எல்லோரும் ஜோரா கை தட்டுங்க-பாகம்-4

04-07-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் நான்காம் பாகம் இது..

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

ஒரு கொலை, அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை!

பிரதிபா முகத்திரையை விலக்கினால்-4


மகளிருக்கு அதிகாரம் வழங்குவதற்காக ஜலகாமில் தொடங்கப்பட்ட கூட்டுறவு வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி மூடப்பட்டது.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரூ.20 கோடியை விழுங்கி ஏப்பம் விட்டதால், சர்க்கரை ஆலை நலிவடைந்து மூடப்பட்டது.

அடுத்த குடியரசுத் தலைவராக வரவிருக்கும் பிரதிபா பாட்டீல் தனது தங்கக் கரங்களில் தொட்டது எல்லாவற்றுக்கும் இதே கதிதான்.

அடுத்து நாம் காணவிருப்பது நாட்டு நலனில், அக்கறை கொண்டு அவர் தொடங்கிய 'ஷ்ரம் சாதனா டிரஸ்ட்' என்பதைப் பற்றியது. இது எதற்காக என்கிறீர்களா? கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா? அதற்காகத்தான்..

இதன் சிறப்புகள் என்னவென்று பார்ப்போம்.

மாணவர்கள் நலனுக்காக ஒரு மருத்துவக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் போடப்பட்ட தொகை ஒரு டாக்டருக்குச் சென்றது. இதுவரையில் சரி.. அந்த டாக்டர் யார் தெரியுமா? பிரதிபாவின் சகோதரர் ஜி.என்.பாட்டீல்தான். அந்தக் கணக்கை பிரதிபாவே கையாண்டிருக்கிறார்.

அந்தப் பொறியியல் கல்லூரியின் ஊழியர்கள், அறக்கட்டளையின் இயக்குநர்களுடைய வீடுகளில் வேலை செய்தனர். ஒருவர் மும்பையில் பிரதிபாவின் வீட்டில் வேலை செய்தார்.

கல்லூரிக்காக ஒரு விருந்தினர் இல்லம் கட்டப்பட்டது. பல்கலைக்கழக பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்து தங்குவதற்காக அல்ல. பிரதிபா பாட்டீலின் உறவினர்கள் வந்தால் தங்கி ஓய்வெடுப்பதற்காகத்தான்.

மாணவர்களிடமிருந்து வசூலித்த பணம் விரைவிலேயே மூழ்கப் போகும் சர்க்கரை ஆலைக்குப் போனது.

ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடிக்கப்பட்டத் தொகை மூடப்படவிருக்கும் கூட்டுறவு வங்கியில் டெபாசிட்டாகப் போடப்பட்டது. இந்த டெபாஸிட்டுகளைக் கொண்டு பங்கு முதலீட்டாளர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் பிரதிபா குடும்பத்தினரே திரும்பத் திரும்ப நிர்வாகிகளாக இயக்குநர்கள் தேர்தலில் வெற்றி பெற உதவியாகச் செயல்பட்டனர். ஒன்றை வைத்து ஒன்று.. ஒன்றிலிருந்து மற்றொன்று. அற்புதமான 'சிருஷ்டி ரகசியம்' பிரதிபா குடும்பத்தாருடையது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி எனது கட்டுரைகளால் நிலைகுலைந்து போயிருக்கிறார். "பிரதிபாவின் புகழைக் கெடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக்" குற்றம் சாட்டியிருக்கிறார். "எல்லா அரசியல்வாதிகளுக்குமே உறவினர்களால் இப்படி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.." என்று உதாரணங்களையும் அடுக்கியிருக்கிறார். "தொலைக்காட்சி நிறுவனங்கள் மட்டும் யோக்கியமா..?" என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமா? "எல்லோர் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்றுதானே கேட்கிறோம். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் விட்டுவைக்காதீர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தானே.."

இப்போது ஒரு கொலை தொடர்பான சில பெயர்களையும் தேதிகளையும் பார்ப்போம்.

விஷ்ராம் ஜி.பாட்டீல்

வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜலகாம் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர். 30 ஆண்டுகளாக காங்கிரஸ்காரர். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஒரு முறை அல்ல.. மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005 செப்டம்பர் 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

ரஜினி பாட்டீல்

அதே கல்லூரியில் மராட்டி மொழி பேராசிரியராகப் பணி புரிகிறார். விஷ்ராம் பாட்டீலின் மனைவி. ஜி.என்.பாட்டீல், உல்லாஸ் பாட்டீல் ஆகியோர்தான் தனது கணவர் கொலையில் சதிகாரர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

ஜி.என்.பாட்டீல்

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரதிபா பாட்டீலின் அண்ணன். விஷ்ராம் பாட்டீலை எதிர்த்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றவர்.

உல்லாஸ் பாட்டீல்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஜி.என்.பாட்டீலின் நெருங்கிய சகா. விஷ்ராம் பாட்டீலை போட்டியாளராகக் கருதுகிறவர். சுற்று வட்டாரத்தில் 'நன்கு பிரபலமான' பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ராஜு மாலி, ராஜு சோனேவானே

விஷ்ராம் பாட்டீல் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள். "உண்மையான சதிகாரர்கள் வேறு நபர்கள்.." என்று ஆஜ்தக் தொலைக்காட்சி நிருபரிடம் கேமராவுக்கு முன்னால் சாட்சியம் கூறியவர்கள். "அவர்கள் யார்..?" என்று கேட்டபோது, "ரஜினி யாரைக் குற்றம் சாட்டுகிறாரோ, அவர்கள்தான்.." என்கின்றனர்.

பிறகு 2007, ஏப்ரல் 7-ல் போலீஸ் 'காவலில்' ராஜூமாலி இறந்து விடுகிறார். 2007 ஏப்ரல் 4-ல் ஜலகாமுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக அவர்கள் வந்தது இதுவே முதல் முறை. ஏப்ரல் 7-ம் தேதி ரஜனியிடம் விசாரிக்கின்றனர்.

லீலாதர் நர்கடே, தாமோதர் லோகாண்டோ

விஷ்ராம் பாட்டீல் கொலைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறவர்கள். கொலைக்கு முதல் நாள், கொலை நடந்த நாள், கொலைக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் இவர்களும் ஜி.என்.பாட்டீலும் தொலைபேசியில் பேசியதாக பதிவாகியிருக்கிறது. இருவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய முதல் தகவல் அறிக்கை(FIR) திரும்பப் பெறப்படுகிறது.

மோதல் ஏன்?

மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஜி.என்.பாட்டீல் இருந்தபோது, சுனாமி நிவாரணமாக பொதுமக்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டது. அந்தப் பணம் கட்சியிடமும் தரப்படவில்லை. மக்களுக்கும் சென்று சேரவில்லை.

ராஜஸ்தான் ஆளுநராக பிரதிபா பாட்டீல் நியமிக்கப்பட்டதும் அவருக்குப் பாராட்ட விழா நடத்த கட்சித் தொண்டர்கள் மீண்டும் நிதி திரட்டினர். இந்தப் பணமும் எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்குமாறு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரபாராவுக்கு கட்சித் தொண்டர்கள் புகார் மனுக்களை அனுப்பினர். இந்தத் தொகைகள் குறித்து விசாரிக்குமாறு கோரினர்.

2005 ஆகஸ்ட் 15

மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 9 பேர் பத்திரிகைகளுக்கு அறிக்கை தருகின்றனர். ஜி.என்.பாட்டீல் திரட்டிய நிதிக்கு கணக்கும் இல்லை. அது கட்சிக்கும் தரப்படவில்லை என்கின்றனர்.

இந்நிலையில் கட்சியின் மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷ்ராம் பாட்டீல் இந்த நிதி முறைகேடுகள் குறித்தும், உல்லாஸ் பட்டீலின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் விசாரணையைத் தொடங்குகிறார். இந்த இருவரின் முறைகேடுகள் குறித்து கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார்.

அப்போது அவருக்கு 3 மொட்டைக் கடிதங்கள் வருகின்றன. விஷ்ராமைக் கொல்ல சுபாரி(கூலிப்படை) ஏவப்பட்டிருப்பதாகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் அவை எச்சரிக்கின்றன. ஆனால் விஷ்ராம் பாட்டீல் அதை லட்சியம் செய்யாமல் விசாரணையைத் தொடர்கிறார். பிறகு கொல்லப்படுகிறார். உடனே உள்ளூர் பத்திரிகைகளில் இந்தக் கொலைச் செய்தி குறித்து பக்கம் பக்கமாக அலசப்படுகின்றது. "மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் உள்ள கோஷ்டிப் பூசலே இதற்குக் காரணம்.." என்று எழுதப்படுகிறது.

திடீர் திருப்பம்

பிறகு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். "90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது. விரைவிலேயே சதிகாரர்களைப் பிடித்துவிடுவோம்" என்று ரஜினியிடமே போலீஸார் தெரிவிக்கின்றனர். திடீரென்று இதில் திருப்பம் நேரிடுகிறது. விஷ்ராம் பாட்டீலிடம் ராஜு மாலி ரூ.4.5 லட்சம் வாங்கியதாகவும், அதை விஷ்ராம் திருப்பிக் கேட்டதால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ரஜினி பாட்டீல் வன்மையாக மறுக்கிறார். பத்திரிகைகளும் இதில் உள்ள முரண்களைச் சுட்டிக் காட்டுகின்றன. உடனே வழக்கு விசாரணை ஜலகாம் போலீஸிடமிருந்து மாநில சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

2005 செப்டம்பர் 27

விசாரணை போகும் திசையைப் பார்த்து அதிர்ச்சியடையும் ரஜினி பாட்டீல் காங்கிஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதுகிறார். "எனது கணவரின் கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள், போலீஸ் விசாரணையை நடத்தவிடாமல் நெருக்குதல் தருகின்றனர்.." என்று தெரிவிக்கிறார்.

'தேசத்தூது', 'தேசநாடி' ஆகிய உள்ளூர் பத்திரிகைகளும் இந்தக் கொலை பற்றி விசாரித்து ஜி.என்.பாட்டீல் மீது சந்தேகம் தெரிவித்து சில புகைப்பட ஆதாரங்களுடன் எழுதின. பிறகு ரஜினி பாட்டீலும் பல்வேறு ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் ஆகியோருக்குக் கடிதங்கள் எழுதினார். ஆனால் எதற்கும் பலனில்லை.

கட்சிக்காரர் கொலை செய்யப்படுகிறார். அதில் சம்பந்தப்பட்டுள்ளவர் யார் என்று தெரிய வருகிறது. அந்த ஆதாரங்களைத் தீர விசாரித்து குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய போலீஸார் தயக்கம் காட்டி, வழக்கை மந்த கதியில் நடத்தி திசை திருப்புகின்றனர். இத்தோடு முடியவில்லை.

(இறுதிப் பகுதி விரைவில்)

32 comments:

துளசி கோபால் said...

படிக்கப் படிக்க தலை சுத்துது(-:

பிரிக்கவே முடியாதது, ஊழலும் அரசியலும்தானா?

Anonymous said...

இந்தியாவின் துர் அதிர்ஷ்டம் இந்த மாதிரி கொலைகார குடும்பத்திடம் ஜனாதிபதி பதவியை தருவது...

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
படிக்கப் படிக்க தலை சுத்துது(-:
பிரிக்கவே முடியாதது, ஊழலும் அரசியலும்தானா?//

இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளும், அதிகாரத் துஷ்பிரயோகமும்..

Unknown said...

உண்மைத் தமிழன்,
அப்படியே இதையும் பாருங்க
http://article52.wordpress.com/2007/06/26/let-the-truth-triumph/

Anonymous said...

உண்மைத் தமிழன்

ஒரு கொலைகாரியைக் கொள்ளைக்காரியை நம் ஜ்னாதிபதினியாக இத்தாலி மாஃபியா தலைவி தேர்ந்தெடுத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் போட்டிருக்கும் லோகோவையெல்லாம் படித்தால் உங்கள் எழுத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அதைப் பார்த்து அருவருப்படைந்தே உங்களைப் பாராட்டாமல் இதுவரை இருந்தேன். அந்தச் ச-----யை எடுத்துத் தொலைங்க முதல்லே. உங்களை இவ்வளவு வம்புல மாட்டி விட்டுமா இன்னும் உங்களுக்குப் புத்தி வரல? டோண்டுவை விட மோசமாய் இருப்பீங்கா போல.

மாலன் said...

வலைப்பதிவுகளில் எட்டு என்று ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒருவர் தன்னைப் பற்றிய எட்டு விஷயங்கள்/சாதனைகள்/ சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்ர்கள் இறுதியில் இன்னும் எட்டுப் பேரை அழைக்க வேண்டும்.

இப்போது என்னுடைய பதிவில் நான் என்னுடைய எட்டை எழுதியிருக்கிறேன்.
http://jannal.blogspot.com/

அடுத்து 8 போட உங்களை அழைத்திருக்கிறேன். விவரங்கள் என் பதிவில். அழைப்பை ஏற்பீர்கள் இல்லையா
அன்புடன்,
மாலன்

Anonymous said...

உன் பேச்சை கேட்டு ஜோரா கை தட்டி கை தட்டி களைச்சு போச்சுப்பா ஓரு சோடா குடப்பா.....

Anonymous said...

//
உண்மைத் தமிழன்

ஒரு கொலைகாரியைக் கொள்ளைக்காரியை நம் ஜ்னாதிபதினியாக இத்தாலி மாஃபியா தலைவி தேர்ந்தெடுத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் போட்டிருக்கும் லோகோவையெல்லாம் படித்தால் உங்கள் எழுத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அதைப் பார்த்து அருவருப்படைந்தே உங்களைப் பாராட்டாமல் இதுவரை இருந்தேன். அந்தச் ச-----யை எடுத்துத் தொலைங்க முதல்லே. உங்களை இவ்வளவு வம்புல மாட்டி விட்டுமா இன்னும் உங்களுக்குப் புத்தி வரல? டோண்டுவை விட மோசமாய் இருப்பீங்கா போல.

//

நீங்க தப்பா புரிச்சுகிட்டிங்க அனானி

எங்க தல யார் பக்கமும் சாய மாட்டாருங்கோ

மத்தளம் மாதிரி ரெண்டு பக்கமும் அடி விழுந்தாலும் அசரவே மாட்டார்...

நீ கலக்கு தல...

ஆனா இந்த கப்பி பேஸ்ட் தான் கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கு

Anonymous said...

சரி தல இந்த பொம்பளைய நாம ஜனாதிபதி ஆக்க வேணாம்

வேற யாரயாவது ஆக்குவோம்

Anonymous said...

தல உன் விரல்ல ஓன்னத் தொடு

கட்டை விரல்னா ஆட்டோ வரும்
ஆள்காட்டி விரல்னா சுமோ வரும்
நடுவிரல்னா பெட்ரோல் பாம்
மோதிர விரல்னா ஆசிட்
சுண்டு விரல்னா எல்லாம் கலந்து கட்டி வர்ரது

எந்த விரல தொட்டா சொல்லு....

Anonymous said...

ஒரு பெண் ஜனாதியாவதை தடுக்க எப்படியெல்லாம் புரளி கிளப்புறிங்கப்பா..

ஆணாதிக்கம் ஒழிக

உண்மைத்தமிழன் said...

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
உண்மைத் தமிழன், அப்படியே இதையும் பாருங்க
http://article52.wordpress.com/2007/06/26/let-the-truth-triumph///

படிச்சேன் பலூன் மாமா.. நிறைய விஷயங்களை துழாவி எழுதியிருக்கிறார்கள். டிக்ஷனரி உதவியுடன் தமிழாக்கம் செய்யலாம் என்று நினைத்தேன். வலைத்தமிழர்களைப் பார்க்க பாவமாக உள்ளது. அதான் இதுவே போதும் என்று விட்டுவிட்டேன். தங்களுடைய தகவலுக்கும் நன்றி மாமா..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உண்மைத் தமிழன், ஒரு கொலைகாரியைக் கொள்ளைக்காரியை நம் ஜ்னாதிபதினியாக இத்தாலி மாஃபியா தலைவி தேர்ந்தெடுத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.//

ஐயா அனானி.. இத்தாலி மாபியா தலைவி..? இது என்ன கதை எனக்குத் தெரியாமல்..? கொஞ்சம் சொல்லுங்கள்..

//நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் போட்டிருக்கும் லோகோவையெல்லாம் படித்தால் உங்கள் எழுத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அதைப் பார்த்து அருவருப்படைந்தே உங்களைப் பாராட்டாமல் இதுவரை இருந்தேன். அந்தச் ச-----யை எடுத்துத் தொலைங்க முதல்லே. உங்களை இவ்வளவு வம்புல மாட்டி விட்டுமா இன்னும் உங்களுக்குப் புத்தி வரல?//

நீங்கள் 'லோகோ' என்று எதைச் சொல்கிறீர்கள்? வெறும் பெயரைப் பார்த்து அருவருப்படையத் தேவையில்லை. இப்போது வந்திருப்பது வம்பு அல்ல.. எதிர்ப்பு.. பின்னால் ஒளிந்திருந்து தாக்கும் தைரியமில்லாத, கோழைத்தனமான முகமூடி எதிர்ப்பு. இதுக்கெல்லாம் பயந்தா எழுத முடியுங்களா?

//டோண்டுவை விட மோசமாய் இருப்பீங்கா போல.//

டோண்டு ஸாருக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்..? அவர் அம்புட்டு மோசமானவரா? எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சு.. தெரிஞ்சிருந்தா இங்கின வந்திருக்கவே மாட்டேன்..

உண்மைத்தமிழன் said...

மாலன் ஸார்.. தங்களுடைய அழைப்புக்கு மிக்க நன்றி..

ஏற்கெனவே கடந்த வாரங்களில் திரு.சேவியர், திரு.மணிகண்டன் ஆகியோர் என்னை அழைத்திருந்தார்கள். அப்போதே நான் அவர்களுக்குத் தெரிவித்திருந்தது என் வாழ்க்கையில் எட்டு போடும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. என்னால் இயலாது என்பதைத்தான்..

இப்போது தாங்கள்.. என் மதிப்பிற்குரிய ஆசிரியர். ஆனாலும் தயங்காமல் தங்களுடைய அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.. மொத்தமே கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும்கூட 3-க்கு மேல போக மாட்டேங்குது. ஏனெனில் தங்களுடைய அழைப்பிற்காக வந்து மொக்கையாக எதையும் எழுதிவிடக் கூடாது என்று பார்க்கிறேன். என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.. நன்றி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

//களைத்துப்போனவன் said...
உன் பேச்சை கேட்டு ஜோரா கை தட்டி கை தட்டி களைச்சு போச்சுப்பா ஓரு சோடா குடப்பா.....//

மொதல்ல துட்ட எடு.. அப்பால சோடா கேளு..

உண்மைத்தமிழன் said...

//உண்மைத்தமிழன் ரசிகன் said...
நீங்க தப்பா புரிச்சுகிட்டிங்க அனானி. எங்க தல யார் பக்கமும் சாய மாட்டாருங்கோ? மத்தளம் மாதிரி ரெண்டு பக்கமும் அடி விழுந்தாலும் அசரவே மாட்டார்... நீ கலக்கு தல... ஆனா இந்த கப்பி பேஸ்ட் தான் கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கு..//

ஆமாப்பா.. ஓவரா பில்டப் குடுத்து அல்லாரும் கடைசி நேரத்துல கழட்டி விட்டுட்டாங்க.. அல்லாரும் நல்லாயிருக்கட்டும். அடியை நான் மட்டும் வாங்கிக்கிறேன்..

காப்பிபேஸ்ட்தான.. இன்னும் ஒரே ஒரு பாகம்தான் இருக்குது. அதையும் முடிச்சிட்டு அப்பால சொந்தக் கச்சேரியை வைச்சுக்கிறேன்..

உண்மைத்தமிழன் said...

//உண்மைத் தமிழன் கொலைவெறிப்படை said...
சரி தல இந்த பொம்பளைய நாம ஜனாதிபதி ஆக்க வேணாம். வேற யாரயாவது ஆக்குவோம்..//

என்ன சொன்ன? பொம்பளையா..? ஓஹோ.. அதான் கொலைவெறிப்படைன்ற பேர்ல வந்தியா.. சரி.. சரி.. உனக்கு தைரியம் சொல்லிட்ட.. எனக்கில்லையே..

வேறு யாரை நிறுத்துறது.. அதான் கலாம் மாட்டேன்னுட்டாரு.. வேற வழியில்ல.. இந்தக் கழுதைக்கு அந்தக் கழுதை பரவாயில்லைன்னு யாரையாச்சும் பார்க்க வேண்டியதுதான்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
தல உன் விரல்ல ஓன்னத் தொடு
கட்டை விரல்னா ஆட்டோ வரும்
ஆள்காட்டி விரல்னா சுமோ வரும்
நடுவிரல்னா பெட்ரோல் பாம்
மோதிர விரல்னா ஆசிட்
சுண்டு விரல்னா எல்லாம் கலந்து கட்டி வர்ரது
எந்த விரல தொட்டா சொல்லு....//

எப்படி? எனக்கு நானே சூனியம் வைச்சுக்கிறதை நீங்க சொல்லித் தர்றீங்களா? வேணாம் சாமி..

உண்மைத்தமிழன் said...

//புரட்சி பெண்கள் சேப்பாக்கம் said...
ஒரு பெண் ஜனாதியாவதை தடுக்க எப்படியெல்லாம் புரளி கிளப்புறிங்கப்பா.. ஆணாதிக்கம் ஒழிக..//

புரளியா.. இதா? சேப்பாக்கம் பேசாம நீ கீழ்ப்பாக்கத்துல போயி அட்மிட் ஆயிரு.. அதான் பெட்டரு..

Anonymous said...

//
வேறு யாரை நிறுத்துறது.. அதான் கலாம் மாட்டேன்னுட்டாரு.. வேற வழியில்ல.. இந்தக் கழுதைக்கு அந்தக் கழுதை பரவாயில்லைன்னு யாரையாச்சும் பார்க்க வேண்டியதுதான்..

//

பேசாம நீயே ஜனாதிபதி ஆய்டு தல

பக்கம் பக்கமா பேசியே அல்லத்தையும் வெரட்டிடலாம்

என்னய உதவி ஜனதிபதி ஆக்கிக்கனு சொல்லமாட்டேன நீயே ஏதாவது பாத்து செய்

Anonymous said...

//
காப்பிபேஸ்ட்தான.. இன்னும் ஒரே ஒரு பாகம்தான் இருக்குது. அதையும் முடிச்சிட்டு அப்பால சொந்தக் கச்சேரியை வைச்சுக்கிறேன்..
//

இன்னொரு பாகமா...


கொஞ்சம் இரக்கம் காட்ட கூடாதா

பாவமில்லய நாங்க நல்ல எழுதுவீங்கனு நம்பி வந்தது ஒரு குத்தமா

உண்மைத்தமிழன் said...

//உண்மைத்தமிழன் கொலைவெறிப்படை said...
பேசாம நீயே ஜனாதிபதி ஆய்டு தல.. பக்கம் பக்கமா பேசியே அல்லத்தையும் வெரட்டிடலாம்.//

ஆயிரலாம். அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல.. நிறைய கொள்ளையடிக்கணும். கொலை செஞ்சு பழகணும்.. ஏமாத்தத் தெரியணும்.. இதையெல்லாம் கத்துக்கணும்னா குறைந்தபட்சம் 20 வருஷமாவது ஆகும். அதுக்கப்புறம் பார்ப்போம்..

//என்னய உதவி ஜனதிபதி ஆக்கிக்கனு சொல்லமாட்டேன நீயே ஏதாவது பாத்து செய்..//

பார்த்தியா.. பார்த்தியா? தமிழ்நாட்டுக்காரன் புத்திய காட்டிட்டியே..?

Anonymous said...

அன்னியன் : பதினஞ்சு பக்கத்துக்கு பதிவு போடறது தப்பா

உ.தமிழன் : தப்பில்லைங்க

அன்னியன் : பதினஞ்ச பக்கமும் காபி பேஸ்ட் பண்ணி போடறது தப்பா

உ. தமிழன் : தப்பு மாதிரி தான் தெரியது

அன்னின் : பதினைஞ்சு பக்கத்துக்கு கொறையாம காபி பேஸ்ட் பண்ணி பாகம் பாகமா தெனமும் போடறது தப்பா..

உ.தமிழன் : பெரிய தப்புங்க

அன்னியன் : அதனடா இங்க நடக்குது

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
இன்னொரு பாகமா... கொஞ்சம் இரக்கம் காட்ட கூடாதா? பாவமில்லையா நாங்க..?//

வலைத்தளத்துக்குள்ள வந்துட்டா நோ அன்பு-அடிதான், நோ இரக்கம்-வெட்டுதான், நோ பாசம்-திட்டுதான்.. நோ நேசம்-குப்புறப் போட்டு மிதிதான்..

//நல்லா எழுதுவீங்கனு நம்பி வந்தது ஒரு குத்தமா?//

இது குத்தமில்ல.. வலைத்தளத்துக்குள்ள வந்து இப்படி புலம்புறதுதான் தப்பு.. கன்னத்துல போட்டுக்கப்பூ..

Anonymous said...

தல தயவு செஞ்சு ...
கெஞ்சி கேக்கறன் ...
விட்டுடுங்க ....
முடியல ...
அழுதுடுவேன் ...
பாகம் பாகமா காபி பேஸ்ட் பண்ணி எங்க பொருமைய சோதிக்காதிங்க

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
அன்னியன் : பதினஞ்சு பக்கத்துக்கு பதிவு போடறது தப்பா
உ.தமிழன் : தப்பில்லைங்க
அன்னியன் : பதினஞ்ச பக்கமும் காபி பேஸ்ட் பண்ணி போடறது தப்பா
உ. தமிழன் : தப்பு மாதிரி தான் தெரியது
அன்னின் : பதினைஞ்சு பக்கத்துக்கு கொறையாம காபி பேஸ்ட் பண்ணி பாகம் பாகமா தெனமும் போடறது தப்பா..
உ.தமிழன் : பெரிய தப்புங்க
அன்னியன் : அதனடா இங்க நடக்குது//

அன்னியன் : பதினைஞ்சு பக்கத்துக்குப் பதிவு போடறது தப்பா?

உ.தமிழன் : தப்பில்லே.. எதைப் பத்தி போடுறோம்ன்றதுதான் முக்கியம்.. படிக்கணும்லே.. படிக்கணும்..

அன்னியன் : பரவாயில்லை. சொந்தமா எழுதாம காபி பேஸ்ட் பண்றது தப்பில்லையா?

உ.தமிழன் : இப்ப யாரு இங்கன சொந்தமா எழுதுறது? எல்லாமே கடன் வாங்கின அதாவது படிச்சு தெரிஞ்சுக்கிட்ட மேட்டர்தான.. அதுக்கு இது பெட்டரு..

அன்னியன் : தினமும் இதையே போட்டா நாங்க எப்படி படிக்கிறது..?

உ.தமிழன் : இதைப் படிக்கிறதைவிட வேறென்ன வெட்டி வேலை? அறிவு வளரணுமா? வேண்டாமா..? அப்ப படிச்சுத் தொலை..

உண்மைத்தமிழன் said...

//உண்மைத்தமிழனின் உண்மை ரசிகன் said...
தல.. தயவு செஞ்சு ... கெஞ்சி கேக்கறன் ... விட்டுடுங்க .... முடியல ... அழுதுடுவேன் ... பாகம் பாகமா காபி பேஸ்ட் பண்ணி எங்க பொருமைய சோதிக்காதிங்க..//

ரசிகா.. நீ அழுவியே.. கெஞ்சி கேப்பியோ.. எனக்குத் தெரியாது.. நான் போடுறது நீ படிக்கிற.. அதான் ரசினாகிய உன்னோட வேலை.. அது காபி பேஸ்ட்டா? டீ பேஸ்ட்டா? வெறும் பேஸ்ட்டான்னுல்லாம் பார்க்கக் கூடாது.. மேட்டர் என்னன்னு மட்டும்தான் பார்க்கணும். அதுதான் அறிவு.. அப்பத்தான் அது மேல மேல வளரும்..

Anonymous said...

//
ரசிகா.. நீ அழுவியே.. கெஞ்சி கேப்பியோ.. எனக்குத் தெரியாது.. நான் போடுறது நீ படிக்கிற.. அதான் ரசினாகிய உன்னோட வேலை.. அது காபி பேஸ்ட்டா? டீ பேஸ்ட்டா? வெறும் பேஸ்ட்டான்னுல்லாம் பார்க்கக் கூடாது.. மேட்டர் என்னன்னு மட்டும்தான் பார்க்கணும். அதுதான் அறிவு.. அப்பத்தான் அது மேல மேல வளரும்..
//

உங்க பக்கத்துக்கு வர காரணம் உங்க பதிவோட மேட்டர் மட்டுமில்ல உங்க எழுத்து நடையும் தான்

அதானால காபி பேஸ்ட் பண்ணாம உங்க சொந்த நடையில குடுத்திங்கண்ணா பதினைஞ்சு பக்கம்னாலும் ஊறுகாய் தொட்டுட்டு சரச்கடிக்கற மாதிரி ஓரே மூச்சுல படிச்சுடலாம்

ஆனா காபி பேஸ்ட் பன்றது மேட்டர் நல்லயிருந்தாலும் அத படிச்கறதுங்கல்ல மண்டை காஞ்சிருது

அதனால எந்த மேட்டரா இருந்தாலும் அத உங்க நடையில அதாவது
எந்த சரக்காயிருந்தாலும் உங்க மொந்தையில குடுங்க

கொஞசம் குஜாலா படிப்பம்ல...

உண்மைத்தமிழன் said...

//உண்மைத்தமிழன் உண்மை ரசிகன் said...
உங்க பக்கத்துக்கு வர காரணம் உங்க பதிவோட மேட்டர் மட்டுமில்ல. உங்க எழுத்து நடையும் தான் அதானால காபி பேஸ்ட் பண்ணாம உங்க சொந்த நடையில குடுத்திங்கண்ணா பதினைஞ்சு பக்கம்னாலும் ஊறுகாய் தொட்டுட்டு சரச்கடிக்கற மாதிரி ஓரே மூச்சுல படிச்சுடலாம். ஆனா காபி பேஸ்ட் பன்றது மேட்டர் நல்லயிருந்தாலும் அத படிச்கறதுங்கல்ல மண்டை காஞ்சிருது. அதனால எந்த மேட்டரா இருந்தாலும் அத உங்க நடையில அதாவது எந்த சரக்காயிருந்தாலும் உங்க மொந்தையில குடுங்க. கொஞசம் குஜாலா படிப்பம்ல...//

கண்ணுகளா கொடுக்கலாம்தான்.. ஆனா அந்த எழுத்தாளருக்கும் மரியாதை கொடுக்கணும்ல.. அதையும் கொஞ்சம் பாருங்கப்பா..

Madhu Ramanujam said...

என்ன பண்றது தமிழா? இந்தியாவோட நிலை அவ்வளவு மோசமா இருக்கு. இதே மாதிரி ஒண்ணை நானும் எழுத ஆரமிச்சிருக்கேன். முதல் பகுதியை இன்னைக்குத் தான் போட்டேன். அப்பத் தான் டோண்டு சார் வந்து உங்க சுட்டியை குடுத்துப் படிக்கச் சொன்னார். இதுலேர்ந்து நான் எழுதவும் நிறைய விவரம் கிடைக்கும். அது மட்டுமில்லாம உங்க எல்லா பதிவுக்கும் ஒரு சுட்டியை என்னோட அடுத்த பதிவுல சேர்க்கலாம்னு இருக்கேன்.. உங்க அனுமதியோட.

முடிஞ்சா இதையும் படிங்க மக்களே.....

சோனியா காந்தி - இந்தியாவின் சாபக் கேடு - பகுதி 1

உண்மைத்தமிழன் said...

தம்பி மது.. என் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுக்கப் போவதற்கும், அதைச் சொன்னதற்கும், இதைப் படித்தமைக்கும் எனது நன்றிகள்..

ஒண்ணு மட்டும் உறுதி.. உனக்கும், எனக்கும் 'சொக்கப்பானை கொளுத்த' டோண்டு ஒருத்தரே போதும். வேற வினையே வேணாம்..

abeer ahmed said...

See who owns canoe.ca or any other website:
http://whois.domaintasks.com/canoe.ca