மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

28-11-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எனது பருவ வயதில் மலையாள இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களுக்கு கேரளத்திலும், தமிழகத்திலும் பெரும் வரவேற்பு இருந்த்து. காரணம், இலைமறைவு காயாக செக்ஸை எல்லா ரூபத்திலும் அவர் திணித்திருந்ததுதான்.. கிட்டத்தட்ட 60 திரைப்படங்கள் இது போலவே எடுத்திருந்தார். அத்தனையிலும் கதை இருக்கும். கூடவே சதையையும் சென்சார் போர்டு கட் செய்ய முடியாத்துபோல் வைத்திருப்பார். இப்போது இந்த வேலையை நமது செல்வராகவன், தியேட்டரில் சுயஇன்பம் தேடும் இளைஞர்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் திருந்த மாட்டார் போலிருக்கிறது..! குடி, கொண்டாட்டம், வயதை மீறிய பேச்சுக்கள், உணர்வு தவறிய செக்ஸ் முறைகேடுகள்.. இவைகளைத் தாங்கிக் கொண்டு இருப்பவர்களை மட்டுமே தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார் போலும்..! மீண்டும், மீண்டும் அதே கான்செப்டலேயே உருண்டு கொண்டிருக்கிறார்..! 

என்னதான் நடிகர்களை திறமையாக நடிக்க வைத்தாலும், கதையம்சம் இல்லாவிட்டால் அது நகைச்சுவையாகிவிடும்.. மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தப் படம். செல்வராகவன் என்று டைட்டில் போடும்போது எழும் கை தட்டல், படத்தின் இறுதிவரையிலும் தொடர்கிறது. ஆனால் கேலியாக..!

தனுஷ் புகைப்படக் கலையில் நிபுணராக விரும்புகிறார். அதற்காக அதே துறையில் புகழ் பெற்று விளங்கும் மாதேஷ் கிருஷ்ணசாமியிடம் உதவியாளராகச் சேர முயல்கிறார். அது முடியாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. இடையில் இவரது நண்பன் இழுத்துக் கொண்டு வரும் ரிச்சாவின் மீது முதலில் கோபமாகி பின்பு தாபமாகி, கடைசியில் அவளையே அதே நண்பன் முன்னிலையில் திருமணம் செய்யும் சூழல்..! 

மாதேஷ் தன்னுடைய புகைப்படத்தை வைத்து அவார்டு வாங்கும் செய்தியைப் படித்துவிட்டு மாடியில்இருந்து கீழே விழுந்து அடிபடும் தனுஷ், கொஞ்சம் மனநிலை பிறழ்ந்தவராக மாறுகிறார். அதன் பின்பு அவருடைய வாழ்க்கையும் மாறித் தொலைத்திருக்க இறுதியில் என்னவாகிறார் என்பதுதான் கதை..!

படத்தின் அடித்தளமான தனுஷின் ரெண்டுங்கெட்டான் புத்திசாலித்தனத்தை முன் வைத்து அவர் மீதான அனுதாபத்தை நமக்குள் புகுத்த பார்த்திருக்கிறார் செல்வா. அதுவே கேலிக்கூத்தாக இருக்கிறது. இணையம் பயன்படுத்தும் ஒரு நபர், போட்டோகிராபியில் உலகளாவிய வகையில் புகழ் பெற விரும்புவர், புகைப்படம் சம்பந்தமான அத்தனை புத்தகங்களையும் புரட்டிக் கொண்டிருப்பவர்.. வேலை கேட்டு ஒருவரை எப்படி அணுக வேண்டும் என்பதுகூடவா தெரியாமல் இருப்பார்..? இங்கேயே தனுஷின் கேரக்டர் அடிபட்டுவிட்டது..! பிறகு என்னத்தை அவர் மீது பாரத்தை இறக்க..!? ஒரு முறை அல்ல.. 3 முறையும் மதேஷ் கிருஷ்ணசாமியிடம் மூக்குடைபட்டு திரும்புகிறார். நண்பன் தள்ளிட்டு வந்த ரிச்சாவிடம் கோபப்படும் அளவுக்குக்கூட மாதேஷிடம் அவரால் கோபப்பட முடியவில்லை. காரணமே இல்லையே..! 

3 ஆண், 2 பெண் என்று வழக்கமான செல்வாவின் கூட்டணி. பார்க்கும் நேரத்திலெல்லாம் கூச்சப்படாமல் பாட்டில்களுடன் திரிகிறார்கள். ஆனால் பாத்ரூமில் ரிச்சாவை தனுஷ் கட்டிப் பிடித்திருப்பதைப் பார்த்தவுடன் கோபப்படுகிறார்கள். இவர்களுடைய தப்புக்கு அளவுகோலை இவங்களே வைச்சிருக்காங்க போலிருக்கு..! தியேட்டர் சிரியாய் சிரிக்குது..!

ஒரு நிமிடத்திற்கு முன்பாக சிஸ்டர் என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடத்தில் காதல் பாடலில் உருகித் திளைக்கையில் அதனை ரசிப்பதா அல்லது சிரித்துத் தொலைவதா என்ற குழப்பத்திலேயே அந்த  4 நிமிடங்கள் கரைந்து போயின..!

இந்தப் படத்திலேயே கேணத்தனமான காட்சி பாத்ரூமில் பல்லிக்கு பயந்து இருவரும் கத்துதுவதான்..! இது போன்ற ஹம்பக்கான காட்சிகளை வைத்துதான் அவர்களைத் தொட வைக்க வேண்டுமா? அந்த வரிசையில் இது 1001-வது படமாகக் கொள்ளலாம்..!

முதல் சந்திப்பில் தனுஷுடன் சண்டையிடுவதில் தொடங்கி, புகைப்படக் கலையின் மீது வெறியாக இருக்கும் தனுஷ் மீதான பரிவு, காதலாகி உணரத் துடிப்பது ஓகேதான் என்றாலும், நண்பன் மீது அவர் கொண்டிருந்தது காதல் இல்லை என்றாகிவிட்டதால் படத்தில் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டாகிவிட்டது..! இந்தக் காதல் எப்போது வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் தாவிவிடும் என்னும்போது அந்த மூன்றெழுத்திற்கு என்னதான்  மரியாதை..?

தனுஷ், நண்பன், ரிச்சா மூவரும் ஒரே காரில்தான் வருகிறார்கள். காட்டேஜில் தங்கியிருக்கும் காலையில் ரிச்சா தனுஷ் எங்கே என்று கேட்கிறார். அப்போதுதான் நண்பன் சொல்கிறார் “தனுஷ் படமெடுக்க இங்க வந்திருக்கான்” என்று..! இந்த அளவு கேர்லெஸ்ஸிற்கு செல்வராகவன் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை..!

இடைவேளை வரையிலும் தனது யூத்தான வசனங்களால் கதையை நகர்த்தியவர், இடைவேளைக்கு பின்பு மனநிலை தவறிய தனுஷாக மாற்றிவிட்டு எப்படி முடிப்பது என்று தெரியாமல் தனக்குச் சம்பந்தமே இல்லாத விக்ரமன் ஸ்டைலுக்கு தாவி நல்லபடியாக முடித்திருக்கிறார்..! இந்த ஒரு படத்தில்தான் கதையின் முடிவு மங்கலமாக முடிந்திருக்கிறது எனலாம்..!

படத்தில் கதை என்ற ஒன்று இலக்கில்லாமல் சென்றிருந்தாலும், ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு மூன்றுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டுள்ளன. முதல் பிரேமில் இருந்து கடைசி ஷொட்டு வரையிலும் ராம்ஜியின் ஒளிப்பதிவு அசத்தல். கதைக்கு தேவைப்பட்ட ஒளிப்பதிவை தயக்கமில்லாமல் வழங்கியிருக்கிறார் ராம்ஜி.. 

காட்சியமைப்புகளிலேயே போரடிக்காமல் செய்ய வைக்க வேண்டும் என்று முடிவ செய்து நகர்த்திய செல்வாவுக்கு உறுதுணை எடிட்டர் கோலா பாஸ்கர். ஆனாலும் சோகமயமான காட்சிகளிலேயே தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்ததால் பிற்பாதியில் ரிச்சாவின் கரு கலையும் காட்சிவரையிலும் படத்தின் ஓட்டம் ரொம்பவே பொறுமையைச் சோதித்துவிட்டது..!

நடிப்பு என்று பார்த்தால் தனுஷுக்கு மேலும் ஒரு முக்கியமான திரைப்படம் இது. இப்படிப்பட்ட கேரக்டர் என்றவகையில் மட்டுமே பார்த்தோமேயானால் கதையில் இருக்கும் இடிபாடுகளை அகற்றிவிட்டு தனுஷை மட்டுமே பிரதானமாக கொண்டு பாராட்டலாம். ஆனால் இனியும் இது தொடருமானால் இதுவே பலருக்கும் அலர்ஜியாகிவிடும் சாத்தியக் கூறுகளும் உண்டு.

ரிச்சா என்ற இந்த புதுமுகத்திற்கு நிச்சயமாக விருதுகள் உண்டு..! அனைவரும் குறிப்பிடுவதை போல சிந்திய தனது குருதியைத் துடைக்கும் காட்சியில் வசனமில்லாத அந்த நடிப்பு பிரமாதம்..! வரவழைத்திருக்கும் செல்வாவுக்கும் பாராட்டுக்கள்..! இது போலவே இறுதிக் காட்சியில் டிவியை உற்று பார்த்தபடியே இருக்கும் அந்த மங்கலகரமான முகத்தில் தெரியும் பரவச பரிதவிப்பிற்கு ஒரு சபாஷ்..!

பாடல்கள் ஏற்கெனவே இணையம் மூலமாக ஹிட்ட்டித்துவிட்டாலும், தியேட்டர்களில் இனிமையாகக் கேட்டுத் தொலைய முடியவில்லை.. சிம்புவின் ரசிகர்களுக்கு யாரோ மொத்தமாக டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. கடைசிவரையில் கேலி, கிண்டல், கை தட்டல், விசில் சப்தம் என்று காதை பஞ்சராக்கிவிட்டார்கள்..! 

சிறந்த நடிப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங் என்று ஒரு திரைப்படத்திற்குத் தேவையான தூண்கள் சிறப்பாக இருந்தும், அடித்தளமான கதை நொண்டியடித்துவிட்டதால் பெஸ்ட் என்று சொல்ல முடியவில்லை..! 

அடுத்த கதையிலாவது தனது மனதைவிட்டு வெளியேறி, வெளிப்புற மனிதர்களைப் பற்றி எடுப்பது பற்றி செல்வராகவன் யோசிக்கட்டும்..! 

25 comments:

Unknown said...

அணைத்து விமர்சனங்களையும் படித்து விட்டு பிறகு படம் பார்க்கலாமா ? என்று யோசித்துக் கொண்டிருக்கேன்
விமர்சனங்களுக்கே - விமர்சனம் எழுதினாலும் தீராது போல இது அடுத்த கொலைவெறியோ ?

Guru said...

படம் நிறைய பேருக்கு பிடிக்காது... உண்மை தான்... ஆனா எனக்கு பிடிச்சுருக்கு....

Unknown said...

//தையம்சம் இல்லாவிட்டால் அது நகைச்சுவையாகிவிடும்//

நகைச்சுவையா, நாராசமாகிருச்சாம். பெங்களூர்ல பாத்த என் நண்பன் ஒருத்தன் நவத்துவாரத்திலயும் ரத்தம் சிந்திக்கிட்டிருக்கான்.

ராஜ் said...

செல்வாவுக்கு கண்டிப்பாக ஏதோ மன ரீதியான பிரச்சினை இருக்கும் என்று எண்ணுகிறேன்....
அவரது சைக்கோ எண்ணங்களின் வெளிப்பாடே அவரது கதாநாயகர்கள்....
எனக்கும் படம் பிடிக்கவில்லை........

உண்மைத்தமிழன் said...

[[[ஆகாயமனிதன்.. said...

அணைத்து விமர்சனங்களையும் படித்து விட்டு பிறகு படம் பார்க்கலாமா ? என்று யோசித்துக் கொண்டிருக்கேன்
விமர்சனங்களுக்கே - விமர்சனம் எழுதினாலும் தீராது போல இது அடுத்த கொலை வெறியோ?]]]

ஆமாம்.. பக்கத்தை நிரப்புற வேலை..!

உண்மைத்தமிழன் said...

[[[Guru said...

படம் நிறைய பேருக்கு பிடிக்காது... உண்மைதான்... ஆனா எனக்கு பிடிச்சுருக்கு....]]]

அப்போ.. உங்களை மாதிரி 4 பேருக்காகத்தான் செல்வா படம் எடுக்குறாரு போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Vijaya Gopal said...

//தையம்சம் இல்லாவிட்டால் அது நகைச்சுவையாகிவிடும்//

நகைச்சுவையா, நாராசமாகிருச்சாம். பெங்களூர்ல பாத்த என் நண்பன் ஒருத்தன் நவத்துவாரத்திலயும் ரத்தம் சிந்திக்கிட்டிருக்கான்.]]]

ஹா.. ஹா.. ஒரு குவார்ட்டரை அடிச்சிட்டு குப்புறப் படுக்கச் சொல்லுங்க. சரியாப் பூடும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

செல்வாவுக்கு கண்டிப்பாக ஏதோ மன ரீதியான பிரச்சினை இருக்கும் என்று எண்ணுகிறேன். அவரது சைக்கோ எண்ணங்களின் வெளிப்பாடே அவரது கதாநாயகர்கள். எனக்கும் படம் பிடிக்கவில்லை.]]]

-)))))))))))))

தினேஷ் ராம் said...

சூப்பர்ணே!!

CS. Mohan Kumar said...

Very very good review. Completely agree with you, particulary the first few paras.

Feroz said...

//செல்வாவுக்கு கண்டிப்பாக ஏதோ மன ரீதியான பிரச்சினை இருக்கும் என்று எண்ணுகிறேன். அவரது சைக்கோ எண்ணங்களின் வெளிப்பாடே அவரது கதாநாயகர்கள்// இதை தான் ஆரம்பத்தில் இருந்து நான் சொல்கிறேன். தமிழ்பட இயக்குனர்களில் இருவர் மன பிறழ்வு உள்ளவர்கள். ஒன்று செல்வா அடுத்தவர் பாலா.

priyamudanprabu said...

:)

Unknown said...

//நடிப்பு என்று பார்த்தால் தனுஷுக்கு மேலும் ஒரு முக்கியமான திரைப்படம் இது//
உண்மைதான் தனுஷின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது! அலப்பறைகள், அலட்டலில்லாத நல்ல படங்களில் மிகவும் ரசிக்க வைக்கிறார்!

உண்மைத்தமிழன் said...

[[[சாம்ராஜ்ய ப்ரியன் said...

சூப்பர்ணே!!]]]

நன்றிண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

Very very good review. Completely agree with you, particulary the first few paras.]]]

நன்றி மோகன்குமார்..! ஒரு படம் என்றால் பரவாயில்லை. அடுத்தடுத்து தொடர்ச்சியாக அப்படித்தான் என்றால் இப்படித்தான் ஒப்பிட முடிகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Feroz said...

//செல்வாவுக்கு கண்டிப்பாக ஏதோ மன ரீதியான பிரச்சினை இருக்கும் என்று எண்ணுகிறேன். அவரது சைக்கோ எண்ணங்களின் வெளிப்பாடே அவரது கதாநாயகர்கள்//

இதைதான் ஆரம்பத்தில் இருந்து நான் சொல்கிறேன். தமிழ் பட இயக்குனர்களில் இருவர் மன பிறழ்வு உள்ளவர்கள். ஒன்று செல்வா அடுத்தவர் பாலா.]]]

-)))))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

:)]]]

ஓகே பிரபு...!

உண்மைத்தமிழன் said...

[[[ஜீ... said...

//நடிப்பு என்று பார்த்தால் தனுஷுக்கு மேலும் ஒரு முக்கியமான திரைப்படம் இது//

உண்மைதான் தனுஷின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது! அலப்பறைகள், அலட்டலில்லாத நல்ல படங்களில் மிகவும் ரசிக்க வைக்கிறார்!]]]

பாராட்டுக்கள் தனுஷிற்கு..!

Suresh V Raghav said...

அது KSGa அடூர் கோபாலக்ரிஷ்ணனா

Darren said...

//காட்டேஜில் தங்கியிருக்கும் காலையில் ரிச்சா தனுஷ் எங்கே என்று கேட்கிறார். அப்போதுதான் நண்பன் சொல்கிறார் “தனுஷ் படமெடுக்க இங்க வந்திருக்கான்” என்று..! இந்த அளவு கேர்லெஸ்ஸிற்கு செல்வராகவன் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை..!//

அவன் இங்கே வந்திருப்பது படமெடுக்க, நம்ப கூட சுத்த இல்லை என்ற மாதிரியான பொருள் படும்படியாக இந்த வசனத்தை செல்வராகவன் வைத்திருக்கலாம் அல்லவா?

மற்றபடி உண்மைத்தமிழனின் அறிவுக்கே இதெல்லாம் எட்டும்போது செல்வாவிற்கு எட்டாதா?

உண்மைத்தமிழன் said...

[[[Suresh V Raghav said...

அது KSGa அடூர் கோபாலக்ரிஷ்ணனா]]]

மை காட்.. இவ்ளோ அப்பாவியா நீங்க..? அவர் வேறங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Dharan said...

//காட்டேஜில் தங்கியிருக்கும் காலையில் ரிச்சா தனுஷ் எங்கே என்று கேட்கிறார். அப்போதுதான் நண்பன் சொல்கிறார் “தனுஷ் படமெடுக்க இங்க வந்திருக்கான்” என்று..! இந்த அளவு கேர்லெஸ்ஸிற்கு செல்வராகவன் ஏன் இறங்கினார் என்று தெரியவில்லை..!//

அவன் இங்கே வந்திருப்பது படமெடுக்க, நம்பகூட சுத்த இல்லை என்ற மாதிரியான பொருள்படும்படியாக இந்த வசனத்தை செல்வராகவன் வைத்திருக்கலாம் அல்லவா?]]]

ரிச்சாவும், நண்பரும் எங்கே தனியாகச் சுத்தினார்கள்..?

[[[மற்றபடி உண்மைத்தமிழனின் அறிவுக்கே இதெல்லாம் எட்டும்போது செல்வாவிற்கு எட்டாதா?]]]

கரெக்ட்டுதான்.. அவருக்கு எட்டியிருப்பது உண்மைதான்..!

வருண் said...

***இவர் திருந்த மாட்டார் போலிருக்கிறது..! குடி, கொண்டாட்டம், வயதை மீறிய பேச்சுக்கள், உணர்வு தவறிய செக்ஸ் முறைகேடுகள்.. இவைகளைத் தாங்கிக் கொண்டு இருப்பவர்களை மட்டுமே தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார் போலும்..!***

He is a SICK mf, I agree, 100%. இந்தாளை விடுங்க, இவனைப் புரிஞ்சுக்கிறது எளிது. ஆனால் இவன் படத்தை ரசிப்பவர்களைத்தான் என்னால புரிஞ்சுக்க முடிய்லை!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***இவர் திருந்த மாட்டார் போலிருக்கிறது..! குடி, கொண்டாட்டம், வயதை மீறிய பேச்சுக்கள், உணர்வு தவறிய செக்ஸ் முறைகேடுகள்.. இவைகளைத் தாங்கிக் கொண்டு இருப்பவர்களை மட்டுமே தனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார் போலும்..!***

He is a SICK mf, I agree, 100%. இந்தாளை விடுங்க, இவனைப் புரிஞ்சுக்கிறது எளிது. ஆனால் இவன் படத்தை ரசிப்பவர்களைத்தான் என்னால புரிஞ்சுக்க முடிய்லை!]]]

அவன், இவன் என்ற ஏக வசனம் வேண்டாமே வருண்..!

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.


* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.