என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?

May-29, 2007


என் இனிய வலைத்தமிழ் மக்களே,


சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் அனைவரும் தவறாமல் கேட்கின்ற கேள்வி 1. கலைஞர் டிவி எப்ப வரும்? 2. ஹெல்மெட் வாங்கிட்டீங்களா? என்பதுதான்.


இதில் முதல் கேள்விக்கான பதிலாக சேனல் துவங்கப்படும் தேதியை சொல்லிவிட்டாலும், அது எந்த ரூபத்தில் வரும் என்பது தெரியாததால் இது தொடர்பான துணைக் கேள்விகள் எழத்தான் செய்யும். அதை இப்போதைக்கு விட்டுவிடுவோம். அடுத்த கேள்வியான ஹெல்மெட்டை பார்ப்போம்.


'இனிமேல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும்..' என்ற உத்தரவின் மூலம் தமிழக அரசும், காவல்துறையும் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. "விபத்தில் இறப்பவர்கள் பலரும் பின்னந்தலையில் அடிபட்டுத்தான் இறக்கின்றனர். தலையில் ஹெல்மட் அணிந்திருந்தால் இந்தச் சாவிலிருந்து தப்பிக்கலாம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.


பைக்கில் செல்லும்போது விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் மிக அதிகமாக தலையில்தான் அடிபடுகிறார்கள் என்கிறார்கள். காரணம் என்ன? பின்னால் வரும் வண்டி மோதினாலோ அல்லது இடித்துக் கொண்டு சென்றாலோ விழும் போது, உடல் பின்நோக்கித்தான் செல்லும். அது உடல் இயல்பு. அறிவியல் உண்மை. இதற்கு எந்த மருத்துவரிடமும் ஆலோசனை கேட்க வேண்டாம்.


கீழே விழுகிறான். தலையில் அடிபடுகிறது. ரத்தம் தலைக்குள்ளேயே சிந்தி உறைந்து போகிறது. இதன் விளைவாய் கோமா ஸ்டேஜுக்கு சென்று சில நாட்கள் 'இழு, இழு..' என்று இழுத்துவிட்டு அவன் குடும்பம் கையில் வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் கரைத்த பிறகு, சப்தமில்லாமல் 'விதியின் வெற்றி'யுடன் இறந்து போகிறார்கள். சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் வருடக்கணக்காக படுக்கையில் படுக்கிறார்கள்.


இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தது என்று சொல்லி யாரும் உண்மையை வெளிக்கொணர முடியாது. அந்தச் சமயத்தில் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கும் போல.. நடந்துவிட்டது. அவ்வளவுதான்.. இது நம்மை நாமே தேற்றிக் கொண்டு, துக்கத்தை மறக்க நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள்.


தமிழ்நாட்டில் சென்ற ஐந்து வருட காலத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தோரில் தலையில் அடிபட்டு இறந்தவர்கள் 5 சதவிகிதத்தினருக்கும் குறைவுதான். இப்படித்தான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதிகமான விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவை.. கார் மற்றும் வேன்கள், பஸ், லாரி மோதல், ரயில்வே கிராஸிங்கை கடக்க முயலும்போது ரயில்களுடன் பிற நான்கு சக்கர வாகனங்கள் மோதுதல்.. இவற்றின் மூலம் மொத்தமாக ஜனங்களை 'மேலே' அனுப்புவது... இப்படித்தான் கொத்து, கொத்தாக மரணங்கள் நிகழ்கின்றன. நிகழ்ந்திருக்கின்றன.


இவற்றில் புதிய கண்டுபிடிப்பாக சென்ற ஆண்டு டாடாசுமோ வேன் மற்றும் மாருதி காரில் பயணம் செய்யும்போதுதான் நிறைய விபத்துக்களும், மரணங்களும் நேரிடுகின்றன என்று அந்தக் கார்களைத் தயாரிப்பு நிர்வாகத்தினருக்கு கண்டன அறிக்கையெல்லாம் வழங்கினார்கள் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடிய காவல்துறையினர்..


இந்த சாலை பாதுகாப்பு வாரத்தை சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் தெருத்தெருவாகக் கொண்டாடியபோது இதை பேச்சுக்கு பேச்சு சொன்னவர்கள், இப்போது திடீரென்று 'ஹெல்மெட்' என்ற பேச்சு வந்தவுடன் அந்த புள்ளிவிவரத்தையே மறந்துவிட்டார்கள். அல்லது மறைத்துவிட்டார்கள்.


ஹெல்மெட் அணியாமல் வண்டியோட்டுபவர் முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாய் அபராதம் என்றும், அடுத்தடுத்த முறைகள் என்றால் 300 ரூபாய் அபராதம் என்றும், தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமை ரத்தாகும் என்றும் காவல்துறை உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.


அதோடு வண்டியின் பின்னால் அமர்ந்து செல்பவரும், கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டுமாம். 4 வயது குழந்தைக்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அவசியம் என்று 'இந்த தேவாதி தேவர்கள்' சொல்லிவிட்டார்கள். "இனி எந்தக் காலனும் உங்களை அணுகமாட்டான். நாங்கள் உங்களைக் குடும்பத்தோடு காப்பாற்றுவோம்.." என்கிறார்கள் காவல்துறையினர்.


எல்லாம் சரி.. விபத்துக்கள் நடப்பதற்கு யார் காரணம்? மனிதத் தவறுகள்தானே. விபத்தில் பாதிக்கப்படும் இருவரில் ஒருவர்தான் அந்த மீறலைச் செய்திருப்பார். அவரிடம் கேட்டால் "போய்விடுவார் என்றுதான் நான் நினைத்தேன்.." என்பார். அடிபட்டவரிடம் கேட்டால் "அவன்தான் நான் கிராஸ் செய்வதற்குள் மோதி விட்டான்.." என்பார்.


இது முதல் வகை விபத்துக்கள்.. இரண்டாம் வகை விபத்துக்கள்.. ரோடு. சாலைகள் சரியில்லாமல் பல்லை இளித்துக் கொண்டிருப்பதற்கு யார் காரணம்?


ரோட்டோரமாக இருக்கின்ற கடைகளை 'விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்லி நாள்கணக்கில் மணலையும், செங்கல்லையும் ரோட்டோரமாக கொட்டி வைக்கிறார்கள். சாப்பிடக்கூட நேரமில்லாமல் அரக்கப் பரக்க ஓடிக் கொண்டிருப்பவனுக்கு கல்லும், மண்ணுமா ஒரு விஷயம்.. ஒடித்து, ஒடித்து திரும்பும்போது ஸ்லிப்பாகி கீழே விழுகிறான்.. அடிபடுகிறான். 'ஆயுசு கெட்டியாக' இருந்தால் பிழைப்பான். இல்லையெனில் 'டிக்கெட்டு'தான்..

ஆனால் இதற்கான வழியை ஏற்படுத்தி வைத்திருப்பது யார்? இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டது எதனால்? மணல் கொட்டியிருப்பதினால்தானே.. அதை தடுத்தால்தான் என்ன?


அரசியல்வாதிகளுக்கு கை அரித்தால் எப்படியெல்லாம் காசு பார்க்க வேண்டுமோ அப்படியெல்லாம் பணம் பண்ணத் தயங்க மாட்டார்கள். வானமும், பூமியும் சும்மாதான கிடக்குது.. ஆண்டவனோட இடம்தானே.. மக்களோடது இல்லையே..? மக்களுடைய இடத்தையே நம்ம 'மாமியார் வீட்டு இடம்'ன்னு சொல்றோம்.. கண்ணுக்குத் தெரியாத ஆண்டவனைப் பத்தி யாருக்கு என்ன கவலை..? 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே' என்பதைச் சொல்லாமல் சொல்லி அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும், அள்ள ஆரம்பித்ததுதான் ஆற்று மணல் கொள்ளை.


ஒரு நாளைக்கு ஒரு மணல் லாரி கண்டிப்பாக இருபத்தைந்து டிரிப் அடிக்க வேண்டும். மணல் அள்ளும் இடத்திலிருந்து மணலை கொட்டப் போகும் இடம்வரைக்கும் உள்ள இடம் எத்தனை கிலோ மீட்டராக இருந்தாலும், டிரிப்ஷீட் புல்லாக வேண்டும். அப்போதுதான் கட்சிக்காரர்கள், ஆட்சியாளர்கள், காண்ட்ராக்ட் எடுத்தவர்கள்.. என அனைவருமே பணம் பார்க்க முடியும்.


இந்த மணல் அள்ளும் விஷயத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தமிழகத்தையே சுரண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள். இதில் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்றில்லை.. எல்லாக் கட்சி அரசியல் நாய்களும், ஒன்றாகவே கூட்டணி வைத்து கொள்ளையடித்து வருகிறார்கள்.


கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்துக்களில் இறந்து போனவர்கள் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் 80 சதவிகிதம் பேர் இந்த மணல் லாரிகளால் தாக்கப்பட்டு இறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதற்கு என்ன தீர்வு சொல்வார்கள் காவலர் திலகங்கள்.


"அவர்கள் பணக்காரர்கள், ஆட்சியாளர்கள். ஆளுவதற்காகவும், வாழ்வதற்காகவுமே அவதாரம் எடுத்தவர்கள். நீ சாதாரண மிடில் கிளாஸ்.. எங்களைச் சந்தோஷப்படுத்த மட்டுமே உனக்கு அனுமதி.. நீ சந்தோஷப்படுவதை பற்றி நினைத்துக்கூடப் பார்க்காதே..." என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.


இன்றுவரை ஆட்சி மாறி, வேறு ஆட்சி வந்தாலும்கூட மணல் கொள்ளையும் இதன் விளைவாய் மணல் லாரி மோதி விபத்துக்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை எந்தக் கனவான் வந்து தடுப்பானாம்..?

இப்போது ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு போலீஸ் சொல்வது இதைத்தான்.. "அவர்கள் இடிப்பார்கள். அடிப்பார்கள். உன் தலையில் ஹெல்மெட் இருக்கு. உயிர் போகும் அபாயம் இல்லை. காயத்தோடு பிழைத்துக் கொள்வாய்.. பொழைச்சுப் போ.. போ.." இதுதான் காவல்துறை நமக்குச் சொல்லும் செய்தி..


அடுத்தது நம் ஊர் சாலைகள் இருக்கும் லட்சணம். ஒரு வருடத்திற்கு சாலைப் பராமரிப்பில் மட்டும்தான் நமது அரசியல்வாதிகள் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இல்லாத இடத்தில் ரோடு போட்டதாக பில் போடுவார்கள். பணம் சாங்ஷன் ஆகிவிடும்.. அந்த ரோடு எங்கே இருக்கிறது என்று நீங்கள் 'நாஸா'விடம் சொல்லித்தான் தேட வேண்டும்.


இருக்கின்ற நல்ல சாலைகளிலும் மேற்கொண்டு 'பராமரித்தோம்' என்று சொல்லி பில் போடுவார்கள். இதற்கான செங்கல்லும், மணலும் அவரவர் வீடுகளுக்குப் போய்விடும். பணத்தையும் பங்கு போட்டுக் கொள்வார்கள். நாமும் எதுவும் தெரியாதது போல் அதே சாலையில் நடப்போம்.


ஒரே சாலைக்கு ஒரே ஆண்டில் மூன்று முறை பராமரிப்பு செய்ததாக பில் போடுவார்கள். தொலைந்தது.. அடுத்த பத்து வருட சம்பாத்தியத்தை இந்த ஒரே பில்லில் சாப்பிட்டுவிடுவார்கள் நமது அரசியல் நாய்கள்.. நாம் அதே குண்டும், குழியுமான ரோட்டில் வயிறு கலங்கிப் போய் நடக்கத்தான் வேண்டும்.


இப்போதும் சென்னை, கிண்டி தொழிற்பேட்டை சாலையைச் சென்று பாருங்கள்.. எத்தனை முறை ரோடு போடுவார்களோ தெரியாது.. அத்தனையும் ஒரு அரை மணி நேர மழைக்குக்கூடத் தாங்காது.. அடுத்த நாளே பெரிய, பெரிய பள்ளமாக உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் அளவுக்கு தண்ணீர் தேங்கிப் போய் தெரியும். மறுபடியும் இன்னொரு முறை கான்ட்ராக்ட், பில்.. கமிஷன்.. அப்பப்பா.. பொழைக்கத் தெரியாத நம்மை மாதிரி மனிதர்கள் மட்டுமே அதில் வண்டியை ஓட்டி சிலர் காயம்படுகிறோம்.. பலர் 'மேலே' போய்ச் சேர்கிறார்கள். இவர்களை யார் கேட்பது?


தங்களது வீடு, உறவினர்கள் வீடுகள், அமைச்சர்கள் வீடுகள் இருக்கின்ற இடங்களில் மட்டும் சாலைகளை அலங்கரித்து வைத்துக் கொள்கிறார்கள். சென்னையின் மத்திய பகுதியை மட்டும் பளபளவென்று வைத்து என்ன புண்ணியம்? மேடவாக்கம் சென்று பார்த்திருக்கிறீர்களா? ஏன் விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்கின்ற ரோட்டில் போய் பாருங்கள்.. குடலே கலங்கிவிடும்.. அந்த அளவிற்கு 'அற்புதமாக' உள்ளது.


வெளிநாடுகளில் இருக்கும் சாலைகளைப் பற்றி கேட்கும்போதும், திரைப்படங்களில் அவற்றைப் பார்க்கும்போதும் நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோதான் என்றுதான் தோன்றுகிறது. அங்கேயும் அரசியல் இருக்கிறதே.. ஆட்சிதானே நடக்கிறது.. அங்கு மட்டும் எப்படி? முகமே தெரியுமளவுக்கு பளாபளா என்று ரோடு..? பாவம் அவர்கள்.. கமிஷன் வாங்கத் தெரியாத 'பகுத்தறிவில்லாத' முட்டாள் அரசியல்வாதிகள்.. என்று பளிச்சென்று சொல்லிவிடலாம்.


ரோடு பராமரிப்பு, சாலை வசதி, உள் கட்டமைப்பு முறையாக இல்லாமை இப்படி அடுக்கடுக்கான வசதிக் குறைவுகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு "விபத்தினால் காயம் ஏற்படாமல் தவிர்த்து விடுங்கள்.." என்று வெட்கம்கெட்டத்தனமாக கூவுகிறார்களே கேடுகெட்ட அரசியல்வாதிகள்... இவர்களையெல்லாம் என்ன செய்வது?


முதலில் விபத்தே ஏற்படாமல் இருக்க என்ன வழி என்று யோசிக்கலாமே..? யாருக்குமே கமிஷன் கொடுக்காமல், கமிஷன் வாங்காமல் நல்லதொரு சாலை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்போம் என்ற அக்கறை இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உண்டா?


"இதெல்லாம் எதற்கு? அந்த அக்கிரமக்காரர்கள் என்றைக்குத் திருந்தியிருக்கிறார்கள்? நீங்கள் என்ன எழுதினாலும் அவர்களுக்கு உரைக்காது.. நீங்க உங்க வாழ்க்கையைப் பாருங்க.. வாழ்க்கைல ஒரு முறைதானே.. வாங்கிருங்களேன்.." என்கிறார்கள் சிலர்.


சரி வாங்கிக் கொள்கிறேன். தலையில் மாட்டிக் கொள்கிறேன்.. சாவே வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்..?


ஒரு மனிதன் இறப்பே வராமல் வாழ்ந்தே தீர வேண்டும் என்று எண்ணினால் முதலில் சாவு தன்னை நெருங்கிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் எப்படி..? முதலில் சாவு அவனை எப்போது நெருங்கும் என்பது அவனுக்குத் தெரியுமா..? பிறகு எப்படி அவனது சாவை அவனே தள்ளிப் போடுவது..? தடுப்பது..?


சாவு எப்படியிருந்தாலும் எந்தவொரு ஜீவராசிக்கும் வந்தே தீரும். அதைத் தடுக்க யாருக்கும் சக்தி இல்லை என்னும் 'பகுத்தறிவு' உள்ள மனிதன், காலம் காட்டும் திசையில் அது போகும்போக்கிலேயே போய்க் கொண்டிருப்பான். சாவின் மீது பயமில்லாமல், தைரியமாக அதனைச் சந்திக்கும் துணிச்சலுள்ளவன், அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்பான்.


பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், காலன் அழைக்காமல்விடப் போவதில்லை. 80 வயதில் இமயமலையில் ஏறினாலும், அழைக்கின்ற காலம் இல்லையெனில், அப்போதும் அழைக்க மாட்டான் காலன். அது அவரவர் வினைப்பயன் என்பது இறை நம்பிக்கையுள்ள அனைவருக்கும் தெரியும்.


சாதாரணமாக சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது தவறி கீழே விழுந்து செத்தவனும் இருக்கிறான். 80-வது மாடியிலிருந்து தவறி விழுந்து, உயிர் பிழைத்தவனையும் காண்கிறோம். இரண்டுமே அதிசயம்தான்.. ஆச்சரியம்தான். ஆனால் நடந்திருக்கிறதே..


நிற்க.. விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.


"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.


அதிலும், வாழ்ந்து கிழித்தது போதும். போய்ச் சேரத் தயாராக இருக்கிறேன் என்ற நினைப்பில் வெறும் பூதஉடலை மட்டுமே வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் இந்த 'உண்மைத்தமிழனைப்' போல பல கோடி பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் காப்பாற்றி வைத்து யாரிடம் நல்ல பெயர் எடுக்கப் போகிறார்கள்?


கடைசியாக,


இதைப் போட்டுக் கொண்டு வண்டியில் செல்கிறோம். விபத்து ஏற்பட்டால் சாவே வரக்கூடாது. வந்தால் அதற்கு முழுப் பொறுப்பையும் காவல்துறையினர் ஏற்றுக் கொள்வார்களா? அப்போது வந்து, "இது அவன் விதி.. கதை முடிஞ்சிருச்சு.. எமதர்மன் பின்னாடியே 'ஒளி வேகத்துல' வந்து தூக்கிட்டான்.." அப்படி.. இப்படின்னு கதை விடக்கூடாது..


என்ன செய்வார்கள்-சொல்வார்கள் காவல்துறையினர்..?

106 comments:

நாமக்கல் சிபி said...

:))

ஹெல்மட் போடணும்னு சொன்னா வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே!

எமனிடமிருந்து பாதுகாப்போ இல்லையோ!

50, 100ன்னு புடுங்கற ஆளுங்ககிட்டே இருந்து ஒரு பாதுகாப்பு!


இந்த கட்டாய ஹெல்மெட் சட்டமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். லுலூங்காட்டி!

பொது இடத்துல தம் அடிக்கக் கூடாது, கடைகளிலே பான் பராக் விக்கக் கூடாது ன்னெல்லாம் சொன்ன மாதிரி இதுவும் ஒரு தமாஷுக்குத்தான்!

வடுவூர் குமார் said...

விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்கின்ற ரோட்டில் போய் பாருங்கள்.. குடலே கலங்கிவிடும்.. அந்த அளவிற்கு 'அற்புதமாக' உள்ளது
மூன்று வாரத்துக்கு முன்பு கூட "பரவாயில்லை" என்று சொல்லும் அளவுக்கு இருந்ததே?
அதுக்குள்ள இப்படியா?

பூனைக்குட்டி said...

//இந்த கட்டாய ஹெல்மெட் சட்டமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். லுலூங்காட்டி!//

இதை தமிழக போலீஸ் எப்படி செய்யப்போகிறது என்று தெரியாது. நீங்கள் பெங்களூர் வந்துபாருங்கள். ஹெல்மெட் போடாமல் போனால் நிறுத்தி சலான் கொடுத்து நூறு ரூபாய் பைன் வாங்கும் போலீஸ்காரர்கள் அதிகம்.

இங்கே அழகாக அதை இம்பிளிமெண்ட் செய்திருக்கிறார்கள்.

நாமக்கல் சிபி said...

(உங்க ரூட்லயே சொல்றேன். அப்பதான் ஈஸியா புரியும்)
மூணு மணி நேர சினிமா ஒரேயடியா கதைலயே போய்கிட்டிருந்தா பார்க்குறவனுக்கு போரடிக்குதேன்னு அங்கங்கே காமெடி சீன் வெக்குறாங்கல்ல!

அது மாதிரிதான் அரசாங்கமும். எல்லா நேரமும் சீரியஸான சட்டங்களையே போட்டுகிட்டிருந்தா மக்களுக்கு போரடிக்கும்னு அப்பப்போ இப்படி காமெடி பண்ணுவாங்க!


அது சரி,

அதென்னா ஆன்னா ஊன்னா மலேசியா ரோட்ல மைசூர்பா வெச்சி திங்கலாம் சிங்கப்பூர் ரோட்லே ஜிலேபி வெச்சி திங்கலாம்னெல்லாம் சொல்றது?

அங்க இருக்குற மக்கள் சட்டத்தை எப்படி மதிச்சி நடக்குறாங்கன்னும் பாருங்க!

ரோட்ல எச்சி துப்பக் கூடாது, கண்ட இடத்துல குப்பை கொட்டக் கூடாது இப்படி சின்ன சின்ன விஷயத்தையும் எப்படி ஃபாலோ பண்ணுறாங்கன்னு!

இங்க நாம அப்படி இருக்குறமா? ன்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க!

எந்தச் சட்டம் போட்டாலும் அதை மதிக்காம நாலு பேரு இருக்கத்தான் செய்வான் அப்படின்ற நினைப்புலதான் போலீஸ் காரங்க மாசக் கடைசி வருமானத்துக்கு தைரியமா பிளான் பண்ணுறாங்க!

சட்டத்தை போடுறது அரசாங்கத்தோட வேலை. அதை மதிச்சி நடக்க வேண்டியது பொது மக்களாகிய நம்ம கடமை.

ரோட்ல நடக்கும் விபத்துக்களில் பெரும்பாலானவை சிக்னலை மதிக்காம, ஒரு ஒழுக்கம் இல்லாம, ஒருத்தரை ஒருத்தர் முந்திகிட்டு போக நினைக்குறது, அவசரம் இதெல்லாம்தான் காரணம்.

இப்படியெல்லாம் நடக்குறப்போ ஹெல்மெட் போட்ட கொஞ்சம் பாதுகாப்புன்னு சொல்லுறது நம்ம நல்லதுக்கு! அதை ஏன் கேள்வி கேக்கணும்?

ALIF AHAMED said...

பொது இடத்துல தம் அடிக்கக் கூடாது, கடைகளிலே பான் பராக் விக்கக் கூடாது ன்னெல்லாம் சொன்ன மாதிரி இதுவும் ஒரு தமாஷுக்குத்தான்!
///

தள ரீப்பிட்டு குடுக்கனுமா..?


ரீபிட்டேய்..:)

குறிப்பு.1
தமிழா நீ எங்கு பின்னுட்டம் இட்டாலும் சிரிப்பான் போடுங்க சமாளிக்கலாம்..:)

குறிப்பு 2
அட்லிஸ் தமிழ்மண கருவிபட்டையில் நகைச்சுவை/நையாண்டி இருந்தால் கண்டிப்பா போடனும் இது பொது விதி

Anonymous said...

நான் அரசாங்கம் சொல்வதை அப்படியே பின்பற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்!

உண்மைத் தமிழன் போலெல்லாம் எதிர்த்துக் கேள்விகள் கேட்க மாட்டேனென்றும், இது போல் கேள்வி கேட்பவர்களை கண்டம் துண்டமாக வெட்டிப் போடத் தயங்கமாட்டேனென்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்.

Krishna (#24094743) said...

அற்புதமான பதிவு மதுசூதனன் அவர்களே. பலரின் மனதிலிருக்கும் குமுறல்களை இதில் காண முடிகிறது. நம்மூரில் சைக்கிளில் இன்றும் போய் தினப்படி பிழைப்பை பார்க்கும் வர்கமும் அதிகம். அவர்களுக்கெல்லாம் இந்த ஹெல்மெட் தேவையில்லையாமா? இல்லை அவர்களது உயிர் அவ்வளவு முக்கியமில்லையா? பெயரே சரியில்லை அய்யா - hell met - நரகத்தை சந்தித்தாகிவிட்டது என்று ஒரு பெயரா?

முச்சந்தியிலிருக்கும் மூதேவிகளின் (அதான் போலீஸ் மாமாங்கோ) பாடு கொண்டாட்டம் தான். நம்ம தலையெழுத்த மாத்த முடியுமா? வருமான வரி கட்டுவோம், சாலைவரி கட்டுவோம், எரிபொருள் வாங்கும் போதும் வரி கட்டுவோம், ஹெல்மெட்டுக்கு செலவு பண்ணுவோம், அதுனால சென்னை வெய்யிலால் வரும் வியாதிகளுக்கும் மருத்துவச் செலவு செய்வோம், மருந்து வாங்கும் போதும் செஸ் வரி கட்டுவோம். ஆனாலும் ஒரு இன்ஞ் நல்ல ரோடு கிடைக்காது. எல்லாம் தலைவிதிங்க!

பங்காளி... said...

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறா அவலங்கள்....நமது சாலைகள்...

Krishna (#24094743) said...

//அற்புதமான பதிவு மதுசூதனன் அவர்களே//
தயவு செய்து இதை மாற்றிவிடுங்கள் உண்மைத் தமிழன் அவர்களே. தொடர்ந்து தமிழ்மணத்தை பார்த்ததால் நேர்ந்த தவறிது. மன்னிக்க வேண்டுகிறேன்.

Anonymous said...

வழக்கம் போல வளா வளா கொள கொளா மொக்கை பதிவு.

Anonymous said...

yo unmai tamila, Nalla thane yeluthikittu iruntha, yennaya kirukku pidichithu unaku, helmet podarathula yennaya thappu. Un nallathukku helmet poduyya summa vettiya itukellam oru pathivu.

Anonymous said...

Loosanga neenga, yethavathu nallatha yeluthunga.

CVR said...

ஹெல்மெட் போடுறதுனால சாவை 100% நிறுத்த முடியாது அதற்காக அதை செய்யவே வேண்டாம் என்று அர்த்தமில்லை,அப்படி பாத்தா எதை கொண்டும் சாவை 100% நிறுத்த முடியாது,அதனால அதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லலாமா?? (மருத்துவ முயற்சிகள் உட்பட)

ஹெல்மெட் போடுறதுனால மரணம் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது என்பது உண்மை,அரசியல்வாதிகள் சரியில்லை,ரோடுகள் என்று சொல்லி போடாமல் இருப்பது சரியான வாதமா தெரியல தலைவா! மத்தவங்களை சொல்லுறதுக்கு மின்னாடி நாம செய்ய வேண்டியத சரியா செய்தோமென்றால் நாளைக்கு ஒழுங்கா வாதிடலாம்.

நாளைக்கு ஏதாவது விபத்து நடந்தால்,"பார்த்தியா நீ சொன்னா மாதிரி ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கிட்டேன்,ஆனா ரோடு சரியில்லாத்துனால தான் விபத்து ஆகிவிட்டது,அதை மொதல்ல சரி பண்ணு" அப்படின்னு உரிமையா சொல்லலாம்!! :-)
இதை செய்வது நம்மை காப்பற்றிக்கொள்வதற்காக மற்றவரோடு வாதிடுவதற்காக அல்ல,ஒரு விஷயத்தால் நன்மை என்றால் கொஞ்சம் செய்து தான் பார்ப்போமே!! :-)

Unknown said...

உண்மைத் தமிழன்,
நீங்கள் அரசியல்வாதிகள் பற்றிச் சொல்லும் குற்றங்கள் எல்லாம் உண்மை.நீங்கள் சொன்னதைவிட இன்னும் பல மடங்கு அதிகமாக நாறிப் போய் உள்ளது நமது அரசியல்.கட்சிக் கூட்டங்கள் ஊர்வலங்களின் போது சில விசமிகளின் :-) செயலால் பொதுச் சொத்து நாசமானால் அதற்கு கட்சி பொறுப்பு ஏற்காது என்று சட்டம் போட்ட இவர்கள், நாளயே ரோட்டில் குழி விழுவது இயற்கையின் செயல் அதற்கு காண்ட்ராக்டர் பொறுபு ஏற்க வேண்டாம் என்று சட்டம் போட்டாலும் போடலாம். இந்த அரசியல் வியாதிகளுக்கும் இவர்களுக்கும் தொண்டர்கள், அபிமானிகள் உண்டு.

இந்திய அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டர்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் திருந்துவார்கள் என்று நினைப்பது இலவு காக்கும் கிளியின் செயல்.இவர்கள் எப்படி திருந்த மாட்டார்களோ அது போல் பொது ஜனம் என்று சொல்லப்படும் அந்த ஜந்துக்களும்^ திருந்தாது.

இருந்தாலும் இவர்களைத் திருத்த முடியும் என்ற சொற்ப நம்பிக்கையில்தான் சிலர் எதிர்காலத்தை சமைத்துக் கொண்டுள்ளோம்.இங்கு நான் "சிலர்" என்று நான் சொல்வது இந்தியாவில் Civic Sense உடன் நடந்து கொள்ளும் இந்தியர்களை.

**
ரோடு போடுவதில்தான் அரசியல்வாதி கொள்ளை அடிக்கிறான்.அந்த ரோட்டில் ஓட்டும் போது நாம் கடைபிடிக்காத சாலைவிதிகளுக்கு யார் பொறுப்பு? குறைந்தபடசம் விதிகள்/Civic Sense ஐ பொதுஜனம் கடைபிடித்தாலே 50 சதவீத விபத்து குறைய வாய்ப்பு உள்ளது.
.
Civic Sense என்பது 99.9999999% இந்தியர்களுக்கு கிடையாது. அவன் தெருவோரத்தில் குப்பை பொறுக்குபவனாக இருந்தாலும் சரி அல்லது காரில் போகும் போது குப்பையை ரோட்டில் எறியும் கணவானாக இருந்தாலும் சரி. இங்கு யாருக்கும்^ Civic Sense இல்லை.
.
இருக்கும் ரோட்டில் வரிசையாக செல்ல முடியுமா?

முன்னால் உள்ள வண்டிக்கு பின்னால் இரண்டு அடி இடைவெளி விட்டாலே அந்த இடைவெளியில் நுழையப் பார்க்கும் முட்டாளை^ என்ன செய்யலாம்?

போலீஸ் இல்லை என்றால் signal ல் நிற்காமல் செல்லும் கூமுட்டைகளை^ என்ன செய்யலாம்?

இன்னும் பல...
.
அரசாங்கம் குப்பைத் தொட்டிதான் வைக்க முடியும்.அதில் குப்பையை போட தினமும் இவன் கையை பிடித்தா இழுத்துப்போக முடியும்?
அடுக்கு மாடி வீட்டில் இருக்கும் அல்லகைகள் ,கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மாடியில் இருந்தே தெருவில் குப்பையை கூட்டி எரியும் கொடுமையை செய்யச் சொன்னது அரசியல்வாதியா?

அவனைத் திருந்தச் சொல் அப்புறம் நான் திருந்துறேன் என்று சொல்லும் இவனது சமூகத்தில் இருந்து வந்தவந்தானே அவனும்...

இவன் சரியில்லை. இவனில் ஒருவன்தானே அந்த அரசியல்வாதியும்.
**

இந்தியாவில் எத்தனை வீடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு Civic Sense பற்றிச் சொல்லிக் கொடுத்து பெற்றோரும் கடைபிடிக்கிறார்கள்?
சோத்துக்கு வழியில்லாத பிச்சைக்காரனைவிடுங்கள்..எத்தனை நடுத்தர,மேல் வர்க்க மக்கள் செய்கிறார்கள்?


**

இன்று காலை சிக்னலில் சிகப்பு விளக்ககு பச்சையாக மாறுவதற்காக காத்து இருந்தேன். நான் தான் முதலில் நின்று கொண்டு இருந்தேன்.சிக்னலின் நான்கு புறங்களிலும் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. எனக்குப் பின்னால் யாரும் இல்லை.சிறிது நேரத்தில் ஒரு சாண்ட்ரோ வந்தது.அதில் இருந்த கபோதி^ சிகப்பு விளக்கைப் பார்த்தானா^ இல்லையா என்று தெரியவில்லை வந்து நின்ற அடுத்த வினாடி ஹாரனை அடிக்க ஆரம்பித்து விட்டான். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தபின் கடுப்புடன் திரும்பி என்ன என்றேன். அதுதான் யாரும் இல்லையே போக வேண்டியதுதானே.. ஏன் நிக்குறே? என்று சைகை செய்தான். நான் சிக்னல் சிகப்பைக் காட்டினேன். அவன் என்னை ஏளனமாகப் பார்த்துவிட்டு கிடைத்த இடைவெளியில் காரைச் செலுத்தப் பார்த்தான்.என்னை ஒட்டி காரை நிறுத்திவிட்டு என்னை இடித்துவிடுவதுபோல வர ஆரம்பித்தான்..இனியும் நான் அப்படியே நின்றால் நமக்குத்தான் ஆபத்து என்று நான் ஒதுங்கி அவன் செல்ல வழிவிட்டேன். சிகப்புச் சிக்னலிலேயே அவன் காரைச்செலுத்தினான்.

அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது ஒரு பிரபலமான சாப்டுவேர் கம்பெனியின் அடையாள அட்டை.

Civic Sense is not an Indian thing :-((


^ டிஸ்கி:
Civic Sense உடன் இந்தியாவில் நடந்து கொள்ளும் இந்தியராக நீங்கள் இருப்பின் இதில் உள்ள கடுமையான வார்த்தைகள் உங்களைக் குறித்தது அல்ல.

Anonymous said...

உண்மைத்தமிழரே...

மற்ற பதிவுகள் ஓக்கே...ஆனா இந்த பதிவு தவறான ஒரு கருத்தை சொல்லுது...ஹெல்மெட் போடவேண்டாம்னு சொல்றீங்களா ?

என் அலுவலகம் அமைந்திருக்கும் ரோட்டுக்கு அருகில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்தார்....சிறிய கல்மீது மோதி...ப்ளக் என்று காதில் இருந்து சிறிய ரத்தம்...ஹெல்மெட் மட்டும் இருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று எல்லோரும் பேசிக்கிட்டாங்க...

ஒரு குடும்பத்தின் நம்பிக்கை விளக்காயிருந்திருக்கலாம் அந்த வாலிபர்...ஒரு 500 ரூ செலவு செய்து ஒரு ஹெல்மெட் வாங்கி போட்டிருந்தால் சாவை தடுத்திருக்கலாமே....

அந்த சாவை பார்த்ததில் இருந்து ஹெல்மெட்டின் முக்கியத்துவம் புரிந்தது...

டாக்டர்.நாராயணமூர்த்தியோ என்னமோ பேரு ஒருத்தருக்கு...உலகப்புகழ் பெற்ற நரம்பியல் நிபுனர்னு நினைக்கிறேன்...டிவியிலயோ, புத்தகங்களிலியோ ஏதாவது இண்டர்வியூ அப்படீன்னு போனா ஹெல்மெட் அணியுங்க அணியுங்க என்று கரடி மாதிரி கத்துவார்...ஏன்னா அவர் சந்திக்கும் விபத்து கேஸ்களை பார்த்ததின் விளைவு...

முகத்தில் அறையும் காற்றில் அழுக்கும் தூசியும் சேர்ந்துத்தான் வருகிறது...அதை தடுக்கவாவது பாதிப்பேர் ஹெல்மெட் உபயோகிக்கிறாங்க...இங்கே பெங்களூரில் வரும் மழைக்கு தப்பிக்கவும் சிலர் ஹெல்மெட் அணியுறாங்க... ( பின்னால் செல்பவர் ஹெல்மட் அணியனும் என்ற கட்டாயம் இல்லை...இந்த விஷயத்தில் அரசு டாக்டர்.ராமதாஸ் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்)

சிறுபிள்ளைத்தனமாக சண்டைபோடாமல் ஹெல்மெட் ஒன்று ( ஐ.எஸ்.ஐ) முத்திரை குத்தப்பட்டது வாங்கி அணிந்துகொண்டு வண்டியோட்டவும்...உங்கள் பாதுகாப்பு முக்கியம்...

Anonymous said...

என்னை வச்சு நீங்க கமெடி எதுவும் பண்ணலேல்ல!!!

நாமக்கல் சிபி said...

பலூன் மாமா சொல்வதை நான் 100% ஆமோதிக்கிறேன்!

மாம அடிச்ச அடி நெத்தியடி!

Anonymous said...

உண்மைத் தமிழரே!

ஹெல்மெட் வாங்குவதற்கு முன்னால் நீங்க வண்டி ஓட்ட ஒரு லைசென்ஸை வாங்கிட்டு வண்டி எடுக்கவும்!

(லைசென்ஸை சரியாக ஓட்டக் கற்றுக் கொண்டு 8 போட்டுக் காட்டிவிட்டு வாங்கவும். காசு கொடுத்து வாங்கினீர்கள் என்றால் நீங்கள் போட்ட இந்தப் பதிவு செல்லாததாகப் போகக் கடவும்)

Anonymous said...

யொவ்,

முதலில் எட்டு போடவும். அது தெரியலின்னா 11 போடவும்...அது எப்படீன்னா...

ட்ட்ட்ட்ருருரூனு நேரா போயி வண்டியை அப்படீயே அலேக்கா தூக்கி பக்கத்தால வெச்சு...

அப்படியே டெர்ண் பண்ணி...

ட்ட்ட்ரூரூரூன்னு வரனும்..ஓக்கே..தென் ஒன்லி வீ வில் கெட் யூ லைசென்ஸ்.

அப்புறமா ஹெல்மெட் வேணுமா வேணாமான்னு யோசிக்கலாம்...

இந்த பதிவுல அனானி ஆட்டம் கொஞ்சம் தூக்கலா இருக்கே...என்ன காரணம் யார் செய்த கோமணம்...

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said... :))
ஹெல்மட் போடணும்னு சொன்னா வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே! எமனிடமிருந்து பாதுகாப்போ இல்லையோ!
50, 100ன்னு புடுங்கற ஆளுங்ககிட்டே இருந்து ஒரு பாதுகாப்பு! இந்த கட்டாய ஹெல்மெட் சட்டமெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். லுலூங்காட்டி! பொது இடத்துல தம் அடிக்கக் கூடாது, கடைகளிலே பான் பராக் விக்கக் கூடாது ன்னெல்லாம் சொன்ன மாதிரி இதுவும் ஒரு தமாஷுக்குத்தான்!//

எமனை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா நேர்ல பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கேன் சிபி.. எனக்கெதுக்கு பாதுகாப்புக்கு ஹெல்மெட்டு.. ம்.. நீங்க சொல்றதும் சரிதான்.. இதுவும் கொஞ்ச நாளைக்குத்தான்னு நானும் நினைக்கிறேன்.. ஏன்னா ஒரு வாரத்துலேயே அவனவன் பொதி மூட்டைக் கணக்கா சுமந்துக்கிட்டே திரியப் போறான்.. அப்புறம் தெரியும்.. தூக்குற கஷ்டம் என்னன்னு..

உண்மைத்தமிழன் said...

//வடுவூர் குமார் said...
விருகம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு செல்கின்ற ரோட்டில் போய் பாருங்கள்.. குடலே கலங்கிவிடும்.. அந்த அளவிற்கு 'அற்புதமாக' உள்ளது
மூன்று வாரத்துக்கு முன்பு கூட "பரவாயில்லை" என்று சொல்லும் அளவுக்கு இருந்ததே?
அதுக்குள்ள இப்படியா?//

ஒரே நாள்ல பல்லைக் காட்டிருச்சு தலைவா.. வட்ட கவுன்சிலருக்கு அடிச்சது யோகம்.. திரும்பவும் காண்ட்ராக்ட் விட்டிருக்காங்களாம்.. அவுக புத்திசாலிக.. நாம..?

உண்மைத்தமிழன் said...

//மோகன்தாஸ் said...
இதை தமிழக போலீஸ் எப்படி செய்யப்போகிறது என்று தெரியாது. நீங்கள் பெங்களூர் வந்துபாருங்கள். ஹெல்மெட் போடாமல் போனால் நிறுத்தி சலான் கொடுத்து நூறு ரூபாய் பைன் வாங்கும் போலீஸ்காரர்கள் அதிகம்.
இங்கே அழகாக அதை இம்பிளிமெண்ட் செய்திருக்கிறார்கள்.//

மோகன்தாஸ¥.. அது பெங்களூரு.. இது மெட்ராஸ¤.. இங்கன சலான் கொடுக்காமல் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு விட்டுவிடுவார்கள்.. அம்புட்டுத்தான்..

உண்மைத்தமிழன் said...

//மின்னுது மின்னல் said...
குறிப்பு.1
தமிழா நீ எங்கு பின்னுட்டம் இட்டாலும் சிரிப்பான் போடுங்க சமாளிக்கலாம்..:)
குறிப்பு 2
அட்லிஸ் தமிழ்மண கருவிபட்டையில் நகைச்சுவை/நையாண்டி இருந்தால் கண்டிப்பா போடனும் இது பொது விதி//

எம்பொழைப்பே சிரிப்போ சிரிப்புன்னு இருக்கு.. அதுல இது வேறய்யா..? சரி இனிமே போட்டுடறேன்.. அப்புறம் சத்தியமா ராசா இது நகைச்சுவை, நையாண்டி இல்லே.. எப்படா சாகலாம்னு இருக்கிறவன்கிட்ட போய் ஹெல்மெட்டை போடு. உசிர் பிழைச்சுக்கோன்னு அட்வைஸ் பண்ணா எம்புட்டு கொழுப்பு..? நீயே சொல்லு..

உண்மைத்தமிழன் said...

//Krishna (#24094743) said...
அற்புதமான பதிவு மதுசூதனன் அவர்களே. பலரின் மனதிலிருக்கும் குமுறல்களை இதில் காண முடிகிறது. நம்மூரில் சைக்கிளில் இன்றும் போய் தினப்படி பிழைப்பை பார்க்கும் வர்கமும் அதிகம். அவர்களுக்கெல்லாம் இந்த ஹெல்மெட் தேவையில்லையாமா? இல்லை அவர்களது உயிர் அவ்வளவு முக்கியமில்லையா? பெயரே சரியில்லை அய்யா - hell met - நரகத்தை சந்தித்தாகிவிட்டது என்று ஒரு பெயரா?
முச்சந்தியிலிருக்கும் மூதேவிகளின் (அதான் போலீஸ் மாமாங்கோ) பாடு கொண்டாட்டம் தான். நம்ம தலையெழுத்த மாத்த முடியுமா? வருமான வரி கட்டுவோம், சாலைவரி கட்டுவோம், எரிபொருள் வாங்கும் போதும் வரி கட்டுவோம், ஹெல்மெட்டுக்கு செலவு பண்ணுவோம், அதுனால சென்னை வெய்யிலால் வரும் வியாதிகளுக்கும் மருத்துவச் செலவு செய்வோம், மருந்து வாங்கும் போதும் செஸ் வரி கட்டுவோம். ஆனாலும் ஒரு இன்ஞ் நல்ல ரோடு கிடைக்காது. எல்லாம் தலைவிதிங்க!//
Krishna (#24094743) said...
//அற்புதமான பதிவு மதுசூதனன் அவர்களே//
தயவு செய்து இதை மாற்றிவிடுங்கள் உண்மைத் தமிழன் அவர்களே. தொடர்ந்து தமிழ்மணத்தை பார்த்ததால் நேர்ந்த தவறிது. மன்னிக்க வேண்டுகிறேன்.//

நன்றி கிருஷ்ணா அவர்களே.. தொடர்ந்து தமிழ்மணத்தைப் பார்த்தீர்களானால் அது இது போன்ற ஒருவகை போபியாவாக மாறிவிடும். ஜாக்கிரதை.. )))))))))

உண்மைத்தமிழன் said...

//பங்காளி... said...
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறா அவலங்கள்....நமது சாலைகள்...//

நன்றி பங்காளி ஸார்.. நம்முடைய கஷ்டமும் தொடரும் என்பதுதான் தொடர்ந்த கதை..

உண்மைத்தமிழன் said...

//CVR said...
ஹெல்மெட் போடுறதுனால சாவை 100% நிறுத்த முடியாது அதற்காக அதை செய்யவே வேண்டாம் என்று அர்த்தமில்லை,அப்படி பாத்தா எதை கொண்டும் சாவை 100% நிறுத்த முடியாது,அதனால அதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லலாமா?? (மருத்துவ முயற்சிகள் உட்பட)
ஹெல்மெட் போடுறதுனால மரணம் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது என்பது உண்மை,அரசியல்வாதிகள் சரியில்லை,ரோடுகள் என்று சொல்லி போடாமல் இருப்பது சரியான வாதமா தெரியல தலைவா! மத்தவங்களை சொல்லுறதுக்கு மின்னாடி நாம செய்ய வேண்டியத சரியா செய்தோமென்றால் நாளைக்கு ஒழுங்கா வாதிடலாம்.
நாளைக்கு ஏதாவது விபத்து நடந்தால்,"பார்த்தியா நீ சொன்னா மாதிரி ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கிட்டேன்,ஆனா ரோடு சரியில்லாத்துனால தான் விபத்து ஆகிவிட்டது,அதை மொதல்ல சரி பண்ணு" அப்படின்னு உரிமையா சொல்லலாம்!! :-)
இதை செய்வது நம்மை காப்பற்றிக்கொள்வதற்காக மற்றவரோடு வாதிடுவதற்காக அல்ல,ஒரு விஷயத்தால் நன்மை என்றால் கொஞ்சம் செய்து தான் பார்ப்போமே!! :-)//

CVR ஐயா, நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் நன்கு தெரியும். ஆனால் தற்போதைய என்னுடைய மனநிலை இந்த இடுகையின் தலைப்பைப் பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும். ஸோ.. ஸாரி ஸார்..

உண்மைத்தமிழன் said...

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...//

பலூன் ஸார்.. தங்களது வருகைக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி..

எதுவும் சரியில்லை என்கிற மனநிலையில் பொருளாதார, சமூகச் சூழலில் சிக்கித் தவிக்கின்றபோது கூடவே இது மாதிரியா சாதாரண நடைமுறை வழிகளிலும் சிக்கலை உருவாக்குகிறார்களே என்ற கோபம்தான் எனக்கு.

மேலே CVR ஸாருக்கு நான் சொன்ன பதிலையே இங்கே மறுபடியும் அடக்கமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். கோபித்துக் கொள்ளாதீர்கள்.

நான் civic sense உடன் நடந்து கொள்ளும் இந்தியன்தான் என்றாலும் அனைவரும் என்னைப் பின் தொடர வேண்டுமே என்று கோபத்துடன் எதிர்பார்ப்பவவன். இல்லாத பட்சத்தில் எதற்கு இருக்க வேண்டும் என்ற கோபம் வருகிறது.. நான் என்ன செய்ய?

கதிரவன் said...

உண்மைத்தமிழன், விதண்டாவாதமாகப் படுகின்றது இந்தப் பதிவு.

என் நண்பனின் அப்பா,சென்னை நேப்பியர் பாலம் அருகே டி.வி.எஸ்50 ஓட்டிட்டு வந்தப்போ ஒரு நாய் (4கால் நாய் தான்ங்க..)குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்தவர்,தலையில் அடிபட்டதால் சில நாட்கள் கோமாவில் இருந்து பின் இறந்திட்டார்.
'ஹெல்மட்'போட்டிருந்தா ஒரு காயம் கூட இல்லாம பிழைச்சிருப்பார்ன்னு டாக்டர் சொன்னார்.

நீங்க சொல்றதப்பாத்தா, அந்த இடத்தில் நாயை வரவிடாமல் தடுக்காததும் போலீசாரின் பிரச்சனை என்பீர்கள் போல ?

நல்லாத்தானே எழுதிட்டு இருந்தீங்க..என்ன ஆச்சு உங்களுக்கு ?
அரசின் குறையைச் சொல்லவேண்டும் என்பதற்காக, பார்க்கும் எல்லா விஷயங்களிலும் குறை கண்டுபிடிப்பது மட்டுமே கடமையாகக் கொண்டுள்ள பத்திரிக்கையாளராய் தயவுசெய்து இருக்காதீர்கள்.

நம்ம அரசாங்கம் போட்டிருக்கிற ரோட்டில், பலூன்மாமா சொல்லியிருக்கும் Civiv Sense இல்லாத நம்ம மக்களுக்கிடையே, வண்டி ஓட்டும்போது ஹெல்மட் போடுறது நம்ம நல்லதுக்குத்தான் என்பது நமக்கு ஏற்கனவே உறைச்சிருக்கனும். இதை சட்டம் போட்டுத்தான் அரசாங்கம் நமக்கு விளங்க வைக்கணும்கற நிலமை வரவிட்டதே நம்ம தப்புத்தான்.

இவங்க "உங்க சாவைத் தடுக்க நினைப்பதாக" தலைப்பு வைத்திருக்கின்றீர்கள்;..யாராலும் நம்ம சாவைத்தடுக்க முடியாது;

மற்ற அரசியல் பிரச்சனைகளையும்,"கட்டாய ஹெல்மட்" சட்டத்தையும் சம்பத்தப்படுத்தி விவாதிப்பதால் நன்மை இல்லைன்னுதான் படுது எனக்கு

முதல்ல ஹெல்மட் வாங்கிப்போடுங்கண்ணே ! மொட்டை வேற போட்டிருக்கீங்க..பாத்து வண்டி ஓட்டுங்க

உண்மைத்தமிழன் said...

//செந்தழல் ரவி said...//

தம்பி ரவி.. உரிமையான, உண்மையான, பாசமான பின்னூட்டத்திற்கு நன்றி.. நானும் எழுதிய போஸ்ட் செய்த பின்புதான் யோசித்துப் பார்த்தேன். இது பலருக்கும் அட்வைஸ் பண்ணுவது போல இல்லையே என்று.. இது உண்மைத்தமிழனின் தற்போதைய கோபத்தின் வெளிப்பாடு. தலைப்பைப் படித்தாலே புரிந்திருக்குமே..
நீங்கள் சொன்ன அந்த மருத்துவர் திரு.ராமமூர்த்தி என்று நினைக்கிறேன். கலைஞருக்கும் அவர்தான் ஆஸ்தான டாக்டராக இருந்தார். அவர் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பாகக்கூட ஒரு கருத்தரங்கில் ஹெல்மெட் போடச் சொல்லி வற்புறுத்தினார். கலைஞரிடமும் வற்புறுத்தினார். கலைஞர் அப்போது யோசித்தார். காரணம் பிக்கல், பிடுங்கல் ஏதுமில்லை அப்போது அவருக்கு. இப்போது எக்கச்சக்கம். ஆகவே ஓகே என்று சொல்லிவிட்டார். மேல் விபரங்கள் விரைவில் வெளி வரும்..

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
பலூன் மாமா சொல்வதை நான் 100% ஆமோதிக்கிறேன்!
மாம அடிச்ச அடி நெத்தியடி!//

சிபி மறுபடியுமா? ஒரு பதிவுல ஒரு தடவைதானப்பா கால் வைப்ப.. இன்னிக்கு இதுல மூணு இடத்துல போட்டிருக்க.. எதுனாச்சும் நான் தப்பா எழுதிருந்தா ஏதோ லூஸ¤ன்னு நினைச்சு விட்ருப்பா.. ஏன்னா உன்னோட படை, பரிவாரங்களைப் பார்த்தா எனக்கு அம்புட்டு பயமா இருக்கு.. பதில் போட்டே என் கை செத்துப் போகுது தம்பி..

உண்மைத்தமிழன் said...

//கதிரவன் said...
உண்மைத்தமிழன், விதண்டாவாதமாகப் படுகின்றது இந்தப் பதிவு.//
விதண்டாவாதமேதான்.. சந்தேகமே இல்லை..

//நல்லாத்தானே எழுதிட்டு இருந்தீங்க..என்ன ஆச்சு உங்களுக்கு ?//
அதான் தலைப்புலேயே சொல்லிருக்கனே ராசா..

//முதல்ல ஹெல்மட் வாங்கிப்போடுங்கண்ணே ! மொட்டை வேற போட்டிருக்கீங்க..//
அதை வாங்கப் போய் பட்ட அவஸ்தைலதான் இதை எழுதினேன்.. அதான் இப்படி வந்திருச்சு..

மிக்க நன்றி கதிரவன் ஸார்..

நாமக்கல் சிபி said...

//எமனை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா நேர்ல பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கேன் சிபி.. //

அதான் ஏபரல் 22, 2007 சென்னை வலைப்பதிவர் சந்திப்புல சந்திச்சோமே!
இன்னும் என்ன?

நாமக்கல் சிபி said...

//சிபி மறுபடியுமா? ஒரு பதிவுல ஒரு தடவைதானப்பா கால் வைப்ப.. இன்னிக்கு இதுல மூணு இடத்துல போட்டிருக்க..//

எனக்கு ஒரு இடம் பிடிச்சிருந்தே அங்கனயே டேரா போடுவேன்!

நாமக்கல் சிபி said...

//எமனை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா நேர்ல பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கேன் //


அடப் பாவமே! எமனையா! நான் என்னைன்னு நினைச்சி அவசரப்பட்டு பின்னூட்டம் போட்டுட்டேனே!

:(

ஆமா! நீங்க எதுக்கு அவருக்காக காத்துகிட்டிருக்கீங்க! நாங்க எல்லாம் இல்லையா என்ன?

Anonymous said...

//yennaya kirukku pidichithu unaku, helmet podarathula yennaya thappu. Un nallathukku helmet poduyya //

dei ,
ethu enaku nallathunu enaku theriyum nee moodikitu po.

Anonymous said...

உங்க ரெக்வெஸ்டை பாஸ் பண்ணனும்னா 500ரூவா ஆகும்னு எங்க தலை (அதான்யா எமதர்மராஜன்) சொல்லச் சொன்னாரு!

உம்ம கணக்கு முடிய இன்னும் 60 வருஷம் இருக்குதாம். நீங்க ரொம்ப அடம்புடிக்கறதால இல்லீகலாத்தான் பாஸ் பண்ணனும். அதான் 500ரூவா. எனக்கு 200 எங்க தலைக்கு 300.

உண்மைத்தமிழன் said...

///நாமக்கல் சிபி said...
//எமனை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா நேர்ல பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கேன் சிபி.. //
அதான் ஏபரல் 22, 2007 சென்னை வலைப்பதிவர் சந்திப்புல சந்திச்சோமே!
இன்னும் என்ன?
//சிபி மறுபடியுமா? ஒரு பதிவுல ஒரு தடவைதானப்பா கால் வைப்ப.. இன்னிக்கு இதுல மூணு இடத்துல போட்டிருக்க..//
எனக்கு ஒரு இடம் பிடிச்சிருந்தே அங்கனயே டேரா போடுவேன்!
//எமனை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரமா நேர்ல பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருக்கேன் //
அடப் பாவமே! எமனையா! நான் என்னைன்னு நினைச்சி அவசரப்பட்டு பின்னூட்டம் போட்டுட்டேனே!
:(ஆமா! நீங்க எதுக்கு அவருக்காக காத்துகிட்டிருக்கீங்க! நாங்க எல்லாம் இல்லையா என்ன?///

நினைச்சேன்ப்பூ.. நினைச்சேன்.. நீவிர் மெட்ராஸ்க்கு வண்டியேறப் போறீங்கன்னப்பவே, மெட்ராஸ் செத்துச்சுன்னு நாலு பேர் புலம்புனாங்க.. இப்பத்தான் புரியுது எதுக்குன்னு..?

Anonymous said...

//அதான் 500ரூவா. எனக்கு 200 எங்க தலைக்கு 300.
//

அப்போ நான் என்ன இளிச்சவாயனா?

எனக்கும் ஒரு பர்சண்டேஜ் வந்தாகணும். சொல்லிட்டேன்!

இல்லாட்டி ஷிவாகிட்டே போட்டுக் குடுத்துடுவேன்!

உண்மைத்தமிழன் said...

//சித்திரகுப்தன் said...
உங்க ரெக்வெஸ்டை பாஸ் பண்ணனும்னா 500ரூவா ஆகும்னு எங்க தலை (அதான்யா எமதர்மராஜன்) சொல்லச் சொன்னாரு!
உம்ம கணக்கு முடிய இன்னும் 60 வருஷம் இருக்குதாம். நீங்க ரொம்ப அடம்புடிக்கறதால இல்லீகலாத்தான் பாஸ் பண்ணனும். அதான் 500ரூவா. எனக்கு 200 எங்க தலைக்கு 300.//

சித்திரகுப்தா.. போன பிறவில திராவிட இயக்கத் தலைவர்கள் வீட்டு வாரிசா பொறந்திருந்தியா? கரீக்ட்டா பிக்ஸ் பண்ணிருக்குற.. மொதல்ல என்னை மேல தூக்கு. அப்பால அங்கன வந்து தர்றேன்..

நாமக்கல் சிபி said...

//நினைச்சேன்ப்பூ.. நினைச்சேன்.. நீவிர் மெட்ராஸ்க்கு வண்டியேறப் போறீங்கன்னப்பவே, மெட்ராஸ் செத்துச்சுன்னு நாலு பேர் புலம்புனாங்க//

அந்த நாலு பேரு எவ்ளோ முக்கியமானவங்க தெரியுமா?

பி.பி.ஸ்ரீனிவாசன் பாட்டைக் கேட்டாத் தெர்ரியும்.

"அந்த நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி"

நாமக்கல் சிபி said...

நீங்க நினைச்சப்போவெல்லாம் எமன் வருவதற்கு அவன் ஒண்ணும் உங்க பி.ஏ. இல்லை!

இங்கன போய்ப் பாருங்க!

http://manamumninavum.blogspot.com/2006/07/21.html

உண்மைத்தமிழன் said...

///நாமக்கல் சிபி said...
//நினைச்சேன்ப்பூ.. நினைச்சேன்.. நீவிர் மெட்ராஸ்க்கு வண்டியேறப் போறீங்கன்னப்பவே, மெட்ராஸ் செத்துச்சுன்னு நாலு பேர் புலம்புனாங்க//
அந்த நாலு பேரு எவ்ளோ முக்கியமானவங்க தெரியுமா?
பி.பி.ஸ்ரீனிவாசன் பாட்டைக் கேட்டாத் தெர்ரியும்.
"அந்த நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி"///

ம்.. பேரைக் காப்பாத்தியே தீர்றதுன்னு முடிவு பண்ணிட்டீரு..

ஆமா அது யாரு.. டிஜிட்டல் தமிழன், சித்ரகுப்தன், பிரம்மா, புரோக்கர் கவுண்டமணி, octal தமிழன், ஹெல்மெட், உண்மைத்தமிழன் fan club..?

நெருங்கிய சொந்தக்காரங்களோ.. அதான் ஒட்டு மொத்தமா தேங்க்ஸ் சொல்றேன்.. அல்லார்கிட்டேயும் சொல்லிருப்பூ..

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
நீங்க நினைச்சப்போவெல்லாம் எமன் வருவதற்கு அவன் ஒண்ணும் உங்க பி.ஏ. இல்லை!
இங்கன போய்ப் பாருங்க!//

கவிஞர் சிபியாரே.. கவிதை அருமை.. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், கவிதை சொல்லி என் மனத்துயரை துடைக்கப் பார்க்கிறீர்கள். அது முடியவே முடியாது. எனக்கு உடனே எமதர்மனை நேரில் பார்த்தாக வேண்டும். ஏதாவது வழி செய்யுங்கள்..

கதிரவன் said...

//அதிலும், வாழ்ந்து கிழித்தது போதும். போய்ச் சேரத் தயாராக இருக்கிறேன் என்ற நினைப்பில் வெறும் பூதஉடலை மட்டுமே வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கும் இந்த 'உண்மைத்தமிழனைப்' போல பல கோடி பேர் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.//

அப்டி என்னங்க பிரச்சனை உங்களுக்கு ? பல கோடிப் பேர்களை துணைக்கு வேற வச்சுக்கிட்டிங்க.

அநியாயமா 3பேரை உயிரோடு எரிச்ச 'அம்மா'வின் உண்மைத்தொண்டர்கள், 3பேரை சாகடிச்ச 'அஞ்சா நெஞ்சனின்'உண்மைத் தொண்டர்கள் முதல்கொண்டு பல இம்சையைக் கொடுக்குற அரசியல் தலைவர்கள்,மற்றும் பல மாக்கான்களே இன்னும் நல்லா வாழ்ந்து கிழிக்கனும்னு இருக்கும்போது..நீங்க ஏன் இப்படி நினைக்கறீங்க ?

கவலைப்படாம இருங்க.

அப்புறம், என்னை ஸார்ன்னு எல்லாம் சொல்லாதீங்க. உங்கள விட 10வருஷம் சின்னப்பையன்ங்க நான் :-)

Anonymous said...

ஹெல்மெட் சட்டத்திற்கு பதிலாக பழய கார்களை மக்கள்் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் (120% வரி இல்லாமல்). அரபு் அமரிகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியும் பழய கார்கள் அங்கு குறைந்த விலையில் கிடைப்பது.
பைக்கிலிருந்து கிழே விழுந்தால் கை கால் உடைவது சாதாரணம், இதை எந்த ஹெல்மெட் அனிந்தும் தடுக்க முடியாது. பைக்கை விட எந்த நேரத்திலும் கார் பாதுகாப்புடையது என்பது எல்லோரும் அறிந்ததே.

வெளிநாட்டு பழய கார்கள் நம் நாட்டு புதிய பைக் விலைகளில் கிடைக்கின்றன.

இறக்குமதி தடைகளை இந்திய அரசு வைத்து கொண்டு நம் உயிர்களை பனயம் வைத்துவிட்டு மறுபக்கம் ஹெல்மெட் சட்டம் கொண்டுவந்து நம் உயிர்களை காப்பாற்ற முயல்கிறதாம், என்ன காமேடி.
இந்தியாவில் மனிதனின் உயிர் மதிப்பு ஒரு நாயின் உயிருக்கு சமானம்.

உண்மைத்தமிழன் said...

//கதிரவன் said...
அநியாயமா 3பேரை உயிரோடு எரிச்ச 'அம்மா'வின் உண்மைத்தொண்டர்கள், 3பேரை சாகடிச்ச 'அஞ்சா நெஞ்சனின்'உண்மைத் தொண்டர்கள் முதல்கொண்டு பல இம்சையைக் கொடுக்குற அரசியல் தலைவர்கள்,மற்றும் பல மாக்கான்களே இன்னும் நல்லா வாழ்ந்து கிழிக்கனும்னு இருக்கும்போது..நீங்க ஏன் இப்படி நினைக்கறீங்க?//

இதையெல்லாம் பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியைலயேன்னு வருத்தம்தான்.. நமக்கு வெள்ளை மனசுங்கோ.. எதையும் டேக் இட் ஈஸியா எடுத்திட்டுப் போகத் தெரியாது.. அதான் மனசு அலைபாயுது.. ஆற்றாமையில வாடுது.. இதையெல்லாம் பார்த்து சும்மா இருக்கணுமான்னு கோபம். அதான்.. போய்ச் சேரலாமேன்னு ஒரு தாபம்.. அம்புட்டுத்தான்..

Anonymous said...

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

நம்பிக்கை என்பது வேண்டும்! நம் வாழ்வில்! லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ மனமே நீ மாறிவிடு!
மலையோ அது புயலோ நீ மோதிவிடு!

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீயும் எல்லாமெ உறவாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உண்மைத்தமிழன் said...

//நாய் சேகர் said...
ஹெல்மெட் சட்டத்திற்கு பதிலாக பழய கார்களை மக்கள்் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் (120% வரி இல்லாமல்). அரபு் அமரிகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு தெரியும் பழய கார்கள் அங்கு குறைந்த விலையில் கிடைப்பது.
பைக்கிலிருந்து கிழே விழுந்தால் கை கால் உடைவது சாதாரணம், இதை எந்த ஹெல்மெட் அனிந்தும் தடுக்க முடியாது. பைக்கை விட எந்த நேரத்திலும் கார் பாதுகாப்புடையது என்பது எல்லோரும் அறிந்ததே.
வெளிநாட்டு பழய கார்கள் நம் நாட்டு புதிய பைக் விலைகளில் கிடைக்கின்றன.
இறக்குமதி தடைகளை இந்திய அரசு வைத்து கொண்டு நம் உயிர்களை பனயம் வைத்துவிட்டு மறுபக்கம் ஹெல்மெட் சட்டம் கொண்டுவந்து நம் உயிர்களை காப்பாற்ற முயல்கிறதாம், என்ன காமேடி.
இந்தியாவில் மனிதனின் உயிர் மதிப்பு ஒரு நாயின் உயிருக்கு சமானம்.//

சேகர் ஸார்.. மொதல்ல இங்க சைக்கிள் ஓட்டுற தகுதிக்கே முக்கால்வாசி இடத்துல ரோடு இல்லே.. இதுல அல்லாமே கார்ன்னா அம்புட்டுத்தான்.. ஒரு பய ஆபீஸ¤க்கும் போக முடியாது.. வீட்டுக்கும் போக முடியாது.

மொதல்ல உள் கட்டமைப்பை சீராக்கணும் ஸார்.. அதைச் செய்யாமல் இவர்களும் கண்ணை மூடிக் கொண்டு புதிய புதிய வாகன உற்பத்திக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்.. இன்னும் இரண்டு வருடத்தில் சென்னை நகர முடியாமல் திணறப் போகிறது..

இந்தியாவில் ஒரு மனிதனின் பொழைப்பே நாயைவிடக் கேவலமா இருக்கு ஸார்..

Anonymous said...

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே


தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்


தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை



நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

உண்மைத்தமிழன் said...

சினேகா அவர்களே, உங்கள் எதிரில் அமர்ந்திருக்கேன் சேரன் இப்போதைக்கு நான்தான் என்று எந்த 'கவிஞர்' உங்களுக்குச் சொல்லியிருப்பார் என்பது என் பூதக்கண்ணாடியில் தெளிவாகவே தெரிகிறது.

வாழ்க 'கவிஞர்'..

எஸ்பிபி அவர்களே. உங்களுடைய இந்தப் பாடலையும் நான் கேட்டிருக்கிறேன். எடுத்துக் கொடுத்த கவிஞருக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்.

அப்பப்பா.. எம்புட்டு பாசம் அல்லாருக்கும்.. நல்லாயிருங்கடே.. நல்லாயிருங்க..

Anonymous said...

//தலை கோத விரலாயில்லை //

விரல் எல்லாம் இருக்குது எஸ்.பி.பி சார்! ஆனா கோத முடி இருக்குணும்ல!

:(

Anonymous said...

//புதிய புதிய வாகன உற்பத்திக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்.. இன்னும் இரண்டு வருடத்தில் சென்னை நகர முடியாமல் திணறப் போகிறது..//

சார், ஏதாவது ஒன்னுதான் கிடைக்கும்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா.
கார்ல போனா பாதுகாப்பு, ஆனா லேட் ஆகும்.
பைக்கல போனா கை கால் உடயும், ஆனா சிக்கரம் போலாம்.
எது உங்களுக்கு பிக்குமோ அதை தெரிவு செய்யுங்கள்.
ஆனால் கட்டமைப்பு வசதி மேம்படுத்த தனியார்மையமாக்கனும்.
-------
உங்கள உயிரோட வெச்சிக்கிட்டா அரசு வரி வசூல் செய்யலாம் அதனால்தான் உங்க உயிர்மேல அக்கரயோ ;-)

Anonymous said...

//எனக்கு உடனே எமதர்மனை நேரில் பார்த்தாக வேண்டும். ஏதாவது வழி செய்யுங்கள்//

ஆஹா! நம்ம வீராச்சாமி படத்தைப் பார்க்கணும்னு ஒருத்தனாவது இருக்கானே!

யப்பா கண்ணூ! நீ பாசக்கார பயலா இருக்கியே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!

Anonymous said...

Present political scenario does not permit the government to enact laws on public interest. It happens rarely. I think it is not fair to criticise everything with out viewing issues from other side.sorry Unnmai thamilan, i would differ from you.

Anonymous said...

உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி

தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு

எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கெனவோர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு

உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆ ஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா

குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடை காசிலே தாண்டா
கட்சிக் கொடி ஏறுது போடா

மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - அஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி


கல்லூரி, பள்ளி இல்லாத ஊரைக்
கையோடு இன்றே தீமூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம்நாடு என்றே நாம் மாற்றுவோம்

இருக்கிற கோவில்களெல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரமங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்

ஸா கஸமா தமதா நிதநீ மமமம கஸ மமமம தம தததத நித நிநிநிநி
ஸ க ஸ நி ஸ நி த நி த மதம நி ஸ நி தஸநி தநித மஸக
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து தூங்கிவிழும் நாட்டை எழுப்பு

எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
இந்த உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாமக்கல் சிபி said...

//"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" //

சிறகுகள் உடைந்ததென்று
எந்தப் பறவையும்
தன்னைத் தானே
அழித்துக் கொள்வதில்லை!

காம்புகள் உதிர்ந்ததற்காய்
எந்தச் செடியும்
தன்னைத் தானே
சாய்த்துக் கொள்வதில்லை!

ஆங்காங்கே நிகழும்
பேரழிவுகளுக்காக - ஞாலம்
தன் இயக்கத்தை
நிறுத்திக் கொள்கிறதா என்ன?

தேர்வில் தோற்றதற்கா
உன்னை நீயே
அழித்துக் கொள்கிறாய்?

உன்னை நீ
அழித்துக் கொள்ளும்
உரிமையை
யார் உன்னிடம் கொடுத்தது?

வாழ மட்டுமே
உரிமை உனக்குண்டு!
சாவதற்கல்ல!

தேர்வுகளா உன்
வாழ்க்கையைத் தீர்மானிக்கும்?
அவை உன் தகுதியை
மட்டுமே தீர்மானிக்கும்!

தகுதிகளா உன்
வாழ்க்கையைத் தீர்மானிப்பவை?
உன் நம்பிக்கைதானே
அதைத் தீர்மானிக்கும்!

பள்ளிப் பாடத்துத்
தோல்விக்காய்
மரணத்தைத் தழுவுகிறாயே!
போராட்டங்கள்தானே
வாழ்க்கைப் பாடம்!
அதில் நீ தோல்வியுறலாமா?

நேற்றைய வரலாறு
எப்படியோ போகட்டும்!
நாளைய வரலாறு
உன்னால் உருவாகட்டும்!

எழுந்து வா!
நீ சாதிக்க
இன்னும்
எத்தனையோ
இருக்கிறது!

http://manamumninavum.blogspot.com/2006/03/14.html

உண்மைத்தமிழன் said...

உண்மைத் தமிழன் (ISO 2010 Cetrtified) said...
//தலை கோத விரலாயில்லை //
விரல் எல்லாம் இருக்குது எஸ்.பி.பி சார்! ஆனா கோத முடி இருக்குணும்ல!:(

ஹா..ஹா..ஹா..ஹா.. போதுமா?

உண்மைத்தமிழன் said...

///நாய் சேகர் said...
//புதிய புதிய வாகன உற்பத்திக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்.. இன்னும் இரண்டு வருடத்தில் சென்னை நகர முடியாமல் திணறப் போகிறது..//
சார், ஏதாவது ஒன்னுதான் கிடைக்கும்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா.
கார்ல போனா பாதுகாப்பு, ஆனா லேட் ஆகும்.
பைக்கல போனா கை கால் உடயும், ஆனா சிக்கரம் போலாம்.
எது உங்களுக்கு பிக்குமோ அதை தெரிவு செய்யுங்கள்.
ஆனால் கட்டமைப்பு வசதி மேம்படுத்த தனியார்மையமாக்கனும்.
உங்கள உயிரோட வெச்சிக்கிட்டா அரசு வரி வசூல் செய்யலாம் அதனால்தான் உங்க உயிர்மேல அக்கரயோ ;-)///

இல்ல சேகர் ஸார்.. உள் கட்டமைப்பு என்பதில் முதலில் அவர்கள் செய்ய வேண்டியது சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.

ஒரு சின்னஞ்சிறிய சந்து போன்ற தெருவுக்குள் பேருந்து சென்று கொண்டிருக்கிறது பல இடங்களில். இங்கெல்லாம் அருகில் வசிப்பவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈட்டைக் கொடுத்து அவற்றை இடித்து சாலைகளை அகலப்படுத்துதல் வேண்டும்.

இந்த விஷயத்தில்தான் அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். ஏனெனில் யார் அந்தப் பகுதி மக்களின் ஓட்டுக்களை இதை வைத்தே வாங்குவது என்று..

எல்லா இடத்திலும் அரசியல் கலந்திருக்கிறது. இந்த அரசியல் என்ற அசிங்கம் கலக்காமல் இருந்தால்தான் ஜனநாயகம் வாழும். இல்லையெனில் இப்போதைய முகமூடிகளின் ஆட்சிதான் தொடரும்.. வேறு வழியில்லை.

உண்மைத்தமிழன் said...

///விஜய.டீ.ராஜேந்தர் said...
//எனக்கு உடனே எமதர்மனை நேரில் பார்த்தாக வேண்டும். ஏதாவது வழி செய்யுங்கள்//
ஆஹா! நம்ம வீராச்சாமி படத்தைப் பார்க்கணும்னு ஒருத்தனாவது இருக்கானே!
யப்பா கண்ணூ! நீ பாசக்கார பயலா இருக்கியே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!///

ஐயையோ.. எமதர்மன்னா உங்களுக்கு அவர்தான் ஞாபகத்துல வருவாரா? யப்பா.. பாவம்யா அவரு.. ஒரு காலத்துல அவரு எழுதின தமிழ்ல எந்த இடத்துல 'சந்தம்' இருக்கு.. இல்லைன்னு பெரிய ஆராய்ச்சியே நடந்ததுப்பா.. கண்ணுகளா.. விட்ருங்கப்பா அவரை..

உண்மைத்தமிழன் said...

//ILANGOVAN said...
Present political scenario does not permit the government to enact laws on public interest. It happens rarely. I think it is not fair to criticise everything with out viewing issues from other side.sorry Unnmai thamilan, i would differ from you.//

ஓகே மிஸ்டர்இ இளங்கோவன். தங்களது வருகைக்கு மிக்க நன்றி.. ஆனால் எனது பார்வை விபத்துக்களைத் தடுப்பது ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிவதோடு நின்று விடக்கூடாது.. சாலை பராமரிப்புக்கள், சாலைகளை உருவாக்குதல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதைத்தான் சொல்ல வந்தேன்..

உண்மைத்தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
எழுந்து வா!
நீ சாதிக்க
இன்னும்
எத்தனையோ
இருக்கிறது!//

ஐயனே.. இது ஒன்றைச் சொல்லித்தான் பலரும் என்னை அழைத்து, நானும் இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்..

கவிஞரே சும்மா சொல்லக்கூடாது.. நீர் இப்படி ஒரு பன்மொழிப்புலவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. வாழ்க கவிஞர் நாமக்கல் சிபியார்..

Anonymous said...

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...
வெற்றிக்கொடி கட்டு - மலைகளை முட்டும் வரை முட்டு - லட்சியம்
எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா (வெற்றி
கைதட்டும் உளி பட்டு - நீ விடும் நெற்றித் துளிபட்டு - பாறைகள்
ரெட்டைப் பிளவுற்று உடைபடும் படையப்பா (கை
வெட்டுக்கிளியல்ல நீ ஒரு வெட்டு புலி என்று - பகைவரை
வெட்டித்தலை கொண்டு நடையிடு படையப்பா (வெட்டு
மிக்கத்துணிவுண்டு - இளைஞர்கள்
பக்கத்துணையுண்டு - உடன் வர மக்கட்படையுண்டு
முடிவெடு படையப்பா (வெ (வாழ்க்
இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரைக் கொன்று ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன் (யாரு
நேற்றுவரைக்க்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா (நேற்று (வெற்றி

Anonymous said...

பக்தா!

ஏனிந்த விரக்தி உன் வாழ்வில்?

சோதனைகள் உன்னைப் புடம்போட்டுப் பார்க்கத்தான்!

சுடச் சுடத்தான் தங்கம் மெருகேறும். அணிகலாய் மாறி அங்கத்தை அலங்கரிக்கும்!

பாரத்தை என்னிடத்தில் கொடுத்துவிடு!

வாழ்வை எளிமையாக எதிர்கொள்!

Anonymous said...

//ஹா..ஹா..ஹா..ஹா.. போதுமா? //

:)

இதுக்குத்தானே இவ்வளவு பாடுபடுவது!

(பாட்டுப் பாடுவதும்தான்)

உண்மைத்தமிழன் said...

ஐயா உதயமூர்த்தி, படையப்பாக்களே..
எப்படிங்கய்யா.. எப்படி இப்படி கொளுத்துறீங்க?
எல்லாத்தையும் தயாராத்தான் வைச்சிருக்கீகளா?
இம்புட்டு பாஸ்ட்டா ருக்கீகளேப்பா..
உங்க பாட்டையெல்லாம் நானும் கேட்டிருக்கேன்.. இப்பத்தான் முழுசையும் படிச்சேன். ரொம்ப நன்றிகள் கண்ணுகளா..

உண்மைத்தமிழன் said...

உண்மைத் தமிழன் (ISO 2010 Cetrtified) said...
//ஹா..ஹா..ஹா..ஹா.. போதுமா?//:)
இதுக்குத்தானே இவ்வளவு பாடுபடுவது!
(பாட்டுப் பாடுவதும்தான்)

ஆஹா.. அடுத்தவனை சிரிக்க வைக்கிறதுல ஒரு சந்தோஷமா..? ISO உண்மைத்தமிழா நீ பதினாறும் பெத்து முடிஞ்சா பெருவாழ்வு வாழுப்பா..

உண்மைத்தமிழன் said...

//யாமிருக்க பயமேன் said...
பக்தா!
ஏனிந்த விரக்தி உன் வாழ்வில்?
சோதனைகள் உன்னைப் புடம்போட்டுப் பார்க்கத்தான்!
சுடச் சுடத்தான் தங்கம் மெருகேறும். அணிகலாய் மாறி அங்கத்தை அலங்கரிக்கும்!
பாரத்தை என்னிடத்தில் கொடுத்துவிடு!
வாழ்வை எளிமையாக எதிர்கொள்!//

முருகா.. உனக்காச்சும் குன்று கிடைத்தது. கையில் கம்பு கிடைத்தது.. கட்ட கோவணமும் கிடைத்தது. நான் அதுகூட இகிடைக்காமல்தான் உள்ளேன்.. அதுக்குத்தான் உன்னை நாடி வந்து புலம்பினேன்.. ஞாபகமில்லையா? அதற்குள் மறந்து விட்டாயா.. உனக்கெப்படி ஞாபகமிருக்கும்? ஒருத்தரா ரெண்டு பேரா.. ஒரு நாளைக்கு ஆயிரம் பேருன்னு நீ யார் பிரச்சினையைத்தான் தீர்ப்ப..
வாழ்வை எளிமையாக எதிர்கொள்ன்னு சொல்லிட்ட.. மலைல இருந்து கீழ இறங்கி வந்து பாரு.. தெரியும்..

Anonymous said...

//உனக்காச்சும் குன்று கிடைத்தது//

ஏதேது! விட்டால் பரங்கி மலையை உனக்கு பட்டா போட்டுக் குடுன்னு கேப்பே போலிருக்கே!

//அதுக்குத்தான் உன்னை நாடி வந்து புலம்பினேன்.. ஞாபகமில்லையா? அதற்குள் மறந்து விட்டாயா//

மறந்து போனால் தேடி வந்து பின்னூட்டம் போடுவேனா? கொஞ்சம் யோசித்துப் பார்!

யாருக்குத்தான் கவலைகள் இல்லை!
எனக்கும் கூட உண்டு!

பழனி மலை மேல என்னை எப்படி சுரண்டிகிட்டிருக்காங்க என்பது உமக்குத் தெரியாத செய்தியா?

குன்று, தடி, கோவணதைச் சுட்டிக் காட்டும் நீ இரண்டு சம்சாரத்தை சுட்டிக் காட்ட வில்லையே!

அதிலிருந்தே தெரிகிறது! உமக்கு இன்னும் வாழும் ஆசை இருக்கிறது!
நீ மனம் மாறி விட்டாய் என்று!

வாழ்க! வளர்க!

Anonymous said...

//அடுத்தவனை சிரிக்க வைக்கிறதுல ஒரு சந்தோஷமா..? //

ஆம்! அதிலென்ன சந்தேகம்!
அதைவிட வேறு சந்தோசம் ஒன்று இருக்கிறதா சொல்லுங்கள் பார்க்கலாம்!

Anonymous said...

இறந்த காலத்தை நினைத்து வருந்திக் கொண்டிருக்காதே!

எதிர்காலத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்காதே!

இருக்கும் இந்நிகழ்காலத்தை எப்படி மகிழ்ச்சியாகக் கழிப்பது என்று பார்!

அப்போதுதான் எல்லா காலமும் இனிமையாய் அமையும்!

உண்மைத்தமிழன் said...

///யாமிருக்க பயமேன் said...
//உனக்காச்சும் குன்று கிடைத்தது//
ஏதேது! விட்டால் பரங்கி மலையை உனக்கு பட்டா போட்டுக் குடுன்னு கேப்பே போலிருக்கே!///

முருகா.. கொடுக்கக்கூடாதா? பக்கத்துலதான ஜோதி தியேட்டர் இருக்கு.. நல்லா பொழுது போகுமே..?

//அதுக்குத்தான் உன்னை நாடி வந்து புலம்பினேன்.. ஞாபகமில்லையா? அதற்குள் மறந்து விட்டாயா//
மறந்து போனால் தேடி வந்து பின்னூட்டம் போடுவேனா? கொஞ்சம் யோசித்துப் பார்! யாருக்குத்தான் கவலைகள் இல்லை! எனக்கும் கூட உண்டு! பழனி மலை மேல என்னை எப்படி சுரண்டிகிட்டிருக்காங்க என்பது உமக்குத் தெரியாத செய்தியா?

முருகா.. வெறுமனே வெறும் வார்த்தைகளால் ஆறுதல் சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? எதுனாச்சும் செய்யு.. அப்பத்தான எனக்கு ஆறுதலா இருக்கும்..

//குன்று, தடி, கோவணதைச் சுட்டிக் காட்டும் நீ இரண்டு சம்சாரத்தை சுட்டிக் காட்ட வில்லையே! அதிலிருந்தே தெரிகிறது! உமக்கு இன்னும் வாழும் ஆசை இருக்கிறது! நீ மனம் மாறி விட்டாய் என்று! வாழ்க! வளர்க!//

ஐயோ முருகய்யா.. நானே மறந்து போய் இருக்கேன். ஞாபகப்படுத்திட்டியே.. உனக்கே இது டூமச்சா இல்லே.. அவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம தவிச்சுக்கிட்டிருக்கான்.. எனக்கு ரெண்டு, எனக்கு ரெண்டுன்னு நாடு நாடா போயி ஏதோ அவார்டு வாங்கின மாதிரி குதிச்சிட்டிருக்கியே.. நல்லாயிரு.. நல்லாயிரு..

உண்மைத்தமிழன் said...

//ஓஷோ said...
இறந்த காலத்தை நினைத்து வருந்திக் கொண்டிருக்காதே!
எதிர்காலத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்காதே!
இருக்கும் இந்நிகழ்காலத்தை எப்படி மகிழ்ச்சியாகக் கழிப்பது என்று பார்!
அப்போதுதான் எல்லா காலமும் இனிமையாய் அமையும்!//

ஐயா ஓஷோ.. என்கிட்டயே தத்துவமா? இதையெல்லாம் பேசிப் பேசித்தான் நான் இந்த லட்சணத்துல உக்காந்திருக்கேனாக்கும்.. தெரிஞ்சுக்க..

உண்மைத்தமிழன் said...

உண்மைத் தமிழன் (ISO 2010 Cetrtified) said...
//அடுத்தவனை சிரிக்க வைக்கிறதுல ஒரு சந்தோஷமா..?//
ஆம்! அதிலென்ன சந்தேகம்!
அதைவிட வேறு சந்தோசம் ஒன்று இருக்கிறதா சொல்லுங்கள் பார்க்கலாம்!

சத்தியமான உண்மைதாம்பா.. ஒத்துக்குறேன்..

Anonymous said...

//அவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம தவிச்சுக்கிட்டிருக்கான்//

பக்தா! மேட்டரை இப்படித் தெளிவாச் சொன்னால்தானே எதுனா ஹெல்ப் பண்ண முடியும்!

உன் பிரச்சினைக்கு விடை காண இங்கே போய்ப் பார்க்கவும்.

உண்மைத்தமிழன் said...

///யாமிருக்க பயமேன் said...
//அவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம தவிச்சுக்கிட்டிருக்கான்//
பக்தா! மேட்டரை இப்படித் தெளிவாச் சொன்னால்தானே எதுனா ஹெல்ப் பண்ண முடியும்!
உன் பிரச்சினைக்கு விடை காண இங்கே போய்ப் பார்க்கவும்.///

ஐயனே.. அங்கிட்டெல்லாம் போயி என் முகத்தைக் காட்டிட்டு வந்தாச்சு. அங்கேயெல்லாம் உன் பக்கத்துல உக்காந்திருக்காக பாரு 'தேவாதிதேவர்கள்' அவுங்களுக்கு மட்டும்தான் அனுமதியாம்.. என்னை மாதிரி எப்பவுமே கையை தூக்கி உன்னையே கும்பிட்டிட்டிருக்கிற ஆளுகளெல்லாம் பக்கத்துலயே நுழைய முடியாதுன்னு சொல்லிட்டாக.

நீ வேற வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறியே வேலா.. நியாயமா? இது..

Anonymous said...

//அவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம தவிச்சுக்கிட்டிருக்கான்..//

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு தண்ணீரை அருந்தலாம்! அந்த நாள் முழுவதும் சேர்த்து குறைந்த பட்சம் 6 லிட்டர் நீர் அருந்த முடியுமா என்று கேட்டால் முடியும் என்றுதான் சொல்வேன்.

இவ்வாறு அருந்தினால் ஒண்ணுக்கு பிரச்சினையில்லாம் நிம்மதியாக இந்த நாளை மட்டுமில்லாமல் எல்லா நாளும் கழிக்கலாம்!

உண்மைத்தமிழன் said...

ஐயா.. அது.. அது.. கரீக்ட்டா நடந்தா அல்லாமே கரீக்ட்டா நடக்கும்யா.. எனக்கும் இதுல எந்தச் சந்தேகமும் இல்லீங்கய்யா.. இப்ப நீங்க சொல்லிட்டீங்க பாருங்க.. இதை அப்படியே ஐயாயிரம் காப்பி பிரிண்ட் போட்டு மெட்ராஸ் சிட்டி முழுக்க ஒட்டிர்றேனுங்கய்யா.. சரிங்களா..

ஆனாலும் பயபுள்ளைகளுக்கு இம்புட்டு அறிவுக்கண்ணு ஆகாதுய்யா..

Anonymous said...

//அவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம தவிச்சுக்கிட்டிருக்கான்..//


உக்காந்தா எழுந்திருக்க முடியலை! எழுந்தா உட்கார முடியலை!

ஒரு சிலருக்கு ஒண்ணுக்கு போறதுல பிரச்சினை! சில பேருக்கு ரெண்டுக்கு போறதுல பிரச்சினை! சில பேருக்கு ரெண்டுலயுமே(!?) பிரச்சினை!

என்னென்னவோ மாத்திரை! என்னென்னவோ மருந்து சாப்பிடுறாங்க!

கேக்கலையேன்னு கவலைப் பட்டுகிட்டு நம்ம கிட்ட வருவாங்க கடைசியா!

நம்ம கிளினிக் சிட்டுக் குருவி லேகியம் வாங்கி ரெண்டே ரெண்டு வாரம் சாப்பிட்டுட்டு "ஐயா! இப்ப நான் நிம்மதியா இருக்கேன்னு கால்ல வந்து விழுறாங்க!"

எந்த பிரச்சினையானாலும் என்கிட்ட நம்பிக்கையா வாங்க!

Anonymous said...

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பவர்கள் வாழைத்தண்டை பொறியல் செய்து அடிக்கடி சாப்பிடலாம்!

வாழைத்தண்டு சாறு அருந்தலாம்!

இப்படி அருந்தினால் சிறுநீரக் கோளாறுகள், சிறுநீரகக் கற்கள் போன்றவை உங்களை அண்டாது!

ACE !! said...

உண்மை தமிழரே.. நீங்க சொல்ற வாதம் சரியா படலீங்க.. நான் கோடம்பாக்கம் பாலத்துல தலைக்குப்புற விழுந்த போது, ஹெல்மெட் இருந்ததால தான் இன்னிக்கு பின்னூட்டம் போடறேன்.. என் தலை ஒரு 3 தடவை தரைல அடிச்சுது.. ஒன்னும் ஆகல..

நீங்க சொல்ற அவலம்லாம் நம்ம நாட்ல இருக்கு..அதுக்காக அவனை நிறுத்த சொல், நான் நிறுத்தறேன்னு சொல்ற மாதிரி இருக்கு..

பெரியவங்க.. பாத்து செய்யுங்க.. :)))

Anonymous said...

வலம்புரி ஜான் இன்னமும் உசுரோட இருக்காரா...

சொல்லவேயில்லையே

ACE !! said...

//ஆனால் எனது பார்வை விபத்துக்களைத் தடுப்பது ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிவதோடு நின்று விடக்கூடாது.. சாலை பராமரிப்புக்கள், சாலைகளை உருவாக்குதல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதைத்தான் சொல்ல வந்தேன்..//

இதை தாமதமாகத்தான் பார்த்தேன்..
ஆனா, உங்க தலைப்பும் உள்ளே இருந்த கருத்தும் இதை சொன்ன மாதிரி எனக்கு தெரியல..

நீங்க மேலே சொல்லியிருப்பதில் எனக்கு மறுகருத்து இல்லை..

துளசி கோபால் said...

இந்தப் பதிவின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லைங்க.

ஹெல்மெட் கட்டாயம் போடணும். அதுவும் இங்கே நியூஸியில் சைக்கிள் சவாரிக்கும்
ஹெல்மெட் கட்டாயம் வேணும். ரெண்டு வயசுக்குழந்தைக்கூட சைக்கிள் ஹெல்மெட்
போட்டுக்கிட்டுத்தான் போகணும். இல்லேன்னா 'உள்ளே' தள்ளிருவாங்க.

கார்லே கூட 'பெல்ட்' போடாமப் போனா உடனடி அபராதம் 150 டாலர்.

இப்ப இருக்கும் சூழ்நிலையால் வாழறதுக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிக்கிட்டு
இருக்கோம். சீக்கிரம் 'போனா'ச்சரின்னு. அது தனிமனித மனசு நினைப்பது.
சமூகத்துக்கு நல்லது நடக்கணுமுன்னா சில நடைமுறைகள் வேணும்தான்.

நம்ம கல்வெட்டு எழுதுனது ரொம்பச் சரி.

ஆனா இந்த ஹெல்மெட் விவகாரம் வச்சு, இன்னும் கொஞ்சம் காசு பார்க்கலாமுன்னு
காவல்துறை கடைநிலைகள் நினைச்சுறக் கூடாது. அதென்னப்பா அசிங்கமா,
பிச்சை எடுக்கறதுமாதிரி கைநீட்டிக் காசு வாங்கறாங்க. 'யக்'

துளசி கோபால் said...

இன்னொண்ணு சொல்ல விட்டுப்போச்சு.

நாம பிறக்கறது நம்ம கையில் இல்லை. நம்மைக் கேட்டுக்கிட்டாப் பெத்தாங்க?
நாம் போறதும் நம்ம கையில் இல்லை. நேரம் வரும்போது 'தானா'ப்போவோம்.

ஆனா இது ரெண்டுக்கும் இடையில் இருக்கும் வாழ்க்கை நம்ம கையில்தான்.
அதுலே அடிபட்டுக்கிட்டு, படுக்கையில் கிடந்தா யார் பார்த்துக்குவாங்க?

உண்மைத்தமிழன் said...

///பழனி காளிமுத்து said...
//அவனவன் ஒண்ணுக்கே வழியில்லாம தவிச்சுக்கிட்டிருக்கான்..//
உக்காந்தா எழுந்திருக்க முடியலை! எழுந்தா உட்கார முடியலை!
ஒரு சிலருக்கு ஒண்ணுக்கு போறதுல பிரச்சினை! சில பேருக்கு ரெண்டுக்கு போறதுல பிரச்சினை! சில பேருக்கு ரெண்டுலயுமே(!?) பிரச்சினை!
என்னென்னவோ மாத்திரை! என்னென்னவோ மருந்து சாப்பிடுறாங்க!
கேக்கலையேன்னு கவலைப் பட்டுகிட்டு நம்ம கிட்ட வருவாங்க கடைசியா!
நம்ம கிளினிக் சிட்டுக் குருவி லேகியம் வாங்கி ரெண்டே ரெண்டு வாரம் சாப்பிட்டுட்டு "ஐயா! இப்ப நான் நிம்மதியா இருக்கேன்னு கால்ல வந்து விழுறாங்க!"
எந்த பிரச்சினையானாலும் என்கிட்ட நம்பிக்கையா வாங்க!///

ஐயா பழனி காளிமுத்து அவர்களே.. ஊருக்கே வைத்தியம் பார்த்த நீங்க உங்க மனைவிக்கு வந்த நோயைப் போக்க நாயா, பேயா உலகம் முழுக்க அலைஞ்சீங்களே மறந்துட்டீங்களா..?

இப்படிச் சொல்ற நீங்களே கடைசிக் காலத்துல மருந்து, மாத்திரை எடுத்துக்க மாட்டேன்னு அடம்புடிச்சு சத்யாக்கிரகியா நின்னு மேல போயிட்டீகளே.. எல்லாம் ஒரு வெறுப்புதானோ..?

உங்க வீடு இருக்குற தெருவுலேயே உங்க லேபிள்லேயே கள்ள மாத்திரையும், மருந்தும் வித்தும் நீங்க கண்டுக்காம பேர் பிரபலமானா போதும்னு விட்டுட்டீகளே..

இப்ப அந்த போலி மருந்துகள் தமிழ்நாடு முழுக்க சுத்திக்கிட்டிருக்கு. ஆவியா வந்து இதையாச்சும் கண்டுக்கிடுங்க.. சர்ரீங்களா..?

உண்மைத்தமிழன் said...

//கொத்தனார் said...
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பவர்கள் வாழைத்தண்டை பொறியல் செய்து அடிக்கடி சாப்பிடலாம்!
வாழைத்தண்டு சாறு அருந்தலாம்!
இப்படி அருந்தினால் சிறுநீரக் கோளாறுகள், சிறுநீரகக் கற்கள் போன்றவை உங்களை அண்டாது!//

கொத்தனார் அவர்களே, எம்புட்டு மண்ணுக்கு எம்புட்டு சிமெண்ட்டு கலக்கணும்.. எம்புட்டு டிரம் தண்ணி ஊத்தணும்ன்ற மாதிரி கிட்னிக்கும் அம்புட்டு யோசனை சொல்றீக.. சரீங்க.. பெரியவர் நீங்க.. நல்ல மனசோட சொல்றீங்க.. ஏத்துக்குறேன்.. நானும் அல்லாருக்கும் உங்க சார்பா இதையே சிபாரிசும் பண்றேன்.. வந்ததுக்கும், யோசனை சொன்னதுக்கும் நன்றிங்கோ..

உண்மைத்தமிழன் said...

//சிங்கம்லே ACE !! said...
உண்மை தமிழரே.. நீங்க சொல்ற வாதம் சரியா படலீங்க.. நான் கோடம்பாக்கம் பாலத்துல தலைக்குப்புற விழுந்த போது, ஹெல்மெட் இருந்ததால தான் இன்னிக்கு பின்னூட்டம் போடறேன்.. என் தலை ஒரு 3 தடவை தரைல அடிச்சுது.. ஒன்னும் ஆகல.. நீங்க சொல்ற அவலம்லாம் நம்ம நாட்ல இருக்கு..அதுக்காக அவனை நிறுத்த சொல், நான் நிறுத்தறேன்னு சொல்ற மாதிரி இருக்கு.. பெரியவங்க.. பாத்து செய்யுங்க.. :)))//

சிங்கம்லே ஸார்.. யாருக்குமே நான் சொன்னது புரியல போலிருக்கு.. நான் சொல்ல வந்தது சாவு எப்போது ஒருவருக்கு வருமோ அப்போது வந்தே தீரும்.. அதை யாரும் தடுக்க முடியாது. நீங்கள் தலையில் ஹெல்மெட் மாட்டி உயிர் தப்பியதுகூட இறை செயல்தான். இப்படித்தான் நடக்க வேண்டுமென்றிருக்கிறது. அது நடந்துள்ளது. அவ்வளவுதான்..

ஹெல்மெட் மாட்டினால் உங்கள் உயிர் தப்பிவிடும் என்று போதனை செய்து மற்ற விஷயங்களுக்கெல்லாம் நாங்கள் பொறுப்பில்லை என்று அரசுகள் கை கழுவக்கூடாது என்பதைத்தான் கொஞ்சம் அதிகப்படியான பூஸ்ட்டுடன் சொல்லிவிட்டேன். கதையே மாறிப் போய்விட்டது.. ஸாரி சிங்கம்..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
வலம்புரி ஜான் இன்னமும் உசுரோட இருக்காரா... சொல்லவேயில்லையே//

என்ன தம்பி.. ஊருக்குப் புதுசா? இங்கன வந்த 'வலம்புரிஜான்' யாரு தெரியும்ல்ல.. உன் வலைப்பூ அட்ரஸ் கொடு. அவரண்டை தர்றேன்.. அப்பால, பதில் கமெண்ட் போட்டே காணாப் போயிருவ.. ஜாக்கிரதை..

உண்மைத்தமிழன் said...

///சிங்கம்லே ACE !! said...
//ஆனால் எனது பார்வை விபத்துக்களைத் தடுப்பது ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிவதோடு நின்று விடக்கூடாது.. சாலை பராமரிப்புக்கள், சாலைகளை உருவாக்குதல் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதைத்தான் சொல்ல வந்தேன்..//
இதை தாமதமாகத்தான் பார்த்தேன்..
ஆனா, உங்க தலைப்பும் உள்ளே இருந்த கருத்தும் இதை சொன்ன மாதிரி எனக்கு தெரியல..
நீங்க மேலே சொல்லியிருப்பதில் எனக்கு மறுகருத்து இல்லை..///

ஐயையோ.. சிங்கம் ஸார்.. நானும் இப்பத்தான் இதை பார்த்தேன்.. வரிசையா பதில் போட்டுக்கிட்டே வந்தேன்னா.. உத்துப் பார்க்க மறந்துட்டேன்.. நிறைய இருக்குன்னு நீங்கள்லாம் புலம்பினதால கடைசி நேரத்துல ஒரு paragraph-ஐ தூக்கிக் கடாசிட்டேன். அதான் இத்தனை பதில் கமெண்ட்ஸ் போட்டு சமாளிச்சுக்கிட்டிருக்கேன்.. இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீகளே.. நன்றி சிங்கம் ஸார்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
இந்தப் பதிவின் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லைங்க.
ஹெல்மெட் கட்டாயம் போடணும். அதுவும் இங்கே நியூஸியில் சைக்கிள் சவாரிக்கும்
ஹெல்மெட் கட்டாயம் வேணும். ரெண்டு வயசுக்குழந்தைக்கூட சைக்கிள் ஹெல்மெட்
போட்டுக்கிட்டுத்தான் போகணும். இல்லேன்னா 'உள்ளே' தள்ளிருவாங்க.
கார்லே கூட 'பெல்ட்' போடாமப் போனா உடனடி அபராதம் 150 டாலர்.
இப்ப இருக்கும் சூழ்நிலையால் வாழறதுக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிக்கிட்டு
இருக்கோம். சீக்கிரம் 'போனா'ச்சரின்னு. அது தனிமனித மனசு நினைப்பது.
சமூகத்துக்கு நல்லது நடக்கணுமுன்னா சில நடைமுறைகள் வேணும்தான்.
நம்ம கல்வெட்டு எழுதுனது ரொம்பச் சரி.
ஆனா இந்த ஹெல்மெட் விவகாரம் வச்சு, இன்னும் கொஞ்சம் காசு பார்க்கலாமுன்னு
காவல்துறை கடைநிலைகள் நினைச்சுறக் கூடாது. அதென்னப்பா அசிங்கமா,
பிச்சை எடுக்கறதுமாதிரி கைநீட்டிக் காசு வாங்கறாங்க. 'யக்'//

சரிங்க டீச்சர்.. அப்பாடா ஒரு பதிவுலேயாவது உங்க கோபத்தைக் காட்டிட்டீங்க.. சந்தோஷம்.. நானும் வேண்டாவெறுப்பா ஹெல்மெட்டை வாங்கித் தொலைச்சிட்டேன். போட்டும் தொலைச்சிட்டேன். ஏன்னா மாமாவுக்கு டெய்லி நூறு ரூபா அழ வேணாம் பாருங்க.. அதுக்குத்தான்..

மத்தபடி நியூஸிலாந்து ரோட்டையெல்லாம் பார்த்தா ஹெல்மெட் அவசியமில்லைன்னுதான் எனக்குத் தோணுது. ஆனாலும் ஜனங்க மேல அங்க இருக்குற அரசுகளுக்கு அவ்ளோ பாசம்.. இதுதான் நாடுங்கறது..

சீக்கிரமா மேல போனா சரின்ற தனி மனித எண்ணம்தான்.. அது உண்மைத்தமிழனுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு..

கல்வெட்டு ஸார்.. பொரிந்து தள்ளிட்டார்.. நீங்க அவரை வழி மொழிஞ்சிட்டீங்க.. நன்றிகள் பல பல..

சமூகத்துக்கு நல்லது நடக்க சில நடைமுறைகள் வேணும்னு நானும் நினைக்கிறேன். அதை மக்களாகிய நாங்க மட்டும் செஞ்சு என்ன புண்ணியம்..? அரசுகளும் செய்யணும்ல டீச்சர்..

உண்மைத்தமிழன் said...

//துளசி கோபால் said...
இன்னொண்ணு சொல்ல விட்டுப்போச்சு.
நாம பிறக்கறது நம்ம கையில் இல்லை. நம்மைக் கேட்டுக்கிட்டாப் பெத்தாங்க?
நாம் போறதும் நம்ம கையில் இல்லை. நேரம் வரும்போது 'தானா'ப்போவோம்.
ஆனா இது ரெண்டுக்கும் இடையில் இருக்கும் வாழ்க்கை நம்ம கையில்தான்.
அதுலே அடிபட்டுக்கிட்டு, படுக்கையில் கிடந்தா யார் பார்த்துக்குவாங்க?//

உண்மைதான் டீச்சர்.. உசிரோட நல்லாயிருக்கும்போதே பார்த்துக்க ஆள் இல்லே.. இதுல பெட்ல கிடந்தா நாய்கூட சீந்தாதுதான்.. அதான் மொத்தமா ஒரே 'தூக்குல' போயிரலாமேன்னு பார்த்து காதுல மிஷின்கூட மாட்டாம வண்டி ஓட்டிக்கிடிருக்கேன். இந்த நேரத்துல பார்த்து 'ஹெல்மெட்டை மாட்டுறா.. செத்துத் தொலையாத.. சாவைத் தள்ளிப் போடுடா'ன்னு சொன்னா மனுஷனுக்கு கோபம் வராது.. அதான்..

Anonymous said...

// ஆனாலும் ஜனங்க மேல அங்க இருக்குற அரசுகளுக்கு அவ்ளோ பாசம்..//

பக்தா!

அரசாங்கம் உன் மேல் அக்கறை வைப்பது இருக்கட்டும். முதலில் உன் மேல் நீயே அக்கறை காட்டு! உன்னை நீ பாதுகாத்துக் கொள்!

உண்மைத்தமிழன் said...

///யாமிருக்க பயமேன் said...
// ஆனாலும் ஜனங்க மேல அங்க இருக்குற அரசுகளுக்கு அவ்ளோ பாசம்..//
பக்தா! அரசாங்கம் உன் மேல் அக்கறை வைப்பது இருக்கட்டும். முதலில் உன் மேல் நீயே அக்கறை காட்டு! உன்னை நீ பாதுகாத்துக் கொள்!/

அதான் முருகா நீ இருக்கியே.. அப்புறம் எனக்கென்ன கவலை? என்னுடைய கவலையெல்லாம், உன்னை எவ்வளவு சீக்கிரத்தில் நான் அடைவது என்பதைப் பற்றித்தான்..

Anonymous said...

//உன்னை எவ்வளவு சீக்கிரத்தில் நான் அடைவது என்பதைப் பற்றித்தான்..
//

அடப் பாவி! நீ திருந்தவே மாட்டியா?

எனக்கு வர கோவத்துக்கு நானே என் வேலால உன்னைக் குத்திக் கொன்னுட்டு சைதாப்பேட்டை கோர்ட்ல போயி சரண்டர் ஆயிடலாம்னு தோணுது!

Anonymous said...

எப்போது நீ எம்மை வந்தடையவேண்டுமென்பதை நான்தான் முடிவு செய்வேன்.

அதுவரை இருக்கும் அவகாசத்தில் உம்மை நீ பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்னும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு யாமே உம்மை அழைத்துக் கொள்வோம்!

அதுவரை பொறுமை காக்கவும். முன் பதிவு செய்தவர்களுக்கிடையில் உம்மை நான் அழைத்தால் என் பெயரிலும் ஊழல் குற்றச்சாட்டு எழும்.

அதற்கு நீ காரணமாகலாமா பக்தா?

Anonymous said...

நானே வரலாம்னு பார்த்தேன்!

அதான் வலம்புரி ஜானும், பழனி காளிமுத்துவும் வந்து சொல்லிட்டாங்களே!

உண்மைத்தமிழன் said...

///யாமிருக்க பயமேன் said...
//உன்னை எவ்வளவு சீக்கிரத்தில் நான் அடைவது என்பதைப் பற்றித்தான்..//
அடப் பாவி! நீ திருந்தவே மாட்டியா?
எனக்கு வர கோவத்துக்கு நானே என் வேலால உன்னைக் குத்திக் கொன்னுட்டு சைதாப்பேட்டை கோர்ட்ல போயி சரண்டர் ஆயிடலாம்னு தோணுது!///

அடப்பாவி முருகா.. அப்ப நீ சீக்கிரம் வர மாட்டியா..?

வேலால குத்துவியோ, கம்பால காயப்படுத்திக் கொல்வாயோ, அல்லது மயிலால் கொத்திக் கொல்வாயோ.. எனக்குத் தெரியாது.. நான் சீக்கிரம் உன் பாதம் வந்து சேர வேண்டும். ஆவண செய்யடா முருகா..

சைதாப்பேட்டை கோர்ட்ல எனக்குத் தெரிஞ்ச வக்கீல் நிறைய பேர் இருக்காக.. என்னிக்குன்னு சொல்லு.. அவுகளைத் தயாரா இருக்கச் சொல்றேன்..

உண்மைத்தமிழன் said...

//யாமிருக்க பயமேன் said...
எப்போது நீ எம்மை வந்தடையவேண்டுமென்பதை நான்தான் முடிவு செய்வேன்.
அதுவரை இருக்கும் அவகாசத்தில் உம்மை நீ பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்னும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு யாமே உம்மை அழைத்துக் கொள்வோம்!
அதுவரை பொறுமை காக்கவும். முன் பதிவு செய்தவர்களுக்கிடையில் உம்மை நான் அழைத்தால் என் பெயரிலும் ஊழல் குற்றச்சாட்டு எழும்.
அதற்கு நீ காரணமாகலாமா பக்தா?//

முருகா.. உன் கருணையே கருணை.. இதுவரை நீ எனக்குக் கொடுத்த வாழ்க்கை போதாதா? இன்னுமா வாழ்க்கையை நான் கற்றுக் கொள்ள வேண்டும். என்னிடம் இப்போது நீ வந்தால் உனக்கே நான் மறந்து போயிருக்கும் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் அருமை, பெருமைகளைச் சொல்வேன். அவ்வளவு அடிபட்டு, மிதிபட்டு, லோல்பட்டிருக்கேன். இதுக்கு மேலேயும் பக்குவப்படுறதுன்னா ஜெயிலுக்குத்தான்யா போகணும்..

எம்பெருமானே.. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்குத் தெரியாது.. மத்தவங்களையெல்லாம் விட்டுட்டு மொதல்ல என்னைக் கூப்பிடு.. அப்புறம் எதுனாச்சும் 'ஊழல்' அது.. இது..ன்னு புகார் வந்தா பிரம்மன் தலைமைல ஒரு விசாரணைக் கமிஷனை போட்டு தப்பிச்சுக்கலாம்.. என்ன சரியா?

உண்மைத்தமிழன் said...

//மாத்ரு பூதம் said...
நானே வரலாம்னு பார்த்தேன்! அதான் வலம்புரி ஜானும், பழனி காளிமுத்துவும் வந்து சொல்லிட்டாங்களே!//

ஐயா மாத்ருபூதமய்யா.. உன்கிட்ட வர்றதுக்கு இஇன்னும் எனக்கு நேரமும், வாய்ப்பும் வரலை. வந்தா.. அதுவரைக்கும் முருகன் என்னை விட்டு வைச்சிருந்தான்னா கண்டிப்பா வந்துத் தொலையுறேன்.. நீ வேற.. 'காடு காடு'ன்னு அலைஞ்சிட்டிருக்கேன் இப்ப வந்து 'நாடு.. நாடு'ன்னு பிட்டைப் போடுறியே..

Anonymous said...

//. இதுக்கு மேலேயும் பக்குவப்படுறதுன்னா ஜெயிலுக்குத்தான்யா போகணும்..
//

100 என்ற எண்ணிற்கு டயல் செய்து "மாமா உன் பொண்ணைக் குடு"

என்ற பாடலைப் பாடவும்.

ஒன்று நீ பக்குவப் படலாம். அல்லது "ஒண்ணுக்கே" பிரச்சினை தீரலாம்.

எது வரினும் உமக்கு மகிழ்ச்சிதானே பக்தா?

Anonymous said...

விரைவில் உம்மைச் சந்திக்கும் நண்பரொருவர் உம்மிடம் ஒரு நூலைத் தருவார்.

அந்நூலில் உள்ளவற்றை தினமும் ஒரு முறை தவறாமல் படிக்கவும். விரைவில் உமது பிரச்சினைகள் தீரும்.

ஆரம்பத்தில் உமக்குச் சில சோதனைகள் ஏற்படும். அதுவே நீ எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறாய் என்பதன் அடையாளம்.

வாழ்க! வளர்க!

உண்மைத்தமிழன் said...

///யாமிருக்க பயமேன் said...
//. இதுக்கு மேலேயும் பக்குவப்படுறதுன்னா ஜெயிலுக்குத்தான்யா போகணும்..//
100 என்ற எண்ணிற்கு டயல் செய்து "மாமா உன் பொண்ணைக் குடு" என்ற பாடலைப் பாடவும். ஒன்று நீ பக்குவப் படலாம். அல்லது "ஒண்ணுக்கே" பிரச்சினை தீரலாம். எது வரினும் உமக்கு மகிழ்ச்சிதானே பக்தா?///

முருகா.. இந்த 100 பின்னூட்டத்திலும் நச்சென்ற பின்னூட்டம் இதுதான் முருகா.. ஒரு வார்த்தை சொன்னாலும் நச்சென்று சொல்லியிருக்கிறாய்.. நன்றி முருகா.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

//யாமிருக்க பயமேன் said...
விரைவில் உம்மைச் சந்திக்கும் நண்பரொருவர் உம்மிடம் ஒரு நூலைத் தருவார். அந்நூலில் உள்ளவற்றை தினமும் ஒரு முறை தவறாமல் படிக்கவும். விரைவில் உமது பிரச்சினைகள் தீரும்.//

ஓகே முருகா.. புத்தகத்துடன் வரும் உன் நண்பரையும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன். சீக்கிரமாக வரச் சொல் முருகா..

//ஆரம்பத்தில் உமக்குச் சில சோதனைகள் ஏற்படும். அதுவே நீ எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறாய் என்பதன் அடையாளம். வாழ்க! வளர்க!//

இதுக்கு மேல உன்னால எனக்கு என்ன சோதனை கொடுக்க முடியும் முருகா.. எதுவாக இருந்தாலும் நீ இருக்கிறாயே.. உன் துணையோடு எதையும் வெல்வேன்..

Anonymous said...

//உன் துணையோடு எதையும் வெல்வேன்..
//

நம்பிக்கையே நல்லது. எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!

நம்பிக்கையே நல்லது. எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது!

Anonymous said...

//உன் துணையோடு எதையும் வெல்வேன்..
//

பக்தா! இதுதான் நமக்கு வேண்டும்!

இந்த நம்பிக்கைதான் உன்னை இனி வழிநடத்தும்!

நம்பினோர் கைவிடப்படார் என்பது நான்கு மறைத் தீர்ப்பு!

இனி உம் வாழ்வில் எல்லாமே சுகமே! என் ஆசியும் துணையும் உமக்கு எப்போதுமே உடனிருக்கும்!

abeer ahmed said...

See who owns swissmade.com or any other website:
http://whois.domaintasks.com/swissmade.com