நான் - சினிமா விமர்சனம்

16-08-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எதிர்பாராமல் திகைக்க வைத்த படம்..! சிறந்த திரைக்கதை.. சிறந்த இயக்கம்.. என அனைத்தையும் தனக்குள்ளே வைத்திருக்கும் சாமான்யமான படம் இது. 

தான் 24 திரைப்படங்களுக்கு இசையமைத்து சம்பாதித்த பணத்தை, இந்த ஒரே படத்தில் முதலீடு செய்த துணிச்சல்கார ஹீரோவான விஜய் ஆண்ட்டனியை நெஞ்சார வாழ்த்துகிறேன்.. அவருடைய தைரியத்துக்கு எனது சல்யூட்..! சிறந்த கதையையும், சிறந்த இயக்குநரையும் தேடிப் பிடித்திருக்கிறார் விஜய்.. அவரளவுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும், திறமையாகவும் திரையில் கனமாகக் காட்சி தந்திருக்கிறார். 

ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் துவங்கும் படம், இறுதியில் மருத்துவக் கல்லூரியில் தனது உயிரை விடுகிறது.. இந்தப் படத்தை இன்னொரு கோணத்திலும், நீங்கள் பார்க்கலாம். அது மனிதனை ஆட்டி வைப்பது விதியா? அல்லது மதியா என்று.. இது அனைத்துக்கும் வரிசைக்கிரமமாக பதில் சொல்கிறது இப்படம்..! 

நன்கு படிக்கும் மாணவனாக இருந்தும் நண்பர்களுக்கு உதவி செய்ய மார்க் ஷீட்டில் கையெழுத்தை போர்ஜரியாக போடப் போய் தலைமை ஆசிரியரால் கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்.. அவமானத்தோடு வீடு திரும்பும் சிறுவன் கார்த்திக், பட்டப் பகலில் தனது தாய் வேறொருவரோடு படுக்கையில் இருப்பதைக் கண்டு வெம்புகிறான். 

தாயின் வேண்டுகோளை ஏற்காமல் தந்தையிடம் இது பற்றிக் கூற தந்தை மனமுடைந்து தூக்கில் தொங்குகிறார்.. இப்போது கேள்வி கேட்பாரே இல்லையே என்ற நிலையில் புதிய அப்பா இரவிலேயே வீட்டிற்கு வர.. கோபமடைந்த கார்த்திக், தன் அம்மாவையும், புதிய அப்பாவையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு தீ வைத்து அவர்களைக் கொல்கிறார்..! 

இதுவரையில் நடந்தவைகள் அனைத்தும் விதியின் விளையாட்டு.. அந்தச் சிறுவனுக்கு எது உண்மை..? எது பொய்..? எது நிஜம்..? எது மாயை என்பது தெரியாத வயது.. அம்மா அப்பாவிடம் தைரியமாகச் சொல்கிறாள்.. “ஆமா.. அப்படித்தான்.. அவன்தான் வந்தான்.. நீ வேஸ்ட்டு.. உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ..” என்கிறாள். இதை புரிந்து கொள்ளும் வயது அவனுக்கில்லை.. விதிவிட்ட வலியை ஏற்றுக் கொள்கிறான். 

சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி அவனை அரவணைக்கிறது.. அனைத்தையும் அங்கே கற்றுக் கொள்கிறான்.. 21 வயது முடியும்வரையிலான அவனது தண்டனைக் காலம் முடிந்து இந்த போலி, பொல்லா உலகத்திற்குள் கால் வைக்கிறான்.. இதுவரையிலும் ஓரமாய் அமைதியாய் இருந்த விதி தனது விளையாட்டை அவனது வாழ்க்கையில் மீண்டும் துவக்குகிறது..!  

சொந்த சித்தப்பா வீட்டிற்கு வந்த அவனுக்கு, "அவன் துணைக்கு ஏன் நீயும் வெளில போயேன்.." என்று சித்தப்பாவுக்கு சித்தியிடமிருந்து கிடைத்த மரியாதையைக் கண்டு, சொல்லாமல் கொள்ளாமல் தேநீரைக்கூட குடிக்காமல் வெளியேறுகிறான். விதியின் துவக்கம் இது..! 

விதியின் பின்தொடரல் தெரியாமலேயே இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பும் பஸ்ஸில் ஏறி அமர்கிறான் கார்த்திக். அருகில் ஒரு முஸ்லீம் இளைஞன். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க சென்னைக்கு செல்கிறான்.. ஓரமாய் அமர்ந்திருந்த கார்த்திக்கை அந்த சீட்டுதான் வேணுமா என்று கேட்க வைக்கிறது விதி.. அது புரியாமல் டீஸன்சியை காட்ட விரும்பி நகர்ந்து இடம் தருகிறான் கார்த்திக். நடுவழியில் ஆர்ப்பரிக்கிறது விதி.. 

பஸ் விபத்துக்குள்ளாகி கார்த்திக்கின் அருகில் இருந்த முஸ்லீம் நண்பன் ஸ்தலத்திலேயே மரணிக்கிறான்.  விதி கோடு போட்டுக் கொடுத்தால், அவனவன் மதி தானே ரோடு போட்டுக் கொள்ளும். இப்படித்தான் துவங்குகிறது விதி-மதி விளையாட்டு..  

இப்போது கார்த்திக் மதியின் சகுனி விளையாட்டு துவக்கம். இறந்து போன இளைஞன் கொண்டு வந்த சூட்கேஸ்களை நொடியில் தூக்கிக் கொண்டு தனது அம்மா, அப்பாவுடன் இருந்த போட்டோவை தனது பையில் இருந்து எடுத்துக் கொண்டும் வழியும் ரத்தத்த்தோடு தானே சாலைக்கு ஓடி தப்பிக்கிறான் கார்த்திக். 

சென்னையில் மேன்ஷனில் ஒரு அறையை அவசரமாக வாடகைக்கு எடுத்து பரபரப்பாக சூட்கேஸை துழாவ முகமது சலீம் என்ற அந்த இளைஞனின் எம்.பி.பி.எஸ். ஆர்வம் கார்த்திக்கிற்கு புரிகிறது. கூடுதலாக அவன் எதிர்பார்த்த பணமும் கிடைக்கிறது. 

குளித்துவிட்டு வருவதற்குள் அதே அறையில் தங்கியிருந்த இன்னொரு முஸ்லீம் நண்பர் அந்த பைலை கையில் வைத்துக் கொண்டு விதி, நாக்கில் வகுத்துக் கொடுத்த வார்த்தைகளை வீசுகிறார். “நல்ல மார்க் சலீம். டாக்டராகப் போறீங்க.” - விதி எடுத்துக் கொடுக்க கார்த்திக்கின் மதி பரபரப்பாகிறது..! 

உடனுக்குடன் மேன்ஷன் மாற்றம்.. அந்த சலீமின் இடத்துக்கு தான் போக விரும்பி அனைத்தையும் ஒரு பாடலுக்குள்ளேயே செய்து முடிக்கிறான் கார்த்திக். மகாபலிபுர கடற்கரையில் ராட்டினத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கையில் காசைத் திணித்து தனது அப்பாவாக ஒரு நாள் நடிக்க அழைத்துப் போய் கடைசியில் கல்லூரியில் தனக்கான சீட்டையும் பெற்று விடுகிறான்.. மதி கரவொலி எழுப்பி சிரிக்க விதி மெளனமாக காய் நகர்த்துகிறது.. இப்போது அதன் கையில் ஆட்டம்.. 

அசோக் என்ற ஸ்டூடண்டுடன் கை கோர்க்கிறது விதி. ஒரு சந்தர்ப்பத்தில் அசோக்கை கார்த்திக் என்ற சலீமுடன் கோர்த்துவிடுகிறது.. இப்போது மதி விழித்துக் கொண்டு கிடைத்த புளியங்கொம்பை கைவிடக் கூடாது என்பதற்காக அதன் வசதிகளை அனுபவிக்க முடிவெடுக்கிறது..! 

மேன்ஷனுக்கு வாடகை கொடுக்க காசில்லாமல், காபி டேயில் பகுதி நேர வேலை பார்த்தும் சமாளிக்க முடியாது.. இனிமேல் அசோக்கின் பங்களா வீட்டிலேயே தங்கி இருக்கிறவரைக்கும் இருப்போம் என்று மதி சொல்ல அபாரமாக ஒத்துழைக்கிறார் சலீம்.. 

அசோக்கின் சகா இரவில் வாந்தி எடுத்த்தை சுத்தம் செய்து வைத்து, முந்தின இரவில் கூத்தாடிகளின் கொண்டாட்டத்தில் பப் போன்று இருந்த வீட்டை சுத்தமாக்கி வைத்து அசோக்கிடம் நெருங்குகிறான் சலீம். ஆனாலும் விதி சலீமுக்கு இங்கேயும் ஒரு செக்கை வைத்திருக்கிறது சுரேஷ் என்ற நண்பனின் மூலமாக.. பார்த்தவுடன் பிடிக்காதவர்கள் பட்டியில் சலீமை சேர்த்து வைத்திருக்கிறான் சுரேஷ். 

விதியின் விளையாட்டு கொஞ்சம் இடைவேளைவிட்டு தான் ஆட்டுவிக்கப் போகும் கதாபாத்திரங்களின் தன்மை முழுவதையும் நமக்குச் சொல்லிவிட்டு மீண்டும் தனது ஆட்டத்தைத் துவக்குகிறது..! இப்போது அடுத்தக் கட்டம் வீட்டிற்கு வெளியே சலீமை துரத்துகிறது. 

சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் தலைமைக் காப்பாளர், சலீமை கார்த்திக்காக நினைத்து பேச இதனை அசோக்கும் கேட்க வேண்டியதாகிறது.. சலீம் தனது மதியினால் முடிந்த அளவுக்கு சமாளித்து வைக்கிறான்.. 

பாண்டிச்சேரிக்கு குட்டிகளுடன் அசோக்கையும் தள்ளிக் கொண்டு போக நினைக்கிறது விதி.. சுரேஷின் பாராமுகத்தை உணர்ந்து தான் வரவில்லை என்று சொல்ல வைக்கிறது சலீமின் மதி. அசோக்கின் காதலி ரூபா வீடு தேடி வந்து அசோக் பற்றிக் கேட்டதை மறைக்கச் சொல்கிறது விதி. மறைத்ததை வெளியிலும் சொல்ல வைக்கிறது.. ஆனால் மதியோ சலீமின் கன்னத்தில் விழுந்த அறையைக்கூட தாங்கிக் கொள்ளச் சொல்கிறது.  

சலீமை அசோக்கின் வீட்டில் இருந்து துரத்தச் சொல்கிறது விதி. சலீம் செல்லலாம் என்று முடிவெடுத்த நேரத்தில் அவனது பாதுகாப்பு உணர்வை அசோக்கிடம் காட்டிக் கொடுக்கிறது விதி. சலீம் குளிக்கப் போன நேரத்தில் அவனது அறைக்குள் நுழைந்து தாய், தந்தையுடனும் விபூதி பூசிய நிலையில்  இருக்கும் புகைப்படத்தைக் காண வைக்கிறது விதி.. அடுத்தது அராஜகம்தான்.. 

சாதாரண மனிதனால் அவதூறைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அவமானத்தை தாங்க முடியாதுதான்.. விதி எப்படியெல்லாம் கோரமாக விளையாடுகிறது? தனது சிப்பாய்களையெல்லாம் இழந்துவிட்டுத் தவிக்கிறான் சலீம். கை கலப்பில் அசோக்கை பரமபதம் சென்றடைய வைக்கிறது விதி..  

ஏற்கெனவே இருந்த சிறைக் காலம் போதாதா..? மீண்டும் சிறைக்கா..? இப்போது அசுர வேகத்தில் யோசிக்கிறது சலீமின் மதி.. அசோக்கை பார்சல் கட்டி கொண்டு போய் ஓரிடத்தில் புதைத்துவிட்டு வந்து ஆற, அமர யோசித்து விதிக்கு எதிரான தனது ஆட்டத்தை அசுர வேகத்தில் துவக்குகிறான் சலீம்..! 

சலீம் உயிருடன் இருப்பது போல் அவனது அப்பாவிடம் போனில் பேசுகிறான் சலீம். அவரும் நம்புகிறார். அசோக்கை அவரது நண்பர் ஒருவரை உடனே போய் பார்க்கச் சொல்லும்படி சொல்கிறார். ரூபாவை வீட்டு வாசலுக்கே அழைத்து வருகிறது விதி. கன நொடியில் விதியை புரிந்து கொண்டு பெப்பே காட்டுகிறது சலீமின் மதி. 

மாடி பெட்ரூமில் அசோக் இருப்பதாகக் காட்டி தானே வீட்டைச் சுற்றி மாடிக்குப் போய் கதவுக்கு அந்தப் புறமாக இருந்து கொண்டு அசோக் போல் வாய்ஸ் மாடுலேஷன் பேசி ரூபாவை நம்ப வைத்து அனுப்பி வைக்கிறான்..! அசோக் அப்பாவின் நண்பரை தான்தான் அசோக் என்று பொய் சொல்லிச் சந்திக்கப் போகுமிடத்தில் விதியின் விளையாட்டு மீண்டும் ரூபாவை அங்கே அழைத்து வருகிறது. அதைவிட சுவாரஸ்யம்.. ரூபாவும், அந்த நண்பரின் மகள் ப்ரியாவும் நண்பர்கள்.. அசோக்கிற்காக அவர்கள் காத்திருக்க.. தப்பிக்க நினைத்து தனது சாகசங்கள் அனைத்தையும் செய்கிறது மதி. இப்போதும் தப்பிக்கிறான் சலீம்.. இனி விதியை நாம் முந்திக் கொள்வோம் என்று நினைத்து ஆட்டத்தை கலைத்துப் போடுகிறது சலீமின் மதி. 

இரவு விடுதிக்கு சுரேஷையும், ரூபாவையும் வரவழைத்து.. அதே இடத்திற்கு ரூபாவின் நண்பி ப்ரியாவையும் வரவழைத்து ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கிறான் சலீம். சுரேஷை வெறுப்பேற்றுவது.. இனி அசோக்கின் மனதில் ரூபாவுக்கு இடமில்லை. புதிதாக வந்த ப்ரியாவுக்கு அந்த இடம் என்பதைச் சொல்லி அவளை அப்புறப்படுத்துவது.. ப்ரியாவை தனக்காக தயார் செய்வது என மூன்றையும் கில்லியாய் அடிக்கிறான் சலீம்.. 

ஆனால் மறுநாளே ப்ரியாவை வீட்டிற்கு அழைக்கிறது விதி.. அவளுடன் டின்னர் சாப்பிடலாம் என்று நினைத்து வெளியேற நினைத்த அசோக்கை சுரேஷையும் அழைத்து வந்து கோர்த்துவிடுகிறது விதி.. தானா வந்து மாட்டுறானே என்ற விதியின் கோரம் மதியை குணமிழக்கச் செய்ய கொஞ்சம், கொஞ்சமாக விதியின் வசமாகிறான் சலீம். ப்ரியாவை வெளியேறச் சொல்லிவிட்டு சுரேஷையும் போட்டுத் தள்ளி விடுகிறான்.. 

இப்போது சலீம் மீண்டும் மதியின் வசம்.. தான் தப்பிக்க வேண்டும். அதே சமயம் அசோக்கை தேட வேண்டும்.. என்ன செய்யலாம்..? வேண்டுமென்றே அரைகுறையாக அசோக்கை புதைத்துவைத்துவிட்டு வந்துவிடுகிறான்.. விதி வழக்கமான பாணியில் போலீஸை வீட்டுக்கு இழுத்து வருகிறது..! 

மதியின் துணையால் தனது சுவாரஸ்யமான திரைக்கதை அவிழ்த்து விடுகிறான் சலீம். அசோக்கிற்கும், சுரேஷிற்கும் இடையில் ஏற்கெனவே மனத்தாங்கல். இதற்கு ரூபாவே சாட்சி என்று ரூபா பக்கம் கேஸை தள்ளிவிடுகிறான். அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் ஒரு பல்டியடித்து ப்ரியாவையும் கோர்த்துவிடுகிறான். ப்ரியா வரும்போது விதி விளையாடி, சலீமை, அசோக் என்று காட்டிக் கொடுத்துவிடுமோ என்று நினைக்க.. விதி இங்கேதான் சோம்பேறித்தனப்பட்டுவிட்டது.  திரும்பிப் பார்க்க எத்தனையோ வாய்ப்பிருந்தும்.. இருவரையும் அருகருகே வைத்து விசாரிக்க வைக்கும் சூழல் இருந்தும், விதி அதைச் செய்யாமல்விட.. மதி கை கொட்டி எகத்தாளமாகச் சிரிக்கிறது..! 

ரூபாவிடம் அசோக்கின் போனில் இருந்து அசோக்கின் குரலில் பேசும் சலீம், தான் சுரேஷை கொலை செய்துவிட்டதாகச் சொல்கிறான். தான் சாகப் போவதாகவும் சொல்கிறான். பதற்றத்துடன் வீட்டுக்கு வரும் ரூபாவை எதிர்கொள்கிறான் சலீம். 

தான் வரும்போது இந்தக் கடிதம் மட்டுமே இருந்ததாகச் சொல்லி ஒரு கடித்த்தை நீட்டுகிறான். அதில் தான் சுரேஷை கொலை செய்த்தை பகிரங்கமாக தனது கைப்பட எழுதியிருக்கிறான் அசோக். குழப்பத்தில் இருக்கும் ரூபாவுக்கு விதி திடீரென்று ஒன்றை ஞாபகப்படுத்தி உசுப்பிவிடுகிறது. 

அன்றொரு நாள் தன்னைச் சமாதானப்படுத்த அசோக்கின் குரலில் சலீம் பேசியது அவளுக்கு நியாபகம் வர.. “நீ அசோக் வாய்ஸ்ல பேசுவீல்ல..” என்கிறாள்..! நொடியில் சலீமின் மதி 1 லட்சம் எலெக்ட்ரான் ஸ்பீடில் செல்கிறது.. “யாரோ வெளில இருக்காங்க. அநேகமா அது அசோக்காகூட இருக்கலாம். நீ இந்த ரூமுக்குள்ள இரு.. நான் இப்ப வந்தர்றேன்..” என்று சொல்லி ரூபாவை அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டி சாவியை மட்டும் அங்கேயே தொங்க விடுகிறான். அடுத்து தனது அதகளத்தைத் துவக்குகிறான் சலீம். 

நிச்சயமாக அது ருத்ர தாண்டவம்தான்.. மோனோ ஆக்ட்டிங்கில் பின்னியெடுக்கிறான் சலீம். அவனது மதியின் அற்புதமான விளையாட்டு இது..! வெளியில் அசோக்கும், தானும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சீன்ஸை சப்தத்தின் மூலமாக சலீம் ஏற்படுத்த.. உள்ளேயிருக்கும் ரூபா நம்பி விடுகிறாள்.. வீடே அலங்கோலமாகி.. தானே ஏற்படுத்திக் கொண்ட காயத்துடன் இருக்கும் சலீமை அந்தக் கோலத்தில் பார்க்கிறான் அப்போது அங்கே வரும் கல்லூரி நண்பன். அவன் போட்ட கூச்சலில் அக்கம்பக்கம் திரண்டு வர.. ரூபா மீட்கப்பட.. போலீஸும் வருகிறது..! 

இப்போது விதி கொஞ்சம் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க.. சலீமின் அப்பாவும், அம்மாவும் வரவழைக்கப்படுகிறார்கள். சுரேஷை கொலை செய்துவிட்டு, இப்போது சலீமையும தாக்கிவிட்டு அசோக் தப்பியோட்டம்..! இதுதான் சலீமின் மதி செய்த திரைக்கதை.. 

தினம்தோறும் கள்ளக் கண்களையே பார்த்து சலித்துப் போயிருந்த இன்ஸ்பெக்டருக்கு நொடிக்கு ஒரு தரம் உளவு பார்க்க அலையும் சலீமின் கண்கள் ஏனோ சந்தேகத்தைக் கிளப்ப.. சலீமின் பூர்விகத்தைத் தோண்டியெடுக்க ஒரு ஆர்டரை இராமநாதபுரத்திற்கு அனுப்ப வைக்கிறது விதி..! 

இராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் டேபிளில் இருக்கும் அந்த பேக்ஸ் மிஷின் துப்பிய அந்த பேக்ஸ் செய்தியைவிடவும் ராக்கெட் ஸ்பீடில் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கும் சலீம் இராமநாதபுரத்துக்கு தாவுகிறான். இறந்து போன ஒரிஜினல் சலீமின் வீட்டில் எதிர்வரும் போலீஸ் விசாரணைக்குக் காத்திருக்கிறான் கார்த்திக். 

வந்த போலீஸுக்கு சலீம் தந்தையின் இன்றைய பாரிச வாயு அட்டாக் உடலும், அதனை தூக்கிச் சுமக்கும் சலீமின் கடமையும் விரட்டியடிக்க.. நல்ல பையன் சர்டிபிகேட் சென்னைக்குச் செல்ல.. விதி மேற்கொண்டு இக்கதையில் எப்படி இவனை மாட்டி வைப்பது என்று தெரியாமல் இப்போது இராமநாதபுரத்திலேயே நின்று கொள்கிறது.  

இனிமேல் உங்களுக்காகத்தான் நான் வாழப் போறேன் என்ற ஒரு சின்ன நம்பிக்கை ஒளிக் கீற்றை அந்தப் பெரியவரிடம் சொல்லிவிட்டு, அதே மருத்துவக் கல்லூரியில் சலோ போட்டு செல்கிறான் சலீம் என்ற கார்த்திக்..! 

இறுதியில் தப்பை தப்பா செஞ்சால்தான் தப்பு.. தப்பை சரியாச் செஞ்சு தப்பித்துக் கொண்டால், அதில் தப்பில்லை என்ற விதிக்கு மாற்றான ஒரு விதியை நமக்கே சொல்லியிருக்கிறார் இயக்குநர்..! 

அருமையான இயக்கம்..! மிக இறுக்கமானது..!    முதல் படம் போலவே இல்லை விஜய் ஆண்ட்டனிக்கு.. என்ன முகம் மட்டுமே 21 வயதுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், அவரது இறுகிப் போன முகம்.. களையிழந்த பொலிவு.. எப்போதும் சோகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது என்று இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ற தோரணை..!  அசோக்கின் கொலை காட்சியிலும், தன்னை அசோக் அடிப்பதாக நினைத்து செய்யும் மோனோ ஆக்ட்டிங்கிலும் மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்..! வெல்டன் விஜய் ஸார்..! 

அசோக்காக நடித்திருக்கும் சித்தார்த்தும் விஜய்க்கு ஈடு கொடுத்திருக்கிறார்.. 'மக்காயாலா' பாடல் காட்சியில் ஒரே ஒரு பிரேமில் இவரது எக்ஸ்பிரஷன் ஹீரோவே இவர்தானா என்று சொல்ல வைக்கிறது..! ரூபாவை சமாளிக்க முடியாமல், விஜய்யை கண்டிப்பது.. விஜய்யை சந்தேகித்து அதனை குரூரமாக தீர்த்துக் கொள்வது என்ற இவரது ஸ்டைல் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியிருக்கிறது..! 

விபா, ரூபா மஞ்சரி, அனுயான்னு ஒண்ணுக்கு மூணு ஹீரோயின்கள்.. விபா புதிய அழகு.. பேச்சு ரசிக்க வைக்கிறது..! கல்லூரியோடு இவரது ஆட்டம் முடிந்துவிடுவதால் பெரிதாக ஏதுமில்லை.. ரூபா மஞ்சரிதான் கடைசிவரையில் துணைக்கு வருகிறார். முன்பைவிட இப்போது கொஞ்சம் கூடுதல் அழகோடு இருக்கிறார் ரூபா.. அதிலும் மக்காயாலா பாடல் காட்சியில் செம க்யூட்.. இவருக்கு நடிக்கவும் தெரியும் என்பதைத்தான் இறுதிக் காட்சியில் காண முடிகிறது.. அனுயாவுக்கு கெஸ்ட் ரோல்தான்.. அவரவர்களின் சொந்த கேரக்டர்களை போன்ற வசனங்களும், காட்சியமைப்புகளும் இருப்பதால் மூவருமே இயல்பாக நடித்திருப்பது போல் தோன்றுகிறது..! 

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவரை நிறைய ஹிந்தி படங்களில் பார்த்திருக்கிறேன்.. தமிழ் நடிகர்களை ஏனோ முயற்சி செய்ய முயலாமல் இவரை கொண்டு வந்ததற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. பெரிதாக இவரது கேரக்டர் எதையும் சொல்லிவிடவில்லை.. 

அடுத்தவர் படம் என்றாலே கொஞ்சம் பார்த்து மியூஸிக் செய்பவர்கள் தனது சொந்தப் படம் என்றால் ச்சும்மா விடுவார்களா..? சந்தேகமே இல்லாமல் 'மக்காயாலா' சூப்பர் ஹிட்.. தப்பெல்லாம் தப்பே இல்லை பாடல் இனி தப்பு செய்பவர்களுக்கு தேசிய கீதமாகலாம்.. இதனை எழுதிய வலையுலக நண்பர் அஸ்வினுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..! 

பாடலையும்விட இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் காட்சிகளுக்கேற்ற பின்னணி இசையை நறுக்கென்று கொடுத்து பிரேம் பை பிரேம் டென்ஷனை கூட்டியிருக்கிறார் விஜய் ஆண்ட்டனி..!  நீலன் கே.சேகரின் சிக்கலான முறுகல் கதையை, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜீவா சங்கர். மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். இதனாலேயே ஜீவா என்ற பெயரை தனது சொந்தப் பெயருக்கு முன்பே சூட்டிக் கொண்டாராம்.. முதல் அறிமுகத்தையே அசத்தலாக செய்திருக்கிறார். 

தனது சொந்தக் கதையை மட்டுமே எடுப்பேன் என்றில்லாமல் வெற்றிக் கதையை தான் இயக்க வேண்டும் என்று நினைத்த இவரது நினைப்புக்கு பாராட்டுக்கள்.. இயக்கத்திற்கு அடுத்து இவரது ஒளிப்பதிவு இவரது குருநாதருக்கு மிகவும் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது. இடைவேளைக்கு பின்னான பல காட்சிகள் இருட்டிலேயே எடுக்கப்பட்டிருப்பதும், அதற்கான லைட்டிங்ஸ் இருக்கா, இல்லையா என்றுகூட தெரியாத அளவுக்கு எடுக்கப்பட்டிருப்பது இவரது சிறப்புதான்..! ஜீவா பெயர் காப்பாற்றப்பட்டது என்றே சொல்லலாம்..! 

முதல் காட்சியில் துவங்கி, இறுதிவரையிலும் இவரது இயக்கம் தொடர்ச்சியான ஒரு பிரமிப்பைத் தருகிறது.. இதற்கு இன்னொரு துணை எடிட்டர் ஏசு சூர்யாவின் கச்சிதமாக கட்டிங்.. சண்டைக்கு வரும் இளைஞனை ஸ்கூரூ டிரைவரை வைத்து மிரட்டும் காட்சியிலும், ஒரே காட்சியில் இரண்டு பேரை துரத்தியடிக்கும்வகையில் எழுதப்பட்ட திரைக்கதைக்காக டாஸ்மாக் பாரில் கிருஷ்ணமூர்த்தி தலையில் பாட்டிலை உடைக்கும் காட்சியிலும், அசோக் கொல்லப்பட்ட இடைவெளியில் அடுத்தடுத்த காட்சிகளை நறுக்கென்று கொண்டு போய் முடித்திருப்பதும் அது கொலை என்பதாகவே நமக்குத் தெரியவில்லை. தெரியாமல் நடந்துவிட்டதாகவே நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.. வெல்டன் எடிட்டர் ஸார்.. 

இடையிடையே வந்த சில லாஜிக் மீறல்களை மட்டும் நாம் கண்டு கொள்ளாமல் போனால், நல்லதொரு திரில்லர்வகை படத்தை பார்த்த திருப்தி கிடைக்கும்..! எல்லா ஆட்டத்தையும் ஆட வைத்துவிட்டு கிளைமாக்ஸில் இவர் எழுதியிருக்கும் வசனங்களும், காட்சியமைப்பும் கார்த்திக் சலீமாக செய்த தப்பு தப்பில்லையோ என்று நினைக்கும் அளவுக்கு நம்மை நெகிழ வைக்கிறது. இயக்குநர் இங்கேதான் நமக்கு விதி-மதி சோதனையின் முடிவைக் காண்பித்திருக்கிறார். 

விதியினால் விளைந்ததை மதி எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதற்கு இந்தப் படத்தின் கிளைமாக்ஸும் ஒரு உதாரணம்..! மெளனகுரு, வழக்கு எண், ராட்டினம் போன்ற படங்களுக்கு பின்பு கிளைமாக்ஸில் நம்மை அசரடித்திருப்பது இந்தப் படம்தான்.. நல்லவேளையாக யூ/ஏ சர்டிபிகேட் வாங்கியதால் படம் கொஞ்சமாவது தப்பித்தது.. உண்மையில் இப்படம் ஏ சர்டிபிகேட்டிற்கு மட்டுமே உரித்தானது.. எப்படி தப்பித்தார்கள் என்று தெரியவில்லை. பாராட்டுக்கள்..! சினிமா ரசிகர்களால் இப்படம் நிச்சயம் கொண்டாடப்படும் என்றே நினைக்கிறேன்..! அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்..! காணத் தவறாதீர்கள்..!!!

48 comments:

Anonymous said...

ஏன் இந்த அனிருத் வெறி...டக்குனு பார்வை ஸ்லிப் ஆகி எந்த வரில உட்டேன்னு தெரியாம மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பிச்சு...மறுபடி எங்கேயோ ஸ்லிப் ஆயிட்டேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே என்டர் பட்டன் வேலை செய்யலையா. சத்தியமா படிக்க முடியலை.

ரெங்கசுப்ரமணி said...

அய்யா ஏதாவது பின் நவீனத்துவ நாவல் எழுத உத்தேசமா? நடுவில் உள்ள புள்ளிகளை எடுத்துவிட்டால் ஏதாவது ஒரு பின் நவீனத்துவ நாவலில் ஒரு சாப்டராக சேர்க்கலாம். ஸ்க்ரோல் பண்ணினால் எங்கே விட்டோம் என்று தெரியவில்லை. மறுபடியும் தேட வேண்டியுள்ளது.

Ponchandar said...

ஒரே பாராவில் விமர்சனமா ???? பாராதான் கொஞ்சம் நீளளளம். வரியை விட்டுட்டா மறுபடி தேட வேண்டியிள்ளது.

இதில் எத்தனை “விதி”, “மதி” வார்த்தைகள் உள்ளன என போட்டி வைக்கலாம்

IlayaDhasan said...

Ore vidhi and madhi nedi...paadhikku mela padikka mudiyala...konjam karunai kaatunga saar...

Caricaturist Sugumarje said...

ஏன் இந்த கொலைவெறி?
விமர்சனம்ங்கிற வகையிலே இப்படி கதையை சொன்னால் நாங்க எப்படி படம் பார்க்கிறதாம்... அவன் மேன்சன் வந்ததுக்கு அப்புறம் நான் மேற்கொண்டு படிக்கலை... படத்தில் பார்த்துக்கொள்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

படம் முழுவதும் ரசித்து மூச்சு விடாமல் எழுதி விட்டீர்களே...

பதிவைப் போல, படத்தில் ரசிக்கும் காட்சிகள் நிறைய இருக்கோ...?

பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

. said...

இதுக்கு பேருதான் ஒரே மூச்சில் விமர்சனமா?

CS. Mohan Kumar said...

அண்ணே விமர்சனம் என்கிற பேரில் திரைக்கதை எழுதிருக்கீங்களே :(

ஜானகிராமன் said...

அண்ணே, கொஞ்சம் எளிமைபடுத்துங்க. பத்தி பத்தியா படிக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. விதி - மதின்னு எதோ சொல்லவர்றீங்க. ஆனா என்ன சொல்லவர்றீங்கன்னு எனக்கு புரியலை.

SPIDEY said...

inspired & copied from "talented mr.ripley"

”தளிர் சுரேஷ்” said...

ரொம்ப கஷ்டம் விதி மதின்னு சொல்லி ரொம்பவே குழப்பி விட்டுருக்கீங்க! பாதியிலே எஸ்கேப்! சாரி!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

Doha Talkies said...

அண்ணா உங்க விமர்சனமே ஜெட் வேகத்தில் இருக்கிறது,
அண்ணன் நீங்க சொல்லிட்டீங்க கண்டிப்பாக பார்க்கிறேன்.

நாய் நக்ஸ் said...

Thala...
Mudiyalai.....

Ithukku
naanga...
Power star
padam....
100 times...
Parppom......

கோவை நேரம் said...

அப்பாடா..இப்பவே கண்ண கட்டுதே...மொத்தம் 44 விதி இருக்கு....இதை படித்தவுடன் நம்ம விதி எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு..எப்படியோ...முழு நீள விமர்சனம் போட்டு விட்டீர்கள்./...

Anonymous said...

விதி மதின்னு இடையிடையிலே வந்து படிக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு....

எனக்கு தெரிஞ்சி இந்த விமர்சனத்தை யாரும் முழுமையா படிச்சிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்... கொஞ்சம் எளிமைப்படுத்துங்க...

சூனிய விகடன் said...

பீருக்குள்ளே ஒயினை ஊத்தி அதைத்தூக்கி ரம்முக்குள்ள ஊத்தி அடிச்சா மாதிரி ஒரே கிர்ருண்ணே............................................................... அடுத்த பதிவுல சந்திப்போம்

வவ்வால் said...

அண்ணாச்சி,

ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிங்க போல :-))

//மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க சென்னைக்கு செல்கிறான்..//

சேர்வதற்கா, அல்லது விண்ணப்பிக்கவா, இல்லை ஏற்கனவே படித்தக்கொண்டிருந்துவிட்டு பிரேக் ஆகி மீண்டும் படிக்கவா?

சில விமர்சனங்களில் வேற மாதிரி இருக்கு, படம் பார்த்தால் தான் உண்மையான கதை புரியும் போல.

இப்படியான ஆள்மாறட்ட கதைகள் தமிழில் ஏற்கனவே உண்டு,

மோகன் நடித்த தீர்த்தகரையினிலே, பாக்யராஜின் பவுனு பவுனு தான், அப்புறம் மகேஷ் பாபுவின் டப்பிங் படம் நந்து எல்லாம் இப்படித்தான் தற்செயலாக ஒருவனின் இடத்தில் இன்னொருவன் என போகும்.

இப்படம் அதில் திரில்லர் வகையில் அமைந்துவிட்டது எனலாம்.

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

ஏன் இந்த அனிருத் வெறி. டக்குனு பார்வை ஸ்லிப் ஆகி எந்த வரில உட்டேன்னு தெரியாம மறுபடி முதல்லேர்ந்து ஆரம்பிச்சு மறுபடி எங்கேயோ ஸ்லிப் ஆயிட்டேன்.]]]

பரவாயில்லை.. இப்போ பத்தி பிரிச்சுட்டேன்.. திரும்பவும் படிச்சுப் பாருங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே என்டர் பட்டன் வேலை செய்யலையா. சத்தியமா படிக்க முடியலை.]]]

இப்போ பிரிச்சுட்டேன் தம்பி..! அவசரத்துல மொத்தமா எடுத்துப் போட்டுட்டு போயிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[renga said...

அய்யா ஏதாவது பின் நவீனத்துவ நாவல் எழுத உத்தேசமா? நடுவில் உள்ள புள்ளிகளை எடுத்துவிட்டால் ஏதாவது ஒரு பின் நவீனத்துவ நாவலில் ஒரு சாப்டராக சேர்க்கலாம். ஸ்க்ரோல் பண்ணினால் எங்கே விட்டோம் என்று தெரியவில்லை. மறுபடியும் தேட வேண்டியுள்ளது.]]]

சிரமத்திற்கு மன்னிக்கவும். இப்போது படித்துப் பார்க்கவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

ஒரே பாராவில் விமர்சனமா ???? பாராதான் கொஞ்சம் நீளளளம். வரியை விட்டுட்டா மறுபடி தேட வேண்டியிள்ளது.]]

ஓகே.. கூல் பிரதர்..

[[[இதில் எத்தனை “விதி”, “மதி” வார்த்தைகள் உள்ளன என போட்டி வைக்கலாம்.]]]

போட்டி வைச்சு எண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[IlayaDhasan said...

Ore vidhi and madhi nedi. paadhikku mela padikka mudiyala. konjam karunai kaatunga saar.]]]

உங்களுக்கு தேவையானதைத்தான் எழுதியிருக்கேன்.. புரிஞ்சுக்க முடியாம இருக்கீங்களே ஸார்..?

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

ஏன் இந்த கொலை வெறி?
விமர்சனம்ங்கிற வகையிலே இப்படி கதையை சொன்னால் நாங்க எப்படி படம் பார்க்கிறதாம். அவன் மேன்சன் வந்ததுக்கு அப்புறம் நான் மேற்கொண்டு படிக்கலை. படத்தில் பார்த்துக் கொள்கிறேன்.]]]

ஓகே தம்பி..! படத்தை பார்த்திட்டு திரும்பவும் வந்து படிச்சிட்டு உனது கருத்தை சொல்..!

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

படம் முழுவதும் ரசித்து மூச்சு விடாமல் எழுதி விட்டீர்களே. பதிவைப் போல, படத்தில் ரசிக்கும் காட்சிகள் நிறைய இருக்கோ.? பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.]]]

தங்களது வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[. said...

இதுக்கு பேருதான் ஒரே மூச்சில் விமர்சனமா?]]]

ஆமாம் ஸார்..

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

அண்ணே விமர்சனம் என்கிற பேரில் திரைக்கதை எழுதிருக்கீங்களே :(]]]

படத்தின் பாதிப்பு அந்த மாதிரி.. எழுதணும்னு தோணுச்சு எழுதிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜானகிராமன் said...

அண்ணே, கொஞ்சம் எளிமைபடுத்துங்க. பத்தி பத்தியா படிக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. விதி - மதின்னு எதோ சொல்ல வர்றீங்க. ஆனா என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை.]]]

இன்னாபா இது..? சேர்த்து வைச்சு படிக்கத்தான் கஷ்டம்ன்னு சொன்னீங்க. பிரிச்சுக் கொடு்ததேன். இதுவும் கஷ்டம்ன்னா நான் இன்னா செய்ய..?

இது புரியலையா..? ரொம்ப எளிமையான தமிழ்லதான் எழுதியிருக்கேன்.. வேற எப்படி எழுதறதுன்னு எனக்கும் தெரியலையே..?

உண்மைத்தமிழன் said...

[[[SPIDEY said...

inspired & copied from "talented mr.ripley"]]]

இந்த நாவலின் காப்பி என்கிறீர்களா..? யாராச்சும் படிச்சுட்டு உண்மையான்னு சொல்லுங்கப்பா..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

ரொம்ப கஷ்டம் விதி மதின்னு சொல்லி ரொம்பவே குழப்பி விட்டுருக்கீங்க! பாதியிலே எஸ்கேப்! சாரி!]]]

ஓகே.. படத்தை பார்த்திட்டு திரும்பவும் வந்து படிங்க. புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

அண்ணா உங்க விமர்சனமே ஜெட் வேகத்தில் இருக்கிறது,
அண்ணன் நீங்க சொல்லிட்டீங்க கண்டிப்பாக பார்க்கிறேன்.]]]

அவசியம் பாருங்க தோஹா..!

உண்மைத்தமிழன் said...

[[[NAAI-NAKKS said...

Thala...
Mudiyalai.....

Ithukku
naanga...
Power star
padam....
100 times...
Parppom......]]]

பாருங்க.. பாருங்க.. பார்த்துக்கிட்டேயிருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே. மொத்தம் 44 விதி இருக்கு. இதை படித்தவுடன் நம்ம விதி எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு. எப்படியோ முழு நீள விமர்சனம் போட்டு விட்டீர்கள்.]]]

பொறுமையாக எண்ணிக் காண்பித்தமைக்கு எனது நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஷீ-நிசி said...

விதி மதின்னு இடையிடையிலே வந்து படிக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
எனக்கு தெரிஞ்சி இந்த விமர்சனத்தை யாரும் முழுமையா படிச்சிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். கொஞ்சம் எளிமைப்படுத்துங்க.]]]

இதைவிடவும் எளிமையா..? எப்படீன்னு சொன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்..?

உண்மைத்தமிழன் said...

[[[சூனிய விகடன் said...

பீருக்குள்ளே ஒயினை ஊத்தி அதைத் தூக்கி ரம்முக்குள்ள ஊத்தி அடிச்சா மாதிரி ஒரே கிர்ருண்ணே............................................................... அடுத்த பதிவுல சந்திப்போம்]]]

அப்போ படிக்கலையா..? போங்க ஸார்.. நீங்களெல்லாம் ஒரு நண்பரா..?

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிங்க போல :-))]]]

ஆமாம்ண்ணே..! உண்மைதான். அதான் பலரும் கோச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.. முழுக் கதையையும் சொல்லிருவோம்ன்னு சொல்லிப்புட்டேன்..!

//மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க சென்னைக்கு செல்கிறான்..//

சேர்வதற்கா, அல்லது விண்ணப்பிக்கவா, இல்லை ஏற்கனவே படித்துக் கொண்டிருந்துவிட்டு பிரேக் ஆகி மீண்டும் படிக்கவா? சில விமர்சனங்களில் வேற மாதிரி இருக்கு, படம் பார்த்தால்தான் உண்மையான கதை புரியும் போல.]]]

விண்ணப்பிக்க வரும்போதுதான் அந்த ஆக்சிடெண்ட் நடக்கிறது.. அதன் பின்பு அந்த விண்ணப்பத்தில் தனது போட்டோவை வைத்து அப்ளிகேஷன் போடுகிறான் கார்த்திக். உடனேயே இராமநாதபுரம் சென்று இறந்து போன சலீமின் வீட்டு தெருவில் தினமும் காத்திருந்து போஸ்ட்மேன் வரும்போது
அவரை மடக்கி அந்த இண்டர்வியூ லெட்டரை அபேஸ் செய்து சென்னை திரும்புகிறான். பின்பு கிருஷ்ணமூர்த்தியை அழைத்துக் கொண்டு போய் அப்பா என்று சொல்லி கலந்துரையாடலில் கலந்து கொண்டு சீட்டை வாங்கிக் கொள்கிறான்..!

[[[இப்படியான ஆள் மாறட்ட கதைகள் தமிழில் ஏற்கனவே உண்டு. மோகன் நடித்த தீர்த்தகரையினிலே, பாக்யராஜின் பவுனு பவுனுதான், அப்புறம் மகேஷ் பாபுவின் டப்பிங் படம் நந்து எல்லாம் இப்படித்தான் தற்செயலாக ஒருவனின் இடத்தில் இன்னொருவன் என போகும்.
இப்படம் அதில் திரில்லர் வகையில் அமைந்துவிட்டது எனலாம்.]]]

கொலை வரைக்கும் சென்றதும், அடுக்கடுக்காய் தவறுகள் செய்வதும் மேலேயுள்ள படங்களில் இருக்கிறதாண்ணே..?

mugamoodi said...
This comment has been removed by the author.
mugamoodi said...

this movie is rip off of The Talented Mr. Ripley acted by matt demon 90% of tamil movies either rip off or copy.

காரிகன் said...

உங்கள் விமர்சனத்தை படித்தால் (படிக்க முடிந்தால்) இந்த படமும் ரொம்ப குழப்பமாக இருக்குமோ என்று படிப்பவர்களையே தலைசுற்ற வைக்கிறது. நீங்கள் பாராட்டும் படி இது சிறந்த படமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது அப்பட்டமான 1999 ஆம் ஆண்டு வெளிவந்த The Talented Mr.Ripley (based on a novel by the same name in 1955) என்ற ஆங்கில படத்தின் தழுவல்.(காப்பி என்று சொன்னால் சில உலக சினிமா விரும்பிகளுக்கு கோபம் கண்ணை மறைக்கிறது)உங்கள் விமர்சனத்தை படிக்கும்போதே (உஷ் அப்பாடா....) இது எனக்கு தெரிந்து விட்டது. பிறகு இன்னொரு பதிவில் இதை குறிப்பிட்டிருந்தார்கள். நீங்கள் கண்டிப்பாக ஒரிஜினல் ஆங்கில படத்தை பார்க்கவேண்டும். உங்களின் இத்தனை பாராட்டுகளுக்கும் அந்த படத்துக்கே உரியது.

வவ்வால் said...

அண்ணாச்சி,

விளக்கத்திற்கு நன்றி!

பிராபல்யப்பதிவராக இருந்தாலும் சந்தேகம் கேட்டால் மதிச்சு பதில் சொல்லுறிங்க பாருங்க அங்க தான் நிக்குறிங்க அண்ணாச்சி!

நீங்க எழுத்தில எப்படி இடியாப்பம் புழிஞ்சாலும் நானும் முழுசாப்படிச்சிட்டு சந்தேகம் கேட்கிறேன் பாருங்க(மத்தவங்க எல்லாம் எப்படி அலறினாங்க) ,எல்லாம் ஒரு கடமை உணர்ச்சி தான் :-))

கொலை வரைக்கும் மற்றப்படத்தில் போகலை அதனால் தான் திரில்ல்ர் வகைனு சொன்னேன்.

நான் சொல்லவந்தது "தீம்" ஒன்று என்பது மட்டுமே, இதில் கொலை ,சஸ்பெண்ஸ் என திரில்லர் ஆக்கீட்டங்க.

-----

நம்ம பதிவர்கள் எல்லாம் துப்பறியும் நிபுணர்கள் ,பாருங்க ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் பேரை சொல்லிட்டாங்க.

உண்மைத்தமிழன் said...

[[[mugamoodi said...

This movie is rip off of The Talented Mr. Ripley acted by matt demon 90% of tamil movies either rip off or copy.]]]

போச்சுடா.. இப்போ நான் இயக்குநரை திட்டணுமா.. கூடாதா..? ஒண்ணும் புரியலை..! யாரையும் நம்பக் கூடாது போலிருக்கே..!

உண்மைத்தமிழன் said...

[[[காரிகன் said...

உங்கள் விமர்சனத்தை படித்தால் (படிக்க முடிந்தால்) இந்த படமும் ரொம்ப குழப்பமாக இருக்குமோ என்று படிப்பவர்களையே தலைசுற்ற வைக்கிறது. நீங்கள் பாராட்டும்படி இது சிறந்த படமாக இருக்க வாய்ப்பில்லை. ]]]

காப்பி என்பதாலேயே ஒரு படம் சிறந்த படமில்லை என்றாகிவிடாது.. இதன் மேக்கிங் நன்றாக உள்ளது. அதனால்தான் பாராட்டினேன்..!

[[[ஏனென்றால் இது அப்பட்டமான 1999 ஆம் ஆண்டு வெளிவந்த The Talented Mr.Ripley (based on a novel by the same name in 1955) என்ற ஆங்கில படத்தின் தழுவல்.(காப்பி என்று சொன்னால் சில உலக சினிமா விரும்பிகளுக்கு கோபம் கண்ணை மறைக்கிறது)உங்கள் விமர்சனத்தை படிக்கும்போதே (உஷ் அப்பாடா....) இது எனக்கு தெரிந்து விட்டது. பிறகு இன்னொரு பதிவில் இதை குறிப்பிட்டிருந்தார்கள். நீங்கள் கண்டிப்பாக ஒரிஜினல் ஆங்கில படத்தை பார்க்கவேண்டும். உங்களின் இத்தனை பாராட்டுகளுக்கும் அந்த படத்துக்கே உரியது.]]]

நிச்சயமாக.. இதன் கதாசிரியருக்கும், இயக்குநருக்கும் எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும், நன்றிகளும்..!

Unknown said...

நண்பா, இந்த விமர்சனம் படிக்கணும்னு என் விதி-ல எழுதி இருக்கும் போல.. தாங்கலடா சாமி ... எத்தனை விதி, மதி ... படிச்சதே மறந்திட்டு திரும்பவும் முதல்ல இருந்தேன் படிக்குறேன்.. இருந்தாலும் உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்

குரங்குபெடல் said...

அண்ணே . .

" நம்ம படத்துலே இவ்ளோ மேட்டர் இருக்கா "

என இயக்குனரே அதிர்ச்சி ஆகும் பதிவு . . .


தமிழ் நாடு போலீஸ் முட்டாள்களால் (!)

நிறைந்தது

என்ற கூற்றுக்காக

எடுக்கப்பட்ட படமாகவே இது தெரிகிறது . .

படத்தின் மையகருத்தே நம்பும்படியாக இல்லை

உண்மைத்தமிழன் said...

[[[T.Karthik said...

நண்பா, இந்த விமர்சனம் படிக்கணும்னு என் விதி-ல எழுதி இருக்கும் போல.. தாங்கலடா சாமி. எத்தனை விதி, மதி. படிச்சதே மறந்திட்டு திரும்பவும் முதல்ல இருந்தேன் படிக்குறேன்.. இருந்தாலும் உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்.]]]

திரும்பவும் படியுங்கள்.. யோசியுங்கள். புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

அண்ணே " நம்ம படத்துலே இவ்ளோ மேட்டர் இருக்கா " என இயக்குனரே அதிர்ச்சி ஆகும் பதிவு . . .]]]

ஆஹா.. இயக்குநருக்கே எடுத்துக் கொடுக்குறீங்களாண்ணே..?

[[[தமிழ்நாடு போலீஸ் முட்டாள்களால்(!) நிறைந்தது என்ற கூற்றுக்காக எடுக்கப்பட்ட படமாகவே இது தெரிகிறது. படத்தின் மைய கருத்தே நம்பும்படியாக இல்லை.]]]

தயவு செய்து படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..!

makka said...

People who don't understand this post probably haven't seen the movie. You have explained the movie so well.

உண்மைத்தமிழன் said...

[[[makka said...

People who don't understand this post probably haven't seen the movie. You have explained the movie so well.]]]

எப்படியும் படம் பார்க்கப் போறதில்லை.. நாமளாவது முழுசையும் சொல்லிரலாமேன்னுதான் சொல்லிட்டேன்..!