இடைத்தேர்தல் அவசியமா..? இளிச்சவாயர்கள் மக்கள்தானே..!

21-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தை ஆளும் அரசப் பரம்பரையினர் ஆவலோடு காத்திருந்த ரிசல்ட் வந்துவிட்டது. ஐந்து தொகுதிகளையும் அப்படியே தூக்கிக் கையில் கொடுத்துவிட்டார்கள். இப்போது தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்து சதமடிக்க ஒரு ஆள் குறைகிறது.

இந்த 99-க்கு ஏதாவது புதுமையான அர்த்தம் கண்டுபிடித்து முரசொலி, விடுதலை, மக்கள் குரல், நமது எம்.ஜி.ஆர்., தினமணிகளில் நாளையே கார்ட்டூன்கள் வரக்கூடும்.

கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, பர்கூர், திருவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளில் திருவைகுண்டம் தொகுதியின் வேட்பாளர் இறந்து போனதால், தேர்தல் வர வேண்டிய கட்டாயம் இருந்தது. தேவைதான்.. ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் மற்ற தொகுதிகள்..

இளையான்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கண்ணப்பன் தி.மு.க. சார்பாகத்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி ஏற்க அவசரம், அவசரமாக சென்னைக்கு படையெடுத்து வந்து புது வேஷ்டி, சட்டைகளைக்கூட வாங்கி வைத்திருந்து விழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.


தலைவர் தரவில்லை. தன் இதயத்தில் அதிகபட்சமாக தான் பிடித்து வைத்திருந்த அயல்நாட்டு உடன்பிறப்புகள் வரிசையில் கண்ணப்பனுக்கும் ஒரு இடம் கொடுத்து அமர வைத்துவிட்டார். பாவம் கண்ணப்பன்.. பிட்டு படம் பார்க்க வந்து எதிர்பார்த்த காட்சியை ஓட்டாத கோபத்தில் சீட்டைக் கிழித்துவிட்டுப் போகும் சாதாரண ரசிகனாக மாறிப் போனார்.

சிவகங்கை மாவட்ட அமைச்சரான பெரியகருப்பனுடன் அன்றிலிருந்து மோதலோ மோதல்.. கான்ட்ராக்ட் கேட்டு சண்டை.. நிதியுதவி கேட்டு சண்டை.. தன்னுடன் தி.மு.க.விற்கு வந்த முன்னாள் இரத்தத்தின் இரத்தங்களுக்கு பதவி கேட்டு சண்டை.. என்று பொழுது விடிந்து பொழுது போனால் சண்டை போட்டே தனது இருப்பை கோபாலபுரத்திற்கு தெரியப்படுத்தினார்.

இந்திராகாந்திக்கே அல்வா கொடுத்த வீடு அது.. இந்த சாதாரண சுள்ளானுக்கா பயப்படும்..? “போடா ங்கொக்காமக்கா” என்று பெப்பே காட்டியதால் கோபப்பட்டு மீண்டும் அவர் வாயாலேயே உச்சரித்த சூர்ப்பனகை, மண்டோதிரியிடம் போய் சரணடைந்துவிட்டார். இது அவருடைய சொந்த நலனுக்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்.

அடுத்தது பர்கூர்.. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிகாரப்பூர்வமாக அதிகமான சொத்துக்கள் வைத்திருப்பதாக அறிவிக்க காத்திருந்த வேட்பாளரான கரூர் கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக சவுண்ட் கொடுக்கக்கூட அந்த கரூர் பெல்ட்டில் அ.தி.மு.க.வில் ஆள் இல்லை..


அவரை எதிர்க்க வேண்டுமெனில் அந்த அளவுக்குச் செல்வாக்கும், சூட்கேஸ் திறக்கும் சக்தியும் உள்ளவரைத்தான் களத்தில் இறக்க வேண்டும் என்று போயஸ் தோட்ட அம்மா நினைத்ததால், தம்பித்துரை தனது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கரூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார்.

அவர் நல்ல நேரம்.. ஜெயித்துத் தொலைந்துவிட்டார். ஆனால் தொகுதி மக்களின் கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது.. இதுவும் அவருடைய சொந்த நலனுக்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்தான்.

அடுத்தது தொண்டாமுத்தூர். காரோட்டி கண்ணப்பன் என்று கலைஞரால் செல்லமாக அழைக்கப்பட்ட இந்தத் தொகுதியின் ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்தத் தலைவருமான கண்ணப்பனுக்கு வினை கலைஞராலேயே வந்தது.


கண்ணப்பன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கலைஞர் அவரை வந்து பார்த்து நலம் விசாரித்தார். அதேபோல் கலைஞர் மருத்துவமனையில் இருக்கும்போது தான் போய் பார்ப்பதுதான் நாகரிகம் என்று நினைத்தவர் மருத்துவமனைக்கு தன்னுடைய செக்கப்புக்காக சென்ற வேளையில் அப்படியே கலைஞரையும் பார்த்துவிட்டு வந்தார். இதில் இவர் செய்த தவறு என்று இவரை சொல்வது வைகோவிடம் அதனை முன்கூட்டியே சொல்லவில்லை என்பதுதான்.

இது விஷயமாக வைகோகவும், அவருக்குமான நட்பு முறிவு கடைசியில் அந்தக் கட்சியில் இருந்து விலகும் சூழலுக்குச் சென்றது.. விலகினார். விலகி வீட்டில் உட்கார்ந்து சீரியல்களா பார்க்க முடியும்..? எப்பேர்ப்பட்ட அரசியல் தியாகி இவர்..? நாட்டுக்காக எத்தனை, எத்தனை தியாகங்களை செய்திருக்கிறார்? உடனேயே வேறொரு கட்சியில் சேர்ந்தால்தானே அடுத்து ஏதாவது பதவி கிடைத்து அள்ள முடியும்..

உடனேயே தி.மு.க.வில் சேர முடிவெடுத்து மின்னல் வேகத்தில் அறிவாலயத்தில் தனது பழைய அண்ணனிடம் சென்று அடைக்கலமாகிவிட்டார். ஆக இவரும் தனது சொந்த நலனுக்காகவே பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்தது கம்பம். கம்பம் நகரின் தெருக்கள் கிட்டத்தட்ட சென்னை மாநகரின் மேல்தட்டு வர்க்கத்தினர் இருக்கும் தெருக்கள் போலத்தான். அங்கிருக்கும் ஒக்கலிக கவுடர் இனத்தினர் அப்படியே அச்சுப் பிசகாமல் நம்ம சென்னைவாசிகள் போலத்தான்..

ஊர் முழுக்க, தெருவுக்குத் தெரு சொந்தக்காரர்கள்தான்.. அந்தத் தொகுதியில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சொந்தக்காரர்கள் இருப்பார்கள். கவுரவம்.. கவுரவம்.. கவுரவம்.. இதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை என்பார்கள்.

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும், தேனிக்கு இங்கிட்டு இருக்கும் பகுதியிலும் தி.மு.க. என்கிற பெயரையும், கலைஞர் என்கிற பெயரையும் சந்து பொந்திலெல்லாம் பரப்பி வைத்தவர் கம்பம் நடராஜன் என்கிற உண்மையான உடன்பிறப்பு. அவருடைய சொந்த உடன்பிறப்பான அண்ணன் ராமகிருஷ்ணன் வைகோவுடன் இணைந்து போன போது மிக, மிக கோபப்பட்டவர் ஸ்டாலின்தான்.


இதே ராமகிருஷ்ணன் பொன்.முத்துராமலிங்கத்தோடு இணைந்து தி.மு.க.வுக்கு திரும்புவதைப் போல் ஒரு செய்தி வந்தபோது, உலக அதிசயமாக ஸ்டாலினே அனைத்து பத்திரிகைகளுக்கும் ஒரு செய்தி கொடுத்தார். ராமகிருஷ்ணன் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அது வதந்தி என்று.. அந்த அளவுக்கு அதை நம்பிக்கை துரோகமாக எடுத்துக் கொண்டது தி.மு.க. தலைமை.

ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அரசாட்சியை எப்படித் தக்க வைத்துக் கொள்வது..? காலத்திற்கேற்றாற்போல் மாற வேண்டாமா..? மாறிவிட்டார் ஸ்டாலின்.

தனக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள் என்று சில கட்சிக்காரர்கள் பற்றி வைகோவிடம் புகார் சொல்லியும் அவர்களை கட்சியில் இருந்து நீக்காமல் வைத்திருந்ததால் கோபப்பட்டு கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்த ராமகிருஷ்ணன் அப்போதே கட்சி மாறப் போவது உறுதியாகத் தெரிந்தது. இந்த சிக்னல் பேசலைன்னா போயிருவேன் என்ற மிரட்டலாகத் தெரிய வைகோவும் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார் என்றார்கள்.

அந்தப் பகுதிக்கே தங்களது குடும்பம்தானே வைகோவை அடையாளம் காட்டியது.. தங்களுக்கே ஆப்பா என்று கோபப்பட்ட ராமகிருஷ்ணன் தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் அறிவாலயத்துக்கு படையெடுத்து தனது அண்ணனிடம் ஐக்கியமாகிவிட்டார். ஸோ, இதுவும் அப்பட்டமான சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நாடகம்தான்..

தேர்தலில் வென்று தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அடிக்கடி கட்சி மாறி தங்களைக் கவிழ்க்கிறார்களே என்பதால், அவர்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டித்தான் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தார்கள்.

கட்சியில் இருந்து விலக்கப்பட்டாலோ, அல்லது விலகினாலோ வேறொரு கட்சியில் சேர முடியாது.. கூடாது. அப்படி சேர்ந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என்ற விதிமுறையையும் தங்களது சுயநலத்துக்காகவே கொண்டு வந்தார்கள்.

இப்படி கட்சி மாறுபவர்கள் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்காக இருந்தால் அதனை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்பதுகூட அவர்களுக்கு இருந்த ஒரு நப்பாசைதான். நாளைக்கு இதை வைத்தே நமக்கு யாராவது ஆப்பு வைச்சிட்டா என்கிற பயத்தில் அவர்கள் கொண்டு வந்ததுதான் இந்த உட்பிரிவு விதிவிலக்கு.

இப்படி நால்வரும் போனதுதான் போனார்கள். அப்படியே எம்.எல்.ஏ.வாகவே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே.. எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று சபாநாயகரால் சொல்லிவிட்டுப் போகட்டுமே.. அடுத்தத் தேர்தலின்போது பிடித்தமான கட்சியில் சேர்ந்துத் தொலையட்டுமே.. செய்தார்களா..?

பொழுது விடிந்து பொழுது போனால் அம்மாவின் டிவியில் மைனாரிட்டி அரசு என்ற வர்ணனையைக் கேட்டு, கேட்டு ஐயாவுக்கு மனம் கொதித்துப் போனது.. எப்படியாவது தங்களது கட்சியின் எண்ணிக்கையைக் கூட்டி வருங்காலப் புள்ளிவிவரத்தில் ஒரு மாறுதலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் கலைஞர். அதன் விளைவுதான்.. மூவரின் ராஜினாமாவும்.. அதன் பின்னரான இடைத்தேர்தலும்.

ஆக, இதுவும் அப்பட்டமான சொந்த நலனுக்காக நடத்தப்பட்ட ஒரு நாடகம்.

இந்த நாடகங்களுக்காக செலவான தொகை நிச்சயம் 20 கோடி ரூபாய் இருக்கும். இது ஐயாவின் சொந்தப் பணமல்ல.. கட்சி மாறி வந்த பொதுநல சேவைக்காரர்களின் பணமும் அல்ல.. மக்களின் பணம்.. நம்முடைய பணம்..

இப்போது மூன்று தொகுதிகளுக்கும் அமைச்சர்கள் பட்டாளம் அணி வகுத்தது. ஒரு தெருவுக்கு ஒரு அமைச்சர் என்று நியமிக்கப்பட்டு பட்டுவாடாக்கள் நடந்தேறியுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஓட்டுக்கள் குறைந்தால் அவரவர் பதவிகள் பறிபோகும் அபாயம் உண்டு என்பதால் அனைத்து அமைச்சர்களும் தங்களது அதிகார, பண, அரசியல் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது..

இப்படி கோட்டையில் இருந்து ஒட்டு மொத்த அமைச்சர்களும் வெளியேறி தொகுதிக்குள் சென்று அடைக்கலமாகியதில் அரசு வேலைகளில் கண்டிப்பாக சுணக்கம் ஏற்பட்டிருக்கும்.. இதை யார் கேட்பது..? இப்போது அமைச்சர்களின் வாகனச் செலவு, அவர்கூட வந்திருக்கும் அடிப்பொடிகளுக்கான செலவு.. டி.ஏ. பில் என்று ஏகத்துக்கும் பில்லை போட்டுத் தாளித்திருப்பார்களே.. இதெல்லாம் யார் செலவு..? அமைச்சர்களின் மாமனார் வீட்டுச் செலவோ..?

அரசு செலவழித்திருக்கும் 20 கோடி ரூபாயில் என்னென்ன செய்திருக்கலாம் என்று அதே தோகுதிகளில் வீடு, வாசல் இல்லாமல் ரோட்டோரங்களில் தங்கி கூலி வேலை செய்து கொண்டிருக்கும் அப்பாவி மக்களைக் கேட்டால் சொல்லியிருப்பார்கள்.

இதைப் பத்தி யாருக்கு என்ன கவலை..? பொதுமக்களின் பணம் என்பதாலும், அரசியலமைப்புச் சட்டப்படி ஆறு மாதங்களுக்குள் புதிய சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதாலும்தான் தேர்தல் அவசியமாகிறது என்று சொல்லலாம்.

இந்த உளுத்துப் போன சட்டங்களை முதலில் தூக்கியெறிய வேண்டும். காலத்துக்கேற்றாற்போல இப்போது சட்டங்களைத் திருத்தத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் இது போல மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பதைத் தவிர்த்து கொஞ்சமாவது படித்த, நாகரிக மனிதர்களைப் போல நடந்து கொள்ள நமது அரசியல்வியாதிகள் முன் வர வேண்டும்.

ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்..

நமக்கு காசும் மிச்சம்.. அரசியல்வியாதிகளுக்கு அலைச்சலும் மிச்சம்.. கட்சிக்காரர்களும் கத்துவதும் மிச்சம்.. வியாபாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதும் மிச்சம்.. அப்பாவி பொதுமக்களுக்கு ஒரு கரைச்சலும் மிச்சமாகும்.

யார் கேட்பது..?

37 comments:

அத்திரி said...

அண்ணே உங்க கோபம் எனக்கு புரியுது.............

ஆனா உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

மணிஜி said...

/பிட்டு படம் பார்க்க வந்து எதிர்பார்த்த காட்சியை ஓட்டாத கோபத்தில் சீட்டைக் கிழித்துவிட்டுப் போகும் சாதாரண ரசிகனாக மாறிப் போனார்.//

அண்ணே.மாதவி படம் பாத்துட்டு ஏமாந்து போயிட்டீங்களோ?

யாத்ரீகன் said...

Unga neelamaana post-layey idhu thaan Topuuuuu :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

Pl.visit my blog

http://tvrk.blogspot.com/2009/08/blog-post_03.html

வெட்டிப்பயல் said...

Unga Veetuku innum Auto varalaiya?

Anegama aatchi maari neenga ippadi thoadarnthu ezhuthina unga veetuku Lorrye varum...

Sani unga raasiku thaane vararu?

Paathu soothanama nadanthukonganne...

வெட்டிப்பயல் said...

//ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்//

Very Brillaint...

Mothalla vanthavanai poatu thallitu rendavathu vanthavan MLA aagiduvan. apparam avanai poathu thallitu moonavathu vanthavan.. ippadi jollya konnu konnu vilaiyaduvanga. namaku nalla entertainmentaa irukum :)

ஈரோடு கதிர் said...

சரியான ரௌத்திரம்

bandhu said...

You are absolutely correct that this is a waste of time and money. It is as if the MLA post being occupied is absolutely important. for the constituency. I am not sure whether any one will agree with that.
your posts are becoming better. i am impressed by the hard work you are putting to get the background information. congratulations!

bandhu said...

You are absolutely correct that this is a waste of time and money. It is as if the MLA post being occupied is absolutely important. for the constituency. I am not sure whether any one will agree with that.
your posts are becoming better. i am impressed by the hard work you are putting to get the background information. congratulations!

துபாய் ராஜா said...

நியாய'மான' கோபம்.

ஏதாவது செய்யணும் சார்....

உண்மையான உண்மை said...

"ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்.." உங்கள் கருத்து சரியானது. அல்லது " பதவி விலகுபவர்கள் அதனால் வரும் இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை ஏற்கவேண்டும்". என சட்டம் கொண்டு வர வேண்டும். இறப்பினால் வரும் இடைத்தேர்தலுக்கு அரசே செலவு செய்யலாம். என்ன? சரிதானா?

பித்தன் said...

அண்ணே உங்க கோபம்..... a true lay man's emotion

intha en pathivaip paarkkavum

http://niyazpaarvai.blogspot.com/2009/08/blog-post_21.html

பித்தன் said...

ஐடியா நல்லாத்தான் இருக்கு.... ஆனா யார் இதச் செய்யுறது....? செய்ய வேண்டியவன் எல்லாம் இந்நேரம் சரக்கடிச்சிட்டு, சாமர்த்தியமா எப்படி தமிழ் நாட்ட அட்டையப் போடலாம்னு யோசிச்சிட்டிருப்பனாக்கும்.... போங்க அண்ணேன் நீங்க ரொம்பத்தான் ஆசப்படுறீங்க, நீங்க ஏதும் காமடி கீமடி பண்ணலியே......

மு.சீனிவாசன் said...

//
ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்..
//

அண்ணாச்சி...இந்த மாதிரி சட்டம் இருந்தா...ஜெயிச்ச எதிர்க்கட்சி ஆளுங்க எல்லோர்கிட்டயும், MLA பதவிய புடுங்கிட்டு சிவலோக பதவி கொடுத்துடுவாங்களே இந்த அரசியல் வியாதிகள்? - நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு...

யாரங்கே...கட்டி இழுத்து வாருங்கள் அந்த உண்மைத்தமிழனை...என் கண்முன்னேயே நடக்கட்டும் சிரச்சேதம் - இது அப்போ

உடன்பிறப்பே...சமீபத்தில் உண்மைத்தமிழன் என்றொரு தம்பி நம் மீது சொல்லிய குற்றச்சாட்டுகளைக் கேட்டு, என் மீது தணியாத பாசம் கொண்ட நீ தழலாக கொதித்திருப்பாய். இதற்காக அவர் வீட்டுக்கு Auto வெல்லாம் அனுப்பி அவரை சேதப்படுத்தக்கூடாது என்று உன்னைக் கேட்டுக்கொள்கிறேன்...(அறிக்கை படித்துக் கொண்டிருக்கும் மேடைக்குப் பின்னால் ஸ்டாலின் குரல் "Address கண்டுபிடிச்சாச்சா" - இது இப்போ

கருணாநிதியிடம் பணம் வாங்கிக் கொண்டு தம்பிதுரையைப் பற்றி அவதூறு பரப்பும் உண்மைத்தமிழன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும் - இது கனவு


"மொத்ததில நீ கொஞ்சம் சாக்கிரதையாவும் இருந்துக்கோ...சந்தோசமாவும் இருந்துக்கோ"
"ஏய் யாருப்பா கூட்டத்துல முதல்வசந்தம் வசனத்த repeat பண்றது?"

:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சாமி...! குப்பு சொன்னது தப்பா சாமி!

http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_744.html

உண்மைத்தமிழன் said...

[[[அத்திரி said...

அண்ணே உங்க கோபம் எனக்கு புரியுது.............

ஆனா உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு]]]

தம்பீ.. இதை அப்படியே விட்டுரக் கூடாது.. நீயும் நாலு பேர்கிட்ட இதே மாதிரி நியாயமான கோபத்தைக் காட்டணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...

/பிட்டு படம் பார்க்க வந்து எதிர்பார்த்த காட்சியை ஓட்டாத கோபத்தில் சீட்டைக் கிழித்துவிட்டுப் போகும் சாதாரண ரசிகனாக மாறிப் போனார்.//

அண்ணே மாதவி படம் பாத்துட்டு ஏமாந்து போயிட்டீங்களோ?]]]

ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..

உண்மைத்தமிழன் said...

[[[யாத்ரீகன் said...
Unga neelamaana post-layey idhuthaan Topuuuuu :-)]]]

இதுக்கு முன்னாடியே நிறைய எழுதியிருக்கேன் யாத்ரீகன் ஸார்..!

பழசையெல்லாம் தோண்டியெடுத்துப் படிங்க.. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[T.V.Radhakrishnan said...
Pl.visit my blog
http://tvrk.blogspot.com/2009/08/blog-post_03.html]]]

பார்த்துட்டேன் ஸார்..!

நீங்களும் உங்களது பார்வையை பதிவிட்டுள்ளீர்கள். அவர்களிடமே பணத்தை வாங்கலாம் என்பதும் ஒரு நல்ல யோசனைதான்..

வருகைக்கு நன்றிகள்..

உண்மைத்தமிழன் said...

[[[வெட்டிப்பயல் said...

Unga Veetuku innum Auto varalaiya?

Anegama aatchi maari neenga ippadi thoadarnthu ezhuthina unga veetuku Lorrye varum...

Sani unga raasiku thaane vararu?

Paathu soothanama nadanthukonganne...]]]

ஆட்டோவோ, லாரியோ.. எது வந்தாலும் சரி..

என் அப்பன் முருகன் இருக்கும்போது எனக்கென்ன கவலை..?

உண்மைத்தமிழன் said...

[[[வெட்டிப்பயல் said...

//ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்//

Very Brillaint...

Mothalla vanthavanai poatu thallitu rendavathu vanthavan MLA aagiduvan. apparam avanai poathu thallitu moonavathu vanthavan.. ippadi jollya konnu konnu vilaiyaduvanga. namaku nalla entertainmentaa irukum :)]]]

வெட்டி ஸார்..

வெரி பிரில்லியண்ட் ஐடியா..

எனக்கு இது தோணாம போச்சே..!

உண்மைத்தமிழன் said...

[[[கதிர் - ஈரோடு said...
சரியான ரௌத்திரம்]]]

எல்லாருக்குள்ளேயும் இருக்கு கதிர்.. ஏன் உங்களுக்குள்ளகூட இருக்கும்.. யோசிச்சுப் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Ravi said...
You are absolutely correct that this is a waste of time and money. It is as if the MLA post being occupied is absolutely important. for the constituency. I am not sure whether any one will agree with that.
your posts are becoming better. i am impressed by the hard work you are putting to get the background information. congratulations!]]]

நன்றி ரவி..

இதுவொண்ணும் பெரிய கஷ்டமான வேலையில்லை..

கூகிளாண்டவர் துணையிருந்தாலே போதும்.. உட்கார்ந்த இடத்தில் இருந்தே தகவல்களை அள்ளலாம்..!

நீங்கள் வலையுலகத்திற்கு புதிது என்று நினைக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

[[[துபாய் ராஜா said...
நியாய'மான' கோபம். ஏதாவது செய்யணும் சார்....]]]

என்னத்த செய்யறது..? அந்நியன் ரெமோ மாதிரி எனக்கு சக்தியிருந்தா..????????????????

உண்மைத்தமிழன் said...

[[[உண்மையான உண்மை said...
"ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்.." உங்கள் கருத்து சரியானது. அல்லது " பதவி விலகுபவர்கள் அதனால் வரும் இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை ஏற்கவேண்டும்". என சட்டம் கொண்டு வர வேண்டும். இறப்பினால் வரும் இடைத்தேர்தலுக்கு அரசே செலவு செய்யலாம். என்ன? சரிதானா?]]]

சரிதான் உண்மை ஸார்..!

ஆனால் அரசியல் கொள்ளையர்கள் இதனை ஒத்துக் கொள்வார்களா என்ன..?

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
அண்ணே உங்க கோபம்..... a true lay man's emotion
intha en pathivaip paarkkavum
http://niyazpaarvai.blogspot.com/2009/08/blog-post_21.html]]]

படித்தேன் தம்பீ..

உன்னை மாதிரி கவிதை எழுதத் தெரிந்தால் எழுதி விடுவனே..

நான் ஆறு பக்கம் மாங்கு, மாங்குவென்று டைப் செய்வதை, உன்னை மாதிரியான கவிஞர்கள் வெறும் ஆறு வார்த்தைகளில் முடித்து விடுகிறீர்கள்..

ம்.. நல்லாயிருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
ஐடியா நல்லாத்தான் இருக்கு.... ஆனா யார் இதச் செய்யுறது....? செய்ய வேண்டியவன் எல்லாம் இந்நேரம் சரக்கடிச்சிட்டு, சாமர்த்தியமா எப்படி தமிழ்நாட்ட அட்டையப் போடலாம்னு யோசிச்சிட்டிருப்பனாக்கும். போங்க அண்ணேன் நீங்க ரொம்பத்தான் ஆசப்படுறீங்க, நீங்க ஏதும் காமடி கீமடி பண்ணலியே.]]]

இதுதான்யா இந்தியா..

வாழ்க்கை முழுக்க அத்தனை அராஜகத்தையும் காமெடியாவே எடுத்துக்கிட்டு நாட்டு மக்கள் போய்க்கிட்டிருக்காங்க..

டேய்.. திருந்தவே மாட்டீங்களாடா..!

உண்மைத்தமிழன் said...

Srini said...
//ஒரு தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டாலோ, அல்லது கட்சி மாறியதால் பதவியை விட்டாலோ முந்தைய தேர்தலில் யார் இரண்டாவதாக வந்தார்களோ அவர்களையே அந்தத் தொகுதி உறுப்பினராக நியமனம் செய்துவிடலாம்..//

அண்ணாச்சி இந்த மாதிரி சட்டம் இருந்தா ஜெயிச்ச எதிர்க்கட்சி ஆளுங்க எல்லோர்கிட்டயும், MLA பதவிய புடுங்கிட்டு சிவலோக பதவி கொடுத்துடுவாங்களே இந்த அரசியல் வியாதிகள்? - நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு...

யாரங்கே கட்டி இழுத்து வாருங்கள் அந்த உண்மைத்தமிழனை...என் கண் முன்னேயே நடக்கட்டும் சிரச்சேதம் - இது அப்போ

உடன்பிறப்பே சமீபத்தில் உண்மைத்தமிழன் என்றொரு தம்பி நம் மீது சொல்லிய குற்றச்சாட்டுகளைக் கேட்டு, என் மீது தணியாத பாசம் கொண்ட நீ தழலாக கொதித்திருப்பாய். இதற்காக அவர் வீட்டுக்கு Autoவெல்லாம் அனுப்பி அவரை சேதப்படுத்தக்கூடாது என்று உன்னைக் கேட்டுக் கொள்கிறேன்.(அறிக்கை படித்துக் கொண்டிருக்கும் மேடைக்குப் பின்னால் ஸ்டாலின் குரல் "Address கண்டுபிடிச்சாச்சா" - இது இப்போ

கருணாநிதியிடம் பணம் வாங்கிக் கொண்டு தம்பிதுரையைப் பற்றி அவதூறு பரப்பும் உண்மைத்தமிழன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும் - இது கனவு

"மொத்ததில நீ கொஞ்சம் சாக்கிரதையாவும் இருந்துக்கோ... சந்தோசமாவும் இருந்துக்கோ"
"ஏய் யாருப்பா கூட்டத்துல முதல்வசந்தம் வசனத்த repeat பண்றது?"
:-)]]]

ஆஹா.. ஒரு திரைக்கதையையே எழுதிக் கொடுத்திட்டீங்களே ராசா..!

இது நியாயமா..?

நிசமாவே நீங்க எனக்கு நண்பரா.. அல்லாட்டி அவங்களுக்கு நண்பரா..?

உண்மைத்தமிழன் said...

[[[அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சாமி...! குப்பு சொன்னது தப்பா சாமி!
http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_744.html]]]

தப்பே இல்லீங்கண்ணா...

அஹோரி said...

கரீட். வயசான அல்பம் கொஞ்சம் யோசிச்சா நல்ல இருக்கும்.

அபி அப்பா said...

யோவ் சூப்பரா எழுதற!!!! லைட்டா ஜாதகத்தில் மிஸ்டேக் இருக்கு! முதல் பெஞ்சீல் உட்கார தெரியுதுல்ல! வாத்தியார் கிட்ட நைசா பேசி பார்க வேண்டியதுதானே!!!!!!!

துளசி கோபால் said...

மக்கள்கிட்டே ஓட்டை 'வாங்கி' ஜெயிச்சுட்டு இப்போ சொந்த நலனுக்காக ராஜினாமா செஞ்சு இன்னொரு தண்டச் செலவை மக்கள் வரிப்பணத்துலே செய்வதை அனுமதிக்கக்கூடாது.

தேர்தலுக்கு ஆகும் மொத்த செலவையும் ராஜினாமா செஞ்சவர்தான் கொடுக்கணும்.

நாட்டாமைகளா...சட்டத்தை மாத்துங்க.

உண்மைத்தமிழன் said...

///அஹோரி said...
கரீட். வயசான அல்பம் கொஞ்சம் யோசிச்சா நல்ல இருக்கும்.///

-))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...
யோவ் சூப்பரா எழுதற!!!! லைட்டா ஜாதகத்தில் மிஸ்டேக் இருக்கு! முதல் பெஞ்சீல் உட்கார தெரியுதுல்ல! வாத்தியார்கிட்ட நைசா பேசி பார்க வேண்டியதுதானே!!!!!!!]]]

கேட்டுப் பார்த்துட்டேன்..

ஒண்ணும் பண்ண முடியாது.. வாங்கி வந்த வரம் அப்படீன்னு சொல்லிட்டாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
மக்கள்கிட்டே ஓட்டை 'வாங்கி' ஜெயிச்சுட்டு இப்போ சொந்த நலனுக்காக ராஜினாமா செஞ்சு இன்னொரு தண்டச் செலவை மக்கள் வரிப்பணத்துலே செய்வதை அனுமதிக்கக்கூடாது.
தேர்தலுக்கு ஆகும் மொத்த செலவையும் ராஜினாமா செஞ்சவர்தான் கொடுக்கணும்.
நாட்டாமைகளா... சட்டத்தை மாத்துங்க.]]]

நம்ம டீச்சரே சொல்லிட்டாங்க..

நாட்டாமை ஒழுங்கு மருவாதையா சட்டத்தை மாத்திரு..

இல்லைன்னா அடுத்ததபா எலெக்ஷன்ல டீச்சர் ஓட்டும் அவரோட வூட்டுக்காரர் ஓட்டும் உனக்கில்லை..

சொல்லிட்டேன்..

சில்க் சதிஷ் said...

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

உண்மைத்தமிழன் said...

[[[Silk Smitha said...
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு]]]

நீங்கள் பெயர் வைத்திருக்கும் தைரியமும் எனக்குப் பிடிச்சிருக்கு..!