Showing posts with label சசிகலா. Show all posts
Showing posts with label சசிகலா. Show all posts

மிடாஸ் முதல் ஃபீனிக்ஸ்வரை - கணக்கில்லா கம்பெனிகள்... குவியும் சொத்துக்கள்..!

05-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதா, சசிகலா அண்ட் கோ- புதிது, புதிதாக நிறைய நிறுவனங்களைத் துவக்கியிருக்கிறார்கள் என்றும், அதில் ஒன்றான ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருக்கும் 11 லக்ஸ் சினிமா தியேட்டர்களை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் வெளியான செய்திகளையொட்டி ஜூனியர் விகடன் பத்திரிகை இந்த வாரம் எழுதியுள்ள கட்டுரை இது :

கணக்கில்லா கம்பெனிகள்... குவியும் சொத்துக்கள்..!

புதிய இளவரசர்கள்..!

மிடாஸ் முதல் ஃபீனிக்ஸ் வரை

பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா? போகாது என்பதற்கு உதாரணம் இவை.

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீது 1997-ம் ஆண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 18 ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடந்து... நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று.. அதன்பிறகு கர்நாடக உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனாலும் விவகாரம் முற்றுப் பெற்றுவிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பாக இதன் மேல்முறையீடு மனு விசாரணை நடக்க இருக்கும் நிலையில்... இப்போது வெளியில் கசிந்திருக்கும் ஆவணங்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளன.

யார்..? யார்...?

சசிகலா, இளவரசியின் குடும்பத்தினர் பெயர்களைத் தாங்கித் தொடங்கப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்கள், அதில் செய்யப்பட்ட முதலீடுகள் பற்றிய ஆவணங்களை மொத்தமாக மத்திய உளவுத் துறை அள்ளிச் சென்று உள்ளது.

சசிகலாவின் மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனன். அவருக்கு அனுராதா, டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி ஆகிய மூன்று வாரிசுகள் உண்டு. இதில் பிரபாவதியின் கணவரான டாக்டர் சிவக்குமார் பெயர், இந்த ஆவணங்களில் அதிகமாக வலம் வருகிறது. டாக்டர் வெங்கடேஷ், அவரது மனைவி ஹேமா வெங்கடேஷ் ஆகியோர் பெயர்களும் இடம் பெறுகின்றன.

இளவரசிக்கு கிருஷ்ணப்​பிரியா, சகீலா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், கிருஷ்ணப்பிரியாவின் கணவரான கார்த்திகேயனின் பெயர் அதிகமாக இடம்பெற்று உள்ளது. திருச்சியைச் சேர்ந்த கலியபெருமாளின் மகன் இந்த கார்த்திகேயன்.

ஜெயலலிதாவின் உதவி​யாளரான பூங்குன்றன் பெயரும் அதிகம் உள்ளது. 

எம்.நடராசனின் சகோதரியான ஆண்டாள் என்பவரின் மகனான குலோத்துங்கன் பெயர், சில நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது.

2015-ம் ஆண்டு வெளியான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களுடைய உறவினர்கள்தான் இந்தப் புதிய சொத்துக்களை நிர்வகித்து வருபவர்களாகவும், அவற்றை இயக்கும் சக்திகளாகவும் இருந்து வருகின்றனர்.


ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்

2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. 2011 டிசம்பரில் ‘ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்களாக இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி. மற்றொருவர், பூங்குன்றன்.

அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வை விட்டு நீக்கப்படுகிறார்கள். அப்போது, ‘சோ’ ராமசாமி இதனுள் சேர்க்கப்​படுகிறார். பூங்குன்றன் போயஸ் கார்டன் ஊழியர். போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரும் கடிதங்​கள், பத்திரிகைச் செய்திகளை ஜெயலலிதாவின் பார்வைக்குக்​கொண்டு செல்பவர். இவருடைய தந்தை பெயர் புலவர் மகாலிங்கம். ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையில் பணியாற்றியவர். 

பூங்குன்றனும், சோ ராமசாமியும்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் இயக்குநர்களாக இருந்தனர். நவம்பர் 2012-ல் சோ ராமசாமி இந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிடுகிறார். அதாவது சசிகலா, மீண்டும் உள்ளே வந்த பிறகு சோ விலகிவிடுகிறார். அதன் பிறகு, டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் என்ற இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஆகின்றனர்.

இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் சேர்மன் சசிகலா. 2014-ம் ஆண்டு, சேர்மன் சசிகலாவின் முன்னிலையில், இளவரசியை மற்றொரு ‘சேர் பெர்சன்’ என்று அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதோடு, இளவரசி எந்த நாளில் சசிகலா முன்னிலையில் ‘சேர் பெர்சன்’ என்று நியமிக்கப்படுகிறாரோ அன்றுதான் ‘ஹாட் வீல்ஸ்’ நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று மாற்றப்பட்டது. 


அதுதான் தற்போது வேளச்சேரி ‘ஃபீனிக்ஸ்’ மாலில் உள்ள நவீன வசதி படைத்த தியேட்டர்கள். (இதற்கான ஆதாரம் 7ம் பக்கத்தில்   காட்டப்பட்டு உள்ளது.) இளவரசியின் மகன் விவேக் ஜாஸ் சினிமாவின் சி.இ.ஓ. என காட்டப்பட்டிருக்கிறார்.

சந்தனா எஸ்டேட்ஸ்

1995-ல் சுதபத்துலு பாஸ்கர ராவ், அடப்பல வீர வெங்கடபாஸ்கர ராவ், அடப்பா நரசிம்ம ராவ், சுதபத்துலு வெங்கட ராம ராவ் என்பவர்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி நடத்திய நிறுவனம்தான், ‘சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்.’ அதன்பிறகு இந்த நிறுவனம் அவர்களிடம் இருந்து கைமாறி உள்ளது. 

ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ராவணன், இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். பிறகு, அவர் வெளியேறி உள்ளார். அவர் வெளியேறியதும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி இந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளே வந்துள்ளார். 

(ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டது மாதிரியே சோ சேர்க்கப்பட்டு பின்னர் விலகி உள்ளார்.) பிறகு, மீண்டும் ஒருகட்டத்தில், சோ ராமசாமி வெளியேறுகிறார். பூங்குன்றன் இயக்குநர் ஆகிறார். இடைப்பட்ட காலத்தில் சில நாட்கள்  தமிழ்மணி என்பவர் இயக்குநராக இருந்துள்ளார். 

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா, ராவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டபோது இந்த தமிழ்மணி, நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி நடைபெற்ற, ‘மியூஸிக்கல் சேர்’ போட்டியில், கடைசியில் இப்போது கார்த்திகேயன் மற்றும் டாக்டர் வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக அமர்ந்து இருக்கிறார்கள்.


ரெயின்போ ஏர்

ஆகஸ்ட் 1, 2009-ல் 5 கோடி ரூபாய் முதலீட்டில் ‘ரெயின்போ ஏர்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் பங்குதாரர்கள் வி.ஆர்.குலோத்துங்கன், சவுந்தரபாலன், கார்த்திகேயன். இது 38-16, ஜியான் அபார்ட்மென்ட்ஸ், 38, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர் சென்னை- 17 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. (இதே முகவரி 18 நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது) 

நாம் நேரில் போய்ப் பார்த்தபோது, அங்கு எந்த நிறுவனமும் இல்லை. ஆனால், குலோத்துங்கன் என்பவர் அங்கு வசிக்கிறார். ஒரு பெரிய அபார்ட்மென்டில் உள்ள ஒரு  வீடு அது. குலோத்துங்கனின் செக்யூரிட்டி மட்டும் இருக்கிறார்.

 லைஃப் மெட்

கோபாலபுரத்தில் ‘லைஃப் மெட்’ என்ற மருத்துவமனை உள்ளது. இதன் முகவரி, பழைய எண் 32. புதிய எண் 12. கான்ரான் ஸ்மித் சாலை, கோபாலபுரம், சென்னை-86. ஜனவரி 2011-ல் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் இயக்குநர்கள் திருநாராயணன் அருண்குமார், ஹேமா வெங்கடேஷ், டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர். 

மேவிஸ் சாட்காம்

1998-ம் ஆண்டு மேவிஸ் சாட்காம் நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி சிவக்குமார், சசிகலாவின் மற்றொரு அண்ணன் விநோதகனின் மகன் கே.வி.மகாதேவன் ஆகியோர் ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்துள்ளனர். 

தொடக்கத்தில் இதன் முதலீடு ரூ.21.20 கோடி. அதன் பிறகு, டாக்டர். வெங்கடேஷ் (அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையை தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்) இந்த நிறுவனத்தின் இயக்குநராக சிறிது காலம் இருந்துள்ளார். அதன் பிறகு, டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதா தினகரன், மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன் பிறகு, அ.தி.மு.க. எம்.பி-யாக இருந்த பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சிறிது காலம் இந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு, பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமார், மனோஜ் பாண்டியன், பழனிவேலு ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் பழனிவேலு என்பவர் சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் சகோதரர்.

இந்த நிறுவனத்தின் கீழ்தான், ‘ஜெயா’ தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவற்றின் குழுமச் சேனல்களையும் இந்த நிறுவனம்தான் ஒளிபரப்புகிறது. மேவிஸ் சாட்காம் என்பது நிறுவனத்தைப் பதிவு செய்வதற்காக கம்பெனி பதிவாளரிடம் கொடுக்கப்பட்ட பெயர்.

கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்

2002-ம் ஆண்டு, ராஜ் ஹெச்.ஈஸ்வரன், ஹரி ஈஸ்வரன் ஆகியோர் தொடங்கிய நிறுவனம் இந்த ‘கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்.’ இதன் முதலீடு தொடக்கத்தில் 5 லட்ச ரூபாய்.

பத்திரிகை, செய்தித்தாள், வார இதழ், புத்தகம் அல்லது இதர வடிவிலான ஊடகம் தொடங்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2004-ல் இந்த நிறுவனத்துக்குப் புதிதாக வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், அவருடைய சகோதரர் ஜெகதீசன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்பேற்று உள்ளனர். 

இதையடுத்து, 29 மார்ச் 2008-ல் வைகுண்டராஜனும், நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ராஜ் ஹெச்.ஈஸ்வரனும் ராஜினாமா செய்துள்ளனர். அதன்பிறகு வைகுண்டராஜனின் சகோதரர் ஜெகதீசன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர். அதன் பிறகு, பூங்குன்றன் இந்த நிறுவனத்துக்கு இயக்குநராகி உள்ளார். 2012-ம் வருடம், கார்த்திகேயன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகி இன்னும் தொடர்கின்றனர்.

மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்

எம்.நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனும், டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம்தான் மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ் நிறுவனம். 2008, பிப்ரவரி மாதம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் இது.

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இது சேர்க்கப்படவில்லை. எப்படியோ அப்போது இந்த நிறுவனம் தப்பி உள்ளது. 

இதன் ஆரம்ப முதலீடு 50 லட்ச ரூபாய். நிறுவனத்தின் தொழில் நோக்கம், அசையும் அசையாச் சொத்துக்களின் பேரில் நிதி வழங்குவது, கடன் வழங்குவது. அதன் பிறகு, 2002-ம் ஆண்டு, தங்கம், முத்து, பவளம், வைரம் வைடூரியம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு கடன் வழங்கலாம் என்று தொழில் நோக்கம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

அதன் பிறகு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2001-ல், இந்த நிறுவனத்தில் இருந்து விலகி, இரண்டு பேர் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் டாக்டர் சிவக்குமார். மற்றொருவர் அனந்தராமன். 

2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் முதலீடு 6 கோடியே ஆறரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள், கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார் மற்றும் பூங்குன்றன் ஆகியோர். இந்த நிறுவனத்தின் சார்பில் ஜெயலலிதாவுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் கொடுத்து உள்ளனர்.


மேலும் சில நிறுவனங்கள்...!

1. காட்டேஜ் ஃபீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்

இதில் டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் தொடர்பு உடையவர்களாக உள்ளார்கள்.

15.06.2012-ம் தேதியில் இருந்து இவர்களுக்கு இந்த நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது.

2. வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்

வைகுண்டராஜன் சுப்பிரமணியன், சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு  23.04.2012 முதல் தொடர்பு உள்ளது.

3. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு  15.06.2012 முதல் தொடர்பு உள்ளது.

4. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் பிரைவேட் லிமிடெட்

சிவக்குமார் பெயர் 14.06.2004 தேதியில் இருந்தும் கார்த்திகேயன் பெயர் 23.01.2012-ம் தேதியில் இருந்தும் இருக்கிறது.

5. அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்

சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரது பெயர்களும் 15.06.2012 முதல் உள்ளன.

6. ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்

வெங்கடாச்சலம், சங்கர்ராமன் ஆகிய இருவரும் 02.12.2013-ம் தேதியில் இருந்தும் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரும் 15.06.2012-ம் தேதியில் இருந்தும் தொடர்பில் உள்ளனர்.

விசாரணை வளையம்..?

சில மாதங்களுக்கு முன் டெல்லியில் வைத்து, சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தபோது, "சொத்துக் குவிப்பு வழக்கு என்பது 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான முறைகேடுகளுக்காக மட்டுமே போடப்பட்டது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அது சம்பந்தமாகத் தகவல்களைத் திரட்டி வருகிறேன். புது வழக்கை தாக்கல் செய்வேன்” என்று கூறினார். 

அப்போது முதலே அவர் தகவலைத் திரட்ட ஆரம்பித்து மத்திய அரசிடம் அந்த ஆவணங்களை ஒப்படைத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கப்பிரிவு போன்ற துறைகள் கண்கொத்திப் பாம்பாக இதனைக் கவனிக்க ஆரம்பித்து உள்ளன. தேர்தல் அஸ்திரங்களில் இதுவும் ஒன்றாக மாறலாம்.

எந்தெந்த நிறுவனங்கள்...?

18 ஆண்டு தலைவலிக்குப் பிறகு மீண்டு வந்து, (உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வராவிட்டாலும்…!) மீண்டும் பிரச்னை தரக்கூடிய நிறுவனங்களாக எழுந்து நிற்பவற்றில் சில...

1. ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் 

2.  சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்

3. ரெயின்போ ஏர் நிறுவனம்

4.  லைஃப்மெட்

5.  மேவிஸ் சாட்காம்

6.  கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்

7.  மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்

8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்

9.  காட்டேஜ் பீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்

10.  வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்

11.  சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

12. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் பிரைவேட் லிமிடெட்

13.  அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்

14.  ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்

15.  ஜாஸ் சினிமாஸ்

- இவற்றுக்குக் கீழே கிளை நிறுவனங்களாகப் பல உள்ளன.

கடன் பெற்றுள்ள நிறுவனங்கள்..!

ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம், ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். இதில், ஜெயா பிரின்டர்ஸ் என்ற நிறுவனம் 76 லட்சமும், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் என்ற நிறுவனம் 58 லட்சமும், மகாலெட்சுமி என்ற நிறுவனமும் மகாலெட்சுமி திருமண மண்டபமும் 28 லட்சமும் முதலீடு செய்துள்ளன. 

இந்த நிறுவனங்கள் எல்லாம் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்று நிரூபிக்கப்பட்டவை. 

அதாவது, அவர்களுடைய நிறுவனங்கள் அவர்களுடைய மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று, அவர்களுக்கே கடன் கொடுக்கும் தொழில் செய்துவருகின்றன. 

அது எப்படி என்பதற்கு ஆதாரமாக ஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளவர்களையும் முதலீடு செய்தவர்களையும் பார்த்தால் புரியும்.

1.ஜெயலலிதா, 2.வி.கே.சசிகலா, 3.இளவரசி, 4.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 5.ஃபேன்சி டிரான்ஸ்போர்ட்ஸ், 6.க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், 7.ஜெயா பிரின்டர்ஸ், 8.ஜெயா ரியல் எஸ்டேட்ஸ், 9.லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் அண்டு டெவலப்பர்ஸ், 10.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 11.ராயல் வேலி ஃப்ளிடெக் எக்ஸ்போர்ட்ஸ், 12.அவிக்னா அக்ரோ, 13.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 14.அவிரி ப்ராப்பர்ட்டிஸ், 15.பரணி ரிசார்ட்ஸ், 16.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 17.கோவிந்தராஜன், 18.ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங், 19.ஜெயா இன்வெஸ்ட்மென்ட் ஏஜென்சி, 20.வி.ஆர்.குலோத்துங்கன்

சத்யம் தியேட்டர  அதிபர் மீது நில அபகரிப்புப் புகார்

சென்னை, நுங்கம்பாக்கம், காசி கார்டன், குமரப்பா தெருவில், அடிபள்ளி கந்தசாமி செட்டி அண்டு செஞ்சு வெங்கடசுப்பு குருவஜம்மா அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் பொருளாளர் எதிஸ் குப்தா.

இவர் 2013-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், தங்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 16  கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு இன்றைய தேதியில் பல கோடி ரூபாய். 

ஆனால், அதை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் சம்பந்தியான உமா மகேஸ்வரி எங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையைக் கொடுத்து அபகரித்துக்கொண்டார். 

அப்படி அபகரித்துக்கொண்ட நிலத்தில், 2.5 கிரவுண்டை சூசய் ஆனந்த் ரெட்டி என்பவருக்கு விற்றுவிட்டார். அதை சூசய் ஆனந்த் ரெட்டி அவருடைய உறவினரான ஸ்வரூப் ரெட்டிக்கு விற்றுவிட்டார். ஸ்வரூப் ரெட்டி என்பவர் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்.

இப்போது, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டவும் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். 

இதையடுத்து, உமா மகேஸ்வரியும் சூசய் ஆனந்த் ரெட்டியும் கைது செய்யப்பட்டனர். சத்யம் சினிமாஸ் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கைது செய்யப்படவில்லை. ஆனால், செப்டம்பர் 2013 - அன்று அவருடைய பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஜூனியர்விகடன் - 08. நவம்பர், 2015

ஜெயலலிதா-சசிகலா அண்ட் கோ - குவித்த சொத்துக்கள் முழு விபரம்..!

17-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்த சொத்துக் குவிப்பு பற்றிய முழு பட்டியல் இது :



1    போயஸ் கார்டன், பிளாட் எண் 50, தேனாம்பேட்டை ரூ.1,32,009

2    ஸ்ரீநகர், ஆபீசர் காலனி, ஐதராபாத், ஆந்திரா    ரூ.50,000

3    இரண்டு பார்ம் ஹவுஸ்கள், ரங்காரெட்டி தாலுகா, பஷீராபாத் கிராமம்  மற்றும் ஜெட்டிமெட்லா, ஐதராபாத்    ரூ.1,65,058.50

4    ஆந்திர மாநிலம், மெகால் தாலுகா, பஷீராபாத் கிராமத்தில் 3.15 ஏக்கர் நிலம்    ரூ.13,254.50

5    தமிழகத்தின் செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா பெயரில் வேளாண் நிலம்    ரூ.17,060

6    சென்னை பட்டம்மாள் சாலையில் ஜெயலலிதா, சசிகலா பெயரில் கட்டிடம்    ரூ.5,70,039

7    சென்னை சாந்தோமில் சசிகலா பெயரில் ஆர்.ஆர்.பிளாட்ஸ்    ரூ.3,13,530

8    சென்னை அண்ணா சாலையில் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கட்டிடம்    ரூ.98,904

9    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது.    ரூ.22,10,919

10    சென்னை செயின்ட் மேரிஸ் சாலையில் ஜெயலலிதா பெயரில் 1,206 ச.அடி நிலம்    ரூ.1,05,409

11    சென்னை மவுன்ட் ரோட்டில் 1,856 சதுர அடி நிலம் ஜெயலலிதா பெயரில் பதிவு    ரூ.1,05,409

12    தஞ்சாவூர் மனம்புசாவடியில் 2,400 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ. 1,57,125

13    தஞ்சாவூர் நகரில் எச்.டி.சாலையில் 51 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.1,15,315

14    தஞ்சாவூர், எச்.டி. சாலையில் காலி நிலம் வாங்கி பதிவு    ரூ.2,02,778

15    திருச்சி பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமத்தில் 3,525 சதுர அடி நிலம்    ரூ.5,85,420

16    தஞ்சாவூர் மாவட்டம், சுந்தரகோட்டையில் 3.23 ஏக்கர் தரிசு நிலம் வாங்கி பதிவு    ரூ.75,210

17    சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டையில் 5,658 சதுரஅடி நிலம்    ரூ.5,28,039

18    சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் 1,407 சதுர அடி நிலம் பதிவு    ரூ.10,20,371

19    தஞ்சை மன்னார்குடியில் உள்ள ஹரிதரநதி மேற்கில் 25,035 சதுரஅடி நிலம் வாங்கி சசிகலா பெயரில் பதிவு    ரூ.6,78,000

20    சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை புனிததாமஸ் கிராமத்தில் 4,664.60 சதுர அடி நிலம் பதிவு    ரூ.15,05,428

21    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்டு நிலம் வாங்கியது.    ரூ.2,98,144

22    ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ராதிகா நகரில் 222.92 சதுர அடி மற்றும்  நிலம் டெல்லி திவான்ஹால் பகிரத்பேலஸ்    ரூ.5,57,761

23    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (பவுண்ட்ரி) நிலம்    ரூ.2,13,68,152

24    தமிழக வீட்டுவசதி கழகம் சார்பில் இளவரசிக்கு வீட்டுமனை ஒதுக்கீடு    ரூ   2,35,813

25    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் டான்சி (ஒயர்) நிலம்    ரூ.90,17,089

26    சென்னை அபிராமபுரத்தில் நிலம், கட்டிடம்    ரூ.49,02,105

27    சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 11.07 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.3,18,712

28    சென்னையில் உள்ள மகாசுப்புலட்சுமி திருமண மண்டபம் சுதாகரன் பெயரில் வாங்கி பதிவு செய்யப்பட்டது    ரூ.38,51,000

29    சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் ஜம்ஸ்கோர்ட் 1,736 சதுர அடி நிலம் வாங்கியது    ரூ.1,60,572

30    சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு சசிகலா, சுதாகரன் பங்கு வாங்கிய தொகை    
ரூ.84,21,000

31    வெலகாபுரம் கிராமத்தில் 45.22 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது    ரூ.40,25,023.70

32    சென்னை அடுத்த நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம் பதிவு    ரூ.9,60,520

33    சென்னை தி.நகர் பத்மநாப தெருவில் 5,430 சதுர அடி நிலம் பதிவு    ரூ.15,96,150

34    சென்னை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் இளவரசி பெயரில் 63.94 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.14,01,600

35    சென்னை அடுத்த செய்யூர் கிராமத்தில் 2.56 ஏக்கர் நிலம் பதிவு    ரூ. 1,23,910

36    வடசென்னையில் 10.7 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.4,65,000

37    சென்னை டி.டி.கே. சாலையில் 2,150 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.57,00,000

38    சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம்நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 1.29 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.6,49,770

39    சென்னை சோழிங்கநல்லூரில் நிலம்    ரூ.3,75,000

40    சென்னை அடையாறில் கட்டிடம் வீடு    ரூ.5,70,200

41    சென்னை பசுல்லா சாலையில்    ரூ.9,30,600

42    சென்னை நுங்கம்பாக்கத்தில் 4,348 சதுர அடி நிலம் வாங்கி பதிவு    ரூ.11,36,024

43    சென்னை அடுத்த சிறுதாவூரில் 3.30 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.93,475 

44    சென்னை வெட்டுவாங்கேணியில் 1 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.3,63,120

45    சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் 640 சதுர அடி நிலம்    ரூ.2,26,130

46    சென்னை தி.நகர், முருகேஷ் சாலையில் 4,800 சதுர அடி நிலம்    ரூ.33,44,040

47    சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் 900 சதுர அடி நிலம்    ரூ.9,95,670

48    சேரகுளம் மற்றும் வள்ளாகுளம் கிராமத்தில் 53.66 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.1,21,389

49    கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16.33 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.6,89,202

50    திருவேங்கடநகர் காலனியில் 520 சதுர அடி வீடு    ரூ.5,75,000

51    வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கத்தில் 37 சென்ட் நிலம் பதிவு    ரூ.1,24,540 

52    சென்னை டிடிகே சாலையில் 733 ச.அடி நிலம்    ரூ.59,28,050

53    சென்னை அடுத்த பையனூர் கிராமத்தில் 22.90 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு    ரூ.16,17,688

54    சென்னை அரும்பாக்கத்தில் 3,197 சதுர அடி நிலம்    ரூ.8,55,150

55    பரமேஸ்வரி நகரில் 4,564 சதுர அடி நிலம்     ரூ.34,20,160

56    சேரகுளம் கிராமத்தில் 144.28 ஏக்கர் நிலம்    ரூ.4,52,844

57    மீராகுளம் கிராமத்தில் 42.31 ஏக்கர் நிலம்    ரூ.95,740

58    வள்ளாகுளம் கிராமத்தில் 34 ஏக்கர் நிலம்    ரூ.78,801

59    சோழிங்கநல்லூர் கிராமத்தில் 50 சென்ட் நிலம்    ரூ.2,86,441

60    ஊத்துக்காடு கிராமத்தில் 27.98 ஏக்கர் நிலம்    ரூ.4,51,980

61    கலவை கிராமத்தில் 6.98 ஏக்கர் நிலம்    ரூ.25,833

62    வள்ளாகுளம் கிராமத்தில் 286 ஏக்கர் நிலம்    ரூ.6,57,169

63    சேரகுளம் கிராமத்தில் 122 ஏக்கர் நிலம் பதிவு     ரூ.4,64,997

64    மீராகுளம் கிராமத்தில் 326.15 ஏக்கர் நிலம்    ரூ.5,61,935

65    சென்னை அபிபுல்லா சாலையில் 4,293 சதுர அடி கட்டிடம்    ரூ.43,56,142

66    சென்னை அபிபுல்லா சாலையில் 3,472 சதுர அடி கட்டிடம்    ரூ.59,96,346

67    சென்னை அடுத்த ஊத்துக்கோட்டையில் 106.69 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.7,47,698

68    வண்டம்பள்ளியில் 27.57 ஏக்கர் நிலம் பதிவு    ரூ.7,88,076

69    வண்டம்பள்ளியில் ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனம் கட்டப்பட்டதின் செலவு    ரூ.14,00,806

70    ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் கட்டுமான பணி    ரூ.57,19,800

71    ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன எம்.டி. பங்களா மதிப்பு    ரூ.83,41,000

72    சென்னை லஸ் அவென்யூவில் 6,798 சதுர அடி கட்டிடம்    ரூ.65,23,176

73    ராம்ராஜ் ஆக்ரோ நிறுவன பங்கு வாங்கியது    ரூ.18,42,000

74    சென்னை அபிராமபுரத்தில் கட்டிடம் எழுப்பியதற்கு செலவிட்ட தொகை    ரூ.76,00,000

75    கோடநாடு தேயிலை தோட்டம் வாங்கியது    ரூ.7,60,00,000 

76    நீலாங்கரையில் 11 சென்ட் நிலம் பதிவு    ரூ.7,98,945

77    நீலாங்கரையில் 13 சென்ட் நிலம் பதிவு    ரூ.9,49,995

78    அரும்பாக்கம் கிராமத்தில் 3,197 சதுர அடி நிலம்    ரூ.8,55,150

79    தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் 26,540 சதுர அடி கட்டிடம் வாங்கியது    ரூ.19,03,088

80    ஊத்துக்கோட்டையில் 21.82 ஏக்கர் நிலம்     ரூ.3,13,553

81    வெலகாபுரம் கிராமத்தில் 41.10 ஏக்கர்    ரூ.80,394

82    பையனூர் கிராமத்தில் 4.27 ஏக்கர் நிலம்    ரூ.10,56,880

83    கடலூரில் உள்ள இண்டி-தோஹா கெமிக்கல் நிறுவன கட்டுமான பணிக்கு    ரூ.86,91,000

84    நீலாங்கரையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு    ரூ.80,75,000

85    நீலாங்கரையில் சசிகலா பெயரில் 11,197 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது    ரூ.5,72,910

86    பையனூரில் வாங்கிய பங்களா புதுப்பிக்க  செலவு செய்தது    ரூ.1,25,90,261

87    ஈக்காட்டுதாங்கலில் கட்டிடம்    ரூ.2,13,63,457

88    வெட்டுவாங்கேணியில் உள்ள கட்டிட புதுப்பிப்பு பணிக்கு    ரூ.1,52,59,076

89    ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்ட பண்ணை வீட்டில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.6,40,33,901

90    சிறுதாவூர் பங்களா புதுப்பிக்கும் பணிக்கு    ரூ.5,40,52,298

91    சென்னை போயஸ் கார்டன் வீடு புதுப்பிக்க    ரூ.7,24,98,000

92    சென்னை ஸ்ரீராம்நகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் கட்ட    ரூ.29,59,000

93    சோழிங்கநல்லூரில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க    ரூ.80,36,868

94    சென்னை பட்டம்மாள் சாலையில் உள்ள கட்டிடம் அருகில் புதிய கட்டிடம் கட்டியதற்கு    ரூ.8,00,000

95    சென்னை தி.நகர், பத்மநாப சாலையில் உள்ள நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு    ரூ.20,43,000

96    சென்னை அண்ணாநகரில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம் அமைக்க    ரூ.24,83,759

97    சென்னை தி.நகர் முருகேசன் சாலையில் உள்ள நிலத்தில் புதிய கட்டிடம்    ரூ.10,92,828

98    சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்ட    ரூ.53,11,000

99    சென்னை அக்கரையில் புதிய கட்டிடம் அமைக்க    ரூ.20,38,959

100    சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.39,34,000

101    சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் புதிய கட்டிடம் எழுப்ப    ரூ.14,17,538

102    சேரகுளம் கிராமத்தில் உள்ள ரிவர்வே அக்ரோ பார்ம் கம்பெனி கட்டிடம், மின் இணைப்பு உள்பட கட்டுமான பணிக்கு    
ரூ.7,58,160.50

103    சென்னை அபிராமபுரம், இந்தியன் வங்கியில் இளவரசி, விவேக் பெயரில் உள்ள வங்கி கணக்கில் 30.4.1996 அன்று பேலன்ஸ் 
தொகை    ரூ.2,42,211.50

104    இளவரசி இயக்குனராக இருக்கும் சிக்னோரா பிஸ்னஸ் கம்பெனியின் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.167.20

105    சசிகலா இயக்குனராகவுள்ள பிரஸ் மஸ்ரூம்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.771.26

106     இளவரசி இயக்குனராக உள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று    ரூ.85,342.25

107     வி.என்.சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996 அன்று    ரூ.1,32,221

108     ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.19,29,561.58

109    இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.3.40,527.95

110    சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் ஜெயலலிதா பேலன்ஸ்    ரூ.1,70,570.13

111    சசிகலா இயக்குனராக உள்ள மெடல் கிங் கம்பெனி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.2,900.28

112     சசிகலா பெயரில் சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கியில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,889.28

113    மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா, சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.20,79,885.12

114    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,095.60

115    சசிகலா இயக்குனராக உள்ள மெடல்கிங் கம்பெனிக்கு கிண்டி கனரா வங்கியில் பேலன்ஸ் 30.4.1996    ரூ.3,17,242.21 

116    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996.    ரூ.47,453.64

117    சென்னை அண்ணாநகர் சுப்பு லட்சுமி திருமண மண்டபம் வங்கி பேலன்ஸ்    ரூ.3,17,457.64

118    சென்னை மயிலாப்பூர் கனரா வங்கியில் சுதாகரன் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.61,430

119    ஜெயா பைனான்ஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.1,760

120    மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,18,198

121    மயிலாப்பூர் கனரா வங்கியில் இளவரசி வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.894.00

122    மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.560.55

123    மயிலாப்பூர் கனரா வங்கியில் சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குனராக உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 
30.4.1996    ரூ.10,75,335.64

124    மயிலாப்பூர் கனரா வங்கியில் ஜெயலலிதா  சசிகலா ஆகியோர் இயக்குனராக உள்ள சசி என்டர்பிரைசஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996  
  ரூ.4,59,976.22

125    ஜெ ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள பேலன்ஸ் 30.4.1906    ரூ.167.55

126    சூப்பர்-டூப்பர் டி.வி கம்பெனி இயக்குனராக உள்ள சசிகலா, சுதாகரன் இந்தியன் வங்கி கணக்கில் பேலன்ஸ் 30.4.1996    
ரூ.5,46,577.50

127     ஜெ.ஜெ. லீசிங் கம்பெனி வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,838.00

128    ஜெ.எஸ்.ஹவுசிங் வங்கி கணக்கு பேலன்ஸ் 30.4.1996    ரூ.13,671.80

129    கிரீன் பார்ம் ஹவுஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.146.70

130     ஜெயா கான்ட்ராக்டர் அண்டு பில்டர்ஸ் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.10,891

131    சசி என்டர்பிரைசசின் அபிராமபுரம் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.1,02,490

132    சக்தி கன்ட்ரக்ஷன் கம்பெனியின் இந்தியன் வங்கி பேலன்ஸ் 30.4.1996    ரூ.1,02,490

133     கோபால் புரமோட்டர்ஸ் வங்கி பேலன்ஸ்    ரூ.1,02,490.10

134     லட்சுமி கன்ட்ரக்ஷன் வங்கி பேலன்ஸ்    ரூ.1,02,490.18

135    மெடோ அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ்    ரூ.358.70

136    ரிவர்வே அக்ரோ பார்ம் வங்கி பேலன்ஸ்    ரூ.2,916.61

137     அண்ணாநகர் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் ஜெயலலிதா வங்கி பேலன்ஸ் 30.4.1996     ரூ.2,05,151.06

138    ஜெயலலிதா பேரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ்    ரூ.3,84,760.67

139    சசிகலா பெயரில் செகந்திராபாத் வங்கியில் பேலன்ஸ்    ரூ.2,43,000

140    ஜெயலலிதாவுக்கு சொந்தமான டாடா சீரா கார் மதிப்பு    ரூ.4,01,131

141    ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி-800 கார் மதிப்பு    ரூ.60,435

142    ஜெயலலிதாவுக்கு சொந்தமான மாருதி ஜிஸ்பி கார் மதிப்பு    ரூ.2,03,424.54

143     ஜெயலலிதாவுக்கு சொந்தமான டிரக்ஸ்     ரூ.1,04,000

144     ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா எஸ்டேட் கார் மதிப்பு    ரூ.4,06,106

145    ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வாகனம் மதிப்பு    ரூ.1,76,172.60

146    ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.3,85,520

147     ஜெயலலிதாவுக்கு சொந்தமான கண்டசா கார் மதிப்பு    ரூ.2,56,238

148     ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான டாடா மொபைல் வேன்    ரூ.2,81,169

149     ஜெயலலிதா பெயரில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்கு வாங்கப்பட்ட டிரக்ஸ் ஜீப்    ரூ.1,04,000

150     சசிகலாவுக்கு சொந்தமான டாடா சீரா கார்    ரூ.3,80,376

151    சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக ஜெயலலிதா பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.2,99,845

152     சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு    ரூ.5,11,118

153     சசிகலா பெயரில் வாங்கியுள்ள டாடா சீரா கார் மதிப்பு    ரூ.5,11,118

154    சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள டாடா சுமோ கார் மதிப்பு    ரூ.3,15,537

155    சசி என்டர்பிரைசஸ் பெயரில் வாங்கியுள்ள மாருதி எஸ்டிம் கார் மதிப்பு    ரூ.5,25,132

156     வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள கார்கோ வாகனம்    ரூ.5,05,009

157    வி.என்.சுதாகரன் பெயரில் வாங்கியுள்ள டிரக்ஸ் ஜீப் மதிப்பு    ரூ.2,96,191.28

158    நமது எம்.ஜி.ஆர். பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெலிவரி வேன் மதிப்பு    ரூ.52,271

159     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99

160     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99

161    மெட்டல்கிங் நிறுவனம் பெயரில் வாங்கியுள்ள மாருதி கார்    ரூ.2,22,485.19

162    அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் மதிப்பு    ரூ.2,03,979

163     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கியுள்ள ஸ்சுவராஜ் மஸ்தா வேன் மதிப்பு    ரூ.5,56,999.99

164    ஜெயா பப்ளிகேஷன் நிறுவன பெயரில் வாங்கியுள்ள மெர்சிடெஸ் பென்ஸ் கார் மதிப்பு    ரூ.9,15,000

165    அதிமுக தலைமை கழகம் பெயரில் வாங்கியுள்ள பஜாஜ் டெம்போ வேன் மதிப்பு    ரூ.2,03,979

166    ஜெயலலிதா பெயரில் கனரா வங்கியில் செய்துள்ள எப்.டி. தொகை    ரூ.16,03,545

167    ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,49,544

168     ஜெயா பப்ளிகேஷன் பெயரில் எப்.டி தொகை    ரூ.5,00.000

169     சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000

170    சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000

171    சூப்பர்-டூப்பர் டிவி பெயரில் அபிராமபுரம் இந்தியன் வங்கியில் எப்.டி. தொகை    ரூ.5,00.000

172    கோத்தரி ஓரியண்டல் பைனான்சில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,00,000

173    அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது    ரூ.1,00,000

174    அதே தொகை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது    ரூ.1,00,000

175     ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.3,00,000

176    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.30,00,000

177    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை    ரூ.15,00,000

178     ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 29.1.98    ரூ.5,00,000

179    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998    ரூ.15,00,000

180    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 22.4.1998    ரூ.10,00,000

181    ஜெயலலிதா பெயரில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் மெண்ட்டில் எப்.டி. தொகை 19,10.1993    ரூ.2,00,000

182    மெட்ராஸ் ஆக்சிஜன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களில ஜெயலலிதா எப்.டி. தொகை    ரூ.1,00,00,000

183     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 389 காலணிகளின் மதிப்பு    ரூ.2,00,902.45

184    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 914 பட்டு சேலைகளின் மதிப்பு    ரூ.61,13,700

185    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 6,195 பிற சேலைகள் மதிப்பு    ரூ.27,08,720

186    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 2,140 பழைய சேலைகளின் மதிப்பு    ரூ.4,21,870

187    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 7 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு    ரூ.9,03,000

188    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 91 ரிஸ்ட் வாட்ச்கள் மதிப்பு    ரூ.6,87,350

189     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 86 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.17,50,031

190    சசிகலாவுக்கு சொந்தமான 62 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.9,38,460

191     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 26 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.19,30,852.10

192     சசிகலாவுக்கு சொந்தமான 34 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.17,54,868.90

193     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 41 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.23,90,058.25

194     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 228 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.1,40,75,958

195    ஜெயலலிதாவுக்கு சொந்தமான 394 தங்க ஆபரணங்களின் மதிப்பு    ரூ.3,12,67,725

196     ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1,116 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு    ரூ,48,80,000

197     சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்தின் எலக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ் மதிப்பு    ரூ.15,75,800

198    மெட்டல்கிங் நிறுவனத்தின் இயந்திர மதிப்பு    ரூ.7,69,000

199     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் இயந்திரம் கொள்முதல் செய்தது    ரூ.2,16,42,000

200     வி.என்.சுதாகரன், சத்யலட்சுமி நிச்சயதார்த்தத்தின்போது ஜெயலலிதா சார்பில் ரூ.2,95,061.50 மதிப்புள்ள தங்கம் , ரூ.8,99,320.50 மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டது அதன் மொத்த மதிப்பு   ரூ.11,94,381.50

201     சென்னை தி.நகர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 30.4.1996 அன்று ஜெயலலிதாவின் பேலன்ஸ் தொகை    ரூ.21,380

202     ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் வளர்ச்சிக்கு செலவிட்ட தொகை   ரூ.8,60,950

203     சென்னையில் உள்ள ஆர்பிஐயில் ஜெயலலிதா பெயரில் எப்.டி. தொகை    ரூ.1,00,00,000

204    ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக வாங்கிய புதிய வாகனம்    ரூ.32,40,278

205     சசிகலா பெயரில் 30.4.1996ல் சென்ட்ரல் வங்கியில் பேலன்ஸ்    ரூ.17,502.98

206    திருச்சியில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான பொன்நகர் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதற்கான செலவு    ரூ.6,83,235

207    சென்னை வேலி கார்ட்ன் சாலையில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க    ரூ.34,46,032

208    செகந்திராபாத்தில் உள்ள கட்டிடம் புதுப்பிக்க ஏற்பட்ட செலவு    ரூ.3,00,000

209    30.4.1996 அன்று நமது எம்.ஜி.ஆர். நிறுவன வங்கி பேலன்ஸ் தொகை    ரூ.5,10,968.16

210    சேரகுளம் கிராமத்தில் வசித்த நாச்சியம்மாளிடம் வாங்கிய நிலம்    ரூ.21,830

211    1993 அக்டோபர் மாதம் இளவரசி,  மாஸ்டர் விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் பெயரில் இந்தியன் வங்கியின் ஜெயராமன் மூலம் கொடுத்து டெபாசிட் செய்யப்பட்டதின் மதிப்பு ரூ.38,421.00 - மொத்தம்  ரூ.66,44,73,573.27

இத்தனை சொத்துக்களையும் பறிமுதல் செய்ய பெங்களூர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. 

வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்-1

13-10-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தையே ஏற்படுத்திய வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் பற்றி  அந்நாளைய 'ஜூனியர் விகடன்' இதழில் வெளிவந்த கட்டுரையை அந்நிறுவனம் தனது விகடன்.காம் இணைய இதழில் மறுபிரசுரம் செய்திருக்கிறது.

அது இங்கே :

ஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்! (மினி தொடர்: பகுதி-1)
சொத்துக்  குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு தீபாவளி பண்டிகைக்குள் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம். 

18 ஆண்டுகளாக ஆமை நடை போட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ம் தேதியன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. 

நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் வழங்கி, குற்றவாளி அதை செலுத்தத் தவறும்படசத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை பெற நேரிடும் என அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா.      

இந்த வழக்கில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்திய தடபுடலான ஆடம்பர திருமணமும் முக்கிய ஆதாரமாக வைக்கப்பட்டிருந்தது. 1995-ல் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தமிழர்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு திருமணம் என்னும் திருவிழாவை நடத்திக் காட்டினார். அப்படி ஒரு பிரம்மாண்டம். 19 வருடங்களுக்கு முன்பு (8.9.95) நடைபெற்ற சுதாகரனின் பிரமாண்ட திருமணத்தை தற்போதைய தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்களுக்காக சின்ன ஃப்ளாஷ்பேக்.  செப்டம்பர் 10, 1995 ஜூனியர் விகடன் இதழில் இருந்து...  

"ஒரு முதல்வரின் மகனுக்குத் திருமணம் எப்படி நடக்குமோ அப்படித்தான் இந்தத் திருமணமும் நடக்கும். அதுபற்றி யாரும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை..!" - தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் பற்றி பத்திரிகைகள் எழுதத் துவங்கியதுமே பொங்கியெழுந்து முதல்வர் ஜெயலலிதா விட்ட அறிக்கை இது...!  

‘எப்படியெல்லாம் இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகள் அமைய வேண்டும்!’ என்று அமைச்சர்களிடம் தன் விருப்பத்தை முதல்வர் விவரிக்க...விவரிக்க வாயடைத்துப் போனார்கள் மந்திரிகள்..!  ‘கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரத்துடன் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா’ என்று திகைப்பு ஒருபுறம் இருக்க...‘அந்த அளவுக்குத் தேவையா’ என்ற தயக்கமான கேள்வியைத் தட்டுத் தடுமாறி ஓர் அமைச்சர் எழுப்பினாராம். ‘‘ஏன்.. யார் என்ன சொல்லிவிட முடியும்! நான் சொல்கிற அளவுக்கு உங்களால் செய்ய முடியுமா என்பதுதான் பேச்சு! இது திருமணமே அல்ல... கட்சியின் மாபெரும் மாநாடு என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள்!’’ என்றாராம் முதல்வர்.



அவ்வளவுதான்!   மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது.. ரோடு முழுக்கப் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல் துறை குவிப்பு என்று புகுந்து விளையாடத் துவங்கினார்கள் அமைச்சர்கள்!  

நான்காம் தேதி இரவு மணி பதினொன்றரை...! வழக்கமான அணிவகுப்பு ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல், முன்னும் பின்னும் ஓரிரு கார்கள் தொடர போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார் முதல்வர். அவருடன் தோழி சசிகலா இல்லை...!  அடையாறு சிக்னல்வரை சென்று அங்கிருந்து கடற்கரையில் கண்ணகி சிலைவரை அதிவேகமாக ஒரு முறை சென்றது முதல்வரின் கார்..! வரிசையாகச் செய்யப்பட்டிருந்த வண்ண வண்ண சீரியல் செட் அலங்காரங்கள், அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வைத்திருந்த கட் - அவுட்கள், சாலை நெடுக அமைந்திருந்த அலங்கார வரவேற்பு மேடைகள் ஆகியவற்றைப் பார்த்து திருப்தியடைந்தார் முதல்வர். 

 அடுத்து, திருமணம் நடக்கும் எம்.ஆர்.சி. நகருக்கு விரைந்தார். வழக்கமான வேட்டி, சட்டை, தோள் துண்டு இல்லாமல் அத்தனை அமைச்சர்களும் பாண்ட் அணிந்து மிடுக்குடன் காத்திருந்தது வித்தியாசமான காட்சி! அதிலும் மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ். லூஸான வெள்ளைச் சட்டையும் க்ரே கலர் பேன்ட்டும் அணிந்து ‘துறுதுறு’ப்புடன் நின்ற காட்சியைப் பார்க்க சக அமைச்சர்களுக்கேகூட ஜாலியாகத்தான் இருந்தது..!  நாவலர், இந்திரகுமாரி, மதுசூதனன் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாம் அங்கிருந்தனர்.  

முதல்வரின் கார் வந்ததும் அதன் பின்னே ஓடித் திருமணம் நடக்கப் போகும் மாபெரும் மைதானத்துக்குள் சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்துத்தான் முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். உள்ளே என்ன நடந்தது..?   அமைச்சர் ஒருவரின் உதவியாளரும், சில போலீஸ் அதிகாரிகளும் நமக்குச் சொன்ன தகவல் திகைப்பை உண்டாக்கியது! 



தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஐயர் உள்ளே முதல்வருக்காக காத்திருந்தார். அவர் பெரிய மாந்திரீகர்!  முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கவர்னர் சென்னாரெட்டி ஆகியோர் பயபக்தியுடன் வணங்கும் திருவக்கரை வக்கிர காளியம்மன் கோயிலில் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ பூஜை நடந்ததாம். மாந்திரீக வார்த்தைகளும் குறிகள் போட்ட அகலமான தங்கத்தகடுகளை அந்தக் கோயிலில் வைத்து விசேஷ பூஜை செய்தார் ராமமூர்த்தி ஐயர். அவற்றைத்தான் திருமணப் பந்தலுக்குக் கொண்டு வந்திருந்தார்...!  

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், பிறர் பொறாமைப்படும் வண்ணமாக ஏதாவது நிகழ்ச்சி நடத்தும்போது, திருஷ்டிபடாமல் இருக்க சில பரிகாரங்கள் செய்வதுண்டாம்..! அதில் மிக மிக ‘காஸ்ட்லி’யான ஒரு பரிகாரத்தைச் செய்யத்தான் அந்த மாந்திரீகர் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.   திருவக்கரை கோயிலில் வைத்து மந்திரிக்கப்பட்ட தங்கத் தகடுகளை, மண விழாப் பந்தலின் எட்டுத் திக்குகளிலும் புதைத்தார்கள். அத்துடன் வைர வைடூரியன் உட்பட நவமணிகளையும் போட்டுப் புதைத்துச் சாணத்தால் மெழுகியிருக்கிறார்கள்!  கூடவே, ராஜ கம்பீரமாக மிகப்பெரிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள மணமேடையிலும் ஒவ்வொரு அடி இடைவெளிட்டு மந்திர வார்த்தைகள் பொறித்த தங்கத் தகடுகள் புதைக்கப்பட்டதாம்..!  

இந்தியா முழுவதும் இருந்து வி.ஐ.பி-க்கள் முதல் சாதாரண கட்சித் தொண்டர் வரை வரப்போகிற இந்தத் திருமணத்தில் யாராவது ஏதாவது ஆபத்து உண்டாக்கிவிடக்கூடும் என்ற கவலை இருக்கிறது! அப்படி அபாயம் உண்டாக்க வருபவரின் மனத்தை மாற்றி, எதிர்ப்புக் குணத்தைப் போக்கி திருப்பியனுப்பிவிடக்கூடிய ‘வசிய சக்தி’ இந்தத் தகடுகளுக்கு இருப்பதாக மேலிடம் வரை நம்புகிறார்கள்!  

மந்திர வார்த்தைகள் பொறித்த தகடுகள் புதைக்கப்படுவதை முதல்வர் உட்பட அமைச்சர்கள் பயபக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தனராம்! எல்லாம் முடிந்து திருப்தியுடன் முதல்வர் கிளம்பிப் போன பிறகு, மூத்த அமைச்சர் எஸ்.டி.எஸ் அடித்த கமென்ட்தான் மற்றவர்களைத் திகைப்படைய வைத்தது..! “மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் எந்தப் பிரச்னையும் அரசியல் ரீதியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், நம்ம அம்மா எதையும் மாந்திரீக ரீதியாக அணுகறாங்க. அதான் வெற்றிமேல் வெற்றி கிடைக்குது..!” என்றார் எஸ்.டி.எஸ்..!  

போலீஸ் படையையும் முதல்வர் நம்பத்தான் செய்கிறார். திருமணம் நடக்கும் இடம் கடலோரம் என்பதால் கடல் வழியாகத் சந்தேகத்துக்கிடமான ஆட்கள் ஊடுருவி விடக்கூடாது என்பதில் உஷாராக இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பூம்புகார் கப்பல் நிறுவனத்தின் கப்பலில் ஏறி, போலீஸ் கடலில் சுற்றி ரோந்து வர ஆரம்பித்துவிட்டது! இது தவிர, பந்தலை ஒட்டியுள்ள பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் இருந்தும் படை படையாக வேன்களில் வந்து குவிந்திருக்கும் போலீஸாருக்கென மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சென்னை நகரின் பல திருமண மண்டபங்கள் ஒழித்துத் தயார் செய்யப்பட்டுவிட்டன! 



திருமணம் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான பந்தல்களில் உள்புறமிருந்து பார்த்தால் ஓலையே தெரியாது! பல லட்ச ரூபாய் செலவில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போட்டு அலங்கார வேலைகள் செய்யப்பட்டுள்ளன.  மணமேடை ஒரு அரண்மனையின் ராஜ தர்பார் போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறம் இருந்து பார்த்தால் ‘கண்’பட்டுவிடும் என்பதால் அதற்குத் தனியாக ஓர் ஓலைத் தடுப்புப் போட்டு மறைத்திருக்கிறார்கள். திருமணத்தன்று ஓலைத்தடுப்பு பிரிக்கப்படும்போது, அந்த மணமேடையின் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ள விலை மதிப்புள்ள கற்களும், அலங்கார அமைப்பும் அனைவரையும் வாய் பிளக்க வைக்கப் போகிறது!  

திருமண வளாகத்துக்கு உள்ளே மூன்று விதமான பங்களாக்கள் அசுரவேகத்தில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன..! ஒன்று - முதல்வர் தங்கியிருப்பதற்கான (சகல வசதிகளும் கொண்ட) ஏ.ஸி. மாளிகை! இன்னொன்று சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் தங்குவதற்கு! மூன்றாவது, சிவாஜி குடும்பத்தினருக்கு..! இந்த மூன்று மாளிகைகளையும் இப்போதே போலீஸ் சூழ்ந்து நிற்கிறது..! கடுமையான பாதுகாப்பு..!   

எம்.ஆர்.சி. நகர்ப் பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் கடந்த திங்கட்கிழமை போலீஸும் முக்கிய அதிகாரிகளும் புகுந்தனர். "நீங்களெல்லாம் வெளியேறிவிடுங்கள்! திருமணத்துக்கு முன்தினமும், திருமண தினத்தன்றும் இந்த ஏரியவுக்குள் லட்ச லட்சமாக ஆட்கள் ஆக்கிரமித்துவிடுவார்கள். அப்போது உங்களால் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது. எனவே, நீங்களெல்லாம், உங்களுக்கு விருப்பப்படும் ஓட்டல்களுக்குப் போய்க் குடும்பத்தோடு தங்கிக் கொள்ளுங்கள். பிறகு ஓட்டல் ‘பில்’லைக் கொடுத்தால் பணத்தைக் கொடுத்து விடுகிறோம்..!" என்றார்கள்.   

எதிர்த்துப் பேசத் திராணியற்று மூன்று தெருக்களில் வசித்த குடும்பங்கள் வீடுகளைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டன. ‘‘ஓட்டல் பில்’’லை யாரிடம் கொடுத்து எப்படிப் பணம் வாங்குவது? அது நடக்காத காரியம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்!’’ என்று புலம்பியபடியேதான் கிளம்பினர் அவர்கள்.   

வேறு பலர் வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். அதை எந்த ஓட்டலில் தங்க அனுமதிப்பார்கள். அதேபோல் இடம் பெயர முடியாமல் உள்ள பல நோயாளிகளும் அங்குள்ள சில வீடுகளில் உள்ளனர். அந்தக் குடும்பங்கள் வீட்டை காலி செய்ய முடியாது என்று சொன்னதால், பலத்த மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர்..! இவர்களுக்கெல்லாம் போலீஸ் அடையாள அட்டை அளித்துள்ளது. அதைக் காட்டினால்தான் தெருவை விட்டுப் போக முடியும் திரும்ப முடியும். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வை.கோ. கட்சிப் பிரமுகருமான அழகு. திருநாவுக்கரசு வீட்டுக்கும் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது..!  

திருமணத்துக்கு வருபவர்கள் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்..! வருகிற 11-ம் தேதியன்று அங்கு கால் வருடப் பரீட்சை! ஆயிரக்கணக்கில் பந்தல் அமைப்பாளர்களும் பொதுப் பணித்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போலீஸும் அந்தப் பகுதியைச் சூழ்ந்துவிட்டதால் கடந்த ஒன்றாம் தேதி முதல் செயல்பட முடியாமல் விடுமுறையில்தான் உள்ளது பள்ளி..!  பாடங்களைச் சரிவர நடத்தி முடிக்காததால் பரீட்சை எப்படி எழுதப் போகிறோம் என்று புரியாமல் தவித்தபடி உள்ளனர் குழந்தைகள்..!



வி.ஐ.பி.க்கள் உட்காரும் இடம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் இடைஞ்சலாக இருந்ததால் கிட்டத்தட்ட நாற்பது மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன!   தனது வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வரும் வெளி மாநில வி.ஐ.பி.க்கள் எந்த சிரமும் இன்றி, குழப்பம் இன்றித் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம்..!  இந்தப் பிரச்னையை அழகாகத் தீர்த்து வைக்க முன் வந்தது கல்வித் துறை..! 

தமிழகத்தின் முக்கியமான சில கல்லூரிகளுக்கு அவசரச் செய்தி சென்றது! ஒவ்வொரு கல்லூரியும் தங்களிடம் பயிலும் மிக அழகான பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு முன் கூட்டியே அனுப்பி வைக்க இருக்கின்றன..!  மணமகன் வீட்டுச் செலவிலேயே விலை உயர்ந்த பட்டுச் சேலை ஜாக்கெட் தைத்து அளிக்கிறார்கள்! இந்த மாணவிகள்தான் வரவேற்பு கமிட்டி! புன்னகைத்த முகத்துடன் வி.ஐ.பி-க்களை வரவேற்று அழைத்துச் சென்று அவரவர் இடங்களில் அமர்த்த வேண்டும்! திருமணம் முடிந்த பிறகு தலைக்குப் பத்தாயிரம் ரூபாய் இந்த மாணவிகளுக்கு அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்..!  

ஆறு மற்றும் ஏழாம் தேதிகளில் சென்னை நகரின் பியூட்டி பார்லர்கள் (அழகு நிலையங்கள்) பெரும்பாலும் புக்’ செய்யப்பட்டுவிட்டன. சசிகலா குடும்பத்துப் பெண்களின் விசேஷ அலங்காரத்துக்காக..?  

தனது திருமண நிகழ்ச்சி பற்றி அநாவசியமான விமரிசனங்கள் பத்திரிகைகளில் வருவதை வளர்ப்பு மகன் சுதாகர் விரும்பவில்லையாம். இதனால் திருமணத்துக்கு நிருபர்கள் வர அனுமதியில்லை! பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு நிச்சயம் அனுமதியில்லை! ஆளுங்கட்சிக்கு வேண்டிய மிகச் சில பத்திர்கை ஆசிரியர்கள் மற்றும் சில நிருபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது!  

என்.டி.ஆர்., தேவகௌடா, லல்லு பிரசாத் யாதவ், பைரான்சிங் ஷெகாவத், பிஜுபட்நாயக் ஆகியோர் முதல்வர் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல் வி.ஐ.பி-க்கள்!  இத்தனை திருமண ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையில் மிகுந்த கவலையுடன் இருப்பவர்கள் மூன்று அமைச்சர்கள்! கண்ணப்பன், எஸ்.டி.எஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகிய மூவர்தான் இவர்கள்!  

‘அன்பளிப்புகளைத் தவிர்க்கவும்’ என்று திருமண அழைப்பிதழில் அச்சிட்டிருந்தாலும் அதற்கு நேர் எதிரான ‘பாலிஸி’தான் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணத்துக்குத் தேதி குறிக்கப்பட்ட தினத்திலிருந்தே பணமாகவும், பொருளாகவும் வசூல் தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்த சேதி!  ஆனால், திருமணத்தன்று வருகிற கட்சி முக்கியஸ்தர்களிடமும் தொழிலதிபர்களிடமும் கண்டிப்புடன் திருமணப் பரிசுகளை வாங்க வேண்டியது மேற்சொன்ன மூன்று அமைச்சர்களின் பணிதான்..! 

பரிசுப் பொருட்கள் மற்றும் செக், டிராஃப்ட், சூட்கேஸ் எதுவானாலும் திருமண வளாகத்துக்குக் கொண்டு வரக் கூடாது என்பது முன்கூட்டியே சொல்லப்பட்டுவிட்டது! அதை இந்த மூன்று அமைச்சர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுத்துவிட வேண்டும்..! லட்சம், கோடி எல்லாம் சாதாரணமாக ‘டீல்’ செய்யும் இந்த அமைச்சர்களே மிரண்டுபோயிருக்கிறார்களாம்.  பரிசுப் பொருட்களைப் பெற்று, சரியாக கணக்கு சொல்லி அவற்றைப் பத்திரமாக ஒப்படைக்கும்வரை இவர்களுக்கு நிம்மதி கிடையாது! பல கோடி செலவு செய்து நடக்கும் இந்தத் திருமணத்துக்கு என்னென்ன பரிசுப் பொருட்கள் வரப்போகிறது என்று மத்திய அரசு அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதுதான் அமைச்சர்களின் கவலைக்கு முக்கிய காரணம்..!

  

இத்தனைக்கும் மத்தியில் தேர்ந்த ஜோதிடர்கள் சொன்ன ஒரு கருத்து திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து சம்பந்தப்பட்டவர்களை வாட்டுகிறது! ஜோதிடர்கள் சொன்னது -“திருமணத்துக்குக் குறித்த தேதி சரியில்லை! செப்டம்பர் ஏழாம் தேதி சனி- செவ்வாயைப் பார்க்கிறான். அதுவும் வக்கிரப் பார்வை! பெரும் தீவிபத்துகளும் ரயில் விபத்துகளும் நடந்தது இந்தக் கிரக நிலையில்தான்!”  

இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே இதுவரை நடக்காத இந்தப் பிரமாண்ட திருமணத்தல் மணமகளுக்குத் திருஷ்டிபடுமோ என்ற கவலையும் இருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு, அந்தப் பகுதியில் ஏதாவது பந்தலை வலியக் கொளுத்தி திருஷ்டி கழிக்கலாமா எனவும் யோசிக்கப்படுகிறது!  

படங்கள்: சு.குமரேசன்  

நன்றி : விகடன்.காம்

மைசூர் மகாராஜா கொடுத்த நகைகள் - ஜெயலலிதாவின் வாக்குமூலம்..!

17-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவு செய்யப்பட வேண்டிய பதிவுகளெல்லாம் நிறையவே கைவசம் இருப்பதாலும், அலுவலக வேலைகள் அதிகமானதாலும் முன்னர்போல் இனிமேல் சுயமான பதிவுகள் அதிகம் எழுத முடியாது என்றே நினைக்கிறேன். முடிந்தால் வாரத்திற்கு ஒன்றாவது இனிமேல் எழுதுகிறேன்.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டவுடன் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை போலீஸார் அவரை காவலில் எடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விசாரணை நடத்துவார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கேதான் அரசியல்வியாதிகளுக்கு ஒரு நீதி.. ஏழை, எளியவர்களுக்கு வேறொரு நீதியாச்சே..!

காவலில் எடுத்து விசாரிக்க வேண்டாம். சிறைக்கே நேரில் சென்று சிறை அதிகாரிகள் முன்பாக விசாரித்துக் கொள்ளுங்கள் என்று பட்டும், படாமலும் அப்போதைய ஆட்சி மேலிடம் சொன்னதன் விளைவாக சென்னை மத்திய சிறையில் இருந்த ஜெயலலிதாவை அப்போதைய லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர்.

அது தொடர்பாக அப்போது வெளி வந்த ஜூனியர்விகடன் கட்டுரை இது :

ஜெயலலிதா மீதான, வருமானத்​துக்கு மீறி சொத்துச் சேர்த்த வழக்கில், டி.வி.ஏ.சி-யினர் (லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை) புலன்விசாரணையில் ஏராளமான தகவல்களைப் பெற்று இருந்தனர். இப்படிப் பெற்ற தகவல்கள் குறித்து ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்க டி.வி.ஏ.சி-யினர் முடிவு எடுத்தனர்.

 இதற்காக கோர்ட் அனுமதியுடன், சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் கடந்த வாரம் தொடர்ந்து விசாரணைகள் நடந்தன. இந்த வழக்கைப் புலனாய்வு செய்யும் நல்லம்ம நாயுடு தலைமையில், இன்ஸ்பெக்டர் சந்திரமனோகரன், பெண் இன்ஸ்​பெக்டர் வசந்தா, ஸ்டெனோ மீனாட்சி ஆகியோர் அடங்கிய டீம் விசாரணைக்குச் சென்றது.


டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், 1,000 கேள்விகள் வரை கேட்டு இருப்பார்கள். ஜெயலலிதா, அத்​தனை கேள்விகளையும் சமாளித்ததே ஒரு சாதனைதான். ஐந்து நாட்கள் நடந்தவற்றில், ஒரு சில விவகாரங்களை மட்டும் முன்னோட்டமாகப் பார்ப்போம்.

முதலில் ஜெயலலிதாவின் இளமைப் பருவம்... பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விவரம்... சினிமாவில் நடித்தது போன்ற விவரங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அடுத்து சசிகலா குடும்பத்தினர் பற்றிய விவரங்கள், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது போயஸ் கார்டனுக்கு வந்து சென்றவர்கள் பற்றிய விசாரணைகள், அதைத் தொடர்ந்து ஆரம்பித்தது நேரடி விசாரணை!
 
''போயஸ் கார்டன் வீட்டைப் புதுப்பித்துக் கட்டியது எப்படி? ஹைதராபாத் தோட்டத்தில் புதிய பங்களா கட்டியது எப்படி?'' என்ற கேள்விகளுக்கு, ''அதெல்லாம் ஆர்க்கிடெக்ட்டிடம் கேட்டால்தான் தெரியும்!'' என்று பதில் வந்தது!

''சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மகாப​லிபுரம் போகும் வழியில் புதிய புதிய பங்களாக்​களைக் கட்டினார்களே... அது எப்படி என்று தெரியுமா?''

''எனக்குத் தெரியாது... அதை சசிகலாவிடம் கேளுங்கள்.''

''எந்தெந்த கம்பெனிகள் நடத்தினீர்கள்? சசிகலா​வோடு எந்தெந்த கம்பெனிகளில் பார்ட்னர்?'' என்ற கேள்விகளுக்கும் வங்கிக் கணக்குகள்பற்றிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ''பணம் வந்தது சசிகலாவுக்குத்தான் தெரியும். ஏன், எதற்கு என்று எல்லாம் ஞாபகம் இல்லை... செக்கில் கையெழுத்துக் கேட்டால்... போடுவேன்!'' என்றார்.

''இந்த வருமானம் எல்லாம் பிசினஸ் செய்து வந்ததா..?''

''ஆம்.''

''சசிகலா 24 மணி நேரமும் உங்களோடுதானே இருந்தார். அவர் எப்படி, என்ன பிசினஸ் செய்தார்?''

''எனக்குத் தெரியாது.''

''உங்கள் வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளும் வெள்ளிச் சாமான்களும் எப்படிக் கிடைத்தன?''




''கொஞ்ச நகைகள் மைசூர் மகாராஜா என் தாத்தாவுக்குக் கொடுத்தது. பிறகு, எம்.ஜி.ஆரும் எனக்குக் கொடுத்தார். இது தவிர, எனக்குப் பிறந்த நாள் அன்பளிப்பாகக் கட்சித் தொண்டர்களும் தந்தார்கள்.''

''மைசூர் மகாராஜா கொடுத்ததும், எம்.ஜி.ஆர். கொடுத்தது பற்றியும் முன்பு வருமான வரித் துறையினருக்குத் தகவல் கொடுத்தீர்களா?''

''இல்லை.''

''பரிசுப் பொருட்களாக வந்தால், முதல்வர் என்ற முறையில் அதை அரசாங்கத்திடம்தானே ஒப்படைக்க வேண்டும்?''

''எந்த பொலிட்டீஷியன் பரிசுப் பொருளை வாங்கவில்லை? எம்.ஜி.ஆர். வாங்கவில்லையா..? ஆற்காடு சாலை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் பரிசுப் பொருட்களை வைத்திருக்கவில்லையா?'' என்று ஆவேசமாகத் திருப்பிக் கேட்டார் ஜெயலலிதா.

ஆனால், 1988-க்குப் பிறகு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதை லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினர் ஜெயலலிதாவுக்கு உணர்த்தினார்கள்.

கட்சிக்காரர்களின் பெயர்களில் சுமார் 86 டிமாண்ட் டிராஃப்ட்டுகள் இரண்டு கோடி ரூபாய்வரை கொடுத்ததாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டு இருந்ததாம். இதன்படி, ''சிவகங்கையைச் சேர்ந்த ஒரு பிரமுகர் 50 லட்சம் பரிசு தந்ததாகக் கணக்கு. இவர்களால் இப்படிப்பட்ட தொகைகளைக் கொடுக்க முடியுமா..?'' என்பது கேள்வி. ''அவர்கள் நன்கொடை வசூல் செய்து, எனக்குப் பரிசாகக் கொடுத்து இருக்கலாமே!'' என்று பதில் கூறியுள்ளார் ஜெயலலிதா.

(முன்னாள் அமைச்சர் ஜி.விஸ்வநாதன் போன்ற பிரமுகர்களும்கூட இப்படி டி.டி-யாகக் கொடுத்தவர்கள் லிஸ்ட்டில் அடக்கம். ஆனால், அவர் உட்படச் சிலர் தாங்கள் டி.டி. எதுவும் எடுத்துக் கொடுக்கவில்லை என்றும், தங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டு உள்ளதாகப் புகார் கூறி இருக்கிறார்கள்!)

இந்த டி.டி-க்களைத் தவிர, பார்சலாகவும் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்து, அதை வருமான வரித் துறையில் கணக்குக் காட்டியது​பற்றியும் கேள்வி கேட்க, ''பார்சல் வந்தது... அதன் உள்ளே வெள்ளி, தங்கம் இருந்தது எல்லாம், பிரித்த பிறகுதான் தெரியும். டாலர் அனுப்பியது யார் என்று தெரியவில்லை.'' என்று பதில் அளித்தார்!




இதே மாதிரி, ''10,000 புடவைகள் எதற்காக வாங்கினீர்கள்? 25,000 முதல் லட்சம் ரூபாய்வரை விலை மதிப்புள்ள புடவைகள் மட்டும் நூற்றுக்கணக்கில் உள்ளதே... இவற்றை எப்படி வாங்கினீர்கள்?'' என்று கேட்டபோது, ''எல்லாமே கிஃப்ட்தான்!'' என்றார்.

போயஸ் தோட்டத்தில் கிடைத்த வாட்ச்கள்  ​பற்றிக் கேட்டபோதும், அதே வழக்கமான பதில்... அதோடு, 'பறிமுதல் செய்த வாட்ச்களில் இரண்டு வேண்டும்’ என்று முதலில் கேட்ட ஜெயலலிதா, ''அந்த வாட்ச்சில் சுவிஸ் வங்கி அக்கௌன்ட் நம்பர் எல்லாம் இருக்குனு எழுதுறாங்க. அதனால், வாட்ச் எதுவும் வேண்டாம்!'' என்று மறுத்துவிட்டார். இப்போது அந்த வாட்ச்கள் எல்லாம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.




ஜெயலலிதாவும் சசிகலாவும் உடல் முழுக்க நகைகளை அணிந்துகொண்டு இருக்கும் போட்டோவை எடுத்தது, மயிலாப்பூரில் உள்ள ஆஸ்தான போட்டோகிராபர் ஒருவர். அவர் எடுத்த புகைப்படங்கள்தான் போயஸ் கார்டனின் பல அறைகளை அலங்கரித்தன. (இது குறித்து ஜூ.வி-யில் முன்பே எழுதி இருந்தோம்). இந்த போட்டோவில் ஜெயலலிதா அணிந்து இருக்கும் நகைகள் சோதனையின்போது போயஸ் கார்டனில் கிடைத்தன. ஆனால், சசிகலா அணிந்திருந்த நகைகள் இதுவரை எங்கேயும் கிடைக்கவில்லை.

அந்த நகைகள் எங்கே என்றும் அதிகாரிகள் கேட்க, ''அந்தம்மாவிடமே போய்க் கேளுங்கள்...'' என்று கோபமாகப் பதில் சொன்னார் ஜெயலலிதா. கடைசி தினங்​களில் பொறுமை இழந்து, ''நீங்க எல்லாம் கருணாநிதி ஆளுங்க...'' என்று அதிகாரிகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இதே மாதிரி, ''10 லட்ச ரூபாய் உங்க கணக்கில் வருகிறது என்றால், அது எங்கே இருந்து வந்தது என்பதுகூட உங்களுக்கு ஞாபகம் இருக்காதா...?’ என்பதுபோன்ற கேள்விகளுக்குக்கூட ''அப்போது நான் சி.எம்.! ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். எனக்கு இருந்த வொர்க் பிரஷரில் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை!'' என்ற பதிலே வந்தது.

''அதெல்லாம் எம்.ஜி.ஆர். கொடுத்தது, சசிகலாவுக்குத்தான் விவரம் தெரியும். ஞாபகம் இல்லையே, தெரியாது!'' என்ற நான்கு பதில்கள்தான் மாறி மாறி வந்தன.

இத்தனைக்குப் பிறகும் அதிகாரிகள் வட்டாரத்​தின்படி, இந்த வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகள் பலமாகவே உள்ளன. உதாரணமாக, வளர்ப்பு மகன் திருமணச் செலவுக்கு 1 கோடியே 30 லட்ச ரூபாய் ஆனதை ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, '30 லட்சம்தான் தன்னுடையது. மற்றவை பெண் வீட்டாரும் மற்றவர்களும் செய்தது...’ என்று பதில் சொல்லி உள்ளார். இதுவே போதுமானது. அதனால்தான், இப்படிப்பட்ட பதில்களை டி.வி.ஏ.ஸி. அதிகாரிகள் விசாரித்துவிட்டு வந்தவுடன், பத்திரிகைகளிலும் கொடுத்து ரெக்கார்டு செய்துவிட்டனர். இதே மாதிரி, தனக்குப் பரிசாக வந்தவை பற்றியும் ஜெயலலிதா குறிப்பிட்டுச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.

பரிசாகக் கிடைத்த சொத்துகளை அவ்வப்போது பத்திரிகைகளிலும் சொல்லவில்லை. வருமான வரித் துறைக்கும் உடனடியாகக் கணக்குக் கொடுக்கவில்லை. எனவே, கட்சிக்காரர்கள் கொடுத்ததாகச் சொல்கிற பரிசுகளை எல்லாம் லஞ்சமாகக் கொடுத்ததாகவே எடுத்துக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா சில வருடங்களுக்கு முன்பு தனது திராட்சைத் தோட்டத்தில் இருந்து வரு​டத்​துக்கு ஒன்பது லட்சம் வரை வருமானம் வருவதாகத் தெரிவித்தார். அது உண்மை என்று வைத்துக்கொண்டால்கூட, கடந்த ஐந்து வருடங்களில் 50 லட்சம் மட்டும்தான் ஜெயலலிதாவுக்கு வந்து இருக்கும்.

கடந்த ஐந்து வருடங்களில் அவர் செய்து வந்த பல ஆடம்பரச் செலவுகளையும், தற்போது அவர் பெயரில் உள்ள சொத்துகளையும் மதிப்பிட்டுப் பார்த்தால், அவை அவர் கொடுத்த கணக்கை ரொம்பவே தாண்டுகிறது. நீதிமன்றத்திலும் அதை அதிகாரிகள் நிரூபிப்பார்கள்!

- கண்பத்

படங்கள்: சு.குமரேசன்


நன்றி : ஜூனியர்விகடன்