கட்டற்ற சுதந்திரம் - நொறுங்கிப் போன கனவு..!

04-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


“இதற்கு மேலும் இதனைப் பற்றி எழுதாமல் போனால், நாளைக்கு நீயே ‘உள்ள’ போனீன்னா, ஒரு ஈ, காக்கா கூட உன்னை பார்க்க புழலுக்கு வராது..” என்று ஒரு நண்பர் எச்சரித்ததால், இந்த விஷயத்தில் சற்றே தாமதமான பதிவு இது. தோழர்கள் பெரிதும் மன்னிக்கவும்.

கட்டற்ற சுதந்திரம் என்று பூரிப்பில் இருந்த இணையத்தள மேய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது இந்தப் பிரச்சினை.. கைது அளவுக்குப் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யார் மீது தவறு என்று இந்தப் பிரச்சினையில் அனைத்து வகை பட்டிமன்றங்களையும் படித்து, படித்து மிகவும் டயர்டாகிவிட்டது..! இந்த வழக்கின் கைது, சட்டங்கள் பற்றிய விஷயங்களைப் படித்தபோது இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும் உண்மை எனக்கும் இப்போதுதான் புரிந்தது. புகார் கொடுக்க வேண்டிய ‘ஆத்தா’வுக்கும், ‘தாத்தா’வுக்கும் நான் ஒரு கொசு, என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

இதன் மூலம் அறிவது என்னவெனில் அடுத்தவரின் மூக்கு நுனியைத் தொடுவதுவரைதான் உனக்குள்ள பேச்சுரிமை என்று நமது புளுத்துப் போன அரசியல் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஒருவரின் வார்த்தை மற்றவருக்கு கடும் மன உளைச்சலைத் தருகிறது என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அது எந்த வகையான மன உளைச்சல் என்பதை கனம் கோர்ட்டார்தான் முடிவு செய்வார்களாம்.. நடவடிக்கைகளில் கைதும் செய்யலாம் என்பதும் சட்டம் கொடுத்திருக்கும் வசதி.. இதில் நாம் என்ன செய்வது..?

கைதுகள் அதிகார வர்க்கத்திற்குத்தான் அடி பணியும் என்பது நன்கு தெரிந்த விஷயம்தான் என்பதால் இதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை..! தோழர் சவுக்கு சங்கரை, தாத்தாவின் ஆட்சியில் ஜாபர்சேட்டின் தூண்டுதலினால் உண்மையே இல்லாத வழிப்பறி கேஸில் பிடித்து உள்ளே வைத்தார்கள்.  அதுதான் இணைய எழுத்தாளர்களின் மீதான முதல் தாக்குதல் என்று நினைக்கிறேன்..  அந்தக் கேஸ் பொய்யானது என்று சொல்லி சமீபத்தில்தான் தீர்ப்பாகி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் சங்கர்..! அப்போது நம்மில் எத்தனை பேர் பொங்கி எழுந்தோம் என்பதை இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..!

இந்தக் கைது விவகாரத்தில் சட்டம் அதிகாரம் படைத்தவர்களுக்காக வளைந்து கொடுத்திருக்கிற அதேசமயம், கைதும் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை.. ஆனால் வேகமாக, முக்கியத்துவம் வாய்ந்த கைதாகவே நடத்தப்பட்டிருக்கிறது..! கைது நடவடிக்கையின்போது ஒரு துணை கமிஷனரே சரவணக்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்றிருக்கிறார். இதிலிருந்தே போலீஸ் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது.. இருவரும் இப்போது ஜாமீனில் வெளியில் வந்துவிட்டாலும், இவர்கள் கைதுக்கான முக்கியக் காரணம் சின்மயி மீதான வார்த்தைத் தாக்குதல் மட்டுமில்லை.. ஆத்தாவைப் பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டுதான் மிகப் பெரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்..! ஒருவரைவிட்டுவிட்டு மற்றவரை கைது செய்தால் பிரச்சினையாகும் என்பதால் இதில் சரவணக்குமாரும் மாட்டிக் கொண்டுவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்..!

ராஜனின் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். பல முறை போனிலும் பேசியிருக்கிறேன்.. அவருடைய பல ட்வீட்டுகளை, கிண்டல்தான் என்றாலும், அத்துமீறிய ட்வீட்டுகள் என்று அவருக்கு ட்வீட்டரிலேயே சொல்லியிருக்கிறேன். “இது ரத்த பூமிண்ணே..” என்று அவரும் திருப்பி பதிலும் சொல்லியிருக்கிறார். சொல்லிக் காட்ட இது நேரமில்லை என்றாலும், அவருடைய சில டிவீட்டூகள் புகார்தாரர்களை காயப்படுத்தியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இதனால்தான் நம் அன்புத் தம்பி என்றாலும் அவருக்கு முழுமையான ஆதரவளிக்க முடியவில்லை. உற்றார், உறவினர் கைது செய்யப்பட்டால் எந்த வழக்காக இருந்தாலும் நமக்கு ஒரு பாசம் வருமே.. அது போன்றுதான் இப்போதும் ராஜன் மீதும், சரவணக்குமார் மீதும்.. பெரிதும் வருந்துகிறேன்.. நடந்திருக்கவே கூடாது.. நடந்துவிட்டது.. இனி நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம்..!

சின்மயியின் ட்வீட்டுகளும் நமக்கு மன உளைச்சலைத் தருகின்றன என்று நாம் புகார் கொடுத்தாலும், நமக்குத் தெரிந்த காவல் துறையின் உயரதிகாரி யாரும் இல்லாததால் அந்த வழக்கில் நிச்சயம் கைது எதுவும் இருக்காது..! நடக்காது..! இந்தக் கேடு கெட்ட இந்தியாவில் நாம் வாழும் சூழலில், இதனுடைய முரணான அரசியல் சாக்கடைகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.. சின்மயி நம்மைப் பற்றி தனிப்பட்ட முறையில் தாக்குதல் கொடுக்காதவரையிலும், நாம் பதில் நடவடிக்கையை எதிர்த் தரப்பினரை கைது அளவுக்குக் கொண்டு செல்லவும் முடியாது..! இப்போதாவது நாம் செய்த தவறென்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை மாற்று வழியில் சந்திக்க முற்படுவோம்..! 

40 comments:

ராஜ் said...

உங்க நிலையை ரொம்ப உண்மையாகவும், எதார்த்தமாகவும் சொல்லிடீங்க... :):):)
பொதுவில் கருத்து சொல்லும் போது இனிமே ரொம்ப ஜாக்கரதையா சொல்லணும்...
அப்புறம் சவுக்கு எழுதினதுக்கு கலைஞர் ஆக இருந்ததால் தான் வழிப்பறி கேஸ் மட்டும் போட்டாங்க.....!!

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான கருத்துக்கள் அண்ணே.. ராஜ் சொல்வது போல் கலைஞர் ஆட்சி என்பதால் தான் வழிப்பறி கேஸ். அதுவே இப்ப நடந்திருந்தால் நில அபகரிப்பு கேஸ்தான்.

sathyamurthi.p said...

// இந்தக் கேடு கெட்ட இந்தியாவில் நாம் வாழும் சூழலில், இதனுடைய முரணான அரசியல் சாக்கடைகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.//
இந்த மாதிரி கட்டற்ற சுதந்திரம் கேடுகெட்ட இந்தியாவிற்கு தேவையில்லை.

அக்கப்போரு said...

இந்தப் பதிவுக்குக் கமெண்ட்டு போடுறது இந்த ஸோ கால்ட் ஜனநாயக நாட்ல சட்டப்படி தப்பா?
இதையும் எவனாவுது ஸ்கிரீன் ஷாட் எடுப்பானா? ம்ஹூம் ஒன்னும் சொல்றதுக்கில்ல முருகா.

பழமைபேசி said...

//இந்த வழக்கின் கைது, சட்டங்கள் பற்றிய விஷயங்களைப் படித்தபோது இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும் உண்மை எனக்கும் இப்போதுதான் புரிந்தது.
//

அந்த பயமிருந்தாச் சரி!!

செங்கோவி said...

சைபர் க்ரைம் லா பொத்தாம் பொதுவாக இருக்கிறது என்பதே உண்மை. அதையே அதிகார வர்க்கம், தவறாகப் பயன்படுத்த காரணமாகிறது (நான் சொல்வது கார்த்தி.சிதம்பரம் கேஸை)...உண்மையில் இந்திய சட்ட நிர்ணயத்திற்கு எதிரான ஒன்றாகவே, 66A பிரிவு இருக்கிறது..யாராவது சுப்ரீம் கோர்ட் போனால் நல்லது. நம்மைப் போன்ற பூவாவுக்கு சிங்கி அடிப்போரால் அது சாத்தியமா?

ராஜ நடராஜன் said...

சினிமாவுக்கு போனாலும் போனீங்க!பழைய கெத்து இல்லீங்ண்ணா!

பட்டிகாட்டான் Jey said...

செங்கோவி நீங்க சொல்ரது சரி.

நம்ம அரசியல் சானம் குடுத்த பேச்சுரிமைக்கு எதிராத்தா இந்த செக்சன் இருக்கு. நாம சாதா மனிதர்கள் ஒன்னியும் செய்யமுடியாது பொலம்பிட்டு இருக்க வேண்டியதுதான்....:-((((

ரஹீம் கஸ்ஸாலி said...

நான் சொல்வது கார்த்தி.சிதம்பரம் கேஸை என்று கூறி தப்பித்த உங்களின் முன்னெச்சரிக்கையை பாராட்டுறேன் செங்கோவி.

ராஜ நடராஜன் said...

ராஜன் விவகாரத்திலாவது இரு தரப்பு வாதங்கள் எனலாம்.செங்கோவி குறிப்பிட்டது போல் ப.சிதம்பரம் கார்த்திக் செயலை எந்த விதத்தில் நியாயப்படுத்துவது?

அதற்கும் ஒருவர் எதிர்கால அரசியல்வாதியின் கௌரவம் என்னாகிறது என்று கேட்டிருந்தார்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

வவ்வால் said...

அண்ணாச்சி,

எல்லாரும் லைட் ஆஃப் செய்துட்டு ஷட்டரை இறக்கிட்டு கடையையே மூடிட்டாங்க ,இப்போ தான் இந்த மேட்டரை ஓபன் செய்யுறிங்களே ,அவ்வ் :-))

சட்டம் பொது தன்மையுடன் இருக்கு ,அதனை செயல் படுத்த தான் அதிகாரம் வேண்டியதா இருக்கு.

இதனாலேயே சமச்சீரின்மை நிலவுகிறது.

எனக்கு மன உளைச்சல் என புகார் கொடுப்பவர் மீது தனக்கும் மன உளைச்சல் என மற்றவர் புகார் கொடுப்பதையும் வாங்கினால் போதும் , யாரும் இந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய யோசிப்பார்கள்.

முட்டுக்காட்டில் நில ஆக்ரமிப்பு செய்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிக்கைகள் எழுதிய பிறகு தான் பேரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போ ப.சி பற்றி இதனை சொன்னாலும் சைபர் கிரைமில் புகார் கொடுப்பார்களோ :-))

சட்டம் நம்மை கைவிடாது என குடிமக்கள் நம்பும் வரையில் தான் சமூகத்தில் அமைதி நிலவும், அவர்கள் நம்பிக்கை இழந்தால் நாட்டில் அமைதியின்மையே ஏற்படும் என்பதை ஆள்வோர் உணர வேண்டும்.

//சமீபத்தில்தான் தீர்ப்பாகி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் சங்கர்..! அப்போது நம்மில் எத்தனை பேர் பொங்கி எழுந்தோம் என்பதை இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..!//

சவுக்கு சங்கர் காவல் துறையில் பணியாற்றி , தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கியவர், அவர் காவல் துறையில் இருக்கும் சிலர் மீது மட்டும் குறம் கண்டுப்பிடித்து எழுதுவதாக எனக்கு தெரிகிறது, அதற்கெல்லாம்ம் ஆதாரம் இருக்கிறதா எனவும் தெரியவில்லை, எனவே அவரது நடுநிலைமை, பொது நல நோக்கு எல்லாம் கேள்விக்குரியது என்பதால் பெரும்பாலும் யாரும் கண்டுகொள்வதில்லை என நினைக்கிறேன்.

நீங்கள் பத்திரிக்கையாளர் தானே , நகைமுகன் என்பவர் கைதான போது எதாவது சொன்னீங்களா? எனக்கு அப்படி எதுவும் தெரியலையே?

துளசி கோபால் said...

எல்லாஞ்சரி.

பின்னூட்டங்களில் சிலர் மன உளைச்சல் கொடுக்கறாங்களே அவுங்களையும் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்களேன்.

உங்களுக்கு மெய்யாலுமே உயர் அதிகாரிகளைத் தெரியாதாக்கும்? க்கும்....

வவ்வால் said...

//பின்னூட்டங்களில் சிலர் மன உளைச்சல் கொடுக்கறாங்களே அவுங்களையும் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்களேன். //

இந்த பின்னூட்டமே எனக்கு ரொம்ப மன உளைச்சலை கொடுக்குது , கேசு போட வழி இருக்கா :-))

வருண் said...

****ஆத்தாவைப் பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டுதான் மிகப் பெரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்..!***

இவரு ஒரு அரசாங்க ஊழியர். இவரு அரசாங்க வேலையில் இல்லாத தீப்பொறியோ அல்லது வெற்றிகொண்டானோ இல்லை. அந்த மட்டமான கார்ட்டூனைப் பற்றி ஏன் இப்படி விமர்சிக்கனும்? The cartoon issue certainly strengthens the case against him!

வருண் said...

***
கட்டற்ற சுதந்திரம் - நொறுங்கிப் போன கனவு..!

04-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
***

Why r u still in October???

தீப்பெட்டி said...
This comment has been removed by the author.
தீப்பெட்டி said...

ரொம்ப லேட் பாஸ் நீங்க..

ராஜன் விவகாரம் மிகவும் கவலைப்பட வைக்கிறது.

சின்மயியே விரும்பி வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டாலும் //பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டு// அவரை எந்த நேரத்திலும் வழக்கை எதிர்கொள்ளும் நிலையிலேதான் நிறுத்தும்.

இனி நாம் எச்சரிகையுடன் இருப்பதே நல்லது. இனிவரும் பிரச்சனைகளில் பதிவர்கள் / இணைய தள செயல்பாட்டாளர்களில் உள்ள வழக்கறிஞர்கள் இணைந்து இலவச சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

பதிவர்களுக்கு / இணைய செயல்பாட்டாளர்களுக்கு என்று பதிவு செய்யப்பட்ட அமைப்பு / சங்கம் இருந்திருந்தால் அதன் மூலம் இம்மாதிரியான விவகாரங்களை கையாளுவது எளிதாக இருந்திருக்கும். இந்த நேரத்தில் நீங்களும் சேர்ந்து முன்னெடுத்த பதிவர் சங்கம் அமைக்க நடந்த ஆலோசனைக் கூட்டத்தை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

puduvaisiva said...

"இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும்"

அண்னே நீங்க லா அண்டு ஆடருக்கு அப்பார் பட்டவர்னே !

பஞ்ச பூதம் பதறும் உன் பதிவை படிச்சா
அஞ்ச வேணாம் அண்னே - நீ வலைபதிவு சிங்கம் !

damildumil said...

ரொம்ப மேம்போக்கா எதோ கடனுக்கு எழுதின மாதிரி இருக்கு. இப்படி வழவழ கொழகொழன்னு எழுதுறதுக்கு எழுதாமலே இருக்கலாம். அரை பக்கம் பதிவு எழுதினதுலேயே தெரியுது சும்மா ஒப்புக்கு தான் எழுதிருக்கிங்கன்னு.

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

உங்க நிலையை ரொம்ப உண்மையாகவும், எதார்த்தமாகவும் சொல்லிடீங்க... :):):)
பொதுவில் கருத்து சொல்லும்போது இனிமே ரொம்ப ஜாக்கரதையா சொல்லணும்.]]]

இதை ஒரு பாடமாகத்தான் நாம எடுத்துக்கணும்..! எது வந்தாலும் பார்த்துக்கலாம்ன்றது எல்லாம் வீண் பேச்சு..!

[[[அப்புறம் சவுக்கு எழுதினதுக்கு கலைஞர் ஆக இருந்ததால்தான் வழிப்பறி கேஸ் மட்டும் போட்டாங்க.....!!]]]

ஹி.. ஹி.. ஒத்துக்குறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரஹீம் கஸாலி said...

அருமையான கருத்துக்கள் அண்ணே.. ராஜ் சொல்வது போல் கலைஞர் ஆட்சி என்பதால் தான் வழிப்பறி கேஸ். அதுவே இப்ப நடந்திருந்தால் நில அபகரிப்பு கேஸ்தான்.]]]

இல்லை. கஞ்சா அல்லது பிரவுன்சுகர்.. தொடர்ந்து குண்டாஸ்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[sathyamurthi.p said...

//இந்தக் கேடு கெட்ட இந்தியாவில் நாம் வாழும் சூழலில், இதனுடைய முரணான அரசியல் சாக்கடைகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.//

இந்த மாதிரி கட்டற்ற சுதந்திரம் கேடுகெட்ட இந்தியாவிற்கு தேவையில்லை.]]]

கட்டற்ற சுதந்திரம் கேட்கவில்லை. ஆனால் அராஜகமான சட்ட விதிகள் நமக்குத் தேவையில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[அக்கப்போரு said...

இந்தப் பதிவுக்குக் கமெண்ட்டு போடுறது இந்த ஸோ கால்ட் ஜனநாயக நாட்ல சட்டப்படி தப்பா? இதையும் எவனாவுது ஸ்கிரீன் ஷாட் எடுப்பானா? ம்ஹூம் ஒன்னும் சொல்றதுக்கில்ல முருகா.]]]

நீ செத்த.. இப்பவே நல்ல வக்கீலா பார்த்து வைச்சுக்குங்க சாமி..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

//இந்த வழக்கின் கைது, சட்டங்கள் பற்றிய விஷயங்களைப் படித்தபோது இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும் உண்மை எனக்கும் இப்போதுதான் புரிந்தது.//

அந்த பயமிருந்தாச் சரி!!]]]

வேறென்ன செய்யறது..? யதார்த்த உண்மையை உணர்ந்திருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

சைபர் க்ரைம் லா பொத்தாம் பொதுவாக இருக்கிறது என்பதே உண்மை. அதையே அதிகார வர்க்கம், தவறாகப் பயன்படுத்த காரணமாகிறது (நான் சொல்வது கார்த்தி.சிதம்பரம் கேஸை). உண்மையில் இந்திய சட்ட நிர்ணயத்திற்கு எதிரான ஒன்றாகவே, 66A பிரிவு இருக்கிறது. யாராவது சுப்ரீம் கோர்ட் போனால் நல்லது. நம்மைப் போன்ற பூவாவுக்கு சிங்கி அடிப்போரால் அது சாத்தியமா?]]]

சாத்தியமில்லைதான்.. ஆனால் யாரோ ஒருவர் நிச்சயமாக செல்வார்.. பொறுத்திருப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

சினிமாவுக்கு போனாலும் போனீங்க! பழைய கெத்து இல்லீங்ண்ணா!]]]

அந்த பீலிங்கு வரலீங்கண்ணா..! வெறுப்பாயிருச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[பட்டிகாட்டான் Jey said...

செங்கோவி நீங்க சொல்ரது சரி.
நம்ம அரசியல் சானம் குடுத்த பேச்சுரிமைக்கு எதிராத்தா இந்த செக்சன் இருக்கு. நாம சாதா மனிதர்கள் ஒன்னியும் செய்யமுடியாது பொலம்பிட்டு இருக்க வேண்டியதுதான்....:-((((]]]

எத்தனி காலம்தான்.. இப்பவுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[ரஹீம் கஸாலி said...

நான் சொல்வது கார்த்தி.சிதம்பரம் கேஸை என்று கூறி தப்பித்த உங்களின் முன்னெச்சரிக்கையை பாராட்டுறேன் செங்கோவி.]]]

என்ன.. கோர்த்து விடுறீங்களா..? பாவம்ண்ணே அவரு.. விட்ருண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

ராஜன் விவகாரத்திலாவது இரு தரப்பு வாதங்கள் எனலாம். செங்கோவி குறிப்பிட்டது போல் ப.சிதம்பரம் கார்த்திக் செயலை எந்த விதத்தில் நியாயப்படுத்துவது? அதற்கும் ஒருவர் எதிர்கால அரசியல்வாதியின் கௌரவம் என்னாகிறது என்று கேட்டிருந்தார்.]]]

அரசியல்வியாதியின் அடியாளா இருப்பான்..!

உண்மைத்தமிழன் said...

[[[நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, எல்லாரும் லைட் ஆஃப் செய்துட்டு ஷட்டரை இறக்கிட்டு கடையையே மூடிட்டாங்க ,இப்போ தான் இந்த மேட்டரை ஓபன் செய்யுறிங்களே, அவ்வ் :-))]]]

அதான் எடுத்த எடுப்பிலேயே காரணத்தைச் சொல்லிட்டனே வவ்ஸ்..!

[[[சட்டம் பொது தன்மையுடன் இருக்கு. அதனை செயல்படுத்ததான் அதிகாரம் வேண்டியதா இருக்கு.
இதனாலேயே சமச்சீரின்மை நிலவுகிறது. எனக்கு மன உளைச்சல் என புகார் கொடுப்பவர் மீது தனக்கும் மன உளைச்சல் என மற்றவர் புகார் கொடுப்பதையும் வாங்கினால் போதும். யாரும் இந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய யோசிப்பார்கள்.]]]

இதற்கு போலீஸ் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.. எந்த போலீஸ்..?

[[[முட்டுக்காட்டில் நில ஆக்ரமிப்பு செய்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிக்கைகள் எழுதிய பிறகுதான் பேரளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போ ப.சி பற்றி இதனை சொன்னாலும் சைபர் கிரைமில் புகார் கொடுப்பார்களோ :-))]]]

கொடுத்தாலும் கொடுக்கலாம். ஆட்சி அவர்கள் கையில் இருக்கையில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..!

[[[சட்டம் நம்மை கைவிடாது என குடிமக்கள் நம்பும் வரையில் தான் சமூகத்தில் அமைதி நிலவும், அவர்கள் நம்பிக்கை இழந்தால் நாட்டில் அமைதியின்மையே ஏற்படும் என்பதை ஆள்வோர் உணர வேண்டும்.]]]

நல்ல சிந்தனை..! ஜெயலலிதாவிற்கு பரிந்துரை செய்கிறேன்..!

[[[//சமீபத்தில்தான் தீர்ப்பாகி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் சங்கர்..! அப்போது நம்மில் எத்தனை பேர் பொங்கி எழுந்தோம் என்பதை இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..!//

சவுக்கு சங்கர் காவல் துறையில் பணியாற்றி, தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கியவர், அவர் காவல் துறையில் இருக்கும் சிலர் மீது மட்டும் குறம் கண்டுப்பிடித்து எழுதுவதாக எனக்கு தெரிகிறது, அதற்கெல்லாம்ம் ஆதாரம் இருக்கிறதா எனவும் தெரியவில்லை. எனவே அவரது நடுநிலைமை, பொது நல நோக்கு எல்லாம் கேள்விக்குரியது என்பதால் பெரும்பாலும் யாரும் கண்டுகொள்வதில்லை என நினைக்கிறேன்.]]]

நான் சந்தேகப்படவில்லை..! ஆகவே சங்கருக்கு முழுமையாக ஆதரவளிக்கிறேன்..!

[[[நீங்கள் பத்திரிக்கையாளர்தானே... நகைமுகன் என்பவர் கைதானபோது எதாவது சொன்னீங்களா? எனக்கு அப்படி எதுவும் தெரியலையே?]]]

அவர் எதற்காக கைது செய்யப்பட்டார்.. கைதில் என்ன நடந்தது என்பதைப் பற்றியெல்லாம் சவுக்கு விவரமாக ஒரு பதிவு எழுதியிருந்தது.. அதனை பல இடங்களில் ஷேர் செய்து அதனையொட்டி எழுதியிருந்தேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

எல்லாஞ்சரி. பின்னூட்டங்களில் சிலர் மன உளைச்சல் கொடுக்கறாங்களே அவுங்களையும் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்களேன்.]]]

தாராளமா செய்யலாம் டீச்சர்.. கமான் கிளம்புங்க.. ஒரு வழி செஞ்சிருவோம்..!

[[[உங்களுக்கு மெய்யாலுமே உயர் அதிகாரிகளைத் தெரியாதாக்கும்? க்கும்....]]]

கிறிஸ்ட்சர்ச் நகர மேயரைகூட தெரியாது டீச்சர்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

//பின்னூட்டங்களில் சிலர் மன உளைச்சல் கொடுக்கறாங்களே அவுங்களையும் கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்களேன். //

இந்த பின்னூட்டமே எனக்கு ரொம்ப மன உளைச்சலை கொடுக்குது, கேசு போட வழி இருக்கா :-))]]]

ஓ... அப்போ அந்த நபர் நீங்கதானா..? பீ கேர்புல் வவ்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

****ஆத்தாவைப் பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டுதான் மிகப் பெரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்..!***

இவரு ஒரு அரசாங்க ஊழியர். இவரு அரசாங்க வேலையில் இல்லாத தீப்பொறியோ அல்லது வெற்றிகொண்டானோ இல்லை. அந்த மட்டமான கார்ட்டூனைப் பற்றி ஏன் இப்படி விமர்சிக்கனும்? The cartoon issue certainly strengthens the case against him!]]]

அது இவருடைய தனிப்பட்ட உரிமை.. இதைச் சொல்வதற்கு அவருக்கு உரிமையுண்டு.. அரசு வேலை என்பதற்காகவே அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாக வைக்கக் கூடாது என்பது அராஜகம்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***
கட்டற்ற சுதந்திரம் - நொறுங்கிப் போன கனவு..!

04-10-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
***

Why r u still in October???]]]

ச்சும்மாதான்.. மறந்து போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...

ரொம்ப லேட் பாஸ் நீங்க.. ராஜன் விவகாரம் மிகவும் கவலைப்பட வைக்கிறது. சின்மயியே விரும்பி வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டாலும் //பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டு// அவரை எந்த நேரத்திலும் வழக்கை எதிர்கொள்ளும் நிலையிலேதான் நிறுத்தும்.]]]

என்ன செய்யறது..? எதிர்கொண்டுதான் ஆகணும்..!

[[[இனி நாம் எச்சரிகையுடன் இருப்பதே நல்லது. இனிவரும் பிரச்சனைகளில் பதிவர்கள் / இணைய தள செயல்பாட்டாளர்களில் உள்ள வழக்கறிஞர்கள் இணைந்து இலவச சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.
பதிவர்களுக்கு / இணைய செயல்பாட்டாளர்களுக்கு என்று பதிவு செய்யப்பட்ட அமைப்பு / சங்கம் இருந்திருந்தால் அதன் மூலம் இம்மாதிரியான விவகாரங்களை கையாளுவது எளிதாக இருந்திருக்கும். இந்த நேரத்தில் நீங்களும் சேர்ந்து முன்னெடுத்த பதிவர் சங்கம் அமைக்க நடந்த ஆலோசனைக் கூட்டத்தை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.]]]

இங்கே அரசியல் ரீதியாக பிரிந்திருக்கும் இணையத்தள ஆர்வலர்களை ஒன்று சேர்ப்பது முடியாது.. கருத்துக்களிலேயே அரசியல் வெளிப்பட்டு கடைசியில் அது முரணாகிவிடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[puduvai siva said...

"இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும்"

அண்னே நீங்க லா அண்டு ஆடருக்கு அப்பார் பட்டவர்னே !

பஞ்ச பூதம் பதறும் உன் பதிவை படிச்சா
அஞ்ச வேணாம் அண்னே - நீ வலைபதிவு சிங்கம் !]]]

இந்தக் கதையெல்லாம் வேணாம்.. நான் ஒருவேளை புழலுக்கு உள்ளாற போனா மறக்காம வந்து பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[damildumil said...

ரொம்ப மேம்போக்கா எதோ கடனுக்கு எழுதின மாதிரி இருக்கு. இப்படி வழவழ கொழகொழன்னு எழுதுறதுக்கு எழுதாமலே இருக்கலாம். அரை பக்கம் பதிவு எழுதினதுலேயே தெரியுது சும்மா ஒப்புக்குதான் எழுதிருக்கிங்கன்னு.]]]

தங்களது வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி..!

வருண் said...

****அது இவருடைய தனிப்பட்ட உரிமை.. இதைச் சொல்வதற்கு அவருக்கு உரிமையுண்டு.. ***

நான் ட்விட்டர்ல இருந்து இருந்தால் ராஜனிடம் கட்டாயம் அந்த கார்ட்டூன் சம்மந்தப்பட்ட ட்விட்டை அகற்றச் சொல்லியிருப்பேன். அதுவும் அவர் அரசு ஊழியர்னு எனக்குத் தெரிந்து இருந்த்தால் கட்டாயம் சொல்லியிருப்பேன்.

ஏன் சி பி செந்தில்குமார் மேட்டரில்கூட அவர் தளத்தில் பின்னூட்டத்தில் சொன்னேன்..அவர் மனைவியைப் பத்தி விமர்சிக்காதீங்கனு..

இதுபோல் நீங்க எழுதுவதே உங்களுடைய பொறுப்பற்ற தன்மை!
தப்பை தப்புனு சொல்லுங்கங்க, உ த! அதுதான் உங்க நண்பருக்கோ எதிரிக்கோ நீங்க உதவுறது. சும்மா உரிமை மண்ணாங்கட்டினு எதையாவது தவறா சொல்லிக்கிட்டு!

***அரசு வேலை என்பதற்காகவே அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாக வைக்கக் கூடாது என்பது அராஜகம்..!***

அரசு வேலை செய்றவனுக்கு ஒரு சில அதிகமான ரெஸ்பாண்சிபிலிட்டி இருக்கு! ஒரு கிரிமினல் சார்ஜ் உள்ளவன் அரசு ஊழியனாக முடியாது! அவனும் தெருல போறவனும் ஒண்ணு இல்லை. எனக்குத் தெரிய தம்பி அரசியல் வாதியா இருப்பான். அண்ணன் அரசு ஊழியர் என்றால், அவன் அரசியல்ல, தம்பிபோல் மேடையில் இஷ்டத்துக்குப் பேசுறது வார்த்தையை விடுவது இதிலெல்லாம் இருந்து ஒதுங்கி இருப்பான்.