எனது கனவு இதுவேயாகும்!!!


இது நமது நாடு என ஏழை எளியோர்களை உணர வைக்க,

இந்திய மக்களில் உயர்ந்த ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்று எவருமில்லை.

இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் கடுமையாக பாடுபடுபவர்களைக் கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்குவதற்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

தீண்டாமை கொடுமை அல்லது மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளும் தீமைகள் இல்லாத ஒரு இந்தியா.

ஆண்களைப் போல பெண்களும் சம உரிமைகளை அனுபவித்தல்..

உலகின் பிற அனைத்துப் பகுதியிலும் அமைதி நிலவ நாம் பாடுபடுவது.

இந்தியாவைப் பற்றிய எனது கனவு இதுவே ஆகும்.

கனவு கண்டவர்

திரு.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

9 comments:

துளசி கோபால் said...

பகல் கனவு பலிக்காதாமே.......

Subbiah Veerappan said...

அவர் உண்மையான மனிதர்
அவர் உண்மையாகவே பாடுபட்டவர்
உண்மைக்காகப் பாடுபட்டவர்
அவர் கண்ட கனவு ஒரு நாள் மெய்ப்படும்
என்ன- தாமதாக மெய்ப்படும்
உண்மை - ஒரு நாளும் தோற்றதில்லை
உண்மையென்பதுதான் கடவுளின் முதல் சித்தம்!
மேலாக, உண்மையைக் கடவுள் என்றும் கொள்ளலாம்!

வடுவூர் குமார் said...

காந்திஜெயந்தி அதுவுமா அவர் கனவை போட்டுடீங்க..
60 வருடம் ஓடிவிட்டதே என்று பயமாக இருக்கு.

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
பகல் கனவு பலிக்காதாமே.......//

டீச்சர் நீங்களுமா..? அது பகலோ, இரவோ.. நியாயமான கனவுதானே..? கனவை நனவாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும்..

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
அவர் உண்மையான மனிதர்
அவர் உண்மையாகவே பாடுபட்டவர்
உண்மைக்காகப் பாடுபட்டவர்
அவர் கண்ட கனவு ஒரு நாள் மெய்ப்படும்
என்ன- தாமதாக மெய்ப்படும்
உண்மை - ஒரு நாளும் தோற்றதில்லை
உண்மையென்பதுதான் கடவுளின் முதல் சித்தம்!
மேலாக, உண்மையைக் கடவுள் என்றும் கொள்ளலாம்!//

மறுக்க முடியாத உண்மை வாத்யாரே.. உண்மை ஒரு போதும் தோற்காது.. உண்மைக்கு ஒரு போதும் அழிவில்லை.. அண்ணலின் கனவு நினைவேற ஒவ்வொரு குடிமகனும் நினைத்தாலே போதும்.. செயல்படுத்த காலங்கள் ஆகாது..

நன்றி வாத்யாரே..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
காந்திஜெயந்தி அதுவுமா அவர் கனவை போட்டுடீங்க.. 60 வருடம் ஓடிவிட்டதே என்று பயமாக இருக்கு.//

இன்னிக்கு ஒரு நாளாச்சும் அவரைப் பத்தி நினைங்கப்பா..

60 வருடங்கள் ஓடியது இஇநாம் அனைவரும் இந்தியர்கள் என்ற நினைவாலும், உறவாலும்தான்.. இதன் மூல காரணம் நம்முடைய போராட்ட ஆயுதமான அஹிம்சைதான்.. இதுதான் சகிப்புத்தன்மையை நம்மிடையே உருவாக்கி சொந்த பந்தங்களாக இந்தியத் திருநாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது.

Radha Sriram said...

காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்.....உண்மை தமிழன்

//உண்மை - ஒரு நாளும் தோற்றதில்லை
உண்மையென்பதுதான் கடவுளின் முதல் சித்தம்!
மேலாக, உண்மையைக் கடவுள் என்றும் கொள்ளலாம்!//

எவ்வளவு அழகாக சொல்லிவிட்டார் சுப்பைய்யா சார்!
ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்!!!

உண்மைத்தமிழன் said...

///Radha Sriram said...
காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்.....உண்மை தமிழன்
//உண்மை - ஒரு நாளும் தோற்றதில்லை
உண்மையென்பதுதான் கடவுளின் முதல் சித்தம்!
மேலாக, உண்மையைக் கடவுள் என்றும் கொள்ளலாம்!//
எவ்வளவு அழகாக சொல்லிவிட்டார் சுப்பைய்யா சார்!
ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்!!!///

நன்றி.. நன்றி.. சுப்பையா ஸார் சொல்பவைகள், சொன்னவைகள் அனைத்துமே அவருடைய அனுபவத்திலிருந்துதான்.. அனுபவப்பட்டால் அனைத்து 'உண்மை'களையும் உணர முடியும்..

abeer ahmed said...

See who owns asia.ru or any other website:
http://whois.domaintasks.com/asia.ru