தீயோர்கள் விலகி நிற்க - பகை தீர!

நம்மைச் சுற்றி நண்பர்களாக இருந்தவர்கள், நமக்கு விரோதமாக மாறி நமக்குத் தொல்லை தரும் போதும், நம்மை அறியாமல் தீயோரிடம் பழகி அந்த நட்பு விலக முடியாமல் தவிக்கும் போதும், வலிய வந்த விரோதங்கள் தீரவும், கீழ்க்கண்ட பதிகத்தை தினமும் சொல்லி வர அன்னை அருளால் தீயோர் விலகி பகை தீரும். நிம்மதி உண்டாகும்.

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும்
மருந்தினுக் காவேண் டினும்
மறந்துமோர் பொய்ம்மொழி சொலாமலுந் தீமையாம்
வழியினிற் செல்லாமலும்
விஞ்சுநெஞ் சதனிற் பொறாமைதரி யாமலும்
வீண்வம்பு புரியாமலும் மிக்கபெரி யோர்கள்சொலும் வார்த்தை தள்ளாமலும்
வெகுளியவை கொள்ளா மலும்
தஞ்சமென நின(து) உபய கஞ்சந் துதித்ததிடத்
தமியனுக் கருள் புரிந்து
ஸர்வகா லமுமெனைக் காத்தருள வேண்டினேன்
ஜலக்கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செ(வ்) வாய் நிகரும் வாவியாம் பன்மலரும்
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ்
வாமி! அபிராமி! உமையே!

டிஸ்கி : இது எனது 'மதிப்பிற்குரிய' நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து 'சுட்டது'.. இனி நிறைய அவரிடமிருந்து 'சுட' வேண்டியுள்ளது. அவ்வளவு கடவுள் பக்தியும், விஷய ஞானமும் உள்ளவர் அவர். நண்பர் இதற்கெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார் என்றே நம்புகிறேன்..

6 comments:

வடுவூர் குமார் said...

இது, தமிழ் பதிவுகளை படிப்பதற்கு முன்பு படிக்கவேண்டுமா அல்லது பின்னூட்டம் போட்ட பிறகா? :-))
கோபிக்கவில்லை..
படித்த நாங்கள்.

Anonymous said...

பதிகத்த நீங்க சொல்ல ஆரம்பிச்சிடீங்களா? பதிவுலகத்துக்கு வந்தப்புறம் இப்போ தான் உங்களுக்கு நீங்க மொத பாராவில சொல்லியிருக்கற மேட்டர் புரிய ஆரம்பிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
இது, தமிழ் பதிவுகளை படிப்பதற்கு முன்பு படிக்கவேண்டுமா அல்லது பின்னூட்டம் போட்ட பிறகா? :-))
கோபிக்கவில்லை படித்த நாங்கள்.//

பதிவுலகம் என்றில்லை. வெளியில் இருப்பவர்களும் தினந்தோறும் படித்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது. புரிந்து கொண்டவர்கள் புத்திசாலிகள் குமார்.. அதுதான் எடுத்துப் போட்டேன்.

Sundar Padmanaban said...

இது போலியோட பதிவா? இவ்வளவு சின்னதா இருக்கே? :-)

Just kidding...

உண்மைத்தமிழன் said...

//"வற்றாயிருப்பு" சுந்தர் said...
இது போலியோட பதிவா? இவ்வளவு சின்னதா இருக்கே? :-) Just kidding...//

பேசுங்க.. பேசுங்க.. நான் மட்டும்தான் என்னவோ இம்மாம் பெரிசா எழுதுற மாதிரி வர்றீங்களா? மிதக்கும்வெளி ஐயாகிட்டேயெல்லாம் போறதில்லையா..? கதிரவன், செல்வன், சேவியர், வளர்மதி இப்படின்னு நிறைய பேர் எழுதுறாங்க சுந்தர்.. நான் எழுதினா மட்டும்தான் கருத்தும் சரி.. அளவும் சரி.. உங்களுக்கெல்லாம் தப்பாவே தெரியுது..

abeer ahmed said...

See who owns teknova.com or any other website:
http://whois.domaintasks.com/teknova.com