26-07-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இப்படியொரு படம் வந்ததே தமிழகத்துக்கு ஜனங்களுக்குத் தெரியவில்லை. அந்த லட்சணத்தில்தான் விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்..
பத்தாண்டுகளுக்கு முன்பாக படத்தினை துவக்கிவிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பாகக் கடைசி ஷெட்யூலில் படத்தினை முடித்துவிட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக யாருக்குமே தெரியாமல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் மங்கை அரிராஜனுக்கு சினிமாவுலகிலும், சின்னத்திரை உலகிலும் அவ்வளவு நல்ல பெயர். பல வில்லங்கங்களுக்குச் சொந்தக்காரரான இவர் வாங்கிய கடனுக்கெல்லாம் வட்டி மேல் வட்டி போட்டு அதனை இந்தப் படத்தின் நெகட்டிவ் மீது வைத்துவிட்டு ஹாயாக தூங்கப் போய்விட்டார்.
ஏதோ போட்ட காசாவது வரணுமே என்பதாலும், தயாரிப்பாளர் சங்கத்தில் அடுத்த தடவை கால் ஊன்றி நிக்கணுமே என்பதாலும் இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் படத்தை வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் அவருக்கு..
தமிழ்ச் சினிமா உலகத்துக்கு வெள்ளையிலும், கருப்பிலுமாக பணத்தை அள்ளி வீசும் பைனான்ஸியர்கள் அத்தனை பேருக்கும் நன்றி கார்டு போட்டதில் இருந்தே இந்தப் படத்தின் பைனான்ஸ் பிரச்சினை எப்பேர்ப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது..
இப்போது கதைக்கு வருவோம்.. பில்டிங் ஸ்டிராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு என்பார்கள் சில படங்களில்.. இங்கே தலைகீழ்.. பேஸ்மெண்ட் ஸ்டிராங்.. பில்டிங் வீக்கு.. நல்ல, அருமையான கதைக்கருவை எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தி சிதைத்திருக்கிறார்கள்.
படத்தின் அறிமுக இயக்குநரான லட்சுமணன் பிரபல இயக்குநர் அகத்தியனின் சீடர். அதற்கு முன்பே பல திரைப்படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் வாய்ந்தவர். அவ்வளவு இருந்தும் ஏன் திரைக்கதையில் சொதப்பினார் என்று தெரியவில்லை..
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இப்படியொரு படம் வந்ததே தமிழகத்துக்கு ஜனங்களுக்குத் தெரியவில்லை. அந்த லட்சணத்தில்தான் விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்..
பத்தாண்டுகளுக்கு முன்பாக படத்தினை துவக்கிவிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பாகக் கடைசி ஷெட்யூலில் படத்தினை முடித்துவிட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக யாருக்குமே தெரியாமல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் மங்கை அரிராஜனுக்கு சினிமாவுலகிலும், சின்னத்திரை உலகிலும் அவ்வளவு நல்ல பெயர். பல வில்லங்கங்களுக்குச் சொந்தக்காரரான இவர் வாங்கிய கடனுக்கெல்லாம் வட்டி மேல் வட்டி போட்டு அதனை இந்தப் படத்தின் நெகட்டிவ் மீது வைத்துவிட்டு ஹாயாக தூங்கப் போய்விட்டார்.
ஏதோ போட்ட காசாவது வரணுமே என்பதாலும், தயாரிப்பாளர் சங்கத்தில் அடுத்த தடவை கால் ஊன்றி நிக்கணுமே என்பதாலும் இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் படத்தை வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் அவருக்கு..
தமிழ்ச் சினிமா உலகத்துக்கு வெள்ளையிலும், கருப்பிலுமாக பணத்தை அள்ளி வீசும் பைனான்ஸியர்கள் அத்தனை பேருக்கும் நன்றி கார்டு போட்டதில் இருந்தே இந்தப் படத்தின் பைனான்ஸ் பிரச்சினை எப்பேர்ப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது..
இப்போது கதைக்கு வருவோம்.. பில்டிங் ஸ்டிராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு என்பார்கள் சில படங்களில்.. இங்கே தலைகீழ்.. பேஸ்மெண்ட் ஸ்டிராங்.. பில்டிங் வீக்கு.. நல்ல, அருமையான கதைக்கருவை எந்த அளவுக்குக் கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தி சிதைத்திருக்கிறார்கள்.
படத்தின் அறிமுக இயக்குநரான லட்சுமணன் பிரபல இயக்குநர் அகத்தியனின் சீடர். அதற்கு முன்பே பல திரைப்படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் வாய்ந்தவர். அவ்வளவு இருந்தும் ஏன் திரைக்கதையில் சொதப்பினார் என்று தெரியவில்லை..
பொள்ளாச்சி சந்தையில் வாய்ச்சவுடால் அடித்தே பொழைப்பை ஓட்டும் கேர் ஆஃப் பிளாட்பார்ம்கள் சத்யராஜூம், கவுண்டமணியும்.. அழுகிப் போன வாழைப்பழத்தையும், வீணாகிப் போன தக்காளியையும் பேசியே ஏமாந்தவர்கள் தலையில் கட்டிவிட்டு கிடைக்கும் கமிஷனில் ஜாலிலோ ஜிம்கானோ பாடுபவர்கள்..
ஊத்துக்கோட்டை ஜமீன்தார் வினுசக்கரவர்த்திக்கு மனைவி செண்பகவள்ளி மீது பிரியம். ஆனால் செண்பகவள்ளி அவரிடம் பிரியாவிடை பெற்று மேலுலகம் சென்று வெகுநாளாகிவிட்டது. மனுஷனுக்குத் தனக்குக் கொள்ளி போட வாரிசு இல்லையே என்று இப்போதும் கவலை. தினம்தோறும் எந்தத் திசையில் போனால் இவருக்கு நல்லது என்று சோழி உருட்டி ஜோஸியம் சொல்லி காசை சுரண்டும் திருட்டு ஜோஸியக்காரர் டி.பி.கஜேந்திரன். வினுசக்கரவத்தியின் மச்சான் அலெக்ஸ் சொத்தில் தனக்குப் பங்கு தரும்படி அனத்திக் கொண்டிருக்கிறான்.
இந்த நேரத்தில் இவருக்கு ஒரு வாரிசைக் கொண்டு வந்து அவனை வைத்தே மொத்த ஜமீனையும் கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா போடுகிறார் போலி ஜோஸியர் டி.பி.கஜேந்திரன். தோதான ஆட்களைத் தேடும்போது சத்யராஜூம், கவுண்டமணியும் சிக்க.. அவர்களை சோழி உருட்டியே ஜமீனுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறார் ஜோஸியர். முன்பேயே ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்ஷிப்பை அவர்களிடம் போட்டுக் கொள்கிறார். எது கிடைத்தாலும் அதில் 90 சதவிகிதம் ஜோஸியருக்கு. மிச்சம்தான் ஜமீன் வாரிசுகளுக்கு.. ஓகே என்கிறார் சத்யராஜ்..
இடையில் சத்யராஜூக்கும் பொள்ளாச்சி சந்தையில் பிளேடு பக்கிரியாக வலம் வரும் ஹீரோயின் சூஸனுக்கும் இடையில் முட்டல், மோதல்.. இது வளர்ந்து காதலாகி பரிணமித்து நிற்கும்போது ஜமீனுக்கு டிரான்ஸ்பர் வாங்கி வந்து விடுகிறார் சத்யராஜ்.
வாரிசாகத் தத்தெடுத்த சத்யராஜூக்கு ஒரு கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு அதன் பின்பு தான் மண்டையைப் போடப் போவதாக வினு சக்கரவர்த்தி சொல்ல.. கல்யாணத்துக்கு எவளோ ஒருத்தியைத் தேடுவதற்கு நமக்குத் தோதான ஆளைப் பிடிக்கலாமே என்று சொல்லி சூஸனை அழைத்து வருகிறார்கள்.
வந்த சூஸனோ சத்யராஜ் அண்ட் கோ-வை ஓரம்கட்டிவிட்டு மொத்தத்தையும் தானே லவட்டிக் கொள்ளலாம் என்று பிளான் போடுகிறாள். இதைப் பார்த்த ஜோஸியர் இது சரிப்பட்டு வராது.. பெரிசை தீர்த்திரலாம் என்று பிளான் போட்டு மும்பை தாதா மணிவண்ணனை அழைத்து வருகிறார்கள்.
மணிவண்ணனோ கொலை செய்ய முயல்கிறேன் என்று மொக்கை காமெடி செய்து நாட்களைக் கடத்த.. இடையில் அலெக்ஸ், மாமா வினு சக்கரவர்த்தியை கோர்ட்டுக்கு இழுக்க.. இடையில் சத்யராஜூக்கும், சூஸனுக்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிடுகிறார்கள்.
இதற்கிடையில் கல்யாண நாளுக்கு முன்பாகவே மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிடலாம் என்று சத்யராஜூம், கவுண்டமணியும் ஒரு பக்கம் பிளான் போட.. இவர்களை வினு சக்கரவர்த்தியிடம் மாட்டிவிட்டு தான் தப்பிக்கலாம் என்று ஜோஸியர் நினைக்க.. தான் மட்டும் தனியே முடிந்ததை லவட்டிக் கொண்டு போகலாம் என்று சூஸன் முயல.. வினு சக்கரவர்த்தியையும், சத்யராஜையும் போட்டுத் தள்ளிவிட்டு ஜமீனை அடையலாம் என்று அலெக்ஸ் பிளான் செய்ய..
உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..
கலாட்டாவாக இருக்க வேண்டிய திரைக்கதை சிற்சில இடங்களில் 20 வருடத்திற்கு முந்தைய காட்சிகளை கொண்டிருப்பதால் ரசிக்க முடியாமல் போய்விட்டது..
சத்யராஜ்-கவுண்டமணி காம்பினேஷன் லொள்ளும், ஜொள்ளுமாக தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நேரத்தில் இந்தப் படம் வந்திருந்தால் கொஞ்சமாவது படத்திற்கும், தயாரிப்பாளருக்கும் பலன் கிடைத்திருக்கும்.. டூ லேட்..
ஆனாலும் அதே நக்கல், நையாண்டி, லொள்ளு, ஜொள்ளு இருவரிடத்திலும் அசரவில்லை.. ஷாரூக்கான் ஸ்டைலில் கவுண்டமணியையும், சல்மான்கான் பாடி பில்டப்பில் சத்யராஜையும் ஒருவர் மாற்றி ஒருவர் புகழ்ந்து பேசி வாரி விடுவது செம காமெடி..
படத்தில் சின்னச் சின்னத் துணுக்குத் தோரணங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார் கவுண்டர்.. பூம்பூம் மாட்டுக்காரனிடம் மாட்டை அபேஸ் செய்து கெத்தாக மாட்டுச் சந்தையில் விலைக்கு விற்கும் சூஸனிடமே அதனை ஆட்டையை போட்டுவிட்டு வரும் சாமர்த்தியத்தில் சிரிக்க வைக்கிறார்கள் இருவரும்.
டாஸ்மாக் பாரில் சரக்கடித்துவிட்டு புலம்புகின்ற காட்சியில் “பெரிய சைஸா இருந்தாலும் பீர்ல போதை கம்மி.. ஆனா சின்ன சைஸா இருந்தாலும் குவார்ட்டர்ல கிக் அதிகம்பா..” என்று சத்யராஜ் பீலாவிட.. “இதுதாம்பா எனக்கு உன்கிட்ட ரொம்பப் புடிச்சது.. தத்துவம் சொல்றேன்னு சாக்ரடீஸ், ஷேக்ஸ்பியர்ன்னு பீலா உடாம.. நம்ம ரேஞ்சுக்கு குவார்ட்டரு, புல்லு, ஆம்லெட், ஆஃபாயிலுன்னு உதாரணம் சொல்ற பாரு..” என்று கவுண்டரு எடுத்துவிடும் கவுண்ட்டர் அட்டாக்கில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனாலும் காமெடி என்கிற பெயரில் டி.பி.கஜேந்திரின் குள்ள உருவத்தை இமிடேட் செய்து பல இடங்களில் கவுண்டரு அடித்திருக்கும் விட்டுக்கு எனது கண்டனங்கள்.. ஆனாலும் தியேட்டரில் சிரித்துதான் தொலைத்தேன்.. கவுண்டரு வாயைத் தொறந்தா நமக்கு சிரிப்பு தானா வருது.. நாம என்ன செய்யறது..?
நான் பார்த்து இந்த படத்துல மட்டும்தானப்பா ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் டூயட்டே இல்லை. ஆனா குத்துப் பாட்டு ஒண்ணு இல்ல.. நாலு இருக்கு.. டூயட் எடுத்திருந்தாங்களாம்.. ஆனா கடைசில கத்திரி போடும்போது அதுல போய் கைய வைச்சிருக்காங்கப்பா.. கடைசிவரைக்கும் சூஸனோட லேசுபாசான கவர்ச்சியை பார்க்க முடியலைன்ற வருத்தம் இருக்கத்தான் செய்யுது..
ஒளிப்பதிவு அப்படீன்னு ஒண்ணு சொல்வாங்களே.. அது.. அப்புறம் இசைன்னு ஒண்ணு சொல்வாங்களே.. அது.. இது மாதிரி எந்த விஷயமும் இந்த படத்துக்கு அவ்ளோ முக்கியமா தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டாங்க. இசை தேவாதான். ஆனால் தெரியவில்லை. நடன இயக்குநர்கள் மட்டும் நல்லா வொர்க் செஞ்சிருக்காங்கப்பா..
அபிநய, லக்ஷா, ரிஷா, கும்தாஜ் என்று கோடம்பாக்கத்து குத்தாட்ட நாயகிகளை கொத்து புரோட்டா போடுற மாதிரி சத்யராஜ் இடுப்பு ஒடிய ஆடியிருக்காரு.. இதுவே போதும் படத்தை தியேட்டரைவிட்டு ஓட வைக்கிறதுக்கு.. என்னதான் நகைச்சுவை திரைப்படம் என்றாலும் ஒரு குத்துப்பாட்டு ஓகே.. நாலுன்னா எப்படி?
ஹீரோயின் சூஸன் வாட்டசாட்டமான முகம்.. நல்லத்தான் நடிச்சிருக்காக.. ஆனா ஏன் அதுக்கப்புறம் பீல்டு அவுட்டானகன்னு தெரியலை.. இவுங்க கேரக்டரை அனலைஸ் செய்யாம அப்படியே வசனத்துலேயே விட்டுப் பிடிச்சதுனால இவுக நல்லவங்களா? கெட்டவங்களான்னே தெரியாம போயிருச்சு..
மணிவண்ணன் கோமாளி கேரக்டர்.. சொதப்பல்.. என்னதான் நகைச்சுவை என்றாலும் இப்படியா கேரக்டரைசேஷன் செய்வது.. கொடுமை.. கொலை செய்வது எப்படி? கொலை செய்துவிட்டு தப்பிப்பது எப்படி என்று ரெண்டு புத்தகத்தைப் படிச்சிட்டு கொலை செய்றாராம்.. இவருக்கு ஐம்பதாயிரம் ரூபா கொடுத்ததை டி.பி.கஜேந்திரன் அம்பது தடவையாச்சும் சொல்லிச் சொல்லிப் புலம்புறாரு..
“புக்கை படிச்சிட்டு சமையல் செஞ்சாலே வெளங்காது.. இதுல கொலை வேறய்யா..?” என்று மணிவண்ணனை கலாய்க்கும் கவுண்டரின் அட்டாக்கும், சூஸனின் அம்மன் போஸில் பயந்துபோய் மணிவண்ணன் மயக்கமடையும் காட்சி மட்டுமே சிரிப்பைத் தந்தது.
எங்க ஊரு பாட்டுக்காரனுக்கு அப்புறமா வினுசக்கரவர்த்திக்கு ஏகப்பட்ட குளோஸப் காட்சிகள் இதில்தான்.. மனுஷன் படம் முழுவதும் சோகமா வர்றாரு.. ஆனால் நமக்குத்தான் சோகத்தை ஏத்த மாட்டேங்குது..
இந்தப் படத்தின் கதைக்கருவை வைத்து மலையாளத்தில் ஜெயராம் நடித்த ஒரு திரைப்படம் ராஜசேனன் இயக்கத்தில் வெளி வந்திருந்தது. அசத்தல் படம்.. சூர்யா டிவியில் தொடர்ச்சியாக பல முறை ஒளிபரப்பிவிட்டார்கள். சம்யுக்தவர்மா ஜோடியாக நடித்திருந்தார். நல்ல திரைக்கதை.. விறுவிறுப்பாக இருக்கும். தமிழில் ஜமீன் குடும்பம்.. மலையாளத்தில் தம்புரான் குடும்பம்.. அவ்வளவுதான்.. இனி இதனை தெலுங்கிலும், கன்னடத்திலும் வைத்து ஏதாவது செய்யலாம்.. நிச்சயம் ஜெயிக்க முடியும்..
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணன் கவுண்டமணியை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது இந்தப் படத்தைப் பற்றி ரொம்பவே சிலாகித்துச் சொன்னார். “பொள்ளாச்சி மாப்ளைல நல்லா பண்ணியிருக்கேன் தம்பி.. என்னமோ தெரியலைப்பா.. என் காமெடிக்காகவே படம் இப்படி மாட்டிருச்சு போலிருக்கு” என்று சொல்லி சிரிக்க வைத்திருந்தார். அது இப்போதும் நினைவில் இருந்ததால்தான் படத்தைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்..
தியேட்டர்லயும், டிவிலேயும் பார்க்குற வாய்ப்பு கிடைச்சா பாருங்க..
தியேட்டர் டிப்ஸ் :
தி.நகர். கிருஷ்ணவேணி தியேட்டரில் காலை காட்சியாக ஓடுகிறது.. பாடாவதி தியேட்டர். ஆனால் டிக்கெட் விலை நம்ம பட்ஜெட்டுக்கு ஏற்றதுதான் 20, 30. தியேட்டரின் அனைத்து ஓரங்களிலும் காதலர்கள் ராஜ்ஜியம்.. படம் விட்டதும் எழுந்து பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை.. அப்புறம் எதுக்குய்யா தியேட்டருக்கு வந்து என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாங்க..?
புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com
|
Tweet |
28 comments:
அண்ணாச்சி நீங்க ரொம்ப நல்லவரு அண்ணாச்சி :)
/////இப்படியொரு படம் வந்ததே தமிழகத்துக்கு ஜனங்களுக்குத் தெரியவில்லை. அந்த லட்சணத்தில்தான் விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்..
/////////////
உண்மைதான் நண்பரே . இப்பொழுது நீங்கள் எழுதி இருக்கும் திரைவிமர்சனம்தான் எனக்கு அறியத் தந்தது . பகிர்வுக்கு நன்றி . வாய்புகள் அமைந்தால் பார்த்துவிடுகிறேன்
இதே பாணி கதை தானே மேட்டுக்குடி, பிரபுதேவா மீனா மகேஸ்வரி நடித்த ஒரு படமும்
பகிர்ந்தமைக்கு நன்றிகள். இந்த விமர்சனப் பதிவு சரியான அளவில் எழுதி இருக்கிறீர்கள், உங்கள் எடிட்டிங் சூப்பர்.
அண்ணே உங்களுக்கு சிலை வைக்கணும்
சத்யராஜ், கவுண்டர் காமெடிக்காக பார்க்கலாம்...
வழக்கம்போல நல்ல விமர்சனம்....
கிருஷ்ணவேணி தியேட்டர்ல படம் போடறாங்களா..??
உனக்கு மட்டும் தனி பிரியூவா?
தெளிவா தெரிஞ்சிதா....??
படத்தை பத்தி தான் கேக்குறேன்...
ரொம்ப பழசு போல....
[[[இராமசாமி கண்ணண் said...
அண்ணாச்சி நீங்க ரொம்ப நல்லவரு அண்ணாச்சி :)]]]
அப்படியா..? சந்தோஷம்..!
[[[!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
/இப்படியொரு படம் வந்ததே தமிழகத்துக்கு ஜனங்களுக்குத் தெரியவில்லை. அந்த லட்சணத்தில்தான் விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்../
உண்மைதான் நண்பரே . இப்பொழுது நீங்கள் எழுதி இருக்கும் திரை விமர்சனம்தான் எனக்கு அறியத் தந்தது . பகிர்வுக்கு நன்றி . வாய்புகள் அமைந்தால் பார்த்துவிடுகிறேன்]]]
பாருங்கள் சங்கர்..!
[[[ராம்ஜி_யாஹூ said...
இதே பாணி கதைதானே மேட்டுக்குடி, பிரபுதேவா மீனா மகேஸ்வரி நடித்த ஒரு படமும்
பகிர்ந்தமைக்கு நன்றிகள். இந்த விமர்சனப் பதிவு சரியான அளவில் எழுதி இருக்கிறீர்கள், உங்கள் எடிட்டிங் சூப்பர்.]]]
மேட்டுக்குடியில் கார்த்திக், கவுண்டமணியாச்சே..!
[[[நசரேயன் said...
அண்ணே உங்களுக்கு சிலை வைக்கணும்.]]]
வைங்க.. வைங்க.. நானா வேண்டாம்கிறேன்..!
அண்ணா சாலைல ஸ்பென்ஸர் பக்கத்துல வைச்சீங்கன்னா நல்லாயிருக்கும் நசரேயன்..!
[[[கே.ஆர்.பி.செந்தில் said...
சத்யராஜ், கவுண்டர் காமெடிக்காக பார்க்கலாம்]]]
ஓகே.. வழி மொழிகிறேன்..!
[[[வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
வழக்கம்போல நல்ல விமர்சனம்.]]]
நன்றி வழிப்போக்கன்ஜி..!
[[[butterfly Surya said...
கிருஷ்ணவேணி தியேட்டர்ல படம் போடறாங்களா..??]]]
அண்ணே.. படம் போட்டதுனாலதான்.. நான் பார்த்ததுனாலதான.. இந்த போஸ்ட்டே போட்டிருக்கேன்..!
ஓவர் நக்கலு..
[[[ஜாக்கி சேகர் said...
உனக்கு மட்டும் தனி பிரியூவா?]]]
கிருஷ்ணவேணி தியேட்டர்ன்னு போட்டிருக்கேன்.. அப்புறம் இன்னா இப்படியொரு கேள்வி..?
[[[ஜெட்லி... said...
தெளிவா தெரிஞ்சிதா....??
படத்தை பத்திதான் கேக்குறேன்...
ரொம்ப பழசு போல.]]]
பழசுதான்..!
ஏதோ கண்ணுல தெரிஞ்சவரைக்கும் பார்த்தேன்..!
குத்துப் பாட்டு டான்ஸெல்லாம் பளிச்சுன்னு தெரிஞ்சது ஜெட்லி..!
அண்ணே எப்படிண்ணே அட்டுப்படமா தேர்ந்தெடுத்து பார்க்குறீங்க....
அப்போ இந்த தியேட்டர் ஆயிரம் விளக்கு ப்ளூ டைமண்ட் மாதிரி ஆயிடிச்சுன்னு சொல்லுங்கோ... வந்தவங்க எல்லாம் உங்கள ஒரு மாதிரி பார்திருப்பான்களே... அப்புறம் அவர்கள் வேலைய அவர்கள் தொடர்ந்திருப்பார்கள்..... உங்கள நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு.... ஐயோ ஐயோ....
//ஹீரோயின் சூஸன் வாட்டசாட்டமான முகம்..//
இந்த காலத்துல ஹீரோயின் முகத்தை பத்தி எழுதறீங்களேண்ணே....நீங்க ரொம்ப நல்லவரு...
[[[பித்தன் said...
அண்ணே எப்படிண்ணே அட்டுப் படமா தேர்ந்தெடுத்து பார்க்குறீங்க.]]]
இது அட்டுப் படமா? கவுண்டமணி, சத்யராஜூக்காக போனேன் தம்பி..!
[[[பித்தன் said...
அப்போ இந்த தியேட்டர் ஆயிரம் விளக்கு ப்ளூ டைமண்ட் மாதிரி ஆயிடிச்சுன்னு சொல்லுங்கோ. வந்தவங்க எல்லாம் உங்கள ஒரு மாதிரி பார்திருப்பான்களே. அப்புறம் அவர்கள் வேலைய அவர்கள் தொடர்ந்திருப்பார்கள். உங்கள நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு. ஐயோ ஐயோ.]]]
உண்மைதான் பித்தன்ஜி..!
எல்லாரும் ஏறக்குறைய.. எல்லா காதலர்களும் என்னை ஒரு மாதிரியாய்தான் பார்த்தார்கள்..!
[[[kavi said...
//ஹீரோயின் சூஸன் வாட்டசாட்டமான முகம்..//
ந்த காலத்துல ஹீரோயின் முகத்தை பத்தி எழுதறீங்களேண்ணே....நீங்க ரொம்ப நல்லவரு.]]]
ஹி.. ஹி.. சர்டிபிகேட்டுக்கு ரொம்ப நன்றி..!
திரைக்கு பின் இருக்கும் விவகாரங்களை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது ஃ. நன்றி
[[[பார்வையாளன் said...
திரைக்கு பின் இருக்கும் விவகாரங்களை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது ஃ. நன்றி]]]
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பார்வையாளன் ஸார்..!
See who owns yahoo.com or any other website:
http://whois.domaintasks.com/yahoo.com
See who owns lyricsdomain.com or any other website.
Post a Comment