Showing posts with label நாட்டும் நடப்பும். Show all posts
Showing posts with label நாட்டும் நடப்பும். Show all posts

குமுதம் சிநேகிதியின் ‘லொள்ளு!’


09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையில் சினிமா போஸ்டர்களை மட்டுமே துணுக்குற்று வந்த எனக்கு சமீபத்தில் ஒரு பத்திரிகையின் போஸ்டரை பார்த்து லேசாக மிதப்பே வந்தது.. “6 A.M. To 6 P.M. கல்லூரி பெண்கள் யூரினை அடக்கலாமா?” இதுதான் போஸ்டரில் இருந்த தலைப்பு. ‘குமுதம் சிநேகிதி’ பத்திரிகையின் போஸ்டர் இது. தெருவோர புத்தகக் கடைகள் அனைத்திலும் ஜெகஜோதியாக தொங்கிக் கொண்டிருந்தது.

கருத்து சுதந்திரம் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது. உண்மைதானே.. நடப்பதைத்தானே எழுதுகிறார்கள் என்பார்கள் சிலர். வேறு மாதிரி மாற்றி எழுதியிருக்கலாம் என்பார்கள் பலர். வேறு மாதிரி என்றால்.. யூரின் என்பதனை சிறுநீர் என்று மட்டுமே மாற்ற முடியும்.. அது அதைவிட முகம் சுழிக்க வைக்குமே..

வேறு என்ன வழி..? கல்லூரிப் பெண்களுக்கு உடல் நலன் டிப்ஸ் என்ற தலைப்பில் வைக்கலாம். ஆனால் எந்த ‘பகுதிக்கு’ என்பதைக் குறிப்பிடவில்லையெனில் ‘காயகல்பம்’ கேஸாகிவிடும்.

முடியலையா..? விட்ருங்க.. முதலில் ஏன் முகம் சுழிக்கிறீர்கள். உள்ளதைத்தானே சொல்கிறார்கள். பிடித்திருந்தால் வாங்கிப் படியுங்கள். பார்க்கப் பிடிக்காதவர்கள் அடுத்த போஸ்டரில் தெரியும் நயன்தாராவைப் பார்த்து ஜொள்ளுவிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்யுங்கள்.. வாங்காமல் விடுங்கள். ‘முதலாளிகள்’ என்ன புரசைவாக்கம் அரண்மனையில் இருந்து தெருவுக்கா வரப் போகிறார்கள்..?

அடப் போங்கப்பா..

(போஸ்டர் கிடைக்கல.. இந்தப் புத்தகமும் இல்ல.. இது சும்மா ஒரு ஜாலிக்கு..)

யாருக்கும் இங்கே வெட்கமில்லை பாகம்-2

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

'தன் வினைத் தன்னைச் சுடும்' என்கிற சொல்லாடலும், 'வாந்தியும், பேதியும் வந்தவனுக்குத் தெரியும்' என்கிற வழக்கு மொழியும் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, தமிழகத்தின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை தன் 40-வது வயதில் எட்டிப் பிடித்திருப்பவரும், கலைஞருக்கு ஒருவகையில் மட்டுமே பேரனும், மாநில சுயாட்சியைப் பெற்றேத் தீருவேன் என்று முழக்கமிட்ட, கலைஞரின் மனசாட்சியான திரு.முரசொலி மாறனின் மகனுமான 'புகழ்' என்கின்ற, கலாநிதி மாறனுக்கு சாலப் பொருந்தும்.

மூன்று நாட்களுக்கு முன்னால் நான் எழுதிய "யாருக்கும் இங்கே வெட்கமில்லை" என்கிற இடுகையில் இந்தப் பத்தியை எழுதியிருந்தேன்.

//சென்ற முறை தி.மு.க. ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, மதுரை நகரில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஜெகதீசன் என்ற பைனான்ஸியர் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக, அப்போதைய மதுரை மாநகராட்சியின் தி.மு.க. துணை மேயர் திரு.மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, திரு.மிசா பாண்டியனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மதுரையில் தற்போது அரசாட்சி செய்து வரும் தளபதியும், தென்பாண்டி மண்டலத்து பட்டத்து இளவரசருமான திரு.மு.க.அழகிரி, தி.மு.க.விலிருந்து அப்போது நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தின் பின்னணியில், தமிழகத்தின் தற்போதைய முடிசூடா மன்னர் திரு.மு.க.ஸ்டாலின் இருப்பதாக அவர்களுடைய கட்சிக்காரர்களே சொன்னார்கள்.

அவ்வளவுதான்.. "எப்படி எங்கள் 'அஞ்சாநெஞ்சனை' கட்சியை விட்டு நீக்கலாம்?" என்று போர்க்கொடித் தூக்கினார்கள் மதுரையைச் சேர்ந்த உடன்பிறப்புகள். இவர்களுடைய கோரிக்கை ஒரு கட்சி சம்பந்தப்பட்டது. ஆட்சி சம்பந்தப்பட்டதல்ல. அப்படியானால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அப்படியே ஒரு லாரியையோ, பஸ்ஸையோ பிடித்து சென்னைக்கு வந்து 'அறிவால'யத்தை முற்றுகையிட்டுத் தங்களது கோரிக்கையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? பஸ் மறியல்.. தர்ணா.. கடையடைப்பு போராட்டம்..

நான்கு நாட்களாக மதுரையிலிருந்து புறநகர் பஸ்கள் கிளம்ப முடியவில்லை. மதுரையின் பல இடங்களிலும் தொடர்ச்சியான பஸ் மறியல். பயணிகள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்பது அப்போது பயணிகளில் ஒருவனாய் மதுரையில் இருந்த இந்த உண்மைத்தமிழனுக்கும் தெரியும்.

போலீஸ் மறியல் செய்பவர்களைக் கைது செய்யும். உடனே அவர்களை மதுரை எல்லைக்குக் கொண்டு போய், ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிட்டு வருவார்கள். மறுபடியும் அந்தத் தொண்டர்கள் பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மறியலில் உட்கார்ந்திருப்பார்கள். மறுபடியும் போலீஸ் வரும். கைது செய்வதாகச் சொல்லி அனுப்பானடியைத் தாண்டி கொண்டு போய் விட்டுவிட்டு வருவார்கள். இதே கதைதான் நான்கு நாட்களும் நடந்தது.

அதாவது அரசும், ஆளும் கட்சியும், அதன் தலைவர்களும், தொண்டர்களும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினார்கள். ஆனால் இந்த விளையாட்டின் இடையில் மாட்டிக் கொண்டு தவியோ தவி என்று தவித்தவர்கள், என்னைப் போன்ற அப்பாவி பொதுமக்கள்தான். இத்தனை காவல்துறையினர் இருந்தும் என்ன புண்ணியம்? எந்தக் காவல்துறை அதிகாரி அந்த நேரத்தில் பொறுப்பாக பணி செய்தார்? அனைவருமே கண்துடைப்பு வேலையைத்தான் செய்தார்கள்.

'உடன்பிறப்புகள்' என்ற பெயரில் உலா வந்த ரவுடிகள், நான்காவது நாளில் செய்ததுதான் மிகக் கொடுமை. மதுரை கோரிப்பாளையத்தில் மீனாட்சி கல்லூரியின் அருகே வந்து கொண்டிருந்த இரண்டு நகரப் பேருந்துகளை நிறுத்திய தொண்டர்கள் என்ற ரெளடிக் கும்பல், அந்தப் பேருந்துகளிலிருந்த அனைத்துப் பயணிகளையும் இறக்கிவிட்டு ஓட ஓட விரட்டியடித்துவிட்டு, அந்த இரண்டு பஸ்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தியது.

நாசமானது பஸ்கள் மட்டுமா? நல்லதொரு அரசாட்சி என்ற பெயரும், ஜனநாயகம் என்ற வார்த்தையும்தான்..

இரண்டு சகோதரர்களுக்கிடையே நடந்த நீயா? நானா? போட்டியில் மக்களுடைய வரிப்பணத்தில் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய பேருந்துகள் எரிந்து சாம்பலானது..

இதற்கு யார் பொறுப்பு? இந்த 10 லட்சத்தை இப்போது யாரிடமிருந்து வசூல் செய்வது? சரி.. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகளையாவது காவல்துறை என்ன செய்தது? அடையாளத்திற்கு 4, 5 பேரை கைது செய்தது.. ஆனால் வழக்கு விசாரணை இன்னமும் முடியவில்லை. காரணம், வழக்கு கோர்ட்டுக்கே இன்னும் வரவில்லை.

இது ஒருவகையில் ஜனநாயகப் படுகொலைதானே.. இதை ஏன் என்று கேட்கக்கூடாது, மக்கள் தங்களது மனதில் இதைப் பற்றிய அசிங்கத்தையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்றால், இது இந்தக் கேடு கெட்ட, கேவலம் கெட்ட அரசியல்வாதிகளின் சர்வாதிகார உணர்வைத்தானே காட்டுகிறது..//

இதை எழுதி மூன்று நாட்கள்தான் ஆனது.. அதற்குள் இன்னொரு அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் மதுரை உடன்பிறப்புகள். இவர்களை 'உடன்பிறப்புகள்' என்று சொல்வதைவிட 'மு.க.அழகிரி ஏவிவிட்ட ரவுடிகள்' என்றே சொல்லலாம். சன் டிவியே இந்த வார்த்தையை உச்சரித்த பிறகு, உண்மைத்தமிழன் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

"கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது குற்றமா..?" என்று கேட்கிறார் கலாநிதி மாறன்..

"தமிழகம் முழுக்க என்னோடு வந்து பார்க்கச் சொல்லுங்கள் அந்த 'ஜென்மங்களை'.. அப்போதுதான் இந்த அழகிரி யார் என்பது அந்த 'ஜென்மங்களுக்குத்' தெரியும்.." என்று கொதித்துள்ளார் மதுரையின் பட்டத்து இளவரசர் மு.க.அழகிரி.

இருவருக்கும் இடையிலான குடும்பப் பகையில், இப்போது பலிகடாவாக்கப்பட்டுள்ளது மூன்று அப்பாவி குடும்பங்கள்.

மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சக்கரவர்த்தித் திருமகனுக்கு, பல்லக்குத் தூக்கத் தேவைப்படும் ஆறுபேர் அளவுக்குத்தான் செல்வாக்கு உள்ளது என்று எழுதினால், யாருக்குத்தான் கோபம் வராது..? அரசரின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு வீரர்களின் செல்வாக்கைக் காட்ட வேண்டாமா? பொங்கி எழுந்தது வீர மறவர் கூட்டம்.

'தினகரன்' பத்திரிகையை அதன் அலுவலக வாசலிலேயே கொளுத்தி தங்களது விசுவாசத்தைக் காட்டும் உடன்பிறப்புகளுக்கிடையேயான போட்டியில் முதலில் வென்றவர் மதுரை மாநகரத் தாய் திருமதி தேன்மொழி. உடன் அவரது கணவரும் மதுரை மாநகரத்தின் மறைமுகத் தந்தையுமான கோபிநாதனும் உடன் இருக்க.. இவர்கள்தான் இந்தச் சம்பவத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டுள்ளனர்.

'மாநகரத் தாயே' கல்லெறியத் துவங்கும்போது 'பிள்ளைகள்' எப்படியிருப்பார்கள்?

பொதுமக்கள் வரியாக அரசுக்குச் செலுத்தியப் பணத்தில் வாங்கப்பட்ட, முற்றிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான பேருந்துகள் நாசமாக்கப்பட்டுள்ளன..

ரவுடிகள் இப்படிப் பட்டப் பகலில் சோடா பாட்டிலைத் தூக்கி வீசுவதை வேடிக்கை பார்த்துள்ளனர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர்.

பெட்ரோல் குண்டுகளை வீசி அலுவலகம் எரியூட்டப்படும் சினிமா வன்முறைக் காட்சிகளை நேருக்கு நேராகப் பார்த்துவிட்டு, பத்திரமாக முகாமிற்குத் திரும்பியுள்ளது காவல்துறையின் கமாண்டோ படை.

பொறுக்கியெடுத்த கற்கள், கண்ணாடிகளை பதம் பார்க்கும்வரையிலும் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கும் போலீஸார், கடைசியில் ஓரமாகச் சென்று வீசும்படி சைகை காட்டியுள்ளனர்.

இடையிடையே போனில் வரும் அழைப்புகளுக்கு 'சரிங்கண்ணேன்'.. 'சரிங்கண்ணேன்'.. 'இல்லண்ணேன்'.. என்று 'அண்ணனுக்கு' மரியாதை செய்து வன்முறைக் கும்பலுக்கு பக்க பலமாக இருந்துள்ளனர் காவல்துறையின் கருப்பு ஆடுகள்.

எப்படியும் 'தினகரன்' பத்திரிகை அலுவலகம் தாக்கப்படும் என்பது நன்கு அறிந்திருந்தும் அப்படியரு பத்திரிகை அலுவலகம் மதுரையிலேயே இல்லை என்பதைப் போல் நடந்து கொண்டு தமது விசுவாசத்தை 'மதுரை இளவரசருக்கு'க் காட்டியிருக்கிறார்கள், அரசு சம்பளம் பெறும் காவல்துறையின் உளவுப் பிரிவு உயரதிகாரிகள்.

காவல்துறையினர் ஏதோ காது குத்தும் விழாவிற்கு பிரியாணி சாப்பிட வந்தவர்கள்போல் கையில் கம்பையும் வைத்துக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க.. ரவுடிகள் அச்சகத்தை உண்டு, இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதையும் புகைப்படம் எடுக்கிறார்களே என்ற பய உணர்வுகூட இல்லாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால் இது யார் கொடுத்த தைரியம்? எங்கிருந்து வந்தது?

செல்போனில் பேசிக் கொண்டே காரில் வந்திறங்கிய கலெக்டர் பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டேயிருக்கிறார். அடிபட்டவர்கள் மொத்தமாக கதறிய கதறலை முழுமையாக அவர் கேட்டிருப்பாரா என்பது சந்தேகமே...

காவல்துறை உயரதிகாரிகளுடன் மோதுகிறார்கள் பத்திரிகை ஊழியர்கள். "உங்களது காவலர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.." என்று நேருக்கு நேர் குற்றம் சாட்டுகிறார்கள். "அதை அப்புறம் பார்க்கலாம்.. இப்ப நீங்க மறியலை கை விடுங்க.." என்று சின்னப்புள்ளைக்கு மிட்டாய் ஆசை காட்டுவதைப் போல் பேசுகின்றனர் காவல்துறை உயரதிகாரிகள்.

தன்னுடைய ஒரு கண்ணில் ஆபரேஷன் செய்திருந்தாலும், நிலைமையின் தீவிரம் உணர்ந்து ஓடி வருகிறார் மதுரை போலீஸ் கமிஷனர். அவரும் அதைத்தான் சொல்கிறார். "நடவடிக்கை எடுக்கப்படும்.." என்று.. யார் மீது என்பதை கவனமாகச் சொல்லாமல் தப்பித்துக் கொண்டார். அவர் பாவம் என்ன செய்வார்? தமிழகக் காவல்துறையில் இருப்பவர்களிலேயே சிறந்த பக்திமான் இவர்தான்..

மாதம் 5000 ரூபாய் பிச்சைக்கார சம்பளத்தில் கூலியாட்களாக வேலைக்கு வைத்திருந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள் இருவரும், மாதம் 2000 ரூபாய் சம்பளத்தை அள்ளித் தந்ததற்காக பெண் வேலையாட்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டுத் தன்னுயிரை நீத்துவிட்ட படிக்காத மேதையான அந்த செக்யூரிட்டி இறந்து விட்டச் செய்தி கிடைத்ததும், விமானத்தில் மதுரைக்கு அவசரமாகப் பயணமாகிறார் இந்தியாவின் மெகா கோடீஸ்வரர் கலாநிதி மாறன்.

முதல்வரின் 'பேரன்' வருகிறார் என்றவுடன் முதல்வரின் 'மகனி'டம் செய்தியைச் சொல்லிவிட்டு பேரனுக்காக ஆஸ்பத்திரி வாசலில் காத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். பேரன் வந்தவுடன் அவருடன் இணக்கமாகப் பேசி தான் செய்து வைத்திருக்கும் தற்காலிக ஒட்டு வேலைகளைச் சொல்லி அப்போதைக்கு "தேங்க்ஸ் ஸார்.." என்று ஒற்றைவரி வாக்கியத்தை மட்டும் தனக்காக வாங்கிக் கொள்கிறார் கலெக்டர்.

16 நாட்கள் தீக்காயத்துடன் உயிருக்குப் போராடி இறந்த உடலைக்கூட "இப்ப நேரமில்ல. சாயங்காலமாயிருச்சு.. டாக்டர் இல்லை.. மயக்க ஊசி டாக்டர் லீவு.. 16 நாள் பொறுத்த.. இன்னொரு நாள் பொறுக்கக்கூடாதா? நாளைக்கு பண்ணிக்கலாம்.. போ.. போ.." என்று 'பொருள்' இல்லாதவர்களிடம் போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் அடித்து விரட்டும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், இந்த வழக்கில் மட்டும் அவசரம் அவசரமாக களத்தில் இறங்கி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்களை அவசர கதியில் போஸ்ட்மார்ட்டம் செய்து, உடனேயே வெளி வாசலுக்கு அவர்களே கொண்டு வந்து வைத்துவிட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே பாதிக்கப்பட்டவர்களிடம் முதல்முறையாக "ஸாரி.." சொல்லிவிட்டுப் போகிறார்கள். இதே போல் வருகின்ற அனைவரிடமும் இதமாகப் பேசினால் நன்றாக இருக்குமே..

அங்கேயே பேட்டியளிக்கிறார் நிறுவனத் தலைவர். குற்றவாளிகளைத் தண்டிக்காமல் விட மாட்டேன் என்று சூளுரைக்கிறார்.
இங்கே சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. பாவம் எம்.எல்.ஏ.க்கள்.. எம்.எல்.ஏ. என்பதால் சென்னையில் யாரும் அவர்களுக்கு வீடு கொடுக்கவில்லையாம். சொந்தமாக வீடு இருந்தால் தொகுதி மக்கள் யாராவது சென்னைக்கு வந்தால் அவர்களை சென்னையில் தங்களது வீட்டிலேயே தங்க வைத்து உபச்சாரம் செய்வதற்கு உதவியாக இருக்குமாம்.. இதனால் அரசே வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிக் கொண்டிருந்தார் ஒரு எம்.எல்.ஏ.

இன்னொரு எம்.எல்.ஏ., "எங்களது மண்டையில் இருப்பதாகச் சொல்லப்படும் மூளையைப் பிய்த்துக் கொண்டு XML, JAVA போன்ற Software-களின் துணை கொண்டு மக்களின் குறை தீர்க்க மென்பொருள் தயாரிக்கிறோம். எங்களுக்கு கொடுக்கின்ற சம்பளம் ஒரு Software Company-யில் வாட்ச்மேன் வாங்குற சம்பளம்.. எங்களுக்கு எப்படிப் பத்தும்..? இனிமேல் 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுங்கள்.." என்று உரிமைக்குரல் எழுப்புகிறார்.

முதல்வருக்குத் துண்டுச் சீட்டு வருகிறது. எழுந்து தன் அறைக்குச் சென்று அவருக்குப் பிடித்தமான சேனலைப் போட்டுப் பார்க்கிறார். தான் இன்றைக்கு முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு முழுக் காரணமாகத் திகழும் அந்த டிவியின் அலுவலகம் தாக்கப்படுவதை கண் கொண்டு பார்க்கிறார். அவர் மனம் அழுகிறது. இவர்தான் எழுத்தாளராச்சே.. வயிற்றைத் தவிர மற்றதெல்லாம் அழுகும். உடனே அருகிலிருந்து கைத்தடிகளிடம் "பொன்விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்யுங்கள்.." என்கிறார்.

"ஐயையோ.. அதெப்படிண்ணே.. எல்லாருக்கும் டிக்கெட் போட்டாச்சு.. பிரைம்மினிஸ்டரும், டெல்லி அம்மாவும் வர்றாங்க.. நாங்களும் அவுகளை இப்படி ஏதாவது ஒண்ணு சொல்லி மிரட்டி வரவழைச்சு நேர்ல பார்த்தாத்தான்.. எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு?" என்று கண் கலங்குகிறார்கள். தலைவரும் டிவியைப் பார்த்து அழுகிறார். பார்ப்பவர்களும் அப்போதுதானே அழுவார்கள்.

திரும்பத் திரும்ப வாசிக்கப்படும் "மு.க.அழகிரி ஏவிவிட்ட ரவுடிகள்.." என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே அவர் கண்ணில் நீர் கசிகிறது.

"இப்படி நல்ல பெயரை எடுப்பான் என்பதற்காகவா இவனுக்கு நான் மிகவும் நேசித்த பாட்டாளி வீரன் பட்டுக்கோட்டை அழகிரியின் பெயரைச் சூட்டினேன்.. என் இளமைப் பிராயத்தில் நான் 'மைனர்' தோரணையில் இருந்தபோது பிறந்தவனாச்சே. சூடாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், இவ்வளவு சூடாக இருக்கிறானே.." என்று இளகினார் தலைவர்.

இனி தலைவரைச் சம்மதிக்க வைப்பது அவரது தன்மானத்திற்கு இழுக்கு என்பதால் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குச் செய்தி பறக்கிறது. கேன்டீனில் வடை சாப்பிடப் போனத் தலைவர்களும், வீட்டுக்குச் சாப்பிடப் போனவர்களும் அரக்கப் பரக்க ஓடி வருகிறார்கள். அனைவரும் எதிரில் அமர்கிறார்கள். உள்ளே வரும் போதே அவர்களது காதோரம் செய்தி நுழைக்கப்படுகிறது. "எப்படியாவது தலைவரை பொன்விழா நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொள்ள வையுங்கள்" என்று..

தலைவருக்கோ தர்மசங்கடம்.. தானே அறிவித்ததை தானே எப்படி நீக்குவது? அப்படி நீக்கினால் கூடியிருப்போரில் ஒருவன், நாளை தான் 'போன' பிறகு எங்காவது வெளியில் சொல்லியோ, அல்லது எழுதியோ மானத்தை வாங்கிவிட மாட்டானா என்ற எண்ணம்.(பாம்பின் கால் பாம்பறியுமே?) இது மாதிரி தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எத்தனை வாபஸ்களை அறிவித்திருப்பார்? எத்தனை வாபஸ்களை வாபஸ் வாங்கியிருப்பார்? அவருக்குத் தெரியாதா என்ன?

கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கோ அதைவிடத் தர்மசங்கடம்.. இப்போது நாம் இவரைச் சமாதானப்படுத்தாமல் போய்விட்டால், இவர் பின்னாளில் ஏதாவது கவிதை எழுத நம்மை ஒழித்து விடுவாரே என்று.. ஆகவே ஒவ்வொருவராக நம்ம குடும்பம்தான், நம்ம பிள்ளைகள்தான், எப்படியாச்சும் பின்னாடி சமாதானமாயிருவாங்க.. என்பதைச் சொல்லி "பொன்விழாவை நிறுத்த வேண்டாம்.." என்கிறார்கள். ஒரு அமைச்சரின் அசைவைப் புரிந்து கொண்டு, "காண்ட்ராக்ட்டெல்லாம்கூட விட்டாச்சு.. முக்கால்வாசி வேலை முடிஞ்சிருச்சு. இப்ப போய்.." என்கிறார்கள்.

தலைவர் பதிலேதும் சொல்லாமல் எழுந்து வணக்கம் போட்டவர் "வீட்டுக்குப் போலாம்.." என்கிறார். நேரில் இங்கேயே பதிலைச் சொல்லிவிட்டால் கவுரவம் என்னாகுறது? அதுதான்.. கிளம்புகிறார். வீடு நோக்கிச் செல்லும் கார், பாதி வழியிலேயே கட்சி அலுவலகத்திற்குச் செல்கிறது. சில நிமிட நேரத்தில் ஒரு வழவழ... கொழாகொழா... அறிக்கை, கட்சி அலுவலகத்திலிருந்து பத்திரிகைகளுக்கு பேக்ஸ் மூலம் செல்கிறது. அதிலே பொன்விழாவிற்கு தலைவர் ஒத்துக் கொண்ட செய்தியும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி சேனல் இதுதான் சமயம் என்று ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை நிறுத்திவிட்டு ஸ்பெஷல் நியூஸ் ஒன்றை போட்டு தன் 'பாசத்தை' வெளிக்காட்டிக் கொண்டது.

பாதிக்கப்பட்ட டிவியின் இரவு நேரச் செய்தியிலும் 'மு.க.அழகிரி ஏவி விட்ட ரவுடிகள்' என்றே வர்ணிக்க.. "அப்படி கூப்பிடுறதையாச்சும் நிறுத்தச் சொல்லுங்கய்யா.." என்று வீட்டில் தான் வளர்க்கும் நாயைத் தவிர மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார் தலைவர். அவர் கஷ்டம் அவருக்குத்தானே தெரியும். என்ன இருந்தாலும் புள்ளையைப் பெற்றவர் அவராச்சே.. 'முடியாது' என்று இப்போதும் சேனலிலிருந்து பதில் வருகிறது.

ஆனாலும் ஒரு ஜாக்கிரதை உணர்வை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி என்றோ.. அல்லது முதல்வர் திரு.மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி என்றோ டிவிக்காரர்களும் சொல்லவில்லை. இதிலேயும் ஒரு சாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள் போலும்..
இணையதளப் பத்திரிகைள் சில நேர்மையாக நடந்து கொண்டு இந்தச் சம்பவம் பற்றியச் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தினமலர்' எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் தன்னுடைய சந்தோஷத்தை வெளியில் மறைத்துக் கொண்டு சாதாரணமாக வெளியிட்டது.

இதே 'தினமலர்' பத்திரிகை பத்தாண்டுகளுக்கு முன்பு மதுரை-பழங்காநத்தத்தில் உள்ள தன் அலுவலகம் இதே மு.க.அழகிரி ஏவி விட்ட ரவுடிகளால் தாக்கப்பட்டபோது எட்டுப் பக்கத்திற்கு புகைப்படங்களைப் போட்டு தன்னுடைய புகைப்படக்காரர்களுக்கு ஒட்டு மொத்தமாக வேலை கொடுத்தது எனது நினைவுக்கு வந்து சென்றது. தனக்கென்று வந்தால் நோய்.. மற்றவர்களுக்கு வந்தால் அது நடிப்பு என்னும் பிறவிகள் லிஸ்ட்டில் பத்திரிகைக்காரர்களும் இருக்கிறார்களே என்று நினைத்தால் வேதனை கூடுகிறது..

இதிலும் அவர்களுக்கு கூடுதலாக ஒரு கோபமாம். 'தினமலர்' குடும்பத்தில் நடக்கும் குடுமிப்பிடிச் சண்டைகளை போன வாரம்தான் தினகரன் வெளிப்படையாகப் போட்டு உடைத்தது.. சும்மா இருப்பார்களா அவர்கள்..
மறுநாள் பேப்பரில் முதல் பக்கத்தில் 'நாய் தொல்லை' என்ற சிலேடையான செய்தியைப் போட்டுவிட்டு, 16-ம் பக்கத்தில் single 1/4 column-த்தில் செய்தியை வெளியிட்டிருக்கிறது. வாழ்க பத்திரிகை தர்மம்..

இவர்கள் இப்படியென்றால் 'தினத்தந்தி'. அவர்கள் எப்போதுமே வருகின்ற ஆட்சியாளர்களுக்கு ஜால்ராதான். காரணம் சிம்பிள். அவர்களது தேவை பணம்தான். வேறு எதுவுமில்லை. எனவே அவர்களும் உட்புறம் சிறிய அளவில் ஒரு செய்தியை வெளியிட்டு தன்னுடைய வயித்தெரிச்சலையும் காட்டிக் கொண்டார்கள்.

சந்தனக்கடத்தல் வீரப்பன் காட்டுக்குள் எந்த இடத்தில், எத்தனை மணிக்கு நேற்று குளித்தான்.. எவ்வளவு தூரம் நடந்தான்.. உடும்புக் கறியை எப்படி சுவைத்துச் சாப்பிட்டான் என்பதையெல்லாம் உடனுக்குடன் சுடச்சுடச் செய்தியாகக் கொடுத்த 'நக்கீரன்', மதுரை என்ற ஊர் எங்கே இருக்கிறது என்றுகூடத் தெரியாது என்பதைப் போல் மறுநாள் தனது பத்திரிகையை கொண்டு வந்திருக்கிறது. இனி அடுத்த இதழில் சால்ஜாப்பு செய்ய இப்போதே தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

மறுநாள் சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அரசுத் தரப்புச் சொல்லியே கொண்டு வந்தார்கள். அப்போதுதானே அரசு தானே முன் வந்து பேசுவதற்கு ஏதுவாக இருக்கும். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார் மன்னர்.
தன்னுடைய குடும்பப் பகைச் சண்டையால் விளைந்த ஒரு கொடுமைக்கு, மக்கள் பணத்தில் இருந்து இப்படிப் பணத்தை அள்ளி வீசுகிறோமோ என்ற வெட்கமெல்லாம் அவருக்கு இல்லை. அது அவரிடம் இருக்கிறதா என்ன?

தாத்தா அறிவித்தவுடன் பேரன் சுதாரித்துக் கொண்டார். இப்போது அவர்தானே களத்தில் முன்னணியில் நிற்பவர். தாத்தாவை முந்த வேண்டாம். "15 லட்சம் நிதியுதவி.." என்று அறிவித்துள்ளார். எரிக்கப்பட்ட ஊழியர்களின் வாகனங்களை தானே வாங்கித் தரப் போவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இனி இவருக்குப் போராடத் துணையாக நிற்கப் போவது இவருடைய ஊழியர்கள் மட்டும்தானே.. அள்ளிக் கொடுப்பதில் தவறில்லை. எவ்வளவு கொடுத்தாலும் அந்தக் குடும்பத்திற்கு ஒரு உயிர் உடன் இருந்தது போலாகுமா?

காலையிலிருந்து மாலை வரை போன் மேல் போன் வந்தால் போலீஸ் என்ன செய்யும்? எந்த செக்ஷனில் வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு அது சட்டம்-ஒழுங்கு டிஜிபிவரைக்கும் சென்று அங்கேயே தொலைபேசியில் தொங்கிக் கொண்டு விட்டது.. கடைசியாக தலைவருக்கு நெருக்கமான அமைச்சரே 'சாதாரணமாகப் போட்டுத் தள்ளுங்கள்' என்று வெறுப்போடு சொன்ன பிறகே, செக்க்ஷன் பிரிவை மையால் நிரப்பியுள்ளது போலீஸ்.

ஆறு பேர் கைது ஓரிடத்தில். வேறொரு இடத்தில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தியவுடன் ஜாமீனில் விடுதலை. வேறென்ன செய்ய முடியும்?
இங்கு அரசாட்சிதானே நடக்கிறது.. மக்களுக்காக, மக்களால் நடத்தப்படுகின்ற ஜனநாயக ஆட்சியா நடக்கிறது.. அரசரும் மனம் நோகக்கூடாது. பட்டத்து இளவரசரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது.. தளபதியின் முகத்திலும் சிரிப்பைக் காண வேண்டும். சிற்றரசர்களையும் குளிர்விக்க வேண்டும். ரதகஜப்படைகள் வேறு என்னதான் செய்வார்கள்?

போலீஸ் கண் முன்பே தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் உலகத் தமிழர்களின் தற்காலிகத் தலைவர்.. அவருக்கும் வேறு வழியில்லை. இந்தத் தள்ளாத வயதிலும் தன்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டேன்கிறார்களே என்று அவ்வப்போது முதுமையின் காரணமாக உளறிவிட்டாலும், பின்பு வீட்டிற்குச் சென்றவுடன் சுதாரித்துக் கொண்டு கேள்வி-பதிலாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி கணக்கைச் சரி செய்து கொள்வார்.

மறுநாள் பாதிக்கப்பட்ட டிவி தன் 'சுருதி'யைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டுள்ளது. அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்? சொத்து கேட்டார்கள். பங்கு பிரித்துக் கொடுத்தாகிவிட்டது. சீரியலுக்கு டைம் கேட்டார்கள் கொடுத்தாகிவிட்டது. இப்போது வந்து தன் மருமகனுக்காக, ஒரு சேனலையே கேட்டால் தர முடியுமா? என்னதான் உடன் தொட்டுப் பிடித்து விளையாடி வளர்ந்தவர்கள் என்றாலும் பக்கத்து வீட்டுக்காரன் கேட்கிறானே என்பதற்காக யாராவது மனைவியைத் தாரை வார்ப்பானா? அவர்களுக்கும் அரசை முழுமையாகக் கை விட முடியாது.. அண்டி நிற்கவும் முடியாது..

சமாதானத்திற்குத் தயார் என்றாலும் ரவுடிகளை ஏவிவிட்ட மெகா ரவுடி மீது நடவடிக்கை எடுத்தால்தான் என்று பேரன் ஒற்றைக் காலில் நிற்கிறார். மகனை 'உள்ளே' தள்ளினால், தான் நிஜமாகவே மனுநீதிச்சோழனாகிவிடுவனே என்று தந்தைக்கு ஒரு ஆற்றாமை..

என்னதான் நடக்கும்?

ஒன்றும் நடக்காது.. சி.பி.ஐ. வரும். சிலரைக் கைது செய்வார்கள். அதில் 'அட்டாக்' பாண்டியன் என்பவர் உறுதி. ஏனெனில் அவர் பெயரில்தான் 'அட்டாக்' என்கிற வன்முறைப் பெயர் ஒட்டியிருக்கிறதே.. கைது செய்வது ஈஸி.
கைது செய்யப்பட இருக்கும் அனைவருமே, "நாங்களாகத்தான் செய்தோம். இதில் யாருக்கும், குறிப்பாக அண்ணனுக்கு சம்பந்தமே இல்லை..." என்று அழகாக டைப் செய்தே வாக்குமூலம் தருவார்கள். கோர்ட்டுக்குப் போகும். அதற்குள் சாட்சிகளைக் கலைக்கும், குலைக்கும் வேலையில் உடன்பிறப்புகள் இறங்குவார்கள்.

"திருமலை நாயக்கர் மஹாலுக்குள்ள உனக்குன்னே குழி தோண்டிருக்கும்ப்பூ.." என்று மிரட்டல் வரும். சாட்சிகள் ஓடி ஓளிவார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கே, இன்னொரு சிபிஐ டீம் வர வேண்டி வரும்..

இதோ அடுத்து தீவுத்திடலுக்குத் தயாராகிவிட்டது பாதிக்கப்பட்ட, அடி வாங்கிய அந்த டிவி. யார், யாருக்கு எந்தெந்த இடம், கேமிரா என்பதெல்லாம் முடிவாகி final situtation chart தயாராக உள்ளது.

'டெல்லி அம்மா' வருகிறார். கூடவே பிரதமர் என்று சொல்லப்படுபவரும் வருகிறார். இருவரும் தங்களுக்குத் தெரிந்த மொழியில் இத்தனை காலம் தங்களுக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி தெரிவிக்கப் போகிறார்கள். அரசர் மனம் மகிழ்வார். சிறிது நேரம் மகனையும், பேரனையும் மறந்திருப்பார். ஆனால் பேசும்போது உணர்ச்சிவசப்படுவார்.
தான் காலத்தின் கட்டாயம் என்று தமிழக மக்கள் உணர வேண்டும் என்பார். முடிந்தால் கண் கலங்கி, அழுதும் சீன் காட்டுவார். பார்தத உடன்பிறப்புகள் "பிள்ளைக அடிச்சிக்கிட்டா இவர் என்னய்யா பண்ணுவார்? இவரை மாதிரி ஒரு அப்பன் எனக்கெல்லாம் கிடைச்சிருந்தா..?" என்று புலம்பிப் புலம்பியே டாஸ்மாக் கடையை நோக்கிப் படையெடுப்பார்கள்.

அதற்கு முன் இன்று உ.பி. சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து ஒரு இராமாயணமோ, மகாபாரதமோ உ.பி.யில் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு நடக்கும். மக்கள் இதில் மூழ்குவார்கள்.

இதன்பின் அடுத்தத் துணை ஜனாதிபதி யார்? ஜனாதிபதி யார்? என்று உலகப் புகழ் பெற்ற ஏ.சி.நெல்சன் என்ற சர்வே நிறுவனம், சன் டிவி என்ற நிறுவனத்தோடு இணைந்து சர்வே செய்யும். தமிழக மக்கள் ஆர்வத்துடன் அதற்கு ஓட்டளிப்பார்கள்.

இடையிடையே நம்முடைய மருத்துவர் ராமதாஸ் "இந்த ஆட்சி மோசம். ஆனால் ஐந்தாண்டு காலம் ஆட்சிக்குத் துணையிருப்போம்.." என்று சொல்லி மக்களை நகைச்சுவைக் கடலில் ஆழ்த்துவார்.

அடுத்த மாதம் 'சிவாஜி' வந்துவிடுவார். அப்புறம் ஷ்ரேயாவுக்கு ஜாக்கெட் தைத்தது எப்படி? சாலமன்பாப்பையா தனக்கு ஜோடியாக நடித்தவரிடம் எப்படியெல்லாம் ஜொல்லு விட்டார்.. 'சிவாஜி' எவ்ளோ வசூல்.. வசூலான தொகையில் எத்தனை பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாவாக வெளிநாடு சென்றார்கள்.. 'சிவாஜி'யால் அரசுக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது? மருத்துவர் ராமதாஸ் 'சிவாஜி' போஸ்டரை பார்க்காமல் இருப்பதற்காக, 'சிவாஜி' போஸ்டர்கள் இல்லாத இடங்கள் வழியாகப் பயணம் செய்த அனுபவத்தை அவர் உடன் சென்ற ஒரு பத்திரிகையாளர் அனுபவமாக எழுதப் போகிறார். இவ்வளவு தகவல்கள் நமக்காகக் காத்திருக்கிறது...

இதற்கிடையில் குடும்ப நிகழ்ச்சியன்றில் 'புகழ்' என்கிற சன் டிவியின் முதலாளி கலாநிதி மாறனும், பிடிக்காதவர்கள் மீது ரவுடிகளை ஏவி விடும் வழக்கமுள்ள மெகா ரவுடி மு.க.அழகிரியும் கை குலுக்கினார்கள் என்று புகைப்படத்துடன் செய்தி ஒன்றும் வலுக்கட்டாயமாக வெளிவந்திருக்கும். அருகில் மகனுக்கு அப்பனும், பேரனுக்குத் தாத்தாவுமான பேரரசர் பெருமிதத்துடன் இருப்பதையும் சேர்த்துப் போட்டிருப்பார்கள்.

தயவு செய்து அந்தத் துர்பாக்கியச் செய்தியை நீங்கள் யாராவது பார்த்தீர்களானால், இப்போது இறந்து போன அப்பாவிகளின் குடும்பத்தாரிடம் மட்டும் அதைக் காட்டிவிடாதீர்கள். பாவம், அவர்கள் வீட்டில் இன்னொரு உயிரும் பொக்கென்று போய்விடும்..

தமிழக அரசியலுக்காகப் பலியான பல அப்பாவிக் குடும்பங்களில் தாங்களும் ஒன்று என்ற தியாக உணர்வோடு அவர்கள் இருக்கின்றவரைக்கும் நிம்மதியாக இருக்கட்டும்..
உண்மைத்தமிழன் வேறென்ன சொல்வது?

ஜெய்ஹிந்த்

எங்கே போகிறார்கள் இவர்கள்..?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

காலமும், நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனூடேயே நாமும் ஓடாவிட்டால் காலம் நமக்காக ஒருபோதும் நிற்காது.. மாறாக நாம்தான் தேங்கி நிற்போம்..

இதுதான் இன்றைய புதுமையான இளைய சமுதாயத்தினரின் தாரக மந்திரம்.. ஓடு.. ஓடு.. ஓடு..

எது வரைக்கும் என்கின்ற எல்லையை அவர்கள் தங்களுக்குள் போட்டுக் கொள்வதில்லை. கிடைக்கிற வழிகளிலெல்லாம் இடை, இடையே புதுப் புது வழிகளை தாங்களே கண்டுபிடித்துச் செல்லவும் அவர்கள் தயங்குவதில்லை.

இங்கே பாருங்கள்.. எனக்குக் கிடைத்த ஒரு நான்கு பக்க A-4 பேப்பரில் அச்சிடப்பட்டிருந்தவைகள்தான் இது. ஒரு சிறந்த எழுத்தாளரால்கூட இப்படி ஒரு சிறப்பான திரைக்கதையை அமைக்க முடியாது. அப்படி கனகச்சிதமாக தங்களுக்குத் தாங்களே திரைக்கதை, வசனம் எழுதி எப்படி நடித்திருக்கிறார்கள் பாருங்கள், நமது இளைய சமுதாயத்தினர்!

இது எங்கே போய் முடியும், என்று கேட்பதற்காக நான் இதை, இங்கே பதிவு செய்யவில்லை. எவ்வளவு வேகமாக இரண்டு எதிரெதிர் காந்தங்கள் ஒன்றை நோக்கி ஒன்று எப்படி ஈர்க்கப்படுகின்றன என்பதைப் பாருங்கள்..

காலத்தின் வேகம்தான் என்ன? இதனால் விளையும் கோலத்தின் மையப்புள்ளிதான் எது?

சற்றே சர்ச்சைக்குரிய விஷயம்தான்.. ஆனால் யாராலும் தீர்ப்புச் சொல்லிவிட முடியாது..

ஒரு internet centre-ல் chatting செய்து முடித்துவிட்டு போன் நம்பர் வேண்டும் என்பதற்காக copy செய்து harddisk-ல் பதிவு செய்து வைத்துவிட்டுப் போன(நம்மாளு.. கண்டிப்பாக நம்மாளாத்தான் இருந்திருப்பான். பொண்ணுக ரொம்ப உஷாருங்க.. படிச்சுப் பாருங்க புரியும்..) file-ல் இருந்து சென்ஸார் செய்யப்பட்ட பகுதிகள்..

இதோ வலைத் தமிழர்களது பார்வைக்கு..

akki1234 : hai
subha-007 : hi
akki1234 : male here
akki1234 : name plz
akki1234 : 22 chennai
akki1234 : u r
subha-007 : 30 cochin
akki1234 : male or femalee
subha-007 : f
akki1234 : what u do
subha-007 : working
akki1234 : me too in bank
akki1234 : what u llike
subha-007 : can you tell me something interesting
akki1234 : what u wnat
subha-007 : something related to sex
akki1234 : i am askning ur first night tale
subha-007 : it was a small rape
akki1234 : u like small rape or big rape
akki1234 : (CENSORED)
subha-007 : (CENSORED)
akki1234 :
subha-007 : (CENSORED)
akki1234 : (CENSORED)
akki1234 : (CENSORED)
subha-007 : i will give you everything
subha-007 : any sexual experience
akki1234 : yes
akki1234 : XXXXXX
akki1234 : XXXXXX
subha-007 : your e-mail
akki1234 : why
subha-007 : okay dont want
akki1234 : no i will give u dear
akki1234 : XXXXXX
akki1234 : u can call me also
subha-007 : what you are doing a
kki1234 : work in bank
subha-007 : which bank
akki1234 : XXXXXX
akki1234 : chennai
akki1234 : r u comming to chennai
subha-007 : can you tell me your real name
subha-007 : are you on leave now
akki1234 : XXXXXXX
subha-007 : which branch
akki1234 : r u there
akki1234 : XXXXXXX
akki1234 : in chennai
subha-007 : i know ashok nagar branch manager
akki1234 : good da
akki1234 : will u come to chennai any way
subha-007 : i have account there
subha-007 : i am really from chennai
subha-007 : alapakkam
akki1234 : good
akki1234 : i am in asok nagar
akki1234 : when u will come to chennai
subha-007 : i am not from cochin. it was lie. i am from chennai
akki1234 : once again lieing
subha-007 : no i will you another clue
akki1234 : give me
subha-007 : address. XXXXXXXXXXXXXXXXX
akki1234 : if u r in chennai then really i will be happy
akki1234 : ok
akki1234 : u hav any contact number
subha-007 : alapakkam
akki1234 : txz da
subha-007 : that i will not give now
akki1234 : i really like u
subha-007 : will you give your number
akki1234 : can u give me a call then i will give u my mobile number
subha-007 : may i check calling now
subha-007 : your number
akki1234 : XXXXXXXXXXXXXX
akki1234 : ur age
akki1234 : ur name
subha-007 : sudha
subha-007 : 30
akki1234 : we r very best friend and thick friends forvere ok
akki1234 : i like u so much
subha-007 : can we chat tomorrow
akki1234 : but now r u going dear
akki1234 : u give me a call
akki1234 : can i hav ur number
subha-007 : it is office
akki1234 : r u a house wife
subha-007 : divorced
akki1234 : when u will be at house
akki1234 : why da
akki1234 : r u happy with divoce
subha-007 : ya
akki1234 : any way i do not make u remember u once again
akki1234 : when u will call me da
akki1234 : wher u work
subha-007 : are you on leave today
akki1234 : yes
akki1234 : dear
subha-007 : bye can chat tomorrow this time
subha-007 : ok
akki1234 : why don't u call me da
akki1234 : give ur phone number i will call u da
subha-007 : bye dear
akki1234 : ok
akki1234 : or u give me a call
akki1234 : ok
akki1234 : when u will give me a call
akki1234 : hey u like to watch movies
subha-007 : can we go together one day
akki1234 : that is time permits then
akki1234 : first we meet dear
akki1234 : r u there
subha-007 : can we meet at paris bus stop
akki1234 : will u give me a call
akki1234 : today or tomarrow
subha-007 : sunday
akki1234 : how can i speak to u when i want to call
akki1234 : at wat time
akki1234 : how can we meet
akki1234 : u hav any mobile
subha-007 : no calls now
akki1234 : then how we meet da
akki1234 : sunday r we meeting
akki1234 : r u tere
subha-007 : sunday come to paris bus station. i will be wearing dark churidar. i have spectacles
akki1234 : how many peaople waer dark churidar and specks dear
subha-007 : come at 10.30. am
akki1234 : better u have to call me once u reaches busstand
subha-007 : ok
akki1234 : ok exactly 10.30 am
akki1234 : which busstand
subha-007 : where we will go
akki1234 : we decide after that
subha-007 : paris
akki1234 : we hav 2 busstand
akki1234 : u know my mobile number tell me
subha-007 : inter-state bus stop
akki1234 : u mean that thiruvalluvar busstop correct
subha-007 : okay may i write tell me once again
akki1234 : yes
akki1234 : there
akki1234 : r u there
subha-007 : i will talk only if i am satisfied by your appearance
subha-007 : ok
akki1234 : ok
akki1234 : i am little smart only - what u dear
subha-007 : if i say no thanks, you should go immediately
akki1234 : ok da
subha-007 : i am okay to all
akki1234 : good
akki1234 : anyway
subha-007 : your number
akki1234 : xxxxxxxxxxxxxxxxx
akki1234 : u will come by bus or vechile
subha-007 : kinetic honda
akki1234 : no u come by bus
akki1234 : even i come by bus
akki1234 : ok
subha-007 : no i dont travel by bus. if it is a long journey i take my santro..
akki1234 : ur name is subha right
subha-007 : ya
akki1234 : why dont u give ur mobile numner first we talk pk
akki1234 : u hav got a santro
subha-007 : i am working with xxxxxxxxx, chennai
akki1234 : any way i think u r rich girl
akki1234 : vow
akki1234 : ui am a financier for car from xxxxxxxxxx
akki1234 : there
subha-007 : ya
akki1234 : if u really like thern u give ur mobile number i am very freak and will not call if they do not like
akki1234 : there
akki1234 : ur height and weight and color
subha-007 : i have a call please wait
akki1234 : r u there
kki1234 : why late
akki1234 : hello

"யாருக்கும் இங்கே வெட்கமில்லை"

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"நாடாளப் பிறந்தவர்கள் நாங்கள். கேள்வி கேட்காமல் அடங்கிச் செல்பவர்கள்தான், சாதாரண மக்களாகிய உங்களுடைய வேலை.." என்பதை இன்னொரு முறையும் நமது தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்துள்ளார்கள்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று தமிழகச் சட்டப் பேரவையில் பொதுச் சொத்துக்கள் சேத வசூல் சட்டத்தை வாபஸ் பெறுவதாக தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், "நாங்கள் யாருக்கும் அடங்காதவர்கள், ஆண்டவனுக்கே பயப்படாதவர்கள்.. கேவலம் ஒரு பேப்பரில் எழுதப்பட்ட சட்டத்திற்கா பயப்படுவோம்..?" என்று மறைமுகமாக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வெட்கங்கெட்ட அரசியல்வாதிகள் அனைவரும்.

தமிழ்நாட்டில் பொதுச்சொத்துக்களை சேதம் செய்வது என்பது இப்போது என்றில்லை. என்றைக்கு அரசியல்வாதிகள் தங்களது சுயநலத்திற்காக அரசியலில் கால் பதித்து இறங்கினார்களோ, அன்றிலிருந்தே நடந்து வருகிறது. அதிலும், தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன், இதுவொரு முழு நேரத் தொழிலாகவே மாறிவிட்டது.

இத்தகைய வன்முறைகள் உலகத்தில் வேறெங்கும் நடப்பதில்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. உலகம் முழுவதுமே நடந்து வருவதுதான்.. இல்லை என்று மறுப்பதற்கில்லை.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக என்று நினைக்கிறேன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் இரவு நேரத்தில் காரில் வந்து கொண்டிருந்த கறுப்பின இளைஞரை, இரண்டு வெள்ளைக்கார போலீஸார் காரிலிருந்து இறக்கி மாட்டடி அடித்தார்கள், காரணமே சொல்லாமல்.

இதை அருகிலிருந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர், வீடியோவில் படம் பிடித்து தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்க.. அது 'ஊடகத் தர்மப்படி' கர்மசிரத்தையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்தக் கறுப்பின இளைஞருக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு நாம் அதிர்ந்தோமோ இல்லையோ.. அமெரிக்கா அதிர்ந்துதான் போனது.. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் வன்முறைகள் வெடித்து, கடைகள் சூறையாடப்பட்டன. பொருட்கள் களவாடப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.

கடைசியில் தாக்கப்பட்ட அந்தக் கறுப்பின இளைஞரே டிவியில் தோன்றி "கலவரம் செய்ய வேண்டாம் மக்களே.. விட்டுவிடுங்கள்.. இப்போது அமைதி காணுங்கள்.." என்று கேட்டுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

இதைச் செய்தவர்கள் யாரோ அல்ல. அதே அமெரிக்க மக்கள்தான்.. ஆனால் இனம் மட்டுமே வேறு. அவர்களுடைய நோக்கம் என்ன? தங்கள் இனத்தவரை, இனவெறியின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதைக் கண்டிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தது சரிதான். ஆனால் போராட்டத்தில் வன்முறை எவ்வாறு வெடித்தது?

இந்த வன்முறையில் ஈடுபட்ட அனைவருமே இளைஞர்கள்தான். கிடைத்தது ஒரு வாய்ப்பு. துணிந்து விட்டார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பம்தான், அவர்களை அத்தகைய வன்முறையைச் செய்ய வைத்து, சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் நம் ஊரில் நடப்பது என்ன?
ஒரு கட்சித் தலைவருக்கு போனில் யாராவது லேசாக, "எப்படிப்பூ இருக்க..?" என்று நலம் விசாரித்தாலே போதும்.. 'இது ஒரு மிரட்டல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறது.. கண்டித்து ஊர்வலம்..' என்று கிளம்பி விடுகிறார்கள்.
இவர்களது ஊர்வலத்துக்கு வருபவர்களெல்லாம் யார்? கண்டிப்பாக அவர்களுடைய அனுதாபிகளாக இருக்க மாட்டார்கள். வீட்டில் வேண்டாத 'பருப்பு'க்களாக இருப்பவர்கள், வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.. இவர்களைப் போன்ற முகவரி தேடியலையும் இளைஞர்கள்தான். "ஊர்வலத்துக்கு வா.. 300 ரூபா தர்றோம்.. பிரியாணியும், 'சரக்கும்' ப்ரீயா கிடைக்கும்.." - இப்படிச் சொல்லித்தான் இவர்கள் அரசியலுக்கு இழுத்து வரப்படுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாக நுழைபவனுக்கு அரசியல் என்பது சமூக சேவை என்று தோணுமா.. அல்லது மிகக் குறுகியக் காலத்தில் எளிதாக காசு, பணம் பார்க்க ஈஸியானதொரு தொழில் என்று தோணுமா? நோக்கம் உயரியதாக இருந்தால் மட்டுமே அந்தச் செயல் வெற்றியடையும்; பெருமையடையும். இங்கு ஆரம்பமே கோணலாகத்தான் ஆரம்பிக்கிறது.

எதிர்க்கட்சி போராட்டம் நடத்தினால் ஆளும்கட்சி பயப்படுகிறது. காரணம், இந்தப் போராட்டத்திற்கு மக்கள் நிறைய பேர் வந்துவிட்டால் எதிர்க்கட்சி பலமாக இருப்பது மக்களுக்குத் தெரிந்துவிடுமே என்று!! இதைத் தடுக்க வேண்டும் என்று, அவர்கள் தங்கள் வீட்டு நாய்களைப் போல் வைத்திருக்கும் காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்கள்.

உடனே காவல்துறையினர் என்ன செய்கிறார்கள்?
எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் முதலில் கைது செய்து ரிமாண்ட் செய்கிறார்கள். அல்லது கைது செய்வதாகச் சொல்லி கல்யாண மண்டபத்திற்குள் கொண்டு சென்று அடைத்துவிட்டு 'சரவண பவன்' சாப்பாடு வாங்கித் தருவார்கள். ஆனால் தொண்டர்களுக்கு..?

"இன்னிக்கு நீங்க கொடுக்குற அடில, அடுத்த எலெக்ஷன்வரைக்கும் அவன் வீட்டை விட்டு வெளில வரக்கூடாது. அப்படி அடிக்கணும்பா.." - ஆளும் கட்சியினரிடமிருந்து வரும், இப்படியரு சொல்லப்படாத உத்தரவால் கொம்பு சீவிவிடப்படுகிறது காவல்துறை.

சமயம் பார்த்துக் காத்திருக்கிறார்கள் காவலர்கள். யாராவது ஒரு தொண்டன் அவர்கள் மீது கை வைத்துவிட்டால் போதும்.. அவ்வளவுதான்.. 'சார்ஜ்' என்ற வார்த்தையை முதலில் பிரயோகித்தது யார் என்று யாருக்குமே தெரியாது.. காவல்துறையின் குண்டாந்தடி, தொண்டர்களைப் பதம் பார்க்கத் தொடங்கி விடும்.

அடி வாங்கும் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களுடைய கோபத்தைக் காட்டத் தொடங்குகிறார்கள். இங்குதான் அரசியல் வன்முறை துவங்குகிறது. வழியில் தென்படும் கடைகள், லைட்டுகள், போர்டுகள் சிதைக்கப்படுகின்றன. கற்கள் வீசப்பட்டு கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன.

பேருந்துகள் கண்ணில் பட்டால் ரொம்பச் செளகரியம்.. ஏனெனில் எந்தத் திசையிலிருந்து எதை வீசினாலும் அடிபடும் வகையில் இருக்கும், அதனுடைய நீளமும், அகலமும், வடிமைப்பும் கலவரக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமானது. பிடித்தமான தனது ரசிகர்களால், தாக்குதலுக்குள்ளாகிறது அப்பேருந்து..

சென்ற முறை தி.மு.க. ஆட்சிப் பீடத்தில் இருந்தபோது, மதுரை நகரில் ஜெய்ஹிந்த்புரத்தில் ஜெகதீசன் என்ற பைனான்ஸியர் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக, அப்போதைய மதுரை மாநகராட்சியின் தி.மு.க. துணை மேயர் திரு.மிசா பாண்டியன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, திரு.மிசா பாண்டியனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மதுரையில் தற்போது அரசாட்சி செய்து வரும் தளபதியும், தென்பாண்டி மண்டலத்து பட்டத்து இளவரசருமான திரு.மு.க.அழகிரி, தி.மு.க.விலிருந்து அப்போது நீக்கப்பட்டார். இந்த நீக்கத்தின் பின்னணியில், தமிழகத்தின் தற்போதைய முடிசூடா மன்னர் திரு.மு.க.ஸ்டாலின் இருப்பதாக அவர்களுடைய கட்சிக்காரர்களே சொன்னார்கள்.

அவ்வளவுதான்.. "எப்படி எங்கள் 'அஞ்சாநெஞ்சனை' கட்சியை விட்டு நீக்கலாம்?" என்று போர்க்கொடித் தூக்கினார்கள் மதுரையைச் சேர்ந்த உடன்பிறப்புகள். இவர்களுடைய கோரிக்கை ஒரு கட்சி சம்பந்தப்பட்டது. ஆட்சி சம்பந்தப்பட்டதல்ல. அப்படியானால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அப்படியே ஒரு லாரியையோ, பஸ்ஸையோ பிடித்து சென்னைக்கு வந்து 'அறிவால'யத்தை முற்றுகையிட்டுத் தங்களது கோரிக்கையைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? பஸ் மறியல்.. தர்ணா.. கடையடைப்பு போராட்டம்..

நான்கு நாட்களாக மதுரையிலிருந்து புறநகர் பஸ்கள் கிளம்ப முடியவில்லை. மதுரையின் பல இடங்களிலும் தொடர்ச்சியான பஸ் மறியல். பயணிகள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்பது அப்போது பயணிகளில் ஒருவனாய் மதுரையில் இருந்த இந்த உண்மைத்தமிழனுக்கும் தெரியும்.

போலீஸ் மறியல் செய்பவர்களைக் கைது செய்யும். உடனே அவர்களை மதுரை எல்லைக்குக் கொண்டு போய், ஏதாவது ஒரு இடத்தில் விட்டுவிட்டு வருவார்கள். மறுபடியும் அந்தத் தொண்டர்கள் பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மறியலில் உட்கார்ந்திருப்பார்கள். மறுபடியும் போலீஸ் வரும். கைது செய்வதாகச் சொல்லி அனுப்பானடியைத் தாண்டி கொண்டு போய் விட்டுவிட்டு வருவார்கள். இதே கதைதான் நான்கு நாட்களும் நடந்தது.

அதாவது அரசும், ஆளும் கட்சியும், அதன் தலைவர்களும், தொண்டர்களும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினார்கள். ஆனால் இந்த விளையாட்டின் இடையில் மாட்டிக் கொண்டு தவியோ தவி என்று தவித்தவர்கள், என்னைப் போன்ற அப்பாவி பொதுமக்கள்தான். இத்தனை காவல்துறையினர் இருந்தும் என்ன புண்ணியம்? எந்தக் காவல்துறை அதிகாரி அந்த நேரத்தில் பொறுப்பாக பணி செய்தார்? அனைவருமே கண்துடைப்பு வேலையைத்தான் செய்தார்கள்.

'உடன்பிறப்புகள்' என்ற பெயரில் உலா வந்த ரவுடிகள், நான்காவது நாளில் செய்ததுதான் மிகக் கொடுமை. மதுரை கோரிப்பாளையத்தில் மீனாட்சி கல்லூரியின் அருகே வந்து கொண்டிருந்த இரண்டு நகரப் பேருந்துகளை நிறுத்திய தொண்டர்கள் என்ற ரெளடிக் கும்பல், அந்தப் பேருந்துகளிலிருந்த அனைத்துப் பயணிகளையும் இறக்கிவிட்டு ஓட ஓட விரட்டியடித்துவிட்டு, அந்த இரண்டு பஸ்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தியது.

நாசமானது பஸ்கள் மட்டுமா? நல்லதொரு அரசாட்சி என்ற பெயரும், ஜனநாயகம் என்ற வார்த்தையும்தான்..

இரண்டு சகோதரர்களுக்கிடையே நடந்த நீயா? நானா? போட்டியில் மக்களுடைய வரிப்பணத்தில் 10 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய பேருந்துகள் எரிந்து சாம்பலானது..
இதற்கு யார் பொறுப்பு? இந்த 10 லட்சத்தை இப்போது யாரிடமிருந்து வசூல் செய்வது? சரி.. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகளையாவது காவல்துறை என்ன செய்தது? அடையாளத்திற்கு 4, 5 பேரை கைது செய்தது.. ஆனால் வழக்கு விசாரணை இன்னமும் முடியவில்லை. காரணம், வழக்கு கோர்ட்டுக்கே இன்னும் வரவில்லை.

இது ஒருவகையில் ஜனநாயகப் படுகொலைதானே.. இதை ஏன் என்று கேட்கக்கூடாது, மக்கள் தங்களது மனதில் இதைப் பற்றிய அசிங்கத்தையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்றால், இது இந்தக் கேடு கெட்ட, கேவலம் கெட்ட அரசியல்வாதிகளின் சர்வாதிகார உணர்வைத்தானே காட்டுகிறது..

தி.மு.க. மட்டுமா..? பாட்டாளி மக்கள் கட்சி துவக்கத்தில் வன்னியர் சங்கமாக இருந்தபொழுது தமிழ்நாட்டைப் படுத்திய பாட்டை தமிழகத்து மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். ஒரு முறை எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தி.மு.க.வின் செப்டம்பர் மாதத்திய முப்பெரும் விழாவிற்கு வந்துவிட்டு ஊர் திரும்பிய தி.மு.க. தொண்டர்களின் வேன்கள், லாரிகள், பஸ்களை வழிமறித்து தகராறு செய்தனர் வன்னியர் சங்கத் தொண்டர்கள்.

எப்படி தெரியுமா? திண்டிவனத்திலிருந்து வழிநெடுகிலும் மரங்கள் வெட்டப்பட்டு நடுரோட்டில் குவிக்கப்பட்டிருந்தன. திண்டிவனத்தில் அப்போது டாக்டர் ராமதாஸின் கிளினிக் வாசலில் நின்று கொண்டிருந்த வன்னியர் சங்கத் தொண்டர்கள், தி.மு.க. தொண்டர்களைத் தாக்கத் துவங்க.. கலவரம் நேரடி மோதலாக வெடித்தது..

போலீஸ¤ம் வந்தது.. துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் அந்த இடத்தில் கலவரத்தை அவர்களால் அடக்க முடிந்தது. இறந்தவர்கள் 15 பேருக்கும் மேல். இவர்களது சாவுக்கு யார் காரணம்? இந்தக் கலவரத்தின்போது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட வன்னியர் சங்கத் தொண்டர்கள், இன்றுவரை கோர்ட்டிற்கும், வாய்தாவிற்குமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ்..?

அந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து தென் மாநிலம் நோக்கிச் சென்ற பேருந்துகள் அனைத்தும் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை என்று பல இடங்களில் நிறுத்தப்பட்டு நான்கு நாட்களாகப் பயணிகள் எப்படியெல்லாம் துன்பப்பட்டார்கள் என்பதனை, அப்போதைய பத்திரிகைகளை இப்போது படித்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

வெட்டப்பட்ட மரங்களையும், ரோட்டின் குறுக்கே இருந்த தடைகளையும் நீக்கிவிட்டு மறுபடியும் போக்குவரத்தைச் சீர் செய்யவே, காவல்துறைக்கு ஐந்து நாட்கள் ஆனது.
இந்தக் கலவரத்தின்போது வன்னியர் சங்கத்தினரால் ரோட்டோரமாக இருந்த எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன? அவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? இந்த 'மரம் வெட்டிப் புனிதர்'தான் இப்போது 'பசுமைத் தாயகத்தை' அமைத்து, ஊருக்கு ஒரு மரம், செடி, கொடி நட்டு, 'அசோகருக்கு அடுத்த வாரிசு இப்போது நான்தான்' என்று ஓயாமல் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் இப்படியென்றால், 'அம்மா'.. நம்ம டாக்டர் புரட்சித்தலைவியும் அவருடைய ரத்தத்தின் ரத்தங்களும்.. எங்கயோ போய்விட்டார்கள்..

ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவி வகித்தபோது, காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி திடுதிப்பென்று சென்னை, மெரீனா பீச்சில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.வி.சி.சுக்லாவே நேரில் வந்து பேசியும், அம்மையார் அசைந்து கொடுக்கவில்லை.

"எங்க அம்மாவே சாப்பிடாம இருக்காங்க. உங்களுக்கெல்லாம் என்னடா சாப்பாடு?" என்ற ரத்தத்தின் ரத்தங்களின் ஆவேசக் குரலால், தமிழ்நாடு முழுவதுமே சட்டப்பூர்வமான கடையடைப்பு, பந்த், தர்ணா என்று அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இப்போதும் நான் மதுரையில்தான் இருந்தேன்.

அப்போதைய மதுரை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக இருந்த திரு.ராஜன்செல்லப்பாவின் தலைமையில் ஒரு ரவுடிக் கும்பல் திறந்த லாரி ஒன்றில் ஏறிக் கொண்டு மதுரை நகரையே சுற்றி வந்து தங்களது பராக்கிரமத்தைக் காட்டியது. எங்காவது கடையைத் திறந்திருந்தால் உடனே லாரியை நிறுத்தி, அந்தக் கடையைச் சுக்கு நூறாக்கிவிட்டுத்தான் அடுத்த இடத்துக்குக் கிளம்பினார்கள்.

"அம்மா உண்ணாவிரத்தைக் கைவிட வேண்டும்" என்று அப்போதைய பிரதமர் ‘புன்னகை மன்னன்’ திரு.பி.வி.நரசிம்மராவைவிட அதிகம் வேண்டிக் கொண்டவர்கள் தமிழகத்து மக்கள்தான்.. இந்தக் கோபத்தைத்தான் அடுத்து வந்த தேர்தலில் காட்டி, அம்மாவை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

ஆட்சியில் இருந்தால்தான் நாங்கள் இது பற்றிய 'வீரங்களைச்' செய்வோம் என்றில்லை. ஆட்சியில் இல்லாத போதும் எங்களால் செய்ய முடியும் என்று 'ரத்தத்தின் ரத்தங்கள்' சொல்லாமல் சொல்லி செய்த கொடுஞ்செயல்தான் சென்ற, தி.மு.க. ஆட்சியின்போது தர்மபுரி அருகே கோவை வேளாண்மைக் கல்லூரி பஸ்ஸை வழிமறித்துத் தாக்கி, அதில் இருந்த மூன்று அப்பாவி மாணவிகளை உயிரோடு கொளுத்தியது..

இந்தக் கொடூரச் செயலில் ஜெயலலிதாவுக்கு நேரடித் தொடர்பு இல்லையென்றாலும், அவர் கட்சியின் கட்டளைப்படிதான் இந்த பஸ் மறியல் நடந்தது. பஸ் மறியல் செய்யப் போனவர்கள் 'அம்மா மனதில் தனியிடம் பிடித்து, நாளைக்கு ஒரு பதவியைப் பிடித்து, நாலு காசு சேர்க்கலாம்..' என்ற எண்ணத்தில் உணர்ச்சிவசப்பட்டு இப்படியரு கொடுமையைப் பங்கு போட்டுச் செய்துவிட்டார்கள்.

ஆனால் இவர்களுடைய தவறை இதுவரை ஒரு முறைகூட அம்மா, டாக்டர் புரட்சித் தலைவி தன் வாயாற தவறு என்று ஒத்துக் கொள்ளவில்லை. எப்படிச் சொல்லுவார்?

இப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டா¡ர்கள். சரி.. இதனால் அந்த மூன்று அப்பாவிப் பெண்கள் திரும்பக் கிடைத்துவிடுவார்களா? எரிக்கப்பட்ட அந்தப் பேருந்திற்கு யார் பொறுப்பு? யார் காசில் வாங்கியது அந்தப் பேருந்து? தமிழக மக்களின் பணம்தானே.. அரசியல்வாதிகளா அவர்கள் சொந்தக் காசில் வாங்கிக் கொடுத்தார்கள்..?

தமிழகத்தில் இவர்கள் மட்டுமல்ல.. இன்னும் லெட்டர்பேடு கட்சிகளும் ஏராளமாக இருக்கின்றன. அரசியல் கட்சிகளுக்குப் போட்டியாக ஜாதிச் சங்கங்களும் புற்றீசல்போல் பெருகி வருகின்றன.
அதுவும், அரசியல் ஆதாயத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு தேர்தலின்போதும் ஜாதிச் சங்கங்கள், அதிகமாக முளைக்கின்றன. இப்போதெல்லாம் மக்கள் பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் முதல் நேற்று முளைத்த லெட்டர்பேடு கட்சிகள்வரை அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று நடத்துகின்றன.

இந்தக் கூட்டங்கள், ஊர்வலங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால் சேதம் அடைந்த சொத்துக்களுக்கு யாரும் நஷ்டஈடு தருவதில்லை.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் கைது செய்யப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, சம்பந்தப்பட்டக் கட்சிகளிடம் இருந்து சேதத்திற்கான நஷ்ட ஈட்டை வசூலிக்க எந்த அரசும் தைரியமாக நடவடிக்கை எடுப்பதில்லை. எப்படி எடுப்பார்கள்? எடுத்தால், முதலில் மாட்டுவது அவர்கள்தானே..

ஆனால் திடீர் ஞானதோயமாக கடந்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் 'புரட்சித்தலைவி' ஒரு புரட்சி முடிவெடுத்தார்.

"அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் என்று நடத்தி அதில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுப் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும். பொதுச்சொத்து சேதத்திற்கான நஷ்டஈட்டையும் தர வேண்டும்." என்று அதிரடிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.

இந்தச் சட்டம் கொண்டு வந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘அம்மா’ ஆட்சியில் கடும் நடவடிக்கைக்கா பஞ்சம்? தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்து முன்னணி மற்றும் தனி நபர்கள் என்று பலருக்கும் பல விதங்களில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்துள்ளீர்கள் என்று குற்றம்சாட்டி. அதற்குரிய நஷ்டஈட்டை அரசுக்குச் செலுத்து வேண்டும் என்று உத்தரவையும் பிறப்பித்தார்.

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியிருந்த நஷ்ட ஈட்டுத் தொகையை நீங்களே பாருங்கள்..

1. தி.மு.க. ரூ. 53,264
2. பா.ம.க. ரூ.39,36,448

3. ம.தி.மு.க. ரூ. 3,383

4. இந்து முன்னணி ரூ. 4,20,782

5. தி.மு.க. பிரமுகர் மூக்கையா ரூ. 33,829

6. ஓய்வு பெற்ற
ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பன்- ரூ. 2,39,661

மொத்தம் ரூ.46,87,367

இதில் அதிகத் தொகையைக் கட்ட வேண்டியது பாட்டாளி மக்கள் கட்சிதான். கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய். கட்டி விடுவாரா டாக்டரய்யா..?
இது தொடர்பாக அம்மா ஆட்சிக் காலத்திலேயே சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. வழக்குத் தொடுத்தது. நமது நீதிமன்ற பாரம்பரியத்தின்படி தூங்கி வழிந்து கொண்டிருந்த அந்த வழக்கு, இப்போது தி.மு.க. தலைமையிலான ‘மைனாரிட்டி’ அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சூடு பிடித்தது.

"மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகத்தானே அரசியலுக்கு வந்திருக்கிறோம். எங்களிடமே பணம் கேட்டால் எப்படி..?" என்ற நினைப்பில் கூட்டணிக் கட்சிகள் கொடுத்த நெருக்கடியில், நஷ்ட ஈடு கேட்டு ‘அம்மா’ ஆட்சியில் அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறுவதாக, இப்போதைய ‘மைனாரிட்டி’ அரசு கோர்ட்டில் தெரிவிக்க, பா.ம.க.விற்கு எதிரான நஷ்ட ஈடு கோரும் வழக்குத் தள்ளுபடியானது. கூட்டணிக்காக இதுகூட செய்யலைன்னா எப்படி? சந்தோஷத்தில் திளைத்தார் டாக்டர் ராமதாஸ்.

பா.ம.க. கட்சி மட்டும்தான் கட்சியா? மற்றவர்கள்..
20 வருடமாக தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவரின் மகள் திருமணத்திற்கு, 500 ரூபாய் மொய் வைத்த புண்ணியவானாச்சே, நம்ம 'மாமன்னர்'.. 'விடுவாரா?'
மொத்தமாக ஒரு சட்டம் கொண்டு வந்து அம்மாவின் சட்டத்தையே தூக்கிவிட்டால், இனி யாரும் நஷ்ட ஈட்டைக் கட்ட வேண்டியதில்லை. நமக்கும், "கூட்டணியில் இருக்கிறோம்.. எங்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்..?" என்று கூட்டணிக் கட்சிகள் கேட்டால், ‘இதோ செய்திருக்கிறோமே? எவ்வளவு பெரிய உதவி..’ என்று சொல்லி அவர்களின் வாயையும் அடைத்த மாதிரியிருக்கும் என்று ஒரு ராஜதந்திர பிளான் போட்டார். (இந்தியாவிலேயே இவர்தானே இது மாதிரி விஷயங்களில் நம்பர் ஒன்) இப்போது ஜெயித்தும் காட்டிவிட்டார்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று இந்த நஷ்ட ஈடு கோரும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக, இன்னொரு சட்டத் திருத்தத்தை தமிழகச் சட்டசபையிலே கொண்டு வந்திருக்கிறார்கள். அறிமுக நிலையிலேயே இருக்கும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க. மட்டுமே, தாங்கள் கொண்டு வந்த சட்டம் என்ற தார்மீகக் காரணத்தால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களின்போது நடக்கும் குற்றச் செயல்கள், அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் செய்யப்படுகிறது. இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்புகளின் மீது சுமத்தும் கோட்பாடு நியாயமானதல்ல.

எனவே, அரசியல் கட்சி அல்லது வகுப்புவாத மொழி அல்லது இனம் சார்ந்த குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலம், கூடுகை, கூட்டம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் அல்லது பிற நடவடிக்கைகளின் போது சொத்து எதற்கும் அழிப்பு அல்லது சேதம் ஏற்படுத்தியதற்கு, அவர்களைப் பொறுப்பாக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நோக்கத்தை கருத்திற்கொண்டு சட்டத் திருத்தம் செய்வதென்று அரசு முடிவு செய்துள்ளது."

- இப்படிக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்த மசோதாவால் அரசியல் கட்சிகளும், ஜாதி, சங்கங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
இனிமேல் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என எது வேண்டுமானாலும் நடத்தலாம். அதில் வன்முறை வெடித்து பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டாலும், கட்சிகளுக்கும், ஜாதிச் சங்கங்களுக்கம் எந்தக் கவலையும் இல்லை.
தைரியமாக, தாராளமாக சிலைகளை உடைக்கலாம். பஸ்களைக் கொளுத்தலாம்.. மரங்களை வெட்டலாம். கடைகளைச் சூறையாடலாம். கவலை வேண்டாம் தொண்டர்களே.. அரசே பச்சைக் கொடி காட்டிவிட்டது.

மக்கள், வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். எதிர்த்து கேள்விகள் கேட்கக்கூடாது.. கேள்வி கேட்பது 'அரசியல்வாதிகளின் ஜனநாயகத்திற்கு' விரோதமானது.
கேள்வி கேட்க முடியவில்லையே என்று வெட்கப்பட வேண்டாம். வெட்கம் இல்லாதவர்கள்தான் அரசியல்வாதிகள். அவர்களுக்கு இந்த மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை உள்ள, யாரைக் காண்டாலும் பிடிக்காது.
ஆகவே மக்களே.. நீங்களும் அவர்களைப் போல எதுவும் இல்லாதவர்களாகவே இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்..

ஏனெனில் அரசியல்வாதிகள், மக்களாகிய உங்களைக் காப்பாற்ற ஆண்டவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேவதூதர்கள்..
அவர்களை அனுசரித்து, அவர்களுக்குக் கிடைத்தது போக, அவர்கள் போதும் என்று சொல்லி கீழே போடும் எச்சில் பண்டங்களைத்தான் நீங்கள் உண்ணவோ, அனுபவிக்கவோ வேண்டும்.
இது படைப்பின் நியதி..
வாழ்க்கையின் சாரம்சம் இதுவேயாகும்.

இது, மக்களாகிய உங்களிடம் தெரிவிக்கும்படி இந்த உண்மைத்தமிழனுக்கு, ஆண்டவனால் தெரிவிக்கப்பட்ட செய்தி..

உண்மைத்தமிழன் சொல்லிவிட்டான்.. சொல்லிட்டான்.. சொல்லிப்புட்டான்..

ஜெய்ஹிந்த்!!!

பெருகும் தமிழ்க்'குடி'மகன்கள்-யாருக்கு இருக்கு கவலை?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


பயப்படாதீங்க.. இது சின்ன மேட்டர்தான்.. காலைல பேப்பர் படிச்சிட்டிருக்கும்போது இந்த விஷயம் நம்ம கண்ணுல பட்டுச்சு.. பட்டுன்னு சுட்டுட்டேன்.. படிச்சுப் பாருங்க.. அப்புறமா 'பெருமைப்பட்டுக்குங்க..'

"..தமிழகத்தில் மதுபானக் கொள்முதலை முன்பு 'டாஸ்மாக்' நிறுவனம் செய்து வந்தது. சில்லரை விற்பனைக் கடைகளை தனியார் நடத்தி வந்தனர். இதில், பல வகைகளில் போலி சரக்குகளும், அரசுக்கு ஆயத்தீர்வை செலுத்தாமல் நேரடியாகச் சப்ளை செய்யப்படும் சரக்குகளும் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.

கடந்த 2003-ம் ஆண்டு நவம்பரில் இருந்து 'டாஸ்மாக்' நிறுவனமே சில்லரை விற்பனையை நடத்தத் துவங்கியது. இதன் மூலம் போலி சரக்குகள் கட்டுப்படுத்தப்பட்டன. 'டாஸ்மாக்' விற்பனையைத் துவக்கிய பின்னர், ஆண்டுக்கு ஆண்டு மதுபானங்களின் விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல வருவாயும் ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது.

இந்தக் காலக்கட்டத்தில் பெரிய அளவில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டவில்லை. 'டாஸ்மாக்' விற்பனையைத் துவக்கிய பின்னர், 'குவார்ட்டர்' எனப்படும் 180 மி.லி. சரக்குகளின் விலை இரண்டு ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டது.
இப்படியிருக்கும்போது அரசுக்கு கிடைத்துவரும் வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பது குடிமகன்களின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியுள்ளதையே வெளிப்படுத்துகிறது.

கடந்த 1996-97ம் ஆண்டில் மது வகைகள் ஒரு கோடியே 39 லட்சத்து 57 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டுள்ளன. (ஒரு பெட்டியில் 750 மி.லி. அளவு கொண்ட 12 முழு பாட்டில்கள் இருக்கும்) இதே விற்பனை 2002-03-ம் ஆண்டில் ஒரு கோடியே 42 லட்சத்து 23 ஆயிரம் பெட்டிகளாகத்தான் இருந்தது.
ஆனால் சில்லரை விற்பனையை அரசே எடுத்து, 'டாஸ்மாக்' மூலம் 2003-ம் ஆண்டு முதல் கடைகளை நடத்தத் துவங்கிய பின்னர், விற்பனை அளவு ஆண்டுக்கு ஆண்டு உயரத் தொடங்கியது. 2003-04-ம் ஆண்டில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்ட நிலையில் 2006-07-ம் ஆண்டில் இரண்டு கோடியே 71 லட்சத்து 54 ஆயிரமாக விற்பனை அளவு உயர்ந்துள்ளது.

இதே போல, பீர் வகைகள் விற்பனை 1996-97-ம் ஆண்டில் ஒரு கோடியே 43 ஆயிரம் பெட்டிகளாக இருந்தன. கடந்த 2002-03-ம் ஆண்டில் இதன் பெட்டி அளவு 97 லட்சத்து 16 ஆயிரம் பெட்டிகளாக குறைந்தது. ஆனால் 2006-07-ம் ஆண்டில் ஒரு கோடியே 77 லட்சத்து 33 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

இப்படி விற்பனை அளவு ஐந்தாண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளதால், அரசுக்குக் கிடைத்து வந்த வருவாயும், பத்தாண்டுகளில் ஐந்து மடங்குக்கு மேல் கூடியுள்ளது.

மதுபான விற்பனை மூலம் கடந்த 1996-97-ம் ஆண்டில் ஆயிரத்து 646 கோடியே 66 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்தது. இதுவே 2002-03-ம் ஆண்டில் மூவாயிரத்து 807 கோடியே 45 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

'டாஸ்மாக்' மூலம் மதுபான விற்பனையைத் துவக்கிய பின்னர், வருவாய் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்தும் உள்ளது.

இதன்படி 2006-07-ம் ஆண்டில் ஏழாயிரத்து 441 கோடியே 44 லட்சம் ரூபாய் 'டாஸ்மாக்' மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

மது குடிப்போரின் எண்ணிக்கை உயர்ந்தாலும், இந்த வருமானத்தை அரசு பெரிதும் நம்பியுள்ளது.

'இலவசத் திட்டங்கள்' பலவற்றை அறிவிப்பதற்கு மதுவகைகள் மூலம் கிடைக்கும் ஏழாயிரம் கோடி ரூபாய் வருமானம்தான் இந்த அரசுக்கு கை கொடுத்து வருகிறது.."

வாழ்க தமிழகம்!
வளர்க அரசியல்!!
பல்லாண்டு வாழ்க தலைவர்கள்!!!
சில காலம் வாழட்டும் தமிழக மக்கள்!!!!