திரைப்படத்தின் விளம்பரத்திற்கு இப்படியும் ஒரு வழியா..?

29-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு திரைப்படம் தோல்வியடையும் என்பதும், வெற்றியடையும் என்பதையும் அத்திரைப்படத்தின் வெளியிட்டீற்கு முன்பாக அத்திரைப்படத்தில் பணியாற்றியவர்களே கண்டறியலாம். ஏனெனில் அவர்களே திரையுலக ரசிகர்கள்தான்.

"ஓடிரும்.. அட்டர் பிளாப்.. கவுத்திருச்சு.. சுத்தமா காலி.. கொஞ்சம் துண்டு விழுந்திருச்சு.. ஒண்ணும் தேறலை.. தலை தப்பிருச்சு.. கர்ணம் அடிச்சு பொழைச்சேன்.. ஏதோ கைக்கு வந்திருக்கு.. கையைக் கடிக்காது.. மினிமம் கியாரண்டி.. பத்துக்கு ஒன்பது நிச்சயம் வந்திரும்.. பொட்டிக்கு ஒண்ணு லாபம்.. பொட்டிக்கு மேல வந்திருச்சு.." -- இதுவெல்லாம் திரைப்பட உலக விநியோகஸ்தர்கள் சங்கம் இருக்கும் மீரான் சாயுபு தெருவின் மொக்கு டீக்கடையில் தினமும் பேசக்கூடிய பேச்சுக்கள்.

இதே போன்று ஒரு நடிகரும், தயாரிப்பாளருமே தோல்வியை எதிர்பார்த்தே படத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால் படத்தை திரையிட்ட முதல் நாளே அதனை எதிர்கொண்டதுதான் எனக்கு ஆச்சரியம்.

'ஐந்தாம்படை' ரிலீஸின்போதுதான் 'மலையன்' திரைப்படமும் ரிலீஸானது. முதல் காட்சியில் 'ஐந்தாம்படை'க்கு ஆவரேஜாக கூட்டம் சேர்ந்திருந்தது. 'மலையனு'க்கு கூட்டமே இல்லை. ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்தான் உதயம் தியேட்டரில் கியூவில் நின்றிருந்தார்கள்.


அப்போது 5, 6 இளம்பெண்கள் கூட்டமாக அங்கே வந்தார்கள். அனைவரையும் நோட்டம் பார்த்தார்கள். நான்கூட படம் பார்க்க வந்தவர்கள் என்றுதான் நினைத்தேன். டிக்கெட் கொடுக்கத் துவங்கிய நிமிடத்தில் தங்களது சேலைகளுக்கு மேலே ஒரு பனியனை அணிந்தார்கள் அந்தப் பெண்கள். அந்தப் பனியனில் முன்புறம் நடிகர் கரணின் புகைப்படமும், பின்பக்கம் அவரது ரசிகர் மன்றம் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

அவர்களது கையில் சில நோட்டீஸ்கள் இருந்தது. தியேட்டருக்கு உள்ளே வருபவர்களை வழிமறித்து, அவர்கள் கையில் அந்த நோட்டீஸ்களைத் திணித்து அதில் நடிகர் கரண் பற்றி கேட்கப்பட்டிருக்கும் ஐந்து கேள்விகளுக்கு மிகச் சரியாகப் பதில் சொன்னால் 'மலையன்' படத்தின் ஹைகிளாஸ் டிக்கெட்டை இலவசமாகத் தருவதாகச் சொல்ல.. கியூவில் நின்ற கொஞ்ச நஞ்ச கூட்டமும் மறைந்து போய் இவர்களைச் சூழ்ந்து கொண்டது.

அந்த நோட்டீஸில் கரணின் திரையுலக வாழ்க்கையைப் பற்றிய சுமாரான மிக எளிமையான ஐந்து கேள்விகளை கேட்டிருந்தார்கள். பதில் தெரியாதவர்கள் சும்மா நின்று வேடிக்கை பார்த்தவர்களிடம் "உங்களுக்குத் தெரியுமா..? உங்களுக்குத் தெரியுமா?" என்று பலரையும் விரட்டி, விரட்டி கேட்டது செம ஜாலியாக இருந்தது.

வேறு படம் பார்க்க வந்தவர்கள்கூட இவர்களுடைய இலவச டிக்கெட்டை வாங்கிவிட்டு, ஏற்கெனவே வாங்கிய படத்தின் டிக்கெட்டை திருப்பிக் கொடுக்க கவுண்ட்டரில் மல்லு கட்டினர். எப்படியோ அந்த முதல் ஷோவில் மட்டும் 'மலையன்' படம் பாதி அரங்கு நிரம்பியது.


எதற்காக இந்த விளம்பரம் என்று விசாரித்தேன். தயாரிப்பு தரப்பிலும், நடிகரின் தரப்பிலும் படத்தை பார்த்துவிட்டு முன்பே உதட்டைப் பிதுக்கிவிட்டார்களாம். அதனால்தான் முதல் ஷோவிலேயே ரசிகர்களைப் படம் பார்க்கவைத்து, ஓப்பனிங்கிலேயே ரசிகர்களிடமிருந்து ஏதாவது நல்ல வார்த்தைகளை வரவழைக்கலாம் என்று எதிர்பார்த்து இப்படியொரு செட்டப் செய்தார்களாம்.

ஆனாலும் படம் பிளாப்புதான்..!

என்னதான் 'கம்' போட்டு ஒட்டினாலும் பிடிமானம் இல்லையெனில்..?

10 comments:

சீமான்கனி said...

ஓட்டுற மண்ணுதானே .....ஓட்டும்.....

உண்மைத்தமிழன் said...

///seemangani said...
ஓட்டுற மண்ணுதானே ஓட்டும்.///

உண்மைதான்.. என்னதான் விளம்பரப்படுத்தினாலும் சரக்கு இல்லையெனில் ஒன்றுமே செய்ய முடியாது..!

சிங்கக்குட்டி said...

பலரின் உழைப்பு பயனாற்று போனதில் வருந்துகிறேன்.

மங்களூர் சிவா said...

/

என்னதான் 'கம்' போட்டு ஒட்டினாலும் பிடிமானம் இல்லையெனில்..?
/

:)))

உண்மைத்தமிழன் said...

[[[சிங்கக்குட்டி said...
பலரின் உழைப்பு பயனாற்று போனதில் வருந்துகிறேன்.]]]

உங்களுடைய வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன் சிங்கக்குட்டி..!

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...
/என்னதான் 'கம்' போட்டு ஒட்டினாலும் பிடிமானம் இல்லையெனில்..?/
:)))]]]

ரொம்ப வேலை போலிருக்கு.. அதான் ஸ்மைலிக்கு மேல எழுத நேரமில்லை..

Anbu said...

:-)))

உண்மைத்தமிழன் said...

///Anbu said...
:-)))///

நன்றி அன்பு..!

Unknown said...

http://dhejasvini.blogspot.com/2009/08/blog-post_23.html?showComment=1251916683377#c875907254804499677

abeer ahmed said...

See who owns reach24.com or any other website:
http://whois.domaintasks.com/reach24.com