வாடா டேய்..! போடா டேய்..!! தப்பிச்சு போயிருங்கடா..!!!

29-10-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


'ஒச்சாயி' படம் பார்க்கப் போயி 'கெளரவர்கள்' படம் பார்த்த கதையை ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.  அன்றைக்கு தியேட்டரில் மாட்டுத்தாவணி படத்தின் போஸ்டரை அவசரம், அவசரமாக ஒட்டிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அந்தப் படம்தான் அங்கே ரிலீஸ் என்றார்கள். சரி.. பார்த்திருவோம் என்று நினைத்து நேற்று போனேன். மறுபடியும் முருகனின் விளையாட்டு.. அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லையாம். அதுக்குப் பதிலா என் கெரகம்.. 'வாடா' போட்டிருந்தார்கள். செகண்ட் ஷோ வேற.. வந்தது வந்தாச்சு.. பார்த்துத் தொலைவோம் என்று போயி உட்கார்ந்தேன்.

இந்த முறை தியேட்டரில் 12 பேர் இருந்தார்கள். பரவாயில்லை. கீழே தேவி கருமாரியில் 'எந்திரன்' படத்திற்கு 15 பேர் இருந்தார்கள். அதுக்கு இது பரவாயில்லையே..?

சுந்தர்.சி ஒழுங்காக இயக்கம் செய்து கொண்டிருந்த மனிதர். “ஓங்குதாங்கா நமீதாவுக்கு பாடிகார்டு மாதிரியிருக்கப்பா.. நீ கண்டிப்பா நடிக்கலாம்” என்று யாரோ தூபம் போட்டு நடிகர் சங்கத்தில் கார்டு வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். ஒரேயொரு படத்தைத் தவிர மற்ற படங்களெல்லாம் தோல்வியடைந்தாலும் இவருக்கு எப்படி அடுத்தடுத்த படங்கள் கிடைக்கின்ற என்பதெல்லாம் சி.பி.ஐ. விசாரணை போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்.

இந்தப் படம் 2009 ஆகஸ்ட்டில் பூஜை போடப்பட்டு 2010 ஜனவரி பொங்கலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் நடிகை ராதிகாவின் உடன் பிறந்த சகோதரர் எம்.ஆர்.மோகன்ராதா. ராடன் நிறுவனத்தில் பங்குதாரராகவும், இயக்குநர்களில் ஒருவராகவும் பணியாற்றி வந்த மோகன்ராதா 2008-ம் ஆண்டு ஏதோ ஒரு பிரச்சினையால் ராடனில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்பு நானும் சினிமா தொழிலில் ஈடுபடப் போகிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லி இந்தப் படத்தைத் துவக்கினார். அவர் நேரம் சரியில்லையோ அல்லது நமது நேரம் சரியாயிருந்துச்சோ தெரியலை.. படத்தில் பல்வேறு சிக்கல்கள்.. பணப் பிரச்சினைகள்..

படத்தின் இயக்குநர் பெருமதிப்பிற்குரிய ஷங்கரின் சீடரான ஏ.வெங்கடேஷ். கமர்ஷியர் ஹிட் இயக்குநர்கள் லிஸ்ட்டில் ஹரிக்கு அடுத்த இடம் இவர்தான்.. ஆனால் ஷங்கரிடம் இருந்து வந்தவர் என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

உத்தர்காண்ட் மாநிலத்தில் இருக்கும் ரிஷிகேஷில் கதை நடப்பதாகச் சொல்லி மொத்த யூனிட்டையும் அங்கே தள்ளிக் கொண்டு போனதில் நாக்கு வெளியே தள்ளிவிட்டது மோகன்ராதாவுக்கு.

எதிர்பார்த்த இடங்களில் இருந்தெல்லாம் பண உதவிகள் கிடைக்காததால் சென்னையில் வைத்து பேட்ச் ஒர்க்ஸை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து முடித்தார். முடித்தாலும் விதி விடவில்லை. சுந்தர்.சி ஸாருக்கு என்ன மார்க்கெட் இருக்கோ, அதுக்கேத்தாப்புலதான் விநியோகம் நடக்கும்ன்றது கடைசியாத்தான் தயாரிப்பாளருக்குத் தெரிஞ்சிருக்கு போலிருக்கு..

படத்தின் தயாரிப்புச் செலவுக்கு ஏற்றாற்போல் விநியோகம் செய்ய முடியாமல் தவித்துப் போனார். வேறு வழியில்லாமல் வந்தவரைக்கும் லாபம் என்ற நோக்கத்தில் படத்தைத் துவக்கத்திலேயே நஷ்டத்தில்தான் ரிலீஸ் செய்திருக்கிறார். இந்தக் கட்டப்பஞ்சாயத்தினால் ஒரு நாள் தாமதமாகவே படம் ரிலீஸ் ஆனதாக தியேட்டரில் சொன்னார்கள்.

படம் வெளியாகி மூன்று நாட்களாகியும் தனக்கு எந்தப் பாராட்டும் வராதது கண்டு மனம் வெதும்பிய நடிகர் விவேக் இது பற்றி பத்திரிகையாளர்களிடம் புலம்பித் தள்ள.. அந்த புலம்பலை மட்டும் மிகச் சரியாகப் போட்டுத் தாளித்துவிட்டார்கள் சினிமா பத்திரிகையாளர்கள்.

“சுருளிராஜன் மாதிரி உசிரைக் கொடுத்து நடிச்சிருக்கேன். ஒரு ரெஸ்பான்ஸும் இல்லையே..?” என்றார் விவேக். நடிச்சு என்ன புண்ணியம்..? ஆளே இல்லாத இடத்துல தனியா நாடகம் நடத்தி என்ன பயன்..? இப்படித்தான் ஆயிருக்கிறது விவேக்கின் நிலைமை..

படத்தில் விவேக்கின் முனைப்பும், பேச்சும், நடிப்பும் பாராட்டுக்குரியதுதான். சுருளிராஜனின் வாய்ஸ் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் செட்டாகாது.. அதோடு அவர் ஒவ்வொரு வார்த்தையையும் கொஞ்சம் இழுத்துவிட்டுத்தான் பேசுவார். அந்த ஸ்லாங்கை முடிந்த அளவுக்குப் பேசியிருக்கிறார் விவேக். இதற்காக டப்பிங்கில் அவர் என்ன பாடபட்டிருப்பார் என்பதை நினைக்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் வைக்கவும் தோன்றுகிறது. சல்யூட் ஸார்..

ஆனால் அவர் பேசிய டயலாக்குகள் சிலவற்றைக் கேட்டபோது பாவம் சுருளிராஜன் என்றும் சொல்லத் தோன்றுகிறது. இப்படியா டபுள் மீனிங்கை சிங்கிள் மீனிங் கணக்காகப் பேசுவது..? சுருளிராஜனும் பேசியிருக்கிறார். ஆனால் இவ்வளவு வெளிப்படையாக அல்ல.. இதற்காக விவேக் ஸாரை ஒரு குட்டு குட்டலாம்..

பழைய காலத்து கதை ஒன்றை,  ஜிகினா பேப்பர்களை வைத்து ஒட்ட வைத்து மேம்போக்காக எடுத்துக் கொடுத்திருக்கிறார் வெங்கடேஷ்.

கலெக்டரான சுந்தர்.சியின் கெடுபிடியான நடவடிக்கைகளால் வெறுத்துப் போன அமைச்சரும், பெரும் புள்ளி ஒருவரும், சுந்தரை சிக்கலில் மாட்டிவிட எண்ணி அந்த ஊருக்கு வரும் கவர்னரை ஆள் வைத்து சுட்டுக் கொன்று பழியை சுந்தர்.சி.யின் மீது தூக்கிப் போடுகிறார்கள். சுந்தர்.சி. போலீஸிடம் மாட்டாமல் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டி ரிஷிகேஷ் வருகிறார். அங்கே பலவிதப் போராட்டங்களுக்குப் பின்பு கடைசியில் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறாராம்..

ஒருவேளை இதுதான் சுந்தர்.சி.யின் கடைசி தமிழ்ப் படமாக இருக்குமோ என்னமோ? அப்படி நினைத்துத்தான் சுந்தர் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளைக்கூட சுட்டது என்று சொல்லும் அளவுக்கு தமிழ்ச் சினிமாவுலகம் மாறிவரும் சூழலில், இப்படியெல்லாம் படமெடுத்து அதனைத் தியேட்டருக்கு கொண்டு வரும் தைரியத்தை என்னவென்று பாராட்டுவது..?

இந்த நேரத்தில்தான் ஷங்கர் போன்றவர்களைப் பாராட்ட வேண்டும். எந்திரனைப் போல வருடத்திற்கு ஒரு படம் வந்தால் போதும். இதுமாதிரியான ஒன்றுமில்லாத திரைப்படங்களை மக்கள் புறக்கணித்து குப்பைக்கு அனுப்பி விடுவார்கள். அடுத்து வருபவர்கள் படமெடுக்கத் தயங்குவார்கள்.

ஏற்கெனவே சுந்தருக்கும், நடிப்பும் எட்டா தூரம். அவர் ஒரு நல்ல இயக்குநர். ஆனால் ஏன் அதற்குச் சோம்பேறித்தனப்பட்டு இப்படி கலர் கனவில் வாழ்ந்து வருகிறார் என்று தெரியவில்லை.

படத்தின் திரைக்கதையில் ஓரளவாவது நம்பகத் தன்மையோடு இருந்திருந்தால் கொஞ்சமாவது இது சினிமா என்றாவது நம்பலாம். வலது பக்க நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. இந்த நிலைமையிலும் சண்டை போட்டு தாவி, பறந்து சாயந்தரம் கெஸ்ட் ஹவுஸுக்கு வருவது வரையிலும் காட்சியை இழுத்துத் தொலைத்திருக்கிறார்கள்.

இதாவது பரவாயில்லை. கெளரவர்கள் படத்தின் கிளைமாக்ஸில் சத்யராஜ் தனது வலது பக்க தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வார். துப்பாக்கியால் சுட்ட பின்பும் அடுத்து மூன்று நிமிடங்களுக்கு வசனம் பேசிவிட்டுத்தான் மண்டையைப் போடுகிறார் சத்யராஜ். இந்த இயக்குநர்களையெல்லாம் என்னவென்றுதான் சொல்வது..?

ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் என்னென்ன வேலைகள் செய்கிறார்கள் என்பது ஓரளவுக்கு நமக்குத் தெரியும். இதில் ஒரு டி.எஸ்.பி. செய்யக் கூடிய டகால்டி வேலைகளையெல்லாம் கலெக்டர் செய்கிறார் என்று நம் காதில் பூவைச் சுற்றியிருக்கிறார்கள்.

எந்த ஊர் கலெக்டர் இது மாதிரி அமைச்சர்களிடம தெனாவெட்டாகப் பேசுகிறார்? பையனைக் கடத்துறாராம்.. அமைச்சரை அலைய விடுகிறார். ஆஸ்பத்திரிக்கு போகச் சொல்கிறார். அங்கேயும் அமைச்சர் தன் பெயரை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்று நம்ப முடியாத காட்சிகளை வைத்திருந்தாலும் படத்திலேயே உருப்படியான ஒரேயொரு விஷயம் இந்த ஆஸ்பத்திரி சீன்தான்.

இது மாதிரி எல்லா அமைச்சர்களையும் ஒரு நாளைக்கு ஆஸ்பத்திரில அலையவிட்டா அப்புறம்தான் தெரியும் அவங்களுக்கு பொதுமக்களின் அவதி என்றால் என்னவென்று..?

ஓடுகிற பைக்கில் ஏறி நின்று கொண்டு நேருக்கு நேராக வரும் லாரிகளின் பெட்ரோல் டேங்கை குறி பார்த்து சுட்டுத் தள்ளி வெடிக்க வைத்துவிட்டு தான் மட்டும் தப்பிக்கும் அந்த டெக்னிக் போலீஸ்காரங்களுக்காச்சும் தெரிஞ்சிருக்குமான்றது சந்தேகம்தான்.

தஞ்சாவூர் அரண்மனைல போலீஸோட போய்தான் சுத்திப் பார்க்குறார்.. அங்க ஒருத்தன் வேவு பார்க்க வந்திருக்கான்னு தெரிஞ்சு, அவனை இவர் ஒருத்தர் மட்டுமே ஓடித் துரத்துறாரு.. சரி முடியலீல்ல. இப்படியொருத்தன் ஓடிட்டான்னு கூட வந்த டிஜிபிகிட்ட சொல்ல வேண்டாமா..? ம்ஹூம்.. சாப்ட்டா அடுத்த சீன்ல செக்யூரிட்டி பத்தி பேச ஆரம்பிச்சிட்டாருப்பா..

கிளைமாக்ஸ் சண்டைல ஒரு சாதாரண துண்டால பனை மரத்தையே தூக்கி வீசுற சீன் இருக்கு பாருங்க.. கொன்னுட்டாரு டைரக்டரு.. இது ஒண்ணுக்காகவே அவருக்கு பெஸ்ட் டைரக்டர்ன்னு அவார்டு கொடுக்கணும்..

வழக்கமா இது மாதிரி படத்துல எல்லாம் ஊறுகாய் ரேஞ்சுக்குத்தான் ஹீரோயின்கள் இருப்பாங்க. இதுலேயும் அதே மாதிரிதான். அம்மணி ஷெரில் பிண்டோவாம்.. எப்பவுமே தொப்புளுக்குக் கீழேயே விரல் சைஸுக்கு கேப் விட்டு, எப்ப வேண்ணாலும் அவிழலாம்ன்ற டேஞ்சர் லைட்லதான் பேண்ட் போட்டுக்கிட்டு ஊர் சுத்துறாங்க..

ஒருவேளை இயக்குநருக்கு அது ரொம்ப புடிச்சுப் போச்சு போலிருக்கு.. அந்தப் பொண்ணை வைச்சு எந்த அளவுக்கு காண்பிக்க முடியுமோ அத்தனையையும் காண்பிச்சிட்டாரு.. போதாக்குறைக்கு பொண்ணு துண்டைக் கட்டிக்கிட்டு குளிக்கப் போற சீன்ல சுந்தர் வந்து துண்டைப் பிடிக்கிற இடம் இருக்கே.. ம்ஹூம்.. நான் காட்சியைச் சொல்லலை. அவர் பிடிச்ச இடத்தைச் சொன்னேன்.. இந்த சென்சார் போர்டுக்காரனுங்க இதையெல்லாம் கண்டுக்க மாட்டானுக.. ஒருத்தன் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி ஏதாவது குறும்படம் எடுத்திட்டு வந்தா மட்டும் ஆயிரத்தெட்டு நொட்டை, நொள்ளை சொல்லுவானுங்க..

இவுகளைத் தவிர்த்து பார்த்தா நடிச்சிக்கிறது மந்திரியா வர்ற ராஜ்கபூர். ஆஸ்பத்திரில அவர் அலர்ற சீன்ல இருந்த 12 பேருமே கொஞ்சம் சிரிச்சோம். அவ்ளோதான வந்துச்சு. மனிதருக்கு இயக்கம் போனாலும் நடிப்பு நல்லாவே வருது..

ரீமிக்ஸ் மன்னன் இமானின் பாட்டில் ஒரு நல்ல பாட்டை மறுபடியும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். இந்த ரீமிக்ஸ் கலாச்சாரத்தை ஒழித்தால்தான் என்ன..? நம் முன்னோர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை செய்ய வேண்டாமா..? “என்னடி ராக்கம்மா” பாட்டை எவ்ளோ கெடுக்கணுமோ அவ்ளோ கெடுத்திட்டாரு.. இதுல “தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதைல இருக்குதடி..” என்ற வரி வருமிடத்தில் குஷ்பூவே உடன் ஆடுகிறார்.. என்ன பொருத்தம் பாருங்க.. இவ்ளோ நல்லா யோசிச்சவரு.. கதைல ஏன் கோட்டை விட்டாருன்னு தெரியலையே..?

படத்தின் துவக்கத்தில் வரும் குத்துப் பாட்டுக்கு ஜெமினி கிரண் மாமி ஆடியிருக்கிறார். நல்லபடியா வந்திருக்க வேண்டியவர்.. இப்படி ஒத்தைப் பாடலுக்கு ஆடுற மாதிரியாகிப் போச்சு.. ஆனாலும் உடையைக் குறைக்க வேண்டி வந்தா கூச்சப்படாம செய்ற பொண்ணுங்கிறதால இப்படி ஆளுகளுக்கு எப்பவும் வேகன்ஸி உண்டுதாம்பா..

ரொம்ப நாள் கழிச்சு நம்ம மாயவரம், அபிஅப்பாவோட கண் கண்ட தெய்வம் காட்சி கொடுத்திருக்கு. அப்படியும் நாலு சீன்ல சிரிப்பு, நாலு சீன்ல அழுகைன்னு போயிருச்சு.. இருந்தாலும் அதே சிரிப்புதான். அபி அப்பா அவசியம் பாருங்க..

ஏதோ ரிஷிகேஷை காட்டுறாங்களே.. கொஞ்சம் சுற்றமும், புறமும் நல்லா காட்டுவாங்கன்னு பார்த்தா, கஷ்டமே படாம பட்டப் பகல்ல எல்லா சீனையும் எடுத்து முடிச்சிட்டு வந்துட்டாங்க போங்க.. ஒளிப்பதிவாளரை ஒண்ணும் சொல்றதுக்கில்லை..

வசனம் பட்டுக்கோட்டை பிரபாகராம்.. ரெண்டு, மூணு இடத்துல மட்டும் சூடேத்துற மாதிரி இருந்தது.. மத்தபடி பிரபாகர் ஸார் பக்காவான சினிமா எழுத்தாளரா மாறிட்டாருன்றது டபுள், டிரிபுள் மீனிங் டயலாக்குலேயே தெரியுது.. வாழ்க வளமுடன்..

இதுக்கு மேலேயும் படத்தைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லே..

மறுபடியும் டைட்டிலுக்கு வருவோம்..

"வாடா வாடான்னு கூப்பிட்டு போடா.. போயிருடான்னு வெறுப்பேத்தி தொரத்தி விட்டுட்டாங்க.."

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com. www.chennai365.com

57 comments:

எல் கே said...

/ஒருத்தன் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி ஏதாவது குறும்படம் எடுத்திட்டு வந்தா மட்டும் ஆயிரத்தெட்டு நொட்டை, நொள்ளை சொல்லுவானுங்க..

//

அதை சொல்லுங்க.. இந்தப் படத்துக்கும் போறீங்க பாருங்க.. நீங்க தெய்வம். முருகா இவரை காப்பத்துப்பா

க ரா said...

இதுக்கு மேலேயும் படத்தைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லே..
---
இந்த வரிக்கு ஸ்கோரோல் பண்ணி வரதுக்குள்ளேயே எனக்கு கை வலிக்குது. இத மொத வரில்லேயே சொன்னா என்ன அண்ணாச்சி :)

அபி அப்பா said...

\\ரொம்ப நாள் கழிச்சு நம்ம மாயவரம், அபிஅப்பாவோட கண் கண்ட தெய்வம் காட்சி கொடுத்திருக்கு. அப்படியும் நாலு சீன்ல சிரிப்பு, நாலு சீன்ல அழுகைன்னு போயிருச்சு.. இருந்தாலும் அதே சிரிப்புதான். அபி அப்பா அவசியம் பாருங்க..\\

யோவ் நான் பாட்டுக்கு அலட்சியமா மெதுவா படிச்சுகிட்டு இருக்கேன். இதை முதல் பாராவா போட்டா என்ன குறைஞ்சா போயிடும்! அட இந்த பாரா படிச்ச பின்ன நிமிர்ந்து உட்காந்தேன்யா. இதுக்கு மேல என்ன வேண்டும். கண்டிப்பா பார்த்துட்டா போச்சு! வாழ்க உனா தானா! வாழ்க சுந்தர் சி!

அபி அப்பா said...

இந்த பதிவை கள்ள ஓட்டு போட்டாவது கரையேத்துறேன் பாருய்யா!

அபி அப்பா said...

அழுதாலும் அந்த அழகு அழகுதான்யா!

அகில் பூங்குன்றன் said...

இனியும் இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்- போடலைன்னா இந்த மாதிரியாவே இன்னும் ஒரு வருசத்துக்கு படம் பாப்பீங்க...

மதுரை சரவணன் said...

ungkalukku mattum eppadi manath thairiyam varukirathu ippadi patta padam paarkka ..

இனியா said...

அழுதாலும் அந்த அழகு அழகுதான்யா

yaarunga antha azagu?

idroos said...

Ungal manathairiyathai paarattugiraen.idhu pondra padangalai mulusa paarkum ungal manathairiyathai paaratugiraen.

Sila natkalagave idhu pondra padangalai thedi pidithu paarkireerkalpola.

அரசூரான் said...

சு.சி அறுவாளோட உங்களத்தான் தேடுறார்...ஓடிப்போயிடுங்க உனா.தான... :)
அபி அப்பா உனா.தானா இவ்வளவு சொல்லியும் படம் பார்க்க போறீங்களா?... விதி வளியது... அவ்வ்வ்வ்வ்.

ILA (a) இளா said...

உங்க வாழ்க்கையில முருகன் வேலை வுட்டு ஆட்டுறான் போல.. மொக்கைப் படமா பார்த்து தள்ளுறீங்க

அலைகள் பாலா said...

சுந்தர் ச்சி, எங்க கை வச்சார்ன்னு சொல்லிருங்ளேன்,. அதுக்காக படம் பாக்குற தைரியம் எனக்கு இல்லயே

a said...

//
இந்த சென்சார் போர்டுக்காரனுங்க இதையெல்லாம் கண்டுக்க மாட்டானுக.. ஒருத்தன் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி ஏதாவது குறும்படம் எடுத்திட்டு வந்தா மட்டும் ஆயிரத்தெட்டு நொட்டை, நொள்ளை சொல்லுவானுங்க.

//
இன்னும் அந்த கோவம் போகலையாண்னே......

சி.பி.செந்தில்குமார் said...

படம் டப்பா ஆனா உங்க விமர்சனம் இருக்கு டாப்பா.

ஒரேயொரு படத்தைத் தவிர மற்ற படங்களெல்லாம் தோல்வியடைந்தாலும் இவருக்கு எப்படி அடுத்தடுத்த படங்கள் கிடைக்கின்ற என்பதெல்லாம் சி.பி.ஐ. விசாரணை போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்.


சூப்பர் அண்ணே

ஜோதிஜி said...

மூளையை கழட்டி வைத்து விட்டு சற்று நேரம் இளைப்பாறி மன அழுத்தத்தை குறைத்து கொள்ள உதவுகின்றது.

தமிழ படங்களும் புத்தகங்களும் பல சமயம் மகிழ்ச்சியாகவே வைத்துருக்கிறது சரவணன்.

இப்போது கூட இந்த படங்களும் வார்த்தைகளும் இயல்பாகத்தான் இருக்கு. எப்போதுமே சுந்தர் சி ஜாலியாகவே என்னை வைத்துக் கொண்டுருக்கிறார்.

சிலரின் படங்களை லாஜிக் பார்த்தால் பேசாமல் கேபி சுந்தரம்பாள் பாடலை மட்டுமே கேட்க முடியும் சரவணன்.

pichaikaaran said...

"விவேக் ஸாரை ஒரு குட்டு குட்டலாம்.."

விவேக் சார், வடிவேலு சார் , கஞ்சா கருப்பு சார்னு எழுத வேண்டிய நிலை , இனமான தமிழனாகிய உண்மை தமிழனுக்கு வந்துடுச்சேனு வருத்தமா இருக்கு,,..

அட்லீஸ்ட் ரஜினி சார் , கமல் சார்னு எழுதினாலும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...

pichaikaaran said...

"விவேக் ஸாரை ஒரு குட்டு குட்டலாம்.."

விவேக் சார், வடிவேலு சார் , கஞ்சா கருப்பு சார்னு எழுத வேண்டிய நிலை , இனமான தமிழனாகிய உண்மை தமிழனுக்கு வந்துடுச்சேனு வருத்தமா இருக்கு,,..

அட்லீஸ்ட் ரஜினி சார் , கமல் சார்னு எழுதினாலும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்...

உண்மைத்தமிழன் said...

[[[LK said...

/ஒருத்தன் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி ஏதாவது குறும்படம் எடுத்திட்டு வந்தா மட்டும் ஆயிரத்தெட்டு நொட்டை, நொள்ளை சொல்லுவானுங்க..//

அதை சொல்லுங்க.. இந்தப் படத்துக்கும் போறீங்க பாருங்க.. நீங்க தெய்வம். முருகா இவரை காப்பத்துப்பா..]]]

நானாவா சாமி போனேன்.. போக வேண்டிய கட்டாயமாப் போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[இராமசாமி கண்ணண் said...

இதுக்கு மேலேயும் படத்தைப் பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்லே..
---
இந்த வரிக்கு ஸ்கோரோல் பண்ணி வரதுக்குள்ளேயே எனக்கு கை வலிக்குது. இத மொத வரில்லேயே சொன்னா என்ன அண்ணாச்சி :)]]]

மொத வரில சொல்லியிருந்தா உங்களுக்குச் சப்புன்னு இருக்காது..?

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...

\\ரொம்ப நாள் கழிச்சு நம்ம மாயவரம், அபிஅப்பாவோட கண் கண்ட தெய்வம் காட்சி கொடுத்திருக்கு. அப்படியும் நாலு சீன்ல சிரிப்பு, நாலு சீன்ல அழுகைன்னு போயிருச்சு.. இருந்தாலும் அதே சிரிப்புதான். அபி அப்பா அவசியம் பாருங்க..\\

யோவ் நான் பாட்டுக்கு அலட்சியமா மெதுவா படிச்சுகிட்டு இருக்கேன். இதை முதல் பாராவா போட்டா என்ன குறைஞ்சா போயிடும்! அட இந்த பாரா படிச்ச பின்ன நிமிர்ந்து உட்காந்தேன்யா. இதுக்கு மேல என்ன வேண்டும். கண்டிப்பா பார்த்துட்டா போச்சு! வாழ்க உனா தானா! வாழ்க சுந்தர் சி!]]]

ஹி.. ஹி.. அவசியம் பாருங்க அபியப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...
இந்த பதிவை கள்ள ஓட்டு போட்டாவது கரையேத்துறேன் பாருய்யா!]]]

ரொம்ப நன்றிண்ணே.. உன்னை மாதிரி ரெண்டு அண்ணனுகளாவது இருந்தாத்தான் நானெல்லாம் பொழைக்க முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[அபி அப்பா said...
அழுதாலும் அந்த அழகு அழகுதான்யா!]]]

உங்க ரசனையே தனியானதுண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...
இனியும் இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்- போடலைன்னா இந்த மாதிரியாவே இன்னும் ஒரு வருசத்துக்கு படம் பாப்பீங்க.]]]

ஹா.. ஹா.. இப்படியும் ஒரு ரசிகரா.. நன்றிங்கண்ணா..!? முயற்சி செய்றேன்..

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை சரவணன் said...
ungkalukku mattum eppadi manath thairiyam varukirathu ippadi patta padam paarkka.]]]

இதுக்கெதுக்கு மனத் தைரியம்.. ஏதோ ஒரு சினிமான்னு நினைச்சு உக்காந்திர வேண்டியதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[இனியா said...
அழுதாலும் அந்த அழகு அழகுதான்யா
yaarunga antha azagu?]]]

அபியப்பாகிட்ட கேளுங்க.. சொல்லுவாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[முசமில் இத்ரூஸ் said...

Ungal manathairiyathai paarattugiraen.idhu pondra padangalai mulusa paarkum ungal manathairiyathai paaratugiraen.

Sila natkalagave idhu pondra padangalai thedi pidithu paarkireerkalpola.]]]

அது தானா அப்படி வந்து மாட்டுது முசமில் ஸார்..! நானாவா போறேன்..?

உண்மைத்தமிழன் said...

[[[அரசூரான் said...

சு.சி அறுவாளோட உங்களத்தான் தேடுறார். ஓடிப் போயிடுங்க உனா.தான...:)]]]

அவர் எதுக்கு என்னை வெட்டப் போறாரு.. எனக்கு நல்ல நண்பர் சுனாகானா..

[[[அபி அப்பா உனா தானா இவ்வளவு சொல்லியும் படம் பார்க்க போறீங்களா? விதி வளியது... அவ்வ்வ்வ்வ்.]]]

பார்த்திட்டுப் போறாரு.. விடுங்க.. சிங்கத்தை உசுப்பிவிட்டாச்சு. இனிமே அதை உக்கார வைக்க முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[ILA(@)இளா said...
உங்க வாழ்க்கையில முருகன் வேலை வுட்டு ஆட்டுறான் போல.. மொக்கைப் படமா பார்த்து தள்ளுறீங்க.]]]

ரொம்ப படுத்துறான் இளா..! தப்பிக்கணும்னா தியேட்டர் பக்கமே போகக் கூடாது.. போகலாம்னு பார்த்தா அப்புறம் வாழ்க்கைல என்னதான் இருக்குன்னு வெறுப்பா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[அலைகள் பாலா said...
சுந்தர் ச்சி, எங்க கை வச்சார்ன்னு சொல்லிருங்ளேன்,. அதுக்காக படம் பாக்குற தைரியம் எனக்கு இல்லயே..]]]

அட.. பரவாயில்லையே.. கரீக்ட்டா இது பத்தி விசாரிக்கிறீங்க..?

படத்தோட ஸ்டில்ஸ்களைத் தேடிப் பிடிச்சுப் பாருங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//இந்த சென்சார் போர்டுக்காரனுங்க இதையெல்லாம் கண்டுக்க மாட்டானுக.. ஒருத்தன் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி ஏதாவது குறும்படம் எடுத்திட்டு வந்தா மட்டும் ஆயிரத்தெட்டு நொட்டை, நொள்ளை சொல்லுவானுங்க.//

இன்னும் அந்த கோவம் போகலையாண்னே.]]]

அவ்ளோவ் சீக்கிரம் போயிருமா யோகேஷ்..?

உண்மைத்தமிழன் said...

[[[சி.பி.செந்தில்குமார் said...

படம் டப்பா ஆனா உங்க விமர்சனம் இருக்கு டாப்பா.

ஒரேயொரு படத்தைத் தவிர மற்ற படங்களெல்லாம் தோல்வியடைந்தாலும் இவருக்கு எப்படி அடுத்தடுத்த படங்கள் கிடைக்கின்ற என்பதெல்லாம் சி.பி.ஐ. விசாரணை போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்.

சூப்பர் அண்ணே.]]]

நன்றி செந்திலண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...

மூளையை கழட்டி வைத்து விட்டு சற்று நேரம் இளைப்பாறி மன அழுத்தத்தை குறைத்து கொள்ள உதவுகின்றது. தமிழ படங்களும் புத்தகங்களும் பல சமயம் மகிழ்ச்சியாகவே வைத்துருக்கிறது சரவணன்.

இப்போதுகூட இந்த படங்களும் வார்த்தைகளும் இயல்பாகத்தான் இருக்கு. எப்போதுமே சுந்தர் சி ஜாலியாகவே என்னை வைத்துக் கொண்டுருக்கிறார்.

சிலரின் படங்களை லாஜிக் பார்த்தால் பேசாமல் கேபி சுந்தரம்பாள் பாடலை மட்டுமே கேட்க முடியும் சரவணன்.]]]

உண்மைதான்.. ஏதோ ஒரு சினிமா. ச்சும்மா டைம் பாஸ் என்ற லெவலில் அமர்ந்தால் பார்த்துவிட்டு எழுந்து வந்துவிடலாம்..!

என்னை மாதிரியான ஆட்கள்தான் உட்கார முடியாது..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

"விவேக் ஸாரை ஒரு குட்டு குட்டலாம்.."

விவேக் சார், வடிவேலு சார் , கஞ்சா கருப்பு சார்னு எழுத வேண்டிய நிலை , இனமான தமிழனாகிய உண்மைதமிழனுக்கு வந்துடுச்சேனு வருத்தமா இருக்கு.

அட்லீஸ்ட் ரஜினி சார் , கமல் சார்னு எழுதினாலும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.]]]

ச்சும்மா ஒரு ப்ளோல வந்திருச்சுங்க ஸார்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹிஹி. இவ்ளோ பேர் சொல்லியும் அந்த படத்துக்கு போன உங்களை என்ன சொல்றது..

Unknown said...

சினிமா பார்ப்பதில் சலிக்காமல் சாகசம் புரியும் உண்மைத்தமிழன் வாழ்க

Prathap Kumar S. said...

உங்க தைரியத்தையும், தியாக மனப்பான்மையும் கண்டு மெய்சிலிரிர்க்குதுண்ணே... இன்னும் நிறைய தியாகங்கள் பண்ணுங்க... :))

சுந்தர்.சி பார்த்தீங்கன்னா இனிமே நடிக்காதீங்கன்னு சொல்லிப்பாருங்க...

துளசி கோபால் said...

அட ராமா........... நல்லா இல்லேன்னு சொல்றதுக்கா இம்மாம் நீள விமர்சனம்!!!!!


முருகா முருகா....

பித்தன் said...

marbadi oru mokkap padam paarththu irukkeega, appo neengalum thayaarippaalarukku uthviyirukkeenga. unga porumaikku oru salyut. aanaalum murugan ungala rombaththaan sothikkiraan.

Unknown said...

ரொம்பத் தைரியமான ஆளுதான் நீங்க! இந்தப் படத்தின் சில நகைச்சுவை(?) காட்சிகளைப் பார்த்துத் தொலைத்தேன். சுருளி மீதிருந்த அபிமானம் கொஞ்சம் ஏறியும், விவேக் மீதிருந்த அபிமானம் கொஞ்சம் இறங்கியும் போச்சு!! ஓவர் ரெட்டை அர்த்தங்கள்... :( ஆனால் சுருளி மாதிரி பேச முயற்சி செய்திருப்பதைப் பாராட்டலாம்..

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹிஹி. இவ்ளோ பேர் சொல்லியும் அந்த படத்துக்கு போன உங்களை என்ன சொல்றது..]]]

நானா விரும்பிப் போகலை சாமி.. சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[நந்தா ஆண்டாள்மகன் said...
சினிமா பார்ப்பதில் சலிக்காமல் சாகசம் புரியும் உண்மைத்தமிழன் வாழ்க]]]

ஹி.. ஹி.. என்னைவிட பெரிய, பெரிய ஆளெல்லாம் இங்க இருக்காங்க நந்தா.. நானெல்லாம் தம்மாத்தூண்டு பய..!

உண்மைத்தமிழன் said...

[[[நாஞ்சில் பிரதாப்™ said...

உங்க தைரியத்தையும், தியாக மனப்பான்மையும் கண்டு மெய்சிலிரிர்க்குதுண்ணே... இன்னும் நிறைய தியாகங்கள் பண்ணுங்க... :))]]]

எல்லாம் தங்கள் உத்தரவு பிரதாப்.. ஓட்டுப் போடவும், பின்னூட்டம் அளிக்கவும் நீங்க இருக்கும்போது எனக்கென்ன கவலை..?

[[[சுந்தர்.சி பார்த்தீங்கன்னா இனிமே நடிக்காதீங்கன்னு சொல்லிப் பாருங்க.]]]

ஏன் நான் நல்லாயிருக்கிறதும் உங்களுக்குப் பிடிக்கலையா..?

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...
அட ராமா........... நல்லா இல்லேன்னு சொல்றதுக்கா இம்மாம் நீள விமர்சனம்!!!!! முருகா முருகா.]]]

ஏன் நல்லாயில்லைன்னு கேட்டா நான் என்னத்த பதில் சொல்றது டீச்சர்..!

உண்மைத்தமிழன் said...

[[[பித்தன் said...
marbadi oru mokkap padam paarththu irukkeega, appo neengalum thayaarippaalarukku uthviyirukkeenga. unga porumaikku oru salyut. aanaalum murugan ungala rombaththaan sothikkiraan.]]]

நன்றி பித்தன்ஜி..!

சதீஷ் said...

சுந்தர் சி. டைரக்ட் செய்த அனைத்து படங்களும் மிகவும் ரசிக்கத் தகுந்தவை. மிகவும் நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்பட்டவை.

இவர் இயக்குநராகவே இருந்திருக்கலாம்.

எஸ்.கே said...

மீண்டும் சொல்கிறேன் டிவியில் போடும்போது பார்த்துக்கலாம்!(தூங்காம இருக்கணும்!:-)

உண்மைத்தமிழன் said...

[[[சதீஷ் said...
சுந்தர் சி. டைரக்ட் செய்த அனைத்து படங்களும் மிகவும் ரசிக்கத்தகுந்தவை. மிகவும் நகைச்சுவை உணர்வுடன் எடுக்கப்பட்டவை. இவர் இயக்குநராகவே இருந்திருக்கலாம்.]]]

எனது கருத்தும் இதுவேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[எஸ்.கே said...
மீண்டும் சொல்கிறேன் டிவியில் போடும்போது பார்த்துக்கலாம்!(தூங்காம இருக்கணும்!:-)]]]

மிகச் சிறந்த அறிவுரை ஸார்.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[தஞ்சாவூரான் said...
ஆனால் சுருளி மாதிரி பேச முயற்சி செய்திருப்பதைப் பாராட்டலாம்.]]]

இதையேதான் நானும் சொல்லியிருக்கிறேன் ஸார்..! வருகைக்கு நன்றிகள்..!

Unknown said...

ஹீரோவாக சுந்தர் சி நடித்த முதல் படம் "தலைநகரம்" எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஓர் கம்மர்ஷியால் இயக்குனராக இருந்தாலும் மிக சிறப்பான ஒரு படத்தில் நல்ல நடிகராக தோன்றினார். அந்தப் படத்தை ஒரு சில தடவையாவது பார்த்திருப்பேன். அந்த நம்பிக்கையில் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு போனபோது எல்லாமே பேரரசு பாணி படங்களாகவே இருந்தது. மிகுந்த ஏமாற்றம். அதிலிருந்து சுந்தர் சி மற்றும் விவேக் கூட்டணியில் எந்த படம் வந்தாலும் பார்க்க கூடாது என்று முடிவெடுத்து இன்று வரை அவரது எந்த படத்தையும் ட்ரைலர் கூட பார்ப்பதில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுந்தர் சி படத்துல கவர்ச்சியாவது கொஞ்ச்ம் கும்முன்னு இருக்கும், இந்தப் படத்துல அதுவும் தேறாது போல இருக்கே? எப்படியோ இந்தப்படத்தையும் பார்த்து விமர்சனம் எழுதி..... உங்களுக்கு ஒரு அவார்டு கொடுக்கனும்ணே!

கானா பிரபா said...

மோகன்ராதா ராடனில் இருந்து வெளியேறி சிவப்பதிகாரம் தயாரித்தும் ரத்தக்கண்ணீர் வடித்தவர்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே

உண்மைத்தமிழன் said...

[[[Thalapathi said...

ஹீரோவாக சுந்தர்.சி நடித்த முதல் படம் "தலைநகரம்" எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஓர் கம்மர்ஷியால் இயக்குனராக இருந்தாலும் மிக சிறப்பான ஒரு படத்தில் நல்ல நடிகராக தோன்றினார். அந்தப் படத்தை ஒரு சில தடவையாவது பார்த்திருப்பேன். அந்த நம்பிக்கையில் அவரது அடுத்தடுத்த படங்களுக்கு போனபோது எல்லாமே பேரரசு பாணி படங்களாகவே இருந்தது. மிகுந்த ஏமாற்றம். அதிலிருந்து சுந்தர்.சி மற்றும் விவேக் கூட்டணியில் எந்த படம் வந்தாலும் பார்க்க கூடாது என்று முடிவெடுத்து இன்றுவரை அவரது எந்த படத்தையும் ட்ரைலர்கூட பார்ப்பதில்லை.]]]

அந்த முதல் படத்தின் வெற்றியை வைத்துத்தான் இன்றுவரையில் தனது ஹீரோயிஸத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் சுந்தர்..!

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...
சுந்தர்.சி படத்துல கவர்ச்சியாவது கொஞ்ச்ம் கும்முன்னு இருக்கும்.. இந்தப் படத்துல அதுவும் தேறாது போல இருக்கே? எப்படியோ இந்தப் படத்தையும் பார்த்து விமர்சனம் எழுதி உங்களுக்கு ஒரு அவார்டு கொடுக்கனும்ணே!]]

குடுங்க.. குடுங்க.. வாங்கிக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[கானா பிரபா said...
மோகன்ராதா ராடனில் இருந்து வெளியேறி சிவப்பதிகாரம் தயாரித்தும் ரத்தக் கண்ணீர் வடித்தவர். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே..]]]

அடடா.. மறந்து தொலைச்சுட்டனே.. தகவலுக்கு நன்றி தம்பி..!

abeer ahmed said...

See who owns zanzijardin.com or any other website:
http://whois.domaintasks.com/zanzijardin.com

abeer ahmed said...

See who owns maktoobblog.com or any other website.