கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியல்..!

13-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு, சமூக சேவையாற்ற காத்திருக்கும் நமது வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தற்போது வெளியாகி வருகிறது.

அதில் குறிப்பிடத்தக்கவர்களின் சொத்து விபரங்கள் இதோ..

சோனியாகாந்தி - 1.38 கோடி


இந்தியாவின் அன்னை(!) சோனியாகாந்தி தாக்கல் செய்த மனுவில் தனக்கு ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், இந்தியாவில் தனக்குச் சொந்தமாக கார், வீடு எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவரின் முன்னோர்கள் வீடு ஒன்று இத்தாலியில் உள்ளது. அதன் மதிப்பு 18.05 லட்சம். கையில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளது. யூகோ வங்கியில் 28.61 லட்சம் ரூபாய் பணம் டிபாசிட்டாக உள்ளது. மேலும் 20 லட்சம் ரூபாயை மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ளார்.

மாருதி டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 10 பங்குகள் வெஸ்டர்ன் இந்தியா டானரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் 500 பங்குகளைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கியின் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குப் பத்திரங்களும் அம்மா வசம் உள்ளனவாம்.

தேசிய சேமிப்புத் திட்டத்தில் 1.99 லட்சம் ரூபாயை முதலீடு செய்துள்ளதோடு தனிப்பட்ட வருங்கால சேமிப்பு நிதியில் 24.88 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்துள்ளார். 18.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 88 கிலோ வெள்ளி மற்றும் 11.08 லட்சம் மதிப்பிலான நகைகளும் அன்னையிடம் உள்ளன.

இவருக்குச் சொந்தமாக சுல்தான்பூர் மற்றும் தெராமண்டி கிராமத்தில் 2.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலம் உள்ளதாம். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது இவரின் சொத்து மதிப்பு 95 லட்சம் ரூபாய்தானாம்.. மூன்றாண்டுகளில் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

ராகுல்காந்தி - 2.33 கோடி


ராகுல்காந்தி தனக்கு 2.33 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். HDFC வங்கியில் இருந்து 70 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதில் 23.25 லட்சம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதுள்ளதாம். டில்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இரண்டு கடைகள் உண்டாம். ஒரு கடையின் மதிப்பு 1.08 கோடி ரூபாய்.. மற்றொரு கடையின் மதிப்பு 55.80 லட்சம் ரூபாய்.

11 லட்சம் ரூபாய்க்கு வருமான வரியும், 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேவை வரியும் செலுத்தியுள்ளார் ராகுல். டில்லியில் உள்ள மூன்று வங்கிகளில் மொத்தம் 10.92 லட்சம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளன.

அசையா சொத்துக்கள் வகையில் மெக்ராவுலி பகுதியில் 9.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடு உள்ளது. பல்வேறு இடங்களில் ஆறு ஏக்கர் அளவிற்கு விவசாய நிலங்களும் இவர் பெயரில் உண்டு. சொந்த வாகனம் எதுவுமில்லை..

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சொத்து - 88 கோடி


பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவி தனது சொந்த ஊரான பாலகொல்லு தொகுதியில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி சுரேகா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த வேட்பு மனுவில் சிரஞ்சீவிக்கு 88 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி தனது மனுவில் சென்னையில் தனக்குப் பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் செஞ்சுரி பிளாசாவில் ஒரு கடையும், அண்ணாசாலை டெம்பிள் டவர்ஸில் 1200 சதுர அடி பரப்பளவுள்ள ஷோரூமும் உள்ளது. இதன் மதிப்பு மூன்றரை கோடியாம்.

மேலும் சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் நாலரை கோடி மதிப்புள்ள நிலமும், கிருஷ்ணா கார்டனில் 2 கோடி மதிப்புள்ள சொத்து, சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடமும் உள்ளது.

ஐதராபாத்தில் உள்ள இவரது வீட்டின் மதிப்பு மட்டும் 14 கோடியாம். அவரது வீடு 3 ஆயிரத்து 333 அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

ஆந்திரா, தமிழ்நாடு தவிர சிரஞ்சீவிக்கு கர்நாடக மாநிலத்திலும் அதிக அளவில் சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பெங்களூரில் வணிக வளாகங்களும், புறநகர்ப் பகுதிகளில் விவசாய நிலமும் உள்ளது.

ராஜசேகர ரெட்டியின் சொத்து விவரம்


ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகரரெட்டி கடப்பா மாவட்டம் பிலிவேந்தலா சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருடைய சொத்துப் பட்டியலைப் பார்ப்போம்..

ரெட்டியின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து, 78 ஆயிரத்து 487 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. வங்கி கையிருப்பு 12,379. வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை 1 லட்சத்து 93 ஆயிரத்து 797. அவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் 44 லட்சத்து 54 ஆயிரத்து 643 ரூபாய் டெபாஸிட்டும், ரூ.31,069 வங்கி கையிருப்பும் உள்ளது.

ராஜசேகர் ரெட்டிக்கு சொந்தமாக வேம்பள்ளி கிராமத்தில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், அவரது மனைவி பெயரில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிலமும் உள்ளன. கடப்பாவில் ராஜசேகரரெட்டியின் பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு 8 லட்சத்து 97 ஆயிரத்து 250 ரூபாய். அதே பகுதியில் அவரது மனைவி பெயரில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தனியார் நிறுவனங்களில் ராஜசேகரரெட்டி பெயரில் 2 ஆயிரம் ரூபாயும், ஏ.பி.ஸ்டீல்ஸ் லிமிடெட்டில் ஆயிரம் பங்குகளும் உள்ளன.

விஜயலட்சுமி பெயரில் சரஸ்வரி பவர் இண்டஸ்ட்ரியல் என்ற நிறுவனத்தில் 35 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேசிய சேமிப்புப் பத்திரம், 2 லட்சத்து 43, 848 ரூபாயில் எல்.ஐ.சி. பாலிஸி பத்திரங்களும் வைத்துள்ளார். ராஜசேகரரெட்டிக்கு சொந்தமாக சுமார் 74 பவுன் தங்க நகைகளும், 13 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. அவரது மனைவியின் பெயரில் சுமார் 72 பவுன் தங்கநகைகளும், பத்து லட்சம் மதிப்புள்ள வைர நகைகளும் உள்ளன. இருவரின் பெயரில் கார் உட்பட வேறெந்த வாகனங்களும் இல்லை.

ஜக்மோகன் ரெட்டி - 77 கோடி

ராஜசேகர ரெட்டியின் மருமகன் ஜக்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பும் குறைவில்லை.. 77 கோடிதானாம்..

ராஜகோபால் - 299 கோடி

விஜயவாடா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் ராஜகோபால் தனக்கு 299 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திராவின் மருமகன். முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் தீவிர ஆதரவாளர். இவரது மனைவி பத்மாவின் பெயரிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளனவாம்.

ஆதிகேசவலு - 67 கோடி

சித்தூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் ஆதிகேசவலுக்கு 67 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளனவாம்.

சந்திரபாபு நாயுடு - 69 கோடிஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தனக்கு 69 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காண்பித்துள்ளார்.

சஷி தரூர் - 21 கோடி


திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சஷி தரூருக்கு 21 கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்கள் உள்ளனவாம்.

தரூரின் பெயரில் 14 கோடியே 41 லட்சமும், அவரது மனைவி கிறிஸ்டா கைல்ஸின் பெயரில் 4 கோடியே 80 லட்ச ரூபாயும் உள்ளதாம். இவரது பெரும்பாலான சொத்துக்கள் வெளிநாடுகளில்தான் உள்ளது.

தரூர் மற்றும் அவரது மனைவியின் சொத்தில் 15 கோடி ரூபாய் வங்கி சேமிப்பு, டிபென்ச்சர்கள், பங்குகளாக இருக்கி்ன்றன. கனடாவில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு, எர்ணாகுளத்தில் 24.96 லட்சம் மதிப்பில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, பாலக்காட்டில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பில் பூர்வீகச் சொத்து, துபாயில் உள்ள அஃப்ராஸ் வென்ச்ர்ஸ் நிறுவனத்தின் தலைவரான தரூரிடம் கைக்காசாக 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாம். தங்கம், வெள்ளி வாகனங்கள் எதுவும் இல்லையாம்..

வீரப்ப மொய்லி


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி சிக்பல்லபூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்துப் பட்டியல் இது..

மொய்லியின் பெயரில் வங்கியில் பத்து லட்சம் ரூபாய் டிபாசிட் தொகை உள்ளது. கையிருப்பு பணம் 60 ஆயிரம் ரூபாய்தான். இரண்டு லட்சம் மதிப்புள்ள கார். 40 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பங்கு பத்திரங்கள் உள்ளன. ஆனால் அசையா சொத்துக்களோ, நகைகளோ இவர் பெயரில் இல்லை.

மொய்லியின் மனைவி மாலதி பெயரில் பெங்களூரு ஆர்.டி.நகரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா உள்ளது. அதுபோல ராமநகர மாவட்டத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17.27 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதே மதிப்பிற்கு கர்கலாவில் மூன்றரை ஏக்கர் பண்ணை நிலம் உள்ளது.

மனைவி பெயரில் வங்கி டிபாசிட் பணம் 11 லட்சம். ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிற்கு நகைகள் உள்ளன. மொய்லிக்கு கடன் எதுவும் இல்லை. ஆனால் அவர் மனைவிக்கு வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் உள்ளது..

பல ஆண்டுகள் அரசியலில் உள்ள வீரப்பமொய்லி மீது எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயசங்கர் - 2 கோடி

மைசூரில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயசங்கருக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீகச் சொத்துக்கள் உள்ளனவாம். கூடவே 550 செம்மறி ஆடுகளும் சொந்தமாக உள்ளனவாம். இவற்றின் மதிப்பு 10 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி சரோஜாம்மாவுக்கு 21 ஆயுள் காப்பீட்டு பாலிஸிகள் உள்ளன.(??????????)

சாந்தி - 4.11 கோடி

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராமுலுவின் தங்கை சாந்தி பெல்லாரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு 4.11 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. 500 கிராம் அளவுக்கு தங்க நகைகள் உள்ளனவாம்.

பிரகாஷ் ரதோட் - 4 கோடி

கர்நாடக மாநிலம் பூஜப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் பிரகாஷ் ரதோட், தனக்கு நான்கு கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவரது கையிருப்பில் 2.2 லட்சம் ரூபாயும், நான்கு கார்களும் உள்ளனவாம்.

பிரகாஷ் ஜா - 55 கோடி


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்ஜா.. பல பாலிவுட் மற்றும் ஜோத்பூரி மொழி படங்களை எடுத்தவர். இயக்குநராகவும் இருந்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பஸ்வானின் லோக்ஜனசக்தி சார்பில் மகாராஷ்டிராவில் மந்த்ராகோண்டா தொகுதியில் போட்டியிடுகிறார் இவர்.

இவர் சொத்து மதிப்பாக வேட்புமனுவுடன் காட்டியிருப்பது 55 கோடி ரூபாய். பிரகாஷ் ஜாவின் சாத்துக்களில் கையிருப்பு பணம், வங்கிகளில் டெபாசிட் தொகை, நடத்தி வரும் பட நிறுவனங்கள், நகைகள், சொந்த ஊரான பீகாரின் பஸ்ஸிம் சேம்பரான் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்துக்கள், மகாராஷ்டிராவில் வாங்கிய சொத்துக்கள் ஆகியவை அடங்கும். அசையா சொத்துக்களில் விவசாய நிலங்களும் இருக்கின்றன. அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 16 கோடி ரூபாய். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜா பாலிவுட்டில் நுழைந்து பல படங்களை தயாரித்தவர்.

கரண்சிங்தன்வார் - 150 கோடி

தெற்கு டில்லி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் கரண்சிங்தன்வார் தனக்கு 150 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.

நவீன் பட்நாயக் - 7.98 கோடி


ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவருக்கு 7.98 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளனவாம். வங்கியில் 57 ஆயிரம் ரூபாய் கையிருப்பு உள்ளதாம்.

சுப்ரியா சுலே - 53 கோடி


மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாரமதி தொகுதியில் போட்டியிடும் சுப்ரியா சுலேவுக்கு 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளனவாம்.

எம்.கே.சுப்பா - 60 கோடி

அசாம் மாநிலம் தேஜ்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.கே.சுப்பாவுக்கு 60 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளனவாம்.

வின்சென்ட் பாலா - 24.5 கோடி

மேகலயா மாநிலத்தின் ஷில்லாங் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வின்சென்ட் பாலா என்ற வேட்பாளரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு 12.5 லட்சமாம். இவரது குடும்பச் சொத்தின் மதிப்பு 24.5 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மிலிந்த் தியாரோ - 17.15 கோடி

மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மிலிந்த் தியாரோ தனக்கு 17.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரியா தத் - 37 கோடிமும்பை வடமத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மறைந்த நடிகர் சுனில்தத்தின் மகள் பிரியாதத் தனக்கு 37 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாந்த்ரா பகுதியில் விவசாய நிலங்கள், வர்த்தக மற்றும் குடியிருப்புகள், கட்டிடங்களின் மதிப்பு 31.77 கோடி என கூறியுள்ளார்.

மகேஷ் ஜெத்மலானி - 28 கோடி

இதே தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வக்கீல் ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ்ஜெத்மலானி தனக்கு 28 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்வானி - 3.5 கோடிபாரதீய ஜனதா தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு 3.5 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டியுள்ளார்.

டில்லி அருகே உள்ள குர்கானில் 92.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள் உள்ளன. காந்தி நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு வீடு உள்ளது. வங்கியில் அத்வானியின் பெயரில் 67.56 லட்சம் ரூபாயும், அவரது மனைவி பெயரில் 36.56 லட்சம் ரூபாயும் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.

16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இவர்களுடைய குடும்பத்தில் உள்ளதாம். கையிருப்பாக அத்வானியிடம் 20 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவியிடம் 5000 ரூபாயும் உள்ளதாம்.

கடந்த 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது அத்வானியின் சொத்து மதிப்பு 1.30 கோடி ரூபாய்தான்.. 5 வருஷத்துல 2 கோடியே 10 லட்சம் ரூபாய் உயர்ந்திருக்கு. இந்த அளவுக்குக்கூட உசரலைன்னா இவர் என்ன தலைவரு..?

ஜஸ்வந்த்சிங்


பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் போட்டியிடுகிறார். இவருக்கு அத்தொகுதியில் செல்வாக்கு மிகுந்த கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு முழு ஆதரவு அளித்துள்ளது. இவர் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியலில் அரேபியக் குதிரைகள் இடம் பெற்றிருப்பது சுவாரசியம்தான்..

சவூதி அரேபிய இளவரசர் கொடுத்த இரண்டு அரேபிய குதிரைகள், ராஜஸ்தானில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்கள், ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜோத்பூர் பண்ணை வீடு மற்றும் பங்களா, டில்லியில் உள்ள குடியிருப்பின் மதிப்பு எட்டு கோடி ரூபாயாம்.

வங்கியில் கையிருப்பு எட்டு லட்சம் ரூபாய். பியட் காரின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய். டிராக்டரின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய். மனைவியிடம் உள்ள இன்னோவா காரின் மதிப்பு 9.5 லட்சம் மதிப்பு மற்றும் யூனோ காரின் மதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். கால்நடைகளின் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய். கைவசமுள்ள நகைகளின் மதிப்பு ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

மாட்டு வண்டிதான் சொத்து..!

ரொக்கப் பணமும், அசையா சொத்துக்களான கட்டிடங்களும், நகைகளையும் பல வேட்பாளர்கள் தங்களது சொத்தாகக் காட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அம்லாவே மாட்டுவண்டிதான் தனது வாகனச் சொத்து என்று கணக்குக் காட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் ராஜ்கர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் இவருடைய வங்கிக் கணக்கில் 1612 ரூபாய் இருக்கிறதாம். சொந்தமாக 22 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், ஒரே ஒரு காளை மாடு என்று வாயில்லா ஜீவன்கள் சொத்துக்களாக உள்ளன. தனது பெயரில் 6.3 ஹெக்டேர் நிலமும், தனது மனைவி பெயரில் 3 ஹெக்டேர் நிலமும், 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்மோட்டார் ஒன்றும் சொந்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனாலும் இவரது மனைவியின் பெயரில் 19 லட்சம் ரூபாய்க்கான சொத்துக்கள் தனியாக உள்ளது என்று கணக்குக் காட்டியுள்ளார்.

இந்தப் பட்டியல் மேலும் மேலும் வந்து கொண்டேயிருக்கிறது என்பதால் அவ்வப்போது இந்தப் பதிவு அப்டேட் செய்யப்படும்.

நன்றி..!

38 comments:

Cable சங்கர் said...

அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..?

இராகவன் நைஜிரியா said...

சொல்லியது பாதி.. சொல்லாதது மீதி...

இவர்கள் சொல்வது எல்லாம் ஒரு கணக்கா... சாதாரண ஒரு கவுன்சிலர்கிட்ட கூட இதைவிட அதிகமா இருக்குங்களே..

// Cable Sankar said...

அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..? //

என்னங்க இது.. அண்னணைப் பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க.. அவர் பாவங்க...

குடுகுடுப்பை said...

நிறைய பேர் உண்மை பேசுவது போல் உள்ளது , மகிழ்ச்சி

கதிரவன் said...

இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் தமிழ் நாட்டு வேட்பாளர்கள் பெயரை வெளியாடத உங்கள் ‘அரசியலை'க் கண்டிக்கிறேன்

கிரி said...

ஆந்திராவில் போன தேர்தலில் ஒருவருக்கு சொத்து மதிப்பு 99 கோடி தற்போது 299 கோடி, இது அதிகார பூர்வமான தகவலாக அவர் கொடுத்தது. 3000% அதிகம் ஆகி உள்ளது.

நம் தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் மிகவும் ஏழைகள் போல உள்ளது. ஒருவரை கூட இந்த லிஸ்ட் ல் காணவில்லை ;-)

SurveySan said...

அன்னையின் ஏழ்மை நிலை மனவருத்தத்தைத் தருகிறது.

ஜஸ்ட் 1.38 க்ரோர்ஸ்?

:)

தங்கமீன் said...

என்னிடம் உள்ளது 4 பீடி.

malar said...

////அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..?///

உங்கள் பதிவை படித்து முடிக்கும் போது மேலே உள்ள கேள்வி என்மனதில் தோன்றியது .பின்னுட்டத்தில் Cable சங்கர் கேட்டுவிட்டார் .

சுந்தரராஜன் said...

Cable Sankar said...

அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..?

Please answer this question..! :)

நையாண்டி நைனா said...

அல்லாரும் எங்கள் அண்ணன் உண்மைதமிலனிடம் எதனி கோடி உள்ளது என்று கேள்வி கணைகளை தொடுத்து உள்ளார்கள்.

இதெல்லாம் எதிர் கட்சிகளின் சதி என்று நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

எங்கள் தங்கம் உங்களுக்காக பிளாக் எழுதி, எழுதி தேய்ந்த கைகளுக்கு சொந்தக்காரர், பிறர் போல் ஊழலில் தோய்ந்த கைகளுக்கு சொந்தக்காரர் அல்ல என்று இங்கே அறிவிக்கிறேன்.

பழனி மலை ஆண்டி சரவணன் தான் பல கோடிகளுக்கு சொந்தக்காரன்.
ஆனால் இந்த சரவணன் உண்மையிலேயே ஆண்டி தான் என்று தொண்டர்களாகிய உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அண்ணனின் ஆற்றல் பராக்கிரமம் மற்றும் புகழை கண்டு "எரியும்" சில உள்ளங்கள் "எறியும்" அற்ப கேள்விகளே இது. ஆகவே தொண்டர்களே நீங்கள் இது கண்டு பொறுமை இழக்க வேண்டாம், நாம் நம் பெருமை இழக்க வேண்டாம்.

கழக கண்மணிகளே... நாம் நம் அண்ணன் உண்மைத்தமிழனின் கரத்தை வலுவாக்க அவரை ஜிம்முக்கு அனுப்புவோம், அதாவது சட்டசபைக்கு அனுப்புவோம்.

ஆகவே உங்களின் பொற்கரத்தால் அண்ணன் அவர்கள் சார்பாக, உண்டியல் ஏந்தி வரும் உங்கள் நண்பன், உங்கள் வீட்டு பிள்ளை, அண்ணன் உண்மைத்தமிழனின் போர்வாள், அண்ணன் அவர்களின் போர் முரசு நையாண்டி நைனா ஏந்தி வரும் உண்டியலில் தாரளமாக நிதி அளித்து ஆதரவு தாருங்கள்,

நீங்கள் அளிக்கும் இந்த நிதியில் தான் அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு ஒரு புது "கோடி" துண்டே வாங்க போகிறோம். அதுவும் அது அவர் தலையில் போடுவதற்கு என்றும் நான் சொல்லி உங்களுக்கு புரியும் நிலையில் நீங்கள் இல்லை என்று அனைவரும் அறிவர்.

ஏன் எனில் தொண்டர்களாகிய நீங்கள் சுத்தமான தமிழ்பால் குடித்தவர்கள், பாவம், நீங்ககுடிக்கும் பசும்பால் தான் கலப்படம் செய்யப்பட்டது. இந்த இழி நிலை அகல அண்ணன் உண்மை தமிழன் அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.

இதன் மூலம் அண்ணன் உண்மைதமிழனை கேள்வி கேட்ப்பவர்களுக்கு நான் அறைகூவல் விடுகிறேன். எங்கள் அண்ணன் மாசற்ற மாணிக்கம், களங்கமில்லா கலங்கரை விளக்கம், ஊழல் செய்யா ஊழியன், சுத்தமான சுடர் ஒளி, தன்னிகரில்லா தமிழ்மகன். அவர் பதிவுகளில் தான் கோடிக்கணக்கான சொற்கள் இருக்குமே ஒழிய அவர் பாக்கட் என்றுமே காலி, காலி, காலி தான் என்று கூறி என் உரையை முடித்து கொள்கிறேன்.

மீறி இன்னும் கேள்விகளோடு காத்திருப்பவர்கள் அண்ணன் அவர்களுக்கு ஒரு பதிவை டைப் செய்து கொடுத்துவிட்டு கேள்வி கேட்க அழைக்க படுகிறார்கள்.

சுட்டி குரங்கு said...

கோடி எல்லாம் நான் இந்த மாதிரி news ள்ள பாத்தா தான் உண்டு :-)

ஒரு காசு said...

என்ன மாதிரி சாமனியர்களோட ரத்த அழுத்தத்த அதிகப்படுத்துவதற்கான பதிவு இது.

அத்திரி said...

அண்ணே நமம் ஊர் அரசியல்வாதிங்க சொத்து விவரத்தை ஒரே பதிவில் சொல்ல முடியுமா?????????

ராஜ நடராஜன் said...

//நம் தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் மிகவும் ஏழைகள் போல உள்ளது. ஒருவரை கூட இந்த லிஸ்ட் ல் காணவில்லை ;-)//

அண்ணன் ட்ரில்லியன் லிஸ்ட் வெளியிடுவாரு!அப்ப பார்த்துக்கிட்டாப் போச்சு.

தீப்பெட்டி said...

ஆமா தமிழ் நாட்டுல யாரும் தேர்தல்ல நிக்குற கோடீஸ்வரங்க இல்லியா? இல்ல உண்மைய சொல்ல பயப்படுராங்களா?
ஆனாலும் கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு. நம்மாளுங்க லிஸ்டையும் போடுங்க.
இந்த விஷயத்துலயும் தெற்கு தேயுது. வடக்கு வாழுது.

வால்பையன் said...

வெளிநாட்டு வங்களில் இருக்கும் சொத்து விபரம் எப்போ வரும்?

Prabhu said...

60 வருஷமா ஆண்ட குடும்பத்தில 2 கோடிதான் சொத்துன்னா..... கேக்குறவன் கேனப் பயன்னா எலி ஏரோப்ளேன் ஓட்டுமாம்.

டி.அருள் எழிலன் said...

உண்மைத் தமிழன் உங்கள் சொத்து விபரத்தைச் சொல்லியே?

உண்மைத்தமிழன் said...

//Cable Sankar said...
அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..?//

கோடி இருந்தா இப்படி எழுதிக்கிட்டிருப்பனா அண்ணே..!

கோடிகளை எடுத்துக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்க மாட்டேனா..?

உண்மைத்தமிழன் said...

///இராகவன் நைஜிரியா said...

சொல்லியது பாதி.. சொல்லாதது மீதி... இவர்கள் சொல்வது எல்லாம் ஒரு கணக்கா... சாதாரண ஒரு கவுன்சிலர்கிட்டகூட இதைவிட அதிகமா இருக்குங்களே..//

உண்மைதான்.. வருமான வரித்துறை என்றொரு அமைப்பு நாட்டில் இருக்கிறதா என்பதே கேள்விக்குறி..


அந்த அமைப்பினர் அரசியல்வியாதிகளின் மேல் மட்டும் கை வைக்க மாட்டார்கள். மாட்டிக் கொள்வதெல்லாம் தொழிலதிபர்களும், ஆளும்கட்சிக்கு எதிரானவர்களும்தான்..

// Cable Sankar said...
அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..? //

என்னங்க இது.. அண்னணைப் பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க.. அவர் பாவங்க...///

இராகவன் ஸார்..

கண்ணுல தண்ணி வருது.. எம்புட்டு தூரத்துல இருந்தும் இப்படி பாசமா..? நேர்ல வாங்க கட்டி அணைச்சு உம்மா தர்றேன்..

உண்மைத்தமிழன் said...

//குடுகுடுப்பை said...
நிறைய பேர் உண்மை பேசுவது போல் உள்ளது, மகிழ்ச்சி.//

குடுகுடுப்பை ஸார்.. நிச்சயம் இதில் உண்மை இருக்காது.. பாதி பொய்யாகத்தான் இருக்கும்..

காட்டியது கொஞ்சந்தான்.. காட்டாததுதான் அதிகம்..!

உண்மைத்தமிழன் said...

//கதிரவன் said...

இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் தமிழ் நாட்டு வேட்பாளர்கள் பெயரை வெளியாடத உங்கள் ‘அரசியலை'க் கண்டிக்கிறேன்.//

கதிரவன் அண்ணே..

தமிழ்நாட்டுல இன்னமும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கலைண்ணேன்..

தொடங்கினவுடனேயே அந்தப் பட்டியலும் வெளியாயிரும்.. உடனேயே டைப் பண்ணிப் போடுறேன்.. வெயிட் பண்ணுங்க..

உண்மைத்தமிழன் said...

///கிரி said...

ஆந்திராவில் போன தேர்தலில் ஒருவருக்கு சொத்து மதிப்பு 99 கோடி தற்போது 299 கோடி, இது அதிகாரபூர்வமான தகவலாக அவர் கொடுத்தது. 3000% அதிகம் ஆகி உள்ளது.//

உண்மைதான்.. இது அங்கே இப்போது பரபரப்பு செய்தியாகியுள்ளது..

//நம் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் மிகவும் ஏழைகள் போல உள்ளது. ஒருவரை கூட இந்த லிஸ்ட்ல் காணவில்லை;-)//

வேட்புமனுத் தாக்கல் தொடங்கியவுடன் லிஸ்ட்டுகள் தானாகவே வெளி வரும்..

உண்மைத்தமிழன் said...

//SurveySan said...

அன்னையின் ஏழ்மை நிலை மனவருத்தத்தைத் தருகிறது.

ஜஸ்ட் 1.38 க்ரோர்ஸ்?

:)//

அதாண்ணேன்.. எனக்கும் கவலையா இருக்கு..

ஒருவேளை அன்னைக்கு எப்படி சம்பாதிக்கணும்னு தெரியாம போயிருச்சோ..?

என்னை மாதிரி ஆளுகளை பக்கத்துல வைச்சுக்கிட்டா சொல்லித் தரலாம்.. ம்.. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் சர்வேஸன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

//நகைக்கடை நைனா said...

என்னிடம் உள்ளது 4 பீடி.//

பீடியை வைச்சு ஒண்ணும் பண்ண முடியாது நைனா.. தீப்பெட்டி இருக்கா..?

உண்மைத்தமிழன் said...

///malar said...

//அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..?//

உங்கள் பதிவை படித்து முடிக்கும் போது மேலே உள்ள கேள்வி என் மனதில் தோன்றியது. பின்னுட்டத்தில் Cable சங்கர் கேட்டுவிட்டார்.///

மலரு.. சந்தோஷம்.. இப்படியாச்சும் எல்லார் மனசுலேயும் நான் இருக்கனே.. இதைவிட என்ன பெரிசா வேணும்..?

உண்மைத்தமிழன் said...

///சுந்தரராஜன் said...

Cable Sankar said...

அதெல்லாம் சரி.. எழுதின உங்ககிட்ட எவ்வளவு கோடியிருக்குண்ணே..?

Please answer this question..! :)///

அண்ணே.. நீங்களுமா..?!

உண்மைத்தமிழன் said...

///நையாண்டி நைனா said...

அல்லாரும் எங்கள் அண்ணன் உண்மைதமிலனிடம் எதனி கோடி உள்ளது என்று கேள்வி கணைகளை தொடுத்து உள்ளார்கள். இதெல்லாம் எதிர்கட்சிகளின் சதி என்று நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.//

நெசந்தான் நைனா.. முதல்ல இந்தக் கேள்வியைக் கேட்டவர் யாருன்னு உனக்குத் தெரியுதா.. சதி எங்கேயிருந்து ஆரம்பிக்குதுன்னு புரிஞ்சிருக்குமே..?!

//எங்கள் தங்கம் உங்களுக்காக பிளாக் எழுதி, எழுதி தேய்ந்த கைகளுக்கு சொந்தக்காரர், பிறர் போல் ஊழலில் தோய்ந்த கைகளுக்கு சொந்தக்காரர் அல்ல என்று இங்கே அறிவிக்கிறேன்.//

ஐயோ.. ஐயோ.. நைனாஜி நீங்க என்னை ரொம்பப் புகழ்றீங்க..?

//பழனி மலை ஆண்டி சரவணன்தான் பல கோடிகளுக்கு சொந்தக்காரன். ஆனால் இந்த சரவணன் உண்மையிலேயே ஆண்டிதான் என்று தொண்டர்களாகிய உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.//

சத்தியமான உண்மை.. அந்த ஆண்டியைப் போலவே என்னிடமும் சொத்தாக அந்த ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு நைனா.. அதைத்தான் வருஷக்கணக்கா துவைச்சு, துவைச்சு திருப்பித் திருப்பி கட்டிக்கிட்டிருக்கேன்..

//அண்ணனின் ஆற்றல் பராக்கிரமம் மற்றும் புகழை கண்டு "எரியும்" சில உள்ளங்கள் "எறியும்" அற்ப கேள்விகளே இது. ஆகவே தொண்டர்களே நீங்கள் இது கண்டு பொறுமை இழக்க வேண்டாம், நாம் நம் பெருமை இழக்க வேண்டாம்.//

கரீக்ட்டு நைனா.. அந்த ஒண்ணே ஒண்ணும் என் கைல இருக்குன்றதே இவுகளுக்கு எரிச்சலா இருக்கே.. அதையும் இவுககிட்ட கொடுத்திட்டு நான் என்ன செய்ய..? 'மறைக்கிறதுக்கு' ஏதாச்சும் வேணுமே..?

//கழக கண்மணிகளே... நாம் நம் அண்ணன் உண்மைத்தமிழனின் கரத்தை வலுவாக்க அவரை ஜிம்முக்கு அனுப்புவோம், அதாவது சட்டசபைக்கு அனுப்புவோம்.//

இது பாயிண்ட்டு.. நான் ரெடியாத்தான் இருக்கேன்.. யாராச்சும் வாங்கப்பா..!

//ஆகவே உங்களின் பொற்கரத்தால் அண்ணன் அவர்கள் சார்பாக, உண்டியல் ஏந்தி வரும் உங்கள் நண்பன், உங்கள் வீட்டு பிள்ளை, அண்ணன் உண்மைத்தமிழனின் போர்வாள், அண்ணன் அவர்களின் போர் முரசு நையாண்டி நைனா ஏந்தி வரும் உண்டியலில் தாரளமாக நிதி அளித்து ஆதரவு தாருங்கள்.//

நைனாஜி.. நாம இன்னமும் சந்திச்சுப் பேசி ஒரு முடிவுக்கு வரலை.. அதுக்குள்ள கழகத்தினர் மாதிரி வசூலுக்கு கிளம்பிட்டா எப்படி..?

//நீங்கள் அளிக்கும் இந்த நிதியில்தான் அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு ஒரு புது "கோடி" துண்டே வாங்க போகிறோம். அதுவும் அது அவர் தலையில் போடுவதற்கு என்றும் நான் சொல்லி உங்களுக்கு புரியும் நிலையில் நீங்கள் இல்லை என்று அனைவரும் அறிவர்.//

எப்படி? கோடி துண்டை போட்டுக்கின்னு அப்படியே நான் ஓரமாப் போய் குந்திக்கணும்.. வசூலோட நீ எஸ்கேப்பாயிரலாம்னு பாக்குறியா..? பிய்ச்சுருவேன் பிச்சு..!

//ஏன் எனில் தொண்டர்களாகிய நீங்கள் சுத்தமான தமிழ்பால் குடித்தவர்கள், பாவம், நீங்ககுடிக்கும் பசும்பால்தான் கலப்படம் செய்யப்பட்டது. இந்த இழி நிலை அகல அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.//

மொதல்ல வசூல் கணக்கை காண்பிச்சிட்டு அப்பால கோஷம் போடு..! நான் எத்தனி பேரை பார்த்திருக்கேன்..

//இதன் மூலம் அண்ணன் உண்மைதமிழனை கேள்வி கேட்ப்பவர்களுக்கு நான் அறைகூவல் விடுகிறேன். எங்கள் அண்ணன் மாசற்ற மாணிக்கம், களங்கமில்லா கலங்கரை விளக்கம், ஊழல் செய்யா ஊழியன், சுத்தமான சுடர் ஒளி, தன்னிகரில்லா தமிழ்மகன். அவர் பதிவுகளில்தான் கோடிக்கணக்கான சொற்கள் இருக்குமே ஒழிய அவர் பாக்கட் என்றுமே காலி, காலி, காலிதான் என்று கூறி என் உரையை முடித்து கொள்கிறேன்.//

சுருக்கமா ஒண்ணாம் நம்பர் பிச்சைக்காரன்னு நீயே சொல்லிட்ட..! இதுக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா..?

//மீறி இன்னும் கேள்விகளோடு காத்திருப்பவர்கள் அண்ணன் அவர்களுக்கு ஒரு பதிவை டைப் செய்து கொடுத்துவிட்டு கேள்வி கேட்க அழைக்கபடுகிறார்கள்.///

எதுக்கு டைப் செஞ்சு..? உன்கிட்ட கொடுக்கப் போற காசை என் கைல கொடுத்திட்டாலே போதுமே..

ஐயா, நைனாஜி.. நையாண்டி ஸார்..

கொன்னுட்டீங்க.. பின்னிட்டீங்க.. பிச்சுட்டீங்க.. அபாரம்.. உங்க அன்புக்கு ஒரு எல்லையே இல்லையா..?

முருகன் என்றென்றும் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்..!

உண்மைத்தமிழன் said...

//சுட்டி குரங்கு said...

கோடி எல்லாம் நான் இந்த மாதிரி newsள்ள பாத்தாதான் உண்டு :-)//

நாங்களும்தான் சுட்டி ஸார்..

பெயர் வித்தியாசமா அமர்க்களமா இருக்கு..

வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

//ஒரு காசு said...

என்ன மாதிரி சாமனியர்களோட ரத்த அழுத்தத்த அதிகப்படுத்துவதற்கான பதிவு இது.//

எங்களுக்கும்தான் பி.பி. எகிறிப் போய்க் கிடக்கு.. யார்கிட்ட போய்ச் சொல்றது..?

உண்மைத்தமிழன் said...

///அத்திரி said...
அண்ணே நமம் ஊர் அரசியல்வாதிங்க சொத்து விவரத்தை ஒரே பதிவில் சொல்ல முடியுமா?????????///

முடியாது ராசா.. நாலு பதிவு வேணும்..

ஒரு கட்சிக்கு ஒண்ணுன்னு போட்டுத்தான ஆகணும்.. வரட்டும்.. பார்க்கலாம்..

உண்மைத்தமிழன் said...

///ராஜ நடராஜன் said...

//நம் தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் மிகவும் ஏழைகள் போல உள்ளது. ஒருவரை கூட இந்த லிஸ்ட் ல் காணவில்லை ;-)//

அண்ணன் ட்ரில்லியன் லிஸ்ட் வெளியிடுவாரு! அப்ப பார்த்துக்கிட்டாப் போச்சு.///

பாருங்க.. பாருங்க..

தமிழ்நாட்டு அரசியல்வியாதிங்க மேல அவ்ளோ நம்பிக்கை..

உண்மைத்தமிழன் said...

//வால்பையன் said...

வெளிநாட்டு வங்களில் இருக்கும் சொத்து விபரம் எப்போ வரும்?//

அது வரவே வராது.. வராமல் இருப்பதற்கான அனைத்து வேலைகளையும் கட்சி சார்பின்றி அனைத்து அரசியல்வியாதிகளும் செய்து வருகிறார்கள்..

உண்மைத்தமிழன் said...

//ஆதிரை said...
உண்மைத் தமிழன் உங்கள் சொத்து விபரத்தைச் சொல்லியே?//

கேபிளாருக்கு பதில் சொல்லிருக்கேன் ஆதிரை..

படிச்சுப் பாருங்க.

சொல்லரசன் said...

இததெல்லாம் சரி, சுவிஸ் வங்கியில் இருப்பதை யார் சொல்வது?

உண்மைத்தமிழன் said...

//சொல்லரசன் said...
இததெல்லாம் சரி, சுவிஸ் வங்கியில் இருப்பதை யார் சொல்வது?//

அதை யாரும் சொல்ல மாட்டாங்க. அதுலதான் எல்லாக் கட்சிக்காரங்களும் ஒண்ணா சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிச்சிருக்காங்க..

கொடும்பாவி-Kodumpavi said...

அட இவ்ளோ பெரிய்ய்ய பதிவு போடறீங்க ச்சும்மா அதுக்காகவாவது ‘எங்கிட்ட சில்லறையா சில கோடிதான் இருக்குன்னு' சொல்லலாமில்லையா.. ரொம்ப யாரவது கேட்டால் அப்புறமா இன்னொரு பதிவு போட்டு ஒரு ‘லுல்லுலாய்'க்கு சொன்னேன்னு சொல்லுங்க.
அண்ணே இப்படி சொன்னாதான் நாமளும் 'நாலு காசு எழுதி வச்சு' பாத்தாமாதிரி இருக்கும்.

நைனாஜி உண்டி குலுக்கறாரு.. நீங்க கணக்கு கேக்குறீங்க.. இப்ப தெரியுது உங்க அரசியல் 'ஞானம்'. இப்ப புரியுது உங்க அரசியல் 'சாணக்கியம்'.

இது .. இது ஒன்னு போது நீங்க தேர்தல்ல நிக்க.. உசுப்பேத்தறேன்னு நினைக்காதீங்க.. உண்மைய சொல்றேன்.. நீங்க நின்னா இந்த வலை உலகத்துக்கே நல்லது பண்ணுவீங்கங்கற நம்பிக்கைல சொல்றேன்.

தயவு செஞ்சு கேளுங்க.

அன்பில்லா கொடும்பாவி.

abeer ahmed said...

See who owns hps.org or any other website:
http://whois.domaintasks.com/hps.org