாக பார்த்தால், அரசு டிக்கட் விலையை நிர்னியகக்க கூடாது. சந்தையே டிக்கட்டின் விலையை முடிவு செய்ய ஏதுவாக, ஃப்ரீயா விட்டிருந்தால், தியாடர்காரர்களே, 150 அல்லது 500 ருபாய்க்கு இஸ்டம் போல டிக்கட் விலையை நிர்னியத்து லாபம் பார்க்க அனுமதிக்க வேண்டும். சில ஹிட் படங்களுக்கு, முதல் சில நாட்கள் மிக அதிக விலை உருவாகும். நாட்கள் செல்ல செல்ல விலை குறையும். இரவு காட்சிகளை விட பகல் காட்சிகளுக்கும், வார இறுதி நாட்களைவிட பிற நாட்களுக்கும் கட்டணம் குறையலாம். ஏல முறையில்கூட டிக்கட்களை ஆன்லைன் அல்லது நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் முறையில் போலிஸும், ரவுடிகளும் இந்த லாபத்தில் பெரும் பங்கு பெற்று, நேர்மையில்லாத சீரழவு, நோய் போல பரவி உள்ளது.]]]
சுத்தம் ஐம்பது, அறுபது ரூபாய்க்கே நமக்குத் தாங்க மாட்டேங்குது. இதுல 150 ரூபான்னா எவன் போவான்..? பார்க்கிற சக்தி எவ்வளவுக்கு இருக்கோ அதுக்குள்ளதான் டிக்கெட் விலையும் இருக்கணும்..
[[[சினமா தொழில் பற்றி நிறைய தெரிந்தவரான உங்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளில் தியாட்டர்களின் நிலை பற்றி தெரிந்திருக்கும். முதலீட்டிற்று வட்டி கூட தேறாத அளவு மிக மிக குறைந்த லாபம் அல்லது தொடர் நஸ்டம். அதனால் பல நூறு தியாட்டர்கள் மூடப்பட்டன. புதிதாக (மால்கள் தவிர) வேறு எந்த பகுதியுலும் எந்த மடையனும் தியட்டர் கட்டுவது அறவே இல்லை. கரூர், திண்டுகள் போன்ற ஊர்களை பாருங்க.]]]
உண்மைதான்.. மொதல்ல டிக்கெட் முழுசும் விற்றாலே தியேட்டர்களுக்கு லாபம்தான்.. ஆனால் தியேட்டர்காரர்கள் செய்வது கூடுதல் விலைக்கு ரவுடிகளிடம் விற்று அதிலும் லாபம் பார்ப்பது. இது அநியாயம் இல்லையா..?
[[[உதயம் தியட்டர்கூட லாபம் இல்லாததால் கைமாறிவிட்டதாக ஒரு தகவல். அதன் ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு கூடியுள்ளதால் இன்னும் ஓட்டறாக.]]]
லாபம் இல்லாமல் இல்லை.. பங்குதாரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவால்தான் உதயம் தியேட்டர் விற்கப்பட்டுவிட்டது. 120 கோடி ரூபாய்க்கு ஒருவர் வாங்கியுள்ளார். ரியல் எஸ்டேட் பிஸினஸ் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கு..?
[[[பிற பொருட்கள் எல்லாம் விலைவாசிக்கு ஏற்ப உயரும் போது, டிக்கடிற்கும் 150 ரூ கொடுக்கலாம். எனக்கு தெரிஞ்சு குவாட்டர் 15 ரூ விற்றது. இன்று 60. (இதிலும் செய்ற்கையான அரசு விலைதான்) தங்கத்தின் விலையோடு ஒப்பிட்டு பாருங்க.]]]
ஏங்க.. சும்மா இருக்க மாட்டீங்களா? குவார்ட்டர் அடிக்கிறவன்லாம் தியேட்டருக்கு வர்றானா..? தியேட்டருக்கு வர்றவன்ல்லாம் குடிக்கிறானா..? அது, அதுக்கு அவ்வளவுதாங்க இருக்கணும்.. இன்னும் கூடிக்கிட்டே போனா திருட்டு விசிடிகளின் எண்ணிக்கையும் கூடத்தான் செய்யும்..
[[[ஒரு வாரம் கழித்து டிக்கட் விலை குறையும் போது பார்த்தால் குடி முழுகிவிடாது. சரியா ? ]]]
இது சத்தியமான வார்த்தை..
[[[benza said...
''போங்க அண்ணே போய் ஒரு கொட்டர அடிச்சிட்டு குப்புற படுங்க. ''
வெத்து போத்தல் தூக்கினதுக்கே படாத பாடுபட்டாரு - - - குவாட்டர் அடிச்சாருன்னா அம்போதான்.]]]
பென்ஸ் ஸார்.. இன்னுமா நீங்க அதை மறக்கலை..
ஐயோ நானே மறந்து தொலைச்சி்ட்டேன்..
என்னமோ போங்க.. நம்மளையும் வாட்ச் பண்ண ஒரு ஆள் இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு..
[[[Siva said...
படத்தினை பற்றி விமர்சனம் எழுதி அதற்கு மற்றவர்கள் பெற்ற பின்னூட்டங்களை விட அதிக பின்னூட்டங்களை பெற்று விட்டாரே. ஏன்னா "நான் ஒரு பின்னூட்டம் எழுதினா நூறு பின்னூட்டம் எழுதின மாதிரி ஹஹ்ஹஹ்ஹா]]]
அப்படியா நன்றி சிவா.. நீங்க 99-வது பின்னூட்டத்துக்குச் சொந்தக்காரர்..!
[[[ponniah said...
உன்னோட கதைய பார்த்தேன். ரொம்ப காமடியா இருந்துச்சு. உனக்கு தெரியாதா இந்த சினிமாகாரங்கள பத்தி. தேட்டர மட்டும் குறை சொல்லாதே. இப்படி வித்தாதான் கமல்ஹாசன்கிட்ட குடுத்த காச தேத்த முடியும். மோகன்லால்க்கு குடுத்த சம்பளத்த தவிர எந்த செலவும் இல்லாம படத்த எடுத்துட்டு, ஏரியாவுக்கு ரெண்டு கோடி பிசிநஸ் பண்ணினா இப்படித்தான் பணம் சம்பாரிக்கனும். பாவம் வெளிய நின்ன போலீசையும், பிளாக்கில டிக்கெட் விக்கிரவனையும், தேட்டர்காரனையும் மட்டும் குறை சொல்லாதே. நியாயம் கேட்க ஆழ்வார்பேட்டை போ. நீ மட்டும் இல்லே! உன்னோட இப்படி படம் பார்த்த பல இழிச்சவாயனுக! மற்றும் சாய்மீரா எல்லோருக்கும் எனது அனுதாபங்கள்.]]]
நன்றி பொன்னையா..? யாருங்கப்பா இது.. புதுசு, புதுசா வந்து வவுத்தை கலக்குறாங்க..!
////நன்றி பொன்னையா..? யாருங்கப்பா இது.. புதுசு, புதுசா வந்து வவுத்தை கலக்குறாங்க..! ////
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))
vayiru vazikka sirithen !!
அண்ணே இவ்வளவு எழவை எடுத்துட்டு.. அப்புறம் என்ன எழவுக்கு விமர்சனம் எழுதுறீங்க.. அதான் மூட் அவுடுல ஏறவேயில்லைண்னூ சொல்றீங்க இலல்
கேபிள் சஙக்ர்
சூப்பரு.
சக ப்ளாகரின் வீர தீரச் செயல்களைப் பாக்கும்போது பெருமையாய் கீது ;)
சூப்பரு.
சக ப்ளாகரின் வீர தீரச் செயல்களைப் பாக்கும்போது பெருமையாய் கீது ;)
புல்லரிப்பு தாங்க முடியாம, பதிவும் போட்டுட்டேன்
http://surveysan.blogspot.com/2009/09/blog-post_20.html
[[[K.R.அதியமான் said...
////நன்றி பொன்னையா..? யாருங்கப்பா இது.. புதுசு, புதுசா வந்து வவுத்தை கலக்குறாங்க..! ////
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))
vayiru vazikka sirithen !!]]]
ஓ.. ஒருத்தனோட கஷ்டம் இன்னொருத்தனுக்கு சிரிப்பைத்தான் தரும்..
நல்லா சிரியும்..!
[[[shortfilmindia.com said...
அண்ணே இவ்வளவு எழவை எடுத்துட்டு.. அப்புறம் என்ன எழவுக்கு விமர்சனம் எழுதுறீங்க.. அதான் மூட் அவுடுல ஏறவேயில்லைண்னூ சொல்றீங்க இலல்
கேபிள் சஙக்ர்]]]
தம்பீ..
நீ எதுக்கு இப்ப ரெண்டு லாகின்ல கமெண்ட் போடுற..?
மூட் அவுட்டுன்னாலும் படம் பார்த்தேன்ல.. அப்ப விமர்சனம் எழுதித்தான ஆகணும்..?
[[[SurveySan said...
சூப்பரு. சக ப்ளாகரின் வீர தீரச் செயல்களைப் பாக்கும்போது பெருமையாய்கீது ;)]]]
ம்.. அப்டீயா மவனே..! நல்லாகீது உன் கொமெண்ட்டு..!
[[[SurveySan said...
புல்லரிப்பு தாங்க முடியாம, பதிவும் போட்டுட்டேன்
http://surveysan.blogspot.com/2009/09/blog-post_20.html]]]
நன்றியோ நன்றி சர்வேசன் ஸார்..!
//எனக்கு இருந்த மூடும் போச்சு.. இப்படியொரு மூடோட பின்னாடி பார்த்தா எனக்குள் என்ன ஏறியிருக்கும்..? என்ன இறங்கியிருக்கும்..?//
வயசுக்கு ஏத்த மாதிரி பேசுங்கண்ணே.. :))
திருட்டு விசிடில படம் பாருங்கன்னு கொஞ்சமும் வருத்தப் படாம நான் எல்லார்கிட்டயும் சொல்றதுக்குக் காரணமே இந்த கன்றாவி தான். அதே தியேட்டர் முன்னாடி அந்தப் படத்தோட திருட்டி விசிடியை வித்தா தான் இவனுங்க திருந்துவானுங்க. ஆரம்பிக்கலாமா? ப்ளாக்ல டிக்கெட் விக்கிறது சரின்னா, திருட்டு விசிடியும் சரியானது தானே..
////ப்ளாக்ல டிக்கெட் விக்கிறது சரின்னா, திருட்டு விசிடியும் சரியானது தானே..////
இத நான் வழி மொழிஞ்சுக்கறேன்.
நண்பர் சரவணன்,
நீங்க சொல்லியிருந்த 'தொனி' சிரிப்பை வரவழைத்தது.
மற்றபடி உங்க துன்பத்தை பார்த்து சிரிப்பவனா நான் ?
மூர்த்தியினால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டோம்.
இனி அவன் அளவிற்க்கு சைக்கோத்தனமாக யாரும்
கெள்மபமாட்டாக.
தல இந்த மாதுரி டிக்கெட் அநியாய விலைக்கு எல்லா தியேட்டர்லயும் நடக்குது. போலீஸ் எதையும் கண்டுக்குறது இல்ல. அடுத்து திரு திரு துரு துரு படம் வருது ராயபுரம் IDREAMல பார்க்கலாம் வர்றிங்கள ??
நீங்க என்னதான் காட்டு கத்து கத்தினாலும் இவனுக திருந்த மாட்டாங்க. தேவி தியேட்டர்ல பிளாக்ல விகிகுறவங்க பசங்க கிட்ட இந்த மாதுரி பேசி நான் அப்பறம் என்னோட நண்பர்கள் எல்லாம் அடி வாங்கி இருக்கிறோம். நீங்க தைரியமா பேசி இருக்கிங்க ..
உண்மை தமிழன் உண்மை தமிழன் தான்.
அங்கே இந்தியாவிலே இருப்பதாலே இந்த கோவம் பொங்கி எழுந்து ஹீரோ ஆகுற மாதிரி chances நிறைய இருக்கு. ஆனால் இங்கே மக்கள் தானா உடனடி க்யூ form பண்ணி silentடா போய்டுவாங்க..
கொஞ்சம் compare பண்ணிப் பார்த்தால் சப்புன்னு போய்டும்.
but இங்கே மக்கள் எந்த ஆபிசெலேயுமே லஞ்சம் கொடுக்குறதாவோ , வாங்குறதாவோ இதுவரை கேள்விப்படலே..
புரையோடிப்போன இந்த சமுதாய அவலங்கள் பற்றிய
விஷயம் எத்தனை முறை சினிமாவிலும் பல்வேறு மீடியாக்கள் வழியாகவும் விமர்சனங்களுக்கு உள்ளானாலும் புதுப்பலம் பெற்று மிளிர்ந்து எப்போதுமே தளதளக்கிறது.
இந்தியாவை விட்டு இவ்வளவு தூரத்திலே ஒரு உப்புசப்பில்லாத வாழ்க்கை வாழும்போது இந்த வகை கலாட்டாக்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக பார்க்கமுடிந்தாலும் அங்கே இருந்து அனுபவிக்கும்போது உண்மையில் நெருப்பிலே காலை விட்ட அவஸ்தை அனுபவம்தான்...
எனக்கும் பல ஆண்டுகள்..பல இடங்களில்..இருந்திருக்கிறது..(வேறு வழியில்லாமல்தான் நாங்களெல்லாம் இப்பிடி அங்கங்க டிப்ஸ்(லஞ்சம்) கொடுத்து காரியத்தை சாதிச்சுக்குறோம்.)
சுரணை கெட்டுப்போன வாழ்க்கை நிலையில் பழகிப்போய்விட்ட நம் சொந்தங்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமான் இந்த வகை நியாயக் கோபங்களின் குரலை ஓங்கி ஒலித்து சொன்ன படம் எவனோ ஒருவன்..
ரௌத்திரம் பழகு..என்று பழகிக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட நம் மக்களில் எங்கோ ஓரிருவர் உள்ளிருந்து வீறுகொண்டு பீறிடும் கட்டுப்படுத்தமுடியாத கோப உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்தும் பாங்கு இயல்பானது.
அதை தப்பு செய்து விட்டோமோ என்று பார்க்கும் பார்வைதான் தவறானது.
மிகச்சிறு பான்மையினரின் பிரதிபலிப்பாக இவர்கள் இருந்தாலும் சீமான்போன்ற புரட்சி முன்னோடிகளின் ஆக்ரோஷத்துடன் கூடிய விடாமுயற்சியுடன் கூட்டமாக செயலிலே இறங்குவோமானால் நிச்சயம் இதற்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்கும்.
நாம் தமிழர்.....உண்மைத்தமிழர்தானா?
[[[SanjaiGandhi said...
//எனக்கு இருந்த மூடும் போச்சு.. இப்படியொரு மூடோட பின்னாடி பார்த்தா எனக்குள் என்ன ஏறியிருக்கும்..? என்ன இறங்கியிருக்கும்..?//
வயசுக்கு ஏத்த மாதிரி பேசுங்கண்ணே.. :))]]]
ஆஹா.. தம்பி சஞ்சய்.. அவனா நீயி..?
உன்னையெல்லாம் கட்டையாலேயே அடிக்கணும்..!
[[[SanjaiGandhi said...
திருட்டு விசிடில படம் பாருங்கன்னு கொஞ்சமும் வருத்தப்படாம நான் எல்லார்கிட்டயும் சொல்றதுக்குக் காரணமே இந்த கன்றாவிதான். அதே தியேட்டர் முன்னாடி அந்தப் படத்தோட திருட்டி விசிடியை வித்தாதான் இவனுங்க திருந்துவானுங்க. ஆரம்பிக்கலாமா? ப்ளாக்ல டிக்கெட் விக்கிறது சரின்னா, திருட்டு விசிடியும் சரியானதுதானே..]]]
சரிதான் தம்பி..! ஒண்ணும் தப்பில்லே..!
[[[SurveySan said...
////ப்ளாக்ல டிக்கெட் விக்கிறது சரின்னா, திருட்டு விசிடியும் சரியானதுதானே..////
இத நான் வழி மொழிஞ்சுக்கறேன்.]]]
இதை நான் முன் மொழிகிறேன்..!
[[[K.R.அதியமான் said...
நண்பர் சரவணன், நீங்க சொல்லியிருந்த 'தொனி' சிரிப்பை வரவழைத்தது. மற்றபடி உங்க துன்பத்தை பார்த்து சிரிப்பவனா நான்?
மூர்த்தியினால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டோம். இனி அவன் அளவிற்க்கு சைக்கோத்தனமாக யாரும் கெள்மபமாட்டாக.]]]
ஓகே.. ஓகே.. நானும் சீரியஸாக சொல்லவில்லை.. எதையும் மனசுல வைச்சுக்காதீங்க..!
[[[ராஜராஜன் said...
தல இந்த மாதுரி டிக்கெட் அநியாய விலைக்கு எல்லா தியேட்டர்லயும் நடக்குது. போலீஸ் எதையும் கண்டுக்குறது இல்ல. அடுத்து திரு திரு துரு துரு படம் வருது ராயபுரம் IDREAMல பார்க்கலாம் வர்றிங்கள ??]]]
ஐயோ.. அது ரொம்ப தூரமாச்சே.. முடியாதுங்க ஸார்..!
[[[நீங்க என்னதான் காட்டு கத்து கத்தினாலும் இவனுக திருந்த மாட்டாங்க. தேவி தியேட்டர்ல பிளாக்ல விகிகுறவங்க பசங்க கிட்ட இந்த மாதுரி பேசி நான் அப்பறம் என்னோட நண்பர்கள் எல்லாம் அடி வாங்கி இருக்கிறோம். நீங்க தைரியமா பேசி இருக்கிங்க ..
உண்மை தமிழன் உண்மை தமிழன்தான்.]]]
ம்.. என்ன செய்றது? நம்ம தலையெழுத்து இதுதான் போலிருக்கு..!
//ஆஹா.. தம்பி சஞ்சய்.. அவனா நீயி..?
உன்னையெல்லாம் கட்டையாலேயே அடிக்கணும்..! //
செமக் கட்டை எதும் கைவசம் இருக்காண்ணே :))
[[[SanjaiGandhi said...
//ஆஹா.. தம்பி சஞ்சய்.. அவனா நீயி..? உன்னையெல்லாம் கட்டையாலேயே அடிக்கணும்..! //
செமக்கட்டை எதும் கைவசம் இருக்காண்ணே :))]]]
நாட்டுக்கட்டை ஒண்ணை எடுத்து வைச்சிருக்கேன்.. நேர்ல வா..!
பிரச்சினை எதற்கு என ஒதுங்கியிருந்து விட்டுக்கொடுக்கும்போதுதான், அநியாயங்களும் அக்கிரமங்களும் தலைவிரித்தாடுகின்றன.
இதிலிருந்து விடுபட உன்னைப்போல் ஒருவன் அல்ல பலர் உருவாக வேண்டும்.
உங்களை யாரும் சினிமா பார்க்க சொல்லலியே?எல்லாரும் பார்க்காமல் இருந்தால் ஏனிந்த வினை?இந்தியவில் ஆஸ்பத்திரியில் பிணம் எடுக்க ,குழந்தை பிறந்த்ததை சொல்ல என்று முக்கியமான எல்லாற்றுக்கும் லஞ்சம் எந்றான பின் சினிமா மட்டுமென்ன?
இட்லி வடை படித்து உங்கள் பக்கம் வந்த்தேன்.
hats off !!!
கதை ரொம்ப பிரமாதம். நான் சொன்னது நீங்க தியேட்டர் வாசலில் டிக்கட்டுக்காக நடந்ததாக சொன்ன கதையை. யே.. அப்பா படம் பெரிய "ரீலா" இருக்கு. "உண்மை தமிழன்" பேர்ல மட்டும்தான் உண்மையா??
//நான் அவருடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபடியே இருந்த ரவுடிகள் கூட்டம் தூரத்தில் இருந்தே என்னை கவனித்தபடியே இருந்தார்கள். எனக்கு என்ன வேகம் வந்ததோ தெரியவில்லை. சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து கத்திக் குவித்துவிட்டேன். "எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா..? காசு இருக்குதுன்னு நிறைய பேரு அள்ளி வீசுறதாலதான் அவன் கொள்ளையடிக்கிறான். ஏண்டா நாய்களா கொடுக்குறீங்க?" என்று கத்தினேன்.//
""இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல, ஆமா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? "உண்மை" எங்க உங்களுக்கு தெரிய போகுது. அய்யா ராசா நானும் நீங்க சொன்ன வெள்ளி பர்ஸ்ட் ஷோ காட்சிக்கு அங்கதான் இருட்ந்தேன்.
கவுண்டமணி செந்திலை பார்த்து சொல்லும் ஒரு டயலாக் நினைவுக்கு வருகிறது: "என்னடா விளம்பரம்? நாம வாங்குற 5, 10 பிச்சைக்கு இதெல்லாம் தேவையா"???
[[[இறக்குவானை நிர்ஷன் said...
பிரச்சினை எதற்கு என ஒதுங்கியிருந்து விட்டுக்கொடுக்கும்போதுதான், அநியாயங்களும் அக்கிரமங்களும் தலைவிரித்தாடுகின்றன.
இதிலிருந்து விடுபட உன்னைப்போல் ஒருவன் அல்ல பலர் உருவாக வேண்டும்.]]]
உருவாகலாம்.. ஆனால் இதனால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க கொஞ்சம் தில் வேண்டும்..!
[[[seetha said...
உங்களை யாரும் சினிமா பார்க்க சொல்லலியே? எல்லாரும் பார்க்காமல் இருந்தால் ஏனிந்த வினை? இந்தியவில் ஆஸ்பத்திரியில் பிணம் எடுக்க, குழந்தை பிறந்த்ததை சொல்ல என்று முக்கியமான எல்லாற்றுக்கும் லஞ்சம் எந்றான பின் சினிமா மட்டுமென்ன?
இட்லி வடை படித்து உங்கள் பக்கம் வந்த்தேன்.]]]
உண்மைதான்.. ஜீரணித்துக் கொள்ளுங்கள் என்கிறீர்கள்..!
இப்படித்தான் இத்தனை வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.. வேறு வழியில்லாமல்..!
[[[செந்தழல் ரவி said...
hats off !!!]]]
நன்றி தம்பீ..!
[[[Thriksa said...
கதை ரொம்ப பிரமாதம். நான் சொன்னது நீங்க தியேட்டர் வாசலில் டிக்கட்டுக்காக நடந்ததாக சொன்ன கதையை. யே.. அப்பா படம் பெரிய "ரீலா" இருக்கு. "உண்மை தமிழன்" பேர்ல மட்டும்தான் உண்மையா??
//நான் அவருடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபடியே இருந்த ரவுடிகள் கூட்டம் தூரத்தில் இருந்தே என்னை கவனித்தபடியே இருந்தார்கள். எனக்கு என்ன வேகம் வந்ததோ தெரியவில்லை. சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து கத்திக் குவித்துவிட்டேன். "எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா..? காசு இருக்குதுன்னு நிறைய பேரு அள்ளி வீசுறதாலதான் அவன் கொள்ளையடிக்கிறான். ஏண்டா நாய்களா கொடுக்குறீங்க?" என்று கத்தினேன்.//
""இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல, ஆமா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? "உண்மை" எங்க உங்களுக்கு தெரிய போகுது. அய்யா ராசா நானும் நீங்க சொன்ன வெள்ளி பர்ஸ்ட் ஷோ காட்சிக்கு அங்கதான் இருந்தேன்.
கவுண்டமணி செந்திலை பார்த்து சொல்லும் ஒரு டயலாக் நினைவுக்கு வருகிறது: "என்னடா விளம்பரம்? நாம வாங்குற 5, 10 பிச்சைக்கு இதெல்லாம் தேவையா"???]]]
தங்களுடைய புரிதலுக்கு மிக்க நன்றிகள்..!
நான் சென்றது வெள்ளியன்று மாலை காட்சிக்கு..!
இருந்தாலும் இதன் உண்மையை உணர்வதும், புரிவதும் உங்களை மாதிரி புதிய பதிவர்களுக்கு கஷ்டம்தான்..!
நான் எழுதியதை சரியாக படிக்கவும்.
சினிமா அத்தனை முக்கியமா?நிங்கள் எல்லாரும் பார்க்காமல் இருந்தால் டிக்கெட் என்னாகும்? ஜூவிக்கு உன்ங்க்கள் படிவை அனுப்புங்கள் .ஒருவேளை ஞாயம் கிடைக்கலாம்........
[[[seetha said...
நான் எழுதியதை சரியாக படிக்கவும்.
சினிமா அத்தனை முக்கியமா? நிங்கள் எல்லாரும் பார்க்காமல் இருந்தால் டிக்கெட் என்னாகும்? ஜூவிக்கு உங்கள் படிவை அனுப்புங்கள். ஒருவேளை ஞாயம் கிடைக்கலாம்........]]]
சினிமா ஒரு தொழில். பொழுதுபோக்கு. பார்க்காமல் நிறுத்துவது என்பது முடியாதாது. அரசு அலுவலகங்கள் எவ்வளவு தேவையோ அதேபோல் சினிமாவும் தேவைதான். அரசு அலுவலகங்களில் வாங்கப்படும் லஞ்சத் தொகை போல் அநியாயமானதுதான் சினிமா டிக்கெட்டை பிளாக்கில் விற்பது.
இதனை பத்திரிகைகளுக்குச் சொல்லி ஒண்ணும் ஆகப் போவதில்லை. இப்போதைக்கு அரசு சினிமா உலகுக்கு ஆதரவாக இருப்பதாலும், காவல்துறையின் அனுசரனையும் அவர்களுக்கு இருப்பதால் எல்லாமே வேஸ்ட்டுதான்..
அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.
செம பிலிம் காண்பிக்கும் ஆசாமி சார் நீங்க. வேணுமினா படம் பாருங்க, வேண்டாமுன்னா போயிட்டே இரு. என்னமோ நீங்க படம் பார்கலைன்னா உலகமே ரொம்ப வருத்தப்படுவார்கள் என்பது போல பில்டப் கொடுக்கிறங்க. படம் வந்து பத்து நாள் கழிச்சு போய் பார்த்தால் ஒன்றும் குறைஞ்சிடாது.
[[[சினிமா ஒரு தொழில். பொழுதுபோக்கு. பார்க்காமல் நிறுத்துவது என்பது முடியாதாது.]]]
அடேயப்பா, என்ன சமூக அக்கறை, என்ன சமூக அக்கறை. புல்லரிக்குதுங்க.
Post a Comment