12-02-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று காலையில் இந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை. காதல் செய்கைகள் வாழ்க்கையில் சகஜமானதுதான் என்றாலும், சில அரைவேக்காடுகள் அதனைப் புரிந்து கொள்ளாத வெறியர்களாக இருப்பதையும் காண முடிகிறது.. வினோதினியின் இந்தக் கொடூர மரணத்திற்குக் காரணமானவனை நான் மரண தண்டனையை முற்றிலுமாக எதிர்ப்பவன் என்றாலும்....... ஒரு நிமிடம் முகத்தில் கட்டுப் போட்டிருக்கும் நிலையில் வெளியாகியிருக்கும் வினோதினியின் வீடியோவைப் பார்த்தவுடனேயே “அவனை படுக்க வைச்சு அப்படியே புல்டோசர் வைச்சு ஏத்திரலாம்”னு என் நெஞ்சு கொதித்தது என்னவோ உண்மை..!
எப்பேர்ப்பட்ட கொடுமை இது..? பாவம் அவரது தந்தை.. தேவதை போன்ற தனது மகளை, இத்தனை ஆண்டுகள் வளர்த்துவந்து, அத்தனையும் ஒரு நொடியில் நொறுங்கிப் போய் கிடப்பதை இந்த 3 மாதங்களாக பார்த்து எத்தனை துடித்திருப்பார்..! எவ்வளவு ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் அவரை ஆற்றுப்படுத்திட முடியாது..!
கடந்த சில ஆண்டுகளாகவே காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசீட் வீசும் வெறித்தனம் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது..! நேற்று கூட ஒரு பெண்ணின் மீது கெரசினை ஊற்றி எரிக்க முயன்றிருக்கிறான் ஒரு முட்டாள்..! இப்படி அரைவேக்காட்டுத்தனமாக காதலை அணுகுபவர்களையும், கொடுஞ்செயலை செய்ய நினைப்பவர்களையும் ஒரு நொடியில் அடையாளம் கண்டுவிட முடியாது.. தடுக்கவும் முடியாது..!
நம்மால் முடிந்தது, இந்தத் திராவகம் போன்ற நச்சுக்கள் மக்கள் கைகளில் எளிதாக கிடைக்கவிடாமல் செய்ய வேண்டும்..! அரசுகள் இந்த விஷயத்தில் முனைப்பாகச் செயல்பட்டு இதற்கொரு சட்ட வடிவையாவது கொண்டு வந்து தடுத்தாக வேண்டும்..! தற்கொலைக்கு நகைப்பட்டறை உரிமையாளர்களே சயனைடை பயன்படுத்தினார்கள்.. இப்போதும் அதுதான் அவர்களுக்குப் பயன்படுகிறது.. ஆனால் இதனைத் தடை செய்யவும் முடியாது.. கட்டுப்படுத்தவும் முடியாது.. ஆனால் திராவக பயன்பாட்டை மாநில அரசு நினைத்தால் தடுக்க முடியும்..!
இத்தனை பெரிய கொடூரத்தையும் தாங்கிக் கொண்டு இத்தனை நாட்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த வினோதினியின் மன தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.. இத்தனைக்குப் பிறகும் தான் இன்னமும் வாழ வேண்டும் என்று நினைத்து பேசிய வினோதினியின் வைராக்கியத்தை ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது..! பல இடங்களில் இருந்தும் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு மிக நீண்ட தாமதத்திற்குப் பின்பு மேல் சிகிச்சை செய்யத் துவங்கியதே இந்த பரிதாப மரணத்துக்குக் காரணம் என்று இப்போது அனைவருமே வருத்தப்படுகிறார்கள்.
இதில் அரசின் அலட்சியப் போக்கும் ஒரு காரணம்..! இத்தனை சீரியஸான நிலைமையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அரசு தனி அக்கறை எடுத்து அப்பலோ போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.. இது அரசின் கடமையும்கூட..! இதுவும் ஒரு வன்முறைச் சம்பவம்தான்..! இதில் குற்றவாளியை கைது செய்து ஜாமீனில் விடாமல் வைத்திருக்கிறோம் என்று சொல்வதில்தான் என்ன கடமையுணர்ச்சி இருக்கிறது..? உடனே, உரிய மருத்துவ உயர் சிகிச்சைகள் செய்திருக்க வேண்டாமா..? இப்போது இறந்தவுடன் சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.. ஒரு பக்கம் சரிவர கவனிக்கவில்லை என்று வினோதினி தரப்பும், தாமதமாக வந்ததால் எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்களும் மாறி, மாறி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..!
அதேபோல் காவல்துறையில் புகார் செய்திருந்தும் எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டதோடு காவல்துறை ஒதுங்கிக் கொண்டதாகவும் வினோதினியின் குடும்பத்தார் புகார் செய்கிறார்கள். காவல்துறையிடம் இதைப் பற்றிக் கேட்டால், “அவன் ஆசிட் அடிப்பான்னு யாருக்கு தெரியும்..” என்றுதான் நிச்சயம் சொல்வார்கள்..! இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை எதிரிகள்..? சுரேஷை தொடர்ந்து, காவல்துறை, கண்டுகொள்ளாத அரசு, கிடைக்காத மருத்துவ வசதிகள் என்று இத்தனை எதிரிகளையும் சமாளித்து இந்த 3 மாத காலம் உயிருடன் இருந்ததே பெரிய விஷயம்தான்..!
இன்றைய நிலையில் சுரேஷ் என்னும் கிறுக்கன் செய்த இந்தக் கொலை நமக்கும் ஒரு எச்சரிக்கை பாடமாகவே அமைய வேண்டும்.. இத்தனை அழகு, அறிவுடன் மிதந்து கொண்டிருந்த ஒரு மகளை, தேவதையை இழந்த அந்தக் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..!
|
Tweet |
22 comments:
தாங்க முடியாத மனவருத்தம் அந்த வீடியோவை பார்த்து தொலைத்துவிட்டேன். அவள் கண்களை எப்போதோ இழந்துவிட்டாள். உயிரோடு இனி இருந்தாலும் பார்வை கிடையாது. ஆசிட் வீச்சு அப்படி. இன்னு என்னவெல்லாம் பாதிப்போ. இந்த நிலையில் ஒருவகையில் மரணம் விடுதலைதான் போலிருக்கு.தூக்கம் வரவில்லை எனக்கு.
குடும்ப அமைப்பு பையன் வளர்ப்பில் கண்டிப்பாக கவனம் செலுத்திதான் ஆக வேண்டியிருக்கு. நிச்சயம் ஆணின் வளர்ப்பு பிரச்னைதான் இது.
இனி சினிமாவில் கதாநாயகன் ஒரு பொறுக்கி என்று கதை வந்தால் ரசிக்க முடியாது என்னால். இது நொய்மையான மனங்களில் மோசமான பாதிப்பை விளைவிக்கிறதோ...நடந்துகொண்டே இருக்கிறது இந்த மாதிரியான அவலங்கள்..இவைகளும் வாழ்வின் தவிர்க்கமுடியாத பகுதிதானோ? ப்ச்!
இதுவா உண்மைக் காதல்? பாவி.... அநியாயம் செஞ்சுட்டானேன்னு மனம் பதைக்குது:(
பெற்றோர் நிலைதான் ரொம்ப சங்கடமா இருக்கு. இந்த மனபாரத்தோடு மீதி நாட்களை வாழ்ந்து முடிக்கணுமே:(
ஆழ்ந்த இரங்கல்கள்.
அவளின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல
வார்த்தையே இல்லை....
இந்தியா இப்போது "கொடுர "சைக்கோக்கள் நிறைந்த நகரமாகிவிட்டது என்பது இப்பொது நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது தெரிகிறது
How does this illiterate idiots get Nitric Acid? I never heard of throwing acids in a girl's face anywhere but in India!!
This nation's youth are going in a dangerous direction!! மண்டையிலே என்ன களிமண்ணுதான் இருக்குமா இந்த முட்டாள்களுக்கு!!
டெல்லி இன்சிடெண்ட்டை பார்த்துட்டே எல்லாரும் கேவலமா பார்க்கிறாணுக. இதுபோல் இண்சிடெண்ட் தெரியவந்தால் துப்புவானுக..
குற்றவாளி தலையை வெட்டுறானுகனு நம்ம வாய்கிழிய பேசுறோம். இங்கே என்னடானா அதைவிட மிருகத்தனம் நம் இளைஞர்களிடம் இருந்து வெளிவருது!
அண்ணன் ஈரோடு கதிர் அவர்கள் ட்வீடெர்ல் சொன்னது போல, இந்த சமூகம் பெண்ணை சரியாக அணுகும் பக்குவத்தை கற்றுகொடுக்கவில்லை.
திரை ஊடகங்களும், மட்டமான பத்திரிக்கைகளும் இந்த மாதிரியான கேவலமான வழிமுறைகளை இளையர்கள் நெஞ்சில் விதைத்து விடுகின்றது.
இதுவும் ஒரு வகை மனநோய் தான்.போலீஸ் நிலையத்தில் இந்த மாதிரி புகார் வரும் பட்சத்தில் இன்னும் சிரத்தையுடன் இவ்விசயங்களை அணுகவேண்டும் முடிந்தால் இம்மாதிரி விசயங்களில் தகுந்த கவுன்சிலிங் ஏற்பாடு செய்யலாம்.இன்றைய இளையர்களுள் பாதிக்கு மேற்பட்டோர் காதலித்து கொண்டுருக்கிறார்கள், அவர்களுக்கு 'காதல் பட்டறைகளை' நடத்தி ஓரளவுக்கு கட்டுபடுத்தலாம். எதோ மனதில் தோன்றியது அஞ்சலியும் அனுதாபங்களையும் தெருவித்து விட்டு விலகி கொள்வதைவிட ஆக்கபூர்வமாய் எதாவது யோசிக்க வேண்டுமென தோன்றியது, தவறு இருந்தால் டின் கட்டிவிடாதிர்கள்.
காத்துவாயன்.
மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்களை ஒரு போதும் கட்டுப்படுத்த இயலாது. இவை உளவியல் சார்ந்து வாசிப்புடையவர்களுக்கு நன்கு விளங்கும். பல பாலியல் குற்றங்களுக்கு அத்திவாரமே அவரது சமூகம், குடும்பம், கல்வி மற்றும் மரபியல் சார்ந்த வாழ்க்கை முறைகள் தான் காரணமாக அமைகின்றது.
பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.
பழிக்குப் பழிச் சட்டம்: பெண்களுக்கு பாதுக்காப்பு தந்து விடாது
I fully concur with this article.
I feel sorry for the girl and the family.
However I would like to point out that Girls should maintain decent relationship with boys.
I have seen many college girls in public places moving very socially with their friends which may be mistaken by the boys as love. Like Touching and speaking, discussing personal life, eating out of one lunch box, calling the boys 'ennappa' in a enticing tones, sending messages at night time. These kinds of behaviour sends wrong signals to the boys.
edu ponra thavarugal sybargaluku kadum thandanaigal vidhika vendum adhe pol acid virka thadai vidhika vendum
//இனி சினிமாவில் கதாநாயகன் ஒரு பொறுக்கி என்று கதை வந்தால் ரசிக்க முடியாது என்னால்//
very correct. for around 30 years rowdies/porukkies are shown as heroes in tamil cinema. its high time they correct themselves. infact it would be better if this stupid tamil cinema industry collapse on its own. they have done more damages to the society than good.
bharathirajaa idhukellaam vaai thirapaaraa?
சரியா எழுதி இருக்கீங்க. ஆனா சினிமாவோட தாக்கத்தை பத்தி மட்டும் சொல்லம விட்டுடீங்க. தமிழ் சினிமா என்னிக்கு தான் தன்னோட தப்புகளை உணருமோ?
The parents should be held responsible for this tragedy. According to Thinathandhi today, Suresh, the culprit, was no stranger to the family. She belonged to the low income group (her father is a watchman) and the family was in relationship with Suresh. They let him in their house whenever he wanted. He was in good terms with her. He helped the family in all ways he could. He must have visited the house many times even when she was alone trying to earn her trust and, finally, her love.
Thanthi did not, however, report when the relationship began exactly i.e. when he befriended the family. But we understood from the report that it must be for many years. He was nursing his attachment to her. It is natural as she was beautiful and his desire for her is also natural as she was like him from low income group only. He is a construction worker. But the terms of equality crashed when she became a software engineer and reached a status beyond him. He expressed his love to her at this stage and she spurned it. No wonder, how can a software engineer marry a construction worker although she is the daughter of a watchman? At this stage, we don’t know whether the parents interfered. They did it, according to Thanthi, after she spurned his proposal.
So, it is not a sudden one day affair. It went on. By throwing him out, they parents should have anticipated that he would react as he was the wounded tiger which will bite one day. When he threw the acid, he is reported to have said: “You are only for me. If not, you should not be for anyone!”
These words are common in all cases of boys getting rejected. In case of girls, they don’t say that; as they generally commit suicide except in some rare cases like Poovazhagi who killed the son of her lover who rejected her, and stuffed the body inside a suitcase. The whole TN was stunned. Such murders are common.
When there is a common element in such affairs, it is foolish to not expect it. Dear parents! Expect it and save your daughters. If you expect, only then you can devise suitable ways to save your daughter.
It is a crime of passion. It is bound to occur and recur. No use writing long posts calling for death sentence. Or tooth for tooth or eye for eye. Any crime can be deterred with strong deterrent punishment but Crimes of Passions cannot be deterred. No Allah, no Muruga can stop crimes of passion!
A man, when he is hot with such criminal passion, will do any kind of extreme act w/o giving an iota of thought to anything at the time.
I agree with Iqbal Selvan. Remedies lie elsewhere to prevent recurrence. I agree with Unmait Tamilian to an extent that he has suggested some useful things like banning sale of volatile acids in open market. All other contents are seen in all bloggers.
Alagaana vayasuppennai veettil vaiththukkondu, vaaliban oruvanai azaiththu veghu naatkalaaha pazakavittu, avanai oru kudumba nanpanaakkkitkondu, oru naal thanakku pennaik kattivaipaarkal enra nambikkai aalamaaha valarththuvittu, pin thanmakal avanai veendaamenravudan, avan amaithiyaakappoovaan enru ethipaarppatharukku ithu America illai. Thamiwaadu. Muttalkal yaar ingkee?
Enavee muthal kutravaalikal petrooree.
எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன்
Now a days in India there is a term friendship is used to hide the nasty actions of the young girls and guys.The said guy was in a friendship with the family for a long time.He is not a relative of them and on what basis the guy was in friendship with the the family for a long time.?What type of help he was giving to the girls family?? Finanacially or anyother form of help.I had come across several incidents where the status of women changes overnight and the firnship also.First of all let the parents of the girl explain what type of relationship this guy had with the family???Incidentally this guy had visited the house when the parents were not at home.I dont say some mishaps may have happenend .But it is questionalble on what basis does the parents allowed this guy to be a close friend with them for a long period of time??
உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விசயம்! வினோதினியின் மரணம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்! கடுமையான தண்டனைகள் இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும்! ஆசிட் பயன் பாட்டில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்!
வழக்கு எண் 18/9 எடுத்த சக்தி பாலாஜி என்பவருக்கும் இந்த குற்றத்தில் பெரும் பங்கு உள்ளது. கொஞ்ச நாளாக இல்லாமல் இருந்த இந்த ஆசிட் விஷயத்தை மறுபடியும் சமூக புத்திக்கு கொண்டு வந்தவர் இவர்தான். பருத்தி வீரன் அலெக்ஸ் பாண்டியன் சிவா மனசுல சக்தி ஒரு கல் ஒரு கண்ணாடி களவாணி போன்ற கீழ்த்தரமான தமிழ் படங்களை குப்பை போல ஒதுக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுப்பது நல்லது.
காரிகன் இன்னும் ஆழமாக சிந்திக்கலாம்.
எப்படி?
காரிகன் சுட்டும் தமிழ்ப்படங்கள் வராதிருந்தால் - தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாரும் தம் வயதையொத்த பெண்களை ஆணாதிக்கப்பார்வையில்லாமல் நடாத்துபவரா?
சுரேஷ் இந்தப்படத்தைப்பார்த்து அமிலம் எறிந்தான் என்று வைத்துக்கொண்டாலும், இந்தப்படம் வராதிருந்தால் அவன் அவளை விட்டுவைத்திருப்பானா காரிகன்?
ஆண்டுக்கணக்காக, அல்லது மாதங்களாக அவளின் பெற்றொர் இருவரையும் உரையாட வைத்திருக்கின்றனர். ஒரே வீட்டில். அவள் தன்னைக்காதலிப்பதாக நேரடியாகச் சொல்லாவிடினும் அப்படி ஒருநாள் நடக்கும் என அவனை நம்ப வைக்கும்படி அவ்வுரையாடல்கள் இருந்திருக்கும். இல்லாவிட்டால் என்றோ கேட்டு என்றோ முடித்திருப்பானே? அல்லது அவன் ஒருமுறையாவது தவறாகப்பேசியிருந்தால் அவள் தன் பெற்றோரிடம் சொல்லியிருப்பாளே? அப்படியெல்லாம் நடக்கவில்லை. அவளின் நிலை உயர இவன் தவித்திருப்பான். கேட்டேவிட்டான். பயந்தது நடந்துவிட்டது. அவள் மறுக்க, அவளின் பெற்றோர் இத்தனை மாதங்கள் வந்து போனவனை வராதேயென, அப்போது என்ன வந்து குடிவந்தது அவன் மனத்தில்?
அங்குதான் நாம் இருக்கிறோம். அதாவது சமூகம் இருக்கிறது; ஆணுக்குத்தான் பெண்; பெண்ணுக்கன்று ஆண். தான் ஆசைப்பட அவள் மறுப்பதா? அல்ல, தான் ஆசைப்பட்டது நழுவி இன்னொருவனுக்கு உடைமையாகி விடுவதா என்ற பெண்ணை ஒரு பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கம் வந்தது. Not new. Our society is always patriarchal society where a woman is an asset in material terms; a child producing entity; very important as a tea powder in a tea stall! A fair girl is a proud exhibition to a young husband. Our suresh desired both fairness and status.
இதை எந்த அல்லாவாலும் முருகனாலும் தடுக்க முடியாது. சமூகம் செய்தது. சமூகம்தான் நிறுத்தவேண்டும். Society wont stop it. Look at Khap panchayats and honour killings in TN too.
வழக்கு எண் feature film பார்த்ததால் அமிலம்; இல்லாவிட்டால், அவனுக்கு வேறு ஆயுதங்கள்.
கொல்லவேண்டும் என்பதே உணர்வு. அந்த உணர்வை வளர்த்து தீனி போட்டது அவன் வாழ்ந்த சமூகம். சைஸ் பாரரா...செம கட்டை" dialogues you may have heard from your own colleagues when a new female officer takes over. She is just meat. Not more than that. From where has this idea come? Even among the educated guys?
இங்கு இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்? வழக்கு எண் படத்தில் அந்த ரோட்டோரத்துப்பையன் அந்த வேலைக்காரியின் மேல் அமிலத்தை வீசியிருந்தால், அது வாழ்க்கையில் காண்பது. A reality show!
மாறாக, ஒரு பணக்காரப்பையன் ஒரு பணக்காரப்பெண்ணின் மேல் வீசுவதாக காட்டி பொய் சொன்னார் பாலாஜி. ஏன்?
பணக்காரர்கள் ஒருவருக்காக வாழ்வதில்லை. ஒரு பெண்ணை போகிப்பான். இல்லாவிட்டால் அவளைவிட இன்னொருத்தியிடம் போவான் இலகுவாக. ஒரே பெண்; தனக்குத்தான்; என்ற வெறியெல்லாம் அவர்களிடம் கிடையா. காதலில் தோல்வியுற்று, ரயில் முன் குதிப்பது, விசத்தைக் குடிப்பதெல்லாம் மேட்டுக்குடி செய்யாது.
இங்கே இரு கீழ்க்குடி மக்கள். இது குடிமக்களின் சோகக் காப்பியம். The psychology of mofusil town or village boys are far different and far diabolical as they suffer from deep inferiority complex and the very idea of one of them, that too, a girl, getting out of their society into a better society, will make their minds hell.
City girls should move with city boys (I don't mean Chennai city. It is a big village in mind, I know). Never go near village boys or city boys from low class background if you are a girl.
பொத்தாம் பொதுவாக ஆணாதிக்க சிந்தனை என்று சொல்லி சில கொடிய குற்றங்களை செய்பவர்களை நாம் அலட்சியபடுத்தி அந்த குற்றத்தின் தீவிரத்தையும் அதன் பின் இருக்கும் தூண்டுதல்களையும் புரிந்துகொள்ள முயல்வதில்லை. இந்த ஆசிட் வீச்சு ஒரு படத்தின் பாதிப்பே என்பது உண்மை. இதனால் சில படங்களை புறக்கணிப்பதால் இது போன்ற செயல்கள் குறைந்துவிடுமா என்று நியாயமாக கேள்வி கேட்பதால் என்ன நடக்கும்? தமிழ் சினிமா இன்னும் சில வக்கிரமான சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் செயல்களையும் நாளை இந்த சமூகத்தில் இறக்குமதி செய்யும்.
பதினாறு வயதினிலே படத்தில் ரஜினி பேசும் "அவளுக்கென்ன அவ ஆத்தாவுக்கே தாவணி போட்டா நல்லா இருக்கும்" என்ற வசனம் அப்போது மிக பிரபலமானது. ஆனால் ரஜினி அங்கே வில்லன். வில்லன்களை நம் மக்கள் பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் வரும் நாயகர்களே இப்படி பெண்களை வக்கிரமான சீண்டும் காட்சிகள் வசனங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரியது. தொண்ணூறுகளுக்கு முன்புவரை சினிமா ஒரு சராசரி தமிழ் குடும்பத்தின் பொதுவான பட்ஜெட்டில் தவறாமல் இருந்தது. குடும்பத்தோடு மக்கள் படம் பார்த்தார்கள். எனவே பெண்கள் மற்றும் குடும்பம் என்று ஒருவித டார்கெட் இருந்ததால் தமிழ் சினிமா வக்கிர பாதையில் பயணிக்க போதுமான பாதை அப்போது இல்லை. இன்றோ டார்கெட் ஆடிஎன்ஸ் என்பது விடலை பையன்கள் கல்லூரி மாணவர்கள் என்ற 20 வயதுக்குள் உள்ள கூட்டம்தான். இவர்களை திருப்பதி படுத்த என்ன செய்யலாம் என்றால் பெண்ணை துரத்திகொண்டே இரு அவளை மரியாதை இல்லாமல் பேசு, நீ எனக்குதான் என்னை விட்டால் வேறு யாரும் உன்னை தொட முடியாது என்பது போன்ற ஆண் ஆதிக்க வக்கிர சிந்தனைகள் வீரியமாக உயிர் பெறுகின்றன.
நான் குறிப்பிட்ட படங்களில் வரும் கதாநாயகனே அந்த காலத்து வில்லன் அளவுக்கு பெண்களிடம் சீண்டல் செய்கிறவன். அவன் பேசும் வசனங்கள் நம்மையே மிரள வைக்கின்றன. ராஜேஷ் என்பவர் இயக்கிய படங்கள் எல்லாவற்றிலும் ஹீரோக்கள் வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கும் கோவில்காளைமாடுகள். தன்னை விரும்பாத பெண்ணை வம்படியாக பின் தொடர்ந்து அவளை பெண்ணாகவே மதிக்காத தொனியில் தரக்குறைவாக காட்சிக்கு காட்சி பேசி (அதை நகைச்சவை என்று மக்களை நம்ப வைத்ததே ராஜேஷின் வெற்றி) கடைசியில் அதே பெண்ணை மணப்பதுதான் அவரின் கதைக்களம்.
இது போன்ற பெண்களை ஒரு சக மனுஷியாக காட்டாத படங்களையும் அந்த இயக்குனர்களையும் நாம் புறக்கணிப்பதில் என்ன தவறு என்பதே என் கேள்வி. ஒரு சினிமா வாலிப வயதில் உள்ள ஆணின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என்பதால் இந்த வினோதினியின் மரணத்திற்கு நமது பொறுப்பில்லாத சினிமாக்களும் மறுக்க முடியாத ஒரு காரணம். சினிமாக்கள் வெகு வீரியமகாவும் விரைவாகவும் நமது சமூக சிந்தனையை வழி நடத்துகின்றன என்பதில் மாற்று கருத்து உள்ளவர்களால் மட்டுமே இந்த கொடுமைக்கு கை கொடுக்க முடியும். தயவு செய்து கீழ்த்தரமான தமிழ் படங்களுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்துங்கள்.
திரைப்படங்களின் காதலைப்பார்த்து பெண்ணை அடைய முயல்வதும் முடியாதபோது அமிலத்தை வீசியழிப்பதும் சமூகத்தில் கீழ்மட்ட வர்க்க இளைஞர்களை மட்டுமே பாதித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் நான் சொல்வது. பாதிக்கவே செய்யாது என்பதன்று என் வாதம்.
அடுத்து, அவ்விளைஞர்கள் இப்படங்கள் வராவிட்டாலும்கூட அப்படித்தான் இருப்பார்கள். ஏனெனில் அதற்கான மனங்களை அவர்களிடம் உருவாக்கி ஏற்கனவே சமூகம் வைத்திருக்கிறது என்பதும் என் வாதம்.
நம் திரைப்பட இயக்குனர்கள் சமூகம் எதை அங்கீகரிக்கிறதோ அதைத்தான் காட்டுகின்றனர். அது எப்படிப்பட்ட கேடுகெட்ட செயலாக இருந்தாலும். அப்போதுதான் படம் வெற்றி பெரும். நம் சமூகம் பெண்ணை ஆணுக்காகவே பிறந்தவள் என்றுதான் நம் இளைஞர்களை நம்ப வைத்திருக்கிறது.
அடக்கவொருவன் வந்தால் அடங்குவது முறைதானே?; கம்பன் ஏமாந்தான் என்றெல்லாம் எழுதிப் பாடும்போது கைதட்டியவர்கள் நாம். ஏன் செய்தோம்?. நாம் விரும்புகிறோம், செய்கிறோம்.
பெண்ணடிமைத்தனத்தைப் போதித்தவனுக்கு சிலையெடுத்துப் போற்றுகிறோம்.
காகவன் சுட்டும் படங்கள் மட்டுமன்று எல்லாப்படங்களுமே நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்ணை ஆணுக்கு அடஙக வேண்டும் என்று போதித்து விட்டன. எம் ஜி ஆரின் கணவன், ஒரு புறம் அம்மா என்ற தாய்! இன்னொரு புறம்: ‘ஏ பி சி தெரியுமா எடுத்துச்சொன்னா புரியுமா? என்று படித்த பெண்களைக் கலாய்க்கும் மாட்டுக்காரன். ரஜனியின் அனேக படங்கள், என்றெல்லாம்,
மாட்டுக்காரனோ, கூலிக்காரனோ, தெருப்பொறுக்கியோ, அவனே உயர்ந்தவன் படித்த உழைக்கும் பெண்ணன்று என்று அக்காலப்படங்கள் சொல்லிவிட்டன! இக்காலப்படங்கள் எப்படிக்கொல்ல்லாம் என்று கூடமட்டும் சொல்லின!.
புதிதாக சமூகம் கெடவில்லை.
இந்த குறிப்பிட்ட கேசில், கீழ்த்தட்டு வர்க்கமென்றேன். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், அப்பெற்றோர்கள் காலை முதல் மாலை வரை கூலி வேலை செய்துவிட்டு இரவில் திரும்ப குழந்தைகள் தானே வளரும். அப்போது தன்னைச்சுற்றியிருக்கும் சமூகத்தை மட்டுமே பார்த்து வளரும். அச்சமுக்கத்தை நான் ஏற்கன்வே சொல்லிவிட்டேன்.
கூலிவேலை செய்பவன் படிக்காதவன். பள்ளி, கல்லூரிகளின் சரியான போதனை செய்தால் இவன் உருப்படுவான் எனற பேச்சு இவனுக்கு எப்படி ஒத்துவரும்? இவன் படிப்பது திறந்த சமூகம். அது கெட்டிருந்தால் இவனும் கெட்டுத்தான் போவான்.
வினோதினியைக் கொன்ற சுரேஷ் ஒரு கட்டிடத்தொழிலாளி. அவன் அமிலம் வீசுவதை மட்டுமே திரைப்படத்தில் இருந்து பெறுகிறான். தனக்குக் கிடைக்காத பெண் எவருக்குமே கிடைக்கக்கூடாது; எனவே அவளைக் கொல்ல வேண்டும் என்ற வெறியை அவனுக்குத் தந்தது சமூகம்!
ஒரு ஆள் செய்தால் அவனே எனலாம். தொடர்ந்து பெண்கள் கொல்லப்பட்டால்? பிராட்வேயில் ஓட ஓட ஒரு பெண் கொல்லப்பட்டாளே இரு மாதங்களுக்கு முன், இல்லையா? சேம் கேஸ். தனக்குத்தான் என்று இருக்க ஒருநாள், அவளின் பெற்றோர் வீட்டைக்காலி பண்ணு; என் பெண் உனக்கில்லையென, அவன் பிராட்வேயில் விரட்டி விரட்டிக் கொன்றான் எல்லாரும் பார்த்தனர்.
The boy is from KK district: a fine society where acid throwing s common. The more religious, the more arrogant the youth will be in treating the girls! From which film did he take the cue to kill her in broad day light?
Reading the news pains me. What consolation will words be to a family which has suffered this loss. Through her the next generation of her family would have advanced in society. We are fast losing all values in our country. Controls that are there are for a girl is very few in case of a boy.Earlier movies only glorified a good person but the film makers in their eagerness to make money are highlighting the ugly face existing in society. if these things are not hihlighted on the big screen it will not reach so many people.film makers should function with a social conciousness.
Post a Comment