01-01-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழர்களின் வாழ்வைப் பொறுத்தவரையில் கருணையே இல்லாத 2009-ம் ஆண்டு விடைபெற்று 2010-ம் ஆண்டு அரியணை ஏறியிருக்கிறது.
சென்ற ஆண்டின் மிகப் பெரிய சோகமான ஈழத்தின் அழிப்பே கண் முன்பாக பிரதானமாகக் காட்சியளிப்பதால் எனது வலையுலக வாழ்க்கையையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
பதிவு எழுதுவதை நிறுத்தி வைக்கும் ஒரு விரதத்தில் இருந்தாலும், வருடத்தின் முதல் நாளே நமது எழுத்து அரியணை ஏறினால் பதிவுக்கும், பதிவுலகத்துக்கும் நல்லது என்று சென்டிமெண்ட்டல் டச் காரணமாக இந்தப் பதிவு.
சென்றாண்டை போலில்லாமல் இந்தாண்டாவது ஈழத்தின் கண்ணீருக்கு எந்த ரூபத்திலாவது ஒரு விடுதலை கிடைக்குமா என்று பார்ப்போம். இல்லாவிடில் தற்காலிக விடுதலையேனும் அம்மக்களுக்குக் கிடைத்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.
இந்தாண்டின் தத்துவப் பாடலாக ஏதாவது ஒரு திரைப்படப் பாடலை வெளியிடலாம் என்று நினைத்து கண்ணதாசனின் துணை கொண்டு தேடும்போது இந்த வார்த்தைகள் ஈ-மெயிலில் வந்தன.. பொறுக்கியெடுத்துக் கொண்டேன்..!
எனக்காக இந்த வருடத்தின் முதல் பதிவில் நமக்குத் தேவையான ஒரு செய்தி..
வாழ்க்கை ஒரு சவால்; அதனை எதிர்கொள்.
வாழ்க்கை ஒரு பரிசு; அதனை தயங்காமல் ஏற்றுக் கொள்.
வாழ்க்கை ஒரு சுவாரசியம்; அதனை கஷ்டப்பட்டாவது அடைந்து பார்.
வாழ்க்கை ஒரு கவலை; அதையும் ஒரு கை பார்த்துவிடு.
வாழ்க்கை ஒரு பயங்கரம்; எதுவாக இருந்தாலும் நேர்கொள்.
வாழ்க்கை ஒரு கடமை; அதை சரியாகச் செய்துவிடு.
வாழ்க்கை ஒரு விளையாட்டு; ஆசை தீர விளையாடு.
வாழ்க்கை ஒரு மர்மம்; எப்படியானாலும் கண்டுபிடி.
வாழ்க்கை ஒரு பாடல்; சிந்தை குளிர பாடிவிடு.
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்; தயங்காமல் எடுத்துக் கொள்.
வாழ்க்கை ஒரு பயணம்; தாமதமில்லாமல் பயணம் செய்.
வாழ்க்கை ஒரு சத்தியம்; தயவு செய்து இதனை மீறாதே.
வாழ்க்கை ஒரு காதல்; காதலியாக நினைத்து நிறைவேற்று.
வாழ்க்கை ஒரு அழகு; நிச்சயம் புகழ்ந்துவிடு.
வாழ்க்கை ஒரு ஆன்மா; அதன்படியே நடந்துவிடு.
வாழ்க்கை ஒரு போராட்டம்; துணிந்து போரிடு.
வாழ்க்கை ஒரு புதிர்; அதனை விடுவித்துப் பார் புரியும்.
வாழ்க்கை ஒரு லட்சியம்; முயன்றால் அடைந்தே தீருவாய்..!
|
Tweet |
