தமிழச்சியின் பதிவுகளை நீக்குக - தமிழ்மணத்திற்கு கோரிக்கை


25-02-2008

அன்புள்ளம் கொண்ட தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு,

தொடர்ந்த சில வாரங்களாக தமிழச்சி என்னும் பதிவர், தான் எழுதி வரும் இடுகைகளில் முழுக்க, முழுக்க பலரும் பொதுத்தளத்தில் பேச முன் வராத வார்த்தைகளை முன் வைத்து எழுதி வருகிறார்.

அது அவரது தனித்தளம் என்றாலும் அதனை எங்களது கண்பார்வைக்குக் கொண்டு வருவது பொதுத்தளமான தமிழ்மணம் என்பதால் இது கவனத்துக்குரியது..

தமிழ் மொழியின் பால் ஈடுபாடு கொண்ட எண்ணற்றத் தமிழர்கள் தங்களது பொன்னான நேரத்தையும், கணிசமான அளவு பணத்தையும் இதற்காக செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற அடாத பதிவுகளையும் நாங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இது எங்களுக்கு தேவையற்ற வேலை என்றே கருதுகிறோம்.

இப்போது அது அளவு கடந்து, பின்னூடமிடுபவர்களைக்கூட ஒரு மனிதராகக்கூட மதிக்கத் துணியாத அளவுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு பதிவர் தமிழ்மணத்திற்கு தேவையா என்று நீங்கள் யோசிக்க வேணடும்.

தேவையில்லை என்பதால்தான் இந்த மடல்..

தயவு செய்து தமிழச்சியின் பதிவுகளை திரட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இந்த செயலே அவருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

தொடர்ந்து, அவர் அப்படி எழுதுவதை நிறுத்திக் கொண்டு கோரிக்கை வைத்தால் பின்பு நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் முன் செல்ல வேண்டிய பாதையின் தூரம் நிறையவே இருக்கிறது. நமது சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியவைகளும் நிறைய இருக்கின்றன. இந்த நிலையில் இது போன்ற முட்டாள்தனங்களுக்கு நமது சக்தியை செலவிடுவது வீணான செயல்.

ஆகவே, விரைந்து முடிவெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

23 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

நாற்பது பக்க நோட்டளவிற்கு பதிவிருக்குமென வந்த எனக்கு ஏமாற்றமான ஏமாற்றம்....

என்ன ஆச்சு உங்களுக்கு...முன்னெல்லாம் இப்படி இருந்ததில்லையே....ஹி..ஹி...

உடம்பு கிடம்பு சரியில்லையா...அல்லது நீங்க உண்மைதமிழனின் போலியா...ஹி..ஹி...

என்னவோ போங்க...

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,

"அது" பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போவுது, நீக்கணும் ,தொறத்தனும் எல்லாம் எதுக்கு. ஆனால் கண்டனம் தெரிவிக்கணும் என்றால் தெரிவித்து விடனும், ஏன் இப்படிலாம் எழுதுகின்றாய் என்று கேட்கலாம்,சரியான பதில் வருதோ இல்லையோ கேட்பதில் தவறே இல்லை.

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,

என்னாச்சு இத்தனை வேகமா கமெண்ட் ரீலீஸ் செய்றிங்க :-))

ஆனாலும் இனிமே உங்க புகார் எல்லாம் குப்பை தொட்டிக்கு தான் அது மட்டும் கண்பர்ம்ட் ... அவங்க சமூக சேவைலாம் செய்றாங்களாமே... ஆண்டனிக்கு வேலை வாங்கி தந்துட்டேன் தமிழ் மணத்துக்கே நன்றினுலாம் பதிவு போட்டாச்சே, உங்க புகார் ... புஸ் ஆச்சே... அதான் அப்பவே நான் சொன்னேனே ... நீக்கு போக்குலாம் வேனாம் , கண்டனம் போடுங்கோனு :-))

உண்மைத்தமிழர், இப்படிலாம் பதிவு போடுறத ரசிக்கணும், அதே சமயம் நோட் பண்ணி வச்சுக்கணும் யார்லாம் ஜிங் சாங் போடுறாங்க , நாளைக்கே அவங்கலாம் வேற எதுக்காவது ஆபாசம் , அபத்தம்னு கொடி புடிப்பாங்களே அப்போ கேட்க தான்(ஏற்கனவே ஒருத்தருக்கு நான் பேதி மருந்து கொடுத்து இருக்கேன்). ஆனா இந்த கோஷ்டில இருக்கிறதுலாம் நட்டு கேசுங்க அதான் நான் எல்லாம் உள்ள பூந்து கலாசாம இருக்கேன்.

பின் குறிப்பு: முழுசா பின்னூட்டத்தை போடவும், முக்கியமா அந்த நட்டு கேசுங்க என்பது வரணும்!

Lakshmi said...

I agree very much with this post. Thought i stopped visiting that blog, it is would be nice of Tamizmanam to atleast stop advertising those blogs here!

Anonymous said...

Hi, You can read the comments on the "thavu theeruthu " pathivu of thamizachi. You may note compelte double meaning, suggestive dialogues between lucky look and thamizachi. she may remove those if you publish this comment. That may help to strengthern your arguments

வழிப்போக்கன் said...

+ போட்டாச்சு.

Anonymous said...

பொதுவில் பலர் எழுதத் தயங்கும் தளத்தில் தமிழச்சி புழங்குவதால் ஏற்பட்ட நெருடலே இத்தகைய பதிவினை இட உங்களை தூண்டியிருக்கும் என நம்புகிறேன்....

பொத்தி பொத்தி வைத்து புழுங்குவதை காட்டிலும் பொதுவில் வைத்து விவாதிப்பதனால் தீர்வுகள் ஏற்படாதா என்கிற ஆதங்கமும் ஆத்திரமுமே தமிழச்சியை இத்தகைய பதிவுகளை இட உந்தியிருக்குமென்றே நினைக்கிறேன்....

அருவெறுப்புக்கும் ஆபாசத்திற்கும் இடையே நூலிழை வித்தியாசம்தான் இருக்கிறதென நினைக்கிறேன்...தமிழச்சியின் பதிவுகளில் ஆபாச உணர்வுகளை விட அருவெறுப்பான நிஜங்களை சுட்டிடும் தொனியே மேலோங்கியிருப்பதாய் கருதுகிறேன்....

இன்னும் நிறைய எழுதலாம்....இருப்பினும் உங்களின் கோரிக்கை ஒரு சகபதிவன் என்கிற வகையில் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாதென தெரிவித்திடவே இந்த பதிவு....

Anonymous said...

Nichayam adhai vazhi mozhihiren.

Senthil

Anonymous said...

tamilmanam removed some of her purely abusive posts and their comments. Most of her posts intend to convey messages though she thinks others are stupid of not knowing periyar and feminist issues.

I for one not for removing her blog from tamilmanam, but she has to educate herself on alienating supporters with her overbaking of cookies, and being adament in claiming she brings the perfect cookies to the pastry shop.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இரண்டாம் சொக்கன்...! said...
நாற்பது பக்க நோட்டளவிற்கு பதிவிருக்குமென வந்த எனக்கு ஏமாற்றமான ஏமாற்றம்.... என்ன ஆச்சு உங்களுக்கு...முன்னெல்லாம் இப்படி இருந்ததில்லையே....ஹி..ஹி... உடம்பு கிடம்பு சரியில்லையா...அல்லது நீங்க உண்மைதமிழனின் போலியா...ஹி..ஹி... என்னவோ போங்க...//

சொக்கா.. இந்த மேட்டருக்கு நாப்பது பக்கம் எழுதினா நீங்கள்லாம் தாங்குவீங்களா..? எத்தனை இடத்துல சென்ஸார் பண்ணணும்னு நினைச்சாலே எனக்கு பகீர்ன்னுது.. அதான் விட்டுட்டேன்..

ஆனாலும் என் மேல எல்லாருக்கும் ரொம்பத்தான்யா பாசம்..

தேங்க்ஸ் சொக்கன்..

ஆமா.. இந்த இடுகைக்கு நீங்க ஆதரவு கொடுக்குறீங்களா இல்லையா..? அதைச் சொல்லலையே சொக்கன்ஜி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வவ்வால் said...
உண்மைத்தமிழர், "அது" பாட்டுக்கு ஒரு ஓரமா இருந்துட்டு போவுது, நீக்கணும் ,தொறத்தனும் எல்லாம் எதுக்கு. ஆனால் கண்டனம் தெரிவிக்கணும் என்றால் தெரிவித்து விடனும், ஏன் இப்படிலாம் எழுதுகின்றாய் என்று கேட்கலாம், சரியான பதில் வருதோ இல்லையோ கேட்பதில் தவறே இல்லை.//

வவ்ஸ்.. கண்டனம் தெரிவித்தவர்களுக்கெல்லாம் பதில் எந்த லட்சணத்தில் வந்தது என்பதைத்தான் நீங்களும், நானும் பார்த்தோமே.. பிறகென்ன..?

கேள்வி கேட்டு சரியான பதில் கிடைத்து விவாதம் தொடருமெனில் வலையுலகில் கேள்வி கேட்பதற்கென்றே அவதாரம் எடுத்திருக்கும் திரு.வவ்வால்ஜி, அக்காவின் ஒவ்வொரு பதிவிலும் கொஸ்டீன் கேட்டு பதில் வாங்கி பாடம் நடத்தியிருப்பாரே..?

ஏன் செய்யவில்லை..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வவ்வால் said...
உண்மைத்தமிழர், என்னாச்சு இத்தனை வேகமா கமெண்ட் ரீலீஸ் செய்றிங்க :-))//

முழிச்சிருந்தேன். அதான் க்விக் ரிலீஸ்..

//ஆனாலும் இனிமே உங்க புகார் எல்லாம் குப்பை தொட்டிக்குதான் அது மட்டும் கண்பர்ம்ட் ... அவங்க சமூக சேவைலாம் செய்றாங்களாமே... ஆண்டனிக்கு வேலை வாங்கி தந்துட்டேன் தமிழ் மணத்துக்கே நன்றினுலாம் பதிவு போட்டாச்சே, உங்க புகார் ... புஸ் ஆச்சே... அதான் அப்பவே நான் சொன்னேனே ... நீக்கு போக்குலாம் வேனாம் , கண்டனம் போடுங்கோனு :-))//

கண்டனம் போட்டா டைம் வேஸ்ட்டு ஸார்.. இருக்காத.. உன் வீட்ல இருந்து என்ன வேண்ணாலும் பண்ணிக்கன்னு சொல்றது பெட்டர்..

//உண்மைத்தமிழர், இப்படிலாம் பதிவு போடுறத ரசிக்கணும், அதே சமயம் நோட் பண்ணி வச்சுக்கணும் யார்லாம் ஜிங் சாங் போடுறாங்க , நாளைக்கே அவங்கலாம் வேற எதுக்காவது ஆபாசம் , அபத்தம்னு கொடி புடிப்பாங்களே அப்போ கேட்க தான்(ஏற்கனவே ஒருத்தருக்கு நான் பேதி மருந்து கொடுத்து இருக்கேன்). ஆனா இந்த கோஷ்டில இருக்கிறதுலாம் நட்டு கேசுங்க அதான் நான் எல்லாம் உள்ள பூந்து கலாசாம இருக்கேன்.
பின் குறிப்பு: முழுசா பின்னூட்டத்தை போடவும், முக்கியமா அந்த நட்டு கேசுங்க என்பது வரணும்!//

இருக்கிற பிரச்சினையே பத்தலையா இங்க.. இதுல நீங்க வேற உள்ளே பூந்து, அதுலேயும் தலைகீழா பறந்து.. வேணாம்.. விட்ருங்க.. உங்களுடைய கேள்வி கேட்டு பதில் பெறும் வேலையைத் தொடருங்கள்..

இரண்டாம் சொக்கன்...! said...

உண்மை தமிழன்...

தமிழச்சியின் பதிவினை தமிழ்மணத்தில் நீக்குமளவிற்கு அவரது பதிவுகளில் என்ன ஆபாசத்தினை கண்டீர்கள் என புரியவில்லை....

ஊடகங்களில் எல்லா விதமான தளங்களின் பங்களிப்புகள் இருக்கின்றன...இதில் நீங்கள் விரும்புகிற மாதிரியான தளங்களில் பங்களிப்பதும் தவிர்ப்பதும் உங்களின் தனிபட்ட முடிவுகளில் இருக்க வேண்டுமேயொழிய ஒரு திரட்டியிடம் தள்ளிவை என கோரிக்கை வைப்பதோ அல்லது மிரட்டுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று....

மேலும் தமிழச்சியின் பதிவில் மலிவான கிளர்ச்சியினையோ...வக்கிரத்தையோ தூண்டும் திவுகள் ஏதுமில்லை....அப்படியிருக்க வெறும் வார்த்தை பூச்சுக்களால் கலாச்சார போர்வைக்குள் பதுங்கி கொண்டு அவரை முடக்க நினைப்பது அவரின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கவே செய்யும்...

அத்தகைய அரும்பணியினை நீங்கள் விரும்பியோ அல்லது விருப்பமில்லாமலோ செய்து கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்....

அதற்காக தமிழச்சிக்கு முழுமையாக வக்காலத்து வாங்குகிறேன் என நினைக்க வேண்டாம்...தமிழச்சியிடமும் குறைகள் உள்ளது...அதை போகிற போக்கில் அவர் புரிந்து திருத்திக் கொள்வார் என நம்புவோம்....

எனக்கும் கூட அவர் மீது சில வருத்தங்கள் உண்டு.....

(பதிவு சின்னதா இருந்தா என்ன பின்னூட்டம் நீளமா போட்ருவோம்ல...)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//இரண்டாம் சொக்கன்...! said...
உண்மை தமிழன்...
தமிழச்சியின் பதிவினை தமிழ்மணத்தில் நீக்குமளவிற்கு அவரது பதிவுகளில் என்ன ஆபாசத்தினை கண்டீர்கள் என புரியவில்லை....//

இப்படி நீங்கள் கேட்பதினால் எது ஆபாசம் என்பதில் உங்களுக்கும், எனக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பதாக உணர்கிறேன்.

ஆண், பெண் அந்தரங்க உறுப்புக்களை ஏதோ பெயர் சொல்லி பொதுவில் வைத்து அழைப்பதுகூட ஆபாசம்தான். அந்தப் பெயர்கள் இருக்கின்ற என்பதை நானும் மறக்கவில்லை. ஆனால் அதற்காக நடுவீட்டில் அந்தப் பேரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் எனில் அது வீடாக இருக்காது என்பது எனது அனுபவம்.

//ஊடகங்களில் எல்லா விதமான தளங்களின் பங்களிப்புகள் இருக்கின்றன...இதில் நீங்கள் விரும்புகிற மாதிரியான தளங்களில் பங்களிப்பதும் தவிர்ப்பதும் உங்களின் தனிபட்ட முடிவுகளில் இருக்க வேண்டுமேயொழிய ஒரு திரட்டியிடம் தள்ளிவை என கோரிக்கை வைப்பதோ அல்லது மிரட்டுவதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று....//

உண்மைதான்.. எல்லாவிதமான பங்களிப்புகளும் இருக்கன்றனதான். யார் இல்லை என்று சொன்னது? அதற்காக காமலோகம்.காம்-ல் இடம் பெறும் தகுதியுள்ள பதிவுகளை தமிழ்மணத்திலும் திரட்டச் சொல்லலாமா? அதுவும் ஒரு பங்களிப்புதானே என்று சும்மா இருந்து விடலாமா?

நான் தமிழ்மணத்திடம் கோரிக்கைதான் வைத்துள்ளேன்.. மிரட்டல் அல்ல சொக்கன்ஜி.. தயவு செய்து மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும்.

//மேலும் தமிழச்சியின் பதிவில் மலிவான கிளர்ச்சியினையோ...வக்கிரத்தையோ தூண்டும் திவுகள் ஏதுமில்லை....அப்படியிருக்க வெறும் வார்த்தை பூச்சுக்களால் கலாச்சார போர்வைக்குள் பதுங்கி கொண்டு அவரை முடக்க நினைப்பது அவரின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கவே செய்யும்...//

ஏன் இல்லை.. தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக அம்மணி எழுதி வரும் பதிவுகளின் தலைப்புகளில் தவறாமல் இடம் பெறும் அந்த வார்த்தை மலிவான கிளர்ச்சியைத் தூண்டுகின்ற வார்த்தை என்பதைக்கூடவா நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்..

நான் கலாச்சாரத்தை முன் வைத்து இதை பேசவில்லை.. இதை, இதைத்தான் பொதுவில் பேச வேண்டும் என்று மனிதர்களாகிய நமக்குள்ளேயே ஒரு வரைமுறை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். நமக்குத் தெரியாமலேயே அது நமக்குள் இருக்கிறது. அதை மீறுவது என்பது அனைவருக்கும் பாதகமானது.

இதனால் அவர் தீவிரமாவார் என்றால் அவர் தனிப்பதிவில் எழுதித் தள்ளட்டுமே.. யார் வேண்டாம் என்று மறுப்பது? இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா சொக்கன்ஜி..?

தமிழ்மணம் திரட்டாவிட்டால் அது என் கண் பார்வைக்கு வராதே.. அதனால்தான் திரட்டாதே என்று கோரிக்கை விடுக்கிறேன்.

//அத்தகைய அரும்பணியினை நீங்கள் விரும்பியோ அல்லது விருப்பமில்லாமலோ செய்து கொண்டிருக்கின்றீர்கள் என நினைக்கிறேன்....//

மிக, மிக விரும்பித்தான் எழுதினேன்..

//அதற்காக தமிழச்சிக்கு முழுமையாக வக்காலத்து வாங்குகிறேன் என நினைக்க வேண்டாம்...தமிழச்சியிடமும் குறைகள் உள்ளது...அதை போகிற போக்கில் அவர் புரிந்து திருத்திக் கொள்வார் என நம்புவோம்.... எனக்கும் கூட அவர் மீது சில வருத்தங்கள் உண்டு.....//

அப்படித்தான் நானும் இத்தனை நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் அவர் எப்போதும் திருந்த மாட்டார் என்று எனக்குத் தோன்றியதால்தான் இப்பதிவையே எழுதினேன்.. தாங்களும் பின்னாளில் இது போல் ஒரு பதிவை எழுத வேண்டி வரும்.. நினைவில் வைத்திருங்கள்..

//(பதிவு சின்னதா இருந்தா என்ன பின்னூட்டம் நீளமா போட்ருவோம்ல...)//

மிக்க நன்றி.. உங்களை மாதிரி ரசிகர்களின் இந்த வார்த்தைகள்தான் 20 பக்கம் டைப் செய்த அலுப்பும், களைப்பும், கை வலியும் ஒரே நொடியில் பறந்து போய்விடும்..

நன்றிகள் சொக்கன்ஜி..

அருண்மொழி said...

//ஆண், பெண் அந்தரங்க உறுப்புக்களை ஏதோ பெயர் சொல்லி பொதுவில் வைத்து அழைப்பதுகூட ஆபாசம்தான். அந்தப் பெயர்கள் இருக்கின்ற என்பதை நானும் மறக்கவில்லை. ஆனால் அதற்காக நடுவீட்டில் அந்தப் பேரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் எனில் அது வீடாக இருக்காது என்பது எனது அனுபவம்.//

உண்மைதமிழரே,

தமிழச்சி எழுதினா ஆபாசம். கோவிலுக்கு சென்று அந்த உறுப்புகளை கும்பிட்டால் ....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அருண்மொழி said...
//ஆண், பெண் அந்தரங்க உறுப்புக்களை ஏதோ பெயர் சொல்லி பொதுவில் வைத்து அழைப்பதுகூட ஆபாசம்தான். அந்தப் பெயர்கள் இருக்கின்ற என்பதை நானும் மறக்கவில்லை. ஆனால் அதற்காக நடுவீட்டில் அந்தப் பேரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் எனில் அது வீடாக இருக்காது என்பது எனது அனுபவம்.//
உண்மைதமிழரே,
தமிழச்சி எழுதினா ஆபாசம். கோவிலுக்கு சென்று அந்த உறுப்புகளை கும்பிட்டால்...//

கும்பிடுபவரிடம் சென்று கேளுங்கள் அருண்மொழியாரே..

Anonymous said...

தமிழச்சியை நிறுத்துமாறு சொன்ன நந்தவனத்துஆண்டியின் வலைப்பூவையே தமிழ்மணம் தூக்கிய கதையும் உண்டு நண்பரே . .

சுல்தான் said...

//பொத்தி பொத்தி வைத்து புழுங்குவதை காட்டிலும் பொதுவில் வைத்து விவாதிப்பதனால் தீர்வுகள் ஏற்படாதா என்கிற ஆதங்கமும் ஆத்திரமுமே தமிழச்சியை இத்தகைய பதிவுகளை இட உந்தியிருக்குமென்றே நினைக்கிறேன்....//

எழுதுவது நல்லதுதான். தமிழில் அதைச் சொல்ல அழகான வார்த்தைகள் இருக்கும்போது அப்படித்தான் சொல்வேன் என முரண்டு பிடிப்பது என்ன நியாயம்.

கோபத்தை வெளிப்படுத்த கேடு கெட்ட முறையில் திட்டுபவனுக்கும், உண்மையை கோபத்தோடு வெளிக்கொணர முயற்சிப்பவர்களுக்கும் வித்தியாசமேதும் வேண்டாமா?

அதே போன்ற சொற்களை கையாள்வேன் அடம் பிடிப்பதன் அவசியமென்ன?

பெண்குறி என்றால் புரியாதாம்! யாருக்கு?

நான் தமிழ்மணத்திலிருந்து நீக்கச் சொல்லவில்லை. திருந்தச் சொல்லி வலியுறுத்தலாம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
தமிழச்சியை நிறுத்துமாறு சொன்ன நந்தவனத்துஆண்டியின் வலைப்பூவையே தமிழ்மணம் தூக்கிய கதையும் உண்டு நண்பரே..//

இது என்ன புதுக் கதை? எப்போ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சுல்தான் said...
எழுதுவது நல்லதுதான். தமிழில் அதைச் சொல்ல அழகான வார்த்தைகள் இருக்கும்போது அப்படித்தான் சொல்வேன் என முரண்டு பிடிப்பது என்ன நியாயம் ?
கோபத்தை வெளிப்படுத்த கேடு கெட்ட முறையில் திட்டுபவனுக்கும், உண்மையை கோபத்தோடு வெளிக்கொணர முயற்சிப்பவர்களுக்கும் வித்தியாசமேதும் வேண்டாமா?
அதே போன்ற சொற்களை கையாள்வேன் என்று அடம் பிடிப்பதன் அவசியமென்ன?
பெண்குறி என்றால் புரியாதாம்! யாருக்கு?
நான் தமிழ்மணத்திலிருந்து நீக்கச் சொல்லவில்லை. திருந்தச் சொல்லி வலியுறுத்தலாம்.//

புரிதலுக்கு நன்றி சுல்தான் ஸார்..

எப்படி திருத்துவது? யார் திருத்துவது? தமிழ்மண நிர்வாகிகளுக்கு வேறு வேலையில்லையா? இவ்வளவு பதிவர்களும் சொல்லியும் கேட்காதவரா இனிமேல் கேட்கப் போகிறார்?

எனக்கு நம்பிக்கையில்லை ஸார்..

Auvaiyar said...

Pogatha idamthanile poga vendam!

Armstrong said...

பதிவின் ஆரம்பவரியில் 'தமிழச்சி' என்ற வார்த்தையை பச்சைக் கலரில் போட்டிருக்கும் உங்கள் உள்குத்தை மிகவும் ரசித்தேன்! :-)

அவர் பச்சை பச்சையாக எழுதுகிறார் என்பதை எவ்வளவு நாசூத்தாக....ஸ்ஸாரி.. அவர் பதிவைப் படிச்ச பழக்க தோஷம்... நாசூக்காகச் சொல்லியிருக்கிறீர்கள். இல்லை அவர் பச்சைத் தமிழச்சி என்று குறிப்பிடுகிறீர்களா? எது எப்படியோ? நல்லாருக்கு பதிவு.

நன்றி.

abeer ahmed said...

See who owns webposition.com or any other website:
http://whois.domaintasks.com/webposition.com