13-01-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இதனை எப்படி ஆரம்பிப்பது? எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமலேயே இதனைத் துவக்குகிறேன்..!
அப்பொழுது நான் மின் பிம்பங்கள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தி.நகரில் திருமதி ஒய்.ஜி.பி.யின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் மின் பிம்பங்கள் ஸ்டூடியோ. அங்குதான் வேலை. நண்பரும், கவிஞருமான சங்கர ராமசுப்பிரமணியனும், பாலை படத்தின் இயக்குநர் செந்தமிழனும் அப்போது என்னுடன்தான் பணியாற்றி வந்தார்கள். தினம்தோறும் மாலையில் அப்போதும், இப்போதும் குமுதத்தில் பணியாற்றி வரும் தளவாய் சுந்தரம், தனது நண்பர் சங்கரை சந்திக்க அங்கே வருவார். அப்போதுதான் எனக்கும் அவர்கள் பழக்கம்.
எளக்கியம், எளக்கியகர்த்தாக்கள், பற்றிய முன்னுரைகூட தெரியாத ஒரு மனநிலை எனக்கு அப்போதிருந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒரேயொரு எழுத்தாளர் எஸ்.ரா. மட்டுமே..! அதுவும் அவர் மின் பிம்பிங்கள் நிறுவனம் தயாரித்த சின்னத்திரை சீரியல்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய காரணத்தினால்தான்..!
இந்த நேரத்தில்தான் சின்னத்திரை இயக்குநர் சி.ஜெரால்டு என்னை அழைத்து “ஒரு தட்டச்சு வேலை இருக்கு. நீதான் செஞ்சு தரணும்..” என்று சொல்லி அழைத்தார். அவர் சொன்ன முகவரி ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த உயிர்மையின் அலுவலகம். அங்கேதான் முதன் முதலாக மனுஷ்யபுத்திரனை சந்தித்தேன்.

அப்போதுதான் 'உயிர்மை' ஆரம்பித்த நேரம். 'உயிர்மை பதிப்பக'த்தின் சார்பாக ஜெரால்டு எழுதிய சினிமா பற்றிய புத்தகத்தை, தட்டச்சு செய்து கொடு்த்தேன். இதற்காக அடிக்கடி 'உயிர்மை' அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன். ஆசிரியர் மனுஷ்யபுத்திரனிடமும், செல்வியிடமும் போனிலும் பேசிக் கொண்டிருந்தேன்.
அந்தப் புத்தகம் அச்சுக்குப் போகும் முன்பு செல்வி, என்னை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து “தட்டச்சு செய்யப்பட்டது சரியாக வேர்டில் காணப்படவில்லை. பல எழுத்துக்கள் மிஸ்ஸிங். கொஞ்சம் வந்து சரி பாருங்கள்” என்றார்.. 5 நாட்கள் மாலை வேலைகளில் 'உயிர்மை' அலுவலகத்திற்கு தினம்தோறும் சென்று அதையும் சரி பார்த்து முடித்தேன். தொடர்ந்த நாட்களில் 'உயிர்மை'யின் இதழுக்காக சில கவிதைகளை தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. இதையும் 'உயிர்மை' அலுவலகத்திற்கே சென்று தட்டச்சு செய்து கொடுத்தேன்.. அப்போது லீனா மணிமேகலையும், ஜெரால்டும் அங்கே வந்து மனுஷ்யபுத்திரனிடம் பேசுவார்கள். ஜெரால்டு, லீனா இருவரும் எனக்கு நெருங்கிய பழக்கம் என்றாலும், மனுஷ் அவ்வளவு பழக்கம் இல்லாததால் சாதாரணமாகவே இருந்த அவருடனான நட்பு, சரி பார்த்தல் பணிக்காக வந்தபோது கொஞ்சம் வேகப்பட்டது.
மின் பிம்பங்களின் வரலாறு, தற்போதைய சீரியல்களின் போக்கு, கே.பாலசந்தரின் சினிமாக்கள், சீரியல் தொழிலின் வரவு, செலவு, தொலைக்காட்சிகளின் எதிர்காலம் என்றெல்லாம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டவரிடம் கவிதைகள் குறித்தும் நான் கேட்டறிந்தேன். ஏனெனில் எனக்கும் கவிதைக்குமான தொடர்பு, நமீதாவுக்கும் சேலைக்குமான நட்பு போன்றது..! "ராணி முத்துவில் வரும் கவிதையாக இருந்தாலும் சரி.. எந்தக் கவிதையையும் கொஞ்சம் நிதானமாக, பொறுமையாகப் படியுங்கள். எதனால் அது கவிதையாக்கப்பட்டுள்ளது என்று புரியும். அதன் எழுத்து வடிவம் உங்களுக்குப் புரிந்து போனால், நீங்களும் அதுபோல் எழுதிப் பழகலாம்..” என்றார். சரி.. நம்மையும் இலக்கிய உலகத்திற்குள் இழுத்துச் செல்கிறாரே என்று மிகப் பெரிய மரியாதை அவர் மீது எனக்குள் ஏற்பட்டது.
மனுஷ்யபுத்திரனின் பேச்சும், சுபாவமும் அதீதமாக என்னைக் கவர்ந்திழுக்க.. ஒரு நாள் நான் அவரைப் பற்றி சங்கரிடம் சொல்லி, “அவரை உங்களுக்குத் தெரியுமா..?” என்றேன்.. உடன் இருந்த தளவாயும், செந்தமிழனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 'காலச்சுவடின்' இலக்கிய வரலாறும், 'சுந்தரராமசாமி' என்ற இலக்கிய குருசாமியைப் பற்றியும் அன்றைக்குக் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் எனக்குத் தெரிந்தன. மனுஷ்யபுத்திரனின் அப்போதுவரையிலான வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து கொள்ள முடிந்தது.
'காலச்சுவடு' இதழை தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு நாகர்கோவில், கன்னியாகுமரியில் தெருத்தெருவாக அலைந்து விற்ற கதையை தளவாயும், சங்கரும் அன்றைக்கு என்னிடம் மிக உருக்கமாகச் சொன்னார்கள் . இப்போது இவர்கள் மீது எனக்கு அளவு கடந்த மரியாதையும் ஒரு பிம்பமும் பிறந்தது.. மனுஷ்யபுத்திரன் மீது அவருக்கே தெரியாமல் ஒரு ஒளிவட்டத்தை பொருத்தி என்னால் ரசிக்க முடிந்தது.. இலக்கியப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். நம் நண்பர்கள் சிலாகிக்கும் கவிஞர் என்றெல்லாம் மனுஷ்யபுத்திரன் மீது எனக்கு ஒரு கிறக்கம் வேறு உண்டாகியிருந்தது.
அடுத்து வந்த ஒரு நாளில் ஜெரால்டுவின் புத்தகம் தயாராகிவிட்டதா என போன் செய்து விசாரித்தேன். மனுஷ்தான் போனை எடுத்தார். “ஆபீஸ் வந்து வாங்கிக்குங்களேன் சரவணன்..” என்றார். உடனேயே அன்று மாலையே அங்கு ஓடினேன். சினிமா புத்தகத்தை வாங்கிக் கொண்டு அப்படியே பேசாமல் திரும்பிப் போயிருந்தால்கூட புண்ணியமாக இருந்திருக்கும். விதி வலியதாச்சே..!
தரையில் பாய் விரித்து சமர்த்தாக அமர்ந்திருந்த மனுஷ்யபுத்திரனின் முன்னால், ஜப்பானிய சுமோ வீரனை போல அடக்கத்துடன் அமர்ந்த நிலையில், “நேத்திக்கு சங்கர் உங்களைப் பத்தி நிறைய சொன்னார் ஸார்..” என்றேன். திருப்பிக் கேட்டார் மனுஷ்யபுத்திரன், "எந்த சங்கர்..?” என்று..! “சங்கர் ராமசுப்பிரமணியன் ஸார்.. கவிஞர்.. காலச்சுவடுல உங்களோட வேலை பார்த்தாராமே..?” என்றேன். “காலச்சுவடுல நான் வேலை பார்த்தேன். எனக்கு சங்கர்ன்னு யாரையும் தெரியாதே..” என்றார். அதிர்ச்சியானது எனக்கு..! “இல்ல ஸார்.. அவரும் தளவாய் சுந்தரமும்தான் காலச்சுவடு விற்பனை வேலைல இருந்ததா சொன்னாங்களே..” என்றேன் குழப்பத்துடன். என் கண்களை நேருக்கு நேராய் கூர்மையாய் பார்த்தபடி “எனக்கு சங்கர் ராமசுப்பிரமணியன்னு யாரையுமே தெரியாது சரவணன்..” என்றார் சிரித்தபடியே..! மறுபடியும் பொசுக்கென்றானது எனக்கு.. “இல்லை ஸார்.. சங்கர் இப்போ என்கூடதான் வேலை பார்க்குறாரு. கவிதை புத்தகமெல்லாம் எழுதியிருக்காரு. அவர்தான் சொன்னாரு..” என்று சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்த மனுஷ், “சங்கர் ராமசுப்பிரமணியன் என்ற பெயரை என் வாழ்க்கைல இதுவரைக்கும் கேட்டதே இல்லை சரவணன்.. ஏன் நீங்க இப்படி குழப்பிக்குறீங்க..?” என்றார் சிரித்தபடியே. இப்போது எனக்குத்தான் குழப்பம் கூடிப் போனது..! இதற்கு பேச ஏதுமி்ல்லாததால் திருப்தியே இல்லாமல் எழுந்து வந்தேன்..!
மறுநாள் ஸ்டூடியோவில் இதனை சங்கரிடமும், செந்தமிழனிடமும் சொன்னபோது மீண்டும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள் இருவரும். “எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் பிரச்சினை சரவணன்.. அதுனால தெரியலைன்னு சொல்லியிருப்பான்..” என்றார் சங்கர். எனக்கு சப்பென்று போனது..
“ஏங்க.. அவரு ஏதோ பெரிய இலக்கிய பத்திரிகை ஆசிரியர்ங்குறீங்க.. நீங்களும் கவிஞரு.. அவரும் கவிஞரு.. ஏதோ சண்டைக்காக ஆளையே தெரியாதுன்னா சொல்வாங்க..? அதுலேயும் நானென்ன வம்பிழுத்து விடறதுக்காக போனேன்..? இப்படியா முகத்துல அடிச்சாப்புல தெரியாதுன்னு சொல்வாங்க..?” என்றேன். “அதெல்லாம் அப்படித்தான் ..லூஸ்ல விடுங்க சரவணன்..” என்று அவர்கள்தான் என்னை அமைதிப்படுத்தினார்கள். எனக்குத்தான் அப்போதைக்கு கோபம் தீரவில்லை.
'எத்தனை நாள் அவங்க ஆபீஸ்லயே அவர் கூடவே உக்காந்து மேட்டர் டைப் செஞ்சு கொடுத்திருக்கேன். என் டைப்பிங் ஸ்பீடை பார்த்து என்னமா பேசியிருக்காரு..? ஊர் விஷயமெல்லாம் பேசியிருக்கோம்.. நம்மகிட்டயே போய் இப்படி மூணாம் மனுஷன்கிட்ட பேசுற மாதிரி பேசிட்டாரே..' என்ற கோபத்தில் இதன் பின் 'உயிர்மை' அலுவலகத்திற்கு போகக் கூடாது..” என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன்..! ஆனால் 'உயிர்மை'யின் முதல் இதழில் இருந்து இப்போதுவரையிலும், அதனை வாசித்துதான் வருகின்றேன். அது வேறு விஷயம்.
இது மட்டுமா..? இன்னொரு சம்பவம்.. அப்போது 'குமுதம்' குழுமத்தில் இருந்து 'குமுதம் ஜங்ஷன்' என்னும் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது. இலக்கிய சாயல் கொண்டது. அதில் கவிஞர் சல்மா ஒரு முறை தன்னுடைய பால்ய வயது புத்தக வாசிப்பு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தானும் மனுஷ்யபுத்திரனும் சிறு வயதிலேயே போட்டி, போட்டுக் கொண்டு புத்தகங்களை வாசித்ததாகச் சொல்லியிருந்தார்.
இதைப் படித்ததும் மனுஷ்யபுத்திரன் என்பது இவரைத்தானோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. அந்தச் சமயத்தில் எழுத்தாளர் அண்ணன் எஸ்.ரா.வின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். அப்படியொரு முறை சென்றபோது இந்தக் கட்டுரையைப் பற்றி அவரிடம் சொன்னேன். “ஆமா சரவணன்.. அவங்க ரெண்டு பேரும் அக்கா, தம்பிக..” என்றார். “ஓ.. அப்படியா..?” என்று கேட்டுக் கொண்டேன்..!
அதன் பின்பு காயிதேமில்லத் பெண்கள் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது உயிர்மை ஸ்டால் பக்கமாக வந்தபோது மனுஷ்யபுத்திரன் வாசலில் அமர்ந்திருந்தார். பார்த்தவுடன் “வணக்கம்..” வைத்தேன். அவரும் பதிலுக்கு கைகளைப் பற்றி “சரவணன்..” என்றார். அடடே.. ஆசிரியர் நம்மை இப்பவும் ஞாபகம் வைச்சிருக்காரே என்ற நினைப்புடன் பேசினேன். கூடவே இந்த சல்மா மேட்டரும் ஞாபகத்துக்கு வந்து தொலைய.. அதையும் சொல்லிவிட்டேன். “ஸார்.. 'குமுதம் ஜங்ஷன்' பத்திரிகைல சல்மா உங்களைப் பத்தி எழுதியிருக்காங்க..” என்றேன்.. “சல்மாவா? யார் அது..?” என்றார் மனுஷ். பேயறைந்தது போலானது எனக்கு..!
“உங்களுக்கு சிஸ்டராம்ல ஸார்.. எஸ்.ரா. சொன்னாரு..” என்று இழுத்தேன்..! அவரது அக்மார்க் இழுப்பு சிரிப்பை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்து நிறுத்தி, “இல்லை சரவணன்.. சல்மான்னு எனக்கு யாரையுமே தெரியாது..” என்றார். என்ன பேசுவது என்றே தெரியாமல் அவரது கண்களைப் பார்த்தபடியே இருந்தேன். மீண்டும் சொன்னார் மனுஷ், “நிஜமா சரவணன்.. என் வாழ்க்கைல சல்மான்ற பேரு உள்ளவங்களை நான் சந்திச்சதே இல்லை..” என்றார் திடமாக..! இதற்கு மேலும் அவரிடம் பேச எதுவுமி்ல்லை என்று எழுந்து வந்தேன்.
வெளியில் புல்தரையோரம் ஒரு கேடு கெட்ட முட்டாள் தோற்றத்தில் நான் அமர்ந்திருந்தபோது கிழக்கு பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியர் அண்ணன் ஏ.ஆர்.குமார் அங்கே வந்தார். “என்னடா தம்பி.. தனியா உக்காந்திருக்க..? என்ன விஷயம்..?” என்று கேட்டவரிடம் 'உயிர்மை' ஸ்டாலில் நடந்ததைச் சொன்னேன்.. தலையில் அடித்துக் கொண்டார் குமார். “உன்னை யாருடா போய் கேக்கச் சொன்னது..? அவங்க ரெண்டு பேருக்கும் சண்டைடா.. பேசிக்க மாட்டாங்கடா..” என்றார். “பேசிக்கலைன்னா என்ன பிரதர்..? இவரும் கவிஞர். அந்தம்மாவும் கவிஞர்தான்.. இதுல அக்கா, தம்பி வேற.. தெரியும்ன்னு சொல்லிட்டுப் போயிரலாம்ல. பெரிய பத்திரிகைக்கு ஆசிரியரால்ல இருக்காரு..” என்றேன். “எல்லாரும் ஒரே மாதிரியாவா இருப்பாங்க.. விடு.." என்றார் குமாரண்ணன்..
ஆனாலும் மனசு ஆறவில்லை..! சில நாட்கள் கழித்து எஸ்.ரா.வை அவரது வீட்டில் சந்தித்து இதைப் பற்றி சற்று கோபத்துடனேயே பேசினேன்.. “இவரெல்லாம் எப்படி ஸார் கவிஞரானார்..? எப்படி ஸார் பத்திரிகை ஆசிரியரா சொல்ல முடியும்..?” என்றேன்.. சிரித்தே மழுப்பிவிட்டார் எஸ்.ரா. “அது அப்படித்தான் சரவணன். ஒருத்தருக்கு ஒரு விஷயம் பிடிக்கும். இன்னொருத்தருக்கு இன்னொரு விஷயத்தைப் பத்திப் பேசினாலே பிடிக்காது. மைண்ட்ல வைச்சுக்கவே கூடாதுன்னு நினைப்பாங்க.. அதுனால சொல்லியிருப்பாரு. அதுலேயும் மனுஷுக்கு சின்ன வயசு.. இப்போ அப்படித்தான் இருப்பாரு. விடுங்க..” என்று சொல்லி முடித்துவிட்டார் பஞ்சாயத்தை..!
ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக, ஏதாவது ஒரு விஷயத்தில், அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு குருவாக, சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக இருக்க வேண்டாமா என்ற என்னுடைய கோபம் இன்றுவரையிலும் அவர் மீது தீரவில்லை..!
“சங்கரை எனக்குத் தெரியும் சரவணன். ஆனா இப்போ எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. கொஞ்சம் பிரச்சினை..” - இப்படி இரண்டு வரிகளில் சொல்லிவிட்டால் போகிறது. என்ன ஆகிவிடும்..?
“சல்மா என் அக்காதான். இப்போ வேற முகாம்ல இருக்காங்க.. அவ்ளோதான்..” என்று சொல்லியிருந்தால் மனுஷ் எதிலும் குறைந்து போயிருக்க மாட்டாரே..!
தலையங்கத்தில் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வார்த்தைகளைக் கொட்டி வருபவருக்கு இந்த வார்த்தைகளா கிடைக்காது..? தனி மனித விருப்பு வெறுப்புகள் எதுவுமின்றி எவனும் இங்கே, எதற்கும் ஆசானாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது என்பதை இந்தச் சம்பவங்களே எனக்கு இத்தனையாண்டுகள் கழித்து உணர்த்தியிருக்கின்றன..!
இலக்கியம், எளக்கியம் ஆனதற்கும் இது போன்ற பப்பரப்பா ஆசிரியர்களும் ஒருவகையிலும் காரணமாகியிருக்கிறார்கள் என்பதை அவர்களாவது புரிந்து கொள்ளட்டும்..!
இதனை இத்தனை நாட்களாக எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நேற்று இரவு மனுஷ்யபுத்திரன் தனது பேஸ்புக் முகப் பக்கத்தில் எழுதியிருந்த இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் எழுதியே தீர வேண்டும் என்று தோன்றிவிட்டது..!
“இன்று புத்தக கண்காட்சியில் உயிர் எழுத்து ஸ்டாலில் வைத்து கவிஞர் சங்கர் ராமசுப்ரமணியனுக்கும், வசுமித்திரா என்பவருக்கும் தேவதச்சன் கவிதைகளை முன் வைத்து பயங்கர அடிதடியாம். சங்கருக்கு ஃபோன் செய்து கேட்டேன். பரஸ்பரம் அடித்துக் கொண்டதில் கடைசியில் வசுமித்திரா தனது கட்டை விரலை கடித்து விட்டதாகவும் டாக்டர் வீட்டில் ரத்தம் வடியும் விரலுடன் உட்கார்திருப்பதாகவும் தெரிவித்தார்(ன்). நல்லவேளை ’விரலோடு’ போயிற்று. இல்லாவிட்டால் என்னாவது என்று ஆறுதல் கூறினேன். தமிழுக்காக ரத்தம் சிந்துவது என்றுதான் நிற்குமோ தெரியவில்லை…!”
உயிர்மையின் இத்தனையாண்டு கால வாசகனாக, பணம் கொடுத்து வாங்கிப் படித்த ஒரு ஏமாளியாகக் கேட்கிறேன்..!
உயிர்மை என்னும் இலக்கிய பத்திரிகையின் மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருமகனார் திரு.மனுஷ்யபுத்திரன், போன் செய்து பேசிய அந்த கவிஞர் சங்கர் ராமசுப்பிரமணியனை மகாபுருஷர், ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கு எப்படி... எத்தனையாண்டுகளாகத் தெரியுமாம்..?
யாராச்சும் கேட்டுச் சொல்றீங்களா..?

|
|
Tweet |