விஸ்வரூபம் - சினிமா விமர்சனம்

11-02-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்..? இதில் எந்த இடத்திலும் இந்திய முஸ்லீம் சமுதாயத்தைப் பற்றி தவறாக எதுவும் சொல்லப்படவில்லை..! படத்தைப் பார்த்த பின்பும் முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியவர்களை  நினைத்து சிரிக்கத்தான் தோன்றுகிறது..! படத்தில் முதல் 30 நிமிடங்களைத் தவிர மற்றவைகள் அனைத்துமே நகைச்சுவைதான்..! இது ஏன் இவர்களுக்கு புரியவில்லை..? எவ்வித எதிர்ப்பும் இல்லாமலேயே இப்படம் வெளி வந்திருந்தால், கண்டிப்பாக சுமாராகத்தான் போயிருக்கும். இன்றுவரையிலான ஹவுஸ்புல் காட்சிகளுக்காக கமல், முதலில் எதிர்ப்புத் தெரிவித்து போராடிய 24 முஸ்லீம் அமைப்பினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்..!


துவக்கத்தில் கதக் நடனக் கலைஞராக கமல் காண்பிக்கும் நடிப்பும், நடனமும் இன்னமும் அவரை நடிப்பில் வீழ்த்திவிட எந்த நடிகரும் இங்கே இல்லை என்பதை உணர்த்துகிறது..! அந்த  பாடல் காட்சியில் அவர் காட்டும் அபிநயம்.. ஒவ்வொரு வார்த்தைக்கும் அந்த நடனத்துடன் இணைந்து அவர் காட்டும் பாவமும்.. வாவ்.. வாவ்.. எத்தனை முறை பார்த்தாலும் அந்தப் பாடல் காட்சி நம்மை கண்களைவிட்டுப் போகாது என்பது நிஜம்..! இப்படியொரு கலைஞனை நாம் அடைந்ததற்கு பெருமைப்பட்டாக வேண்டும் என்பதையே சொல்கிறது..! இந்தியாவிலேயே இந்தக் கலையில் கமலை மிஞ்ச வேறு யாருமில்லை..! 

இதற்குப் பின்னர் பொதுப்படையாக பார்த்தால், கதை போகும்போக்கு இடைவேளைவரையிலும் ஜெட் வேகம்தான். ஆனால் அதற்குப் பின்பு நொண்டிக் குதிரையாகிவிட்டது..! ஆப்கானிஸ்தான், தாலிபான்கள், முல்லா ஓமர், பின்லேடன் போன்றோரை வைத்துக் கொண்டு இதுவொரு கற்பனை கதை என்று சொல்லி, ஊடுறுவியிருக்கும் திரைக்கதையை நம்பத் தகுந்தவகையில் அமைக்காததுதான் பிற்பாதியின் தோல்விக்கு காரணம்..!

அலெக்ஸ் பாண்டியனில்தான் கடைசியாக இந்த மொக்கை வசனத்தைக் கேட்டிருந்தோம். “கையை அவுத்து விட்டு அப்புறம் அவர்கிட்ட பேசிப் பாரு..” என்ற டயலாக்கை..! நல்லவேளை இந்தப் படத்தில் அந்த சீனில் இருந்த இறுக்கம் மாறாமல், வேகம் குறையாமல் பூஜாகுமாரின் நடிப்பு சிறிதும் சிதறாமல் சீரியஸாகவே அவர் சொல்லும் வசனமும், அப்பாவியான கமல்ஹாசனின் வேண்டுகோளும் இந்தக் காட்சியை ரசிக்க வைக்கிறது..! அந்த அதிரடி துவக்கம் நன்றாகத்தான் இருந்தது..!  அதற்குப் பின்புதான் அனர்த்தமே..!

இத்தனை நாள் மனைவியாக இருந்தவளால் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மத்தை தெரிந்து கொண்டவுடன், மிகச் சாதாரணமாக அதை எடுத்துக் கொண்டு உடன் ஓடுவதும்.. நெற்றியில் ஒரு பிளாஸ்டரை மட்டும் ஒட்டிக் கொண்டு போர்வீரன் தோற்றத்தில் கமல் களத்தில் குதிப்பதும் அதுவரையில் கமல் காட்டியிருந்த நடிப்பு விஸ்வரூபத்தை பொசுக்கென்றாக்கிவிட்டது..!

ஆப்கன் மலைப்பாதையில் முல்லாவுடனான கார் பயணத்தின்போது நேட்டோ கூட்டுப் படைகளின் ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலாகச் செல்கிறது. இவர்கள் அவர்களையும் தாண்டி வந்து கொண்டேயிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை கமல்தான் சொல்ல வேண்டும்..! அடுத்தக் காட்சியில் வேறொரு இடத்தில் நேட்டோ படைகளினால் சிறு கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்க, உடனேயே அங்கே அதே ஜீப்பில் பறக்கிறார்கள்..! இது முடிகிற விஷயமா..? சுற்றுப்புறத்தில் ஒரு சிறிய அசைவுகள் இருந்தால்கூட அதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கு சக்தி படைத்த நேட்டோ படையினருக்கு இவர்களது ஜீப் மட்டுமே கண்ணுக்குத் தெரியவில்லை என்கிறார்கள்..!

இதுதான் இப்படியென்றால் அமெரிக்காவில் நடந்ததாகச் சொல்லப்படுவது முற்றிலும் லாஜிக்கின் எல்லை மீறல்..! அமெரிக்காவில்.. பட்டப் பகலில்.. கார் சேஸிங்கில் தப்பித்து ஏர்போர்ட்வரைக்கும் போய் விமானத்தைப் பிடிக்க முடியும் என்று கமல் காட்டியிருப்பதை ஆங்கிலப் படங்களில்கூட பார்த்திருக்க முடியாது..! எஃப்.பி.ஐ.க்கே தெரியாமல் அங்கே அல்கொய்தா தீவிரவாதியினரின் கொலைக் கூடமும்.. தற்கொலைப் படையினரின் நடமாட்டமும் இருக்கிறது என்பதைக் காட்டியிருப்பதும் நகைச்சுவைதான்..! 

பூஜாகுமாரின் ஏற்பாட்டில் கமலை பின் தொடரும் ஒற்றன் மிகச் சரியாக அல்கொய்தா டீமின் வாசலைப் போய் தொடுவதுதான் இப்படத்தின் மிகப் பெரிய திரைக்கதை முடிச்சு.. திரைக்கதைக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்று நினைத்து அப்படியே காட்சிகளை தொடர வைத்திருக்கிறார் போலும்..! அமெரிக்காவில் இருப்பவர்களெல்லாம் கேணையன்கள் போலவும், சீசியத்தின் மகிமையை அவர்களுக்கே உணர்த்தும் பூஜாகுமாரின் கேரக்டரெல்லாம் பயங்கர காமெடி..! ஒரு மிகப் பெரிய அழிவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் கள்ளக்காதலியிடம் பாஸ்வேர்டை கொடுப்பார் என்பதெல்லாம் நமது தமிழ்ச் சினிமாவில் மட்டுமே வரும்..!

அமெரிக்காவில் வெடிக்கப் போகும் பயங்கரத்தைத் தடுக்க இந்தியாவில் இருந்து வந்திருக்கும் ரகசிய ஏஜெண்ட்டுதான் நம்ம கமல் என்ற உண்மை வெளிப்படும்போது ரொம்பவே கை தட்டினேன்.. அப்பாடா.. இப்படியாச்சும் நாம ஜேம்ஸ்பாண்ட்டை அடிச்சு காலி பண்ணிட்டோம் என்று பெருமை கொள்ளலாம்.. இதோடு சொந்த நாட்டு மக்களிடையேகூட இதுவரையிலும் பேசாத நமது பிரதமர், கமலுக்கு போன் செய்து பேசி அவரைப் பாராட்டுகிறாராம்..! ரொம்பத்தான் பில்டப்பை அள்ளி விட்டிருக்கிறார்கள்..!

ஆப்கனில் இவர்கள் தங்கியிருக்கும் இடத்தை படையினர் முற்றுகையிட்டு அழிக்கும் காட்சிகளெல்லாம் தமிழ்ச் சினிமாவுக்கு நிச்சயம் பிரமாண்டம்தான்..! இது போன்று பணம் செலவழிக்க தயாரிப்பாளர் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் இது போன்று எடுத்துக் காட்ட முடியும். இதில்கூட ஹெலிகாப்டரில் இருந்து சுடுபவர்களிடமிருந்து தப்பித்து ஓடும் காட்சிகளையெல்லாம் எடுக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.. அந்த அளவுக்கு பிஸ்கோத்து தப்பித்தல்கள்..! 

ஆப்கனில் எடுப்பதாக பிளான் செய்து, பின்பு ஜோர்டானில் சில காட்சிகளை ஷூட் செய்து கடைசியாக சென்னையில் சத்யபாமா கல்லூரிக்கு பின்புறம் நிஜமான செட் போட்டுத்தான் ஹெலிகாப்டர் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள் என்று கிராபிக்ஸ் செய்தவர்களே வெளியில் சொல்லிவிட்டார்கள். அத்தோடு துரோகியொருவர் தூக்கிலிடப்படும் காட்சியில் கிராபிக்ஸ் வித்தையில் 10 பேர் நின்றிருந்ததை 100 பேராக ஆக்கி நம்மை மறக்கடித்திருக்கிறார்கள்..! இன்னும் சொல்ல வேண்டாததையெல்லாம் சொல்லிவிட்டார் அந்த கிராபிக்ஸ் இயக்குநர்.. அவருக்கு எனது நன்றி..!

கமல்ஹாசனின் ஜிகாதி கேரக்டரும் சில சமயங்களில் காமெடியாக இருக்கிறது.. காஷ்மீரி முஸ்லீம்.. அவருடைய அப்பா ஒரு ஜிகாதி.. அவர் வழியில் இவரும் களத்தில் இறங்குகிறார்.. அல்கொய்தாவுக்கு டிரெயினிங் கொடுக்க வந்திருக்கிறார்.. என்றெல்லாம் கமலின் கேரக்டரை விஸ்வரூபமாக்கினாலும், அவரே ஏதும் தெரியாதவராகத்தான் அங்கே வருகிறார்..! 

முல்லாவின் மனைவியை பரிசோதிக்க வரும் மருத்துவரை முல்லா ஓமர் வெளியே போகச் சொல்லும்போது கமல் காட்டும் முக பாவனை ஐயோ பாவம் என்கிறது..! முல்லாவின் மனைவியை புகைப்படம் எடுக்க கமல் செய்யும் முனைப்புகளும், இதை முல்லா பார்த்த பின்பு அவர் மகனை காப்பாற்றுவதுபோலான கமலின் நடிப்பும் அவர் உண்மையிலேயே ஜிகாதிதானா என்கிற சந்தேகத்தை இப்படத்தை அல்ஜஸீரா டிவியில் போட்டுக் காட்டித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா..?

முல்லா அனுப்பும் தற்கொலைப் படை வீரன் எதற்காக செல்கிறான் என்பதையும் தெரிந்து கொள்ளாதவராக கமல் இருக்கிறார்..! காட்டிக் கொடுத்தவரை தாலிபான் படைகள் தூக்கலிடும்போது தனது கூட்டாளியின் மரணத்தை எதிர்நோக்க முடியாமல் தவிக்கிறார். அந்த அப்பாவி தாயார், “உன் சகோதரனின் நிலைமையை பார்த்தாயா.?” என்ற கமலை பார்த்து கேட்கும் கேள்வியைக் கேட்டவுடன் தமிழ்ச் சினிமாவின் பார்மாலிட்டிக்காக சோகத்தைக் கவ்விக் கொண்டு ஓடி ஒளிகிறார் கமல்.. எதிரில் வரும் முல்லாவின் கேள்விக்கு பரிதாபமான முகத்தையே பதிலாகத் தருகிறார்.. இதெல்லாம் எதுக்கு..?

ஆப்கனில் தற்போதைய நிலைமையில் ஊர், ஊருக்கு எந்தந்த வீடுகளில் யார், யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆப்கன் அரசுகளைவிடவும் நேட்டோ படையினர்தான் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பதாக ஆப்கன் அரசே சொல்கிறது..! அதையும் மீறி தற்கொலைப் படையினருக்கு வெடிமருந்துகள் வரும் வழி எது என்பதைத்தான் நேட்டோ படையினர் வலைவீசித் தேடி வருகிறார்கள். அவைகளெல்லாம் பாகிஸ்தானில் இருந்து.. அதன் உளவுத் துறை மூலமாக வருகிறது என்பது உலகத்துக்கே தெரிந்தாலும், பூகோள ரீதியாக ஆப்கனுடன் இணைந்திருக்கும் பாகிஸ்தானின் அனைத்து வழிகளையும் அடைத்து வைத்து தாலிபான்களை தனிமைப்படுத்த இப்போதுகூட நேட்டோவாலும், அமெரிக்கவாலும் முடியவில்லை..! நிலைமை அங்கே அப்படி இருக்க… முல்லா மாதிரியான தீவிரவாதிகள் சர்வசாதரணமாக விவசாயி ஒருவரின் வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்வது போலவும், அவர் அபினை கமலுக்கு பரிசளிக்க முன் வருவதும்.. அதை கமல் தனது ஆள் மூலமாக மாற்றுவதுமான காட்சிகளெல்லாம் சுத்த ஜல்லிதான்.

கமலையும் அழைத்துக் கொண்டு பின்லேடனை பார்க்கப் போகும் காட்சியும், அங்கே ஆப்கன் அரசுகளைச் சேர்ந்தவர்களே அவரைப் பார்க்க வருவதாகவும் காட்டிவிட்டு, அவரை பார்த்தபடியே கமல் வெளியேறுவது போலவும் வைத்து பின்லேடனை கமலின் ஆதர்ச நாயகனாக சித்தரிக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள்..! இது போன்ற சிற்சில இடங்களில் கூர்ந்து கவனித்தால் கமலின் தனது கேரக்டரின் பில்டப்புகள் வேறு யாருக்கும் கிடைக்காத அளவுக்குக் கொடுத்திருப்பது தெரிகிறது..!

தன்னுடைய பாத்திரப் படைப்பை தனக்குக் கிடைத்திருக்கும் அட்சயப் பாத்திரமாக பாவித்திருக்கும் கமல், மற்றவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் செய்திருக்கும் வண்டி, வண்டியான ஓட்டைகள்தான் இப்படத்தை ரொம்பவும் சிலாகிக்க முடியாமல் செய்கிறது..! இப்படத்தில் மிகவும் வீணடிக்கப்பட்டிருப்பவர் நாசர்தான்..! கமல் எப்போதும் தன்னுடைய படங்களில்  நாசருக்கு நல்ல கேரக்டர்கள் கொடுத்து மகிழ்விப்பார். இதில் நாசருக்குக் கிடைத்திருப்பது வெறும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேரக்டர்தான்..! 

முல்லா ஓமராக நடித்திருக்கும் ராகுல்போஸ் அமெரிக்காவில் இருந்து நடத்தும் புனிதப்போர் ஒப்பனைகளெல்லாம் ரொம்பவே ஓவர்.. நமது தமிழ் ரசிகர்கள் எதைக் கொடுத்தாலும் எப்படி கொடுத்தாலும் கொடுப்பது கமல்ஹாசன் என்றவுடனயே தாராளமாக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் நினைத்துவிட்டார்..! அவருடைய ஒரு கண் குறைபாடு.. எந்தவிதத்தில்  யார் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது என்று கமலே சொன்னால் தேவலை..!

தாலிபான்களை அடையாளம் காட்டும் தமிழ்ப் படமாக இது வெளிவந்திருக்கும் சூழலில், இதைத் தடை செய்ய கூப்பாடுபோட்டு தங்களுடைய ஒட்டு மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்கள் தமிழக முஸ்லீம்கள்.. இஸ்லாமிய பெருமக்களில் யாரோ ஒரு சில தீவிரவாத கூட்டத்தினர் செய்வதற்கு அனைவருமே பொறுப்பேற்க மாட்டார்கள். ஆனால் உண்மையில் இப்படத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்க வேண்டுமெனில் அதனை பிராமண சமூகத்தினர்தான் செய்திருக்க வேண்டும்..!

தமிழ்ச் சினிமாவில் மிக அதிகமாகக் கேவலப்படுத்தப்பட்ட, படும் ஜாதியினர் பிராமணர்கள்தான்..! அதே ஜாதியில் பிறந்த கமல், தன்னுடைய திறமையாலேயே உயர்ந்ததாக இப்போதுவரையிலும் சொல்லிக் கொள்கிறார்..! ஆனால் அந்த பிறவித் திறமையை உள்ளடக்கிய அவருடைய ஜீன், பிராமண வாசம் கொண்டதுதான் என்பதை மட்டும் ஒப்புக் கொள்ளவே மறுக்கிறார்..! 

கேலி, கிண்டல் செய்வதற்கு பிராமணர்களை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருக்கும் தமிழ்ச் சினிமாக்காரர்கள் மாமிகளை மட்டுமே கிண்டல் செய்வார்களே தவிர, ஒரு போதும் உசிலம்பட்டி மதினிமார்களை ‘டச்’ செய்யவே  மாட்டார்கள். காதலுக்கும், மாமாக்களை தயிர் சாதம் என்பார்கள்.. ஆனால் இவர்கள் தாங்கள் மட்டுமே ஹீரோக்கள் என்பார்கள்..! இதில் இடம் பெற்றுள்ள ‘பாப்பாத்தி’ என்ற வசனம் முற்றிலும் தேவையில்லாதது..!  பொருத்தமில்லாதது..!

கமலுக்கு மாறுவேடம் போட வேறு ஜாதியினரே கிடைக்கவில்லை போலும்.. பூஜாகுமார் பிராமணாள் என்பதால் தானும் பிராமணனாகி வேஷம் போட வேண்டியதாகிவிட்டது என்று கமல் சொல்லலாம்.. கதாசிரியர், இயக்குநர் என்ற முறையில் அவரின் உரிமைதான் இது..! அதில் ஆண்ட்ரியாவையும் பிராமணப் பெண்ணாகக் காண்பித்து ‘பாப்பாத்தி’ என்று அழைத்து சிக்கனை ருசித்துப் பார்க்கும்படி சொல்லி அந்தக் காட்சியின் மூலமாக மனைவி மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுகிறாராம்..!

இடையிடையே பிராமண துவேஷம், தனது நாத்திகக் கொள்கை.. வெளிப்படையான பேச்சாக பூஜாவிடம், “பிராவுக்குக் கீழே வைச்சுக்க..” என்று போகிறபோக்கில் ஏதோ தண்ணியெடுத்துட்டு வா என்பதுபோல சொல்கிறார் கமல்.. இதாவது பரவாயில்லை.. கமல்ஹாசனின் மாமாவாக ஆக்ட் கொடுத்திருக்கும் சேகர் கபூரும், பூஜாவிடம் இதையேதான் திருப்பிச் சொல்கிறார்.. இதில் என்ன சினிமாத்தனம் இருக்கிறது..? 

தனது கடவுள் மறுப்புக் கொள்கையை கிடைக்கும் இடங்களிலெல்லாம் திணித்து வரும் கமல்ஹாசன் இதிலும் அப்படியே.. “எந்தக் கடவுள்..?” என்று சீனுக்கு தேவையில்லாத வசனத்தைக் கேட்டுவிட்டு அடுத்து தொடர்ந்து பூஜாவின் அலுவலகத்துக்குள் நுழைவது. பூஜாவை எஃப்.பி.ஐ. விசாரிக்கையில் தனது பிள்ளையாரை மனதில் வைத்து பேசுவது.. “கடலுக்குள் மூழ்கடிப்போம்..” என்று சொல்வது மூலம் பூஜாவின் கேரக்டரையும் ஒரு சின்னப்புள்ளத்தனமாகக் காட்டியிருக்கிறார்கள். கதை இந்த இடத்தில் மிக சீரியஸாக இருக்கிறது.. புறாக்கள் மூலமாக அமெரிக்காவுக்குள் சீசியத்தை கொண்டு வருகிறார்கள்  என்கிற கதையும், அதன் சூத்திரதாரி இன்னமும் அமெரிக்காவுக்குள்தான் இருக்கிறான்.. அவனைப் பிடிக்க வேண்டும் என்கிற வேகமும் இருக்க வேண்டிய இடத்தில் இது போன்ற தேவையற்ற வசனங்கள் மூலமாக நம்மை வெளியில் தள்ளி, பின்பு மீண்டும் கதைக்குள் நம்மை இழுத்து, பின்பு மீண்டும் வெளியில் தள்ளுவதுமாக வசனங்கள் மூலமாகவே பாதியிடங்களில் நாம் அல்லல்படுகிறோம்..! 

பூஜாகுமார் சிறப்பாகவே நடித்திருக்கிறார். சில டைட் குளோஸப் ஷாட்டுகளில் அழகு மிளிர்கிறது.. ஆண்ட்ரியாவைவிடவும்..! தனது முதல் படத்துக்கு பின்பு இப்படி தமிழ்ச் சினிமாவைவிட்டு வெளியேறியிருக்க வேண்டாம்.. இவருடனான காதல் காட்சிகள், கட்டில் காட்சிகள் கொண்ட பாடல்களை தூக்கிவிட்டுத்தான் சென்சார் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பாடல் காட்சி நிச்சயமாக இரண்டாம் பாகத்தில் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டிரெயிலரில்கூட வருகிறது.. அவருடைய ரசிகர்களின் பெரும் ஏமாற்றம் இதுதான்.. ஒண்ணுக்கு, ரெண்டு ஹீரோயின்ஸ் இருந்தும் நமக்கு ஒண்ணுமில்லையே என்பதுதான்..!

மிகச் சிறப்பான விஷயம் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும்தான்..! புதிய ஆரோ 3டி-யில் படம் பார்க்கும்போது மிக அசத்தலாக இருக்கிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்..! இதுதான் இப்படம் பற்றி இப்போதைக்கு பரவியிருக்கும் ஹாட் டாபிக்.. ஆரோவில் படம் பார்க்காதவர்கள் மீண்டும் ஒரு முறை அந்தத் தியேட்டருக்கு சென்று பாருங்கள்.. நிச்சயம் படம் பிடிக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு கதையையும் தாண்டி ஒரு விட்டலாச்சார்யாவின் மந்திர வேலையை இந்தத் தொழில் நுட்பம் செய்திருக்கிறது..!

எதிர்ப்புகள்.. சலசலப்புகள்.. கமலின் கண் கலங்கல்.. வேறு நாடு போகிறேன் என்ற ஆவேசம்.. ஜெயலலிதாவின் குள்ளநரித்தனம்.. அரசியல் கட்சிகளின் ஆதரவு, எதிர்ப்புகள்.. ஊடகங்களின் அளவுக்கதிகமான பப்ளிசிட்டி - இத்தனையும் ஏற்படுத்திய தாக்கத்தினால் படத்தின் வசூல் இன்றைய நிலைமையில் 100 கோடியைத் தாண்டிவிட்டது என்று கமல்ஹாசனே சொல்லிவிட்டார். ஆகவே, அவர் இனிமேல் இந்த நாட்டைவிட்டு போக வேண்டிய அவசியமோ, தனது வீட்டை விற்க வேண்டிய தேவையோ இருக்காது என்று நினைக்கிறேன்..!

இந்த அளவுக்கு அவர் மீது நம்பிக்கையும், பாசமும், அன்பும் வைத்திருக்கும் ரசிகர்களிடத்தில் தான் 2-ம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கிறேன் என்கிற உண்மையையும் அவர் சொல்லியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். முல்லா ஓமரை ஆப்கனில் போய் சந்தித்து அங்கேயே அவரை அழிப்பது என்ற அந்த 2-ம் பாகம் இன்னும் என்னென்ன எதிர்ப்புகளை சம்பாதிக்கப் போகிறதோ தெரியவில்லை.. இதையே ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அந்த 2-ம் பாகத்தை சென்சார் போர்டுகாரர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு பார்ப்பார்கள் என்றே கருதுகிறேன்..!

சென்சார் போர்டு என்றவுடன் இன்னொரு விஷயமும் நியாபகத்திற்கு வருகிறது..! இந்தப் படத்தில் தாலிபான்கள் பயிற்சியெடுக்கும் காட்சியில் ஜார்ஜ் புஷ்ஷின் முக வரைபடத்தை வைத்து அதனை துப்பாக்கியால் சல்லடையாகத் துளைத்தெடுக்கிறார்கள்.. இந்த அளவுக்கு தாலிபான்களுக்கு அவர் மீது கோபமிருக்க நியாயமுண்டு.. ஆப்கனின் தற்போதைய சீரழிவுக்கும் மிக முக்கிய காரணம் ஜார்ஜ் புஷ்தான் என்பதில் சந்தேகமேயில்லை..!

என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால்.. சென்சார் போர்டின் இந்த ஓர வஞ்சனையை நினைத்துத்தான்..! கருணாநிதி, ஜெயலலிதா, ராம்தாஸ், ஸ்டாலின், வைகோ, அழகிரி போன்று கட்சித் தலைவர்களின் பெயர்களைக்கூட ஒரு தமிழ்ச் சினிமாவின் கேரக்டர்களின் பெயர்களுக்கு சூட்டக் கூடி முடியாத அளவுக்கு தமிழகத்தில் ஜனநாயகம் வாழுகிறது.. இந்தச் சூழலில் அமெரிக்காவில் 2 முறை ஜனாதிபதியாக இருந்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் நம்பிக்கை கொண்ட காட்சிக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கிறார்களே என்றால் இவர்களது சென்சார்ஷிப்பை என்னவென்று சொல்ல..!? ஜார்ஜ் புஷ்ஷுக்கென்று ஆதரவாளர்கள் யாரும் இங்கே இல்லை என்பதாலா..?

எனக்கும் ஒரேயொரு கேள்விதான் : 

இது போன்று தமிழக, இந்தியத் தலைவர்களின் போஸ்டர்களையும் தமிழ்ச் சினிமாவில் பயன்படுத்த சென்சார்போர்டு அனுமதி தருமா..? நாளைய பொழுதுகளில் வாச்சாத்தி கொடுமை, வீரப்பன் தேடுதல் வேட்டையில் போலீஸாரால் அப்பாவி மலைவாசிப் பெண்கள் கற்பழிக்கப்பட்டது, கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம்.. கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து எரிப்பு. ஜெயல்லிதாவின் ஊழல் வழக்குகள், கும்பகோணம் மகாமக பரிதாபம்.. போன்றவைகளை படமாக்கினால் ஜெயலலிதா படத்தையும்.. தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த தடியடி, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரின் கதை, ஸ்பெக்ட்ரம் ஊழல்,  மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம், அழகிரி-ஸ்டாலின் மோதலால் மதுரையில் நடைபெற்ற பஸ் எரிப்புச் சம்பவங்கள்.. போன்றவைகளை படமாக்கும்போது கருணாநிதி படத்தையும்.. தமிழ் ஈழப் விடுதலைப் போராட்டம் பற்றிய படங்களில் சோனியா, ராகுல், மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி படங்களையும்.. இன்னும் பல்வேறு விஷயங்களுக்காக பல தலைவர்களையும் இதுபோல் கேரக்டர்களாக்கி சல்லடையாக்கலாம்..! அத்தனை கொடுமைகள் இங்கே நடந்திருக்கிறது.. ஜார்ஜ் புஷ்ஷை துளைத்தெடுத்த துப்பாக்கி ரவைகள் இவர்களின் புகைப்படங்களையும் நிச்சயமாக துளைக்கலாம்..! அதற்கான முழுத் தகுதியும் அந்தக் கதைகளுக்கு உண்டு..! சென்சார் போர்டுகாரர்கள் அப்போது இதேபோல் அனுமதி தருவார்களா..? யாராச்சும் கேட்டுச் சொல்லுங்கப்பா..!




62 comments:

Philosophy Prabhakaran said...

படத்தின் தலைப்பு விஸ்வரூபம்... விஸ்வநாத் - நிரூபமா என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்... அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் கடைசியில் சீசியம் குறித்த பூஜா குமாரின் அறிவாளித்தனம் படமாக்கப்பட்டிருக்கலாம்....

Prem S said...

//அந்தப் பாடல் காட்சி நிச்சயமாக இரண்டாம் பாகத்தில் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
//

கடைசியாக படம் முடியும் பொது கொஞ்சம் காமிச்சாங்களே

Anbu Bala said...

nee loose nnu theriyum aanna ivvuzhavu loose theriyathu..

Swetha said...

Kurai kandupidikkanumna evvalavu venumanalum kandupidikkalam... I don't think the review is all that fair....

There are gaffes... The PM talking to a RAW agent is absolute madness - true.

Heroism has been boosted and I think as a commercial movie it needs it.

And, what is wrong if scenes have been shot in Jordan or Chennai? Graphics showing 10 people as as 100 is nothing new in cinema. This is pure nit-picking.

The portions involving the Jihadi Kamal are very realistic and esp the ones where Omar's family is portrayed & the hanging of the farmer...

பாலாஜி ஜி said...

Bad review... U need to watch this film one more time with concentration... Appo neenga ketta pala kelvigalukku ungalukku pathil kidaikkum... en purusanum kacherikku porangara mathiri... Padatha pathittu review eluthi irukkenga... Sorry

ஒரு வாசகன் said...

செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடித்து இடையில் நிறுத்தப்பட்ட படமா இது? செல்வராகவன் கைவிட்ட பின் கமல் எடுத்து முடித்தாரா?

வவ்வால் said...

அண்ணாச்சி,

படத்தில நோண்ட நிறைய ஓட்டை இருக்கு,ஆனால் முல்லா ஓமரா நடிச்ச ராகுல் போசுக்கு ஏன் ஒற்றைக்கண்ணுனு கேட்டு இப்படி மாட்டிக்கிறிங்களே, நிஜ முல்லா ஓமருக்கு ஒரு கண் இல்லை ,அதனாலே அப்படிக்காட்டி இருக்கிறார்.

ஜியார்ஜ் புஷை சுட்டு ப்ழகுவது ஒரு வீடியோ கேமில் இருந்து சுட்ட ஐடியா, அமெரிக்காவில் சுதந்திரம் இருப்பதால் அவன் வீடியோ கேமில் வைத்தான்,நம்மாளு அதனை பயன்ப்படுத்திக்கிறாங்க.நம்ம ஊரில வார்டு கவுன்சிலர கூட அப்படியே காட்ட முடியாது :-))

ஜியார்ஜ் புஷ்ஷை சுட்டு கொல்வது ,அதன் விசாரணை என வைத்து "டெத் ஆஃப் பிரசிடெண்ட்' என கூட அமெரிக்காவில் படம் எடுத்துட்டாங்க.அமெரிக்க ஊடக சுதந்திரமே தனி :-))

நான் படம் பார்க்கிரதுக்குள்ள தியேட்டரை விட்டே ஓடிறும் போல இருக்கே, பார்த்துட்டு நாலு காட்டு காட்டலாம்னு பார்த்தால் முடியாது போல இருக்கு அவ்வ்வ்.

ravikumar said...

Onee basic character flaw was during Climax kamal Asks Pooja Which god wiil save?
On cotrary he prays before shooting the terrorist in his Apartment
confusion in his own character?

ராஜ நடராஜன் said...

படத்தின் ஆணிவேர்களை இதுவரை நீங்கள் உட்பட யாரும் விமர்சனம் செய்ததாக தெரியவில்லை.

தீவிரவாதம்,கல்வி துறந்த ஆயுதக் கலாச்சாரம்,உணவுக்கே போராடும் போது உணவை விட ஆயுதங்கள் பரந்து கிடக்கின்றன.நோய்க்கு மருத்துவத்தின் முக்கியம் கடந்த போர்க்குணம்,கல்வியைத் தேடும் சிறுவன் சுதந்திரமாக இருக்க விரும்புவான் எனவும்,கல்வியறிவு தேடாத சிறுவனுக்கு ஊஞ்சலாட்டி விட ஆள் தேவையெனவும் அவனுக்கு கல்விஞான வெளிச்சம் வீசட்டும் எனவும் அதே சிறுவனுக்கு பர்தா முகமூடியோடு மனித வெடிகுண்டாகிப் போகிறான் போன்ற நிறைய சிம்பாளிக்காக சொல்லப்படுகின்றன. ,
அல்ஹைதாவின் தீவிரவாதம்,மரணதண்டனை வேண்டாம் என்பவற்றை சொல்ல முயன்றிருக்கிறது.சினிமா என்ற கண்ணோட்டத்தில் ஒலியரங்கு திரையில் படம் பலருக்கு பிடிக்க கூடும்.ட்ரெயிலர் ஹைப்பை விட மத அமைப்புக்களும்,அரசியலும் இணைந்து படத்தை விஸ்வரூபமாக்கி விட்டார்கள்.

படத்தில் நிறைய ஓட்டைகளும்,சராசரி மனிதர்களாக சிலரை புண்படுத்தவும் கூடும் என்ற வகையில் படம் பார்த்து எவரும் போராட்டம் செய்திருந்தால் அர்த்தமிருந்திருக்கும்.

ஆனால் ஆப்கானிஸ்தான் களத்தில் சொல்லப்படும் காட்சிகளின் யதார்த்தங்களும் உண்மைகளும் உலகளவில் பெரும்பாலோர்க்கு போய்ச் சேர்வதில்லை என்கின்ற அளவுக்கு மனித உரிமை மீறல்கள் ஆப்கானிஸ்தானில் அல்ஹைதாவினால் செய்யப்பட்டிருக்கின்றன.அல்ஹைதாவின் அட்டூழிய உண்மை சாட்சியங்களைப் பார்ப்பவன் தான் இஸ்லாமியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவான்.தேடல்கள் இல்லாத வரை ஜிஹாதியம் பேசித்திரிவோம்.

ஆப்கான் வன்முறை கலாச்சாரத்தின் துவக்கங்களுக்கு 1959ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி ஐஸ்னோவரின் ஆப்கான் பயணமும் 1960ல் ரஷ்யாவிலிருந்து குருஷேவ் பயணத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும்.இதனைத் தொடர்ந்த ரஷ்யாவின் ஆக்கிரமிப்பும் ரஷ்யாவின் தோல்விக்குப்பின் போர்க்குழுக்களின் யார் உசத்தி தலைவெட்டுக்களில் தீவிரவாதத்தின் விதைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன.சிறு கனலுக்கு பெரிதாக பெட்ரோல் ஊற்ற வந்த பின்லேடனால் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் தீவிரவாதம் உலக தீவிரவாதமாக கிளை பரப்புகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு நேர்மாறாக ஈராக்கில் அமெரிக்காவின் அட்டூழியம்.

அதே போல் அமெரிக்க ஜனநாயக நாகரீகங்களை மீறிய மனித உரிமை மீறல்களை ஈராக்கில் அமெரிக்காவும் செய்திருக்கின்றன.

மனித குலத்திற்கு எதிரான சிறுபுள்ளியை மட்டும் விஷ்வரூபம் தொட்டிருக்கிறது.அந்த விதத்தில் உலக ஞானமிருந்தால் மட்டுமே தீவிரவாதத்தின் எல்லைகளை நோக்க முடியும்.

ராஜ நடராஜன் said...

வவ்வால் அண்ணாச்சி!உங்களுக்கும் பெப்பே உங்க பதிவுகளுக்கும் பெப்பே காட்டிட்டு படம் அமர்க்களமா ஓடுது.டிக்கெட் கிடைக்கலின்னு சொல்லுங்க.நேர்மையா இருக்கும்:)

rajesh said...

raja nadarajan

entha thiyattaru fullla oduthu.. inga vallioor-chitra thetarla muthal nall evening show parka 100 nabargal mattumthan.. itheae thetaralthaan kumki, thuppakki odichu muthal naal evening showkku ticket ill.
nagaercoil -karthigai thetarla nan 09-02-2013 morning show paarthen.. pathi thetere kooda full aakalai

athanala madrasa thvira engum 2varam thandathu

rajesh

ராஜ நடராஜன் said...

ராஜேஸ்!வவ்வால் மெட்ராசுலதான் பறக்குது!பிளாக்ல டிக்கெட் கிடைச்சதா இல்லீயான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க:)

andygarcia said...

"athanala madrasa thvira engum 2varam thandathu

rajesh"

தயாரிப்பாளர்களின் திட்டமும் அது தான் 600 தியட்டர்கள், மாயஜாலில் முட்டும் 55 காட்சிகள் வார நாட்களில்,85 காட்சி முதல் நாளில் மட்டும். அக்ஸ் 35 இது சென்னை. கோயம்புத்தூர் , மதுரை காலை 6 மணி காட்சிகள்.
ஒரு வாரம் போதும். அதற்குமேல் எல்லாமே போனஸ்.

மொத நாள் collection பார்த்துவிட்டு விஸ்வரூபம் 2 , மூ இரண்டு படம் அறிவித்துவிட்டார்

வருண் said...

Finally a critical review based on how the movie really is, leaving all the bullshit behind! :-)

நம்மாளுக மாரி முட்டா--கள் எவனும் கெடையாது. படத்தை படமா பார்க்கணும்னு வாய்கிழியபேசுவாணுக. ஆனால் படத்தை அதில் வுள்ள குறை நிறைகளைச் சொல்லி விமர்சிக்காமல் படம் எடுத்தவன் வைக்கிற ஒப்பாரியாலும், படம் பாதாளத்தில் விழுந்து எந்திரிச்சு வரமாட்டேன்கிதுனு, படத்தைப் பத்தி ஒழுங்கா கவனமா விமர்சிக்காமல், படம் க்ரேட்னு பொய் விமர்சனம் எழுதுறது.இவனுகளை எல்லாம் நிக்க வச்சு சுடணும்!

வழக்கம்போல எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் ஏதோ அல்கொய்தாவையும் ஜேம்ஸ் பாண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு லாஜிக் மீறல்கள் மிகுந்த மசாலா குப்பையுடன் வந்து இருக்காரு போல!

ஆனால் இவரு கட் அவ்ட்க்கு பாலாபிஷேகம் பண்ணினால்கூட அதையும் பார்த்து ரசிக்கிற கமல் அடிவருடிகள் வாயைக்கெளுங்கப்பா!!
அட அட அட அட!!!அதைப்பத்தி கண்டுக்காமல் கலை, கருமாதிணு எதயாவது சொல்லுவானுக!

எப்போவுமே இவனுகளுக்கு ஒரு நாயம் ஊருப்பயலுகளுக்கு இன்னொண்ணு!

வருண் said...

****rajesh said...

raja nadarajan

entha thiyattaru fullla oduthu..***

LOL!

Trade pundit Raja natarajan's analysis is based his own day-dream I suppose!

வருண் said...

****Swetha said...

Kurai kandupidikkanumna evvalavu venumanalum kandupidikkalam... I don't think the review is all that fair....****

Is that because he pointed out the bullshits in the movie as well?

Who is judging the review here? A hard-core KH fan, I suppose? lol

வருண் said...

***ஒரு வாரம் போதும். அதற்குமேல் எல்லாமே போனஸ்.****

ஒரு வாரத்டுக்கு மேலே தாக்குப்பிடிக்காதுனுதான் எல்லாமே! ஐயா இங்கிலிபிஸ்ல லாஜிக் பேசுறீக. நாங்க பாழாப்போன தமிழ்ல தர்க்க சாஸ்திரம் பேசுறோம்.

Go, check out second week collection in Hindi! It just made less than 2 crores during the second week end! The movie wont last long in theaters. Everybody knows that!

வருண் said...

***ravikumar said...

Onee basic character flaw was during Climax kamal Asks Pooja Which god wiil save?
On cotrary he prays before shooting the terrorist in his Apartment
confusion in his own character? ***

LOL


உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

படத்தின் தலைப்பு விஸ்வரூபம்... விஸ்வநாத் - நிரூபமா என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்... அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் கடைசியில் சீசியம் குறித்த பூஜா குமாரின் அறிவாளித்தனம் படமாக்கப்பட்டிருக்கலாம்.]]]

எது, எதுலதான் குத்து வைக்கணும்னு ஒரு அளவு இல்லையா..? இதெல்லாம் யாருக்கு தோணும்..?

உண்மைத்தமிழன் said...

[[[angusamy said...

முற்றிலும் மாறுப்பட்ட விமர்சனம் .
அனேகமாக அனேகமாக எல்லா வலைப்பதிவிலும் ஆஹா ஓஹோ
என்று என்று எழுத நீங்கள் மட்டும் மட்டும் சரியாக எழுதி இருக்கிறீர்கள்.
படத்தில் கமலின் நடிப்பு (மிக சில இடங்களில் மட்டும் ) ஒளிப்பதிவு ஒலிப்பதிவு தவிர சிறப்பாக ஒன்றும் இல்லை . நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்தவர்களுக்கு விஸ்வரூபம் ஒரு புஸ்பரூபம். ஆனால் சும்மா ஓட வேண்டிய படத்தை எல்லாரும் சேர்ந்து கொஞ்ச நாள் அதிகமா ஓட வச்சுடாங்க அவ்வளவுதான்.]]]

ம்.. இதைத்தான் இப்போ நிறைய பேர் சொல்லிக்கிட்டிருக்காங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Prillass s said...

//அந்தப் பாடல் காட்சி நிச்சயமாக இரண்டாம் பாகத்தில் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.//

கடைசியாக படம் முடியும் பொது கொஞ்சம் காமிச்சாங்களே..?]]]

ஆமாம்.. அதேதான்.. நிச்சயம் இரண்டாம் பாகத்தில் இடம் பெற வாய்ப்புண்டு.. இவ்ளோ செலவழித்து எடுத்துவிட்டு ச்சும்மா தூக்கிப் போட முடியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[Anbu Bala said...

nee loose nnu theriyum aanna ivvuzhavu loose theriyathu..]]]

தங்களின் விமர்சனத்திற்கு எனது நன்றிகள் அன்புபாலா ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Swetha said...

what is wrong if scenes have been shot in Jordan or Chennai? Graphics showing 10 people as as 100 is nothing new in cinema. This is pure nit-picking.]]]

நான் சும்மா ஒரு தகவலுக்காக மட்டுமே அதைச் சொன்னேன். வேறு எதற்குமில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[பாலாஜி ஜி said...

Bad review. U need to watch this film one more time with concentration. Appo neenga ketta pala kelvigalukku ungalukku pathil kidaikkum. en purusanum kacherikku porangara mathiri Padatha pathittu review eluthi irukkenga. Sorry]]]

நானும் ஒரு உலகப் படம் எடுத்திருக்கேன்ற மாதிரிதான் கமலும் படம் எடுத்திருக்காருன்னு நான் நம்புறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஒரு வாசகன் said...

செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடித்து இடையில் நிறுத்தப்பட்ட படமா இது? செல்வராகவன் கைவிட்ட பின் கமல் எடுத்து முடித்தாரா?]]]

இல்லை.. அது வேறு கதை.. ஆரம்பத்திலேயே கைவிட்டுவிட்டார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

படத்தில நோண்ட நிறைய ஓட்டை இருக்கு. ஆனால் முல்லா ஓமரா நடிச்ச ராகுல் போசுக்கு ஏன் ஒற்றைக் கண்ணுனு கேட்டு இப்படி மாட்டிக்கிறிங்களே, நிஜ முல்லா ஓமருக்கு ஒரு கண் இல்லை , அதனாலே அப்படிக் காட்டி இருக்கிறார்.]]]

வாங்க.. எங்கடா ஆளைக் காணோமேன்னு நினைச்சேன்.. வந்துட்டீங்களா..? அப்புறம் எதுக்கு இதுவொரு கற்பனைக் கதைன்னு சொல்லணும்..?

[[[ஜியார்ஜ் புஷை சுட்டு ப்ழகுவது ஒரு வீடியோ கேமில் இருந்து சுட்ட ஐடியா, அமெரிக்காவில் சுதந்திரம் இருப்பதால் அவன் வீடியோ கேமில் வைத்தான், நம்மாளு அதனை பயன்ப்படுத்திக்கிறாங்க. நம்ம ஊரில வார்டு கவுன்சிலர கூட அப்படியே காட்ட முடியாது :-)) ஜியார்ஜ் புஷ்ஷை சுட்டு கொல்வது ,அதன் விசாரணை என வைத்து "டெத் ஆஃப் பிரசிடெண்ட்' என கூட அமெரிக்காவில் படம் எடுத்துட்டாங்க.அமெரிக்க ஊடக சுதந்திரமே தனி :-))]]]

உண்மைதான்.. என்னதான் அமெரிக்கத்தனம்ன்னு சொன்னாலும் தனி மனித சுதந்திரத்துக்கு அங்க கொடுக்குற அனுமதியை நினைச்சா ஏக்கமாத்தான் இருக்கு..!

[[[நான் படம் பார்க்கிரதுக்குள்ள தியேட்டரை விட்டே ஓடிறும் போல இருக்கே, பார்த்துட்டு நாலு காட்டு காட்டலாம்னு பார்த்தால் முடியாது போல இருக்கு அவ்வ்வ்.]]]

அவ்ளோ வேலையா..? இப்போ தியேட்டர்ல ப்ரீயா டிக்கெட் கிடைக்குது. போய் பாரும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ravikumar said...

Onee basic character flaw was during Climax kamal Asks Pooja Which god wiil save? On cotrary he prays before shooting the terrorist in his Apartment confusion in his own character?]]]

ஏன் இந்த இரட்டை வேடம்..? இது குழப்பமா இருக்குல்ல..? ஒண்ணு அவர் முஸ்லீமா நடிச்சிருக்கணும்.. இல்லைன்னா நாத்திகரா இருந்திருக்கணும்..! இரண்டுமே இல்லாமல் செய்தால் எப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

படத்தின் ஆணிவேர்களை இதுவரை நீங்கள் உட்பட யாரும் விமர்சனம் செய்ததாக தெரியவில்லை. தீவிரவாதம், கல்வி துறந்த ஆயுதக் கலாச்சாரம், உணவுக்கே போராடும் போது உணவைவிட ஆயுதங்கள் பரந்து கிடக்கின்றன. நோய்க்கு மருத்துவத்தின் முக்கியம் கடந்த போர்க் குணம், கல்வியைத் தேடும் சிறுவன் சுதந்திரமாக இருக்க விரும்புவான் எனவும், கல்வியறிவு தேடாத சிறுவனுக்கு ஊஞ்சலாட்டிவிட ஆள் தேவையெனவும் அவனுக்கு கல்வி ஞான வெளிச்சம் வீசட்டும் எனவும் அதே சிறுவனுக்கு பர்தா முகமூடியோடு மனித வெடிகுண்டாகிப் போகிறான் போன்ற நிறைய சிம்பாளிக்காக சொல்லப்படுகின்றன.]]]

அண்ணே.. உங்க அளவுக்கு ஞானம் நமக்கு இல்லீங்கண்ணா..!


[[[அல்ஹைதாவின் தீவிரவாதம், மரண தண்டனை வேண்டாம் என்பவற்றை சொல்ல முயன்றிருக்கிறது. சினிமா என்ற கண்ணோட்டத்தில் ஒலியரங்கு திரையில் படம் பலருக்கு பிடிக்க கூடும். ட்ரெயிலர் ஹைப்பை விட மத அமைப்புக்களும், அரசியலும் இணைந்து படத்தை விஸ்வரூபமாக்கி விட்டார்கள். படத்தில் நிறைய ஓட்டைகளும், சராசரி மனிதர்களாக சிலரை புண்படுத்தவும் கூடும் என்ற வகையில் படம் பார்த்து எவரும் போராட்டம் செய்திருந்தால் அர்த்தமிருந்திருக்கும். ஆனால் ஆப்கானிஸ்தான் களத்தில் சொல்லப்படும் காட்சிகளின் யதார்த்தங்களும் உண்மைகளும் உலகளவில் பெரும்பாலோர்க்கு போய்ச் சேர்வதில்லை என்கின்ற அளவுக்கு மனித உரிமை மீறல்கள் ஆப்கானிஸ்தானில் அல்ஹைதாவினால் செய்யப்பட்டிருக்கின்றன. அல்ஹைதாவின் அட்டூழிய உண்மை சாட்சியங்களைப் பார்ப்பவன் தான் இஸ்லாமியன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுவான். தேடல்கள் இல்லாதவரை ஜிஹாதியம் பேசித் திரிவோம்.
ஆப்கான் வன்முறை கலாச்சாரத்தின் துவக்கங்களுக்கு 1959-ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி ஐஸ்னோவரின் ஆப்கான் பயணமும் 1960-ல் ரஷ்யாவிலிருந்து குருஷேவ் பயணத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்த ரஷ்யாவின் ஆக்கிரமிப்பும் ரஷ்யாவின் தோல்விக்குப் பின் போர்க் குழுக்களின் யார் உசத்தி தலைவெட்டுக்களில் தீவிரவாதத்தின் விதைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. சிறு கனலுக்கு பெரிதாக பெட்ரோல் ஊற்ற வந்த பின்லேடனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம் உலக தீவிரவாதமாக கிளை பரப்புகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு நேர்மாறாக ஈராக்கில் அமெரிக்காவின் அட்டூழியம். அதே போல் அமெரிக்க ஜனநாயக நாகரீகங்களை மீறிய மனித உரிமை மீறல்களை ஈராக்கில் அமெரிக்காவும் செய்திருக்கின்றன.
மனித குலத்திற்கு எதிரான சிறுபுள்ளியை மட்டும் விஷ்வரூபம் தொட்டிருக்கிறது. அந்த விதத்தில் உலக ஞானமிருந்தால் மட்டுமே தீவிரவாதத்தின் எல்லைகளை நோக்க முடியும்.]]]

சில, பல விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

வவ்வால் அண்ணாச்சி!உங்களுக்கும் பெப்பே உங்க பதிவுகளுக்கும் பெப்பே காட்டிட்டு படம் அமர்க்களமா ஓடுது. டிக்கெட் கிடைக்கலின்னு சொல்லுங்க. நேர்மையா இருக்கும்:)]]]

டிக்கெட்டுகள் சென்னையில் எளிதாகவே கிடைக்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[rajesh said...

raja nadarajan

entha thiyattaru fullla oduthu. inga vallioor-chitra thetarla muthal nall evening show parka 100 nabargal mattumthan. itheae thetaralthaan kumki, thuppakki odichu muthal naal evening showkku ticket ill. nagaercoil -karthigai thetarla nan 09-02-2013 morning show paarthen.. pathi thetere kooda full aakalai. athanala madrasa thvira engum 2varam thandathu.]]]

ஓடும்.. அல்லது ஓட வைப்பார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

ராஜேஸ்! வவ்வால் மெட்ராசுலதான் பறக்குது! பிளாக்ல டிக்கெட் கிடைச்சதா இல்லீயான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க:)]]]

பிளாக்கே வேணாம்.. ஒயிட்லேயே கவுண்ட்டர்ல டிக்கெட்டுகள் கிடைக்கின்றன..! போகணும்.. அதான் முக்கியம்..!

உண்மைத்தமிழன் said...

[[[andygarcia said...

"athanala madrasa thvira engum 2varam thandathu

rajesh"

தயாரிப்பாளர்களின் திட்டமும் அது தான் 600 தியட்டர்கள், மாயஜாலில் முட்டும் 55 காட்சிகள் வார நாட்களில்,85 காட்சி முதல் நாளில் மட்டும். அக்ஸ் 35 இது சென்னை. கோயம்புத்தூர் , மதுரை காலை 6 மணி காட்சிகள். ஒரு வாரம் போதும். அதற்குமேல் எல்லாமே போனஸ். மொத நாள் collection பார்த்துவிட்டு விஸ்வரூபம் 2 , மூ இரண்டு படம் அறிவித்துவிட்டார்.]]]

உண்மைதான். அவர் நினைத்தது நடந்துவிட்டது.. வசூலும் குவிந்துவிட்டது.. நன்றியும் சொல்லி கதையை முடித்துவிட்டார்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

Finally a critical review based on how the movie really is, leaving all the bullshit behind! :-)

நம்மாளுக மாரி முட்டா--கள் எவனும் கெடையாது. படத்தை படமா பார்க்கணும்னு வாய் கிழிய பேசுவாணுக. ஆனால் படத்தை அதில் வுள்ள குறை நிறைகளைச் சொல்லி விமர்சிக்காமல் படம் எடுத்தவன் வைக்கிற ஒப்பாரியாலும், படம் பாதாளத்தில் விழுந்து எந்திரிச்சு வர மாட்டேன்கிதுனு, படத்தைப் பத்தி ஒழுங்கா கவனமா விமர்சிக்காமல், படம் க்ரேட்னு பொய் விமர்சனம் எழுதுறது. இவனுகளை எல்லாம் நிக்க வச்சு சுடணும்!
வழக்கம்போல எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் ஏதோ அல்கொய்தாவையும் ஜேம்ஸ்பாண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு லாஜிக் மீறல்கள் மிகுந்த மசாலா குப்பையுடன் வந்து இருக்காரு போல! ஆனால் இவரு கட் அவ்ட்க்கு பாலாபிஷேகம் பண்ணினால்கூட அதையும் பார்த்து ரசிக்கிற கமல் அடிவருடிகள் வாயைக் கெளுங்கப்பா!!
அட அட அட அட!!!அதைப் பத்தி கண்டுக்காமல் கலை, கருமாதிணு எதயாவது சொல்லுவானுக!
எப்போவுமே இவனுகளுக்கு ஒரு நாயம் ஊருப் பயலுகளுக்கு இன்னொண்ணு!]]]

வருண்.. ஏன் இந்தக் கோபம்..? தேவையில்லாதது..! அவரவர் தலைவர்களை யார் விமர்சித்தாலும் தொண்டர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.. எழுதட்டும்.. பின்னாளில் கமலே சொல்லுவார்.. அப்போது தெரிந்து கொள்வார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

****rajesh said...

raja nadarajan

entha thiyattaru fullla oduthu..***

LOL!

Trade pundit Raja natarajan's analysis is based his own day-dream I suppose!]]]

சென்னையில் சில தியேட்டர்களில் ஹவுஸ் புல்.. பல தியேட்டர்களில் முக்கால்வாசி அரங்கம் நிரம்பியிருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

****Swetha said...

Kurai kandupidikkanumna evvalavu venumanalum kandupidikkalam... I don't think the review is all that fair....****

Is that because he pointed out the bullshits in the movie as well?
Who is judging the review here? A hard-core KH fan, I suppose? lol]]]

அவரவர் பார்வை அவரவர்க்கு..! இதைச் சொல்லக் கூட உரிமையில்லையா அவர்களுக்கு..? வருண்.. உங்களுக்கு கமல் மேல் ஏன் இவ்வளவு காண்டு..? நான் இந்தப் படம் பற்றிய விமர்சனத்தைத்தான் எழுதியிருக்கிறேன்.. கமல்ஹாசன் மீது அல்ல..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...
***ஒரு வாரம் போதும். அதற்குமேல் எல்லாமே போனஸ்.****

ஒரு வாரத்டுக்கு மேலே தாக்குப் பிடிக்காதுனுதான் எல்லாமே! ஐயா இங்கிலிபிஸ்ல லாஜிக் பேசுறீக. நாங்க பாழாப்போன தமிழ்ல தர்க்க சாஸ்திரம் பேசுறோம்.

Go, check out second week collection in Hindi! It just made less than 2 crores during the second week end! The movie wont last long in theaters. Everybody knows that!]]]

எப்படியோ போட்ட காசு திரும்பக் கிடைச்சாலே சந்தோஷம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...
***ravikumar said...

Onee basic character flaw was during Climax kamal Asks Pooja Which god wiil save?

On cotrary he prays before shooting the terrorist in his Apartment confusion in his own character? ***

LOL]]]

நிசம்தானே..?

Philosophy Prabhakaran said...

@ உ.த, ரவிகுமார், வருண்

"எந்த கடவுள் ?" என்ற வசனத்தை வைத்து கமல் கேரக்டர் நாத்திகர் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்... அதன் அர்த்தம் "உன்னுடைய கடவுளா ? (பூஜா குமார் கேரக்டரின் இந்துக்கடவுள்) என்னுடைய கடவுளா ? (கமல் கேரக்டருடைய இஸ்லாமியக்கடவுள்) அமெரிக்கர்களின் கிறிஸ்தவ கடவுளா ?" என்று எடுத்துக்கொள்ளலாமே ?

வருண் said...

பிளாசஃபி: இங்கே பிரச்சினை என்னனா.. கமலும், என்னைக்குமே முழுமையாக அவர் ஏற்று நடிக்கும் அந்த கேரக்டர் ஆவதில்லை. அப்பப்போ நாத்திக "உண்மை கமலஹாசனா"க அந்த கேரக்டரில் ஊடுருவிவிடுவாரு..

ஆனால், கலை, கருமாதினு பேசும் கமல் விசிறிகள் மட்டும் அந்த குறைபாடை விமர்சிப்பதில்லை. ஒரு முறை சாரு விமர்சிச்சதா ஞாபகம்!

தசாவராதம் படத்தில் உலகநாயகனே பாட்டு எதுக்கு வருது?? "உலகநாயகன்"னு ஒரு கேரக்டரும் இல்லையே?

///Ulaga Nayagane Ulaga Nayagane
Kannangal Kandu Viyakum
Enni Ainavum Unnai Alaikum
Ulagam Enghilum Unnai Minjida Yaaru
Unnai Pettradu Perumey Konludhu Naadu
Ulaga Nayagane Ulaga Nayagane
Kannangal Kandu Viyakum///

இந்தப்பாடல் கமலஹாசன் என்கிற நடிகனை பற்றியது.. தசாவதாரத்தில் வரும் (வராத) "உலகநாயகன்" என்கிற பாத்திரம் பத்தி அல்ல!!!

அதேபோல் எழுதப்பட்ட வசனம்தான் இந்த "எந்தக் க்டவுள்?"..

ஆனா, நீங்க எப்படி வேணா சொல்லி சமாளிக்கலாம்! :)

சீனு said...

சரியில்லாத விமரிசனம். என்னாச்சி?

வவ்வால் said...

அண்ணாச்சி,

என்ன இதுக்கே இப்படி சலிச்சிக்கிறிங்க, இன்னும் நிறைய தோண்டி இருப்பேன்,அப்பாலிக்கா நான் விமர்சனம் எழுத ஒன்னும் இருக்காதுன்னு தான் ,உங்களை விட்டு வச்சேன் :-))

//அப்புறம் எதுக்கு இதுவொரு கற்பனைக் கதைன்னு சொல்லணும்..?
//

நாயகன் படம் வரதாரஜமுதலியாரின் கதைனு பேட்டிக்கொடுத்து,சென்சாரில் சிக்கலாச்சுன்னு ,சமீபத்தில் கூட முக்தா சீனிவாசன் பேட்டியில் சொல்லியிருப்பாரே படிக்கலையா,அதான் முன் எச்சரிக்கையா கற்பனைக்கதைனு சொல்லிக்கிறது.


கோர்ட்டில் தடைக்கு வாதாடும் போது,அரசு வக்கீல் சென்சார் சான்றில் முறைக்கேடுனு ,அதை வச்சுத்தான் சொல்லியிருப்பார், ஆனால் அவரு உளரிட்டாருனு நம்ம மக்கள் கிண்டல் செய்தாங்க,சரியாத்தான் சொல்லி இருக்கார்.


இந்தியாவில் முல்லா ஓமர் சார்பா யாரு கேஸ்ப்போடப்போறாங்க,அதான் தைரியமா எடுக்க முடியுது.

உயிருடன் இருக்கும் நபர்களைப்பற்றி படம் எடுக்கணும்னா அந்த நபரிடம் அனுமதி வாங்கணும், முல்லா ஓமர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார்,அவர்க்கிட்டே அனுமதி வாங்க முடியுமா ;-))

அதான் கற்பனைக்கதைனு சொல்லியாச்சு :-))

உண்மையானவரின் பெயர் முல்லா முகமது ஓமர், படத்தில் ஓமர்னு தான் அடிக்கடி சொல்லுறாங்க ஒரு இடத்தில் ஓமர் ஃபரூக்னு சொன்னதா நினைவு, எனவே அவரில்லை,இவர்னு சொல்லிடலாம் :-))

நம்ம சென்சார் போர்ட் ரொம்ப தாரளமாத்தான் இப்போலாம் இருக்கு, இந்தப்படத்துக்கு ஏ சான்றுதான் கொடுத்து இருக்கனும்,ஆனால் யு/ஏ கொடுத்திருக்காங்க,இதே போல எவ்வளவோ படத்துக்கு தாரளமா சான்றுக்கொடுத்துட்டு ,மதுபானக்கடை படத்துக்கு ஏ சான்று தான் கொடுப்போம்னு புடிவாதமும் செய்றாங்க :-))


படத்தை மாற்று முறையில் பார்த்தாச்சு, நாளைக்கு தியேட்டரிலும் பார்க்கப்போறேன் ,அப்புறமா இருக்கு கச்சேரி :-))
-------------

ஓய் ராச நட,

நான் என்ன நெட்டு புளிக்குதை மட்டுமா உங்க்ளைபோல நம்பிட்டு இருக்கேன், படத்தைப்பார்த்தாச்சு போதுமா, தியேட்டர் வெர்ஷனைப்பார்த்துட்டு பேசலாம்னு வெயிட் செய்தால் ,ஓவர் நக்கலு?


படம் ஃபில்ம் இன்ஸ்ட்டிடில் புராஜெக்ட் ஆக செய்யும் படம் அளவுக்கு கூட இல்லை, கையில காசு இருப்பதால் பிரமாண்டம் காட்டி ஏமாத்தியிருக்கார்,அம்புட்டுத்தேன்.

எவ்வளவு முட்டாள் தனமா படத்தின் கதையமைப்பு இருக்குன்னா, ஆன்கலாஜி படிச்சவங்க பொது மருத்துவம் படிக்காதவங்க,அது ஒரு ஆய்வு படிப்புனு காட்டியிருக்கார்.

ஆன்காலஜி படிக்க அடிப்படை தகுதியே எம்பிபிஎஸ் படிச்சு இருக்கனும். அதுவும் அமெரிக்காவில் அதான் நடைமுறை.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டரில் வேலை செய்பவர் சொன்னது, அங்கே லேப்இல் வேலை செய்யவே பி.எஸ்.சி டிகிரி ,பின்னர் டிப்ளமோ இன் ரேடியாலஜி, மும்பையில் இருக்கும் பாபா அட்டாமிக் சென்டர் மூலமாத்தான் படிக்க முடியுமாம். ரேடியாலஜி எக்சாம் நடத்தி,சான்றே அங்கே இருந்து தான் வருதாம்.

அவருக்கு மேல எம்டி,அப்புறம் ரேடியலாஜி படிச்ச டாக்டர் இருப்பாங்கலாம், அப்போ தான் எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் நடத்தவே லைசென்ஸ் கிடைக்குமாம்.

அவரோட கூற்றுப்படி ஆன்காலஜிஸ்ட் படிக்க அடிப்படையில் டாக்டராக இருக்கணும்,சரியா தப்பானு யாராவது டாக்டர் வந்து சொன்னால் உண்டு.

இது போல இன்னும் நிறைய ஓட்டைகள் இருக்கு,எல்லாம் அப்புறம் பதிவில் சொல்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

@ உ.த, ரவிகுமார், வருண்

"எந்த கடவுள் ?" என்ற வசனத்தை வைத்து கமல் கேரக்டர் நாத்திகர் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்.

அதன் அர்த்தம் "உன்னுடைய கடவுளா? (பூஜா குமார் கேரக்டரின் இந்துக் கடவுள்) என்னுடைய கடவுளா? (கமல் கேரக்டருடைய இஸ்லாமியக் கடவுள்) அமெரிக்கர்களின் கிறிஸ்தவ கடவுளா?" என்று எடுத்துக் கொள்ளலாமே ?]]]

அட ஆமாம்ல்ல.. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாம போயிருச்சே.. நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

பிளாசஃபி: இங்கே பிரச்சினை என்னனா.. கமலும், என்னைக்குமே முழுமையாக அவர் ஏற்று நடிக்கும் அந்த கேரக்டர் ஆவதில்லை. அப்பப்போ நாத்திக "உண்மை கமலஹாசனா"க அந்த கேரக்டரில் ஊடுருவிவிடுவாரு.. ஆனால், கலை, கருமாதினு பேசும் கமல் விசிறிகள் மட்டும் அந்த குறைபாடை விமர்சிப்பதில்லை. ஒரு முறை சாரு விமர்சிச்சதா ஞாபகம்! தசாவராதம் படத்தில் உலக நாயகனே பாட்டு எதுக்கு வருது?? "உலக நாயகன்"னு ஒரு கேரக்டரும் இல்லையே?

///Ulaga Nayagane Ulaga Nayagane
Kannangal Kandu Viyakum
Enni Ainavum Unnai Alaikum
Ulagam Enghilum Unnai Minjida Yaaru
Unnai Pettradu Perumey Konludhu Naadu
Ulaga Nayagane Ulaga Nayagane
Kannangal Kandu Viyakum///

இந்தப் பாடல் கமலஹாசன் என்கிற நடிகனை பற்றியது.. தசாவதாரத்தில் வரும்(வராத) "உலக நாயகன்" என்கிற பாத்திரம் பத்தி அல்ல!!!
அதேபோல் எழுதப்பட்ட வசனம்தான் இந்த "எந்தக் க்டவுள்?".. ஆனா, நீங்க எப்படி வேணா சொல்லி சமாளிக்கலாம்! :)]]]

வருண்.. தம்பி, வேணும்ன்னே கிண்டல் பண்ணியிருக்காரு.. விடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

சரியில்லாத விமரிசனம். என்னாச்சி?]]]

சரியில்லாத படமா எனக்குத் தோணுதே..? நான் வேறென்ன செய்ய..?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, என்ன இதுக்கே இப்படி சலிச்சிக்கிறிங்க, இன்னும் நிறைய தோண்டி இருப்பேன், அப்பாலிக்கா நான் விமர்சனம் எழுத ஒன்னும் இருக்காதுன்னுதான், உங்களை விட்டு வச்சேன்:-))]]]

ரொம்பவும் சந்தோஷம்..!

உண்மைத்தமிழன் said...

[[[//அப்புறம் எதுக்கு இதுவொரு கற்பனைக் கதைன்னு சொல்லணும்..?//

நாயகன் படம் வரதாரஜ முதலியாரின் கதைனு பேட்டி கொடுத்து,சென்சாரில் சிக்கலாச்சுன்னு, சமீபத்தில் கூட முக்தா சீனிவாசன் பேட்டியில் சொல்லியிருப்பாரே படிக்கலையா, அதான் முன் எச்சரிக்கையா கற்பனைக் கதைனு சொல்லிக்கிறது.
கோர்ட்டில் தடைக்கு வாதாடும் போது, அரசு வக்கீல் சென்சார் சான்றில் முறைக்கேடுனு, அதை வச்சுத்தான் சொல்லியிருப்பார், ஆனால் அவரு உளரிட்டாருனு நம்ம மக்கள் கிண்டல் செய்தாங்க, சரியாத்தான் சொல்லி இருக்கார்.]]]

இப்படி எல்லாத்தையும் நடக்குற கதையா எடுத்திட்டு கடைசீல அது கற்பனைன்னு சொல்லிட்டுப் போனா எடுத்ததுக்கு என்ன மரியாதை இருக்கும் எதிர்காலத்துல..?

உண்மைத்தமிழன் said...

[[[இந்தியாவில் முல்லா ஓமர் சார்பா யாரு கேஸ்ப் போடப் போறாங்க, அதான் தைரியமா எடுக்க முடியுது.
உயிருடன் இருக்கும் நபர்களைப் பற்றி படம் எடுக்கணும்னா அந்த நபரிடம் அனுமதி வாங்கணும், முல்லா ஓமர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார், அவர்கிட்டே அனுமதி வாங்க முடியுமா ;-)) அதான் கற்பனைக் கதைனு சொல்லியாச்சு :-))
உண்மையானவரின் பெயர் முல்லா முகமது ஓமர், படத்தில் ஓமர்னுதான் அடிக்கடி சொல்லுறாங்க ஒரு இடத்தில் ஓமர் ஃபரூக்னு சொன்னதா நினைவு, எனவே அவரில்லை, இவர்னு சொல்லிடலாம் :-))]]]

அவுக கேஸ் போடலைன்னாலும் நீரு போட வைப்பீரு போலிருக்கே.. முல்லா ஓமர் போன் நம்பர் இருக்கா ஓய்..?

உண்மைத்தமிழன் said...

[[[நம்ம சென்சார் போர்ட் ரொம்ப தாரளமாத்தான் இப்போலாம் இருக்கு, இந்தப் படத்துக்கு ஏ சான்றுதான் கொடுத்து இருக்கனும், ஆனால் யு/ஏ கொடுத்திருக்காங்க, இதே போல எவ்வளவோ படத்துக்கு தாரளமா சான்று கொடுத்துட்டு , மதுபானக்கடை படத்துக்கு ஏ சான்றுதான் கொடுப்போம்னு புடிவாதமும் செய்றாங்க :-))]]]

சென்சார் போர்டு வெட்டி ஆபீஸ்..! அங்கேயும் லஞ்சம்தான் தலை விரித்தாடுது.. காசு கொடுத்தா எப்படி வேண்ணாலும் சர்டிபிகேட் கிடைக்குமாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[படத்தை மாற்று முறையில் பார்த்தாச்சு, நாளைக்கு தியேட்டரிலும் பார்க்கப் போறேன் , அப்புறமா இருக்கு கச்சேரி :-))]]]
-------------

ஆமாம்.. இப்போ உம்ம விமர்சனத்தை எதிர்பார்த்துதான் உலக நாயகன் நாக்குல பச்சைத் தண்ணிகூட படாம காத்திக்கிட்டிருக்காரு பாரும்.. ச்சும்மா ரீல் விடாத ஓய்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஓய் ராச நட, நான் என்ன நெட்டு புளிக்குதை மட்டுமா உங்க்ளைபோல நம்பிட்டு இருக்கேன், படத்தைப் பார்த்தாச்சு போதுமா, தியேட்டர் வெர்ஷனைப் பார்த்துட்டு பேசலாம்னு வெயிட் செய்தால்,ஓவர் நக்கலு?
படம் ஃபில்ம் இன்ஸ்ட்டிடில் புராஜெக்ட் ஆக செய்யும் படம் அளவுக்கு கூட இல்லை, கையில காசு இருப்பதால் பிரமாண்டம் காட்டி ஏமாத்தியிருக்கார், அம்புட்டுத்தேன்.
எவ்வளவு முட்டாள்தனமா படத்தின் கதையமைப்பு இருக்குன்னா, ஆன்கலாஜி படிச்சவங்க பொது மருத்துவம் படிக்காதவங்க,அது ஒரு ஆய்வு படிப்புனு காட்டியிருக்கார்.
ஆன்காலஜி படிக்க அடிப்படை தகுதியே எம்பிபிஎஸ் படிச்சு இருக்கனும். அதுவும் அமெரிக்காவில் அதான் நடைமுறை. எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டரில் வேலை செய்பவர் சொன்னது, அங்கே லேப்இல் வேலை செய்யவே பி.எஸ்.சி டிகிரி, பின்னர் டிப்ளமோ இன் ரேடியாலஜி, மும்பையில் இருக்கும் பாபா அட்டாமிக் சென்டர் மூலமாத்தான் படிக்க முடியுமாம். ரேடியாலஜி எக்சாம் நடத்தி, சான்றே அங்கே இருந்துதான் வருதாம்.
அவருக்கு மேல எம்டி,அப்புறம் ரேடியலாஜி படிச்ச டாக்டர் இருப்பாங்கலாம், அப்போதான் எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் நடத்தவே லைசென்ஸ் கிடைக்குமாம். அவரோட கூற்றுப்படி ஆன்காலஜிஸ்ட் படிக்க அடிப்படையில் டாக்டராக இருக்கணும், சரியா தப்பானு யாராவது டாக்டர் வந்து சொன்னால் உண்டு. இது போல இன்னும் நிறைய ஓட்டைகள் இருக்கு,எல்லாம் அப்புறம் பதிவில் சொல்கிறேன்.]]]

ஓகே.. அப்போ விரிவான கச்சேரியை உம்ம பதிவுல வைச்சுக்கலாம்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

//இப்படி எல்லாத்தையும் நடக்குற கதையா எடுத்திட்டு கடைசீல அது கற்பனைன்னு சொல்லிட்டுப் போனா எடுத்ததுக்கு என்ன மரியாதை இருக்கும் எதிர்காலத்துல..?//

லோகநாயகரு சினிமாயாவாரி,யாவாரம் ஒழுங்க நடந்தாப்போதும்னு இருக்காரு,உண்மையை உண்மையா சொல்லுவாரா,சொன்னா மாட்டிக்க வேண்டியது தான் :-))


//சென்சார் போர்டு வெட்டி ஆபீஸ்..! அங்கேயும் லஞ்சம்தான் தலை விரித்தாடுது.. காசு கொடுத்தா எப்படி வேண்ணாலும் சர்டிபிகேட் கிடைக்குமாம்..!
//

அவங்க கேட்கிறதுக்கு முன்னாடியே கவனிச்சிடுறாங்களாம், அப்படிக்கவனிக்கலைனா தான் ஏகப்பட்ட வெட்டு, ஏ சான்றுனு ஆப்பு வைப்பதே :-))

//இப்போ உம்ம விமர்சனத்தை எதிர்பார்த்துதான் உலக நாயகன் நாக்குல பச்சைத் தண்ணிகூட படாம காத்திக்கிட்டிருக்காரு பாரும்.. ச்சும்மா ரீல் விடாத ஓய்..!//

நான் எழுதப்போறேன்னு தானே சொன்னேன் ,லோகநாயகர் படிப்பாருன்னா சொன்னேன்,இதிலெ எங்கே ரீல் வருது.

ஆனா ஒன்னு என்னோட விமர்சனம் படிச்சா இனிமே ஆணியே புடுங்க வேண்டாம்னு சினிமாவில இருந்து ரிடயர்மெண்ட் ஆகிடுவார் :-))

வாங்க ,வாங்க கச்சேரி அப்போ தான் கலைக்கட்டும்.

Riyas said...

//இந்தப் படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்..? இதில் எந்த இடத்திலும் இந்திய முஸ்லீம் சமுதாயத்தைப் பற்றி தவறாக எதுவும் சொல்லப்படவில்லை..!//

பதில் இங்கே

http://kalaiy.blogspot.com/2013/02/blog-post_12.html

Senthil Kumaran said...

உலக சினிமா ரசிகர் என்ற பெயரில் கமலுக்கு கொட்டை தூக்கும் பதிவர் இந்த பதிவுக்கு எழுதிய எதிர் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வெளியிடாமல் தான் ஒரு கொட்டை தூக்கி என்பதை நிரூபித்து விட்டார். அதனால் அதை இங்கே வெளியிடுகிறேன்.

"பாப்பாத்தி சிக்கன் சாப்பிடு" என்று வசனம் வைக்கும் அகில உலக நாயகனுக்கு "துலுக்கச்சி பன்னி சாப்பிடு" என்று வசனம் வைக்கும் துப்பு இருக்கிறதா? நேர்மை என்று உங்களிடம் ஏதாவது எஞ்சி இருந்தால் பதில் சொல்லவும்.

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//இப்படி எல்லாத்தையும் நடக்குற கதையா எடுத்திட்டு கடைசீல அது கற்பனைன்னு சொல்லிட்டுப் போனா எடுத்ததுக்கு என்ன மரியாதை இருக்கும் எதிர்காலத்துல..?//

லோகநாயகரு சினிமா யாவாரி, யாவாரம் ஒழுங்க நடந்தா போதும்னு இருக்காரு, உண்மையை உண்மையா சொல்லுவாரா, சொன்னா மாட்டிக்க வேண்டியதுதான் :-))]]]

இது கமலுக்கு பெருமையில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[/சென்சார் போர்டு வெட்டி ஆபீஸ்..! அங்கேயும் லஞ்சம்தான் தலை விரித்தாடுது.. காசு கொடுத்தா எப்படி வேண்ணாலும் சர்டிபிகேட் கிடைக்குமாம்..!//

அவங்க கேட்கிறதுக்கு முன்னாடியே கவனிச்சிடுறாங்களாம், அப்படி கவனிக்கலைனாதான் ஏகப்பட்ட வெட்டு, ஏ சான்றுனு ஆப்பு வைப்பதே :-))]]]

சில நேரங்களில் இதுவும் உண்மை என்றே சொல்கிறார்கள் திரையுலகினர்..

உண்மைத்தமிழன் said...

[[[/சென்சார் போர்டு வெட்டி ஆபீஸ்..! அங்கேயும் லஞ்சம்தான் தலை விரித்தாடுது.. காசு கொடுத்தா எப்படி வேண்ணாலும் சர்டிபிகேட் கிடைக்குமாம்..!//

அவங்க கேட்கிறதுக்கு முன்னாடியே கவனிச்சிடுறாங்களாம், அப்படி கவனிக்கலைனாதான் ஏகப்பட்ட வெட்டு, ஏ சான்றுனு ஆப்பு வைப்பதே :-))]]]

சில நேரங்களில் இதுவும் உண்மை என்றே சொல்கிறார்கள் திரையுலகினர்..

உண்மைத்தமிழன் said...

[[[//இப்போ உம்ம விமர்சனத்தை எதிர்பார்த்துதான் உலக நாயகன் நாக்குல பச்சைத் தண்ணிகூட படாம காத்திக்கிட்டிருக்காரு பாரும்.. ச்சும்மா ரீல் விடாத ஓய்..!//

நான் எழுதப் போறேன்னு தானே சொன்னேன், லோகநாயகர் படிப்பாருன்னா சொன்னேன், இதிலெ எங்கே ரீல் வருது. ஆனா ஒன்னு என்னோட விமர்சனம் படிச்சா இனிமே ஆணியே புடுங்க வேண்டாம்னு சினிமாவில இருந்து ரிடயர்மெண்ட் ஆகிடுவார் :-))
வாங்க, வாங்க கச்சேரி அப்போதான் கலைக்கட்டும்.]]]

அதையும் பார்ப்போம்.. மொதல்ல வேணும்னே இது மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதறதை நிறுத்தும்..! கச்சேரியை அப்பால பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[//இப்போ உம்ம விமர்சனத்தை எதிர்பார்த்துதான் உலக நாயகன் நாக்குல பச்சைத் தண்ணிகூட படாம காத்திக்கிட்டிருக்காரு பாரும்.. ச்சும்மா ரீல் விடாத ஓய்..!//

நான் எழுதப் போறேன்னு தானே சொன்னேன், லோகநாயகர் படிப்பாருன்னா சொன்னேன், இதிலெ எங்கே ரீல் வருது. ஆனா ஒன்னு என்னோட விமர்சனம் படிச்சா இனிமே ஆணியே புடுங்க வேண்டாம்னு சினிமாவில இருந்து ரிடயர்மெண்ட் ஆகிடுவார் :-))
வாங்க, வாங்க கச்சேரி அப்போதான் கலைக்கட்டும்.]]]

அதையும் பார்ப்போம்.. மொதல்ல வேணும்னே இது மாதிரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதறதை நிறுத்தும்..! கச்சேரியை அப்பால பார்க்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Riyas said...

//இந்தப் படத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்..? இதில் எந்த இடத்திலும் இந்திய முஸ்லீம் சமுதாயத்தைப் பற்றி தவறாக எதுவும் சொல்லப்படவில்லை..!//

பதில் இங்கே :]]]

பதிலுரைக்கு மிக்க நன்றிகள் ரியாஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[Senthil Kumaran said...

உலக சினிமா ரசிகர் என்ற பெயரில் கமலுக்கு கொட்டை தூக்கும் பதிவர் இந்த பதிவுக்கு எழுதிய எதிர் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வெளியிடாமல் தான் ஒரு கொட்டை தூக்கி என்பதை நிரூபித்து விட்டார். அதனால் அதை இங்கே வெளியிடுகிறேன்.

"பாப்பாத்தி சிக்கன் சாப்பிடு" என்று வசனம் வைக்கும் அகில உலக நாயகனுக்கு "துலுக்கச்சி பன்னி சாப்பிடு" என்று வசனம் வைக்கும் துப்பு இருக்கிறதா? நேர்மை என்று உங்களிடம் ஏதாவது எஞ்சி இருந்தால் பதில் சொல்லவும்.]]]

அடடா.. என் பதிவுக்கே எதிர் பதிவா..? எங்கே லின்க்கை போட்டிருக்கலாமே..? நானே தேடிக் கொள்கிறேன்..

உங்களது கேள்வியும் நியாயமானதுதான்.. பாப்பாத்தி என்று சொல்லும்போதும் துலுக்கச்சி என்று சொல்வதிலும் தப்பில்லைதான்..!

வருண் said...

///Senthil Kumaran said...

உலக சினிமா ரசிகர் என்ற பெயரில் கமலுக்கு கொட்டை தூக்கும் பதிவர் இந்த பதிவுக்கு எழுதிய எதிர் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டேன். அதை வெளியிடாமல் தான் ஒரு கொட்டை தூக்கி என்பதை நிரூபித்து விட்டார். அதனால் அதை இங்கே வெளியிடுகிறேன்.

"பாப்பாத்தி சிக்கன் சாப்பிடு" என்று வசனம் வைக்கும் அகில உலக நாயகனுக்கு "துலுக்கச்சி பன்னி சாப்பிடு" என்று வசனம் வைக்கும் துப்பு இருக்கிறதா? நேர்மை என்று உங்களிடம் ஏதாவது எஞ்சி இருந்தால் பதில் சொல்லவும். ///

The reason for it is being "overlooked" is that, by birth he is a brahmin and his relatives are brahmins. So, people let him go.

Leave the muslims and christians he can not do that (in an offensive manner) with any other strong hindu caste (including dalits) people either! He knows what he is doing and he knows that it wont become an issue!

The censor could have done something about it too. What were they doing?

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com