18-05-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே.!
தமிழகத்தை மொட்டையடித்து தங்களது குடும்பத்தின் மொத்த சொத்துக்களை அதிகரிப்பதில் போட்டோ போட்டியில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட அரசியல் கட்சிகளுமே ஒரு விஷயத்தில் மட்டுமே உறுதியுடன் உள்ளன. அது தங்களைத் தவிர வேறு யாரையும் இப்போதைக்கு மட்டுமல்ல.. எப்போதுமே வளர விடக்கூடாது என்பதில்தான்.
அடிக்கின்ற கொள்ளையைத் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வது. முடிந்தால் தங்களுக்குள் மட்டுமே விட்டுக் கொடுத்துவிட்டுப் போவது.. மற்றபடி வேறு எவனாவது நானும் திராவிடன் என்று சொல்லி வந்தால் அவனை வெட்டிவிடுவது என்பதை இந்தத் தேர்தல் வரையிலும் பின்பற்றி வருகின்றன திமுகவும், அதிமுகவும்.
இரண்டு கழகங்களும் வைகோவுக்கு தேர்தல் நேரத்தில் கழுத்தில் கத்தி வைப்பதுபோல் நெருக்கடி கொடுத்தது இதனால்தான். தங்களுக்கு அடங்கியிருக்கும் கட்சி என்பதோடு, நாய்க்கு போடும் பிஸ்கட்டைப் போல் 1, 2-ஐ வாங்கிக் கொண்டு வாங்கியதற்கு நன்றியாக கேட்கும்போதெல்லாம் வாலாட்டும் கட்சிகள்தான் அவர்களுக்குத் தேவை..
இன்றுவரையிலும் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் இரு கட்சியினருமே தாக்குதலைக் கொடுக்காமல் வருவதற்குக் காரணமே நாம் ஏன் வளர்த்து விட வேண்டும் என்று இந்த சிவனும், ஆண்டாளும் (அப்படி என்று நினைப்பு ரெண்டு பேருக்கும்..!) நினைப்பதுதான்..
இவர்களுடைய புறக்கணிப்பில் இன்னொரு லாபமும் உண்டு. அது விஜயகாந்தால் பிரியப் போகும் பொதுவானவர்களின் ஓட்டு. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தமிழ்நாட்டில் நிரந்தரமான ஓட்டு வங்கி ஒன்று உண்டு. அந்த இரு கட்சியின் ரசிகர்களைத் தவிர பொதுவாக இருப்பவர்களில் அதிகம்பேர் எந்தப் பக்கம் வாக்களிக்கிறார்களோ, அவர்களே ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜெயித்து வருகிறார்கள்.
அப்படி பொதுவாக இருப்பவர்களில் லட்சணக்கணக்கானோர் இந்த இரண்டு திருடர்களைத் தவிர வேறு யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் விஜயகாந்துக்கு கடந்த தேர்தலிலும், இந்தத் தேர்தலில் தங்களது வாக்குகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
இதன் பயனாக சென்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.38 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றிருந்த தே.மு.தி.க., இந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் 10.1 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று தனது ஓட்டு வங்கியை உயர்த்தியிருக்கிறது.
இந்த தேர்தலில் திமுக 22 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இக்கட்சி பெற்றிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 76 லட்சத்து 25 ஆயிரத்து 421. இது 25.10 சதவிகிதம்.
அதிமுக 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களை வென்றிருக்கிறது. இக்கட்சி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டுக்கள் 69 லட்சத்து 63 ஆயிரத்து 510. இக்கட்சியின் ஓட்டு சதவிகிதம் 22.91.
இந்த மக்களவைத் தொகுதியில் தமிழகம் முழுவதிலும் மொத்தம் பதிவான ஓட்டுக்கள் 3 கோடியே 38 லட்சத்து 83 ஆயிரத்து 49. இதில் 30 லட்சத்து 72 ஆயிரத்து 881 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது தே.மு.தி.க.
35 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளியுள்ளது தேமுதிக.
25 தொகுதிகளில் வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தைவிட தேமுதிக வேட்பாளர் பெற்ற ஓட்டுக்கள் அதிகம்.
தேமுதிக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுக்களைப் பிரித்ததினால் அதிகப்பட்சமாக அதிமுக 8 தொகுதிகள், காங்கிரஸ் 7 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 1 தொகுதி, மதிமுக 1 தொகுதி, விடுதலைச்சிறுத்தைகள் 1 தொகுதி, மற்றும் பாரதீய ஜனதா 1 தொகுதி என்று பல தொகுதிகளை இழந்திருக்கிறார்கள்.
ஏழு தொகுதிகளில் திமுக வெற்றி பெற உதவியிருக்கிறது தேமுதிக.
வடசென்னை, திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி வித்தியாசத்தைவிடவும், தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகம்.
அதே போல் திருவள்ளூர், தென்சென்னை, சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கும் தேமுதிக வேட்பாளர்கள் பிரித்தெடுத்த வாக்குகளே காரணம்.
ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என்று மதிமுக ஈரோட்டில் வென்ற கதையிலும் தேமுதிகவின் வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய 7 தொகுதிகளில் அக்கட்சி பெற்ற வெற்றிக்கும் காரணம் தேமுதிகதான்.
நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில். ஆனால் அந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மாபா பாண்டியராஜன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 229. நடிகர் கார்த்திக் வாங்கியிருந்த ஓட்டுக்களும் பத்தாயிரத்துக்கும் மேல்..
இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..
கடைசி நிமிடத்தில் புதுமனைபுகுவிழா வீட்டில் நடந்த பேரம் நல்லபடியாக நடந்து முடிந்து காங்கிரஸோடு கூட்டணி வைத்திருந்தால், தேமுதிக மூலம் திமுக கூட்டணிக்கு 12 இடங்களாவது கூடுதலாக கிடைத்திருக்கும்.
அல்லது கொட்டிவாக்கம் பங்களாவில் நடத்திய பேச்சுவார்த்தை ஜெயித்து பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கும் ‘அம்மா'வுடன் இணைந்திருந்தால், அந்தக் கூட்டணிக்கும் 12 இடங்களாவது கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.
கூடவே விஜயகாந்திற்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக இருவருமே கொடுக்க முன் வந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மாத்திரை கொடுக்காமலேயே மருத்துவர் ராமதாஸுக்கு பேதியை வரவழைத்திருக்கலாம்.
இப்படி ஜெயிக்க முடிந்த விஷயங்களையெல்லாம் கைவிட்டுவிட்டு, தங்களது கட்சிக்காரர்களை அல்லல்பட வைத்தாலும் தைரியமாக தனித்து நின்று வீரம் காட்டிய அண்ணன் விஜயகாந்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன்..
அதோடு காங்கிரஸுடனான தேமுதிகவின் கூட்டணியை முறியடித்த பெருமையும் கலைஞரையே சேரும். திமுகவின் தொகுதிப் பட்டியலில் ஒதுக்க முடியாது. வேண்டுமானால் உங்களது பட்டியலிலேயே 5 தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.
முடிந்தவரை கேட்டுப் பார்த்தும், போராடிப் பார்த்தும் 8 தொகுதிகளுக்குக் குறையாமல் விஜயகாந்த் கேட்க.. இழுபறி நிலைமை இருக்கும்போதே விஜயகாந்துக்கே 5 போய்விடும் என்றால் உங்களது மற்றத் தலைவர்களுக்கும், அவர்களுடைய அடிப்பொடிகளுக்கும் சீட்டு எப்படி கிடைக்கும் என்று டெல்லிக்கு காவடி எடுக்க வைத்து அந்தத் திட்டத்தையே முறியடித்தது திமுக.
இந்தப் பக்கம் வழக்கம்போல அம்மா.. சும்மா பேச்சுக்கு ஒரு பேச்சுவார்த்தையை நடத்திவிட்டு 4 தர்றோம்.. இஷ்டம்னா வாங்க.. இல்லாட்டி மரியாதை படத்துக்கு டப்பிங் இருக்காம்ல.. போய்ச் செய்யுங்க என்று சொல்லி கவுரவமாக அனுப்பி வைத்தார் அம்மா..
வேறு வழியில்லாமல் தனித்தே நின்று ஓட்டு வங்கியை உயர்த்திக் கொண்ட பெருமையை மட்டுமே இத்தேர்தல் விஜயகாந்திற்குக் கொடுத்துள்ளது.
அடுத்தத் தேர்தலில் கேப்டன் திராவிட பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் அவருக்கு தற்போது இருக்கும் பத்து சதவிகித வாக்குகள் அப்படியே இனிமேல் கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான்.. “இரண்டு திருட்டுக் கட்சிகளுமே வேண்டாம் என்றுதான் உன்னை கூப்பிடுறோம்.. நீயும் அவங்களோட சேர்ந்துக்கிட்டு வோட்டு கேட்டு வந்தா என்ன அர்த்தம்..?” என்று மக்கள் திருப்பி பொடனியில் அடித்துக் கேட்பார்கள்.
ஆக புரட்சிக் கலைஞர் அடுத்தத் தேர்தலிலும் தனித்து நின்று ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெறலாம்.
அல்லது இந்த இரண்டு பெரிய திருட்டுக் கட்சிகளைத் தவிர மற்ற சில சில்லரை உதிரி பாகங்களைக் கொண்ட கட்சிகளை வைத்து மூன்றாவது அணி அமைத்தால் ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளாவது அண்ணனுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். விஜயகாந்திற்கு இன்னும் வயது இருக்கிறது.. ஒரு வேளை அடுத்தடுத்தத் தேர்தல்களின்போது அவருக்கான வாய்ப்பு இருக்குமானால் அதனை அவர் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்..
பார்ப்போம்..!
|
Tweet |
38 comments:
நல்ல அலசல்...
இந்த தேர்தல் புரட்சிக்கலைஞரின் அரசியல் பாதையை தீர்மானித்து விட்டது.
இனி அவர் வழி தனி வழி.
அப்படியே வாங்க
http://www.ensaaral.blogspot.com/
பார்க்கலாம். வளர்கிறாரா !தோய்கிறாரா!!
Sorry sir, I disagree. A party should aim to win, but Vijayakanth aim to ruin others. It is very likely that he got money from Congress and announced 40 rich candidates. Now, the candidates have become poor. Vijayakanth will remain rich. Look at how many votes Vijayakanth's brother in law got in kallakurichi assembly segment (~13000). In the assembly election, Vijayakanth got ~60000. Kallakurichi people understand that Vijayakanth is a spoiler and it is time for others to understand it. He must be rejected.
சரியான பார்வை...
i was wondering how do u know the only clean politician is vaiko... if so.. why did he go with jayalalitha... in last election.. can u please explain us. that...last 1 month u tried ur best to write against DMK & congress and u urslef were procaliming ADMK is goign to win.. now.. ppl of tamilnadu has given a correct verdict... and where r u going to keep ur face... now u have come in support of vaiko.. in tamil the right word is .. Manamulla Rosham Ulla ambalai..evantvathu.. jailil vacha aloda... alliance vaipnagala... kedu ketta vaiko vai thavira... i was supporting him till that 3rd politican went for money with jayalalaitha... u say tamil ppl did not choose a good politican... i agree defn tamil eelam was a important issue... will it give food for farmers... chumma pottai mathiri...meeting meeting... alutha ottu potuduvangala... dont try to be very smart....
I am not sure whether myself responding to mayavi in your post is correct. If this is wrong, I apologize in advance.
1. Mayavi says that "how can Vaiko align with Jayalalitha who imprisoned him". He continues Vaiko is not "manamulla roshamulla tamilan". Is Karunanidhi Manamulla, Roshamulla tamilan, who aligned with Indira gandhi (Indiragandhi imprisioned Maran, stalin and even killed three DMk workers in Jail). If Karunanidhi is manamulla, roshamulla tamilan, Vaiko is very much Manamulla roshamulla tamilan thaan.
DMK knows how to be corrupt and escape, ADMK don't know the trick.
DMK is the most corrupt political organization in India. Spectrum scma alone has got them several thousand crores. The Auditor General of India clearly noted that there is corruption in the way the licences are issued.
///இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..///
இவரை போடா சட்டத்தில் உள்ள வச்சது அம்மா ...திரும்ப அம்மாவுடனே கூட்டணி .இதல்லாம் மக்களுக்கு தெரியாதா என்ன ?வைகோ வை பற்றி வைகொக்கே தெரியவில்லை .
இதெல்லாம் அரசியலில் சகஜமோ ?
வைகோ ஜெயிக்கவில்லை என்று யாரும் புலம்பிய மாதிரி தெரியவில்லை .
///இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக//
சொலாதேங்க சார் சிரிப்பு வருது .
லஞ்ச, லாவண்யம் இல்லாத ஆளுக்கு அரசியலில் என்ன வேலை .வீரமணி மாதிரி வெளிய இருக்கவேண்டியது தானே .
அரசியலில் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத இரண்டே பேர் தான் சார்
காந்தி .,காமராஜர் ...
mayavi said...
இங்கிலீஷ் லில் எழுதி இருக்காங்க .இங்கிலீஷ் லில் எழுதினானால் படிக்க ஸுவாரஸியெம் இருக்காது .
//நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில்.
இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..
//
This is too much. VAIKO is No.1 fraud. Ramadas is No.2 fraud. You shouldnt support. if u support those guys, you are not a good citizen. Thanks...
அண்ணா நல்ல பார்வை.
வைகோ தோற்றதில் வருத்தம்தான்.
ஆனால் விஜயகாந்த் பெரிய சக்தியாக உருவெடுப்பார் என எண்ணுகிறேன். சிரஞ்சீவியைப் போலல்லாமல் கூடுதலாக சீட் வாங்குவார் என நம்பலாம். இந்த தேர்தலில் அவருக்கு இடும் வாக்கு வீணாகப் போய் விடுமே என்றுதான் பலர் அவருக்கு வாக்களிக்கவில்லை.
நித்யன்
நல்ல பார்வை/கருத்து. என்னுடைய கருத்து. விஜயகாந்த் இரு கழகங்கள் தவிர்த்து மற்ற துண்டு துக்கடா கட்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை அவர்களோடு கூட்டணி வைத்து 3வது அணி அமைக்கலாம். அடுத்த தேர்தலில் தேமுதிகவிற்கு மட்டும் 12% - 15% ஓட்டு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இரு கழகங்களில் ஏதாவது ஒன்றில் சேருவது தற்கொலைக்கு சமம். கடைசியில் பாமக நிலமைதான் ஏற்படும்.
Mr.K,
even i dont know whether i can respond to ur comment.
Did i anywhere in my comment say karunanidhi is the clean politican.
vaiko yokiyam illanu sonna... athuku pathil sollama.. kalaigar yokiyamanu.. kekurathu chinna pullai thanma illai...
ithu eppadi irukuna...telgi kitta poi ennda thirudunanu ketta..harshat mehta enn thirudinanu kettanam.. unnoda thppai..enn adathavanoda... thappoda compare pannatha...
aduthavan pee thinna nee thinganuma..
so vaiko is not a clean politican.. he is the same old shit
ennaya niyam pesuringa....
sorry i am trying to type in tamil with nhm wirter..but somehow i am still not able to do it completely... i still wonder how u ppl type... so well in tamil.
vaiko kasu vankacillaiya?
வைகோவின் தோல்விக்காக நானும் வருத்தப்பட்டேன் ஆயிரம் பெரியார் வந்தாலும் இந்த மக்களை திருத்த்முடியாது(விவேக் சொல்வது போல் படிக்கவும்)
நல்ல அலசல் அண்ணே... காமராஜரையே தோற்க செய்த விருதுநகர் மக்களுக்கு வைகோ எம்மாத்திரம்.... இதை பற்றி நானும் பதிவு எழுதியிருக்கேன்..கட பக்கம் வரவும்
விஜய்காந்த் பற்றி என் பதிவு படித்தீர்களா?
// KRICONS said...
நல்ல அலசல்...//
நன்றி கிரிகான்ஸ்..
[[starjan said...
இந்த தேர்தல் புரட்சிக்கலைஞரின் அரசியல் பாதையை தீர்மானித்து விட்டது. இனி அவர் வழி தனி வழி. அப்படியே வாங்க
http://www.ensaaral.blogspot.com/]]
வர்றேன்.. வர்றேன்..
மொதல்ல இங்க வந்ததுக்கு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்..
[[gulf-tamilan said...
பார்க்கலாம். வளர்கிறாரா ! தோய்கிறாரா!!]]
தேய மாட்டார்.. கொஞ்சம் வளருவார் என்று நினைக்கிறேன்..!
[[K said...
Sorry sir, I disagree. A party should aim to win, but Vijayakanth aim to ruin others. It is very likely that he got money from Congress and announced 40 rich candidates. Now, the candidates have become poor. Vijayakanth will remain rich. Look at how many votes Vijayakanth's brother in law got in kallakurichi assembly segment (~13000). In the assembly election, Vijayakanth got ~60000. Kallakurichi people understand that Vijayakanth is a spoiler and it is time for others to understand it. He must be rejected.]]
மிஸ்டர் கே..
அந்தத் தொகுதியில் மட்டுமே அவருக்கு ஓட்டுக்கள் குறைந்துள்ளது. ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் அவருடைய கட்சிக்கு வாக்குகள் அதிகரித்துள்ளது.
மற்றபடி அவர் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்தான்.. பணம் செலவழிக்கக் கூடியவர்கள்தான். நானாக இருந்தாலும் அப்படித்தான் தேர்வு செய்வேன். இல்லாவிடில் நானே என் சொந்தப் பணத்தைக் கொடுப்பேன்.
கேப்டனிடம் பணம் இல்லை என்று நினைக்கிறேன்.-)))))))))))
[[தீப்பெட்டி said...
சரியான பார்வை...]]
நன்றி தீப்பெட்டி ஸார்..!
[[mayavi said...
i was wondering how do u know the only clean politician is vaiko... if so.. why did he go with jayalalitha... in last election.. can u please explain us.]]
ஊழல்வாதியான ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அவரே ஊழல்வாதியாகவோ, ஊழலில் சம்பாதித்ததாகவோ கருத முடியாது..
அவருடைய நேரம்.. அவர் கட்சிக்கு அங்கீகாரம் வேண்டுமே என்பதற்காக இப்படி போய் மாட்டிக் கொண்டார்.
[[that... last 1 month u tried ur best to write against DMK & congress and u urslef were procaliming ADMK is goign to win.. now.. ppl of tamilnadu has given a correct verdict... and where r u going to keep ur face...]]
நான் அதிமுகவுக்கு வாக்கு கேட்டனா..? ஐயா மாயாவி ஐயா.. ஏன் குட்டையைக் குழப்புறீங்க.. ரெண்டு பேரும் இல்லாம வேற யாராவது வந்தா நல்லாயிருக்காதா என்று ஏங்கித் தவிக்கும் சாதாரண மிடில் கிளாஸ் பார்ட்டிங்க நான்..
[[now u have come in support of vaiko.. in tamil the right word is .. Manamulla Rosham Ulla ambalai.. evantvathu.. jailil vacha aloda... alliance vaipnagala... kedu ketta vaiko vai thavira...]]
ஏன் இவ்ளோ கோபம்..? அவர் மன்னிச்சுட்டாருன்னு நினைக்கிறேன். அவருடைய இந்தச் செயலில் எனக்கும் வருத்தம் உண்டு. உடன்பாடில்லைதான்.. ஆனால் என்ன செய்ய..? அவர் கஷ்டம் அவருக்கு..?
[u say tamil ppl did not choose a good politican... i agree defn tamil eelam was a important issue... will it give food for farmers... chumma pottai mathiri... meeting meeting... alutha ottu potuduvangala... dont try to be very smart....]]
சரி.. சரி.. கூல் டவுன். கோபப்படாதீங்க..
அடுத்த முறை வைகோவை தனியே நிக்கச் சொல்றேன்.. 2 லட்சம் ஓட்டு வாங்கிக் கொடுத்து அவரை ஜெயிக்க வைச்சிருங்க..
[[K said...
Is Karunanidhi Manamulla, Roshamulla tamilan, who aligned with Indira gandhi (Indiragandhi imprisioned Maran, stalin and even killed three DMk workers in Jail). If Karunanidhi is manamulla, roshamulla tamilan, Vaiko is very much Manamulla roshamulla tamilanthaan.]]
-)))))))))))
[[DMK knows how to be corrupt and escape, ADMK don't know the trick.
DMK is the most corrupt political organization in India. Spectrum scma alone has got them several thousand crores. The Auditor General of India clearly noted that there is corruption in the way the licences are issued.]]
ஊழலை மறைக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டவர் ஜெயலலிதா..
மறைக்கத் தெரிந்து எட்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்தவர் கருணாநிதி..
சந்தேகமேயில்லை.
[[[ malar said...
///இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..///
இவரை போடா சட்டத்தில் உள்ள வச்சது அம்மா. திரும்ப அம்மாவுடனே கூட்டணி. இதல்லாம் மக்களுக்கு தெரியாதா என்ன? வைகோவை பற்றி வைகொக்கே தெரியவில்லை .
இதெல்லாம் அரசியலில் சகஜமோ?
வைகோ ஜெயிக்கவில்லை என்று யாரும் புலம்பிய மாதிரி தெரியவில்லை.]]
மலரு.. அதான் நான் புலம்புறனே தெரியலையா..?
[[[malar said...
///இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக//
சொலாதேங்க சார் சிரிப்பு வருது .
லஞ்ச, லாவண்யம் இல்லாத ஆளுக்கு அரசியலில் என்ன வேலை. வீரமணி மாதிரி வெளிய இருக்கவேண்டியதுதானே.]]
முடியாதே.. முடியாமத்தானே உள்ள வந்து மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு..
[[அரசியலில் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத இரண்டே பேர்தான் சார்.
காந்தி, காமராஜர் ...]]
இவங்க அரசியல் நடத்துனாங்கன்னு யார் சொன்னது..?
பொதுத்தொண்டு என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவங்க ரெண்டு பேரும்தான்..
[[[Shankar said...
//நான் பெரிதும் வருத்தப்படுவது வைகோவின் தோல்விக்காகத்தான்.. அவர் தோற்றது 15764 வாக்குகள் வித்தியாசத்தில். இந்த ஒரு மனிதரின் அப்பழுக்கில்லாத லஞ்ச, லாவண்யம் இல்லாத நேர்மைக்காக இவர் ஜெயித்திருக்க வேண்டும். கதையை முடித்துவிட்டார்கள் விருதுநகர் தொகுதி மக்கள். இனிமேல் நல்லவர்கள் ஜெயிக்க முடியவில்லை என்று யாரும் புலம்பக் கூடாது..//
This is too much. VAIKO is No.1 fraud. Ramadas is No.2 fraud. You shouldnt support. if u support those guys, you are not a good citizen. Thanks...]]]
ஓகே.. உங்களது கருத்துக்கு நன்றி..
[[[நித்யகுமாரன் said...
அண்ணா நல்ல பார்வை.
வைகோ தோற்றதில் வருத்தம்தான்.
ஆனால் விஜயகாந்த் பெரிய சக்தியாக உருவெடுப்பார் என எண்ணுகிறேன். சிரஞ்சீவியைப் போலல்லாமல் கூடுதலாக சீட் வாங்குவார் என நம்பலாம். இந்த தேர்தலில் அவருக்கு இடும் வாக்கு வீணாகப் போய் விடுமே என்றுதான் பலர் அவருக்கு வாக்களிக்கவில்லை.
நித்யன்]]]
நித்யா..
சிரஞ்சீவி மாதிரி ஜெயிக்கணும்னா இவருக்கு 30 இல்லாட்டி 40 சீட் கொடுத்து கூட்டணி வைச்சுக்குறது லீடிங் கட்சிகள் முன் வரணும்..
வந்தால் கிடைக்கலாம்.. அல்லது கிடைக்காமலும் போகலாம்..
[[[ananth said...
நல்ல பார்வை/கருத்து. என்னுடைய கருத்து. விஜயகாந்த் இரு கழகங்கள் தவிர்த்து மற்ற துண்டு துக்கடா கட்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை அவர்களோடு கூட்டணி வைத்து 3வது அணி அமைக்கலாம். அடுத்த தேர்தலில் தேமுதிகவிற்கு மட்டும் 12% - 15% ஓட்டு கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இரு கழகங்களில் ஏதாவது ஒன்றில் சேருவது தற்கொலைக்கு சமம். கடைசியில் பாமக நிலமைதான் ஏற்படும்.]]]
நிச்சயம் இதேதான் ஏற்படும். சந்தேகமில்லை ஆனந்த்..
[[[sripriya said...
vaiko kasu vankacillaiya?]]]
காசு சம்பாதிப்பது அவரது குணமல்ல..!
[[shabi said...
வைகோவின் தோல்விக்காக நானும் வருத்தப்பட்டேன் ஆயிரம் பெரியார் வந்தாலும் இந்த மக்களை திருத்த்முடியாது(விவேக் சொல்வது போல் படிக்கவும்)]]]
கண்டிப்பா திருத்த முடியாது..!
[[[அத்திரி said...
நல்ல அலசல் அண்ணே... காமராஜரையே தோற்க செய்த விருதுநகர் மக்களுக்கு வைகோ எம்மாத்திரம்.... இதை பற்றி நானும் பதிவு எழுதியிருக்கேன்.. கட பக்கம் வரவும்.]]]
கரெக்ட்..
மக்களின் இந்த எடுத்தேன்.. கவிழ்த்தேன் என்கிற குணம்தான் அவர்களது எதிரி..
[[[T.V.Radhakrishnan said...
விஜய்காந்த் பற்றி என் பதிவு படித்தீர்களா?]]]
இன்னும் படிக்கலையே ஸார்..!
படிக்கிறேன்..
இந்த ஓட்டு வங்கி எல்லாம் அவரு தனியா நிக்கிற வரைக்கும்தான் , கூட்டணி சேர்ந்தா அம்பேல்தான்.
///தேனீ - சுந்தர் said...
இந்த ஓட்டு வங்கி எல்லாம் அவரு தனியா நிக்கிற வரைக்கும்தான் , கூட்டணி சேர்ந்தா அம்பேல்தான்.///
அவரும் இதனை உணர்ந்துதான் இருக்கிறார்.
பார்ப்போம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் யார், யார் எந்தெந்தக் கூட்டணிக்குத் தாவுகிறார்கள் என்று..!?
Please visit my Tamil tech blog http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/
[[shirdi.saidasan@gmail.com said...
Please visit my Tamil tech blog http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/]]
பார்த்தேன்.. படித்தேன்.. தகவல்களுக்கு மிக்க நன்றி ஸார்..
See who owns 100h.com or any other website:
http://whois.domaintasks.com/100h.com
Post a Comment