இது எந்தப் படத்தோட சீனுன்னு சொல்லுங்க..?

08-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரைப்படங்களில் ஏதேனும் மனதைக் கவரும் காட்சிகளைக் காண்கின்றபோதும், வசனங்களைக் கேட்கின்றபோதும் எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாய் இருக்கிறதே என்று மனம் சந்தோஷப்படும்.

அதே சமயத்தில் ஏதாவது ஒரு வெளிநாட்டுத் திரைப்படத்தில் பார்த்த காட்சிகளாக இருந்து அது தமிழ்ப்படுத்தப்பட்டிருந்தால் ஓகே.. அந்த சீன்தானா என்று மனம் ஒரு கண்டுபிடிப்பாளர் நிலையில் கெக்கலிக்கும்.

யாருக்கு எது பிடிக்கிறதோ அதை மற்றவர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தவறில்லை. அதனால்தான் படித்த புத்தகங்களில் இருந்து நல்ல, நல்ல செய்திகளை நாமும் பல்வேறு இடங்களில் இருந்து தொகுத்து நமது வலைத்தளத்தில் வழங்குகிறோம். அந்த வகையில் கருத்து திருட்டு என்று சொல்லி சினிமாக்காரர்களை குற்றம் சொல்வதற்கு நமக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

நம்முடைய பாணி புத்தகங்களில் இருந்து தட்டச்சு செய்து வலைத்தளங்களில் வெளியிடுவது.. சினிமாக்காரர்களின் பாணி வேற்று மொழி திரைப்படங்களில் இருக்கும் காட்சிகளை நமது சினிமாவில் காட்டுவது.. இரண்டு ஒன்றுதானே..

எதற்கு பீடிகை.. விஷயத்துக்கு வருகிறேன்.


நேற்று தற்செயலாக நடிகர் நாகேஷ் அவர்களைப் பற்றிய சில புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தேன். அதில் நாகேஷ் 2003-ம் ஆண்டு 'கல்கி' இதழில் எழுதிய(சொன்ன) அவரது 'வாழ்க்கை அனுபவங்களின் கதை'யைத் தொகுத்து 'சிரித்து வாழ வேண்டும்' என்ற தலைப்பில் 'வானதி பதிப்பகம்' புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.

அதில் '10-ம் பக்கத்தில்' துவங்கும் 'பாஸ் மார்க் வாங்கினால் புத்திசாலியா?' என்ற தலைப்புடன் கூடிய '3-வது அத்தியாயத்தில்', அவருடைய சிறு வயது பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நாகேஷ் மிக அழகாக விவரிக்கிறார். படிக்க, படிக்க எனக்குள் ஒரு ஆர்வத்தையும், முடிவில் ஒரு சின்ன எதிர்பாராத ட்விஸ்ட்டையும் தந்தது.

நீங்களும் படியுங்கள்..

இனி பேசுவது திரு.நாகேஷ்..

"என் அப்பா ரொம்பக் கண்டிப்பானவர். 'நான் நன்றாகப் படிக்கணும். நல்ல மார்க் வாங்கணும்' என்று எப்போதும் சொல்லும் டிபிகல் அப்பா.

தாராபுரத்தில் அக்ரஹாரத்தில் கடைசி வீடு எங்களுடையது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் ராமகாந்தராவ் என்று ஒருத்தர் இருந்தார். பள்ளிக்கூட ஆசிரியர். அவருக்கு கோபால் என்ற பையன். தினமும் பையனை விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் எழுப்பிவிடுவார். பையனும் எழுந்தவுடன் சத்தம் போட்டுப் படிக்க ஆரம்பித்துவிடுவான். நிசப்தமான விடியற்காலை நேரத்தில், எதிர்வீட்டு கோபால் படிப்பது ஊருக்கே கேட்கும். எதிர்வீட்டில், விடியற்காலை எழுந்து சப்தம் போட்டு ஒரு பையன் படிக்கிறான் என்றால், மற்ற அப்பாக்கள் சும்மா இருப்பார்களா? என் அப்பாவும் என்னை தினமும் நாலரை மணிக்கு எழுப்பிவிடுவார். எழுந்திருக்காவிட்டால் அடிதான்..

எதிர்வீட்டுப் பையன் 'அக்பர்', 'அசோகர்' என்று உரக்கப் படிப்பது, எனக்குத் தொந்தரவாக இருக்கும் என்பது ஒரு பக்கம். 'மனசுக்குள்ளேயே படிக்காதே.. உரக்க வாய்விட்டு சத்தம் போட்டுப் படி.. இல்லைன்னா நீ முழிச்சுக்கிட்டு இருக்கியா? தூங்கிட்டியான்னு எனக்குத் தெரியாது' என்ற என் அப்பாவின் தொல்லை இன்னொரு பக்கம்.. எனவே, எதிர்வீட்டு சத்தத்தைவிட அதிகக் குரல் எடுத்து நானும் படிப்பேன்.

இந்த மாதிரிக் கூத்து பல நாள் அதிகாலையில் நடந்திருக்கிறது. நான், கோபால் உட்பட எங்கள் தெருவிலிருந்து ஏழெட்டு பேர் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினோம்.

ரிசல்ட்..?

எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை ரிசல்ட் வெளியானது. விடியற்காலையில் எழுந்து சப்தம் போட்டுப் படித்து ஊரை எழுப்பி, எனக்கும் திட்டு வாங்கிக் கொடுத்த எதிர்வீட்டுப் பையன் கோபாலைத் தவிர, எங்கள் தெருவிலிருந்து பரீட்சைக்குப் போன நாங்கள் எல்லோரும் பாஸ் பண்ணிவிட்டோம்."

இனி உண்மைத்தமிழன்..

இப்போது புரிந்திருக்குமே இது எந்தத் திரைப்படத்தில் பார்த்த காட்சி என்று..?

படித்து முடித்தவுடன்தான் இதனை எங்கயோ விஷுவலாக பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது. புரிந்தவுடன் பரவாயில்லை. ஒரு சிறந்த வெற்றிப் படத்தில் இது இடம் பெற்றிருக்கிறது என்பதில் ஒரு சிறிய சந்தோஷம் எனக்குள் வந்தது.

'பசங்க' திரைப்படத்தில் நான் பார்த்து வெகுவாக ரசித்தக் காட்சிகளில் இதுவும் ஒன்று..!

நல்ல விஷயங்களை யார் எங்கேயிருந்து எடுத்தாலும், கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. திரைப்படத்தின் காட்சிகளில்கூட 'அக்பர்', 'அசோகர்' என்றே உண்மைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர்களை வைத்ததில் இருந்தே, இயக்குநர் பாண்டிராஜின் 'எடுத்துக் கொடுத்த நேர்மை' எனக்குப் புரிகிறது.

ஒவ்வொருவரின் அனுபவங்கள்தான் மற்றவருக்கு பாடங்களாகும் என்பது உலகப் பழமொழி. அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் மீதான நன்மதிப்பு எனக்குள் கூடுகிறது.

ஒருவேளை இயக்குநரின் சொந்த அனுபவமே இப்படியொரு காட்சியை வைக்கும் முடிவை அவருக்குள் ஏற்படுத்தியிருக்கலாம்.. இப்படியும் சில அனுபவங்கள் பலருக்கும் வாய்க்கும்தானே..

அப்படிப் பார்த்தால் நாகேஷின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு அனுபவம், இயக்குநர் பாண்டிராஜுக்கும் கிடைத்திருக்கிறது போலும் என்று நாம் நினைத்துக் கொள்வோம்.

என்ன நான் சொல்றது..?

புத்தகம் பற்றிய விமர்சனத்தை வேறொரு பதிவில் பார்ப்போம்..!

புத்தகம் பற்றிய விபரங்கள்

"சிரித்து வாழ வேண்டும்"
நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள்
தொகுப்பாசிரியர் எஸ்.சந்திரமெளலி
விலை ரூபாய் 100.
வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தி.நகர்
சென்னை-600017.
தொலைபேசி எண் : 24342810 / 24310769
www.vanathi.in
vanathipathippakam@vsnl.net

47 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Anonymous said...

செவிடன் காதில் சங்கு ஊதி என்ன பலன்

சென்ஷி said...

பகிர்விற்கு நன்றி அண்ணே! இந்த புத்தகம் இன்னும் வாசிக்கலை. அடுத்த மாதம் நண்பர் ஊருக்கு போகும்போது கண்டிப்பாக வாங்கி வர வேண்டிய புத்தகத்தில் இதுவும் ஒன்று.

ரமேஷ் வைத்யா said...

பகிர்விற்கு நன்றி அண்ணே! இந்த புத்தகம் இன்னும் வாசிக்கலை. அந்தப் புத்தகத்தில் இருப்பதை முழுசும் அடுத்த பதிவில் போடுங்க.

துபாய் ராஜா said...

நல்லதை நாடு கேட்கும்.

ரமேஷ் வைத்யா said...

நீங்கள் டைப் அடிக்கக்கூடாது என்று ஸ்டே வாங்கியிருந்தார்களாமே... அந்தப் பிரச்னை தீர்ந்துவிட்டதா..?

நையாண்டி நைனா said...

நல்ல அறிமுகம்.

butterfly Surya said...

ரமேஷ் ஜி.. உங்களுக்காக நான் ஒரு ஸ்டே வாங்க போறேன்..

நாஞ்சில் நாதம் said...

பகிர்விற்கு நன்றி அண்ணே

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
செவிடன் காதில் சங்கு ஊதி என்ன பலன்?///

இதுக்கும் என் காதுக்கும் என்ன சம்பந்தம் அனானி..?

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...
பகிர்விற்கு நன்றி அண்ணே! இந்த புத்தகம் இன்னும் வாசிக்கலை. அடுத்த மாதம் நண்பர் ஊருக்கு போகும்போது கண்டிப்பாக வாங்கி வர வேண்டிய புத்தகத்தில் இதுவும் ஒன்று.]]]

புத்தகம் வேணும்னா மெயில்ல அட்ரஸை அனுப்பு.. துபாய்க்கே அனுபபி வைக்கிறேன்..

உனக்கில்லாததாடா ராசா..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ் வைத்யா said...
பகிர்விற்கு நன்றி அண்ணே! இந்த புத்தகம் இன்னும் வாசிக்கலை. அந்தப் புத்தகத்தில் இருப்பதை முழுசும் அடுத்த பதிவில் போடுங்க.]]]

இந்த சப்ஜெக்ட் பற்றி இருப்பவைகளை முழுதாக போட்டுவிட்டேன் ரமேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[துபாய் ராஜா said...
நல்லதை நாடு கேட்கும்.]]]

இதையேதான் நானும் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ் வைத்யா said...
நீங்கள் டைப் அடிக்கக்கூடாது என்று ஸ்டே வாங்கியிருந்தார்களாமே. அந்தப் பிரச்னை தீர்ந்துவிட்டதா..?]]]

என்னது எனக்கே தெரியாம ஸ்டேயா..?

ரமேஷ் வைத்யா இதுவெல்லாம் உண்மைன்னு நம்புறீங்களே..?

நீங்க இவ்ளோ அப்பாவியா..?

உண்மைத்தமிழன் said...

[[[நையாண்டி நைனா said...
நல்ல அறிமுகம்.]]]

வருகைக்கு நன்றி நைனாஜி..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...
ரமேஷ்ஜி.. உங்களுக்காக நான் ஒரு ஸ்டே வாங்க போறேன்..]]]

முடியுமா..? முடிந்தால் வாங்கிக் காட்டுங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் நாதம் said...
பகிர்விற்கு நன்றி அண்ணே]]]

வருகைக்கு நன்றிகள்ண்ணே..!

பித்தன் said...

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

//அடுத்தவர் அனுபவத்தில் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது//

முகத்திலடித்த உண்மை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்விற்கு நன்றி

இராகவன் நைஜிரியா said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே.

வால்பையன் said...

வாங்கிடுவோம்!

swizram said...

யாருக்கு எது பிடிக்கிறதோ அதை மற்றவர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தவறில்லை.

ரொம்ப கரெக்ட்.....:)

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
//அடுத்தவர் அனுபவத்தில் நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது//
முகத்திலடித்த உண்மை.]]]

இதுதான் உண்மை பித்தன்ஜி..

அடுத்தவர்களிடமிருந்துதான் நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.. நாமே தவறுகள் செய்து அதில் இருந்துதான் பாடம் கற்க வேண்டுமெனில் நமக்கு ஆயுசு போதாது..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...
பகிர்விற்கு நன்றி]]]

வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[இராகவன் நைஜிரியா said...
பகிர்வுக்கு நன்றி அண்ணே.]]]

வருகைக்கு நன்றிண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[வால்பையன் said...
வாங்கிடுவோம்!]]]

வேணும்னா வாங்கி அனுப்பவா..?

உண்மைத்தமிழன் said...

[[[கத்துக்குட்டி said...
யாருக்கு எது பிடிக்கிறதோ அதை மற்றவர்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தவறில்லை. ரொம்ப கரெக்ட்.....:)]]]

அந்த பிடிப்பவைகள் லிஸ்ட் இது போன்ற நல்லவைகளாகவும் இருக்க வேண்டும் கத்துக்குட்டி..!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நல்லப் பகிர்வு நண்பரே. புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. முதலில் தருவிக்கவேண்டும். பாண்டியராஜ் தன் முதல் படத்தில் பாஸ் மார்க் வாங்கிவிட்டார். அதே தரத்தில் நிற்கிறாரா என்று காலம்தான் பதிலளிக்கவேண்டும்.

Prathap Kumar S. said...

தலைப்பில் எந்தப்பட "சீன்" என்று போட்டிருந்ததும் நானும் ஓடோடி வந்தேன். ஆனால் உள்ளே விசயம் வேறு...என்றாலும் நல்ல விசயத்தை போட்டிருந்தீர்கள்...நன்றி அண்ணே உங்கள் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு

உண்மைத்தமிழன் said...

[[[M.S.E.R.K. said...
நல்ல பகிர்வு நண்பரே. புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. முதலில் தருவிக்கவேண்டும். பாண்டியராஜ் தன் முதல் படத்தில் பாஸ் மார்க் வாங்கிவிட்டார். அதே தரத்தில் நிற்கிறாரா என்று காலம்தான் பதிலளிக்கவேண்டும்.]]]

நிச்சயம் நிற்பார் என்றே நானும் நினைக்கிறேன்..!

Romeoboy said...

தல எனக்கு தெரிந்த பதிப்பகம் இரண்டு அல்லது முன்று தான் இருக்கும் .. இதே மாதுரி புக்ஸ் எல்லாம் அறிமுகம் படுத்தி வைங்க என்ன மாதுரி புது படிபளிங்களுக்கு நிறைய உபயோகமா இருக்கும். பதிவு அருமை ..

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாகேஷ் ஒரு சகாப்தம்

அவரைப் பத்தி அறிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி

இன்னும் நிறைய உண்டா ....

Prabu M said...

இது ஆரோக்யமான விஷயம்தான் ஐயமில்லாமல்....

அதே பெயர்களைப் பயன்படுத்தியிருப்பது ஒரு நல்ல‌ கலைஞனின் நேர்மை மற்றும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகட் தோன்றியது....

இந்த‌ மாதிரிப் ப‌திவுக‌ள் ப‌த்திரிக்கைக‌ளில் கிடைக்க‌ சாத்திய‌ம் குறைவு.....

ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ளின் பேனாவுக்கு எட்டாத‌ அல்ல‌து சாத்திய‌ம‌ற்ற‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவுகொள்வ‌துதான் ந‌ம்மைப் போன்ற‌ வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ப‌ங்கோ....

சிற‌ப்பான‌ ப‌திவு அண்ணா....

துளசி கோபால் said...

எதிர்பார்க்கலை இப்படின்னு.....



படிச்சுமுடிச்சவுடன் எடுத்து வைக்கவும்.

உண்மைத்தமிழன் said...

///mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்///

எல்லாம் சரி. தமிழ்வெளி மாதிரி ஒவ்வொரு முறையும் உங்க தளத்துக்கு வந்து புதிய பதிவுகளை இணைக்காமல் தானாகவே அது அப்டேட் செய்யும்படியான வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜராஜன் said...
தல எனக்கு தெரிந்த பதிப்பகம் இரண்டு அல்லது முன்றுதான் இருக்கும். இதே மாதுரி புக்ஸ் எல்லாம் அறிமுகபடுத்தி வைங்க என்ன மாதுரி புது படிபளிங்களுக்கு நிறைய உபயோகமா இருக்கும். பதிவு அருமை..]]]

நன்றிகள் ராஜராஜன்..

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நாகேஷ் ஒரு சகாப்தம். அவரைப் பத்தி அறிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. இன்னும் நிறைய உண்டா?]]]

நிறைய இருக்கு புத்தகத்தில். வாங்கிப் படியுங்கள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரபு . எம் said...

இது ஆரோக்யமான விஷயம்தான் ஐயமில்லாமல்....

அதே பெயர்களைப் பயன்படுத்தியிருப்பது ஒரு நல்ல‌ கலைஞனின் நேர்மை மற்றும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகட் தோன்றியது....

இந்த‌ மாதிரிப் ப‌திவுக‌ள் ப‌த்திரிக்கைக‌ளில் கிடைக்க‌ சாத்திய‌ம் குறைவு.....

ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ளின் பேனாவுக்கு எட்டாத‌ அல்ல‌து சாத்திய‌ம‌ற்ற‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌திவுகொள்வ‌துதான் ந‌ம்மைப் போன்ற‌ வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ப‌ங்கோ....

சிற‌ப்பான‌ ப‌திவு அண்ணா....]]]

நன்றிகள் பிரபு..! அடிக்கடி வாங்க.!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
எதிர்பார்க்கலை இப்படின்னு. படிச்சு முடிச்சவுடன் எடுத்து வைக்கவும்.]]]

நானும்தான் டீச்சர்.. ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது இந்தச் செய்தி..

புத்தகம் ரெடியா இருக்கு..!

Bhuvanesh said...

நல்லா இருக்கு அண்ணே.. சீக்கிரம் வாங்கி படிக்கறேன் !

Bhuvanesh said...

நல்லா இருக்கு அண்ணே.. சீக்கிரம் வாங்கி படிக்கறேன் !

Bhuvanesh said...

நல்லா இருக்கு அண்ணே.. சீக்கிரம் வாங்கி படிக்கறேன் !

தீப்பெட்டி said...

இப்படி அப்பாவியா இருக்கீங்களே பாஸ்..

பசங்க பாண்டியராஜனின் திருட்டுத்தனம்னு தலைப்ப போட்டு ஹிட்டயும், பதிவர்கள் மத்தியில ஹீட்டயும் அதிகரிக்க தெரியல உங்களுக்கு..

நீங்கெல்லாம் என்னைக்கு பிரபல பதிவராகிறது..
ரொம்பச் ச்சிரமம்..

உண்மைத்தமிழன் said...

///Bhuvanesh said...
நல்லா இருக்கு அண்ணே.. சீக்கிரம் வாங்கி படிக்கறேன்!///

படிங்கோ.. படிங்கோ..

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...
இப்படி அப்பாவியா இருக்கீங்களே பாஸ்.. பசங்க பாண்டியராஜனின் திருட்டுத்தனம்னு தலைப்ப போட்டு ஹிட்டயும், பதிவர்கள் மத்தியில ஹீட்டயும் அதிகரிக்க தெரியல உங்களுக்கு.. நீங்கெல்லாம் என்னைக்கு பிரபல பதிவராகிறது.. ரொம்பச் சிரமம்..]]]

கஷ்டம்தான்.. எனக்கும் தெரியுது.. ஆனா பாருங்க.. நமக்கும், அவங்களுக்கும் வித்தியாசம் இல்லைன்னா நான் ஏற்கெனவே இதே கட்டுரைல எழுதியிருக்கேன்.

அதுனால நம்ம மானத்தை நாமளே கப்பலேத்த வேண்டாம்னு அடக்கமா எழுதியிருக்கேன் ஸார்..!

வஜ்ரா said...

உண்மை தமிழன்,
நீங்கள் சொல்வது போல் சின்ன சின்ன விஷயங்களால் ஈர்க்கப்பட்டு அதை படக்காட்சியாக அமைப்பது எல்லாம் சரி தான்.

ஆனால் ஒரு சிலர் அப்படியே ஆங்கிலப்படத்தை உல்டா செய்து எடுத்து அதை ஏதோ தங்கள் கலை அறிவு போல் இந்தியாவெங்கும் விற்பது கேவலமானதும், கேலிக்குறியதுமாகும். (எ.டு. கஜினி (memento), அவ்வை ஷண்முகி (mrs. doubtfire), பச்சைக்கிளி முத்துச்சரம் (Derailed)).

அப்படி செய்பவர்கள் இந்தக்காட்சி இப்படிப்பட்ட நாவலில் இருந்து, அல்லது படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று டைடில் credits லோ அல்லது ஏதாவது ஒரு பேட்டியிலோ சொல்ல குறந்தபட்ச நேர்மை வேண்டும். அதுவே பல கலைஞர்களிடம் இல்லை என்பது தமிழ் கலை உலக அவலம்.

உண்மைத்தமிழன் said...

[[[வஜ்ரா said...
உண்மை தமிழன், நீங்கள் சொல்வது போல் சின்ன சின்ன விஷயங்களால் ஈர்க்கப்பட்டு அதை படக்காட்சியாக அமைப்பது எல்லாம் சரிதான்.

ஆனால் ஒரு சிலர் அப்படியே ஆங்கிலப்படத்தை உல்டா செய்து எடுத்து அதை ஏதோ தங்கள் கலை அறிவு போல் இந்தியாவெங்கும் விற்பது கேவலமானதும், கேலிக்குறியதுமாகும். (எ.டு. கஜினி (memento), அவ்வை ஷண்முகி (mrs. doubtfire), பச்சைக்கிளி முத்துச்சரம் (Derailed)).

அப்படி செய்பவர்கள் இந்தக்காட்சி இப்படிப்பட்ட நாவலில் இருந்து, அல்லது படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று டைடில் credits லோ அல்லது ஏதாவது ஒரு பேட்டியிலோ சொல்ல குறந்தபட்ச நேர்மை வேண்டும். அதுவே பல கலைஞர்களிடம் இல்லை என்பது தமிழ் கலை உலக அவலம்.]]]

நீங்கள் சொல்வது உண்மைதான் வஜ்ரா. அப்படி வெளிப்படையாகத் தெரிவித்தால் அவர்களுடைய திறமையின் மீது அப்பாவி ஜனங்களுக்கு நம்பிக்கையிழப்பு ஏற்படும் என்பதால்தான் இப்படியொரு ஏமாற்று வேலையைச் செய்கிறார்கள்.

ஆனாலும் இனியும் ரசிகப் பெருமக்களை ஏமாற்ற முடியாது..

அதனால்தான் இப்போதெல்லாம் பேட்டிகளில் அந்த ஆங்கிலப் படத்தின் தாக்கம் எனது படத்தில் உண்டு என்று மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள்.. ஆனால் டைட்டிலில் மட்டும் கிரிடீட் தர மறுக்கிறார்கள்.

அப்படி கொடுத்தார் பணம் தர வேண்டுமே என்பதும் ஒரு காரணம்..!