15-12-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
'நடுநசி நாய்கள்' படத்தை மீடியாக்களும், ரசிகர்களும் குதறி எடுத்ததையே பெரும் குற்றமாக எண்ணிக் கொண்டு, மீண்டும் ஒரு முறை நம்மை வதைத்துப் பார்த்து குரூர சித்ரவதை செய்திருக்கிறார் கெளதம்..!
கதையே இல்லாமல் படம் எடுப்பது எப்படி என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் படம். கெளதம் வாசுதேவ் மேனன் என்ற தன் பெயருக்கே ஒரு வேல்யூ உண்டு.. மார்க்கெட்டிங் உண்டு.. மவுசும் உண்டு.. என்ன எடுத்துக் கொடுத்தாலும், எப்படி வழங்கினாலும் ரசிகர்கள் ஓடோடி வந்து பார்த்து காசைக் கொட்டுவார்கள் என்கிற முட்டாள்தனத்தில் தான் நினைப்பதையெல்லாம் எடுத்துத் தள்ளியிருக்கிறார் இயக்குநர்.
தன்னை ஒரு இண்ட்டலெக்ச்சுவல் இயக்குநராகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அந்த டைப்பான வசனங்கள், இடையிடையே ஆங்கிலத்தில் மாடலாடுவது.. மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் பெரிய தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு மட்டுமே புரியும்வகையிலான அவரது இந்தப் படைப்பு அவருக்கு எந்தவிதத்திலும் பெருமை சேர்க்காது என்பது உறுதி..!
ஜீவா கல்லூரியில் சமந்தாவை பார்த்தவுடன் தனது பால்ய சிநேகிதி என்று அடையாளம் கண்டு அதன் தொடர்ச்சியாய் காதல் கொள்வது சரிதான்.. ஆனால் அதன் பின்பு இது எந்த வகையான காதலாக காட்டுவது என்பதில்தான் கெளதமுக்கு மிகப் பெரிய குழப்பம்..! குடும்பம், ஈகோ, கல்யாணம், மிடில், அப்பர் கிளாஸ் என்று எல்லாத்தையும் ஒன்றாக நினைத்து அவரும் குழம்பி நம்மையும் சேர்த்தே குழப்பியிருக்கிறார்..!
முதல் 20 நிமிடங்களைக் கடந்த பின்பு இறுதிவரையிலும் சுடுதண்ணியில் கால் வைத்திருக்கும் கதைதான்.. “எப்படா முடிச்சுத் தொலைவீங்க..?” என்று கதற வைத்துவிட்டார்..! இசைஞானியிடம் இசையை முடிந்த அளவுக்கு கேட்கும்படியாக வாங்கத் தெரிந்த அவருக்கு அதையாவது உருப்படியாக எடுத்துத் தொலைத்திருக்கக் கூடாதா..? ஒவ்வொரு பாடலுக்கும் இடையிடையே காட்சிகளை வைத்துக் கொண்டு ஒரு பாடல் முடிய 20 நிமிடங்களாக்கியதில் இசையைக் கேட்கும் ஆசையே போய், இவருடன் கூட்டு சேர்ந்ததற்காக இசைஞானியையும் சேர்த்தே திட்ட வேண்டியிருக்கு..!
எத்தனை தடவைங்க இந்த லவ் வரும்.. போகும்..? சின்ன வயசுல போகுது.. அப்புறம் ஸ்கூல் டைம்ல போகுது.. அப்புறம் காலேஜ் லைப்ல வந்து, வந்து போகுது.. சரி அதையாவது சட்டுன்னு முடிச்சு வீட்டுக்கு அனுப்புனாங்களா..? கடைசீல கல்யாணத்தையும் ஏற்பாடு பண்ண வைச்சு.. ஏதோ சமந்தா இவர் இல்லைன்னா செத்தே போயிருவாங்கன்னு சீன் போட்டு கடைசியா காதலிலும், கல்யாணத்திலும் கெஞ்ச வேண்டியது.. மன்னிப்பு கேட்க வேண்டியது.. காத்திருக்க வேண்டியது பெண்தான் என்ற சினிமாத்தனத்தைக் காட்டி ஒரு சிறந்த ஆணியவியாதியாக உருவெடுத்திருக்கிறார் கெளதம்.
ஜீவா இதில் நடித்த நேரத்தில் வேறு படத்திலாவது நடிக்கப் போயிருந்தால் அவருக்காச்சும் ஏதாச்சும் பிரயோசனமா இருந்திருக்கும்.. இந்த மொக்கை கதைக்குத்தான் இத்தனை அலப்பறையா..? இவ்வளவு கெட்டப்பா என்று ரசிகர்களின் கோபக் கனல் கெளதமின் அடுத்த வெற்றிப் படம் வரும்வரையிலும் இருக்கும்..! சமந்தா அழகு என்பது கெளதமுக்கு மட்டுமே நன்கு தெரியும் என்பதால் அதை எப்படியெல்லாம் எக்ஸ்போஸ் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் செய்திருக்கிறார்.. ஆனால் அவரையும் கடைசி நேரத்தில் கதற வைத்து தனது சாடிஸத்தைக் காட்டியிருக்கிறார்..!
சந்தானம்ன்னு ஒருத்தர் இருக்காரு.. ஒன்றிரண்டு நேரத்துல கிச்சுகிச்சு மூட்டி சிரிப்பைக் கூட்டுறாரு.. அவ்ளோதான்.. அவரும் என்னதான் செய்வாரு..? டிராவல் பண்ண அவருக்காச்சும் கதை வேணாமா..? அவரையும் செகண்ட் ஆஃப்ல காமெடியாக்கி அவருக்கு ஒரு ஜெனிபரை லவ்வராக்கி ஜீவாகூட சுத்தவிட்டு திரைக்கதையை நகர்த்தியதுதான் மிச்சம்..!
இவ்வளவு பெரிய பொருட்செலவில் தயாரித்து தோல்விக்காகவே அர்ப்பணித்திருக்கும் கெளதமின் இந்தச் செயலால் நஷ்டப்பட்டிருக்கும் தயாரிப்பாளர் அடுத்த படத்தை எப்படி எடுப்பார் என்று தெரியவில்லை..! இயக்குநரின் தவறுதலால் இது சங்கிலித் தொடராக பாய்ந்து சினிமா இண்டஸ்ட்ரிக்கும் சிறிது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் கொடுமை..!
எப்போதடா எந்திரிச்சு வெளில ஓடுவோம்ன்ற மனநிலைலேயே படத்தைப் பார்க்க வேண்டியிருந்ததால படத்துல மத்த அயிட்டங்களை பார்க்கவோ, சொல்லவோ மனசே இல்லை.. இதுக்கு மேல எழுதறதுக்கும் இந்தப் படத்துல எதுவுமே இல்லைன்றதால இப்படியே முடிச்சுக்குறேன்..
வீட்டுலேயே இருந்து புள்ளைக்குட்டிகளை படிக்க வைங்கப்பா..!
|
|
Tweet |

