மதுரை சம்பவம் - திரை விமர்சனம்

07-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படம் எடுப்பவர்கள் இப்போதைக்கு ஒரு பார்முலாவை பின்பற்றத் துவங்கிவிட்டார்கள்.

மதுரைக்கார நேட்டிவிட்டி.. ஒரு நல்ல தாதா.. ஒரு கெட்ட தாதா.. ஹீரோ எப்போதும்போல நல்ல தாதாவின் உறவு. காதல் மெல்ல மெல்ல உருவாகும் காட்சிகளை வைத்து நேரத்தை வீணாக்காமல் எடுத்த எடுப்பிலேயே ஒரு முறைப்பெண்.. கெட்ட தாதாவின் தாக்குதலில் நல்ல தாதாவின் குடும்பத்திற்குச் சேதம்.. இது இடைவேளைக்கு முந்தின கதை..

இடைவேளைக்குப் பின்னர் கெட்ட தாதாவுக்கு சனி பிடிப்பது. நமது ஹீரோ அவரது கூட்டாளிகளை கொல்லப் போவது.. அடிபடுவது. பின்பு மீண்டும் முயற்சிப்பது. இடையில் காதல் தகராறு.. மோதல்.. கொஞ்சுண்டு அழுவாச்சி காவியம்.. கடைசியில் பொங்கி எழுந்து கெட்ட தாதாவுக்கு பொங்கல் வைத்து ஒரு தாவணியைக் கைப்பிடிப்பது.. சுபம் போடுவது.

இதை வைத்து இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரலாம். வரும்..

இந்தப் படத்தில் கிளைமாக்ஸை முதலில் முடிவு செய்துவிட்டு பின்புதான் கதையை சீன்களாக யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஆட்டுத்தொட்டி ஆலமரத்தான் என்கிற நல்ல தாதா ராதாரவி. அவருடைய பையன் குட்டி என்கிற ஹீரோ. ஆட்டுத் தொட்டி நடத்துகிறார். கறிக்கடைகளுக்கு ஒட்டு மொத்த ஜவாப்தா அவர்தான். கூடவே சைடு பிஸினஸாக சாராயம் காய்ச்சுகிறார். கிடைக்கின்ற பணத்தில் அரசியல்வாதிகளுக்கும், காக்கிச்சட்டைக்கும் டிப்ஸ் கொடுக்கிறார்.

இந்த டிப்ஸிலும், ராதாரவியின் ஆசி பெற்ற மக்களாலும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கட்அவுட் ஆளவந்தான், தான் எம்.பி.யானவுடன் தானும் சுலபமாக காசு சம்பாதிக்க நினைத்து சாராயம் காய்ச்சுகிறார். நம்ம ஹீரோ பொங்கி எழுந்து அதை அடித்து நொறுக்குகிறார். பகை உருவாகிறது.

இரு தரப்பிலும் வெட்டுக் குத்து நடக்க.. காக்கிச் சட்டைக்காரர்கள் இடையில் புகுந்து சமரசம் செய்து வைக்க வருகிறார்கள். பலனளிக்காமல் போக வேறுவிதமாக ஆலமரத்தானை வீழ்த்த முடிவெடுக்கிறார்கள்.

மதுரையின் திலகர்திடல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெலிஸ்ட்டான லேடி இன்ஸ்பெக்டர் கரோலின் தாமஸ் பொறுப்பேற்கிறார். அவரைப் பார்த்ததும் ஹீரோவுக்கு லவ் பிறக்கிறது. கரோலின் எதற்காக மதுரை வந்திருக்கிறார் என்பதே தெரியாமல் ஹீரோ இன்ஸ்பெக்டரை லவ்விக் கொண்டிருக்க..

முதல் கொலையாக ஹீரோவின் அக்கா கணவன் கொல்லப்படுகிறான். பதிலடியாக ஆளவந்தானும், அவனது மனைவியும் கொல்லப்பட இவர்களை கொன்ற ஆலமரத்தானை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுகிறாள் கரோலின்.

இது தெரியாமல் கடைசிவரையில் கரோலின் மீது காதல் கொண்டு ஹீரோ அலைய.. கரோலினுக்கும் ஹீரோ மீது லவ் பொங்கி வர.. இப்போது ஹீரோவையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளினால் பிரமோஷன் என்று கரோலினுக்கு ஆசைகாட்ட.. செய்தாளா.. இல்லையா என்பதுதான் கதை..

கொஞ்சூண்டு வித்தியாசம்தான்.. இந்த லேடி இன்ஸ்பெக்டர் வேடம் மட்டும்..

தமிழ்ச் சினிமாவுக்கு இன்னுமொரு அருவா ஹீரோ கிடைச்சுட்டார். கூடவே பன்ச் டயலாக்கையும் அள்ளி விடுறார். அவர் அறிமுகமாகின்ற காட்சியிலேயே காது கிழிந்துவிட்டது. அந்த அடி அடிக்கிறார்கள் திரையிலும், இசையிலும். டெக்னாலஜி எந்த அளவுக்கு ஹீரோக்களுக்கு உதவுகிறது என்பதில் இந்த சண்டை காட்சியிலும், அவரைப் பற்றிய பில்டப்பு காட்சியைப் பார்த்தாலே தெரிகிறது. ஏதோ நடித்திருக்கிறார் ஹீரோ ஹரிகுமார். மற்றவர்களுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம்.

முறைப்பெண்ணாக கார்த்திகா.. தெற்றுப்பல் தெரிய சிரிக்கிறார். முதல் முறையாக தொப்புள் காட்டி ஆடுகிறார். கொஞ்சம் பேசியிருக்கிறார்.. முக்கியமில்லாமல் போய்விட்டது இவரது கேரக்டர்..


ஆலமரத்தானாக ராதாரவி. அதே வில்லனிக் முகம்.. வேறு வழியில்லை.. மதுரையின் நேட்டிவிட்டித்தனமான வசனத்தை ஏற்ற இறக்கத்தோடு பேச வேண்டுமெனில் இவரைப் போன்ற சீனியர்களை போட்டால்தான் தேறும். வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்.


ஆளவந்தானாக காதல் தண்டபாணி. இவரைப் போட்டுக் கொடுக்கும் மாவட்டமாக பொன்னம்பலம்.. என்று வில்லன்கள் பவனி.. ஆனால் பேர் சொல்லும்படி இல்லை.

அசத்தியிருப்பவர் லேடி இன்ஸ்பெக்டர் கரோலினாக வந்திருக்கும் அனுயா. ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் டிரெஸ்தான் கொஞ்சம் இடிக்கிறது. இன்னும் கொஞ்சம் டைட்டாக தைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்போல தெரிகிறது. ஆனாலும் இந்த இன்ஸ்பெக்டர் வேடத்தை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தார்களோ என்னவோ? படம் பார்க்கின்றவரையில் நான் அந்தக் கேரக்டரை கேள்விப்படவே இல்லை..

அனுயா லிப் டூ லிப் கிஸ் காட்சியில் துணிந்து நடித்திருப்பதை பார்த்தால் ஏதோ ஒரு முடிவோடுதான் களத்தில் குதித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஹீரோ, அனுயாவுடன் மோதிவிட்டு தப்பிக்கின்ற காட்சியில் பின்னணி இசை கலக்கல்.. அதோடு அனுயாவை நினைத்துப் பார்க்கின்றபோதெல்லாம் பின்னணி இசைதான் அந்தக் காட்சிக்கு ருசியைக் கூட்டியிருக்கிறது.

அனுயாவுக்கு ஹீரோவுடனான காதல் காட்சிகளுக்கு அதிகமாக அழுத்தம் இல்லாததால் கிளைமாக்ஸ் எந்த பரபரப்பையும் ஊட்டவில்லை. போதாததுக்கு ஊடலும், கூடலுமாக முடிந்துவிட்டதால் அந்த நினைப்பிலேயே இருந்த எனக்கு, பட்பட்டென்று வெடித்த துப்பாக்கிச் சத்தம் மனதில் எதையும் நிரப்பவில்லை.

ஜான் பீட்டரின் இசை. 'லந்து பண்றோம்..' என்றொரு துவக்கப் பாடல்.. 'கருவாப்பையா' ஸ்டைலில் 'கண்ணழகா கண்ணழகா' என்றொரு பாடல்.. இவை இரண்டும் இனி தொடர்ந்து மியூஸிக் சேனல்களில் ஒளிபரப்பப்படலாம். ஹீரோவின் அடிதடி காட்சிகளிலெல்லாம் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சவுண்ட்டை உயர்த்தி பில்டப்பு காட்டியிருக்கிறார் பீட்டர்.

முழுக்க முழுக்க நகரமும், சீன் பை சீனாக கதையை நகர்த்தியும் போயிருப்பதால் ஒளிப்பதிவு அவ்வளவு முக்கியமில்லாமல் போயிருப்பது தெரிகிறது.

ஆனந்த்பாபு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆனால் இரண்டு ரீல் மட்டுமே.. இப்படியா இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்த மனுஷன்..? ஸ்கிரீன்ல பார்க்கவே பாவமா இருக்கு..

காமெடிக்கு 'சுடுகாட்டு மண்டையா' என்று அடிக்கடி சொல்லும் ஒருவர் வெளிநாட்டுப் பயணிகளுக்கு நம்மூர் சரக்கை கொடுத்து நூறு டாலர் அடிக்கின்ற காட்சி மட்டுமே.. அவ்வப்போது சண்டியர்களின் மதுரை பாஷை புன்சிரிப்பு சிரிக்க வைக்கிறது.

கரோலின் தந்தையாக வரும் சந்தானபாரதி ஓவர் பூஸ்ட்டில் மட்டையாகிவிட ஹீரோவும், அவனது நண்பனும் அவரை வீட்டுக்குத் தூக்கி வரும் காட்சியில் சிரிப்போ சிரிப்பு. இப்படி அவ்வப்போது நகைக்க வைத்தாலும் திரைக்கதை எதை நோக்கிப் போகிறது என்பது புரியாமல் விழிக்கத்தான் செய்கிறது முதல் பாதியில்.

இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். வாய்ப்பிருந்தும் அதற்கேற்றாற்போல் சீன்கள் இல்லாமல்போனாலும், கடைசியில் யார் உயிருடன் இருக்கப் போவது என்கிற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தது உண்மைதான்..

இந்தப் படத்துக்கு இது போதும்.. ஹீரோ ஹரிகுமாருக்கு அடுத்து ஒரு ரவுண்டு வர வாய்ப்புண்டு..

NDTV Image Productions Company-யின் முதல் தயாரிப்பாம் இது.. வெளி மாநில கம்பெனி என்றாலும் நமது நேட்டிவிட்டி கதையை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

சென்னை மாநகர உரிமையை வாங்கியிருக்கும் அபிராமி ராமநாதனுக்கு 'கந்தசாமி'க்கு அடுத்து கிடைத்திருக்கும் லக் இது.. போட்டதுக்கு குறைவில்லை என்கிறது அவரது வட்டாராம்.

தமிழகம் முழுக்கவே 'பரவாயில்லை.. தேறிரும்..' என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

தலைவலி தரவில்லை என்பதால் பார்க்கக் கூடிய கமர்ஷியல் கம்மர்கட்..!

32 comments:

இரும்புத்திரை said...

அண்ணே படம் ஓடிரும் போல

ஏன்னா நீங்க மட்டும் தன இதுவரைக்கும் விமர்சனம் எழுதி இருக்கீங்க

மணிஜி said...

மதுரைசம்பவம்..நாங்க போனவாரம் அங்கன் அடிச்ச கூத்தைதான் எழுத போறிங்களோன்னு நினைச்சேன்

Prabu M said...

அட... அப்படின்னா பாக்கலாம் போலயே!!

பிரபாகர் said...

நண்பா,

உங்களின் விமர்சனம் மிகவும் இயல்பாக இருக்கிறது.

குறை நிறைகளை சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்.

சங்கர் அண்ணாவை அடுத்து உங்களின் விமர்சனமும் என்னை வெகுவாய் கவர்கிறது.

தொடர்ந்து கலக்குங்கள்...

பிரபாகர்.

Ashok D said...

நல்ல விமர்சனம் :)

Anbu said...

நல்ல விமர்சனம் அண்ணா..

இந்த படத்திற்கு என்னுடைய விமர்சனம்:-

http://anbu-openheart.blogspot.com/2009/09/blog-post_07.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல விமர்சனம்

ஜெட்லி... said...

இன்னைக்கு லீவ் எனக்கு, இந்த படத்துக்கு போலாமான்னு
யோசிச்சேன்.........
இதோ இப்பவே பைலட் தியேட்டர் போறேன்....
பார்த்துட்டு சொல்றேன்.....

Anonymous said...

http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post.html

தீப்பெட்டி said...

இந்த மாதிரி வெட்டி வேலையெல்லாம் எதுக்கு பாஸ்..

IKrishs said...

Ungha style la nirai kurai galai iyalbaa solli irukira poruppana vimarsanam...paaraatukkal..

செல்லாதவன் said...

மதுரகாரன்னா சும்மாவா?ஜெயிப்பம்ல!கந்தசாமிக்கு போட்டியா நாங்கழும் நிக்கம்ல.

உண்மைத்தமிழன் said...

///இரும்புத்திரை அரவிந்த் said...
அண்ணே படம் ஓடிரும் போல.. ஏன்னா நீங்க மட்டும்தன இதுவரைக்கும் விமர்சனம் எழுதி இருக்கீங்க.///

நிச்சயமா இந்தப் படம் ஓடிரும் அரவிந்த்..!

இன்னும் 2 பேரும் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..! வரும் நாட்களில் நீங்களும் எழுதலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...
மதுரை சம்பவம். நாங்க போன வாரம் அங்கன் அடிச்ச கூத்தைதான் எழுத போறிங்களோன்னு நினைச்சேன்]]]

அது கொஞ்ச நாள் கழிச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபு . எம் said...
அட... அப்படின்னா பாக்கலாம் போலயே!!]]]

தாராளமா பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபாகர் said...

நண்பா,

உங்களின் விமர்சனம் மிகவும் இயல்பாக இருக்கிறது.

குறை நிறைகளை சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்.

சங்கர் அண்ணாவை அடுத்து உங்களின் விமர்சனமும் என்னை வெகுவாய் கவர்கிறது.

தொடர்ந்து கலக்குங்கள்...

பிரபாகர்.]]]

நன்றி பிரபாகர்..!

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...
நல்ல விமர்சனம் :)]]]

நன்றி அசோக்..!

உண்மைத்தமிழன் said...

[[[Anbu said...

நல்ல விமர்சனம் அண்ணா..

இந்த படத்திற்கு என்னுடைய விமர்சனம்:-

http://anbu-openheart.blogspot.com/2009/09/blog-post_07.html]]]

அட நீங்களும் பார்த்தாச்சா..? வெரிகுட் அன்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...
நல்ல விமர்சனம்.]]]

நன்றிகள் ஐயா..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி said...
இன்னைக்கு லீவ் எனக்கு, இந்த படத்துக்கு போலாமான்னு
யோசிச்சேன். இதோ இப்பவே பைலட் தியேட்டர் போறேன்.பார்த்துட்டு சொல்றேன்.....]]]

ஓகே ஜெட்லி.. உங்க விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...
இந்த மாதிரி வெட்டி வேலையெல்லாம் எதுக்கு பாஸ்..?]]]

மை காட்.. இது ஒண்ணுதான் நான் செய்ற வேலை.. இதையும் செய்ய வேணாம்னா எப்படி தீப்பெட்டி..?

உண்மைத்தமிழன் said...

[[[கிருஷ்குமார் said...
Ungha stylela nirai kuraigalai iyalbaa solli irukira poruppana vimarsanam... paaraatukkal..]]]

நன்றிகள் கிருஷ்குமார்..

தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொள்ளுங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செல்லாதவன் said...
மதுரகாரன்னா சும்மாவா? ஜெயிப்பம்ல! கந்தசாமிக்கு போட்டியா நாங்கழும் நிக்கம்ல.]]]

நின்னு ஜெயிச்சாச்சுல்ல.. ஓகேதான்..

சிங்கக்குட்டி said...

//மதுரை சம்பவம்//
நானும் எதோ உங்க ஊரு பக்கம் ஆகிபோச்சு போலன்னு நினைச்சு வந்தேன் :-))

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
http://tbcd-tbcd.blogspot.com/2009/09/blog-post.html]]]

செவனேன்னு இருந்தாலும் விடமாட்டீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சிங்கக்குட்டி said...
//மதுரை சம்பவம்//
நானும் எதோ உங்க ஊரு பக்கம் ஆகி போச்சு போலன்னு நினைச்சு வந்தேன் :-))]]]

அப்படியா? பரவாயில்லையே..! ஒரு திரைப்படத்தின் தலைப்பு இப்படி யோசிக்க வைக்கிறது பாருங்கள்..!

Starjan (ஸ்டார்ஜன்) said...

சரவணன் படம் தேறிருமா ...

உண்மைத்தமிழன் said...

///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சரவணன் படம் தேறிருமா.///

தேறியாச்சு ஸார்..!

பித்தன் said...

நல்ல விமர்சனம், படம் பார்த்த த்திருப்தி கிடைத்தது.

இதுபோல் இன்னும் நிறைய மதுரை மாதிரிகள் வரும் என்று ஆருடம் கூறியதற்கு ஒரு ஷொட்டு.....

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
நல்ல விமர்சனம், படம் பார்த்த திருப்தி கிடைத்தது.]]]

சினிமா டிக்கெட் பணத்தை மணியார்டர் செய்யவும்..

[[[இதுபோல் இன்னும் நிறைய மதுரை மாதிரிகள் வரும் என்று ஆருடம் கூறியதற்கு ஒரு ஷொட்டு.]]]

கண்டிப்பா வரும்.. அதுதான் தமிழ் சினிமா.. எது எப்போ டிரெண்ட்டோ அதை வைச்சுத்தான் இங்கன பிஸினஸே ஓடும் பித்தன்ஜி..!

Anonymous said...

செவுட்டு நாயெல்லாம் எதுக்குடா படம் பார்க்குறீங்க

உண்மைத்தமிழன் said...

[[[Anonymous said...
செவுட்டு நாயெல்லாம் எதுக்குடா படம் பார்க்குறீங்க?]]]

உனக்கு ஏன் இப்படி எரியுது மிஸ்டர் அனானி..!