31-05-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடந்த இரண்டு நாட்களாக வலையுலகைச் சுழன்றடிக்கும் சூறாவளியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
இங்கு நாம் என்கிற வார்த்தையைக் குறிப்பிடுவதற்குக் காரணம் நமக்குள்ளேயே இருக்கின்ற விஷயங்களை வெளியில் இருந்து ஒரு நபர் உள்ளே வந்து கொட்டிக் காண்பிக்கிறார். எக்காளமிட்டு தனக்கு இப்போது ஒரு வாய்ப்புக் கிட்டியது போல எள்ளி நகையாகிவிட்டு சந்திடிச்சாக்கில் இதுநாள்வரையில் நம் குடும்பத்தில் ஒருவராக இருந்த ஒரு சிலரை வன்கொடுமையையும், வன்புணர்ச்சியையும் செய்து கொண்டிருக்கிறார்.
இதற்கு நம்மில் சிலரே உடந்தையாக இருப்பதைக் கண்டு மிகவும் வேதனையாக இருக்கிறது..!
நர்சிம் எழுதிய அந்த பூக்காரி என்கிற பதிவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை கிட்டத்தட்ட வலையுலகமே குறிப்பிட்டுச் சொல்லியாகிவிட்டது. நர்சிம் தனது தவறை உணர்ந்து வலையுலக மக்களிடம் தனது மன்னிப்பை கேட்டு அந்தக் குறிப்பிட்ட பதிவையும் நீக்கிவிட்டார். அதே சமயத்தில் தனக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாக அவர் சொல்லியிருக்கும் அவருடைய பேட்டிக்கான எதிர்ப்பதிவை நமது சக தோழியரான விஜியும் நீக்கிவிட்டார். சந்தோஷம்..
இதில் சம்பந்தமே இல்லாத வினவு போன்ற அரசியல் முதலாளிகளை நாம் ஏன் இதில் இழுக்க வேண்டும்..? நுழைக்க வேண்டும்..? அல்லது நுழைவதை வேடிக்கை பார்க்க வேண்டும்..?
அவர்களின் அரசியல் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படிப்பட்டவை என்பதை லீனா மணிமேகலையின் கூட்டத்திலேயே வலையுலகம் கண்டு கொண்டது. அப்படியிருந்த அந்த அடாவடிக் கூட்டத்திற்கு நமது வலையுலகத்தில் கால் பதித்து நாட்டாமை செய்ய நாம் ஏன் இடமளிக்க வேண்டும்..?
முதலில் அந்த நபர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள எனது இந்தப் பதிவைப் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..! அவர்களின் இரட்டை வேட நிலையையும், இப்போதுகூட அவர்கள் எதற்காக வலையுலகத்திற்குள் சிலரை இழுத்து வைத்துக் கொண்டு தாங்கள்தான் எழுத்துலகின் அத்தாரிட்டி என்பதைப் போல் காட்டுவதும் எதற்காக என்பதையும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
இவர்கள் இணையத்திற்குள் வந்த புதிதில் நான் உட்பட பல பதிவர்கள் அவர்களை விழுந்து, விழுந்து படிக்கத் துவங்கினோம். பலரிடமும் அறிமுகப்படுத்தினோம். அவர்களைப் பற்றி பாராட்டித்தான் பேசினோம். ஆனால் அவர்கள் நம்மை ஒரு பிளாட்பார்மாக பயன்படுத்தத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை மிக தாமதமாகத்தான் நான் புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து நானும் அவர்களது தளத்தில் பின்னூட்டமிடுவதை நிறுத்திக் கொண்டேன்.
வலையுலகம் என்கிற இந்தச் சின்ன உலகத்தில் நாம் இதுவரையில் இருந்து வந்தது நட்பு என்கிற மூன்றெழுத்துக்காக. அதன் மூலம் நமக்குள்ளேயே பரவிவிட்ட தோழமையுணர்வு குடும்ப உறவாக வளர்ந்து இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் சிறு, சிறு குழுக்களாக உறவாடி வருகிறோம். இதுவெல்லாம் வினவு குழுமத்திற்குத் தெரியாது. அது அவர்களுக்குத் தேவையுமில்லை.
அவர்கள் நம்மை அணுகியதற்குக் காரணம் அவர்களுடைய கொள்கையை நம்மிடத்திலே விதைப்பதற்குத்தான். நம்முடைய பேச்சுக்களும்,
எழுத்துக்களும் அவர்களைப் பொறுத்தவரையில் மொக்கைதான். ஏனெனில் அவர்கள் மட்டுமே இங்கே எழுத்தாளர்கள். மற்றவர்களெல்லாம் வெறும் சுள்ளான்கள் என்பது அவர்களது கணிப்பு..! இதைத்தான் அவர்கள் அவ்வப்போது பல்வேறு தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இவர்களிடையே இருக்கின்ற மிகப் பெரும் நல்ல குணமே, தங்களைத் தாங்களே உயர்த்திப் பேசி மற்றவர்களை இழித்துப் பேசுவது. போராட்டங்களை நடத்துவதால் தங்களுக்கு யாரையும் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது என்று திமிராகப் பேசுவதும், வீடு தேடிச் சென்று கேள்வி கேட்பது போல் குடும்பத்தினரை மிரட்டுவதும்தான் இவர்களது கட்சியின் கொள்கை.
இவர்களது தளத்தில் மாற்றுக் கருத்துச் சொல்லும் பதிவர்களை வினவு என்கிற பெயரில் இருப்பவர் திட்டமாட்டார்.. ஆபாசமாக பேச மாட்டார். ஆனால் மற்றப் பெயர்களில் வருபவர்கள் கீழ்த்தரமாக பேசித் தள்ளுவார்கள். அதனை இன்றைக்கு ஆபாசத்தை எதிர்ப்பதாக போலிக் கூத்தடிக்கும் இந்தக் கண்ணீர்த் துளிகள் அன்றைக்கு கண்டு கொள்ளாமலேயேதான் இருந்தார்கள்.. இப்பவும் இருக்கிறார்கள்..!
பத்திக்கு பத்தி பொறுக்கி, பொறுக்கி என்று நர்சிமை எழுதியிருக்கும் இந்த தேவர்கள்தான்(இது தேவலோகத்து தேவர்கள் - இப்படி எழுதினால்தான் இவர்களுக்குப் பிடிக்கும்)
///கார்க்கி இனி நீ “கார்க்” பால்தான், வொக்காளி ஒன்ன வெளுக்கிறதுக்கு இதான்டா வழி.. நர்சிம்’க்கு பொறுக்கி சொல்வதைவிட வேற ஏதாச்சம் சொல்லியிருக்கலாம்.. பார்ப்பன ஓநாய், ஒரு பெண்ணிடம் உன்ற மொள்ளமாரித்தனத்த காட்றியே நீயெல்லாம் #@@#$@!! வேணா உன் தாய் கொடுத்த பாலே வெளி’ல வர்ற அளவுக்கு வார்த்தைய சொல்ல வச்சிறாதே….///
இப்படியொரு பின்னூட்டத்தை வெளியிட்டு தங்களது உள்ள அரிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்களா யோக்கியவான்கள்..? நர்சிமின் பதிவை எதிர்ப்பதாகச் சொல்லியிருப்பவர்கள் அதே பாணியிலேயே நமது வலையுலக சக பதிவரையும் தாக்கியிருக்கிறார்கள்..! இவர்களுக்கு நர்சிம் மீது குற்றஞ்சொல்ல என்ன தகுதி இருக்கிறது..?
இந்தப் பதிவு முழுவதிலுமே ஆள், அட்ரஸ் இல்லாத முகமூடிகள்தான் அனானிகளாக தங்களது மன அரிப்பை வெளிக்கொட்டியிருக்கிறார்கள். உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் இவர்கள்தான் பொறுக்கிகள்.. இதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை..!
இத்தனை நாட்களாக நாம் இந்த வலையுலகில் பழகி வந்திருக்கிறோம். பேசி வந்திருக்கிறோம். யாரை பார்த்தாலும் கைகளை குலுக்கி நலம் விசாரித்து அவரது பதிவுகளைப் பற்றி விமர்சித்திருக்கிறோம். வினா எழுப்பியிருக்கிறோம். ஆனால் ஒருவராவது நீங்க என்ன ஜாதி என்று கேட்டிருக்கிறோமா..? அப்படியொரு நிலைமைக்கு நம்மைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள் இந்த வெளியாட்கள்..!
//சந்தனமுல்லை என்ற மிக பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பதிவரை பார்ப்பன சாதியைச் சேர்ந்த பதிவர் நர்சிம் தன் எழுத்துக்களால் கொடூரமாக பாலியல் வன்முறை (RAPE) செய்திருக்கிறார்.///
இப்படித்தான் தங்களது கொடுந்தாக்குதலை நம் மீது துவக்கியிருக்கிறார்கள் இந்தப் புண்ணியவான்கள். சந்தனமுல்லையும், நர்சிமும் என்ன ஜாதி என்பது பற்றி இதுவரையிலும் நாம் யோசித்துப் பார்த்திருப்போமா..? யாரிடமாவது கேட்டிருப்போமா..? எனக்கே இப்போதுதான் தெரியும்..!
இந்த எழவெடுத்த ஜாதியை மறந்துதானே வலையுலகம் என்ற ஒரு லேபிளின் கீழ் நாம் குடியிருந்து வருகிறோம். கறையான் புற்றுக்குள் பாம்பு புகுந்த கதையாக நமக்குள்ளேயே பிரிவினையைத் தூண்டிவிடும் அளவுக்கு ஒரு நச்சுப் பாம்பை நாம் ஏன் நமக்குள் அனுமதிக்க வேண்டும்..!
சற்று சிந்தித்துப் பாருங்கள் பதிவர்களே.. இதுவரையில் பதிவுலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலாவது இவர்களை நாம் நேராக அழைத்திருக்கிறோமா.. இல்லையே..? இவர்களாவது தேடி வந்து நமக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்களா.. வரவே இல்லையே..? எத்தனையோ பதிவுலக் கூட்டங்களுக்கு பதிவர்களை அழைத்திருக்கிறோம். இவர்கள் வந்திருக்கிறார்களா..? வரவில்லையே..? கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட பதிவர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர்கள் எத்தனை பேருக்கு பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்..?
எனக்கு ஒன்றிரண்டு முறை.. மற்றபடி நான் வேறு எந்தப் பதிவரின் தளத்திலும் வினவு என்கிற எழுத்தை பார்த்ததில்லை. ஆனால் தண்டோரா அண்ணன் வினவு வெங்காயங்களை விமர்சித்து எழுதிய பதிவின்போது அனானி பின்னூட்டங்களை வஞ்சகமில்லாமல் வாரி வழங்கினார்கள். இப்போது ஏதோ நமது வலையுலகம் மீது பாசம் பொங்கி வழிந்ததுபோல் விழுந்தடித்து ஓடி வந்திருக்கும் காரணத்தைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
நம்மிடையே இருக்கும் ஒற்றுமையை சிதைப்பது என்பதுதான் இவர்களது முதல் நோக்கம். அவர்களை நோக்கி நமது பதிவர்களை சிறுகச் சிறுக இழுத்து அவர்களது ஆதிக்கத்தை வலையுலகத்தின் மீது செலுத்துவது என்பதுதான் இவர்களது நோக்கம்.
இப்போது நமக்குள் என்ன பிரச்சினை..? சந்தனமுல்லை என்கிற பதிவருக்கும், நர்சிம் என்கிற பதிவருக்கும் இடையில் முட்டல், மோதல். இருவரையுமே பேச வைப்போம். முடிந்தால் பேசுங்கள். நேராகப் பேச விருப்பமில்லையெனில் இருவருக்குமே நெருக்கமான யாராவது சக பதிவர்களை அழையுங்கள். அவர்கள் மூலமாகப் பேசுங்கள்.
உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்க முடிந்ததெனில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பதிவர் சந்தனமுல்லை, பதிவர் நர்சிமின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் போகிறேன் என்று சொன்னால் தாராளமாக அதனைச் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்காக நச்சுப் பாம்பு போன்ற வெளியாட்களான வினவு போன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டாம் என்று சந்தனமுல்லையை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் நர்சிம் மீது தொடுக்கும் வினாக்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். ஆனால் அதனை நம்மிடையே பிளவை உண்டாக்க நினைக்கும் புல்லுருவிகளின் துணையோடு செய்யாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.
ஏன்.. எதற்கு.. என்கிறீர்களா..? வினவின் பதிவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்..
///இந்த நேர்காணலை அதற்கே உரிய அற்பத்தனத்தை போட்டுடைத்து பெண் பதிவர் மயில் என்பவர் நகைச்சுவையாக ஒரு பதிவு வெளியிடுகிறார்.///
அந்தப் பதிவை "அற்பத்தனம்" என்று குறிப்பிடுகிறார் மெத்தப் படித்த மேதாவியான இந்த வினவு. இப்படி உங்களது ஒரு பதிவை நமது சக பதிவர்களில் ஒருவர் குறிப்பிட்டாரென்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் தோழர்களே..! அற்பத்தனம் என்று குறிப்பிட இவருக்கு என்ன தகுதியிருக்கிறது.? யார் இவர்..?
///அதில் பதிவர் சந்தனமுல்லை பின்னூட்டமிடுகிறார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நர்சிம் பூக்காரி என்ற கதையை வெளியிடுகிறார். அதில் சந்தனமுல்லையை எவ்வ்வளவு கீழ்த்தரமாக குறிப்பிட முடியுமோ அவ்வளவு குதறியிருக்கிறார்.///
இதனை இந்த அறிவாளி சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. நமது பதிவர்களே குறிப்பிட்டது இதைத்தான். ஆனால் ஏன்.. எதற்கு..? பின்னூட்டத்தில் திட்டினால்கூட போனில் அழைத்து மென்மையாகப் பேசும் நர்சிம் ஒரு நாளில் மாறிப் போனது ஏன் என்கிற குழப்பத்துடன்தானே நாம் அத்தனை பேரும் இதனைப் பேசினோம்.. இந்தக் குழப்பமெல்லாம் தெருவோரத்தில் நிற்கும் இந்த அயலார்களுக்கு எப்படி புரியும்..?
///பார்ப்பனியத் திமிர் என்பதைத் தாண்டி இதில் வேறு எதுவும் இல்லை என எளிமைப்படுத்தி இந்தச் சம்பவத்தை குறுக்கிவிட முடியாது. ///
இங்கேதான் நமக்குள்ளேயே ஜாதி, மதம் என்னும் விஷத்தை நம் கண் முன்பாகவே உலாவ விடுகிறார்கள் இந்தக் கயவர்கள்..! நர்சிம் ஜாதிக் கண்ணோட்டத்திலா இந்தப் பதிவை எழுதியிரு்க்கிறார்.. நர்சிம் இதுவரையில் நம் அனைவரிடமும் பழகியது ஜாதிக் கண்ணோட்டத்தில்தானா என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..!
///‘நான் கடவுள்’ திரைப்படம் வெளிவந்த நேரம். பல ஆண் பதிவர்கள், இந்தப் படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இன்று வன்புணர்ச்சி செய்திருக்கும் நர்சிம் தரப்பில் நியாயம் இருப்பதாக பேசும் வடகரை வேலன் உட்பட பலரும் இந்த வகையான கருத்தையே முன் வைத்தார்கள். அப்போது சந்தனமுல்லையும், ராப்பும் (வெட்டி ஆபிசர் என்ற பெயரில் வலைத்தளம் நடத்திய பெண் பதிவர். இப்போது வலையுலகில் அவர் எழுதுவதில்லை) “இது அபத்தமான கருத்து. பிரசவ வேதனையையே அனுபவித்து கடந்து செல்லும் துணிவு பெண்களுக்கு உண்டு. அப்படியிருக்க ஒரு படத்தை பெண்கள் பார்க்கக் கூடாது என்று தடுக்க நீங்கள் யார்? அப்படத்தில் பெண்களே நடிக்கவில்லையா?” என்ற பொருள் பட எதிர்வினை புரிந்தார்கள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஆண் பதிவர்களுக்கு சந்தனமுல்லை - ராப் மீது வெறுப்பு படிய ஆரம்பித்தது. இந்த வகையான ஆண்கள், தங்கள் வீட்டு பெண்களை வேலைக்கு அனுப்புவார்கள் - அனுப்புகிறார்கள். அதையே சுதந்திரம் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால், இந்த சுதந்திரத்தை அவர்கள் அனுமதித்ததே ஏடிஎம் மிஷினாக மட்டுமே பெண்களை பார்க்கும் பார்வைதான். பொருளாதார ரீதியாக தாங்கள் உயர பெண்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த நினைக்கிறார்கள். இதைத் தாண்டி பெண்கள் வேறு எந்த விதமான உரிமைகளையும் கேட்டு விடக் கூடாது என்பதோடு ஒரு சுயேச்சையான சமூக ஆளுமையாக தலையெடுக்கக் கூடாது என்பதில் 24 மணி நேரமும் கவனமாக இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பார்வை கொண்ட ஆண்களுக்கு சந்தனமுல்லை - ராப் ஆகியோரின் எதிர்வினை எந்தளவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த புள்ளியிலிருந்து அவர்களின் ஆழ்மனதில் இவர்கள் இருவர் மீதும் வெறுப்பு படிய ஆரம்பித்தது என்று கொள்ளலாம்.///
இப்படியொரு சம்பவம் நடந்ததாகச் சொல்கிறார் வினவு. நடந்திருக்கலாம். இது தினம்தோறும் நம் வலையுலகில் நடப்பதுதானே.. இதற்காக சந்தனமுல்லைக்கும், ராப் என்கிற பதிவருக்கும் பிரச்சினைகள் எழுந்து அதுவே வளர்ந்து நிற்கிறது என்றாலும்கூட அது வலையுலகில் ஆயிரத்தில் ஒன்று..
ஏன் இன்னமும் என்னுடைய போலி டோண்டு பிரச்சினை அப்படியே நிற்கவில்லையா..? பிளாக்கரின் நம்பரை நானும் இன்னமும் என் பெயருக்குப் பின்பு போட்டுக் கொண்டுதானே உள்ளேன்.. ஆனால் இந்தச் சாதாரண சம்பவத்திற்கு இந்த வினவு கூட்டத்தினர் புகுத்துகின்ற பெயர்தான் நமது குடும்பத்திற்கே உலை வைப்பது போல் உள்ளது..
///இந்த ஆண் பதிவர்கள் அனைவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் அல்ல. ஆனால், பார்ப்பனர்களுக்கு மட்டுமே அறிவு உண்டு என்பதை ஆழ்மனதில் ஏற்று மனு தர்மத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள். அதனால் ஆணாதிக்கத்தை இயல்பாக எழுத்திலும் சிந்தனையிலும் வரித்தவர்கள்.///
இதுதான் வினவு அண்ட் கோவின் ஒரு அம்சத் திட்டம். எப்படியாவது நம்மிடையே பார்ப்பனர்,. பார்ப்பனர் அல்லாதவர் என்கிற பிரிவினையை ஏற்படுத்தி குழப்பத்தை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கிறார்கள் இந்தக் கோஷ்டியினர்..!
சரி இதை விடுவோம்.. இந்தப் பொறுக்கித்தனமான விஷயத்தை பொறுக்கித்தனமான பதிவில் பொறுக்கித்தனமான வார்த்தைகளில் பொறுக்கியெடுத்திருக்கும் வினவு நமது சக பதிவர்களை எப்படியெல்லாம் நமக்கே அடையாளப்படுத்தியிருக்கிறார் என்பதையும் சற்றுப் பாருங்கள்..!
///கார்க்கியின் ‘சாளரம்’ வலைத் தளத்தை ஒன்றிரண்டு முறை பார்வையிட்டாலே எந்தளவு ஆணாதிக்கத் திமிருடன் அவர் எழுதுகிறார் என்பதை உணரலாம். காமம் சார்ந்த பார்வையோடு, ஒரு போகப்பொருளாக அன்றி வேறு எப்படியும் அவர் பெண்களை அணுகுவதில்லை.///
அடேயப்பா எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு..? இதுவரையிலும் கார்க்கி என்ற இந்தத் தம்பியுடன் பழகிய நமக்கே தெரியாத விஷயம் இந்த அறிவுஜூவிகளுக்குத் தெரிந்திருக்கிறது என்றால் எப்படி..?
///ராப் எழுதிய குப்பைத் தொட்டி பதிவிற்கு பொருத்தமாக அதில் புரண்டு நெளியக் கூடிய ஆண் வெறித் திமிரான விலங்குதான் இந்த கார்க்கி///
ஆஹா.. ஒரு பதிவு பிடிக்காமல் எதிர்ப் பதிவு போட்ட வேறொரு பெண் பதிவரை முன்னிலைப்படுத்தும் சாக்கில் வினவு அண்ட் கோ நமது சக பதிவரை முன் வைத்துத் தாக்குகின்ற வார்த்தைதான் திமிரான விலங்கு..! அப்பாடா இந்தப் பாராட்டை நமக்கு வழங்குகின்ற தகுதியாவது கொஞ்சமாவது இவர்களுக்கு இருக்கிறதா..?
நமது வலையுலகில் நண்பர்கள் யாரையாவது நாம் இப்படி பேசியிருக்கிறோமா..? எழுதியிருக்கிறோமா..? வலையுலகை வாசிக்க மட்டுமே செய்யும் சிலர் அனானிகளாக குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் நாமும் ஒன்றா..?
///பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா - லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல.///
எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு..? இந்த மூன்று பதிவர்களின் எழுத்துக்களையாவது இந்த புத்தி ஜீவிகள் வாசித்திருப்பார்களா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது. இந்த வலையுலகத்தை ஒரு குடும்பமாக பாவித்து ஊர், ஊருக்கு பதிவர்களை தெரிந்து வைத்திருந்து ஒவ்வொருவரையும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து ஒரு நல்ல நட்புணர்வை இன்றைக்கும் செய்து வருவது அபிஅப்பாதான்.. அவரும் ஜொள்ளு பார்ட்டியாம்.. இப்படி எழுதி இதுநாள் வரையில் அபியப்பாவுடன் நாம் பழகிய பழக்கத்தையே கேவலப்படுத்துகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள் பதிவுலகத் தோழர்களே..!
///புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள்.///
எத்தனையோ பெண் பதிவர்களின் திருமணங்களின் முன்னால் நின்று, அவர்களது குடும்பத்தில் ஒருவராக.. அவர்களுக்கு வேண்டிய அத்தனையையும் செய்து நட்புக்கு இலக்கணம் பாடியவர்கள் அபியப்பாவும், மங்களூர் சிவாவும்.. ஐயோ பாவம்.. இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது இதெல்லாம்..? இவர்கள்தான் வெளியாட்களாச்சே..!
///‘ஆபரேஷன் சல்மா’ மூலம் பார்ப்பன ஜெயராமனின் முகத்திரையை கிழித்த பதிவர் பாலபாரதிக்கும், மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் சென்ஷிக்கும் இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரியும்.///
இது அவர்களது அரசியல் கொள்கையின்படி எழுதியிருக்கும் வாசகங்கள். உள்ளுக்குள்ளேயே நாமே குத்திக் கொண்டு சாக வேண்டும். நாம் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போம் என்கிற ஆதங்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள இதன் அர்த்தத்தை சம்பந்தப்பட்ட பதிவர்கள் இருவருமே புரிந்து கொள்வது நல்லது..!
ஆபரேஷன் சல்மாவில் நடந்தது என்ன என்பதை கொஞ்சம் வெளியில் விலாவாரியாக விசாரித்துவிட்டு வந்து பேசினால் இந்த அறிவாளிகளுக்குத் தெரியும்.. சல்மா மேட்டரில் முதல் துப்பை வெளியில் விட்டது நான்தான்..! இதெல்லாம் இந்த மகராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது.. இவர்கள்தான் காதுல விழுந்தது.. லேசா புரட்டிப் பார்த்தது என்று அத்தனையையும் லேசாகத் தூக்கி வைத்திருப்பவர்களாச்சே..!
///மேலே குறிப்பிட்ட ஆண்வெறி ஜொள்ளு பார்ட்டிகளின் நடவடிக்கைகள் அரசல் புரசலாக சந்தனமுல்லைக்கு தெரியும். அதனாலேயே புதிதாக எழுதவரும் பெண் பதிவர்களிடம் சீனியர் என்ற முறையில் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்வார். இதை அறிந்த அபிஅப்பாவுக்கு, சந்தனமுல்லை மீது கோபமும் ஆத்திரமும் எப்போதும் உண்டு. அதனால்தான் இந்தக் கழிசடை இப்போது பொறுக்கி நர்சிம்மை ஆவேசத்துடன் ஆதரிக்கிறது. மிஸ்ஸஸ் டபுட், மிஸ்ஸ்ஸ் தேவ், பரணி என்ற பெயர்களில் எழுதிய ஒரு பெண்பதிவர் இப்போது வேறு பெயரில் எழுதுகிறார். என்ன காரணம்? செக்ஸ் டார்ச்சர்தான். அவரது பெயரை அவராகவே வெளியிடாத வரை நாங்கள் வெளியிட இயலாது என்றாலும் பதிவுலகின் யோக்கியதைக்கு இது ஒரு சான்று.///
எங்க யோக்கியதையைப் பற்றிப் பேச முதலில் உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது மிஸ்டர் வினவு..? அதுதான் உங்களது யோக்கியதையை லீனாவின் கூட்டத்தில் நானே நேரில் பார்த்தனே.. நீங்கள் அழைத்து வந்த பெண்களும், நீங்களும் எவ்வளவு தெள்ளுத்தமிழில் உங்களுடைய கோரிக்கையை முன் வைத்தீர்கள் என்று..!?
///யார் இந்த நர்சிம்? பிறப்பால் மட்டுமல்ல, சிந்தனையாலும் கடைந்தெடுத்த பார்ப்பனர். இவரது தந்தையார், பிராமண சங்கத்தின் (தாம்ப்ராஸ்) உயர் பொறுப்பில் இருப்பதாக அறிகிறோம். பன்னாட்டு நிறுவம் ஒன்றின் உயரதிகாரியாக பணிபுரியும் நர்சிம், வலைத் தளத்தில் எழுத வந்த புதிதில் யாரும் இவரை சீண்டவில்லை. மறுமொழியும், ஹிட்ஸும் குறைச்சலாக பெற்ற இவர், பிரபல பதிவர்களின் வலைத் தளத்துக்கு சென்று தானாக மறுமொழி இடுவார். எனது வலைத் தளத்துக்கு வாருங்கள் என்று கெஞ்சுவார். அந்த வகையில் ஒவ்வொரு இடுகையை தான் எழுதியதும், சந்தனமுல்லைக்கு லிங்க் அனுப்பியிருக்கிறார். ஆனால், சந்தனமுல்லை அதை கண்டுகொள்ளவில்லை என்பது நர்சிமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.///
இதுதான் தோழர்களே.. நம்மை நமது ஆட்களை வைத்தே உரித்தெடுப்பது என்பது.. நர்சிமின் குடும்பம் எப்படி? அவருடைய மூதாதையர்கள் யார்..? என்ன ஜாதி? என்ன குலம்? இதெல்லாம் தெரியாமல்தானே இதுவரையிலும் ஐநூத்திச் சொச்சம் பதிவர்கள் அவருக்கு பாலோயர்ஸ்களாக இருக்கிறார்கள். இதைத்தான் இந்த அறிவின் சிகரங்கள் உடைத்துக் காண்பித்து நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள்..!
///பணத்தை தின்று, பணத்தில் மலம் துடைத்து, பணத்தில் குளிக்கும் அளவுக்கு செல்வந்தராக இருக்கும் நர்சிம், பணத்தாலேயே தனது ‘குரு’க்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பியர் வாங்கிக் கொடுத்தாலே ‘இவர் மிகச்சிறந்த இலக்கியவாதி’ என்று அறிவிக்கும் சாருநிவேதிதா, ‘தனது சீடர்’ என மனமுவந்து நர்சிம்மை அறிவிக்கவும், தனது வலைத்தளத்தில் இவருக்கு லிங்க் தரவும் என்ன காரணம்? கள்ளநோட்டிலும் புன்னகைக்கும் காந்திதானே? இந்த இடத்தில் சாருநிவேதிதாவின் இப்போதைய மனைவியும், நர்சிம்மும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இன்று நர்சிம்முக்கு ஆதரவு தரும் யுவகிருஷ்ணா, அதிஷா, இரும்புத்திரை… ஆகியோர் சாருநிவேதிதாவின் அபிமானிகள் என்ற காரணத்திற்காகவே நர்சிம்மை வெட்கம், நேர்மை, சுரணையின்றி ஆதரிக்கிறார்கள்.///
எவ்வளவு துவேஷத்தை நமக்குள் விதைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது நர்சிமின் எழுத்துக்கள் மீதான இவர்களது விமர்சனங்கள் அல்ல. அவர் மீதான தனிப்பட்ட வெறுப்புக்களை நம்முள் புகுத்துவதுதான் இவர்களது ஒரே நோக்கம். இதற்காக இவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைகள்தான் வெட்கம், நேர்மை, சுரணையின்றி.. இத்யாதிகள்.. இவர்களுக்கு இந்த மூன்றுமே நிறையவே இருக்கிறது போலும்..!
///நர்சிம்மின் எழுத்துக்கள் எப்படிப்பட்டவை? பொது புத்தியில் உறைந்து போன விஷயங்களை மூன்றாம் தர எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் போல எழுதுவதை தவிர வேறென்ன செய்திருக்கிறார்?///
இதுவும் உங்களுக்கான எச்சரிக்கைதான் தோழர்களே.. அவர்களுடைய பார்வையில் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக இருக்குமளவுக்கு நீங்கள் எழுதுகின்ற திறன் உடையவராக வேண்டும். அப்படியிருந்தால்தான் நீங்கள் பதிவர்.. இல்லையெனில் நீங்கள் முட்டாளிலும் அடிமுட்டாள்.. மூன்றாம் தர எழுத்தாளன்.. இதைச் சொல்ல இவர்கள் யார்..? இவர்கள் பெரிய அறிவாளிகளோ.. இவர்களைத் தவிர மற்ற வலையுலக பதிவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று நினைக்கின்ற முதலாளித்துவ கொள்கையுடைவர்கள் இவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே..!
///எந்தவொரு பொதுப் பிரச்னை குறித்தாவது எப்போதாவது நர்சிம் எழுதியிருக்கிறாரா?///
பொதுப் பிரச்சனைகளைப் பற்றி எழுதினால்தான் அவர்கள் பதிவர்களாம்..? அப்படி எழுதாதவர்களெல்லாம் மனிதர்களே இல்லை என்கிறார்கள் இந்த முகமூடி ஜனநாயகவாதிகள்.. இதுதான் ஆதிக்கத் திமிர்..! நம்மில் எத்தனை பதிவர்கள் அரசியல் எழுதுகிறீர்கள்.. எத்தனை பேர் வெறும் அனுபவங்களை மட்டுமே எழுதுகிறீர்கள்..? நீங்களெல்லாம் இனிமேல் வினவு அண்ட் கோவிடம் சென்று நீங்கள் வலைப்பதிவர்தான் என்பதற்கு அத்தாட்சியாக உங்களுடைய பதிவைக் காண்பித்து அடையாள அட்டை வாங்கிவிடுங்கள்.. இல்லையெனில் நீங்கள் பார்ப்பனீயவாதிகளாக மாறிவிடுவீர்கள்.. ஜாக்கிரதை தோழர்களே..!
///தன்னைத்தானே நேசிக்கும், தன் அழகை மட்டுமே ஆராதிக்கும், தன் எழுத்தை தானே வழிபடும் சுயமோகியாக நர்சிம் இருப்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், ‘குட் டச் பேட் டச்’ நிகழ்வு. பதிவுலகம் சார்பில் நடந்த சமூக நிகழ்வில் இதுவும் ஒன்று. கிழக்கு மொட்டை மாடியில் டாக்டர்களான ருத்ரனும், ஷாலினியும் பங்கேற்ற அந்த நிகழ்வுக்கு முழுக்க முழுக்க அடித்தளமிட்டவர் பதிவர் தீபா.///
இந்த விஷயத்தில் ரொம்பவே பீலா விடுகிறார் வினவு. தீபாவே தன்னுடைய பங்களிப்பு சிறியது என்பதைச் சொல்லிவிட்டார். அதன் பின்பு அதற்கான பணிகளையும், மேல் விவகாரங்களையும், கள ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சியை செவ்வனே செய்தது நர்சிம், லக்கிலுக், அதிஷா மூவரும்தான் என்பது அந்த நிகழ்ச்சிக்குச் சென்றவர்களுக்கு நன்கு தெரியும்..!
இதன் பின்னான ஜூனியர்விகடன் சம்பந்தப்பட்ட செய்திகளும், அது பற்றிய பதிவுகளும் அன்றைக்குச் சுழன்றடிக்க காரணமும் நமக்குள் இருந்த கருத்து வேறுபாடுதான்.. இதையும் அன்றைக்கு நாமேதான் நமக்குள் பேசி சரி செய்தோம்.. இப்போதும் அதையே செய்வோம் என்கிறேன்..!
///இந்த அரங்கக் கூட்டம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் வலைத்தளத்தில் பாலபாரதி ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது ஒரு பெண் பதிவர் அவருக்கு அனுப்பிய பர்சனல் கடிதம். தனக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திருமணமான ஒரு ஆண் பதிவரால் தன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயர் குறிப்பிடாமல் பாலபாரதி இந்த மின்னஞ்சலை வெளியிட்டார். அத்துடன் தக்க சமயத்தில் அந்த ஆண் பதிவர் யார் என்று அம்பலப்படுத்துவேன் என்றார். இன்றுவரை பாலபாரதி அந்த ஆண் பதிவரை அம்பலப்படுத்தவில்லை. ஒருவேளை தக்க சமயம் இன்னும் வரவில்லை போல! ஆனால் பாலபாரதி அவர்களே அதை இனியும் வெளியிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண் வெறி விலங்குகள் இன்னும் ஆடுவார்கள் என்பதை மட்டும் இங்கே என்பதை நட்புடன் சுட்டிக் காட்டுகிறோம்.///
பாலபாரதி நேரம் வரும்போதுதான் வெளியிட முடியும் என்று வினவுவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இது உண்மையெனில் அப்போதே வெளியிட்டிருக்கலாம் பாலா. பாருங்கள்.. இப்போது நம் கையை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள் சிலர். இதற்கு நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்..? இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை. அந்த நபர் யார் என்பதையும், அதற்கான ஆதாரத்தையும் தைரியமாக, தாராளமாக வெளியிடுங்கள். இங்கே யாருக்கும் ஆட்சேபணையில்லை. ஆனால் இந்த அரசியல் ரவுடிகளிடம் மட்டும் கொடுத்து நம்மை கொண்டுபோய் அவர்களிடம் அடகு வைத்துவிட வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்..
[[[கலாய்த்தல் அல்லது ஒரு பதிவுக்கு நகைச்சுவையாக எதிர் பதிவு எழுதுவது என்பது பதிவுலகில் சகஜம். கண்ணுக்கு தெரிந்த உதாரணம் குசும்பன். நகைச்சுவை என்ற லேபிளின் கீழ், குசும்பன் எது செய்தாலும் பதிவர்கள் அனைவரும் மறுமொழியில் தங்கள் சந்தோஷத்தை தெரிவிப்பார்கள். உண்மையில் எந்தவொரு பிரச்னையையும் நீர்த்துப் போக செய்வதில் இதுமாதிரியான ‘குசும்பு’ பதிவுகளே முன்னிலை வகிக்கின்றன. அரசர்களின், ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் அவையில், அவர்களை மகிழ்விக்க கோமாளிகள் நியமிக்கப்படுவார்கள். மக்களின் பிரச்னைகள் அல்லது போராட்டங்கள் அரசரின் செவியை ‘எட்டாதபடி’ கண்ணும் கருத்துமாக கோமாளி செயல்படுவான். இதன் மூலம் அரசர் மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் காது திறந்திருப்பார் என்று பொருளல்ல. ஆனால் எப்போதும் அரசனை பிரச்சினைகளின்றி மகிழவைப்பதே கோமாளியின் வேலை. பதிவுலக அரசர்களை அப்படி மகிழ்விக்கும் திருத்தொண்டைத்தான் பதிவர் குசும்பன் என்ற அரசவைக் கோமாளி செய்து வருகிறார்.]]]
வாய்யா வா.. குசும்பன் என்பவன் எங்களது வலையுலகத்தில் அத்தனை பேருக்கும் பிடிக்கக் கூடிய செல்லப் பிள்ளை..! எந்தத் தளமாக இருந்தாலும் உரிமையுடன் உள்ளே செல்லும் உரிமையுள்ள தம்பி.. அவன் உங்களுக்கு அரசவைக் கோமாளி என்றால் நீரெல்லாம் கோமாளி என்ற லிஸ்ட்டில்கூட இருக்கத் தகுதியற்றவர்..
தினம்தோறும் வெளிவரும் அரசியல், அனுபவம், குடும்பம் பற்றிய புனைவுகளில் ஆழ்ந்து பெருமூச்சுவிட்டுத் தத்தளிக்கும் அத்தனை பதிவர்களையும் நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கின்ற மருத்துவர் வேலையைத்தான் என் தம்பி செய்து கொண்டிருக்கிறான்.. இவனையும் விட்டுவைக்காமல் திட்டித் தீர்க்கும் நீங்களெல்லாம் நிச்சயமாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவனையில் இருக்க வேண்டிய கேஸ்கள்..!
[[[இப்போது கூட நர்சிம் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் ‘பதிவுலகிற்கு நாட்டாமைகள் தேவை’ என்று ஒரு பதிவை குசும்பன் வெளியிட்டிருக்கிறார். அப்பட்டமாக ஒரு பாலியல் வன்முறை நடக்கும் போது கூட அதை கேலியாகப் பார்க்கும் நகைச்சுவை உணர்வு இந்த உலகில் குசும்பனுக்கு மட்டுமே உண்டு. நர்சிம்மையோ அல்லது அவரது ஆணாதிக்கவெறி ஆதரவாளர்களையோ பார்த்து மட்டுமல்ல உங்களைப் பார்த்தும் ஆத்திரம் வருகிறது குசும்பன். முடிந்தால் கொஞ்சம் வெட்கப்படுங்கள். உங்களது பதிவுலக சேவையின் பரிணாம வளர்ச்சி இப்போதுதான் பொருத்தமாக வந்திருக்கிறது.]]]
அந்தப் பதிவைப் போடச் சொன்னதே நாங்கள்தான்..! அவனாகப் போடவில்லை.. பிரச்சினை பெரிதாகி போய்க் கொண்டேயிருக்கிறது என்பதால்தான் அதிலிருந்து பதிவுலகம் கொஞ்சமாவது விடுதலையடைய. வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் போடச் சொன்னோம். அது சரி.. இது எங்களது வீட்டுப் பிரச்சினை.. உங்களுக்கென்னய்யா..? எதற்குத் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார்கள்..!?
[[[குசும்பன் செய்தால் அதை பாராட்டுவீர்கள், முல்லையும், மயிலும் செய்தால் கடித்து குதறுவீர்களா?]]]
இதனை முல்லையும், மயிலும் எங்களிடத்தில் கேட்டால் நாங்கள் பதில் சொல்லிக் கொள்கிறோம் மிஸ்டர் வினவு.. நீங்கள் கேட்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை..!? மயிலின் அந்தப் பதிவை பெரிதாக எடு்த்துக் கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை என்பதுதான் எங்களது வலையுலகத்தில் பெரும்பான்மையினரின் கருத்து. இதனை நாங்கள் பதிவும் செய்திருக்கிறோம்..!
[[[ஏன் வினவைக்கூட கிண்டலாகவும், வன்மத்துடனும் சிலர் பதிவாகவும், இங்கே பின்னூட்டமாகவும் எழுதுகிறார்கள். இதற்காக என்றைக்காவது நாங்கள் கோபப்பட்டிருக்கிறோமா? இவ்வளவிற்கும் நாங்கள் நர்சிமைப் போலவோ, அவரது ஆதரவாளர்களைப் போலவோ மரண மொக்கைகளை எழுதுவதில்லை.]]]
ஆமாமாம்.. நீங்கள் எழுதுவதுதான் தமிழ்.. நீங்கள் எழுதுவதுதான் எழுத்து.. நீங்கள் எழுதுவதுதான் கட்டுரை என்று தமிழன்னை போஸ்ட் கார்டில் சர்டிபிகேட் கொடுத்துவிட்டார் பாருங்கள்.. மரண மொக்கைகளை.. வலையுலகத்தின் அடிப்படை நோக்கமே தெரியாமல் இங்கு வந்து உளற வேண்டாம் வினவு..!
ஆனாலும் உங்களது பதிவிற்கு வந்து பின்னூட்டமிட்டாலும் நீங்கள் கொடுத்த மரியாதையைத்தான் நாங்கள் பார்த்தோமே.. நீங்கள் மட்டும் வர மாட்டீர்கள். ஆனால் உங்களுடைய அல்லக்கைகள், கைத்தடிகள் அர டிக்கெட்டு, கேள்விக்குறி என்று டிஸைன், டிஸைனாக பெயர்களை வைத்துக் கொண்ட முகமூடிகள் வந்து சக பதிவர்களை மனிதனாகக் கூட மதிக்காமல் அவருடைய குடும்பத்தினரையே பழித்தும், இழித்தும் பேசியதும், எழுதியதும் இன்றைக்கும் அப்படியே இருக்கிறதே.. இதனால்தானே நானே உங்களைப் புறக்கணித்தேன்..
[[[அதுவும் நாங்களெல்லாம் பதிவுலகில், ஊடகங்களில் மாபெரும் எழுத்தாளராக பவனி வரவேண்டும் என்ற பச்சையான சுயநலத்திற்காக எழுதவில்லை. அத்தனையும் மக்களுக்கான நோக்கில் எழுதுகிறோம். அப்படியெனில் எங்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்க வேண்டும்? வரவில்லை என்றால் அது நடைமுறையில் பதிவுலகில் ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்ற பொறுப்புதான் அப்படி வழிநடத்துகிறது. அற்பவாதியும், பொதுநலவாதியும் இப்படித்தான் வேறுபடுகிறார்கள்.]]]
ஆமாம்.. இதையும்தான் லீனாவின் விழாவிலேயே பார்த்தோமே..? நீங்கள் எப்பேர்ப்பட்ட பொதுநலவாதிகள் என்று..! ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களை மாதிரி நாட்டில் உள்ள அத்தனை பேரும் எங்களுக்குக் குடும்பம் தேவையில்லை. பொது வாழ்க்கைதான் தேவை என்று கிளம்பி வந்தால் பாவம் நீங்கள்.. உங்களுக்கு கை தட்டக்கூட ஒரு ஆள் இருக்க மாட்டான். அவரவர்க்கு அவரவர் பிரச்சினைகள்.. இதெல்லாம் உங்களுக்கு எப்படி புரியும்..? நீங்கள்தான் வானத்தில் இருந்து குதித்தவர்களாயிற்றே..1
[[[சந்தனமுல்லை மிக பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண். அதனால் நர்சிம் துணிந்து அவரை எழுத்தில் குதறியிருக்கிறார். யாரும் அவரை கேள்வி கேட்டமாட்டார்கள் என்ற நம்பிக்கை. நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களின் இந்த நம்பிக்கைதானே சமுதாய ‘இயல்பாக’ இருக்கிறது. அதனால்தானே பெண்ணாக இருந்தும் இன்னொரு பெண்ணை தரம் தாழ்த்தி நர்சிம் எழுதியதை இதே விதூஷ் ஆதரிக்கிறார்? சனிக்கிழமை மாலையே விதூஷ் ‘பொழுதுபோகலைனா…’ என இடுகை எழுத வேறென்ன காரணம் இருக்கமுடியும்?]]]
இது வலையுலகம்.. இங்கே நட்புக்குத்தான் முதலிடம். விஜிக்கு சந்தனமுல்லை எப்படியோ.. அப்படித்தான் நர்சிம் வட்டாரமும்.. இது இங்கே மிக இயல்பு. விஜி எழுதிய அந்தப் பகடி பேட்டியினால்தான் நர்சிம் அதை எழுதினார் என்பது எங்களது சக பதிவரான விதூஷ் என்பவரின் கருத்து. அந்தக் கருத்துக்கேற்ப அவருக்கு இந்தியத் திருநாட்டில் இருக்கின்ற கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அவருடைய சொந்தத் தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதுதான் வலையுலகம்.
நீங்கள்தான் வெளி ஆளாச்சே.. உங்களுக்கு எப்படி இது தெரியும்..? அந்தக் கட்டுரை பிடிக்கவில்லையெனில் நீங்கள் எதிர் கட்டுரை எழுதுங்கள். யார் உங்களை வேண்டாம் என்று தடுத்தது. இது எங்களது தளம். இடம். எங்களது கருத்துச் சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யார்..? ஓ.. கருத்து சுதந்திரம்ன்னாலே உங்களுக்குப் பிடிக்காதே.. உங்களுக்குப் பிடிக்காததை எவன் எழுதினாலும் அவன் உங்களுக்கு விரோதிதானே. அந்தக் கொள்கையை இங்கேயும் கொண்டு வருகிறீர்களோ..?
[[[நித்தியானந்தா பிரச்சினையில் சாருவை அம்பலப்படுத்தி வினவு எழுதிய கட்டுரையின் பின்னூட்டத்தில் ரியல் என்கவுண்டர் என்ற தோழர் சாரு அபிமானிகளாக லக்கிலுக், அதிஷா, நர்சிம், கேபிள் சங்கர் முதலானோர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்ட போது பதிவர் தண்டோரா துள்ளிக் குதித்தார். “எப்படி சக பதிவர்களை தாக்கி எழுதலாம்” என்று “வினவு என்னும் பிடுங்கிகள்” என்பதாய் பதிவு போட்டார். சகபதிவர்கள் ‘தாக்கப்படுவதை’க் கண்டு பொங்கியெழுந்த பதிவர்கள் பத்துப்பேர் தண்டோரா கட்டுரைக்கு ஓட்டு போட்டு ஜல்லியடித்தார்கள். பதிவர்களின் மீது இவ்வ்வளு பாசம் வைத்திருக்கும் இந்த வேடதாரிகள் இப்போது எங்கே போனார்கள்? அதுவும் எழுத்தால் ஒரு பெண்பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே?]]]
“ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையா?” என்கிற இந்த மக்கள் நலத் தொண்டர்களின் கருத்துக்கு பதிவர்களே நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..! நம்மையும் நாய் என்கிற நல்ல அடைமொழியோடு அழைக்கின்ற இந்த நபர் அல்லது கூட்டத்தினரின் சகவாசம் நமக்கு வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
வினவு கேட்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் சம்பவம் நடந்தது முதல் அத்தனை பேரிடமும் போனிலும், நேரிலுமாக பேசி பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்து வருவது இந்த வெளியாட்களுக்குத் தெரியவே தெரியாது..! இவர்களுக்கு இப்போது தேவை நம்மிடையே ஒரு இடைவெளி.. அந்த இடைவெளியில் அவர்கள் உள்ளே நுழைய வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம்.. திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.. இதுதான் இவர்களது நோக்கம்..!
[[[தமிழ்மணத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கின்றோம். இதுநாள் வரை இப்படி ஒரு கோரிக்கை வைக்கும்படியான சூழ்நிலை வருமென்று நாங்களே எதிர்பார்த்ததில்லை. பதிவுலகில் வலது, இடது,முற்போக்கு, பிற்போக்கு என்று எல்லாமும் இடம் பெறுவதுதான் ஜனநாயகம். அதை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான் எங்களைத் திட்டுவதையே அல்லது வினவை தடை செய்யவேண்டுமென்றும், கைது செய்ய வேண்டும் என்றும் கூப்பாடு போடும் ஜந்துக்களைக்கூட நாங்கள் தடை செய்யவேண்டுமென்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் நர்சிம் இழைத்திருப்பது கருத்து வேறுபாடு பற்றிய பிரச்சினை அல்ல. ஒரு அப்பட்டமான பாலியல் வன்முறை. அதற்கு அந்த எழுத்தே சான்று. இத்தகைய நபர்களை தமிழ்மணத்திலிருந்து அறிவிப்பு செய்து தூக்குவதே பெண் பதிவர்களுக்கு செய்யக்கூடிய உதவியாக, நம்பிக்கையாக, ஆதரவாக, நீதியாக இருக்கும். இதை மற்ற பதிவர்களும், வாசகர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கோருகிறோம்.]]]
தமிழ்மணத்திற்கு நானும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சக பதிவர்களை கேவலமாக தொடர்ச்சியாக எழுதியும்,. இதோ இந்தப் பதிவிலேயே 'நாய்' என்று திட்டியும், 'மரண மொக்கைகளை' எழுதி வருகிறார்கள் என்கிற பொய்க் கூப்பாட்டையும் போட்டு வலையுலகத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கின்ற இந்த வினவு போன்ற குள்ள நரி ஆட்களையும், அதன் கூட்டத்தினரையும், தயவு செய்து தமிழ்மணத்தில் இருந்து தூக்கிவிடுங்கள்.
ஏனெனில் தமிழ்மணம் வலைப்பதிவாளர்களுக்கானது.. அரசியல் வியாபாரிகளுக்கானது அல்ல.. இதுவரையிலும் தமிழ்மணத்திற்கு உற்றத்துணையாய் நின்றது வலைப்பதிவர்கள்தானே தவிர.. வினவு போன்ற சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கோழைகள் அல்ல என்பதை தமிழ்மணத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..!
[[[இனி பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு சில ஆலோசனைகள்:
1) ஏற்கனவே சொன்னது போல தமிழ்மணத்திற்கு மட்டுமல்ல தமிழிஷ் போன்ற திரட்டிகளிலிருந்து நர்சிம் மற்றும் ‘சாளரம்’ கார்க்கியை விலக்குவதை எல்லாரும் கோரலாம்.
2) இத்தகைய நபர்களை தனிமைப்படுத்தி ஒதுக்குவதன் மூலம்தான் அவர்களுக்குரிய பாடத்தை கற்பிக்க முடியும் என்பதால் சுரணையுள்ள ஒவ்வொரு பதிவரும் நர்சிமோடு நட்பிருந்தால் அதை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கலாம்.
3) நர்சிமின் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்களிடம் இந்த ஆணாதிக்க வெறியரின் இழிசெயலை நேரில் சென்று விளக்கலாம்.
4) நர்சிமின் வீட்டிற்கு சுரணையுள்ள பதிவர்கள் ஒன்று சேர்ந்து நீதி கேட்க போகலாம். அண்டை வீட்டாரிடம் இந்த செயலுக்கு நியாயம் கேட்கலாம்.
இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை. தனது இமேஜை தூக்கி நிறுத்த, தனது ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள நர்சீம் இப்போதே இந்த முயற்சியைத் துவக்கி விட்டார்.
ஆனால் நடந்திருப்பது ஒரு பாலியல் வன்முறை. தேவை நமது தண்டனை. ஆதரவு தாருங்கள்! இந்தப் போராட்டத்திற்கு தோள் கொடுங்கள்!!]]]
நர்சிம் எழுதிய பதிவு ஆணாதிக்கத்தின் எடுத்துக்காட்டு என்றால், இவர்கள் இப்படி எழுதுவது சர்வாதிகாரத்திற்கு எடுத்துக்காட்டு.. லீனாவின் விஷயத்திலும் இதையேதான் சொன்னார்கள் இந்தத் திருவாளர்கள்..!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியாவில் சூரியனுக்கு கீழே இருக்கின்ற அத்தனையும் பேசப்படும். எழுதப்படும். அதற்கான உரிமையை இந்திய அரசு நமக்குக் கொடுத்திருக்கிறது. இதில் யாருக்காவது பாதிப்பு எனில் அதனை நிவர்த்தி செய்யவும், பரிகாரத்திற்கும் போதுமான வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கிறது. அதுவே போதும்.
இவர்களைப் போல வீடு தேடிச் சென்று மிரட்டுவது, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி கலகத்தை உண்டு செய்வதும்தான் இவர்களது கம்யூனிஸ கொள்கை இவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்பதை லீனா பற்றிய பதிவிலேயே நான் எழுதியிருந்தேன். இப்போது அதனையை நம் மீதும் திருப்புகிறார்கள் தோழர்களே..!
உனக்குப் பிடிக்கவில்லையெனில் எது உனக்கு கருத்து வேறுபாடாகத் தெரிகிறதோ.. அதனைத் தீர்க்க ஜனநாயக ரீதியாக என்ன வழியோ அதை நீயே போய் தேடிக் கொள்.. வீணாக எங்களுடன் உள் நுழைந்து எங்களுக்குள் பிரிவினையை பிரவேசித்து கலகம் செய்ய வேண்டாம்.
இவர்களிடத்தில் ஆட்கள் இருக்கிறார்களாம். பத்து, பதினைந்து பேர் ஒரே நிமிடத்தில் கூடிவிடுவார்களாம்.. என்ன ஒரு வகை மிரட்டல் பாருங்கள்..!
லீனாவின் விஷயத்தில் இவர்களின் இந்த மிரட்டலை ஆக்ரோஷமாக எதிர்த்த நமது சக பதிவர் மாதவராஜ் இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.. இதென்ன தந்திரம்..? சக பதிவர்களுக்கு ஒன்று எனில் முன்னே ஓடி வர வேண்டாமா..? மாதவராஜ் அண்ணனை வன்மையாகக் கண்டிக்கிறேன்..
லீனாவின் விஷயத்தில் இவர்களின் இந்த மிரட்டலை ஆக்ரோஷமாக எதிர்த்த நமது சக பதிவர் மாதவராஜ் இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.. இதென்ன தந்திரம்..? சக பதிவர்களுக்கு ஒன்று எனில் முன்னே ஓடி வர வேண்டாமா..? மாதவராஜ் அண்ணனை வன்மையாகக் கண்டிக்கிறேன்..
இதேபோல் அண்ணன் தியாகு, இவர்களது வீடு தேடி போய் மிரட்டும் கலாச்சாரத்தைக் கண்டித்து பதிவுகளை நிறையவே எழுதினார். ஆனால் இன்றைக்கு ஆதரிக்கிறார்.. இவர்கள்தான் அரசியல்வாதிகள்.. இந்த வெளங்காத, சர்வாதிகார அரசியல் நமக்குத் தேவையில்லை.
இன்றைக்கு நர்சிமை குறி வைக்கிறார்கள். நாளைக்கு "லெனினை ஏண்டா திட்டுற? கார்ல்மார்க்ஸை ஏண்டா வையுற..? ஏண்டா கம்யூனிஸத்தை படம் போட்டு காண்பிக்கிற?” என்று பல வலைப்பதிவர்களின் வீடுகளுக்கும் இவர்கள் வரக்கூடும். இதன் முதல் படி இதுதான். புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே..!
படிப்படியாக நமக்குள் ஊடுறுவி இவர்களது வித்தையைக் காட்டலாம் என்கிற நினைப்பில்தான் நம்மிடையே இருக்கின்ற ஒற்றுமையின்மையை இவர்கள் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.!
நர்சிம், சந்தனமுல்லை, கார்க்கி, விஜி விஷயத்தை நாமே அவர்களிடத்தில் பேசித் தீர்த்து வைத்துக் கொள்ளலாம். எந்த வெளி நபர்களையும் பார்வைக்குக்கூட நாம் இதில் அனுமதிக்கக் கூடாது.. இந்த விஷயத்தில் சந்தனமுல்லையும், விஜியும் தயவு செய்து ஒத்துழைக்க வேண்டும்.
படிப்படியாக நமக்குள் ஊடுறுவி இவர்களது வித்தையைக் காட்டலாம் என்கிற நினைப்பில்தான் நம்மிடையே இருக்கின்ற ஒற்றுமையின்மையை இவர்கள் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.!
நர்சிம், சந்தனமுல்லை, கார்க்கி, விஜி விஷயத்தை நாமே அவர்களிடத்தில் பேசித் தீர்த்து வைத்துக் கொள்ளலாம். எந்த வெளி நபர்களையும் பார்வைக்குக்கூட நாம் இதில் அனுமதிக்கக் கூடாது.. இந்த விஷயத்தில் சந்தனமுல்லையும், விஜியும் தயவு செய்து ஒத்துழைக்க வேண்டும்.
இதுநாள்வரையில் அவர்களுக்கு உற்றத் துணையாய் இருந்து அவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்தது இந்த வலையுலகம்தான் என்பதை சந்தனமுல்லைக்கும், விஜிக்கும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஏதோ இன்றைக்கு எழுதுவதற்கு வாய்ப்புத் தருகிறார்களே என்பதற்காகவும், எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையிலும் தப்பித் தவறிகூட வெளியாட்களுக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.!
இத்தனை நாட்களாக சந்தனமுல்லை என்ன ஜாதி என்றுகூட தெரியாத அளவுக்கு நாமெல்லாம் அவருக்கு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியிருக்கிறோம். ஆனால் அதையே இன்றைக்கு தலைகீழாகத் திருப்பிப் போட்டு ஜாதியை வெளிப்படுத்தி வினவு தோழர்கள் செய்வது வலையுலகத்தின் அடிப்படை நோக்கத்தையே கேவலப்படுத்துகிறது. பிரிவினையை ஏற்படுத்துகிறது..!
சந்தனமுல்லை தனக்குத் தீர்வாக என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதனை நர்சிமுக்கும், அவருக்கும் பொதுவான ஒரு சக வலைப்பதிவரிடம் பேசி அவர் மூலமாக பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி அன்போடு அழைக்கிறேன்.
வலையுலகம் தழைக்க வேண்டுமெனில் இதனை நீங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். நர்சிம் தனது தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டு பதிவையும் நீக்கிவிட்டார். மென்மேலும் இந்தப் பிரச்சினையை வலுக்கச் செய்யாமல் பொதுநலன் கருதி ஒரு நல்ல முடிவை நமக்குள்ளேயே எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அத்தனை பதிவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..
எக்காரணம் கொண்டும் நமக்கு வெளியாட்களின் அறிவுரையும், ஆலோசனையும், அரசியல் தளங்களின் கவனிப்பும் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன்.
புரிந்து கொள்ளுங்கள்..
நன்றி..!
|
|
Tweet |
