நீதானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

15-12-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நடுநசி நாய்கள்' படத்தை மீடியாக்களும், ரசிகர்களும் குதறி எடுத்ததையே பெரும் குற்றமாக எண்ணிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நம்மை வதைத்துப் பார்த்து குரூர சித்ரவதை செய்திருக்கிறார் கெளதம்..!

கதையே இல்லாமல் படம் எடுப்பது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். கெளதம் வாசுதேவ் மேனன் என்ற தன் பெயருக்கே ஒரு வேல்யூ உண்டு.. மார்க்கெட்டிங் உண்டு.. மவுசும் உண்டு.. என்ன எடுத்துக் கொடுத்தாலும், எப்படி வழங்கினாலும் ரசிகர்கள் ஓடோடி வந்து பார்த்து காசைக் கொட்டுவார்கள் என்கிற முட்டாள்தனத்தில் தான் நினைப்பதையெல்லாம் எடுத்துத் தள்ளியிருக்கிறார் இயக்குநர்.

தன்னை ஒரு இண்ட்டலெக்ச்சுவல் இயக்குநராகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அந்த டைப்பான வசனங்கள், இடையிடையே ஆங்கிலத்தில் மாடலாடுவது.. மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் பெரிய தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு மட்டுமே புரியும்வகையிலான அவரது இந்தப் படைப்பு அவருக்கு எந்தவிதத்திலும் பெருமை சேர்க்காது என்பது உறுதி..!


ஜீவா கல்லூரியில் சமந்தாவை பார்த்தவுடன் தனது பால்ய சிநேகிதி என்று அடையாளம் கண்டு அதன் தொடர்ச்சியாய் காதல் கொள்வது சரிதான்..  ஆனால் அதன் பின்பு இது எந்த வகையான காதலாக காட்டுவது என்பதில்தான் கெளதமுக்கு மிகப் பெரிய குழப்பம்..! குடும்பம், ஈகோ, கல்யாணம், மிடில், அப்பர் கிளாஸ் என்று எல்லாத்தையும் ஒன்றாக நினைத்து அவரும் குழம்பி நம்மையும் சேர்த்தே குழப்பியிருக்கிறார்..!

முதல் 20 நிமிடங்களைக் கடந்த பின்பு இறுதிவரையிலும் சுடுதண்ணியில் கால் வைத்திருக்கும் கதைதான்.. “எப்படா முடிச்சுத் தொலைவீங்க..?” என்று கதற வைத்துவிட்டார்..! இசைஞானியிடம் இசையை முடிந்த அளவுக்கு கேட்கும்படியாக வாங்கத் தெரிந்த அவருக்கு அதையாவது உருப்படியாக எடுத்துத் தொலைத்திருக்கக் கூடாதா..? ஒவ்வொரு பாடலுக்கும் இடையிடையே காட்சிகளை வைத்துக் கொண்டு ஒரு பாடல் முடிய 20 நிமிடங்களாக்கியதில் இசையைக் கேட்கும் ஆசையே போய், இவருடன் கூட்டு சேர்ந்ததற்காக இசைஞானியையும் சேர்த்தே திட்ட வேண்டியிருக்கு..!

எத்தனை தடவைங்க இந்த லவ் வரும்.. போகும்..? சின்ன வயசுல போகுது.. அப்புறம் ஸ்கூல் டைம்ல போகுது.. அப்புறம் காலேஜ் லைப்ல வந்து, வந்து போகுது.. சரி அதையாவது சட்டுன்னு முடிச்சு வீட்டுக்கு அனுப்புனாங்களா..? கடைசீல கல்யாணத்தையும் ஏற்பாடு பண்ண வைச்சு.. ஏதோ சமந்தா இவர் இல்லைன்னா செத்தே போயிருவாங்கன்னு சீன் போட்டு கடைசியா காதலிலும், கல்யாணத்திலும் கெஞ்ச வேண்டியது.. மன்னிப்பு கேட்க வேண்டியது.. காத்திருக்க வேண்டியது பெண்தான் என்ற சினிமாத்தனத்தைக் காட்டி ஒரு சிறந்த ஆணியவியாதியாக உருவெடுத்திருக்கிறார் கெளதம்.

ஜீவா இதில் நடித்த நேரத்தில் வேறு படத்திலாவது நடிக்கப் போயிருந்தால் அவருக்காச்சும் ஏதாச்சும் பிரயோசனமா இருந்திருக்கும்.. இந்த மொக்கை கதைக்குத்தான் இத்தனை அலப்பறையா..? இவ்வளவு கெட்டப்பா என்று ரசிகர்களின் கோபக் கனல் கெளதமின் அடுத்த வெற்றிப் படம் வரும்வரையிலும் இருக்கும்..! சமந்தா அழகு என்பது கெளதமுக்கு மட்டுமே நன்கு தெரியும் என்பதால் அதை எப்படியெல்லாம் எக்ஸ்போஸ் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் செய்திருக்கிறார்.. ஆனால் அவரையும் கடைசி நேரத்தில் கதற வைத்து தனது சாடிஸத்தைக் காட்டியிருக்கிறார்..!

சந்தானம்ன்னு ஒருத்தர் இருக்காரு.. ஒன்றிரண்டு நேரத்துல கிச்சுகிச்சு மூட்டி சிரிப்பைக் கூட்டுறாரு.. அவ்ளோதான்.. அவரும் என்னதான் செய்வாரு..? டிராவல் பண்ண அவருக்காச்சும் கதை வேணாமா..? அவரையும் செகண்ட் ஆஃப்ல காமெடியாக்கி அவருக்கு ஒரு ஜெனிபரை லவ்வராக்கி ஜீவாகூட சுத்தவிட்டு திரைக்கதையை நகர்த்தியதுதான் மிச்சம்..! 

இவ்வளவு பெரிய பொருட்செலவில் தயாரித்து தோல்விக்காகவே அர்ப்பணித்திருக்கும் கெளதமின் இந்தச் செயலால் நஷ்டப்பட்டிருக்கும் தயாரிப்பாளர் அடுத்த படத்தை எப்படி எடுப்பார் என்று தெரியவில்லை..! இயக்குநரின் தவறுதலால் இது சங்கிலித் தொடராக பாய்ந்து சினிமா இண்டஸ்ட்ரிக்கும் சிறிது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் கொடுமை..!

எப்போதடா எந்திரிச்சு வெளில ஓடுவோம்ன்ற மனநிலைலேயே படத்தைப் பார்க்க வேண்டியிருந்ததால படத்துல மத்த அயிட்டங்களை பார்க்கவோ, சொல்லவோ மனசே இல்லை..  இதுக்கு மேல எழுதறதுக்கும் இந்தப் படத்துல எதுவுமே இல்லைன்றதால இப்படியே முடிச்சுக்குறேன்.. 

வீட்டுலேயே இருந்து  புள்ளைக்குட்டிகளை படிக்க வைங்கப்பா..! 

34 comments:

சீனு said...

நல்ல வேளை, விமரிசனத்தை சின்னதா முடிச்சுட்டீங்க... :D

வருண் said...

நான் ஒரு மாதிரியா இதைத்தான் நம்ம "அண்ணன்"ட்ட இருந்து எதிர்பார்த்தேன்! :-)))

Rizi said...

//எப்போதடா எந்திரிச்சு வெளில ஓடுவோம்ன்ற மனநிலைலேயே படத்தைப் பார்க்க வேண்டியிருந்ததால//

Correct Words.. This is the your best review ever!

rajasundararajan said...

என்னது, புது அவதாரம் எடுத்திட்டீங்களா? கதையை எழுதாமல் விமர்சனம் பண்ணி இருக்கிறீர்கள்? இருந்தாலும் இந்த நரசிம்ம அவதாரம் கொஞ்சம் ஓவர்தான்!

நீங்க என்னடான்னா, தயாரிப்பளர்களைக் காப்பாத்த உருமுகிறீர்கள்; கேபிள், கவுதமைக் காப்பாத்த மழுப்புகிறார் - நல்ல அரசியல்!

Unknown said...

//கதையை எழுதாமல் விமர்சனம் பண்ணி இருக்கிறீர்கள்//

’கதையே இல்லாமல் படம் எடுப்பது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம்’ என்று ஆரம்பத்திலேயே அண்ணன் சொல்லி விட்டார். இல்லாத கதையை எப்படி விமர்சிக்க முடியும், சரிதானே அண்ணன் அவர்களே.

sajirathan said...

விமர்சனத்துக்கு நன்றி. அப்பிடியே எனது விமர்சனத்தையும் படியுங்கள் நண்பரே

http://sajirathan.blogspot.com/2012/12/blog-post.html

வவ்வால் said...

அண்ணாச்சி,

//வீட்டுலேயே இருந்து புள்ளைக்குட்டிகளை படிக்க வைங்கப்பா..!
//

டிடிஎச் இல் தியேட்டருக்கு முன்னர் படம் வெளியாகி, இதே போல விமர்சனம் வந்தால் என்னாகும்னு ,கொஞ்சம் நினைச்சுப்பாருங்க.ஓப்பனிங் கலெக்‌ஷன் கூட படுத்துக்கும் :-))

கவுதம் மேனனின் ,போட்டான் கதாஸ் ஒரு கூட்டு தயாரிப்பாளர் தானே, நஷ்டம் வந்தா அவருக்கும் வருமே?

ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் எல்ரெட் குமாருக்கு வித்து இருப்பார்னு வச்சிக்கிட்டாலும்,இனிமே கவுதம் மேனன் படம் வாங்க மாட்டாங்க தானே.

குமரன் said...

அண்ணே,

நீங்க கோபப்படறது புடிச்சிருக்குன்றேன். பாருங்க விமர்சனத்தை சுருக்கா முடிச்சிட்டீங்க! :)

Subramanian said...

Dear UT,

The film is not engrossing and lacks intensity but why have you been so harsh in your movie.I think this movie may do well in Telugu(and get back the money) as romance movies do well there. If songs had been good this film may have scraped through.

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

நல்ல வேளை, விமரிசனத்தை சின்னதா முடிச்சுட்டீங்க... :D]]]

இந்தப் படத்துக்கு இது போதும்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

நான் ஒரு மாதிரியா இதைத்தான் நம்ம "அண்ணன்"ட்ட இருந்து எதிர்பார்த்தேன்! :-)))]]]

ஐயோ.. நான் உங்களை மாதிரி தெளிவா இல்லையே அருண்.. ரொம்ப ஏமாத்தம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Rizi said...

//எப்போதடா எந்திரிச்சு வெளில ஓடுவோம்ன்ற மனநிலைலேயே படத்தைப் பார்க்க வேண்டியிருந்ததால//

Correct Words.. This is the your best review ever!]]]

பரவாயில்லையே.. நம்மளை மாதிரியே பீலிங் பார்ட்டிகளும் இருக்காங்க.. நன்றி ரிஷி ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

என்னது, புது அவதாரம் எடுத்திட்டீங்களா? கதையை எழுதாமல் விமர்சனம் பண்ணி இருக்கிறீர்கள்? இருந்தாலும் இந்த நரசிம்ம அவதாரம் கொஞ்சம் ஓவர்தான்!]]]

அட போங்கண்ணே.. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி.. காரணமே இல்லாம புலம்பி.. வசனத்தாலேயே திரைக்கதையை நிரப்ப நினைச்சு.. நம்ம மண்டை காய்ஞ்சதுதான் மிச்சம்..

உண்மைத்தமிழன் said...

[[[Ak Ananth said...

//கதையை எழுதாமல் விமர்சனம் பண்ணி இருக்கிறீர்கள்//

’கதையே இல்லாமல் படம் எடுப்பது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம்’ என்று ஆரம்பத்திலேயே அண்ணன் சொல்லி விட்டார். இல்லாத கதையை எப்படி விமர்சிக்க முடியும், சரிதானே அண்ணன் அவர்களே.]]]

மிக்க சரி ஆனந்த்..! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//வீட்டுலேயே இருந்து புள்ளைக்குட்டிகளை படிக்க வைங்கப்பா..!//

டிடிஎச் இல் தியேட்டருக்கு முன்னர் படம் வெளியாகி, இதே போல விமர்சனம் வந்தால் என்னாகும்னு, கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. ஓப்பனிங் கலெக்‌ஷன்கூட படுத்துக்கும் :-))]]]

தன் படம் தரமானதுன்னு கமல் நினைக்கிறார். அதுனால தைரியமா களத்துல குதிச்சிருக்கார். அவ்ளோதான்..!

[[[கவுதம் மேனனின், போட்டான் கதாஸ் ஒரு கூட்டு தயாரிப்பாளர்தானே.. நஷ்டம் வந்தா அவருக்கும் வருமே? ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் எல்ரெட் குமாருக்கு வித்து இருப்பார்னு வச்சிக்கிட்டாலும், இனிமே கவுதம் மேனன் படம் வாங்க மாட்டாங்கதானே.]]]

மாட்டாங்கன்னு இல்லை.. யோசிப்பாங்க.. குறைஞ்ச விலைக்குத்தான் விக்க முடியும்.. இல்லைன்னா சொந்த ரிலீஸ்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[sajirathan said...

விமர்சனத்துக்கு நன்றி. அப்பிடியே எனது விமர்சனத்தையும் படியுங்கள் நண்பரே

http://sajirathan.blogspot.com/2012/12/blog-post.html]]]

ரொம்பப் பாராட்டியிருக்கீகளேண்ணே..! முடியலை..!

உண்மைத்தமிழன் said...

[[[குமரன் said...

அண்ணே, நீங்க கோபப்படறது புடிச்சிருக்குன்றேன். பாருங்க விமர்சனத்தை சுருக்கா முடிச்சிட்டீங்க! :)]]]

இந்தப் படத்துக்கு இதுவே அதிகம்ன்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Subramanian said...

Dear UT,

The film is not engrossing and lacks intensity but why have you been so harsh in your movie.I think this movie may do well in Telugu (and get back the money) as romance movies do well there. If songs had been good this film may have scraped through.]]]

பாடல் மட்டும் நல்லாயிருந்தா போதுமா..? கதையும், திரைக்கதையும் வேணாமா..? சுத்தமான போரடிக்கும் படம் ஸார்..!

அகில் பூங்குன்றன் said...

Review romba kuttiya irukkunga... :)

Arunjunaikumar said...

Nice

Anonymous said...

[[UT]]

காத்திருக்க வேண்டியது பெண்தான் என்ற சினிமாத்தனத்தைக் காட்டி ஒரு சிறந்த ஆணியவியாதியாக உருவெடுத்திருக்கிறார் கெளதம்.
[[UT]]

நீங்க விண்ணை தாண்டி வருவாயா பார்த்ததில்லையா அதுல என்ன பொண்ண காத்திருக்கு. காதலிச்சு இருந்தா இந்த படம் உங்களுக்கு புரிந்து இருக்கும். படம் புரியலன புரியலன்னு சொல்லுங்க அத விட்டுட்டு எதோ வாந்தி எடுத்த மாதிரி எல்லாம் விமர்சனம் அப்படின்ற பேருல எழுதாதிங்க.

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

Review romba kuttiya irukkunga... :)]]]

இந்தப் படத்துக்கு இது போதுமே அகில்..?!

உண்மைத்தமிழன் said...

[[[carthickeyan said...

[[UT]]

காத்திருக்க வேண்டியது பெண்தான் என்ற சினிமாத்தனத்தைக் காட்டி ஒரு சிறந்த ஆணியவியாதியாக உருவெடுத்திருக்கிறார் கெளதம்.[[UT]]

நீங்க விண்ணை தாண்டி வருவாயா பார்த்ததில்லையா அதுல என்ன பொண்ண காத்திருக்கு. காதலிச்சு இருந்தா இந்த படம் உங்களுக்கு புரிந்து இருக்கும். படம் புரியலன புரியலன்னு சொல்லுங்க.. அத விட்டுட்டு எதோ வாந்தி எடுத்த மாதிரி எல்லாம் விமர்சனம் அப்படின்ற பேருல எழுதாதிங்க.]]]

சரிங்க நண்பரே..! நமக்குப் புரிஞ்சது அவ்வளவுதான்..!

சேக்காளி said...

போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்
http://www.sekkaali.blogspot.com/2012/09/blog-post.html

உண்மைத்தமிழன் said...

[[[சேக்காளி said...

போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்
http://www.sekkaali.blogspot.com/2012/09/blog-post.html]]]

சில பாடல்கள் கேட்கும்விதமாகத்தான் இருந்தன..! பின்னணி இசைதான் பெரும் ஏமாற்றமளித்தது..!

balakrishnan said...

enakku padam pidichirukku rajavukku bgmil perithaga velaillamal padalgal moolam padathai nagarthirukkum vidham arumai...idhu thamil pada ulagathirkku pudhumai...(ini mokka padagal illamal nalla padangal uruvavithirkku nalla arambamam ) rajavum edirpaarthadai vida adakki vaasithu nammai padathota innaithuvittar enabadhu en karauthu,indha padathukku a.r.rahman alladhu harris isai amathu irunndhal sema comedy padamaga amainthirukkum..rajavin bgm illamal paadagal vaithe padam kondu vandha gauthamkku hats off.......neengal vimarsikkum alavu padam mokkaiyaga illai edhirpaarthadu pol primadham illa vittalum nep best thaan.
ini varum thamil padangallukku mokkaiyana paadalgal (dream songs/kuthu songs/maniratnam's kadal songs)kondu low budget padangal uruvaagamal irukka nep nallathoru padai amaithiruppadu arumai...rajavin isai endrum best adhai niraivaga use pannikonda gautham menon meendum oru murai hats off

indiaworldcupwin said...

ஆமாம் ஆமாம்... கௌதம் என்ற பிராண்ட் ஈகோ கௌதமை தோற்கடித்துவிட்டது.

ABDUL RAHMAN said...

படம் பார்த்துக்கொண்டே உங்கள் விமர்சனம் படித்தேன் ,படம் ஆரம்பித்து அரை மணிநேரம் ஆகியும் படத்தில் ஒரு பிடிப்பு இல்லை .விமர்சனம் அருமை .எங்கே கும்கி விமர்சனம்

சிவா said...

படம் இயக்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. எல்லோராலும் எல்லா நேரத்திலும் வெற்றி காண்பது என்பது முடியாது. ஒரு காலத்தில் விக்கிரமன் என்றாலே ஹிட் என்ற காலம் மாறிப் போனதை மக்கள் மறக்க மாட்டார்கள். எந்த இயக்குனரும் படம் தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எடுப்பதில்லை. இருந்தாலும் உங்கள் விமர்சனம் அவருக்கு சென்று சேர்ந்து அவர் அடுத்த படமாவது வெற்றிப் படமாகட்டும்.

உண்மைத்தமிழன் said...

பாலகிருஷ்ணன்ஜி..

உங்களது பாஸிட்டிவ் கமெண்ட்டுகளுக்கு எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[indiaworldcupwin said...

ஆமாம் ஆமாம்... கௌதம் என்ற பிராண்ட் ஈகோ கௌதமை தோற்கடித்துவிட்டது.]]]

இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ABDUL RAHMAN said...

படம் பார்த்துக்கொண்டே உங்கள் விமர்சனம் படித்தேன். படம் ஆரம்பித்து அரை மணிநேரம் ஆகியும் படத்தில் ஒரு பிடிப்பு இல்லை. விமர்சனம் அருமை. எங்கே கும்கி விமர்சனம்?]]]

படம் பார்த்துக்கிட்டே விமர்சனமா..? புது மாதிரியா இருக்கே..?

கும்கி விமர்சனமும் எழுதியாச்சே நண்பரே.. படிக்கலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[அருள் said...

நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!

http://arulgreen.blogspot.com/2012/12/Neethaane-En-Ponvasantham.html]]]

அண்ணன்.. அதிகமா தமிழ்ச் சினிமால்லாம் பார்க்குறது இல்லையோ..?

Unknown said...

@பொய்தமிழரே
அருமையானதொரு காதல் படத்திற்கு இப்படியொரு விமர்சனம் அதிர்ச்சியாக இருக்கிறது.படம் புரியவில்லை என்றாலோ,திருட்டு வி.சி.டியில்,பார்த்திருந்தாலோ,அல்லது உங்களுக்கு கண்,காது கேளாமை, இருந்தாலோ அனைத்தையும் சரி செய்துவிட்டு திரும்பவும் ஒரு முறை பார்க்கவும்.இந்த படத்தை பிடிக்காதவர்கள் ரசனையற்றவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
எல்லாம் தெரிந்த பெருமானாக மொக்கை விமர்சனங்களை எழுதி உங்கள் அல்லக்கைகளுக்கு சொம்படிக்க வேண்டாம்.