கண்டேன் கண்டேன் என் அய்யன் முருகனைக் கண்டேன்

23-05-2007

என் இனிய வலைத் தமிழ் மக்களே..!

'சரவணன்' என்கின்ற திருநாமத்தை உடையவன் நான் என்பதால், எனக்கு சிறு வயதிலிருந்தே 'முருகன்' என்கின்ற கடவுள் மீது மட்டும் ஒரு தனிப் பாசம் உண்டு. காரணம், இருக்கின்ற சாமிகளிலேயே அழகான சாமி, அவர்தான் என்பது குழந்தைப் பிராயத்திலிருந்தே என் மனதில் இருக்கும் ஒரு அபிப்ராயம்.



எல்லாக் குழந்தைகளுக்கும் போலவே எனக்கும் கடவுள் பக்தி என் அம்மா மூலமே வந்து சேர்ந்தது. என் அம்மாவுக்கு முருகன் மீதும், மாரியாத்தா, காளியாத்தா, சமயபுரம் ஆத்தா என்கின்ற இடைநிலை சாமிகள் மீதும் கொள்ளைப் பிரியம்.

வருடத்திற்கொருமுறை ஏதாவது ஒரு கோயிலுக்கு நேர்ந்திருக்கிறேன் என்று சொல்லி எனது தந்தையின் உயிரை வாங்கிப் பணம் பறித்துக் கொண்டு ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்வார். மொட்டை போட்டுக் கொண்டு திரும்புவார். அவருக்குத் துணையாக எனது அண்ணனோ, அல்லது அக்காக்களோ செல்வார்கள்.

ஆனால் எனது அண்ணன் ஒரு போதும் மொட்டையடித்து நான் பார்த்ததில்லை. அவருக்கும் கடவுள் பக்தி உண்டு. ஆனால் அதை மொட்டையடித்துத்தான் வெளிக்காட்ட வேண்டியதில்லை என்பார்.

எனது தந்தை கோவிலுக்குச் சென்று நான் பார்த்ததில்லை. எப்போதாவது தீபாவளி, பொங்கல் அன்று மட்டும் எனது தாய் அவர் நெற்றியில் விபூதியைப் பூசிவிடுவார். என் தாயின் தலை மறைந்தவுடன், அடுத்த நொடியே அவருடைய நெற்றியிலும் விபூதி மறைந்துவிடும். அப்படியரு 'கொள்கைக் குன்று' அவர்.

திடீர், திடீரென்று இரவு நேரத்தில் முழித்தெழுந்து அமர்ந்து கொண்டு 'லைட்ட போடுடி' என்று சத்தம் போடுவார் எனது அம்மா. எனது அக்காக்களும் எழுந்து லைட்டைப் போட்டவுடன், 'சமயபுரம் ஆத்தா கனவுல வந்துச்சு..' என்பார் எனது அம்மா . என் அப்பா தலையில் அடித்துக் கொண்டு "இவளைக் கொண்டு போய் ஊர்ல விட்டுட்டு வாங்கடா.." என்று அலுத்துக் கொள்வார்.

இப்படி 'ஆத்தா கூப்பிட்டுச்சு; அப்பன் கூப்பிட்டான்' என்று சொல்லி சமயபுரத்துக்கு மூன்று தடவையும், பழனி, திருப்பரங்குன்றம், திண்டுக்கல் அருகேயுள்ள திருமலைக்கேணி முருகனுக்கு இரண்டு தடவையுமாக மொட்டை போட்டாகிவிட்டது. இதில் பழனிக்கு மட்டும் நான் துணைக்குப் போய் நானும் மொட்டை போட்டுக் கொண்டேன். அது ஒரு சுவையான அனுபவம்.

நான் மொட்டை போட்டுக் கொண்டதற்கு ஒத்துக் கொண்டதே மொட்டையடித்தால்தான் அப்போது பேமஸாகிக் கொண்டிருந்த கெளபாய் தொப்பியை வாங்கித் தருவேன் என்று என் அண்ணன் ஆசை காட்டினார். அதன் விளைவாகத்தான் மொட்டை போட்டேன்.

இப்படி குடும்பத்தில் என் அம்மாவின் பக்தி, பரமபத விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில்தான் திடீரென்று ஆத்தா போய் முருகன் வந்துவிட்டான். சாதாரண முருகன் அல்ல இவன்.. மருதமலை முருகன். இந்தப் பெயரை நான் அப்போதே கேள்விப்பட்டிருக்கிறேன். உபயம் ஒரேயொரு திரைப்படப் பாடல். 'மருதமலை மாமணியே..'

என் அப்பா இதைக் கேட்டவுடன் தலையில் கை வைத்துக் கொண்டார். "அது கோயமுத்தூர் பக்கத்துல இருக்குடி.. போக வரவே ஐம்பது ரூபா ஆகும்டி.." என்றார். என் அம்மாவோ "முருகன் வரச் சொல்லி உத்தரவு போட்டுட்டான். போயே தீருவேன்.. காச எடுங்க.." என்று வட்டிக்கடைக்கார சேட்டுக் கணக்காக மல்லுக்கு நின்றார்.

அப்போது எனது தந்தையின் மாதச் சம்பளமே நானூற்றி இருபது ரூபாய்தான். நாங்கள் வீட்டில் மொத்தம் ஆறு பேர்.. இந்தச் சம்பளமே பத்தவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில் இப்படியரு பக்தி தேவையா என்றார் எனது தந்தை. ம்ஹ¤ம்.. எனது அம்மா அசைந்து கொடுக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் திடீரென்று எனது தந்தைக்கு மதுரை டிரான்ஸ்பர் ஆனது.. 'ரொம்பச் சந்தோஷம்டா ராசா' என்ற நினைப்பில் மதுரைக்கு எங்களை அழைத்துச் சென்று குடியமர்த்தினார் எனது அப்பா. மதுரையில் அரசரடியில் வெள்ளைக்கண்ணு தியேட்டருக்கு பின்புறம் முத்துராமலிங்கத் தேவர் சந்தில்தான் வீடு.

இந்த நேரத்தில் திடீரென்று எனது அம்மாவுக்கு உடல் நிலை மோசமானது. ஒரு நாள் என் அம்மாவுக்கு மூச்சு இழுத்துக் கொண்டு இப்பவோ, அப்பவோ என்றாக இருந்தது. அப்போதும் முருகன் படத்தைக் காட்டி 'கூட்டிட்டுப் போகலீல்லே..' என்று என் அப்பாவை முறைத்துப் பார்த்த என் அம்மாவின் கோபமான முகம், இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது.

நல்லவேளையாக அப்போது முருகன் கருணை புரிய, அந்த நேரத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் படுக்கையில் இருந்து உயிர் பிழைத்தார் எனது அம்மா. அதற்குப் பிறகு ஒரு நாலு எட்டு நடப்பதற்குள் பத்து நிமிடம் உட்காரும் அளவுக்கு உடல் நிலை இருந்ததால், முன்பு மாதிரி கோவிலுக்கு படை எடுக்கும் வேலையை விட்டுவிட்டார் எனது அம்மா.

இப்போதுதான் எனது அப்பாவுக்கு பரம திருப்தி. "பேசாம வீட்ல உக்காந்து கும்பிடு. எங்க இருந்து கும்பிட்டாலும் அவனுக்குக் கேட்கும்.." என்று முணுமுணுப்பார் எனது அப்பா. அவர் தலை மறைந்தவுடன், அவ்வளவுதான்.. வாக்குறுதி கொடுத்த அரசியல்வாதியை திட்டுகின்ற, வாக்காளர் பெருமக்களைப் போல் எனது அம்மா திட்டித் தீர்ப்பார் அவளுடைய வீட்டுக்காரரை.

இப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருக்க மூன்று வருடங்கள் கழித்து எனது தந்தைக்கு மறுபடியும் திண்டுக்கலுக்கே டிரான்ஸ்பர் கிடைத்தது. இம்முறை திண்டுக்கலில் குமரன்திருநகரில் கன்னிமார்பாறையில் ஒரு வீட்டிற்கு குடி வந்தோம்.

இப்போதும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் விடியற்காலையில் 'மருதமலை மாமணியே..' என்ற பாடலைக் கேட்டுவிட்டால் போதும், அன்று முழுவதும் எனது அப்பாவுக்கு 1008 அர்ச்சனைதான்..

பாவம் எனது அப்பா. "இவளைக் கூட்டிட்டுப் போனா திரும்பி வர்றப்ப பொணமாத்தான்டா கொண்டு வரணும். இவ எப்படி அவ்ளோ தூரம் நடப்பா.. மலைல ஏற வேணாமா?" என்று எங்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புவார் எனது அப்பா. ஆனாலும் முருகனுக்கு எனது அப்பா மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவரையும் படுக்கையில் படுக்க வைத்து இரண்டு வருடங்கள் பாடாய்ப்படுத்திவிட்டு சாகடித்தான்.

எனது அம்மாவுக்கு இப்போது ஒரு தெளிவான எண்ணம் வந்துவிட்டது. "மருதமலை முருகன் கூப்பிட்டும் போகவில்லை. அதுனாலதான் உங்கப்பனுக்கு இப்படி வந்திருச்சு..?" என்று என்னிடம் சொல்லாத நாளே இல்லை. "இப்பவாவது என்னைக் கூட்டிட்டுப் போங்கடா.." என்று என் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பித்தார். என் அண்ணன் நழுவவதில் கம்யூனிஸ்ட்காரர்களைவிட வித்தகர். அப்படி, இப்படி என்று மூன்று வருடங்களை ஓட்டிவிட்டார்.

கடைசியில் இப்போது முருகனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது போலும். என் அம்மாவுக்கும் கடைசியில் நோயைக் கொடுத்துவிட்டான். அரசு ஆஸ்பத்திரி வார்டைப் போல வீடு வாடையடிக்கத் துவங்க.. வீட்டில் இருந்த நான், எனது அக்கா, அண்ணன் மூவரும் நடைப்பிணமானோம். அம்மாவோ தாங்க முடியாத வலியையும் தாங்கிக் கொண்டு, "கூட்டிட்டுப் போறேன்.. கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்களேடா பாவிகளா.." என்று சொன்னபடியேதான் இருந்தார்.

ஒரு நாள் இரவு 12.30 மணிக்கு என் கண் முன்னே வீட்டிலேயே இறந்தவர், அன்றைய தினம் மாலை 4 மணிவரை மருதமலை முருகனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இதில் "ஏமாத்திட்டானுங்க.. ஏமாத்திட்டானுங்க.." என்ற வார்த்தைகள்தான் அதிகம்..

இந்தக் காலக்கட்டத்தில் உங்களது உண்மைத்தமிழனுக்கு கொஞ்சம் கிறுக்குப் பிடித்திருந்தது. ஆமாம்.. அப்போது உண்மைத்தமிழன் கோவிலுக்குப் போக மாட்டான். சாமி கும்பிட மாட்டான். காரணம், வெரி சிம்பிள்.. மதுரை சிம்மக்கல்லில் இருந்த மத்திய பொது நூலகத்தில் பெரியார் புத்தகங்கள் முழுவதையும் படித்து முடித்துவிட்டான். இது போதாதா?

"எவ்ளோ பக்திமானாக இருந்த என் அம்மாவுக்கு இவ்ளோ கஷ்டத்தைக் கொடுத்தியே.. நீயெல்லாம் ஒரு கடவுளா? நீ கடவுளே இல்லை.. உன்னை நான் எதுக்குக் கும்பிடணும்.. கும்பிட மாட்டேன்.." - இது உண்மைத்தமிழனின் அப்போதைய உறுதிமொழி.

அசட்டுத்தனமான, சிறுபிள்ளைத்தனமான உறுதிமொழிகளெல்லாம் காற்றில் பறக்கும் இலவம் பஞ்சாகப் பறந்து சென்றுவிடும். அப்படித்தான் இந்த உறுதிமொழியும் என் மானசீகக் காதலன், பெருங்கவிஞன், கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்கின்ற புத்தகத்தைப் படித்தவுடன் பறந்து சென்றுவிட்டது.

அதுவரையில் இலக்கில்லாமல் போய்க் கொண்டிருந்த எனது வாழ்க்கை, இனி இதுதான் உன் வாழ்க்கை.. இதன் வழியே செல் என்று திசை திருப்பிவிட்டது இடையில் நுழைந்த உறுதியான ஆத்திக மனசு. இப்பொழுதுதான் நினைத்துப் பார்த்தேன் 'ஆத்திகம்' என்பது எதுவுமே இல்லாதவனுக்கு எவ்வளவு பெரிய செல்வம் என்று..

என் தாய் இறந்த பின்பு கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தவன், மருதமலை முருகனை மட்டும் பார்க்கப் போகவில்லை. காரணம் வாய்ப்பு கிடைக்கவில்லை. போலாம்.. போகலாம்.. செல்வோம்.. என்றெல்லாம் திட்டமிட்டிருந்தும் பல சமயங்களில் ஏதாவது ஒரு குறுக்கீடுகள் வந்து தொலையும். அம்மாவே போயிருச்சு.. அப்புறம் நாம போயி என்ன பண்ண? போறதுக்கு மனசே இல்லை.. இப்படி என் மனசு சொல்லிச் சொல்லி என்னைத் தேற்றிக் கொண்டே வந்தது..

மனது மிகவும் கஷ்டமாக இருக்கும் நேரத்தில் பக்கத்தில் இருக்கும் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று மனதைத் தேற்றிவிட்டு வந்துவிடுவேன். இப்படித்தான் சென்ற ஞாயிற்றுக்கிழமைவரைக்கும் என் பொழைப்பு ஓடிக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் ஏப்ரல்-22 தி.நகர், நடேசன் பார்க்கில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் நண்பர் ஓசை செல்லா, கோவையில் ஒரு வலைப்பதிவர் முகாம் நடத்தப் போவதாக அறிவித்தவுடன் அடுத்த கணமே இப்பொழுது செல்லா அழைக்கவில்லை. முருகன்தான் அழைக்கிறான் என்றே நினைத்துக் கொண்டேன்.

இந்த முறை எப்படியாவது மருதமலைக்குப் போய் அவனை வணங்கிவிட்டு, என் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்போம் என்று கங்கணமே கட்டிக் கொண்டேன்.

இதற்காகவே சென்ற மாதத்தில் ஒரு சினிமா கம்பெனியில் அவர்கள் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கான வசனப் பகுதியை இரவு நேரப் பணியாக டைப்பிங் செய்து கொடுத்து, பணத்தைச் சேமிக்கத் துவங்கினேன். 2000 ரூபாய் சேர்ந்தது. முருகனைப் பார்க்கும் சந்தோஷத்தில் மே 19 அன்று கோவைக்கு வண்டியேறினேன்.

மே 20 அன்று நடந்த வலைப்பதிவர் முகாமில் கலந்து கொண்டுவிட்டு அன்று இரவு அங்கேயே தங்கியிருந்து மறுநாள் மருதமலைக்குச் செல்வது என்று பிளான். வலைப்பதிவர் முகாமும் அமைதியாகவே நடந்து முடிய, அன்று இரவு அங்கேயே தங்கினேன்.. காலை 8 மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்பினேன். "பஸ்ஸ்டாண்டில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை மருதமலைக்கு பஸ் இருக்கு ஸார்.." என்றார் நான் தங்கியிருந்த மேன்ஷனின் ஓனர்.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் ஏஸியிலேயே இருந்து பழகிவிட்டோமா.. அந்த நாளில் கோவை வந்திருந்த பல வலைப்பதிவர்கள் வெயிலில் வாடி வதங்கிய காட்சி கொடுமையாக இருந்தது. அந்தத் தாக்கம் எனக்கும் இருந்தது.

70 என்ற எண்ணுள்ள பேருந்தில் தொற்றிக் கொள்ள.. மேன்ஷனில் குளித்தது பத்தாது என்று இங்கே பஸ்ஸிற்குள்ளும் அனைவருமே வியர்வையில் குளித்து முடித்தோம்.

R.S.புரம், காந்தி பூங்கா, வடவள்ளி, வேளாண்மைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அரசு சட்டக்கல்லூரி இவற்றையெல்லாம் தாண்டி சுமாரான ஒரு மணி நேரத்தில், மருதமலை அடிவாரத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டது பேருந்து.

"மேல ஒரு தேங்கா பத்து ரூபா. இங்க ரெண்டு தேங்கா பத்து ரூபா ஸார்.." என்று தமிழ்நாட்டுக்கே உரித்தான வியாபார நுணுக்கங்களை ஒரு தாய்க்குலம் கையில் தேங்காயை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருக்க.. கடந்து சென்றேன்.

நான் அங்கு செல்வது இதுதான் முதல் முறை என்பதால் பஸ்ஸில் சென்றுவிடுங்கள் என்று அங்கேயிருந்த வாட்ச்மேன் அக்கறையாகச் சொன்னார். சரி.. பெரியவர் சொல்கிறார். கேட்போமே என்ற எண்ணத்தில் பஸ்ஸ¤க்கு டிக்கெட் எடுத்து.. (மருதமலை கோவில் நிர்வாகமே மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சியில் இருக்கும் சன்னதிதானம் வரைக்கும் பேருந்தை இயக்குகிறது) பஸ்ஸில் மலைக்குச் சென்றேன்.

கீழே இறங்கியதும் ஒரு கூட்டம் சூழ்ந்து கொண்டது.. "அண்ணே அபிஷேகத் தட்டுண்ணே.. நம்மகிட்ட இருபது ரூபாதாண்ணே.. மேல நாப்பது ரூபாண்ணே.." என்று ஒரு வருங்கால ரஜினிகாந்த் தோரணையில் இருந்தவன் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

நான்கு படியேறுவதற்குள் இடது புறம் 'முடி காணிக்கைச் செலுத்துமிடம்' என்ற போர்டு இருந்தது. வெறும் பத்தே ரூபாய்தான்.. ஒட்டு மொத்த முடியும் தலையிலிருந்து உதிர்ந்துவிடும்..

நினைத்துப் பார்த்தேன். நான் குடியிருக்கும் சென்னை, விருகம்பாக்கத்தில் என் தலையில் இருக்கின்ற தலைமுடியில் அரைவாசியை கட் செய்து, அவர்களே எடுத்துக் கொள்வதற்கு நான் நாற்பது ரூபாய் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது.. என்ன கொடுமை பாருங்கள்..

பத்து ரூபாயை நீட்டியவுடன் ஒரு பிளேடை இரண்டாக உடைத்து பாதி பிளேடை நம் கையில் கொடுத்தார் அங்கிருந்த கணக்காளர். கைலிக்கு மாறிக் கொண்டு அமர்ந்தேன். முடி அழித்தல் தொடர்ந்தது. சில நிமிடத்தில் தலையில் கை வைத்துப் பார்க்க.. ஏதோ ஒரு பாறாங்கல்லில் கை வைத்தது போல் இருந்தது.

முடித்துவிட்டு எழுந்தவுடன் எனக்காகவே காத்திருந்ததைப் போல் கணக்காளர் எழுந்து வெளியேற.. முடி வெட்டியவர் "எனக்குப் பணம் கொடுப்பா.." என்றார். "அதான் பத்து ரூபாதான்னு வெளில போட்டிருக்கேன்.." என்றேன். "அது அப்படித்தான் எழுதிருக்கும்.. எனக்கும் கொடுக்கணும்.." என்றார் விடாப்பிடியாக.

அப்போது எனக்கு முன்பாக முடி வெட்டிக் கொண்டுச் சென்றவர் திடீரென்று உள்ளே நுழைந்து தன் கையில் இருந்த ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அவர் கையில் திணித்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தார். இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் யார் வளர்த்துவிடுவது என்பது எனக்கு அப்போது கண நேரத்தில் புரிந்தது. "உங்க கேஷியர் சொல்லட்டும். தர்றேன்.." என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியேறினேன்.

அதே படியில் இரண்டு படிகள் கீழே இறங்கி வலது பக்கம் திரும்பினால், குளிக்கும் இடம். அங்கேயும் ஒரு பெண் இரண்டு ரூபாய் சோப்புக்களை விரித்து வைத்துக் கொண்டு ஐந்து ரூபாய்க்கு சளைக்காமல் விற்றுக் கொண்டிருந்தார். யார் கேட்பது?

நான் சோப்பு கொண்டு போயிருந்தபடியால் குளிப்பதற்கான இடத்திற்குச் சென்றேன். "மலையிலிருந்துதான் தண்ணீரை போர் போட்டு எடுத்திருக்கிறார்கள்" என்றார்கள். தொட்டுப் பார்த்தேன்.. ஜில்லென்ற உணர்வே இல்லை. ஆனால் சூடாகவும் இல்லை. ஒருவித மதமதப்பாக இருந்து. 'அரோகரா..' சொன்னபடியே குளித்து முடிச்சாச்சு.

உடைகளை மாற்றிக் கொண்டு கிளம்பும்போது எனக்கு முன்பாக குளித்த ஒரு பக்தர் தன்னுடைய விலையுயர்ந்த Gold வாட்ச்சை மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தார். அங்கே யாரிடம் கொடுப்பது என்பது தெரியாததால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், "யாராவது வாட்ச்சை தேடி வந்தா மேல உங்க ஆபீஸ¤க்கு வந்து வாங்கிக்கச் சொல்லுங்க.." என்று சொல்லிவிட்டு(அந்தப் பெண்ணின் முகம் போன போக்கைப் பார்க்கணுமே.. என்ன செய்றது?) படியேறினேன்..

வழியிலேயே இடது புறங்களும், வலது புறங்களும் கடைகள் பரந்து கிடக்கின்றன. அங்கேயும் சில பெண்கள் வளையல், நெற்றிப் பொட்டை பார்த்து, பார்த்து வாங்கிக் கொண்டிருந்ததார்கள்(!).

வழியில் அன்றைய அன்னதான நிகழச்சி நடந்து கொண்டிருந்தது. வர்க்க வித்தியாசம் இல்லாமல் காரில் வந்தவர்கள்கூட அதைச் சாப்பிடுவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. என்ன காரணம் என்று விசாரித்தேன். "அது தெய்வப் படையல். சாப்பிட கொடுத்து வைச்சிருக்கணும்.." என்றார்கள்.

மேலே ஏறியவுடன் நேராக அலுவலகத்திற்குள் நுழைந்து என் கையிலிருந்த வாட்ச்சை அவர்களிடம் ஒப்படைத்தேன். "யாராவது வந்தா கண்டிப்பா கொடுத்திர்றோம் ஸார்.." என்றார்கள். 'சரி' என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.

கீழே கடை வைத்திருப்பவர்கள் சொன்னது போலவே மேலே சன்னதியின் அருகில் இருக்கும் கடையில் அர்ச்சனைத் தட்டு நாற்பது ரூபாய்.. இதுக்காக யாராவது படியிறங்கி கீழ போயா வாங்கிட்டு வர முடியும்? அதையே வாங்கினேன்..

அந்தக் கடைக்காரப் பையன் என் தலையைப் பார்த்துவிட்டு "ஏன் சந்தனம் பூசவில்லை..?" என்றான். "உள்ளேதான தருவார்கள்.." என்றேன் அப்பாவியாய்.. "இல்ல ஸார்.." என்று சிரித்தவன் ஒரு சிறிய வாழை இலையில் சிறிதளவு சந்தனத்தை எடுத்துக் கொடுத்து உடன் ஒரு பன்னீர் பாட்டிலையும் கொடுத்து, "பன்னீரை சந்தனத்துல ஊத்திப் பிசைஞ்சு அதை எடுத்துத் தலைல தடவிக்குங்க.. அதுதான் வழக்கம்.." என்றான்.

சரி.. முன்ன பின்ன மொட்டையடிச்சிருக்கணும்.. இல்ல யாரையாவது மொட்டையடிக்க கூட்டிட்டு வந்திருக்கணும்.. ரெண்டுமே இல்லை. இப்படி ஏதாவது நடக்கத்தான் செய்யும்னு நினைச்சு அவன் சொன்னபடியே செய்தேன்.

அர்ச்சனைத் தட்டுக்கு சீட்டு (இரண்டு ரூபாய்) வாங்கவும் ஒரு கூட்டம். சிறப்புப் பாதையில் செல்லவும் ஒரு சீட்டு. பத்து ரூபாய். வாங்கினேன்.. என் பின்னால் வந்த ஒரு கூட்டம், அப்படியே என்னைத் தள்ளிக் கொண்டு போய் உள்ளே விட்டது.

சன்னிதான வாசலில் நிற்கும் ஒரு பெண் என் சிறப்பு அனுமதிச் சீட்டை வாங்கிக் கிழித்துப் போட்டுவிட்டு என்னை உள்ளே அனுமதித்தார். உள்ளே சென்றேன். குருக்கள் வந்து "கொடுங்கோ.." என்று சொல்லி கையை நீட்ட, நானோ ஆண்டிக் கோலத்தில் நின்று கொண்டிருந்த எம்பெருமான் முருகனையே பக்திப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஐயர் கிட்டத்தட்ட என் கையிலிருந்து அர்ச்சனைத் தட்டைப் பிடுங்கித்தான் சென்றார். போன வேகத்தில் திரும்பி வந்து "என்ன பேருக்கு அர்ச்சனை செய்யணும்..?" என்றார். "சரவணன்.." என்றேன்.. அதற்குப் பிறகு அவர் உச்சரித்த வார்த்தைகளில் "சரவணன்.." என்கிற வார்த்தை மட்டும்தான் எனக்குப் புரிந்தது. மீதி அவருக்கும், அந்த முருகனுக்கும் மட்டுமே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

கையில் வேலோடு ஆண்டிக் கோலத்தில் நிற்கிறான் முருகன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகட்டும் என்ற உமாதேவியின் ஆணைப்படியே இந்த இடமும் குமரனின் இடமாக அமைந்துவிட்டதாக தல புராணம் சொல்கிறது.

ஒரு மாலையைக் கொண்டு வந்த குருக்கள் என் கழுத்தில் போட்டார். பரவசமாகிவிட்டேன் நான். ஐந்து நிமிடங்கள் அங்கேயே நின்று என் கவனத்தில் இருந்த அத்தனை பேரையும் வாயால் உச்சரித்து "எல்லாரையும் நல்லா வைச்சிருய்யா முருகா.." என்று சொல்லி முடிக்கவும், குருக்கள் "இந்தப் பக்கமா போங்கோ.. இன்னும் ஆள் காத்திருக்காங்கள்லே.." என்று சொல்லவும் சரியாக இருந்தது.

அப்படியே வெளியே வந்தேன். சன்னிதானத்திற்கு இடது புறம் இருக்கும் தெய்வத்தையும், அதைச் சுற்றிப் பின்புறமாக வந்து என் அர்ச்சனைத் தட்டைக் கையில் வாங்கிக் கொண்டு பிரகாரத்திற்குள் வந்து நின்றேன். அங்கே வீற்றிருந்த பெருமாளையும் வணங்கிவிட்டு அப்படியே பிரகாரத்தில் அமர்ந்தேன்.

சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சப்தத்தைத் தவிர வேறு எந்தச் சப்தமும் அங்கே எழவில்லை. அமைதி.. அமைதி.. அமைதி.. கோவிலை நாடி பக்தர்கள் ஏன் ஓடோடி வருகிறார்கள் என்றால் அதற்கு முழு முதற் காரணம் அந்த அமைதிதான்..

இந்த அமைதியைத் தேடித்தான் மனிதர்கள் நாயாய், பேயாய் அலைகிறார்கள். கிடைக்கின்ற இடம் கோவிலில் மட்டும்தான் என்பதால் ஆண்டவன் எவ்வளவோ கஷ்டங்கள் கொடுத்தாலும், திரும்பத் திரும்ப பக்தன் கோவிலுக்கு வந்து ஆண்டவனைச் சேவித்துக் கொண்டுதான் இருக்கிறான். இதுதான் ஆத்திகம் வளர்ந்து கொண்டே செல்ல முழுமுதற் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த எனக்கு என் குடும்பத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் கண் முன்னே ஊஞ்சலில் ஆட.. அந்த கணத்தில் என் மனதிற்குள் எனக்கும், என் அப்பன் முருகப் பெருமானுக்கும் இடையிலே கடும் வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டது.(இது என்னவென்று புதிய பதிவொன்றில் சொல்ல ஆசைப்படுகிறேன்) கூடவே என் அம்மாவின் கடைசி நிமிட ஆசையை இந்தக் கணத்திலாவது செய்து முடித்தேனே என்ற திருப்தி.. இந்த நேரத்தில் என்னுடைய பூரிப்பை சொல்வதற்கான வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை..

ஒரு வழியாக முருகனிடம் கத்தி முடித்துவிட்டு, எழுந்து படியிறங்கியவனின் கண்ணில் பட்டார்கள் நம்முடைய நவக்கிரக தெய்வங்கள். மனிதர்களை முறை வைத்து ஆட்டி வைப்பவர்களே அவர்கள்தானே.. மூவர், மூவராக ஒன்பது பேரும் ஆளுக்கொரு பக்கமாக முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு மனிதர்களைப் பாடாப் படுத்துறாங்கப்பா..

எள்ளும், திரியும் வாங்கி ஒன்பது முறை நவக்கிரங்களைச் சுற்றி வந்தேன். திரியை எனது தலையை மூன்று முறைச் சுற்றி, முன்னால் இருந்த நெருப்பில் இட்டேன். எள்ளைத் தூக்கி நவக்கிரக சாமிகளின் பாதத்தில் வீசிவிட்டு தட்டை மறக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

நேராக முன்புறம் சென்று கொடி மரத்தின் முன்பாக இருந்த பிள்ளையாருக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு, கையில் வைத்திருந்த ஒரு மாலையை அந்தப் பிள்ளையாருக்குச் சாத்தினேன். மூன்று தோப்புக்கரணங்களை போட்டுவிட்டு நடந்தால் கீழே தான்தோன்றிப் பிள்ளையார் அமர்ந்திருந்தார். அவருக்கு "எண்ணெய் சட்டியை வாங்கி கொளுத்தி வைக்க வேண்டும்" என்றார்கள். அதையும் கனகச்சிதமாகச் செய்து அவருக்கும் ஒரு மூன்று தோப்புக்கரணங்களைப் போட்டுவிட்டு படியிறங்கினேன்..

அங்கேயே ஒரு மூலையில் மூலஸ்தானத்தில் பூர்வீக முருகன் தன் இரண்டு மனைவிகளுடன் வாசம் செய்கிறான். வலது புறம் வள்ளி, இடது புறம் தெய்வானை. அங்கேயும் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அவனிடமும் என் பெட்டிஷனை போட்டுவிட்டு அங்கே ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்திருந்து எழுந்து வந்தேன்..

கோவிலின் பின்புறம் பாம்பாட்டிச் சித்தரின் குகை இருப்பதாகச் சொன்னார்கள். அதை நோக்கியும் பக்தர்கள் கூட்டம் போக நானும் சென்று பார்த்தேன்.. அது ஒரு குகைதான். உள்ளே சித்தரின் புகைப்படம் இருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பாறையில் ஒரு பாம்பு ஊர்வதைப் போன்ற ரத்தக் கலரில் ஓவியம் இருந்தது.. இந்தக் குகை எப்போது உருவானது? அந்தச் சித்தர் யார் என்பதையெல்லாம் சொல்வதற்கு அங்கே யாருமே இல்லை.. போர்டில் இருந்ததைப் படித்துவிட்டு வெளியே வந்தோம். அரசுத் துறைகளின் லட்சணம் இப்படித்தானே இருக்கும்..?

மலையின் ஒவ்வொரு இடத்திலும் ஐந்தைந்து நிமிடங்களாக அமர்ந்து, அமர்ந்து கீழே இறங்கத் துவங்கினேன். ஒரு புத்தகக் கடையில் மருதமலையின் தல புராணம் பற்றிய புத்தகம் கேட்டேன். "அது மேல இந்து சமய அறநிலையத் துறை ஆபீஸ்லதான் ஸார் இருக்கும்." என்றார் புத்தகக் கடையில் இருந்த பெண்.

மீண்டும் மேலே அலுவலகத்திற்குச் சென்றேன். "அந்தப் புத்தகம் இப்பத்தான் பிரிண்டிங் பண்ண ஆர்டர் கொடுத்திருக்கோம். இன்னும் வரலை.." என்றார்கள். நல்ல பதில்தான் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் படியிறங்கினேன்.

கீழேயும் பஸ்ஸ¤க்காக ஒரு கியூ.. இந்தியாவில் எங்கே சென்றாலும் கியூதான்.. அப்போதுதான் ஒரு எண்ணம் உதிர்த்தது. வரும்போது பஸ்ஸில் வந்தோம். போகும்போதாவது முருகனுக்காக நடப்போமே.. இரண்டு கிலோ மீட்டர் தூரம்தானே.. என்ன ஆகிவிடப் போகிறது? நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்ற எண்ணத்தில் கீழே நடக்கத் துவங்கினேன்..

அதிகப் பழக்கம் இல்லாததால் அடிவாரம் வரையிலும் இருந்த ஓய்வெடுக்கும் மண்டபங்களில் பத்து நிமிடங்கள் அமர்ந்து, அமர்ந்து சரியாக ஒரு மணி நேரத்தில் அடிவாரத்தைத் தொட்டேன்.

வரும் வழியில் பல பக்தர்கள், கையில் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கொளுத்துகின்ற வெயிலில் செருப்பு கூட போடாமல் நேர்த்திக் கடன் செய்ய நடந்து வருவதைப் பார்த்தவுடன் என்னை நினைத்து மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டேன். சிறு பையன்களும், சிறுமிகளும்கூட நடந்து வருவதைப் பார்த்தவுடன் வரும்போதும் நடந்தே படியேறி இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதற்காக முருகன் என்னை மன்னிப்பான் என்று நம்புகிறேன்.

வழியில் படிகள்தோறும் ஓரத்தில் சில முருகன்களும், சில வள்ளிகளும், சில தெய்வானைகளும், சில முருகன்களுமாக அமர்ந்திருந்து தங்களது திருமணத்தின்போது எந்த அண்ணன் யானை ரூபத்தில் வந்து தங்களைக் காப்பாற்றப் போகிறான் என்பதைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதற்கு மேல் இந்த இடத்தில் இவர்களைக் கவனத்தில் கொள்வது தவறு என்பதால் மேற்கொண்டு எந்த 'விவரத்தையும்' நான் பார்க்கவில்லை. 'ரசிகர்கள்' மன்னிக்கவும்.

பக்தர்களோடு பக்தராக பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். என் தலையைப் பார்த்தவுடன் "அண்ணா.. தொப்பிண்ணா.." என்றபடியே திடீர் தங்கையான ஒரு பெண் என்னை நோக்கி ஓடி வந்தாள். அந்த ஒரு வார்த்தைக்காகவே இருபது ரூபாய் கொடுத்து, அந்தத் தொப்பியை வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு நடந்தேன்.

அப்போது மிகச் சரியாக பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில், இந்தப் பாட்டும் ஒலிக்கத் துவங்கியது.. அமைதியாக அந்தக் கடையோரமாக அமர்ந்து முழுப் பாடலையும் கேட்டேன். நீங்களும் கேளுங்கள் பக்த கோடிகளே..

கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே
புனித மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம்
தேடி வரும் மருத மலை..
மருத மலை.. முருகா..

மருதமலை மாமணியே.. முருகய்யா..
மருதமலை மாமணியே.. முருகய்யா...

தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்..

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்..
அய்யா உனது மனம் பெற மகிழ்ந்திடவே..

மருதமலை மாமணியே முருகய்யா...
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..
மருதமலை மாமணியே முருகய்யா...


தைப்பூச நன்னாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
தைப்பூச நன்னாளில்
தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா...
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..
மருதமலை மாமணியே முருகய்யா...

கோடிகள் கொடுத்தாலும்
கோமகனை மறவேன்..
நாடியென் வினை தீர நான் வருவேன்..
நாடியென் வினை தீர நான் வருவேன்..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக..
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்....
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக..
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்....
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா...
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா..
மருதமலை மாமணியே முருகய்யா...

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்..
நான் மறவேன்..
பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன்..
நான் வருவேன்..
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன்..
நான் மறவேன்..
பக்திக் கடலென பற்றித் தணிந்திட வருவேன்..
நான் வருவேன்..
பரமனின் திருமகனே... அழகிய தமிழ் மகனே...
பரமனின் திருமகனே... அழகிய தமிழ் மகனே...
காண்பதெல்லாம்..
உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம்
எனது பலம் உறுதுணை முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது..
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது..
பனியது மழையது நதியது கடலது..
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய்
குகனே.. வேலய்யா....
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...அ..அ..அ.அ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

மருதமலை முருகா..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா.."

மருதமலை முருகன் மீது தீராத காதல் கொண்ட திரையுலக ஜாம்பவான் திரு. சாண்டோ M.M.A.சின்னப்பத்தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி வெளியான 'தெய்வம்' படத்தின் இந்தப் பாடல்தான் தமிழ் மக்களிடையே மருதமலை முருகனைப் பற்றிப் பிரபலப்படுத்தியது.

குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் ஆன்மிக வைர வரிகளில், மதுரை சோமு அவர்கள் உச்சஸ்தாயியில் பாடி தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தப் பாடல் இது.

அதேபோல் 1972-க்கு பின்பான இளைய சமுதாயத்தினரிடையே கடவுள் பக்தி மானாவாரியாகப் பரவியதற்கு இந்தப் பாடலும், திரைப்படமும் ஒரு காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

திரு.சின்னப்பத்தேவரும் இக்கோவிலுக்கு பெரும் பொருட்செலவில் பல அறப் பணிகளைச் செய்திருக்கிறார். மலைப்பாதையில் இரவு நேரத்திலும் பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக அப்போதே மின் விளக்கு வசதிகளை செய்து கொடுத்ததும் அவர்தான். படியேறுபவர்கள் தங்கும் சில மண்டபங்களை மராமத்து செய்து புதுப்பித்துக் கொடுத்தவரும் அவர்தான் என்று அங்கே இருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னார். வாழ்க தேவர்.. 'ஒருவர் மறைந்தாலும் அவர் செய்த புண்ணியங்கள் மறையவே மறையாது..' என்பதற்கு தேவர் அவர்கள் ஒரு மிகப் பெரிய உதாரணம்..

பேருந்து நிலையம் வரும்வரையிலும் என் மனம் ஒரு நிலையில் இல்லை. என் அம்மா என்னுடனேயே நடந்து வருவதைப் போன்றே எனக்குத் தோன்றியது.. இப்போது எனது அம்மா நிஜமாகவே உடனிருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்..?

அந்தச் சந்தோஷத்தைப் பார்த்து ஒரு மகன் என்ற முறையில் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்..?

ஒரு கார் வைத்தாவது என் அம்மாவைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரு முறை முருகனைக் காட்டியிருக்கலாமே என்று இப்போது எனக்குத் தோன்றியது..

என்ன செய்வது? எல்லாம் முருகன் செயல்.. இப்போது என்னை இந்த ரூபத்தில், இந்தச் சமயத்தில் வரவழைத்திருப்பதுகூட அவன் செயல்தான் என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு மகன் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய ஒரு கடமையை வேண்டிய நேரத்தில் செய்ய வைத்திருக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த எனதருமை நண்பர் திரு.ஓசை செல்லா அவர்களுக்கும், 'தல' பாலபாரதி அவர்களுக்கும் எனது குடும்பத்தினர் சார்பாக இந்த உண்மைத்தமிழனின் பாதம் தொட்டு வணங்கும் வணக்கங்களும், நன்றிகளும்..

நீவிர் வாழ்க.. சிறப்புடன் வாழ்க..

கந்தனுக்கு வேல்! வேல்! முருகனுக்கு வேல்! வேல்! அரோகரா ! அரோகரா!

83 comments:

கோவி.கண்ணன் said...

நேற்று போட்ட மொட்டைக்கு இன்றைக்கு விளக்கமா ?

நவரசம் கலந்து எழுதி இருக்கிங்க !

பாராட்டுக்கள் !

Anonymous said...

உங்களது எழுத்துப்பாணி அருமை. மிக கூர்மையாக, அதே சமயத்தில் நக்கலும், நய்யாண்டியும் கலந்த சமுக சிந்தனையுடன் உள்ள பதிவு.

வடுவூர் குமார் said...

ஒரு 5 பதிவுகளாக போடவேண்டியதை ஒரே பதிவாக போட்டு அதை கடைசி வரை படிக்கவைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.:-))
'அர்த்தமுள்ள இந்துமதம்'
இங்கு விழுந்து தான் வந்தீங்களா? அப்ப நிச்சயம் வாழ்கை வசப்படும்.
வசப்பபட வாழ்த்துக்கள்.

Anonymous said...

அந்த முருகன் அருள் உங்களிடம் நின்று நிலைக்கட்டும்.

இளைஞர் என்றாலும் பல முதிர்ச்சியான சிந்தனையும், கண்ணோட்டம். வியக்கிறேன். பாராட்டுகிறேன்.

அழகன் முருகனிடம் ஆசை கொண்ட நீங்கள் அந்த அழகனைப்போலவே அழகாய் இருக்கிறீர்கள் - இந்த மொட்டையில்.

தங்கள் அன்னையின் அருளாசி நிச்சயம் உங்களுக்கு இருக்கும். முருகன் பக்தர்களின் இயலாமையை எப்போதும் அறிவான். முருகனை தரிசிக்காதது, தங்கள் அன்னைக்கு வருத்தமாய் இருந்திருந்தாலும், முருகன் அதை பொருட்படுத்த மாட்டான் என்று நான் தீர்மானமாய் நினைக்கிறேன்.

என் தாய் சமயபுரம் ஆத்தாவை 'இடைநிலை தெய்வம்" என்றது ஏனோ? தெய்வங்களில் அதென்ன இடைநிலை, கடைநிலை என்றெல்லாம்? விளக்குவீர்களா?

Anonymous said...

Me God

Anonymous said...

உம்முடைய பதிவை உடனே படிப்பவன் நான் (எத்தனை நீ,,,,,,ளமாயிருந்தாலும் சரி). ஆனா சில நாட்கள் முன்பு துக்ளக் கார்ட்டூன் போட ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கவலைப் பட்டேன். அதற்குத் தோதாக நேற்று மொட்டைத்தலைப் போஸ் வேற கொடுத்தியா பயந்தே போய்ட்டேன். அடுத்த 'சோ' நீதான் என்று. அப்பாடா இதான் கதையா

நல்லாருக்கு மூஞ்சி.

பேருக்குப் பின் கொண்டை போட்டது போல குடுமியும் வைத்தால் நல்லாருக்கும் (ஹி ஹி சும்மா தமாஷுக்கு)

Anonymous said...

I have been reading your blogs for quite some time, you bring out your experience and emotions in a very nice way. while reading I remembered my Thirupathi trip , more or less same experience. Inshaalla I will visit Maruthamalai too.

Sundar - dubai

உண்மைத்தமிழன் said...

//கோவி.கண்ணன் said...
நேற்று போட்ட மொட்டைக்கு இன்றைக்கு விளக்கமா ?
நவரசம் கலந்து எழுதி இருக்கிங்க !
பாராட்டுக்கள்!//

நன்றி கோவி ஸார்.. ஒரே நாளில் எழுத முடியவில்லை. அலுவலக வேலை அதிகம். அதுதான்.. ஒரு நாள் இடைவெளி. பொறுமையாக படித்து முடித்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
ஒரு 5 பதிவுகளாக போடவேண்டியதை ஒரே பதிவாக போட்டு அதை கடைசி வரை படிக்கவைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.:-))
'அர்த்தமுள்ள இந்துமதம்'
இங்கு விழுந்து தான் வந்தீங்களா? அப்ப நிச்சயம் வாழ்கை வசப்படும்.
வசப்பபட வாழ்த்துக்கள்.//

வாங்க வடுவூரார் அவர்களே..
5 பதிவுகளாகத்தான் போட வேண்டும் என்று நினைத்தேன். முதல் பதிவை படித்தவுடவனேயே எனது கிருத்திரம் தெரிந்து படிக்காமல் போய்விட்டால் என்னாவது என்ற பயத்தில்தான் இப்படி ஒரே நீண்.........ட..... பதிவு.. பொறுமையாகப் படித்தமைக்கு எனது நன்றிகள் ஸார்..

அர்த்தமுள்ள இந்து மதம்தான் கவியரசரின் 'உச்சபட்ச படைப்பு' என்று நான் கருதுகிறேன்..

என்னைச் சந்திக்கும் இளைஞர்களிடம் நான் அதிகமாக விசாரிப்பது 'இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா?' என்றுதான்..

நிச்சயம் எனக்கு வாழ்க்கை வசப்படும்.. அந்த நம்பிக்கையில்தான் நானும் இருக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

//புனிதன் said...
உம்முடைய பதிவை உடனே படிப்பவன் நான் (எத்தனை நீ,,,,,,ளமாயிருந்தாலும் சரி). ஆனா சில நாட்கள் முன்பு துக்ளக் கார்ட்டூன் போட ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கவலைப் பட்டேன். அதற்குத் தோதாக நேற்று மொட்டைத்தலைப் போஸ் வேற கொடுத்தியா பயந்தே போய்ட்டேன். அடுத்த 'சோ' நீதான் என்று. அப்பாடா இதான் கதையா
நல்லாருக்கு மூஞ்சி.
பேருக்குப் பின் கொண்டை போட்டது போல குடுமியும் வைத்தால் நல்லாருக்கும் (ஹி ஹி சும்மா தமாஷுக்கு)//

புனிதன் ஸார்.. அது என்னமோ எனக்கு ஒரு பக்க மேட்டராக எழுதுவது என்றாலே பிடிக்க மாட்டேங்குது.. என் ஸைட்டுக்குள்ள யார் வந்தாலும் குறைந்தபட்சம் ஒரு இருபது நிமிஷமாவது அவங்களை பிடிச்சு வைச்சிருக்கணும்னு விரும்புறேன்..
எனக்குப் பிடித்த செய்திகள் எங்கிருந்தாலும் அதை வெளியிடுவேன். அல்லது மேற்கோள்காட்டுவேன். அதில் ஒன்றுதான் துக்ளக் அட்டைப்படம். இதற்கு ஏன் இத்தனை பேர் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறீர்கள்?
குடுமி வைக்கலாம்.. தப்பில்லை.. ஆனால் அதுக்கப்புறம் பேரையும் மாத்தணும்னு சொல்வீங்க.. நமக்கு வேண்டாம்ப்பூ..

எனக்கு இந்த சரவணன்ற பேரே போதும்.. எங்க அம்மா ஆசையா வைச்ச பேரு..
பொறுமையா படிச்சு முடிச்சு கடுதாசியும் போட்டதுக்கு ரொம்ப நன்றிங்கோ..

Anonymous said...

குடுமி உமக்கு பொருத்தமாவே இருக்கும். விரைவில் குடுமி, பஞ்சகச்சத்தோடு உண்மைத்தமிழனை காண ஆசை.

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
உங்களது எழுத்துப்பாணி அருமை. மிக கூர்மையாக, அதே சமயத்தில் நக்கலும், நய்யாண்டியும் கலந்த சமுக சிந்தனையுடன் உள்ள பதிவு.//

நன்றி அனானி..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
அந்த முருகன் அருள் உங்களிடம் நின்று நிலைக்கட்டும்.
இளைஞர் என்றாலும் பல முதிர்ச்சியான சிந்தனையும், கண்ணோட்டம். வியக்கிறேன். பாராட்டுகிறேன்.//

பல கோடி நன்றிகள் அனானி ஸார்.. அன்றைய இரவில்தான் நான் நிம்மதியாய் இஉறங்கினேன்..

//என் தாய் சமயபுரம் ஆத்தாவை 'இடைநிலை தெய்வம்" என்றது ஏனோ? தெய்வங்களில் அதென்ன இடைநிலை, கடைநிலை என்றெல்லாம்? விளக்குவீர்களா?//

இதை கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில்தான் படித்தேன்.

நீலியம்மாள், படவட்டம்மாள், வக்கிரகாளியம்மாள் என்று தெருவோரமாக இருக்கும் சாமிகள் எல்லாம் கீழ்நிலை சாமிகளாம்.. இங்கே மிடில் கிளாஸ் பேமிலிகள்கூட போக மாட்டார்கள். ரோட்டோரமாக குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமே செல்வார்கள்.

காளியம்மாள், மாரியம்மாள், சமயபுரம் ஆத்தா - இந்த ஆத்தா வகையறாக்கள் எல்லாம் மிடில் கிளாஸ் பேமிலியின் இஷ்ட தெய்வங்களாம்.. இந்த தெய்வங்களுக்குத்தான் அதிகமான மக்கள் ஆதரவும் இவர்களுக்குத்தான் உண்டாம்.

அதற்கு மேல்தான் இந்த காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திண்டுக்கல் அபிராமி, காசி விசாலாட்சி அம்மன்களாம்..

இப்படி சாமிகளுக்குள்ளேயே பர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ், தேர்ட் கிளாஸ் என்று வைத்தால் நாத்திகவாதிகள் ஏன் நம்மைத் திட்ட மாட்டார்கள்..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
I have been reading your blogs for quite some time, you bring out your experience and emotions in a very nice way. while reading I remembered my Thirupathi trip , more or less same experience. Inshaalla I will visit Maruthamalai too.
Sundar - dubai//

வாருங்கள் சுந்தர் ஸார்..

தெய்வ நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல.. வாழ்வை நகர்த்திச் செல்ல நம்முடனேயே இருக்கும் ஒரு சக்தி.. அது நமக்கு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவுக்கு நாம் சக்தி படைத்தவர் என்றுதான் பொருள்.

என்னுடைய அனுபவம் உங்களுக்கும் இருக்கிறது என்றால் எல்லாம் முருகன் செயல்..

நீங்களும் அடுத்த முறை வரும்போது மருதமலை சென்று முருகனை தரிசியுங்கள்..

பொறுமையாக எனது பதிவைப் படித்தமைக்கு எனது நன்றிகள்..
வாழ்க வளமுடன்..

Anonymous said...

என்னோட கமெண்டு எங்கே? கருத்து சுதந்திரம் இங்கே இல்லையா?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
என்னோட கமெண்டு எங்கே? கருத்து சுதந்திரம் இங்கே இல்லையா?//

ஏன் இல்ல.. அதான் போட்டுட்டேன்ல..

ஆட்சேபணைக்குரிய வாசகங்கள் இருந்தால் அது இங்கே மட்டுறுத்தப்படும் அனானியாரே.

வர்றதே முகமூடி போட்டுக்கிட்டு.. அதுல எதுக்கு உங்களுக்கு கொள்கை விளக்கம்..? தேவையா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படித்து முடி எனக் கட்டி வைக்கும் எழுத்து; பாராட்டுக்கள்.
அம்மாவை கோவிலுக்கு கூட்டிச் சென்றிருக்கலாம். பெரியார் தாயார் தனது இறுதிக்கிரிகைகளைக் சைவசமய முறைப்படி செய்ய வேண்டுமென ஆசைப்பட்டு; பெரியாரிடம் கேட்டும் விட்டாராம்.
அவர் இறந்த போது சமயச்சடங்குகள் தடல் புடலாக நடந்த போது; பெரியார் சீடர் ஒருவர் "ஐயா இதெல்லாம் முட்டாள் தனம் என்பீங்க?? இதை நீங்கள் செய்கிறீர்களே!! எனக் கேட்ட போது; பெரியார்
" அம்மா செத்துட்டா? ஒன்னு எரிக்க வேண்டும் இல்ல அடக்கம் செய்ய வேண்டும் ஊறுகாயா போடமுடியும்; அதான் எரிக்கிறேன்" என்றாராம்.இப்படிப் படித்ததாக ஞாபகம். நான் பெரியாரை இதற்காக மதிக்கிறேன்.அவர் பெற்ற தெய்வத்தை மதித்தவர்;
நான் முன்பு கோவில்களுக்குச் செல்வேன்...2004 ல் இந்தியா வந்த போதும்; வெளிநாடுகளில் கோவில்
வியாபாரத் தலமாகவும்; லிமிடட் கொம்பனிகளுமாக இயங்கத் தொடங்கியது கண்டு; கோவிலுக்குப் போகாமலும் இறைவனை வழிபடலாம்..எனும் நிலைக்கு வந்துள்ளேன்.
ஆனால் கண்ணதாசனையும்;இராமகிருஸ்னரையும்;பெரியாரையும் கிடைக்கும் போது படிக்கிறேன்

Anonymous said...

உண்மைத்தமிழன்,
நீங்கள் இங்கே முருகா என அமைதியா இருக்கீங்க, அங்கே உங்களது ரசிகர் மன்றத்தினரால் நடத்தப்படும் போலி உண்மைத்தமிழன் லக்கியின் கலைஞர் பிலாக்கில் கலகம் வரவழைத்துக் கொண்டுள்ளார். போய் என்னவென்று விஜாரிக்கவும்.

Anonymous said...

எங்கள் உண்மைத்தமிழனிடம் கொள்கை சுதந்திரம் பற்றிக் கேட்கும் அனானியைக் கண்டிக்கிறோம்.

உண்மைதமிழன் பேரவை
ஷார்ஜா

Anonymous said...

நல்ல பதிவு.

Anonymous said...

அப்போ நான் அழகில்லையா!!!

Anonymous said...

தங்களின் பதிவு கண்டோம். அகமகிழ்ந்தோம்.

Anonymous said...

தங்களிடம் ஐ.பி கவுண்டர் இருக்கா!! இல்லைஎனில் எனது ஐ.பியை நோட் செய்துகொள்ளுங்கள்

Anonymous said...

என்ன கபில்தேவ் அவுட்டா?

மாசிலா said...

ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க உண்மைத்தமிழன். நேரடி வர்ணனை மாதிரி இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியலை.

உணர்வு பூர்வமான உங்களுடைய வாழ்க்கை நகழ்வுகளை எங்களுடன் பங்கிட்டுக் கொண்டதற்கு மிக்க நன்றிங்க.

//ஒரு நாள் இரவு 12.30 மணிக்கு என் கண் முன்னே வீட்டிலேயே இறந்தவர், அன்றைய தினம் மாலை 4 மணிவரை மருதமலை முருகனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.// வார்த்தைகளால் விவரிக்க முடியாத கட்டங்கள். வேதனையை பகிர்ந்து கொள்கிறோம்.

//என் அண்ணன் நழுவவதில் "கம்யூனிஸ்ட்காரர்"களைவிட வித்தகர்.// யாருகிட்டேயோ வீண் வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கீங்க. உஷார் சார்! சீனா ரஷ்யா உளவாளிங்க உங்கள கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

//செல்லா அழைக்கவில்லை. முருகன்தான் அழைக்கிறான் என்றே நினைத்துக் கொண்டேன்.// செல்லாவை முருகனாகவே ஆக்கிவிட்டீர்களா? பாத்துசார்! அவரு கோவிச்சிக்க போறாரு. அவர் வேற மாதிரி டைப்புங்க.

//என் கவனத்தில் இருந்த அத்தனை பேரையும் வாயால் உச்சரித்து "எல்லாரையும் நல்லா வைச்சிருய்யா முருகா.." என்று//
எங்களையும் நினைத்து பாத்ததுக்கு ரொம்ப நன்றிங்க.;-)

//ஒரு கார் வைத்தாவது என் அம்மாவைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரு முறை முருகனைக் காட்டியிருக்கலாமே என்று இப்போது எனக்குத் தோன்றியது..// மனதை பிழியும் வரிகள்.

பகிர்ந்தமைக்கு நன்றி உண்மைத்தமிழன்.

துளசி கோபால் said...

அருமையா எழுதி இருக்கீங்க சரவணன்.

மருதமலைக்கு நான் போய் வருஷம் முப்பதாச்சு.

அநேகமா மறந்துபோயிருந்த விவரங்களை ஞாபகப்படுத்தினதுக்கு ந்ன்றி.

அம்மா மேலுலகில் இருந்து உங்களை வாழ்த்துவாங்க.

நானும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லிக்கறேன்.

( எனக்கும் ஒரு மொட்டை பாக்கி இருக்கு.)

Anonymous said...

உண்மைத்தமிழன் இங்கே மூவர் அனானி ஆட்டம் ஆடுகின்றனர். நானும் இணைந்து கொள்ளட்டுமா

Anonymous said...

உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். அருமையாக எழுதுகிறீர்கள்.

Anonymous said...

அனானிகளுக்கு பதில் சொல்லாமல் எங்கே போய்விட்டீர்கள். நேற்று 30 கமெண்ட்டு கை வலிக்க போட்டு உள்ளோம். பதில் வாங்காமல் நகரப் போவதில்லை

Anonymous said...

அருமையான பதிவு

Anonymous said...

நல்ல பதிவு.

Anonymous said...

படித்தேன் ரசித்தேன்

Anonymous said...

சூப்பர் பதில் பக்தா!!!

Anonymous said...

//புனிதன் ஸார்.. அது என்னமோ எனக்கு ஒரு பக்க மேட்டராக எழுதுவது என்றாலே பிடிக்க மாட்டேங்குது.. என் ஸைட்டுக்குள்ள யார் வந்தாலும் குறைந்தபட்சம் ஒரு இருபது நிமிஷமாவது அவங்களை பிடிச்சு வைச்சிருக்கணும்னு விரும்புறேன்//

மேட்டர் இப்பதான் புரிஞ்சுது!
இனிமே இந்தப் பக்கம் தலை வெச்சி கூட படுக்க மாட்டேன்!

உண்மைத்தமிழன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
படித்து முடி எனக் கட்டி வைக்கும் எழுத்து; பாராட்டுக்கள்.
அம்மாவை கோவிலுக்கு கூட்டிச் சென்றிருக்கலாம்.//

யோகன் ஸார்.. அப்போது அம்மா அதிகப்பட்சம் வீட்டுக்குள்தான் நடக்க முடியும். உடலில் வலு இல்லை. எங்கு சென்றாலும் சைக்கிள் ரிக்ஷாவில்தான் அழைத்துச் செல்வோம். ஐந்து நிமிடம் நடந்தாலே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்.. இதில் எங்கே அழைத்துச் செல்வது..?

//நான் முன்பு கோவில்களுக்குச் செல்வேன்...2004 ல் இந்தியா வந்த போதும்; வெளிநாடுகளில் கோவில்
வியாபாரத் தலமாகவும்; லிமிடட் கொம்பனிகளுமாக இயங்கத் தொடங்கியது கண்டு; கோவிலுக்குப் போகாமலும் இறைவனை வழிபடலாம்..எனும் நிலைக்கு வந்துள்ளேன். ஆனால் கண்ணதாசனையும்; இராமகிருஸ்னரையும்; பெரியாரையும் கிடைக்கும் போது படிக்கிறேன//்

எல்லா இடத்திலும்தான் கோவில் வியாபாரக் கேந்திரமாகிவிட்டது. ஆனால் கடவுள் இதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பது உண்மை. நானும் நீங்கள் சொன்ன மூவரையுமே படித்துள்ளேன். படிப்பதில் தவறில்லை. தெரிவு செய்வதில்தான் நமது மன அமைதி இருக்கிறது.

பொறுமையாக எனது பதிவைப் படித்தமைக்கு எனது நன்றிகள் யோகன் ஸார்..

Anonymous said...

ராம், ஒரு கதை சொல்லு ராம்

Anonymous said...

இந்தப் பதிவுப் பக்கம் வருகிறவர்கள் இங்கேயே இருக்க வேண்டுமென்று விரும்பினால் எவ்வளவு நீளமாக இருப்பினும் சரி!

ஆனால் கும்மிப் பதிவாக இருக்க வேண்டுமென்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்!

(ஹிஹி நாங்க பதிவைப் படிச்சாத்தானே)

உண்மைத்தமிழன் said...

//தகவல்.காம் said...
உண்மைத்தமிழன்,
நீங்கள் இங்கே முருகா என அமைதியா இருக்கீங்க, அங்கே உங்களது ரசிகர் மன்றத்தினரால் நடத்தப்படும் போலி உண்மைத்தமிழன் லக்கியின் கலைஞர் பிலாக்கில் கலகம் வரவழைத்துக் கொண்டுள்ளார். போய் என்னவென்று விஜாரிக்கவும்.//

விசாரிக்கிறேன்.. விசாரிக்கிறேன்.. ஒரு பின்னூட்டம் போடுறதுக்குள்ள பத்து பேரு போட்டுத் தள்ளுறீங்க.. எப்படிய்யா நான் பதில் போடுறது?

Anonymous said...

===========

இதை கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில்தான் படித்தேன்.

நீலியம்மாள், படவட்டம்மாள், வக்கிரகாளியம்மாள் என்று தெருவோரமாக இருக்கும் சாமிகள் எல்லாம் கீழ்நிலை சாமிகளாம்.. இங்கே மிடில் கிளாஸ் பேமிலிகள்கூட போக மாட்டார்கள். ரோட்டோரமாக குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமே செல்வார்கள்.

காளியம்மாள், மாரியம்மாள், சமயபுரம் ஆத்தா - இந்த ஆத்தா வகையறாக்கள் எல்லாம் மிடில் கிளாஸ் பேமிலியின் இஷ்ட தெய்வங்களாம்.. இந்த தெய்வங்களுக்குத்தான் அதிகமான மக்கள் ஆதரவும் இவர்களுக்குத்தான் உண்டாம்.

அதற்கு மேல்தான் இந்த காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திண்டுக்கல் அபிராமி, காசி விசாலாட்சி அம்மன்களாம்..

இப்படி சாமிகளுக்குள்ளேயே பர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ், தேர்ட் கிளாஸ் என்று வைத்தால் நாத்திகவாதிகள் ஏன் நம்மைத் திட்ட மாட்டார்கள்..?

===========

ஐயா,

தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

இதில் என் புரிதல் வேறானது. தெய்வங்களில் மேன்மை, தாழ்மை இல்லை. மனிதர்களின் மனதில் - அவர்களின் அனுபவங்களிலும், விருப்பங்களிலும் உண்டு. அதைப்பொறுத்தே இறைவடிவங்களை மனிதன் படைத்து தொழுகிறான்.

முருகன் ஒருவனே அழகானவனாக தெரிகிறான் என்று நீங்கள் சொல்லியிருப்பதை மீண்டும் கவனிக்கவும். உங்களுக்கு முருகன் விருப்பமாக இருக்கிறான். ஆனால், வட இந்திய கலாசார சூழலில் பிறந்த ஒருவனுக்கு முருகன் பரிச்சயம் இருப்பதில்லை. அவன் வேறு இறைவடிவங்களை தொழுகிறான்.

அதுபோலவே, மனித மனங்களின் பாகுபாடு குறித்தே இறைவடிவங்களிலும் நீ, நான் என்று மனிதன் விருப்பு, வெறுப்பு கொள்கிறான்.

ஆனால், எல்லா சக்திகளும் ஒன்றுதான் என்பதே இந்துமதம். நாத்திகர்கள் கேலி செய்கிறார்கள் அது நியாயம் என்று நீங்கள் நக்கல் செய்வதுபோல் தோன்றுகிறது அறிந்து மனம் வருந்துகிறேன்.

அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். நெருப்பினில், சிறிதென்றும், பெறிதொன்றும் உண்டோ என்றான் பாரதி. அது இந்த இறைவடிவங்களுக்கும் பொருந்தும்.

காளியை தாழ்நிலை என்று நீங்கள் சொல்கிறீர்களே? அந்த காளியைத்தான் தன் விருப்ப கடவுளாக ஆயுள் முழுதும் தொழுது உய்ந்தார் இராமகிருஸ்ண பரமஹம்சர். அந்த மகானை மேன்மட்டத்து மக்களும்தான் தொழுகிறார்கள். கல்கத்தாவில் எல்லா காளிகளையும் மேன்மட்டத்து மக்களும் வணங்குகிறார்கள். அங்கு பேதமில்லை. அதே ஊரில், முருகனைத்தான் ஒரு காவல்தெய்வம் போல வைத்திருக்கிறார்கள் (என் புரிதல்தான்). காரணம், தெய்வங்களிடம் இல்லை. மனிதர்களின் மனங்களிலே.

சரிதானா?

உண்மைத்தமிழன் said...

//ஷேக் பாபா ஷேக் said...
எங்கள் உண்மைத்தமிழனிடம் கொள்கை சுதந்திரம் பற்றிக் கேட்கும் அனானியைக் கண்டிக்கிறோம்.
உண்மைதமிழன் பேரவை
ஷார்ஜா//

ஐயா ஷேக்கு.. அத விடு.. அதான் நான் போட மாட்டேன்னு சொல்லிட்டேன்ல.. நீ எதுக்கு ஷார்ஜால இருந்து டென்ஷனாகுற..?

//ஸ்ரீகிருஷ்னன் said...
நல்ல பதிவு.//
//கண்ண பரமாத்மா said...
அப்போ நான் அழகில்லையா!!!//

ஐயோ.. இருக்குற உன் அழகைப் பத்தித்தான் பக்கம் பக்கமா எழுதி வைச்சிருக்காங்களே.. இதுல உனக்கென்ன சந்தேகம்? நீ கொள்ளை அழகு ராசா.. அதுலேயும் தலைல மயில் இறகை வைச்சுக்கிட்டு குழந்தை போஸ்ல தவழ்ந்து வர்ற அழகு இருக்கு பாரு.. நீதான்யா சூப்பர் ஸ்டார்.. நல்லாயிருப்பா.. நல்லாயிரு..

//126.234.45.34 said...
தங்களிடம் ஐ.பி கவுண்டர் இருக்கா!! இல்லைஎனில் எனது ஐ.பியை நோட் செய்துகொள்ளுங்கள்//

ஏய்யா.. இதுக்கு ஒரு பின்னூட்டமா? என்ன மேட்டர்ன்னு சொன்னா என்னங்கய்யா?

//கவாஸ்கர் said...
என்ன கபில்தேவ் அவுட்டா?//

ஆமாய்யா.. அப்படியே ரவிசாஸ்திரி, வெங்க்சர்க்கார், பேடி, பிரசன்னா இவுகளையெல்லாம் விட்டுட்டீங்க..?

உண்மைத்தமிழன் said...

//மாசிலா said...
ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க உண்மைத்தமிழன். நேரடி வர்ணனை மாதிரி இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியலை.
உணர்வு பூர்வமான உங்களுடைய வாழ்க்கை நகழ்வுகளை எங்களுடன் பங்கிட்டுக் கொண்டதற்கு மிக்க நன்றிங்க.//

மிக்க நன்றி மாசிலா ஸார்..

சில நிகழ்வுகளை மனதிற்குள்ளேயே போட்டு வைத்துக் கொள்ளக்கூடாது. யாரிடமாவது சொல்லிவிட வேண்டும்.

அவர்களுக்கும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது நடந்து கொண்டிருந்தாலோ என் கஷ்டத்தை அவர்கள் அனுபவிக்காமல் தப்பிக்கலாமே.. அதற்காகத்தான்..

Anonymous said...

பதிலுக்கு நன்றி.
அ.மு.க
ஹைதராபாத் கிளை மற்றும்
பங்களூரு கிளை

Anonymous said...

கும்தலக்கடி கும்மாவா உண்மைத்தமிழன்ன சும்மாவா

Anonymous said...

//ராம், ஒரு கதை சொல்லு ராம் //

உண்மைத் தமிழன் உண்மைத் தமிழன்னு ஒரு இளிச்ச வாயன் இருந்தானாம்.

தேவயாணி : காமெடிக் கதையா ராம்

ராம் : ஆமா. அப்பத்தான எல்லாரும் கும்மி அடிக்க முடியும்

(நான் வலைப்பதிவர் சங்கத்துச் சிங்கம் இராம் அல்ல)

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
அருமையா எழுதி இருக்கீங்க சரவணன்.
மருதமலைக்கு நான் போய் வருஷம் முப்பதாச்சு.
அநேகமா மறந்துபோயிருந்த விவரங்களை ஞாபகப்படுத்தினதுக்கு ந்ன்றி.
அம்மா மேலுலகில் இருந்து உங்களை வாழ்த்துவாங்க.
நானும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லிக்கறேன்.
(எனக்கும் ஒரு மொட்டை பாக்கி இருக்கு.)//

மிக்க நன்றி டீச்சர்..

எத்தனை வருஷமானாலும் நம் தெய்வங்களை நாம் மறக்க முடியாது டீச்சர். அப்படியே நாம் மறக்க முயற்சித்தாலும் மறக்க முடியாத அளவுக்கு கண்டிப்பாக ஒரு சூழலை ஏற்படுத்துவான் ஆண்டவன்.

உங்களுக்கும் ஒரு மொட்டை பாக்கி இருக்குன்னு சொல்லிருக்கீங்க.. மறக்காம வந்து போட்ருங்க..

Anonymous said...

(a+b)^2 = a^2+b^2+2ab

உண்மைத்தமிழன் இந்த ஃபார்முலா புரியல.. பிளீஸ் எக்ஸ்பிலய்ன்

Anonymous said...

Beautiful write up. It was lively. After reading I felt I also went to Maruthamalai.

I really enjoy your writing!

Good and Best Wishes


Srinivas from Dubai

உண்மைத்தமிழன் said...

நாலாவது தூண், பில் கிளிண்டன், வெற்றிக்கொடி கட்டு, சீனிகம், ராஜகாளியம்மன், பாளையத்தம்மன், வருவான் வடிவேலன், சிக்க விரும்பாதவன், தேவயானி, டெண்ட் மாஸ்டர், உண்மைத்தமிழன் பேரவை-ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளை, முன்னாள் அரசியல்வாதி, ராம், கணக்குல பெயில்..

அப்பப்பா.. ஏம்ப்பா இம்புட்டு பேர்ல வந்து குவிஞ்சீங்கன்னா நான் யாருக்கு அரோகரா போடுறது சொல்லுங்க..? அதுனால உங்க எல்லாருக்கும் சேர்த்து மொத்தமா முருகனை வேண்டிக்குறேன்.. முருகா.. இந்தப் புள்ளைகளுக்கெல்லாம் நல்ல புத்தியைக் கொடு.. நல்ல வாழ்க்கையைக் கொடு.. இது மாதிரி உன்னைப் பத்தியும் கண்டிப்பா எழுதுவாங்க.. யாரையும் கை விட்ராத சாமி.. அல்லாரும் உன் புள்ளைகதான்..

போதுமா கண்ணுகளா..? ரொம்ப கஷ்டப்பட்டு சங்கத்து வேலையெல்லாம் செய்யாதீங்கப்பா.. முதல்ல அவுங்கவங்க வீடு.. அதுக்கப்புறம் சங்கம், கூட்டம், மீட்டிங்.. ஓகேவா?

Anonymous said...

//ரொம்ப கஷ்டப்பட்டு சங்கத்து வேலையெல்லாம் செய்யாதீங்கப்பா.. முதல்ல அவுங்கவங்க வீடு.. அதுக்கப்புறம் சங்கம், கூட்டம், மீட்டிங்.. ஓகேவா?
//

நான்தான் சொல்றனில்ல! நான் சங்கத்து ஆளு இல்லைன்னு!

நானும் முருக பக்தன்தான்! அடையாளம் தெரியும்ணுமின்னா என்னை நல்லா உத்துப் பாருங்க!

எல்லாரையும் படைப்பவனும் நானேன்னு தெரியும்! எனைத் தேடி நீங்க ஒரு இடம் வந்தால் நான் அங்க இருக்க மாட்டேன்! நானா விரும்பினால் உங்களைத் தேடி வருவேன்!

உம்ம பேருலயே ஆளுங்களைப் படைப்பேன்! ஆனா உம்மைக் கைவிட மாட்டேன்!

:)

குன்றிருக்கும் ஊருக்கு வந்தால் கூட என்னைக் குமுற முடியாது!

இப்ப புரியுதா நான் யாருன்னு?

Anonymous said...

ஆசிய அனானிகளுக்கு பதில் அளித்த அண்ணன் உண்மைத்தமிழனுக்கு நன்றி தெரிவித்து ஆசிய கும்மி நிறைவடைகிறது. அடுத்து அமெரிக்க நேரத்தில் அமெரிக்க கும்மியை தொடர அமெரிக்க அ.மு.க செயலாளாரை அழைக்கின்றேன்.

கோபால் பல்பொடி

Anonymous said...

ஆதியும் நானே! பாதியும் நானே!
ஐம்பதும் நானே! நூறும் நானே!

ஆண்டவனாகிய நான் நல்லவர்களைச் சோதிப்பேன்! ஆனால் கைவிட மாட்டேன்!

பக்தா! கவலைப் படாதே!

யாமிருக்க பயமேன்!

Anonymous said...

குவார்ட்டர் அடித்து குப்புற விழுந்தாலும் உமக்கு மீசையில் மண் ஒட்டாமல் பாதுகாப்பவன் நானே!

:))

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
ஐயா,
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
இதில் என் புரிதல் வேறானது. தெய்வங்களில் மேன்மை, தாழ்மை இல்லை. மனிதர்களின் மனதில் - அவர்களின் அனுபவங்களிலும், விருப்பங்களிலும் உண்டு. அதைப்பொறுத்தே இறைவடிவங்களை மனிதன் படைத்து தொழுகிறான்.
முருகன் ஒருவனே அழகானவனாக தெரிகிறான் என்று நீங்கள் சொல்லியிருப்பதை மீண்டும் கவனிக்கவும். உங்களுக்கு முருகன் விருப்பமாக இருக்கிறான். ஆனால், வட இந்திய கலாசார சூழலில் பிறந்த ஒருவனுக்கு முருகன் பரிச்சயம் இருப்பதில்லை. அவன் வேறு இறைவடிவங்களை தொழுகிறான்.
அதுபோலவே, மனித மனங்களின் பாகுபாடு குறித்தே இறைவடிவங்களிலும் நீ, நான் என்று மனிதன் விருப்பு, வெறுப்பு கொள்கிறான்.
ஆனால், எல்லா சக்திகளும் ஒன்றுதான் என்பதே இந்துமதம். நாத்திகர்கள் கேலி செய்கிறார்கள் அது நியாயம் என்று நீங்கள் நக்கல் செய்வதுபோல் தோன்றுகிறது அறிந்து மனம் வருந்துகிறேன்.
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். நெருப்பினில், சிறிதென்றும், பெறிதொன்றும் உண்டோ என்றான் பாரதி. அது இந்த இறைவடிவங்களுக்கும் பொருந்தும்.
காளியை தாழ்நிலை என்று நீங்கள் சொல்கிறீர்களே? அந்த காளியைத்தான் தன் விருப்ப கடவுளாக ஆயுள் முழுதும் தொழுது உய்ந்தார் இராமகிருஸ்ண பரமஹம்சர். அந்த மகானை மேன்மட்டத்து மக்களும்தான் தொழுகிறார்கள். கல்கத்தாவில் எல்லா காளிகளையும் மேன்மட்டத்து மக்களும் வணங்குகிறார்கள். அங்கு பேதமில்லை. அதே ஊரில், முருகனைத்தான் ஒரு காவல்தெய்வம் போல வைத்திருக்கிறார்கள் (என் புரிதல்தான்). காரணம், தெய்வங்களிடம் இல்லை. மனிதர்களின் மனங்களிலே. சரிதானா?//

மிக்க சரிதான் அய்யா.. என்னுடைய புரிதலும் ஒன்றுதான்.. அவரவர் மனம் எந்தக் கடவுளை விரும்புகிறதோ அந்தக் கடவுளே கதி என்று சரணாகதி அடைகிறார்கள். இதில் தவறேதும் இல்லை என்பதுதான் எனது கருத்தும்.

இந்து மதம் ஆழ்கடலைப் போன்றது.. கோடிக்கணக்கான மக்களைக் கொண்டதால் சில பகுதிகளில் சில கடவுகள்கள்.. பல பகுதிகளில் பல கடவுள்கள் என்ற ரீதியில் தெய்வங்கள் அமைந்திருக்கின்றன.

தெய்வங்களில் கீழ்நிலை, மேல் நிலை இல்லை என்றுதான் நானும் உணர்கிறேன்.. ஆனால் பெருவாரியான மக்கள் அப்படி இல்லை. அதைத்தான் சொல்ல வந்தேன்..

ஆனால் அனைவருக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றுதான். கடவுள் பக்தி.. அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் நாமும் இதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது..

உண்மைத்தமிழன் said...

ஐயா கோபால் பல்பொடி.. அடுத்தது அமெரிக்க அனானி அண்ணன்களா? வாங்கப்பா.. வாங்க.. எப்படியிருந்தாலும் பதில் நாளைக்குத்தான் கிடைக்கும். இப்பவே சொல்லிப்புட்டேன்..

ஐயா கடவுளே.. நீ சோதிப்ப.. எனக்குத் தெரியும்.. கடைசில வந்து காப்பாத்துவ.. அதுவும் எனக்குத் தெரியும்.. இருந்தாலும் வசனம் மறக்காம இருக்க என்கிட்டயே சொல்லிக் காட்டுற பாரு.. உன்னை திருத்தணி கோவிலுக்கு டிரான்ஸ்பர் பண்றேன்..

மானிட்டர் மகாதேவன் ஸார்.. என்னைக் காப்பாத்துறது 'நீங்க'தான்றதும் எனக்குத் தெரியும்.. நல்லாயிருங்க.. நல்லாயிருங்க..

Anonymous said...

கதை கேட்ட தேவயாணிக்காக ஒரு சீரியஸ் கதை!

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். ஒரு தெருவும் தவறாமல் நிறைய டாஸ்மாக் கடைகள் இருப்பதைக் கண்டு வியந்த அவர் தானும் ஒரு கடைக்குள் நுழைந்தார்.

அங்கு சிலர் பீர் அருந்திக் கொண்டிருக்க அதை என்னவோ என்று நினைத்து தனக்கும் ஒன்று கொண்டு வருமாரு கடைச் சிப்பந்தியை பணித்தார்.

அவரும் கொண்டு வந்து கொடுக்க, குடித்த இவருக்கு ஒன்றும் ஆகவில்லை! "அட என்னடா இது! ஒன்றுமே இல்லை! இதைப் போய் எதற்கு இத்தனை பேர் அருந்துகிறார்களே" என்று தனக்குள் ஆச்சர்யப்பட்டவாறே மேலும் சில பாட்டில்கள் வாங்கிப் பருகுகிறார்.

அப்படியே 2,3,4,5,6 என்று போய்க்கொண்டிருக்க 6,7 பீர் அடிச்சும் அசராம இருக்காரே இந்த ஆளுன்னு கடைக் காரர் யார் நீங்க? ன்னு கேக்க
கடவுள் சொன்னாரம் "நாந்தான் கடவுள்"னு.

கேட்ட கடைக் கார ஆள் சிரிச்சிகிட்டே சொன்னாராம்.

"ஓஹோ! இப்பத்தான் உனக்கு நல்லா ஏறிடுச்சு போல"

உண்மைத்தமிழன் said...

//ராம் said...
கதை கேட்ட தேவயாணிக்காக ஒரு சீரியஸ் கதை!
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். ஒரு தெருவும் தவறாமல் நிறைய டாஸ்மாக் கடைகள் இருப்பதைக் கண்டு வியந்த அவர் தானும் ஒரு கடைக்குள் நுழைந்தார்.
அங்கு சிலர் பீர் அருந்திக் கொண்டிருக்க அதை என்னவோ என்று நினைத்து தனக்கும் ஒன்று கொண்டு வருமாரு கடைச் சிப்பந்தியை பணித்தார்.
அவரும் கொண்டு வந்து கொடுக்க, குடித்த இவருக்கு ஒன்றும் ஆகவில்லை! "அட என்னடா இது! ஒன்றுமே இல்லை! இதைப் போய் எதற்கு இத்தனை பேர் அருந்துகிறார்களே" என்று தனக்குள் ஆச்சர்யப்பட்டவாறே மேலும் சில பாட்டில்கள் வாங்கிப் பருகுகிறார்.
அப்படியே 2,3,4,5,6 என்று போய்க்கொண்டிருக்க 6,7 பீர் அடிச்சும் அசராம இருக்காரே இந்த ஆளுன்னு கடைக் காரர் யார் நீங்க? ன்னு கேக்க
கடவுள் சொன்னாரம் "நாந்தான் கடவுள்"னு.
கேட்ட கடைக் கார ஆள் சிரிச்சிகிட்டே சொன்னாராம்.
"ஓஹோ! இப்பத்தான் உனக்கு நல்லா ஏறிடுச்சு போல"//

ஹா..ஹா..ஹா.. நல்ல குபீர் சிரிப்பு ராம்.. தேங்க்யூ..

Anonymous said...

தாங்க் யூ ராம், உன் கதைக்கு

Anonymous said...

//தாங்க் யூ ராம், உன் கதைக்கு //

எந்தக் கதைக்கு தங்கச்சி?

காமெடி கதையா? சீரியஸ் கதையா?

ACE !! said...

அனைத்து உணர்ச்சிகளையும் கலந்த ஒரு நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

Anonymous said...

இப்ப ஜி.ரா வருவாரு பாருங்க.

வந்து நன்றி சொல்லிட்டு, அப்புறமா
மருத மலைக்கு போயிட்டு இலந்த வடை சாப்பிட்டு, போட்டோ புடுச்சு
போடாததுக்கு கோவிச்சுக்குவாரு.

நாமக்கல் சிபி said...

//இப்ப ஜி.ரா வருவாரு பாருங்க.

வந்து நன்றி சொல்லிட்டு, அப்புறமா
மருத மலைக்கு போயிட்டு இலந்த வடை சாப்பிட்டு, போட்டோ புடுச்சு
போடாததுக்கு கோவிச்சுக்குவாரு.
//

ஐயா! யாருங்கய்யா நீங்க!
ஜீராவைப் பத்தி அப்படியே புட்டு புட்டு வெச்சிருக்கீங்க!

:)

கந்தன் இருக்குமிடம் தேடி மயிலார் தானாக வருவார்!

ஜவ்வாது விபூதியின் வாசனை அவரைத் தானே இழுத்து வரும்!

மு.மு.

மணிகண்டன் said...

நீண்ண்ண்ட பதிவுன்னாலும் கடைசி வரைக்கும் படிக்கற மாதிரி சுவாரசியமா எழுதியிருக்கீங்க உண்மைத்தமிழன். நானும் மருதமலைக்கே போய்வந்த மாதிரி அழகான வர்ணனை.

நேத்து பதிவை பார்த்துட்டு எதோ பந்தயத்துல தோத்து மொட்டை அடிச்சிகிட்டிங்களோன்னு நினைச்சேன் :)

Anonymous said...

யார் பின்னூட்டம் போட்டது என்பது தெரிவதற்கு பதில் :))) இப்படி இப்படி தெரிகிறது...

ஒரு காலத்தில் லக்கி லூக்கின் பதிவும் இப்படித்தான் இருந்தது...

உடனடியாக டெம்ப்ளேட் மாற்றும் அல்லது வலைப்பூ சுனாமி லக்கியாரிடம் கேட்டு உமது பதிவை பிக்ஸ் செய்துகொள்ளும்...!!!

அக்கவுண்டு நம்பரை அனுப்பும் ( அல்லது பதிவில் டிஸ்பிளே செய்யும்). கொஞ்சம் அமவுண்டு போடுகிறேன்( ரெண்டாயிரம்)..அதை எடுத்துக்கொண்டு பழனிமலை முருகனை தரிசனம் செய்து இதே மாதிரி இன்னொரு பதிவு போடும்.

இது தான் எமது அவா !!

SP.VR. SUBBIAH said...

///அதுவரையில் இலக்கில்லாமல் போய்க் கொண்டிருந்த எனது வாழ்க்கை, இனி இதுதான் உன் வாழ்க்கை.. இதன் வழியே செல் என்று திசை திருப்பிவிட்டது இடையில் நுழைந்த உறுதியான ஆத்திக மனசு. இப்பொழுதுதான் நினைத்துப் பார்த்தேன் 'ஆத்திகம்' என்பது எதுவுமே இல்லாதவனுக்கு எவ்வளவு பெரிய செல்வம் என்று..////

அருமை நண்ப்ரே!

பெரிய செல்வம் மட்டுமல்ல
எந்த சக்தியாலும் அழிக்க முடியாத
செல்வமும் அதுதான் நண்பரே.

SP.VR. SUBBIAH said...

கண்ணதாசனின் வனவாசத்தையும், மனவாசத்தையும் படியுங்கள் நண்ப்ரே!
தான் ஆத்திகத்திற்குத் திரும்பியபிறகுதான் வாழக்கையின்
பல பரிமாணங்களையும் உணர முடிந்ததைப் பற்றி விவரமாகவும் - அற்புதகமாகவும் எழுதியுள்ளார்!

Anonymous said...

பஉபொகூகொ என்றால் தெரியுமா, ஒரு இனத்தவரிடையே இன்றளவிலும் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இது. இதைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும், இல்லை என்றால், இன்னும் சரியாக 10 நாளில் நானே சொல்கிறேன்.

பஉபொகூகொ முடிந்த உடன், தீக்குளித்தல் எனும் சடங்கும் நடக்கும்.

அவசரமாக தெரியவேன்டுமென்றால் போலியாரை கேளுங்கள்.

செல்லடியான்

உண்மைத்தமிழன் said...

//சிங்கம்லே ACE !! said...
அனைத்து உணர்ச்சிகளையும் கலந்த ஒரு நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி சிங்கம்லே ACE.. இதென்ன பெயரே வித்தியாசமாக உள்ளது?

உண்மைத்தமிழன் said...

///நாமக்கல் சிபி said...
//இப்ப ஜி.ரா வருவாரு பாருங்க.
வந்து நன்றி சொல்லிட்டு, அப்புறமா
மருத மலைக்கு போயிட்டு இலந்த வடை சாப்பிட்டு, போட்டோ புடுச்சு
போடாததுக்கு கோவிச்சுக்குவாரு.//

ஐயா! யாருங்கய்யா நீங்க!
ஜீராவைப் பத்தி அப்படியே புட்டு புட்டு வெச்சிருக்கீங்க!:)
கந்தன் இருக்குமிடம் தேடி மயிலார் தானாக வருவார்!
ஜவ்வாது விபூதியின் வாசனை அவரைத் தானே இழுத்து வரும்!
மு.மு.///

ஐயா நாமக்கல்லாரே.. இதுதான் வாழ்த்தா?
சரி.. சரி.. புரிஞ்சுக்கிட்டேன்.. கொஞ்சமா நஞ்சமா.. 30 பேராச்சே.. அதென்னமோ இதுக்குன்னே கம்ப்யூட்டரும், கையுமா தயாரா இருப்பீக போலிருக்கு..
தேங்க்ஸ் சிபியாரே..

உங்க ஜி.ஆரை இன்னும் காணலியே.. எப்ப வருவாரு? கட்டியம் சொல்றவுக வந்து சொல்லிட்டீக.. உண்மைத்தமிழன் காத்துக்கிட்டிருக்கான்னு அவர்கிட்ட சொல்லுங்க..

உண்மைத்தமிழன் said...

//மணிகண்டன் said...
நீண்ண்ண்ட பதிவுன்னாலும் கடைசி வரைக்கும் படிக்கற மாதிரி சுவாரசியமா எழுதியிருக்கீங்க உண்மைத்தமிழன். நானும் மருதமலைக்கே போய்வந்த மாதிரி அழகான வர்ணனை.//

மிக்க நன்றி மணிகண்டன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.. 30 வருஷம் கழிச்சு அடிச்ச மொட்டைன்றதால என்னை அறியாமய்யே அப்படியரு சோகம் மூஞ்சில வந்து உக்காந்திருச்சு. அதான்..

//நேத்து பதிவை பார்த்துட்டு எதோ பந்தயத்துல தோத்து மொட்டை அடிச்சிகிட்டிங்களோன்னு நினைச்சேன் :)//
நிறைய தமிழ் சினிமா பார்ப்பீகளோ.. தெரியுதுங்கண்ணா..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
யார் பின்னூட்டம் போட்டது என்பது தெரிவதற்கு பதில் :))) இப்படி இப்படி தெரிகிறது...
ஒரு காலத்தில் லக்கி லூக்கின் பதிவும் இப்படித்தான் இருந்தது...
உடனடியாக டெம்ப்ளேட் மாற்றும் அல்லது வலைப்பூ சுனாமி லக்கியாரிடம் கேட்டு உமது பதிவை பிக்ஸ் செய்துகொள்ளும்...!!!

இதற்கான வழிமுறைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் சரி செய்துவிடுவேன். தங்களுடைய ஆலோசனைக்கும், வருகைக்கும், பின்னூட்டம் போட்டமைக்கும் மிக்க நன்றி..

அக்கவுண்டு நம்பரை அனுப்பும் ( அல்லது பதிவில் டிஸ்பிளே செய்யும்). கொஞ்சம் அமவுண்டு போடுகிறேன்( ரெண்டாயிரம்)..அதை எடுத்துக்கொண்டு பழனிமலை முருகனை தரிசனம் செய்து இதே மாதிரி இன்னொரு பதிவு போடும். இது தான் எமது அவா !!//

ஐயா அனானியாரே.. இப்படி அனானியா வந்து அக்கவுண்ட் நம்பரை கேட்டா எப்படிச் சொல்றது? பேரைச் சொல்லுங்க.. ஊரைச் சொல்லுங்க.. முகத்தைக் காட்டுங்க.. அப்புறமா நேர்ல வாங்க.. பழனிக்கு நாம ரெண்டு பேராவே சேர்ந்து போய் மொட்டையைப் போட்டுட்டு வந்திருவோம்.

Anonymous said...

//ஐயா அனானியாரே.. இப்படி அனானியா வந்து அக்கவுண்ட் நம்பரை கேட்டா எப்படிச் சொல்றது? பேரைச் சொல்லுங்க.. ஊரைச் சொல்லுங்க.. முகத்தைக் காட்டுங்க.. அப்புறமா நேர்ல வாங்க.. பழனிக்கு நாம ரெண்டு பேராவே சேர்ந்து போய் மொட்டையைப் போட்டுட்டு வந்திருவோம்.//

போய்விட்டு வரும்போது ஒரு 1/2 கிலோ பஞ்சாமிர்தமும், ஒரு பாக்கெட் திணை மாவும் வாங்கி பார்சல் அனுப்பவும்!

அக்கவுண்ட் நம்பர் சொன்னால் நான் மேற்கொண்டு ரூபாய் 2000 வித்ட்ராயல் செய்து கொள்கிறேன்!

Anonymous said...

அனானி அண்ணாச்சி நான் கூட இன்னும் திருத்தணி போனதில்லை!

என்னோட அக்கவுண்ட் நெம்பர் தரட்டுமா?


எனக்கு அப்படியே திருப்பதி, ஹரித்வார், காசி போகணும்னு எல்லாம் திட்டம் இருக்கு!

உண்மைத்தமிழன் said...

//SP.VR.சுப்பையா said...
அருமை நண்ப்ரே! பெரிய செல்வம் மட்டுமல்ல எந்த சக்தியாலும் அழிக்க முடியாத செல்வமும் அதுதான் நண்பரே. கண்ணதாசனின் வனவாசத்தையும், மனவாசத்தையும் படியுங்கள் நண்ப்ரே! தான் ஆத்திகத்திற்குத் திரும்பிய பிறகுதான் வாழக்கையின் பல பரிமாணங்களையும் உணர முடிந்ததைப் பற்றி விவரமாகவும் - அற்புதகமாகவும் எழுதியுள்ளார்!//

சுப்பையா ஐயா.. என்னோட பிளாக்கர் இன்னிக்குன்னு பார்த்து சொதப்பிருச்சு. உங்களோட கமெண்ட்ஸ் மட்டும் லேட்டா என் கண்ணுக்குப் பட்டுச்சு.. லேட்டானதுக்கு மன்னிக்கணும் ஐயா..

உங்களோட வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

நான் கண்ணதாசனின் கிட்டத்தட்ட அனைத்துப் புத்தகங்களையும் அப்போதே படித்துவிட்டேன். மனவாசம், வனவாசம், போய் வருகிறேன், எனது அரசியல் அனுபவங்கள் என்று அவர் போட்ட அறிவுப் பிச்சைதான் இப்போது இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் இப்போதும் சொல்கிறேன் எனது 'மானசீகக் காதலன்' கண்ணதாசன் என்று..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
பஉபொகூகொ என்றால் தெரியுமா, ஒரு இனத்தவரிடையே இன்றளவிலும் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இது. இதைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும், இல்லை என்றால், இன்னும் சரியாக 10 நாளில் நானே சொல்கிறேன்.
பஉபொகூகொ முடிந்த உடன், தீக்குளித்தல் எனும் சடங்கும் நடக்கும்.
அவசரமாக தெரியவேன்டுமென்றால் போலியாரை கேளுங்கள்.
செல்லடியான்//

ஒண்ணும் புரியலீங்களே சாமி.. எதுனாச்சும் போராட்டம் நடத்தப் போறீகளா? எது செஞ்சாலும் கொஞ்சம் சொல்லிட்டுச் செஞ்சீங்கன்னா உண்மைத்தமிழனுக்கு நல்லது. ஏன்னா அவனுக்குத்தான் இங்கன சூனியம் வைச்சவுக ஜாஸ்தி. அதான் சொல்றான்..

உண்மைத்தமிழன் said...

திருப்பரங்குன்றன், உலகம் சுற்றும் வாலிபன்.. லேட்டா வந்துட்டீங்களே.. அல்லாரும் பொங்கல் வைச்சு சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டே போயிட்டாக.. இப்ப வந்து நின்னா நான் என்னத்த தர்றது?

G.Ragavan said...

உண்மைத்தமிழன், இந்தப் பதிவை நேத்தே படிச்சிட்டேன். ஆனா ராத்திரி ரொம்ப நேரமாச்சு. தூக்கம் பயங்கரமா வந்ததால இன்னைக்கு சாந்தரம் வந்து பின்னூட்டம் போடலாம்னு....இப்ப வந்து போடுறேன்.

மருதமலைக்கு நானும் போயிருக்கேன். நல்ல அமைதியான இடம். கூட்டமில்லாத நாள்ல போகனும். அங்க போனா இறங்குற வழியில எலந்தவட கிடைக்கும். அடடா! அடடடா!

அத்தோட முருகன் திருக்கோலக்காட்சி. காணக் கண்ணிரண்டு போதாமல் தன்னிரண்டு கைதூக்கித் தொழுவோமே! அடடா! வெற்றிவேல்...வீரவேல்.

G.Ragavan said...

// Anonymous said...
இப்ப ஜி.ரா வருவாரு பாருங்க.

வந்து நன்றி சொல்லிட்டு, அப்புறமா
மருத மலைக்கு போயிட்டு இலந்த வடை சாப்பிட்டு, போட்டோ புடுச்சு
போடாததுக்கு கோவிச்சுக்குவாரு. //

ஆகா அனானி....அதத்தனாய்யா பின்னூட்டத்துல போட்டிருக்கேன். :) இப்பிடி நம்மளத் தெரிஞ்சி வெச்சிருக்கீங்களே. நன்றி. நன்றி.

// நாமக்கல் சிபி said...
ஐயா! யாருங்கய்யா நீங்க!
ஜீராவைப் பத்தி அப்படியே புட்டு புட்டு வெச்சிருக்கீங்க!

:)

கந்தன் இருக்குமிடம் தேடி மயிலார் தானாக வருவார்!

ஜவ்வாது விபூதியின் வாசனை அவரைத் தானே இழுத்து வரும்!

மு.மு. //

இழுத்தது. வந்துட்டேன். வந்துட்டேன். நீங்க நம்ம முருகனருள் கூட்டமில்லையா. அதான் சரியாச் சொல்லீட்டீங்க. :)

// உங்க ஜி.ஆரை இன்னும் காணலியே.. எப்ப வருவாரு? கட்டியம் சொல்றவுக வந்து சொல்லிட்டீக.. உண்மைத்தமிழன் காத்துக்கிட்டிருக்கான்னு அவர்கிட்ட சொல்லுங்க.. //

உண்மைத்தமிழரே வந்துட்டம்ல... :)

உண்மைத்தமிழன் said...

//G.Ragavan said...
உண்மைத்தமிழன், இந்தப் பதிவை நேத்தே படிச்சிட்டேன். ஆனா ராத்திரி ரொம்ப நேரமாச்சு. தூக்கம் பயங்கரமா வந்ததால இன்னைக்கு சாந்தரம் வந்து பின்னூட்டம் போடலாம்னு....இப்ப வந்து போடுறேன்.
மருதமலைக்கு நானும் போயிருக்கேன். நல்ல அமைதியான இடம். கூட்டமில்லாத நாள்ல போகனும். அங்க போனா இறங்குற வழியில எலந்தவட கிடைக்கும். அடடா! அடடடா!
அத்தோட முருகன் திருக்கோலக்காட்சி. காணக் கண்ணிரண்டு போதாமல் தன்னிரண்டு கைதூக்கித் தொழுவோமே! அடடா! வெற்றிவேல்...வீரவேல்.//

ஜி.ரா. ஸார்.. இந்தப் பதிவுக்கு நீங்கதான் முதல்ல வருவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். ஏன்னா உலகம் முழுக்கத் தெரியுமே நீங்கதான் முருகனுக்கு பி.ஆர்.ஓ.ன்னு..

உண்மைதான் ஸார்.. எவ்ளோ அமைதியான இடம். குண்டுசி விழுந்தால்கூட அப்படியரு சப்தம் கேட்டிருக்கும். நான் உட்கார்ந்திருந்த அந்த மணிப்பொழுதுகளில் நான் நானாகவே இல்லை. என் அப்பன் முருகனை இத்தனை ஆண்டுகளாக வந்து பார்க்காமல் போய் விட்டோமே என்று நினைத்து நினைத்து எனக்கு அங்கிருந்து எழவே மனமில்லை.

அந்தத் திருக்கோலக் காட்சி. உண்மைதான்.. ஓவியத்தில்கூட அப்படியரு சிறப்பு இருக்காது.. இதையெல்லாம் காண பக்திக் கண்கள் தேவைதான்.. கோவையின் புண்ணியம் மருதமலை முருகன்தான்..

வெற்றிவேல்.. வீரவேல்..

G.Ragavan said...

அது இந்திய நேரத்துல நைட்டுலதான் பதிவு பாக்க முடியுது. அப்ப இந்தியப் பதிவுகள் பிந்தி அமெரிக்கப் பதிவுக முந்தி வந்துருது. ஆகையால எல்லாப் பதிவுகளையும் நேரத்துக்குப் பார்க்க முடியலை. அதான் தாமதம்.

முருகனுக்குப் பி.ஆர்.ஓ? நானா? ரொம்ப சந்தோசங்க...முருகனுக்குரியவன்னு சொல்லிக்கிறதுல மகிழ்ச்சிதாங்க. மறுப்பில்லை. :)

உண்மைத்தமிழன் said...

//G.Ragavan said...
அது இந்திய நேரத்துல நைட்டுலதான் பதிவு பாக்க முடியுது. அப்ப இந்தியப் பதிவுகள் பிந்தி அமெரிக்கப் பதிவுக முந்தி வந்துருது. ஆகையால எல்லாப் பதிவுகளையும் நேரத்துக்குப் பார்க்க முடியலை. அதான் தாமதம்.//

ஆஹா.. என்ன தன்னடக்கம்..? ஜி.ரா. ஸார்.. எனக்கிருந்த ஒரு குழப்பத்தை தீர்த்து வைச்சிட்டீங்க. எனக்கும் இதுல கொஞ்ச நாளா டவுட் இருந்துச்சு. என் பிரெண்ட் ஒருத்தன் நியூஜெர்ஸில இருக்கான்.. எப்போ கேட்டாலும் தமிழ்மணத்துல உன்னோடதை காணோம்.. காணோம்னே போன் பண்ணி என் பி.பி.யைக் கூட்டுறான்.. இப்ப நீங்க சொன்ன பின்னாடிதான் புரியுது என்ன காரணம்னு..

//முருகனுக்குப் பி.ஆர்.ஓ? நானா? ரொம்ப சந்தோசங்க...முருகனுக்குரியவன்னு சொல்லிக்கிறதுல மகிழ்ச்சிதாங்க. மறுப்பில்லை. :)//

ஆஹா.. இதுக்கும் அதே அடக்கம்தானா.. வாழ்க வளமுடன்.. வீரவேல்.. வெற்றிவேல்..

RAGUNATHAN said...

என்ன அருமையான எழுத்துநடை...பாரதியார் பல்கலைக்கழக விடுதியிலேயே 2 வருடம் இருந்து படித்தும் 2 முறைதான் போயிருக்கேன் சரவணன் சார்....உங்கள் அம்மா கூடவே நடந்து வந்தது போல் இருந்தது...காரிலாவது தூக்கி வந்திருக்கலாம் என்ற சோகமான க்ளைமாக்சில் என் கண்களின் ஓரம் கசிந்திருந்தது...

கோயிலுக்குப் போனதை இப்படி எல்லாம் எழுத முடியுமா? இது ஒரு நல்ல குறுநாவலுக்கு உரிய உண்மைக் கதை திரு. உண்மைத்தமிழன்.....

உண்மைத்தமிழன் said...

//ரகுநாதன் said...
என்ன அருமையான எழுத்துநடை...பாரதியார் பல்கலைக்கழக விடுதியிலேயே 2 வருடம் இருந்து படித்தும் 2 முறைதான் போயிருக்கேன் சரவணன் சார்....உங்கள் அம்மா கூடவே நடந்து வந்தது போல் இருந்தது...காரிலாவது தூக்கி வந்திருக்கலாம் என்ற சோகமான க்ளைமாக்சில் என் கண்களின் ஓரம் கசிந்திருந்தது...
கோயிலுக்குப் போனதை இப்படி எல்லாம் எழுத முடியுமா? இது ஒரு நல்ல குறுநாவலுக்கு உரிய உண்மைக் கதை திரு. உண்மைத்தமிழன்.....//

அன்பர் தமிழ்த்தும்பி அவர்களே.. தங்களது வலைத்தளத்திற்குள் புகுந்து படித்துவிட்டுத்தான் வந்தேன். தமிழ் வலையுலகத்திற்கு புதிய வரவாக வந்துள்ளீர்கள்.. வாருங்கள்.. வாருங்கள்.. அன்போடு வரவேற்கிறோம்.

கண்களில் ஈரம் கசியும் அளவுக்கு என் எழுத்து இருந்தது என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி தும்பி.. கோவிலும், பக்தியும், அன்பும், பாசமும்தான் மனிதர்களை நெகிழ வைப்பவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

எப்பொழுதோ சென்று வந்திருக்க வேண்டும். முருகன் இப்போதுதான் என்னை அழைத்துள்ளான். அதான் சென்று வந்தேன். ஏதோ சென்று வந்ததை நான்கு பேரிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து எழுதியதுதான்.. தங்களைப் போன்ற பல அன்பர்களும் பாராட்டினார்கள். தங்களுக்கும் இது போன்ற வேண்டுதல்கள் ஏதேனும் இருந்தால் உடனே தாமதிக்காமல் செய்து முடித்து விடுங்கள்.

வாழ்க வளமுடன்..

abeer ahmed said...

See who owns moh.gov.sg or any other website:
http://whois.domaintasks.com/moh.gov.sg