சோக்காலி - சினிமா விமர்சனம்

27-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வாரம் வெளிவந்த படங்கள் எல்லாமே அடி வாங்கிருச்சு.. எதுவும் சரியில்லாமல் போக ‘சூது கவ்வும்’, ‘எதிர் நீச்சல்’ ரெண்டு படத்துக்கும் ரிப்பீட் ஆடியன்ஸ் கூட்டமும் கூட ஆரம்பிச்சிருக்காம்..! இந்த ரெண்டு படத்தையும் தூக்க மாட்டோம்ன்னு வேற பல ஊர் தியேட்டர்காரங்க சொல்லிட்டதால, கிடைச்ச தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. 

‘சோக்காலி’ன்னா சொகமா, சொகத்தை அனுபவிக்கிறவன்னு சொல்றாங்க.. அப்படி ஒருத்தனோட கதைதான்.. ‘சோக்காலி’ன்ற டைட்டிலுக்கு சென்சார் போர்டுல கடைசி நேரத்துல கட்டைய கொடுத்ததால ‘சொல்லா கதை’ன்னு பெயர் மாத்தி இந்தப் பெயர்லேயே சர்டிபிகேட் வாங்கியிருக்காங்க..!


ரோஜா டிவில காம்பியரிங்கா இருக்குற ஹீரோ, தன்னோட பிரபலத்தை பயன்படுத்தி கிடைக்கிற பெண்களை தள்ளிட்டுப் போற டைப். இது தெரியாத ஹீரோயின் பரமத்தி வேலூர்ல இருந்து அடிக்கடி போன் செஞ்சு அந்தப் பாட்டை போடு.. இந்தப் பாட்டை போடுன்னு ஹீரோகிட்ட அனத்தி அவனை ஒன்சைடா லவ் பண்ணுது.. ஒரு ஜவுளிக்கடையோட ஷூட்டிங்கிற்காக பரமத்திவேலூர் வரும் ஹீரோ, ஹீரோயின்கூடயும் ஷூட்டிங்கை முடிச்சிட்டு மெட்ராஸுக்கு ஓடிர்றாரு.. 

சென்னைல ஏற்கெனவே இவர் ஏமாத்தின ஒரு பெண் இவர் மேல சேனல்ல கம்ப்ளையிண்ட் கொடுக்க வேலை போகுது. அதே நேரம் ஹீரோயினுக்கு வயித்துல குழந்தை உண்டாயிருது.. ஹீரோயின் ஹீரோவைத் தேடுது.. அதே நேரம், தன்னோட தங்கச்சி சாவுக்குக் காரணமான ஹீரோவை கொல்ல சோனாவும், தன்னோட காதலியோட சாவுக்குக் காரணமான ஹீரோவை கொல்ல இன்னொருத்தரும் முயற்சி செஞ்ச மூணு பக்கமும் மாட்டிக்கிறாரு. கடைசியா எப்படி அடிபட்டு, மிதிபட்டு குண்டடிபட்டு சாகுறாருன்றதுதான் கதை..!

ஓல்டு மாடல் கதை.. சேனல், செல்போன், டாப் டியூன்ஸ்ன்னு புது ஆங்கிள்ன்னு சொல்லியிருக்கேன்னு இயக்குநர் சரணா சொன்னாலும் அழுத்தமில்லாத கதை, திரைக்கதை, முக்கியமா நடிப்பு.. இதுனால எல்லாம் ஏதோ தூர்தர்ஷன் நாடகம் பார்க்குற மாதிரியிருக்கு..! அதுலேயும் கஞ்சா கருப்புவை வைச்சு காமெடின்னு சொல்லி எடுத்திருக்கிற கொடுமைக்கு சேனல்கள்ல போடுற மொக்கைகளே பரவாயில்லை.. அவ்வளவு வேஸ்ட்டு.. 

ஒரே ஆறுதல்.. சில காட்சிகளில் சோனா காட்டியிருக்கும் ‘நடிப்பு’த் திறமை..! இன்னும் நல்லா நடிச்சிருந்தாங்களாம்.. சென்சார் போர்டு பாவிகள்.. திருப்பிப் போடுங்க பார்க்கணும்னு கேட்டு 3, 4 தடவை சோனா சீன்ஸ்களையெல்லாம் பார்த்து பெருமூச்சுவிட்டுட்டு இதையெல்லாம் சுத்தமா கட் செஞ்சாத்தான் சர்டிபிகேட்டுன்னு சொல்லிட்டாங்களாம்.. அவ்வளவு காசு கொடுத்து நடிக்க வைச்ச ஆண்ட்டியோட நடிப்பை கட் செஞ்சதால தயாரிப்பாளர், இயக்குநர் இவங்களையும் தாண்டி படம் பார்த்த ஆயிரம் ரசிகர்களுக்கும் பெரும் வருத்தம்தான்.. எப்படியாச்சும் சென்சார் போர்டு உறுப்பினராவாவது ஆயிரணும்னு இப்பத்தான் யோசனையே வந்திருக்கு..!


ஹீரோவா சைதன்யான்னு ஒருத்தர். ஹீரோயின் சுவாசிகா.. பேமிலி முகம்.. நடிப்பைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. ஏதோ தன்னால முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருக்காங்க ரெண்டு பேரும்.. படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் யாராவது ஒருத்தர் சீனுக்கு சீன் டபுள் மீனிங்ல பேசிக்கிட்டே இருக்கிறதால ஏதோ நடுராத்திரி வள்ளி திருமணம் நாடகம் பார்த்த மாதிரி கொஞ்சம் பீலாச்சு..!

இதுக்கு நடுவுல நடிகை பாபிலோனாவும் ஒரு சீன்ல வர்றாங்க.. ஜவுளிக்கடை விளம்பரப் படத்துல ஆடுறதுக்காக வந்தவங்களை முதல் நாள் ராத்திரியே போய் கரெக்ட் செய்ய பார்க்குறாரு ஹீரோ. "குட்டை நடிகர்கள்ல இருந்து உயரமான நடிகர்வரைக்கும் என் கேரியர்ல பார்த்திருக்கேன்.. சின்ன தொழிலதிபர்ல இருந்து பெரிய தொழிலதிபர்வரைக்கும் பார்த்திருக்கேன்.. என்கிட்டயேவா..? நீ வளர்ற பையன்.. இதுல உன்னை அழிச்சுக்காத.. போ.. போ.. போய் வேலையை பாரு.."ன்னு அட்வைஸ் செஞ்சு அனுப்புறாங்க..! அடுத்த முறை நேர்ல பார்க்கும் அந்த உசரமான நடிகர், தொழிலதிபர் கதையெல்லாம் நிசம்தானான்னு கேக்கணும்..!  

கிளைமாக்ஸ்ல வர்ற அந்த ஒரு சீனையும் பார்த்தா இயக்குநர், காதலில் ரொம்பவே அடிபட்டிருப்பாரோன்னு சந்தேகமும் வருது.. தான் ஆசைப்பட்டவரைவிடவும், தன்னை ஆசைப்பட்டவரை திருமணம் செய்வது அவரவருக்கு நல்லதுன்னு சொல்வாங்க.. அதையேதான் இதுலேயும் ஒரு மெஸேஜா சொல்லியிருக்கிறார்.. அதுக்கு இத்தனை சுத்து சுத்து சுத்தணுமா..?

இசை எஸ்.ஏ.ராஜ்குமார்.. 'ஏய் சக்கரக்கட்டி', 'வாடி வாடி வைச்சுக்குறேன்' பாடல்களைவிடவும் 'வாராவதி ஓரம்' பாடல் செமையா இருக்கு.. பாடலை தனியா கேட்டுப் பாருங்க.. ஸ்கீரின்ல ஆடின ஆட்டமும் ஜோர்..!  எஸ்.ஏ.ராஜ்குமாரின் சமீபத்தில பாடல்கள் எல்லாமே கேட்கும்படியாகத்தான் இருக்கு. ஆனா அதிகம் விளம்பரமும் கிடைக்காமல், எஃப்.எம்.களில் கூட ஒளிபரப்பா இருக்கு.. அதான் மனுஷனுக்கு பேரும் வர மாட்டேங்குது.. 'வாராவதி ஓர'த்தை டவுன்லோடு செஞ்சாவது கேட்டுப் பாருங்கப்பா..!

ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே எடுத்து தயாரான படம். இதுல நடிச்ச அலெக்ஸ் இறந்துபோயே ஒன்றரை வருஷம் ஆச்சு.. இத்தனை கஷ்டப்பட்டு படத்தைக் கொண்டாந்திருக்காங்க.. ஏதோ சேனல் ரைட்ஸா கொஞ்சம் காசு கிடைச்சா தயாரிப்பாளர் லைட்டா சந்தோஷப்படுவார். அதாவது அவருக்குக் கிடைக்கட்டும்..!

6 comments:

BENDINGWATER said...

Promo of the film I have seen some five years back.

வவ்வால் said...

அண்ணாச்சி,

அதான் தணிக்கைத்துறையே பேர மாத்திடுச்சுல்ல அப்புறமும் ஏன் சோக்காலினே போட்டுக்கிட்டு,சட்டுனு பார்த்ததில் ஒக்**னு படிச்சுப்புட்டேன்,அடங்கொய்யாலே தமிழ் சினிமாவில எப்படிலாம் பேரு வைக்கிறாங்கன்னு அப்பாடியே ஷாக் ஆகிட்டேன் :-))

இந்தப்படம் அந்தக்கால திருட்டுப்புருஷன் படத்தோட காப்பினு நான் கண்டுப்புடிச்ட்டேன் :-))
----------

நேரம் பதிவில் பார்த்தேன்,ஜோதிஜிகிட்டே பரந்தமனசுள்ள தயாரிப்பாளர் தேடுறதா சொல்லி இருந்தீங்க,நம்ம ஜோதிஜி விட பரந்த மனசு யாருக்கு வரும்,பின்னலாடை அதிபருக்கு உங்க கதையை சொல்லி மடக்கிப்போடுங்க, சீமான் தான் ஹீரோனு சொன்னாப்போதும் உடனே புரட்சி வெடிக்கட்டும்னு ஒத்துக்குவார் :-))

டயரடக்கரும் தேடுறிங்க போல..ஹி..ஹி என்னை விட ஒலக அறிவுள்ள டயரடக்கர் ஹாலிவுட்டில் தேடினாலும் கிடக்க மாட்டாங்கோ, உங்களுக்காக நானே பெரிய மனசு பண்ணி நெறியாள்கை செய்துடுறேன், ஹி..ஹி சம்பளம் கூட பாதியாக்குறைச்சுப்பேன், நெறய டிவிடிலாம் பார்த்திருக்கேன் எனவே அசத்திப்புடுவேன்ல,எப்பூடி வசதி :-))

உண்மைத்தமிழன் said...

[[[BENDINGWATER said...

Promo of the film I have seen some five years back.]]]

5 வருஷத்துக்கு முந்தியா..? ஆத்தாடி.. எனக்குத் தெரியாதே..? நான் கேள்விப்பட்டது 2 வருஷத்துக்கு முன்னாடிதான் துவங்கியதாக..!!!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, அதான் தணிக்கைத் துறையே பேர மாத்திடுச்சுல்ல அப்புறமும் ஏன் சோக்காலினே போட்டுக்கிட்டு,சட்டுனு பார்த்ததில் ஒக்**னு படிச்சுப்புட்டேன், அடங்கொய்யாலே தமிழ் சினிமாவில எப்படிலாம் பேரு வைக்கிறாங்கன்னு அப்பாடியே ஷாக் ஆகிட்டேன் :-))]]]

நீரு எப்பவும் "அந்த" சி்ந்தனையிலேயே இருக்கீரு. அதான் அப்படி தோணுது..!

[[[இந்தப் படம் அந்தக் கால திருட்டுப் புருஷன் படத்தோட காப்பினு நான் கண்டு புடிச்ட்டேன் :-))]]]

நீரு எதைத்தான் கண்டுபிடிக்கலை..?
----------

[[[நேரம் பதிவில் பார்த்தேன், ஜோதிஜிகிட்டே பரந்த மனசுள்ள தயாரிப்பாளர் தேடுறதா சொல்லி இருந்தீங்க,நம்ம ஜோதிஜிவிட பரந்த மனசு யாருக்கு வரும், பின்னலாடை அதிபருக்கு உங்க கதையை சொல்லி மடக்கிப் போடுங்க, சீமான்தான் ஹீரோனு சொன்னா போதும் உடனே புரட்சி வெடிக்கட்டும்னு ஒத்துக்குவார் :-))]]]

ஜோதியண்ணனை ஏன்யா வம்புக்கு இழுக்குறீர்..? முகமறியா நபர்களிடம் அவர் எப்போதுமே சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்..! நீர் ஒதுங்கிக் கொள்ளும்..!

[[[டயரடக்கரும் தேடுறிங்க போல.. ஹி.. ஹி என்னை விட ஒலக அறிவுள்ள டயரடக்கர் ஹாலிவுட்டில் தேடினாலும் கிடக்க மாட்டாங்கோ, உங்களுக்காக நானே பெரிய மனசு பண்ணி நெறியாள்கை செய்துடுறேன், ஹி.. ஹி சம்பளம் கூட பாதியா குறைச்சுப்பேன், நெறய டிவிடிலாம் பார்த்திருக்கேன் எனவே அசத்திப்புடுவேன்ல, எப்பூடி வசதி))]]]

இதுக்கு நான் திண்டுக்கல்லுக்கே திரும்பிப் போய் டீயாத்துவேன்.. ஆளை விடும்..!

joe said...

அண்ணாச்சி, உன்னோட கதை வசனம், வவ்வாலு இயக்கம், உனக்காக சம்பளம் இல்லாமல் மதுரை தம்பி நான் கதாநாயகன், கதாநாயகி தமன்னா என்றாலும் எனக்கு ஓகே. சும்மா காம்பினேசன் கேட்டாலே அதிருதுல்ல. கண்டிப்பா சில்வர் ஜுபிலி தான். தயாரிப்பாளர் தான் அண்ணாச்சி தயவுல பயபுள்ளக யாராவது அகப்படனும்

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணாச்சி, உன்னோட கதை வசனம், வவ்வாலு இயக்கம், உனக்காக சம்பளம் இல்லாமல் மதுரை தம்பி நான் கதாநாயகன், கதாநாயகி தமன்னா என்றாலும் எனக்கு ஓகே. சும்மா காம்பினேசன் கேட்டாலே அதிருதுல்ல. கண்டிப்பா சில்வர் ஜுபிலி தான். தயாரிப்பாளர் தான் அண்ணாச்சி தயவுல பயபுள்ளக யாராவது அகப்படனும்.]]]

இதுக்கெல்லாம் முன்னாடியே இந்தப் படத்தை பார்க்குறதுக்கும் ஆளுகளை ரெடி பண்ணி வைச்சுக்க.. அப்புறமா தயாரிப்பாளரைத் தேடுவோம்..!