யா யா - சினிமா விமர்சனம்

21-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை.. சிவாவுக்கு வந்த சோதனை இது..! வரிசையா காமெடி ஜெயிக்குதேன்னு நினைச்சு காமெடி இயக்குநரிடம் பாடம் பயின்றவருக்கு கால்ஷீட்டை கொடுத்து அது இத்தனை மொக்கையாகும்ன்னு நினைச்சுக்கூட பார்த்திருக்க மாட்டாரு..!

எந்த வகையான படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அது இயக்குநரின் திறமையைத்தான் வெளிப்படுத்தும்..! இந்தப் படத்தின் தோல்வி அதனை உறுதிப்படுத்துகிறது..! காமெடிசென்ஸ் அனைவருக்கும் வந்துவிடாது.. காமெடி இயக்கமும் அத்தனை சீக்கிரம் கிடைத்தும்விடாது.. கிடைத்தவர்கள் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார்கள்.. இந்த இயக்குநர் ஐ.ராஜசேகரன் இன்னமும் மெனக்கெட்டால்தான் அடுத்த வெற்றியைத் தொட முடியும் என்பதை இந்தப் படம் சொல்கிறது..!

சிவா, சந்தானம் இருவரும் இருக்கும்போது திரையில் அதகளம் செய்து தீபாவளியை கொண்டாடியிருக்க வேண்டாமா..? அமுங்கிப் போன புஸ்வானமாகிப் போய்விட்டது..! சிரிப்பு வருது.. சிரிப்பு வருதுன்னு மிக முயற்சி செய்தும் படத்தில் 3 இடங்களில் மட்டுமே நம் பல்லைக் காட்ட முடிந்தது.. அந்த அளவுக்கு ‘நகைச்சுவை’ படம் முழுவதும் இருக்கிறது..!


இயற்பெயர் ராமராஜனாம்.. அம்மா ரேகா, ராமராஜனின் தீவிர ரசிகை என்பதால் மகன் சிவாவுக்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார். கவர்ன்மெண்ட் வேலைக்குத்தான் போவேன் என்று ஒத்தைக் காலில் நிற்கிறார் சிவா. இப்போதைக்கு வெட்டி ஆபீஸர். இவரது அப்பா கட்சிக்காரர். ஆனால் ஆளும் கட்சியா... எதிர்க்கட்சியா என்று தெரியவில்லை..! ஒரு தங்கச்சி.. எப்படியாவது தினத்துக்கு பணத்தை வாங்கிவிட்டு வாழ்க்கையை ஓட்டும் அக்மார்க் தமிழ் ஹீரோ..! இவரது அத்தைப் பொண்ணு சந்தியா.. போலீஸ் கான்ஸ்டபிள்.. தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வார் சிவா என்று காத்திருக்கிறார் சந்தியா..

ராஜ்கிரண் என்ற இயற்பெயர் கொண்ட சேவாக் கேரக்டரில் சந்தானம்.. இன்னொரு பேட்டையின் வெட்டி ஆபீஸர்.. இவரது அப்பா ராஜ்கிரணின் தீவிர ரசிகர்.. அதுனால் இவருக்கு இந்தப் பேரு.. ரெண்டு பேரும் ஒரு மோதலில் துவங்கி நட்பாகி இணைப்பாகுகிறார்கள்..!

ஒரு பேருந்தில் தன்ஷிகாவை பார்க்கும் சிவா.. பார்த்தவுடன் காதல் கொள்ளும் தமிழ்ச் சினிமாவின் பார்முலாவை பின்பற்றுகிறார்..  தன்ஷிகாவின் ஹேண்ட்பேக்கில் தன் செல்போனை போட்டுவிட்டு பின்பு அது தனது போன் என்று சொல்லி கடலையை ஆரம்பிக்கிறார். அது வறுத்து காதலாகும் என்று அவரது நினைப்பு.. இடையில் புகும் ஒரு ஆளும் கட்சி கவுன்சிலர் இரு மடங்கு வயதாக இருந்தும் தன்ஷிகாவின் நினைப்பில் தன்னைக் கட்டிப் பிடித்ததால் ஷாக்குண்டு சிவா மீது காதல் கொள்கிறார். தேவதர்ஷிணி.. (வெளங்கிரும்..)

சந்தியாவும், தன்ஷிகாவும் நண்பிகள் என்பது சிவாவுக்குத் தெரியாமல் போக.. சந்தியாவின் ஏற்பாட்டில் செல்போன் ஓனரை தேடுவதாக சிவாவிடம் சொல்கிறார் தன்ஷிகா. தான் என்று சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்பதால் இன்னொரு வெட்டி ஆபீஸர் பவர் ஸ்டாரை அறிமுகப்படுத்தி வைக்கிறார் சிவா. பார்த்தமாத்திரத்தில் பவர் ஸ்டாரை காதலிப்பதாகச் சொல்லி சிவாவின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு போகிறார் தன்ஷிகா.. சிவா ஏமாற்றமாக.. பவர் ஸ்டார் துள்ளிக் குதிக்கிறார். ஆனால் அதற்கும் அடுத்த காட்சியிலேயே ஆப்பு விழுக.. கையில் பாய், தலைகாணியோடு அரங்கராஜன் பாலத்தின் அருகே படுக்க இடம் தேடி அலைகிறார் பவர் ஸ்டார்.. (உண்மையாவே ஒரு நாளைக்கு இந்தாளுக்கு இந்தக் கதிதான் நடக்கப் போவுது..!)

சந்தானத்தைக் கடத்திச் சென்று ஒரு புல் பாட்டில்.. சில ஆயிரங்களைக் கொடுத்து.. தனக்கும் சிவாவுக்குமான காதலை வாழ வைக்கச் சொல்கிறார் தேவதர்ஷிணி.. புல் கொடுத்த மயக்கத்தில் புல்லாகவே இதற்கு ஒத்துழைக்கிறார் சந்தானம். இவரது லீலையினால் அப்போதுதான் ஆரம்பித்த தன்ஷிகாவின் காதல் புட்டுக் கொள்ள.. இடைவேளை.. இதுக்கப்புறமும் பொறுமையா உக்காந்து பார்த்திருக்கேன்னா இந்தப் பதிவை படிக்கிறவங்க அவசியம் 5 கமெண்ட்டாவது போட்டு என்னைப் பாராட்டணும்..!
கடைசீல என்னாச்சுன்றதுதான் கதை..!

உஷ்.. அப்பாடா.. இப்ப வருது.. அப்ப வருதுன்னு காத்திருந்து காத்திருந்து.. தேவதர்ஷிணி-சந்தானம் பேசும்போது மட்டும்தான்யா சிரிப்பே வந்துச்சு.. அதுவும் ஒரு மணி நேரம் கழிச்சு.. முடியலை.. மொக்கையான திரைக்கதைகள்.. செயற்கையான நடிப்பு.. சந்தானத்தின் வழக்கமான 2 வரி கமெண்ட்டுகள் என்று போய்க் கொண்டேயிருப்பதால் கதைதான் என்ன என்று கடைசிவரையிலும் குழப்பம்தான் வருது..!

சந்தியா கல்யாணத்துக்கு இப்படியொரு பில்டப்பு தேவையா..? அங்கேயும் ஒரு சின்ன டிவிஸ்டு வைச்சு கிளைமாக்ஸுக்கு இழுத்திட்டுப் போயிருக்காங்க.. கிளைமாக்ஸ்லேயும் ஒரு மொக்கை டிவிஸ்ட்டு.. அதான் எல்லாருக்கும் தெரியப் போகுதே..? அப்புறமென்ன..? இதுகூட தெரியாமயே தமிழ்ச் சினிமா ரசிகர்கள் இருக்காங்க. இயக்குநருக்கு நம் மீது ரொம்பத்தான் பாசம்..!


இடைவேளைக்கு பின்பே 10 நிமிஷ இடைவெளியில் வரும் 2 பாடல்களும் சேர்ந்தே சோதனையைக் கொடுக்க தாங்க முடியாமல் இருக்கிறது..! ஒரு கண்ணாடியை பாடலும், யார்கிட்ட பாடலும்தான் ஓகே..! ஆனாலும் சிவா தன் நடிப்பையும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்தால் நன்றாக இருக்கும்.. எதற்கெடுத்தாலும் தலையைக் குனிந்து கொள்வது.. தலையைச் சொரிவதும்.. அப்பாவியாய் பேசுவதுமாக எதுவுமே இந்தப் படத்துக்கு செட்டாகவில்லை..! 

சந்தியாவை குளோஸப்பில் பார்க்கவே முடியலை.. ஹீரோயின் வேற..? ம்ஹூம்.. தன்ஷிகா இட்ஸ் ஓகே.. பட் ஹீரோயினுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள்லாம் இல்லாம பர்பி பொம்மை மாதிரி காட்டித் தாளிச்சிருக்காங்க.. ஒரு கண்ணாடியை பாடல் காட்சியில் மட்டுமே ரசிக்க முடிகிறது.. காஸ்ட்யூமர் யாருன்னு விசாரிச்சு நாலு சாத்து சாத்தணும்.. பொண்ணுக்கேத்த டிரஸ்ஸை கொடுக்கக் கூடாதா..?

பவர் ஸ்டாரு.. பல படங்களில் டாப் சீன்ஸ்ல நடிச்சுக் காமிக்கிறாரு.. அடுத்தடுத்து படங்கள் கிடைக்குமான்னு தெரியலை.. இந்த அளவுக்கு பில்டப்பை கொடுத்து கொடுத்தேதான் இவரைக் கெடுத்தாங்க.. இத்தோட இவரை தலைமுழுகிட்டா தமிழ்ச் சினிமாவுக்கு நல்லதுதான்..!

தேவதர்ஷிணிக்கு பொருத்தமேயில்லாத வேடம்.. என்னமோ ரெண்டு எத்துப் பல்லை சொருகிகிட்டு கஷ்டப்பட்டு டயலாக் பேசி நடிச்சிருக்காங்க.. இவங்க கூட இருக்குற 3 அல்லக்கைகள்.. இவங்க ஆளும் கட்சி கவுன்சிலர்ன்னு சொல்ல ஒரு சின்ன வாய்ப்புகூட இல்லை.. அம்புட்டு காமெடி கேரக்டர் ஸ்கெட்ச்..! 

இயக்குநர் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு காமெடி இயக்கத்தைக் கத்துக்கிட்டு அடுத்த படம் செஞ்சா அந்தத் தயாரிப்பாளராவது பொழைச்சுக்குவாரு.. இதுக்கு மேலேயும் படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறவங்க போய்க்கலாம்..! 

நன்றி.. 

வணக்கம்..!

17 comments:

கலியபெருமாள் புதுச்சேரி said...

இருபது ரூபாய் சிடி செலவு மிச்சம் பண்ணதுக்கு நன்றி நண்பா...

கார்த்திக் சரவணன் said...

அண்ணே கொஞ்சம் முன்னாடி எழுதியிருக்கக் கூடாதா? நான் இப்போ தியேட்டருக்கு வந்திட்டேனே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Nondavan said...

//இதுக்கப்புறமும் பொறுமையா உக்காந்து பார்த்திருக்கேன்னா இந்தப் பதிவை படிக்கிறவங்க அவசியம் 5 கமெண்ட்டாவது போட்டு என்னைப் பாராட்டணும்..!//

பல நல்ல உள்ளங்களை காத்த அண்ணாச்சு வாழ்க..வாழ்க வாழ்க...!!



Nondavan said...

பல பேருடைய பாக்கெட்டை காப்பாற்றியே சீமானே... நீர் மென்மேலும் வாழ்க

Nondavan said...

காமெடி டைரக்‌ஷன் பண்றதும் கஷ்டம் என்று இப்போதான் புரியுது.. எளிதா சொல்லிடுறோம்... என்று

Nondavan said...

எங்கிருந்து திடீர்ன்னு சந்தியாவ பிடிச்சாங்க.. வேற ஆளே கிடைக்கலையா...???

Nondavan said...

உங்க நக்கல் செமயா இருந்துச்சு.. (உங்களுக்கு நொந்த அனுபவம்).. ஆக்சுவலா நீங்க தான் நொந்தவன் :) :) :) இந்த படத்தையும் பார்த்தனால்

Nondavan said...

நீங்க சொன்ன மாதிரி, உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து 5 கமெண்ட் போட்டுள்ளேன்.. ஒரே ஆள் நான் தானுங்க, இப்ப வரைக்கும் :) :) :)

Gujaal said...

//“இப்ப எங்க போறீங்க..?” என்றேன்.. "புலவர் இராமனுசம் ஐயாவை பார்க்கப் போறேன்.." என்றார் மதுமதி. “அவர் வீடு எங்கேயிருக்கு..?” என்று கேட்ட பின்பு, “நானும் அவரை பார்க்க வர்றனே..?” என்று கூறி அவருடனேயே கிளம்பினேன்..!

அடுத்தப் பதிவு ஐயா புலவர் இராமனுசம் அவர்களுடனான சந்திப்பு பற்றியது..
//

மறந்திட்டீங்களோ?

குரங்குபெடல் said...

"தன்ஷிகா இட்ஸ் ஓகே.. பட் ஹீரோயினுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள்லாம் இல்லாம பர்பி பொம்மை மாதிரி காட்டித் தாளிச்சிருக்காங்க.. ஒரு கண்ணாடியை பாடல் காட்சியில் மட்டுமே ரசிக்க முடிகிறது.. காஸ்ட்யூமர் யாருன்னு விசாரிச்சு நாலு சாத்து சாத்தணும்.. பொண்ணுக்கேத்த டிரஸ்ஸை கொடுக்கக் கூடாதா..?"


அண்ணே . . விமர்சனம்ன்ற
பேர்ல நீ பண்ற கொடுமை
தாங்கலை அண்ணே . .

Unknown said...

Romba risk eduthu thAn padam parthuirukinga. Ancha nenjan U.T annen vazhga

உண்மைத்தமிழன் said...

[[[கலியபெருமாள் புதுச்சேரி said...

இருபது ரூபாய் சிடி செலவு மிச்சம் பண்ணதுக்கு நன்றி நண்பா...]]]

பாண்டிச்சேரில 20 ரூபாய்க்கு சிடியா..? சென்னைல 50 ரூபா.. ம்.. கொடுத்து வைச்சவங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்கூல் பையன் said...

அண்ணே கொஞ்சம் முன்னாடி எழுதியிருக்கக் கூடாதா? நான் இப்போ தியேட்டருக்கு வந்திட்டேனே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....]]]

பரவாயில்லை.. பார்த்துத் தொலைச்சிட்டீங்களா..? எப்படி இருந்ததுன்னு வந்து சொல்லிட்டுப் போங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//இதுக்கப்புறமும் பொறுமையா உக்காந்து பார்த்திருக்கேன்னா இந்தப் பதிவை படிக்கிறவங்க அவசியம் 5 கமெண்ட்டாவது போட்டு என்னைப் பாராட்டணும்..!//

பல நல்ல உள்ளங்களை காத்த அண்ணாச்சு வாழ்க.. வாழ்க வாழ்க...!!]]]

பின்னூட்டப் புயல் நொந்தவன் ஸாருக்கு எனது நன்றிகள்..! வாழ்க.. வாழ்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

பல பேருடைய பாக்கெட்டை காப்பாற்றியே சீமானே... நீர் மென்மேலும் வாழ்க..]]]

இதையெல்லாம் சேர்த்து வைச்சு எனனை நேர்ல பார்க்கும்போது கொடுத்திருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

காமெடி டைரக்‌ஷன் பண்றதும் கஷ்டம் என்று இப்போதான் புரியுது.. எளிதா சொல்லிடுறோம்... என்று]]]

உண்மைதான்.. காமெடியில் இயக்கம் செய்வது எல்லாருக்கும் வந்துவிடாது.. ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பாக்கியம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

எங்கிருந்து திடீர்ன்னு சந்தியாவ பிடிச்சாங்க.. வேற ஆளே கிடைக்கலையா...???]]]

கேரளால இருந்துதான்..! கர்ச்சீப்புல சம்பளத்தை முடிஞ்சு கொடுத்திரலாம்ன்னு கூப்பிட்டிருக்காங்க..!