தமிழ்மணம் போட்டி - பதிவர்களுக்கு சில யோசனைகள்..!

04-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவர்கள் மேல் அளவற்ற அன்பும், பாசமும், நேசமும் வைத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகம், சென்ற ஆண்டை போலவே இந்தாண்டும் பதிவர்களின் சிறந்த படைப்புகளுக்கான போட்டியை அறிவித்திருக்கிறது.


சென்ற ஆண்டுதான் இது மாதிரியான போட்டியை தமிழ்மணம் முதல் முறையாக நடத்தியது. அதில் அடியேனும் இரண்டு பிரிவுகளில் வென்று சில புத்தகங்களை பரிசாகப் பெற்றிருந்தேன்.

சென்ற ஆண்டைப் போலவே இந்தாண்டு நடக்கும்போட்டி அவ்வளவு சுலபமாக இருந்துவிடாது என்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் இந்தாண்டு 'சொல்வீச்சு', 'வாள்வீச்சு', 'கைவீச்சு', 'கத்திவீச்சு' என்றெல்லாம் பல்வேறு வகைகளில் பல புத்தம் புதிய பதிவர்கள் பதிவுலகத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் உள்ளே நுழைந்த வேகத்திலேயே தங்களது திறமையை அள்ளி வீசியிருக்கிறார்கள். 16 பக்கங்களில் நான் எழுதியிருந்த 'ஒப்பாரி'யை, வெறும் பத்தே வரிகளில் 'காவிய'மாக்கிய பதிவர்களைக் கண்டு பயந்துதான் போயிருக்கிறேன்.

அரசியல், கலை, சினிமா, நுண்கலை, வியாபாரம், பொது அறிவு என்று ஒன்று பாக்கியில்லாமல் அத்தனையிலும் கை தேர்ந்த வல்லுநர் பெருமக்கள் பதிவர்களாக உட்புகுந்து கிண்டி விளையாடியிருப்பதால் இந்த முறை தமிழ்மணம் போட்டியில் பங்கேற்கும் பதிவர்களின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது. அதேபோல் பதிவுகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்ற ஆண்டை போலவேதான் இந்த முறையும் வாக்களிக்கும் முறை இருக்கும் என்பதால் பதிவர்களிடையே குழு ஒற்றுமை மீண்டும் வலுப்பெறும் என்கிற ஒரு சிறிய சங்கடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இது தவிர்க்க முடியாதது.

தன்னுடைய பதிவுகளைத் தவிர மற்ற பதிவர்கள் எழுதியதில் பிடித்தமானவற்றுக்கு பதிவர்கள் வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் ஆனதால் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகும் என்றே நினைக்கிறேன்.

ரகசியமான தேர்தல் என்பதால் தமிழ்மணம் தப்பித்திருக்கிறது. இந்தாண்டும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றியே தீர வேண்டும். இல்லாவிடில் "ஓட்டுப் போடச் சொல்லி போண்டாவும், காபியும் வாங்கிக் கொடுத்தனே.. போடாம ஏமாத்திட்டியேடா பாவி..!" என்று அழுவாச்சி காவியங்கள் எல்லாம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுவிடும். ஓட்டெடுப்பு ரகசியமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

தோழர் வினவு அவர்களும் தமிழ்மணத்தின் பரிசுப் போட்டியை வரவேற்று பதிவு எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில பரிந்துரைகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டு 12 பிரிவுகளின் கீழ் பரிசுப் போட்டியை நடத்தினார்கள்.

1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், திரைப்படம்)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/திறனாய்வுகள்
4. அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள், தலித்திய சிக்கல்கள்
9. ஈழ மக்களின் சமூக-பொருளாதாரச் சிக்கல்கள்
10. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
11. நகைச்சுவை, கார்ட்டூன்
12. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்.


இந்த 12 பிரிவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

கதை, கவிதை, திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம், அரசியல், சமூகம், தமிழ் கணினி தொழில் நுட்பம், தமிழ் மொழி-கலாச்சாரம், வரலாறு, பகுத்தறிவு, ஆன்மீகம் என்று பரிசுக்குரிய போட்டி பிரிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து எண்ணிக்கையை கூட்டினால் பரிசு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை கூடும்..

சென்ற ஆண்டு "அதிகபட்சம் ஒரு பதிவர் மூன்று பிரிவுகளில் மட்டுமே போட்டியிட முடியும்" என்று 'தடா' சட்டத்தை போட்டிருந்தார்கள். தோழர் வினவு "அதனை ஒரு பிரிவாக குறைக்க முடியுமா?" என்று 'தடா'வில் ஒரு 'பொடா'வை சேர்த்திருக்கிறார்.

ஆனால் எனக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இங்கே எழுத்துக்குத்தான் பரிசே ஒழிய.. பதிவர்களுக்காக அல்ல.. எனவே ஒருவரே அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடலாம் என்று அறிவிக்க வேண்டும். அதுதான் நேர்மையாக இருக்கும். அவர் எழுத்து, அனைத்து பிரிவுகளிலும் சிறந்தது என்றால் எத்தனை பரிசுகளை வேண்டுமானாலும் வெல்லட்டுமே..? பரிசு அவருடைய எழுத்திற்குத்தான். அவருடைய சிறந்த படைப்பிற்குத்தான். அவருடைய முகத்திற்காக அல்ல..

அத்தனை துறைகளிலும் அவர் வல்லவராகத் திகழ்கிறார் என்றால் அது பரிசை வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் பெருமைதானே.. ஒருவேளை பரிசை பெறுபவரைவிட இன்னொருவர் நன்கு எழுதியிருந்தாலும், விதிமுறை காரணமாக போட்டியிட முடியவில்லையெனில் அது நேர்மையான போட்டியாக இருக்க முடியாது.. அந்த வகையில் தமிழ்மணம் இந்த விதிமுறையை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

சென்ற ஆண்டு வெற்றி பெற்ற படைப்புகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

சில சமயங்களில் நமது தமிழ்மணம் நிர்வாகம் நமது மத்திய, மாநில அரசுகளைவிட மிக மோசமாக கும்பகர்ணத் தூக்கம் தூங்கிவிடும். கேள்விகேட்டால் ரெடிமேடாக பதில் ஒன்றை வைத்திருப்பார்கள். "நாங்களும் மனிதர்கள்தான்.. ஆள் ஆளுக்கு குடும்பம், குழந்தை, குட்டி எல்லாம் இருக்கு. எங்க பொழைப்பையும் நாங்க பார்க்க வேண்டாமா?" என்பார்கள். ஆனால் அவர்கள் நிஜமாகவே குடும்பஸ்தர்கள்தானா என்பது மில்லியன் டாலர் கேள்வி..! எனக்குத் தெரிஞ்சு ஒருத்தரைத் தவிர மிச்சப் பேரெல்லாம் 'பேச்சுலர்'ன்னுதான் அங்க சொல்லிட்டுத் திரியறதா யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

ஆனால் இதையே அரசியல்வியாதிகள் சொல்லிவிட்டால் போதும், தமிழ்மணத்தில் இருந்தே ரெண்டு பேர் குட்டிக்கரணம் போட்டு எழுந்து வந்து பதிவு போட்டுத் தாக்குவார்கள். ம்.. என்ன செய்யறது? பாவம் அரசியல்வியாதிகள்.. அவர்களுக்கு சப்போர்ட் செய்ய பதிவர்களே இல்லையே.. இந்தாண்டாவது அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு வெற்றி பெற்ற கட்டுரைகளைத் தனித் தொகுப்பாக, புத்தகமாக தமிழ்மணம் வெளியிட்டால் அது பரிசை வென்றவர்களுக்கும், தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பெருமையாக இருக்கும்.

மிக முக்கியமாக ஒன்று.. போட்டி அறிவிப்பில் சொன்னதுபோல முடிவுகளும் அதே நாளில் வெளியிடப்பட வேண்டும் என்பதில் தமிழ்மணம் நிர்வாகம் உறுதியாக இருக்க வேண்டும்.

சென்ற ஆண்டு டிசம்பரில் போட்டிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொங்கல் தினத்தின்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இடையில் திடீரென்று எழுந்த ஈழப் போரின் பின்னணியினாலும், தம்பி முத்துக்குமாரின் அகால மரணத்தினால் எழுந்த கொந்தளிப்புகளினாலும் தமிழ்மணத்தின் நிர்வாகிகளும் கொந்தளித்துப் போய் பதிவர்களோடு பதிவராக பதிவகளாகப் போட்டுத் தாளித்ததால், பரிசுப் போட்டி முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டு மிகத் தாமதமாக வெளியிடப்பட்டது.


ஆனாலும் இந்த நேரத்தில் ஒரு உண்மையை வெளிப்படுத்தியே தீர வேண்டும். சென்ற ஆண்டு போட்டி முடிவுகளை எதிர்பார்த்தோ, லேட்டாயிருச்சே என்று கவலைப்பட்டுக் கொண்டோ பதிவர்கள் இருக்கவில்லை. அப்போது அனைவரின் கவனமும் ஈழத்தின்பால் திரும்பியிருந்தது ஒரு ஆச்சரியம்தான்..

இந்தாண்டு சொன்னதுபோலவே மிகச் சரியாக குறித்த தேதியில் போட்டிகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டால் மிக்க மகிழ்ச்சிதான்.

இறுதியான கோரிக்கையாக தமிழ்மணம் தரவிருக்கும் பரிசுத் தொகையை கொஞ்சம் அதிகமாக்கிக் கொடுத்தால் என்னைப் போன்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.. 500 ரூபாய் என்பது மிகக் குறைவு.. ஒரு திரட்டி 500 ரூபாய் கொடுக்கலாமா என்று வெளியில் நாலு பேர் பேசுகின்ற 'பேச்சை' என்னைப் போன்ற தமிழ்மண ரசிகர்கள் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகவே முதல் பரிசாக 5000 ரூபாய் என்று அறிவித்தீர்களேயானால் தமிழ்மணத்திற்கு பெருமை ஓஹோவென்று கூடும். என்னைப் போன்றவர்களும் தைரியமாக தமிழ்மணத்திற்கு கூடுதல் ரசிகர்களை சேர்க்க முயல்வோம்.. வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை இனாமாக கொடுக்குற திரட்டி வேறு எங்கேயாவது இருக்கிறதா என்று நாங்களும் காலரை(எங்க) தூக்கிவிட்டுப் பேசவும் வாய்ப்பாக இருக்கும்..

போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் இப்பொழுதே சக பதிவர்களை காக்கா பிடித்து வைத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி பார்ட்டி வையுங்கள்.. வருகின்ற பதிவர்களைக் கவனித்து அனுப்புங்கள்.. 'தீர்த்தவாரி'யில் திளைப்பவர்கள் திளைக்கலாம். 'வாங்கி'யும் 'ஊத்தலாம்'.. "நீ எனக்கு போடு.. நான் உனக்கு போடுறேன்" என்று ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்டை போட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு சிலர் குவார்ட்டருக்கும், ஆஃபுக்கும், புல்லுக்கும் கணக்குப் போட்டுக் கேட்பார்கள். அவர்களிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருங்கள். ஏனெனில், "அன்னிக்கு மப்புல ஏதோ சொல்லிட்டேன். அதையே இப்பவும் நினைச்சிட்டிருந்தா எப்படி?" என்று சக 'தோளர்' நினைத்து ஓட்டை மாற்றிக் குத்திவிட்டால் அதற்கு தமிழ்மணம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

கள்ள ஓட்டு போட்டு பரிசைத் தட்டிவிடலாம் என்று கனவு காண வேண்டாம். தமிழ்மணம் அதுக்குத்தான் என்னமோ ஒரு டிரிக் செய்து வைத்திருக்கிறார்கள். அதை அவர்கள் வெளியில் சொல்லாமலும் இருக்கிறார்கள். ஆகவே நல்ல ஓட்டுக்களை மட்டுமே போட்டு சக பதிவர்களை ஜெயிக்க வையுங்கள்.

ஆனால் பரிசு கிடைக்காமல் போகும்பட்சத்தில் "இவை அத்தனையும் கள்ள ஓட்டினால் கிடைத்த வெற்றி" என்று நமது எதிர்க்கட்சிகளைப்போல் பதிவுகளாகப் போட்டுத் தாக்கலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. நல்ல காலத்திலேயே தமிழ்மணம் நிர்வாகிகள் அவங்களைத் திட்டி எழுதற பதிவை படிக்க மாட்டாங்க. இதையா படிக்கப் போறாங்க..? தாராளமா நாம எழுதலாம்.. எதையும் தாங்கும் இதயம் படைத்த நல்லவர்கள் அவர்கள்..!

ஆனாலும் ஒண்ணு சொல்றேன் மக்களே.. பிற்பாடு என்றைக்காவது ஒருநாள் தமிழ்மண நிர்வாகிகளை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால், அப்போது இதுவரையில் சேர்த்து வைத்திருக்கும் கோபத்தையெல்லாம் காட்டி, கள்ள ஓட்டுக்களாக குத்திக் அத்தனை பேரையும் கவுத்துவிடலாம். அதுவரையில் பொறுத்தருளுக தோழர்களே..

போட்டியை நடத்த முன் வந்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..

போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற எனதருமை சக பதிவர்களை வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன்..!!!

58 comments:

எறும்பு said...

//போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற எனதருமை சக பதிவர்களை வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன்//


vaalka vaalka

எறும்பு said...

//சென்ற ஆண்டு 12 பிரிவுகளின் கீழ் பரிசுப் போட்டியை நடத்தினார்கள்///

இதோட பதிமூனாவத மிகககக நீளமான பதிவு இடுபவர்கள் பிரிவையும் சேர்க்கணும்னு எங்கள் அண்ணன் உண்மை தமிழன் சார்பா கேட்டுக்கிறோம்

Subbiah Veerappan said...

////கதை, கவிதை, திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம், அரசியல், சமூகம், தமிழ் கணினி தொழில் நுட்பம், தமிழ் மொழி-கலாச்சாரம், வரலாறு, பகுத்தறிவு, ஆன்மீகம் என்று பரிசுக்குரிய போட்டி பிரிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து எண்ணிக்கையை கூட்டினால் பரிசு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை கூடும்..////

வழி மொழிகிறேன்!

சென்ஷி said...

சரி!

Rajagopal.S.M said...

அண்ணே ஒரு சந்தேகம், இந்த 12பிரிவுக்கு கீழே புதுசா பதிவிடனுமா இல்லே ஏற்கனவே பதிவிட்டத்தை போட்டுத் தாளிக்கலமா???

உண்மைத்தமிழன் said...

[[[எறும்பு said...
//போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற எனதருமை சக பதிவர்களை வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன்//

vaalka vaalka]]]

நீங்களும் கலந்துக்குங்க எறும்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[எறும்பு said...

//சென்ற ஆண்டு 12 பிரிவுகளின் கீழ் பரிசுப் போட்டியை நடத்தினார்கள்///

இதோட பதிமூனாவத மிகககக நீளமான பதிவு இடுபவர்கள் பிரிவையும் சேர்க்கணும்னு எங்கள் அண்ணன் உண்மை தமிழன் சார்பா கேட்டுக்கிறோம்]]]

பரவாயில்லையே.. எனக்கே தோன்றாத ஒரு ஐடியா உங்களுக்குத் தோணிருக்கே..!

நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[SP.VR. SUBBIAH said...
//கதை, கவிதை, திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம், அரசியல், சமூகம், தமிழ் கணினி தொழில் நுட்பம், தமிழ் மொழி-கலாச்சாரம், வரலாறு, பகுத்தறிவு, ஆன்மீகம் என்று பரிசுக்குரிய போட்டி பிரிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து எண்ணிக்கையை கூட்டினால் பரிசு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை கூடும்..//

வழி மொழிகிறேன்!]]]

நன்றிங்கோ ஐயா..!

உண்மைத்தமிழன் said...

[[[சென்ஷி said...
சரி!]]]

எவ்ளோ பெரிய கமெண்ட்டு..!!!

தம்பிக்கு ஆணி புடுங்குற வேலை ஜாஸ்தி போலிருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜகோபால் said...
அண்ணே ஒரு சந்தேகம், இந்த 12 பிரிவுக்கு கீழே புதுசா பதிவிடனுமா இல்லே ஏற்கனவே பதிவிட்டத்தை போட்டுத் தாளிக்கலமா???]]]

இந்த வருஷத்துல எழுதியவைகள்தான் போட்டியில் பங்கு பெற முடியும்..!

தீப்பெட்டி said...

உங்களுக்கு ஓட்டு போட்டா எனக்கு என்ன கிடைக்கும்..
எதுவும் வாங்காம நாங்க ஓட்டு போட மாட்டோம் பாஸ்..
பேரம் பேசிக்கலாமா..

Unknown said...

pls explain the modus operandi of this competition.that is where the
posts will be available.who wl vote,how wl vote etc.when the posts
will be visible.

thanks
Sri

ஜோதிஜி said...

வினவு கண்களுக்கு வலியை உருவாக்கியது. அத்தனை நெருக்கமான வரிகள். உங்கள் வரிகள் சிறப்பாக புரியவைத்தது. வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

போட்டி விவரங்கள் எங்கு பார்க்கலாம்? சுட்டி தாருங்கள். நீங்கள் கலந்துக்கறது நிச்சயமாயிடுச்சி. வாழ்த்துக்கள். குறும்படப் போட்டி என்னாச்சு?

ராமலக்ஷ்மி said...

//தனித்தனியாகப் பிரித்து எண்ணிக்கையை கூட்டினால் பரிசு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை கூடும்..//

வழிமொழிகிறேன்:)!

கூடவே இதையும்...

//ஒருவரே அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடலாம் என்று அறிவிக்க வேண்டும். //

பரிசு இருக்கட்டும். முதலில், எல்லாவற்றிலும் எல்லோரும் கலந்து கொள்ளலாம் எனும் போது பல நல்ல பதிவுகள் போட்டியில் கலந்து கொள்வதற்காக வெளியில் வரும். அனைவர் பார்வைக்கும் கிடைக்கும்.

உண்மைத்தமிழன் said...

[[[தீப்பெட்டி said...
உங்களுக்கு ஓட்டு போட்டா எனக்கு என்ன கிடைக்கும்.. எதுவும் வாங்காம நாங்க ஓட்டு போட மாட்டோம் பாஸ்.. பேரம் பேசிக்கலாமா..]]]

ஓ.. பேசலாமே..?

எனக்கு ஓட்டுப் போட்டா இதைவிட அதிகமான பக்கத்துல, அதிகமான பதிவுகளை எழுதித் தள்ளுவேன்.. படிச்சுத் தொலைய வேண்டியது உங்க கடமை..

எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[krishna said...
pls explain the modus operandi of this competition. that is where the
posts will be available. who wl vote, how wl vote etc.when the posts
will be visible.
thanks
Sri]]]

இன்னமும் முறைப்படியான முழு விபரங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியாகவில்லை.

விரைவில் தமிழ்மணம் இது பற்றி அறிவிக்கும்.. காத்திருக்கவும்..!

kanagu said...

nalla pakirvu anna :)

thamilmana-tha pathi enakku theriyathu... veru thiratikal pathiyum theriyala
:(

indha keela ootu podura maari vachi irukeengala... atha epdi namma post la link panrathu,...

indha muraiyum neengal pala parisukal vella vazthukkal anna :)

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
வினவு கண்களுக்கு வலியை உருவாக்கியது. அத்தனை நெருக்கமான வரிகள். உங்கள் வரிகள் சிறப்பாக புரியவைத்தது. வாழ்த்துக்கள்.]]]

ஜோதிஜி அண்ணே..

வினவு தளத்தின் அமைப்பு அப்படி என்பதுதான் பிரச்சினை. மற்றபடி அவர் எழுத்துக்கு முன்னாடி நானெல்லாம் கால் தூசு..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...
போட்டி விவரங்கள் எங்கு பார்க்கலாம்? சுட்டி தாருங்கள். நீங்கள் கலந்துக்கறது நிச்சயமாயிடுச்சி. வாழ்த்துக்கள். குறும்படப் போட்டி என்னாச்சு?]]]

இன்னமும் அது பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. சற்றுப் பொறுத்திருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராமலக்ஷ்மி said...

//தனித்தனியாகப் பிரித்து எண்ணிக்கையை கூட்டினால் பரிசு பெறும் பதிவர்களின் எண்ணிக்கை கூடும்..//

வழிமொழிகிறேன்:)! கூடவே இதையும்...

//ஒருவரே அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடலாம் என்று அறிவிக்க வேண்டும். //
பரிசு இருக்கட்டும். முதலில், எல்லாவற்றிலும் எல்லோரும் கலந்து கொள்ளலாம் எனும் போது பல நல்ல பதிவுகள் போட்டியில் கலந்து கொள்வதற்காக வெளியில் வரும். அனைவர் பார்வைக்கும் கிடைக்கும்.]]]

நூற்றுக்கு நூறு உண்மை.. வழிமொழிகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
nalla pakirvu anna :)
thamilmana-tha pathi enakku theriyathu... veru thiratikal pathiyum theriyala:(]]]

தெரியாதா..? இப்படிச் சொல்லலாமா தம்பீ.. இனிமேலாச்சும் தெரிஞ்சுக்குங்க.. தமிழ்மணம் மட்டுமில்லாமல் தமிழ்வெளி, தமிழிஷ், மாற்று அப்படீன்னு நிறைய திரட்டிகள் இருக்கின்றன.

[[[indha keela ootu podura maari vachi irukeengala... atha epdi namma post la link panrathu,...]]]

அதனை கருவிப்பட்டைன்னு சொல்வாங்க. இதனை எப்படி உங்களது பதிவில் இணைப்பது அப்படீன்னு தமிழ்மணம்.காம்-ல் வழிமுறைகள் இருக்கு. சென்று படித்துப் பார்த்து அதேபோல் செய்யுங்கள்..

[[[indha muraiyum neengal pala parisukal vella vazthukkal anna :)]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

ரவி said...

மூன்று பிரிவுகளுக்கும் பரிசு என்ற விதத்தை எடுத்துவிட்டார்கள் அல்லவா ? சரியாக தெரியவில்லை.

மருத்துவர் புருனோவும், வாத்தியார் அய்யாவும், நீரும் முக்காவாசி முதல் பரிசுகளை தட்டிருவீங்கள்.

நான் கதை கவிதை கட்டுரை எதையாவது முயற்சி செய்யவேண்டிதது தான்..

kanagu said...

anna.. unga thalathuku 300 followers aayitanga... vazthukkal :) :)

ராமலக்ஷ்மி said...

//நூற்றுக்கு நூறு உண்மை.. வழிமொழிகிறேன்..!//

நன்றி, அதுமட்டுமில்லை. மயிரிழையில் பரிசினை ஒரு பிரிவில் தவறவிட்டாலும் இன்னொன்றிலாவது கிடைக்கிற வாய்ப்பு இருக்குமே:)! கடந்த முறை கலாச்சாரத்தில் மூன்றாவதும் [மயிரிழைதானே:)))?], புகைப்படப் பிரிவில் நாலாவதாகவும் வந்து தவறவிட்டேனாக்கும்:)!

பீர் | Peer said...

ஓட்டு போடுபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?

பித்தன் said...

அண்ணன், விடி வெள்ளி, எழுச்சி ஞாயிறு, கலங்கரை விளக்கம், அஞ்சாநெஞ்சன், வீர தளபதி, அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுக்கே என் ஓட்டு.....

அண்ணே அப்டியே நம்ம பய பித்தனையும் கொஞ்சம் பாத்துக்கோங்கோ.........

உண்மைத்தமிழன் said...

[[[செந்தழல் ரவி said...

மூன்று பிரிவுகளுக்கும் பரிசு என்ற விதத்தை எடுத்துவிட்டார்கள் அல்லவா? சரியாக தெரியவில்லை.]]]

நீக்கவில்லை. அப்படித்தான் பரிசுகள் கிடைத்தன.

[[[மருத்துவர் புருனோவும், வாத்தியார் அய்யாவும், நீரும் முக்காவாசி முதல் பரிசுகளை தட்டிருவீங்கள். நான் கதை கவிதை கட்டுரை எதையாவது முயற்சி செய்ய வேண்டிததுதான்..]]]

அந்த லிஸ்ட்டில் நான் இல்லவே இல்லை. தோழர் வினவுதான் முதலிடத்தில் உள்ளார்.!

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...
anna.. unga thalathuku 300 followers aayitanga... vazthukkal :) :)]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராமலக்ஷ்மி said...

//நூற்றுக்கு நூறு உண்மை.. வழிமொழிகிறேன்..!//

நன்றி, அதுமட்டுமில்லை. மயிரிழையில் பரிசினை ஒரு பிரிவில் தவறவிட்டாலும் இன்னொன்றிலாவது கிடைக்கிற வாய்ப்பு இருக்குமே:)! கடந்த முறை கலாச்சாரத்தில் மூன்றாவதும் [மயிரிழைதானே:)))?], புகைப்படப் பிரிவில் நாலாவதாகவும் வந்து தவற விட்டேனாக்கும்:)!]]]

வருத்தம் வேண்டாம்.. இந்த முறை அதே பிரிவில் போட்டியிடுங்கள். நிச்சயம் வெல்வீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[பீர் | Peer said...
ஓட்டு போடுபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?]]]

வலைப்பதிவர்களாக இருக்க வேண்டும். வலைப்பதிவுகளை வாசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
அண்ணன், விடிவெள்ளி, எழுச்சி ஞாயிறு, கலங்கரை விளக்கம், அஞ்சாநெஞ்சன், வீரதளபதி, அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கே என் ஓட்டு. அண்ணே அப்டியே நம்ம பய பித்தனையும் கொஞ்சம் பாத்துக்கோங்கோ.]]]

கவனிச்சுக்குறேன்.. நீ மொதல்ல என்னைக் கவனி..!!!

மணிஜி said...

என் ஓட்டு உண்மையான தமிழனுக்கே

உண்மைத்தமிழன் said...

[[[தண்டோரா ...... said...
என் ஓட்டு உண்மையான தமிழனுக்கே]]]

இந்த ஓட்டு கண்டிப்பாக திரும்பி வரும்..!

ஏனெனில் நான் உண்மைத்தமிழன்..!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பீர் | Peer said...

ஓட்டு போடுபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?//

Good question. ha ha haa

butterfly Surya said...

ஒட்டுகள் சேகரிக்க ஆர்டர்கள் எடுக்கப்படும்..

ரேட்டுகள் சீக்ரெட்டாக வைக்கப்படும்..

உடனே தொடர்பு கொள்க..

shortfilmindia.com said...

ithaiyavathu சின்னதா எழுதக்கூடாதா.?

அன்புடன் அருணா said...

ரைட்டு!

Unknown said...

[[[ஜெஸ்வந்தி said...

//பீர் | Peer said...

ஓட்டு போடுபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?//

Good question. ha ha haa]]]

பதிவர்களாகவும், பதிவுகளை படிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[butterfly Surya said...

ஒட்டுகள் சேகரிக்க ஆர்டர்கள் எடுக்கப்படும்..

ரேட்டுகள் சீக்ரெட்டாக வைக்கப்படும்..

உடனே தொடர்பு கொள்க..]]]

தயவு செய்து ரகசியமாக தொடர்பு கொள்ளவும்.. பரிசுகள் கிடைத்தால் பதில் பரிசுகள் வழங்கப்படும்..!

உண்மைத்தமிழன் said...

[[[shortfilmindia.com said...
ithaiyavathu சின்னதா எழுதக் கூடாதா.?]]]

சின்னதா எழுத இதுவென்ன திருக்குறளா..?

உண்மைத்தமிழன் said...

[[[அன்புடன் அருணா said...
ரைட்டு!]]]

வாங்க.. வாங்க போட்டிக்கு..! அசத்திரலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Satheesh said...

[[[ஜெஸ்வந்தி said...

//பீர் | Peer said...

ஓட்டு போடுபவர்களுக்கு என்ன தகுதி வேண்டும்?//

Good question. ha ha haa]]]

பதிவர்களாகவும், பதிவுகளை படிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்..!]]]

உண்மை.. நான் சொல்ல வந்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்..

மங்களூர் சிவா said...

//போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற எனதருமை சக பதிவர்களை வாழ்த்துகிறேன்..

வாழ்க வளமுடன்//


வாழ்க வளமுடன்

Unknown said...

எனக்கும் எழுத்திற்கும் பல காலமாகவே ஒத்து வருவதில்லை. பிறர் எழுதியதை/எழுதுவதை படிப்பதோடு சரி. அண்ணன் உ.த. போல் திறமைசாலிகள் வெல்ல என் மனப்பூர்வ வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

[[[மங்களூர் சிவா said...
//போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற எனதருமை சக பதிவர்களை வாழ்த்துகிறேன்..
வாழ்க வளமுடன்//

வாழ்க வளமுடன்]]]

எனக்கேவா..?

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
எனக்கும் எழுத்திற்கும் பல காலமாகவே ஒத்து வருவதில்லை. பிறர் எழுதியதை / எழுதுவதை படிப்பதோடு சரி. அண்ணன் உ.த. போல் திறமைசாலிகள் வெல்ல என் மனப்பூர்வ வாழ்த்துகள்.]]]

அப்படிச் சொல்லாதீர்கள் ஆனந்த்.. உங்களுக்கும் எழுத்து வரும்.. எழுதிப் பழகுங்கள்.. உங்களுக்குள் இருப்பது தானாகவே வெளிவரும்..!

"உழவன்" "Uzhavan" said...

ம்ம். எல்லாம் கரெக்ட்தான்

Starjan (ஸ்டார்ஜன்) said...

வயத்துல பாலை வார்த்திருக்காங்க சரவணன் ...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பரிசை அள்ளிருவோம் ...

உண்மைத்தமிழன் said...

[[["உழவன் " " Uzhavan " said...
ம்ம். எல்லாம் கரெக்ட்தான்]]]

அப்புறமென்ன..? கோதால இறங்கிர வேண்டியதுதான..?

உண்மைத்தமிழன் said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வயத்துல பாலை வார்த்திருக்காங்க சரவணன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பரிசை அள்ளிருவோம்]]]

பரிசை அள்ளிக் கொள்ள வாழ்த்துகிறேன்..!

க.பாலாசி said...

தேவையான தகவல் பகிர்வு....எத்தனைப்பதிவர்கள்....நினைக்கும் போதே பயமாகத்தான் உள்ளது.

உண்மைத்தமிழன் said...

[[[க.பாலாசி said...
தேவையான தகவல் பகிர்வு. எத்தனைப் பதிவர்கள். நினைக்கும்போதே பயமாகத்தான் உள்ளது.]]

பயப்பட வேண்டாம்..! அத்தனையும் தகவல் சுரங்கங்களாக இருக்கும். அறிவை அபிவிருத்தி செய்வதற்குத் தயாராகக் காத்திருங்கள்..!

சிங்கக்குட்டி said...

வெற்றி பெற பதிவர்களை வாழ்த்துகிறேன் :-)

உண்மைத்தமிழன் said...

[[[சிங்கக்குட்டி said...
வெற்றி பெற பதிவர்களை வாழ்த்துகிறேன் :-)]]]

நீங்களும் போட்டியிடலாமே சிங்கம்..!

Sanjai Gandhi said...

இவரை கண்ட்ரோல் பண்ண ஆளே இல்லையா? :(

உண்மைத்தமிழன் said...

[[[SanjaiGandhi™ said...
இவரை கண்ட்ரோல் பண்ண ஆளே இல்லையா?:(]]]

ஏன்.. ஏன்.. ஏன்..? உனக்கேன் பொறாமை..?

ஆக்ச்சுவல்லி இதை பதினாறு பக்கத்துல எழுதியிருக்கணும்.. தமிழ்மணத்துக்காரங்க பாவமாச்சேன்னு ஆறு பக்கத்துல முடிச்சிருக்கேன்.!!!

Thamira said...

நல்ல கட்டுரை அண்ணே.

தங்களுக்கு மிக நெருக்கமானவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகும் என்றே நினைக்கிறேன.//

ரகசிய வாக்கெடுப்பு என்பதால் அந்தச்சங்கடமெல்லாம் நடக்காது அண்ணே.!