தர்மசங்கடம் என்பது இதுதானோ..?

10-1௨-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

'தர்மசங்கடம்' என்கிற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை, சில வேளைகளில் மட்டுமே நமது வாழ்க்கையில் உணர்ந்திருப்போம்.

அப்படியொரு உணர்வை ஏற்படுத்தியது இந்தப் புகைப்படங்கள்.

நீங்களே பாருங்கள்.











சமீபத்தில் கேரளாவின் கொச்சி கடற்கரையில் எரிக்ஸன் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலருக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாம். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகாரிகளை வரவேற்ற எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் திருமதி பீனாவிற்குத்தான் வெளிநாட்டினரின் இந்த மரியாதை..

பாவம் கலெக்டரம்மா..

முடியாது என்று தடுக்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. அவருடைய தவிப்பு, புகைப்படத்திலேயே தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.

தர்மசங்கடம் என்பது இதுதானோ..?

29 comments:

Vinitha said...

True.

கிரி said...

இது கேரளாவில் சர்ச்சையை கிளப்பியது ..என்ன ஆச்சுன்னு தெரியல

நல்ல வேளை அந்த ஆளு ஆர்வக்கோளாருல வேற ஏதும் பண்ணாமே இருந்தாரே :-)

உண்மைத்தமிழன் said...

//Vinitha said...
True.//

நன்றி வினிதா..

தங்களுடைய பெண்களுக்கான வலைத்தளங்களின் தொகுப்பு சிறப்பாக உள்ளது.

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//கிரி said...
இது கேரளாவில் சர்ச்சையை கிளப்பியது.. என்ன ஆச்சுன்னு தெரியல? நல்ல வேளை அந்த ஆளு ஆர்வக்கோளாருல வேற ஏதும் பண்ணாமே இருந்தாரே:-)//

இதையேதான் நானும் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க..

நன்றி கிரி..

benza said...

கேரளா வோ, தமிழ் நாடு வாகத்தான் இருக்கட்டுமே...

. . . ஓர் பெண், ஓர் உயர் அலுவலர், தெரியாமல் ஓர் இக்கட்டான நிலையில் உள்ளார், அதை அவசர புத்தியில் படம் பிடித்தாயிற்று ...

அதே படத்தை ஆற அமர பார்த்து ரசித்த பின்னர் அதனை உரிய இடத்தில் வைத்தோ, போட்டோ, எறிந்திருக்கலாம் ...

அப்படியில்லாது, அதைப் பிரசுரித்து, அதுக்கு ஆளுக்காள் கொமென்ற் அடித்து, ஆகாகா ஓகோகோ என்னும் என் ஆண் வக்கிர வர்க்கத்தை என்னென்று சொல்வது...

விவேக் சொன்னது போல 200 காந்தி வந்தாலும் ...

ஜெர்மனி அதிபர் அன்ஜலா மேர்கல் பதவியேற்ற புதிதில் கணவருடன் லண்டன் சென்ற சம்யம், அவர்
உடுப்பு மாற்றும் படத்தை பிரசுரித்த ஆசிரியருக்கு கண்டன கடிதங்களே அதிகமாகக் கிடைத்ததாம் ...

இந்த லண்டன் சம்பவம் எங்கள் அனைவருக்கும் தெரியும் ... ஓர் மதிப்பிற்கென சொன்னேன் ...

அது வெளி நாடு தானே, நமூர் இல்லையேடா என்பதும் கேட்கின்றது . . .

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
கேரளாவோ, தமிழ்நாடுவாகத்தான் இருக்கட்டுமே. ஓர் பெண், ஓர் உயர் அலுவலர், தெரியாமல் ஓர் இக்கட்டான நிலையில் உள்ளார், அதை அவசர புத்தியில் படம் பிடித்தாயிற்று. அதே படத்தை ஆற அமர பார்த்து ரசித்த பின்னர் அதனை உரிய இடத்தில் வைத்தோ, போட்டோ, எறிந்திருக்கலாம்.
அப்படியில்லாது, அதைப் பிரசுரித்து, அதுக்கு ஆளுக்காள் கொமென்ற் அடித்து, ஆகாகா ஓகோகோ என்னும் என் ஆண் வக்கிர வர்க்கத்தை என்னென்று சொல்வது. விவேக் சொன்னது போல 200 காந்தி வந்தாலும்.//

பென்ஸ்

இப்படி வந்து காலை வாரீட்டீங்களே.. இது அந்த கலெக்டர் பெண்மணியின் பெருமையை நிச்சயம் எந்தவிதத்திலும் குறைக்காது.. ஆபாசமான, அவதூறை ஏற்படுத்தும் புகைப்படங்களும் அல்ல.. நானும் பலவாறு யோசித்துப் பார்த்துதான் பதவிட்டேன்.

//ஜெர்மனி அதிபர் அன்ஜலா மேர்கல் பதவியேற்ற புதிதில் கணவருடன் லண்டன் சென்ற சம்யம், அவர்
உடுப்பு மாற்றும் படத்தை பிரசுரித்த ஆசிரியருக்கு கண்டன கடிதங்களே அதிகமாகக் கிடைத்ததாம்.//

நிச்சயம் அது போ்ன்று புகைப்படங்கள் கிடைத்தால் பார்ப்பனே தவிர பதிவேற்ற மாட்டேன். பயப்பட வேண்டாம்..

//இந்த லண்டன் சம்பவம் எங்கள் அனைவருக்கும் தெரியும். ஓர் மதிப்பிற்கென சொன்னேன். அது வெளிநாடுதானே, நமூர் இல்லையேடா என்பதும் கேட்கின்றது.//

அப்படியல்ல.. தைரியமாகவே உங்களது கருத்துக்களை பொதுவில் வைக்கலாம்.. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை..

வாழ்க வளமுடன்

Anonymous said...

நீங்கள் எனக்கு தெரிந்து சுருக்கமாக எழுதிய பதிவு.. வாழ்த்துக்கள்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
நீங்கள் எனக்கு தெரிந்து சுருக்கமாக எழுதிய பதிவு.. வாழ்த்துக்கள்..//

அன்பு அனானியாரே..

தாங்கள் யார் என்று தெரியாததால் நான் யாரென்று நினைத்து பதில் சொல்வது..?

நீங்களே சொல்லுங்கள்..

ஆட்காட்டி said...

விளம்பரமா?

உண்மைத்தமிழன் said...

//ஆட்காட்டி said...
விளம்பரமா?//

யாருக்கு..?

Anonymous said...

This is not a kiss.. it is simply a peck.. it is a custom in west to greet women with a peck in the cheek.

ரவி said...

அண்ணே

உங்களது இந்த பதிவு விரைவாக லோட் ஆகிவிட்டது...

என்னுடைய இணைய இணைப்பு இப்போது தான் சரியாக வேலை செய்கிறது போலும் :))

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
This is not a kiss.. it is simply a peck.. it is a custom in west to greet women with a peck in the cheek.//

உண்மைதான்.. இது முத்தம் இல்லைதான். அன்போடு கட்டிப் பிடித்தல்தான்.. ஆனா அதுவே மொதல்ல நமக்குப் பிடிக்கணுமே..?

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...
அண்ணே உங்களது இந்த பதிவு விரைவாக லோட் ஆகிவிட்டது...
என்னுடைய இணைய இணைப்பு இப்போது தான் சரியாக வேலை செய்கிறது போலும்:))//

எல்லாம் நண்பர் தமிழ்பிரியன் அவர்களின் கருணை.

எனக்காக அவரே சில மணி நேரங்களை செலவழித்து widget-ல் மாற்றங்களை செய்து அனுப்பி வைத்தார். அதனை நான் லோடு செய்த பின்புதான் அந்த வாலாட்டுவது நின்று போனது.

நன்றியை தமிழ்பிரியன் அவர்களுக்கு தெரிவித்துவிடு..

benza said...

இப்படி வந்து காலை வாரீட்டீங்களே.. இது அந்த கலெக்டர் பெண்மணியின் பெருமையை நிச்சயம் எந்தவிதத்திலும் குறைக்காது.. ஆபாசமான, அவதூறை ஏற்படுத்தும் புகைப்படங்களும் அல்ல.. நானும் பலவாறு யோசித்துப் பார்த்துதான் பதவிட்டேன்

எனக்கு இன்னமும் சொற்ப டவுட் இருக்கு என்னுடைய ஈமெயில் ஒழுங்கில்

உங்களுடைய இந்த பதிவை சற்று முன்னர் தான் கண்டுகொண்டேன்

//இது அந்த கலெக்டர் பெண்மணியின் பெருமையை நிச்சயம் எந்தவிதத்திலும் குறைக்காது\\

நீங்கள் உறுதி கூறினால் ஏற்றுகொள்ளதான் மனம் இசைகின்றது

ஏதோ, எனது வயதும் பெண்சார்பு சிந்தனையும் அந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்
படியாயிற்று

இருந்தும் பதிவைப்பதித்த பின்னர் பல மணி நேரமாக மனதில் நெருடல் இருந்தது தான்

பதில் பதிவை இப்பொது கண்டு மனம் ஆறியது

அது சரி நீங்கள் இப்படி சொன்னால் எப்படி

//இப்படி வந்து காலை வாரீட்டீங்களே\\

இந்த கிழவன் அப்டீ நம்பிக்கைக்கு பாத்திரமானவனா

சத்தியமா தெரியாது சாமி

நன்றி

Anonymous said...

முட்டாபயலே இதுவரைக்கும் எந்த பொண்ணியாவது கிஸ் அடிச்சிருக்கியாடா. அடிச்சிருந்தா அது சங்கடமா சந்தோஷமான்னு புரியும்.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
இப்படி வந்து காலை வாரீட்டீங்களே.. இது அந்த கலெக்டர் பெண்மணியின் பெருமையை நிச்சயம் எந்தவிதத்திலும் குறைக்காது.. ஆபாசமான, அவதூறை ஏற்படுத்தும் புகைப்படங்களும் அல்ல.. நானும் பலவாறு யோசித்துப் பார்த்துதான் பதவிட்டேன்.//
எனக்கு இன்னமும் சொற்ப டவுட் இருக்கு. என்னுடைய ஈமெயில் ஒழுங்கில் உங்களுடைய இந்த பதிவை சற்று முன்னர்தான் கண்டுகொண்டேன்.
//இது அந்த கலெக்டர் பெண்மணியின் பெருமையை நிச்சயம் எந்தவிதத்திலும் குறைக்காது\\
நீங்கள் உறுதி கூறினால் ஏற்று கொள்ளதான் மனம் இசைகின்றது.
ஏதோ, எனது வயதும் பெண்சார்பு சிந்தனையும் அந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்படியாயிற்று.
இருந்தும் பதிவைப் பதித்த பின்னர் பல மணி நேரமாக மனதில் நெருடல் இருந்ததுதான். பதில் பதிவை இப்பொது கண்டு மனம் ஆறியது.
அது சரி நீங்கள் இப்படி சொன்னால் எப்படி
//இப்படி வந்து காலை வாரீட்டீங்களே\\
இந்த கிழவன் அப்டீ நம்பிக்கைக்கு பாத்திரமானவனா. சத்தியமா தெரியாது சாமி..
நன்றி///

ஐயா நீங்கள் என் அன்பிற்குப் பாத்திரமானவர். எப்போது வேண்டுமானாலும் தாங்கள் உரிமையோடு என்னை கண்டிக்கலாம்.. தங்களுக்கு முழு உரிமையுண்டு. அதே உரிமையில்தான் நானும் எழுதினேன். அவ்வளவே..

பின்குறிப்பு.. நானும் அரைக்கிழவன்தான்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
முட்டாபயலே இதுவரைக்கும் எந்த பொண்ணியாவது கிஸ் அடிச்சிருக்கியாடா. அடிச்சிருந்தா அது சங்கடமா சந்தோஷமான்னு புரியும்.//

புரியாதுதான் அனானியாரே..

அடுத்து வந்திருக்கும் இரண்டு கமெண்ட்டுகளையும் தாங்கள்தான் படைத்துள்ளீர்களே..

ரொம்ப நாளாகிவிட்டது.. அது போன்ற ரசம் சொட்டும் கமெண்ட்டுகள் வந்து..

ஏது புதுப் பணியில் சேர்ந்துவிட்டீர்கள் போலிருக்கிறது..

சந்திப்போம்..

benza said...

நன்றி அறிவோனே >>>
கொஞ்சம் நல்ல சொற்கள் வாயில் வராதோ தமிழ் நாட்டு தமிழனுக்கு ? >>>
உமது அம்மாவும் சகோதரிகளும் பெண்கள் தாம்>>>
பெண்களை மதிக்க கொஞ்சம் பண்பு வேணும் >>>
அது உங்களிடம் இல்லைபோலும் >>>

benza said...

Change in name

benza said...

Please ''UnmaiThamilan'', the Anon
poster is useful in many ways ...
to differentiate between polite mannered and his minions;
a negative abrasive character almost always induces positive thoughts in offence, to negate or annihilate such scum from society;
yet, thank the Lord and providence
we escaped his mould in creation.
Thank you very much indeed!

benza said...

''Follow-up comments will be sent to benza18@hotmail.com''

Wish to change this email address to benzaloy@gmail

Please advise me how........thanks.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
நன்றி அறிவோனே>>>
கொஞ்சம் நல்ல சொற்கள் வாயில் வராதோ தமிழ் நாட்டு தமிழனுக்கு?>>>
உமது அம்மாவும் சகோதரிகளும் பெண்கள்தாம்>>> பெண்களை மதிக்க கொஞ்சம் பண்பு வேணும்>>>
அது உங்களிடம் இல்லைபோலும்>>>//

பென்ஸ் ஸார்.. இவர்களுக்கு அறிவுரையெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. விட்டுவிடுங்கள்.

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
Change in name//

எந்தப் பெயரை மாற்றச் சொல்கிறீர்கள்..?

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
Please ''UnmaiThamilan'', the Anon
poster is useful in many ways ...
to differentiate between polite mannered and his minions;
a negative abrasive character almost always induces positive thoughts in offence, to negate or annihilate such scum from society;
yet, thank the Lord and providence
we escaped his mould in creation.
Thank you very much indeed!//

புரியவே இல்லை ஸார்.. மன்னிக்கவும்..

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
''Follow-up comments will be sent to benza18@hotmail.com'' Wish to change this email address to benzaloy@gmail
Please advise me how. thanks.//

உங்க பிளாக்கர்ல யூஸர் நேம், பார்வேர்டு கொடுத்து உள்ள போங்க.

செட்டிங்ஸ் பக்கத்தை கிளிக் பண்ணுங்க..

அதுல கமெண்ட்ஸ்ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க..

அதுக்குள்ள comments moderation அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதுல மெயில் அட்ரஸுக்கு ஒரு பாக்ஸ் இருக்கும். அதுல உங்க மெயிலை டைப் பண்ணுங்க..

மறக்காம save பண்ணி close பண்ணுங்க..

இனிமே எல்லா கமெண்ட்ஸும் உங்க இமெயிலுக்கு தானா வந்திரும்..

benza said...

thank you very much indeed
just now effected change
saved too
it has to work next time i log in
thanks

உண்மைத்தமிழன் said...

//benzaloy said...
thank you very much indeed just now effected change saved too it has to work next time i log in thanks.//

Thanks and welcome in anytime benz..

abeer ahmed said...

See who owns bukisa.com or any other website:
http://whois.domaintasks.com/bukisa.com