டிசம்பர் 17-சர்வதேச திரைப்பட விழா-அழைப்பிதழ்-திரைப்படங்களின் பட்டியல்

15-12-2008


என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நாளை மறுநாள் புதன்கிழமை, சென்னையில் துவங்கவிருக்கும் 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் அழைப்பிதழை இன்று கிடைக்கப் பெற்றேன்.

17-12-2008 புதன்கிழமையன்று மாலை 6.15 மணியளவில் சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தில் துவக்க விழா நடைபெறுகிறது.

மாநிலத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை செயலாளர் திரு.ஏ.சி.மோகன்தாஸ், ஐ.ஏ.எஸ். அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.பரிதி இளம்வழுதி அவர்கள் தலைமை தாங்குகிறார்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் குத்துவிளக்கேற்றி 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கி வைக்க இருக்கிறார்.

மற்றும் பல்வேறு தூதரகங்களின் துணைத் தூதர்களும், திரையுலகப் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள பதிவர்கள் உடனேயே விரைந்து சென்று பணம் செலுத்தி அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

கட்டணங்கள் பற்றிய தகவல்களை நான் ஏற்கெனவே http://truetamilans.blogspot.com/2008/11/17-26.html இந்தப் பதிவில் சொல்லியுள்ளேன். படித்துக் கொள்ளவும்.

துவக்க விழா நிகழ்ச்சி சம்பிரதாயப்படி புதன்கிழமையன்று மாலையில் நடந்தாலும், புதன்கிழமை காலையிலேயே உட்லண்ட்ஸ் தியேட்டர், உட்லண்ட்ஸ் சிம்பொனி தியேட்டர், பிலிம் சேம்பர் தியேட்டர்களில் உலகத் திரைப்படங்களின் திரையிடல்கள் துவங்குகின்றன.

முதல் திரைப்படமாக புதன்கிழமை காலை 10 மணிக்கு உட்லண்ட்ஸ் தியேட்டரில் Bad Faith என்கிற பிரெஞ்சு திரைப்படம் திரையிடப்பட உள்ளது.திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பெயர்களும், கதைச்சுருக்கமும் வெளியிடப்பட்டுள்ளது.

படவிழாவில் கலந்து கொள்ளவிருக்கும் திரைப்படங்களின் பெயர்கள், நாடுகளை இங்கே குறிப்பிடுகிறேன்.


A. அல்ஜீரியா
1. The Yellow House

B. ஆஸ்திரேலியா
2. Shalvatin

C. பங்களாதேஷ்
3. Transformation

D. பிரேஸில்
4. Alice’s House
5. The Karin

E. சீனா
6. Little Moth
7. Still Life
8. Tuya’s Marriage

F. குரோஷியா
9. Behind the Glass

G. செக் குடியரசு
10. I served the King of England

H. டென்மார்க்
11. Go with peace Jamil
12. The Art of Crying

I. எகிப்து
13. An Egyptian Story
14. The Choice
15. The Land

J. பின்லாந்து
16. Rocky VI
17. Shadows in Paradise
18. Thru The Wire
19. Ariel
20. The Match Factory Girl
21. Those Where The Days
22. Bohemian Life
23. Drifting Clouds
24. Juha
25. The Man Without A Past

K. ஜெர்மனி
26. Short Sharp Shock
27. Head On
28. Crossing The Bridge : The Sound of Istanbul
29. The Edge of Heaven
30. Cherry Blossoms
31. My Dream or Loneliness Never Walks Alone
32. 24/7 : The Passion of Life
33. The Red Spot
34. Ulzhan

L. ஹைதி
35. Le President A-T-Il-Le Sida?

M. ஹங்கேரி
36. Tranquility
37. Mario, The Magician
38. Eszter’s Inheritance
39. Milky Way
40. Delta

N. இஸ்ரேல்
41. The Bands Visit

O. இத்தாலி
42. The Orchestra of Pizza Vittorio
43. The Waltz
44. The Girl by The Lake
45. Address Unknown
46. Letter From Sahara
47. Jimmy on the Hall
48. Ossidiano
49. Grazing
50. Il Mattino Ha L’oro in Bocca
51. In the Flesh

P. மாசிடோனியா
52. I Am From Titov Veles

Q. மலேஷியா
53. Kala Malam Bulan Mengambang
54. Cinta
55. Chinese Eye

R. நெதர்லாந்து
56. Nadine

S. நார்வே
57. Gone with the Woman
58. Mirush
59. Reprise
60. Second Half

T. பாலஸ்தீனம்
61. Salt of This Sea

U. பிலிப்பைன்ஸ்
62. Ploning
63. Casket for Hire
64. The Bet Collector
65. Service

V. போலந்து
66. Katyn
67. All Will be Will
68. Bellisima
69. Double Portrait
70. Warsaw

W. ரஷ்யா
71. Shadow Boxing 2
72. The Mermaid
73. The Swing

X. செர்பியா
74. The Paper Prince
75. The Fourth Man
76. The Tour

Y. சிங்கப்பூர்
77. Singapore Dreaming
78. Dreams From The Third World

Z. ஸ்லோவானியா
79. Rooster’s Breakfast

AA. ஸ்பெயின்
80. Under The Snow
81. Wrap Up

AB. இலங்கை
82. King Siri
83. Flowers of the Sky
84. Machan

AC. தாய்லாந்து
85. Chaiya
86. First Flight
87. Chocolate
88. The Coffin
89. Wonderful Town

AD. துருக்கி
90. My Marlon And Brando
91. Three Monkeys

AE. கஜகஸ்தான்
92. Farewell Gulsary

AF. அமெரிக்கா
93. Coyote
94. Paper Clips
95. Freety To Think So
96. Women Behind The Camera
97. A Thousand Years of Good Prayers

AG. பிரான்ஸ்
98. The Class
99. Intimate Enemies
100. The Last of The Crazy People
101. La France
102. Cloud This Be love
103. The Witnesses
104. Bad Faith
105. Clod Showers

RETROSPECTIVE பிரிவு

FRANCE (Alian Resnais)
106. Guernica
107. Night And Fog
108. Hiroshima My Love
109. Last Year At Marienbad
110. Muriel
111. Stavisky
112. Same Old Song

AH. ஜப்பான்
113. Spring Dreams
114. Scent Of Incense

RETROSPECTIVE பிரிவு JAPAN (Keisuke Kinoshita)

115. Morning For The Osone Family
116. Woman
117. A Record of Youth
118. Carmen Falls in Love
119. Twenty Four Eyes

AI. தென்கொரியா
RETROSPECTIVE (Ki-Duk-Kim)
120. The Coast Guard
121. Spring, Summer, Autumn, Winter.. Spring
122. Time
123. Breath


பதிவர்கள் இத்திரைப்பட அட்டவணையில் இருக்கும் திரைப்படங்களை ஏற்கெனவே பார்த்திருந்தார்கள் என்றால், நன்றாக இருக்கும் திரைப்படங்களை சிபாரிசு செய்யலாம். என்றென்றும் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

நன்றி..

13 comments:

பிச்சைப்பாத்திரம் said...

Dear friend,

thanks for this info. keep updating...

thanks once again.

உண்மைத்தமிழன் said...

//சுரேஷ் கண்ணன் said...
Dear friend, thanks for this info. keep updating... thanks once again.//

நன்றி சுரேஷ் ஸார்.. நீங்களும் வர்றீங்கள்லே..

வந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும். எண் : 9840998725

பிச்சைப்பாத்திரம் said...

//நன்றி சுரேஷ் ஸார்.. //

அன்புள்ள உண்மைத் தமிழன்,

தயவு செய்து ஸார் என்றழைப்பதை தவிருங்கள். சுரேஷ் என்றழைத்தால் போதுமானது. :-)

//நீங்களும் வர்றீங்கள்லே.. //

வரவேண்டுமென்கிற பெருவிருப்பம் இருந்தாலும் அலுவலக பணி அழுத்தம் காரணமாக அது இயலுமா எனத் தெரியவில்லை. முக்கியமான படத்திரையிடல்களின் போது வர முயற்சிக்கிறேன். அந்தச்சமயத்தில் உங்களை தொடர்பு கொள்கிறேன். நன்றி.

உண்மைத்தமிழன் said...

///சுரேஷ் கண்ணன் said...
//நன்றி சுரேஷ் ஸார்.. //
அன்புள்ள உண்மைத் தமிழன்,
தயவு செய்து ஸார் என்றழைப்பதை தவிருங்கள். சுரேஷ் என்றழைத்தால் போதுமானது.:-)///

அழைக்கலாம்தான்.. ஆனால் எனக்கு ஏதோ வயதான மாதிரி பீலிங் வருதே..

//நீங்களும் வர்றீங்கள்லே.. //
வரவேண்டுமென்கிற பெருவிருப்பம் இருந்தாலும் அலுவலக பணி அழுத்தம் காரணமாக அது இயலுமா எனத் தெரியவில்லை. முக்கியமான படத் திரையிடல்களின்போது வர முயற்சிக்கிறேன். அந்தச் சமயத்தில் உங்களை தொடர்பு கொள்கிறேன். நன்றி.//

வருக.. வருக.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

butterfly Surya said...

எனக்கும் இன்றுதான் லிஸ்ட் வந்தது..

படங்களின் Plot தேடிக்கொண்டு இருக்கிறேன்.

விரைவில் பகிர்கிறேன்.

தகவல்களுக்கு நன்றி..

விழாவில் சந்திப்போம்..

உண்மைத்தமிழன் said...

வண்ணத்துப்பூச்சியாரே..

தங்களைச் சந்திக்க பெரும் ஆவலுடன் உள்ளேன்..

சந்திப்புக்கு மறக்க வேண்டாம்.

கதைச்சுருக்கத்தைக் கையோடு கொண்டு வாரும்..

தமிழ் மதுரம் said...

இவ் வகையில் ஈழத் தமிழ்ப் பதிவர்கள் பிராந்திய வாதிகளா?? சர்வதேச வாதிகளா?? அவர்கள் அனைவரும் தேசப் பற்றுள்ளவர்களா??? என ஆராய்ந்து பின்னூட்டம் மூலம் அவர்களைப் பின்னிப் பிடலெடுக்க ஒரு சில கயவர்கள் முயற்சிப்பது இயல்பு. இவை எல்லாம் ஒரு புறமிருக்க தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் ஏன் ஆரம்பமாகியது?? தமிழர்கள் ஏன் போராட வேண்டி வந்தது?? தமிழர்கள் அஹிம்சை வழியில் எப்போதாவது போராடியிருக்கிறார்களா?? இலங்கையின் பூர்வீகக் குடிகள் யார் முதலிய பல வினாக்களுக்கு விடைகளே தெரியாத நபர்கள், தாங்கள் தான் அஹிம்சையின் பீஷ்மர்கள், கலியுகக் காந்திகள் என்று பூச்சாண்டி காட்டுகின்ற, உண்மைத் தமிழர்கள் எனத் தம்மைத் சொல்லிக் கொள்பவர்கள் உலகினில் வாழ்வது மிகவும் வேடிக்கையான விடயம்.//

இது பற்றி மேலும் படிக்க..............

உண்மைத்தமிழன் said...

//மெல்போர்ன் கமல் said...
இவ்வகையில் ஈழத் தமிழ்ப் பதிவர்கள் பிராந்தியவாதிகளா?? சர்வதேசவாதிகளா?? அவர்கள் அனைவரும் தேசப்பற்றுள்ளவர்களா? என ஆராய்ந்து பின்னூட்டம் மூலம் அவர்களைப் பின்னிப் பிடலெடுக்க ஒரு சில கயவர்கள் முயற்சிப்பது இயல்பு. இவை எல்லாம் ஒருபுறமிருக்க தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் ஏன் ஆரம்பமாகியது? தமிழர்கள் ஏன் போராட வேண்டி வந்தது? தமிழர்கள் அஹிம்சை வழியில் எப்போதாவது போராடியிருக்கிறார்களா? இலங்கையின் பூர்வீகக் குடிகள் யார் முதலிய பல வினாக்களுக்கு விடைகளே தெரியாத நபர்கள், தாங்கள்தான் அஹிம்சையின் பீஷ்மர்கள், கலியுகக் காந்திகள் என்று பூச்சாண்டி காட்டுகின்ற, உண்மைத்தமிழர்கள் எனத் தம்மைத் சொல்லிக் கொள்பவர்கள் உலகினில் வாழ்வது மிகவும் வேடிக்கையான விடயம். இது பற்றி மேலும் படிக்க//

மிக்க சந்தோஷம் கமல்..

தாங்கள்தான் சொல்லிவிட்டீர்கள். நான் உயிருடன் இருப்பதே வேடிக்கையான விஷயம் என்று..

நானும் சாவதற்குத் தயாராகத்தான் இருக்கிறேன்.. முருகன்தான் அழைக்க மாட்டேன்கிறான்.. உங்கட பொடியன்களிடம் சொல்லி் எதையாவது செய்யச் சொல்லுங்க..

நான் எதற்கும் தயார்தான்..

நித்யன் said...

ஐயய்யோ...

இனி தொடர்ந்து 15 பக்க பதிவுகள் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து வருமே.

உங்க time Management techiniques பத்தி ஒரு பதிவு போடுங்களேன். எல்லாருக்கும் ரொம்ப usefull-ஆ இருக்கும்

அன்பு நித்யகுமாரன்

தமிழ் மதுரம் said...

மிக்க சந்தோஷம் கமல்..

தாங்கள்தான் சொல்லிவிட்டீர்கள். நான் உயிருடன் இருப்பதே வேடிக்கையான விஷயம் என்று..

நானும் சாவதற்குத் தயாராகத்தான் இருக்கிறேன்.. முருகன்தான் அழைக்க மாட்டேன்கிறான்.. உங்கட பொடியன்களிடம் சொல்லி் எதையாவது செய்யச் சொல்லுங்க..

நான் எதற்கும் தயார்தான்//

ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை எவர்க் கையிலும் இல்லை. உங்களைக் கொல்பதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல இது. உங்களைப் போன்றவர்களுக்கு அஹிம்சையைப் புரிய வைப்பதற்காக எழுதப்பட்ட பதிவு//

உங்களைச் சாகடிகும் நோக்கில் எழுதப்பட்ட பதிவு அல்ல இது. இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. உங்களுக்கு ஈழத் தமிழர் போராட்டம் பற்றியோ, அஹிம்சை பற்றியோ சரியான விளக்கம் இல்லை. இந்த வசனத்தின் சரியான அர்த்தத்தையே விளங்கிக் கொள்ளாத நீங்கள் எப்படி இடம் பெயர்ந்து அவலப்படும் தமிழ் மக்களின் நிலமை பற்றியோ, தமிழர்களின் போராட்ட தார்மீகத் தன்மை பற்றியோ புரிந்து கொள்ளப் போகிறீர்கள்???

உண்மைத்தமிழன் said...

//மெல்போர்ன் கமல் said...
ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை எவர்க் கையிலும் இல்லை. உங்களைக் கொல்பதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல இது. உங்களைப் போன்றவர்களுக்கு அஹிம்சையைப் புரிய வைப்பதற்காக எழுதப்பட்ட பதிவு//

"உண்மைத்தமிழர்கள் எனத் தம்மைத் சொல்லிக் கொள்பவர்கள் உலகினில் வாழ்வது மிகவும் வேடிக்கையான விடயம்..."

மேலே கூறியவற்றின் மூலம் அஹிம்சையை எப்படி எங்களுக்குப் புரிய வைக்கிறீர்கள் என்பதனை சற்று விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்கிறேன் நண்பரே))))))))))))))

//இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. உங்களுக்கு ஈழத் தமிழர் போராட்டம் பற்றியோ, அஹிம்சை பற்றியோ சரியான விளக்கம் இல்லை. இந்த வசனத்தின் சரியான அர்த்தத்தையே விளங்கிக் கொள்ளாத நீங்கள் எப்படி இடம் பெயர்ந்து அவலப்படும் தமிழ் மக்களின் நிலமை பற்றியோ, தமிழர்களின் போராட்ட தார்மீகத் தன்மை பற்றியோ புரிந்து கொள்ளப் போகிறீர்கள்???///

ஐயோ.. ஐயோ... பெரிய, பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம் தோழரே.. எங்களைப் புரிந்து கொள்ளாத முட்டாள்கள் என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போங்கள்.. எனக்கும் நேரம் மிச்சமாகும். உங்களுக்கும் நேரம் மிச்சமாகும்..

உண்மைத்தமிழன் said...

//நித்யகுமாரன் said...
ஐயய்யோ... இனி தொடர்ந்து 15 பக்க பதிவுகள் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து வருமே.//

பின்ன.. நேத்து மதியானம் பார்த்த ஹங்கேரி படத்தைப் பத்திதான் முதல் பதிவு.. 10 பக்கம் இருக்கும். போதுமா..?

//உங்க time Management techiniques பத்தி ஒரு பதிவு போடுங்களேன். எல்லாருக்கும் ரொம்ப usefull-ஆ இருக்கும்.
அன்பு நித்யகுமாரன்//

என்னுடைய நேரக் கட்டுப்பாட்டில் 24 மணி நேரம் போதவில்லை என்பதுதான் உண்மை.. நிறைய இருந்து வேஸ்ட்டானால்தான் சொல்ல வேண்டும். பற்றாக்குறை எனில் யாரிடம் போய் சொல்வது..?

abeer ahmed said...

See who owns bluehostforum.com or any other website:
http://whois.domaintasks.com/bluehostforum.com