உன்னைப் போல் ஒருவன் - திரைப்பட விமர்சனம்

20-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தினை கொஞ்சம் கடுப்போடு பார்க்க வேண்டிய சூழலை
என் அப்பன் முருகன் ஏற்படுத்தியிருந்தான்.


கதை முன்பே தெரியும் என்பதால், எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதை அறியவே காத்திருந்தேன்.


ஏமாற்றவில்லை. திரைப்படத்தின் முத்தான மூன்று விஷயங்கள், வசனம், திரைக்கதை, இயக்கம்.

நடிப்பு என்று ஏதுமில்லை. நடிப்புக்கான வாய்ப்பு பெரும் நடிகர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உண்மையாகவே நடித்திருப்பவர் கணேஷ்வெங்கட்ராமனால் விசாரிக்கப்படும் போதை ஆசாமிதான். அந்த ஒரு நிமிடம்.. உடல் நடுங்கி 'மூச்சா' போகின்ற அளவுக்கு தனது பயத்தைக் காட்டுகின்ற அந்த போதை பார்ட்டிதான் படத்தில் நடித்திருக்கும் நடிகர்.


மோகன்லாலின் இயல்பான நடிப்பில் கால்வாசிகூட வெளிப்படவில்லை. அதற்கு அவர் என்ன செய்வார்..? ஒரே செட்.. ஒரு செட் டிரஸ்.. கடைசி நாளில் போனால் போகிறது என்று மப்டி டிரெஸ்.. இதில் அவர் அவ்வப்போது நடப்பதும், பேசுவதுமாக சென்றுவிட.. நடிப்பைக் கொட்டக் காணோம்.


அவருக்கும், தலைமைச் செயலாளர் லஷ்மிக்கும் இடையில் நடக்கும் வாதப்போரில் முழுக்க, முழுக்க வசனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதினால் அதைத்தான் ரசிக்க முடிந்தது. லஷ்மியம்மாவுக்கு வயதாகிக் கொண்டே போவது மேக்கப்பையும் மீறி தெளிவாகத் தெரிந்தது. வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம்.

கமல் வழக்கம்போல.. ஐந்து நாட்கள்தான் இந்தத் திரைப்படத்திற்காக நடித்தாராம்.. போதும்.. கடைசிக் கட்டக் காட்சியில் மட்டுமே கண்கலங்கி ஏதோ தான் நடித்துவிட்ட திருப்தியைக் காட்டிவிட்டார்.

வசனங்களுக்காக கை தட்டி, தட்டி கை வலித்துப் போன நிலைமையில் ரசிகர்கள் ஓய்ந்து போய்விட்டார்கள். எனக்குத் தெரிந்து வசனங்களுக்காக ஒரு திரைப்படம் பேசப்படுகிறது எனில் நீண்ட பல வருடங்களுக்குப் பின் இத்திரைப்படம்தான்..

உலக அரசியல், கணினி அறிவியல், தமிழக அரசியல், பொது வாழ்க்கை என்று அனைத்தையும் நன்கு அறிந்திருக்கும் ஒருவர்தான், இத்திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக இருக்க முடியும் என்பதை தீர்மானித்திருக்கும் கமலுக்கு முதலில் எனது நன்றிகள்..

இரா.முருகன் அற்புதமாக வசனங்களை பதிவு செய்திருக்கிறார். "உயிரெல்லாம் கொஞ்சம் வெளில இருக்கட்டும்.." என்பதில் துவங்கி இறுதிவரையில் முருகனின் ஆதிக்கம்தான் திரைப்படத்தில் ஜொலிக்கிறது.

எம்.எஸ்.பாஸ்கர் புகார் கொடுக்க வரும்போது சிவாஜியிடம் பேசுவதும்.. கமல் சிவாஜியிடம் தனது புகாரை பதிவு செய்யச் சொல்லும்போதும் மிக இயல்பாக வசனப் பிரதிகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

சி.எம்.மிடம் பேச வேண்டும் என்று கமல் கேட்க "அவர் உங்ககிட்ட பேசுற அளவுக்கென்ன வேலைவெட்டி இல்லாதவரா?" என்று மோகன்லால் கேட்க.. "ஓட்டுக் கேட்க என்கிட்ட வந்தாரே.." என்று கமல் எடுத்துவிடும் டயலாக்கில் என் வரிசையிலேயே நான்தான் அதிகமாக கை தட்டினேன்.

"கமிஷனர் ஸார்.. இப்போ நான் குப்பனோ, சுப்பனோ இல்லைன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.." என்று கமல் பேசுவது டச்சிங் பாயிண்ட்..

"அவங்களை அப்படியே வீட்டுக்கு போகச் சொல்லுங்க.. நாளைக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் வீட்டுக்கு வரும்.." என்று இயல்பு நிலையை கோபத்துடன் காட்டுகிறார் கமிஷனர் மோகன்லால்.

காக்கிச் சட்டை போட்டுவிட்டால் பொதுமக்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவார்கள் என்றில்லை.. சக காவலர்களிடமே அதைத்தான் அதிகாரிகள் காட்டுவார்கள் என்பதை "என்ன பிடுங்கிட்டா இருந்தீங்க..?" என்று உதவி கமிஷனர் கேட்கும்போது சொல்லிவிட்டார் வசனகர்த்தா.

தற்போதைய மீடியா துறையின் அபார வளர்ச்சிக்கு மிகப் பெரும் உதாரணம் அந்தப் பெண் ரிப்போர்ட்டர். போலீஸ் கமிஷனரிடம் சிகரெட் கேட்கும் தைரியத்துடன் ஒரு பெண்ணியவாதியைக் காட்டியிருக்கும் இத்திரைப்படத்தின் பெண்ணியம் போற்றும் உன்னத தன்மையை கவனித்தில் கொள்ள வேண்டும். கூடவே இன்னொன்றையும்... மீடியாக்காரர்களால்தான் இப்படியெல்லாம் கேட்க முடியும் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குநர்.


இறுக்கமான திரைக்கதை அமைப்புடன் முற்பாதி விறுவிறுப்பாக சென்றதால் 'விக்ரம்' திரைப்படத்திற்குப் பின் இத்திரைப்படத்தின் இடைவேளைதான் மிக வேகமாக வந்து முடிந்தது. எனக்கு முன் சீட்டில் இருந்த ஒரு பெண்மணி தன் வாயில் விரல் வைத்து "என்னங்க அதுக்குள்ள இண்டர்வெல்..?" என்று தனது கணவரிடம் ஆச்சரியத்தைக் காட்டியது லேசாக சிரிக்க வைத்தது.

இந்த இரண்டு வேகமான திரைக்கதைகளும் கமலஹாசனின் திரைப்படங்களிலேயே அமைந்துவிட்டது ஒரு தனிச்சிறப்பு. அதற்காக அவருக்கு ஒரு பாராட்டு..

கலைஞரை பாராட்ட வேண்டியதுதான்.. அதுக்காக இந்த அளவுக்கு ஜால்ரா போட்டிருக்க வேண்டுமா..? எளிமையான முதல்வர் என்ற ரீதியிலும், தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் உண்டு என்பது போலவும் கலைஞரின் வீட்டையும், அவரது குரலையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

எல்லாஞ் சரி.. இதே போல் கதாபாத்திரங்களுக்கு 'கருணாநிதி' என்றோ 'ஸ்டாலின்' என்றோ 'அழகிரி' என்றோ வைத்துவிட்டு படம் வெளிவந்துவிட்டால் தைரியமாக தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் வாழுகிறது என்பதை நாம் நம்பலாம். கமல் அண்ணன் தனது அடுத்தப் படத்தில் இப்படி வைப்பார் என்று நம்புவோமாக..

மும்பை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.. குஜராத் பெஸ்ட் பேக்கரி எரிப்பு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்ய குடியரசுகள் என்று சகல தீவிரவாதத்தையும் ஒட்டு மொத்தமாக காண்பித்துவிட்டு இதில் ஒரு சாம்பிள் என்று மூன்று இஸ்லாமியர்களைக் காட்டிவிட்டு தப்பித்தது கொடூரம்.

"இதே கேள்வியை குஜராத்ல மோடிகிட்ட போய்க் கேட்டுப் பாருங்க.. என்னாகும்னு தெரியும்..?" என்று சர்வ அலட்சியமாக வசனம் பேசப்பட்டுள்ளது. இதே பாணியில், "தமிழ்நாட்டுல கருணாநிதிகிட்ட போய்க் கேளுங்க.." என்று கமலின் அடுத்தத் திரைப்படத்தில் வசனம் வரும் என்று நம்புவோமாக..


ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் என்பதால் கமல் இதில் எதுவும் செய்ய முடியாததுதான். ஆனால் ஹிந்தி திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதாத காரணத்தினால் இப்படத்தின்போது இந்தக் கேள்வியை எழுப்பியாக வேண்டும்?

திரைப்படங்களில் எப்போது பார்த்தாலும் தீவிரவாதி என்றால் தலையில் தொப்பி வைத்த முஸ்லீமையோ அல்லது தாடி வளர்த்த முஸ்லீமையோதான் அடையாளம் காட்டுகிறார்கள். கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..

சிறுபான்மையினர் என்பதால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பெரும்பான்மையோர் கூட்டமாக வந்தமரும் தியேட்டரில் கை தட்டல் வாங்கிக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும்.. இதில் போனால் போகிறது என்று ஒரு இந்துவை நுழைத்து கணக்கை சரி செய்துவிட்டார்கள்.

ஆனால் படத்தில் சாவிற்கான அழைப்பாக அந்த செல்போன் சுவிட்ச்சை ஆன் செய்வது 'இந்து' சந்தானபாரதிதான். தப்பிப்பது ஒரு இஸ்லாமியர் என்று சர்ச்சைக்கு சத்தமில்லாமல் பதில் சொல்கிறார் கதாசிரியர்.

கோவை குண்டுவெடிப்பில் முஸ்லீம்களை குற்றம் சாட்டுபவர்கள் அதற்கு முன்னால் நடந்த கோட்டைமேடு படுகொலைகளைச் செய்த இந்து தீவிரவாதிகளைப் பற்றி பேச்செடுப்பதில்லை.. இந்து தீவிரவாதிகள் அந்த படுகொலைகளை செய்யாமல் இருந்திருந்தால், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது. ஒரு சமூகத்தினரின் கோபம் கணக்கிலடங்கா துயரங்களைக் காட்டிவிட்டது.

சிறியவர்களைவிட பெரியவர்கள்தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். அதுதான் அழகு. ஒவ்வொருவரின் வீட்டிலும் அதுதானே நடக்கிறது..? நம் வீட்டில் நமக்கு சாப்பிடக் கொடுத்து அம்மாவும், அப்பாவும் நாம் சாப்பிடும் அழகை வேடிக்கை பார்த்து தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வார்களே.. அதுதானய்யா பாசம்.. எங்க இருக்கு நம்மகிட்ட..?

சரி மீண்டும் படத்துக்கு வருவோம்..

ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். மோதலின் ஒரு பரிணாமத்தை மோகன்லால்-லஷ்மி மோதலின்போது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் முருகன். பொதுவாகவே ஐ.ஏ.எஸ்.கள் கடைசியில் யார் மாட்டிக் கொள்வது என்று பதைபதைப்பதும், எப்படியாவது குற்றவாளியை பிடித்தாக வேண்டும் என்று ஐ.பி.எஸ்.கள் துடிப்பதும் சாதாரணக் காட்சிகள். அதையே இங்கும் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

யாருக்கு ரெஸ்பான்ஸிபிலிட்டி என்பதில் நடக்கும் இருவரின் மோதலில் தெரிவது காலம், காலமாக அதிகார வர்க்கத்தினருக்குள் நடக்கும் போட்டி, பொறாமையை தெளிவாக்குகிறது.

ஆனாலும் படத்தில் ஆங்காங்கே அளவுக்கதிகமாகப் பேசப்பட்டிருக்கும் ஆங்கில வசனங்கள் காட்சியைப் புரிந்து கொள்வதில் சாதாரண பொதுஜனத்திற்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்திருக்கிறது. அந்தந்த இடங்களில் சப்டைட்டிலாவது போட்டிருக்கலாம். வசனமே புரியாதபோது அவர்களுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கையை சட்டென்று எப்படி மனம் ஏற்கும்..?

லாஜிக் மீறலே இல்லாமல் இல்லை. அது ஹிந்தியிலும் அப்படித்தான் இருந்தது.. அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் குண்டு வைத்துள்ளேன் என்று கமல் சொன்னவுடன் ஏற்பட்டிருக்க வேண்டிய பதட்டத்தை நிமிட இடைவெளிவிட்டு படமாக்கியிருப்பதால் அதன் சீரியஸ்னெஸ் பதிவாகவில்லை.

கமல் இருக்கும் கட்டிடத்திற்கு வரும் கணேஷ் கையோடு கூடவே போலீஸ் படையினரோடு வந்திருந்தால் படம் துவக்க நிலையிலேயே முடிந்திருக்கும். திரைக்கதை ஆசிரியர் தமது வசதிக்காக கணேஷை அவசரக்குடுக்கையாக மாற்றிவிட்டார். கூடவே மொட்டை மாடி ஏறாத சோம்பேறியாகவும் ஆக்கிவிட்டதால், திரைக்கதை ஆசிரியரைத்தான் நாம் குற்றம் சொல்ல வேண்டும்.



மோகன்லால் சற்று பிஸியான ஆர்ட்டிஸ்டுதான். அதற்காக ஒரே நாளில் ஐந்தாறு சீன்களையா எடுப்பது..? அவர் நடப்பது.. வருவது.. உட்கார்வது.. பேசுவது என்று அனைத்தையும் வரிசைக்கிரமமாக எடுத்ததுபோல் தெரிகிறது.

அதிலும் சிவாஜியிடம் விசாரித்துவிட்டு அவரை போகச் சொல்லிவிட்டு உள்ளே போகும் மோகன்லால் பின்பு மீண்டும் அதே வராண்டாவில் நடந்து வர.. அவரிடம் கமல் கொடுத்த அட்ரஸ் போலி என்று சொல்வது அடுத்த சீனாகவே வந்திருப்பதை எடிட்டிங்கில் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் போலும்..

இதில் குறிப்பால் உணர்த்துகிறேன் என்று சொல்லி மிக முக்கியமான கட்டத்தில் வசனத்தின் மூலம் சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டுவிட சாதாரண பாமர ரசிகனுக்குள் குழப்பங்கள்..


கமலின் சோகக் கதையைக் கேட்டு சிவாஜி மனம் மாறி, "இவர் இல்லீங்க.. வேற யாரோ.." என்று கதையை மாற்றுவது.. இதைக் கேட்டு மோகன்லால் கோபப்படுவது.. ஹேக் செய்ய வந்த பொறியாளரும் கமலின் கண்ணீரில் மனதைப் பறிகொடுத்து "கண்டுபிடிக்க முடியலை.." என்று பொய் சொல்ல மானிட்டரை திருப்பி மோகன்லாலே இடத்தைக் கண்டுபிடித்து கிளம்புவது.. இந்த இடத்தில் வசனத்தின் மூலம் அவர்களுடைய உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கலாம்..

இந்தக் குழப்பத்தினால் "எப்படி மோகன்லால் கரெக்ட்டா அந்தக் கட்டிடத்திற்கு வந்தார்..?" என்று திரைப்படம் முடிந்தவுடன் சாதாரண ரசிகர் குஞ்சுகள் தங்களுக்குள் வட்டமேசை மாநாடு போட்டு பேசிக் கொண்டிருந்ததை கேட்க முடிந்தது.

'இசை ஸ்ருதிஹாசன்' என்கிற டைட்டில் கார்டுக்கு செம கைதட்டல். ரசிகர்களின் தலைவரின் மகளுக்குக் கொடுத்த ஆதரவிற்கு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கமல் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகளோடு அந்த ஏணியில் ஏறுகின்ற காட்சியில்தான் பின்னணி இசை சற்று உரக்கக் கேட்டது. நானும் ஒருத்தி இருக்கிறேன். கவனத்தில் கொள்ளுங்கள் என்றது.. இதன் பின் கணேஷ் அந்த கட்டிடத்தில் தேடி வரும்போதும் கமல் அதனை உணர்ந்து லேசாகப் பதட்டப்படும்போதும் டப்.. டப்புதான்..

இறுதிக் காட்சியில் "கமிஷனர் ஆஃப் போலீஸ்" என்று சொல்லி மோகன்லால் கை நீட்டும்போது கமலின் முகத்தில் தெரியும் எக்ஸ்பிரஷனைவிடவும் பின்னணி இசை சற்று பயமுறுத்தியது அல்லது கமலுக்கு உதவி செய்திருக்கிறது.. ஓகே.. ஸ்ருதியை பாராட்டுவோம்.. பெரிய அளவுக்கு இசையமைப்பாளராக வலம் வர வாழ்த்துவோம்..

'மர்மயோகி'யாக வந்திருக்க வேண்டிய இடத்தில் சின்ன பட்ஜெட்டில் வந்திருக்கும் இப்படம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. காரணம், முதலில் இது கமல் நடிக்க வேண்டிய திரைப்படமே அல்ல. கமலின் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்க வேண்டும்.


முழுக்க முழுக்க வில்லன் போன்றே கொண்டு செல்லப்பட்டு இறுதியில் எதற்காக இவ்வளவு நாடகமும் என்று தெரிகிறபோதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீதான ரசிகர்களின் பார்வை மாற வேண்டும். இதுதான் ஹிந்தி திரைப்படத்தின் தாக்கத்துக்கான முதல் காரணம்.

ஹிந்தியில் நஸ்ருதீன்ஷா தன் கதையைச் சொல்கின்ற காட்சிவரையிலும் அவர் பக்கா வில்லனாகத்தான் தெரிந்தார். பாதிக்கப்பட்ட அவருடைய சார்பு பக்கங்கள் தெரிந்த பின்புதான் ஐயோ என்று மனதை உருக்குலைத்தது. அந்தப் பாத்திரப் படைப்பினால்தான் படம் மிக, மிக பேசப்பட்டது. இதில் முதலிலேயே அந்த உணர்வு தொலைக்கப்பட்டுவிட்டதால் இறுதியில் ரசிகர்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த உணர்வு தொலைந்து போனது மறுக்க முடியாத உண்மை.

திரைப்படம் பார்க்க வந்தவர்கள் அத்தனை ரசிகர்களுமே "தலைவர் படம்.." "தலைவர் நடிச்சிருக்காரு.." "கமல் ஹீரோவாம்ல.." என்றே நினைத்து வந்திருக்க.. நிச்சயம் கமல் நல்லவராகத்தான் இருக்க முடியும் என்று கிட்டத்தட்ட முடிவு செய்தே படம் பார்க்க உட்கார்ந்துவிட்டார்கள். கமல் ஹீரோ என்பதால் அவர் என்ன செய்தாலும் அது நன்மைக்குத்தான்.. "தலைவரு போலீஸ் மாமனுங்களை திராட்டில்ல விடுறார்ல்ல.." என்றெல்லாம் சிலாகித்து திரைப்படம் பார்க்க வேண்டிய கட்டாயம் ரசிகர்களுக்கு.

கமல் கடைசியில் சொல்ல வந்த "சாமான்யன் வலியைப் பொறுத்துக் கொள்ளாமல் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?" என்கிற வாதத்தின் தாக்கம் அவரது ரசிகர்களுக்கு எட்டாமல் போனது இதனால்தான்.

கமல் இந்தாண்டு ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார். கோட்டா முடிந்துவிட்டது. அவ்வளவுதான். அடுத்தப் படம் எப்போ என்கிற ரீதியிலேயே திரைப்படம் முடிந்தவுடன் ரசிகர்களும், ஹிந்தி படம் பார்த்திருக்காத பொதுமக்களும் வெளியேற.. கமலின் நல்ல சினிமாவுக்கான முயற்சியின் நோக்கம் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டதா என்பதில் எனக்குச் சந்தேகம்தான்.

இதில் ஒரேயொரு சந்தோஷம்.. புதிய இயக்குநரை அவர் அறிமுகப்படுத்தியிருப்பதுதான். சாக்ரிக்கு இதைவிட பெரிய அறிமுகம் கிடைத்திருக்காது. சாக்ரி அதிர்ஷ்டசாலி. முருகனின் அருள் அவருக்குக் கன்னாபின்னாவென கிடைத்திருக்கிறது.

ஏனெனில் 'சலங்கை ஒலி' திரைப்படத்தின் காட்சியை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள்..

போட்டோ ஸ்டூடியோவில் ஜெயப்ரதா தான் எடுத்த கமலின் புகைப்படங்களை கமலிடம் காட்டுவார். அதைப் பார்த்தவுடன் கமல் சாக்ரியை பிடித்து "இது போட்டோ.. இது என்ன..?" என்று சாக்ரி எடுத்த புகைப்படங்களைக் காட்டுவார். அதற்கு சாக்ரி, ஜெயப்ரதாவின் கேமிராவை காட்டி "இது கேமிரா.." என்று சொல்லிவிட்டு என்று கமலின் ஓட்டை கேமிராவைக் காட்டி "இது என்ன..?" என்பார்.

இன்றைக்கு அதே சாக்ரிக்குத்தான் ரெட் கேமிராவில் பதிவு செய்யும் தமிழ்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறார் அண்ணன் கமல்ஹாசன்.

புதுமுக இயக்குநர் சாக்ரி ஜெயப்ரதா எடுத்தப் புகைப்படங்கள் போலவே, இத்திரைப்படத்தினை நல்லவிதமாக எடுத்து நல்ல பெயரை எடுத்துவிட்டார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்..

ஆக, இந்த இரண்டு திரைப்படங்களின் திரைக்கதை பொருத்தம் கச்சிதம்தானே..

டிஸ்கி : எப்ப பார்த்தாலும் "முழுக் கதையை சொல்லிடறேன்.. சொல்லிடறேன்"னு கூப்பாடு போட்ட நியாயமான்களே..!

இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இதுக்கும் ஏதாச்சும் கத்துனீங்க.. அப்புறம் நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..

73 comments:

பாலா said...

அய்யா.. படமே 2 மணிநேரம்தானாமே... பதிவை படிக்கவே.. அதைவிட அதிக நேரம் தேவைப்படும் போல இருக்கே! :)

அப்புறம்.. உங்களை மாதிரி ‘யூத்’-காகவே.. இந்த பதிவை போட்டேன். பார்த்தீங்களா?

http://www.hollywoodbala.com/2009/09/faceoff-2009.html

-----
பதிவை படிச்சிட்டு மறுபடி வர்றேன்

பாலா said...

///
'விக்ரம்' திரைப்படத்திற்குப் பின் இத்திரைப்படத்தின் இடைவேளைதான் மிக வேகமாக வந்து முடிந்தது.
//////

புலன்விசாரணை-யை விடவா... விக்ரமின் முதல் பாதி.. வேகமானது?

Bruno said...

//எப்ப பார்த்தாலும் "முழுக் கதையை சொல்லிடறேன்.. சொல்லிடறேன்"னு கூப்பாடு போட்ட நியாயமான்களே..!

இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இதுக்கும் ஏதாச்சும் கத்துனீங்க.. அப்புறம் நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..//

ஓ அப்படியா

Unknown said...

///"இதே கேள்வியை குஜராத்ல மோடிகிட்ட போய்க் கேட்டுப் பாருங்க.. என்னாகும்னு தெரியும்..?" என்று சர்வ அலட்சியமாக வசனம் பேசப்பட்டுள்ளது. இதே பாணியில், "தமிழ்நாட்டுல கருணாநிதிகிட்ட போய்க் கேளுங்க.." என்று கமலின் அடுத்தத் திரைப்படத்தில் வசனம் வரும் என்று நம்புவோமாக..///
சென்சார்ல விட மாட்டாங்க தல.. யோசிச்சுப் பாருங்க

Sri said...

//கோவை குண்டுவெடிப்பில் முஸ்லீம்களை குற்றம் சாட்டுபவர்கள் அதற்கு முன்னால் நடந்த கோட்டைமேடு படுகொலைகளைச் செய்த இந்து தீவிரவாதிகளைப் பற்றி பேச்செடுப்பதில்லை.. இந்து தீவிரவாதிகள் அந்த படுகொலைகளை செய்யாமல் இருந்திருந்தால், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது. ஒரு சமூகத்தினரின் கோபம் கணக்கிலடங்கா துயரங்களைக் காட்டிவிட்டது.

Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_20.html#ixzz0RaR16pAR

இது என்ன புது கதை - அதற்கும் முன்னர் வேலையில் இருந்த செல்வராஜ் என்ற காவலரை குத்தி கொன்ற Al-umma தீவிரவாதிகள் ஆரம்பித்து வைத்தனர் என்று என் அறிவு!

butterfly Surya said...

கதையை சொல்லா விட்டாலும் பதிவை சின்னதா போட மாட்டீங்களா..??

பொறுமையா படிச்சிட்டேன். நல்லாயிருக்கு.

டிக்கெட் எடுத்த கதை UPO விட நல்லாயிருக்கு..

பிரபாகர் said...

//எப்ப பார்த்தாலும் "முழுக் கதையை சொல்லிடறேன்.. சொல்லிடறேன்"னு கூப்பாடு போட்ட நியாயமான்களே..!
Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_20.html#ixzz0RbWG7gjw//

//எப்ப பார்த்தாலும் "முழுக் கதையை சொல்லிடறேன்.. சொல்லிடறேன்"னு கூப்பாடு போட்ட நியாயமான்களே..!
//
அண்ணே, எனக்கு கமலை ரொம்பவும் பிடிக்கும், ஒரு காலத்தில் ரசிகர் மன்றத்திலும் இருந்திருக்கிறேன்(அது அப்போ). இந்த படத்தின் கதையை சொன்னாலும் கவலையில்லை ஏற்கனவே வந்துவிட்டதால்.

உங்களின் பார்வை என்னை வியக்க வைக்கிறது. என்னமாய் எழுதுகிறீர்கள்?

முழு படத்தினையும் பார்த்த திருப்தி கிடைக்கிறாது. குறை நிறைகளை மிகத் தெளிவாய் அலசியிருக்கிறீர்கள்.

இது போன்று நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்.

பீர் | Peer said...

கொஞ்சம் கடுப்போடு படம் பார்த்திருந்தாலும், கவனமா பார்த்திருக்கீங்க.

(பிரபாகருக்கு ஒரு ரிப்பீட்டு..)

தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு.. புக் பண்ணிட வேண்டியதுதான்.

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
அய்யா.. படமே 2 மணி நேரம்தானாமே... பதிவை படிக்கவே.. அதைவிட அதிக நேரம் தேவைப்படும் போல இருக்கே! :)]]]

முதல் கமெண்ட்டே இப்படியா..? பாலா.. கோபமா வருது.. கொஞ்சந்தான் சாமி எழுதியிருக்கேன்..!

[[[அப்புறம்.. உங்களை மாதிரி ‘யூத்’-காகவே.. இந்த பதிவை போட்டேன். பார்த்தீங்களா?
http://www.hollywoodbala.com/2009/09/faceoff-2009.html
-----]]]

வர்றேன்.. படிக்கிறேன்..

[[[பதிவை படிச்சிட்டு மறுபடி வர்றேன்]]]

அடப்பாவிகளா.. படிக்கிறதுக்கு முன்னாடியே பி்ன்னூட்டமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட் பாலா said...
//'விக்ரம்' திரைப்படத்திற்குப் பின் இத்திரைப்படத்தின் இடைவேளைதான் மிக வேகமாக வந்து முடிந்தது.//

புலன்விசாரணை-யை விடவா... விக்ரமின் முதல் பாதி.. வேகமானது?]]]

ஆமாம்.. இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[புருனோ Bruno said...

//எப்ப பார்த்தாலும் "முழுக் கதையை சொல்லிடறேன்.. சொல்லிடறேன்"னு கூப்பாடு போட்ட நியாயமான்களே..!

இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இதுக்கும் ஏதாச்சும் கத்துனீங்க.. அப்புறம் நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..//

ஓ அப்படியா]]]

என்ன அப்படியா..? படிச்சீங்களா இல்லையா..?

உண்மைத்தமிழன் said...

[[[Kiruthikan Kumarasamy said...

///"இதே கேள்வியை குஜராத்ல மோடிகிட்ட போய்க் கேட்டுப் பாருங்க.. என்னாகும்னு தெரியும்..?" என்று சர்வ அலட்சியமாக வசனம் பேசப்பட்டுள்ளது. இதே பாணியில், "தமிழ்நாட்டுல கருணாநிதிகிட்ட போய்க் கேளுங்க.." என்று கமலின் அடுத்தத் திரைப்படத்தில் வசனம் வரும் என்று நம்புவோமாக..///

சென்சார்ல விட மாட்டாங்க தல.. யோசிச்சுப் பாருங்க]]]

அதுனாலதான் எழுதினேன்.. இப்ப மோடியை பத்தின கமெணட்டை மட்டும் எப்படி விட்டாங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[Sri said...
//கோவை குண்டுவெடிப்பில் முஸ்லீம்களை குற்றம் சாட்டுபவர்கள் அதற்கு முன்னால் நடந்த கோட்டைமேடு படுகொலைகளைச் செய்த இந்து தீவிரவாதிகளைப் பற்றி பேச்செடுப்பதில்லை.. இந்து தீவிரவாதிகள் அந்த படுகொலைகளை செய்யாமல் இருந்திருந்தால், கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருக்காது. ஒரு சமூகத்தினரின் கோபம் கணக்கிலடங்கா துயரங்களைக் காட்டிவிட்டது.]]

இது என்ன புது கதை - அதற்கும் முன்னர் வேலையில் இருந்த செல்வராஜ் என்ற காவலரை குத்தி கொன்ற Al-umma தீவிரவாதிகள் ஆரம்பித்து வைத்தனர் என்று என் அறிவு!]]]

ஆமாம்.. அதற்கென்ன காரணம்..? கோட்டைமேடு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள்தானே..!

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வரும், தோண்டிக் கொண்டே போனால்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

கதையை சொல்லா விட்டாலும் பதிவை சின்னதா போட மாட்டீங்களா..??

பொறுமையா படிச்சிட்டேன். நல்லாயிருக்கு.

டிக்கெட் எடுத்த கதை UPOவிட நல்லாயிருக்கு..]]]

நன்றி சூர்யா.. இது கொஞ்சூண்டுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...

//எப்ப பார்த்தாலும் "முழுக் கதையை சொல்லிடறேன்.. சொல்லிடறேன்"னு கூப்பாடு போட்ட நியாயமான்களே..!//

அண்ணே, எனக்கு கமலை ரொம்பவும் பிடிக்கும், ஒரு காலத்தில் ரசிகர் மன்றத்திலும் இருந்திருக்கிறேன்(அது அப்போ). இந்த படத்தின் கதையை சொன்னாலும் கவலையில்லை ஏற்கனவே வந்துவிட்டதால்.

உங்களின் பார்வை என்னை வியக்க வைக்கிறது. என்னமாய் எழுதுகிறீர்கள்?

முழு படத்தினையும் பார்த்த திருப்தி கிடைக்கிறாது. குறை நிறைகளை மிகத் தெளிவாய் அலசியிருக்கிறீர்கள்.

இது போன்று நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்.]]]

நன்றி பிரபாகர்..

தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமும், உற்சாகமும், இனிமையான பேச்சும்தான் எங்களை இந்த வலையுலகில் நீடிக்க வைக்கிறது..

நன்றி.. நன்றி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

[[[பீர் | Peer said...

கொஞ்சம் கடுப்போடு படம் பார்த்திருந்தாலும், கவனமா பார்த்திருக்கீங்க.

(பிரபாகருக்கு ஒரு ரிப்பீட்டு..)

தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாளாச்சு.. புக் பண்ணிட வேண்டியதுதான்.]]]

அவசியம் பாருங்க பீர் ஸார்..!

அவிய்ங்க ராசா said...

///////////////
இன்றைக்கு அதே சாக்ரிக்குத்தான் ரெட் கேமிராவில் பதிவு செய்யும் முதல் தமிழ்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறார் அண்ணன் கமல்ஹாசன்
///////////////
அண்ணே ரெட் கேமிராவில் எடுத்த முதல்படம் “அச்சமுண்டு, அச்சமுண்டு” இல்லையா???

Lenin said...

Neenga Madahavn nadicha 'evano oruvan' padam parkalaya?

ithellam maatharathu romba kastamga.naama maarika vendiyathuthan.

inimel udayam theatre-la padam paarkatheenga.ivvalavu pattathuku appuramum thirumbavum anga poi padam paartheengana,neenga pongi elunthathuku arthame ille.

Sampath said...

//கமல் இருக்கும் கட்டிடத்திற்கு வரும் கணேஷ் கையோடு கூடவே போலீஸ் படையினரோடு வந்திருந்தால் படம் துவக்க நிலையிலேயே முடிந்திருக்கும். //

அண்ணே கணேஷ் வந்து தேடுவது கமல் இருக்கும் கட்டிடம் அல்ல .. அதற்கு பக்கத்தில் இருக்கும் போதை ஆசாமி வெடிமருந்து கொடுத்ததாக சொல்லும் வேறு ஒரு கட்டிடத்தில் .... அதனால் தான் கணேஷை கமல் மோனாகுலர் வழியாக பார்ப்பார் ... அதுவும் இல்லாமல் கணேஷ் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடி வரை வருவார், மாடியில் வந்து பார்க்கும் போது அங்கே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பியில் "Do not disturb" கார்ட் தொங்கிக்கொண்டு இருக்கும் ...

மங்களூர் சிவா said...

பதிவை படிச்சா படம் நல்லா இருக்கும் போல இருக்கே!

துளசி கோபால் said...

//காரணம், முதலில் இது கமல் நடிக்க வேண்டிய திரைப்படமே அல்ல. கமலின் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்க வேண்டும்.//

இது.....இதைத்தான் நானும் நினைச்சேன்.

மனுசன் தூக்கிச் சாப்புட்டு இருப்பார்!

கிருஷ்ண மூர்த்தி S said...

நடிப்பதில் எப்படிப் புலியோ, அதே மாதிரி சொதப்புவதிலும் கமல் பெரும் புலி! இந்தப்படத்தின் ஒன்லைன் தீமே, நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் பாமரன் அதாகப்பட்டது a stupid common man பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான், அவன் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்பது தான். தன்னை எப்போதுமே பெரிய அறிவு ஜீவியாகவும், சர்ச்சைக்குரிய எதையாவது செய்யாவிட்டால், பேசாவிட்டால் செரிமானமே ஆகாது என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் கமல் தன்னை a stupid common man என்று வர்ணித்துக் கொள்ளும் வசனம் ரொம்பவுமே ஓவர்! காமெடி!

பிரகாஷ் ராஜ் கூடத் தேவை இல்லை, ஓமகுச்சி நரசிம்மன் கூட, இந்தப் பாத்திரத்தில் மிக நன்றாகவே பண்ணியிருக்க முடியும் என்பதுதான் ஹைலைட்டே!

அப்புறம், நீங்க கத்துனது போதாதுன்னு, என்னையும் என் கத்த வுடறீங்க:-)))

தீப்பெட்டி said...

//திரைப்படங்களில் எப்போது பார்த்தாலும் தீவிரவாதி என்றால் தலையில் தொப்பி வைத்த முஸ்லீமையோ அல்லது தாடி வளர்த்த முஸ்லீமையோதான் அடையாளம் காட்டுகிறார்கள். கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..//

அதானே.. மிகவும் வருத்தமாக இருக்கிறது.. சாமான்ய மக்களிடம் இதன் பாதிப்பு அதிகம்.. இது நிலைமையை மோசமாக்கும்.

//இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க..//

என்னது சொல்லலையா? என்ன பாஸ்.. கமல் படத்துக்கு மட்டும் இப்படி ஓரவஞ்சனை.. இத வன்மையா கண்டிக்குறேன்

யோகராஜ் பக்கங்கள் said...

நண்பர்களே,

உங்களைப் பார்த்தே எழுதத் துவங்கினேன்.
உங்களிலிருந்தே பயணத்தைத் துவக்குகிறேன்.
என் பிளாக்கிற்கு வருகை தந்து தங்களின் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
http://yogarajbabu.blogspot.com/
மிகுந்த நேசத்துடன்
யோகராஜ் பாபு.

Pot"tea" kadai said...

மாம்ஸேய்...அநியாயத்து நீர் நல்லவனாயிருக்கீர். சீக்கிரமாய் புள்ள குட்டியோட செட்டில் ஆக வாழ்த்தறேன்.

நேர்மையான விமரிசனம். தயவு செஞ்சு குறுநெடும்படம் எடுக்காம இந்த மாதிரி பதிவு மட்டும்போடவும்.

***
ஒரு கட்டிப்புடி!

பித்தன் said...

//திரைப்படங்களில் எப்போது பார்த்தாலும் தீவிரவாதி என்றால் தலையில் தொப்பி வைத்த முஸ்லீமையோ அல்லது தாடி வளர்த்த முஸ்லீமையோதான் அடையாளம் காட்டுகிறார்கள். கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..
//

இது உண்மையிலும் உண்மை......

//இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இதுக்கும் ஏதாச்சும் கத்துனீங்க.. அப்புறம் நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..//

நா ரொம்ப பயந்துட்டேன்..... அண்ணே உங்கள சயிடுல பார்த்தா ரொம்ப பயங்கரமா இருக்கீங்க.

Unknown said...

ம்ம்ம்ம்... நான் ஹிந்தி படம் பார்த்தேன், இன்னும் இதப்பார்களை.


<<<
"தலைவர் படம்.." "தலைவர் நடிச்சிருக்காரு.." "கமல் ஹீரோவாம்ல.." என்றே நினைத்து வந்திருக்க.. நிச்சயம் கமல் நல்லவராகத்தான் இருக்க முடியும் என்று கிட்டத்தட்ட முடிவு செய்தே படம் பார்க்க உட்கார்ந்துவிட்டார்கள். கமல் ஹீரோ என்பதால் அவர் என்ன செய்தாலும் அது நன்மைக்குத்தான்.. "தலைவரு போலீஸ் மாமனுங்களை திராட்டில்ல விடுறார்ல்ல.."
>>>
உண்மைதான். பிரபல நடிகர் நடிக்கும் போது இப்படி பற்ற சிந்தனைகள் ரசிகனுக்கு வருவது இயல்புதான்.

வர வர, நீங்க எல்லா படத்தையும் கடுமையா விமர்ச்சிக்க ஆரம்பிச்சிட்டீங்க..

கமல் படத்தையுமா? நான் படம்பாத்துட்டு வந்து நான் என்னுடைய நடுநிலையான(?) கருத்தை சொல்லுறேன்.

நல்லதந்தி said...

//திரைப்படங்களில் எப்போது பார்த்தாலும் தீவிரவாதி என்றால் தலையில் தொப்பி வைத்த முஸ்லீமையோ அல்லது தாடி வளர்த்த முஸ்லீமையோதான் அடையாளம் காட்டுகிறார்கள். கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..//

சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்தாலே போதுமானது. எல்லாவற்றிலும் நொட்டை சொன்னால் எதைத்தான் படமாக எடுக்க முடியும், இந்த விஷயம் கூட உலகத்தில் இந்த நொடிவரை நடந்துக் கொண்டிருக்கும் சமாச்சாரம் அல்லவா?... முதலில் போலி மதசார்பின்மையிலிருந்து விடுபடுங்கள். இயல்பாக படம் பார்க்காமல் இந்த மாதிரி ஒவ்வொரு விசயத்துக்கும் முஸ்லீம்களை இழுப்பதால் அவர்கள் மனம் எவ்வளவு புண்படும் என்பதை உணர்வீர்களா?

பி.கு. நான் இன்னும் இந்தப் படம் பார்க்க வில்லை!.
பொதுவாக தமிழ் சினிமாவை டிவிடியில் மட்டுமே பார்ப்பதாக உத்தேசம். (பணம் விரயம் கருதி!!!!! :) )

Subbiah Veerappan said...

////இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இதுக்கும் ஏதாச்சும் கத்துனீங்க.. அப்புறம் நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..////

ஆமாம். நானும் சொல்லிட்டேன்.போய்ப் படத்தைப் பாருங்க சாமிகளா!
அங்கின போய்க் கத்துங்க! அண்ணன் ஏற்கனவே ரெம்ப டென்சனா இருக்காரு!

உண்மைத்தமிழன் said...

[[[அவிய்ங்க ராசா said...

//இன்றைக்கு அதே சாக்ரிக்குத்தான் ரெட் கேமிராவில் பதிவு செய்யும் முதல் தமிழ்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்து அறிமுகப்படுத்தியிருக்கிறார் அண்ணன் கமல்ஹாசன்//

அண்ணே ரெட் கேமிராவில் எடுத்த முதல்படம் “அச்சமுண்டு, அச்சமுண்டு” இல்லையா???]]]

மறந்து தொலைத்துவிட்டேன். தகவலுக்கு நன்றி அவிய்ங்க ராசா..!

உண்மைத்தமிழன் said...

[[[Lenin said...
Neenga Madahavn nadicha 'evano oruvan' padam parkalaya?
ithellam maatharathu romba kastamga. naama maarika vendiyathuthan.
inimel udayam theatre-la padam paarkatheenga. ivvalavu pattathuku appuramum thirumbavum anga poi padam paartheengana, neenga pongi elunthathuku arthame ille.]]]

அறிவுரைக்கு நன்றிகள் லெனின்..! முயற்சி பண்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sampath said...

//கமல் இருக்கும் கட்டிடத்திற்கு வரும் கணேஷ் கையோடு கூடவே போலீஸ் படையினரோடு வந்திருந்தால் படம் துவக்க நிலையிலேயே முடிந்திருக்கும். //

அண்ணே கணேஷ் வந்து தேடுவது கமல் இருக்கும் கட்டிடம் அல்ல .. அதற்கு பக்கத்தில் இருக்கும் போதை ஆசாமி வெடிமருந்து கொடுத்ததாக சொல்லும் வேறு ஒரு கட்டிடத்தில். அதனால்தான் கணேஷை கமல் மோனாகுலர் வழியாக பார்ப்பார். அதுவும் இல்லாமல் கணேஷ் அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிவரை வருவார், மாடியில் வந்து பார்க்கும் போது அங்கே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பியில் "Do not disturb" கார்ட் தொங்கிக்கொண்டு இருக்கும்.]]]

பைனாகுலரை வைத்து கீழேதான் பார்ப்பதாக நான் நினைத்தேன்.

ஏனெனில் கமல் முதலில் அந்தக் கட்டிடத்தில் ஏறும்போது அந்த கிரேனை காணவில்லை. அதனால்தான் எனக்கு சந்தேகம் வராமல் போய்விட்டது.

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...
பதிவை படிச்சா படம் நல்லா இருக்கும் போல இருக்கே!]]]

பின்ன.. சிவா மறந்திராம பார்த்திருங்க.. நல்ல படந்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

//காரணம், முதலில் இது கமல் நடிக்க வேண்டிய திரைப்படமே அல்ல. கமலின் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்க வேண்டும்.//

இது.....இதைத்தான் நானும் நினைச்சேன்.

மனுசன் தூக்கிச் சாப்புட்டு இருப்பார்!]]]

ஐயோ டீச்சர்.. சேம் பிளட்.. எப்படி நம்ம தின்க்கிங் ஒரே மாதிரி அமைஞ்சுச்சு பார்த்தீங்களா..?

நீங்களும் ஓவரா சினிமா பார்த்து, பார்த்து கெட்டுப் போயிட்டீங்கன்னு நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்ணமூர்த்தி said...
நடிப்பதில் எப்படிப் புலியோ, அதே மாதிரி சொதப்புவதிலும் கமல் பெரும் புலி! இந்தப் படத்தின் ஒன்லைன் தீமே, நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் பாமரன் அதாகப்பட்டது a stupid common man பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான், அவன் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்பதுதான். தன்னை எப்போதுமே பெரிய அறிவு ஜீவியாகவும், சர்ச்சைக்குரிய எதையாவது செய்யாவிட்டால், பேசாவிட்டால் செரிமானமே ஆகாது என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் கமல் தன்னை a stupid common man என்று வர்ணித்துக் கொள்ளும் வசனம் ரொம்பவுமே ஓவர்! காமெடி!
பிரகாஷ்ராஜ் கூடத் தேவை இல்லை, ஓமகுச்சி நரசிம்மன் கூட, இந்தப் பாத்திரத்தில் மிக நன்றாகவே பண்ணியிருக்க முடியும் என்பதுதான் ஹைலைட்டே!
அப்புறம், நீங்க கத்துனது போதாதுன்னு, என்னையும் என் கத்த வுடறீங்க:-)))]]]

கிருஷ்ணமூர்த்தி ஸார்..

ஓமக்குச்சி நரசிம்மன் இறந்துட்டார். அதுனால அவரை பிடிக்க முடியாதுன்னு தெரிஞ்சுதான் பிரகாஷ்ராஜை சொன்னேன்..

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

//திரைப்படங்களில் எப்போது பார்த்தாலும் தீவிரவாதி என்றால் தலையில் தொப்பி வைத்த முஸ்லீமையோ அல்லது தாடி வளர்த்த முஸ்லீமையோதான் அடையாளம் காட்டுகிறார்கள். கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..//

அதானே.. மிகவும் வருத்தமாக இருக்கிறது.. சாமான்ய மக்களிடம் இதன் பாதிப்பு அதிகம்.. இது நிலைமையை மோசமாக்கும்.]]]

இதையாவது ஒத்துக்கிட்டீரே தீப்பெட்டியாரே.. நன்றி..

[[[இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க..//

என்னது சொல்லலையா? என்ன பாஸ்.. கமல் படத்துக்கு மட்டும் இப்படி ஓரவஞ்சனை.. இத வன்மையா கண்டிக்குறேன்]]]

கண்டிச்சு என்ன புண்ணியம்..? கதையைச் சொல்லவே இல்லை. மாட்டேன்..

உண்மைத்தமிழன் said...

[[[யோகராஜ் பக்கங்கள் said...

நண்பர்களே, உங்களைப் பார்த்தே எழுதத் துவங்கினேன். உங்களிலிருந்தே பயணத்தைத் துவக்குகிறேன். என் பிளாக்கிற்கு வருகை தந்து தங்களின் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
http://yogarajbabu.blogspot.com/
மிகுந்த நேசத்துடன்
யோகராஜ் பாபு.]]]

வாழ்த்துக்களுடன் தங்களை இனிதே வரவேற்கிறோம் நண்பரே..

வருக.. வருக..

உண்மைத்தமிழன் said...

[[[Pot"tea" kadai said...
மாம்ஸேய்...அநியாயத்து நீர் நல்லவனாயிருக்கீர். சீக்கிரமாய் புள்ள குட்டியோட செட்டில் ஆக வாழ்த்தறேன்.]]]

உன் வாழ்த்து பலிக்கணும்னு முருகனை நீயே வேண்டிக்கயேன்..!

[[[நேர்மையான விமரிசனம். தயவு செஞ்சு குறுநெடும் படம் எடுக்காம இந்த மாதிரி பதிவு மட்டும்போடவும்.
*** ஒரு கட்டிப்புடி!]]]

ஓகே..

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...

//திரைப்படங்களில் எப்போது பார்த்தாலும் தீவிரவாதி என்றால் தலையில் தொப்பி வைத்த முஸ்லீமையோ அல்லது தாடி வளர்த்த முஸ்லீமையோதான் அடையாளம் காட்டுகிறார்கள். கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..//

இது உண்மையிலும் உண்மை......

//இந்த விமர்சனத்தில் நான் கதையை பத்தி எதுவுமே சொல்லலைங்கிறதை ஞாபகத்துல வைச்சுக்குங்க.. இதுக்கும் ஏதாச்சும் கத்துனீங்க.. அப்புறம் நல்லாயிருக்காது.. சொல்லிட்டேன்..//

நா ரொம்ப பயந்துட்டேன்..... அண்ணே உங்கள சயிடுல பார்த்தா ரொம்ப பயங்கரமா இருக்கீங்க.]]]

கண்ணாடியை போட்டுட்டு பாருங்க சாமி.. அழகா தெரிவேன்..!

PRABHU RAJADURAI said...

"லஷ்மியம்மாவுக்கு வயதாகிக் கொண்டே போவது மேக்கப்பையும் மீறி தெளிவாகத் தெரிந்தது. வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம்"
சரிதான்! இனிமே தலைமைச் செயலாளரா நடிக்கிறதுக்கு திரிஷாவை கேட்கலாம்..

shortfilmindia.com said...

அண்ணே இந்த நடிப்ப பத்தி ஏதோ சொல்லியிருக்கீங்களே அப்படின்னா என்ண்ண்ணே..?

உண்மைத்தமிழன் said...

[[[பிரபு ராஜதுரை said...

"லஷ்மியம்மாவுக்கு வயதாகிக் கொண்டே போவது மேக்கப்பையும் மீறி தெளிவாகத் தெரிந்தது. வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாம்"

சரிதான்! இனிமே தலைமைச் செயலாளரா நடிக்கிறதுக்கு திரிஷாவை கேட்கலாம்..]]]

ஓ.. இதுவும் நல்லாத்தான் இருக்கு.. செஞ்சுரலாம் பிரபு..!

உண்மைத்தமிழன் said...

[[[shortfilmindia.com said...
அண்ணே இந்த நடிப்ப பத்தி ஏதோ சொல்லியிருக்கீங்களே அப்படின்னா என்ண்ண்ணே..?]]]

கிளைமாக்ஸ்ல கமல் அண்ணன் குஜராத் கலவரம் பத்தி பேசியும், தன்னோட மகளைப் பத்திச் சொல்லியும் கண்ணீர் விடுறாரு பாரு.. அதுதான் நடிப்பு..!

உண்மைத்தமிழன் said...

குறை ஒன்றும் இல்லை ஸார்..

ஏன் இந்தக் கோபமும், அதன் பின் சமாதானமும்..!

பி்ன்னூட்டங்களை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்..!

எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை..!

நாகரிகமான மறுப்பு வார்த்தைகளுக்கு எனது தளத்தில் முழு சுதந்திரம் உண்டு..!

sweet said...

அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்...
நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்

- நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்

வஜ்ரா said...

//
http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.html
//

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி.

கமல் மத்தளமாகிவிட்டார். பார்ப்பான அடிவருடி என்றும், இந்து எதிரி என்றும் இரண்டு பக்கத்திலிருந்தும் வாங்கிக்கொள்கிறார்.

Romeoboy said...

தல நீங்க அவஸ்தபட்டு படம் பார்த்த பதிவ படிச்சா போது ரொம்ப டென்ஷன்ல படம் பார்த்து இருக்கிங்க எப்பையும் போல இந்த விமர்சனத்தில் கதைய சொல்லிடுவிங்கன்னு நினைச்சேன் , ஆனால் படத்தில் இடம் பெற்ற வசனம் கூட மறக்காம சூப்பர்ரா எழுதி இருக்கிங்க . டிஸ்கி சூப்பர் ...

puli said...

good nallathandhi. No need of unnecessary comments. film is a film. there were lot of things happened before Kottaimedu issue.

swizram said...

இந்த பதிவ எழுதுறதுக்கு சுமாரா எவளவு நேரம் ஆச்சுங்க உங்களுக்கு... நான் ஒரு பக்கம் எழுதுறதுக்குள்ளயே தவிசு தண்ணி குடிக்க வேண்டியதா இருக்கு...

உண்மைத்தமிழன் said...

[[[sweet said...
அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்துகிறவர்கள் & திருமண பந்தம் தேவை இல்லை என்று கூறுபவர்கள் அனைவரும் கமலை கண்டிப்பாக பாராட்டுவார்கள்... நல்ல விமர்சனம் பாராட்டுக்கள்

- நல்ல மனிதனாக வாழ விரும்புவர்களில் ஒருவன்]]]

வருகைக்கு நன்றி ஸ்வீட்..!

கமலுடன் தனிப்பட்ட மோதல்கள் யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை..! அவர் மீதான கொள்கை ரீதியான வருத்தங்களில் படத்தை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மன்னிக்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வஜ்ரா said...

// http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.html//

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி.
கமல் மத்தளமாகிவிட்டார். பார்ப்பான அடிவருடி என்றும், இந்து எதிரி என்றும் இரண்டு பக்கத்திலிருந்தும் வாங்கிக்கொள்கிறார்.]]]

சுகுணா பதிவைப் படிச்சீங்களா வஜ்ரா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜராஜன் said...
தல நீங்க அவஸ்தபட்டு படம் பார்த்த பதிவ படிச்சாபோது ரொம்ப டென்ஷன்ல படம் பார்த்து இருக்கிங்க எப்பையும் போல இந்த விமர்சனத்தில் கதைய சொல்லிடுவிங்கன்னு நினைச்சேன், ஆனால் படத்தில் இடம் பெற்ற வசனம் கூட மறக்காம சூப்பர்ரா எழுதி இருக்கிங்க . டிஸ்கி சூப்பர் ...]]

அந்த டென்ஷனைக் குறைக்கத்தான் கொஞ்சம் டைம் எடுத்திட்டு இந்தப் பதிவை போட்டேன். அதுனால கூல்டவுன் ஆகிட்டேன்..

வருகைக்கு நன்றி ராஜராஜன்..!

உண்மைத்தமிழன் said...

[[[puli said...
good nallathandhi. No need of unnecessary comments. film is a film. there were lot of things happened before Kottaimedu issue.]]]

ஆம்.. அதைத்தான் நானும் சொல்கிறேன். தீவிரவாதம் வளர்கிறது என்றால் அதனை ஆரம்பித்து வைத்தவர் யாரோ அவர்தான் பெரும் குற்றவாளி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரசனைக்காரி said...
இந்த பதிவ எழுதுறதுக்கு சுமாரா எவளவு நேரம் ஆச்சுங்க உங்களுக்கு... நான் ஒரு பக்கம் எழுதுறதுக்குள்ளயே தவிசு தண்ணி குடிக்க வேண்டியதா இருக்கு...]]]

ஐயோ.. இதுவா நீளம்.? இது ரொம்பக் கம்மிம்மா.. எட்டு பக்கம்தான் வந்துச்சு.. நான் இருபது பக்கமெல்லாம் எழுதியிருக்கேன்..! ஒரு பக்கத்தை ரெண்டு நி்மிஷத்துல டைப் பண்ணிருவேன்.. அவ்ளோதான்..!

வஜ்ரா said...

//
சுகுணா பதிவைப் படிச்சீங்களா வஜ்ரா..?
//

யாரு, சுகுணா திவாகர் என்று "வெளியில் மிதக்கும்" ஐயாவா ?

மதி.இண்டியா said...

//ஆமாம்.. அதற்கென்ன காரணம்..? கோட்டைமேடு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள்தானே..!

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வரும், தோண்டிக் கொண்டே போனால்..!

//

ஆமாண்ணே , டிராபிக்கை மீறுனா பிடிக்க கூடாதுன்னு அறிவில்லாம போன போல்லிஸ்காரங்கதான் காரணம் , அவங்கள கொல்லாம என்ன பண்றது ,

வாழக மதசார்பின்மை (உங்களுக்குமா அந்த வியாதி?)

மத்தபடி உங்க விமர்சனம் 100 சதம் சரி , ஹிந்தி வெர்சனில் இருந்த டெம்ப்ட் இல்லை

உண்மைத்தமிழன் said...

[[[வஜ்ரா said...
//சுகுணா பதிவைப் படிச்சீங்களா வஜ்ரா..?//

யாரு, சுகுணா திவாகர் என்று "வெளியில் மிதக்கும்" ஐயாவா ?]]]

அவரேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மதி.இண்டியா said...

//ஆமாம்.. அதற்கென்ன காரணம்..? கோட்டைமேடு போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள்தானே..!
எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வரும், தோண்டிக் கொண்டே போனால்..!//

ஆமாண்ணே, டிராபிக்கை மீறுனா பிடிக்க கூடாதுன்னு அறிவில்லாம போன போலிஸ்காரங்கதான் காரணம், அவங்கள கொல்லாம என்ன பண்றது? வாழக மதசார்பின்மை (உங்களுக்குமா அந்த வியாதி?)]]]

மதி.. கோட்டைமேடு போலீஸ் ஸ்டேஷனில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட சித்ரவதை விசாரணைகளால்தான் அந்த இளைஞர்கள் போலீஸார் மேல் கோபமாகவே இருந்து வருகிறார்கள் இன்றுவரையில்..

அந்தத் துன்பத்தைக் கொடுத்த ஒரு இன்ஸ்பெக்டர் இன்றுவரையில் ஏ.கே.47 பாதுகாப்போடு சென்னையில் உலா வருகிறார்.. தெரியுமா உங்களுக்கு..?

அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் அன்றைக்கு அந்த செல்வராஜ் என்கிற காவலரின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறை..

ஆரம்பம் எது என்பதை தோண்டினால் அது காவல்துறையிடம்தான் போய் நிற்கும்..!

மதி.இண்டியா said...

எழவு நாங்களும் சி.டி.தண்டபாணி , மு.ராமனாதனோடு சேந்து இப்படிதாண்ணே மதசார்பின்மை பேசிக்கிட்டுருந்தோம் ,

எங்களையேல்லாம் ஒன்வேல போகும் போது போலீஸ் பிடிச்சபோது அவங்களை குத்தி கொல்லணும்னு தோணாம் போனது தப்புதான் .

150 பேரோடு மார்ச் பாஸ்ட் போவாங்க தினமும் , யாரும் கேக்ககூடாது , கேட்டா மதசார்பின்மை கெட்டுபோகும் ,

டிரைவர்களுக்குள்ள டைமிங் பிரட்ச்சனை வந்து சண்டை போட்டா உக்கடம் பஸ்ஸாண்டுல நுழைஞ்சு பஸ்ஸை எல்லாம் உடைச்சு தூள் கிளப்பி சாமாதானம் பண்ணிவப்பார் பாட்ஸா , யாரும் கேக்ககூடாது , கேட்டா மதசார்பின்மை கெட்டுபோகும் ,

மதத்தின் பேரால என்ன ரவுடிதனம் வேண்ணா பண்ணலாம் , கோட்டை அமீர் மாதிரி யாராவது நல்ல முஸ்லீம் ஏம்பா மதத்தோட பேரை கெடுக்கறீங்கன்னு கேட்டா அவரை போட்டு தள்ளலாம் , யாரும் கேக்ககூடாது , கேட்டா மதசார்பின்மை கெட்டுபோகும் ,


யாராவது ஒரு போலீஸ்காரன் ரவுடிதனத்தை தட்டி கேட்டா அது
முஸ்லீம் இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட சித்ரவதை ,

அதனால் அந்த போலீஸ்காரன் திருச்சிக்கு போனாலும் அவன் மேல குண்டு வீசலாம் , இல்லையா ?

எங்களுக்கு தெரிஞ்ச முஸ்லீம்கள் எல்லாமே மாமன் மச்சான்தான் ஒரு காலத்துல , எத்தனை பேர் டெக்ஸ்டைல் துறைல இருந்தாங்க , எத்தனை பேர் எஞ்சினீங் கம்பனி வச்சிருந்தாங்க , 10 குண்டு , 96 பேர் ,இன்னைக்கு அவங்கெல்லாம் சமுதாயத்துல இருந்து துண்டாயிட்டாங்க ,

குண்டு வெடிக்க பைணான்ஸ் பண்ணினவன் எதிர்பார்த்தது இதைதானே , நடந்திடுச்சு , வெறும் நடைபாதை வியாபரிகள்தான் மிச்சம் ,

போலீஸ் கொடுமைக்கு குண்டு வைத்து பொதுமக்களை கொல்லலாம் என நியாயம் கற்பிப்பீர்கள் எனில் அந்த முருகந்தான் எங்களையும் உங்களையும் காக்கணும்,

ரவியின் பதிவுக்கு மனம் கொதித்து ஒரு எதிர்பதிவு போட்டீங்களே , அந்த மனநிலையில் போட்டதுதான் இந்த பின்னூட்டம் .

அண்ணே , கோயமுத்தூர்ல உங்களுக்கு நண்பர்கள் இருகாங்கன்னு நினைக்கிறேன் , அவங்களோட கொஞ்சம் பேசுங்க.

எட்வின் said...

ஆஹா அதற்குள்ளாக நம்ம கிறுக்கலுக்கும் இணைப்பு கொடுத்து விட்டீர்களே... நன்றி. இயக்குனர் சக்ரி குறித்த தகவல்களுக்கும் நன்றி.

ராஜ நடராஜன் said...

//கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..//

படம் பார்க்கவில்லை.இடுகையாவது படிக்கலாமுன்னா அனுமார் வால்:)தொகுப்பு இடுகைகளுக்கு நன்றி.

இனி அடைப்பானுக்கு!மும்பை வி.டில நடைபாதைப் பக்கம் பொருட்களை விற்கும் மனிதர்கள் பெரும்பாலும் கேரளாவில் அதுவும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கண்ணனூர் போன்ற பகுதிகளில் இருப்பவர்களாக இருப்பார்கள்.இவர்களின் மூல நெட்வொர்க் எப்படி என்று தெரியவில்லை.ஹாஜி மஸ்தான் காலம் தொட்டு இந்த பயணம் தொடர்கிறதென நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

படிச்சிகிட்டே வந்ததுல கோவை குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு இந்துத்வா வாதிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை.ஆனால் எந்த புள்ளியில் இது துவங்கியது என்பது பற்றிய ஆய்வுக்கு சென்றால் உணர்வுகளைத் தூண்டி விடும் பழனி பாபாவின் உரைகள் காரணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.நிகழ்வுகள்,பலிகள் எல்லாம் ஆடு!ஆடுகள ஆடுகள் மட்டுமே!அப்போதைய கால கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுலதானே தீப்பற்றி எரியுது என்ற அமெரிக்காவின் மனப்பான்மை!இந்தியாவின் பலவீனங்களை நன்கு அறிந்து வைத்திருந்த பாகிஸ்தான் உளவுத்துறை-அல்ஹைடா கூட்டு நட்பு.

Unknown said...

படத்தைப் பத்தி கருத்து படிச்சாச்சு. நன்றி! உங்களுக்கு எப்படிங்க இவ்வளவு நேரம் கெடைக்குது? பொறாமையா இருக்கு :)

உண்மைத்தமிழன் said...

மதி.இண்டியா..

நானும் கோவை நண்பர்களுடன் பேசி அப்போதைய முழு வரலாற்றையும் அப்போதே தெரிந்து வைத்துதான் பேசுகிறேன்..

அவர்கள் தவறு செய்தார்கள். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அரசியல்வியாதிகளின் அல்லக்கை தொண்டர்கள் செய்ததைவிட அதிகமில்லை.

அந்த அல்லக்கைகளின் எஜமானர்கள் இப்போது எம்.எல்.ஏ.க்களாகவும், மந்திரிகளாகவும் கொட்டமடித்துக் கொண்டிருக்கும்போது இவர்களை மட்டும் படுத்தி எடுத்தது என்ன நியாயமாம்..?

கோர்ட் இருக்கு.. விசாரணை இருக்கு.. நீதிபதி இருக்கார். அங்கே கொண்டு செல்லாமல் ஒட்டு மொத்தமாக அத்தனை முஸ்லீம் இளைஞர்களையும் தினம்தோறும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பரேடு கொடுத்து அனுப்பியது உங்களுடைய மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்துக்கு உதாரணமா..?

வலியவர்கள்தான் சிறியவர்களிடம் இணங்கிப் போக வேண்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[எட்வின் said...
ஆஹா அதற்குள்ளாக நம்ம கிறுக்கலுக்கும் இணைப்பு கொடுத்து விட்டீர்களே... நன்றி. இயக்குனர் சக்ரி குறித்த தகவல்களுக்கும் நன்றி.]]]

வேலையே அதான எட்வின்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
//கூடவே கள்ளக்கடத்தல் கும்பல் என்றாலும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தல் என்றாலும்கூட அதற்கும் முஸ்லீம்கள்தான் சிக்குவார்கள்..//

படம் பார்க்கவில்லை. இடுகையாவது படிக்கலாமுன்னா அனுமார் வால்:) தொகுப்பு இடுகைகளுக்கு நன்றி.

இனி அடைப்பானுக்கு! மும்பை வி.டில நடைபாதைப் பக்கம் பொருட்களை விற்கும் மனிதர்கள் பெரும்பாலும் கேரளாவில் அதுவும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கண்ணனூர் போன்ற பகுதிகளில் இருப்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் மூல நெட்வொர்க் எப்படி என்று தெரியவில்லை. ஹாஜி மஸ்தான் காலம் தொட்டு இந்த பயணம் தொடர்கிறதென நினைக்கிறேன்.]]]

தகவலுக்கு நன்றிகள் ராஜராஜன்..

முஸ்லீம்கள் அதனைச் செய்வதற்கு முதல் காரணம் அவர்கள் இயல்பாகவே அறிந்து வைத்திருக்கும் உருது மொழி.

மும்பை வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை ஹோல்சேல்ஸில் வாங்குவதற்கு அவர்களுடைய மொழி பெரிதும் உதவுகிறது.. அதனை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இரண்டாவது ரவுண்டாக அவர்களிடமிருநது வாங்கி மாநிலமெங்கும் விற்பவர்கள் அநேகம் பேர் நம்மாளுகதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...
படிச்சிகிட்டே வந்ததுல கோவை குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு இந்துத்வாவாதிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை. ஆனால் எந்த புள்ளியில் இது துவங்கியது என்பது பற்றிய ஆய்வுக்கு சென்றால் உணர்வுகளைத் தூண்டி விடும் பழனிபாபாவின் உரைகள் காரணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். நிகழ்வுகள், பலிகள் எல்லாம் ஆடு! ஆடுகள ஆடுகள் மட்டுமே! அப்போதைய கால கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுலதானே தீப்பற்றி எரியுது என்ற அமெரிக்காவின் மனப்பான்மை! இந்தியாவின் பலவீனங்களை நன்கு அறிந்து வைத்திருந்த பாகிஸ்தான் உளவுத்துறை-அல்ஹைடா கூட்டு நட்பு.]]]

-)))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[தஞ்சாவூரான் said...
படத்தைப் பத்தி கருத்து படிச்சாச்சு. நன்றி! உங்களுக்கு எப்படிங்க இவ்வளவு நேரம் கெடைக்குது? பொறாமையா இருக்கு :)]]]

வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கேன்.

ஏன் என்கூட போட்டி போடுறீங்க.. என் மேல பொறாமைப்படுறீங்க..?

விட்ருங்க சாமி..!

Anonymous said...

sgdf

Anonymous said...

[[வலியவர்கள்தான் சிறியவர்களிடம் இணங்கிப் போக வேண்டும்.]]

குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு இந்துத்வாவாதிகளும் ஒரு காரணம்தான். ஆனால் பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மையனவர்களிடம் இணங்கிப் போக வேண்டும் என்று கூறுவது இந்தியாவை தவிர வேறு எங்குவேண்டுமானாலும் சொல்லி பாருங்கள் ( ஸ்ரீலங்கா, மலேசியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,சவுதி... இன்னும் பல ) என்ன நடக்கும் என.

நாட்டின் சட்டத்தின் முன் அனைவரும் சமம், அரசாங்கத்தில் உன் குடும்ப வருமானம் கேட்கப்படும், எத்தனை குழந்தைகள் என கேட்கப்படும். உன் ஜாதியோ மதமோ எங்கும் தேவை இல்லை, என இந்தியா கேட்டால் போதும். இதுதான் உயர்ந்தபட்ச சம நீதி.

நீங்கள் சொல்வது வெண்ணையும் , சுண்ணாம்பும் போல. இது இந்து தீவிரவாதத்தைத்தான் வளர்க்கும். நாட்டை FC, BC, OBC, SC, ST என பிரித்தாளும் கட்சிகளின் கொள்கையான சிறுபான்மையினர் என யாரும் இல்லை. உண்மையில் சொல்லப்போனால் கிறித்துவ, இசுலாமியர் அல்லாதவர்களே சிறுபான்மையினர். அவர்களுக்கு வெளி நாடுகளில் இருந்து எல்லாவிதமான உதவிகளும் வருகின்றன. வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வியாபார தொடர்புகள் கிடைக்கிறது. இருந்தும் இந்தியாவில் சிறப்பு சலுகைகளும் கிடைக்கின்றன. நான் பொறாமைப்படவில்லை , அனைவரையும் சமமாக நடத்து, அது போதும் என்கிறேன்.

தயவு செய்து உண்மையை உணர்ந்து உரைக்கவும்.
நன்றி.

உண்மைத்தமிழன் said...

[[[Human said...
[[வலியவர்கள்தான் சிறியவர்களிடம் இணங்கிப் போக வேண்டும்.]]

குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு இந்துத்வாவாதிகளும் ஒரு காரணம்தான். ஆனால் பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மையனவர்களிடம் இணங்கிப் போக வேண்டும் என்று கூறுவது இந்தியாவை தவிர வேறு எங்குவேண்டுமானாலும் சொல்லி பாருங்கள் (ஸ்ரீலங்கா, மலேசியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சவுதி இன்னும் பல) என்ன நடக்கும் என.]]]

என்ன நடக்கும் என்பது ஆரூடமாக சொல்லத் தேவையில்லை ஸார்.! நல்ல விஷயமாகவே நினைப்போமே? பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு அங்குள்ள முஸ்லீம்களும், நம் நாட்டில் இருக்கும் முஸ்லீம்களுக்கு இந்துக்களும் பாதுகாப்பாக இருக்கட்டுமே..

இருக்க வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டியவர்கள் அரசியல்வியாதிகள்.. அவர்கள் நினைத்தால் செய்யலாம்.

[[[நாட்டின் சட்டத்தின் முன் அனைவரும் சமம், அரசாங்கத்தில் உன் குடும்ப வருமானம் கேட்கப்படும், எத்தனை குழந்தைகள் என கேட்கப்படும். உன் ஜாதியோ மதமோ எங்கும் தேவை இல்லை, என இந்தியா கேட்டால் போதும். இதுதான் உயர்ந்த பட்ச சம நீதி.]]]

நமது அரசியல்வியாதிகள் வாழ்வதே நமது ஜாதியை வைத்துத்தான். அதை ஒழித்துக் கட்ட நினைப்பார்களா என்ன..?

[[[நீங்கள் சொல்வது வெண்ணையும், சுண்ணாம்பும் போல. இது இந்து தீவிரவாதத்தைத்தான் வளர்க்கும். நாட்டை FC, BC, OBC, SC, ST என பிரித்தாளும் கட்சிகளின் கொள்கையான சிறுபான்மையினர் என யாரும் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் கிறித்துவ, இசுலாமியர் அல்லாதவர்களே சிறுபான்மையினர். அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து எல்லாவிதமான உதவிகளும் வருகின்றன. வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வியாபார தொடர்புகள் கிடைக்கிறது. இருந்தும் இந்தியாவில் சிறப்பு சலுகைகளும் கிடைக்கின்றன. நான் பொறாமைப்படவில்லை, அனைவரையும் சமமாக நடத்து, அது போதும் என்கிறேன்.]]]

அதைத்தான் நானும் சொல்கிறேன்.. அனைவரையும் சமமாக நடத்து என்று சொல்வதற்கு முன்னால் நாம் சமமாக நடந்து கொள்வோம்..

[[[தயவு செய்து உண்மையை உணர்ந்து உரைக்கவும்.
நன்றி.]]]

உரைத்துவிட்டேன் உண்மையை.. வருகைக்கு நன்றிகள் ஸார்..!

Unknown said...

தைரியமா சிகரெட்டே கேட்பதுதான் பெண்ணீயம்-ன்னு உங்க கிட்ட தான் தெரிஞ்சிகிட்டேன்.

போலித்தனம் எழுத்தாளர்களின் தவிர்க்க முடியாத குணமுன்னு இப்போ புரிஞ்சிகிட்டேன்.

உண்மைத்தமிழன் said...

[[[S said...
தைரியமா சிகரெட்டே கேட்பதுதான் பெண்ணீயம்-ன்னு உங்ககிட்டதான் தெரிஞ்சிகிட்டேன். போலித்தனம் எழுத்தாளர்களின் தவிர்க்க முடியாத குணமுன்னு இப்போ புரிஞ்சிகிட்டேன்.]]]

இப்போ அவங்க கேக்குற சம உரிமைகளைத்தானே பெண்ணியம்னு சொல்றாங்க.. அதுனாலதான் நான் இதுல குத்தினேன்..!

இதை போலித்தனம்னு சொல்லுங்க.. பரவாயில்லை.. ஆனா எழுத்தாளன்னு சொல்லாதீங்க.. நான் சாதாரண டைப்பிஸ்ட்டுங்கண்ணா..!