தம்பி வெட்டோத்தி சுந்தரம் - சினிமா விமர்சனம்

14-11-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உக்கிரமான யுத்தப் போராட்டம்..! நிஜமாகவே நடந்த கதை என்பதால் குமரி மாவட்டத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க.. 2 ஆண்டு கால கடும் போராட்டத்துக்கு பின்பு வெளியாகியிருக்கிறது..! படத்தின் இயக்குநர் வடிவுடையான், மலையாள கரம் மசாலா இயக்குநர் ஷாஜி கைலாஷின் சீடர் என்பதால், இது போன்ற வன்முறைகளுடன் கலந்த படைப்புக்கேற்ப இறுக்கமான திரைக்கதையை அமைத்து ரேஸ் குதிரையாக படத்தை ஓட விட்டிருக்கிறார்..!


பி.ஏ. பி.எட். படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்காக முயற்சிக்கிறார் கரண். அது முடியாமல் போக போலீஸ் வேலைக்காவது போகலாம் என்று முயல்கிறார். தேர்வு நாளன்று நடக்கும் கலாட்டாவில் கரண் சிறைக்குப் போக நேரிடுகிறது. அந்த நிமிடத்தில் இருந்து அவரது வாழ்க்கையில் ஏற்படும் சூழல்தான் கதை..!

ஒரு கதைக்குள் பல கிளைக் கதைகளாக முன்னரே சொல்லப்பட்டாலும், அனைத்துமே அதிகபட்சம் 5 நிமிடங்களைக்கூட தொடாத நிலையிலும், சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருப்பதால் திரைக்கதை விறுவிறுப்பாகத்தான் செல்கிறது.

தனது பெற்றோர் சமாதி இருக்கும் வீட்டை வங்கி அடமானத்தில் இருந்து மீட்டெடுக்க வேறு வழியில்லாமல் சிறையில் தனக்குத் தோழனாக அறிமுகமான சரவணனுடன் இணைந்து அரிசி கடத்தல் தொழிலில் இறங்குகிறார் கரண்.. 

அந்த ஊரின் பிரபல சாராய வியாபாரியான சிலுவையின் மகள் லூர்து மேரியை கரணம் காதலிக்கிறார். தான் கெட்ட தொழிலை செய்தாலும், தன்னுடைய மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மருமகன் எந்த வம்பு, வழக்கும் இல்லாத நபராக இருக்க வேண்டும் என்று சிலுவை விரும்புகிறான். லூர்து மேரிக்காக கரண் தனது கடத்தல் தொழிலையே கைவிடவும் சம்மதிக்கிறான். ஆனாலும் எப்போதோ ஒரு முறை சிலுவையின் கையாளான சண்முகராஜை ஒரு சந்தர்ப்பத்தில் கரண் அவமானப்படுத்தியது இப்போது பழிக்குப் பழி உணர்வாக வெகுண்டெழ.. சுமூகமாக முடிவாக வேண்டியது, தனி மனித குரோத்த்தினால் அலங்கோலமாகிறது..!

கூடவே தனது அண்ணனை கொன்ற சிலுவையை கொலை செய்ய முயற்சிக்கும் இன்ஸ்பெக்டர் அம்புரோஸின் திட்டத்தில் கரணும் பலிகடா ஆக்கப்படுகிறார். சோகவயப்பட்ட சூழலில் தம்பி வெட்டோத்தி சுந்தரத்தின் கதை இப்படித்தான் முடிந்திருக்கிறது என்பதை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது..!

திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி கலவரம் மிகவும் வேகமெடுத்திருந்தாலும், அதற்கடுத்த மாவட்டமான கன்னியாகுமரியில் மதக் கலவரமும், கடத்தல் தொழில் மோதல்களும் எப்போதும் நடப்பதுதான். அதிலும் தமிழகத்திலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகத் திகழும் கன்னியாகுமரியில் அடிதடி, வெட்டு, குத்துகளினால் தங்களது வாழ்க்கையைத் தொலைத்த எத்தனையோ இளைஞர்களில் தம்பி வெட்டோத்தி சுந்தரமும் ஒருவர் என்கிறார் இயக்குநர்.

இந்தக் கதையைப் படமாக்கத் துணிந்த இயக்குநருக்கு முதற்கண் எனது நன்றி..! சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒரு மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது என்பதற்கு இந்தப் படத்தின் ஹீரோவும் ஒரு சாட்சி. சென்டிமெண்ட்டாக தனது தாய், தந்தை சமாதியில் வாழும் அந்த வீட்டை மீட்கத் துடிப்பது இயல்பான ஒன்று. அப்போதே அவருக்கு அரசு வேலை கிடைத்திருந்தாலோ, அல்லது வேறு வேலை பார்த்து வந்தாலோ, எப்படியாவது கடன் வாங்கிக் கட்டலாம் என்று நினைத்திருப்பார். ஆனால் துரதிருஷ்டவசமாக காவலர் தேர்வில் ஊழல் செய்வதைத் தட்டிக் கேட்கப் போய் ஜெயிலுக்கு அனுப்ப்ப்பட்டு அதனாலேயே அவரது வாழ்க்கை திசை திரும்புவதற்கு இந்தச் சமூகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கரணுக்கு அவருடைய கேரியரில் மிக முக்கியமான படம் இது..! இவரைத் தவிர வேறு நடிகர்கள் யாராவது இதில் நடித்திருந்தால் நிச்சயமாக இந்த அளவுக்கு ஈர்ப்பைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகமே.. அத்தோடு கிளைமாக்ஸ் இயக்குநர் நினைத்ததுபோல் எடுத்திருக்கவும் முடியாது..!

போலீஸ் கிரவுண்ட்டில் போலீஸாருடன் மல்லுக் கட்டுவதில் காட்டும் வீரமும், சிறைக்குள் சரவணனுக்கு நட்பு பற்றி கிளாஸ் எடுக்கும் கோபமும், அஞ்சலியுடன் பஸ்ஸுக்குள்ளேயே கலாய்க்கும் ஒரு யூத்தின் மனோபாவமும் மனிதருக்கு எளிதாகவே வருகிறது..! கரண் நிச்சயமாக நல்ல தேர்வு..!

பருத்தி வீரனுக்கு பின்பு சரவணனுக்கு இதுதான் முக்கிய படம். போலீஸிடம் அடி வாங்கும்போது காமெடியாக பேசி கலாய்ப்பது. “ரூமை போடுறோம்.. கட்டிங்கை ஊத்துறோம்.. யோசிக்கிறோம்..” என்று அடிக்கடி சொல்லி அத்தனை யூத்துகளையும் கவரும்போதும் இவருக்கு ஏன் தமிழ்ச் சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை என்று வருத்தமும் வருகிறது..!

அரிசி வியாபாரி பணம் இல்லை என்று சொல்லி அதுவரையில் சஸ்பென்ஸாக இருந்த ஒரு விஷயத்தை போட்டு உடைத்த பின்பு தெருக் குழாயில் தண்ணீரைத் தலையில் ஊத்திக் கொண்டே புலம்பும் சரவணனின் நடிப்பு அபாரம்.. இந்தக் காட்சி சரவணன், கரண் இருவருக்குமே பெயர் சொல்லும் காட்சியாக வருங்காலத்தில் அமையப் போகிறது..! “தோழா.. தோழா..” என்று நிமிடத்துக்கு நிமிடம் கொஞ்சம் சரவணன், அதே அப்பாவித்தனத்தோடு சண்முகராஜின் தூண்டுதலை புரிந்து கொள்ளாமல் சர்ச்சிற்குள் நுழைந்து கலாட்டா செய்வது எதிர்பார்க்காத ஒன்று என்றாலும், இதன் பின்னர் கரண் போலவே நாமும் அவர் மேல் கோப்ப்பட முடியாத அளவுக்கு வசனங்களும், சரவணனின் நடிப்பும் இருப்பதில் இயக்குநருக்கு பாராட்டுக்கள்..!

சந்தேகமில்லாமல் அஞ்சலி தியேட்டருக்கு வரும் யூத்துகளால் காதலிக்கப்படுகிறார். “எடேய் மரண்டை.. காதலிச்சுத் தொலைடா..” என்ற வார்த்தையைக் கேட்ட பின்பும் எவனாவது காதலிக்காமலா இருக்கப் போகிறான்.? கரண்-அஞ்சலி காதல் எப்போது துவங்கியது என்பதற்கான சூழலுக்குள் இறங்காமல், காதலிலேயே துவக்கிவிட்டது ரசிக்கத்தக்கது. பஸ்ஸிற்குள் அஞ்சலி காட்டும் அத்தனை எக்ஸ்பிரஸன்ஸ்களும் அசத்தல்.. இதுக்காகவே அஞ்சலிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமோன்னு தோணுது.. 

ஒரு பக்கம் தனது அப்பாவிடம் “என்னை இன்னும் நீங்க நம்பலீல்ல..” என்று சொல்லி டபாய்த்துவிட்டு, அடுத்த நொடியே கரணுக்கு போன் செய்து “நாளைக்கே நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்..” என்று சொல்லும் அஞ்சலியின் கேரக்டர் ஸ்கெட்ச் இந்தக் கால லவ்வர்ஸ்களுக்கு ஒரு உதாரணம்தான்..!

இரு பக்கமும் தலை உள்ள நாணயத்தை வைத்து ஏமாற்றுவது, சுங்கச் சாவடியில் பாட்டிலை கொடுத்து போஸீஸை கரெக்ட் செய்ய நினைப்பது.. வாங்கிய மாமூலுக்காக உயரதிகாரியிடமே பொய் சொல்வது.. மகள் வீட்டிலேயே காதலனை வரவழத்து சுகித்திருக்க, பார்த்த மாத்திரத்தில் அப்பன் தண்டபாணி மகளை போட்டுத் தள்ளுவது.. போலீஸ் அடித்ததையே சரவணன் மிக எதார்த்தமாக சொல்வது.. லாட்ஜில் ரூம் போட்டு குஜிலியுடன் குஜாலாக இருக்கும் சரவணன் அங்கே வரும் கரணை “அப்படியே உக்காருங்க தோழர்..” என்று கட்டிலை காட்ட.. கரண் நாகரிகமா வெளியேறுவது.. அம்புரோஸின் அண்ணன் மகன் பூணூல் போட்ட இந்துவாக இருந்தாலும், “அவனுக்கு ஒண்ணும் இல்லை. எனக்குள்ள கோபம் இருக்கு..” என்று மறைமுகமாக அவர்களைப் பற்றிச் சொல்லும் அம்புரோஷின் வாய்ப்பேச்சு.. அஞ்சலியின் நிலை தெரியாமல் போனில் தொடர்பு கொள்ள அம்புரோஷ் அதனை வைத்துக் கொண்டு தனது திட்டத்துக்கு கரணை பலிகடா ஆக்குவது.. கரண் அஞ்சலியை மரணப் படுக்கையில் பார்க்கும் காட்சியும், இருக்க விரும்பாமல் கிளம்புவது.. லைட் கம்பத்தில் கரண் அமர்ந்திருக்கும் அந்த துன்பவியல் காட்சி.. மாட்டு வண்டியால் சிந்திய ரத்த்த்தை அவசரம், அவசரமாக துடைத்துவிட்டு மண்ணையள்ளி போட்டு மறைப்பது.. சிறுவன் அம்புரோஷ் கதையை முடிப்பது என்று பல இடங்களில் சினிமாத்தனங்களை கூட வெகு இயல்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்..

கொலைகாரா பாடலும், அதனைப் படமாக்கிய விதமும் அருமை.. அஞ்சலி இருக்கும்போது இயக்குநருக்கென்ன கவலை..? ஒளிப்பதிவாளரும், சண்டை பயிற்சியாளரும் கடும் போட்டியிட்டிருக்கிறார்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில். 

வலையுலக பரமார்த்த குரு பா.ராகவனின் கை வண்ணத்தில் வசனங்களும் பலிச்சிடுகின்றன..! கரணும், சிலுவையும் சந்தித்து பேசும் அந்த ஒரு காட்சியே போதும்..! “பெத்த அப்பனா வந்திருக்கேன்” என்பதும், “உங்க பொண்ணுக்காக கடத்தல் தொழிலை விட்டுர்றேன்” என்பதும் கதையில் மிக அழுத்தத்தை கொடுத்திருந்தன..! யதார்த்தத்தை வழங்க வேண்டும் என்பதற்காக பிற்பாதியில் பேசப்பட்ட பல வசனங்களை சென்சார் கத்திரி போட்டிருப்பது நன்கு தெரிகிறது..! அத்தனை பேச்சுக்களிலும் “எடே” போட்டு முடிக்கும் கன்னியாகுமரியின் வட்டார மொழி தமிழ்ச் சினிமாவுக்கு புதுசு..! கேட்கவும் ரசிப்பாகத்தான் உள்ளது..!

இயக்குநர் வடிவுடையான் சிறந்த அறிமுக இயக்குநர் என்பதற்கும்மேல் விறுவிறுப்பான திரைக்கதையாளர் என்பதை இங்கே நிரூபித்திருக்கிறார்..! பல பிரபல நட்சத்திரங்கள் குவிந்திருக்கும் இப்படத்தில் அவர்களுக்கேற்ற காட்சிகளை அளவோடு வைத்து, எத்தனை பேர் படத்தில் உயிரோடு இருக்கிறார்கள், சாகிறார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டுப் பார்க்க வேண்டியதுமான ஒரு கதையை, இப்படியொரு வேகத்துடன் கொடுப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அது இந்த இயக்குநரிடம் உள்ளது.. 

நிஜமான தம்பி வெட்டோத்தி சுந்தரம் இறந்து 17 வருடங்களாகிவிட்டதாம். ஒரிஜினல் லூர்து மேரி இன்னமும் இருக்கிறாராம்.. சுந்தரத்தின் சமாதியை போல பல சுந்தரங்களின் சமாதிகள் அந்த மாவட்டத்தின் பல இடங்களில் குவிந்திருக்கின்றன என்கிறார் இயக்குநர். 

இந்தப் படத்திற்கு எதற்கு இவ்வளவு எதிர்ப்பு என்பதும் தெரியவில்லை..! படம் பார்க்காமலேயே போராட்டமெல்லாம் நடத்தியவர்கள், படம் காட்டிய உண்மைத்தன்மையை உணர்ந்த பின்பு அமைதியாகிவிட்டார்களாம்..! இதுவே இப்படத்திற்குக் கிடைத்த உண்மையான பாராட்டுக்கள்..! தம்பி வெட்டோத்தி சுந்தரம் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்..!

தம்பி வெட்டோத்தி சுந்தரத்தை அவசியம் பாருங்கள்..!

17 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பார்த்திடலாம்

புதுமலர் ராஜா said...

anne ippave patam paarththaal polave irukku nanri

கோவை நேரம் said...

நல்ல விமர்சனம் ...பார்த்திடலாம்...

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பார்த்திடலாம்.]]]

அவசியம் பாருங்க ரமேஷ்..!

உண்மைத்தமிழன் said...

[[[puthumalarraja said...

anne ippave patam paarththaal polave irukku nanri.]]]

புதுமலைராஜா.. குறைவாத்தான் எழுதியிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

நல்ல விமர்சனம்... பார்த்திடலாம்...]]]

அவசியம் பாருங்க ஸார்..!

G.Ganapathi said...

“என்னை இன்னும் நீங்க நம்பலீல்ல..” என்று சொல்லி டபாய்த்துவிட்டு, அடுத்த நொடியே கரணுக்கு போன் செய்து “நாளைக்கே நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்..” என்று சொல்லும் அஞ்சலியின் கேரக்டர் ஸ்கெட்ச் இந்தக் கால லவ்வர்ஸ்களுக்கு ஒரு உதாரணம்தான்..!

//

நான் இரண்டு மாதங்களுக்கு முன் தம்பி வேட்டோத்தி சுந்தரம் விநியோகஸ்தர்கள் பார்த்த காட்ட்சிக்கு அழைக்கப்பட்டு இருந்தேன் அப்போது இந்த காட்சி என்னையும் எனது மனைவியையும் செர்த்துவைக்கபோகிறது என்பது தெரியாமலே படம் பார்க்க சென்றிருந்தேன் நண்பர் வடிவுடையான் அழைப்பின் பேரில் . எனது மனைவி நான் இன்று திருமண வாழ்வில் இருக்கிறோம் என்றால் அதற்க்கு காரணம் இந்த காட்ட்சியும் உச்ச கட்டத்தில் அஞ்சலியின் அழுகையும் தான் . படம் பார்த்த உடன் என்னையும் ariyaamal கண்களில் கண்ணீர் . கரன் , தயாரிப்பாளர் செந்தில் குமார் , வடிவுடையான் , அவரது உதவியாளர் ராத மற்றும் புவன் அனைவரும் என்னை வேறு விதமாக பார்த்து இருந்தனர் பழகி இருந்தனர் ஆனால் இப்பை ஒரு திரைப்படம் பார்த்து அழுவேன் என்று அவர்கள் நினைத்தும் இருக்கமாட்டார்கள் . வித விதமான சம்பவங்கள் இந்த திரைப்படத்தில் அத்தனையும் சமகால வாழ்கையில் யாரையேனும் எதையேனும் நினைவுபடுத்தி அழவைத்து விடும் என்பது நிச்சியம் . நன்றி அண்ணா

உண்மைத்தமிழன் said...

ஜி.கணபதியண்ணே..!

உங்க ஒரிஜினல் கதைக்கான சன்மானத்தை தயாரிப்பாளர்கிட்டேயிருந்து வாங்கிட்டீங்களா..?

ரவுடிகளின் சொந்தக் கதை நிச்சயமாக சோகமயமாகத்தான் இருக்கும். இது மற்றொரு கோணத்தில் அந்தச் சோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. மனதில் கனமானது உண்மை..!

ரிஷி said...

சரவணன்,
எப்படி இருக்கீங்க. உங்க மைல் கணக்கு நீளமுள்ள பதிவெல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு. ஆட்சி மாற்றத்துக்கப்புறம் தானுண்டு தன் வேலையுண்டுன்னு ஆயிட்டீங்க போல. நல்லதுதான். :-)

உங்க பேரை இங்கெல்லாம் இழுத்திருக்காங்க. கவனிக்கலையா :-)
http://www.vinavu.com/2011/11/14/ajith-mutton-biryani/

shabi said...

இயக்குநர் வடிவுடையான் சிறந்த அறிமுக இயக்குநர் என்பதற்கும்மேல் விறுவிறுப்பான திரைக்கதையாளர் என்பதை இங்கே நிரூபித்திருக்கிறார்//// இவர் ஏற்கனவே ஒரு பட்த்தை இயக்கி உள்ளதாக படித்த நினைவு(படம் பெயர்... சாமிடா)சரி பார்க்கவும்

Unknown said...

சரி தல... அப்படியே நம்ம கடைக்கும் வாங்க.http://mydreamonhome.blogspot.com/

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

சரவணன், எப்படி இருக்கீங்க. உங்க மைல் கணக்கு நீளமுள்ள பதிவெல்லாம் படிச்சு ரொம்ப நாளாச்சு. ஆட்சி மாற்றத்துக்கப்புறம் தானுண்டு தன் வேலையுண்டுன்னு ஆயிட்டீங்க போல. நல்லதுதான். :-)
உங்க பேரை இங்கெல்லாம் இழுத்திருக்காங்க. கவனிக்கலையா :-)
http://www.vinavu.com/2011/11/14/ajith-mutton-biryani/]]]

பார்த்தேன்.. நேரமில்லை.. அதுனாலதான் எழுத வரலை.. பார்க்கலாம் ரிஷி..!

உண்மைத்தமிழன் said...

[[[shabi said...

இயக்குநர் வடிவுடையான் சிறந்த அறிமுக இயக்குநர் என்பதற்கும் மேல் விறுவிறுப்பான திரைக்கதையாளர் என்பதை இங்கே நிரூபித்திருக்கிறார்////

இவர் ஏற்கனவே ஒரு பட்த்தை இயக்கி உள்ளதாக படித்த நினைவு(படம் பெயர்... சாமிடா)சரி பார்க்கவும்]]]

விசாரித்துச் சொல்கிறேன் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[வினோத் said...

சரி தல... அப்படியே நம்ம கடைக்கும் வாங்க.http://mydreamonhome.blogspot.com]]]

வருகைக்கு நன்றி வினோத்..!

Vetri Thirumalai said...
This comment has been removed by the author.
Vetri Thirumalai said...

பாலை படம் பார்த்தீர்களா?

VampireVaz said...

marana mokkai padathirku ipadi oru vimarisanama