04-12-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘நாடோடிகள்’ கொடுத்த கன்னாபின்னா ஹிட்டால் இந்தப் படமும் அதிக எதிர்பார்ப்பைக் கொடுத்திருந்த்து. சினிமாவில் நீண்ட நாள் அனுபவம் உடையவர் சமுத்திரக்கனி என்பதால் வருகின்ற ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்கிற ஒரேயொரு கொள்கையோடு திட்டமிட்டு படத்தினை ‘நாடோடிகள்’ டைப்பிலேயே எடுத்திருக்கிறார். முன்னதில் உறவுகள் இருந்தும் நட்பும் முக்கியம் என்பதை பறை சாற்றியது. இந்தப் படம் “சொந்த, பந்தங்கள் வேஸ்ட்டு.. நட்புதான் கடைசிவரையில் கை கொடுக்கும்” என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்கிறது..!
சசிகுமார் தாயை இழந்தவர். தந்தை இன்னொரு திருமணம செய்து கொள்கிறார். அவருக்கும் ஒரு பையன் பிறக்க.. சசிகுமாரின் திருமணமாகாத பெரியப்பா மூலம் கிடைக்கவிருக்கும் சொத்துக்கள் அனைத்தும் தன் பிள்ளைக்கே கிடைக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார் சித்தி. மனைவி மயக்கத்தில் இருக்கும் அப்பா எதற்கெடுத்தாலும் தலையை ஆட்ட, நல்ல புத்திசாலி பையனான சசிகுமாரை பள்ளிக்கு அனுப்பாமல் சாணி தட்ட வைக்கிறார்கள். மனநல மருத்துவமனையில் சேர்ப்பித்து சசிகுமாருக்கு பைத்தியம் பட்டத்தையும் சூட்டி சிகிச்சை எடுப்பதாக ஊராரை நம்ப வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களது வீட்டில் வேலை பார்த்த பெரியவர் மூலம் பெரியப்பா மற்றும் தனது அம்மாவை திட்டமிட்டு கொலை செய்த்து சித்தி வழி சொந்தங்கள்தான் என்பது சசிகுமாருக்குத் தெரிய வர.. அவர்களிடம் சென்று மோதுகிறார் ச்சி. இந்த மோதலில் சில கொலைகள் நடந்துவிட தனக்கு பைத்தியம் என்ற பழியை இப்போது ஏற்றுக் கொண்டு, மனநல மருத்துவமனைக்கே வந்து சேர்கிறார் சசி.
அங்கேயும் விடாமல் சசிகுமாரை கண்காணிக்க ஒரு ஆளை சித்தி அனுப்பி வைக்க.. அவர்களிடமிருந்து தப்பிக்க அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்லாரி நரேஷையும் இழுத்துக் கொண்டு சென்னைக்கு வந்து கால் பதிக்கிறார் சசி. ரமேஷின் நண்பன் கஞ்சா கருப்புவின் உதவியோடு பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்க்கிறார்கள் இருவரும். அவ்வப்போது அக்கம்பக்கம் இருப்பவர்களுக்கு சமூக சேவை செய்கிறார்கள். ஓய்வாக கிடைத்த நேரத்தில் சர்வீஸ் வொர்க் எடுத்துச் செய்கிறார்கள். சசிகுமாருக்கும், நரேஷுக்கும் பார்ட் டைமாக சினிமா பாணியில் தானாகவே லவ்வும் வந்து சேர.. கஞ்சா கருப்புவின் விளம்பர வெறியில் இவர்களது புகைப்படங்கள் பிரிண்ட்டாகி பத்திரிகையில் வெளியாக.. சித்தியின் ஆட்கள் அள்ளிப் போட்டுக் கொண்டு போக டாடா சுமோவில் வந்து குவிகிறார்கள். சசியும், நரேஷும் தப்பித்தார்களா.. இல்லையா.. என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..! இதில் பிளாஷ்பேக் கதையை இடைவேளைக்கு பின்பும், சென்னைவாழ் கதையை இடைவேளைக்கு முன்பாகவும் சொல்லி ஒரு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.
தியேட்டரின் முன் வரிசை ரசிகர்களுக்கும், டிரவுசர் தெரிய லுங்கியை ஏத்திக் கட்டிக் கொண்டு அலப்பறையைக் கொடுக்கும் இளைஞர்களுக்கும் சசிகுமாரை ரொம்பவே பிடித்துப் போய் இருக்கிறது..! அவர் அடிக்கடி “நாங்க” “எங்களுக்கு” என்று சொல்லும்போதெல்லாம் அந்த கோஷ்டிகள்தான் தியேட்டரில் கரகாட்டம் ஆடுகிறார்கள்..!
சாதாரணமாக வந்து செல்வதே நடிப்பு என்றாகிவிட்டதால் சசிகுமாரின் நடிப்பு அவருடைய பிளாஷ்பேக் கதையில்தான் தெரிகிறது..! லேசுபாசன வசனங்களைக்கூட ரசிக்க வைக்கும் அளவுக்கு உச்சரிக்கும் சசிக்கு இந்த காதல் மூடுதான் வர மாட்டங்குது..! ஸ்வாதி அவரைக் காதலிக்கும் விதம் அக்மார்க் சுப்பிரமணியபுரம் டைப்.. “நாம ரெண்டு பேரும் காதலுக்கு அடிமையா இருக்கலாம்..” என்ற ஸ்வாதியின் கேள்விக்கு “நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்.. யாரையும் அடிமையாக்கவும் மாட்டேன்” என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டுப் போவது அந்தக் காட்சிக்கு நன்றாகத்தான் இருந்த்து.. ஆனால் ரொமான்ஸ் எங்கே வருது..? எல்லாம் காமெடியாகிவிட்டது..!
நரேஷ்.. தெலுங்கு விற்பனைக்காகவும் நடிக்க வைக்கப்பட்டவர். நன்றாகத்தான் நடித்திருக்கிறார். அவ்வப்போது சோகமயத்தில் இருக்கம்போது வரும் அந்த மனநோய் வரும் காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இயக்கம் சூப்பர் என்றாலும், வெளிக்காட்டியிருக்கும் நரேஷும் பாராட்டுதலுக்குரியவர். அப்பாவித்தனமான அவரது கேரக்டரை நிவேதாவுடன் காதல் கொள்ள இன்ஸ்டன்ட் கவிதைகள் மூலம் சொல்ல வைத்திருப்பது காதலைவிட காமெடியாகவே அதிகம் தெரிகிறது.
படபட கேரக்டர்.. தெற்றுப் பல் தெரிய சிரிப்பது.. அடக்கம் காட்டுவது.. சிடுசிடுப்பது என்று அனைத்தையும் ஸ்வாதி கச்சிதமாகச் செய்திருக்கிறார். சசிகுமார் பேசும் காதல் பற்றிய விளக்கங்களை புரியாமல் கேட்டுவிட்டு நிமிடத்தில் உதார் விடுவது.. சசியின் காதல் ஒப்புதலை கேட்டவுடன் முகத்தில் காட்டும் அந்தப் பரவசம்.. தொட்டியை உடைத்தத்தற்காக போடும் சண்டை, மருத்துவமனையில் சசிகுமாரின் நக்கல் பேச்சைக் கேட்டு குதறியெடுப்பது என்று ஸ்வாதியின் டாமினேட் படத்தில் அதிகம்தான்.. இந்தப் பொண்ணு ஏன் அடிக்கடி நடிக்க மாட்டேங்குது..? நல்ல கதையும் தேவைதான். அதே சமயம் வெரைட்டியாவும் நடிச்சா பெருமையும், புகழும் கிடைக்குமே..?
நிவேதா என்ற இந்த சினிமா புதுமுகம், நரேஷுக்கு ஜோடி.. கொஞ்சம் சினிமாத்தனமான பேமிலி பேக்கிரவுண்ட்டுடன் இவருடைய வாழ்க்கைக் கதை சலிப்பைக் கொடுத்தாலும், கதையின் ஓட்டத்துக்கு 2 இடங்களில் இவர்தான் முக்கியம் என்பதால் ஓகே எனலாம்..! தமிழ்ச்செல்வி என்ற பெயருடன் நரேஷுடன் பேசும் சென்னைத் தமிழும், தன் மாமனை எதிர்க்க முடியாமல் கண்ணீருடன் தவிக்கும் இன்னொரு பக்கமுமாக தனது கேரியரை துவக்கியிருக்கிறார். வாழ்த்துவோம்..!
வசுந்தரா பொண்ணு, ஆட்டுப் பட்டி நடத்தும் பெண்ணாக வந்து அதிசயமாக சண்டையெல்லாம் போட்டுவிட்டு அநியாயமாகச் செத்துப் போய்விடுகிறார்..! வந்ததே கொஞ்ச சீன்ஸ்தான் என்றாலும், இதற்கே முறுக்குப் பிழிந்துவிட்டாராம் கனி..! இவருடைய கேரியரில் இதுவுமொரு முக்கியமான படம்..!
கஞ்சா கருப்பு வழக்கம்போலவே, ஒரே மாடுலேஷனில்தான் பேசுகிறார். ஆனாலும் சிச்சுவேஷன், எதிரணியின் பேச்சு, வசனத்தால் பல இடங்களில் கைதட்டல்கள் தூள் பறக்கிறது..! “திரும்பிப் பார்க்க வைக்க முடியுமா?” என்ற கஞ்சாவின் ஒரு கேள்விக்காக நட்ட நடு இரவில் அத்தனை அதகளத்தையும் செய்து முடித்த பின்பு கஞ்சாவின் அந்த கேள்வியையும், அவர்களுடைய பதிலையும் எதிர்பாராமல் தியேட்டரில் இடியே இடித்தது..! பெஸ்ட் ஸ்கிரீன்பிளே..!
பரோட்டா புகழ் சூரியின் அடுத்த ரவுண்ட் இந்தப் படத்தில்தான் பெரிதாகப் பேசப்படும் என்றே நினைக்கிறேன். வசுந்தரா வீசிய வேல்கம்பை பார்த்து பயந்து போய் நிற்கும் காட்சியிலும், சென்னை வந்து சித்தியின் அப்பனிடம் உதார் விடும் காட்சியிலும் மனிதர் தனி ஸ்லாங்கில் பேசியிருக்கிறார். இதையே பாலோ செய்தால் இன்னொரு கஞ்சா கருப்புவாக உலா வரலாம்..!
ஸ்வாதியின் பேக்கிரவுண்ட், பாட்டி, தங்கை கேரக்டர்களின் கதை.. கீழ் வீடு படவா கோபி மற்றும் அவருடைய மனைவி கேரக்டர், அவர்களுடைய மகளை வைத்து நம்பிக்கையூட்டும் காட்சிகள், குடிகாரனாகவே வலம் வரும் இணை இயக்குநர் குமார், எல்லாத்தையும் தானே முடிவெடுக்கும் ஞானசம்பந்தன், ஒருதலைக் காதலில் இருக்கும் அவரது பேசாமொழி மகள், வெட்டி மகன் என்று ஒரு சீரியல் எடுக்கும் அளவுக்கான நகைச்சுவை கேரக்டர்களை வைத்திருந்தும் அதிகப்பட்சம் அனைத்து காட்சிகளிலும் மெயின் கேரக்டர்களுடனேயே நடிக்க வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் டிவி சீரியல் இயக்கத்தில் 12 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த இயக்குநர் சமுத்திரக்கனி.
சுந்தர் சி.பாபுவின் இசையில் டென்ஷனை கூட்ட வேண்டிய இடங்களில் எல்லாம் கரெக்டாகவே செய்திருந்தாலும், அதீதமான ஒலியமைப்பு பல இடங்களில் காதைக் கிழிக்கிறது..! 'சம்போ சிவசம்போ' டைப்பில் அவர் கொடுத்திருக்கும் தீம் மியூஸிக் கொஞ்சம் டல்லாகவே இருக்கிறது.. எடுத்த எடுப்பிலேயே இத்தனை உச்சஸ்தாயியில் பாடல் இருக்க வேண்டுமா என்ன..? காதலையே இன்னமும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அது பற்றியே ஒரு பாடல் காட்சி என்றவுடன் சட்டென்று உள்ளுக்குள் நுழைய முடியவில்லை..!
படத்தில் அதிகம் பேசப்படுவது வசனங்கள்தான்.. சசிகுமாருக்கு அளவு வைத்து தைத்த சட்டையைப் போன்று வசனங்கள்தான் அவருக்கும் கை கொடுத்திருக்கின்றன. ஸ்வாதியை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் தூக்கி வரும் காட்சியில் அத்தனை வசனங்களும் அப்ளாஸ் வாங்கிவிட்டன. ரூம் போட்டு யோசிச்சுதான் எழுதியிருக்காங்க என்று உறுதியாக நம்பலாம்..!
ஏக்கர் கணக்கில் நிலம், நிலத்தில் யுரேனியம்.. ஒரே செக்காக 10 கோடி.. ஆனால் நிலத்தில் பாத்தியதை மட்டுமே சித்திக்கு. முழு உரிமை சசிகுமாருக்கு என்ற பெரியப்பாவின் உயில்.. பார்க்கும் இடத்திலெல்லாம் சித்தியின் தம்பி சசியை அடிப்பது. வீட்டிற்குள் வைத்து அடியாட்கள் மூலமாக அடிப்பது என்றெல்லாம் ஒரே ரணகளமாக இருக்கும் இந்தக் கதையின் முடிவை ஒரே ஒரு வார்த்தை.. “இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு ஓடிக்கிட்டே இருக்கிறது..?” என்ற காதலியின் கேள்வியே தலைகீழாக மாற்றுகிறது என்கிற ஒரேயொரு சப்பைதான் இந்தப் படத்திலேயே எனக்குப் பிடிக்காத்தாக உள்ளது. ஆனால் இதுதான் கிளைமாக்ஸ் என்பதால் முடிவுக்கான முன்னுரையை வேறு மாதிரியாக சிந்தித்திருக்கலாம் என்று தோன்றுகிறது..!
இதேபோல் நாடோடிகள் டைப்பில் படத்தை முடிக்க விரும்பி போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா கருப்புவை யார், என்ன என்று கேட்காமலேயே அடித்து உதைத்துவிட்டு ரமேஷை தேடி ஆள் வந்திருப்பதையும் காட்டுவது அக்மார்க் சினிமாத்தனம்..!
பல பேட்டிகளில் "படத்தின் கடைசி காட்சியில்தான் கதை என்ன என்பதைச் சொல்லியிருக்குறேன்" என்று திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் கனி. அது “சொந்த பந்தங்கள் வேஸ்ட்டு.. நட்புதான் முக்கியம். அவர்கள்தான் கடைசிவரை வருவார்கள” என்று..! இது அவருடைய பார்வையாக இருக்கிறது..
சினிமாவில் ஆடி, ஓடி, ஓய்ந்து ஊர்ப் பக்கம் போய் செட்டில் ஆனவர்களைக் கேட்டுப் பாருங்கள்.. “நட்பா..? எல்லாம் காசு இருக்கிறவரைக்கும்தான்.. கடைசில கட்டில்ல கிடக்குறப்ப பார்க்கறது நம்ம ஊர்ச்சனம்தாம்பா..” என்பார்கள்.. இப்படியும சிலருக்கு அனுபவம் கிடைத்திருக்கும்..!
கனிக்கும், சசிக்குமான நட்பில் இப்படியான அனுபவங்களே கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறேன். அதனால்தான் 2 படங்களும் இது போலவே வந்திருக்கின்றன.
இப்படி இரண்டு கலவையாகவும் நம்ம மக்கள் அனுபவித்திருப்பதால் இந்தப் படத்திற்கு ‘நாடோடிகள்’ அளவிற்கான வெற்றி கிடைக்காவிட்டாலும், வெற்றிக் கோட்டை தொட்டுவிட்ட பெருமை நிச்சயம் கிடைக்கும்..!
|
Tweet |
16 comments:
Avar allari naresh, ramesh alla..!
தமிழர்களின் சங்ககால வாழ்கையை பாலையில் இந்தவாரம் பார்த்துவிடலாம் என்றுதான் இருந்தேன். ஆனாலும் நட்புகளின் ஒருமித்த ஆதரவு கிடைக்காததால் போராளி பார்க்க வேண்டியதாயிற்று (வருத்தமில்லை)..
விமர்சனம் அருமை.. படமும் அருமை அதிலும் முதல் பாதி அதிலும் வசனங்கள், தன்னம்பிக்கையூடும் போராளி பாத்திரம் கலக்கல் தான்.
//ஸ்வாதியின் பேக்கிரவுண்ட், தாத்தா, தங்கை கேரக்டர்களின் கதை.. கீழ் வீடு படவா கோபி மற்றும் அவருடைய மனைவி கேரக்டர்//
தாத்தாவா பாட்டியா? இது எழுத்துபிழை இல்லையே
//“நாம ரெண்டு பேரும் காதலுக்கு அடிமையா இருக்கலாம்..” என்ற ஸ்வாதியின் கேள்விக்கு “நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்.. யாரையும் அடிமையாக்கவும் மாட்டேன்” //
இந்த சீன்ல..சசிகுமார் (பாத்திரம்) பேசும் காதல்- ஒரு விளக்கம் என்கிற பாணியில் ஒரு வசனம் இருக்கும். அது “காதலில் ஒருவருக்கொருவர் அடிமையாக இருக்க வேண்டும்” என்று முடியும். பின்னர் சசி இவ்வாறு தொடர்வார். “நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்.. யாரையும் அடிமையாக்கவும் மாட்டேன்”. இதற்கான பதிலாக சுவாதி “நாம ரெண்டு பேரும் காதலுக்கு அடிமையா இருக்கலாம்” என்று சொல்வார் என்றே நான் நினைக்கிறேன்..
///தியேட்டரின் முன் வரிசை ரசிகர்களுக்கும், டிரவுசர் தெரிய லுங்கியை ஏத்திக் கட்டிக் கொண்டு அலப்பறையைக் கொடுக்கும் இளைஞர்களுக்கும் சசிகுமாரை ரொம்பவே பிடித்துப் போய் இருக்கிறது..! ///
அப்படியெல்லாம் முடிவுக்கு வர வேண்டாம். அவர்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் என்றில்லை. நான் பார்த்தது ஒரு மல்டிப்ளெக்ஸ் தான். அங்கும் வசனங்களுக்கு கைதட்டல் பலமாகத் தான் இருந்தது.
[[[bharathnryn said...
Avar allari naresh, ramesh alla!]]]
நன்றி நண்பரே.. திருத்திவிட்டேன்..
[[[குடிமகன் said...
//ஸ்வாதியின் பேக்கிரவுண்ட், தாத்தா, தங்கை கேரக்டர்களின் கதை.. கீழ் வீடு படவா கோபி மற்றும் அவருடைய மனைவி கேரக்டர்//
தாத்தாவா பாட்டியா? இது எழுத்துபிழை இல்லையே..]]]
பாட்டிதான். மன்னிக்கணும் குடிமகன் ஸார்..
[[[பறக்கும் குதிரை said...
///தியேட்டரின் முன் வரிசை ரசிகர்களுக்கும், டிரவுசர் தெரிய லுங்கியை ஏத்திக் கட்டிக் கொண்டு அலப்பறையைக் கொடுக்கும் இளைஞர்களுக்கும் சசிகுமாரை ரொம்பவே பிடித்துப் போய் இருக்கிறது..! ///
அப்படியெல்லாம் முடிவுக்கு வர வேண்டாம். அவர்களுக்கு மட்டும்தான் பிடிக்கும் என்றில்லை. நான் பார்த்தது ஒரு மல்டிப்ளெக்ஸ்தான். அங்கும் வசனங்களுக்கு கை தட்டல் பலமாகத்தான் இருந்தது.]]]
அப்படியா..? சந்தோஷமாகத்தான் உள்ளது.. வாழ்க சசியண்ணே..!
நான் இன்னும் படம் பார்க்கவில்லை......உங்கள் விமர்சனம் முழுமையாக இருந்தது.....சரியாக இருந்ததாவென படம் பார்த்து முடிவு செய்துகொள்கிறேன்...ஆனால் ... " போராளி " என்ற தலைப்பில் எனக்கு கொஞ்சம் நெருடுகிறது.
ஒரு மாய எதிர்ப்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்ற சந்தை நோக்கத்தைத் தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை. கதை மாந்தர்கள் போராடுகிறார்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை....என்று விளக்கம் சொன்னால் அது அபத்தம். " காந்தி " படத்துக்கு " ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரன் " னு பேர் வச்ச மாதிரின்னு சொன்னால் சரியாக இருக்கும்.. அப்படி இருக்கு.
சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி தங்கள் கதையை நம்பட்டும்.....திறமையை நம்பட்டும் ....ஆனால் இந்த மாதிரி மலிவான ( உணர்வைக்கிளப்பும் ) உத்திகள் வேண்டாமே...
ஏனெனில் அடுத்த படத்துக்கு " மூவரின் தூக்கு " என்று பெயர் வைத்து மூன்று கதாநாயகர்களின் சாப்பாடுத்தூக்கைக் காட்டிவிடப்போகிறார்.
[[[நான் இன்னும் படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் முழுமையாக இருந்தது. சரியாக இருந்ததாவென படம் பார்த்து முடிவு செய்து கொள்கிறேன். ஆனால் "போராளி" என்ற தலைப்பில் எனக்கு கொஞ்சம் நெருடுகிறது. ஒரு மாய எதிர்ப்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்ற சந்தை நோக்கத்தைத் தவிர எனக்கு எதுவும் தோன்றவில்லை. கதை மாந்தர்கள் போராடுகிறார்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை என்று விளக்கம் சொன்னால் அது அபத்தம். "காந்தி" படத்துக்கு "ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரன்"னு பேர் வச்ச மாதிரின்னு சொன்னால் சரியாக இருக்கும். அப்படி இருக்கு.
சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி தங்கள் கதையை நம்பட்டும். திறமையை நம்பட்டும். ஆனால் இந்த மாதிரி மலிவான (உணர்வைக் கிளப்பும்) உத்திகள் வேண்டாமே.
ஏனெனில் அடுத்த படத்துக்கு "மூவரின் தூக்கு" என்று பெயர் வைத்து மூன்று கதாநாயகர்களின் சாப்பாடுத் தூக்கைக் காட்டிவிடப் போகிறார்.]]]
சூனியவிகடன் அண்ணே..!
ஏதோ ஒரு அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் அனைவருமே போராளிகள்தான் என்கிறார் இயக்குநர். இந்த விளக்கம் எனக்கும் சரியானதாகவே பொருந்துகிறது..
போர்க்களத்தில் போராடுபவர்கள் மட்டுமே போராளிகள் அல்ல. வாழ்க்கையில் போராடுபவர்களும் போராளிகள்தானே..?
புதிய தென்றல் ஸார்..
எதுக்கு இந்த வேண்டாத வேலை..? வலைத்தளத்தின் முகவரியை மட்டும் கொடுக்கலாமே..?
புதிய தென்றல் ஸார்..
எதுக்கு இந்த வேண்டாத வேலை..? வலைத்தளத்தின் முகவரியை மட்டும் கொடுக்கலாமே..?
//சினிமாவில் ஆடி, ஓடி, ஓய்ந்து ஊர்ப் பக்கம் போய் செட்டில் ஆனவர்களைக் கேட்டுப் பாருங்கள்.. “நட்பா..? எல்லாம் காசு இருக்கிறவரைக்கும்தான்.. கடைசில கட்டில்ல கிடக்குறப்ப பார்க்கறது நம்ம ஊர்ச்சனம்தாம்பா..” என்பார்கள்..// சினிமாவை தியேட்டரில் சொந்த பந்தங்களோடு நாம் பார்ப்பதில்லை...தியேட்டருக்கு வருகிற கூட்டம் நட்போடு வருவதால் சினிமாக்காரர்கள் அதை விடவேமாட்டார்கள். ரஜினிக்குதான் எத்தனை படம் இதன் அடிப்படையில்.
என் வலையில் ;
மாயன் : அகமும் புறமும்: பகுதி4;பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்
மாயன் : அகமும் புறமும்: மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி
[[[ மாயன் : அகமும் புறமும் said...
//சினிமாவில் ஆடி, ஓடி, ஓய்ந்து ஊர்ப் பக்கம் போய் செட்டில் ஆனவர்களைக் கேட்டுப் பாருங்கள்.. “நட்பா..? எல்லாம் காசு இருக்கிறவரைக்கும்தான்.. கடைசில கட்டில்ல கிடக்குறப்ப பார்க்கறது நம்ம ஊர்ச்சனம்தாம்பா..” என்பார்கள்..//
சினிமாவை தியேட்டரில் சொந்த பந்தங்களோடு நாம் பார்ப்பதில்லை. தியேட்டருக்கு வருகிற கூட்டம் நட்போடு வருவதால் சினிமாக்காரர்கள் அதை விடவே மாட்டார்கள். ரஜினிக்குதான் எத்தனை படம் இதன் அடிப்படையில்.]]]
ம்.. இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதே.. நன்றி நண்பரே..!
//நிவேதா என்ற இந்த சினிமா புதுமுகம், நரேஷுக்கு ஜோடி// வெரதே ஒரு பாரி மலையாள படத்தில் ஜெயராமின் மகளாக நடித்தவர் தான் இந்த பொண்ணு, நீங்க கூட அந்த படத்துக்கு விமர்சணம் எழுதியதாக நியாபகம்
விரிவான அலசல் நன்றாக இருக்கு உங்கள பணியில் .
நன்றி
http://vazeerali.blogspot.com/
[[[damildumil said...
//நிவேதா என்ற இந்த சினிமா புதுமுகம், நரேஷுக்கு ஜோடி//
வெரதே ஒரு பாரி மலையாள படத்தில் ஜெயராமின் மகளாக நடித்தவர் தான் இந்த பொண்ணு, நீங்ககூட அந்த படத்துக்கு விமர்சணம் எழுதியதாக நியாபகம்.]]]
அடடே.. அந்தப் பொண்ணா..? நல்லாத்தான் இருக்கு..!
[[[கலைநிலா said...
விரிவான அலசல் நன்றாக இருக்கு உங்கள பணியில். நன்றி
http://vazeerali.blogspot.com/]]]
நன்றி நண்பரே..!
Post a Comment