சுழல் - சினிமா விமர்சனம்

27-07-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இது எந்த ஹாலிவுட், ஐரோப்பிய படத்தின் காப்பி என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்ல்லாம்..!

பாண்டிச்சேரி கல்லூரியில் படிக்கும் மாணவர்தான் ஹீரோ. அவருடைய செட்டில் மொத்தம் 10 பேர். அவரையும் சேர்த்து 5 ஆண்கள், 5 பெண்கள்..! ஹீரோவின் அப்பா ஈரோட்டு பக்கம் வாழ்ந்து கெட்ட குடும்பம். சூதாட்டத்தில் தனது பெயரையும், புகழையும், சொத்துக்களையும் அழித்தவர். இதனால் ஹீரோ பணத்துக்காக படித்தபடியே எலெக்ட்ரிக்கல் வேலையையும் செய்து வருகிறார். 


யாரோ ஒரு தீவிரவாதக் கூட்டம், இந்தியாவில் கடற்கரையோரமாக ஏதோ ஒரு அசம்பாவிதத்தைச் செய்யவிருப்பதாக உள்துறைக்குத் தகவல் கிடைத்து அது சி.பி.ஐ.க்கு செல்கிறது. சி.பி.ஐ. தேடும் பணியில் இறங்க.. எப்போதும் போதை மருந்துக்கு அடிமையான நிலைமையில் இருக்கும் பிரதாப்போத்தன் சிக்குகிறார். அவரது வீட்டுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்யப் போகிறார் ஹீரோ. சிபிஐ இப்போது ஹீரோவையும் பாலோ செய்கிறது. 

ஹீரோ தன் வீட்டுக்கு தனது நண்பர்களை அழைத்துச் செல்கிறார். திரும்பும் வழியில் காதலர்களான நண்பர்கள் இருவர் விபத்தில் சிக்குகிறார்கள். இதில் காதலி இறந்துவிட.. காதலன் உயிர் பிழைத்தாலும் சீரியஸாகவே இருக்கிறார். அவரைப் பிழைக்க வைக்க லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. 

இந்த நேரத்தில் பிரதாப் எந்த நேரமும் தனது வீட்டில் இன்னும் ஒரு வாரத்தில் தான் கோடீஸ்வரனாகிவிடுவேன் என்றே சொல்லி வருகிறார். இதனைக் கேட்டிருக்கும் ஹீரோ தனது கடைசி வேலை நாளில் பிரதாப்புக்கு வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க ஓடுகிறார். போலீஸ் அவரை துரத்த.. பணம் பண்ணும் வழியைக் கண்டறிந்துவிடுகிறார் ஹீரோ. ஆனால் அது அவர் நினைக்காத பயங்கரத்தைக் காட்ட.. அதில் இருந்து அவர் தப்பிக்கிறாரா இல்லையா என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

பணம் சம்பாதிக்க உயிரைப் பணயம் வைக்கும் ஒரு விளையாட்டில் சிக்கிக் கொள்கிறார் ஹீரோ. தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் கதை.. இப்படி இரண்டு வரிகளில் இதனைச் சொல்லித் தப்பித்துவிடலாம். ஆனால் தமிழ்ச் சினிமாவுக்கென்றே தனி பார்முலா உண்டே.. அந்த வகையில் ஹீரோவுக்கு ஏன் அந்த பணம் சம்பாதிக்கும் ஆசை..? அதன் புறச் சூழல் என்னென்ன என்பதற்காகத்தான் ஹீரோவின் பேமிலி, அவருடைய படிப்பு.. போதை ஆசாமி பிரதாப் போத்தனின் பெத்த நடிப்பு.. நிழல்கள் ரவியின் இழந்துபோன ஜமீன்தார் கெட்டப்.. என்று அனைத்தையும் கலந்து கட்டிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயக்குமார்.

ஹீரோவாக புதுமுகம் பாரீஸ்.. பெயர் வித்தியாசம்போல் பார்ப்பதற்கும் வித்தியாசமாகவே இருக்கிறார். முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதியில் கப்பலில் அந்தக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு தவிப்பதில் மட்டுமே தனியாகத் தெரிகிறார்..! ஹீரோயின் என்று தனியாக யாரும் இல்லை..! ஒரேயொரு பாடல் காட்சியில் மட்டும் பளிச்சென்று தெரிகிறார் ரோஸி. இவரில்லாமல் சாருலதா, ஜோதி என்று இன்னும் 2 நங்கைகளும் உண்டு..!

கொஞ்சமேனும் வந்தாலும் காவேரியின் புலம்பல் ஆக்ட்டிங் மறக்க முடியாதது.. நிஜ ஆங்கிலோ இண்டியனான காவேரியை தேடிப் பிடித்து இதுக்காகவே நடிக்க வைத்திருக்கிறார்களோ..? ஆனாலும் ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்ப பேச வைத்திருப்பதால் கொஞ்சம் கடுப்பும் சேர்ந்து வருகிறது.. பிரதாப் போத்தனும், நிழல்கள் ரவியும் தாங்கள் இருப்பதை நிலை நாட்டியிருக்கிறார்கள் அவ்வளவே.. 

வீணடிக்கப்பட்ட நடிகரும் இருக்கிறார். அவர் அதுல் குல்கர்னி. இந்தக் கேரக்டருக்கு இவர் எதற்கு என்றுதான் தெரியவில்லை. விளம்பரங்களிலும், விழாக்களிலும் அதுலே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது கடைசியில் கேலியாகிவிட்டது..! இவர் தனியாக கண்டுபிடிப்பதை போன்று காட்சிகளோ, அழுத்தமான திரைக்கதையோ இல்லாததால் ரன், தீபாவளி, ஹேராமில் இருந்த  இவரது பங்களிப்பு இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும்..!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவைகள் மூன்று மட்டுமே.. எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை... இந்த மூன்றுமே இந்தப் படத்தில் அபாரம்.. இரண்டாம் பாதியில் கப்பல் காட்சிகளையும், கிளைமாக்ஸையும் பரபரவென நகர்த்தியிருப்பதில் எடிட்டர் பி.லெனினின் பங்களிப்பு மிக அதிகம்தான்.. ரொம்ப நாளைக்கப்புறம் மீண்டும் கையில் கத்திரிக்கோலை தொட்டிருக்கிறார் எடிட்டர் திலகம் லெனின். அவருக்கு எனது வாழ்த்துகள்..!

பாண்டிச்சேரியின் வீதிகளையும், கேரளாவின் இயற்கை வனங்களையும் பளிச்சென்று காட்டுகிறது ஜேம்ஸ் கிருஷின் ஒளிப்பதிவு..! அதிலும் பாடல் காட்சிகளில் கேமிராவின் பங்களிப்புதான் மிக அதிகமாக இருக்கிறது..! எல்.வி.கணேசனின் இசையில் யார் யாரோ பாடலும், சொல்ல வந்தேன் பாடலும் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கின்றன.. இவர் நினைத்தால் ஒரு ரவுண்டு வரலாம் என்றே நினைக்கிறேன்..! சொல்ல வந்தேன் என்ற மெலடியில் எடு்ககப்பட்ட காட்சிகளிலும்கூட அசத்தியிருக்கிறார் இயக்குநர்..!

முற்பாதி முழுவதும் குடும்பப் பிரச்சினைகளையே அதிகம் தொட்டுவருவதால் கதை எங்கே போய் நிற்கும் எனத் தெரியாத சூழலில் அந்த ஆக்சிடெண்ட்.. அதைத் தொடர்ந்த நிகழ்வுகள்.. பிரதாப்புக்கு வந்த லெட்டரை ஹீரோ எடுத்துக் கொண்டு கேரளா கிளம்புவது.. இந்த நடத்தில் கதை பறக்கத் துவங்கி அது என்ன வகையான விளையாட்டு என்பது தெரியும் நிலை வரையிலும் வேகம்.. வேகம்.. வேகம்..

அந்த பயங்கர விளையாட்டை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே காட்டியிருக்கலாம்..! அது இல்லாததால் அதிகம் மனதில் ஒட்டவில்லை. 
கடல் எல்லைக்கு அருகில் நிற்கும் கப்பலில் நடக்கும் இந்தக் கூத்து போலீஸாருக்கு தெரியாது என்றும்.. ஒரே நாள் இரவில் பிணம் கரையைத் தொட்டு.. அந்தக் கப்பல்தான் தங்களது இலக்கு என்று போலீஸும், சி.பி.ஐ.யும் முடிவெடுப்பதும்.. இயக்குநர் கஷ்டப்படாமல் கதையை முடிக்க முடிவெடுத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது..! இருந்தாலும் அந்த இறுதிக் காட்சியில் மனதில் ஒரு பீலிங் எழுவது என்னவோ உண்மைதான்..!

இந்த வாரம் வந்த படங்களிலேயே இது சிறந்தது என்பதால் கொஞ்சமாச்சும் ஓடட்டுமே என்று வாழ்த்துகிறேன்..!

நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!
  

20 comments:

குரங்குபெடல் said...

"இந்த வாரம் வந்த படங்களிலேயே இது சிறந்தது என்பதால் கொஞ்சமாச்சும் ஓடட்டுமே என்று வாழ்த்துகிறேன்..! "


விமர்சனம் என்ற பெயரில்

நீங்கள் எழதும் கொடுமை வரிகளில்

இது உச்சம்

சிவா said...

இது 13 Tzameti என்ற ஆங்கில திரைப்படத்தின் கதை ...

திண்டுக்கல் தனபாலன் said...

பாடம் பார்க்கவில்லை நண்பரே...
விமர்சனத்திற்கு நன்றி....

Doha Talkies said...

விமர்சனம் மிகவும் அருமை அண்ணா.

HandsomeRockus said...

It is Jason Statham film "13"

http://en.wikipedia.org/wiki/13_%28film%29

”தளிர் சுரேஷ்” said...

இந்தவார படங்களில் இது சிறந்த படமா? கொஞ்சம் உறுத்துகிறது!

Caricaturist Sugumarje said...

அடபாவிகளா? அப்படியே சுட்டுட்டாங்க போல...
http://www.imdb.com/title/tt0798817/
சாம்பிள்... உள்ள டால்போட், ஓஹியோ, அறுவை சிகிச்சை ஒரு தந்தையின் தேவை ஒரு நிதி ஜெர்மானிய குடும்பம் வைக்கிறது. அவரது மகன் வின்ஸ், எலக்ட்ரீஷியன், ஒரு நாளில் ஒரு அதிர்ஷ்டம் செய்வது பற்றி ஒரு மனிதன் ஒட்டுக்கேட்கிறார். நியூயார்க் ஒரு ரயில் எடுத்து தொடர்பு காத்திருக்கிறது....

ஜெட்லி... said...

அண்ணே இந்த மாதிரி அடுத்த வாரம் வர்ற மதுபான கடைக்கும் சாயங்காலத்துக்கு முன்னாடி விமர்சனம்
போட்டீங்கனா எங்க அப்பன் முருகன் அருளால் ஒரு அம்பதோ நூறோ மிச்சம் ஆகும்...

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

"இந்த வாரம் வந்த படங்களிலேயே இது சிறந்தது என்பதால் கொஞ்சமாச்சும் ஓடட்டுமே என்று வாழ்த்துகிறேன்..! "

விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் எழதும் கொடுமை வரிகளில் இது உச்சம்.]]]

ஹா.. ஹா.. வேற வழி..! அதுக்கு இது பெட்டர்தான்னுதானே சொல்ல முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[சிவா said...

இது 13 Tzameti என்ற ஆங்கில திரைப்படத்தின் கதை ...]]]

அப்படியா.. தேடிப் படிக்கிறேன் சிவா.. தகவலுக்கு மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

பாடம் பார்க்கவில்லை நண்பரே...
விமர்சனத்திற்கு நன்றி....]]]

அவசியம் பாருங்க ஸார்..! நம்மூர்ல எந்தத் தியேட்டர்ல போட்டிருக்காங்க..?

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

விமர்சனம் மிகவும் அருமை அண்ணா.]]]

நன்றி தம்பி..! தொடர்ச்சியான உமது ஆதரவிற்கு எனது வணக்கங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[HandsomeRockus said...

It is Jason Statham film "13"

http://en.wikipedia.org/wiki/13_%28film%29]]]

ஓகே.. சிவா அண்ணன் ஒரு படத்தைச் சொல்லியிருக்காரு. நீங்க ஒண்ணு சொல்றீங்க.. பார்ப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

இந்த வார படங்களில் இது சிறந்த படமா? கொஞ்சம் உறுத்துகிறது!]]]

வேற வழியில்லை சுரேஷ்.. உண்மையை சொல்லத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

அடபாவிகளா? அப்படியே சுட்டுட்டாங்க போல...

http://www.imdb.com/title/tt0798817/

சாம்பிள்... உள்ள டால்போட், ஓஹியோ, அறுவை சிகிச்சை ஒரு தந்தையின் தேவை ஒரு நிதி ஜெர்மானிய குடும்பம் வைக்கிறது. அவரது மகன் வின்ஸ், எலக்ட்ரீஷியன், ஒரு நாளில் ஒரு அதிர்ஷ்டம் செய்வது பற்றி ஒரு மனிதன் ஒட்டுக் கேட்கிறார். நியூயார்க் ஒரு ரயில் எடுத்து தொடர்பு காத்திருக்கிறது.]]]

ஆஹா... மூணாவது ஆடும் சிக்கியிருக்கே..? பார்த்திருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெட்லி... said...

அண்ணே இந்த மாதிரி அடுத்த வாரம் வர்ற மதுபான கடைக்கும் சாயங்காலத்துக்கு முன்னாடி விமர்சனம்
போட்டீங்கனா எங்க அப்பன் முருகன் அருளால் ஒரு அம்பதோ நூறோ மிச்சம் ஆகும்.]]]

அந்தப் படத்தின் கதை ரொம்ப சிம்பிள்.. ஒரு டாஸ்மாக் கடையில் ஒரு நாளில் நடைபெறுகின்ற சம்பவங்களின் தொகுப்புதான் அது..!

வவ்வால் said...

புதுவையில சுழல் படத்து போஸ்டர்ல காக்டெயில் தீபிகா படத்தையும் கலந்து ஒட்டி வச்சு இருக்காங்க... கொஞ்ச நேரமா கன்பியூஸ் ஆகிட்டு இப்போ தான் படம் பார்க்காமல் வந்தேன் , நல்லவேளை தீபீகா படத்தை பார்த்து ஏமாந்திருப்பேன் :-))

ரத்னாவில் ஓடிக்கிட்டு இருந்த பில்லாவை தூக்கிட்டு மீண்டும் ஈ னு படம் ஓட்டுறாங்க :-))

ragunanthan said...

//...ஆஹா... மூணாவது ஆடும் சிக்கியிருக்கே..? பார்த்திருவோம்..!...///

13 படம் , 13Tzameti என்ற பிரெஞ்சுப்படத்தின் ஆங்கில தழுவல். நீங்க சொல்ற மாதிரி மூணு ஆடெல்லாம் இல்லை ஒரு கிடாய்தான்.

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

புதுவையில சுழல் படத்து போஸ்டர்ல காக்டெயில் தீபிகா படத்தையும் கலந்து ஒட்டி வச்சு இருக்காங்க... கொஞ்ச நேரமா கன்பியூஸ் ஆகிட்டு இப்போதான் படம் பார்க்காமல் வந்தேன்.. நல்லவேளை தீபீகா படத்தை பார்த்து ஏமாந்திருப்பேன் :-))]]]

ஓ.. வவ்வால்ஜி.. நீரு தீபிகாவின் ரசிகரா..? நல்லாயிரும்..! காக்டெயிலும் படம் சுமார்தானாம்..! இதையும் ஒரு தடவை பார்க்கலாம்ண்ணே..!

[[[ரத்னாவில் ஓடிக்கிட்டு இருந்த பில்லாவை தூக்கிட்டு மீண்டும் ஈ னு படம் ஓட்டுறாங்க :-))]]]

இதுதான் சினிமா. எது பணம் கொடுக்குமோ அது மேலதான் பெட் கட்டுவாங்க..! பில்லா மோகம் 3 நாள்ல முடிஞ்சு போச்சு..! அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ragunanthan said...

//...ஆஹா... மூணாவது ஆடும் சிக்கியிருக்கே..? பார்த்திருவோம்..!...///

13 படம், 13 Tzameti என்ற பிரெஞ்சுப் படத்தின் ஆங்கில தழுவல். நீங்க சொல்ற மாதிரி மூணு ஆடெல்லாம் இல்லை ஒரு கிடாய்தான்.]]]

ஓ. அப்படியா..? இனி இந்த வாரம் இந்த மேட்டரை வைச்சு ஓட்ட வேண்டியதுதான்..!