28-10-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'காஞ்சிவரம்' படம் முடிவடைந்தவுடன், அந்தப் படத்தில் தன்னுடைய மகளாக நடித்திருந்த ஷம்முவின் நடிப்பில் அகமகிழ்ந்து போய் அப்போது தன்னுடைய டூயட் மூவிஸின் மூலம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் moserbear நிறுவனத்திற்காக தயாரிக்கவிருந்த இந்த மயில் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தி உருவான படம் இது..!
நடுவில் படம் முடிந்த பின்பு moserbear நிறுவனத்துடன் பிரகாஷ்ராஜுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடால், படம் கிடப்பில் போடப்பட்டு பின்பு, 4 வருட தாமதத்திற்கு பின்பு இப்போதுதான் வெளியாகியுள்ளது..!
கிராமத்துக் கதைகள் என்றால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து அது போன்ற ஒன்று இதுவாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதில் மயிலுவாக நடித்திருக்கும் ஷம்முவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் பலமே..! ஒரு ஸ்வீட்டான காதல் கதையை, கோவில், மனிதர்களின் நம்பிக்கை.. ஈகோ பிரச்சினைகள் என்று எல்லாவற்றுக்கும் இந்தக் காதல் பலிகடாவாகுவதை நம்பக் கூடிய விதத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்..!

மயிலு, செல்லப்பாண்டி மீது தீராக் காதல் கொண்டிருக்கிறாள். கல்லூரியில் படித்து வரும் செல்லப்பாண்டி மயிலுவின் இந்தக் காதலை முதலில் மறுத்தாலும், பின்பு அவளது தீவிரத்தால் கவரப்பட்டு ஏற்றுக் கொள்கிறான். காதலர்கள் காந்தர்வ மணமும் புரிந்து கொள்கிறார்கள். இந்த நேரத்தில்தான் தனது தந்தையின் விருப்பத்திற்காக ஊர் கோடாங்கி பதவியை செல்லப்பாண்டி ஏற்க வேண்டிய கட்டாயம்..! இது அவனது திருமணத்திற்கு தடை போடவே.. மயிலு அவனால் தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி ஊரை விட்டு ஓடிவிடலாம் என்கிறாள். அதையே செய்கிறார்கள் காதலர்கள். இப்போது ஊர் இந்த விஷயத்தில் இரண்டுபட்டு நிற்கிறது.. அதே சமயம் செல்லப்பாண்டியும் மனதளவில் தான் ஒரு சாமியாடி என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப கோபக் குணத்துடன் இருக்கிறான். இது அவனது திருமண வாழ்க்கையையும் பாதிக்க.. இறுதில் என்ன ஆனது என்பதுதான் கதை..!
எல்லாரையும் விட்டுட்டு முதல்ல வாழ்த்த வேண்டியது இசைஞானி இளையராஜாவைத்தான்.. டைட்டிலில் இரண்டு பொடுசுகள் நடந்து வரும் அழகில் ஆரம்பிக்கும் அவரது ராக ராஜாங்கம்.. இறுதிவரையிலும் தொடர்கிறது.. பின்னணி இசைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுக்காக இளையராஜாவின் சாதனைப் படப் பட்டியலில் இந்தப் படத்தையும் சேர்த்துவிடலாம்.. அதிலும் மயிலு, செல்லப்பாண்டி மீது காதல் கொள்ளும் காட்சிகளிலும், இருவரின் உள் குத்தல் காட்சிகளிலெல்லாம் இசைஞானியின் இசை ஒரு தனி கேரக்டர் போலவே நடித்திருக்கிறது..! சில விஷயங்களைச் சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் தெரியும் என்பார்கள். அதில் இதுவும் ஒன்று..!
6 பாடல்களுமே இன்னொரு முறை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கின்றன..! அதிலும் இறுதியாக என்ன குத்தம் என்ற இசைஞானியின் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் படத்தின் இறுதி பாரத்தையும் சேர்த்துச் சுமக்கிறது என்பது படத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை..!
படம் முழுவதிலும் வரும் கேரக்டர்களில் 3 பேரைத் தவிர மற்றவர்களின் முகத்திலேயே கிராமத்து வாசனை வீசுகிறது.. மிகச் சிரமப்பட்டு அந்த வசன உச்சரிப்பை பேச வைத்து, நடிப்பையும் வாங்கியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்..! கிராமத்து நடிகர்களை நடிக்க வைப்பதில் உள்ள சிரமங்களை இயக்குநர்கள் மட்டுமே அறிவார்கள்..!
கிராமத்து ஹீரோயின்களின் அடக்க ஒடுக்கத்தையெல்லாம் இந்த மயிலு காலில் போட்டு மிதித்திருப்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி..! தான் அறிமுகமாகும் முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் ஷம்மு அந்த மயிலாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இவருக்கு டப்பிங் பேசியவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்..! அந்த வட்டார மொழிக்கேற்ப தனது உடல் மொழியை இவர் பயன்படுத்திய விதம் அருமை..!
அதனினும் பெரிது இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்..! காமத்தை கண்டு ஒதுங்கிப் போகும் வழக்கமான மயிலாக இல்லாமல், அதை விரும்பும் பெண்ணாகவும், அதை தொட்டுப் பார்க்கத் துடிக்கும் பெண்ணாகவும் இவரைக் காட்டியிருப்பது வித்தியாசம்தான்..! இது அந்தந்த வயதுக்கேற்றதுதானே என்பதையும் தாண்டி எதார்த்தத்தின் எல்லை மீறாமல் இறுதிக் காட்சிவரையிலும் இவரது கேரக்டரை கொண்டு போயிருக்கிறார் இயக்குநர். அதிலும் அந்த பனியாரக் கிழவி அந்தக் காலத்தில் வெள்ளைக்கார மச்சான்களை கவிழ்ப்பதற்கு என்ன செய்தார் என்பதைச் சொல்வதும், அதை மயிலு பாலோ செய்ய வருவதும் சுவாரஸ்யமான காட்சிகள்.. இதை விஷூவலாக எடுப்பதற்குக் கூட ஒரு தைரியம் வேண்டும்..! செல்லப்பாண்டியுடன் காதலியாக இருக்கும்போதே ஒட்டி உறவாடும் காட்சியும், திருமணத்திற்கு பின்பு ஒரு இரவில், “தான் தயார்” என்பதையும், அவன் தயாரா என்பதற்காக அவளது பார்வை எங்கே செல்கிறது என்பதைக்கூட இயக்குநர் குறிப்பால் உணர்த்தியிருப்பதும் இதுவரையில் எந்தவொரு தமிழ்ச் சினிமாவிலும் நான் பார்த்திராத காட்சி..! ரொம்பத்தான் தைரியம் இந்த இயக்குநருக்கு..!
அந்த வயதுக்கேற்ற கேரக்டரை மிக அழகாகச் செய்திருக்கிறார் மயிலாக நடித்திருக்கும் ஷம்மு..! செல்லப்பாண்டியை அடிக்கடி வம்பிழுக்கும் காட்சியிலும், “இந்தா அத்தே..” என்று இழுத்து இழுத்து பேசுவதிலும் அந்த கிராமத்து மயிலையே பார்க்க முடிகிறது..! இந்தப் படம் அந்தக் காலக்கட்டத்திலேயே வெளிவந்திருந்தால் மயிலுக்கு ஒரு கிரேஸை உருவாக்கியிருக்கும்.. இதற்குப் பின்பு ‘மாத்தி யோசி’, ‘பாலை’ போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டாராம்..! ஒரு நல்ல நடிகையை தமிழ்ச் சினிமாவும் இழந்துவிட்டது..!
செல்லப்பாண்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ-க்கு இதுதான் முதல் படமாம். சாமியாடும் காட்சிகளில் பயமுறுத்தியிருக்கிறார்..! சிறந்த தேர்வு.. எந்தவித அடையாளமும் தெரியாத நபர் என்பதால் முடிந்தவரையிலும் சிறப்பாகவே செய்திருக்கிறார்..!
‘மைனா’ விதார்த் இதில் சில நிமிடங்கள் வரும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆச்சரியம்தான்..! ‘மைனா’வுக்கு முன்பே அவர் நடித்திருந்த படம்..! பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் பிற்பகுதியில் இவர்தான் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்..!
கஞ்சா கருப்புவின் ஒரு நாள் அலட்டலும், அதற்குப் பின்னான பஞ்சாயத்து கூத்துகளும் அமர்க்களம்..! அதிலும் டாஸ்மாக் பாரில் தன்னை பஞ்சாயத்தில் கேள்வி கேட்டவனை பிடித்து நொங்கெடுக்கும் கஞ்சாவை ரொம்பவே பிடித்துப் போகிறது..!
‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடல் காட்சியில் அந்தக் கலாட்டா கல்யாணத்தை காட்டியிருக்கும் விதம் அழகு..! கிராமத்து பஞ்சாயத்துக்களில் சண்டையெல்லாம் எங்கேயிருந்து எப்படி ஆரம்பிக்கும் என்பதையும் மிகவும் நுணுக்கமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
செல்லப்பாண்டியும், மயிலுவும் ஊரை விட்டு ஓடிப் போன பின்பு அங்கே நடக்கும் விஷயங்கள் அனைத்தும் மிக யதார்த்தமானவை..! தன்னுடைய மரியாதையும், வம்சத்தின் பெருமையையும் பெரிதாக நினைக்கும் செல்லப்பாண்டியின் அப்பா ஒரே நாளில் அது அழிந்து போன சோகத்தில் குடித்துவிட்டு உளறுவதும், தனக்கு இனிமேல் என்ன ஆனால் என்ன என்பது போல் பஞ்சாயத்தில் பேசுவதும் உருக்கம்தான்..!
படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை.. பகுத்தறிவு பேசுபவர்கள் தாலி கட்டும் திருமணத்தை நடத்தி வைப்பதும், அவர்களே பேய், பிசாசு, காத்து, கருப்பு என்பதையெல்லாம் ஒரு நம்பிக்கையாக எடுத்துக் கொள்ளாமல் விசாரிப்பதும்... அவர்களைப் பற்றிய அறிதலில் சிறிது குழப்பத்தை உண்டு பண்ணுகிறது.. ஆனால் இறுதிக் காட்சி நினைத்துக் கூட பார்க்காதது..! இப்படியொரு சோகம் மயிலுவுக்கு தேவையா என்ற பச்சாபத உணர்வை ஏற்படுத்திவிட்டார் இயக்குநர்..!
சாமியாடுவது மன ரீதியாக அவர்களை எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை செல்லப்பாண்டியின் அடுத்தடுத்த கோபப்படும் காட்சிகளில் தெளிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். கல்லூரியில் நடைபெறும் அந்த அடிதடியும், பேருந்தில் பறை சப்தத்தையும், பக்தி பாடல்களை கேட்டதுமே ஆட்டத்தைத் துவக்குவதுமாக அவர்களுக்குள் ஏற்படும் மன ரீதியான பாதிப்பையும் இயக்குநர் இதில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்..!
கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாடல்களையும் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கமும் செய்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஜீவன். தனது முதல் படத்திலேயே இவர் ஜெயித்திருக்கிறார் என்று சொல்வதற்கு நிறைய விஷயங்கள் படத்திலேயே இருக்கின்றன..! இவருடைய கெட்ட நேரம் படத்தின் தாமதம், இவரது வருகையை சற்றுத் தாமதப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்..!
மயிலு - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

|
Tweet |
13 comments:
விமர்சனம் நன்று...ஆமாம் அண்ணே...உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விபட்டேன்.இப்பொது பரவாயில்லையா...?
அண்ணாச்சி,
//உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விபட்டேன்.இப்பொது பரவாயில்லையா...?//
இப்போ தான் வண்டிக்கு செக்-அப் செய்தீங்க, அதுக்குள்ள உடம்புக்கும் செக்-அப் ஆ...கஷ்டம் கூடவே வரும்னு சொன்னது சரி தான் போல இருக்கே. உடம்பையும் பாருங்க அண்ணாச்சி.
கொஞ்ச நாள் மொக்கை படம் பார்க்காம இருந்தாலே உடம்பு தேறிடும், மொக்கை படம் பார்த்தே உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும்னு நினைக்கிறேன்.
-----------
மயிலு , இப்போதைய டிரண்டில் சரி வருமான்னு தெரியலை,ஆனால் படம் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கிங்க,பார்ப்போம்.
இந்த இயக்குனர் பிரகாஷ் ராஜ் என் வாழ்க்கையை அழித்துவிட்டார் என தாக்கி முன்னர் ஒரு பேட்டிக்கொடுத்திருந்தார். இப்போ படத்தை வேறு யாரோ வாங்கி வெளியிட்டு இருக்காங்க போல , தயாரிப்பு என்ற இடத்தில் பிரகாஷ்ராஜ் பேரை காணோம்.
-----------
மயிலு படம் போஸ்டரை பார்த்ததும் எனக்கு "சின்னத்தாயின்னு விக்னேஷ் நடிச்ச படம் தான் நினைவுக்கு வருது,இளைய ராசா தான் இசை, அதிலும் ஒரு சாமியாடி பாட்டுலாம் இருக்கும்.... கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் ன்சுடலை மாடன் சாமி ... தொம்டக்கா .. தொம் தொம் :-))
what is wrong with your health?
take care.get well soon.
ராஜா இசைன்னா, அதுக்கே போய்ப் பார்த்திர வேண்டியதுதான். :-)
அப்போ கண்டிப்பா மயிலை பார்த்துட வேண்டியதுதான் :))
//மயிலு - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!//
அவசியம் உங்ககிட்ட ஒருநாள் பேசணும்ம்ம்..
[[[கோவை நேரம் said...
விமர்சனம் நன்று...ஆமாம் அண்ணே...உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விபட்டேன்.இப்பொது பரவாயில்லையா...?]]]
வருகைக்கும், விசாரிப்புக்கும் நன்றிண்ணே..! உடல் நலம் சரியாகி இப்போது பணிக்கும் சென்றுவிட்டேன்..!
[[[வவ்வால் said...
இப்போதான் வண்டிக்கு செக்-அப் செய்தீங்க, அதுக்குள்ள உடம்புக்கும் செக்-அப் ஆ... கஷ்டம் கூடவே வரும்னு சொன்னது சரிதான் போல இருக்கே. உடம்பையும் பாருங்க அண்ணாச்சி.]]]
இதெல்லாம் நமக்கு பழகிப் போச்சு வவ்வால்ஜி..!
[[[கொஞ்ச நாள் மொக்கை படம் பார்க்காம இருந்தாலே உடம்பு தேறிடும், மொக்கை படம் பார்த்தே உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும்னு நினைக்கிறேன்.]]]
மொக்கை படங்களையும் சேர்த்தே பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் வவ்வால்ஜி.. வேறு வழியில்லை..
[[[மயிலு , இப்போதைய டிரண்டில் சரி வருமான்னு தெரியலை, ஆனால் படம் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கிங்க,பார்ப்போம்.]]]
பார்த்துட்டு வந்து பேசுண்ணே..!
[[[இந்த இயக்குனர் பிரகாஷ்ராஜ் என் வாழ்க்கையை அழித்துவிட்டார் என தாக்கி முன்னர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இப்போ படத்தை வேறு யாரோ வாங்கி வெளியிட்டு இருக்காங்க போல.. தயாரிப்பு என்ற இடத்தில் பிரகாஷ்ராஜ் பேரை காணோம்.]]]
ஆமாம்.. மோஸர்பேரை விற்பனை செய்துள்ளது..!
[[[மயிலு படம் போஸ்டரை பார்த்ததும் எனக்கு "சின்னத்தாயின்னு விக்னேஷ் நடிச்ச படம்தான் நினைவுக்கு வருது, இளையராசாதான் இசை, அதிலும் ஒரு சாமியாடி பாட்டுலாம் இருக்கும். கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடன் சாமி. தொம்டக்கா .. தொம் தொம் :-))]]]
இதுலேயும் அதே மாதிரி ஒரு சாமி பாட்டு இருக்கு. ஆனா இந்த அளவுக்கு இல்லை..!
[[[siva gnanamji(#18100882083107547329) said...
what is wrong with your health?
take care. get well soon.]]]
மிக்க நன்றிகள் ஐயா.. 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். மலேரியா காய்ச்சல்.. இப்போது சரியாகிவிட்டது..!
[[[சேட்டைக்காரன் said...
ராஜா இசைன்னா, அதுக்கே போய்ப் பார்த்திர வேண்டியதுதான். :-)]]]
அவசியம் பாருங்கள்ண்ணா.. ராஜாவின் இசை இந்தப் படத்தில் மிகப் பெரிய பலம்..!
[[[துஷ்யந்தன் said...
அப்போ கண்டிப்பா மயிலை பார்த்துட வேண்டியதுதான் :))]]]
அவசியம் பாருங்க பிரதர்..!
[[[! சிவகுமார் ! said...
//மயிலு - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!//
அவசியம் உங்ககிட்ட ஒருநாள் பேசணும்ம்ம்..]]]
நல்லவேளை.. உங்களை ஒரு நாள் பார்க்கணும்னு சொல்லாம விட்டியே..?
[[[திண்டுக்கல் தனபாலன் said...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...
நன்றி...]]]
தங்களுடைய பெருந்தன்மைக்கு எனது நன்றிகள்ண்ணே..!
Post a Comment