கமல்ஹாசனுக்காக காத்திருந்த தெரு...!


25-05-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வக்காலி.. மன்மோகன்சிங், பிரதீபாபாட்டிலுக்குக்கூட இப்படியொரு அலட்டல் நடந்திருக்காது.. ஆழ்வார்பேட்டை ஆண்டவன் கமலஹாசன் ஒரு ஆர்ட் கேலரியைத் திறந்து வைக்க வந்த நிகழ்ச்சிக்காக, ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையை துவம்சம் செய்துவிட்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்..!

 ஏற்கெனவே பெரும் பணக்காரர்கள் நிரம்பிய அந்தச் சாலையில் கலையார்வம் கொண்ட ஒரு பெரும் பணக்காரர் குறைந்த வாடகையில் கொடுத்த அற்புதமான ஒரு வீட்டில் அழகான தனது கலை வடிவங்களை கண்காட்சிக்கு வைத்திருக்கிறார் கலை ஓவியர் ஸ்ரீதர்.



கமலஹாசனின் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் காட்சி துவங்கி, அவரது பல்வேறு அவதாரங்களின் தொகுப்பு வரையிலும் பலவற்றையும் வரைந்து கமலிடம் வழங்கி அவரது அன்பைப் பெற்றவர் ஸ்ரீதர். அதற்கான நன்றிக் கடனாக அவரது ஆர்ட் கேலரியைத் திறந்து வைக்க இன்று வருகை புரிந்தார் கமல்.

மதியம் 3.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்று சொல்லி 3 மணியில் இருந்தே பத்திரிகையாளர்கள் வந்து காத்திருக்க.. அநத் தெருவையே இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். வருகின்ற கார்களை பிக்கப் செய்து வேறிடத்தில் நிறுத்திவைக்க கால் டிரைவர்ஸ் யூனிட்டையே களம் இறக்கியிருந்தார்கள். தெருவில் இருந்த வீட்டு ஓனர்களிடம் பேசி, சிறிது நேரத்திற்கு வெளியில் கார்களை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்களாம்..!

தெருவின் துவக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் இருந்து ஏதோவொரு பழங்களை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் அவ்வப்போது கொஞ்சம் நிறுத்திக்கக் கூடாதா என்று கேட்டு அதனையும் சீக்கிரமாகவே முடிக்க வைத்துவிட்டார்கள்..! டூவிலர்கள் நிறுத்த இடமில்லாமல்போக, கூடுதலாக வந்தவைகளை தெருவின் மறுகோடிவரையிலும் கொண்டு போய் நிறுத்தச் சொன்னார்கள். தெருவில் குடியிருப்பவர்கள் வந்த கார்களைகூட ஓரமா நிறுத்துங்களேன் என்று வாலண்டியராக கூவிக் கொண்டிருந்தார்கள்..!

இதோ வர்றார்.. கிளம்பிட்டார்.. வந்துக்கிட்டேயிருக்கார் என்றெல்லாம் கிசுகிசு பாணியில் புரளியைக் கிளப்பிவிட.. பாவம் கேமிராமேன்களும், புகைப்படக்காரர்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாசலில் தேமே என்று தவம் கிடந்தது பரிதாபம்தான்..!





வரப் போவது தெரிந்தவுடன் யார், யார் தெருவில் போய் நிற்பது.. கார் எங்கே வந்து நிற்கும்.. கமல் காரில் இருந்து இறங்கியவுடன் யார் முதலில் வரவேற்பது என்றெல்லாம் நொடியில் பேசி முடித்து பக்காவாக செயல்படுத்தினார்கள்.

50 வீடியோ கேமிராமேன்கள் சூழ்ந்து கொள்ள.. பிளாஷ் மழையில் நனைந்து கொண்டேதான் உள்ளே வந்தார் கமல். தனது புகைப்படத்தில் இரண்டு பக்கமும் மாறி, மாறி நின்றபடியே எழுதியதை, திருப்பித் திருப்பி எழுதி போஸ் கொடுத்தார்..!



ஒரு வித்தியாசத்திற்கு கம்யூட்டரில் இருந்த குத்துவிளக்கு படத்தில் திரி எரியும் இடத்தில் பிரஷ்ஷால் தீபத்தை வரைந்து விழாவைத் துவக்கி வைத்தார்.. சிம்ப்ளி சூப்பர்ப்..! பியானோவை பார்த்தவுடன் ஆர்வத்துடன் உட்கார்ந்தவர்.. ஏதோ பேச்சுக்கு என்பது போல் இல்லாமல், அழகாக பியானோவை வாசிப்பதுபோல் நடித்தது மிகவும் அழகு..!



டிவி, தின இதழ், வார இதழ், இணையத்தளங்கள் என்று 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கூடி நிற்க.. இதில் பாதிப் பேர் இடமில்லாமல் நிற்க வேண்டியிருந்தது..! உட்கார்ந்து பேசினால் நல்லது என்று ஸ்டில் கேமிராமேன்களும், நின்று கொண்டே பேசினால் நல்லது என்று டிவி கேமிராமேன்களும் சொல்ல.. மெஜாரிட்டிபடி நின்றபடியே பேசி முடித்தார் கமல்.



பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் ஸ்ரீதருக்கும் தனக்குமான நட்பை விளக்கிவிட்டு, அவருடைய அன்புக்காகவே தான் வந்ததாகச் சொன்னார். விஸ்வரூபம் பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு “முக்கால்வாசி முடிஞ்சிருச்சு.. படம் பாருங்க தெரியும்..” என்றார். நிருபர்கள் விடாமல் விஸ்வரூபத்தை கேட்க... “அடுத்து வசனத்தை கேட்பீங்களா? என்று அரங்கத்தை கலகலப்பாக்கினார். விஸ்வரூபத்தின் முதல் காட்சி அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் இந்திய பிலிம் பெஸ்டிவலில் நடைபெறும் என்று இன்றைக்குத்தான் நியூஸ் கொடுத்தார்கள்..! தான் படங்களில் நடித்ததை தானே பார்க்கும்போதுதான் தனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கிறான் என்பதை உணர்கிறேன் என்றார்..!  ஸ்ருதியின் படங்கள் பற்றி கேட்டபோது, “எனக்கே பார்க்க கொடுமையாத்தான் இருக்கு..” என்றார்.  இதற்கு மேலும் இங்கேயிருந்தால் கேள்விகள் பாயும் வர்றேன் என்று சொல்லிவிட்டு பாய்ந்தோடினார்..!

வழியில் நின்று கொண்டிருந்த பலரிடமும் கை கொடுத்து குலுக்கிவிட்டு அவர் ஓடிய ஓட்டத்திற்கு அப்படியே நடக்க விட்டிருந்தால் 2 நிமிடத்தில் அவர் ஆபீஸுக்கே போய்ச் சேர்ந்திருக்கலாம்.. பிரபலங்களுக்கு இது ஒரு மாதிரியான தொல்லைதான் என்றாலும், அடிக்கடி வெளியில் வந்து பேசிக் கொண்டிருந்தால், இந்த அன்புத் தொல்லையிருக்காது..!

கமல் திரும்பி வந்து காரில் ஏறும்வரையிலும் அத்தெருவில் ஒரு காரையும் ஓரமாக நிறுத்தக் கூட விடவில்லை ஐயாமார்கள்.. ஓடோடிச் சென்று அன்போடு “கொஞ்சம் தள்ளி.. கொஞ்சம் தள்ளி..” என்று சொல்லி வழியை தயார் நிலையில் வைத்திருந்தார்கள்..! கமலின் கார் சென்ற பின்பே டூவிலர்களுக்கும், மற்றவர்களுக்கும் அனுமதி கிடைத்தது..! இதையெல்லாம் யாராவது அரசியல்வியாதிகள் பார்த்தால் என்ன ஆகும்..?

பை தி பை.. லாஸ்ட் பன்ச் என்னன்னா.. நெல்லை சந்திப்பு படத்தின் இசை வெளியீட்டு விழால அரை மணி நேரம் காக்க வைச்சதுக்காக பல பத்திரிகையாளர்கள் விழா துவக்கத்திலேயே விழாவைப் புறக்கணிச்சிட்டு எழுந்திரிச்சு போயிட்டாங்க..! ஆனா இங்க.. கூடுதலா 2 மணி நேரமாகியும் மெதுவா, இருந்து பார்த்து, பேசி, கூடிக் குலாவிட்டுத்தான் போனாங்க..! என்னவொரு மாற்றம் பாருங்க.. வல்லவன் வகுத்ததே வாய்க்கால்ன்னு சொல்லுவாய்ங்க பாருங்க.. அது இதுதான்..!

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

கமல் உங்க கூட நின்னு போட்டோ எடுத்துக் கொண்டாரா

MARI The Great said...

/////வல்லவன் வகுத்ததே வாய்க்கால்ன்னு சொல்லுவாய்ங்க பாருங்க.. அது இதுதான்..!///

பழமொழி பொய்யாகுமா தல ..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

கமல் உங்க கூட நின்னு போட்டோ எடுத்துக் கொண்டாரா?][]]

அண்ணே.. அவர் எங்க..? நான் எங்கே..?

உண்மைத்தமிழன் said...

[[[வரலாற்று சுவடுகள் said...

/வல்லவன் வகுத்ததே வாய்க்கால்ன்னு சொல்லுவாய்ங்க பாருங்க.. அது இதுதான்..!///

பழமொழி பொய்யாகுமா தல..!]]]

அப்போ பாவப்பட்டவர்கள் எளி்மையானவர்கள்தானா..? இது சமூக நீதியல்ல. சமூக அநீதி..!

முரளிகண்ணன் said...

அண்ணே பகிர்வுக்கு நன்றி

ஒரு சந்தேகம்

பிரதீபா பாட்டீலுக்கு எவ்வகையில் கமல் குறைவு?

CS. Mohan Kumar said...

//பிரதீபா பாட்டீலுக்கு எவ்வகையில் கமல் குறைவு?//

:))

Murali is a diehard Kamal fan.

By the way, I am not a Prathiba Patil fan :))

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

அண்ணே பகிர்வுக்கு நன்றி.

ஒரு சந்தேகம். பிரதீபா பாட்டீலுக்கு எவ்வகையில் கமல் குறைவு?]]]

சமூக, அரசியல் அந்தஸ்தில் குறைவுதானே..?

பொதுவா பிரதமர், ஜனாதிபதி, கவர்னர், முதல்வருக்குத்தானே இத்தனை அலப்பறை செய்வார்கள்.. அதனால்தான் குறிப்பிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

//பிரதீபா பாட்டீலுக்கு எவ்வகையில் கமல் குறைவு?//

:))

Murali is a diehard Kamal fan. By the way, I am not a Prathiba Patil fan :))

நான் ரெண்டு பேருக்குமே தீவிர ரசிகனில்லை..!

YESRAMESH said...

விடுங்க பாஸ் இதெல்லாம் ஜகஜம்

உண்மைத்தமிழன் said...

[[[YESRAMESH said...

விடுங்க பாஸ் இதெல்லாம் ஜகஜம்.]]]

இப்படி நினைச்சுத்தான் எல்லாரும் அமைதியா இருக்கப் பழகிட்டாங்க..!