May 31, 2007
எனக்கு இது போன்ற கருத்து தோன்றியது. ஆனால் கார்ட்டூன் வரையத் தெரியவில்லை. எனவே துக்ளக்கிடம் இரவல் வாங்கிப் போட்டுள்ளேன். பார்க்க.. படிக்க.. புரிந்து கொள்க..
தினகரன் வெளியிட்ட பிரச்னைக்குரிய கருத்துக் கணிப்பு, அதைத் தொடர்ந்து நடைபெற்றத் தாக்குதல் ஆகியவற்றைப் பற்றி, சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசிய பேச்சின் ஒரு பகுதி இது :
".....கனிமொழி இப்போதுதான் தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு கவிஞர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்கிறாரே தவிர, அவரும் பல பேட்டிகளில் தனக்கு அரசியலில் நுழைய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவும், சூசகமாகவும் தெரிவித்திருக்கிறார்.."
- சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேச்சு (முரசொலி : 11.5.2007)
இதன் பிறகு மே 26-ம் தேதி, கனிமொழியை ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவித்ததை ஒட்டி வந்த செய்தி இது :
".....கனிமொழி ஏற்கெனவே அரசியலில் இருக்கிறார். அதனால்தான் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.."
- ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கருணாநிதி கூறியது ('தி ஹிந்து' : 27.5.2007)
அதாவது மே 10-ம் தேதி வரை கனிமொழி அரசியலில் இருக்கவும் இல்லை; அரசியலில் நுழைய விரும்பவுமில்லை. "தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப் பிரிவுகள் நடத்தும் நிகழ்ச்சிகளில், ஒரு கவிஞர் என்ற முறையில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.." என்பது முதல்வரே கூறியது..
ஆனால் திடீரென்று 26-ம் தேதி அவர், "ஏற்கெனவே அரசியலில் இருப்பராகிவிட்டார். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்தார் என்று வைத்துக் கொண்டாலும் வந்து, உடனே ராஜ்யசபை அங்கத்தினராகவிருக்கிறார். வரலாறு காணாத வளர்ச்சி!
இந்த நியமனத்தை விளக்குவதற்கு, மாற்றி மாற்றிப் பேசி முதல்வர் திண்டாட வேண்டியதில்லை.
'கழகம் ஒரு குடும்பம்' - 'அது என் குடும்பம்' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். அதற்குப் பின் கேள்விக்கு ஏது இடம்!
|
Tweet |
16 comments:
கார்ட்டூனும், சொல்ல வந்த பொருளும் பொட்டில் அடித்தாற்போல...
தந்ததற்கு நன்றி.
ஆனால், படம் சின்னதாக இருப்பதால் படிப்பது கடினம். அதன் வரிகளையும் தந்திருக்கலாம்.
//Anonymous said...
கார்ட்டூனும், சொல்ல வந்த பொருளும் பொட்டில் அடித்தாற்போல... தந்ததற்கு நன்றி. ஆனால், படம் சின்னதாக இருப்பதால் படிப்பது கடினம். அதன் வரிகளையும் தந்திருக்கலாம்.//
தந்துவிட்டேன் அனானியாரே.. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
கனிமொழிக்கு அரசியல் தெரியாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில்....
சுதாகரன், மகாதேவன், திவாகரன் போன்றவர்களுக்கு அரசியல் தெரியுமா என்ற கேள்வியை உங்களிடம் கேட்கவும் ஆசைப்படுகிறேன்.
நிச்சயமாகத் தெரியாது என்பதுதான் எனது பதில். இரண்டு பேருமே 'ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது கருப்பு ஸார்..
அராஜகத்திலும் அப்பாவிகளை எரிப்பதிலும் அதிமுக விற்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்றும், குடும்ப அரசியலில் ஜெயலலிதா - சசிகலாவிற்கு நான் கொஞ்சமும் குறைந்தவன் இல்லை என்றும் தான் , திமுக வினரும் , கருணாநிதியும் தங்களுடைய சமீபத்திய செயல்களால் உணர்த்துகின்றனர் .உண்மைகளை உரக்கச் சொல்லும் உண்மைத் தமிழா ,உனக்கு மற்றுமொரு ரசிகன் உலகினில் உருவாகி விட்டான்.. (அடடா எத்தனை உ..)
//// இரண்டு பேருமே 'ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது ///
தெரிஞ்சு போச்சு!!! அப்ப நீங்க கேப்டன் கட்சிதானே?
/// அராஜகத்திலும் அப்பாவிகளை எரிப்பதிலும் அதிமுக விற்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்றும், குடும்ப அரசியலில் ஜெயலலிதா - சசிகலாவிற்கு நான் கொஞ்சமும் குறைந்தவன் இல்லை என்றும் தான் , திமுக வினரும் , கருணாநிதியும் தங்களுடைய சமீபத்திய செயல்களால் உணர்த்துகின்றனர் ////
என்ன சார், சரித்திரத்தையே மாற்றுகிறீர்கள். இதெல்லாம் அந்த அம்மாவுக்கும் அவருடைய குருவுக்கும் கத்துகொடுத்ததே நாங்கள்தான்.
விஞ்ஞான முறையில் அராஜகம், ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் நாங்கதான்.
அந்த அம்மா ரொம்ப டிரை பண்ணினா கூட எங்கள மாதிரி வருமா?
- மூக்கா
உண்மை தமிழரே,
நீங்கள் உண்மையாகவே தமிழர்தானா?
கலைஞரை திட்டுங்கள், ஜெவை வசைபாடுங்கள் - அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் சொக்கத்தங்கத்தின் உளறல்களை copy & paste செய்வது.........
நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள். எனவே உங்கள் பதிவுகள் உங்களின் கருத்துக்களாகவே இருக்கட்டும். சொக்கத்தங்கத்தின் வாந்திகளை எடுத்து போட சில பதிவர்கள் ஏற்கனவே இருக்கின்றனர். நீங்களும் அதில் இணைய வேண்டுமா?
//Anonymous said...
அராஜகத்திலும் அப்பாவிகளை எரிப்பதிலும் அதிமுக விற்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்றும், குடும்ப அரசியலில் ஜெயலலிதா - சசிகலாவிற்கு நான் கொஞ்சமும் குறைந்தவன் இல்லை என்றும் தான் , திமுக வினரும் , கருணாநிதியும் தங்களுடைய சமீபத்திய செயல்களால் உணர்த்துகின்றனர் .உண்மைகளை உரக்கச் சொல்லும் உண்மைத் தமிழா ,உனக்கு மற்றுமொரு ரசிகன் உலகினில் உருவாகி விட்டான்.. (அடடா எத்தனை உ..)//
ரொம்ப சந்தோஷம் சாமியோவ்.. உண்மைத்தமிழனைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி..
///Anonymous said...
//இரண்டு பேருமே 'ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது//
தெரிஞ்சு போச்சு!!! அப்ப நீங்க கேப்டன் கட்சிதானே?///
அடப்பாவிகளா.. இதைச் சொன்னது கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர்ய்யா..
///Anonymous said...
//அராஜகத்திலும் அப்பாவிகளை எரிப்பதிலும் அதிமுக விற்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்றும், குடும்ப அரசியலில் ஜெயலலிதா - சசிகலாவிற்கு நான் கொஞ்சமும் குறைந்தவன் இல்லை என்றும் தான் , திமுக வினரும் , கருணாநிதியும் தங்களுடைய சமீபத்திய செயல்களால் உணர்த்துகின்றனர்//
என்ன சார், சரித்திரத்தையே மாற்றுகிறீர்கள். இதெல்லாம் அந்த அம்மாவுக்கும் அவருடைய குருவுக்கும் கத்துகொடுத்ததே நாங்கள்தான். விஞ்ஞான முறையில் அராஜகம், ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் நாங்கதான். அந்த அம்மா ரொம்ப டிரை பண்ணினா கூட எங்கள மாதிரி வருமா? - மூக்கா///
ஒத்துக்குறேன்.. ஒத்துக்குறேன்..
//அருண்மொழி said...
உண்மை தமிழரே,
நீங்கள் உண்மையாகவே தமிழர்தானா?
கலைஞரை திட்டுங்கள், ஜெவை வசைபாடுங்கள் - அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் சொக்கத்தங்கத்தின் உளறல்களை copy & paste செய்வது.........
நீங்கள் நன்றாக எழுதுகின்றீர்கள். எனவே உங்கள் பதிவுகள் உங்களின் கருத்துக்களாகவே இருக்கட்டும். சொக்கத்தங்கத்தின் வாந்திகளை எடுத்து போட சில பதிவர்கள் ஏற்கனவே இருக்கின்றனர். நீங்களும் அதில் இணைய வேண்டுமா?//
அருண்மொழி ஸார்.. ஏன் எனக்குன்னு சில கருத்துக்கள் இருக்கக்கூடாதா? அதை ஏன் 'சொக்கத்தங்கம்' எடுத்துக் கையாளக்கூடாது.. இதை நீங்கள் 'சொக்கத்தங்கம்' என்று சொல்பவரிடம்தான் கேட்க வேண்டும். எனது கொள்கை எப்போதுமே ஒன்றுதான் ஸார்..
இந்த இடைவெளியைத்தான் இப்போது அந்த 'சொக்கத்தங்கம்' தான் நிரப்பப் போவதாகச் சொல்லிக் களத்துக்கு வந்திருக்கிறார். ஜெயிப்பாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஜால்ரா போடாமல் எதிர்க்கத் துணிந்து வந்திருக்கிறாரே அதை நினைத்துப் பாருங்கள்..
========
//இரண்டு பேருமே 'ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது//
தெரிஞ்சு போச்சு!!! அப்ப நீங்க கேப்டன் கட்சிதானே?///
அடப்பாவிகளா.. இதைச் சொன்னது கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர்ய்யா..
========
என்ன சார் நீங்க சீரியசா காமெடி பண்ணிகிட்டு!
அந்த புண்ணியவான் நாடாரு போனதோட எல்லாம் போச்சு. இந்த அந்த கருமவீரரோட குஞ்சுகள் இந்த "ஊறின மட்டை"களுக்குதான் Xட்டை தாங்குறானுங்க..
இதுகூட தெரியாம நீங்க என்னசார்!
///Anonymous said...
//இரண்டு பேருமே 'ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது// தெரிஞ்சு போச்சு!!! அப்ப நீங்க கேப்டன் கட்சிதானே?///
அடப்பாவிகளா.. இதைச் சொன்னது கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர்ய்யா..
என்ன சார் நீங்க சீரியசா காமெடி பண்ணிகிட்டு!
அந்த புண்ணியவான் நாடாரு போனதோட எல்லாம் போச்சு. இந்த அந்த கருமவீரரோட குஞ்சுகள் இந்த "ஊறின மட்டை"களுக்குதான் Xட்டை தாங்குறானுங்க..
இதுகூட தெரியாம நீங்க என்னசார்!///
எல்லாம் தெரியும் அனானி.. இருந்தாலும் இப்ப யார் எதைச் சொன்னாகன்ற அரிச்சுவடி கூட தெரியாம எல்லாரும் வந்துப்புடறாங்க.. எடுத்துக் கொடுக்கணும்ல.. அது சரி.. அந்த 'கருமவீரரோட குஞ்சுகள்'ன்னு இப்ப யார் இருக்கா..? எல்லாமே 'மூன்றாவது மட்டைகள்'தான்..
//// 'கழகம் ஒரு குடும்பம்' - 'அது என் குடும்பம்' என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். அதற்குப் பின் கேள்விக்கு ஏது இடம்! ////
இதுதான் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்ததுதானே! இந்த சோவுக்கு மட்டும் இன்னும் புரியலயா என்ன?
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயத்தை மறுபடியும் மறுபடியும் சொல்லுவாங்களா. அதேமாதிரிதான், இந்த மஞ்ச துண்டு விசயமும். எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு. ஆனாலும், சில விசமிங்க மறுபடியும் மறுபடியும் கேட்டு என்னை ரொம்ப ரவுசு பண்ணறாங்கப்பா.
என்னவோ நல்லா இருந்தா சரி.
- மூக்கா
See who owns smallparts.com or any other website:
http://whois.domaintasks.com/smallparts.com
Post a Comment