Pages

Saturday, January 08, 2011

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-08-01-2011

08-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ்மணத்திற்கு நன்றி..

நான் எழுதிய இந்தப் பதிவிற்குப் பின்பு தமிழ்மண நிர்வாகம் அவசரம், அவசரமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இப்போது தமிழ்மணம் கருவிப் பட்டையில் எந்த இடத்தில் இருந்து ஓட்டளித்தாலும் அது மீண்டும் ஒரு முறை லாகின், பாஸ்வேர்டு கேட்கும் வகையில் மாற்றியிருக்கிறார்கள். இது நிச்சயம் என்னைப் போன்றவர்களுக்கு பலனளிக்கும் என்றே நம்புகிறேன்.. விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது நன்றி..


தலீபான்களின் தனித்துவ ஆட்சி

மதத்தின் பெயரால், அல்லாவின் பெயரால் ஆட்சி நடத்தப் போகிறோம் என்று கூக்குரலிட்டு ஆட்சியைப் பிடித்த ஆப்கானிஸ்தானில் நடந்த ஜனநாயக ஆட்சியின் லட்சணம் நாம் அறிந்ததே..

நபி சொல்லியிருக்கிறார்.. குரானில் சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் சல்ஜாப்பு சொல்லிய தலீபான் கொடுங்கோலர்களின் ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களாகத்தான் இருந்தார்கள். இவர்கள் நடத்திய நீதி பரிபாலனையில் இரண்டு பெண்களுக்குக் கிடைத்த நீதி இதுதான்..



சன் டிவியின் வெட்டி, ஒட்டும் வேலை..

ஒரு தொழிலை நடத்த பணம் மட்டும் இருந்தால் போதாது.. அத்தொழிலையே சிறப்பாக நடத்தும் அளவுக்கு திறமையும் வேண்டும் என்பார்கள். சன் டிவிக்காரர்களிடம் அது அமோகமாக இருக்கிறது..

இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவின் நிகழ்ச்சி நிரலை 6 மணி நேரம் நடத்துவதாக திட்டமிட்டவர்கள் கடைசியாக 9 மணி நேரமாக்கி முடித்தார்கள். நள்ளிரவு 11.30 மணிக்குத்தான் மூன்று முகம் இயக்குநர் ஏ.ஜெகன்னாதனை மேடையேற்றினார்கள். அதற்குப் பின்புதான் பிரியாமணியையும், தமன்னாவையும் மேடையேற்றினார்கள். இருந்த கொஞ்சூண்டு கூட்டத்தைப் பார்த்து கையசைத்த பிரியாமணியை அப்போது பார்க்கவே பாவமாக இருந்தது.


அதே அளவுக்கு வசூல் ஒன்று மட்டுமே குறிக்கோள் என்பதாக நிகழ்ச்சியை திறமையாக எடிட் செய்து வெளியிடுவதிலும் கர்மச் சிரத்தையாக இருக்கிறார்கள் சன் டிவிக்காரர்கள். போன வாரம் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரஜினியும் விஜய்யும், அருகருகே அமர்ந்திருப்பது போலவும், ராதிகா பேசிய பேச்சு, பாரதிராஜா-இளையராஜா பேச்சு, மம்மூட்டி பேச்சுக்களை ரஜினி ரசித்துப் பார்ப்பதுபோலவும், கை தட்டுவது போலவும் கிளிப்பிங்ஸை விட்டு அசத்திவிட்டார்கள்.

உண்மையில் ரஜினி இரவு 7 மணிக்குத்தான் அரங்கத்திற்கு வந்தார். ராதிகா-சரத்குமார் பேச்சு, மம்மூட்டி, பாரதிராஜா-இளையராஜா, கங்கை அமரன் பேச்சுக்கள் ஆகியவை அனைத்தும் காலை நிகழ்ச்சியில்தான் நடந்தன. மாலை நிகழ்ச்சியின்போது ரஜினி காட்டிய அத்தனை முகபாவனைகளையும் ஒரு ஷாட்கூட விடாமல் கட் செய்து,  ரஜினி காலையில் இருந்தே அத்தனை நிகழ்ச்சிகளையும் விடாமல் பார்த்து கை தட்டி, ரசித்ததாக ஒரு பில்டப்பு கொடுத்து வருகிறது சன் டிவி. வாழ்க வளமுடன்..

நான் எதிர்பார்த்ததுபோலவே ராதிகா பேசியவற்றில் சன் டிவியைத் தொடர்புபடுத்தியும், சரத்குமாரைப் பற்றி பேசியதையும் சுத்தமாக கட் செய்துவிட்டார்கள். ஆனாலும் மிச்சம், மீதியாக ஒளிபரப்பானதைக் கேட்டே "டூ மச்" என்ற குரல்கள் இணையத்தளங்களின் அன்றைக்கே ஒலித்தன.

9 மணி நேர நிகழ்ச்சிகளில் பாதியை ஏற்கெனவே 8 மணி நேரமாக இரண்டு நாட்களில் காட்டி கல்லா கட்டிவிட்டது சன் டிவி. இப்போது இன்றும், நாளையும் மீதி 8 மணி நேரத்தில் காட்டப் போகிறது. இன்னும் வர வேண்டியது தமன்னா, பிரியாமணி மேடையேற்றம், சில இயக்குநர்களின் பேச்சு, ராதாரவியின் 'ரத்தக்கண்ணீர்' நாடகம், கடைசியாக கே.பி.-ரஜினி நேரடி பேட்டி - இவைதான்..

தொழிலை நடத்துவது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.


கையும், களவுமாகப் பிடித்த கணவன்

கணவனுக்கு மனைவி மீது ரொம்ப நாட்களாக சந்தேகம்.. தனக்குத் தெரியாமல் வேறு ஒருவன் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று.. தானே இதனைக் கண்டறியும் பொருட்டு பொறி வைத்துப் பிடித்திருக்கிறான் மனைவியையும், அவளது காதலனையும். தான் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது.. உலகமே பார்க்க வேண்டும் என்று சொல்லி டிவிக்காரர்களையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்கள் முன்பாகவே மனைவியையும், காதலனையும் பிடித்து பீஸ் பீஸாக்கியிருக்கிறான். டிவிக்காரர்கள் எது, எதுக்கெல்லாம் உதவுகிறார்கள் பாருங்கள்..!



ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் செய்திகள் நிறுத்தம்

இதுவும் சன் டிவி தொடர்பான செய்திதான். முந்தைய செய்தி அவர்களுடைய தொழிலில் செய்யும் ஏமாற்றும் வித்தை என்றால் இது அதையும் தாண்டி தனது ஆக்டோபஸ் கரத்தினால் எளிமையானவர்களின் கழுத்தை நெறிக்கும் வித்தை பற்றியது.

ஏற்கெனவே ஹாத்வே நிறுவனத்தின் கேபிள்களை அறுத்தெறிந்து, அது தொடர்பான வழக்குகளை போலீஸ் ஸ்டேஷனில் பதியக்கூட விடாமல் தனது அரசியல் பலத்தால் கட்டிப் போட்டு ஒரு வழியாக அவர்களைத் தமிழ்நாட்டைவிட்டே துரத்திய அகசாய பேரன்கள் தற்போது ஜீ தமிழ்த் தொலைக்காட்சியையும் ஒரு வழி செய்துவிட்டார்கள்.

ஏற்கெனவே அந்த டிவி துவங்கியபோதே சுமங்கலியில் லின்க் தர மாட்டேன் என்று கொஞ்ச நாள் அடம் பிடித்தார்கள். தாத்தாவரையிலும் இந்த விஷயத்தைக் கொண்டு சென்று புகார் செய்த பின்புதான் போனால் போகிறதென்று கொடுத்தார்கள்.
பின்பு 'நாடோடிகள்', 'சுப்ரமணியபுரம்' படங்களை ஜீ தமிழ்த் தொலைக்காட்சி வாங்கி ஒளிபரப்பக் காத்திருந்த நேரத்தில் சன் டி.டி.ஹெச்.சில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியை இணைக்க இதனை ஒரு நிபந்தனையாக விதித்து அந்த இரண்டு படங்களையும் கைப்பற்றியது சன் டிவி.

தற்போது கடைசியாக ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கே அழகாக இருந்த அதனுடைய செய்திகள் பிரிவை இழுத்து மூடும்படி அழுத்தம் கொடுத்து அதனை செய்து காட்டிவிட்டார்கள் பேரன்மார்கள்.

மிகக் குறுகியக் காலத்தில் சன் செய்திகளுக்குப் பிறகு அடுத்த நிலைக்கு வந்திருந்தது ஜீ தமிழ்த் தொலைக்காட்சியின் செய்திகள். இரவு பத்து மணி செய்திகள் ஜீ-யில் மிகப் பிரபலம். அதனை ஒழித்தால்தான் ஆயிற்று என்ற பேரன்களின் நெருக்கடியினால் ஜீ நிறுவனம் வேறு வழியில்லாமல் பணிந்து போக வேண்டிய கட்டாயம். இப்போது வல்லான் வகுத்ததுதானே நீதி..

ஜீ-யில் நிறுத்தப்படவிருக்கும் செய்திகள் அடுத்து அதேபோல் சன் செய்திகளில் வெளிவருகிறது என்பதை மறைமுகமாகச் சொல்லாமல் சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பாகவே சன் செய்திகளும் தனது  பத்து மணி செய்திகளை ஜீ செய்திகளைப் போலவே மாற்றியிருந்தது. சென்ற டிசம்பர் 17-ம் தேதியோடு ஜீ தமிழ்ச் செய்திகள் நிறுத்தப்பட்டு டிசம்பர் 31-ம் தேதியோடு செய்திப் பிரிவுக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது.

இந்த விஷயத்தில் எதிர்த்துப் போராட வேண்டியதுதானே என்று நாம் சொல்லலாம். ஆனால் ஜீ-க்கும் இது தொழில் பிரச்சினை. அவர்களுடைய குறிக்கோளும் லாபம்தான். ஆக அவர்களுக்கும் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. நேர்மையாக, தங்களது தொழில் திறமையினால்தான் சன் டிவி முன்னேறியது.. இப்போதும் முன்னேறி வருகிறது என்பவர்கள் எப்போதும்போல தங்களது வீட்டுக் கண்ணாடியில் பார்த்தபடியே மீண்டும் அவற்றைச் சொல்லிக் கொள்வது நல்லது..

லேடி கான்ஸ்டபிளின் ருத்ரதாண்டவம்..!

ஆந்திராவில் ஒரு லேடி கான்ஸ்டபிள் ஏதோ ஒரு காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டுமெனில் அவர் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என ஸ்டேஷன் எஸ்.ஐ. வற்புறுத்தியிருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் இவருக்குத் துணையாக இன்னொரு எஸ்.ஐ.யும்  படுக்கையில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார்.

லேடி கான்ஸ்டபிள் இதனை ஏற்க மறுக்கவே, அவருக்குப் பணியில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்துத் துன்புறுத்தியிருக்கிறார் எஸ்.ஐ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த லேடி கான்ஸ்டபிள் ஒரு நாள் பொங்கியெழுந்து சேனல்காரர்களுடன் திட்டம் போட்டுப் பேசி அந்த எஸ்.ஐ.யைத் தன் வீட்டுக்கு வரவழைத்து அனைவரின் முன்பாகவும் நொங்கு உரித்துவிட்டார். இதுவும் வழக்கம்போல ரொம்பவே பேமஸாகியிருக்கிறது.



பேசிக் கொண்டிருக்கும்போதே மரணம்..!

இந்த மாதிரியான மரணம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்..? இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

2007-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று நடந்த சம்பவம் இது. மலையாளத்தின் பிரபலமான பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளரான திரு.எம்.என்.விஜயன் திருச்சூர் பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேரில் வந்திருந்தார்.

 

அன்றைய சமயத்தில் விஜயன் மீது அரசு அமைப்பான கேரள சாஸ்திர சாகத்ய பரிஷத்தின் தலைவர் பாப்பூட்டி நீதிமன்றத்தில் தொடுத்திருந்த மான நஷ்ட வழக்குத் தொடர்பான உண்மைகளை பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்காக அவர் வந்திருந்தார்.
 
பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும் அதனை ஒளிப்பதிவு செய்தன. தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த டம்ளரை எடுத்து  அதிலிருந்த நீரை அருந்திவிட்டு மேலும் பேசத் தொடங்கினார். சில வினாடிகள்தான்.. நொடியில் நின்று போன அவரது இதயத் துடிப்பு அவரை மரணமடைந்தவராக அறிவித்தது.

 
எனக்குத் தெரிந்து இதுபோல் ஒருவரின் மரணம் வீடியோக்களில் எதிர்பாராமல் பதிவு செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
 
விஜயன் தனது இளமைக் காலத்தில் மார்க்சியத்தின் மீது ஆர்வம் கொண்டு அந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். அவர்களுடைய பத்திரிகையின் எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார். பின்பு மார்க்சிய சிந்தாந்தங்களை கேரள மார்க்சிஸ்ட்டு கட்சி சீரழிப்பதாகச் சொல்லிவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். படோம் என்ற பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறார். இதில்தான் மார்க்சியம் சம்பந்தமான சூடான கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார்.
 
இது மட்டுமில்லாமல் 'ஜனசக்தி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் வீக்லி பத்திரிகையான 'சமகலினா மலையாளம்', மற்றும் 'தேசபிமானி' போன்ற பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். 'மறுவாக்கு' பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து வந்திருக்கிறார்.

 

விஜயனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக 'கேரள கெளமுதி' இதழ் “இந்த மரணத்திற்கு எந்தத் தலைப்பும் வைக்க முடியாது” என்ற டைட்டிலோடு தனது ஹெட்லைன்ஸ் இடத்தை வெற்றிடமாக காட்டி வெளியிட்டிருந்தது. இதேபோல் 'ஜனசக்தி' வார இதழும் தனது தலையங்கத்தை வெறுமையாகக் காட்டி விஜயனுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறது.

 

ஒரு கலைஞனுக்கு பெரும் பெருமையே பணியில் இருக்கும்போதே ஏற்படும் மரணம்தான்.. இவருக்கு அது வாய்த்திருக்கிறது..

கேரளாவில் பெண் தோழருக்கு நேர்ந்த அவமானம்..!

எந்த நாடாக இருந்தாலென்ன..? எந்த மதமாக இருந்தாலென்ன? எந்த கட்சியாக இருந்தாலென்ன..? பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர வேண்டுமெனில் எத்தனை, எத்தனை பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது தெரியுமா..?

வீடியோவைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..!



பிரதீபா பாட்டிலை புகைப்படம் எடுக்கக் கூடாது.. மிரட்டிய போலீஸ்..

பிரபலங்கள் எங்கே சென்றாலும் பத்திரிகையாளர்கள் பின்னாடியே விரட்டுவது உலகம் முழுவதும் இருப்பதுதான். நம்மூரில் சினிமா பிரபலங்களைவிட அதிகம் அலட்டிக் கொள்பவர்கள் அரசியல்வியாதிகளான பிரபலங்கள்தான். தாங்கள் அதிகம் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வினாலேயே தங்களது தனிமை பாதிக்கப்படுவதாகப் புலம்பித் தள்ளுகிறார்கள்.


நேற்று நமது இந்தியாவின் முதல் குடிமகளும் இப்படித்தான் புலம்பியிருக்கிறார். நமது ஜனாதிபதியம்மாவுக்கு வருடத்தில் இரண்டு வாரங்கள்தான் விடுமுறையாம். அதுக்குள்ள போற இடத்துக்கெல்லாம் போய் அனுபவிச்சுக்கணுமாம். அந்தம்மாவுக்கு இந்த வயசுல கோவா போய் ஜாலியா இருக்கணும்னு ஆசை. வந்துட்டாங்க..

இவங்க வர்றாங்கன்றதுக்காக கடற்கரையே சுத்தமாக கிளின் செய்யப்பட்டதாம். அது சரிதான். உள்ளூர்க்கார மக்களை விரட்டியடித்த உடன் வந்த அல்லக்கை போலீஸார் வெளிநாட்டுக்காரர்களை மட்டும் விட்டுவிட்டார்கள். அங்கே கை வைத்தால் வெளிநாடுகளில் பொழப்பு நாறிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருந்திருக்கிறார்கள்.


ஜனாதிபதியம்மா கோவா பீச்சில் உட்கார்ந்திருக்கும்போது யாரும் புகைப்படம் எடுத்துவிடாமல் கண்காணித்திருக்கிறார்கள் அரசு சம்பளம் வாங்கும் போலீஸ்காரர்கள். அப்படியும் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நமது பத்திரிகையாளர்கள் புகைப்படத்தை எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுவிட்டார்கள்.

மேலிடத்தில் இருந்து போலீஸுக்கு டோஸ் விட.. அவர்களோ புகைப்படம் எடுத்தவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று "ஏன் எடுத்தீங்க? யாரைக் கேட்டு எடுத்தீங்க?" என்று கேள்விகளால் துளைத்தெடுத்தார்களாம்.


இந்தம்மாவை யார் ஓய்வெடுக்க வெளில வரச் சொன்னது..? வெளில வந்தா புகைப்படம் எடுக்கத்தான் செய்வாங்க.. அந்தம்மாவுக்கு அந்தப் பக்கமா உக்காந்திருந்த வெளிநாட்டுக்காரங்களும் போட்டோ எடுத்திருக்காங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு உள்ளூர்காரங்களை மட்டும் கொஸ்டீன் கேக்குறது என்ன நியாயம்..? அடப் போங்கப்பா.. அம்மாம் பெரிய மாளிகைல உக்கார்றதுக்கு ரூமா இல்லை. உள்ளேயே குந்திக்கச் சொல்ல வேண்டியதுதானே.. நல்லா குதிக்கிறாங்கய்யா இவங்க..!

 
படித்ததில் பிடித்தது

"....இலங்கையில் இருக்கிற தமிழ் இளைஞர்கள், இலங்கையில் இன்று ஆயுதம் ஏந்துகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறார்கள். இலங்கையில் இருக்கிற தமிழ் இனம் - தமிழ் இளைஞன் - விடுதலை வீரன் - விடுதலைப் புலி கையில் துப்பாக்கி ஏந்துகிறான் என்றால் அவனுக்கு அதை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அது வன்முறை என்றாலுங்கூட அது இந்த நேரத்துக்குத் தேவையான முறையாக இருக்கிறது. எனவே அதை நான் ஆதரிக்கிறேன். ஆமோதிக்கிறேன். அங்கீகரிக்கிறேன். ஒப்புதல் தருகிறேன். வேறு என்ன செய்வான் அவன்..? அவன் தாயும், தங்கையும் அவனுக்கு நேராகக் கற்பழிக்கப்படுகிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் கோழையா..? தமிழனுக்குப் பிறக்காதவனா? அந்த ஈழ நாட்டில் வாழ்கின்ற தமிழன் - அவனென்ன தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழனா..? அவன் இலங்கையில் வாழ்கின்ற தமிழன். தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் அவன் சொரணை கெட்டுப் போய் சோற்றால் அடித்த பிண்டமாக இருப்பான். இலங்கையில் வாழ்கின்ற தமிழனுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகுதான் அவன் கையில் ஆயுதம் ஏந்துகிறான். அப்படி ஆயுதம் ஏந்தும் இளைஞனுக்கு - அந்த விடுதலைப் பட்டாளத்துக்கு இந்திய துணைக் கண்டம் இன்றைக்கு உதவி செய்தாக வேண்டும்..."

- கலைஞர் கருணாநிதி ஒரு காலத்தில் கூறியதாக திராவிட இயக்க வரலாறு - பாகம்-2 நூலில் - பக்கங்கள் 214-215

 
பார்த்ததில் பிடித்தது
அருமைத் தம்பி குசும்பனுக்காக..


மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..!

43 comments:

  1. // இப்போது தமிழ்மணம் கருவிப் பட்டையில் எந்த இடத்தில் இருந்து ஓட்டளித்தாலும் அது மீண்டும் ஒரு முறை லாகின், பாஸ்வேர்டு கேட்கும் வகையில் மாற்றியிருக்கிறார்கள். இது நிச்சயம் என்னைப் போன்றவர்களுக்கு பலனளிக்கும் என்றே நம்புகிறேன்.. விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது நன்றி.. //

    வெறுப்படிக்கது... ஓவ்வொரு தடவை ஓட்டு போடும் போதும்... லாகின் செய்யணும், பாஸ் வேர்ட் கொடுக்கணும்... கோபம் கோபமா வருது.

    ReplyDelete
  2. அருமை அண்ணா ... உங்கள் ஒருவரின் முயற்சிதான் பல இடுகைகளை காப்பாற்றுகிறது ( தமிழ் மனம் உங்களுக்கு நன்றி சொல்லட்டும் தவறான ஒரு நிரலியை சரி செய்ய கவனம் செலுத்த வைத்ததற்கு )

    ReplyDelete
  3. //வெறுப்படிக்கது... ஓவ்வொரு தடவை ஓட்டு போடும் போதும்... லாகின் செய்யணும், பாஸ் வேர்ட் கொடுக்கணும்... கோபம் கோபமா வருது////

    இருந்தாலும் அண்ணாச்சிக்கு என் சார்பில ஒரு வோட்டு.அண்ணே சந்தோசமா இருன்னே

    ReplyDelete
  4. ஹி ஹி அண்ணே வர வர தினதந்தி மாதிரி கள்ளக்காதல் செய்தியாவே போடுறீயே! படிக்க& பார்க்க குஜாலா இருக்குது! வாழ்க வாழ்க உம் சேவை!

    ReplyDelete
  5. ஒரு பொண்ணு சிகரெட் பிடிச்சா கெட்டவளா? உனக்கும் அந்த தாயோளி ஆப்கான் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்...இந்த லட்சணத்துல யாருக்கோ டெடிகேஷன் வேற...

    ReplyDelete
  6. சிகரெட் பிடிக்கிறது அவரவர் தனிபட்ட உரிமை!.

    நீங்க விரல்சூப்புறது கூட தான் எனக்கு பிடிக்கல, அதுக்காக நீங்க கெட்டவர்னு சொல்லிரலாமா!?

    ReplyDelete
  7. ஒரே பதிவில் எவ்வளவு விஷயங்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. /சிகரெட் பிடிக்கிறது அவரவர் தனிபட்ட உரிமை!.

    நீங்க விரல்சூப்புறது கூட தான் எனக்கு பிடிக்கல, அதுக்காக நீங்க கெட்டவர்னு சொல்லிரலாமா!?
    //

    Adhane!

    ReplyDelete
  9. ஒரொரு தடவையும் லாகின் செய்யச் செய்யும் தமிழ் மணம் கடுப்பேத்துதே என்று இப்போ நான் அதில் வோட்டு போடறதையே நிறுத்தி விட்டேன். கள்ளக் காதல் வீடியோ அதிர்ச்சி. வழக்கம் போல பதிவு சுவாரஸ்யம் என்றாலும் சற்று நீளம் கம்மியோ...!

    ReplyDelete
  10. கலவையான செய்திகள் ரசிக்க வைத்தாலும் விஜயனின் அந்த இறுதி நிமிடங்களைப் பார்த்துக் கலங்கினேன்

    ReplyDelete
  11. ஜீ டிவி செய்திகள் நிறுத்தப்பட்டது சோகம்தான்.

    ReplyDelete
  12. ரொம்பவே படபடப்பாய் இருந்தது சரவணன்.

    ReplyDelete
  13. [[[இராகவன் நைஜிரியா said...

    //இப்போது தமிழ்மணம் கருவிப் பட்டையில் எந்த இடத்தில் இருந்து ஓட்டளித்தாலும் அது மீண்டும் ஒரு முறை லாகின், பாஸ்வேர்டு கேட்கும் வகையில் மாற்றியிருக்கிறார்கள். இது நிச்சயம் என்னைப் போன்றவர்களுக்கு பலனளிக்கும் என்றே நம்புகிறேன்.. விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு எனது நன்றி.. //

    வெறுப்படிக்கது... ஓவ்வொரு தடவை ஓட்டு போடும் போதும்... லாகின் செய்யணும், பாஸ் வேர்ட் கொடுக்கணும்... கோபம் கோபமா வருது.]]]

    சரி.. சரி.. கோச்சுக்காதீங்கண்ணா.. தம்பிக்காக கொஞ்சம் விட்டுக் கொடுங்கண்ணா.. அதுலேயும் கொஞ்சம் மாற்றப் பண்ணப் போறதா தெரியுது. விடுங்க.. கொஞ்ச நாள்ல வேற மாதிரி மாறிடும்..!

    ReplyDelete
  14. [[[G.Ganapathi said...
    அருமை அண்ணா. உங்கள் ஒருவரின் முயற்சிதான் பல இடுகைகளை காப்பாற்றுகிறது (தமிழ்மனம் உங்களுக்கு நன்றி சொல்லட்டும் தவறான ஒரு நிரலியை சரி செய்ய கவனம் செலுத்த வைத்ததற்கு )]]]

    நன்றி கணபதி.. இது போன்ற கணினி மென்பொருள்களில் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.. தமிழ்மணம் இதன் தீமையை உணர்ந்து கொண்டு செயல்பட்டது குறித்து மகிழ்ச்சி..!

    ReplyDelete
  15. [[[எறும்பு said...

    //வெறுப்படிக்கது... ஓவ்வொரு தடவை ஓட்டு போடும் போதும்... லாகின் செய்யணும், பாஸ் வேர்ட் கொடுக்கணும்... கோபம் கோபமா வருது////

    இருந்தாலும் அண்ணாச்சிக்கு என் சார்பில ஒரு வோட்டு. அண்ணே சந்தோசமா இருன்னே..]]]

    நன்றி தம்பி..!

    ReplyDelete
  16. [[[குசும்பன் said...
    ஹி ஹி அண்ணே வர வர தினதந்தி மாதிரி கள்ளக்காதல் செய்தியாவே போடுறீயே! படிக்க& பார்க்க குஜாலா இருக்குது! வாழ்க வாழ்க உம் சேவை!]]]

    எல்லாம் உன்னை மாதிரி சின்னப் பசங்களுக்காகத்தான் ராசா..! கடைசி போட்டோவை உனக்கு டெடிகேட் செஞ்சிருக்கனே.. கவனிக்கலையா..?

    ReplyDelete
  17. [[[சாரு புழிஞ்சதா said...
    ஒரு பொண்ணு சிகரெட் பிடிச்சா கெட்டவளா? உனக்கும் அந்த தாயோளி ஆப்கான் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்...இந்த லட்சணத்துல யாருக்கோ டெடிகேஷன் வேற...]]]

    ஏங்க.. போட்டோ மட்டும்தான போட்டிருக்கேன்.. வேற ஒண்ணுமே சொல்லலியே.. எதுக்கு இவ்ளோ ஆவேசம்..? விடுங்க.. கூல் டவுன்..!

    ReplyDelete
  18. [[[வால்பையன் said...
    சிகரெட் பிடிக்கிறது அவரவர் தனிபட்ட உரிமை! நீங்க விரல் சூப்புறது கூடதான் எனக்கு பிடிக்கல, அதுக்காக நீங்க கெட்டவர்னு சொல்லிரலாமா!?]]]

    சிகரெட் பிடிப்பது பொதுவாகவே உடல் நலத்திற்குக் கெடுதி என்பது எனது கருத்து..

    இந்தப் படத்தைப் போட்டதுக்குக் காரணம் குசும்பனுக்குத் தெரியும்.. காரணத்தை தெரிஞ்சுட்டு அப்புறமா வந்து கும்மியடி தம்பி..!

    ReplyDelete
  19. [[[T.V.ராதாகிருஷ்ணன் said...
    அருமை]]]

    நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  20. [[[Indian Share Market said...
    ஒரே பதிவில் எவ்வளவு விஷயங்கள். வாழ்த்துக்கள்]]]

    வழக்கம்போல எழுதறதுதானே நண்பரே..!

    ReplyDelete
  21. [[[அருணையடி said...

    /சிகரெட் பிடிக்கிறது அவரவர் தனிபட்ட உரிமை! நீங்க விரல் சூப்புறது கூடதான் எனக்கு பிடிக்கல, அதுக்காக நீங்க கெட்டவர்னு சொல்லிரலாமா!?//

    Adhane!]]]

    என்ன அதானே..? நான் விரல் சூப்புறது வாலுக்கு எப்படித் தெரியும். இதைக் கேக்கணும்னு தோணுச்சா உனக்கு..?

    ReplyDelete
  22. [[[ஸ்ரீராம். said...
    ஒரொரு தடவையும் லாகின் செய்யச் செய்யும் தமிழ் மணம் கடுப்பேத்துதே என்று இப்போ நான் அதில் வோட்டு போடறதையே நிறுத்தி விட்டேன்.]]]

    ஐயோ.. அப்படீல்லாம் நிறுத்திராதீங்க ஸார்.. உங்களைத்தான் நம்பியிருக்கோம். ஓட்டுப் போடுவீங்கன்னு.. முடியாதுன்னு சொன்னா எப்படி..?

    [[[கள்ளக் காதல் வீடியோ அதிர்ச்சி. வழக்கம் போல பதிவு சுவாரஸ்யம் என்றாலும் சற்று நீளம் கம்மியோ...!]]]

    ஆமாம்.. நியூஸ் கொஞ்சம் கம்மிதான்..!

    ReplyDelete
  23. [[[கானா பிரபா said...
    கலவையான செய்திகள் ரசிக்க வைத்தாலும் விஜயனின் அந்த இறுதி நிமிடங்களைப் பார்த்துக் கலங்கினேன்.]]]

    நானும்தான்..!

    ReplyDelete
  24. [[[செங்கோவி said...
    ஜீ டிவி செய்திகள் நிறுத்தப்பட்டது சோகம்தான்.]]]

    சர்வாதிகார ஆட்சியின் முன் நம்மால் என்ன செய்ய முடியும்..?

    ReplyDelete
  25. [[[ஜோதிஜி said...
    ரொம்பவே படபடப்பாய் இருந்தது சரவணன்.]]]

    ஏன் ஸார்..? விஜயன் ஸார் வீடியோ பார்த்ததுல இருந்தா..?

    ReplyDelete
  26. eppodhu thaan indha madham indha muttaalthanathai vittu vilagi varumo theriyavillai. migavum varuthamagavum vetkamagavum irukirathu.

    ReplyDelete
  27. பிரதீபா பாட்டில் விடுமுறையை கோவால கழிக்கறது என்ன தப்பு? அவ்வளவு பெரிய மாளிகை இருக்கேனு சொன்னா, சொர்கத்துலயே ஒரு வருஷம் தங்கினாலும் போர் அடிச்சிடும்.

    அவருடைய இரண்டு வார விடுப்பை அவர் இப்படி செலவழிப்பதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

    வெளிநாட்டுக்காரனை விட்டுருக்கியேனு சொன்னா, அவன் அவன் வேலையைப் பார்க்கறான். நாளைக்கே அவனும் ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கைல போட்டா, அவனையும் இப்படி தான் ட்ரீட் பண்ணுவாங்க.

    ReplyDelete
  28. பார்த்ததில் பிடித்தது//

    அந்த பொண்ணை எங்க பாத்தீங்க. அண்ணே விலாசம் விலாசம்

    ReplyDelete
  29. [[[khaleel said...
    eppodhuthaan indha madham indha muttaalthanathai vittu vilagi varumo theriyavillai. migavum varuthamagavum vetkamagavum irukirathu.]]]

    இதனால்தான் மதத்தை முன்னிறுத்தி மக்களைப் பின்னே கொண்டு போகாதீர்கள் என்று சொல்கிறோம்..!

    ReplyDelete
  30. [[[வெட்டிப்பயல் said...

    பிரதீபா பாட்டில் விடுமுறையை கோவால கழிக்கறது என்ன தப்பு? அவ்வளவு பெரிய மாளிகை இருக்கேனு சொன்னா, சொர்கத்துலயே ஒரு வருஷம் தங்கினாலும் போர் அடிச்சிடும்.

    அவருடைய இரண்டு வார விடுப்பை அவர் இப்படி செலவழிப்பதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

    வெளிநாட்டுக்காரனை விட்டுருக்கியேனு சொன்னா, அவன் அவன் வேலையைப் பார்க்கறான். நாளைக்கே அவனும் ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கைல போட்டா, அவனையும் இப்படிதான் ட்ரீட் பண்ணுவாங்க.]]]

    சரிங்க.. அந்தம்மா நல்லாவே என்ஜாய் பண்ணட்டும். எனக்கென்ன பொறாமையா..?

    பத்திரிகை வேலைக்காக புகைப்படம் எடுப்பது புகைப்படக்காரர்களின் வேலை. அவர்களென்ன அந்தம்மா வீடு புகுந்தா எடுக்குறாங்க.. பொது இடத்துலதான எடுக்குறாங்க.. இதுல என்ன தப்பு இருக்கு..? ஏன் அந்தம்மாவை போட்டோ புடிச்சு போட்டா என்ன குத்தமாம்..?

    ReplyDelete
  31. [[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    பார்த்ததில் பிடித்தது//

    அந்த பொண்ணை எங்க பாத்தீங்க. அண்ணே விலாசம் விலாசம்.]]]

    நோ சான்ஸ்.. கூகிளாண்டவருக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  32. /*இலங்கையில் இருக்கிற தமிழ் இளைஞர்கள், இலங்கையில் இன்று ஆயுதம் ஏந்துகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறார்கள். இலங்கையில் இருக்கிற தமிழ் இனம் - தமிழ் இளைஞன் - விடுதலை வீரன் - விடுதலைப் புலி கையில் துப்பாக்கி ஏந்துகிறான் என்றால் அவனுக்கு அதை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அது வன்முறை என்றாலுங்கூட அது இந்த நேரத்துக்குத் தேவையான முறையாக இருக்கிறது. எனவே அதை நான் ஆதரிக்கிறேன். ஆமோதிக்கிறேன். அங்கீகரிக்கிறேன். ஒப்புதல் தருகிறேன். வேறு என்ன செய்வான் அவன்..? அவன் தாயும், தங்கையும் அவனுக்கு நேராகக் கற்பழிக்கப்படுகிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் கோழையா..? தமிழனுக்குப் பிறக்காதவனா? அந்த ஈழ நாட்டில் வாழ்கின்ற தமிழன் - அவனென்ன தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழனா..? அவன் இலங்கையில் வாழ்கின்ற தமிழன். தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் அவன் சொரணை கெட்டுப் போய் சோற்றால் அடித்த பிண்டமாக இருப்பான். இலங்கையில் வாழ்கின்ற தமிழனுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகுதான் அவன் கையில் ஆயுதம் ஏந்துகிறான். அப்படி ஆயுதம் ஏந்தும் இளைஞனுக்கு - அந்த விடுதலைப் பட்டாளத்துக்கு இந்திய துணைக் கண்டம் இன்றைக்கு உதவி செய்தாக வேண்டும்...*/

    கலைஞர் இத ஒன்றரை வருஷம் முன்னாடி படிச்சிருக்கணும்.. இல்ல இப்படி யோசிச்சு இருக்கணும்.. காலம் கடந்து போச்சு :(

    ReplyDelete
  33. நல்ல பதிவங்க அய்யா நீங்க. போட்டாலும் குத்தம் போடாங்காட்டியும் குத்தம். ஒங்களுக்கு பாதுகாப்பும் வேணும். அதேநேரத்துல நோகாம நேரத்தை மிச்சப்படுத்தி டைப் அடிக்காம உள்ளாறவும் போவணும். என்ன ஆளுங்கையா நீங்க? கொஞ்சம் உங்க பாதுகாப்புக்கு நீங்களூம் ஒத்துழைக்காம படுக்கவும் மாட்டேன் புள்ளையும் பெத்துத்தான்னா.. கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸையும் சுமையையும் நீங்களும் சொமக்ககூடாதா? ஒங்களோட பாதுகாப்புதானே

    மூர்த்தியை மட்டும் ஹாக் பண்ணினா பொலீசுல புடிச்சுக்குடு. ஆனா மத்தவுங்க பண்ணினா, ஒன்ன நூலடி வருடர பாசம் கட்டிப்போட்டுடும். லபோ லபோன்னு கத்திட்டு கெட.
    தமிழ்மானத்துல கடுப்புல ஹாக்கிங் பண்ணிட்டிருக்கான் இந்த கிரிமினலு. உண்மைத்தமிழா நீ பாத்தது கொஞ்சமே. மூர்த்தியோடது சைபர்கிரிமினல்ன்னா தமிழ்மானத்த டார்கட்டு பன்னி மூர்திக்கு ஈக்குவலா இப்போ தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்கான் இந்த கிரிமினலு. தமிழ்மணம் ஆளுங்க கெட கழுதையேன்னு தட்டிவிட்டுட்டு போறானுங்கலோன்னு நெனைக்குறேன்.
    உண்மைத்தமிழா உன்னாலே இவனை சைபர்கிரைமிலே மூர்த்திமாதிரி மாட்டிவிட தில் இருக்கா? இல்லே ஒன்னோட எஜமானுங்க கோபம வந்துடுமுன்னு பதுங்கறயா?

    ReplyDelete
  34. Arumai..Arumi..Arumai...
    Thozhar Vijayanin aanmaa santhi adaiya oru nimidam mouna anjali seigiren...Nadanthathu 3 varudangal munbaaga irunthaalum...

    ReplyDelete
  35. அண்ணே, அந்தப் பெண்ணின் படம் அவசியம் வேண்டுமா ?? ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது படத்தை இப்படி வெளியிடுவது தவறு ..

    ReplyDelete
  36. [[[kanagu said...

    /*இலங்கையில் இருக்கிற தமிழ் இளைஞர்கள், இலங்கையில் இன்று ஆயுதம் ஏந்துகிறார்கள். துப்பாக்கி ஏந்துகிறார்கள். இலங்கையில் இருக்கிற தமிழ் இனம் - தமிழ் இளைஞன் - விடுதலை வீரன் - விடுதலைப் புலி கையில் துப்பாக்கி ஏந்துகிறான் என்றால் அவனுக்கு அதை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அது வன்முறை என்றாலுங்கூட அது இந்த நேரத்துக்குத் தேவையான முறையாக இருக்கிறது. எனவே அதை நான் ஆதரிக்கிறேன். ஆமோதிக்கிறேன். அங்கீகரிக்கிறேன். ஒப்புதல் தருகிறேன். வேறு என்ன செய்வான் அவன்..? அவன் தாயும், தங்கையும் அவனுக்கு நேராகக் கற்பழிக்கப்படுகிறார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் கோழையா..? தமிழனுக்குப் பிறக்காதவனா? அந்த ஈழ நாட்டில் வாழ்கின்ற தமிழன் - அவனென்ன தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழனா..? அவன் இலங்கையில் வாழ்கின்ற தமிழன். தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் அவன் சொரணை கெட்டுப் போய் சோற்றால் அடித்த பிண்டமாக இருப்பான். இலங்கையில் வாழ்கின்ற தமிழனுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகுதான் அவன் கையில் ஆயுதம் ஏந்துகிறான். அப்படி ஆயுதம் ஏந்தும் இளைஞனுக்கு - அந்த விடுதலைப் பட்டாளத்துக்கு இந்திய துணைக் கண்டம் இன்றைக்கு உதவி செய்தாக வேண்டும்...*/

    கலைஞர் இத ஒன்றரை வருஷம் முன்னாடி படிச்சிருக்கணும்.. இல்ல இப்படி யோசிச்சு இருக்கணும்.. காலம் கடந்து போச்சு :(]]]

    இதுவெல்லாம் கலைஞர் கருணாநிதியே சொன்னதுதான் கனகு. டெஸோ அமைப்பு இருந்தபோது அதன் பல்வேறு கூட்டங்களில் கலைஞர் பேசியதுதான்.. இப்போது நினைத்துப் பார்த்தால்..???? பதவிதான் ஒரு மனிதரை என்ன பாடுபடுத்துகிறது..?

    ReplyDelete
  37. [[[வில்லங்கம் விக்னேஷ் said...

    நல்ல பதிவங்க அய்யா நீங்க. போட்டாலும் குத்தம் போடாங்காட்டியும் குத்தம். ஒங்களுக்கு பாதுகாப்பும் வேணும். அதே நேரத்துல நோகாம நேரத்தை மிச்சப்படுத்தி டைப் அடிக்காம உள்ளாறவும் போவணும். என்ன ஆளுங்கையா நீங்க? கொஞ்சம் உங்க பாதுகாப்புக்கு நீங்களூம் ஒத்துழைக்காம படுக்கவும் மாட்டேன் புள்ளையும் பெத்துத்தான்னா.. கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸையும் சுமையையும் நீங்களும் சொமக்ககூடாதா? ஒங்களோட பாதுகாப்புதானே]]]

    விக்னேஷ்.. படிக்காமலேயே மைனஸ் குத்து குத்த வைப்பது தவறென்று உங்களுக்குத் தோன்றவில்லையா..? அவர்கள் அனைவருமே என்னவோ, ஏதோவென்று நினைத்துத்தான் அதனை கிளிக் செய்திருக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன். இதில் என்ன தப்பு..?

    ReplyDelete
  38. [[[மூர்த்தியை மட்டும் ஹாக் பண்ணினா பொலீசுல புடிச்சுக் குடு. ஆனா மத்தவுங்க பண்ணினா, ஒன்ன நூலடி வருடர பாசம் கட்டிப் போட்டுடும். லபோ லபோன்னு கத்திட்டு கெட.

    தமிழ்மானத்துல கடுப்புல ஹாக்கிங் பண்ணிட்டிருக்கான் இந்த கிரிமினலு. உண்மைத்தமிழா நீ பாத்தது கொஞ்சமே. மூர்த்தியோடது சைபர் கிரிமினல்ன்னா தமிழ் மானத்த டார்கட்டு பன்னி மூர்திக்கு ஈக்குவலா இப்போ தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்கான் இந்த கிரிமினலு. தமிழ்மணம் ஆளுங்க கெட கழுதையேன்னு தட்டிவிட்டுட்டு போறானுங்கலோன்னு நெனைக்குறேன்.

    உண்மைத்தமிழா உன்னாலே இவனை சைபர் கிரைமிலே மூர்த்திமாதிரி மாட்டி விட தில் இருக்கா? இல்லே ஒன்னோட எஜமானுங்க கோபம வந்துடுமுன்னு பதுங்கறயா?]]]

    இது சட்ட விரோதமானது அல்ல. நிர்வாகத்தை ஏமாற்றுவது போலத்தான்.. இதற்கு பரிகாரம் நிர்வாகம்தான் செய்ய வேண்டும். அதனைச் செய்துவிட்டார்கள். மற்றபடி நீங்கள் கூறுவது யாரை, எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை..

    ReplyDelete
  39. [[[டக்கால்டி said...
    Arumai..Arumi..Arumai...
    Thozhar Vijayanin aanmaa santhi adaiya oru nimidam mouna anjali seigiren. Nadanthathu 3 varudangal munbaaga irunthaalum...]]]

    அப்போது பார்த்திராதவர்கள் இப்போது பார்த்துத் தெரிந்து கொள்ளட்டுமே என்பதால்தான் இங்கே பதிவிட்டேன் நண்பரே..!

    ReplyDelete
  40. [[[எல் கே said...
    அண்ணே, அந்தப் பெண்ணின் படம் அவசியம் வேண்டுமா?? ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரது படத்தை இப்படி வெளியிடுவது தவறு ..]]]

    அடப் போங்கப்பா. இப்படியெல்லாம் பார்த்தா ஒருத்தர் போட்டோகூட நாம வெளியிட முடியாது..

    ReplyDelete
  41. சரவணன்..சன் டிவி க்கும் ஜீ டிவிக்கும் நடந்த ஆரம்பகால சமாச்சாரங்கள் ஒரளவு உண்மையே. ஆனால் செய்தியை நிப்பாட்டி குறைந்தது 30-40 பேரின் வேலைக்கு சங்கு ஊதினது ஜீயின் அறை வேக்காட்டுதனமான டெஸ்க் ஒர்க் மேனேஜ்மெண்ட்டின் முடிவுதான்.பொதுவாக எந்த ஒரு தமிழ் சானலுக்கும் செய்தியின் .டிஆர்பி ரேட்டிங் என்பது சீஸனல் சமாச்சாரமே.. அதனால் பரப்பரப்பு(எலக்‌ஷன், ராஜினாமா, மதுரை எரிப்பு.. etc) இல்லேயேல் no rating. ஆனானபட்ட சன்னுக்கே அந்த நிலைமைதான். சினிமாவும் சீரியலுமே வர்த்தகத்தை முடிவு செய்கின்றன. ஜீயின் ரேட்டிங்கில் 10 மணி செய்தி தவிர்த்து வேறு செய்திகளுக்கு ரேட்டிங் சுத்தமாக இல்லை.. ஆனால் ஒரு சேனலின் பலம் செய்தி என்பதும் தக்க சமயத்தில் அது கை கொடுக்கும் என்பது மீடியா அறிச்சுவடி. ஆனால் நிர்வாக செலவுகளை காரணம் காட்டி தன் தலயில் தானே மண்ணை கொட்டி கொண்டுள்ளது ஜீ தமிழ்.

    ReplyDelete
  42. [[[Rafeek said...

    சரவணன்... சன் டிவி க்கும் ஜீ டிவிக்கும் நடந்த ஆரம்பகால சமாச்சாரங்கள் ஒரளவு உண்மையே. ஆனால் செய்தியை நிப்பாட்டி குறைந்தது 30-40 பேரின் வேலைக்கு சங்கு ஊதினது ஜீயின் அறைவேக்காட்டுதனமான டெஸ்க் ஒர்க் மேனேஜ்மெண்ட்டின் முடிவுதான்.

    பொதுவாக எந்த ஒரு தமிழ் சானலுக்கும் செய்தியின் டிஆர்பி ரேட்டிங் என்பது சீஸனல் சமாச்சாரமே.. அதனால் பரப்பரப்பு (எலக்‌ஷன், ராஜினாமா, மதுரை எரிப்பு.. etc) இல்லேயேல் no rating. ஆனானபட்ட சன்னுக்கே அந்த நிலைமைதான். சினிமாவும் சீரியலுமே வர்த்தகத்தை முடிவு செய்கின்றன. ஜீயின் ரேட்டிங்கில் 10 மணி செய்தி தவிர்த்து வேறு செய்திகளுக்கு ரேட்டிங் சுத்தமாக இல்லை.. ஆனால் ஒரு சேனலின் பலம் செய்தி என்பதும் தக்க சமயத்தில் அது கை கொடுக்கும் என்பது மீடியா அறிச்சுவடி. ஆனால் நிர்வாக செலவுகளை காரணம் காட்டி தன் தலயில் தானே மண்ணை கொட்டி கொண்டுள்ளது ஜீ தமிழ்.]]]

    கடந்த 2 வருடங்களாகவே நிர்வாகச் செலவைச் சிக்கனப்படுத்த ஜீ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு என்று பலவற்றையும் அது செய்துவிட்டது. ஆனாலும் செய்திகள் மட்டும் தொடர்ந்தன. நிறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. முழுமையாக நிறுத்தப்பட்டதற்கு சிக்கன நடவடிக்கை காரணமில்லை. நான் சொன்னதுதான். நீங்கள் சேனல் வட்டாரங்களில் மேலும் விசாரித்துப் பாருங்கள்..

    ReplyDelete