30-01-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2014 புத்தகக் கண்காட்சியின்போது நான் எடுத்த புகைப்படங்கள்.. ஏதோ கண்காட்சிக்கு நானும் போயிட்டு வந்ததற்கான ஆதாரம் வேணும்ல்ல.. அதுக்காகத்தான்..!
ஒரு காலத்தில் வலையுலகத்தைக் கலக்கிய ரவுடிகள் சுகுணா திவாகர் மற்றும் வரவனையானுடன்..!
எழுத்தாளர் கவுதமன் சித்தார்த்தனுடன்..! அன்றைக்கு காலையில்தான் அவர் எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா சிலாகித்து பேசிய ஒரு கட்டுரையைப் படித்தேன்.. இவருடைய சினிமாவுலகம் தொடர்பான பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். தொடர்ந்தும் வாசித்து வருகிறேன். ஆனால் இன்றைக்குத்தான் முதல் முறையாக சந்திக்கிறேன்.. பூப்போல பேசுகிறார்.. நம் கருத்துக்களையும் காது கொடுத்து கேட்கிறார்..! எது சினிமா என்பதில் எங்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.. அவருடைய கருத்தை மென்மையாக என்னிடத்தில் பதிவு செய்கிறார்.. நல்லதொரு ஆசிரியராக இருக்கத் தகுதியுடையவர்..! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா..!
உமா சக்தியின் நூல் வெளியீட்டு விழாவில்..!
நெஞ்சுக்கினிய அண்ணன் பாரதி கிருஷ்ணகுமாருடன்..!
நளாயினியின் கவிதைப் புத்தக வெளியீடு..!
யாருமே இல்லாதபோது மயான அமைதி..!

|
|
Tweet |











