04-10-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“இதற்கு மேலும் இதனைப் பற்றி எழுதாமல் போனால், நாளைக்கு நீயே ‘உள்ள’ போனீன்னா, ஒரு ஈ, காக்கா கூட உன்னை பார்க்க புழலுக்கு வராது..” என்று ஒரு நண்பர் எச்சரித்ததால், இந்த விஷயத்தில் சற்றே தாமதமான பதிவு இது. தோழர்கள் பெரிதும் மன்னிக்கவும்.
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“இதற்கு மேலும் இதனைப் பற்றி எழுதாமல் போனால், நாளைக்கு நீயே ‘உள்ள’ போனீன்னா, ஒரு ஈ, காக்கா கூட உன்னை பார்க்க புழலுக்கு வராது..” என்று ஒரு நண்பர் எச்சரித்ததால், இந்த விஷயத்தில் சற்றே தாமதமான பதிவு இது. தோழர்கள் பெரிதும் மன்னிக்கவும்.
கட்டற்ற சுதந்திரம் என்று பூரிப்பில் இருந்த இணையத்தள மேய்வாளர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது இந்தப் பிரச்சினை.. கைது அளவுக்குப் போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யார் மீது தவறு என்று இந்தப் பிரச்சினையில் அனைத்து வகை பட்டிமன்றங்களையும் படித்து, படித்து மிகவும் டயர்டாகிவிட்டது..! இந்த வழக்கின் கைது, சட்டங்கள் பற்றிய விஷயங்களைப் படித்தபோது இதே போன்று என்னையவே கைது செய்ய அனைத்துவகை சட்ட ஆதாரங்களும் என் தளத்திலேயே இருக்கும் உண்மை எனக்கும் இப்போதுதான் புரிந்தது. புகார் கொடுக்க வேண்டிய ‘ஆத்தா’வுக்கும், ‘தாத்தா’வுக்கும் நான் ஒரு கொசு, என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.
இதன் மூலம் அறிவது என்னவெனில் அடுத்தவரின் மூக்கு நுனியைத் தொடுவதுவரைதான் உனக்குள்ள பேச்சுரிமை என்று நமது புளுத்துப் போன அரசியல் சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஒருவரின் வார்த்தை மற்றவருக்கு கடும் மன உளைச்சலைத் தருகிறது என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அது எந்த வகையான மன உளைச்சல் என்பதை கனம் கோர்ட்டார்தான் முடிவு செய்வார்களாம்.. நடவடிக்கைகளில் கைதும் செய்யலாம் என்பதும் சட்டம் கொடுத்திருக்கும் வசதி.. இதில் நாம் என்ன செய்வது..?
கைதுகள் அதிகார வர்க்கத்திற்குத்தான் அடி பணியும் என்பது நன்கு தெரிந்த விஷயம்தான் என்பதால் இதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை..! தோழர் சவுக்கு சங்கரை, தாத்தாவின் ஆட்சியில் ஜாபர்சேட்டின் தூண்டுதலினால் உண்மையே இல்லாத வழிப்பறி கேஸில் பிடித்து உள்ளே வைத்தார்கள். அதுதான் இணைய எழுத்தாளர்களின் மீதான முதல் தாக்குதல் என்று நினைக்கிறேன்.. அந்தக் கேஸ் பொய்யானது என்று சொல்லி சமீபத்தில்தான் தீர்ப்பாகி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் சங்கர்..! அப்போது நம்மில் எத்தனை பேர் பொங்கி எழுந்தோம் என்பதை இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்..!
இந்தக் கைது விவகாரத்தில் சட்டம் அதிகாரம் படைத்தவர்களுக்காக வளைந்து கொடுத்திருக்கிற அதேசமயம், கைதும் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை.. ஆனால் வேகமாக, முக்கியத்துவம் வாய்ந்த கைதாகவே நடத்தப்பட்டிருக்கிறது..! கைது நடவடிக்கையின்போது ஒரு துணை கமிஷனரே சரவணக்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்றிருக்கிறார். இதிலிருந்தே போலீஸ் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் நமக்குப் புரிகிறது.. இருவரும் இப்போது ஜாமீனில் வெளியில் வந்துவிட்டாலும், இவர்கள் கைதுக்கான முக்கியக் காரணம் சின்மயி மீதான வார்த்தைத் தாக்குதல் மட்டுமில்லை.. ஆத்தாவைப் பற்றி ராஜன் எழுதிய ஒரு சின்ன ட்வீட்டுதான் மிகப் பெரிய காரணம் என்று நான் நினைக்கிறேன்..! ஒருவரைவிட்டுவிட்டு மற்றவரை கைது செய்தால் பிரச்சினையாகும் என்பதால் இதில் சரவணக்குமாரும் மாட்டிக் கொண்டுவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்..!
ராஜனின் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். பல முறை போனிலும் பேசியிருக்கிறேன்.. அவருடைய பல ட்வீட்டுகளை, கிண்டல்தான் என்றாலும், அத்துமீறிய ட்வீட்டுகள் என்று அவருக்கு ட்வீட்டரிலேயே சொல்லியிருக்கிறேன். “இது ரத்த பூமிண்ணே..” என்று அவரும் திருப்பி பதிலும் சொல்லியிருக்கிறார். சொல்லிக் காட்ட இது நேரமில்லை என்றாலும், அவருடைய சில டிவீட்டூகள் புகார்தாரர்களை காயப்படுத்தியிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. இதனால்தான் நம் அன்புத் தம்பி என்றாலும் அவருக்கு முழுமையான ஆதரவளிக்க முடியவில்லை. உற்றார், உறவினர் கைது செய்யப்பட்டால் எந்த வழக்காக இருந்தாலும் நமக்கு ஒரு பாசம் வருமே.. அது போன்றுதான் இப்போதும் ராஜன் மீதும், சரவணக்குமார் மீதும்.. பெரிதும் வருந்துகிறேன்.. நடந்திருக்கவே கூடாது.. நடந்துவிட்டது.. இனி நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம்..!
சின்மயியின் ட்வீட்டுகளும் நமக்கு மன உளைச்சலைத் தருகின்றன என்று நாம் புகார் கொடுத்தாலும், நமக்குத் தெரிந்த காவல் துறையின் உயரதிகாரி யாரும் இல்லாததால் அந்த வழக்கில் நிச்சயம் கைது எதுவும் இருக்காது..! நடக்காது..! இந்தக் கேடு கெட்ட இந்தியாவில் நாம் வாழும் சூழலில், இதனுடைய முரணான அரசியல் சாக்கடைகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.. சின்மயி நம்மைப் பற்றி தனிப்பட்ட முறையில் தாக்குதல் கொடுக்காதவரையிலும், நாம் பதில் நடவடிக்கையை எதிர்த் தரப்பினரை கைது அளவுக்குக் கொண்டு செல்லவும் முடியாது..! இப்போதாவது நாம் செய்த தவறென்ன என்பதைப் புரிந்து கொண்டு அதனை மாற்று வழியில் சந்திக்க முற்படுவோம்..!
|
Tweet |
