ஆறாவது அறிவு யாருக்கு இருக்கு..?

28-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மனித நேயத்தில் மனிதர்களை மிஞ்ச ஆளில்லை என்றுதான் நாமே நம்மைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பணம், புகழ் இவை இரண்டையும் பெறுவதற்கு சக மனிதர்களையே பலிகடாவாக்கும் உன்னத செயலில் ஈடுபட்டிருக்கும் நமக்கு ஒன்றுமறியாத அப்பாவி விலங்குகள் மீது மட்டும் இரக்கம் வருமா என்ன..?

சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தது.

பச்சைப் பசேல் என்ற புல்வெளி எங்கும் பரந்து விரிந்திருக்க ஒரு தினுசாக இருந்த சில வேட்டை நாய்கள், தங்களது வழக்கமான ஸ்டைலில் பாய்ந்தோடி வந்துகொண்டிருந்தன.

தூரத்தில் ஒரு மாடு தன் பசியைப் போக்க புல்லைத் தின்று கொண்டிருந்தது. இன்றைக்கு இதுதான் இரை என்பதை வேட்டை நாய்களும், இன்றைக்கு இவர்களால்தான் உனக்கு சாவு என்று இறைவன் தீர்மானித்துவிட்டான் என்பதாலும் இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.

மாடு ஓடத் துவங்கியது.. நாய்களும் விரட்டத் துவங்கின. எண்ணிக்கை அதிகமாக இருந்ததினாலும், பசி என்கிற வெறியோடு இருந்ததாலும் மாட்டை மிக எளிதாக சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கின. மாடோ தனக்கிருந்த ஒரே ஆயுதமான கொம்பை வைத்து முட்டி மோதித் தள்ளிப் பார்த்தது.. ஆனாலும் முடியவில்லை.

எப்படியும் ஆள் சரண்டராகிவிடும் என்ற நம்பிக்கையில் முழு பலத்தையும் உபயோகிக்காமல் மாட்டை களைப்படைய வைக்க வேண்டும் என்ற குயுக்தியில் வேட்டை நாய்கள் சுற்றி, சுற்றி சும்மா விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் அதுவரையில் தூரத்தில் இருந்து படம் பிடித்துக் கொண்டிருந்த நமது கேமிராகாரர்கள் அந்த மாட்டின் மிக அருகில் சென்று தங்களது ஜீப்பை நிறுத்தினார்கள்.

மாடு என்ன நினைத்ததோ தெரியவில்லை.. விருட்டென்று ஜீப்பின் மிக அருகில் வந்து உரசியதுபோல் நின்று கொண்டது. வேட்டை நாய்கள் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டன. என்னதான் காடாக இருந்தாலும், அவர்களுடைய ராஜ்ஜியமாக இருந்தாலும், மனிதர்களை கண்டால் சிறிது பயம் இருக்கத்தான் செய்கிறது.

எனக்குள் ஒரு சந்தோஷம்.. ஆஹா.. மாடு தப்பிச்சிருச்சு.. பாவம்.. பொழைச்சுப் போகட்டுமே என்று.. ஜீப்பில் இருந்த கேமிராமேனும் மற்றவர்களும் அந்த மாட்டைத் தொட்டுப் பார்த்து, தடவிக் கொடுத்து தங்களது பாசத்தைக் கொட்டினார்கள்.

வேட்டை நாய்களோ சுற்றுமுற்றும் பார்த்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த இரையும் கண்ணுக்குத் தெரியாததால், இன்றைக்கு இதைவிட்டால் தங்களுக்கு பிரியாணி இல்லை என்பதை புரிந்து கொண்டுவிட்டன.

மெதுவாக ஜீப் நகரத் துவங்கியது.. மாடும் புரிந்து கொண்டு ஜீப்போடு ஓடத் துவங்கியது.. வேட்டை நாய்களும் பின்னாலேயே ஓடத் துவங்கின..

திடீரென்று ஜீப் மிக அசுர வேகத்தில் வேட்டை நாய்களின் பக்கமே திரும்பிப் போக மாடு யோசிக்க அவகாசமே இல்லாமல் மறுபடியும் நாய்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது..

இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. எதுக்கு இப்படி சுத்தி சுத்தி வந்து படம் எடுக்கிறானுக.. மாட்டைக் கூட்டிட்டு வேற இடத்துக்கு போயாவது தொலையலாமே என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டேன்..

இப்போதும் நாய்கள் மாட்டை ரவுண்ட் கட்டி கடிக்கத் துவங்க.. மாட்டின் உடலிலிருந்து ரத்தம் சிந்தத் துவங்கியது. கேமிரா நாய்களின் ஆக்ரோஷத்தைக் காட்டியபடியே இருக்க..

திடீரென்று அந்த இடத்தை நோக்கி சீறியது ஜீப்.. நாய்கள் சிதறி ஓடத் துவங்க.. மாடு சற்று ரிலாக்ஸாகி மீண்டும் ஜீப்பின் அருகே வந்து நின்று கொண்டு மூச்சு வாங்கியது.

என்னமோ, நம்மூர் போலீஸ் கலவரத்துல செய்ற மாதிரி விரட்டுற மாதிரி விரட்டி, அடிக்கிற மாதிரி அடிக்கிற கதையால்லா இருக்குன்னு நினைச்சேன்.

அதேதான்.. மறுபடியும் ஜீப் மாட்டை விட்டுவிட்டு வேகமாக பின்புறமாகச் செல்லத் துவங்க.. மாடும் ஜீப்பின் கூடவே ஓடத் துவங்க.. ஜீப்பின் வேகத்திற்கு மாடால் ஓட முடியவில்லை. பாவம் ஏற்கெனவே கடிபட்டு அரை உயிர் போய் பரிதாபத்தில் இருந்தது. அதற்குள்ளாக பின்னால் விரட்டி வந்த நாய்களின் ஆக்ரோஷ வேகத்தில் கீழே படுத்தேவிட்டது.

ஜீப் இப்போது நின்றுவிட்டது. கேமிரா திரும்பி கூட்டத்தைக் காட்ட.. வாய் திறந்த நிலையில் அனத்தக்கூட முடியாத பாவத்துடன் மாடு படுத்திருக்க நாய்களின் கோரப் பற்கள் அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்க.. கொஞ்சம், கொஞ்சமாக அந்த மாடு தன் உயிரை இழந்து கொண்டிருந்த கொடூரம் நடந்து கொண்டிருந்தது.

இப்போதுதான் புரிந்தது இப்படியொரு விரட்டி கொலை செய்யுதல் போன்ற காட்சிகளை எடுக்க வேண்டி இவர்களே அந்த மாட்டிற்கு சிறிது நேர உயிர்ப்பிச்சை கொடுத்து பின்பு தங்களது படப்பிடிப்பிற்காக அதனை பலி கொடுக்கிறார்கள் என்று..

இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?

கொடுமைடா சாமிகளா.. ஏதோ ஆறாவது அறிவுன்னு ஒண்ணு இருக்கு. அதுதான் விலங்குக்கும், மனுஷனுக்கும் இருக்குற ஒரே வித்தியாசம்னு சொன்னாங்க.. இதுல அந்த ஆறாவது அறிவு யாருக்கு இருக்குன்னு எனக்குத் தெரியல..

22 comments:

Anonymous said...

And also we ensure that when we enter in this specific blog site we see to it that the topic was cool to discuss and not a boring one.

கூடுதுறை said...

சட்டாம்பிள்ளை அவர்களே!

நமது வாத்தியாரின் பதிவிற்கு எளிய வழி ஏற்படுத்தியுள்ளேன் பார்த்து விட்டு தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.

நன்றாக இருந்தால் வாத்தியரிடம் கூறி இப்பதிவிற்கு ஒரு லிங்க் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள்

http://scssundar.blogspot.com/2008/06/blog-post_28.html

நன்றி

கிரி said...

//இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?//

வழிமொழிகிறேன்

Unknown said...

/இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?/

உங்கள் வருத்தத்தில் நானும் பங்குகொள்கிறேன்.

பாவம் அந்த மாடு.

சின்னப் பையன் said...

வருத்தமான விஷயம்தான். :-((((

Sivaram said...

இதே மேற்கத்தியவர்கள் தான், நாய்க்கு கண் ஆப்பரேசன் செய்வது, நடக்க முடியாத பன்றிக்கு, காலில் ஷூ மாட்டுவது போன்ற , அபிரிதமான ஜீவகாருண்யத்தையும் காண்பிக்கிறார்கள்..
ஒன்னுமே புரியல..

SP.VR. SUBBIAH said...

////இப்போதுதான் புரிந்தது இப்படியொரு விரட்டி கொலை செய்யுதல் போன்ற காட்சிகளை எடுக்க வேண்டி இவர்களே அந்த மாட்டிற்கு சிறிது நேர உயிர்ப்பிச்சை கொடுத்து பின்பு தங்களது படப்பிடிப்பிற்காக அதனை பலி கொடுக்கிறார்கள் என்று..

இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?///

Excellent narration of the scene you had seen in the television.

Keep it up oonaa thaanaa!

Anonymous said...

பதிவுக்கு நன்றி. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன்.

மிகக் கொடூரமான வேட்டையை படமாக்கி கொடுத்தால்தான் அவருக்கு அதிக பணம் மீடியாவில் கிடைக்கும். அதை ஒளிபரப்பினால்தான் அந்த டிவி மக்களால் பார்கப்படும். மக்களால் அதிகம் பார்கப்படும் நிகழ்ச்சிக்கே விளம்பரம் கொடுப்பார்கள். உண்மைத்தமிழன் அவர்களே இதில் நீங்கள் தவறை யாரிடம் கூறப்போகிறீர்கள்.

சந்தை என்பது நாம் காய்கறி வாங்குமிடம் மட்டுமல்ல இது போல வாழ்வின் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து விட்டது, இங்கு வலியது வெல்லும் என்பது மட்டுமே தாரகமந்திரம்.

தினத்தந்தி ஏன் கொடூரமான செய்திகளையே வெளியிடுகிறது என்று முன்பெல்லாம் விவாதிப்போம். நல்ல செய்தி நடக்குற இடத்துல நிருபருக்கு என்ன வேலை அப்படின்னு சொல்லுவாங்க. அதன் அடுத்த பரிமாணம்தான் இது.

உங்களுக்குத் தெரியுமா வயதான தலைவர்களுக்கு இரங்கல் செய்தி மற்றும் புகைப்படங்கள் ஒவ்வொரு பத்திரிகை ஆஃபிசிலும் தயாரக இருக்கும்.

என்ன அவுட் ஆஃப் பார்ம்ல இருக்கீங்களா பதிவு இவ்வளவு சின்னதா இருக்கு. :-)

சரவணன்.

Anonymous said...

//சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தது.//

பதிவு போட சரக்கில்லேன்னா இப்படியா அநியாயம் பண்ணுறது?

Anonymous said...

{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}

செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறே

Anonymous said...

Anonymous said...
{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}

செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறே

திங்கள், ஜூன் 30, 2008 மதியம் 3:41:00

இது மாதிரி பின்னூட்டங்களை தடை செய்யலாமே?ரசனை இல்லா............

உண்மைத்தமிழன் said...

//கூடுதுறை said...
சட்டாம்பிள்ளை அவர்களே!
நமது வாத்தியாரின் பதிவிற்கு எளிய வழி ஏற்படுத்தியுள்ளேன் பார்த்து விட்டு தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.நன்றாக இருந்தால் வாத்தியரிடம் கூறி இப்பதிவிற்கு ஒரு லிங்க் கொடுக்க பரிந்துரை செய்யுங்கள்.
http://scssundar.blogspot.com/2008/06/blog-post_28.html
நன்றி//

கூடுதுறை அவர்களே.. நம்ம வாத்தியாருக்கு சிபாரிசு என்பதே பிடிக்காது.. அவருக்கு அனைத்து மாணவர்களும் ஒன்றுதான். அவர் நமக்குள் பேதம் பார்ப்பதில்லை.. வாத்தியாருக்கே விளம்பரம் கொடுக்கும் நல்ல மாணவன் என்ற பெயர் எடுத்துவிட்டீர்கள்..

வாழ்க வளமுடன்..

உண்மைத்தமிழன் said...

//கிரி said...
வழிமொழிகிறேன்.//

நன்றி கிரி ஸார்..

//செல்வன் said...
உங்கள் வருத்தத்தில் நானும் பங்குகொள்கிறேன். பாவம் அந்த மாடு.//

உண்மைதான் செல்வன்.. மாட்டிற்கு கொம்பு கொடுத்தும் என்ன புண்ணியம்.. இந்த முருகனின் மேல் எனக்கு அசாத்தியமான கோபம் வருகிறது..

அதே சேனலில் வேறொரு நாள் ஒரு முள்ளம்பன்றியை பெண் சிங்கம் ஒன்று கடித்து சாகடிக்க பெரும் முயற்சி செய்தது.. ஆனால் முள்ளம்பன்றியின் முட்கள் சிங்கத்தை பாடாய் படுத்திவிட.. போய்த் தொலை என்று விட்டுவிட்டு, தன் வாயில் குத்தியிருந்த முட்களை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு ஒதுங்கிக் கொண்டது சிங்கம். இந்த அளவுகூட பயன்படாத அந்த கொம்பை கொடுத்து என்ன புண்ணியம்..?

//ச்சின்னப் பையன் said...
வருத்தமான விஷயம்தான்.:-((((//

நன்றி ச்சின்னப் பையன்..

உண்மைத்தமிழன் said...

//ஜீவன் said...
இதே மேற்கத்தியவர்கள்தான், நாய்க்கு கண் ஆப்பரேசன் செய்வது, நடக்க முடியாத பன்றிக்கு, காலில் ஷூ மாட்டுவது போன்ற , அபிரிதமான ஜீவகாருண்யத்தையும் காண்பிக்கிறார்கள்.. ஒன்னுமே புரியல..//

மேற்கத்தியவர்கள் என்றில்லை ஜீவன்.. எல்லா நாட்டிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள். வியாபாரிகளும் இருக்கிறார்கள்.

இப்போது இதனை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் போலும்..

விலங்குகளுக்கு உதவி செய்கிறவர்கள் விலங்குகள் மேல் பிரியம் கொண்ட தனி மனிதர்கள்..

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
Excellent narration of the scene you had seen in the television. Keep it up oonaa thaanaa!//

Thanks Vaathiyaarea..

உண்மைத்தமிழன் said...

//சரவணன் said...
பதிவுக்கு நன்றி. உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்கிறேன். மிகக் கொடூரமான வேட்டையை படமாக்கி கொடுத்தால்தான் அவருக்கு அதிக பணம் மீடியாவில் கிடைக்கும். அதை ஒளிபரப்பினால்தான் அந்த டிவி மக்களால் பார்கப்படும். மக்களால் அதிகம் பார்கப்படும் நிகழ்ச்சிக்கே விளம்பரம் கொடுப்பார்கள். உண்மைத்தமிழன் அவர்களே இதில் நீங்கள் தவறை யாரிடம் கூறப்போகிறீர்கள்.//

வேறு யாரிடம் மக்களிடம்தான்..

//சந்தை என்பது நாம் காய்கறி வாங்குமிடம் மட்டுமல்ல இது போல வாழ்வின் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து விட்டது, இங்கு வலியது வெல்லும் என்பது மட்டுமே தாரகமந்திரம். தினத்தந்தி ஏன் கொடூரமான செய்திகளையே வெளியிடுகிறது என்று முன்பெல்லாம் விவாதிப்போம். நல்ல செய்தி நடக்குற இடத்துல நிருபருக்கு என்ன வேலை அப்படின்னு சொல்லுவாங்க. அதன் அடுத்த பரிமாணம்தான் இது.//

அது நடந்து விட்ட நிகழ்வை வெளிப்படுத்துவது. இது அப்படி நடக்க வைத்து அதனை செய்தியாக்கி பணம் சம்பாதிக்க நினைப்பது. கொலை செய்வதற்குச் சமமான செயல் அல்லவா.

//உங்களுக்குத் தெரியுமா வயதான தலைவர்களுக்கு இரங்கல் செய்தி மற்றும் புகைப்படங்கள் ஒவ்வொரு பத்திரிகை ஆஃபிசிலும் தயாரக இருக்கும்.//

இருக்கிறது. அது அவர்களது வேலை.. நானே தயார் செய்து கொடுத்திருக்கிறேன். பத்திரிகை வேலை என்பதே அதுதானே..

//என்ன அவுட் ஆஃப் பார்ம்ல இருக்கீங்களா பதிவு இவ்வளவு சின்னதா இருக்கு.:-)//

போதும்.. இதுக்கே மனசு வரல.. பாவம் அந்த மாடு.. உன் வயித்தைக் கிழிச்சு குடலை உருவிருவேன் என்று சின்ன புள்ளைகளிடம் விளையாட்டாகப் பேசும்போது வருகின்ற வார்த்தைகள்.. இதை எழுதும்போது வர மறுத்தது. உடல் கிழிக்கப்பட்டு கொண்டிருக்க அந்த வேதனையை உணர்ந்தபடியே கொஞ்சம், கொஞ்சமாக செத்த அந்த மாட்டின் நிலைமையை நினைத்தால்.. போதுமடா சாமி..

உண்மைத்தமிழன் said...

//உங்கள் தமிழன் said...
//சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தது.//
பதிவு போட சரக்கில்லேன்னா இப்படியா அநியாயம் பண்ணுறது?///

என்னய்யா இது அக்கிரமமா இருக்குது..? எது அநியாயம்? நான் விருந்து சாப்பிட போனதா? இல்லாட்டி அந்த சேனலை பார்த்ததா..?

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}
செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறே.//

ஏன் இன்னிக்கு இம்புட்டு லேட்டு? எப்பவும் முதல் ஆளா வருவியே முருகா.. இன்னிக்கு 1 நாள் லேட்டா வந்திருக்கியேப்பூ..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//Anonymous said...
{{இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.}}
செவுட்டு ஒக்கலிகா கம்முனாட்டி பய்யா. உனக்கு காதும் கேட்காது என்ன நடக்குதுன்னும் புரியாது. ப்ளூ பிலிமு பார்க்குற நாயி நீயெல்லாம் ஏண்டா ஜியாக்ரபி டிவி பார்க்குறே//
இது மாதிரி பின்னூட்டங்களை தடை செய்யலாமே? ரசனை இல்லா............///

தடை செய்யலாம்தான்.. எல்லாம் ஒரு காரணம்தான்.. அந்த 'முருக'னுக்கே இது தெரியுமே..?

பாபு said...

மனிதர்களின் கோர முகத்தை காட்டிய இந்த காட்சி போல மிருகத்தின் மென்மையான குணத்தை காட்டிய ஒரு நிகழ்ச்சி animal planet இல் பார்த்தேன்.
அது பற்றிய பதிவு இங்கே.
http://nallananban-babu.blogspot.com/2008/07/blog-post_12.html

உண்மைத்தமிழன் said...

//babu said...
மனிதர்களின் கோர முகத்தை காட்டிய இந்த காட்சி போல மிருகத்தின் மென்மையான குணத்தை காட்டிய ஒரு நிகழ்ச்சி animal planet இல் பார்த்தேன். அது பற்றிய பதிவு இங்கே. http://nallananban-babu.blogspot.com/2008/07/blog-post_12.html//

நன்றி பாபு ஸார்..

நான் இது பற்றிய செய்திகளை தினசரிகளில் படித்தேன்..

abeer ahmed said...

See who owns promotedprofits.com or any other website:
http://whois.domaintasks.com/promotedprofits.com