ICAF-ஜூலை மாத திரைப்படங்கள்

02-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..
!

ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 ஜூலை மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி ஜூலை 1-ம் தேதி UTV World Movies அமைப்புடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.


1-ம் தேதி மாலை 6.15 மணிக்கு செக் நாட்டுத் திரைப்படமான Divided We Fall

இரவு 8.15 மணிக்கு The Legend Of Lucy Keyes என்கிற அமெரிக்கத் திரைப்படமும் திரையிடப்படும்.


ஜூலை 6 மற்றும் 7 தேதிகளில் பிரபல சீன இயக்குநர் Wong Kar Wai இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்படும்.


திரைப்படங்களின் பட்டியல்


06-07-09 - மாலை 6.15 மணிக்கு In The Mood For Love

இரவு 7.45 மணிக்கு Fallen Angles



07-07-09 - மாலை 6.15 மணிக்கு Happy Together



இரவு 8 மணிக்கு Chungking Express


ஜூலை 8, 9, 10, 11 ஆகிய நாட்களில் இத்தாலி திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

திரைப்படங்களின் பட்டியல்

08-07-09 - மாலை 6.45 மணிக்கு Don't Tell (Italy)


09.07.09 - மாலை 6.15 மணிக்கு Saturn in Opposition (Italy)



இரவு 8 மணிக்கு Ms.F (Italy)


10.07.09 - மாலை 6.15 மணிக்கு What will happen to us (Italy)




இரவு 8 மணிக்கு Wherever You Are (Italy)

11.07.09 - மாலை 6.15 மணிக்கு Respiro (Italy)


இரவு 7.45 மணிக்கு Caterina in the Big City (Italy)


ஜூலை 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் மெக்ஸிகன் திரைப்படங்களும், குறும்படங்களும், ஆவணப் படங்களும் திரையிடப்படும்.

திரைப்படங்களின் பட்டியல்

20.07.09 -மாலை 6.45 மணிக்கு 2 குறும்படங்கள்

இரவு 7.15 மணிக்கு News From Atar (Mexican)


21.07.09 - மாலை 6.15 மணிக்கு 2 குறும்படங்கள்

இரவு 6.45 மணிக்கு More Than Anything in the World (Mexican)


22.07.09 - மாலை 6.15 மணிக்கு 2 குறும்படங்கள்

இரவு 6.45 மணிக்கு 1973 (Documentary)

23.07.09 - மாலை 6.15 மணிக்கு 2 குறும்படங்கள்

மாலை 6.45 மணிக்கு Tropic of Cancer (Dcoumentary)

இரவு 7.45 மணிக்கு Island Being (Documentary)

ஜூலை 27, 28, 29, 30 ஆகிய நாட்களில் பிரேஸில் திரைப்படங்கள் திரையிடப்படும்.

27.07.09 - மாலை 6.15 மணிக்கு Linha De Passe (Brazil)


28.07.09 - மாலை 6.15 மணிக்கு Carandiru (Brazil)

29.07.09 - மாலை 6.15 மணிக்கு Sao Paulo, Sociedade Anonima (Brazil)

30.07.09 - மாலை 6.15 மணிக்கு Vilanova Artigas, the architect (Brazil)


இரவு
8 மணிக்கு Sao Paulo, a metropole (Brazil)


31-07-09 அன்று மாலை 6.30 மணிக்கு அமெரிக்கத் திரைப்படம் திரையிடப்படும். (பெயர் பின்னால் அறிவிக்கப்படும்)

இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் திரையிடப்படும்.


விருப்பமுள்ள திரை ஆர்வலர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து திரைப்படங்களைக் கண்டுணர்ந்து பயன் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்..

தொடர்புக்கு : www.chennaifilmfest.org

5 comments:

உண்மைத்தமிழன் said...

இன்னாப்பா இது..?

48 பேர் பார்த்தும் ஒருத்தருக்குக்கூடவா ஒண்ணும் சொல்லத் தோணல..!

கஷ்டம்டா சாமி..!

குமரன் said...

அவங்க தளத்திலேயே அப்டேட் செய்யப்படவில்லை. நீங்க பாஸ்ட் உண்மைத்தமிழன்.

உறுப்பினருக்கு எவ்வளவு தொகை என்பதெல்லாம் தெரிவித்தால், இன்னும் கொஞ்சம் புண்ணியம்(!) சேரும்!

ஐ பர்ஸ்ட் கமெண்ட்?!

உண்மைத்தமிழன் said...

///நொந்தகுமாரன் said...

அவங்க தளத்திலேயே அப்டேட் செய்யப்படவில்லை. நீங்க பாஸ்ட் உண்மைத்தமிழன்.
உறுப்பினருக்கு எவ்வளவு தொகை என்பதெல்லாம் தெரிவித்தால், இன்னும் கொஞ்சம் புண்ணியம்(!) சேரும்!///

முதலான வருகைக்கு நன்றிகள் நொந்தகுமாரன்.

ஆண்டுக்கு தனி நபர் எனில் 600 ரூபாய். தம்பதிகளாக எனில் 1000 ரூபாய் உறுப்பினர் கட்டணம். முதல் முறையாக சேரும்போது நுழைவுக்கட்டணமாக தனியாக 100 ரூபாய் தர வேண்டும்.

திரையிடல் நடக்கும் பிலிம் சேம்பர் அரங்கத்திற்கு வந்தால் அங்கேயே அப்ளிகேஷனை நிரப்பி சேர்ந்து கொள்ளலாம்.

உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 கேட்பார்கள்.

வருகிறீர்களா நொந்தகுமாரன்ஜி..?!!

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள உண்மைத்தமிழன்,

தகவல்களுக்கு நன்றி.


இப்போதெல்லாம் அரங்கிற்கு வந்து திரைப்படம் பார்ப்பதென்பதை நினைத்தே பார்க்கமுடியவில்லை. நடைமுறைச் சிக்கல்கள். வேலைப்பளுவினால் பல படங்களை பார்க்க முடியாமற் போய் அதனால் ஏற்படும் குற்ற உணர்வு ஒன்று. இணையத்திலேயே பல அரிய திரைப்படங்கள் கிடைக்கிறது. விரும்பும் போதும் பகுதி பகுதியாகவும் கிடைத்த நேரத்தில் கூட பார்க்கலாம்.

சத்யஜித்ரேவின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படுகிறது என அறிந்து இலவசம் என நினைத்து உள்ளே நுழைய முயல 'மெம்பர் ஆகணுங்க' என்றதின் மூலம் அறிமுகமானது திரைப்பட இயக்கம். பாதிக்கட்டணத்தை அங்கேயே செலுத்தி அடுத்த நாள் மீதிக் கட்டணத்தை செலுத்தியதில் உறுப்பினர் அட்டை கிடைத்தது. அவ்வளவுதான் பிறகு அவர்களின் திரைப்பட அட்டவணை மாதா மாதம் வந்து சேரும். ஒரு முறை கூட போக முடியவில்லை. இதனாலேயே இந்த முறை மீது ஆர்வம் குறைந்து விட்டது. உங்கள் பதிவுகள் அந்த ஆர்வத்தை மறுபடியும் தூணடுகின்றன. ரசிகர்களின்/இயக்குநர்களின் இடையே பார்ப்பது என்பது வித்தியாசமான அனுபவமாகத்தானிருக்கும்.

உண்மைத்தமிழன் said...

///சுரேஷ் கண்ணன் said...
அன்புள்ள உண்மைத்தமிழன்,
தகவல்களுக்கு நன்றி.
இப்போதெல்லாம் அரங்கிற்கு வந்து திரைப்படம் பார்ப்பதென்பதை நினைத்தே பார்க்கமுடியவில்லை. நடைமுறைச் சிக்கல்கள். வேலைப் பளுவினால் பல படங்களை பார்க்க முடியாமற்போய் அதனால் ஏற்படும் குற்ற உணர்வு ஒன்று. இணையத்திலேயே பல அரிய திரைப்படங்கள் கிடைக்கிறது. விரும்பும்போதும் பகுதி பகுதியாகவும் கிடைத்த நேரத்தில்கூட பார்க்கலாம்.
சத்யஜித்ரேவின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படுகிறது என அறிந்து இலவசம் என நினைத்து உள்ளே நுழைய முயல 'மெம்பர் ஆகணுங்க' என்றதின் மூலம் அறிமுகமானது திரைப்பட இயக்கம். பாதிக் கட்டணத்தை அங்கேயே செலுத்தி அடுத்த நாள் மீதிக் கட்டணத்தை செலுத்தியதில் உறுப்பினர் அட்டை கிடைத்தது. அவ்வளவுதான் பிறகு அவர்களின் திரைப்பட அட்டவணை மாதா மாதம் வந்து சேரும். ஒரு முறைகூட போக முடியவில்லை. இதனாலேயே இந்த முறை மீது ஆர்வம் குறைந்து விட்டது. உங்கள் பதிவுகள் அந்த ஆர்வத்தை மறுபடியும் தூணடுகின்றன. ரசிகர்களின்/இயக்குநர்களின் இடையே பார்ப்பது என்பது வித்தியாசமான அனுபவமாகத்தானிருக்கும்.///

பிரியமுள்ள சுரேஷ் ஸார்..

எனக்கு வீடியோவில் பார்ப்பதைவிட திரையில் பார்ப்பதே பிடிக்கிறது. அதனால்தான் இந்த அமைப்பில் சேர்ந்தேன்.

என்னாலும் பல முறை அங்கு செல்ல முடியாமல் போய் இருந்தது. சென்ற இரண்டு மாதங்களில் ஒரு நாள்கூட என்னால் செல்ல முடியவில்லை. அவ்வளவு வேலை.

இப்போது வேலையில்லாமல் சும்மா இருப்பதால், இந்த மாசம் குறைந்தபட்சம் ஒரு ஐந்து படங்களாவது பார்த்துவிடுவேன்.

ஏற்கெனவே பார்த்ததையே எழுத முடியவில்லை. அவ்வளவும் மனதுக்குள் இருக்கிறது.

சில நல்ல திரைப்படங்களை திரையில்தான் பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் முழு வீச்சும் புரியும்.

தங்களது வருகைக்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..!