22-12-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
ஏற்கெனவே நான் புலம்பித் தள்ளியிருக்கும் இந்தப் பதிவின் கடைசிக்கு முந்தியான 6-வது பத்தியில் எழுதியிருப்பது தற்போது மீண்டும் நடந்துள்ளது.
பிளாக்கில் எழுத வந்த முதல் நாளிலிருந்தே எனது inscript typing method-ஐ வைத்து Unicode-ல் type செய்ய முடியாமல் தவியாய் தவித்துப் போனேன்..
வேறு Typing Method-ற்கும் மாற முடியாத சூழலில் இருந்தபோது நண்பர் பொங்குதமிழ் ராவணன் அவர்கள் பெருமுயற்சி செய்து எனக்காக ஒரு யுனிகோட் கீபோர்டை செய்து கொடுத்தார். அதிலேயும் சில பிரச்சினைகள் இருக்க.. அதை சரி செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்.
அதற்குள்ளாக நமது ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி ஸாரும், நாகராஜன் ஸாரும் NHM Software-ஐ ரிலீஸ் செய்தார்கள். ஆனால் இதில் எனது inscript method இல்லாமல் இருந்தது. பின்பு நாகராஜன் அவர்களிடம் எனது நிலைமையைத் தெரிவித்து ‘அழுத’ பின்பு எனக்காக inscript method-ஐ NHM Software-ல் இணைத்துக் கொடுத்தார். மிக்க நன்றி நாகராஜன் ஸார்..
அதன் பின்னர் பிளாக்கரில் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்ய வேண்டி வந்தால் NHM Software-ஐ பயன்படுத்தி நேரடியாக அதிலேயே டைப் செய்து வந்தேன்.
ஆனால் வழக்கம்போல அதிலும் ஒரு சின்னச் சிக்கல் முளைத்தது.. ஒரு எழுத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. ஒட்டு மொத்த வார்த்தையும் தானாகவே செலக்ட் ஆகி டெலீட் ஆகிவிடுகிறது. மேலும் கூடவே அந்த எழுத்துக்கள் ஆங்கில அஞ்சல் எழுத்துக்களாக உருமாறி விடுகின்றன. இதனால் என்னால் தொடர்ந்து பிளாக்கர் டெக்ஸ்ட் இடத்திலேயே டைப் செய்ய இயவில்லை. போதாதக் குறைக்கு ஏதோ “அ” என்கிற எழுத்து டெக்ஸ்ட் ஆப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.. இந்த எழுத்தினால்தான் பிளாக்கரின் டெக்ஸ்ட் பாக்ஸில் என்னால் நேரடியாக டைப் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.
இதனை ஒழித்துக் கட்ட என்ன வழி..?
அடுத்தது எனது தளத்தை ஓப்பன் செய்தாலே சிஸ்டமே ஆடிப் போய் நின்றுவிடுவதாக பல பதிவுலக சிங்கங்கள் போன் செய்து திட்டிக் கொண்டிருந்தன. இதை முருகனிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்து வந்தேன்.(தெரிஞ்சாத்தான சொல்றதுக்கு..?)
அப்போது பார்த்து நண்பர் தமிழ்பிரியன் வடிவில் வந்த முருகப்பெருமான் அதனை அவர் வாயிலாகவே தீர்த்து வைத்தான். நன்றி தமிழ்பிரியன் ஸார்.. இப்போது அந்த “தீபா கூகிள் பேஜஸ்” என்கிற நிரலி நீக்கப்பட்டு எனது தளம் வேகமாகப் பதிவிறக்கமானது.. இதுவும் கொஞ்ச நாள்தான்..
அந்தச் சமயத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்புறம் நான் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கோபம் அவனுக்கு..
மறுபடியும் விளையாட்டு காட்டுகிறான்..
இந்த முறை கடந்த 4 நாட்களாகவே எனது தளம் முழுமையாக திறக்க மறுக்கிறது..
Get Clicky என்கிற சாப்ட்வேருக்குப் பின்பு இருப்பது எதுவுமே திறக்கப்படாமல் அப்படியேதான் முருகன் சிலைபோல் நிற்கிறது.
இடது கீழ்ப்பக்கத்தில் “transferring data from c20.stateounter.com...” என்று டிஸ்பிளே ஆவதோடு தளம் அப்படியே நிற்கிறது.. இதற்கு மேல் எந்த மாற்றமுமில்லை..
கூடவே எனது தளத்தின் வலதுபுற மேல்புறத்தில் முதல் இடத்தில் இருக்கும் 'எனது தளத்தை பின்தொடர்பவர்கள்' இடத்தில் ஒருவரின் புகைப்படம்கூட வெளியாக மறுக்கிறது.. ஆனால் எண்ணிக்கையை மட்டும் காட்டுகிறது..
முருகன் ஏன்தான் இப்படி படுத்துறானோ தெரியலை..?
நான் என்ன செய்ய வேண்டும் என்பதை விஷயம் தெரிந்த பதிவர்கள் சொன்னால் முருகனிடம் சொல்லி உங்களுக்கு ஏதாவது மேலயோ, அல்லது கீழயோ போட்டுக் கொடுக்கச் சொல்கிறேன்..
என்னால் முடிந்தது அவ்வளவுதான்..
நன்றி..
வாழ்க வளமுடன்..
|
Tweet |
33 comments:
///தமிழ்பிரியன் ஸார்../// என்னது நான் ஸாரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அண்ணே! இதுக்கு நடுரோட்ல விட்டு இரண்டு அடி அடிச்சி இருக்கலாம்.
உங்களது இந்த பதிவு எனக்கு 18 வினாடிகளில் முழுவதும் திறந்து விட்டது. பின்பற்றுபவர்களின் படங்களும் வருகின்றது. எந்த சிக்கலுமில்லை. எனது இணைய இணைப்பு 256 kbps. மேலும் பின்னால் ஒரு டவுன்லோடும் ஓடிக் கொண்டு இருந்தது. இதைவிட சிறப்பாக உங்கள் பதிவு திறக்க வாய்பில்லை.
பிராப்ளம் உங்கள் கணிணியிலோ, இணைய இணைப்பிலோ தான் இருக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு எப்ப்டி திறக்கின்றது என கேட்டுப் பாருங்கள்.
Followers Picture
Followers படங்கள் காட்டுதே?
உங்க படம், பாலோயர்கள் படம் எல்லாம் தெரியுதே! தேவையில்லாம குழப்பிக்காதீங்க. முருகனையும் அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணாதீங்க. :))
எங்கிட்ட சிம்பிளா ஒரு HTML பைல் இருக்கு. தங்க்லீஷ்ல அடிச்சா தமிழ்ல தந்திடும். அத அப்படியே பிளாக்கர் புது பதிவுல ஒரு ப்ரூ! ஒரு கோல்கேட்!(காப்பி பேஸ்ட்ட்ங்க) பண்ணிடுவேன்.
அவ்ளோ தான் மேட்டர் ஓவர்.
please remove the calender and magalir sakthi widget.
it will solve the issue.
நல்லாத்தானே ஓப்பன் ஆவுது?
உங்கள் கணினியில் எதூம் ப்ராளப்ளம் இருக்கலாம் நண்பரே.
திறப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் முகப்பில் தமிழ்மணம் பெட்டி 2 தெரிகிறது அதை 3 ஆக மாற்றினால் முருகன் சந்தோஷப்படுவாரோ என்னவோ!! :-))
தட்டினா டக்குன்னு திறக்குது, இதைப் போய்க் குறை சொல்றீங்களே... சும்மா இப்படித் தேவையில்லாம குறை சொன்னா முருகப் பெருமான் கோச்சுக்கப் போறாரு :)
use firefox instead of IE
தமிழில் தட்டச்ச இ-கலப்பையைப் பயன் படுத்திவருகிறென். இரண்டு வருடங்களாக !
ஒரு பிரச்சினையும் இல்லை!
///தமிழ் பிரியன் said...
///தமிழ்பிரியன் ஸார்../// என்னது நான் ஸாரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அண்ணே! இதுக்கு நடுரோட்ல விட்டு இரண்டு அடி அடிச்சி இருக்கலாம்.///
ஸார்.. வயதுக்கு உரிய மரியாதை கொடுப்பதற்கு இடம் உண்டு. அங்கேதான் அது சொல்லப்பட வேண்டும். அப்போதுதான் அதற்கே மரியாதை கிடைக்கும்.
தகுதிக்கும், திறமைக்கும் உரிய இடத்தில் அதற்குரிய மரியாதையை கொடுத்தே தீர வேண்டும். அதில் ஒன்றும் தவறில்லை..
//உங்களது இந்த பதிவு எனக்கு 18 வினாடிகளில் முழுவதும் திறந்து விட்டது. பின்பற்றுபவர்களின் படங்களும் வருகின்றது. எந்த சிக்கலுமில்லை. எனது இணைய இணைப்பு 256 kbps. மேலும் பின்னால் ஒரு டவுன்லோடும் ஓடிக் கொண்டு இருந்தது. இதைவிட சிறப்பாக உங்கள் பதிவு திறக்க வாய்பில்லை. பிராப்ளம் உங்கள் கணிணியிலோ, இணைய இணைப்பிலோதான் இருக்க வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுக்கு எப்ப்டி திறக்கின்றது என கேட்டுப் பாருங்கள்.//
அதான் கொட்டிருக்காங்களே ஸார்.. வருது.. வருதுன்னு.. ஆனா எனக்குத்தான் வர மாட்டேங்குதே..
//ஜெகதீசன் said...
Followers படங்கள் காட்டுதே?//
எனக்கு காட்ட மாட்டேங்குதே..?
//ambi said...
உங்க படம், பாலோயர்கள் படம் எல்லாம் தெரியுதே! தேவையில்லாம குழப்பிக்காதீங்க. முருகனையும் அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணாதீங்க.:))//
அம்பி எனக்குத் தெரியலைன்னுதானே போஸ்ட்டே போட்டிருக்கேன்.. முருகனையும் கூப்பிட்டேன்.. அப்புறம் அவனை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னா நான் யாரைக் கூப்பிடுறது..?
//எங்கிட்ட சிம்பிளா ஒரு HTML பைல் இருக்கு. தங்க்லீஷ்ல அடிச்சா தமிழ்ல தந்திடும். அத அப்படியே பிளாக்கர் புது பதிவுல ஒரு ப்ரூ! ஒரு கோல்கேட்!(காப்பி பேஸ்ட்ட்ங்க) பண்ணிடுவேன். அவ்ளோதான் மேட்டர் ஓவர்.//
கரீக்ட்டு.. அதை நான் பாலோ பண்ணணும்னா முழுசா 2 மாசமாகும். அவ்ளோ நாள் நம்மாளால பதிவு போடாம இருக்க முடியாது சாமியோவ்..
//செந்தழல் ரவி said...
please remove the calender and magalir sakthi widget. it will solve the issue.//
அடேய் கடன்காரா.. உன் பேச்சை நம்பி அது ரெண்டையும் தூக்கிட்டேன்.. மறுபடியும் பாக்குறேன்.. அதேதான்.. ஐயோ.. ஐயோ.. ஐயோ..
//மதிபாலா said...
நல்லாத்தானே ஓப்பன் ஆவுது? உங்கள் கணினியில் எதூம் ப்ராளப்ளம் இருக்கலாம் நண்பரே.//
அதான் என்னன்னு தெரியலையே நண்பரே..
//வடுவூர் குமார் said...
திறப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் முகப்பில் தமிழ்மணம் பெட்டி 2 தெரிகிறது அதை 3 ஆக மாற்றினால் முருகன் சந்தோஷப்படுவாரோ என்னவோ!!:-))//
எரியற கொள்ளில நீங்க கொஞ்சம் எண்ணெய்யை ஊத்துறீங்க.. ஊத்துங்க.. ஊத்துங்க.. ஏதோ உங்க மனசு சந்தோஷப்பட்டா சரிதான்..
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தட்டினா டக்குன்னு திறக்குது, இதைப் போய்க் குறை சொல்றீங்களே... சும்மா இப்படித் தேவையில்லாம குறை சொன்னா முருகப் பெருமான் கோச்சுக்கப் போறாரு:)//
கோச்சுக்கட்டுமே.. எனக்கென்ன..? இப்ப கோச்சுக்காம இருந்தாதான் நேர்ல வந்து பார்த்து உச்சி முகிரப் போறானாக்கும்.. படுத்துவான்.. படுத்துறான்.. இதுல ஒரு குறையும் இருக்காது..
//Anonymous said...
use firefox instead of IE//
பயர்பாக்ஸ்தான் பயன்படுத்துகிறேன். IE பயன்படுத்தவில்லை..
இதுநாள் வரையில் வந்ததே ஸார்.. இப்ப நாலைந்து நாட்களாகத்தான் வர மாட்டேன்னு சண்டித்தனம் பண்ணுது..
//SP.VR. SUBBIAH said...
தமிழில் தட்டச்ச இ-கலப்பையைப் பயன் படுத்திவருகிறென். இரண்டு வருடங்களாக! ஒரு பிரச்சினையும் இல்லை!//
இப்ப தட்டச்சு செய்றதுல பிரச்சினை இல்ல வாத்தியாரே.. பதிவு முழுசா ஓப்பன் ஆக மாட்டேங்குது.. அதுதான் மேட்டரு..
எல்லோரும் ஒரு கேள்விக்குத்தான் பதில் சொல்லியிருக்கீங்க..
இந்த முதல் கேள்விக்குப் பதில் சொல்லலையே சாமிகளா..?
//"அதன் பின்னர் பிளாக்கரில் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்ய வேண்டி வந்தால் NHM Software-ஐ பயன்படுத்தி நேரடியாக அதிலேயே டைப் செய்து வந்தேன். ஆனால் வழக்கம்போல அதிலும் ஒரு சின்னச் சிக்கல் முளைத்தது.. ஒரு எழுத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. ஒட்டு மொத்த வார்த்தையும் தானாகவே செலக்ட் ஆகி டெலீட் ஆகிவிடுகிறது. மேலும் கூடவே அந்த எழுத்துக்கள் ஆங்கில அஞ்சல் எழுத்துக்களாக உருமாறி விடுகின்றன. இதனால் என்னால் தொடர்ந்து பிளாக்கர் டெக்ஸ்ட் இடத்திலேயே டைப் செய்ய இயவில்லை. போதாதக் குறைக்கு ஏதோ “அ” என்கிற எழுத்து டெக்ஸ்ட் ஆப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.. இந்த எழுத்தினால்தான் பிளாக்கரின் டெக்ஸ்ட் பாக்ஸில் என்னால் நேரடியாக டைப் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.
இதனை ஒழித்துக் கட்ட என்ன வழி..?"//
இதுக்காச்சும் ஒரு நல்ல வழியை யாராச்சும் சொல்லுங்கப்பா..
எனக்கும் வருது.. நல்லா வருது.. சீக்கிரமா வருது...
//Cable Sankar said...
எனக்கும் வருது.. நல்லா வருது.. சீக்கிரமா வருது...//
எது..?
fire fox இல் தேவையில்லாம ஏதாவது add ins download செய்தீர்களா என்ன? Tools -> add-ons போயி அங்க இருக்குற எல்லாவற்றையும் disable செய்து முயற்சி செய்யவும். இது வைரஸ் தொல்லையாக கூட இருக்கலாம் ஏதாவது ஒரு anti virus, spybot உபயோகித்து கணியை scan செய்து பார்க்கவும். முடிந்தால் IE, chrome, safari என்று வேறு ஏதாவது ஒரு browserஜ உபயோகித்து முன்னேற்றம் தெரிகிறதா என்று பாருங்க...
அண்ணே...
எனக்கும் உங்க பக்கத்தை திறப்பதில் ஒரு பிரச்னையும் இல்லை..
எங்கயோ எதுவோ இடிக்குதே ??
கெட் கிளிக்கியினால பிரச்சனை வரும்..
அதை தூக்கிட்டு கூகில் அனாலிடிக்குல பதியுங்க...அது பெட்டர் அன்ட் ரிலையபிள்!!!!!
//சந்தோஷ் = Santhosh said...
fire fox இல் தேவையில்லாம ஏதாவது add ins download செய்தீர்களா என்ன? Tools -> add-ons போயி அங்க இருக்குற எல்லாவற்றையும் disable செய்து முயற்சி செய்யவும். இது வைரஸ் தொல்லையாக கூட இருக்கலாம் ஏதாவது ஒரு anti virus, spybot உபயோகித்து கணியை scan செய்து பார்க்கவும். முடிந்தால் IE, chrome, safari என்று வேறு ஏதாவது ஒரு browserஜ உபயோகித்து முன்னேற்றம் தெரிகிறதா என்று பாருங்க...//
சந்தோஷ் உங்களது தகவலுக்கும், உதவிக்கும் மிக்க நன்றி..
தாங்கள் சொன்னதுபோல Add ons-ல் disable செய்து பார்த்தேன்.. இப்போது சரியாக வருகிறது. ஆனால் வெகு தாமதமாகவே வருகிறது. எனது கணிணியின் வேகம் 256 Kbps. சரி.. ஏதோ இந்த அளவுக்காச்சும் வந்ததே.. சந்தோஷம் சந்தோஷ்..
மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
//உருப்புடாதது_அணிமா said...
அண்ணே. எனக்கும் உங்க பக்கத்தை திறப்பதில் ஒரு பிரச்னையும் இல்லை.
எங்கயோ எதுவோ இடிக்குதே??//
உருப்புடாதது ஸார்.. இப்போது சந்தோஷ் ஸார் புண்ணியத்தில் கிடைச்சாச்சு..
வந்தமைக்கு நன்றிங்கோ..
//அர டிக்கெட்டு! said...
கெட் கிளிக்கியினால பிரச்சனை வரும்..
அதை தூக்கிட்டு கூகில் அனாலிடிக்குல பதியுங்க... அது பெட்டர் அன்ட் ரிலையபிள்!!!!!//
இது அடுத்த பிரச்சினை அர டிக்கெட்டு.. கூகிள் அனாலிட்டிக்கில் நான் பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது தளத்தில் அது வேலை செய்ய மறுக்கிறது.. என்ன செய்யலாம்..?
மற்றபடி இந்தப் பதிவில் சொன்ன பிரச்சினை சந்தோஷ் ஸார் சொன்னது போல் செய்ததில் முடிந்து போனதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
முருகா...என்ன முருகா சோதனை..?
இப்படி புலம்ப விட்டிட்டீங்களே முருகா...
தல,
உங்களுடைய பதிவு சரியாகத்தான் லோட் ஆகிறது. அப்படி இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கவும்.
இல்லாட்டி ஒண்ணு செய்யுங்க உங்க பதிவு load ஆகும் பொழுது firefox ஓட status bar ஜ பாருங்க அதுல எதுக்கு நிறைய நேரம் எடுத்துகுதுன்னு பாருங்க. அதுல நீங்க கண்டு பிடிச்சிடலாம். சில நேரம் tamilish தளம் down ஆகிவிடும்பொழுது தளம் load ஆக ரொம்ப நேரம் எடுத்துக்க்கொள்கிறது.
ஏம்பா லப்டப்பை இந்தக் குத்து குத்துற?
//கும்க்கி said...
முருகா... என்ன முருகா சோதனை..?
இப்படி புலம்ப விட்டிட்டீங்களே முருகா...//
நான்தானே முருகா புலம்பினேன்.. முருகனுக்கு எங்கே சோதனை..? வேதனை அவன் பக்தனான எனக்குத்தான்..
//சந்தோஷ் = Santhosh said...
தல, உங்களுடைய பதிவு சரியாகத்தான் லோட் ஆகிறது. அப்படி இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வேறு எங்காவது முயற்சி செய்து பார்க்கவும்.
இல்லாட்டி ஒண்ணு செய்யுங்க உங்க பதிவு load ஆகும் பொழுது firefox ஓட status bar ஜ பாருங்க அதுல எதுக்கு நிறைய நேரம் எடுத்துகுதுன்னு பாருங்க. அதுல நீங்க கண்டு பிடிச்சிடலாம். சில நேரம் tamilish தளம் down ஆகிவிடும்பொழுது தளம் load ஆக ரொம்ப நேரம் எடுத்துக்க்கொள்கிறது.//
சந்தோஷ் ஆறுதலுக்கும், யோசனைக்கும் நன்றி.. மீண்டும் சில சமயங்களில் பதிவிறக்க மிக, மிக தாமதமாகிறது.. எனது கணினியின் வேகம் 256தான்.. ஒரு வேளை அதனால்தான் என்னவோ..?
See who owns akfiles.org or any other website:
http://whois.domaintasks.com/akfiles.org
Post a Comment