ரா! குச்சு!! செப்பு!!!

22-05-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வந்தாரை வாழ வைக்கும் சென்னைன்னு சொல்றது ச்சும்மால்ல.. நேத்து வருவான் தலைவன் படத்தோட போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சில இயக்குநர் வாசு சொன்னதை நினைச்சா இப்படித்தான் தோணுது..!



என்டி ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவை Sahasame Jeevitham  என்ற தனது படத்தில் ஹீரோவா நடிக்க வைக்கிறதா முடிவெடுத்திருந்தாராம் பி.வாசு. பாலகிருஷ்ணாவுக்கு கதை சொல்றதுக்காக ஹைதரபாத் போயிருக்காரு.. அப்போ என்.டி.ஆர்.தான் அங்க சீப் மினிஸ்டர்..! பாலகிருஷ்ணாவுக்காக அவர்தான் கதை கேப்பாராம்..!

“என்னைப் பார்த்ததும் எப்படியும் எங்கப்பா பீதாம்பரம்பத்தை பத்தி விசாரிப்பாருன்னுதான் நினைச்சேன். ஆனா அது நடக்கலை. என்னைப் பார்த்ததும், ரா.. குச்சு.. செப்பு..ன்னு மூணே வார்த்தைதான் சொன்னார்..! பெரிய நடிகர்ன்றதையும் தாண்டி, அப்போ சீப் மினிஸ்டராவும் இருந்ததால எனக்குள்ள லேசா ஒரு பயம் இருந்தது.. இதுல இன்னொரு பிரச்சினை எனக்கு தெலுங்கு தெரியாது. அதுனால நான் தமிழ்லதான் கதை சொல்லப் போறேன்னு மெல்லமா அவர்கிட்ட சொன்னேன். சட்டுன்னு கோபப்பட்டாரு.. “என்ன தைரியம் இருந்தா ஆந்திராவுக்கே வந்து.. அதோட சீப் மினிஸ்டர்கிட்டயே தமிழ்லதான் பேசுவேன்னு சொல்லுவ..?” என்று கர்ஜித்தார். வெலவெலத்துப் போயி்ட்டேன். அடுத்த செகண்ட்டே சாதாரணமா மாறிட்டாரு. அதுக்கப்புறமா சொன்னாரு.. “நான் 40 வருஷமா தமிழ்நாட்டு தண்ணியை குடிச்சு வளர்ந்தவன்.. தமிழ்நாட்டுக்கு நான் என்னிக்குமே நன்றிக் கடன்பட்டிருக்கேன்..! பரவாயில்ல.. தமிழ்லேயே சொல்லு. ஆனா அடுத்த தடவை நீ வரும்போது தெலுங்குலதான் கதை சொல்லணும்..”னு சொன்னாரு..!” என்றார் வாசு..!



வயசு 52-ன்னாலும் கமல்ஹாசனைவிடவும் இளமையாத்தான் தெரியறாரு பாலகிருஷ்ணா. டைட் ஜீன்ஸ்.. வெள்ளை சட்டைன்னு அதையும் கழுத்துவரைக்கும் பட்டன் போட்டு இறுக்கிக்கிட்டு வந்திருந்தாரு.. அவ்வளவு ஏசிலேயும் இவருக்கு மட்டும் வியர்த்து ஊத்துச்சு..! கொஞ்சம், கொஞ்சம் திக்கித் திணறி கஷ்டப்பட்டு தமிழ்லேயே பேசி முடிச்சாரு பாலய்யா..! முதல் முறையா தமிழ்ல ஹீரோவா அறிமுகமாகுறதை நினைச்சு நிறையவே சந்தோஷப்பட்டேன்னு சொன்னவரு “நான் பொறந்ததே சென்னைலதான்..” என்றவுடன் பத்திரிகையாளர்கள் தன்னையறியாமலேயே கை தட்டிக் குவித்துவிட்டார்கள்.. “எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. தமிழ்நாடுதான் நமக்கு சோறு போட்டுச்சு.. வளர்த்துச்சு.. அந்த ஊர் தண்ணியை குடிச்சுத்தான் நாமெல்லாம் வளர்ந்திருக்கோம்ன்னு.. அப்படிப்பட்ட ஊருக்கு பதிலுக்கு ஏதாவது செய்யணுமேன்னு நினைச்சுதான் எங்கப்பா  கிருஷ்ணா தண்ணியை சென்னைக்கு குடுத்தாரு..” என்றார்.  ம்.. அப்புறம் ஏன் இப்போ சந்திரபாபு நாயுடு விடமாட்டேன்றாருன்னு தெரியலையே..?



கோடம்பாக்கத்துல இப்ப இருக்கிற சின்ன ஹீரோக்களே தயாரிப்பாளர் வருவரோன்னு நடுரோட்டுல நின்னுக்கிட்டிருக்குற நேரத்துல இந்தப் படத்தின் மூலமா தமிழுக்கு இன்னொரு ஹீரோவும் புதுசா என்ட்ரியாகுறாரு..! தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான மனோஜ்தான் அந்த ஹீரோ. இந்த வருவான் தலைவன் படம் மோகன்பாபுவின் சொந்தப் படம். அவரது மகள் லட்சுமி மஞ்சு பிரசன்னாதான் தயாரிப்பாளர்..! ஹீரோயின் ராஜபாட்டையில் தெருக்கோடிக்கே ஓடிப் போன தீக்சாசேத்..! தெலுங்கு, தமிழ் இரண்டிலும் ஒரே நேரத்தில் படம் தயாராகி வருகிறதாம். தெலுங்குல இந்தப் படத்தோட பேரு Uu Kodathara? Ulikki Padathara?



இந்தப் படத்திற்காக ஆறரை கோடி செலவில் கந்தர்வ மஹால் என்னும் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்டியிருக்காங்க. 2 வருஷமா படத்தை எடுத்துக்கிட்டேயிருக்காங்களாம். தமிழுக்காக பிரபு, சுஹாசினி, மனோபாலா, இளவரசு, பாண்டியராஜன், சார்லி, பானுசந்தர், பிரபான்னு தெரிஞ்ச முகங்கள் நிறையவே இருக்காங்க..! இந்த நிகழ்ச்சில மனோஜின் பெஸ்ட் பிரண்ட் சிம்புவும் கலந்துக்கிட்டாரு..



விழால பேசின மனோபாலா பேசின ஒரு விஷயத்தைக் கேட்டு சிம்புவே சிரிச்சுட்டாரு..! “நான் மனோஜ்கிட்ட உங்களுக்கு தமிழ்ல நல்லா தெரிஞ்ச ஹீரோ யாருன்னு கேட்டேன்.. அவர் டக்குன்னு சொன்னார்.. சிம்புதான்.. சிம்பு எனக்கு ஸ்கூல் டேய்ஸ்ல இருந்தே பிரெண்ட்டுன்னாரு. இதுக்கு மேல நாம ஏதாவது பேச முடியுமா..? பெஸ்ட் ஆஃப் லக்குன்னு சொல்லிட்டேன்”னார் மனோபாலா..! இதுக்கும் மேல பேசாம இருக்கிறது நல்லதுதான..?

ஆனாலும் நிகழ்ச்சி முடிந்தவுடன் மனோபாலாவை கிட்டத்திட்ட இழுத்துக்கிட்டு வெளில ஓடினாரு சிம்பு.. என்ன நடந்துச்சோ..?

6 comments:

நம்பள்கி said...

ஏமி! இந்த காரு நடிக்கற படத்தில ஹீரோ தூங்கும் போதும் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு தூங்கிற மாதிரி காட்சிகள் நிறை இருக்குமுன்னு நினைக்கிறன்!

அமர பாரதி said...

//வயசு 52-ன்னாலும் கமல்ஹாசனைவிடவும் இளமையாத்தான் தெரியறாரு பாலகிருஷ்ணா// என்னன்னே இது? 58 வயசு கமல்ஹாசனுக்கு 52 வயசு பால கிருஷ்னா இளமையாத்தான தெரிவாரு.

சத்ரியன் said...

// பதிலுக்கு ஏதாவது செய்யணுமேன்னு நினைச்சுதான் எங்கப்பா கிருஷ்ணா தண்ணியை சென்னைக்கு குடுத்தாரு..” என்றார். ம்.. அப்புறம் ஏன் இப்போ சந்திரபாபு நாயுடு விடமாட்டேன்றாருன்னு தெரியலையே..?//

இது கேள்வி!

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

ஏமி! இந்த காரு நடிக்கற படத்தில ஹீரோ தூங்கும் போதும் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு தூங்கிற மாதிரி காட்சிகள் நிறை இருக்குமுன்னு நினைக்கிறன்!]]]

ஆமாம்... அதுதான் பாலய்யா..! அவுக ரசிகர்களுக்கு அப்படி நடிச்சாத்தான் பிடிக்குமாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

//வயசு 52-ன்னாலும் கமல்ஹாசனைவிடவும் இளமையாத்தான் தெரியறாரு பாலகிருஷ்ணா//

என்னன்னே இது? 58 வயசு கமல்ஹாசனுக்கு 52 வயசு பாலகிருஷ்னா இளமையாத்தான தெரிவாரு.]]]

ஓ.. நான் இப்படி யோசிக்கலையே..? பெரிசுக லிஸ்ட்டாச்சேன்னு மட்டும்தான் பார்த்தேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[சத்ரியன் said...

// பதிலுக்கு ஏதாவது செய்யணுமேன்னு நினைச்சுதான் எங்கப்பா கிருஷ்ணா தண்ணியை சென்னைக்கு குடுத்தாரு..” என்றார். ம்.. அப்புறம் ஏன் இப்போ சந்திரபாபு நாயுடு விடமாட்டேன்றாருன்னு தெரியலையே..?//

இது கேள்வி!]]]

அப்பன் கொடுத்ததை மகனும், மருமகனும் சேர்ந்து கெடுக்குறாங்களே.. இது நியாயமில்லையே..?